புதிய பதிவுகள்2

மயிலம்மா.

3 months 1 week ago
மயிலிறகு........... 18. உடனே யோகிபாபு ஐயோ அம்மா, அண்ணா நான் ஒன்றும் அவங்களைக் கடத்துறதுக்கு வரேல்ல. எங்கட அப்பான்ர மோட்டார் சைக்கிளை யாரோ ஒரு பொடியன் ஓடித் திரிகிறதாய் கேள்விப் பட்டன். அதுதான் அவனுக்கு இரண்டு தட்டு தட்டிப்போட்டு சைக்கிளைத் தூக்கிக் கொண்டு வரத்தான் பிளான் போட்டு பொடியளுடன் இந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள். அப்போது அஞ்சலா முன் வந்து அதை இவர் கேட்டிருந்தால் நானே குடுத்திருப்பேனே. இவர் "பாரில்" கடத்துறது தூக்கிறது என்று கதைத்ததால்தான் அது எனக்குத் தெரிந்து இவ்வளவும் நடந்திட்டுது. அதோ அந்தா நிக்குது மோட்டார் சைக்கிள். நான்தான் அது பழுதாய் இருந்தது. அவர் கம்பிரமாய் அதில் இருந்து இந்த ஊர் முழுதும் ஓடித் திரிந்தவர். அது பழுதாகி திண்ணையில் நிற்பதை பார்க்க எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அதனால்தான் இவரிடம் அதைத் திருத்தி சில நாட்கள் ஓடிப்பார்த்துட்டு கொண்டு வரச்சொல்லி குடுத்தனுப்பினனான். எங்க அந்தத் தம்பியைக் கூப்பிடு என்று சொல்ல அரசு விதானை முன்னால் வந்து அவனை உங்களுக்குத் தெரியும் தம்பி,எப்போதும் என்கூடத்தான் வேலை செய்து வருகிறவன். பெயர் வாமன். இப்ப அவனும் இங்கு விதானையாகி இருக்கிறான் என்று சொல்ல வாமன் முன்னால் வருகிறான். ஓ.....அப்படியா நல்லது, அவனைப் பார்த்து நல்ல ராஜாவாட்டம் இருக்கிறாய்......அவர்களை நல்லபடியாய் வைத்து வாழ்ந்துகொள் என்று வாழ்த்துகிறான். வாமனும் சைக்கிள் சாவியை அவனிடம் தர நீட்டுகிறான். அதை அவன் தாய் மறித்து இந்தப் பிள்ளை விடயத்தில் அவர் செய்த பாவத்துக்கு தன் மோட்டார் சைக்கிள் மூலமாய் பிராயசித்தம் செய்திருக்கிறார். அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். அப்போது மூத்தமகன் ரவியும் எங்களுக்கு கொஞ்சம் முன்னால்தான் விதானையார் பிரச்சினைகளைச் சொல்லி கூட்டி வந்தவர். அதுவும் நல்லதாய் போயிற்றுது. உங்களின் திருமணத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கு என்கிறான். மயிலம்மாவும் ஏதோ அந்தப் பெண்ணுக்கு உரித்தானவர்கள் வந்திருக்கிறீர்கள், சாப்பாடு எல்லாம் தயாராய் இருக்கு. இருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போக வேணும் என்று சொல்ல அங்கேயே படங்கு விரித்து தாமரை இலையில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப் படுகிறது. பின் அவர்கள் போகும் போது அந்த அம்மாள் தன் கையிலும் கழுத்திலும் இருந்ததைக் கழட்டி அஞ்சலாவுக்கு காப்பும் வாமனுக்கு சங்கிலியும் போடுகிறாள்.ரவியும், யோகிபாபுவும் கூட தங்களிடம் இருந்த சங்கிலி மோதிரங்களை கழட்டி இருவருக்கும் போடுகிறார்கள். பின் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு செல்கிறார்கள். போகும் போது மூத்தமகன் ரவி அவர்களை பார்த்து இனிமேல் உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் எனக்கு சொல்லியனுப்பவும் நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களின் தாயாரும் மயிலம்மாவையும் மற்றும் எல்லோரையும் பார்த்து நீங்கள் நாலாம் சடங்குக்கு எங்கள் வீட்டிற்கு வாருங்கோ, நாங்கள் எல்லா ஏற்பாடும் செய்த்து வைக்கிறம் என்று சொல்கிறார்கள். யோகிபாபு வானில் ஏறும்போது அவனது கூட்டாளிகள் அப்பாடா கனகாலத்துக்குப் பிறகு நல்ல சாப்பாடு என்று சொல்லி ஏப்பம் வீட்டுக் கொண்டே வர யோகிபாபு அவங்களை பார்த்து நில்லுங்கடா....சும்மா தன்பாட்டில் வீட்டுக்ல வந்து நிக்கப் போற மோட்டார் சைக்கிளுக்கு என்னை உசுப்பேத்தி விட்டு நான் வானையும் வாடகைக்கு எடுத்து உங்களுக்கும் ஒரு வாரமா விஸ்கியும் பிரியாணியுமாய் அழுது கடைசில சைக்கிளும் கையை விட்டுப்போய் கையில கழுத்தில கிடந்த நகைகளும் போகப் பண்ணிட்டீங்களேடா. ஏறுங்கடா பஸ் ஸ்ராண்டில இறக்கி விடுவன் காலமை முதல் பஸ்ஸில இந்த ஊரைவிட்டே ஓடிடனும் சொல்லிப்போட்டன். வான் போகுது எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏதோ சண்டை கலாட்டா நடக்கும் தான் விலக்குப் பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த விதானையும் விசயம் சப்பென்று போனதைப் பார்த்து மணமக்களை அழைத்து பொக்கட்டில் இருந்து பணம் எடுத்து இந்தா இதை வைத்துக் கொள் என்று குடுக்கிறார். என்ன அண்ணா இது சம்பளப்பணமா என்று நமுட்டுச் சிரிப்புடன் வாமன் கேட்க, போடாங்.....பக்கத்தில பிள்ளை நிக்குது இல்லையென்றால் இப்ப உனக்கு சொல்லுவான், ஏன்டா ஒன்றுமே இல்லாத விசயத்துக்கு இப்படிக் கலாட்டா பண்ணிட்டீங்களேடா. என்று சொல்லி விட்டுப் போகிறார். மற்றவர்களும் நல்ல சாப்பாடு நல்ல கலியாணம் என்று சொல்லி சிரித்துக் கொண்டு போகிறார்கள்.......! 🦚 மயில் ஆடும்........... 18.

அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு

3 months 1 week ago
தாங்கள் இலங்கையரும் இல்லை இந்தியரும் இல்லை எனும்போது அவர்களுக்கு கவலை வரத்தானே செய்யும்? ] அப்படியானால் இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட குடியுரிமை மசோதா அறிவிப்பில் முஸ்லிம் நாடுகளில் இருந்து துன்பபட்டு வருகின்ற பிற மதத்து மக்களை போன்று எங்களையும் அந்த மசோதாவில் சேர்த்து கொள்ளாதது கவலைக்குரிய விடயம் என இலங்கை இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் கவலை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் முன்பு இருந்தே அவர்கள் தலைவர்களினாலோ அவர்களினலோ இப்படி ஒரு வேண்டுகோள் வைக்கபட்டது இல்லையே. அவர்களுக்கு இலங்கை குடியுரிமை உள்ளது . அவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துவது அரசு, அவர்கள் தலைவர்கள் செய்ய வேண்டியது அவசியமானது.

அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு

3 months 1 week ago
1&3 போதுமான விளக்கம் ஏற்றகனவே தரப்பட்டுள்ளது. 2. அவர் கிறீஸ்தவன் நானும் கிறீஸ்தவன் ஆகவே எனது ஆதரவு அவருக்கே என்று கூறப்பட்டுள்ளது. நன்றி வணக்கம்.

அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு

3 months 1 week ago
🤦🏼‍♂️ 1) இந்திய ஆதரவாளர்களும் இந்துத்துவ ஆதரவாளர்க வேறு வேறா? இல்லையே? 2) கிறீஸ்தவன் கிறீஸ்தவனுக்கே ஆதரவு என்று தாங்கள் கூறுவது தவறு. கிறீஸ்தவனாக இருக்கின்ற ஒரே காரணத்தால் ஓரங்கட்டும்/ எதிர்க்கப்படும் செய்கைக்கே எதிர்ப்பு வெளியிடப்படுகிறது. 3) இந்தியாவை எதிர்ப்பவர்கள் எல்லோரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்கள்தான். ஆதலினால் இந்துத்துவாவிற்கு ஆதரவளிப்பவர்கள்தான் இந்தியாவின் இந்தத் திட்டமிடப்பட்ட ஈழத்தமிழர் வெறுப்பிற்கு காரணம் என்னவென்று கூற வேண்டும். அத்துடன் இந்துத்துவாவொற்கு ஆதரவளிப்பதற்கு காரணம் கூற வேண்டும்.

அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு

3 months 1 week ago
@Kapithan எம்மவர்கள் இந்தியாவிற்கு ஏதிலிகளாக செல்லும் போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் (இந்திரா காந்தி - ராஜீவ் காந்தி - வி.பி.சிங் - சந்திர சேகர் - பி.வி.நரசிம்மராவ்) . 1998 இல் அடல் பிகாரி வாஜ்பாய் (BJP) பின்னர் 2004 இல் இருந்து 2014 வரை மன்மோகன் சிங். 2014 இல் இருந்து இன்றுவரை BJP. மேலும் இங்கு யாழில் இந்தியாவின் இந்துத்துவ கொள்கைக்கு யாருமே ஆதரவளிப்பதாக கூறவில்லை. ஆனால் சிறீலங்காவில் கிறீஸ்தவனாக கிறீஸ்தவனுக்கே ஆதரவு என்றே கூறப்பட்டுள்ளது. சரி நீங்க இந்த சட்டத்திற்கு எதிராக விட்ட மூச்சு எங்கே? பிகு: சிறீலங்காவிற்கு வெளியே நடந்த பிறப்பு / இறப்புகளை அந்தந்த நாடுகளிலுள்ள சிறீலங்க தூதரகங்களூடாக பதிவு செய்யலாம்.

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 1 week ago
இந்தத் திரியில் நீங்கள் பதிலளித்த எந்த கருத்திலாவது தமிழரை பற்றி அவதூறு கூறிய கருத்து இருந்ததா? அது எது என்று கூறமுடியுமா? அப்படியிருக்க அவ்வாறு இருந்ததாக பச்சைப்பொய்கூறியதும் தேவையற்று அரசியலை இழுத்ததும் ஏன்? மாறாக இதை வைத்து அந்த குடும்பத்தை நோக்கிய இனவாத கருத்துக்களே இங்கு வைக்கப்பட்டிருந்தன.

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 1 week ago
ம் ..... நாமேதோ நாகரீகமற்றவர்கள், மனிதநேயமற்றவர்கள் என்பதுபோல் எழுதிய கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதில், சிங்கள அரசாங்கம் வெளியிட்ட செய்திகளின் முறை பற்றிய விளக்கம் எழுதப்போய் அது பந்தியாகி உங்களுக்கு வாசிச்சு நட்டு களர வைத்ததற்காக தாங்கள் என்னை மன்னித்தருள்க.

மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைக்க திட்டம்

3 months 1 week ago
மன்னாாில் காற்றாலை மின்சார திட்டம் – கொழும்பில் அதானி நிறுவனத்துடன் பேச்சு March 16, 2024 காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தம் தொடர்பில் அதானி நிறுவனத்துக்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாகர் அதானி மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம செயல்பாட்டு அதிகாரியுமான அனில் சர்தானா ஆகியோர் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்துள்ளனர். மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெகாவாட் காற்றாலை ஆற்றல் மின் உற்பத்தி திட்டத்துக்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக அதானி கிரீன் எனர்ஜியின் அதிகாரிகள் இலங்கை வந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜே சேகர குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் மன்னாரில் 250 மெகாவாட் மின்சாரமும், பூநகரியில் 234 மெகாவாட் மின்சாரமும் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.ilakku.org/மன்னாாில்-காற்றாலை-மின்ச/

தயாசிறி ஜயசேகர எம்.பியின் தலைமையில் புதிய கூட்டணி – 20 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வு

3 months 1 week ago
தயாசிறி ஜயசேகர எம்.பியின் தலைமையில் புதிய கூட்டணி – 20 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வு March 16, 2024 சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு – லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நாற்பது சிவில் அமைப்புகள் இந்த புதிய கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அன்றைய தினம் இந்த புதிய கூட்டணியுடன் சில ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, புதிய கூட்டணியின் கொள்கைகளுக்கு பிரதான கட்சியொன்று இணங்கும் பட்சத்தில், குறித்த கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாத நிலையில், தேசியத் தேர்தலில் மனிதநேய மக்கள் கூட்டணி சார்பில் அதன் தலைவர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய கட்சிகளுக்குள் ஏற்கனவே உட்கட்சி பூசல் காணப்படும் நிலையில், இந்த புதிய கூட்டணியில் பலர் இணைவதற்கான சாத்தியம் உள்ளதாக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/தயாசிறி-ஜயசேகர-எம்-பியின/

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 1 week ago
சாத்தான் இங்கு நடை பெற்றது ஒரு குடும்பத்துக்குள் நடந்த தனிப்பட்ட கொலைச்சம்பவம். இதே போன்ற பல கொலைச்சம்பவங்கள் புலம் பெயர் நாடுகளில் தமிழர் குடும்பங்களுக்குள்ளும் நடைபெற்றுள்ளன. இதற்குள் அரசியலை இழுத்து பந்தி பந்தியாக புராணம் பாடும் அளவுக்கு நட்டு கழன்றவர்களாக நாம் இருக்கவேண்டியதில்லை.

திமுகவின் 'முத்தமிழ் முருகன்' மாநாடு அறிவிப்பு: இந்து வாக்குகளை கவரும் 'அரசியல் தந்திரமா'?

3 months 1 week ago
அந்த வேலை அன்பளிப்பு செய்தது கடத்தல் பேர்வழி சாதிக் என புலனாய்வு தகவல் வருகின்றது ...இந்திய மத்திய புலனாய்வு அதிகாரிகள் அந்த வேலை பார்வையிட வருவார்கள்

அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விசேட தேவையுடைய பிள்ளைகள்

3 months 1 week ago
அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிள்ளைகள்: தந்தை அளித்த வாக்குமூலம் தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவியின் இழப்பு தன்னை வெகுவாக பாதித்து இருந்தமையால்தான் இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்றதாக தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த தந்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதி மேலும், தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த நிலையில் மனைவியின் இழப்பு தன்னை வெகுவாக பாதித்திருந்ததாகவும் இதனால் எனது பிள்ளைகளை பராமரிப்பதற்கு சிரமமாக இருந்த காரணத்தினால் தான் இவ்வாறு செயற்பட்டதாக கொலைக்குற்றவாளியான தந்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது வீட்டில் இருந்த இரு பிள்ளைகளும் படுக்கையில் வைத்தபடி பல வகை கத்தி வகைகளை கொண்டு திடீரென கழுத்தை வெட்டிய தந்தை சம்பவத்தை கைத்தொலைபேசி ஊடாக தனது சகோதர சகோதரிகளுக்கு அறிவித்துள்ளார். பின்னர் சம்பவ வீட்டிற்கு உடனடியாக வந்த சகோதர, சகோதரிகள் அங்கு கண்ட காட்சியை கண்டு அபயக்குரல் எழுப்பியதுடன் கத்தியோடு கொலை செய்து காணப்பட்ட தனது சகோதரனை அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பொதுமக்களின் உதவியுடன் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்துடன் காணப்பட்ட முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) மற்றும் முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோரின் நிலை கண்டு அவ்விடத்தில் வந்திருந்த உறவினர்கள் மற்றும் மக்கள் பெரிய நீலாவணை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணை இதையடுத்து சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலங்கள் காணப்பட்ட வீட்டிற்கு உரிய பாதுகாப்பினை வழங்கியுள்ளனர்.மேலும், தடயவியல் பொலிஸாரும் மோப்பநாய் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பின்னர் கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் அங்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு இறுதியாக பிரேத பரிசோதனைக்காக உடலங்கள் அம்பாறை பொது வைத்தியசாலை அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் இரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உடலங்கள் இன்று(15) நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் வெளிநாட்டில் இருந்து இரு சகோதரர்களின் வருகைக்காக காத்திருப்பதாக உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/this-what-led-to-double-murder-father-s-confession-1710508917?itm_source=parsely-api

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி நல்லூரிலிருந்து வவுனியா நோக்கிய வாகனப் பேரணி ஆரம்பம்

3 months 1 week ago
அநீதிக்கு எதிராக அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு! Published By: VISHNU 16 MAR, 2024 | 12:51 AM அநீதிக்கு எதிராக சனிக்கிழமை (16) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக வடகிழக்கு மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்புவிடுத்துள்ளார். கடந்த மகாசிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாகிகள்மீதும், சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக்கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சனிக்கிழமை (16) காலை 10.00 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், அனைத்துத் தமிழ் மக்கள், சமயம்சார்ந்த அமைப்புக்கள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள், சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், என அனைவரையும், கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178833

பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்

3 months 1 week ago
நிஸ்ஸன்க, அசலன்க துடுப்பாட்டத்தில் அபாரம்; இலங்கை வெற்றிபெற்று தொடரை (1-1) சமப்படுத்தியது Published By: VISHNU 15 MAR, 2024 | 10:30 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் இலங்கை வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது. பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதம், உதவி அணித் தலைவர் சரித் அசலன்க பெற்ற அரைச் சதம் மற்றும் அவர்கள் பகிர்ந்த சாதனைமிகு 4ஆவது விக்கெட் இணைப்பாட்டம், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே ஆகியோர் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 34 ஓட்டங்கள் என்பன இலங்கையை வெற்றிபெறச் செய்தன. பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 287 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 47.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பங்களாதேஷைப் போன்று இலங்கையும் ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோவை (0) முதலாவது ஓவரிலேய இழந்தது. (1 - 1 விக்.) பெத்தும் நிஸ்ஸன்க, அணித் தலைவர் குசல் மெண்டிஸ் (18) ஆகிய இருவரும் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய உற்சாகத்தைக் கொடுத்தனர். குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம (1) ஆகிய இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை அழுத்தத்தை எதிர்கொண்டது. எனினும், பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் சாதனை மிகு 185 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். அவர்கள் இருவரும் பகிர்ந்த 185 ஓட்டங்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சகல நாடுகளுக்கும் எதிராக இலங்கையினால் பகிரப்பட்ட அதிசிறந்த 4ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக அமைந்தது. ஆனால், அவர்கள் இருவரும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தமை இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. (235 - 5 விக்.) பெத்தும் நிஸ்ஸன்க 113 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 114 ஓட்டங்களைக் குவித்தார். இது அவர் பெற்ற 6ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதமாகும். மறுபக்கத்தில் அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க, 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். முதலாவது போட்டியில் அரைச் சதம் குவித்த ஜனித் லியனகே இந்தப் போட்டியில் வெறும் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (251 - 6 விக்.) ஆனால், வனிந்து ஹசரங்கவும் துனித் வெல்லாலகேயும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க இலங்கைக்கு உதவினர். வனிந்து ஹசரங்க 16 பந்துகளில் 2 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 25 ஓட்டங்களைப் பெற்றார். துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார். பந்துவீச்சில் ஷொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத் ஆகிய இருவரும் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைக் கொண்டிருந்தனர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களைக் குவித்தது. இந்தத் தொடரில் இரண்டாவது தடவையாக லிட்டன் தாஸின் விக்கெட்டை முதலாவது ஓவரிலேயே டில்ஷான் மதுஷன்க வீழ்த்தினார். ஆனால், சௌம்யா சர்க்கார், அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். ஷன்டோ 6 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சர்க்கார், தௌஹித் ரிதோய் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர். சர்க்கார் 11 பவுண்டறிகள், ஒரு சிச்ஸுடன் 68 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். (130 - 3 விக்) அதே மொத்த எண்ணிக்கையில் மஹ்முதுல்லா ஓட்டம் பெறாமல் நடையைக் கட்டினார். ஆனால், முஷ்பிக்குர் ரஹிம் (25), மெஹிதி ஹசன் மிராஸ் (12), தன்ஸிம் ஹசன் சக்கிப் (18) ஆகியோர் தௌஹித் ரிதோய்க்கு சிறப்பான பங்களிப்பு வழங்கினர். ஒரு பக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தௌஹித் ரிதோய், பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் தஸ்கின் அஹ்மதுடன் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷ் அணியின் மொத்த எண்ணிக்கையை 286 ஓட்டங்களாக உயர்த்தினார். தௌஹித் ரிதோய் 102 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 96 ஓட்டங்களுடனும் தஸ்கின் அஹ்மத் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் தனது ஏழாவது ஓவரில் உபாதைக்குள்ளாகி ஒய்வு பெற்ற டில்ஷான் மதுஷன்க 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க. https://www.virakesari.lk/article/178828

யாழ்ப்பாண ஆசிரியர்கள் Voltage குறைந்தவர்களா? பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ விளக்கம்

3 months 1 week ago
low voltage இல் தானே கொம்பூட்டர் வேலை செய்யுது ...சகல தகவலையும் பெறக்கூடியதாக இருக்கிறது... high voltage பக்கத்தில் போக முடியாது என சொல்லுகின்றார் ..பிறகு எப்படி மாணவர்களுக்கு பிரயோசனம்

திமுகவின் 'முத்தமிழ் முருகன்' மாநாடு அறிவிப்பு: இந்து வாக்குகளை கவரும் 'அரசியல் தந்திரமா'?

3 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தமிழ்நாட்டில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்திருப்பது, பாஜகவிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. பாஜக மட்டுமல்லாமல், ‘முருகன் தமிழர்களின் இறைவன்’ என்ற முழக்கத்தைத் தொடர்ந்து முன்வைத்து வரும் நாம் தமிழர் கட்சியும் இதை விமர்சித்துள்ளது. இந்து வாக்குகளை கவர்வதற்காகன ’அரசியல் தந்திரம்’ என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. என்ன சர்ச்சை? அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஜூன் அல்லது ஜூலையில் வெகுவிமரிசையாக நடைபெறும். உலகளவில் இருக்கும் முருக பக்தர்கள், முருக கோவில்களைப் பராமரிப்பவர்களை தமிழகத்திற்கு அழைத்து இரண்டு நாட்கள் மாநாடு நடத்தப்படும்” எனத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் கண்காட்சிகள், கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே தமிழ்நாடு பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக பொதுச் செயலாளர் ஆர். சீனிவாசன், “முதலில் பாஜக மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்களாக காட்டிக்கொண்டு ‘ஸ்டிக்கர்’ ஒட்டியது. முருகனை தமிழ்நாட்டுக்கு மட்டும் சுருக்கிவிட முடியாது. அவரை உலகம் முழுவதிலும் வழிபடுகின்றனர். இத்தகைய சூழ்ச்சிகளில் தமிழ்நாட்டு மக்கள் சிக்க மாட்டார்கள்,” எனத் தெரிவித்திருந்தார். இம்மாநாட்டை நடத்துவதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் ஆட்சி அமைத்ததில் இருந்தே முருகன் கோவில்களுக்காகப் பலவித திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வந்ததாகவும் சேகர்பாபு விளக்கம் அளித்தார். ”திருச்செந்தூர் முருகன் கோவிலைப் புணரமைக்க தமிழக அரசு ரூ.300 கோடி நிதி ஒதுக்கியுள்ளது” என்றும் அவர் கூறினார். இதையொட்டித்தான் தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது. 'அரசியல் ஆதாயம்' முருகனுக்கு மாநாடு நடத்துவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், "இது நிச்சயம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான்," என்று விமர்சித்தார். தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்குக்கூட முதலமைச்சர் வாழ்த்து கூறியதில்லை. முருகனுக்கு முக்கிய நிகழ்வான தைப்பூசத்திற்குக்கூட வாழ்த்து கூறியதில்லை. அப்படியிருக்கும்போது, இப்போது முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? சனாதனம் குறித்துப் பேசிய உதயநிதிக்கு எந்தவித கண்டிப்பும் தெரிவிக்காத முதல்வர் இதை நடத்துவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். 'பாஜகவின் ஏ டீமா?' பட மூலாதாரம்,@SEEMANOFFICIAL 'முப்பாட்டன் முருகன்', 'குறிஞ்சி தந்த தலைவன்', 'இன மூதாதை' என முருகன் 'தமிழ்க்கடவுள்', 'தமிழர்களுக்கான கடவுள்' என்ற வாதத்தை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது நாம் தமிழர் கட்சி. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் அக்கட்சி சார்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகன் 'இந்து கடவுள் அல்ல, தமிழர் கடவுள்' என்பது அக்கட்சியின் வாதம். இம்மாநாடு தொடர்பாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பிபிசி தமிழிடம் பேசுகையில், "திராவிடத்தை விடுத்து, தமிழர்களின் கடவுளைக் கொண்டாடினால்தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என்ற புரிதல் திமுகவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறது. நாங்கள் முருகனைக் கொண்டாடியதற்கு எங்களை பாஜக 'பி டீம்' என்றனர். இந்துத்துவத்திற்கும் வேலுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால், எங்களை நோக்கி ஆர்.எஸ்.எஸ்-இன் இன்னொரு அமைப்பு என்றனர். இப்போது இவர்கள் பாஜகவின் ‘ஏ’ டீமா?" என்றார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஜூன் அல்லது ஜூலை மாதம் நடக்கவிருக்கும் மாநாடு குறித்து இப்போதே திமுக அறிவித்திருப்பது, தேர்தல் லாபத்திற்காகத்தான் என்றார் அவர். "இது அக்கட்சியின் அரசியல் உத்தி எனச் சொல்வதைவிட தந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்," எனக் கூறுகிறார் காளியம்மாள். 'பாஜகவுக்கு பயம்' பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விமர்சனங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "அறநிலையத்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தான் இவை. இந்து சமய விதிகளுக்கு உட்பட்டு கோவில் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்தான். அதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வியெழுப்புகிறார். மேலும், "நாங்கள் முருகன் குறித்துப் பேசினால் பாஜகவுக்கு ஏன் கோபம் வருகிறது? அவர்கள் இதை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறார்கள் போல. அதனால் பயப்படுகிறார்கள் என நினைக்கிறேன். திமுகவின் கொள்கைகளைத் தெரிந்துகொள்ளாமல் பாஜக பேசுகிறது. இதற்கும் இந்துத்துவத்திற்கும் சம்பந்தமில்லை. எல்லா மதங்களுக்கும் அமைப்பு இருக்கிறது," என்றார். முஸ்லிம்கள் நலன்களுக்கென வக்பு வாரியம் இருப்பதையும் ஆர்.எஸ். பாரதி சுட்டிக்காட்டினார். முருகனும் தமிழக அரசியல் கட்சிகளும் பட மூலாதாரம்,L MURUGAN TWITTER படக்குறிப்பு, எல். முருகன் வேல் யாத்திரை சென்றபோது முருகனை முன்வைத்து யாத்திரை செல்வதோ, முருகனைக் கொண்டாடுவதோ தமிழக அரசியல் கட்சிகளுக்குப் புதிதல்ல. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, 2020ஆம் ஆண்டு இறுதியில் அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவரும் தற்போதைய மத்திய இணையமைச்சருமான எல். முருகன், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை முருகனின் அறுபடை கோவில்களை மையமாக வைத்து ‘வேல் யாத்திரை நடத்தினார். அதேபோன்று, 2021ஆம் ஆண்டு ஜனவரியில், திமுக நடத்திய மக்கள் கிராமசபைக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் பரிசாக அளிக்கப்பட்டது. இதை, தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும் தங்களின் வேல் யாத்திரை வெற்றி பெற்றதை இது காட்டுவதாகவும் எல். முருகன் அப்போது தெரிவித்திருந்தார். பாஜக தவிர்த்து ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்டதை அதிமுகவும் விமர்சித்தது. ''உண்மையான பிரார்த்தனை செய்யவேண்டும். நாம் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்பவர்கள். ஸ்டாலின் வெளியில் பேசுவது ஒன்றாகவும், உள்ளே நினைப்பது ஒன்றாகவும் இருப்பதால், அவர் வேலை கையில் எடுத்தாலும், முருகனின் அருள் அவருக்குக் கிடைக்காது,'' என, எடப்பாடி பழனிசாமி அப்போது தெரிவித்திருந்தார். இத்தகைய விமர்சனங்களுக்கு அச்சமயத்தில் பிபிசியிடம் பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "தமிழ்நாட்டில் முதலில் வேலுக்காக யாத்திரை நடத்தியவர் கலைஞர் கருணாநிதிதான். 1982இல் திருத்தணி கோவில் வேல் காணவில்லை என்பதை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஏற்க மறுத்தார். திருச்செந்தூர் கோவில் வேல் மீட்கப்பட வேண்டும், திருடப்பட்ட வேல் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபயணம் சென்றவர் கருணாநிதி. இறுதியில், வேல் கண்டறிய அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை எம்ஜிஆர் வெளியிடவில்லை. கலைஞர் தனது திறமையால் அந்த அறிக்கையை வெளியில் கொண்டு வந்தார்,'' எனத் தெரிவித்தார். தமிழ் கலாசாரத்தில் முருகன் இம்மாநாட்டை பாஜகவின் இந்துத்துவ அரசியலுடன் பொருத்திப் பார்ப்பது பொதுபுத்தியால் விளைந்தது என்கிறார், மூத்த பத்திரிகையாளரும் 'கருணாநிதி - எ லைஃப்' உள்ளிட்ட புத்தகத்தின் ஆசிரியருமான ஏ.எஸ். பன்னீர்செல்வன். "பெரியாருடன் 1930களில் முதல் மொழிப்போரிலிருந்து உடன் இருந்தவர் மறைமலை அடிகளார். அவர் சைவ அறிஞர். தமிழ் மெய்யியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் திருமூலரும் வள்ளலாரும்தான் இருக்கின்றனர். தமிழ் மரபில் இங்கிருக்கும் முதன்மை இசை வடிவம் காவடி சிந்துதான். இது 2,000 ஆண்டுகால மரபின் நீட்சி. முருகனுக்கு மாநாடு எடுப்பதை இதனுடன் தான் பொருத்திப் பார்க்க வேண்டும்" என்றார். முருகன் தமிழ் கலாசாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஒரு கருப்பொருள் எனக் கூறும் பன்னீர்செல்வன், முக்கிய இசை வடிவமான 'காவடிச் சிந்து' பாடல்களில் அதிகமான பாடல்கள் முருகனுக்காக பாடப்பட்டுள்ளதை உதாரணமாகக் காட்டினார். "முருகன் தமிழ் கலாசாரத்தின் அடையாளம்" என்றார் அவர். "சமபந்தியும் சாதி மறுப்பு திருமணமும்தான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை. முருகனுக்கும் குறத்திக்குமான உறவு சாதி மறுப்பைத்தான் பேசுகிறது. அதேபோன்று, இந்த இரண்டையும் பாஜக எங்கே பேசுகிறது" என அவர் கேள்வி எழுப்பினார். திருவாரூர் தேரைச் சரிசெய்து இயக்கியது, கோவில்களில் அதிகமான குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நடத்தியது போன்றவற்றையும் குறிப்பிட்ட பன்னீர்செல்வன், இந்து சமய அறநிலையத்துறையே நீதிக்கட்சியின் நோக்கங்களுள் ஒன்றுதான் என்றார். பாஜக இதுகுறித்துப் பேசுவது பெரிய விஷயமாக பார்க்கப்படுவதெல்லாம் இந்த தேர்தல் வரைதான் என்றும் சிறிய தோல்வி ஏற்பட்டாலும் அக்கட்சியின் இத்தகைய பேச்சுகள் மக்கள் களத்தில் எடுபடாது என்றும் அவர் கூறினார். திமுகவும் கடவுளும் பட மூலாதாரம்,TWITTER பெரியார் 1950களில் விநாயகர் சிலைகளை உடைத்தபோது, திராவிடர் கழகத்தின் வழிவந்த திமுக தலைவர் அண்ணா, "பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்" என்றார். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பதுதான் கடவுள் குறித்த திமுகவின் நிலைப்பாடாக அண்ணா கூறியது. "கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது" என 'பராசக்தி' திரைப்படத்தில் வசனம் எழுதினார் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. தற்போது, "இந்துக்களுக்கு எதிரானது திமுக" என்ற வாதத்திற்கு எதிராக அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பலமுறை கருத்து தெரிவித்துள்ளார். "எங்கள் கட்சியில் 90% இந்துக்களே உள்ளனர். கோவில்களுக்குச் சென்று வழிபடுவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். திமுக இந்து விரோத கட்சி அல்ல" என்றார். தங்கள் குடும்பத்தினர் கோவில்களுக்குச் செல்வது அவர்களின் தனியுரிமை சார்ந்தது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். https://www.bbc.com/tamil/articles/c0jx8y85j3zo
Checked
Sat, 06/29/2024 - 03:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed