புதிய பதிவுகள்2

'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி

21 hours 19 minutes ago
உலகெங்கிலும் பயங்கரவாதத்துக்கான மருந்து இஸ்ரேலிடம் தான் இருக்கின்றது. சிலவேளை கெதியிலை இவையளுக்கு அந்த மருந்து தேவைப்பட்டாலும் தேவைப்படலாம்.

ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.

23 hours 22 minutes ago
Associated Press (AP) ன் வெள்ளையடிப்பைக் கண்டித்திருக்கும் எலோன் மஸ்க். 🤣 ஜேர்மனி அதிபரை பதவி விலகச் சொல்லும் எலன் மஸ்க்

சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!

23 hours 25 minutes ago
நோர்வேயின் உறுதிப்பாட்டில் தான் புலிகளின் அரசியல் குழு முக்கியஸ்த்தர்கள் சரணடைந்தவர்கள் கடைசியில் என்ன நடந்தது ? அந்த நீண்ட அரசியலின் தாக்கத்தை உருவாக்கியவர்கள் யார் ? இதை புரிந்து கொள்ளாமல் வழமையான தமிழ் தேசிய எதிர்ப்பை காட்டுவதில் நீங்க கில்லாடி பாஸ் .

சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!

23 hours 31 minutes ago
நோர்வே தமிழ் மக்களுக்கு ஒரு துன்பமும் விளைவிக்க வில்லை. யானை தன் தலையில் மண் அள்ளிப் போட்டது தான் நடந்தது. 14 வருட அரசியல்வாதிகளின் காலத்தை விட தமிழ் மக்களுக்கு மிக மிக அதிக துன்பங்களை அதற்கு முன்னரே அனுபவித்துவிட்டார்கள். அதை மறைக்கவே 14 வருட அரசியல்வாதிகள் மீது முழுப்பழியும் போடப்படுகிறது. தமிழ் மக்களின் அரசியலுக்கு தலைமை தாங்கியவர்கள் ஏற்படுத்திய அவல நிலையை போக்க பெருமாள் போன்ற ஜாம்பவான்களாலே முடியாத போது இந்த அரசியல்வாதிகள் எம்மாத்திரம்.

சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!

23 hours 49 minutes ago
நோர்வேயும் சரி சுமத்ரனும் சரி சாணக்கி இந்த மூன்றும் இதுவரை தமிழர்களுக்கு துன்பமே விளைவித்து உள்ளார்கள் அதை உணர்ந்த வடகிழக்கு தமிழர்கள் சுமத்தினுக்கும் தேர்தலில் தோல்வியை கொடுத்து உள்ளார்கள் 14வருடம் ஒன்றும் செய்ய முடியாத கூட்டம் தோல்வியை மறக்க மது அருந்த கூடிய கூட்டம் கலந்துரையாடல் என்று அடித்து விட்டு இருக்கினம்

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

1 day ago
வெற்றிமாறனின் திரைப்படங்களில் பொல்லாதவனை தவிர எல்லாப்பாடங்களையும் திரையரங்கில்தான் பார்த்தேன்.

கற்பனையே செய்யமுடியாத விஷயங்கள்தான் இலங்கையின் வரலாறாக இருக்கிறது

1 day ago
கற்பனையே செய்யமுடியாத விஷயங்கள்தான் இலங்கையின் வரலாறாக இருக்கிறது December 19, 2024 ஷோபாசக்தி 18.12.2024 – ஆனந்த விகடன் இதழில் வெளியாகிய எனது நேர்காணல். நேர்கண்டவர்: நா.கதிர்வேலன் இன்றைக்கும் ஷோபாசக்தி, ஈழ இலக்கியத்தின் முக்கியமான முகம். அவரைத் தவிர்த்துவிட்டு நாம் இலக்கிய வகைமைகளை யோசிக்க முடியாது. புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகள், இன ஒடுக்குமுறைகள் என இதயத்தைப் பிசையும் மொழி இவருடையது. நவீனத் தமிழுக்கும் ஒளிரும் கலை நம்பிக்கை ஷோபா. இப்போது நடிகராக தமிழ் மட்டுமல்லாது, ஹாலிவுட்டிலும் களைகட்டுகிறார். எந்த அணியிலும் சேராத, கூச்சலிடாத அவரது போக்கு அரிதினும் அரிது. சிறந்த கலைஞனுக்கான புதுப்பித்துக்கொள்ளும் மொழியும் லாகவமும் மெல்லிய குரலில் வெளிப்பட… அவரிடம் நடந்தது இந்த உரையாடல். வெகு நாளுக்குப் பிறகு தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள்! தமிழ்நாட்டுக்கு வருகை தருவது எப்போதும் மகிழ்ச்சி தான். தமிழில் நான் நடித்த ‘சொர்க்கவாசல்’ திரைப்படமும் வெளியாகியிருக்கிறது. அதுவும் போக 27 வருஷங்கள் நான் எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பும் இப்போது வெளியாகிறது. அம்மாவை வெகு நாளுக்குப் பிறகு சந்திக்கப் போகும் சந்தோஷமும் கூடி வருகிறது. வேறென்ன? கொஞ்சம் நிறைவான பயணம்தான் இது. சர்வதேச அளவில் முகம் தெரிந்த நடிகராகிவிட்டீர்கள். சிவப்புக் கம்பள வரவேற்பை ஹாலிவுட்டில் பெற்றுவிட்டீர்கள். இதெல்லாம் எதிர்பார்த்ததுதானா? சினிமா பிடிக்குமென்பதால் சின்ன வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. `சுவரில்லாத சித்திரங்கள்’ வந்த போது எனக்கு 12 வயதிருக்கும். இந்தியாவுக்கு வந்து பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணமிருந்தது. நான் எம்.ஜி.ஆர் ரசிகன் என்பது யாவரும் அறிந்ததுதான். கலைஞர் திரை எழுத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தேன். கல்யாண வீடுகளிலும் கோயில் திருவிழாவிலும் ஒலிபெருக்கிகளில் ஒலித்துக்கொண்டே இருந்த ‘மனோகரா’, ‘பராசக்தி’ வசனங்களை மறப்பதற்கில்லை. பத்து வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி விட்டேன். நாட்டில் ஏற்பட்ட சூழலில் புலம் பெயர்ந்துவிட்டேன். அப்புறம் எல்லாவற்றுக்கும் பெரிய இடைவெளி. புதிய நாடு, புதிய கலாசாரம். திடீரென 47-வது வயதில் ‘தீபன்’ படத்தில் ஒரு முதன்மைப் பாத்திரம் கிடைத்தது. அதிலிருந்து தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் போய் திரைப்படங்களில், நாடகங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சினிமாவைவிட நாடகத்தின் டிக்கெட் விலை அதிகம். நாங்கள் 30 நாள்கள் தொடர்ந்து நாடகம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறோம். பாண்டிச்சேரியின் குமரன் வளவன் அங்கே வந்து நல்ல நாடகங்களைப் போடுகிறார். புரிசை சம்பந்தன்கூட இங்கே வந்து கூத்து கட்டுகிறார். அதை பிரான்ஸ் மக்கள் ரசித்துப் பார்க்கிறார்கள். எப்படிப் புலம்பெயர் வாழ்வை ஏற்றுக் கொண்டீர்கள்? 31 வருஷங்களாக பிரான்ஸில் இருக்கிறேன். பிரான்ஸுக்குப் போக வேண்டும் என்பது இலக்கு அல்ல. ஏதாவது வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதொன்றே என் முன் இருந்த ஒரே தீர்வு. இலங்கையில் கடுமையான யுத்தம் நடந்த காலம், அங்கேயிருந்து வெளியாக வேண்டும். இப்போது பிரான்ஸிலும் இனவாதம் கூடிவிட்டது. இவ்வளவு படித்தவர்கள் இருந்தும் அமெரிக்காவில் ட்ரம்ப்தான் மீண்டும் வந்திருக்கிறார். ஐரோப்பா முழுக்க வலதுசாரிகள் வலுக்கொண்டு இருக்கிறார்கள். பிரான்ஸிலும் அதிதீவிர வலதுசாரிகள்தான் இப்போது பெரும் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். இடதுசாரிகள் அதைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பிரான்ஸின் பெரும்பான்மையான மக்கள் வலதுசாரிகளைத் தான் ஆதரிக்கிறார்கள். `வெளிநாட்டவர்களை விரட்டுவோம்’ என்றுதான் தேர்தலில் நிற்கிறார்கள். ட்ரம்பும் அமெரிக்காவில் வெளிநாட்டவரை விரட்டுவோம், மதில் கட்டு, சுவர் எழுப்பு என ஆரம்பித்து விட்டார். இந்தச் சூழலில்தான் நாங்கள் வாழ்கிறோம். நாங்கள் படித்துவிட்டு தொழிலுக்குப் போனவர்கள் கிடையாது. இந்த நாடுகள் விரும்பிக் கூப்பிட்டுப் போனவர்களும் கிடையாது. நாங்களாக போய் மூடிய கதவுகளை முட்டித் திறந்து அகதிகளாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். வேறு வழியில்லை… அடுத்த தலைமுறையும் அவர்களின் இனவாதத்தைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் எங்கள் அளவுக்கு அவர்கள் கஷ்டப்பட வாய்ப்பில்லை. அடுத்த தலைமுறை பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு அவர்களே தங்களை பிரஞ்சுக்காரர்கள் மாதிரியே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அப்படி பிரெஞ்சுக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டுமே! அவர்களுக்கு எல்லோரும் கறுப்பர்கள்தானே! இடதுசாரிகளும் சோஷலிஸ்ட்களும் செல்வாக்காக இருந்த காலம் ஒன்றிருந்தது. சோவியத்தின் உடைவுக்குப் பிறகு இந்தக் கட்சிகள் செல்வாக்கு இழந்துவிட்டன. இங்கே தொடர்ந்து பிரச்னை இல்லாமல் நாள்களைக் கடத்துவது அவ்வளவு சுலபம் கிடையாது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஊருக்குப் போனதை எப்படி உணர்ந்தீர்கள்? யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகள் மக்களால் கைவிடப்பட்டு இருக்கின்றன. நான் பிறந்த அல்லைப்பிட்டியில் 10 சதவிகித மக்களே இருக்கிறார்கள். நாய்கள்தான் அதிகம் திரிகின்றன. ஊரைப் பார்த்ததும் பெரிய வெறுமை வந்து தாக்கியது. அந்த ஊரில் யுத்தத்திற்கு முன்னால் இன்பமான நாள்களைப் பார்த்த கடைசித் தலைமுறை நான்தான். இரவுக் காட்சியை அடுத்த ஊரில் பார்த்துவிட்டு நடந்து வந்த பின்னிரவு நேரங்கள் அதிகம். விடிய விடிய நடந்த திருவிழாவோடு பார்த்த யாழ்ப்பாணம்தான் மனதில் நிறைந்திருக்கிறது. யுத்தத்தின் வெறுமை மக்கள் முகத்திலும் ஆன்மாவிலும் உறைந்திருக்கிறது. எல்லா நம்பிக்கைகளும் விழுமியங்களும் உடைந்து சிதறிய மக்களைப் பார்த்தேன். சர்வ நிச்சயமாக இது 32 வருஷத்திற்கு முன்னால் நான் பார்த்த ஊரில்லை.” புது அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர்கள் பற்றிய உங்கள் நம்பிக்கை என்ன? இலங்கை சுதந்திரமடைந்த பிறகு ஆட்சி செய்தவர்கள் பிரபுத்துவப் பின்புலத்தில் வந்தவர்கள். அவர்களது உறவினர்களாலும் குடும்பத்தாலும் மட்டுமே இலங்கை ஆளப்பட்டு வந்தது. முற்றுமுழுதான ஊழல் ஆட்சி, முழுவதுமாக பௌத்த பிக்குகளின் கட்டளைக்கு அடிபணிந்த ஆட்சி என்றுதான் இரண்டு கட்சிகளும் இருந்தன. இரண்டு கட்சிகளுமே மாறி மாறி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தார்கள். அவர்கள் ஜே.வி.பி எழுச்சியின் போது சிங்கள மக்களையும் கொன்றார்கள். இதுதான் இதுவரையிலான இலங்கை வரலாறு. அநுர அவ்வாறான பின்புலத்தைக் கொண்டவர் அல்ல. எளிய விவசாயிகளும் தொழிலாளர்களும் மீனவத் தோழர்களும் சேர்ந்து எழுப்பிய கட்சி அவருடையது. 50 வருஷத்திற்கு மேலாக இருக்கிற கட்சி. இப்போது ஆட்சிக்கு வந்திருப்பது நல்லது என்றே கருதுகிறேன். இலங்கையில் சிங்களர்கள் தவிர்த்து இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், முஸ்லிம்கள் என சிறுபான்மையினரும் வாழ்கிறார்கள். இந்த இன அடையாளங்களை அழித்து ஒழித்து எல்லா இனங்களையும் ஒரே தேசிய இனத்திற்குள் கரைக்க ஒரு முயற்சி நடக்குமோ என்ற சந்தேகமும் இந்த அரசின் மீது இருக்கிறது. எத்தனையோ பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு சிறுபான்மையினர் நசுக்கப்பட்டதுதான் வரலாறு. இனி சிறுபான்மையினரின் பிரச்னைகள், அரசியல் உரிமைகள், சமத்துவம், வேலைவாய்ப்பு, கல்வி இவற்றுக்கான நல்ல அணுகுமுறையைச் செயல்படுத்த வேண்டியது இவர்களின் கடமையாக இருக்கிறது. இவர்களை நம்பித்தான் தமிழ் மக்களும் எப்போதும் நடக்காத அளவுக்கு யாழ்ப்பாணத்திலேயே ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக மற்றவர்களை நம்பி ஒன்றும் நடக்கவில்லை. பொருளாதாரச் சரிவு தாண்டி ஒரு நல்ல ஆட்சி தர மாட்டார்களா என எல்லோருமே ஏங்குகிறார்கள். இதுவரை இவர்கள் இனவாதம் பேசவில்லை. எதையும் செய்யும் கட்டுக்கடங்காத அதிகாரம் இருக்கிறது. செய்வார்களா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம். எல்லாமே நம்பிக்கைதான்! புலிகள் இல்லாமல்போவார்கள் என்பதைக் கற்பனை செய்தாவது பார்த்தீர்களா? கற்பனை செய்து பார்க்க முடியாத பல விஷயங்கள்தான் இலங்கையின் வரலாறாகவே இருக்கிறது. இந்திரா காந்தி இலங்கைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் எனவும், இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கூப்பிட்டு ஆயுதப் பயிற்சியும் பணமும் கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்க்கவில்லை. இந்திய ராணுவம் இலங்கை வருமென்றும், அதே மாதிரி இந்திய ராணுவம் திரும்பப் போய்விடும் என்றும் நம்பவே இல்லை. பிரேமதாசாவிற்கும் புலிகளுக்கும் ஒப்பந்தம் வரும் என்று நம்பவே இல்லை. விடுதலைப்புலிகள் முற்றும் முழுதாக அழிந்து போவார்கள் என யாரும், யாரும் நம்பவே இல்லை. ராஜபக்‌ஷேக்கள் நாட்டை விட்டு ஓடுவார்கள் என நம்பவே இல்லை. கோத்தபய இருந்த வீட்டைச் சூறையாடுவார்கள் என நம்பவே இல்லை. அநுர இப்படி பெரும்பான்மையில் வருவார் என நம்பவே இல்லை. நம்ப முடியாத பல விஷயங்கள் 40 வருடத்தில் நடந்திருக்கின்றன. விடுதலைப்புலிகள் எனும் அமைப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அரசியல் முகத்தை மாற்றியிருக்க வேண்டும். அடுத்த தலைமுறையாவது நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும். நான் ஈழத்திலிருந்து வெளிவந்து 32 வருஷங்களாகிவிட்டன. எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டியது இன்றைய தலைமுறை இளைஞர்கள்தான். இத்தனை வருட யுத்தத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம், இழப்பு, வன்மம், பிரச்னைகள் இருக்கின்றன. இதிலிருந்து மீள வேண்டும். சினிமா, நாடகம், பயணங்கள் என உருமாறி இருக்கிறீர்கள். எழுத்து குறைந்துவிட்டதா? நான் மேற்கொள்ளும் எல்லாக் கலைகளுக்கும் நடுவில் ஒரு தொடர்பு இருக்கிறது. எனக்குக் கலையே அடிப்படை. சினிமாவில் ஒரு பாத்திரத்தின் அமைப்பைத் தரும்போது ஓர் எழுத்தாளராக என்னால் அதை மெருகேற்ற முடியும். நாடகங்களிலும் அதற்கான நியாயத்தைச் செய்கிறேன். பெரிய வேறுபாடு இல்லை. அடிப்படையில் எழுத்தாளனாக இருப்பதுதான் எனக்கு முக்கியம். இத்தனை வருட வாழ்வில் பெற்ற சாரம்தான் என்ன? யுத்தத்திலும் நேரடியாகப் பங்கேற்றிருக்கிறேன். யுத்தம் எதற்கும் தீர்வல்ல. குரேஷிய பிரதமர், ‘பத்து நாள் யுத்தம் புரிவதைவிட பத்து வருஷம் பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது’ என்றார். அதுதான் சத்தியமான உண்மை. இன்றைக்கு உலகம் முழுக்க யுத்தங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவை ஒருபோதும் மக்களுக்கு நியாயத்தைத் தேடித் தராது என நிச்சயமாக நம்புகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து தொடங்கப்பட்ட ஆயுதப்போராக இருந்தாலும் ஆயுதம் என்பது அழிவைத் தரக்கூடியதே. இதுவே கற்ற பாடம். காந்தியார் சொன்னது போல ‘கொள்கையில் எதிர்த்து நிற்போம்; ஆனால் யாரையும் வெறுக்க வேண்டாம்’ என்பதுதான் இறுதியில் எனக்கும் தோன்றுகிறது. https://www.shobasakthi.com/shobasakthi/2024/12/19/கற்பனையே-செய்யமுடியாத-வி/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR2WXU10w--1b1aIiUMzeg__BcxV7r2aY8u6nQcPJ__N4YtWZS1T15wvZsY_aem_wWON2rYSeJEg68HhNKwykg

சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!

1 day ago
வெளிநாட்டுத் தூதுவர்களுடன் தனிச்சந்திப்புகளை எப்படி நடத்துவதென பயிற்சியளிக்கப்படுகிறது. மல்லுக்கு நிற்பவர்கள் போலிருக்கிறது இருவரையும் பார்க்க.

கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்?

1 day ago
கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காத்மாண்டு விமான நிலைய விதிமுறைகளில், இந்திய விமானங்களில் பயணிப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகின்றன கட்டுரை தகவல் எழுதியவர்,சஞ்சயா தகல் பதவி,பிபிசி நியூஸ் நேபாளி 21 டிசம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,Sanjaya Dhakal/BBC படக்குறிப்பு,காத்மாண்டு விமான நிலைய விதிமுறைகளில், இந்திய விமானங்களில் பயணிப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகின்றன இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்துமஸ் இரவில், காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குச் செல்ல இருந்த ஒரு இந்திய விமானம் கடத்தப்பட்டு, ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தின் பாதிப்பு இன்று வரை காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் காணப்படுகின்றது. இன்றும், நீங்கள் காத்மாண்டுவிலிருந்து இந்திய விமானத்தில் பயணிக்கும்போது, ஒரு கூடுதல் பாதுகாப்பு சோதனை நடைபெறுகிறது. விமான நிலையத்தில் வழக்கமான பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் மற்றும் பாதுகாப்புச் சோதனைகளை முடித்த பிறகு போர்டிங் படிக்கட்டுகளுக்கு அருகில், தரையில் இருந்து சுமார் இரண்டரை அடி உயரத்தில் உள்ள அறையில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தும் ஒரு மேலதிக சோதனைக்கும் பயணிகள் உட்பட வேண்டும். ஆனால் இந்தச் சோதனை இப்போது தேவையில்லை என்கிறார் நேபாள அரசின் செய்தித்தொடர்பாளர், "முந்தைய காலங்களில் இந்திய விமான நிறுவனங்கள் நேபாளின் பாதுகாப்பை நம்பவில்லை என்ற காரணத்தினால், இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்போது இது தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்கனவே செய்துள்ளோம்," என நேபாளின் தகவல் தொடர்பு அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் பிபிசிக்கு தெரிவித்தார். படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அந்த பழைய சம்பவத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, அந்த பயங்கரமான விமானக் கடத்தல் நிகழ்வின் நினைவு நிரந்தரமாக இருக்கும். காத்மண்டுவிலிருந்து இந்திய விமானங்களில் இந்தியா செல்லும் பயணிகளுக்காக, இந்தியா மேற்கொள்ளும் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளால், இரண்டு அண்டை நாடுகளின் உறவுகளில் அந்த கடத்தல் சம்பவத்தின் தாக்கம் இன்னும் மறையாமல் உள்ளதாக நேபாளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது இரு நாடுகள் இடையிலான நம்பிக்கை குறைவு என கருதக்கூடாது. மாறாக இது அந்நாடுகளின் உறவில் ஒரு தனித்துவமான அடையாளமாகக் கருதப்பட வேண்டும் என இந்திய ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். பட மூலாதாரம்,Lokesh Sharma/BBC படக்குறிப்பு,இந்திய விமானங்களில் காத்மாண்டுவிலிருந்து செல்லும் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பிற்காக உள்ள அறைகள் பட மூலாதாரம்,Lokesh Sharma/BBC படக்குறிப்பு,விமானத்தில் ஏறுவதற்கு முன், அறைகள் வழியாகச் செல்வதற்குப் பயணிகள் வரிசையில் நிற்கிறார்கள் பட மூலாதாரம்,Lokesh Sharma/BBC படக்குறிப்பு,இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனை செய்யப்படும் பயணிகள் 8 நாட்கள் நீடித்த கடத்தல் 1999-ஆம் ஆண்டின் டிசம்பர் 24-ஆம் தேதி மதியம், காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் இந்தியாவின் IC 814 விமானம், சுமார் 180 பயணிகளுடன், காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை விட்டு புறப்பட்டபோது கடத்தப்பட்டது. "எங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் கொடுக்கப்பட்டவுடன், திடீரென ஒரு மோதல் ஏற்பட்டது, உடனடியாக அனைவரும் கீழே படுத்துகொள்ளும்படி கூறப்பட்டது. உணவுப் பொட்டலங்களைத் திறக்கக் கூட முடியவில்லை. என்னுடைய மனதில் முதலில் வந்த விஷயம், நகைகளைச் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்துகொண்டு இருப்பார்கள் என்பதுதான். ஏனெனில் புதிதாகத் திருமணம் ஆன பல ஜோடிகள் விமானத்தில் இருப்பதை நான் கவனித்தேன்," என்று விமானத்தில் இருந்த நேபாள பயணி சஞ்சயா திடல், அச்சம்பவத்தை நினைவு கூறுகிறார். அவருக்கும் அப்போது புதிதாகத் திருமணம் ஆகியிருந்தது. அவரது மனைவி ரோஜினா பதாகுடன், திருமணமான ஒரு மாதத்திற்கு பிறகு சஞ்சயா திடல் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர்கள் டெல்லி வழியாக பாகிஸ்தானில் உள்ள சஞ்சயாவின் பணியிடத்துக்குப் புறப்பட்டனர். "பிறகு, கடத்தல்காரர்கள் காஷ்மீர் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தது. அவர்களின் கோரிக்கைகளை இந்திய அரசு எளிதில் நிறைவேற்றாது என்று உணர்ந்ததும், எங்களின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது என்று நினைத்தேன்," என்று அவர் கூறினார். கடத்தல் சம்பவத்தின் ஏழாவது நாளில் தன்னுடைய அமைதியை இழந்ததாக அவர் நினைவுகூருகிறார். "கடத்தல்காரர்கள், திடீரென பயணிகள் மீது துப்பாக்கிகளை குறிவைத்து, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகக் கூறினர்," என அவர் கூறினார். எனினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு சூழல் மாறியது. ஒரு வாரம், கந்தஹாரில் தங்கியிருந்த அவர்கள் டிசம்பர் 31 அன்று டெல்லி திரும்பினர். பட மூலாதாரம்,Sanjaya Dhital படக்குறிப்பு,கடத்தப்பட்ட விமானத்தில் சஞ்சயா திடல் மற்றும் அவரது மனைவி ரோஜினா பதாக் ஆகியோர் இருந்தனர் சஞ்சயா திடல், பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள 'அம்டா' என்ற ஜப்பானிய பன்னாட்டு தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருந்தார், மற்றும் அவ்விடத்திலிருந்து ஆப்கானிஸ்தானின் தொலைவான பகுதிகளுக்கு சுகாதார சேவைகளை வழங்கி வந்தார். கடத்தல்காரர்கள், அவரின் பணிகளை தெரிந்துகொண்ட பிறகு, "Chief" என்று அழைக்கப்பட்ட அவர்களின் தலைவர், தனது உடல்நலன் பற்றி விசாரித்தார் என்கிறார் சஞ்சயா திடல் "அதன் பிறகு, என் மீதான அவர்களது அணுகுமுறை சற்று தளர்ந்தது. என்ன வேண்டுமென்று அவர்கள் கேட்டபோது, நான் தண்ணீர் வேண்டுமென்று கேட்டேன்," என்றார் சஞ்சயா. விமானம் கடத்தப்பட்ட பிறகு, பயணிகள் உணவு மற்றும் தண்ணீரின்றி தவித்தனர், இது அவர்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தியது. "கடத்தப்பட்ட பிறகு, அடுத்த நாள் காலை மட்டுமே, எங்களுக்கு ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீர் மற்றும் சில பிஸ்கெட்டுகள் கொடுக்கப்பட்டன. பின்னர், நாங்கள் கந்தஹாருக்குச் சென்றபோது, சூடு இல்லாத சோறு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன," என சஞ்சய் தெரிவித்தார். கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை19 டிசம்பர் 2024 மாஸ்கோவில் ரஷ்ய அணுஆயுதப் படைகளின் தலைவர் கொல்லப்பட்டது எப்படி?18 டிசம்பர் 2024 ஊடகங்களால் இழிவுபடுத்தப்பட்ட தம்ராகர் பட மூலாதாரம்,Sanjaya Dhakal படக்குறிப்பு,கந்தஹாரிலிருந்து திரும்பிய பின்னர் தனது கணவர் நோய்வாய்ப்பட்டார் என்று மீரா தம்ராகர் கூறுகிறார் பயணிகளுள், காத்மண்டுவை சேர்ந்த சால்வை வியாபாரி கஜேந்திர மன தம்ராகர் என்பரும் இருந்தார். பகுதி நேர நகைச்சுவை நடிகராக இருந்த இவர், தனது நகைச்சுவை உணர்விற்காக பரவலாக அறியப்பட்டார். "இந்த கடத்தல் சம்பவம், அவரது மனநிலையை மாற்றிவிட்டது. அவர் எப்போதும் நகைச்சுவையாக உரையாட விரும்பும் ஒரு மனிதராக இருந்தார். ஆனால் இந்த விமான கடத்தல் சம்பவத்துக்குப் பிறகு, அவர் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 42 வயதில் இதயக்கோளாறு காரணமாக அவர் இறந்தார்," என அவரது மனைவி, மீரா தம்ராகர், பிபிசிக்கு தெரிவித்தார். விமான கடத்தல் சம்பவத்தின் போது, தம்ராகர் பயணிகளை சிரிக்கச் செய்து அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க முயன்றார். "அவர் கடத்தல்காரர்களை போல நடித்து, பாலிவுட் திரைப்படமான ஷோலேவின் வசனங்களை கூறினார். ஆனால், அவர் கடத்தல்கார்களில் ஒருவரை போல நடித்த போது, அந்த நபர் கோபமாகி, தம்ராகரின் தலையில் துப்பாக்கியின் பின்புறத்தால் அடித்தார். அதன் பிறகு, தம்ராகர் அமைதியாகிவிட்டார்," என்று திடல் கூறினார். விமானத்தின் உள்ளே மட்டுமல்ல, தம்ராகர் வெளியிலும் துன்பத்தை அனுபவித்தார். 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா?18 டிசம்பர் 2024 கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,DEVENDRA MAN SINGH/AFP via Getty Images படக்குறிப்பு,பகுதி நேர நகைச்சுவை நடிகராக இருந்த தம்ராகர், தனது நகைச்சுவை உணர்விற்காக பரவலாக அறியப்பட்டார் சில ஊடகங்களில், கடத்தல்காரர்களில் அவரும் ஒருவர் என கூறின. அச்செய்தி, அவரது குடும்பத்திற்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எந்த மக்களும், இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதை, நேபாளத்தின் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர், டாக்டர் ராம் ஷரண் மஹட் ஊடகங்களுக்கு விளக்கினர். "சில ஊடகங்களில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதைத் தெரிந்துகொண்டபோது, அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் அமைதியாகிவிட்டார், அவரது சால்வை வியாபாரமும் சரிந்தது. அதுவே அவரது கடைசி விமான பயணம்," என மீரா தம்ராகர் கூறுகிறார் விமானத்திற்கு வெளியே நிலவிய குழப்பம் கடத்தப்பட்ட விமானத்தின் உள்ளே பயணிகள் பீதியடைந்திருந்த நிலையில், விமானத்துக்கு வெளியேயும் குழப்பம் ஏற்பட்டது. "அங்கு நிலைமை மிகவும் தீவிரமாக இருந்தது. சில இந்திய ஊடக செய்திகள், நேபாளத்தின் பாதுகாப்பு பலவீனங்களை மிகைப்படுத்தின. நேபாளத்திற்கு எதிராக இந்தியா சில நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தோன்றும் அளவுக்கு அந்த செய்திகள் இருந்தன" என்று கெம் ராஜ் ரெக்மி கூறினார். சம்பவம் நடந்த உடனேயே நேபாள அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் உறுப்பினராக கெம் ராஜ் ரெக்மி இருந்தார். மாலை 4 மணிக்கு மேல் புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் கடத்தப்பட்டது. டெல்லிக்குச் செல்வதற்குப் பதிலாக, விமானம் இந்தியாவின் அமிர்தசரஸ், பாகிஸ்தானின் லாகூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் என்று திருப்பிவிடப்பட்டு, இறுதியாக ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குச் சென்றது. விரைவில், இந்திய ஊடகங்கள் நேபாளத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை பற்றிய செய்திகளை வெளியிடத் தொடங்கின. மறுநாளே, நேபாள அமைச்சரவை இந்த சம்பவத்தைப் புலனாய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட உயர்நிலை குழுவை அமைத்தது. இந்தியா உடனடியாக தனது விமானங்களை நேபாளுக்கு அனுப்புவதை நிறுத்திக்கொண்டது. மேலும் இந்தியாவின் இந்த முடிவானது, ஐந்து மாதங்கள் வரை நீடித்தது. நேபாளத்தின் அரசியல் தலைமை, விமானக் கடத்தல் சம்பவத்தை போதுமான அளவு முக்கியமானதாக கருதவில்லையென, பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட இந்தியாவின் உயர்நிலை தலைவர்கள் உணர்ந்ததாக நேபாளத்திற்கான அப்போதைய இந்திய தூதர், கிருஷ்ணா வி ராஜன் பிபிசியிடம் தெரிவித்தார். அவருடைய 'Kathmandu Chronicles' என்ற புத்தகத்தில், இந்த விமானக் கடத்தல் சம்பவம் நேபாளத்தின் பெயரையும் சுயமரியாதையையும், இந்திய மக்களின் பார்வையில் அது எப்போதும் அனுபவித்து வந்த நல்லெண்ணத்தையும் சிதைத்து என ராஜன் குறிப்பிடுகிறார். ஆனால், சில குற்றச்சாட்டுகள் இந்தியா மீதும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். "இந்திய அரசு, அதன் பங்கிற்கு, இந்தியத் தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் தூண்டுதல்கள் மூலம் நேபாளத்தை எதிர்மறையாகக் காட்டுவதை ஊக்குவித்தது. மேலும் இதன் மூலம், இச்சம்பவத்தில் அரசாங்கத்தின் பிழைகளை மறைத்து, கவனத்தைத் திசை திருப்ப முயன்றது" என்று ராஜன் எழுதுகிறார். இவ்வாறான சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பட மூலாதாரம்,SAEED KHAN/AFP/GETTY IMAGES படக்குறிப்பு,கடத்தப்பட்ட விமானம் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது விசாரணைக் குழு என்ன முடிவுக்கு வந்தது? விமானக் கடத்தல் சம்பவம், விமான நிலையத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஏற்பட்டது என்பது தெளிவாக இருந்தபோதிலும், பாதுகாப்பு குறைபாடுகளுக்கு யார் அல்லது எது பொறுப்பாகும்? என்று புலனாய்வு குழுவினரால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. "கடத்தல்காரர்கள், சாதாரணப் பயணிகள் போலவே விமான நிலையத்தில் நடைமுறைகளை பின்பற்றினர். ஆனால் அவர்கள் பாதுகாப்பு சோதனைகளின் போது நிறுத்தப்படவில்லை," என்று குழுவின் உறுப்பினர் மற்றும் நேபாளத்தின் முன்னாள் உள்துறை செயலாளர் கெம்ராஜ் ரெக்மி கூறினார். புலனாய்வின் போது விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனைகளை பரிசோதித்ததை பற்றி நினைவுகூரும் அவர், "குழுவின் தலைவராக இருந்தவர் நேபாள் காவல்துறையின் முன்னாள் ஐ.ஜி. நாங்கள் பரிசோதனை செய்யும் போது, எங்கள் குழு எளிதாக பாதுகாப்பு சோதனைகளை கடந்து சென்றது மற்றும் அவரது துப்பாக்கி அங்கு கண்டறியப்படவில்லை," என்று ரெக்மி தெரிவித்தார். அந்த நேரத்தில், விமான நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த 16 கண்காணிப்புக் கேமராக்களில், நான்கு மட்டுமே செயல்படக்கூடியதாக இருந்தது என்று குழு கண்டுபிடித்தது. பாதுகாப்புப் பணியாளர்களுக்கு சரியான பயிற்சி இல்லாமை, முக்கியப் பகுதிகளுக்கு செல்ல அனுமதியளிப்பதில் இருந்த கவனக்குறைவு, மற்றும் அங்கீகாரம் இல்லாத நபர்களுக்கு தேவையற்ற அணுகல் வழங்குதல் போன்ற பிரச்னைகள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டன. முக்கிய பகுதிகளில் சோதனை கருவிகள் மற்றும் ஊடுகதிர் (X-ray) இயந்திரங்களை நிறுவுதல் மற்றும் விமான பாதுகாப்பு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க, அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், விமானம் கடத்தப்படுவதற்கு, சில வாரங்களுக்கு முன்பு விமானக் கடத்தலுக்கான வாய்ப்பு இருப்பது குறித்து, தகவல் கிடைத்திருந்ததை புலனாய்வு குழு கண்டுபிடித்தது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன? "இத்தகைய முக்கியமான விஷயத்தை கையாள்வதில் அரசியல் பொறுப்பின்மை தெளிவாக இருந்தது," என்று ரெக்மி கூறினார். அந்த நேரத்தில் நேபாளத்தின் புலனாய்வு அமைப்பான தேசிய புலனாய்வு துறையின் தலைவர் ஹரி பாபு சௌத்ரி, அதிக கவனமாக இல்லாததற்காக, விமர்சனத்திற்கு உள்ளானார். "இத்தகைய நிகழ்வு நிகழலாம் என்ற வதந்திகள் இருந்தபோதிலும், எங்களிடம் உறுதியான தகவல் இல்லை. ஆனால், பாதுகாப்பு மற்றும் விமான நிலைய மேலாண்மையில் கவனக்குறைவு தெளிவாக உள்ளது," என்று சௌத்ரி பிபிசியிடம் தெரிவித்தார். "எந்த நேபாள அதிகாரி அல்லது பாதுகாப்பு பணியாளரும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது எங்கள் குழு கண்டுபிடித்த ஒரு விஷயம். ஆனால், பாதுகாப்பில் இருந்த கவனக்குறைவு தெளிவாக இருந்தது," என்று ரெக்மி கூறினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, நேபாள விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனைகளை அரசாங்கம் பலப்படுத்தியுள்ளதாக நேபாள அமைச்சர் குருங் கூறுகிறார். பட மூலாதாரம்,SAEED KHAN/AFP/GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியா மூன்று கைதிகளை விடுவித்தால் மட்டுமே கடத்தல் சம்பவத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்ற நிலை ஏற்பட்டது 'அதிகரித்த பாதுகாப்பு' நேபாளத்திற்கான அப்போதைய இந்திய தூதர் கிருஷ்ணா வி. ராஜன், கடத்தல் சம்பவம் இந்திய மக்களின் பொது மனப்பான்மைக்கு பெரும் அதிர்ச்சியாகவும், இரு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்ததாகக் கூறினார். "குடிமக்கள் மத்தியில் நேபாளம் குறித்த நல்லெண்ணச் சிதைவும், அரசியல் மற்றும் அரசாங்கம் மத்தியில் நம்பிக்கைச் சிதைவும் ஏற்பட்டன என்பதில் சந்தேகமில்லை. ஒரு சுற்றுலா தலமாக நேபாளம் இருந்தது. உதாரணமாக தேனிலவுக் கொண்டாடும் இந்திய மக்களுக்கு இது மிகவும் பிடித்தமான இடமாக இருந்து, ஆனால் திடீரென்று அது அதன் மதிப்பை இழந்துவிட்டது." "அங்கு இந்தியாவின் பாதுகாப்புச் சோதனைகள் தொடர்வது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நம்பிக்கை இல்லாததைக் குறிக்கவில்லை; அது வெறும் கூடுதல் முன்னெச்சரிக்கை மட்டுமே" என்று ராஜன் பிபிசியிடம் தெரிவித்தார். எனினும், கடத்தல் சம்பவம் இரு நாடுகளின் உறவுகளை முறிக்க வைத்தது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். "அந்த சம்பவத்திற்கு பிறகு, நேபாளத்தின் பாதுகாப்பு மீதான உணர்வு இந்தியாவுக்கு அதிகரித்தது." என நேபாளத்தின் முன்னாள் உள்துறை செயலாளர் கெம் ராஜ் ரெக்மி கூறுகிறார். கடத்தல் சம்பவம் நடந்த பின்னர் உடனடியாக, இந்தியா நேபாளுக்குச் செல்லும் எல்லா விமானங்களையும் நிறுத்திவிட்டது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, நேபாளம் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அனுமதித்தப் பிறகு மட்டுமே இந்திய விமானங்கள் காத்மாண்டுவுக்கு மீண்டும் செல்லத் தொடங்கின. "இந்தச் சம்பவத்திற்கு பிறகு, இந்தியா விடுவித்த நபர்கள், தெற்கு ஆசியாவில் பல ஆண்டுகளுக்கு ஒரு புதிய பயங்கரவாத அலையை ஏற்படுத்தினர்" என்று நேபாள ஆய்வாளர் சுதீர் ஷர்மா கூறினார். "இந்தச் சம்பவம் இந்தியாவின் உக்திக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்தியாவிற்கு நேபாளம் நட்பு அண்டை நாடாகத் தொடர்கிறது. மேலும் நேபாளம் அதன் நிலத்தை இந்தியாவுக்கு எதிராக 'மூன்றாம் தரப்பினரால்' தவறாகப் பயன்படுத்த அனுமதிக்காது என்பதில் நம்பிக்கையும் உள்ளது" என மற்றொரு இந்தியப் பகுப்பாய்வாளர், அதுல் தாகூர் கூறுகிறார். இந்தியா இந்த விமானக் கடத்தல் சம்பவத்தை முடிவுக்குக் கொண்டு வர மூன்று கைதிகளை விடுதலை செய்ய வேண்டியிருந்தது. கடத்தல்காரர்களால் இந்திய பயணிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq6256e2v3no

அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும் - ஜாமுனி காமந்த துஷார

1 day ago
இவரும் போதாக்குறைக்கு அனுராவுக்கு, அண்மையில் எச்சரிக்கை விட்டவர். காரணம் இதுதானோ? எல்லோரும் ஆதரவு தாறோம் எண்டு அனுராவின் காலில விழப்போகினம். அது சரி, இந்த தகவலை ஏன் இவ்வளவு காலமும் வெளியிடாமல் இருந்தவை? இவையள் அடிச்ச பணத்தை மீளப்பெற்று, அனுபவிச்ச சொகுசுக்குரிய பணத்தை வசூலிச்சு, வரப்பிரசாதங்களை குறைச்சாலே நாட்டுக்கடனை அடைத்து, முன்னேற்றவும் போதுமானது. எல்லாரும் சேர்ந்த கள்ளர். சிறை காணுமா இவர்களை அடைக்க? அவர்கள் பணம் அடிச்சு கும்மாளம் போட, மக்கள் தெருவில் லைனில் காத்து இருக்கிறார்கள்.

சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!

1 day ago
சிறியரிடம் நோர்வே தூதுவர் தூது போய், அவர் சொல்வதை சிறியர், “என்னவாம்” என்று முழுச அதை மொழிபெயர்கக சாணக்கியன் கூட போகவேண்டிவரும். 😂

பட்டிருப்பு-போரதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதான வீதியை திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பம் !

1 day ago
பட்டிருப்பு-போரதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதான வீதியை திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பம் ! No comments அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீதிகள்,.விவசாய பயிர்நிலங்கள் என்பன பாதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக வீதிகள் பகுதியளவிலும் முற்றாகவும் பாதிக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் போர்தீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு போரதீவு பிரதான வீதியானது வெள்ளத்தில் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் அதனை சீர் செய்து திருத்தியமைக்கும் பணிகளை நேற்று வெள்ளிக்கிழமை ( 20 ) திகதி வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்தது. இதனிடையில் வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதிக்கு குறுக்காக பாயும் நவகிரி குளம் அதிகளவில் பெருக்கெடுத்தமையால் வாகனங்கள் பயணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.காபெட் வீதிகளை உடைத்து அருகில் காணப்படும் வயல் நிலங்களுக்கு படை படையாக தூக்கி வீசப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதியை வெகு விரைவில் புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது. இவ்வாறு பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதியினால் தினமும் விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலர் செல்வதானால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. https://www.battinews.com/2024/12/blog-post_375.html

திண்ணை

1 day ago
😀 ஓம் நான் சந்தித்த போதும் இதைதான் சொல்லி ஒரே கொம்பிளைண்ட்😂 அது சரி உங்க இன்னொரு ஆள் நீங்களும் நானும் ஒரே ஆள் இரெண்டு வேற ஐடியில வாறம் எண்டு கம்பு சுத்தினவர் கண்டனியளே😂. ஒரு மனிசன் நம்பி போன் நம்பரை தந்தா இப்படியா கயித்தை விழுங்க வைப்பியள் நாதம்😂.

15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு

1 day ago
15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு கடந்த காலங்களில், 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியதாக, இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த அமைச்சர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 66 ஆகும். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு பத்து விமானங்களும் முன்னாள் அமைச்சர் தயாகமகேவுக்கு ஒரு விமானமும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு மூன்று விமானங்களும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு இரண்டு விமானங்களும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இருபத்தைந்து விமானங்களையும் முன்னாள் அமைச்சர் அலிசப்ரிக்கு இரண்டு விமானங்களையும் பெற்று பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த அமைச்சர்கள் 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், விமானப்படை விமானங்களை தமது போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். இந்த விமான பயணங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து கிடைத்த பதில் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/15-மனனள-அமசசரகளன-வமன-பயண-வபரஙகள-கசவ/175-349037

ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்?

1 day ago
ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? கந்தையா அருந்தவபாலன் ஊழல், இலஞ்சம் போன்ற சொற்களை நாம் கருத்து வேறுபாடின்றி பொதுவாகப் பயன்படுத்தினாலும் இரண்டும் ஒன்றல்ல. ஒருவரின் தீர்மானம் அல்லது செயல் மீது செல்வாக்குச் செலுத்தும் வகையில் சட்டமுரணாக அல்லது நெறிபிறள்வாக ஏதாவது பெறுமதியொன்றை வழங்குதல் அல்லது பெறுதல் ஊழல் எனப்படும். உதாரணமாக ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்காக அதனைத் தீர்மானிப்பவருக்கு பணம் கொடுப்பது ஊழல் எனப்படும். ஆனால் இலஞ்சம் என்பது சட்டமுரணாக அல்லது நெறிபிறள்வாக ஒருவர் தனது பதவியை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெறுவது அல்லது தனிப்பட்ட ரீதியில் நன்மையடைவதாகும். உதாரணமாக ஒரு பணியாளரை நியமிப்பதற்கு அல்லது இடமாற்றம் செய்வதற்கு மேலதிகாரி ஒருவர் பெறுவது. ஊழலும் இலஞ்சத்தினுள் அடங்கும் நிலைமைகளும் உண்டு.ஊழல் பெரும்பாலும் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனத் தலைவர்களுடன் தொடர்புபட்டிருக்க இலஞ்சம் ஆட்சியாளர் தொடக்கம் அடிமட்ட அரச ஊழியர் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. ஊழல்கள் பல கோடிகளுடன் தொடர்புபட இலஞ்சம் நூறு ரூபா தொடங்கி கோடிகள் வரை செல்லும். சிலவேளை இதனுள் மதுவிருந்து, மாது விருந்தும்கூட அடங்கும். இலங்கையில் இவை தீர்க்க முடியாத ஒரு நோயாக இன்று எல்லாவிடத்திலும் புரையோடிப் போயுள்ளது. ஏதாவது கொடுத்தால்தான் கருமம் நடக்கும் அல்லது விரைவாக நடக்கும் என்பதால் இலஞ்சம் என்பதை தவிர்க்க முடியாத ஒரு நியதியாக மக்கள் இன்று ஏற்கப் பழகிவிட்ட நிலைமையே நாட்டில் பல இடங்களில் காணப்படுகிறது. இலங்கையின் இன்றைய பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குக் குறிப்பாக நாடு கையறு நிலைமைக்குத் தள்ளப்பட்டமைக்குரிய பிரதான காரணிகளில் ஊழலும் இலஞ்சமும் பிரதான காரணிகளென தேச, சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலஞ்சம், ஊழல் என்பன உற்பத்தி திறனைப் பாதிப்பதுடன், உற்பத்திச் செலவு, விலை என்பவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதால் தேசிய, சர்வதேசிய சந்தைப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. இதனால் நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைவதால் வறுமை நிலை அதிகரிக்கிறது. வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. நாட்டின் நலன்புரிச் சேவைகளின் அளவும் தரமும் வீழ்ச்சியடைகிறது. அரச படுகடன் உயர்கிறது. ‘ரான்ஸ்பரன்சி இன்டநாஷனல்’ நிறுவனத் தரவுகளின்படி இலங்கையின் இலஞ்ச உணர் சுட்டியின் அளவு ( corruption perception index ) 2023 இல் 34 ஆக இருந்தது. இச்சுட்டி 0 தொடக்கம்100 வரையான புள்ளிகளைக் கொண்டது. 0 மிக மோசமான இலஞ்ச நிலையையும் 100 இலஞ்சமற்ற நிலையையும் காட்டும். இது 2020 இல் 38 ஆக இருந்தது என்பதிலிருந்து வருடாந்தம் இலங்கையின் இலஞ்ச நிலைமை கூடிக்கொண்டு செல்வதை அறிய முடியும். 180 நாடுகளைக் கொண்ட இக்கணிப்பீட்டில் இலங்கை 115 ஆம் இடத்தில் இருப்பது இலங்கை உயர்மட்ட இலஞ்ச நிலை கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இவ்வாறான ஒரு நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சிப் பீடம் ஏறியுள்ளது என்பதற்கப்பால் அதுவே அவர்களை ஆட்சிப் பீடம் ஏறவும் வழிவகுத்தது. அதுவே அவர்களுக்குப் பெரும் சவாலாகவும் இருக்கப் போகிறது. நோயாளி ஒருவரின் உடலெங்கும் பரவி விட்ட புற்றுநோயைக் குணப்படுத்துவது எவ்வளவு கடினமானதோ அதுபோன்ற ஒரு நிலையே புதிய ஆட்சியாளருக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள இலஞ்சமும் ஊழலும். இதனை ஜனாதிபதி நன்குணர்ந்தவராகவே உள்ளார் என்பதை அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில் அவராற்றிய உரை வெளிப்படுத்துகிறது. எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அதனைக் கையாள்பவர்கள் நேர்மையாகவும் சரியாகவும் கையாளாவிட்டால் அச்சட்டங்களினால் எவ்வித பயனும் கிடைக்காது. இலங்கையில் சட்டங்கள் சிலந்தி வலையைப் போன்றுள்ளது. அதில் சிறிய விலங்குகள் சிக்கி விடுகின்றன: பெரிய விலங்குகள் அதைக் கிழித்துக் கொண்டு சென்று விடுகின்றன. அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவதன் மூலமே இலஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறியதுடன், 2021 இல் தாக்கல் செய்யப்பட்ட 69 வழக்குகளில் 40 உம் 2022 இல் தாக்கல் செய்யப்பட்ட 89 வழக்குகளில் 45 உம் மீளப்பெறப்பட்டதற்கான காரணத்தை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வெளியிடவேண்டும் என்றும் கேட்டுள்ளமை நாட்டில் புரையோடிப் போயுள்ள இலஞ்ச, ஊழலை அகற்றுவது அவ்வளவு இலகுவானதொன்றல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி இவ்வாறான ஆணைக்குழுக்கள் மற்றும் நாட்டின் நீதித்துறை என்பன எவ்வளவுதூரம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. இலஞ்ச, ஊழல் முறைகேடுகளை அகற்றுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என முக்காலத்துக்குமுரிய சவால்கள் காத்திருக்கின்றன. தேர்தல் காலத்தின்போது தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஊழலற்ற அரசாங்கத்தை அமைப்போம் என்பது மட்டுமல்ல கடந்தகாலத்தில் ஊழல் செய்தோரை நீதிக்கு முன் நிறுத்துவோம் என்பதுவும் அடக்கம். நிகழ்கால, எதிர்கால ஊழல்களை அகற்றுவதற்கு கடந்த ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதும் அவசியமானது. கடந்த காலத்தைப் பொறுத்தவரை 2010 ஆண்டுக்குப்பின் மகிந்தவின் ஆட்சிக்காலத்திலும் மைத்திரி-ரணில் ஆட்சிக்காலத்திலும் கோதாபயவின் குறுகிய ஆட்சிக்காலத்திலும் பாரிய ஊழல் மோசடிகள் நடந்துள்ளன. ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட’ முறைகேடு தொடக்கம் ‘போட் சிற்றி’ ஊழல் மற்றும் உகண்டாவுக்கு தனி விமானத்தில் பணம் அனுப்பிய வரை பல முறைகேடுகளின் சூத்திரதாரிகளான ராஜபக்‌ஷ குடும்பத்தினரையும் மத்திய வங்கியின் பாரியளவிலான பிணைமுறி மோசடிக்காக மைத்திரி, ரணிலையும் பாரியளவிலான சீனி வரி மோசடிக்காக கோதாபயவையும் நீதிக்கு முன் நிறுத்தவேண்டிய கடப்பாடு தேசிய மக்கள் சக்திக்குண்டு. இவை இலகுவான விடயங்களன்று. திட்டமிட்டு திருடுபவர்கள் இயன்றவரை இயன்றவரை தடயங்களை விட்டு வைக்கமாட்டார்கள். அவ்வாறே ஏதாவது இருந்தாலும் அக்கோப்புகள் காணாமல் போய்விடும். ஏனெனில் செய்யப்பட்ட களவுகள் தனியே அவர்களால் செய்யப்பட்டவையல்ல. அவை யாவும் மேல்மட்ட கூட்டுக்களவுகள். அந்தக் கூட்டுக்களவாணிகள் இப்போதும் அரச பணியில் ஆங்காங்கே இருக்கின்றனர் எனபதுடன்அவற்றை மூடிமறைக்கக்கூடிய வல்லமையுடனும் இருக்கின்றனர். அவற்றையும் மீறி தடயங்கள் கண்டெடுக்கப்படும்போது சம்பந்தப்பட்ட நபர்கள் நாட்டிலிருக்கமாட்டார்கள். அர்ஜுனா மகேந்திரா சிங்கப்பூர் வீதிகளில் சுற்றித் திரிவார். ஆனால் அவரின் முகவரி கிடைக்காததால் நீதிமன்றக் கட்டளையை வழங்க முடியவில்லை என சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் அறிவிப்பர். ஏலவே பஷில், கோதாபய பாதுகாப்பாக வெளிநாடுகளுக்குப் பறந்து விட்டார்கள். தேவையேற்படின் இங்குள்ள சம்பந்தப்பட்டவர்களும் பறப்பது கடினமானதல்ல. போதாக்குறைக்கு அவர்களிடம் வெளிநாட்டுக் குடியுரிமையுமுண்டு. இந்த இலட்சணத்தில் இந்தப் பெருச்சாளிகளை அனுரவினால் இலகுவாக நீதிக்கு முன் நிறுத்த முடியுமா? சரி, கடந்த காலத்தை விடுவோம். நிகழ்காலத்தில் நிலைமை சாதகமாக உள்ளதா? ஊழல், இலஞ்சத்தில் புரையோடிப்போன இலங்கையின் நிர்வாக, நீதிக் கட்டமைப்புகள் இன்னும் அவ்வாறே உள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சர்களும் அவர்களின் செயலாளர்களும் மட்டுமே மாறியுள்ளனர். செயலாளர்கள் கூட ஏற்கனவே அரச துறைகளில் இருந்த அதிகாரிகள்தான். வானத்திலிருந்து கொண்டவரப்பட்டவர்களல்லர். கோதாபயவுடனும் பின்னர் ரணிலுடன் இருந்த ஆலோசகர்கள், அதிகாரிகள் சிலர் இன்னும் அனுரவுடனும் இருக்கிறார்கள். ஜனாசாக்களை கட்டாயம் எரிக்கவேண்டும் என்று கோதாபயவுக்கு குழல் ஊதிய ஒருவரை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்தமைக்கு முஸ்லிம் மக்களிடமிருந்து கண்டனங்கள் இப்போதே எழத்தொடங்கிவிட்டன. போலிப்பட்டம் தொடர்பாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்கப் போவதாக பொதுஜன பெரமுன கச்சையைக் கட்டுகிறது. இதில் நகைச்சுவை என்னவென்றால் தனியறையில் மோசடியான முறையில் சட்டப் பரீட்சையெழுதிப் பட்டம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிற நாமல்தான் அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர். அதுமட்டுமன்றி பல இலஞ்ச, ஊழல் முறைகேடுகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் பதவியுயர்வுடன் இன்னும் உயர்பதவிகளை அலங்கரித்து வருவதையும் காணமுடிகிறது. அனுரவினதும் அவர் தோழர்களதும் கைகள் மட்டும் சுத்தமாக இருந்தால் மட்டும் போதுமா? சம்பந்தப்பட்ட அனைவரதும் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டுமல்லவா? அது மிகக்கடினம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு போக்குவரவு கண்காணிப்புக் காவல் துறையினரின் நாளாந்த வருமானத்தில் எவ்வித வீழ்ச்சியுமேற்படவில்லை என்பது. நிகழ்காலத்தில் இவ்வளவு சவால்களுக்கும் முகம் கொடுத்துக்கொண்டு எதிர்காலம் தொடர்பிலும் புதிய அரசாங்கம் கவனஞ் செலுத்தவேண்டியுள்ளது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில் அவர் சுட்டிக்காட்டியது போல அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவதன் மூலமே இதனை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி எதிர்பார்ப்பது தெரிகிறது. இங்கு எழக்கூடிய நியாயமான ஐயங்களில் ஒன்று தற்போதிருக்கும் அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவது உடனடிச் சாத்தியமாகுமா? மற்றது அவ்வாறு கட்டமைப்பு முழுமையாக மாற்றப்பட்டால்கூட இலஞ்ச, ஊழல் முறைகேடுகள் முற்றாக மறைந்துவிடுமா என்பது. புதிய அரசாங்கம் தனது பதவிக்காலம் முழுவதும் முயன்றால்கூட அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவது கடினம். ஜனநாயக நாடுகளில் இது நீண்டதொரு செயன்முறை. இதில் உள்நாட்டுக் காரணிகள் மட்டுமன்றி வெளிநாட்டுக் காரணிகளும் தாக்கத்தைச் செலுத்தும். அதேபோல ஐனாதிபதி கூறியது போல இலஞ்ச, ஊழல் முறைகேடுகளை சட்டங்களால் மட்டும் தடுத்துவிட முடியாது. அவை தவறானவை என்ற மனப்பாங்கு நாட்டு மக்களின் பண்பாட்டுக் கூறுகளிலொன்றாகவும் உருவாக்கப்படவேண்டும். அது குடும்பம், பாடசாலை, வழிபாட்டிடங்கள் போன்ற சமூக நிறுவனங்களால் சிறுபராயத்திலிருந்து வளர்த்தெடுக்கப்படவேண்டும். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள் இதற்கும் பொருந்தும். முன்னைய அரசாங்கங்களின் தவறான அணுகுமுறைகளால் படுத்துவிட்ட இலங்கைப் பொருளாதாரத்தைச் சீர்படுத்தி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே அதிக முயற்சிகளை எடுக்கவேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள புதிய அரசாங்கம் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை களையவேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதை அதன் முன்னெடுப்புகள் காட்டுகின்றன. அதில் முழுமையாக வெற்றிபெறாவிடினும் மக்கள் திருப்தியடையும் வகையிலான முன்னேற்றம் ஒன்றை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அதில்தான் தேசிய மக்கள் சக்தியின் மீதான மக்களின் நம்பிக்கையும் நாட்டின் எதிர்காலம் மீதான நம்பிக்கையும் தங்கியுள்ளன. https://thinakkural.lk/article/313893
Checked
Sun, 12/22/2024 - 09:58
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed