ஊர்ப்புதினம்

கோட்டாவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டாவின் வீட்டில் இருந்தார்! - முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார

3 months ago
17 MAR, 2024 | 01:10 PM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரச எதிர்ப்புப் போராட்டங்களின்போது புலனாய்வுப் பிரிவினர் தமது கடமைகளை சரியாக செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட  மிக நெருக்கமான அதிகாரிகள் பலர் தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டாபய வீட்டில் இருந்தார்.   

இதன்போது அவர்கள் இருவருக்கும் இடையில்  தனிப்பட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

வீட்டினருகே போராட்டம் நடத்த சுமார் 150 பேர் வருவார்கள் என உளவுத்துறையினர் தகவல்  வழங்கியிருந்தனர். ஆனால், அங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,500 பேருக்கு மேல் இருக்கும். பேராட்டக்காரர்களை  கட்டுப்படுத்த கலவரத் தடுப்புப் பிரிவினரை  அழைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு பாதுகாப்புப் படையினர் அரை மணித்தியாலம் தாமதித்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவைக் கொல்ல திட்டமிட்டிருப்பார்கள் என்று அவர் வெளிப்படுத்தினார்.

முஸ்லிம் சமூகத்தினரே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  தலைமை தாங்கியதாகவும் கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் கத்தோலிக்க திருச்சபை, முஸ்லிம் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருப்பதாகவும், சிங்கள பௌத்த சக்திகள் அவர்களில் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178937

தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையில் வடபகுதியை சேர்ந்த அமைச்சர்கள் - வவுனியாவில் அனுரகுமார

3 months ago

Published By: RAJEEBAN    17 MAR, 2024 | 12:00 PM

image

தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதியை  சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருப்பார்கள் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க வவுனியாவில் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதபோக்கற்ற இனவாதமற்ற மிதவாத தலைவர்களுடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடக்கை சேர்ந்தவர்களும் இடம்பெறவேண்டும் தீவிரவாதபோக்கற்ற இனவாதமற்ற மிதவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயார் அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒருபகுதியாகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொழி பற்றும் காணி பிரச்சினைகளிற்கு தேசிய மக்கள் சக்தி தீர்வை காணும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்ய அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொழிப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என உறுதிமொழி வழங்குகின்றோம்,உங்கள் மொழியில் கருமங்களை ஆற்றுவதற்கான உரிமையை உறுதி செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178928

மர்ம லொறியொன்றை சோதனையிட வேண்டாம் என தற்போதைய பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டார் - கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் புதிய குற்றச்சாட்டு

3 months ago
அரசாங்கம் 1500 பக்க ஆவணங்களை மறைத்துவிட்டது - மர்ம லொறியொன்றை சோதனையிட வேண்டாம் என தற்போதைய பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டார் - கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் புதிய குற்றச்சாட்டு

Published By: RAJEEBAN   17 MAR, 2024 | 11:27 AM

image

அரசாங்கம்  திருச்சபைக்கு வழங்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கியமான 1500 பக்கங்கள் காணப்படவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஆறு சிடிக்களில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வழங்கியது நாங்களும் சட்டத்தரணிகளும் அதனை ஆராய்ந்தோம் 70,000 பக்கங்கள் உள்ளன எனினும் அரசாங்கம் 1500 பக்கங்களை எங்களுக்கு வழங்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஜஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் சாரா ஜெஸ்மின் போன்ற முக்கிய சாட்சியங்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அடங்கிய ஆவணங்களையே அரசாங்கம் எங்களிடம் வழங்காமல் தான் வைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட குழுவினருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர் என கூறப்படும் ஜாரா ஜஸ்மின் வழங்கிய வாக்குமூலம் குறித்த அறிக்கைகளை அரசாங்கம் எங்களிற்கு வழங்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்த  ஜனாதிபதி ஆணைக்குழுவின்  அறிக்கையை முழுமையாக வழங்கவேண்டும் என நாங்கள் பல முறை கடிதங்களை எழுதிய பிறகு அரசாங்கம் ஆறுசிடிக்களை வழங்கியது என தெரிவித்துள்ள கர்தினால் முழு அறிக்கையையும் வழங்கிவிட்டதாக ஊடகங்களிற்கு தெரிவித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் அதிகாரிகள் 99 வீத விசாரணைகள் முடிவடைந்துவிட்டன என தெரிவிக்கின்றனர் எனினும் நாங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை ஆராய்ந்தவேளை அது உண்மையில்லை என்பதை உணரமுடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ள கர்தினால் ஜஹ்ரானை அவரின் குழுவை சேர்ந்தவர்களை தெரிந்த 23 முஸ்லீம்களிற்கு எதிராக தற்போது வழக்குதாக்கல் செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

malcom.JPG

இந்த தாக்குதல் குறித்த அனைத்து விடயங்களையும் விசாரணை செய்வதை தவிர்த்துள்ள அரசாங்கம் தற்போது இவர்களை பலிகடாக்களாக்க முயல்கி;ன்றது எனவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்று இந்த வருடத்துடன் ஐந்து வருடங்களாகின்றன நாங்கள் புதிய சுயாதீன விசாரணைகளை கோரிவரும் நிலையில் அதிகாரிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் திட்டங்களை முன்வைக்கின்றனர் என தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் இதேவேளை ஆசாத் மௌலானா போன்றவர்கள் வெளியிட்ட தகவல்கள் மூலம் வெளியான புதிய ஆதாரங்கள் குறித்து எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வேளை இராணுவபுலனாய்வு பிரிவின் இயக்குநருக்கும் ஜஹ்ரான் குழுவினருக்கும் இடையில் தொடர்பினை ஏற்படுத்துவதில் தான் ஈடுபட்டமை ஆசாத்மௌலானா உறுதி செய்துள்ளார் இராணுவ புலனாய்வு பிரிவினர் வழங்கிய நிதியை பிள்ளையான் ஊடாக பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக செயற்பட்டவருக்கும் ஜஹ்ரான் காசிம் குழுவினருக்கும்இடையி;ல்  சந்தி;ப்பு இடம்பெற்றது என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலையி;ல் கௌனிஹமவில் சந்தேகத்திற்கு இடமான பொருட்களுடன் காணப்பட்ட லொறியை சோதனை செய்யாமல் விடுமாறு தற்போதைய பொலிஸ்மா அதிபர் அவ்வேளை உத்தரவு பிறப்பித்துள்ளார்,எனவும் தெரிவித்துள்ள கர்தினால் அந்த லொறி கோட்டபயவுக்கு நெருக்கமான அவன்ட் கார்டே நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் குறிப்;பிட்டுள்ளார்.

அந்த லொறியில் வெடிமருந்துகள் காணப்பட்டிருக்கலாம் என ஆசாத்மௌலானா தெரிவித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/178922

தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய தலைவரானார் அருண் தம்பிமுத்து

3 months ago
17 MAR, 2024 | 10:28 AM
image

தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தெரிவு இன்று (17) வவுனியாவில் இடம்பெற்றது.

இதில் தலைவராக அருண் தம்பிமுத்து தெரிவு செய்யப்பட்டதுடன், கட்சியின் செயலாளராக ஆனந்த சங்கரி தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி திருகோணமலையில் நடத்தப்படவுள்ள கட்சியின் மாநாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

https://www.virakesari.lk/article/178916

என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே

3 months ago
“என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே”  

எஸ்.  தில்லைநாதன்

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக் கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது.

“பரமேஸ்வரி - என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே”  போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது

குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

image_621bbe9816.jpgimage_410f5316c3.jpgerror####Image%20Size%20is%20too%20large

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/எனன-நமமதயக-பக-வடஙகள-சகதரரகள/73-334760

புதிய கூட்டணிக்கு கைச்சாத்து

3 months ago
புதிய கூட்டணிக்கு கைச்சாத்து  
instapaper sharing buttonimage_7b0575c93e.jpg

ஆ.ரமேஸ்.

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சுதந்திர  கட்சி ஆகியவை இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் உடன்படிக்கையை கொழும்பில் கைச்சாத்திட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு கொழும்பு பம்பலப்பிட்டி லூரிஸ் வீதியில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலையங்கத்தில் (15.03.2024) இடம்பெற்றதாக ஐக்கிய சுதந்திர கட்சி பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் தெரிவித்தார்.

இதன்போது இடம்பெற்ற கைச்சாத்து நிகழ்வில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் கங்காதரன் சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.

அதேபோல ஐக்கிய சுதந்திர கட்சி தலைவர் சோம் கோச் மற்றும் கட்சியின் பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் உள்ளிட்ட தேசிய சபை உறுப்பினர்களும்  கலந்து கொண்டு புதிய கூட்டணிக்கான உடன்படிக்கையை  கைச்சாத்திட்டதாக சவேரியார் ஜேசுதாஸ் மேலும் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பிரதேசத்தை தலமையகமாக கொண்டு செயற்படும்  ஐக்கிய சுதந்திர கட்சி கடந்த பாராளுமன்ற  தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து திசை காட்டி சின்னத்தில் தேர்தலில்  களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.tamilmirror.lk/மலையகம்/பதய-கடடணகக-கசசதத/76-334751

கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் !

3 months ago
கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் !
 
 
1640094128364436-0.jpg


பௌத்தமதகுரு ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கடுமையா சாடியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் மிகப்பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

கோட்டபயவிடம் நிர்வாகத் திறமையிருக்கவில்லை தனக்கு யாரால் நன்மை கிடைக்கும் என கருதினாரோ அவர்களையே கோட்டபய தன்னை சுற்றிவைத்திருந்தார் எனவும் பௌத்மதகுரு தெரிவித்துள்ளார்.

கோட்டாபய தவறான பாதையில் செல்கின்றார் என நாங்கள் பல தடவை அவரிடம் தெரிவித்தோம் அதற்காரணமாகவே அவர் வீழ்ச்சியடைந்தார் நாங்கள் இன்று எதிர்கொள்ளும் நிலைமைக்கு அவரின் நிர்வாகத்திறன் இன்மையே காரணம் எனவும் பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார்.

அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு!

3 months ago

அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு!

அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு!



அநுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு இன்று (16) எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இன்று மக்கள் சந்திப்பிற்காக அநுரகுமார திசாநாயக்க கிளிநொச்சி சென்றிருந்த நிலையில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

மக்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்து A9 வீதியில் இவ்வாறு அவர் பதாதைகளை கட்டி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

-கிளிநொச்சி நிருபர் சப்தன்

https://tamil.adaderana.lk/news.php?nid=185232

வடக்கு, கிழக்கிற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

3 months ago
Comarca Serrana 107: número para emergencias hospitalarias – 360 mas noticias

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அகியோரின் தலைமையில் இந்த துரித இலக்கம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை முற்றிலும் தமிழ் மொழியில் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/296023

கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க புதிய செயலி

3 months ago
16 MAR, 2024 | 04:01 PM
image

கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (15) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து,  கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலையீட்டுடன் இந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நிலைபேறான கடல் மற்றும் கரையோர வலயத்தை உறுதி செய்யும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் சமுத்திரம்  மற்றும் கரையோரத்தின் தூய்மையைப் பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க,  அந்த செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு இந்த புதிய செயலி உதவும் எனவும் குறிப்பிட்டார்.

கரையோரத் தூய்மைத் திட்டங்கள் மற்றும் கரையோரத் தூய்மையைப் பேணுதல் தொடர்பாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கல்வி மற்றும்  விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க,  கடலோர பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இது நல்ல பங்களிப்பாக அமையும் என்றார். 

ஆறுகள் மற்றும் கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் கழிவுநீர் மற்றும் கழிவு நீர் நீண்ட வெளியேற்ற குழாய்கள் மூலம் வெளியேற்றப்படுவதாலும் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் பிற கடல் நடவடிக்கைகள் மூலம் கடற்கரை மற்றும் கடல் வளங்கள் கடுமையாக மாசுபடுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியது.  

பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீட்டுடன் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு   வருவதாகக் குறிப்பிட்டதுடன், இந்த தொலைபேசி செயலியை இப்பணியின் சரியான ஒருங்கிணைப்புக்கு பயன்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த  உள்ளிட்ட அரச அதிகாரிகள், கடற்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்புப் பிரிவின் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற  நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/178881

தயாசிறி ஜயசேகர எம்.பியின் தலைமையில் புதிய கூட்டணி – 20 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வு

3 months ago
தயாசிறி ஜயசேகர எம்.பியின் தலைமையில் புதிய கூட்டணி – 20 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வு
March 16, 2024
 

dayasri தயாசிறி ஜயசேகர எம்.பியின் தலைமையில் புதிய கூட்டணி - 20 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வுசுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு – லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நாற்பது சிவில் அமைப்புகள் இந்த புதிய கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அன்றைய தினம் இந்த புதிய கூட்டணியுடன் சில ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, புதிய கூட்டணியின் கொள்கைகளுக்கு பிரதான கட்சியொன்று இணங்கும் பட்சத்தில், குறித்த கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாத நிலையில், தேசியத் தேர்தலில் மனிதநேய மக்கள் கூட்டணி சார்பில் அதன் தலைவர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கட்சிகளுக்குள் ஏற்கனவே உட்கட்சி பூசல் காணப்படும் நிலையில், இந்த புதிய கூட்டணியில் பலர் இணைவதற்கான சாத்தியம் உள்ளதாக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.ilakku.org/தயாசிறி-ஜயசேகர-எம்-பியின/

அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விசேட தேவையுடைய பிள்ளைகள்

3 months ago
அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிள்ளைகள்: தந்தை அளித்த வாக்குமூலம்

தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவியின் இழப்பு தன்னை வெகுவாக பாதித்து இருந்தமையால்தான் இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்றதாக தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த தந்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

மேலும், தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த நிலையில் மனைவியின் இழப்பு தன்னை வெகுவாக பாதித்திருந்ததாகவும் இதனால் எனது பிள்ளைகளை பராமரிப்பதற்கு சிரமமாக இருந்த காரணத்தினால் தான் இவ்வாறு செயற்பட்டதாக கொலைக்குற்றவாளியான தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது வீட்டில் இருந்த இரு பிள்ளைகளும் படுக்கையில் வைத்தபடி பல வகை கத்தி வகைகளை கொண்டு திடீரென கழுத்தை வெட்டிய தந்தை சம்பவத்தை கைத்தொலைபேசி ஊடாக தனது சகோதர சகோதரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிள்ளைகள்: தந்தை அளித்த வாக்குமூலம் | This What Led To Double Murder Father S Confession

பின்னர் சம்பவ வீட்டிற்கு உடனடியாக வந்த சகோதர, சகோதரிகள் அங்கு கண்ட காட்சியை கண்டு அபயக்குரல் எழுப்பியதுடன் கத்தியோடு கொலை செய்து காணப்பட்ட தனது சகோதரனை அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பொதுமக்களின் உதவியுடன் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்துடன் காணப்பட்ட முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) மற்றும் முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோரின் நிலை கண்டு அவ்விடத்தில் வந்திருந்த உறவினர்கள் மற்றும் மக்கள் பெரிய நீலாவணை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை

இதையடுத்து சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலங்கள் காணப்பட்ட வீட்டிற்கு உரிய பாதுகாப்பினை வழங்கியுள்ளனர்.மேலும், தடயவியல் பொலிஸாரும் மோப்பநாய் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிள்ளைகள்: தந்தை அளித்த வாக்குமூலம் | This What Led To Double Murder Father S Confession

பின்னர் கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் அங்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு இறுதியாக பிரேத பரிசோதனைக்காக உடலங்கள் அம்பாறை பொது வைத்தியசாலை அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் இரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உடலங்கள் இன்று(15) நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் வெளிநாட்டில் இருந்து இரு சகோதரர்களின் வருகைக்காக காத்திருப்பதாக உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/this-what-led-to-double-murder-father-s-confession-1710508917?itm_source=parsely-api

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி நல்லூரிலிருந்து வவுனியா நோக்கிய வாகனப் பேரணி ஆரம்பம்

3 months ago
16 MAR, 2024 | 10:05 AM
image

வெடுக்குநாறி மலையில் மஹாசிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்ககோரி, நல்லூரில் இருந்து வவுனியா வரையான வாகனப் பேரணியானது நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து இன்று சனிக்கிழமை (16) காலை 7.45 மணியளவில் ஆரம்பமாகியது. 

இப் பேரணியானது காலை  10 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து  நிலையத்தை அடைந்து, வெடுக்குநாறி மலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி மாபெரும் போராட்டம் இடம்பெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார்.

இப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட ஆசிரிய சங்க தலைவர், உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் கலந்துகொண்டனர்.

VideoCapture_20240316-081317.jpg

VideoCapture_20240316-081309.jpg

VideoCapture_20240316-081108.jpg

VideoCapture_20240316-080944__1_.jpg

https://www.virakesari.lk/article/178838

யாழில் கூரிய ஆயுதங்களுடன் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக் குழு!

3 months ago

Published By: VISHNU    15 MAR, 2024 | 11:04 PM

image

யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25 வயதான முச்சக்கர வண்டி சாரதி, கொக்குவிலை சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ்ப்பாண நகரத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரை சேர்ந்த 26 வயதான இளைஞன், வண்ணார்பண்ணையை சேர்ந்த 19 வயதான இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டிக்குள் இருந்து வாள், இரும்பு கம்பி, இரும்பு குழாய் என்பன மீட்கப்பட்டன.

https://www.virakesari.lk/article/178829

காசநோயாளர்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் அதிகரிப்பு!

3 months 1 week ago
tb.jpg

நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அடையாளம் காணப்பட்ட காசநோயாளர்களில் நாள் ஒன்றுக்கு இரண்டு பேர் மரணிப்பதாக அந்த வேலைத்திட்டம் குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் மாத்திரம் நாட்டில் 9,358 காசநோயாளரகள் பதிவாகினர்.

இதுவே அண்மையில் பதிவான அதிகூடிய எண்ணிக்கையாகும்.

நாட்டில் அதிகளவான காசநோயாளர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு நகர எல்லையிலேயே பதிவாகியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/178823

இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

3 months 1 week ago

Published By: VISHNU   15 MAR, 2024 | 06:48 PM

image

இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

எமது யாழ்ப்பாண மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இந்திய மீனவர்கள் எமது வாழ்வாதாரத்தையும்  தொழிலையும்  தொடர்ச்சியாக அழித்து வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய அரசாங்கத்திடமும் எமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அண்மையில் இந்தியச் சட்டவிரோத  மீன்பிடியாளர்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி இலங்கை கடல் எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்திடம் கோரிக்கை மனு கையளித்தோம். ஆனால், பயன் ஏதும் ஏற்படவில்லை.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பு தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

எமது போராட்டத்துக்கு ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த சங்கங்கள், சமாசங்கள் மற்றும் சம்மேளனங்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/178823

மேர்வின் சில்வாவின் மகன் பிணையில் விடுதலை…!

3 months 1 week ago

மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து, பணம் கோரிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தலங்கம பொலிஸாரால்  கைது செய்யப்பட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வர்த்தகர் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபா கப்பம் கேட்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாகவே தலங்கமை பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை 5 லட்சம் ரூபாய் பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு கடுவலை பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் சாட்சியாளர்களை அச்சுறுத்தக் கூடாது எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/295904

மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

3 months 1 week ago

2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இன்று முதல் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அடுத்த மாதம் 5ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/295936

தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1, 700 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை!

3 months 1 week ago
Photo-3-4-750x375.jpg தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1, 700 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை ஆயிரத்து 700 ரூபாயாக அதிகரித்து எதிர்வரும் 30 நாட்களுக்குள் வழங்கவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட  தீ விபத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கான சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் நேற்று அமைச்சர் ஜீவன் தொண்டமானினால், மக்களுக்கு கையளிக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சக்திவேல், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும் இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1373605

நாட்டில் நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு!

3 months 1 week ago
court-626x375.jpg நாட்டில் நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு!

நாட்டில்  வைத்தியர்களுக்குத்  தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் தற்போது நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரித்துள்ளமை தொடர்பாகத்  தாம்  கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன்  இத்தகைய செயற்பாடானது நீதித்துறை கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும்,  இதன் காரணமாக உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

https://athavannews.com/2024/1373610

Checked
Sun, 06/23/2024 - 02:23
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr