புதிய பதிவுகள்2

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்

3 days 13 hours ago
கொல்கத்தா நைட் ரைடர்ஸை நையப்புடைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; பந்தவீச்சிலும் களத்தடுப்பிலும் ஏஷான் மாலிங்க அபாரம் Published By: Vishnu 03 Apr, 2026 | 02:56 AM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை நையப்புடைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 65 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. ஹென்றிச் க்ளாசன், ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள், ஜெய்தேவ் உனத்காட், ஏஷான் மாலிங்க ஆகியோரின் துல்லியமான பந்தவீச்சுகள், நிட்டிஷ் குமார் ரெட்டியின் சகலதுறை ஆட்டம் என்பன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. அத்துடன் மிகவும் முக்கிய வேளைகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கெமரன் க்றீன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகிய இருவரும் ரன் அவுட் ஆனதும் சன்ரைஸ் ஹைதராபாத்துக்கு சாதகமான முடிவு கிடைக்க உதவியது. இந்த இரண்டு ரன் அவுட்களிலும் இலங்கை வீரர் ஏஷான் மாலிங்க முக்கிய பங்காற்றினார்.இலங்கை செய்திகள் கெமரன் க்றீனை நேரடியாக ரன் அவுட் செய்த மாலிங்க, ரகுவன்ஷியின் ரன் அவுட்டிலும் பங்களிப்பு செய்தார். அத்துடன அஜின்கியா ரஹானேயின் சற்று சிரமமான பிடியையும் மாலிங்க எடுத்தார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்களைக் குவித்தது. இந்த வருட ஐபிஎல் அத்தியாயத்தில் ஓர் அணி பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். நான்கு வீரர்கள் 35க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி வெறும் 34 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ட்ரவிஸ் ஹெட் 21 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 46 ஓட்டங்களையும் அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 48 ஓட்டங்களையும் விளாசினர். அணித் தலைவர் இஷான் கிஷான் சிறப்பாக ஆரம்பித்தபோதிலும் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். அனிக்கெட் வர்மா ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (118 - 4 விக்.) இந் நிலையில் ஹென்றிக் க்ளாசன், நிட்டிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஹென்றிச் க்ளாசன் 35 பந்துகளில் 52 ஓட்டங்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 24 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்ளெசிங் முஸாரபானி 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வைபவ் அரோரா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கடினமான 227 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பின் அலன் 7 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 28 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. கெமரன் க்றீன் (2), அணித் தலைவர் அஜின்கியா ரஹானே (8) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ரன் அவுட் ஆனதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் கண்டது. ஆங்ரிஷ் ரகுவன்ஷி, ரின்கு சிங் ஆகிய இருவரும் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்த முயற்சித்த போதிலும் அவர்கள் இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரகுவன்ஷி ஆட்டம் இழந்தார். ரகுவன்ஷி 29 பந்துகளில் 6 பவுண்டறிகள். 2 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் ரின்கு சிங் 25 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் சுனில் நரேன் 4 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 12 ஓட்டங்களைப் பெற்றார். அவரது விக்கெட்டை ஏஷான் மாலிங்க வீழ்த்தினார். பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்காட் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன்: நிட்டிஷ் குமார் ரெட்டி https://www.virakesari.lk/article/242604

அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு

3 days 13 hours ago
அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 11:15 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் ராண்டி ஜோர்ஜை வியாழக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இராணுவத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகளை ஒரே நேரத்தில் பதவி நீக்கியுள்ளார். இராணுவத்தின் 41 ஆவது படைத் தளபதியான ராண்டி ஜோர்ஜ், இன்னும் ஓராண்டு பதவிக்காலம் இருக்கும் நிலையிலேயே உடனடியாகப் பணி ஓய்வு பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். இராணுவத்தின் பயிற்சி மற்றும் உருமாற்றக் கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் இராணுவ மதகுருமார் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் வில்லியம் கிரீன் ஆகியோரையும் ஹெக்ஸெத் பதவி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானுடன் போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழலில், இராணுவத்தின் மிக உயர்ந்த தளபதியைப் பதவியிலிருந்து நீக்குவது அமெரிக்க வரலாற்றில் ஒரு அரிய மற்றும் வழக்கத்திற்கு மாறான செயலாகும். இந்த பதவி நீக்கங்களுக்கான உத்தியோகபூர்வக் காரணத்தை பென்டகன் வெளியிடவில்லை. ராண்டி ஜோர்ஜிற்குப் பதிலாக, ஜெனரல் கிறிஸ்டோபர் லானீவ் தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட் ஹெக்செத் பதவியேற்றது முதல் இராணுவத்தில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்: இந்த மாற்றங்கள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராகத் தனது இராணுவ பலத்தை அதிகரித்து வரும் வேளையில் நிகழ்கின்றன. https://www.virakesari.lk/article/242629

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை!

3 days 13 hours ago
யாழ் விரைவுரையாளர் கொலை வழக்கு - நீதிமன்றின் உத்தரவு Apr 3, 2026 - 09:56 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டார். இந் நிலையில் அவரது சடலம் தனங்கிளப்பு பகுதியில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சந்தேகநபர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இருதரப்பு சட்டத்தரணிகளின் நீண்ட வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் இரண்டாம் சந்தேகநபரான விரிவுரையாளரின் மகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கான மனநிலையில் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார். இந்த விடயத்தில் ஊடகங்களின் செய்தி அறிக்கையிடல் பொறுப்பு வாய்ந்ததாக அமைய வேண்டும் எனவும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmnieh1hv0009356pjbggkdzx

அமெரிக்காவின் சட்டமா அதிபர் பதவி நீக்கப்பட்டார்

3 days 13 hours ago
அமெரிக்காவின் சட்டமா அதிபர் பதவி நீக்கப்பட்டார் Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 09:39 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்காவின் சட்டமா அதிபர் பாம் பொண்டி குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப்பின் நீண்டகால விசுவாசியாகக் கருதப்பட்ட பொண்டியின் இந்த வெளியேற்றம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம் பொண்டியின் பதவிக்காலம் முழுவதும் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களைக் கையாண்ட விதம் பெரும் விமர்சனத்திற்குள்ளானது. எப்ஸ்டீனுடன் தொடர்புடைய நபர்களின் பட்டியலை வெளியிடுவதாக உறுதியளித்த போதிலும், பின்னர் அத்தகைய பட்டியல் எதுவும் இல்லை என நீதித்துறை அறிவித்தது. எப்ஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான கோப்புகளை வெளியிடுமாறு ட்ரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம், இறுதியில் பொண்டிக்கு எதிரான அதிருப்தியாக மாறியது. கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றக் குழுவின் விசாரணையின் போது, ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரை "தோற்றுப்போனவர்" என பொண்டி விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாம் பொண்டிக்கு பதிலாக அவரது முன்னாள் துணை அதிகாரியான டாட் பிளான்ச் புதிய தலைமை சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தான் ஒரு தனியார் நிறுவனத்தில் இணையவுள்ளதாகவும், அங்கிருந்தபடியே ஜனாதிபதி ட்ரம்ப்பிற்காக தொடர்ந்து போராடப்போவதாகவும் பொண்டி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் உள்நாட்டு பாதுகாப்புத் துறைத் தலைவர் கிறிஸ்டி நோம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில வாரங்களிலேயே நீக்கப்படும் இரண்டாவது உயர் அதிகாரி பாம் பொண்டி ஆவார். வியாழக்கிழமை காலை வரை பொண்டியைப் புகழ்ந்து பேசிய ட்ரம்ப், திடீரென இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242618

பெரிய வௌ்ளி தினம் இன்று!

3 days 13 hours ago
பெரிய வௌ்ளி தினம் இன்று! Apr 3, 2026 - 06:45 AM இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும். கிறித்தவர்களின் வழிபாட்டில் முக்கிய நாளாக இந்த பெரிய வெள்ளி பார்க்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்படும் நிகழ்வாகும். மனிதர்களை பாவங்களிலிருந்து மீட்பதற்காக இறைவனின் திருக்குமரர் மனித குலத்தின் மீட்பராக பூலோகம் வருகை தந்து, சிலுவையில் அறைந்து மனித குல இரட்சண்யத்திற்காக செய்த தியாகத்தை கிறிஸ்தவ அடியார்கள் இன்றைய நாளில் நினைவுகூருவார்கள். கத்தோலிக்க தேவாலயங்களில் இது தொடர்பான மூன்று மணிநேர விசேட ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. https://adaderanatamil.lk/news/cmni7p2kv0002356pco1szip0

ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்

3 days 13 hours ago
புவியில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டிமிஸ் II Apr 3, 2026 - 05:22 AM புவியின் சுற்றுப்பாதையில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டெமிஸ் II தற்போது நிலவின் மேற்பரப்பை நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்கள், நிலவைச் சுற்றி வருவதற்கான தங்களின் 10 நாள் பயணத்தின் இரண்டாம் நாளில் கால்பதித்துள்ளனர். இது மனிதகுலம் இதுவரை விண்வெளியில் சென்றிராத மிக நீண்ட தூரப் பயணமாக கருதப்படுகின்றது. நேற்று (2) ஏவப்பட்டதில் இருந்து 23 மணிநேரத்திற்கும் மேலாக, விண்கலம் பூமியைச் சுற்றி வந்துள்ளது. இன்றைய தினம் 'ட்ரான்ஸ்-லூனார் இன்ஜெக்ஷன்' (trans-lunar injection burn) எனப்படும் முக்கியமான கட்டத்திற்கான இறுதி முடிவை விண்வெளி வீரர்கள் எதிர்நோக்கியிருந்தனர். இது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து விண்கலத்தை வெளியேற்றி, நிலவை நோக்கிய பாதையில் செலுத்த உதவும் செயன்முறையாகும். இந்த நிகழ்வு அதிகாலை 5.19 மணியளவில் இடம்பெற்ற நிலையில் நாசாவின் அனுமதியுடன் புவி சுற்றுப்பாதையில் இருந்து குறித்த விண்கலம் வெற்றிகரமாக வௌியேறியது. விண்வெளி வீரர்கள் எதிர்வரும் ஏப்ரல் 6 திங்கட்கிழமை அன்று நிலவின் மறுபக்கத்தை சென்றடைவார்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மனிதர்கள் மீண்டும் நிலவை நோக்கிப் பயணிக்கின்றனர். அவர்கள் நிலவில் தரை இறங்கப் போவதில்லை என்றாலும், இதற்கு முன்பு மனிதர்கள் பார்த்திராத ஒரு காட்சியை அங்கிருந்து காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் மேற்பரப்பை சுற்றிவருவதற்காக ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலம் நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmni4pfsc0000356p7dn50pgz

யாழின் 28வது அகவையை முன்னிட்டு உருவாக்கிய பாடல்

3 days 19 hours ago
பாடலும் இசையும் மட்டும் அல்ல, ஒவ்வொரு நுணுக்கத்திலும் ஒரு அழகும், ஒவ்வொரு ஒலியிலும் ஒரு உயிரும் தெரிகிறது. முழுக்க முழுக்க மனதை கவரும் அளவுக்கு நன்றாக உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

3 days 19 hours ago
இந்தியாவில்…. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி… போன்ற பலரும் இரட்டை தொகுதிகளில் போட்டியிடுபவர்களே. அதிலும் இந்த காந்திக்கள்…. வடக்கில் ஒரு தொகுதியும், தெற்கில் ஒரு தொகுதியும் என்று அகலக் கால் வைத்திருப்பார்கள். 😂

3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி

3 days 19 hours ago
உண்மைதான்… இத்தாலி கலந்து கொள்ளும் போது, அந்த விளையாட்டுக்களில் விறுவிறுப்புக்கும், ரசிகர்களின் கொண்டாட்டமும், ஆரவாரமும் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும்.

ஈரான் போர்: “இது எங்கள் போர் அல்ல” – பிரிட்டிஷ் பிரதமர்

3 days 20 hours ago
நல்ல விடயம். இதே போல் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவை புறம் தள்ள வேண்டும். அவர்களை புறம் தள்ளி வைத்தால் இந்த உலகு அமைதிப்படும்.பல அமைப்புகள் உயிரூட்டப்படும். இன்றைய உலகின் நம்பர் வன் குழப்பவாதி என்றால் அது அமெரிக்கா மட்டுமே.

ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்

3 days 20 hours ago
2030ல் சீனா ஏதோ பெரிய திட்டம்/ நடவடிக்கை,ஆராய்ச்சி சந்திரனில் செய்யவிருப்பதாக வாசித்த ஞாபகம். அதற்கு முதல் நாசா காணி பிடிக்கப்போகின்றது போல் இருக்கின்றது.🤣

3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி

3 days 20 hours ago
மிகவும் கவலையான விடயம் மட்டுமல்ல பொருளாதார ரீதியிலும் கவலையான விடயம். உதைபந்தாட்டத்தில் இத்தாலி முதன்மை வகிக்கும் நாடு. இத்தாலி மக்கள் உதைபந்தாட்ட ரசிகர்கள் மட்டுமல்ல அதில் ஊறிப்போயுள்ள சமூகத்தினர். உலக கோப்பை என்றால் பிரேசில்.ஆர்ஜென்ரீனா,பிரான்ஸ்,இத்தாலி,ஜேர்மனி,இங்கிலாந்து,ஸ்பானியா,நெதர்லாந்து போன்ற நாடுகள் முக்கியம் இணைந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

3 days 20 hours ago
ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே அரசியல் மேடைகளில் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் சீமான். அது திருமாளவனின் அரசியல் மேடை என நினைக்கின்றேன்.சீமான் அன்றிருந்த கொள்கையில் இன்றும் நிலை மாறவில்லை. அது அவர் பிரச்சனை. ஈழ அரசியலுக்காக நான் சீமானை ஆதரிப்பதில்லை.ஏனென்றால் அரசியல் என்பது காலத்திற்கு காலம் மாறும். அதில் யாருமே பந்தயம் கட்ட முடியாது. சீமான் தன் அரசியல் இலாபத்திற்காக ஈழத்தை கையில் எடுத்தார் என்றால்.... பழ. நெடுமாறன் என்ன மாதிரி? அவரின் இன்றைய நிலைகள் என்ன? எப்படி?

பிரம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிதைப்பு

3 days 21 hours ago
Teen charged after Brampton’s Tamil Genocide Memorial defaced with derogatory messages: police By Joanna Lavoie Opens in new window Published: April 02, 2026 at 3:53PM EDT CKTB - News - Peel Police A 14-year-old boy has been charged after the Tamil Genocide Memorial at Brampton’s Chinguacousy Park was recently vandalized with derogatory spray-painted messages. Peel Regional Police said they were called to that area on March 20 after receiving reports that the memorial had been defaced. “Upon arrival, officers confirmed the vandalism and immediately assigned the investigation to the Hate Crime Unit,” police said in a news release. After a thorough investigation, a teenage boy from Brampton was arrested and charged on March 31 with two counts of mischief over $5,000. The accused, who cannot be identified under the provisions of the Youth Criminal Justice Act, is set to appear in court at a later date. “Peel Regional Police will not tolerate vandalism — especially hate-motivated crimes of spaces that are meaningful to our communities. People across the region have the right to feel safe in public spaces,“ Police Chief Nishan Duraiappah said in a release. “We thank our Hate Crime Unit for acting swiftly to locate and hold those responsible accountable.” The force recently launched a centralized Hate Crime Unit, which is aimed at enhancing its response to hate-motivated crimes and incidents as well as culturally sensitive incidents. Anyone with further information is asked to contact the Hate Crime Unit at 905-453-2121, ext. 6098, or Crime Stoppers anonymously. Joanna Lavoie Opens in new window Journalist, CP24.com

சிகிச்சை அடிப்படையிலான நீதிமுறை

3 days 22 hours ago
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, யேர்மனியின் Saarland மாநிலத்தில் உள்ள Voelklingen நகரில், 34 வயதான பொலிஸ் அதிகாரி சைமன் போர், 19 வயதான அஹ்மத் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எட்டு நாட்கள் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, 01.04.2026 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தத் தீர்ப்பில், அஹ்மத் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்பபைத் தந்திருக்கின்றது. விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்ட அஹ்மத் தனது செயல்களை ஒப்புக்கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சம்பவத்தின் விவரங்களின்படி, ஒரு பெற்றோல் நிலைய கொள்ளைக்குப் பிறகு, அவரைத் துரத்தி வந்த பொலிஸ் அதிகாரிகளை அஹ்மத் கத்தியால் தாக்கியிருக்கின்றார். பின்னர், ஒரு அதிகாரியின் துப்பாக்கியை பறித்து சைமன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில் சைமனின் குண்டு துளைக்காத கவசம் தாக்குதலைத் தடுத்தது. ஆனால் அவர் கீழே விழுந்தபோது, அவரை நெருங்கி வந்து, கவசம் பாதுகாக்காத பகுதிகளை நோக்கி, முகம் உட்பட மூன்று தடவைகள் அஹ்மத் சுட்டிருக்கின்றார். இதனால் சைமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அஹ்மத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அஹ்மத் கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக, மாய நம்பிக்கைகள் (delusions) மற்றும் உண்மை உணர்வை இழக்கும் நிலை போன்ற அறிகுறிகள் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில், தனது செயலின் தவறை முழுமையாக உணர முடியாத மனநிலையிலேயே அவர் இருந்தார் என்று மருத்துவ நிபுணர்கள் சாட்சியமளித்தனர். யேர்மனியச் சட்டப்படி, ஒருவர் குற்றம் செய்தாலும், அந்த நேரத்தில் மனநிலை காரணமாக தனது செயலின் தவறுகளைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தால், அவரை நேரடியாக குற்றவாளியாக அறிவிக்க முடியாது. இந்த அடிப்படையில், மருத்துவ நிபுணர்களின் அறிக்கைகளை கருத்தில் எடுத்து, அஹ்மத் சமூகத்திற்கு இன்னும் ஆபத்தானவர் என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவரை சிறைக்கு அனுப்பாமல், தடயவியல் மனநல மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்டிருக்கின்றது. இது தண்டனை இல்லை மாறாக, சிகிச்சை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும் என தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. பொலிஸ் தரப்பு, இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. படம்-இன்ஸ்டாகிராம்
Checked
Mon, 04/06/2026 - 19:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed