புதிய பதிவுகள்2

பேரரசியல் அபிலாஷைகளால் மத மோதல்கள் தொடர்ந்து அரங்கேறும் - சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் எச்சரிக்கை

3 months 1 week ago
பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும்வரை வெடுக்குநாறிமலை விவகாரத்தை ஒத்த மோதல்கள் தொடர்ந்து அரங்கேறும் - சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் எச்சரிக்கை Published By: DIGITAL DESK 3 20 MAR, 2024 | 11:01 AM (நா.தனுஜா) சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு 'கொழும்பு அரசாங்கம்' வலியுறுத்தும் வரையிலும், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதையும், இன-மதப்பரவலை மாற்றியமைப்பதையும் இலக்காகக்கொண்டு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும் வரையிலும் வெடுக்குநாறிமலை விவகாரத்தை ஒத்த மோதல்கள் தொடர்ந்து அரங்கேறும் என சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதுமாத்திரமன்றி ஆலயப்பூசகர் உள்ளடங்கலாக எண்மர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை வரவேற்கத்தக்க செய்தி எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், இருப்பினும் சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு 'கொழும்பு அரசாங்கம்' வலியுறுத்தும் வரையிலும், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதையும், இன-மதப்பரவலை மாற்றியமைப்பதையும் இலக்காகக்கொண்டு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் (சிறியளவிலான) பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும் வரையிலும் இவ்வாறான மோதல்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கும் என எச்சரித்துள்ளார். https://www.virakesari.lk/article/179195

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 months 1 week ago
ரோகித் சர்மாவுடன் 2 மாதங்களாக பேசாத புதிய கேப்டன் ஹர்திக்; மும்பை இந்தியன்ஸ் அணியில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 19 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் டி20 சீசனை மாறுபட்ட கோணத்தில் அணுக இருக்கிறது. புதிய வீரர்கள், திறமையை வெளிக்காட்டாத பல வீரர்கள் வெளியேற்றம், பல கோடி ரூபாய் பரிமாற்றத்துக்குப்பின் கிடைத்த புதிய கேப்டன் ஆகிய அம்சங்களுடன் அணுக இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையில் 5 முறை பட்டம் வென்றுள்ள அந்த அணி, 2020ம் ஆண்டுக்குப் பின் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல முடியாமல் தடுமாறுகிறது. அதனால்தான் என்னவோ மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சென்று அந்த அணிக்கு சாம்பியன்ஷிப் பெற்றுக் கொடுத்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீண்டும் அழைத்து வந்துள்ளது. வைரலாகும் பேட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அளித்த பேட்டிக்குப் பின், ஹர்திக் பெயரும், மும்பை இந்தியன்ஸ் பெயரும் எக்ஸ் தளத்தில் டிரண்டாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டபின் முதல்முறையாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடிவிட்டு, அவர் தற்போது உங்கள் தலைமையின் கீழ் விளையாடுவதால் ஏதேனும் “ஈகோ” பிரச்சினை வருமா என்று கேட்டனர். "தோளோடு தோள் சேர்ந்து பயணிப்பேன்" பட மூலாதாரம்,GETTY IMAGES அதற்கு ஹர்திக் பாண்டியா அளித்த பதிலில் “ அனைத்து சீசன்களிலும் ரோஹித் சர்மா என் தோள் மீது கைபோட்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். கேப்டன் ரோஹித், சாதாரண வீரர் ரோஹித் என்ற வேறுபாடு இன்றி பழகுவார். எனக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் அவரிடம் கேட்பேன். அவர்தானே இந்திய அணியின் கேப்டன். அவரின் ஆலோசனை எனக்கு எப்போதும் உதவியாக இருக்கும். ஏனென்றால், மும்பை அணி அவரின் தலைமையில்தான் சாதித்துள்ளது. அவர் சென்ற பாதையில் நானும் செல்வேன், இதில் கூச்சப்பட என்ன இருக்கிறது, ரோஹித் பாய் தலைமையில் 10 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன்." என்றார். "2 மாதங்களாக இருவரும் பேசவில்லை" மேலும் தொடர்ந்த ஹர்திக், "ரோஹித் சர்மா இந்திய அணிக்காக விளையாடுவதில் பரபரப்பாக இருந்ததால், கடந்த 2 மாதங்களாக இருவரும் பார்த்துப் பேசிக் கொள்ளவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் வியூகம் பற்றிக்கூட இருவரும் பேசவில்லை. ஆனால் ஐபிஎல் தொடருக்கு அனைவரும் ஒன்று சேரும்போது, ஓய்வறையில் நிச்சயம் இருவரும் பேசிக் கொள்வோம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக் கேப்டனுக்கு இந்த நிலையா? ஒரு பக்கம் இந்திய அணியின் கேப்டன் என்ற பெருமை, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் என்ற அடையாளத்துடன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கியுள்ளார். மும்பை அணி நிர்வாகம், தனக்குக் கீழ் பல சீசன்கள் ஆடிய ஹர்திக் பாண்டியாவை அழைத்துவந்து அவருக்கு கீழ் தன்னை விளையாட வைத்துவிட்டது என்று ரோஹித் சர்மா நினைக்கவும் வாய்ப்புண்டு. உலக கிரிக்கெட்டில் இந்திய அணியை டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 ஃபார்மெட்டிலும் சிறப்பாக செயல்பட வைத்து சபாஷ் வாங்கி வருபவர் ரோஹித் சர்மா. வெற்றிகரமான கேப்டனாக உலக கிரிக்கெட் அணிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரோஹித் சர்மாவை, மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கவில்லையா என்ற கேள்வி கேப்டன் மாற்றத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரசிகர்களின் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒருபுறம் ரோஹித் சர்மாவுக்கான பெரும் ரசிகர்கள் பட்டாளம், மற்றொரு புறம் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு என ரசிகர்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பிரிவினையோடு மும்பை இந்தியன்ஸ் இந்த முறை களம் காண்கிறது. ரசிகர்கள் ஆதங்கப்படுவதைப் போல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013ம் ஆண்டு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பேற்ற பின்புதான் அந்த அணியால் முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை முத்தமிட முடிந்தது. அதற்கு முன்புவரை மும்பை அணியில் சச்சின், ரிக்கி பாண்டிங், ஜெயசூர்யா உள்ளிட்ட ஏராளமான ஜாம்பவான் வீரர்கள் இருந்தும், ஒருவராலும் கோப்பைக்கு அருகே அழைத்துச் செல்ல முடியவில்லை என்பதே நிதர்சனம். ஆனால், 2013ல் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பேற்றபின், ஒருமுறை அல்ல 2013, 2015, 2017, 2019, 2020 என 5 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கோப்பையை வெல்லும் ஆட்டத்துக்கு வீரர்களின் தனிப்பட்ட பங்களிப்புகள் இருந்தாலும், அதை வெளிக்கொணரும் வகையில் செயல்பட்ட ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிக்கு சபாஷ் கூறியாக வேண்டும். ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் 50 சதவீதத்துக்கு மேல் வெற்றி சதவீதத்தை ரோஹித் சர்மா தனது கேப்டன்சியில் வைத்துள்ளார் என்கிறது புள்ளிவிவரம். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு உறைக்குள் இரு கத்தி ஆனாலும், ஒரே உறையில் இரு கத்திகள் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஏன் இதற்கு முன் தோனி கேப்டன்சியில் சச்சின் விளையாடவில்லை, கோலி கேப்டன்சியில் தோனி விளையாடவில்லையா என்று கேட்கலாம். ஆனால் அப்போதெல்லாம் ஒருவர் இந்திய அணிக் கேப்டனாக இருக்கும்போது, ஐபிஎல் தொடரில் அவரது கேப்டன் பதவியை பறித்துவிட்டு, தனக்கு கீழ் ஆடிய ஒரு வீரரின் கேப்டன்சியில் விளையாடும் நிலை வரவில்லை என்ற உண்மையை உணர வேண்டும். தோனி கேப்டனாக இருந்தபோது, சச்சின் எந்த அணியிலும் கேப்டனாக இல்லை. கோலி கேப்டனாக இருந்தபோது, சிஎஸ்கே அணியில் மட்டும்தான் தோனி கேப்டனாக இருந்தார். இந்திய அணி கேப்டன் என்பது மிகப்பெரிய கவுரவ அடையாளம், அந்த கவுரவத்தை சுமந்திருக்கும் ஒருவரை, ஐபிஎல் அணி நிர்வாகம் திடீரென நீக்கிவிட்டு, வேறு ஒரு வீரரை நியமித்திருப்பது சற்று அதிர்ச்சிக்குரியதுதான். இந்த மாற்றம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எத்தகைய சவால்களை வரும் சீசனில் உருவாக்கும், புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எத்தகைய பிரச்னைகள், சவால்கள் இருக்கின்றன என்பது குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் பகிர்ந்துள்ளனர். "பிரச்னை வராது" எம்ஆர்எஃப் பவுண்டேஷனில் பந்துவீச்சு துணை பயிற்சியாளராக இருந்துவரும் எட்வின் கென்னடி பிபிசி செய்திகளிடம் பேசுகையில் “ ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்து, ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்ததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு எந்தவிதத்திலும் குறையாது. இந்த பக்கம் இந்திய அணியின் கேப்டன், அந்தப் பக்கம் மும்பை அணியின் கேப்டன் என்ற குழப்பத்துடன் வீரர்கள் விளையாட மாட்டார்கள். ஒருவீரரின் திறமைதான் அவரை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். ஆதலால், ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும், ஹர்திக் பாண்டியாவுக்கு சார்பாக நடக்க வேண்டும் என்ற சார்புநிலை அணிக்குள் இருக்காது, வீரர்களிடத்திலும் இருக்காது என்பது எனது கருத்து. ரோஹித் சர்மா, சூர்யகுமார், பும்ரா தவிர மற்ற வீரர்கள் இளம் வீரர்கள் என்பதால், ஹர்திக் பாண்டியாவுக்கு அவர்களை கையாள்வதில் சிரமம் இருக்காது. பட மூலாதாரம்,GETTY IMAGES "ரோஹித் பேட்டிங் இனி பட்டையை கிளப்பும்" என்னைப் பொருத்தவரை ரோஹித் சர்மா இனிமேல்தான் சுமையின்றி, அழுத்தமின்றி பேட் செய்வார். இதற்கு முன்புவரை கேப்டன் பதவி என்ற கிரீடம் இருந்தது, அதை கழற்றிவிட்டு இனிமேல் சுதந்திரமாக பேட் செய்யும்போது, அவரின் பேட்டிங் வேறுவிதத்தில் மாறும். அது மும்பை அணிக்கு பலமாக இருக்கும்” எனத் தெரிவித்தார். "ரோஹித்தை நீக்கியது தவறான முடிவு" விளையாட்டுத்துறையில் மூத்த பத்திரிகையாளர் முத்துக்குமார் பிபிசி செய்திகளிடம் கூறுகையில் “ மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது தவறான உதாரணம். இந்திய அணிக்கு மோசமான கேப்டனாக ரோஹித் செயல்பட்டால் ஐபிஎல் தொடரில் அவரை நீக்கிவிட்டு மும்பை அணி புதிய கேப்டனை கொண்டுவரலாம். ஆனால், வெற்றிகரமான கேப்டனாக ரோஹித் வலம் வரும்போது, மும்பை அணி கேப்டனை மாற்ற வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ”ஒய்வறை பிரச்னை” இந்த சீசனில் மும்பை அணி வித்தியாசமான பிரச்னைகளை சந்திக்கும் என எனக்குத் தெரிகிறது. அதிலும் ஒய்வறை தொடர்பான சிக்கல்களை சந்திக்கலாம். ஏனென்றால், சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா இருவருமே அனுபவ வீரர்கள். அவர்கள் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு குடைச்சல் கொடுக்க நினைத்தாலே பிரச்னைகள் கிளம்பிவிடும். அதிலும் இம்பாக்ட் பிளேயராக விளையாடுவேன் என சூர்யகுமார் அல்லது ரோஹித் முரண்டு செய்தால், ஹர்திக் பாண்டியாவுக்கு சிக்கலாகிவிடும்." என்றார். "ஈகோ சிக்கல் வரலாம்" மேலும் தொடர்ந்த அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஈகோ சிக்கல் வரலாம் என்றார். "அதிலும் சூர்யகுமார் யாதவ் ஏற்கெனவே தன்னை இந்திய அணியில் எடுக்காத விராட் கோலி கேப்டன்சியை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து சிக்கலில் சிக்கியவர். மும்பை அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியாவும் சென்றுவிட்டநிலையில் அடுத்த கேப்டனாக தன்னை நிர்வாகம் தேர்ந்தெடுக்கலாம் என சூர்யகுமார் நினைத்திருக்கலாம். அதை அனைத்தையும் ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்ததன் மூலம் உடைந்துவிட்டதால் மறைமுகமாக சூர்யகுமார் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். இது களத்தில் ஒவ்வொரு வீரரின் பேட்டிங் திறமை, பந்துவீச்சை பார்த்தாலே தெரிந்துவிடும். அது மட்டுமல்ல, ஈகோ பார்ப்பது மனிதர்களின் இயல்பு. இதில் கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கல்ல. மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கலாம், ஆனால், இந்திய அணிக்கு நான்தானே கேப்டன், ப்ளேயி்ங் லெவனில் நான்தானே உன்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா நினைக்கவும் வாய்ப்புண்டு. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹர்திக் மனநிலை எப்படி? ஹர்திக் பாண்டியா அவ்வப்போது வீரர்களிடம் கடிந்து பேசக்கூடியவர் என்ற குற்றசாட்டு இருக்கிறது. அணியில் ஒரு பேட்டர் 3வது வரிசையில் களமிறங்கி வருகிறார் என்றால், திடீரென அந்த வரிசையில் ஹர்திக் பாண்டியா முன் அறிவிப்பின்றி களமிறங்கக் கூடியவர். இது அணிக்குள் வீரர்களிடத்தில் மனக்கசப்பை ஏற்படுத்தும். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இந்தச் சிக்கல் வந்தது. அதேபோல, மும்பை அணியில் சூர்யகுமார் களமிறங்கும் வரிசையை மாற்றலாம், முன்வரிசையில் ஹர்திக் பாண்டியா களமிறங்கினாலும் வியப்பில்லை. ஆதலால் இந்த சீசனில் மும்பை அணியில் ஓய்வறை தொடர்பான பிரச்னைகள் மறைமுகமாக வெடிக்கலாம். இதையெல்லாம் ஹர்திக் பாண்டியா எவ்வாறு கையாளப் போகிறார் என்பதில்தான் அவரின் கேப்டன்சி வெற்றி இருக்கிறது” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cyxz055zv6ro

கிழக்கின் முழுமையான அபிவிருத்தியின் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியும் - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

3 months 1 week ago
இன்னும் எட்டு ஒன்பது மாதம் தான் இருக்கு அதுக்கு இடையில் கடன்களை தீர்க்கலாமோ? உப்படி தான் சுரேன் ராகவனும் ஆளுனராக வந்தவுடன் அறிக்கை விட்டவர் ராஜபக்சா காலத்தில் ....

ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி

3 months 1 week ago
எங்களின் ஆராய்ச்சி கப்பலிற்கு தடை விதித்துவிட்டு ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி Published By: RAJEEBAN 20 MAR, 2024 | 10:40 AM வெளிநாட்டு ஆராய்ச்சிக்கப்பல்களிற்கு இலங்கை ஒரு வருட தடையை விதித்துள்ள நிலையில் ஜேர்மனியை சேர்ந்த ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைதுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளமை குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜேர்மனியின் கப்பலின் ஆராய்ச்சி கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது என தெரிவித்துள்ள ஆசிய இராஜதந்திரியொருவர் அனைத்து நாடுகளினதும் ஆராய்ச்சி கப்பல்களுக்கும் அனுமதி மறுப்பது என இலங்கை தீர்மானித்திருந்தால் சீனா இந்த விடயத்தை பெரிதுபடுத்தியிருக்காது எனவும் தெரிவித்துள்ளார். ஜேர்மனை சேர்ந்த ஆராய்ச்சி கப்பலிற்கு இலங்கை அனுமதி வழங்கியதை அரசாங்க வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன.கொழும்பு தற்போது ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்கியுள்ளதால் சீனா தனது கப்பல்களிற்கும் அனுமதியை கோரும்; என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீன தூதரகத்தின் எதிர்ப்பு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சிடமிருந்தோ சீன தூதரகத்திடமிருந்தோ கருத்துக்களை பெற முடியவில்லை என எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179191

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி

3 months 1 week ago
சீ சீ ....சிறிலங்கா இப்ப ....இரண்டும் கெட்டான் நிலை....வடக்கு இந்தியாவுக்கு தெற்கு சீனாவுக்கு ,மேற்கு அமெரிக்காவுக்கு ......கிழக்கு எல்லோருக்கும் என்ற நிலை சிங்களவனின்ட அரசியல் சாணக்கியம் என சிலர் புலம்புவினம் ,,,

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை ; வழக்கு தள்ளுபடி

3 months 1 week ago
ஆயுதமற்ற‌ கலாச்சாத்தை எமது மக்களுக்கு உபதேசம் பண்ணுவதறகு நாங்கள் பந்தி பந்தியாக எழுதும் பொழுது .....நீங்கள் ஆயுத கலாச்சரத்தை தூண்டும் வகையில் ஒற்றை வரியில் கருத்து எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறோம்😃

என் இந்தியப் பயணம்

3 months 1 week ago
எனக்கே அடையாளம் தெரியாமல் முகத்தில் நன்கு ஐந்து இடங்களில் வீங்கிப்போய் இருந்தது. பிள்ளைகளுக்கு அனுப்புவதற்குப் படமெடுத்து அனுப்பிவிட்டு படத்தை பார்க்கச் சகிக்காது உடனேயே போனில் இருந்து அழித்துவிட்டேன் என்றால் பாருங்களன். அன்றே ஒன்லைனில் வேறு ஒரு தங்குவிடுதியை புக் செய்து போகும்போது வரவேற்பில் நின்றவரிடம் இரவு முழுதும் சரியான நுளம்புக்கடி என்கிறேன். நுளம்பே இல்லையே மடம் என்கிறார். அப்ப இரவு போய் படுத்துப்பாரும் என்றுவிட்டு வெளியேறி அடுத்த தங்குவிடுதிக்குச் சென்று சூட்கேசை வைத்துவிட்டு குளியலறையில் யன்னல் பூட்டக் கூடியதா என்று பார்த்துவிட்டுத்தான் பதிவே செய்தது. அதுமுடிய அறைக்குள் சென்றவுடன் பழைய தங்குவிடுதியின் இணையத்தளத்துக்குச் சென்று உள்ளதை உள்ளபடி விமர்சனம் எழுதி முடித்தபின்தான் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அன்று பகல் வங்கிக்குச் சென்று எமது பணத்தைப் பற்றிக் கதைத்தால் அந்த அலுவலை முடிக்க ஆறு நாட்கள் செல்லும் என்றார்கள். அத்தனை நாட்கள் சென்னையிலேயே நின்று என்ன செய்வது? அதனால் எங்காவது போய் வருவோம் என்றால் மனிசன் மதுரை போவோம் என்கிறார். எனக்கும் கீழடியைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பலநாட்களாக இருக்க, நானும் சம்மதிக்க இருவரும் சென்று ஒரு பயண முகவர் ஒருவரைச் சந்தித்து அன்றைய இரவு பத்து மணிக்கு படுக்கையுடன் கூடிய சொகுசு உந்தில் மதுரை செல்லப் பயணச் சீட்டு எடுத்துவிட்டு மதிய உணவை உண்டுவிட்டு வந்து கொண்டுவந்த கைப்பொதியில் இரு நாட்களுக்கு உரிய உடைகளையும் முக்கிய பொருட்களையும் எடுத்து அடுக்கிவிட்டு படுத்துக் குட்டித் தூக்கம் ஒன்றும் போட்டு எழுந்தால் அப்பதான் மூன்று மணி. வெளியே கடைகளுக்குச் செல்ல மனமில்லை. படம் பார்க்கப் போவோமா என்கிறேன். இங்கே பக்கத்தில சினிமா இருக்கோ தெரியவில்லை என்று மனிசன் பின் வாங்க, வரவேற்பில் போய் கேட்டுக்கொண்டு வாங்கோ என்கிறேன். போன மனிசன் ஐந்து நிமிடத்தில் வந்து பத்து நிமிட நடையில் கிரிஷ்ணவேணி என்ற சினிமா இருக்காம், நாலரைக்குப் படம் இருக்காம் என்கிறார். என்ன படம் என்று எதுவும் கேட்கவில்லை. பெரிய பயணப்பொதியை இரண்டு நாட்களில் திரும்ப வருவோம் என்று கூறி கீழே வரவேற்பில் கொடுத்துவிட்டு கைப்பொதியை இழுத்தபடி செல்கிறோம். போகும் வழியில் உணவகத்தில் மனிசன் பரோட்டவும் நான் பூரியும் உண்டுவிட்டுத் தேனீரும் அருந்தி, இரவு உண்பதற்கு வடை, போண்டா எனச் சில சிற்றுண்டிகளையும் தண்ணீர் போத்தலையும் வாங்கிக்கொண்டு படம் பார்க்கச் செல்கிறோம். நாம் நின்ற இடத்திலிருந்து அரைமணி நேரத்தில் சென்று மகிழுந்தைப் பிடித்துவிடலாம். கோயம்பேடு சந்தைக்கு அருகில் தான் பஸ்கள் தரிப்பிடம் என்று எமக்குச் சொல்லப்பட்டது. அதனால் சாவகாசமாகப் படம் முடிந்து போகலாம் என்று போய் படமும் பார்க்க ஆரம்பிச்சாச்சு. சினிமா என்பதனால் போனின் சத்தத்தையும் நிறுத்தியாச்சு. ஆறரை மணிக்கு இடைவேளையில் மனிசன் சென்று பொப்கோனும் நெஸ்கபேயும் வாங்கிவர, இரசிச்சுக் குடிச்சு மீண்டும் படம்பார்க்க ஆரம்பிக்கிறோம். நாலரைக்கு படம் தொடங்கும் என்று போட்டாலும் 15 நிமிடம் விளம்பரங்களுக்குப் பின்னர்தான் படம் ஆரம்பித்தது. அதனால் இடையில் எத்தனை மணி என்று பார்க்க போனை எடுத்தால் 5 மிஸ்டு கோல்கள். என்ன ஏது என்று பார்த்தால் அப்ப ஏழரை மணி. படம் முடிய இன்னும் அரை மணி நேரமாவது செல்லும். ஏதோ மனதில் பிரையாணம் தொடர்பானதுதான் என்று தோன்ற போனை எடுத்துக் காதில் வைத்து ஏன் போன் செய்தீர்கள் என்று கேட்க, பஸ் கோயம்பேடில் நிக்காது மடம். அதுதான் உங்களையும் பிக் பண்ணிக்கொண்டு போக போன் செய்தோம் என்கிறான் அந்த பஸ்ஸின் ஓட்டுனர். நாங்கள் சினிமா பார்த்துக்கொண்டு இருந்ததில் கேட்கவில்லை. எனக்குப் பதட்டமாகிப் போகிறது. நான் வெளியே வந்து எடுக்கிறேன் என்றுவிட்டு மனிசனிடம் விடயத்தைச் சொல்லி, படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் வெளியே வந்து போன் செய்ய மீண்டும் அதையே சொல்கிறார் ஓட்டுனர். இப்ப எங்கே வந்து பஸ்சைப் பிடிப்பது என்று கேட்கிறேன். கீழாம்பாக்கம் என்ற இடத்துக்கு வரவேணும் என்று கூற எவ்வளவு தூரம் என்று கேட்கிறேன். ஒரு மணி நேரத்தில் வந்துவிடலாம் என்றுகூற எனக்குப் பதட்டமாகிறது. ஒரு மணிநேரம் என்றால் தூரமாகத்தானே இருக்கும் என்று எண்ணியபடி நடக்க, பொறு எங்கட சூட்கேசை எடுத்துக்ககொண்டு வாறன் என்றபடி சினிமாவின் ரிக்கற் கவுண்டருக்கு அருகில் சென்று அங்கு அவர்களிடம் கொடுத்தவற்றை எடுத்துக்கொண்டு வர நான் என்னதை இழுத்துக்கொண்டு போகிறேன். சினிமா அரங்குக்குப் பக்கத்தில் தான் நாம் ரிக்கற்றைப் பெற்ற கடை. இப்ப கடை பூட்டி இருக்கும் என்கிறார் கணவர். எதுக்கும் போய் பார்ப்போம் என்று சென்றால் திறந்து இருக்க எதுக்கு பிழையான இடத்தைச் சொன்னீர்கள் என்கிறேன். என்னம்மா சொல்றீங்க. புரியும்படியா சொல்லுங்க என்கிறார். நான் விபரம் சொல்ல, பக்கத்தில் நின்ற ஒருவர் இப்பல்லாம் பஸ் இங்க நிக்கிறதில்லையே என்கிறார். முகவர் சமாளித்தபடி காலைல புக் பண்ணும்போது இங்கேதான் போட்டிருந்தாங்க. திடீர்னு மாத்தீட்டாங்க என்கிறார். இப்ப எப்பிடிப் போறது என்கிறேன் நான். ஓட்டோவில போங்க என்று கூற ஓட்டோவுக்கு எவ்வளவு என்கிறார் மனிசன். இரவு நேரம் டபுளா கேட்பாங்க என்றுவிட்டு ஒரு ஓட்டோவை நிறுத்த அவ்வளவு தூரம் வரமுடியாது என்கிறான் ஒருவன். நேரம் எட்டுமணியாகிவிட எனக்குப் பதட்டம் ஏற்பட முதலே சரியான இடத்தைச் சொல்லியிருக்கவேணும் என்கிறேன் முகவரைப் பார்த்தபடி. என் கோபம் புரிய நான் உங்களை ஏற்றாமல் போகக் கூடாது என்று இப்பவே சொல்கிறேன் என்றபடி போன் செய்கிறார். அவர் பேசி முடிய அவரை நம்பாமல் எனக்கு போன் வந்த இலக்கத்தை அழுத்தி இன்னும் நாங்கள் ரி நகரில் தான் நிற்கிறோம். வந்துவிடுவோம். என்று கூற உங்களை ஏற்றாமல் பஸ்சை எடுக்கமாட்டேன் மடம், வாங்க. என்றுவிட்டு போனை வைக்க, நீங்கள் தான் ஓட்டோ பிடித்துத் தரணும் என்கிறேன். சரிம்மா என்றுவிட்டு ஓட்டோவை நிறுத்துகிறார். பலரும் வர மறுக்க, ஏன் வரமறுக்கிறார்கள் என்று கேட்கிறேன். அவ்வளோ தூரம் போயிற்று திரும்பிவர சவாரி கிடைக்காட்டி நட்டம் என்று ரொம்பக் கேக்கிறாங்கம்மா என்கிறார். பரவாயில்லை நிறுத்துங்கள் என்றதும் ஓட்டோவை நிறுத்தப் போகிறார். சாதாரணமா ஒரே றபிக் அங்கிட்டுப் போக என்கிறார் எமக்குப் பக்கத்தில் நின்றவர். அப்ப டாக்ஸி பிடித்தால் விரைவாகச் செல்லலாமே என்றுவிட்டு முகவரிடம் டாக்ஸியை அழையுங்கள் என்கிறேன். டாக்சி ஸ்ராண்ட் பக்கத்தில இல்லை. பத்து நிமிடம் அங்கிட்டுப் போகணும். அதுக்கு ஓட்டோலையே போயிடுங்க. இதோ ஒண்ணு வந்திட்டுது என்றபடி ஒன்றை நிறுத்துகிறார். நானும் கணவரும் ஏறி அமர்கிறோம். வரும்

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

3 months 1 week ago
பையா ஒரு கட்சி வளரரும் போது அதை இழிவுபடுத்த பலர் வருவார்கள்.ஒவ்வொருவரிடமும் போய் காலில் விழுவது கோழைத்தனம். அதையும் தாண்டி முன்னேறணும்.

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை ; வழக்கு தள்ளுபடி

3 months 1 week ago
ஆயுதத்துக்கு உள்ள மரியாதை வேறு எதற்கும் இல்லை போல. தொல் பொருள் திணைக்களம் எனும் பெயரில் சனங்கள் கண்களுக்குள் விரலை விட்டு இந்த ஆட்டு ஆட்டுறாங்கள்.

அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்…

3 months 1 week ago
😀😀.... இங்கே பெயர், சொந்த ஊர், வயது இப்படியானவைற்றை சொல்லலாமா இல்லையா என்று தெரியவில்லை....... சுய ஆக்கங்களில், சிறுவனாக 80ம் ஆண்டுகளில் இருந்த போது நடந்த சில விசயங்களை எழுதியிருக்கின்றேன்......🤣 நீங்கள் இங்கே களத்தில் கொஞ்சம் வித்தியாசமானவர்😀.......ஒரு மாற்றுக் கருத்து.....👍

அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்…

3 months 1 week ago
ம்.. நான் நீங்கள் தான் சில வருடங்களின் முன்பு யுனி முடித்து கொண்டு யாழ்களத்துக்கு வந்திருப்பீர்கள் என்று நினைத்து விட்டேன்

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 1 week ago
அன்றைய இலங்கையிலும் இன்றைய இலங்கையிலும் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை இல்லை என்கிறீர்களா? இந்த மனப்பான்மை உலகில் உள்ள எல்லா சமூகங்களிலும் உள்ளது தானே? அதை எமது சமூகத்தில் மட்டும் உள்ளதென ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருப்பது எமது மூக்கை நாமே கிண்டுவது போலாகி விடும் விசுகர்...🙂
Checked
Mon, 07/01/2024 - 07:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed