புதிய பதிவுகள்2

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 months 1 week ago
ஈழத்தமிழர் தொடர்பான இந்தியக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் டெசோ அமைப்பும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்தியா இராணுவ ரீதியில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அதே நேரம், தமிழர் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றம் ஒன்று உருவாகத் தொடங்கியிருந்தது. ரஜீவுடனான தனது முதலாவது சந்திப்பிலேயே இந்த மாற்றத்திற்கான அடித்தளத்தினை ஜெயார் இட்டிருந்தார். இந்திரா காந்தியின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த ஜெயவர்த்தன, தன்னை இந்தியாவிந்தும், நேரு குடும்பத்தினதும், இந்திய மக்களினதும் உண்மையான நன்பன் என்றும், பெளத்தத்தினை கடைப்பிடிக்கும் நேர்மையான முதிர்ந்த அரசியல்வாதியென்றும், இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் நலன்களை, குறிப்பாக தமிழ் மக்களின் நலன்களைக் காப்பதில் மிகுந்த அக்கறை கொண்ட அரசியல்த் தலைவர் என்றும் காட்டுவதில் ஈடுபட்டிருந்தார். ரஜீவ் காந்தியுடனான தனது முதலாவது சந்திப்பில் தான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன் என்றும், நேருவின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவன் என்று ஜெயவர்த்தன கூறினார். 1941 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஒழுங்குசெய்திருந்த ராம்கார் நிகழ்விலும் அவர் பங்குபற்றியிருந்தார். ஜவர்ஹல்லால் நேரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளை அவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்கு நேரு அனுப்பிய பதில்க் கடிதங்களையும் நேரு தொடர்பான ஆவணக் காப்பகத்திற்கு ஜெயார் அனுப்பிவைத்திருந்தார். ரஜீவுடன் பேசிய ஜெயார், தமிழர் பிரச்சினை தொடர்பாக சாதகமான தீர்வொன்றினை வழங்க தான் விருப்பம் கொண்டிருப்பதாகவும், ஆனால் தன்னைச் சுற்றியிருக்கும் தீவிரவாத அமைச்சர்கள் அதற்குத்தடையாக இருப்பதாகவும் கூறினார். மேலும், தமிழ் ஆயுதக் குழுக்கள் நடத்திவரும் பயங்கவாதத் தாக்குதல்கள் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கும் தனது முயற்சிகளை இக்கட்டான நிலைமைக்குத் தள்ளியிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு ஏதுவான நிலைமையினை இலங்கையில் உருவாக்குவதற்கு ரஜீவ் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டார். மேலும், ரஜீவின் தாயாரான இந்திரா காந்தியும் தமிழ்த் தீவிரவாதிகளால் சூழப்பட்டிருந்ததாக ரஜீவிடம் கூறினார் ஜெயவர்த்தன. அதனாலேயே தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திரா காந்தி பக்கச்சார்பான நிலையினை எடுத்திருந்தார் என்றும் ஜெயார் கூறினார். இந்தியாவின் இந்த பக்கச்சார்பான நிலைப்பாட்டிற்கு ஒற்றைக் காரணமாக பார்த்தசாரதியை ஜெயார் குற்றஞ்சாட்டினார். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் பார்த்தசாரதி வகித்த பாகம் தொடர்பாக சிங்கள மக்கள் பலத்த சந்தேகங்களைக் கொண்டிருப்பதாகவும் அவர் ரஜீவிடம் கூறினார். ஆகவே, புதிய இந்திய அதிகாரிகளை சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர் பரிந்துரை செய்தார். மேலும், இந்தியா இராணுவ ரீதியில் இலங்கையில் தலையிடலாம் என்கிற அச்சம் காரணமாக இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினூடாக தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது கடிணமானதாக மாறியிருப்பதாகவும் அவர் கூறினார். ரஜீவிடம் மேலும் பேசிய ஜெயவர்த்தன, இனப்பிரச்சினைக்கு நீதியானதும், இறுதியானதுமான தீர்வொன்றினைக் காண்பதற்கு தான் உண்மையிலேயே அக்கறை கொண்டிருப்பதகாவும், இதனைச் செய்வதற்கு இந்தியா தற்போது எடுத்திருக்கும் தமிழருக்குச் சார்பான நிலையிலிருந்து விலகி, பக்கச்சார்பின்றிச் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியாவுடனான உறவினைப் புதுப்பிக்க தான் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். அரசியலிலும், இராஜதந்திரத்தில் கற்றுக்குட்டியாகத் திகழ்ந்த ரஜீவ் காந்தி ஜெயார் விரித்த வலையில் அகப்பட்டுக்கொண்டதுடன், ஜெயாருக்கு நான்கு வாக்குறுதிகளையும் அளித்தார். 1. இந்தியா ஒருபோதும் இலங்கையினை ஆக்கிரமிக்காது. 2. பேச்சுவார்த்தைகளில் தூதராகச் செயற்படும் பார்த்தசாரதியை நீக்கிவிட்டு வேறொருவரை அமர்த்த இந்தியா விருப்பம் கொண்டிருக்கிறது. 3. இலங்கையுடனான உறவைப் புதுப்பிக்க இந்தியா நாட்டம் கொண்டிருக்கிறது. 4. இலங்கையில் இறையாண்மையும், ஒருமைப்பாடும் இந்தியாவினால் பாதுகாக்கப்படும். ஆனாலும், தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலேயே தீர்வு அமைந்திருக்க வேண்டும் என்று ஜெயவர்த்தனவிடம் அழுத்தமாகக் கூறினார் ரஜீவ். அவ்வாறு இல்லாதபட்சத்தில், இனப்பிரச்சினை நீண்டு சென்று, இறுதியில் இலங்கை பிளவுபடுவது நடக்கும் என்றும் ஜெயாரை அவர் எச்சரித்தார். அதற்குப் பதிலளித்துப் பேசிய ஜெயார், "உங்களுக்கும் அருகிலிருக்கும் சிறிய நாடுகளின் நம்பிக்கையினை பெற்றுக்கொள்ள முயலுங்கள், நீங்கள் இளமையானவர், பெரியதொரு நாட்டிற்குத் தலைவராக வந்திருக்கிறீர்கள், நீங்கள் நிச்சயம உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள், உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று கூறினார்.

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

3 months 1 week ago
இதுவும் நல்லா தான் இருக்கு. முயலை மாதிரி ஓடி களைத்து படுக்கிறதை விட ஆமை வேகத்தில் நிதானமா மெதுவா போய் முன்னேறலாம். நாம் தமிழரும் ஆமை வேகத்தில் மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்!

3 months 1 week ago
இரண்டு நாட்கள் விவாதித்தால் என்ன, மூன்று நாட்கள் விவாதித்தால் என்ன, முடிவில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. இரண்டு நாட்கள் விவாதித்து முடித்து விட்டு, பிரேரணை தோற்று விட்டது என்று அறிவித்து விட்டு, மூன்றாம் நாள் உருப்படியான ஏதாவது ஒரு வேலை, அப்படி ஒன்று இருந்தால், செய்யலாம்.

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 1 week ago
ஜெயில் எல்லாம் போகவில்லை பெட்டி சாப்பாடு சாப்பிடவில்லை மற்றவை அனுபவித்து உள்ளேன் ஒருதடவை Holland போய் பிடித்து திருப்பி அனுப்பிவிட்டார்கள் அப்போ நான் மிகவும் அமைதியான ஆள் திருமணத்தின் பிற்பாடு தலைகீழாக. மாறிவிட்டது 🤣🤣 உங்களை போல் என்று சொல்லலாம் ஒம் நான் அடிமை தான் நீங்கள் சுதந்திர புருஷர் 🤣😂🤪

என் இந்தியப் பயணம்

3 months 1 week ago
முப்பது தர முடியாதா என்றேன். ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றுவிடனர். நான் ஒருநாளும் அவர்களைத் தள்ள அனுமதித்ததில்லை. போன தடவை நாம் கதைத்துக்கொண்டு நிற்க அவர்களே வண்டி தள்ளுகிறோம் என்று ஒன்றைத் தள்ளவும் தொடங்க, மகள் நாமே தள்ளுவோ வீடு எந்தபின் விட்டுவிட்டுப் போய்விட்டனர். எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. கூடக் கேட்டால் என்ன செய்வது என்று. நல்லகாலம் நாற்பதுடன் நிறுத்திவிட்டனர். பிரச்சனை நமக்கு அல்வா சாப்பிடுவது போல 😂

என் இந்தியப் பயணம்

3 months 1 week ago
அட நீங்களும் இன்னும் நாட்டுப் பக்கம் போகவில்லையா எழுத மனமே வருதில்லை. ஒன்றாவது எழுதலாம் என்று .. .. .. நன்றி அக்கா வருகைக்கு. ஒவ்வொன்றிலும் 43,42 சிலநேரம் விட்டுவிடுவார்கள் என்ற நப்பாசை 😀 கையில் கொண்டுபோவதை அளவாய்க் காட்டிவிட்டு பின் கொஞ்சம் மேலதிகமாக வைத்தது வேறுகதை 😀 அது வேறை இது வேறை 😂

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 1 week ago
ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர் பலி: வெள்ளை மாளிகை தெரிவிப்பு Published By: SETHU 19 MAR, 2024 | 01:25 PM ஹமாஸ் அமைப்பின் 3 ஆவது உயர் தலைவரான மர்வான் இஸா, கடந்தவாரம் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார் என வெள்ளை மாளிகை நேற்று திங்கட்கிழமை (18) தெரிவித்துள்ளது. ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணியின் பிரதித் தலைவராக விளங்கியவர் மர்வான் இஸா. மார்ச் 9, 10 ஆம் திகதிகளில் இஸாவை இலக்குவைத்து காஸாவில் தாக்குதல் நட்ததப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியர் ஹகாரி கடந்த 11 ஆம் திகதி கூறினார். எனினும், அந்நடவடிக்கையில் இஸா கொல்லப்பட்டாரா என்பது தெளிவில்லை என ஹகாரி கூறியிருந்தார். இந்நிலையில், கடந்தவாரம் இஸ்ரேலின் தாக்குதலில் இஸா கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலீவன் நேற்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179110

பாலியல் கல்வி குறித்த வௌியீடு மார்ச் மாதம்

3 months 1 week ago
பாலியல் கல்வியை வழங்க மேலும் நான்கு புத்தகங்கள்! பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், இதற்காக பாடசாலை நூலகங்களுக்கு மேலதிகமாக 4 வாசிப்புப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறித்த புத்தகங்கள் இ-தக்சலாவ இணையத்தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். குறித்த புத்தகங்கள் இங்கே… https://thinakkural.lk/article/296325

இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

3 months 1 week ago
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் Published By: DIGITAL DESK 3 19 MAR, 2024 | 03:38 PM இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (19) உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இன்றைய தினம் காலை மருதடி சந்தியில் இருந்து பேரணியாக யாழ் இந்திய துணைத் தூதரகம் நோக்கி சென்ற கடற்தொழிலாளர்கள் துணைத் தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியதை அடுத்து யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179128

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

3 months 1 week ago
19 MAR, 2024 | 03:28 PM பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை, சிஐடி மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் சில அதிகாரிகள் ஹரக்கட்டாவிடமிருந்து பணம் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கடமையாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை இடமாற்றம் செய்திருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தப்பிச் செல்ல ஹரக் கட்டாவுக்கு உதவியதாக பல பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/179124

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை ; வழக்கு தள்ளுபடி

3 months 1 week ago
வெடுக்குநாறிமலை கைது விவகாரம் - பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் 19 MAR, 2024 | 04:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 08 பேரை விடுவிக்குமாறு வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் சபை நடுவில் வந்து ' வெடுக்குநாறி,மாதவனை, குருந்தூர் எங்கள் சொத்து' என்று உரத்த குரலில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து 'நாட்டின் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழ் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடன் விசாரணைகளை முன்னெடுங்கள் ' என்று வலியுறுத்தினார். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினால் சபையில் அமளி துமளி ஏற்பட்டது. நீதிமன்ற விசாரணைக்கு இடம்பெற்றுள்ள விடயத்துக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண முடியாது. 08 பேர் கைது செய்யப்பட்ட விதம் முறையற்றதாயின் அது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபைக்கு உறுதியளித்தார். பாராளுமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வினோநோதராதலிங்கம், எஸ். சிறிதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார், இராதாகிருஸ்ணன், நளின் பண்டார ஆகியோர் 'பொலிஸ் அராஜகம் ஒழிக, அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பதவி விலக வேண்டும். வெடுக்குநாறி எங்கள் சொத்து, மாதவனை எங்கள் சொத்து, பொய் வழக்கை வாபஸ் பெறு, அப்பாவிகளை விடுதலை செய், குருந்தூர் மலை எங்கள் சொத்து என கோசங்களை எழுப்பியவாறு சபை நடுவில் வந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளுடன் போராட்டத்தில் கலந்துக் கொண்டார். அத்துடன் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். ஆளும் கட்சியின் ஒருசில உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவன்ச இது இனவாத செயற்பாடு ஆகவே இதற்கு இடமளிக்க வேண்டாம் என இந்த போராட்டத்துக்கு எதிராக உரையாற்றினார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ 'உங்களின் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி விட்டு ஆசனங்களுக்கு செல்லுங்கள்' என்று குறிப்பிட்டு விட்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதன்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ' வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிகள் பாரதூரமான பிரச்சினைகளை முன்வைத்து சபையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே அவர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுங்கள் ' என்றார். சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் 'சபை நடுவில் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்த தமிழ் பிரதிநிதிகளை நோக்கி உங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி விட்டு தயவு செய்து ஆசனங்களுக்கு செல்லுங்கள். நீங்கள் முன்வைக்கும் காரணிகள் பொறுப்பான தரப்பினருக்கு அறிவிக்கப்படும்' என்று அறிவித்து விட்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல 'கோயிலில் வணங்கிக் கொண்டிருக்கும் போது சிவில் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது முற்றிலும் தவறு' என்றார். சபைக்கு நடுவில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த தமிழ் பிரதிநிதிகள் 'தொல்பொருள் அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும். வெடுக்குநாறி எங்கள் சொத்து, மாதவனை எங்கள் சொத்து, குருந்தூர் எங்கள் சொத்து' என உரத்த குரலில் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் 'மத சுதந்திரம் இந்த நாட்டின் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும். கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அதிகாரம் இல்லை. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுங்கள், மத சுதந்திரம் வடக்குக்கும், தெற்குக்கும் ஒன்றாக காணப்பட வேண்டும் என்றார். இதன்போது உரையாற்றிக் கொண்டிருந்த அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா' தயவு செய்து சபையை கட்டுப்படுத்துங்கள்' என்றார். சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் 'அவர்கள் ஆசனங்களுக்கு செல்லாவிட்டால் நாங்கள் என்ன செய்வது' என்றார். தமிழ் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பிரதி சபாநாயகர் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளின் மத்தியில் நின்று 'பிரதி சபாநாயகர் அவர்களே தயவு செய்து இவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள்.மத உரிமை மறுக்கப்பட்டுள்ளதை இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். நீங்கள் பதிலளியுங்கள் என்றார். சபைக்கு தலைமை தாங்கிய பிரதிசபாநாயகர் ' சபை நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.இவர்கள் முன்வைத்த விடயத்தை உரிய தரப்பினருக்கு அறிவிப்பதாக நான் குறிப்பிட்டேன்.அதனை கருத்திற் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது' என்றார். பொலிஸ்மா அதிபரை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் நீங்கள் குறிப்பிடுவதை போன்று பொலிஸ்மா அதிபரை அழைக்க முடியாது. நான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறேன் என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகளுக்கு பிரச்சினைகளுக்கு காணப்படுமாக இருந்தால் அவர்கள் ஆசனங்கள் இருந்தவாறு அவற்றை குறிப்பிடலாம். எதிர்க்கட்சித் தலைவர் இவர்களுடன் ஒன்றிணைந்து 'சோ' காட்டுகிறார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றார். சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் 'பெரும்பாலானோர் 'சோ'தான் காட்டுகிறார்கள் என்றார். தமிழ் பிரதிநிதிகள் சபை நடுவில் இருந்தவாறு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இதன்போது எழுந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ' குணவர்தன 'சாணக்கியன் அவர்களே தயவு செய்து ஆசனத்துக்கு செல்லுங்கள். இவர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு நாங்கள் எதர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே ஆசனங்களுக்கு சென்று பிரச்சினைகளை குறிப்பிடுங்கள். சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார். இதனை தொடர்ந்து சபை நடுவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆசனத்துக்கு சென்று ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து' கடந்த 08 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலையில் மத வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் விழைவித்ததாக பொய் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.ஆகவே 08 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ '08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.முறையற்ற வகையில் கைதுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து பக்கச்சார்பற்ற வகையில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்க முடியும்.அதனை தொடர்ந்து நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும்.கைது செய்யப்பட்டுள்ளவர்களை பாராளுமன்றத்தால் விடுவிக்க முடியாது.ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் ' என்றார். இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் ' நீதியமைச்சரே நான் குறிப்பிடுவதை கேளுங்கள் தொல்பொருள் திணைக்களம் பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச' நீதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நாட்டில் மத சுதந்திரம் உள்ளது.இது அடிப்படை உரிமை.மத தலங்களுக்கு சென்று வழிபட அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.225 உறுப்பினர்களும் மத சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்' என்றார். ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் 'தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடித்தனத்தால் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.முறையான விசாரணைக்கு பின்னர் அவர்களை விடுதலை செய்ய முடியும் என்று நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.ஆனால் குருந்தூர் மலை விவகாரத்தில் ஒருசில பௌத்த பிக்குகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.தமிழர்களுக்கு ஒரு நீதி,சிங்களவர்களுக்கு பிறிதொரு நீதி இதுவே இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினை என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, 'தொல்பொருள் கட்டளைச்சட்டம் தொடர்பில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுகின்றன.மத தலங்கள் உள்ள பெரும்பாலான இடங்கள் தொல்பொருள் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.அதில் பௌத்த விகாரைகள் பெருமளவில் காணப்படுகின்றன.தொல்பொருள் திணைக்களத்தினால் பௌத்த பிக்குகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொல்பொருள் சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றங்களுக்கு கிடையாது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.தொல்பொருள் சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் திருத்தங்களை முன்வைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஆகவே தொல்பொருள் சட்டத்தின் குறைப்பாடுகளை ஒரு இனத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம் என்றார். இதனை தொடர்ந்து சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ' இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்றத்தின் ஊடாகவும் உரிய கவனம் செலுத்தப்படும் ' என்று சபைக்கு அறிவித்தார். https://www.virakesari.lk/article/179098

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு !

3 months 1 week ago
நாளை நாடு முழுவதும் அதிக வெப்பநிலை! மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, நாளை (20) முழுவதும் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் சில இடங்களில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொணராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/296333

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 1 week ago
நல்லாயிருக்கு....கந்தையர் 😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால் அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது. இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில் அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல் நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 1 week ago
முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎 அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣
Checked
Mon, 07/01/2024 - 07:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed