புதிய பதிவுகள்2

என் இந்தியப் பயணம்

3 months 2 weeks ago
முதலே 157 ரூபாக்கள் என்று ஊபர்காரன் சொல்லிப் போட்டானே. அப்புறம் எப்படி கூடுதலாக கொடுக்க மனம் வரும்? ஏழரை என்று தெளிவா எழுதுங்க.

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
🤣🤣..... இங்கு கார்களிலிருந்து Catalytic Converterஐ வெட்டி எடுப்பது தான் மிகச் சமீப காலம் வரை பெரிய திருட்டாக இருந்தது. ஒரு பெரிய கும்பல் ஆயிரக்கணக்கான பாகங்களுடன் சமீபத்தில் மாட்டும்பட்டது. ஒரு வார விடுமுறை நாள் அதிகாலை 6 மணி இருக்கும். வீட்டின் முன்னால் யாரோ மோட்டார் சைக்கிள் ஓடுவது போன்ற சத்தம். பக்கத்து வீட்டில் யாரோ விருந்தாளிகள் வந்திருக்கின்றார்கள் போல, ஏதோ காலையிலேயே ஓடுகின்றார்களாக்கும் என்று நினைத்து விட்டு, அப்படியே எட்டிப் பார்க்காமல் இருந்து விட்டோம். சில மணி நேரங்களின் பின்னர் போலீஸ் கார்களின் நீலமும், சிவப்புமான வெளிச்சத்தை பார்த்து, வெளியில் போன பின் தான் தெரிந்தது..........பக்கத்து வீட்டுக்காரர்களின் ஒரு காரின் Catalytic Converterஐ வெட்டி எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் என்று. சைலன்சர் குழாயையும் சேர்த்து அரிந்து எடுத்துப் போயிருக்கின்றார்கள்.

என் இந்தியப் பயணம்

3 months 2 weeks ago
சிறிது நேரம் யாருமே பேசவில்லை. ஓட்டோ ஓட்டுனர் : கீளாம்பாக்கம் தானே? கணவர்: ஓம் ஓ ஓ : எங்க போறீங்க கணவர்: மதுரை நான்: அந்த இடம் தெரியும்தானே? ஓ ஓ : ஆமா ஆமா. கீளாம்பாக்கத்தில ஆறு மாசம் முன்னாடிதான் புதிசா கலைஞர் கருணாநிதி நினைவா தொறந்து வைச்சாங்க. ரொம்பப் பெரிசு. மின்னாடியே உங்களுக்குத் தெரியாதா? கணவர்: தெரியாது. கோயம்பேடு என்று சொன்னாங்களே. ஓ ஓ: அங்க இப்ப யாரையும் ஏத்தக் கூடாது. எந்த பஸ்சும் வராது. நான்: ரிக்கற் போட்டவர் பொய் சொல்லீட்டார் கணவர்: ஒரு மணித்தியாலத்தில போகலாமோ? ஓ ஓ: இன்னிக்கி வெள்ளிக்கிழமை. ரொம்ப ராபிக்கா இருக்கும். எப்பிடியும் நான் ஒண்ணரை மணி நேரத்தில கொண்டு போயிடுவன். அன்று போய் சேர ஒன்றே முக்கால் மணிநேரம் பிடிக்க நான் டென்ஷன் ஆனதுக்கு அளவே இல்லை. அப்பா! மிகப் பிரமாண்டமாக ஒரு விமானநிலையம் போல வடிவமைத்திருந்தார்கள். நானும் லண்டன் விக்டோரியா கோச் நிலையம் போல ஒரு பத்து சொகுசு பஸ்கள் நிற்கும் என்று பார்த்ததால் - சினிமாவில் கூட அப்படிப் பார்த்ததில்லை. மிகப் பிரமாண்டம். ஒரு நூறு பஸ்கள் ஆவது நிற்கும். மற்றும் வேளையென்றால் இறங்கி நின்று படமோ வீடியோவோ எடுத்துவிட்டுத்தான் போயிருப்பேன். என் பஸ்சைப் பிடிக்கும் அவசரத்தில் வேறு எதுவுமே தோன்றவில்லை. உள்ளே சென்றால் ஒரு ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நிற்கக்கூடியதாக பெரிதாக இருந்தது மண்டபம். மலசலகூடமும் மிகச் சுத்தமாக இருக்க நம்ப முடியாததாக இருக்க கணவரிடம் வாய்விட்டுச் சொல்கிறேன். இன்னும் ஒரு வருடம் போகட்டும். அதன்பின் வந்து பாரன் என்கிறார். எமது பஸ்ஸைத் தேடிப் பிடித்து உள்ளே சென்றால் நாம் மட்டும் தான் உள்ளே. யாரையும் காணவில்லை. எல்லா ஏசியையும் போட்டு குளிர் தாங்கவே முடியவில்லை. 96 ம் ஆண்டு இத்தாலி செல்லும்போது தான் முதன்முதல் தொடருந்தில் தூங்கிக்கொண்டு வந்தோம். இதுவே பேருந்தில் தூங்கியது முதல் அனுபவம். நாம் கொண்டுபோன விரிப்பை விரித்துவிட்டு திரைச் சீலையையும் இழுத்துவிட்டுப் படுத்தபின்தான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். நான் நினைத்ததுபோல இல்லாமல் சுத்தமாக இருந்தது. ஆனாலும் அந்த ஏசியிலும் ஒரு நுளம்பு ஓடி ஓடிக் கடிக்க மனிசன் ஒரு இருபது நிமிடப் போரில் நுளம்பை வெல்ல அதன் பின் நிம்மதியான தூக்கம்தான். காலை ஆறு மணிக்கு மதுரை போகும் என்று சொன்னாலும் ஆறரைக்கே பேருந்து போய் சேர்ந்தது. பேருந்துத் தரிப்பிடம் போல் இல்லாமல் ஒரு வெட்டவெளியில் நிறுத்த, நாம் இறங்க இரண்டு மூன்று ஓட்டோக்காரர் என்னிடம் வாங்க, என்னிடம் வாங்க என்கின்றனர். அதில் ஒரு அப்பாவிபோல் இருந்த ஒருவரை கணவர் தெரிவு செய்ய, நாம் ஏறி அமர எங்கே போகணும் என்கிறார் அவர். மீனாட்சி அம்மன் கோவில் பக்கமாக நல்ல கோட்டல் ஒன்றுக்குக் கூட்டிச் செல்லுங்கள் என்கிறார் கணவர். கோவிலுக்குக் கிட்ட கோட்டல்கள் இல்லீங்க. ஒரு கிலோமீற்றர் தூரத்தில் தான் கோட்டல் எல்லாம் இருக்கு. கோயிலுக்கு அங்கிருந்து 200 ரூபா தான் என்கிறார். இரண்டு மூன்று கோட்டல்கள் தொடர்ந்து இருக்க, ஓட்டுனர் சென்று இரண்டு கோட்டல்களில் கேட்க எல்லாம் புல் என்கின்றனர். மூன்றாவதில் இடம் இருக்க நான் உள்ளே சென்று அறையைப் பார்க்கவேண்டும் என்கிறேன் வரவேற்பில். தாராளமாகப் பாருங்கள் என்கின்றார். அறை என்னவோ பரவாயில்லை. ஆனால் போகும் வழியில் சுத்தம் இல்லாமல் இருக்க இது வேண்டாம் என்கிறேன். இன்னிக்கி சனிக்கிழமை வெளியூர்காரங்க வந்திருப்பாங்க. வேறு இடம் பார்க்கலாம் என்று இரண்டு மூன்று பார்த்து நான்காவதாக 3700 ரூபாய்கள் காலை உணவுடன் என்று கூற அதைத் தெரிவு செய்கிறோம். அறையில் குளித்து ஆடைமாற்றிக்கொண்டு கீழே வர உணவகம் கூட மிக நேர்த்தியாக இருக்கிறது. பபே என்றாலும் கேட்டுக்கேட்டு தோசை, பூரி என்று கொண்டுவந்து தருகின்றனர். அவர்களின் உபசரிப்பில் மனமும் வயிறும் நிறைந்து போகிறது. சரி இனி மீனாட்சி அம்மனிடம் செல்வோம் என்கிறார் கணவர். அவரது போனில் ஊபர் அப் இருக்கு. எனவே ஊபர் கிளிக் செய்ய அதில் ஓட்டோவும் வர ஓட்டோவுக்குப் போடுவம் என்று போட 157 ரூபாய்கள் என்றும் பணமாகக் கொடுக்கலாம் என்னும் ஒப்ஷன் வர, மனிசனும் மலிவாக இருக்கு என்று சந்தோசப்படுறார். 7 நிமிடத்தில் வருவதாகக் காட்டிய ஓட்டோ மூன்று நிமிடத்தில் தானாகவே கான்சல் ஆகிது. திரும்ப ஒன்று போட அதுவும் அப்படி இப்படி என்று எழு நிமிடத்தில் கான்சல் ஆக எனக்குக் கடுப்பு ஏற்பட, ரோட்டில் போய்நின்று பிடிப்போம் என்று ரோட்டுக்குச் சென்றால் அங்கு வந்த ஓட்டோ ஐநூறு கேட்கிறது. மனிசன் கூட என்று சொல்ல எவ்ளோ தருவீங்க என்று கேட்க மனிசன் இருநூறு என்கிறார். வேறு ஓட்டோ பாருங்க என்று கூறிவிட்டு அவன் கிளம்ப, வாற இடத்தில கஞ்சத் தனத்தைக் காட்டாதைங்கோ என்று எரிச்சலுடன் சொல்கிறேன். அடுத்த ஓட்டோவில் நானூறு சொல்ல மனிசன் கதைக்க முதலே நான் ஏறி அமர்கிறேன். உனக்கு எதிலும் அவசரம் என்று மனிசன் புறுபுறுக்க இது எங்கட ஊர் இல்லை. எங்களுக்கு அலுவல்தான் முக்கியம் என்கிறேன். சனி தொடரும்

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
இந்த சம்பவம் நடந்தது 15 வருடமாவது இருக்கும். நண்பன் ஒருவர் (அப்போ திருமணம் செய்யவில்லை) நண்பர்களோடு ல் இருந்தவர். அப்போ இருந்த தமிழ் குடும்பம் இரவு உணவுக்காக அழைத்தது. பனியும் கொட்டிய படி உள்ளது. குறிப்பிட்ட நண்பரும் இன்னும் சில அவரின் நண்பர்களையும் கூட்டிக்கொண்டு பின்னேரம் போல் ( 6 - 6:30) போயடைந்தார்கள். போன நண்பர் அதிகம் குடிக்காதவர். கொஞ்சம் வைனுடன் சாப்பிடுபவர். மற்றவர்கள் சொல்ல தேவை இல்லை. மது, உணவு முடிய 11:30 ஆகி விட்டது. பனியும் சுமாராக கொட்டி விட்டது. "சரி காணும் வாங்கோடாப்பா" என நண்பர்களையும் கூட்டிக் கொண்டு காரை நோக்கி செல்கிறார்கள். காரில் எல்லோரும் ஏறிய பின்னர் காரை start பண்ண எந்த சத்தமும் வரவில்லை. பற்றரி போட்டுது போல இருக்கு "இறங்கி தள்ளுங்கோடா "என்று கூறி இருக்கிறார். அவர்கள் காரை கொஞ்ச தூரம் தள்ளியும் கார் startஆக வில்லை. கார் Hood ஐ திறந்து பார்த்த போது என்ஞினை காணவில்லை.😞 அந்த நண்பர் அத்தோடு நியூயோர்க்கை விட்டு பலோ அல்டோ(Palo alto), கலிவோர்ணியாவில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறார். எப்போதும் நியூயோர்க் என்ற பேச்சு வந்தாலே அவரின் இந்த அனுபவத்தை சகலரிடமும் பகிர்வார்.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

3 months 2 weeks ago
முற்ற விட்டால் தானே? 🤪. தெரியவில்லை என்பது நல்ல பதில்,....சும்மா எல்லாம் தெரிந்தவன் என்று படம் காட்டுதல் கூடாது

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
சோவியத்யுனியன், கிழக்கு யேர்மனியின் நாச வேலை நோக்கங்கள் விளங்கி கொள்ள முடிந்தது. இப்படி ஐரோப்பா வுக்குள் சென்ற சிலர் மூலம் அறிந்திருக்கிறேன் தாங்கள் அகதி முகாமில் இருந்த போது அங்கே வந்த தமிழ் சித்தாந்தவாதிகள் சிலர் நீங்கள் இந்த நல்ல நாட்டை அடவதற்கு காரணமானவர்கள் ரஷ்யா ரஷ்யாவின் விமானம், இதை மறக்காமல் நீங்கள் ரஷ்யாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார்களாம்😂

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

3 months 2 weeks ago
ஜேர்மனி, சுவிஸ் மற்றும் அவுஸ் ஆகிய நாடுகள்தான் தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கில் அதிக கவனம் செலுத்துகின்றன.

இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

3 months 2 weeks ago
சரியான ஆளிடம் தான் கேள்வி கேட்டுள்ளீர்கள் அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சி தொடங்கி அதிகாரம் அற்ற சீமான் கட்சிகள் வரை இலங்கை கடலுக்குள் சென்று தமிழ்நாட்டு மீனவர்களால் நடத்தபடும் கடற்கொள்ளையை தமது அரசியல் நலனுக்காக ஆதரிப்பவர்களாக தான் உள்ளனர். நான் முதலமைச்சரானால் இலங்கைக்கு களவு எடுக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களின் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்பி வைப்பேன் என்று சொன்னவர் தான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். தமிழ்நாட்டு மீனவர்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மது குடித்து குடித்தே இறப்போம் என்று நினைத்து விட்டனரோ ☹️

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

3 months 2 weeks ago
`ஆட்டோ... படகு... மைக்...' - நாதக-வின் புதுச் சின்னம் சாய்ஸ் என்ன? தேர்தல் நெருங்கிக் கொண்டே இருப்பதால், கட்சியின் சின்னம் என்ன என்ற ஆவல் கட்சிக்குள்ளும் நா.த.க ஆதராவாளர்கள் மத்தியிலும் கிளம்பியுள்ளது. அதே சமயம் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. Published:Today at 9 AMUpdated:Today at 9 AM சீமான் | நாம் தமிழர் கரும்பு விவசாயி சின்னம் வேறுக் கட்சிக்கு வழங்கப்பட்டிருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு என்ன சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தக்கூடிய மற்றும் எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய சின்னங்களின் பட்டியலில் என்னென்ன இருக்கிறதென விசாரித்தோம். படகில் சீமான் ட்விட்டர் 2019 மற்றும் 2021 தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாமதமாக விண்ணபித்தார்கள் எனக் கூறி, அந்தச் சின்னம் வேறுக் கட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தை நா.த.க நாடியபோது, வழக்கு தள்ளுபடியானது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நா.த.க-வின் மனு விசாரிக்கப்படுவதில் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. எனவே கரும்பு விவசாயி சின்னம் இல்லை என்றாலும் பரவாயில்லை... ஏதாவது ஒரு சின்னத்தைப் பெறுவோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர் நா.த.க-வினர். புதிய சின்னத்தைத் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் வேலைகள் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காதபட்சத்தில் ஆட்டோ சின்னத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற பேச்சு, கட்சிக்குள் வலுவாக இருந்தது. ஆட்டோவைப் பெற்றுவிட்டால், சின்னத்தைக் கொண்டு சேர்ப்பதில் சிக்கல்கள் இருக்காது எனக் கட்சி நிர்வாகிகள் சொல்ல, சீமானும் இசைவு தெரிவித்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக அதனையும் வேறு கட்சிக்கு ஒதுக்கிவிட்டது தேர்தல் ஆணையம். இதனால் கட்சியினர் கடும் அப்செட்டாகிவிட்டனர். தேர்தலுக்கான நாள்கள்கூட மிக குறைவாக இருப்பதால், சின்னம் கிடைத்தால்தான் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரசாரத்தைத் தொடங்கக்கூடிய சூழலும் நிலவுகிறது. எனவே ஏதாவது ஒரு சின்னத்தைப் பெற்று களத்துக்குச் செல்வோம் என ஆயத்தமாகி வருகிறது நா.த.க” என்றனர். கட்சியின் உள்விவகாரமறிந்த சிலரோ, ``இந்த தேர்தலில் நா.த.க எதிர்பார்க்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் அவ்வளவு எளிதாக தந்துவிடாது. ஆட்டோ சின்னம் கிடைக்கும் என பெரிதும் நம்பினோம். அதனை மனதில் வைத்தே மஞ்சள் வண்ணத்தில் `நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன?' என போஸ்டரை ஊர் முழுக்க ஒட்டினோம். ஆனால் அதுவும் வேறு கட்சிக்குப் போய்விட்டது. தென்னந்தோப்பு, பேனா முனை சின்னங்களும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுவிட்டன. விவசாயம் சம்பந்தப்பட்ட எந்தச் சின்னத்தையும் பட்டியலிலேயே வைக்கவில்லை தேர்தல் ஆணையம். இதுவரை யாரும் தேர்வு செய்யாத சின்னம் என்னவென தேடினால் படகு, கப்பல், மைக், தீப்பெட்டி, பழக்கூடை, வைரக்கல், தடி உள்ளிட்ட சின்னங்கள் இருக்கின்றன. மற்றபடி தலைகவசம், ஜன்னல், செருப்பு, கால்பந்து, ஆப்பிள், சிசிடிவி கேமரா எனத் துளியும் ஏற்கத்தக்க சின்னங்களே இல்லை. அதேசமயம் என்ன சின்னத்தை தேர்வு செய்யலாம்... அதன் நடைமுறைகள் என்னவென்ற ஆலோசனைகள் கட்சிக்குள் போய்க் கொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னத்துக்கான வழக்கும் வரவுள்ளதால், நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்னவென ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றனர். சின்னம் தொடர்பான வழக்குகளில் அனுபவம்பெற்ற வழக்கறிஞர் சக்திவேலிடம் இது தொடர்பாகப் பேசினோம். ``உச்ச நீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான மனுமீதான விசாரணை எப்படி நடக்கும், அதன் தீர்ப்பு எப்படி இருக்குமென இப்போதே சொல்ல முடியாது. அதேசமயம் இந்த குறுகிய காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்குமா என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. வழக்கு ஒருபக்கம் நடந்தாலும், மறுபக்கம் பொதுச் சின்னம் கேட்டு கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம். 15 சின்னங்கள் அடங்கிய பட்டியலை அவர்கள் ஆணையத்திடம் வழங்க வேண்டும் அல்லது புதியவொரு சின்னத்தை டிசைன் செய்து அதனை ஒதுக்க வேண்டுமென்றுகூட கோரிக்கை வைக்கலாம். ஆனால் தேர்தல் நெருங்கிவருவதால் என்ன நடக்குமென பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” என்றார். `ஆட்டோ... படகு... மைக்...' - நாதக-வின் புதுச் சின்னம் சாய்ஸ் என்ன? | What is the new symbol of Naam Tamilar party? - Vikatan

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
Car thefts have escalated to “national crisis” levels, according to the Insurance Bureau of Canada, an industry group, which said insurers paid out a record 1.2 billion Canadian dollars, or about $890 million, in theft claims in 2022. For victims, it's a dizzying, and sometimes traumatizing, experience.Feb 25, 2024 https://www.nytimes.com/2024/02/24/world/canada/toronto-car-theft-epidemic.html#:~:text=Car thefts have escalated to,in theft claims in 2022.&text=For victims%2C it's a dizzying%2C and sometimes traumatizing%2C experience. ஆபிரிக்காவில் கனேடிய /வட அமெரிக்க வாகனங்கள். 😉

இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

3 months 2 weeks ago
சீமான் மட்டுமல்ல, ஈழத்தமிழர்களின் விடயங்களில் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும், வைகோ, திருமாளவன், திருமுருகன் காந்தி, களஞ்சியம், ராமதாஸ் ஆகியோர் கூட, இதற்கு நேரிடையாக பதில் சொல்ல மாட்டினம். அவ்வளவு ஏன், போலிகாவின் அண்ணண் காசியானந்தன் எனும் இளைஞன் கூட இதற்கு நேரிடையாக பதில் சொல்ல மாட்டார்.

பேரரசியல் அபிலாஷைகளால் மத மோதல்கள் தொடர்ந்து அரங்கேறும் - சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் எச்சரிக்கை

3 months 2 weeks ago
நாங்கள் 58 ஆம் ஆண்டு சொன்னதை நீங்கள் இப்ப சொல்லுறீயள் ...பார்ப்போம்...

சிறந்த நடுவர்

3 months 2 weeks ago
அன்று ஊரில் நடக்கும் கால்பந்தாட்ட போட்டிகள் பல இறுதிக் கட்டத்தில் கைகலப்பில் முடியும். ஓரிரண்டு நடுவர்கள் தான் ஊரில் இருந்தனர். ஒவ்வொரு தடவையும் கெஞ்சிக் கூத்தாடி அவர்களை போட்டிகளுக்கு கூட்டிக் கொண்டு வருவது. வந்த பின் அவர்களுக்கு என்ன நடக்கும் என்றால்.......... சிறந்த நடுவர் --------------------- கறுப்பு சட்டை கறுப்பு காற்சட்டை கறுப்பு காலணி கறுப்பு மணிக்கூடு அணிந்து நடுவில் நின்றார் நடுவர் வரப்போவதை அறியாத மணவறை மாப்பிள்ளை போல அந்தப்பக்கம் அவர்கள் இந்தப்பக்கம் இவர்கள் அந்த அணி சண்டியர்கள் இந்த அணி சவலைகள் சவலைகள் சந்தியில் முதல் நாள் ஏடாகூடமாக ஏதோ சொல்ல சண்டியர் அதைக் கேட்டு நாளை உடைத்து அனுப்புகிறோம் அவர்கள் உயிர் மட்டும் விடுவோம் இது சத்தியம் என்றார்கள் இன்று முடிக்கப் போகின்றார்கள் சபதத்தை சத்தியமா நடுவருக்கு எந்தச் சங்கதியும் தெரியாது விசிலடித்ததும் விரைந்தது பந்து வந்த பந்தை விட்டிட்டு பந்தோடு வந்தவனின் காலில் ஒரே போடு விழுந்தவன் வலியோடு நடுவே பார்த்தான் நடுவர் வெளியே பார்த்தார் முதல் பந்திலேயே முழுவதும் தெரிந்துவிட்டது நடுவருக்கு முந்தியும் பல தடவைகள் இந்த நடுவர் பின்பக்கம் இருக்கும் கோவிலடியால் ஓடியிருக்கிறார் கறுப்புச் சட்டையுடன் படார் படார் படார் விழுந்து எழும்பி ஓடி விழுந்தனர் சந்தியில் வாய்விட்டவர்கள் ஓடினால் அடி ஒதுங்கினாலும் அடி விசிலை விழுங்கி விட்டார் மெத்தப் படித்த நடுவர் சண்டியர்கள் ஆளடிக்க சவலைகள் பந்தடிக்க பத்து நிமிடம் இன்னும் இருக்க சவலைகள் ஒன்று சண்டியர் பூஜ்யம் சண்டியர்கள் கூடிப்பிரிந்தனர் கிளைமாக்ஸ் ரெடி இப்ப பார்த்து இரண்டு பேர்கள் முட்டுப்பட இதுவரை அடிக்காத விசிலை மறந்து அடித்தார் சிறந்த நடுவர் பொறி பறக்க நாலு சண்டியர்கள் பாய்ந்தனர் நடுவரைச் சுற்றி நடுவர் நாக்குக் குளறி திக்கித் திணற படார் என்று ஒரே அடி இந்த முறை நடுவருக்கு தலையில் அடியோடு கோவிலுக்கு ஓடி கடற்கரைக்கு ஓடி கரையால் ஓடி அன்றும் தப்பினார் சிறந்த நடுவர் உயிரோடு.

ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி

3 months 2 weeks ago
அங்க ஒரு கோதரியும் இல்லை...ஆனால் விரும்பினவன் வெற்றிலை போடலாம் .... 75 வருடமா சிங்கள சாணக்கியர்கள் அரசியல் செய்த லட்சணம்... சின்ன வயசில நாங்கள் வடிவான காய் கோவிலில் நின்றாள் சாமி கும்பிட போறம் என சொல்லி சென்று சாமி கும்பிடாமல் சுழற்றி கொண்டு திரிவம் ....அது மாதிரி உந்த நாடுகள் ஆராச்சி செய்யிறம் எண்டு போட்டு வேற லெவலில் புகுந்து விளையாடினம்..

ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி

3 months 2 weeks ago
சிறிலங்காவின் இறையாண்மையில் சீனா தலையிடுகிறது ......உண்ணாவவிரத போராட்டத்தில் சிறிலங்கா தேசியவாதிகள் இறங்க வேண்டும் ...
Checked
Fri, 07/05/2024 - 14:33
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed