புதிய பதிவுகள்2

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

3 days 3 hours ago
சுமே அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக் கொள்வதோடு🎂..நேரம் எடுத்து எனக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.🙏

இரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?

3 days 4 hours ago
ஆரம்பத்தில் ஈரான் புளுகுதோ என்று நினைத்தேன். நிலமையை பார்த்தால் பெருசுதான் நமக்கு மண்டையை கழுவி ஊத்துறது போல தோன்றுகின்றது. ஒரு ஆளை தேடிப்பிடித்து தூக்கி எடுக்கவே இந்தப்பாடு என்றால் தரைப்படையை இறக்கினால் சங்குதான் போலும்.

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

3 days 4 hours ago
காணொளியின் முக்கிய உள்ளடக்கம் மேற்கின் பூச்சாண்டி பிரசாரம், ஏவுகணை தொழில்நுட்பம் எவர் உருவாக்கினாலும், நோக்கம் என்ன என்பதை பொறுத்து ஒற்றுமைகள் இருப்பது தவிர்க்க முடியாது. ஏனெனில், ஏவுகணைகளின் பௌதிகம் ஒன்று. உ.ம். solid fuel ஏவுகணை தொழில்நுட்பத்தை இவை ஆய்வு, மாற்றம் சோதித்த காலம் வேறு வேறானது. us / மேட்ற்கு / இஸ்ரேல் விவிலிய பிரளய விஷக்கிருமிகளின் பொறாமை, இரான் அதுவாக தொழில்நுட்பத்தையும், அதன் இராணுவ உற்பத்தி தளத்தையும் விருத்தி செய்த்து கொண்டுள்ளது ஈரான் ஏவுகணையை வாங்க தேட தொடங்கிய காலம் us / மேட்ற்கு / இஸ்ரேல் விவிலிய பிரளய விஷக்கிருமிகள் சதாமுக்கு இரானை தாக்க இரசாயன ஆயுதம் கொடுத்து ஏவிய காலம். வாங்குவதை மேற்கு எல்லா கிருமிகளும் தடுக்கிறது என்பதை அறிந்த பின்பே, அதுவாக ஏவுகணை ஆய்வில் ஈடுபட தொடங்கியது. அதன் விளைவவே. ஈரானிடம் உள்ள சொந்த ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி வலு இருப்பது அனால், வஅட கொரியா, இரான் இடையே அறிவு, தொழிநுட்ப ஆலோசனை போன்ற பரிமாற்றங்கள் இருக்கலாம். கிருமிகள் தமக்கிடையே அல்லாஹ் தமக்கு கூசா தூக்குபவர்களுக்கு செய்வது. இங்கே சிலர் (எந்த தேடலும் , சிந்தனையும் இல்லாது) சும்மா வாய்க் வந்தபடி மேற்கு / us பிரச்சாரத்தை ஒப்புவிப்பது இரானிடம் ஒநிறம் இல்லை உ.ம். ஆக இரானிடம். ருசியா இடம் இலாஹ 4ம் தலைமுறை cnc உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளது. 6-7 நாடுகள் உற்பத்தி செய்யக்க்கூடிய gas turbine இல் இராநும் ஒன்று. மேற்கு கிருமிகளுக்கு இது எல்லாமே வெப்பியாரம் எரிந்து இரத்தத்தை கக்க வைக்கிறது. இவ்வளவு பொருளாதார கடைகள் இருந்தும், குறிப்பாக கடின தொழில்நுட்பத்தை / விஞ்ஞானத்தை இரான் அதிக அடைந்துவிட்டது முக்கியகாரணம் விவிலிய பிரளய விஷக்கிருமிக இரானை அழிக்க முயல்வதில்.

டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!

3 days 4 hours ago
பிந்திய செய்தியொன்று கூறுகிறது, இரான் இஸ்லாமாபாத்தில் பேச்சுக்களை நடத்த சமிக்ஞை தெரிவித்திருப்பதாக. பொறுத்திருந்து பாப்போம் எது உண்மை என்பதை.

இரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?

3 days 5 hours ago
எதிரிகளிடம் பிடிப்படாமல் இருப்பதற்கு இரண்டு C-130 இராணுவ போக்குவரத்து விமானங்களை தாமே அழித்ததாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதை தான் அமெரிக்காவின் கதை இருக்கின்றது. அமெரிக்காவின் தரைவெளி தாக்குதல் என்பது, கானல் கதையாய் தான் இருக்கின்றது

இரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?

3 days 5 hours ago
காணாமற் போன விமானியை தாம் மீட்டு சர்வதேச விதிகளின்படி அவரை கவனித்து வருவதாகவும் கவலையுற்று இருக்கும் அந்த விமானியின் தாயாருக்கு செய்தி அனுப்பப்பட்டதாகவும் இரான் செய்திகள் தெரிவிப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. ஆனால் ட்ரம்ப் சொல்வதாவது, அந்த விமானி ஒரு சிறந்த வீரர், அவரை நாங்கள் தனியே விடவில்லை, போர் வீரர்களும் விமானமும் சேர்ந்து தேடுதல் செய்து அவரை இரான் எல்லைக்குள் இருந்து பத்திரமாக மீட்டதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். இது சாத்தியமா? ஈரானில் எல்லாரையும் எல்லாவற்றையும் அழித்துவிட்டோம் என்று பேட்டியளித்துக்கொண்டு, ஈரானோடு பேசிவருகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இரண்டுநாள் போர் தடுப்பு அவகாசம் கேட்டுக்கொண்டு, போர் நடத்தும், அழிக்கப்பட்ட குழுவிடம் போர் விமானத்தையும் விமானியையும் பறிகொடுத்த ட்ரம்பின் பேச்சை நம்பலாமா?

உறுதிப்படுத்தாத செய்தி: டொனல்ட் டிரம்ப் வைத்தியசாலையில்?

3 days 5 hours ago
உயிர்த்த ஞாயிறில் எழும்பி வந்து நானே மீட்பர் என்று சொல்லாதவரை ஓக்கே😂 நீங்க என்னடா எனக்கு நோபல் பரிசு தராம விடுறது… நான் ஆஸ்காரே எடுப்பேண்டா… -தம்பர்-

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

3 days 5 hours ago
விஜைக்கு இந்த முறை சீட் கிடைக்காவிட்டாலும் அவருக்கு போக்கிடமில்லை….அரசியல்தான் இந்த போக்கிரியினதும் கடைசி புகலிடமாக இருக்கும். இனி அவர் சினிமா திரும்ப போவதில்லை என்றே நான் நினைக்கிறேன். ஆனால்… சீமான் போல் அரசியல் இல்லாவிட்டால் சோறு இல்லை என்ற நிலையில் விஜை இல்லை. பிரபாகரன் என்ற அட்சய பாத்திரம் மட்டும் இல்லை என்றால்…. சீமான் ஒரு முன்னாள் தோல்வி பட இயக்குனராக…. ஸ்டோரி டிஸ்கசனில் கலந்து கொண்டு அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடி கொண்டிருப்பார். உழைப்பை கொச்சை படுத்தவில்லை… ஆனால்….புலவர் போன்ற தம்பிகள்… ஏதோ விஜை கொள்ளை அடிக்க போய்விடுவார் என்பதை போல்…மீள நடிக்க போய் விடுவார் என்கிறனர். ஆனால் அவர்களின் அண்ணன்…ஓப்பனாக மேடையில்… எனக்கு ஓட்டு போடு இல்லேன்னா படம் எடுக்க போய்டுவேன் எண்டு சொல்வதை கண்டு கொள்ள மாட்டார்கள்.

இரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?

3 days 5 hours ago
இன்றைய தாக்குதலில் மொத்தமாக, இரண்டு சி-130 இராணுவ விமானங்கள் மற்றும் இரண்டு அமெரிக்க பிளாக் ஹாக் உலங்குவானூர்திகளை அழித்ததாகக் இரான் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

3 days 6 hours ago
அறவே இல்லை…கரூர் சம்பவத்தின் பின்னான விஜையின் பதுங்குதலை கூட மன அளுத்தமாக இருக்கலாம் என benefit of the doubt கொடுக்க யோசித்த நான்… விஜையை அறவே கை கழுவியது…இந்த வர்த்தே இல்லை…. மொமெண்ட்டின் பிந்தான். அதுவும் அந்த உடல்மொழி…அநாகரீகத்தின் உச்சம். இங்கே மனைவியை மட்டும் அல்ல, தன் 27 வருட குடும்பவாழ்வை, பிள்ளைகளையும் சேர்த்தே அவர் அவமதித்துள்ளார். நான் முன்பே சொல்லிவிட்டேன் அண்ணா, பலவாறு சிந்தித்ததில் எனக்கு வாக்கு இருப்பின் இந்த முறை என் வாக்கு திமுகவுக்க்கு போகவே வாய்ப்பு அதிகம். ஆனால்….(இன்னும்) திமுக, அதிமுக அளவுக்கு விஜை திருடன் இல்லை. 11%

அதிசயக்குதிரை

3 days 6 hours ago
· Suivre sSrpenootd2:14609gvf802l l04415t04h7g23af3 e i69r 8Lg7l5àll0 · கடுமையாக மழை பெய்துக்கொண்டு இருந்தது.. வீட்டில் அத்தனை காரியங்களையும் கவனித்து கொண்டிருந்த மஞ்சன் என்கிற காரியஸ்தர் மழையில் வங்கியில் இருந்து வீட்டு செலவுக்கு பணம் எடுக்க போனவர் திரும்பவில்லை. வீட்டில் இருந்த எஸ் ஏ பி அவர்களுக்கு நிலைக்கொள்ளவில்லை. இந்த கொட்டும் மழையில் அவரை வங்கிக்கு அனுப்பியது தவறோ? என்று எண்ணினார். மஞ்சன் காரியஸ்தான். ஆனால் அண்ணன் என்று தான் அவரை எஸ் ஏ பி அழைத்து வந்தார். அவரது அன்னை தன் பிள்ளை படும் பாட்டைக்கண்டு மஞ்சன் பத்திரமாக திரும்பி விடுவார். கவலை வேண்டாம் என்று ஆறுதல் கூறினார்.. அம்மாவின் கூற்றுப்படியே சற்று நேரத்தில் மஞ்சன் வங்கியில் எடுத்த 500 ரூபாய் பணத்தோடு திரும்பி விட்டார்.. ஆனால் மஞ்சனின் முகத்தில் ஏதோ ஒரு வருத்தம் தெரிந்தது. மவுனமாகவே இருந்தார்.. சற்று நேரம் சென்ற பின் எஸ் ஏ பி அமைதியாக இருந்து விட்டு மஞ்சண்ணா! என்ன விஷயம்? என்று கேட்க, கொட்டி தீர்த்து விட்டார் காரியஸ்தர். எந்த நாளும் இல்லாத திருநாளாக அன்று வங்கி அதிகாரி ஒரு கேள்வி கேட்டு விட்டார். அவர் கேட்க கூடாது தான். ஆனால் கேட்டு விட்டார். எப்போதும் உங்கள் செட்டியார் கணக்கில் இருந்து பணம் எடுக்கிறார். கணக்கில் ஒரு முறை கூட பணம் போடுவதில்லை. ஏன் அவர் சம்பாதிப்பது இல்லையா? என்று கேட்டிருக்கிறார். அந்த கேள்வி ஒரு வகையான குத்தல்.. ஒரு தனிப்பட்ட எஸ் ஏ பியை கேலி செய்யும் பேச்சு அல்ல. நகரத்தார் இனத்தை சேர்ந்த ஒருவர் இப்படியும் உட்கார்ந்து சாப்பிடுவாரோ என்று தொனிக்கும் படியான குத்தல். அது காரியஸ்தர் மஞ்சனை வெகுவாக பாதித்து இருக்கிறது. அந்த வங்கி அதிகாரியின் கேலி எஸ் ஏ பியை உறுத்தவில்லை. ஆனால் காரியஸ்தர் மஞ்சண்ணனை அந்த வங்கி அதிகாரியின் குத்தல் உறுத்தியிருக்கிறது என்பது எஸ் ஏ பிக்கு வருத்தத்தை தந்தது. வெகு நேரம் யோசித்தார். வக்கீலுக்கு படித்திருக்கிறார்.ஆனால் அந்த தொழிலில் நாட்டமில்லை. வேறு என்ன செய்ய? எழுத்தில், இலக்கியத்தில் மிகுந்த நாட்டம் இருக்கிறது. தன்னுடன் கல்லூரியில் படித்த பார்த்த சாரதியை பங்குதாரராக சேர்த்துக்கொண்டு ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்து நடத்த முடிவு செய்கிறார். அன்னை, மனைவி.. இருவர் சம்மதத்தையும் பெறுகிறார். முனைப்புடன் காரியத்தில் இறங்குகிறார். அந்த வங்கி அதிகாரி குத்தலாக உங்கள் செட்டியாருக்கு சம்பாதிக்க தெரியாதா? என்று கேட்டது 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம். அதே ஆண்டில் நவம்பர் 15 ஆம் நாள் குமுதம் முதல் இதழ் வெளி வந்தது. நினைத்ததை முடிப்பவன் என்று எஸ் ஏ பி அவர்களையும் அழைக்கலாம். குமுதத்தின் முதல் இதழின் அட்டை படத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன். இந்த தகவல் 1994 ஆம் ஆண்டு குமுதம் இதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. இந்த செய்தி வெளியான இதழை எனக்கு கொடுத்து உதவியவர் முகநூல் நண்பர் திரு.சந்தானம் அவர்கள்.. அப்புறம் இந்த முதல் இதழ் குமுதத்தை யாரேனும் பத்திரமாக வைத்திருந்தால் குமுதம் அலுவலகத்திற்கு அனுப்பி 100 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்று 1967-68ஆம் ஆண்டு வாக்கில் குமுதத்தில் ஒரு அறிவிப்பு வந்தது. இரண்டு பேர் அட்டை படம் இல்லாத குமுதத்தை அனுப்பினார்கள். ஒருவர் mint condition இல் அந்த முதல் இதழை அனுப்பினார். அவருக்கே 100 ரூபாய் பரிசு கிடைத்தது. அப்போது ராஜமுத்திரை வெளி வந்துக்கொண்டு இருந்தது.. அதற்கு ஒரு அத்தியாயத்திற்கு 100 ரூபாய் சன்மாணம் திரு. சாண்டில்யன் அவர்களுக்கு அனுப்பி கொண்டிருந்தார்களாம் குமுதத்தில் இருந்து. Voir la traduction......!

இரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?

3 days 7 hours ago
காணாமல் போன இரண்டாவது விமானப்படை விமானியும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது. காணாமல் போன அமெரிக்க விமானப்படை வீரரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானத்தை ( C-130 ) சுட்டு வீழ்த்தி உள்ளதாக ஈரான் அறிவித்து புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

யோகர் சுவாமிகள்.

3 days 7 hours ago
இதில் வரும் திருநாவுக்கரசு என்பவர் புங்குடுதீவை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். இலங்கை வடபகுதி சர்வோதய சங்கத்தின் தோற்றுவிப்பாளரான இவர் தனது கடைசி காலத்தில் அவரது சுவாமிகள் அருளிய வழியில் சுவாமிகளின் அதே மரநிழலில் இளைப்பாறியதாக அறிய முடிந்தது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

3 days 7 hours ago
சுமே அவர்களுக்கு மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌 ..பிறந்த நாளுக்கும் புட்டவித்து விருந்தினரை பேக்காட்டிவிடாதீர்கள்... இதனை எவர் எப்போது சொல்லி உங்களை வாழ்த்தியிருப்பார்கள்? ஞாபகம் உள்ளதா??🤔

டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!

3 days 7 hours ago
இதுவரை காலமும் திறந்திருந்த ஹர்மூஸ் நீரிணையை மூட வைத்ததே இந்த முட்டாள்தான், இப்போ திறக்க வேண்டுமென எச்சரிக்கிறார். யாரோடும் ஆலோசியாமல், தெரிவிக்காமல், தான்தோன்றித்தனமாக போரை தொடக்கி, அழிவை ஏற்படுத்தி நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டிட்டு, கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று ஏலம் போட்டுக்கொண்டிருக்கிறார். தாக்கித்தான் பாருங்களேன்! விடுக்கப்படும் எச்சரிப்பு ட்ரம்பின் பயத்தை காட்டுகிறது. இவரால் அமெரிக்காவுக்கு கீழிறங்கும் காலம், ஈரானை உயர்த்தி விட்டிருக்கிறார்கள். நெஞ்சிலே செருக்குற்றவர்கள் சிதறடிக்கப்படுவார்கள். அமெரிக்காவிலுள்ள ஒரு சில முட்டாள்கள் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துள்ளார்கள் இந்த முட்டாளை தெரிவு செய்து. ஒருபக்கம் வென்றுவிட்டோம் என்கிறார், மற்றொரு பக்கம், போர் என்றால் அழிவுகள் இருக்கத்தான் செய்யும் என்று சாதாரணமாக சொல்கிறார்.
Checked
Wed, 04/08/2026 - 13:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed