புதிய பதிவுகள்2

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 1 week ago
இப்படியானவற்றை நானும் அவதானித்துள்ளேன். மேற்குலகநாடுகளில் குடியேறிய ஈழதமிழர்கள் பலரிடம் உள்ளது. நான் வசிக்கின்ற நாடு தான் நம்பர் ஒன்று உன்னுடைது அது மாதிரி வராது என்பார் ஒருவர், மற்றவர் எனது நாடு தான் சிறந்தது உன்னுடையது பின்னுக்கு தான் என்பார் இப்படியே மேற்குலகநாடுகளில் என்ஜோய் பண்ணி வாழ்கின்றார்கள் அதில் தான் வாழ்கின்ற மேற்குலகநாடு தான் சிறந்தது என்று சொல்லி பெருமைபபட்டு போட்டிபோடுவார்கள் தான் போகவே விரும்பாத ரஷ்யா சீனா வடகொரியா ஈரானை இங்கே வாழ்ந்து கொண்டு புகழ்பாடுவதைவிட இது மேலானது நாங்கள் பலர் ஐரோப்பா சென்ற போது அந்த கம்யனிச வீழ்ச்சி பேர்லின் சுவரை காண்பதை மிகவும் ஆசையாக கொண்டிருந்தோம்.

கண்ணுறுவது கண்ணோட்டம்

3 months 1 week ago
என் மகள் சோம.அழகு 'திண்ணை' இதழில் எழுதிய கட்டுரையை இங்கு பதிவு செய்துள்ளேன். நன்றி தோழர். "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை" (குறள் 315; அதிகாரம் : இன்னா செய்யாமை) (குறளின் பொருள் : பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தைத் தனக்கே ஏற்பட்ட துன்பமாய்ப் பாவிக்காவிட்டால், ஒருவன் பெற்ற அறிவினால் என்ன பயன் ?) மேற்கண்ட குறள் நீங்கள் சொன்ன கருத்துடன் பொருத்தி நோக்கத்தக்கது. 'பிறிதின் நோய்' என்று அஃறிணைகளுக்கு ஏற்படும் துன்பத்தையும் வள்ளுவன் குறித்தது குறளின் சிறப்பு. 'பிறிதின் நோய் தந்நோய்' எனும் தலைப்பில் முன்னர் நமது இந்த 'யாழ்' தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஆகையால் குறள் உடனே நினைவுக்கு வந்தது. தங்களின் பின்னூட்டத்திலிருந்து சற்று விலகி, ஒரு கருத்தையும் இவ்விடத்தில் கட்டுரைக்கான எனது பின்னூட்டமாகப் பதிவு செய்ய விழைகிறேன். சில நேரங்களில் சில அழிவுகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதயாததாய் அமையும் - சாலை அமைக்க மரம் வெட்டுவது போல. இருப்பினும் அவற்றைக் கேள்விக்கு உட்படுத்தாமல் கடந்து செல்வது பேரழிவுகளுக்கு வழி வகுக்கும். அவ்வாறு கேள்விக்கு உட்படுத்துவதாகவும் கட்டுரையைப் பார்க்கிறேன். இக்கண்ணோட்டமும் கட்டுரையில் குறித்த 'கண்ணோட்ட'மும் இணைந்து செல்வன என்று நினைக்கிறேன்.

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 1 week ago
மேற்குலநாடுகளின் வசதி வாய்ப்புகள் அப்படி ஹௌதிகள் யாருடைய வயிற்றில் அடிக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதில் சிரமம்.

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 1 week ago
முன்னேற்றம் தெரிகிறது - "வைரவரின் வாகனம்" என்று மறைமுகமாக எழுதப் பழகியிருக்கிறீர்கள்😂. ஹௌதி தாக்குவது மிளகாய்ப்பொடி கொண்டு வரும் கப்பலாக இருந்தால், மிளகாய் பொடி விலையேறும் தான்! ஆனால், அமெரிக்கா அதைத் தடுக்க ஹௌதிகளைப் போட்டுத் தாக்கினால், அது பிரச்சினையாகி விடும்! இங்கேயும் வைரவரின் வாகனக் குணம் தான் பிரச்சினை😎!

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

3 months 1 week ago
ஆமைகளின் வழித்தடத்தை பின்பற்றி கடல்வழிகளை கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழிப்பயணம் மேற்கொண்ட தமிழனின் பெருமை அறியாதோர் ஆமையினை இழிவாக பார்ப்பர். ஆமையினது வாழ்க்கை முறைகளை அறியாதோர் அதனை கேவலமாக பார்ப்பர். நாம் தமிழர் கட்சிக்கு ஆமை சின்னம் பொருத்தமானதே. ஏனெனில் அது இயற்கையோடு ஒன்றி வாழும் உயிரினம். யாருக்கும் தீங்கு செய்யாத உயிரினம்.ஆறறிவு படைத்த மனிதனை விட நீண்ட காலம் வாழும் உயிரினம். ஆயிரம் முட்டைகள் போட்டாலும் அமைதியாய செல்லும் உயிரினம். ஆமையிடமிருந்து மனிதன் இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை படிக்க வேண்டும்.

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி.

3 months 1 week ago
ஜேர்மனிய ஜனாதிபதியும் புட்டினுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையாம்.......கலியாண வீட்டிலை மாப்பிளையின்ரை சீப்பை ஒளிச்சு வைச்ச பீலிங்......🤣

மயிலம்மா.

3 months 1 week ago
சலிப்பில்லாமல் வாசித்த கதைகளில் ஒன்று…..! ஊரில் ஒரு விதானையாக ஆகியிருக்கலாமோ என்ற ஏக்கம் மட்டும் என்னை விட்டு நீண்ட காலத்துக்கு அகலாது என்பது மட்டும் உண்மை…! வாழ்த்துக்கள், சுவியர்…!

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 1 week ago
வைரவரின் வாகனத்திற்கு எங்கு அடி விழுந்தாலும் காலை மட்டும் தூக்குமாம்🤣.அது போல் மேற்குலக விசுவாசிகளுக்கு ஏதாவது நொண்டிச்சாட்டுக்களை சொல்வதே வேலையாக போய்விட்டது.😎 ஈராக் மீது தாக்குதல் நடாத்தி விட்டு போரினால் எரிபொருள் விலையேற்றம் அதனால் அத்தியாவசிய பொருட்களும் விலையேற்றம் என்றார்கள். அதே பல்லவியை லிபியா மீது தாக்குதல் நடாத்தி விட்டு விலையேற்ற பஜனை பாடினார்கள். பலஸ்தீன விவகாரத்திலும் அதே பஜகோவிந்தம் தான். இப்போது கௌதிகளின் தாக்குதல் விடயத்திலும் பச்சைமிளகாய் விலை ஏற்றத்திற்கும் அவர்கள் தான் காரணம் என்பர். ஆனால் மலிந்த இலகுவாக கிடைக்கக்கூடிய ரஷ்ய எரிபொருள் பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஏனெனில் அங்கே மனித உரிமை மீறல் நடக்கின்றதாம். எண்ணை வழங்கொழித்த மத்திய கிழக்கில் நடக்காத மனித உரிமை மீறல்களா ரஷ்யாவில் நடக்கின்றது?

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 1 week ago
யாருடைய அனுபவத்தையும் மறுதலிக்காமல், ஒரு ஒப்பீட்டுக் குறிப்பை மட்டும் தருகிறேன். 1982- 84: இந்தக் காலப் பகுதியில் ஐரோப்பா கிழக்கு, மேற்கு என ஜேர்மனியின் ஊடாகப் பிரிந்திருந்தது. மேற்கில் அமெரிக்க செல்வாக்கு, கிழக்கு ஜேர்மனியில் தெளிவாக சோவியத் செல்வாக்கு (சோவியத்தின் சுற்றயல் நாடு-satellite state என்று கிழக்கு ஜேர்மனி அழைக்கப் பட்டது). ஜேர்மனியின் கிழக்கில் இருந்து மேற்குப் பாதிக்கு மக்கள் உயிரைப் பணயம் வைத்துத் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் தப்பியோடாமல் இருக்க பேர்லின் சுவரை படிப் படியாகப் பலப்படுத்திக் கொண்டிருந்தது சோவியத் அணி. (ஒரு கட்டத்தில், dog run என்ற வடிவில் கொடிய கடி நாய்கள் கூட காவலுக்குப் பயன்படுத்தப் பட்டன). இதே காலப் பகுதியில், உள்ளூர் வாசிகளான ஜேர்மனியர்கள், கிழக்கில் Stasi உளவுப் பிரிவினால் கைதாகி, சித்திரவதைக்காளானார்கள், காணாமல் போனார்கள். இன்னும், கிழக்கே போனால், ஸ்ராலின் பின் வந்த வால்களான பிறஷ்னேவும், அந்த்ரபோவும் சோவியத் ஒன்றியத்தின் சொந்த மக்களையே குலாக்குகள் (Gulags) என்ற சைபீரிய கடூழிய சிறைகளில் அடைத்து வைத்தார்கள். இவர்களுக்கு, அடுத்த நகரம் என்ன, அடுத்த கொட்டிலுக்கே சுதந்திரமாகச் செல்ல அனுமதி இருக்கவில்லை - பலர் அங்கேயே சமாதியுமானார்கள். எனவே, இந்த வரலாற்றுப் பின்னணியில் துன்பங்கள் என்பவை ஒப்பீட்டு ரீதியானவை தான். எதிர்பார்ப்புகளோடு குடியேறியாக வந்தோம், எதிர்பார்த்ததை விட குறைவாக அடைந்தோம். இன்னொரு பக்கம், நாம் அடைந்ததை விட அதிக துன்பம் அடைந்த மக்களை ஆண்ட, ஆளும் தலைவர்களை மிகவும் மரியாதையோடு விரும்புகிறோம். இந்த முரண், புரிந்து கொள்ள முடியாத ஒரு முரண்!

கண்ணுறுவது கண்ணோட்டம்

3 months 1 week ago
நினைத்து ஏங்கவைக்கும் ஒரு கட்டுரை........ என்ன சிறு வயதிலும், இளமைக் காலங்களிலும் வீரமென நினைத்து செய்யும் சில பாவங்கள் மரங்களை முறிப்பது, சிறு உயிரினங்களை வதைப்பது போன்றவை எல்லாம் வயதாக வயதாக வந்து தலையில் அடிக்கிறது.......! நன்றி ஐயா .......!

கண்ணுறுவது கண்ணோட்டம்

3 months 1 week ago
மிகவும் அருமையான ஒரு கட்டுரை, ஆசானே. எங்களில் பலருக்கு இருக்கும் உளச் சிக்கல்களை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள். சமீபத்தில் 'குருகு' இதழில் சடகோப முத்து ஶ்ரீநிவாசன் அவர்களுடனான ஒரு நேர்காணலை வாசித்தேன். அதில் வைணவன் என்பன் யார் என்னும் கேள்விக்கு அவர் ஒரு பதில் சொல்லியிருந்தார். எல்லா நெறிகளும் ஒன்றையே சொல்லுகின்றன என்று தோன்றியது. ஆனால், நெறிப்படி நடப்பது முடியாத ஒரு காரியமாகவே இருக்கின்றது. **** வைணவன் என்பன் யார்? ‘பர துக்க துக்கித்வம்’ என்றால் பிறர் துன்பத்தை தனதாகக்கொள்பவன். பிறர் என்றே இல்லாமல் இருப்பவன். ஏனெனில் இந்த உலகமாக இருப்பவனும் அவற்றில் உயிராக இருப்பவனும் பரமாத்மாவே. மரம், புழு, பூச்சி என அனைத்து உயிருக்குள்ளும் அவனே உறைகிறான்..........

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 1 week ago
கிட்டத்தட்ட 42 வருடங்களை வீணாக்கி விட்டதாக சொல்கிறீர்கள் அண்ணா. ஆனால் ரசிய ஆட்சியில் இருந்த பேர்லினை கடந்து நீங்கள் விரும்பி எடுத்த முடிவுப் படிதான் நீங்கள் தானே ஜேர்மனிக்குள் புகுந்தீர்கள். இதே பேர்லினையும் யேர்மனி மையும் கடந்து தான் நானும் வந்தேன். ஆனால் நான் பேர்லின் மற்றும் ஜேர்மனி வரும் போது (1984) அங்கே தமிழர்கள் நன்றாக தான் இருந்தார்கள் வாழ்ந்தார்கள். இன்றும் எனது உறவுகளே எமது பிரான்ஸ் வாழ்வை பார்த்து கேலி செய்யும் அளவுக்கு வசதியாக வாழ்கிறார்கள். (புலம்பெயர் வாழ்வு மிகவும் சுகபோகமானது என்று நானும் நினைக்கவில்லை)

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி

3 months 1 week ago
இந்தியன் நிதி உதவியில் துறைமுகம் கட்டி வேலைமுடிய சீனா ஆராச்சிகப்பல் வந்து நிற்க சரியாயிருக்கும்..

அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்…

3 months 1 week ago
இந்திய மாணவர்களின் passport ஐக் கேட்டு வாங்கிப் பார்த்துவிட்டு கொல்லப்படுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த விளைகிறார்கள். அது தவறு. 👇 More international students lose their lives in the US than we know Heather Wang, Contributor October 20, 2023 Jaahnavi Kandula The death in January of Jaahnavi Kandula, a student from India living in Seattle, attracted international attention when she was struck and killed by a police officer responding to a call. However, Kandula is not the only international student to lose her life in the United States this year. While her case received massive press attention because of the mistake of a police officer, others have died due to accidents, murders, or suicides. They are a relative handful of the hundreds of thousands of international students who come to the U.S. every year, drawn by the hopes that a good education will lead to a brighter future. It’s unclear how many international students die in the U.S. each year, but it is certainly more than we hear about in mainstream media. We don’t know how many go unreported. None of them thought about death when they came, but some of them may never be back home alive. Several international students died due to external causes last year Nandapu Devansh Nandapu Devansh, from India, was shot dead by a robber in Chicago on Jan. 24, 2022. Devansh died only ten days after he came to the U.S. Read more on Tribune India Zhifan Dong Zhifan Dong, from China, was killed by her boyfriend, another international student, with a lethal dose of heroin. It happened in Salt Lake City, Utah on Feb. 11, 2022. The killer had informed a University of Utah employee saying that he and Dong intended to use drugs for a painless passing. The university later admitted its shortcomings in the response. Read more on The Sacramento Bee Varun Manish Chheda Varun Manish Chheda, from India, was killed by his roommate, a Korean student, in Indiana on Oct.5, 2022. The reason reamined unknown but the killer claimed that Chheda blackmailed him. Read more on NDTV Saiesh Veera Saiesh Veera, from India, was shot dead by a robber in a gas station in Columbus, Ohio on April 20,2023. Read more on The Indian express Camila Behrensen and Pablo Guzman-Palma Camila Behrensen from Buenos Aires, Argentina, and Pablo Guzman-Palma from Santiago, Chile, was killed by a man who set their apartment on fire. It happened in Kansas City on Oct. 22, 2022. https://gobserver.net/5734/commentary/more-international-students-lose-their-lives-in-the-us-than-we-know/

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி.

3 months 1 week ago
Indian PM Modi congratulates Vladimir Putin on election win, vows to boost ties ANI Synopsis Modi congratulated Putin, eager to strengthen India-Russia ties. Despite the Ukraine invasion, India remains a key arms buyer from Russia, balancing US relations. The countries also deepen defence cooperation with the Quad alliance. By AFP Follow us Last Updated: Mar 18, 2024, 06:05:00 PM IST 1 Indian Prime Minister Narendra Modi said Monday in a congratulatory message to re-elected Russian President Vladimir Putin he looked forward to boosting ties to develop their "special" relationship. Look forward to working together to further strengthen the time-tested Special and Privileged Strategic Partnership between India and Russia in the years to come," Modi wrote on social media platform X. He offered his "warm congratulations" to Putin. https://m.economictimes.com/news/india/indian-pm-modi-congratulates-vladimir-putin-on-election-win-vows-to-boost-ties/amp_articleshow/108591498.cms 🤣

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 1 week ago
ஹௌதிகள் ஹொர்முஸ் நீரிணை நோக்கி செங்கடல் வழியாகப் போகும் எல்லாக் கப்பல்களையும் அடிக்கிறார்கள். இது வரை அறுபதுக்கு மேற்பட்ட தாக்குதல்கள். தாக்கப்படும் இந்தக் கப்பல்களில் அமெரிக்கர்களும் இல்லை, அமெரிக்க படைகளும் இல்லை- ஆனால் ஏற்றுமதிப் பொருட்கள் இருக்கின்றன. பல சரக்குக் கப்பல்கள் இப்போது செங்கடலை இதனால் தவிர்த்து, ஆபிரிக்காவைச் சுற்றி ஐரோப்பா வருகின்றன. இதனால் வரும் மேலதிக செலவு கப்பல்களில் வரும் சரக்குகளின் விலையில் சேர்க்கப் படுகிறது. எனவே, பொருட்களின் விலைகள் ஏறும். வசதியுள்ளவர்களுக்கு தோற்றாது, வசதியில்லாதவன் வயிற்றையும் வாயையும் கட்டிக் கொள்ள வேண்டும். நீங்கள் வசதியாக இருக்கிறீர்கள் போல, அல்லது உலக வரைபடம் இன்னும் சரியாகத் தெரியாமலே சமாளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் கொள்ளலாம்😂! குறைந்த பட்சம் யாருடைய வயிற்றில் ஹௌதிகள் அடிக்கிறார்கள் என்ற புரிதல் இல்லாமலே, ஒரு பக்கத்தால் "கல்யாணி" எழுத, மற்றப் பக்கத்தால "குமாரசாமி" சிரிக்கிறார்! இது தான் இன்றைய மகாஜனங்களின் நிலை😎!
Checked
Mon, 07/01/2024 - 07:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed