புதிய பதிவுகள்2

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
அடபாவிகளா இந்த தேர்தலால ஒழுங்கா ஐபிஎல் லும் நடந்தபாடில்லை. கடைசியில் தேர்தலும் நடக்காது போல இருக்கே?

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 2 weeks ago
காசாவில் மக்கள் பட்டினி; சிறுவர்கள் உயிரிழக்கும் நிலை ; மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுக்கும் இஸ்ரேலியர்கள் - ஏபிசி Published By: RAJEEBAN 11 MAR, 2024 | 02:50 PM காசாவில் பாலஸ்தீனியர்கள் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள அதேவேளை காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுப்பதற்கான முயற்சிகளில் இஸ்ரேலியர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலிற்கும் காசாவிற்கும் இடையிலான போக்குவரத்து பாதையான கெரோம் சலோமில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் இவர்கள் வீதியின் நடுவில் அமர்ந்து மறியல் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதேபோன்று எகிப்திற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான பாதைகளில் அமர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். காசாவில் பட்டினி நிலைமை உருவாகலாம் என மனிதாபிமான அமைப்புகளும் ஐநாவும் எச்சரித்துள்ளன. ஹமாசிற்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்து ஐந்துமாதங்களின் பின்னர் இந்த நிலை காணப்படுகின்றது. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள் ஹமாஸ் பணயக்கைதிகளை பிடித்துவைத்துள்ள நிலையில் காசாவி;ற்குள் மனிதாபிமான உதவிகள் செல்லக்கூடாது என தெரிவிக்கின்றனர். எங்கள் மக்களை கொலை செய்தவர்களிற்கு அவர்களை பணயக்கைதிகளாக வைத்துள்ளவர்களுக்கு உணவை வழங்கக்கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள் தெரிவிக்கின்றனர். பெண்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் அவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை நாங்கள் ஹமாசிற்கு உணவு வழங்குகின்றோம் எனஅவர்கள் தெரிவிக்கின்றனர். பிரார்த்தனைகளில் ஈடுபடும் பாடல்பாடும் 40 பேர் காசாவிற்குள் செல்லும் பல டிரக்குகளை தடுத்துநிறுத்தியதை பார்த்துள்ளதாக ஏபிசி தெரிவித்துள்ளது. ஹமாசிடம் பணயக்கைதிகளாக உள்ளவர்களை சகோதரர்கள் என குறிப்பிடும் அவர்கள் அவர்களை மறக்ககூடாது என்கின்றனர். அவர்கள் எங்கள் சகோதரர்களை மீண்டும் தரும்வரைக்கும் நாங்கள் காசாவின் கழுத்தை நெரித்து மூச்சுதிணறச்செய்யவேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஏன்நான் அவர்களை பற்றி கவலைப்படவேண்டும் அவர்கள் எங்கள் எதிரிகள் எங்கள் சகோதரர்களை கொலை செய்தவர்கள்என்கின்றார் ஒருவர். மனிதாபிமான உதவிகளை அவர்கள் எவ்வாறு தடுத்துநிறுத்துகின்றனர்? ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதும் இஸ்ரேலிய பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற முயன்றனர். பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யுவதியை அகற்ற முயன்றார். நீங்கள் எதிரியுடன் இணைந்து செயற்படுகின்றீர்களா என அவரின் நண்பியொருவர் கேள்வி எழுப்பினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டங்களை கைவிட மறுத்ததும் பொலிஸார் அவர்களை அகற்றும் முயற்சியை கைவிட்டனர். https://www.virakesari.lk/article/178428

தோற்கும் விளையாட்டு

3 months 2 weeks ago
தோற்கும் விளையாட்டு ------------------------------------ விளையாட்டு வீரர்கள் என்றாலே ஆஸ்திரேலியர்கள் தான் அதன் வரைவிலக்கணம். ஒரு சாதாரண ஆஸ்திரேலியரே எந்த விளையாட்டையும் நன்றாக விளையாடுவார், அப்படியே அதிகமாக கோபப்பட்டு போட்டி போடுவார். இவர்கள் ஒரு பொழுதுபோக்கிற்காக விளையாடுவது கூட வெளியில் நின்று பார்க்கும் ஒருவருக்கு ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்சனைக்கு இரண்டு பக்கங்கள் மல்லுக்கட்டி நிற்பது போலவே தெரியும். சில வருடங்களின் முன் சிட்னி நகர் பகுதியில் தனியாகவோ அல்லது பலவீனமாகவோ அகப்படும் இந்தியர்களை சில ஆஸ்திரேலியர்கள் தாக்கினார்கள். இது சில காலம் தொடர்ந்து அங்கு நடந்தது. இந்திய நண்பன் ஒருவனின் மனைவியின் தம்பிக்கு சிட்னியில் ஒரேயொரு குத்து ஓங்கி விழுந்தது. தம்பி மதுரை மருத்துவமனையில் பல நாட்கள் படுத்திருந்து, பின்னர் எழும்பி நடமாடினார். குத்துச் சண்டையும் இவர்கள் எல்லோருக்கும் தெரியுமா என்று வியக்க வைத்தது. சிட்னியுடன் எனக்கு சில தொடர்புகள் இருப்பது தெரிந்திருந்த அதே நண்பன் ஆஸ்திரேலியாவிற்கு போகும் மற்றும் அங்கு குடியேறும் வழிவகைகளை என்னிடம் விசாரித்தான். மதுரைக்கார நண்பன் அங்கு போய் பழிக்கு பழி வாங்கப் போகிறார் போல என்ற அனுமானத்தில் இருந்த எனக்கு, 'இல்லை, மாமாவை (நண்பனின் அக்காவின் கணவர்) அங்கு அனுப்பலாம் என்று இருக்கின்றேன்' என்று பதில் வந்தது. ஆஸ்திரேலியர்கள் விளையாட்டுகளில் ஏன் இவ்வளவு ஆக்ரோஷத்துடனும், ஆவேசத்துடனும் இருக்கின்றார்கள் என்பது முதலில் புரியவில்லை. ஒரு விடயம் புரியாவிட்டால், அந்த விடயத்திற்கான காரணம் மரபணு அல்லது தலைவிதி அல்லது நெற்றியில் எப்பவோ எழுதப்பட்டு விட்டது என்ற வசனம் போன்றவை ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்கள். இவை மூன்றும் தக்காளிச்சாறு போல, எங்கும் ஊற்றலாம், எதனுடனும் தொடலாம். ஆஸ்திரேலியர்களின் மரபிலேயே கடும் போட்டி இருக்கின்றது என்றார்கள். விளையாட்டுகளில் பணம் கட்டுவது, பந்தயம் பிடிப்பது இன்று மிக வேகமாக எல்லா நாடுகளிலும் பரவி வருகின்றது. இது இன்று அமெரிக்காவில் மட்டும் பல பில்லியன் டாலர்கள் அளவிலான ஒரு வியாபாரம். கனடாவிற்கு என்று தனி வழி இல்லை, அமெரிக்காவின் வழியே அதன் வழியும் கூட. இந்தியாவில் கிரிக்கெட் மீதான சூதாட்டம் வெட்ட வெட்ட முளைக்கும் அசுரனின் தலை போல அழிக்கப்பட முடியாமல் இன்னும் இன்னும் வளர்கின்றது. குதிரைப் பந்தயம் ஆரம்பமான நாட்களிலிருந்து, 1810 ம் ஆண்டு, இன்று வரை உலகிலேயே விளையாட்டுகளின் மேல் தலைக்கு அதிக பணம் பந்தயம் வைப்பவர்கள் யார் தெரியுமா? ஆஸ்திரேலியர்களே. சீன இன மக்களின் சூதாட்டத்தின் மீதான நாட்டம் வேறு வகையானது, பாரதத்தில் தர்மர் உருட்டிய தாயக்கட்டை வகை அது. ஒரு விளையாட்டின் மேல் இருக்கும் விருப்பத்தில் அல்லது ஒரு அணியினது அல்லது ஒரு வீரரின் ரசிகராக இதுவரை நாளும் விளையாட்டுகளை பார்த்து வந்த பார்வை இன்று இந்தப் பந்தயங்களால் வெகுவாக மாறிவிட்டது. எண்களே இன்று முக்கியம். களத்தில் ஆடும் அணியை விட, என்னுடைய கணக்கு, என்னுடைய பந்தயம் வெல்கிறதா என்பதிலேயே பலரினதும் கவனம் இருக்கின்றது. பந்தயங்களின் உலக தலைநகரான லாஸ் வேகாஸ் பற்றிச் சொல்லும் போது, லாஸ் வேகாஸ் என்றும் தோற்பதில்லை என்பார்கள். பந்தயம் கட்டுபவர்களே என்றும் இறுதியில் தோற்று நிற்பார்கள் என்கின்றனர். ஒரு தனிமனிதன் தோற்றுப் போனால், அம்மனிதனுக்கு அடுத்த அடுத்த தடவைகள் ஆவேசம் கொஞ்சம் அதிகமாக வருவது இயற்கைதானே. ஆஸ்திரேலியர்களுக்கும் அதுவே.

வெறுப்பு!

3 months 2 weeks ago
இப்ப தானே அரசமரம் இல்லாமலேயே அலுவல்கள் நடக்குது. அரசமரத்துக்கு மறுபெயர்= தொல்பொருள் திணைக்களம்.

96 ஆவது ஒஸ்கர் விருது விழா - 2024

3 months 2 weeks ago
நாஜிகளின் வதைமுகாம் குறித்த திரைப்படத்திற்கு ஒஸ்கர் விருது - காசா குறித்து இயக்குநர் கருத்து Published By: RAJEEBAN 11 MAR, 2024 | 12:02 PM ஒஸ்கர் விருதுவழங்கும் விழாவில் யூத இயக்குநர் ஜொனாதன் கிளேசர் காசா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஹொலொகாஸ்ட் மற்றும் நாஜிகளின் வதைகள் முகாம்கள் குறித்த அவரது The Zone of Interest திரைப்படத்திற்கு சர்வதேச திரைப்படங்களில் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் நாஜி வதை முகாம்களின் தளபதியாக நீண்டகாலம் பதவிவகித்த ருடொல்வ் ஹொஸின் குடும்பத்தை பற்றி பேசுகின்றது. 1940 முதல் 43 வரை ஹிட்லரின் வதைமுகாம்களிற்கு பொறுப்பாக ருடொல்வ் ஹொஸின் காணப்பட்டார் இந்த முகாம்களில் 1.1 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் - இந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டு உரையாற்றிய இயக்குநர் தனது யூததன்மையையும் ஹொலொஹாஸ்டினையும் ஆக்கிரமிப்பு தனக்கு சாதகமாக பயன்படுத்துவதை நிராகரித்தார். இஸ்ரேலிலும் காசாவிலும் பலியானவர்கள் மனித தன்மையின்மைக்கு பலியானவர்கள் என இயக்குநர் தெரிவித்தார். எங்களின் தெரிவுகள் அனைத்தும் நிகழ்காலத்தில் நம்மை பிரதிபலிக்கவும் எதிர்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டவை என தெரிவித்துள்ள இயக்குநர், கடந்தகாலத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என தெரிவிப்பதற்காக அவற்றை உருவாக்கவில்லை நாங்கள் என்ன செய்தோம் என்பதை தெரிவிப்பதற்காகவே அவற்றை உருவாக்கினோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படம் மனிதாபிமானம் இன்மை எங்களை எங்கே இட்டுச்செல்கின்றது என்பதை காண்பிக்கின்றது மனிதாபிமானம் இன்மை நமது கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் வடிவமைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். யூத தன்மையையும் ஹொலொஹாஸ்டினையும் ஆக்கிரமிப்பிற்கு சாதகமாக பயன்படுத்துவதை எதிர்ப்பவர்களாக நாங்கள் இங்கு பிரசன்னமாகியுள்ளோம். இது ஆயிரக்கணக்கான அப்பாவிகளை மோதலில் தள்ளியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் ஒக்டோபர் ஏழாம் திகதி கொல்லப்பட்டவர்களும் காசாவில் தற்போது கொல்லப்படுபவர்களும் மனிதநேயமற்ற தன்மைக்கு பலியானவர்களே இதனை நாங்கள் எப்படி எதிர்க்கப்போகின்றோம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/178407

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?

3 months 2 weeks ago
இலங்கையில் குட்டி யானைகளை பலி கொள்ளும் 'அவுட்டுக்காய்' - 10 ஆண்டுகளில் 587 யானைகள் உயிரிழப்பு

தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?

3 months 2 weeks ago
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு தலைவர்கள் வலியுறுத்தல் 11 MAR, 2024 | 11:08 AM சென்னை: தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் என்றும், இப்பிரச்சினைக்கு விரைந்து நிரந்த தீர்வுகாணவேண்டும் எனவும் மத்திய,மாநில அரசுகளுக்கு அரசியல்தலைவர்கள் வலியுறுத்தியுள் ளனர். வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்தமீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்குபல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 69 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்து வருகிறது. மீனவர் வாழ்வாதாரம்... தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினருடைய தாக்குதலுக்கு ஆளாவதை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய பாஜக அரசுஎந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கான உரிய தீர்வுகள் காணப்படாத வரை தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே இருக்கும். பாமக தலைவர் அன்புமணி: தங்களுக்கு உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைதுசெய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசு இந்தியாவிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொண்டு, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறல் களை கட்டவிழ்த்து விடுகிறது. இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகும். இலங்கையின் இந்த சீண்டல்களை இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. 40 ஆண்டுகளாகத் தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களைத் தடுக்கவும், மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சென்றதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல்செய்ததும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இனியும் இது போன்ற நடவடிக்கைகள் தொடரக்கூடாது. எனவே மத்திய அரசு, உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். ஐஜேகே பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன்: கடலில் மீன்பிடிக்கும்போது இந்தியா இலங்கை கடல்பகுதி மிக குறுகலாக இருப்பதால் எங்கே சர்வதேச கடல் எல்லை இருக்கிறது என்பதை தமிழக மீனவர்களால் மிக துல்லியமாக கணிக்கமுடிவில்லை. இதனை2 நாடுகளும் உணர வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வாக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகத்தை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். https://www.virakesari.lk/article/178400

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?

3 months 2 weeks ago
'சவட்டு வெடி' பற்றியும் ஜெயமோகன் ஒரு தடவை எழுதியிருக்கின்றார். யானைகள் வாழும் இடங்களையொட்டிய இடங்களில் விவசாயம் செய்பவர்கள், தமிழ்நாட்டில் என்று நினைக்கின்றேன், இந்த சவட்டு வெடிகளை பயன்படுத்துகின்றனர். சவட்டு வெடி என்பது உருண்டையான நாட்டு வெடி குண்டை உணவுப் பண்டங்களால், உதாரணம்: கடலை முட்டாய், மூடி தோட்டங்களில் போட்டு வைப்பது. இவற்றை யானைகள் உண்ணும் போது, அவை யானைகளில் வாய்க்குள் வெடித்துவிடும். அதன் பின் அந்த யானைகள் உணவோ நீரோ இன்றி சில நாட்களில் இறந்து போய்விடும். ஒரு யானை சவட்டு வெடித் தாக்குதலின் பின் சில நாட்களாக தண்ணீரில் நின்று இறந்த செய்தியும் ஒரு தடவை செய்திகளில் பெரிதாக பேசப்பட்டது.

ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 8600 ஆண்டுகளுக்கு முந்தைய ரொட்டி!

3 months 2 weeks ago
துருக்கியில் உலகின் மிகவும் பழமையான ரொட்டியை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு துருக்கி நாட்டில் உள்ள கொன்யா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு தொல்பொருள் தளமான கேடல்ஹோயுக் என்ற பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சேதமடைந்த அடுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அடுப்பின் அருகில், உலகின் பழமையான ரொட்டியை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஏசு கிறிஸ்துவுக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தாவது: பழங்கால மண் வீடுகள் நிறைந்த “மேகன் 66″ என்ற பகுதியில் பாதி சேதமடைந்த நிலையில் இருந்த ரொட்டி எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரொட்டியை ஆய்வு செய்ததில் அது 8,600 ஆண்டுகள் பழமையான மற்றும் சமைக்கப்படாத, புளிக்கவைக்கப்பட்ட ரொட்டி என்பது கண்டறியப்பட்டுள்ளது. கேடல்ஹோயுக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரொட்டி தான் உலகின் மிகப் பழமையான ரொட்டி. அந்த ரொட்டியின் நடுப்பாகத்தில் விரல் அழுத்தம் இருக்கிறது. அந்த ரொட்டி சமைக்கப்படவில்லை. ஆனால், அது புளிக்கவைக்கப்பட்டதால், இப்போது வரை நன்றாக இருக்கிறது. இதுநாள் வரை இதுபோன்ற ஒன்றை யாரும் கண்டுபிடித்ததே இல்லை” இவ்வாறு தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/295245

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
தேர்தல் பத்திரம்: எஸ்பிஐ மார்ச் 12-க்குள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திங்கட்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. இந்தச் செயல்முறை 'மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும்' பணி என்று கூறிய எஸ்பிஐ கால அவகாசத்தை நாடியது. ஆனால் ஜூன் 30ஆம் தேதிக்குள் நாட்டில் மக்களவை தேர்தல் முடிந்துவிடும். இந்நிலையில், கால நீட்டிப்பு கோரிய எஸ்பிஐ-இன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், மார்ச் 12ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அதோடு இதை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. மேலும், பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கும் தகவல்களை வரும் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. என்ன நடந்தது? தேர்தல் பத்திரங்களைப் பெயர் குறிப்பிடாமல் வைத்திருப்பது தகவல் அறியும் உரிமை மற்றும் பிரிவு 19 (1) (ஏ) ஆகியவற்றை மீறுவதாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. முன்னதாக, அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் வேறு சில ஏற்பாடுகளைச் செய்யும் முறையை ஊக்குவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருந்தார். பத்திரங்கள் பற்றிய தகவலைத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் மார்ச் 13ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறை. இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இதை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். தாங்கள் விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தனது பெயரைக் குறிப்பிடாமல் நன்கொடை அளிக்கலாம். மோதி அரசு 2017இல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டம் 2018 ஜனவரி 29ஆம் தேதி அரசால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES எஸ்பிஐ என்ன சொன்னது? ’ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ இது தொடர்பாக திங்கள்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்க விரும்புவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் தரவுகளை டிகோடிங் செய்வது மற்றும் அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதைப் பூர்த்தி செய்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்கக் கடுமையான வழிகள் பின்பற்றப்பட்டுள்ளன. இப்போது நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்களையும் அவர்கள் எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற தகவலையும் பொருத்திப் பார்ப்பது ஒரு சிக்கலான செயல்முறை என்று அது குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை 2018 ஜனவரி 2ஆம் தேதி வெளியிடப்பட்டது என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிக்கை 2018ஆம் ஆண்டு மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டம் தொடர்பானது. அங்கீகரிக்கப்பட்ட வங்கி, எல்லா சூழ்நிலைகளிலும் தேர்தல் பத்திரம் வாங்குபவரின் தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று அதன் விதி 7 (4)இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்தத் தகவலைக் கேட்டாலோ அல்லது குற்றவியல் வழக்கில் புலனாய்வு அமைப்புகள் இந்தத் தகவலைக் கேட்டாலோ மட்டுமே வாங்குபவரின் அடையாளத்தைப் பகிர முடியும். “தேர்தல் பத்திரம் வாங்குபவர்களின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கும் வகையில் பத்திரங்களின் விற்பனை மற்றும் அதைப் பணமாக்குவது தொடர்பான விரிவான நடைமுறையை வங்கி தயாரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் இவை பின்பற்றப்படுகின்றன," என்று வங்கி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES "எங்கள் எஸ்ஓபியின் பிரிவு 7.1.2இல் தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் கேஒய்சி தகவல்களை சிபிஎஸ் (கோர் பேங்கிங் சிஸ்டம்) இல் உள்ளிடக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் கிளையில் விற்கப்படும் தேர்தல் பத்திரங்களின் மைய தரவு ஒரே இடத்தில் இல்லை. அதாவது வாங்கியவரின் பெயர், பத்திரத்தை வாங்கிய தேதி, வழங்கப்பட்ட கிளை, பத்திரத்தின் விலை மற்றும் பத்திரத்தின் எண் போன்ற விவரங்கள். இந்தத் தரவு எந்த மைய அமைப்பிலும் இல்லை,” என்று வங்கி தெரிவித்தது. "பத்திரம் வாங்குபவர்களின் அடையாளம் ரகசியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, பத்திர வழங்கல் தரவு மற்றும் பத்திரத்தைப் பணமாக்கிய தரவு ஆகிய இரண்டும் தனித்தனி இடங்களில் பராமரிக்கப்படுகின்றன மற்றும் எந்த மைய தரவுத்தளமும் பராமரிக்கப்படவில்லை." ”தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட கிளைகளில் அதை வாங்கியவர்களின் தகவல்கள் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்படும். பின்னர் இந்த சீல் செய்யப்பட்ட கவர்கள் மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பிரதான கிளைக்குக் கொடுக்கப்படும்.” மைய தரவு இல்லை பட மூலாதாரம்,GETTY IMAGES “ஒவ்வொரு அரசியல் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் ஏதேனும் ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்தக் கணக்கில் மட்டுமே அந்தக் கட்சி பெற்ற தேர்தல் பத்திரங்களை டெபாசிட் செய்து பணமாக்க முடியும். பணமாக்கலின்போது, அசல் பத்திரம், பே-இன் ஸ்லிப் ஆகியவை சீல் செய்யப்பட்ட கவரில் மும்பையில் உள்ள எஸ்பிஐ கிளைக்கு அனுப்பப்படும்," என்று வங்கி குறிப்பிட்டது. "அத்தகைய சூழ்நிலையில், இரண்டு தகவல் தொகுப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாகச் சேமிக்கப்பட்டன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது அவற்றைப் பொருத்துவது, அதிக நேரம் தேவைப்படும் பணியாக இருக்கும். பத்திரங்களை யார் வாங்கினார்கள் என்பது பற்றிய தகவலை வழங்க ஒவ்வொரு பத்திரத்தின் வெளியீட்டு தேதியுடன் நன்கொடையாளர் வாங்கிய தேதியைப் பொருத்த வேண்டும்”. ''இது ஓரிடத்தின் தகவலாக இருக்கும். அதாவது பத்திரம் வழங்கப்பட்டதா, யார் வாங்கினார்கள் என்ற தகவல் இருக்கும். இரண்டாவது தகவல் தொகுப்பு பின்னர் வரும். அதாவது இந்தப் பத்திரங்களை அரசியல் கட்சி அதன் அங்கீகரிக்கப்பட்ட கணக்கில் பணமாக்கியிருப்பது தொடர்பான தகவல்கள். பின்னர் வாங்கப்பட்ட பத்திரங்கள் பற்றிய தகவலை பணமாக்கப்பட்ட பத்திரங்கள் பற்றிய தகவலுடன் நாங்கள் பொருத்த வேண்டும்." கால அவகாசத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாக வாதிட்ட எஸ்பிஐ, “எல்லா இடங்களில் இருந்தும் தகவல்களைப் பெறுவது மற்றும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் உள்ள தகவல்களைப் பொருத்துவது என்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாக இருக்கும். தகவல்கள் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளன," என்று கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2019ஆம் ஆண்டில், தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள். "பத்திர எண் போன்ற சில தகவல்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வாங்குபவரின் பெயர், கேஒய்சி போன்ற பிற விவரங்கள் ஆவண வடிவில் சேமிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பத்திரங்களை வாங்குபவர்களின் அடையாளம் எந்த வகையிலும் வெளிப்படுத்தப்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்.” அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. “ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும், பணமாக்கப்பட்ட பத்திரங்கள் சீல் செய்யப்பட்ட உறைகளில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கிளைகளால் மும்பை பிரதான கிளையிடம் ஒப்படைக்கப்படும். இரண்டு வெவ்வேறு தரவுத் தொகுப்புகள் இருப்பதால் நாங்கள் 44,434 செட் தகவல்களை டிகோட் செய்ய வேண்டும், பொருத்திப் பார்த்து அவற்றை ஒப்பிட வேண்டும்," என்று வங்கி கூறியது. "எனவே பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பில் நிர்ணயம் செய்யப்பட்ட மூன்று வார கால அவகாசம், முழு செயல்முறையையும் முடிக்கப் போதுமானதாக இருக்காது. மேலும் உத்தரவைக் கடைப்பிடிக்க எங்களுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம்," என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் வரை கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவை சிலர் விமர்சித்து வருகின்றனர். நாட்டில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது என்பது அவர்களது வாதம். 'தேர்தலுக்கு முன் ஊழலை மறைக்க முயற்சி' பட மூலாதாரம்,GETTY IMAGES "பத்திரங்கள் வாங்கப்பட்டது மற்றும் அதைப் பணமாக்கியது ஆகிய இரண்டு தகவ்ல்களுமே சீல் செய்யப்பட்ட உறைகளில் மும்பை கிளையில் உள்ளன. இந்த விவரம் வங்கி சமர்ப்பித்துள்ள வாக்குமூலத்தில் உள்ளது. எனவே வங்கி உடனே இந்தத் தகவல்களை ஏன் வெளியிட முடியாது?" என்று ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ், ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "22,217 பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களை, பணமாக்கல் விவரங்களுடன் பொருத்த நான்கு மாத கால அவகாசம் தேவை என்று வங்கி கூறுவது முட்டாள்தனமானது,” என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நன்கொடையாளர்களின் தகவல்களைத் தெரிவிக்க எஸ்பிஐ, தேர்தலுக்குப் பிறகு வரை கால அவகாசம் கேட்பது, ’தேர்தலுக்கு முன்பு வரை மோதியின் உண்மையான முகத்தை மறைக்கும் கடைசி முயற்சி’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பட மூலாதாரம்,SCREENGRAB “நன்கொடை வியாபாரத்தை மறைக்க நரேந்திர மோதி தனது முழு பலத்தையும் பயன்படுத்தியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்த உண்மையைத் தெரிந்து கொள்வது நாட்டு மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் இந்தத் தகவலை தேர்தலுக்கு முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று எஸ்பிஐ ஏன் விரும்புகிறது?” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே கிளிக்கில் பெறக்கூடிய தகவல்களுக்காக ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கேட்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு சுதந்திர அமைப்பும் 'மோதானி குடும்பமாக' மாறி அவரது ஊழலை மறைக்க முயல்கின்றன. தேர்தலுக்கு முன் மோதியின் ’உண்மையான முகத்தை’ மறைக்க இது ‘கடைசி முயற்சி’ என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார். எஸ்பிஐயின் மனு குறித்து அதிருப்தி தெரிவித்த சிபிஐஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி "இது நீதியைக் கேலி செய்வதாகும். மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வையும் மோதியையும் காப்பாற்றவே எஸ்.பி.ஐ கூடுதல் காலஅவகாசம் கேட்கிறதா?” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்துப் பல செய்தியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் எஸ்பிஐயின் இந்தத் தேர்தல் பத்திரங்களில் ஒரு ரகசிய எண் இருப்பதாகவும், அதன் மூலம் அவற்றை அடையாளம் காண முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த அறிக்கையின் இணைப்பைப் பகிர்ந்த சீதாராம் யெச்சூரி, “இப்படி இருக்கும் பட்சத்தில் எஸ்பிஐ ஏன் கூடுதல் அவகாசம் கோருகிறது. இது ஆளும் பாஜகவை பாதுகாப்பதற்கான தெளிவான முயற்சியாகத் தெரிகிறது," என்று எழுதியுள்ளார். “எதிர்பார்த்தபடியே மோதி அரசு எஸ்பிஐ மூலம் மனு தாக்கல் செய்து தேர்தல் பத்திரம் வாங்குவோர் குறித்த தகவல்களை வெளியிட தேர்தல் முடியும் வரை அவகாசம் கோரியுள்ளது. இந்தத் தகவல் இப்போது வெளிவந்தால் லஞ்சம் கொடுத்த பலர் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின் விவரங்களும் அம்பலமாகும்” என்றார் உச்ச நீதிமன்றத்தின் பிரபல மற்றும் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண். ஓய்வு பெற்ற கமடோர் லோகேஷ் பத்ரா ஒரு நன்கு அறியப்பட்ட ஆர்டிஐ ஆர்வலர். அவர் தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மைக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். “கடந்த 2017-2018ஆம் ஆண்டில், பத்திரங்களின் விற்பனை மற்றும் பணமாக்கல் நடவடிக்கையை நிர்வகிக்கத் தனிப்பயனாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை எஸ்பிஐ நிறுவியது. 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை மொத்தம் 22217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன. விற்கப்பட்ட 22,217 பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவது எஸ்பிஐக்கு கடினமாக இருக்கக்கூடாது,” என்று வங்கியின் மனு குறித்து அவர் தனது ’எகஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/crg9zy7dwwno

வெறுப்பு!

3 months 2 weeks ago
அருமையான கவிதை...........👍👍 ஊர்ச் சந்தியில் ஒரு அரசமரம் நின்றது. நான் பிறப்பதற்கு முன் இருந்தே அது அங்கே இருந்தது. பின்னர் எங்களுடன் சேர்ந்து எல்லா குண்டு வீச்சுகளையும், ஷெல் அடிகளையும் அது தாங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக முறிந்து கொண்டு வந்தது. நான்கு வருடங்களின் அங்கு போயிருந்த பொழுது, சந்தியில் ஒரு புதிய இள அரசமரம் இப்பொழுது நிற்கின்றது. புதிய மரம் நிற்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியே என்றாலும், மறு பக்கம் எப்பொழுது இரவோடிரவாக அவர்கள் ஒரு சிலையை வைத்து விடுவார்களோ என்றும் தோன்றியது.....போன பழைய மரம் போனதாக இருக்க, வெறும் சந்தி இருந்தாலும் பரவாயில்லையோ என்று தோன்றுகின்றது இந்தக் கவிதையை வாசித்த பின்.

சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?

3 months 2 weeks ago
ஜாபர் சாதிக் கைதை அரசியலாக்குகிறதா போதைப் பொருள் தடுப்பு பிரிவு? - முன்னாள் அதிகாரிகள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,ANI ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வசேத அளவில் போதைப் பொருட்களை கடத்தி வந்ததாகக் கூறி, திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருளான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவர் கைதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவற்றில், முக்கியமாக, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தை அரசியல் கட்சிகளுக்கு வழங்கியிருக்கிறார், அவர் அந்தப் பணத்தில்தான் ‘மங்கை’ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பன உள்ளிட்ட தகவல்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி பொது வெளியில் பகிர்ந்து கொண்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதில் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும், இதற்கு முன் இத்தகைய வழக்குகள் இப்படியாகக் கையாளப்படவில்லை என்றும் பரவலாக விமர்சிக்கப்படுகிறது. போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் செயல் சட்டத்திற்கு உட்பட்டதா? இதில், அரசியல் நோக்கம் உள்ளது எனும் வாதத்தை முன்னாள் காவல்துறை அதிகாரிகள் எப்படிப் பார்க்கிறார்கள்? பட மூலாதாரம்,HANDOUT என்ன நடந்தது? போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனப் பொருட்களில் ஒன்றான சூடோபெட்ரைன் (pseudoephedrine), வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து., திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின், டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போலீஸார் கடந்த 23-ஆம் தேதி நோட்டீஸ் ஒட்டினர். ஆனால், விசாரணைக்கு அவர் ஆஜராகாததை எடுத்து, ஜாபர் சாதிக்கின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். தொடர்ந்து வீட்டுக்கு சீல் வைத்தனர். ஜாபர் சாதிக் வீட்டுக்கு வந்து சென்றவர்கள் யார் யார் என்பதைக் கண்டறிய அவரது வீட்டில் இருந்த சிசிடிவி தொடர்பான ஹார்ட் டிஸ்க்கையும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் டெல்லி கொண்டு ஆய்வு நடத்தினர். இதனிடையே, ஜாபர் சாதிக் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுத்தனர். மேலும், ஜாபர் சாதிக்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர் தொடர்புடைய 8 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த நிலையில்தான், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறினர். பட மூலாதாரம்,HANDOUT போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியது என்ன? ஜாபர் சாதிக் கைது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங், “ஜாபர் சாதிக்கின் முழுப் பெயர் ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான். இவர் டெல்லி, தமிழ்நாடு போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளார். "சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் பசாய் தாராபூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், 50 கிலோ அளவில் போதைப் பொருள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருள் கைப்பற்றப்பட்டது. "அதனைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி டெல்லி காவல் துறையின் உதவியுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்களின் தலைவர் ஜாபர் சாதிக் என்று தெரிவித்தனர். "போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படத் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்ட்டேட், ஹோட்டல் போன்ற பல்வேறு தொழில்கள் முதலீடு செய்துள்ளார். இவருக்கு முக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. "சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஜாபர் சாதிக்கை இன்று (மார்ச் 9) கைது செய்துள்ளோம். போதைப் பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் ‘மங்கை’ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார். "உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருள்களை ஜாபர் சாதிக் பல்வேறு நாடுகளுக்கு கடத்தியுள்ளார். போதைப் பொருள் கடத்தல் பணத்தை அரசியல் கட்சிகளுக்கும் வழங்கியிருப்பதாக தகவல் உள்ளது. "போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தில் சென்னையில் ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். ஜாபர் சாதிக் திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். இன்று அவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் திரைப் பிரபலங்கள் சிலருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்னர் அனைவரது பெயர்களையும் வெளியிடுவோம்.” இவ்வாறு அவர் கூறினார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பேசியது சரியா? ஆனால், ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, அந்த வழக்கு குறித்த தகவல்களை வெளியிடுவது சட்டப்படி சரியா, இது இதற்கு முன் இப்படி நடந்திருக்கிறதா உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து முன்னாள் ஏடிஜிபி-யான திலகவதி ஐபிஎஸ்-இடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அப்போது, அவர் இதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை என்றாலும், அது அறம் இல்லை என்றார். “இந்த விவகாரத்தில் சட்டப்படி அவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு இல்லை. ஏனென்றால், இதை சொல்ல வேண்டும், சொல்லக்கூடாது என சட்டத்தில் எதுவும் இல்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு என்று உள்ள அறம் இங்கு மீறப்பட்டிருக்கிறது. தகவல் சொன்னவர் குறித்தும், அவர் என்ன என்ன விஷயங்களை சொல்லியிருக்கிறார் என்பது குறித்தும் பொது வெளியில் பகிரக்கூடாது,” என்றார் திலகவதி. அப்படி பகிர்வதில் என்ன தவறு எனக் கேட்டபோது, “பிடிபட்ட நபர் ஒரு போதைப் பொருள் கடத்தியவர் மட்டுமே. ஆனால், இவருக்கு பின்னால் ஒரு பெரிய விநியோகச் சங்கிலி இருக்கும்.இவருக்கு கொடுக்கிறவர்கள் யார், இவர் யாருக்கெல்லாம் கொடுக்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை முழுமையாகப் பெறாமல், அவர்களை பிடிக்காமல், இப்படி அனைத்து தகவல்களையும் வெளியிடுவது, வழக்கைத்தான் பாதிக்கும்,” என்றார். மேலும், இந்த வழக்கின் நோக்கமே கேள்விக்குள்ளாகி இருப்பதாகவும் திலகவதி கூறினார். “இவர் ஒரு சிறு வியாபாரி தான். இவர் குறித்த தகவல்களை வெளியிடுவதன் மூலம், இந்த வழக்கின் நோக்கமே கேள்விக்குள்ளாகி உள்ளது. இவர்கள் நோக்கம் போதைப் பொருள் கடத்தல் கும்பலைப் பிடிப்பதா, அல்லது அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதா, எனத் தெரியவில்லை,” என்றார் திலகவதி. இந்தியா முழுவதும் இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பிடிபடும் குற்றவாளிகளுக்கு அரசியல் பின்புலங்கள் இருப்பதாகக் கூறும் திலகவதி, “இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. இதற்கு எந்த ஒரு அரசியல் கட்சியையும் குற்றம்சாட்ட முடியாது. ஒவ்வொருவர் குறித்தும் முழுமையாக விசாரித்து கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்,” என்றார். ஆனால், ஜாபர் சாதிக் விஷயத்தில், வழக்கை விசாரிக்கும் விசாரணை அமைப்பு தங்களின் பொறுப்பில் இருந்து முற்றிலுமாக தவறியதாக பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் காவல்துறை டிஜிபி ஒருவர் கூறினார். “எல்லா புலனாய்வு அமைப்புகளும் வெளிப்படையாக பொது மக்களிடம் வந்த என்ன நடந்தது என்பதை கூற வேண்டிய அவசியம் இல்லை. சில அமைப்புகள் ரகசியமாகத்தான் செயல்பட வேண்டும். "அப்படிப்பட அமைப்புகளில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவும் ஒன்று. இதுநாள் வரை, வெகுஜன மக்களுக்கு இப்படி ஒரு அமைப்பு இருப்பதே தெரியாமல் இருந்திருக்கும். இப்போது, ஜாபர் சாதிக் விஷயத்தில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதில் இருக்கும் அதிகாரிகளையும் தெரிந்துவிட்டது. இது ஒரு தவறான முன் உதாரணம்,” என்றார். சட்டம் மற்றும் ஒழுக்கு போலீசார் மட்டும் பொது மக்களிடம் ஒரு வழக்கு குறித்து என்ன நடந்தது என்று பேசுவதற்கான தேவை உள்ளதாகக் குறிப்பிட்ட முன்னாள் டிஜிபி, “அது பொது மக்கள் அச்சமின்றி இருக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததாக உத்தரவாதம் அளிப்பதற்கும் செய்யும் செயல். ஆனால், அனைத்து விசாரணை அமைப்புகளும் அப்படி இருக்க வேண்டியதில்லை,” என்றார். பட மூலாதாரம்,ANI திமுக என்ன சொல்கிறது? இந்த வழக்கில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக திமுக குற்றம்சாட்டியது. மேலும், திமுக மற்றும் திமுக தலைவர் மீது போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புப்படுத்தி ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தால், குற்றவியல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக எம்.பி வில்சனும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறினர். “வழக்கு விசாரணையில் இருக்கும்போதே வழக்கு தொடர்பான தகவல்களை ஊடகங்கள் முன் வெளியிட்டது பாஜக அரசியல் ஆதாயம் அடைவதற்காகத்தான்,” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டினார். மேலும், ஜாபர் சாதிக் திமுக,வில் பொறுப்பில் இருந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, கட்சியில் உள்ள இரண்டு கோடி உறுப்பினர்களின் பின்புலன்களை சரி பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது, என்றார். இதேபோல, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் குறித்து விரிவான விசாரணை நடத்தக்கோரி அதிமுக சார்பில் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதற்கிடையில், வழக்கு தொடர்பான தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலிடம் கேட்டபோது, வழக்கு தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எதுவும் கேட்கவில்லை என்றும், கேட்டால், அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு காவல்துறை தர தயாராக உள்ளோம், என்றார். “மத்திய ஏஜென்சிகள் போதைப் பொருட்கள் பறிமுதலை விட, தமிழ்நாடு காவல்துறை பறிமுதல் செய்த எண்ணிக்கை அதிகம். மொத்தம் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ளன. அதில் 2 வழக்கு சென்னையில் உள்ளது. முதல் வழக்கு 2013ஆம் ஆண்டு எம்.கே.பி. நகர், ஆர்.கே.நகரில் உள்ளது,” என்றார். மேலும், ரூ.2,000 கோடி அளவில் போதைப் பொருட்கள் பறிமுதல் குறித்து கேட்டபோது, வழக்கு தொடர்பாக பேச மறுத்த சங்கர் ஜிவால், இந்த போதைப் பொருள் எடை மற்றும் அவற்றின் மதிப்பை கணக்கிடுவதில் தவறிருப்பதாகக் கூறினார். “பிடிபட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.2,000 கோடியாக இருக்க வாய்ப்பில்லை. அதேபோல, கடத்திய பொருட்களின் மதிப்பும் ரூ.2,000 கோடியாக இருக்க வாய்ப்பில்லை. இங்கிருந்து கடத்திய மூலப்பொருட்களைக் கொண்டு, வேறு நாட்டில் தயாரித்து விற்பனை செய்யப்படும் பொருளின் மதிப்புதான் ரூ.2,000 கோடியாக இருக்கும். அந்த மதிப்பை கணக்கிடுவதில்தான் தவறு உள்ளது,” என்றார் சங்கர் ஜிவால். https://www.bbc.com/tamil/articles/cv2ypnx4m2mo

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்

3 months 2 weeks ago
Published By: VISHNU 11 MAR, 2024 | 08:03 PM நாங்கள் இந்த நாட்டிலே சிறுபான்மை சமூகங்கள் என்று எம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றோம். அது எண்ணிக்கையில்தான் ஆனால் பெரும்பான்மை சமூகமாகச் சிங்கள மக்களைச் சொல்லலாம். தமிழர்களாகிய நாம் யார் எனும் கேள்வியைக் கேட்டால் நாங்கள் அழிக்கப்பட்ட சமூகத்தினதும், காணாமலாக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள்தான். என வர்த்தகஇராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டுக் கழகம் நடாத்திய பி.பி.எல்.கிறிக்கட் திருவிழாவின் இறுதிப்போட்டி நிகழ்வு கழகத் தலைவர் ஆர்.கோபாலசிங்கம் தலைமையில் பெரிய கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது கந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… எண்ணிக்கையில் நாம் சிறுபான்மையர்களாக இருந்தாலும் தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும். நாங்கள் சொல்வதை இந்த நாடு கேட்கும். எங்களை இந்த நாடே திரும்பிப் பார்க்கும். அவ்வாறாயின் நாம் பொருளாதாரம், மற்றும் கல்வி ஆகிய இரண்டு துறைகளில் கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டும். அவ்விரு துறைகளிலும் யாரும் தொட முடியாத உச்சத்திற்கு எமது சமூகத்தை நாம் வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்ந்தால் இந்த முழு நாடும் நாம் சொல்வதைக் கேட்கும். அதற்காக அனைவரும் பாடு படவேண்டும். கடந்த வருடம் கல்விப்பொதுத்தர உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம்தான் இலங்கையிலேயே முதலிடம் பெற்றிருந்தது. அதற்காக என்னைத் தேடி வந்து நாட்டின் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். கல்வி என்பது நாட்டின் பிரதமரையே நமது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. அதபோன்றுதான் பிரதமர் தினேஸ் குணவரத்தன அவர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் றோயல் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் பெரியகல்லாற்றைச் சேர்ந்தவர் அவர் தற்போதும் இருக்கின்றார். எனவே தமிழ் சமூகம் என்பது கல்வியால் வளர்ந்து கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகம் மாத்திரமின்றி இலங்கை முழுவதையும் கல்வியால் ஆட்சி செய்த சமூகமாகும். அனைத்துத் துறைகளிலும் மிளிர்ந்தவர்கள் தமிழர்கள். மீண்டும் அதே நிலமைக்கு நாம் வரவேண்டும். இதற்கு அனைவரும் கரம் கோர்த்து உதவுவதற்கு நாம் அனைவரும் தயாராகவுள்ளோம். என அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178468

சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?

3 months 2 weeks ago
கேள்விகளுக்கு பதில் இல்லாவிட்டால் இப்படித்தான் எழுதவேண்டியிருக்கும்! பாலஸ்தீன மக்கள்மட்டும் அடிமைவாழ்க்கை வாழவேண்டும் ஆனால் நாங்கள்???

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?

3 months 2 weeks ago
நிறைய இருக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் கேரளாவில் போய் செய்யமுடியாதுதானே!!

மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு

3 months 2 weeks ago
மாணவன் மரணம்: வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம்! அம்பாறை மாவட்டம், திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை விளையாட்டு போட்டியின் போது மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் திடிரென மயக்கமுற்ற நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யபட்ட நிலையில் அங்கு அம்மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலை சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன் எனும் மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த பாடசாலை மாணவரகள் பொதுமக்கள் மரணமடைந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்க தவறிய திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி, மாணவனின் மரணத்திற்கு வைத்தியர்களின் அலட்சிய போக்கே காரணம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த மாணவன் எந்தவொரு சிகிச்சையுமின்றி மூன்று மணித்தியாலங்கள் இருந்ததாகத் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டமையால் அங்கு பதற்றமானதொரு சூழலும் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1373099

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2) ஆண் : { அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2) பெண் : கண்ணு வலது கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு பெண் : ஈசான மூலையில லேசான பல்லி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல ஆண் : மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே......! --- கூண்டுக்குள்ள என்ன வெச்சு ---
Checked
Wed, 06/26/2024 - 08:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed