புதிய பதிவுகள்2

கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !

3 months 2 weeks ago
நீங்கள் சொல்வது இங்கு நல்ல பொருத்தமே.... லாஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க மத்திய அரசின் செயலகம் (Federal Building) ஒன்றுள்ளது. அதைச் சுற்றி தினமும் இங்கு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் உலகில் உள்ள எல்லோராலும் நடத்தப்படும். சுற்றிவர இருக்கும் நடைபாதையில் நின்று கோஷங்கள் எழுப்பலாம், ஆனால் புல்லுக்குள் கால் வைக்கக்கூடாது... எவரும் கொடி பிடித்தும் நான் பார்த்ததில்லை. அது ஒரு சட்டமாக, ஒழுங்காகக் கூட இருக்கலாம். இஸ்ரேலியர்கள் ஒரு பக்கம் நின்று கோஷம் போடுவார்கள், பலஸ்தீனியர்கள் இன்னொரு பக்கத்தில் நின்று கோஷம் போடுவார்கள். கொடிகள் இல்லாததால், பல சமயங்களில் எங்களால் யார் யார் எவர் எவர் என்று கண்டு பிடிக்கிறது என்பது இயலாத காரியம். 2009ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னும், தமிழ் மக்கள் ஒரு பக்கமும், சிங்கள மக்கள் இன்னொரு பக்கமும் நின்று கோஷங்கள் எழுப்பியிருக்கின்றார்கள். இலங்கைத் துணைத் தூதரகம் அருகிலேயே உள்ளது. அவர்கள் வந்து படம் எடுப்பார்கள். பின்னர் எங்காவது அது செய்தியாக வரும். அது ஒரு காலம்.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

3 months 2 weeks ago
புத்தன் அண்ணா இணையவன் அண்ணா சொன்னது உண்மை..சைவம் தமிழை வளர்ப்பதாக சொல்லி தன்னை தான் வளர்க்க பார்த்தது. இதனால் தமிழ் இனத:திற்கு வீழ்ச்சி இந்தியா இந்து சைவம் இஸ்லாம் வைணவம் கிறிஸ்தவம் தமிழர்களை வைத்து பயனடை முயற்சித்தன.

ரணில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக “ஆவா குழு” அருண் – ஆதரவாளா்கள் கடும் அதிா்ச்சி

3 months 2 weeks ago
ஆம், அவரே ஒரு சிங்களக் காணொளியில் ஒப்புக்கொண்டிருக்கிறார் https://www.youtube.com/watch?v=2I2sTQvZVAI

கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !

3 months 2 weeks ago
ஏன் அதை தப்பாக பார்க்கிறீர்கள்? 1000 பேர் நின்றாலும் யார் நிற்கிறார்கள் என்றே தெரியாது. ஆனால் 10 பேர் நின்றாலும் ஒரு கொடி இருந்தால் யார் என்று தெரிந்துவிடும்.

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.

3 months 2 weeks ago
இளைய சமுதாயம் போதைவஸ்த்து, மது போன்ற இன்னொரென்ன கலாசார சீரழிவுகளில் ஈடுபட்டிருக்க, வரலாறு தெரியாது ஆக்கிரமிப்பாளனின் போர்க்கருவிகளில் வியந்துபோயிருக்க இன்னொரு பகுதி மாணவர்கள் அரசியலைச் சரியான முறையில் பேசுவது நம்பிக்கை தருகிறது. புலம்பெயர் தமிழர்களின் குழுபேதங்களும், பிரிவினைகளும், பணத்திற்காக இனம் விற்கும் துரோகங்களும், ஆக்கிரமிப்பாளனிற்கு விலைபோகும் கைங்கரியங்கள் தவறானவையே. அவை நிச்சயம் சுட்டிக்காட்டப்பட்டுத் தோலுரிக்கப்பட வேண்டும். இவ்வாறானவர்கள் தமிழனின் அபிலாஷைகள் குறித்து பேசுவதற்கு எவ்விதத்திலும் அருகதையற்றவர்கள் என்பது சரியானதே. மேலும், சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராதென்று சேடமிழுக்கும் அப்புக்காத்துமாரின் இணக்க அரசியலால் உந்தப்பட்டு விஷம் கக்கும் நாகங்களைக் கடந்து இளைய சமுதாயம் விளிப்புணர்வு பெற எடுக்கப்படும் எந்த முயற்சியும் பாராட்டிற்குரியதே. சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருபடி. நடக்கட்டும், வாழ்த்துக்கள் !

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 months 2 weeks ago
வயசாளி டோனியின் அணி வென்றது நமக்கும் கடுப்புத்தான்! ஒரு மினி போட்டி (கடைசி நாலு போட்டிகளையும் மட்டும் வைத்து) நடாத்தலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் அடுத்த வார இறுதிதான் தயாரிக்கமுடியும்!

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.

3 months 2 weeks ago
இது உங்கள் விதண்டாவாதம்...பழைய ரெகார்டு மாதிரி ...கீறிய ரெகார்டு மாதிரி ..புலம்பாமல்..உங்கள் பிழைப்புக்கு நல்ல வழியை தேடுங்கள்.. இனம் தழைக்கும்..உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்..நன்றி டொட்..

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார்........! ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே ஆண் : கைகள் தானாய் கோர்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்தாய் இன்பம் இன்பம் சிங்கார லீலா ஆண் : பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே பெண் : பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு ஆண் : புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே பெண் : உன்னை சேர்ந்தாள் பாவை இன்னும் அங்கு ஏதோ தேவை சொல்லு சொல்லு சிங்கார வேலா பெண் : தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே நூல் இடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்கார தேனீ பெண் : தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திட வா.......! --- இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்---

யாழ்ப்பாணம் - A melodic Tale

3 months 2 weeks ago
ஏன் நயினாதீவு முருகனின் கோயிலா ....... எந்தக் கலர் கண்ணாடி போட்டுப் பார்க்கிறார்களோ அந்தக் கலரில்தான் எல்லாம் தெரியும்........! விமர்சனங்கள் என்றால் அப்படித்தான் இருக்கும் அவற்றையெல்லாம் தலையில் ஏற்றக் கூடாது, நல்லதோ கெட்டதோ வரும் விமர்சனங்கள்தான் ஒரு படைப்பாளியை மெருகேற்றும்.......! 😁
Checked
Mon, 07/08/2024 - 12:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed