ஊர்ப்புதினம்

நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி

3 months 2 weeks ago
02 FEB, 2024 | 07:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைகள் அம்சங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை மீளாய்வு செய்து சட்டத்தை திருத்தம் செய்யுமாறு  மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளது.

நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கு தடையேற்படும்.இந்த சட்டத்தின் ஊடாக சிவில் சமூகம்,கைத்தொழிற்றுறை உள்ளிட்ட பல துறைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை மீள்பரிசீலனை செய்து சட்டத்தை திருத்தம் செய்ய இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/175416

துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக இணைத்த கண்டி மருத்துவர்கள்

3 months 2 weeks ago

Freelancer   / 2024 பெப்ரவரி 02 , பி.ப. 05:35 - 0      - 37

email sharing button
facebook sharing button
reddit sharing button
linkedin sharing button

கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் அமில சசங்க ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் பெண்ணொருவரின் துண்டாக்கப்பட்ட வலது கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.

தென்னை அறுக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது, திடீரென இயந்திரம் வேலை செய்ய ஆரம்பித்ததால், வலது கையின் முழங்கைக்கு மேல் உள்ள பகுதி, இயந்திரத்தில் சிக்கி, தோளில் இருந்து, நான்கு அங்குலம் தள்ளி வெட்டுப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆறு மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் கை வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது..

டாக்டர் அமில சசங்க ரத்னாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் டாக்டர் உதய கிரிடேன, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சமிலா ஜயரத்ன, டாக்டர் சதீர பிரேமரத்ன, எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், சிரேஷ்ட பதிவாளர் உதர ரத்நாயக்க, மயக்க மருந்து நிபுணர் டாக்டர் உடுவெல, டாக்டர் கசுன் மற்றும் சேனக ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஷ்யாமா நாணயக்கார, சிதாரா சுரவீர, சந்திமா சேனவிரத்ன, திலினி அபேவர்தன, எரண்டி மதுஷானி மற்றும் சசானி கோஸ்டா உள்ளிட்ட தாதியர் குழுவும் இந்த அறுவை சிகிச்சைக்கு உதவினர்.. R

image_315e0be0f9.jpgimage_9aa027503a.jpgimage_1e93ef81fd.jpgimage_9a83ade7ec.jpg

17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புகள் - ஆய்வில் தகவல்

3 months 2 weeks ago

Published By: NANTHINI

02 FEB, 2024 | 04:21 PM
image
 

 

கடந்த 2022 ஜனவரி மாதம் முதல் 2023 மே  மாதம் வரையிலான 17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு சம்பவங்கள் தொடர்பான பின்னணியை கண்டறியும் நோக்கில் துறை சார்ந்தும் நிறுவன மட்டத்திலும் மிகக் கவனமாக ஆராயப்பட்டே இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளமை அறிக்கையூடாக வெளிப்படுகிறது. 

அத்தோடு, தாய் - சேய் இறப்புக்கள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள், விசாரணைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இரகசிய விசாரணை முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெறும் பிரசவ கால உயிரிழப்பு வீதத்தை குறைப்பதற்காக நாடெங்கும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பிரசவ கால மற்றும் பிரசவத்துக்குப் பின்னரான மரணங்கள் தொடர்பில் கண்காணிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புகள் - ஆய்வில் தகவல் | Virakesari.lk

கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய

3 months 2 weeks ago
02 FEB, 2024 | 07:53 PM
image

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். இதையடுத்து ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

முன்னதாக, தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (1)  குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை.

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் (1) உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று காலை ஆஜராகினார்.

இவ்வாறு இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் அளித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175418

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் தாய்லாந்து பிரதமர்

3 months 2 weeks ago
image_5f52c82c2a.jpg

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெறவுள்ள 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக இலங்கைக்கான தாய்லாந்து பிரதமரின் இரண்டு நாள் விஜயம் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு மதிப்பளித்து தாய்லாந்து பிரதமர் சுமார் ஒரு மணிநேரம் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.

https://thinakkural.lk/article/290326

பணிப்புறக்கணிப்பு தொடர்பில் சுகாதார தொழிற்சங்கங்களின் தீர்மானம் !

3 months 2 weeks ago
Ravi-Kumudesh.jpg

72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று மதியம் தீர்மானிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இன்று கூடவுள்ள சங்கத்தின் நிறைவேற்றுகுழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எட்டப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும், 35,000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார தொழிற்சங்கத்தினருக்கும் வழங்க வேண்டும் என கோரி, நேற்று முதல் 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://thinakkural.lk/article/290253

பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடை குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி

3 months 2 weeks ago
bread.jpg?resize=750,375&ssl=1 பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடை குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி.

பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது

அத்தோடு அரை இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமிற்க்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படும் பாணின் எடை தெளிவாக காணக்கூடிய வகையில் இருக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1368149

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

3 months 2 weeks ago
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

Published By: DIGITAL DESK 3   02 FEB, 2024 | 11:38 AM

image

எரிவாயு விலையில் இம்முறை மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு    பெப்ரவரி மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், தற்போதைய விலையையே பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/175362

Price-List-06.01.2024.jpg

லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

3 months 2 weeks ago
Lohan-Ratwatte-750x375-1.jpg?resize=750, லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரிடம் விசாரணை நடத்திய குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறியமைக்கு எதிராக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு சட்ட நடவடிக்கையைத் தொடங்க உள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த, கடந்த 2021 ஆம் ஆண்டு வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் பலவந்தமாக நுழைந்து பல கைதிகளை மிரட்டியிருந்தார்.

இந்நிலையில் இச் சம்பவங்களை விசாரிக்கவும் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறியவும் அரசாங்கம் குழுவொன்றை நியமித்த நிலையில் அக்குழு லொஹான் ரத்வத்த குற்றங்களைச் செய்துள்ளார் என தெரிவித்திருந்தது.

மேலும் அவர் மீது பி ரிப்போர்ட் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸிற்கு பரிந்துரை செய்தும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே இவ்விடயம் தொடர்பில் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறிய பொலிஸாருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1368061

இளையராஜா இசை நிகழ்ச்சி; புதிய திகதிகள் அறிவிப்பு!

3 months 2 weeks ago
இளையராஜா இசை நிகழ்ச்சி; புதிய திகதிகள் அறிவிப்பு!

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் “என்றும் ராஜா ராஜாதான்” என்ற இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த இசை நிகழ்வு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே நுழைவு சீட்டுக்களை பெற்றுள்ள மற்றும் பதிவு செய்துள்ளவர்கள், அந்த நுழைவுசீட்டுக்களையே பயன்படுத்தி நிகழ்ச்சியை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்வு, கடந்த மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது.

எனினும், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி, புற்றுநோய் காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

இதனையடுத்து இசை நிகழ்வு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது. (N)
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/இளையராஜா-இசை-நிகழ்ச்சி-புதிய-திகதிகள்-அறிவிப்பு/175-332532

ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 115ஆவது இடம்

3 months 2 weeks ago
ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 115ஆவது இடம்
1343660752.jpeg

புதியவன்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊழல் மிக்க  நாடுகளின் பட்டியலில் இலங்கை 115ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தரவுகளின் அடிப்படையில் 100க்கு 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. பூஜ்ய புள்ளி பெறும் நாடுகள் ஊழல்கள் மிக்க நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 180 நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த பட்டியலுக்கு அமைய இலங்கை 2023 ஆம் ஆண்டு 115ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னர்   இலங்கை 117 ஆவது இடத்தில் இருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையுடன் இந்தோனேஷியா , மலாவி, துருக்கி, ஈக்வடோர் மற்றும்  பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் 115ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

ஊழலற்ற நாடாக டென்மார்க் முதல் இடத்தில் உள்ளதோடு தொடர்ந்து நியூசிலாந்து, நோர்வே, பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன.

மேலும் தெற்கு சூடான், வெனிசுலா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இறுதி இடங்களைப் பிடித்துள்ளன.

நீதித்துறை பலவீனப்படுத்தப்படல், அரச அதிகாரிகளிடம் பொறுப்புக்கூறல் குறைதல் என்பன ஊழல் அதிகரிக்க காரணமாகவுள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
 

https://newuthayan.com/article/ஊழல்_நிறைந்த_நாடுகளில்_இலங்கைக்கு_115_இடம்:

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல்

3 months 3 weeks ago
தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல்
Sri Lanka PoliceSri Lankan TamilsCanada
 1 மணி நேரம் முன்
 
Kamal in உலகம்
Share
  •  
  •  
  •  
 
விளம்பரம்
 

கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார்.

கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இலங்கை பொலிஸாருக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.

எனினும், இலங்கை பொலிஸாரும், படையினரும் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை இழைத்துள்ளதாக ராதிகா குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல் | Urge Canada S Police To Apologize To Tamil People

இன அழிப்பு

அத்துடன், பீல் பிராந்தியத்தில் 22,780 தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் 32,960 பேர் தமிழ் அல்லது இலங்கை பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கம் இன அழிப்பில் ஈடுபட்டதாக உலக நாடுகளும் பொலிஸ் பிரிவுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல் | Urge Canada S Police To Apologize To Tamil People

 

காணி அபகரிப்பு

இவ்வாறான பின்னணியில் பீல் பிராந்திய பொலிஸார் இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தமிழர்களது காணிகள் இலங்கையில் அபகரிக்கப்படுவதாகவும் உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிகளோ அல்லது வேறும் உதவிகளோ வழங்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளதோடு தமிழ் மக்களிடம் பீல் பிராந்திய பொலிஸார் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் ராதிகா வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைத்தவர் கைது!

3 months 3 weeks ago
01 FEB, 2024 | 09:05 PM
image
 

கடந்தகால போராட்டத்தின்போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொட்டதெனிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவர் என தல்துவ தெரிவித்தார்.ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைத்தவர் கைது! | Virakesari.lk

நாட்டில் இடத்திற்கொரு சட்டம் என்றால் தனிநாடு தரவேண்டும் - கோ. கருணாகரன்

3 months 3 weeks ago
தெற்கில் ஒரு சட்டம்; வடக்கு, கிழக்கில் ஒரு சட்டம் என்றால் பிரித்து தனிநாடு தரவேண்டும் - கோ. கருணாகரன் 
01 FEB, 2024 | 05:07 PM
image

சட்டம் இல்லாத நாட்டில் ஒரு சட்டத்துக்கான அமைச்சர் தேவையில்லை. தெற்கில் ஒரு சட்டம்; வடக்கு, கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவீர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கை பிரித்து தனிநாடாக தர வேண்டும்.  தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக உயிரிழந்த அனைத்து தமிழ் மக்களுக்காக எவ்விதம் அச்சுறுத்தப்பட்டாலும், எத்தனை பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டாலும், தொடர்ச்சியாக நினைவேந்தல்களை செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தலை கடந்த 2022ஆம் ஆண்டில் அனுஷ்டித்த கோ. கருணாகரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற தடை உத்தரவை மீறி நினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.முகமட் ஹம்சா முன்னிலையில் நேற்று புதன்கிழமை (31) விசாரணக்கு எடுக்கப்பட்டது. 

அவ்வேளை, கோ. கருணாகரன், த.சுரேஸ் ஆகிய இருவரும் நீதிமன்றில் ஆஜராயினர். 

அடுத்து, விசாரணையின் பின்னர், இந்த வழக்கு எதிர்வரும் மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டார். 

அதன் பின்னர், கருணாகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். 

அவர் அங்கு மேலும் கூறுகையில், 

கடந்த 1987ஆம், 1991ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்ட 152 பேருக்காக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் ஜனவரி 28ஆம் திகதி வருடா வருடம் நினைவுகூருவது வழக்கம். 

2022 ஜனவரி 28 வழமை போல நானும் எனது கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் சென்று நினைவேந்தலுக்கு விளக்கேற்றினோம். எந்தவிதமான தடை உத்தரவும் கிடைத்திருக்கவில்லை. 

அதன் பின்னர், எனக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸுக்கும் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவு வழங்கினர். 

2021, 2022, 2023, 2024 விளக்கேற்றினோம். எந்த விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால், 2022ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலத்தில், அவரின் உத்தரவின் பெயரில் தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டிலே ஒரு சட்டம் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த நாட்டை ஆள வருகின்ற ஆட்சியாளர்கள், அரச அதிபர்கள் தாங்கள் நினைத்ததையே சட்டமாக கொண்டு நடத்துவதுதான் ஒரு முறையாக இருக்கிறது.

இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா? அல்லது ஒரே நாடு என்ற சட்ட முறை இருக்கின்றதா? என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும். 

வடக்கு, கிழக்கில் இறந்தவர்களுக்கு நாங்கள் நினைவுகூர, விளக்கேற்ற முடியாது என கூறினால், தெற்கில் இந்த நாட்டில் பெரும் கிளர்ச்சி ஏற்படுத்திய ஜே.வி.பி தங்களது தலைவர்கள் மற்றும் மரணித்தவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் சிலை வைத்து நினைவுகூரலாம் என்றால் ஏன் வடக்கு, கிழக்கில் இப்படியான தடைகள் இருக்கிறது?

இந்த தடைகளை மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்கள், தான் விரும்பியபடி செய்பவர்களாக இருந்தால் இந்த நாட்டில் ஜனநாயக சட்டமும் இல்லை.

ஒரே நாட்டில் ஒரே சட்டத்தை பேணி பாதுகாக்க முடியாவிட்டால், ஒரே நாடு தேவையில்லை. அந்த நிலைமைக்கு நீங்கள் எங்களை தள்ளிவிடுகின்றீர்கள். தெற்கிலே நடைபெறுவது வட, கிழக்கில் நடைபெற வேண்டும். ஒரே நாடு ஒரே சட்டமாக இருந்தால் இப்படியான தொந்தரவுகளை கொடுக்கக்கூடாது.

தமிழ் தேசியத்துடன் இணைந்திருக்கும் தமிழ் தேசிய தலைவர்களை எங்கள் இறந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தக்கூடாது என அச்சுறுத்துவதன் மூலம் நாங்கள் இதை நிறுத்தப் போவதில்லை. எங்களுக்காக உயிர் நீத்தவர்களை தொடர்ச்சியாக நாங்கள் நினைவுகூருவோம்.  அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக மரணித்தவர்கள் அதில் பொதுமக்களும் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

எனவே எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும், எத்தனை பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தாலும், தொடர்ச்சியாக நினைவேந்தல்களில் ஈடுபட்டுக்கொண்டே இருப்போம். அதை செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது என்றார்.

https://www.virakesari.lk/article/175330

சிறீதரனுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!

3 months 3 weeks ago
sri-fb.jpg?resize=574,375&ssl=1 சிறீதரனுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!

தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு ஒரு பயனுள்ளதாக அமைந்தது என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்போது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்திற்குள் காணப்படும் முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1368048

இளைஞனைத் தாக்கிக் காலை முறித்த பொலிஸார்: யாழில் சம்பவம்

3 months 3 weeks ago
legs.jpg?resize=631,341&ssl=1 இளைஞனைத் தாக்கிக் காலை முறித்த பொலிஸார்: யாழில் சம்பவம்.

இளைஞரைத் தாக்கி அவரது காலை முறித்துள்ளதாக, அச்சுவேலி பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் வழங்கியுள்ள முறைப்பாட்டில்” நான் சைக்கிளில் புத்தூருக்கு  சென்று கொண்டிருந்தபோது சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் வந்த அச்சுவேலி பொலிஸார் என்னை நிற்குமாறு கூறினர்.

நான், ஏன் எனக்  கேட்ட போது எனது முகத்தில் தாக்கிவிட்டு  ஏன் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வரவில்லை எனக் கேட்டார்கள். அப்போது நான் காய்ச்சல் காரணமாக வரவில்லை எனத் தெரிவிக்க மீண்டும் என்னை தாக்கினார்கள். நான் கீழே விழுந்த நிலையில் மீண்டும் என்னைக் கடுமையாகத் தாக்கிவிட்டு என்னை  வீசி விட்டுச் சென்றுவிட்டார்கள்.

இதனையடுத்து வீதியால் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு வந்தேன். தற்போது எனது ஒரு கால் முறிந்துள்ளது. என்னை தாக்கிய பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2024/1367931

இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்குக் கறுப்புநாள்! - பேரணிக்கு அழைக்கின்றது யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

3 months 3 weeks ago
இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்குக் கறுப்புநாள்!
1137048455.jpg

பேரணிக்கு அழைக்கின்றது யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

(ஆதவன்)

இலங்கையின் சுதந்திரதின நாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்துவதுடன், அன்று பேரணி ஒன்று முன்னெடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் இருந்து டிப்போச் சந்தி வரையில் நடத்தப்படவுள்ள பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னர் இருந்தே தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புகள் ஆரம்பமாகியிருந்தன. இந்த இனவழிப்புச் செயன்முறை 2009ஆம் ஆண்டு ஈழப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தைச் சூறையாடுவதில் தீவிரநிலை கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.
வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என் பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு, தமிழர் தாயகத்தின் மீதான திட்டமிட்ட சிங்கள - பௌத்த குடியேற்றங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாடு பாதுகாக்கப்படவேண்டும். ஈழத்தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கும் வழிநடத்துவதற்கும் சுய நிர்ணய உரிமை உடையவர்களாவர் என்பதை ஏற்று ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டை அடியொற்றியே முன்னெடுக்கப்பட வேண்டும். சிறிலங்கா ஒற்றையாட்சி அரசமைப்புக்குட்பட்ட 13ஆம் திருத்தத்தை முற்றாக நிராகரிக்கின்றோம்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், இராணுவப் பிரசன்னம், சிங்கள பௌத்தமயமாக்கல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றுக்கான தீர்வுகள் தாமதமேதுமின்றி வழங்கப்பட வேண்டும் - என்றுள்ளது.
 

https://newuthayan.com/article/இலங்கையின்_சுதந்திரதினம்_தமிழர்களுக்குக்_கறுப்புநாள்!

தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றும் அரசு : 4 ஆம் திகதி அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு - அருட்தந்தை மா.சத்திவேல்

3 months 3 weeks ago
01 FEB, 2024 | 10:58 AM
image

தொடர்ந்து தமிழர்களை அரசு ஏமாற்றுவதால் எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று  (01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் கடந்த 76 வருட காலமாக தமிழர்களின் அரசியல் உரிமைக்கான நீதியான கோரிக்கைகளை ஏற்காது தீர்வு என தொடர்ந்து ஏமாற்றுகின்றனர்.

தமிழர்களின் தாயகத்தை பல்வேறு வகைகளில் ஆக்கிரமித்து அவர்களை அவர்கள் சொந்த நிலத்திலேயே அன்னியர்கள் ஆக்கும் முயற்சியை தீவிரபடுத்தியும் உள்ளனர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அரசியல் செயற்பாட்டாளர்களை எப்போதும் கைது செய்யும் நிலை தொடர்கின்றது. படையினரின் கட்டுப்பாட்டுக்குள் நிலமும், மக்களும் வைக்கப்பட்டுள்ளனர்.

யுத்த குற்றங்கள் மூடி மறைக்கப்படுகிறன. அதற்கான நீதியை சர்வதேசமும் காலம் தாழ்த்தி வருவது என்பது நீதியை கொலைக்கு உட்படுத்தும் செயலாகும்.

இவை எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் பெப்ரவரி 4 ம் திகதி வடகிழக்கு எங்கும் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி நடாத்தப்படவிருக்கும் அறவழிப் போராட்டத்திற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தனது பூரண ஆதரவை தெரிவிப்பதோடு சிவில் சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றது.

சுதந்திரம் கிடைத்ததாக பெருமிதம் கொண்ட ஆண்டின் முதலாவது நாடாளுமன்றிலேயே மலையக மக்களின் வாக்குரிமையை பறித்து அடுத்த ஆண்டில் குடியுரிமை சட்டம் கொண்டு வந்து அவர்களை அரசியல் அனாதைகளாக்கி மகிழ்ந்தனர்.

அதன் நீட்சியாக 1964 சினிமா- சாஸ்திரி ஒப்பந்த மூலம் அவர்களை ஆடு, மாடுகளாக சிதைத்து இன அழிப்பை மேற்கண்டவர்கள் கடந்த இருநூறு ஆண்டு காலமாக தொடர்ந்தும் அவர்களை கூலிகளாக பார்ப்பதோடு அவர்கள் இரத்தம் சிந்தி உருவாக்கிய மலையகம் எனும் தேசத்திற்கு அவர்களை தூரமாக்கி நில உரிமை அற்றவர்களாக வைத்துள்ளதோடு அவர்களுக்கு எதிராக சலனமற்ற இன அழிப்பையும் முன்னெடுத்து வருகின்றனர்.

வடகிழக்கு தமிழர்களின் தாயக கோட்பாட்டை சிதைக்க பேரினவாத குடியேற்றத்தை 1940 களிலிருந்து விரிவுபடுத்தியவர்கள் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்தும் அரச பயங்கரவாதத்தின் ஆயுதமான படையினரின் துணையோடும், மதவாத காவி உடை தரித்தோரின் துணையோடு பலவந்தமாக பௌத்த மயமாக்கலையும் அரச தரப்பினர் மௌனமாக அங்கீகரித்து அதனை வேகப்படுத்திடவும் அனுமதித்துள்ளனர்.

வடக்கில் சமூக புதைகுழிகள் பல கண்டுபிடிக்கப்பட்ட போதும் அவை எழுப்பும் குரலுக்கு ஆட்சியாளர் செவிமடுக்க மறுக்கின்றனர். அவற்றுக்கான நீதியும் மௌனிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றே கணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் நிலையும் இன்று உள்ளது.

தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்டு அரசியல் ரீதியில் அடக்குமுறை விரிவுபடுத்தப்பட்டபோது அதற்கு ஆதரவை தெரிவித்த தெற்கின் சமூகம் தற்போது நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டத்தை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர உள்ள நிலையில் சுதந்திரம் பறிக்கப்படுவதாக இருளுக்குள் தள்ளப்படுவதாக குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.

சுதந்திரம் என்பது ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் தமக்கு மட்டும் சொந்தமாக்கி கொண்டுள்ளனர் என்பதை தெற்கில் சமூகம் தற்போதைய அரசியல் பொருளாதாரம் சமூக சூழ்நிலையில் உணரத் தொடங்கியுள்ளது அவர்களின் எதிர்காலம் இருளுக்கு செல்வதாக சிந்திக்க தொடங்கி உள்ளனர்.

இதனையே கடந்த 76 ஆண்டு காலமாக தமிழர்கள் உரத்து கூறி வந்திருக்கின்றார்கள். அதனை மீண்டும் அழுத்தி கூறுவதற்கு எதிர்வரும் 4 ம் திகதியை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி நடத்தப்படவருக்கும் அறவழி போராட்டம் தெற்கின் சமூகத்திற்கு விழிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்ப்போம். அவர்கள் விழித்துக் கொண்டு தமிழர்களோடு இணைந்தால் மட்டுமே அவர்களுக்கும் முழு நாட்டுக்கும் எதிர்காலம் உண்டு. சுபீட்சம் உண்டு என்றார்.

https://www.virakesari.lk/article/175286

டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை இந்தியா- சீனாவுக்கு வழங்க தீர்மானம் - நிதியமைச்சு

3 months 3 weeks ago
31 JAN, 2024 | 04:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

டெலிகொம் நிறுவனத்தின் 53.23 சதவீத பங்குகளை  போட்டித்தன்மையான இந்தியாவின் ஜியோ பிளாட்போர்ம் நிறுவனம், சீனாவின் கொட்யுன் இன்டர்நெஷனல் இன்வெஷ்ட்மன்ட் ஹோல்டிங் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் பொருளாதார ஸ்தீரப்படுத்தல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

டெலிகொம் நிறுவனத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 50.23 சதவீதமான பங்குகளை விற்பனை செய்யும் இறுதி தீர்மானத்தில் சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அமைச்சு மட்டத்தில் துறைசார் குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவின் ஜியோ பிளாட்போர்ம் நிறுவனம், சீனாவின் கொட்யுன் இன்டர்நெஷனல் இன்வெஷ்ட்மன்ட் ஹோல்டிங் நிறுவனம், ஐக்கிய இராச்சியத்தின் லய்கா கூட்டிணைவுக்கு சொந்தமான பெட்டிகோ கொமர்ஷியோ இன்டர்னெஷனல் நிறுவனம் என்பன முன்னிலையாகியிருந்தன.

இதற்கமைய நிதி அமைச்சின் செயற்திட்ட விசேட குழு மற்றும் அமைச்சரவை நியமித்த விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை பெற்றுக்கொள்வற்கு பூரண தகுதி உள்ள  போட்டித்தன்மையான  நிறுவனங்களாக ஜியோ பிளாட்போர்ம் நிறுவம் மற்றும் சீனாவின் கொட்யூன் ஹோல்டிங் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஜியோ பிளாட்போர்ம் நிறுவனம் இந்தியாவின் கோடிஸ்வர வர்த்தகரும்,முதனிலை தொழிலதிபருமான முகேஸ் அம்பானிக்கு சொந்தமானது. போஃபஸ் வர்த்தக வலைத்தளத்தின் தரப்படுத்தலுக்கு அமைய உலகில் செல்வந்தர்களின் பட்டியலில் முகேஸ் அம்பானி 11 ஆவது இடத்தில் உள்ளார்.

https://www.virakesari.lk/article/175251

Checked
Thu, 05/23/2024 - 04:26
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr