புதிய பதிவுகள்2

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

3 hours 39 minutes ago
வடகிழக்கில் நடந்தது ஒரு ஆயுதப் போராட்டம்... பல வருடங்கள் இது தொடர்ந்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் ஒரு முடிவுக்கு வரும்.. வந்தது!! ஆனால் மலையகத்தில் நடப்பது வாழ்நாள் போர் 200 ஆண்டு காலம் ஆகியும் முடிவு இல்லாத வாழ்க்கை போர். ஒரு இனத்தை இன்னொரு இனம் அழிக்கும் போர். 200 ஆண்டு காலம் என்பது எத்தனை தலைமுறைகள்? அங்கேயே அந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்து அங்கேயே உழைத்த மக்களுக்கு உரிமை கிடைக்காது என்பது எப்படிப்பட்ட கொடுமை. மாட்டுக்கு கொம்பு முளைக்கும் முன்பே நம்மை முட்டாமல் இருக்க, அது பிறந்ததும் சூட்டுக்கோளால் கொம்பு முளைக்கும் இடத்தில் தீச்சு விடுவதும் அடுத்தது பருவத்துக்கு வரும் முன்னால் காய் அடித்து ஆண்மை நீக்கி வேலையில் கட்டி வசக்கிவிட்டால் வாழ்நாள் பூராவும் அதே வேலை வாங்கலாம். உரிமையை அபகரிப்பதும் காய அடிப்பதும் ஒன்றுதான். அந்த மக்கள் தொகையை அதிகமாகாமல் தமிழினம் பெருகாமல் பார்த்துக் கொள்வதும் ஒன்றுதான். பிரித்தானிய காலனித்துவவாதிகளால் பிழைப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை அவர்கள் அடைந்த வாழ்வியல் துயங்கள் அதற்கான காரணிகளான தேசிய புறக்கணிப்பு, அரசியல் புறக்கணிப்பு, குடியுரிமை பறிப்பு, நாடற்ற நிலை, நாடு கடத்தல், பதிவு குடியுரிமை, வசிப்பிட குடியுரிமை, திட்டமிட்ட கருத்தடை, கூடிசன குறைப்பு, நிலமற்ற நிலை, வீடற்ற நிலை, பொருளாதார ஒடுக்குமுறை, கல்வியொடுக்குமுறை, உள்ளூர் ஆட்சிக்குள் உள்வாங்காத ஒதுக்கு முறை, இம்மக்களின் வாழ்விடங்களை வணிக நிலம் ஆக்கி கம்பெனிக்காரர்களுக்கு நூறு ஆண்டு கால குத்தகைக்கு கொடுத்து விட்டமை, இம்மக்கள் வாழ்ந்த பல பெருந்தோட்டங்களை சுவைகரித்து சிங்கள மக்களுக்கு சிறு தோட்ட உடைமையாளர்களாக கொடுத்து விட்டமை, இதனால் வாழ்விடங்கள் இழந்து வசிப்பிட தொழிலாளர்களாக காலனித்துவவாதிகள் கட்டிப்போட்ட அதே 200 ஆண்டுகால வரிசை லயங்களில் வாழும் நிலை என பல்வேறு நெருக்கடிகளை இன்றும் அந்த மக்கள் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் இவர்கள் வாழும் நிலங்களை கிராமங்களாக கூட அங்கீகரிக்காமல், இம்மக்களை கிராம மக்களாக கூட ஏற்றுக் கொள்ளாமல், நாட்டு மக்கள் என்று தேசிய அந்தஸ்தை வழங்காமல் தோட்ட மக்கள் "வத்து கம்கரு" என்றே புறக்கணித்து வைத்திருக்கின்றமை என இத்தனை அரசியல் தேச வஞ்சனைகளுக்கும் முகம் கொடுத்து உரிமைக்குப் போராடாமல் மௌனித்து 200 ஆண்டுகளை வீணடித்துவிட்டு வந்தேறி குடிகளாக வருடங்களை எண்ணிக்கொண்டு வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்துக்கு ஈழ நிலத்தின் பூர்வீக மைந்தர்கள் என்ன செய்யலாம்; இவர்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி அனுகலாம்? ~ ஒப்பாரி கோச்சி புத்தகத்தை வாசித்து... என்னை பாதித்த வரிகளுடன் ...

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

4 hours 33 minutes ago
விடுதலை போருக்கும் அடுத்தவன் அரிப்பு போருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எதிரியாய் இருந்தாலும் கோத்தா சொன்னால் சொல்வதை பார்த்து அப்படியே பற்றிக்கொள்ள வேணுமாம். அடுத்தவன் சொன்னால் சொன்னவர்கள் கருத்தை விட்டுவிட்டு எங்கே சுச்சா போனார்கள் எப்போ போனார்கள் எங்கே போனார்கள் என்று என்று பிரிச்சு மேய்ந்து அக்குவேறு ஆணிவேறாக பார்க்கவேண்டும். அப்போதான் அது இனிக்கும்

புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்

4 hours 37 minutes ago
வீட்டில் புட்டு அவிப்பதைத் தவிர மற்ற சமையல் எல்லாம் நான் தான்.🤫 இனி புட்டு அவிப்பதையும் பழகவேண்டியதுதான்.🤣

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

4 hours 48 minutes ago
எல்லாவற்றையும் வாசிக்க நேரம் போதவில்லை இணைப்புக்கு நன்றி

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

4 hours 48 minutes ago
👍 இதைத் தான் நானும் எழுத நினைத்தேன்: "நாங்கள்" 2002 இல் கூட்டுத் தலைமை பாலசிங்கத்தார் மூலமாக எச்சரிக்கை கொடுத்த பின்னரும் போராடியது வீரம்! அதையே முழுமையான சுதந்திர நாடாக 30 ஆண்டுகள் வரை இருந்த உக்ரைனின் ஒரு தலைவர் செய்தால் "கோமாளித் தனம்". இதைச் சொல்வோர் ஆமி சுடாத ஷொட் கண்ணோட ஜீப்பில் திரிந்த காலத்திலேயே ஐரோப்பாவுக்குப் பறந்த ஆட்கள். இன்னும் சிலர், உயிர் காக்க ரஷ்யாவூடாக தப்பி, அமெரிக்காவில் வந்து லேண்ட் ஆன ஆட்கள்! இன்னும் என்னவெல்லாம் கேட்க வேண்டுமெண்டு எங்களுக்குச் சபிச்சிருக்குதோ தெரியேல்ல🤔!

குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?

4 hours 54 minutes ago
ஆள் நடமாடடம் இல்லாத வன்னி அக்கரையானில் கொரோன தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு கோத்தபாய ஐயா அவர்களுக்கு அண்ணளவாக 8.5 மில்லியன் மக்கள் வாழும் நியூ யார்க் நகரில் இருந்து எனது வாழ்த்துக்களை நான் தெரிவித்து கொள்கிறேன்.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

4 hours 59 minutes ago
90 களில் 15 ஆயிரம் என்பது சாதாரண வக்கீல் கூலி தானே? ஓ.சியில் கூப்பன் அரிசி, மண்ணெண்ணை கிடைக்கலாம், வழக்குப் பேச வக்கீலும் ஓ.சியில் வேண்டுமென்றால் என்ன மன அமைப்பய்யா இது😂? உங்களுக்கு கண்ணதாசன் என்ற புலிகளுக்கு ஆட் சேர்த்தார் என்ற பெயரில் கைதான ஒரு அரசியல் கைதியை சுமந்திரன் ஆஜராகி விடுவித்த செய்தி தெரியாதா? 2010 இல் அரசியலுக்கு வருவதற்கு முதலே சுமந்திரன் சில அரசியல் கைதிகள் வழக்கில் ஆஜராகி இருக்கிறார்! நீங்கள் என்னவென்றால் தகவல் ஏதுமில்லாத வெறுமையில் இப்படி அளந்து விடுகிறீர்கள்?

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

5 hours 5 minutes ago
அப்படி நாங்களே கேட்க தொடங்கினால்............ உலகத்தில் உங்களுக்கு என்ன மரியாதை? உங்களைப்போன்ற அறிவாளிகள் பிறந்த இனத்தின் பிறந்தோம் என்ற இன்பமே எங்களுக்கு அனுபவித்து முழுவதுமாக களிப்புற ஆயுள்காலம் போதவில்லை. இதில் வேண்டாத வேலைகள் எதற்கு நமக்கு? நீங்களே கேளுங்கள் ...... நீங்களே செல்லுங்கள் உங்கள் நிழலில் நாங்கள் நடந்து வருகிறோம்.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

5 hours 14 minutes ago
அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே? பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி. இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார். சுய புத்தியும் தேவை. இந்த திரியில் கண்ட வசனங்கள் இவை. 😂 இவை அத்தனையும் முகக்கண்ணீடி முன் நின்று தமிழர்கள் தம்மை தாமே கேட்டிருக்க வேண்டியவை அல்லவா! கச்சிதமாய பொருந்துது எமக்கும். 😂

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

5 hours 14 minutes ago
இதுதான் உண்மையான யதார்த்த நிலை ....... இதற்கு சுமந்திரனோ மற்றைய ஊரை கொள்ளையடித்து ருசிகண்ட அரசியல்வாதிகளோ குரல் கொடுக்க போவதும் இல்லை அதை முன்னெடுக்க போவதும் இல்லை. இது மலையக தமிழர்களுக்கு என்று இல்லை .... இலங்கை பூராக இதுதான் தேவை என்பது நிதர்சனமாக இருக்கிறது. எங்களுடன் முட்டி முரண்படுவதால் முஸ்லீம்களை விட்டு விடுகிறோம் உள்ளே பார்த்தல் அங்கும் பஞ்சம் பட்டினிதான் இருக்கிறது .... சிங்களவர்கள் நிலை அதைவிட மோசமாக இருக்கிறது. சிறு மாத வருமானம் வராதா? என்ற அங்காலைப்பில்தான் பெரும்திரல் மக்கள் கொழும்புக்கு படை எடுக்கிறார்கள் அங்கே அவர்கள் நிலை பணவீக்கதால் விளையும் பெரும் செலவீனத்தால் இன்னமும் மோசம் அடைகிறது. இருந்துவந்த ஊர்களில் வளமிக்க நிலம் தரிசு நிலம் ஆகிறது. கொழும்பின் சனத்தொகை 6.5 மில்லியன் ஆகிவிட்ட்து அடுத்தவருடம் 7 ஆகினால் கூட ஆச்சரியப்பட ஏதும் இல்லை. அரசியல்வாதிகள் ஆடசியாளர்கள் ஒருபக்கம் என்றால் அங்கு தபால் கந்தோரில் முத்திரை ஓட்டுபவனில் இருந்து கச்சேரியில் கையெழுத்து ஈடுபவன் வரை கொம்பு முளைத்து திரிகிறார்கள். இதுக்குள் அந்த நலிந்த மக்களையும் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

5 hours 27 minutes ago
ஒரு அருமையான கருத்தை……. சுமன் சொன்னார் என்பாதால் மட்டுமே எதிர்க்கும் அளவுக்கு….. சுமன்லவர்ஸுக்கு காதல் ஜுரம் முற்றி விட்டது என்பதை இந்த திரி காட்டி நிற்கிறது. போற போக்கில் சுமன் நாளைக்கு கருணா துரோகி எண்டு சொன்னால், இல்லை அவர் சொக்கதங்கம் எண்டு எழுதும் அளவுக்கு காதல் முற்றி விடும் போல உள்ளது.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

5 hours 35 minutes ago
இதை சொன்ன சுமந்திரனுக்கு இது தெரியாதா? சுமந்திரன் வாயை திறந்தால் 90 களிலேயே 15-35 ஆயிரம் கொடுக்கவேண்டும். அதுவும் பயங்கரவாத சட்ட்தில் உள்ளே இருந்த யாருக்கும் அந்த வாய் திறந்ததே இல்லை. சுமந்திரன் மலையக தமிழர்களை வடக்கில் குடியேற்ற பேசுகிறார் என்றால் மலையக தமிழர்களின் காணிகளை திருட திருட்டுக்கு தரகு வேலைக்கு தயார் ஆகுகிறார் என்றே அர்த்தம். அது மேலே சுமந்திரனுக்கு குழை அடித்து கருத்து எழுதிய அனைவருக்கும் தெரியும் ......... ஆனால் இங்கே இன்னொருவருவரை வெற்றிகரமாக தாக்கி எழுதி இருக்கிறோமா? என்பதுதான் அடிப்படை கொள்கை....... அதில் மிகுந்த வெற்றியுடன் இந்த திரி நீளுகிறது.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

5 hours 35 minutes ago
இதன் பின்னால் உள்ள இராஜதந்திர முஸ்தீபை புரிந்து கொள்ளும் இயலுமை ஈழத்தமிழருக்கு இருந்திருதால்…. சிங்களவன் ஒன்பதுவாயில்களிலும் பிதுக்கி விட்டிருக்கும் அவல நிலையை அவர்கள் அடைந்திருக்க மாட்டார்கள்.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

5 hours 54 minutes ago
இந்த 26 ஆம் புலிகேசியை ஜனாதிபதி ஆக்கியதே உக்ரைனை அழிக்கத்தானே ........ அவர் அதை செவ்வனவே செய்து முடித்துள்ளார். அந்த வகையில் பாராட்டிடலாம். கடந்த 3 வருடமாக முழு பலத்தையும் பாவித்து முக்கிய மேற்கு ஆதிக்கம் ரசியாவுடன் மோதி தனது தோல்வியை ஒப்புக்கொண்டது என்பதுதான் இதில் முக்கிய செய்தி. ரசியாவையும் சீனாவையும் ஒரு வழிக்கு கொண்டுவர ஒரு கடடத்தில் ஈரானை அழித்து வெற்றிபெறலாம் என்று எண்ணினார்கள் அதற்கும் ஈரான் இஸ்ரேலுக்கு கொடுத்த அடியுடன் மூடி கட்டிக்கொண்டு கிளம்பி விடடார்கள். ஆனால் இந்த யுத்தத்தை உருவாக்கிய மேற்கு பணக்கார வர்க்கம் தனது இலக்கை அடைந்து வெற்றியை கண்டுள்ளார்கள். அவர்கள் இலக்கு ஆயுத விற்பனை .... உலகில் உணவு பற்றாக்குறையை உண்டுபண்ணுவது, (இரண்டிலும் வெற்றிதான்) அதன் மூலம் மோன்சடோ பேயர் ( Monsanto, Bayer ) என்ற இரண்டு மகா கம்பெனிகளும் உலகம் பூராக விவசாயத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவருவது. அவர்கள் எண்ணம் அமெரிக்காவிலேயே பெரும் வெற்றியை கண்டிருக்கிறது அமெரிக்க விவசாயிகள் பெரும் கடனில் மூழ்கி இனி இவர்களிடம் சரண் அடைவது என்பதை தவிர்த்து வேறு வழியின்றி பரம்பரை விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். முன்புபோல் விவசாயிகளால் இனி லாபம் பார்க்க முடியாது ....... இந்த இரண்டு கொம்பனிகளின் கொத்தடிமைகளாக இருந்துகொண்டு அவர்களின் விதைகள் உரங்களை கொள்வனவு செய்து அவர்களுக்கு உழைக்கும் ஒரு துரதிர்ஷ்ட்ட நிலையில் நிற்கிறார்கள். சமகாலத்தில் சீனா தென்னமெரிக்க நாடுகளில் விவாசாயத்தை முன்னெடுத்து பெரும் வெற்றியை கண்டுள்ளது இது ஆப்ரிக்காவிட்ற்கும் விரிவாக்கம் செய்யப்படலாம் ஆனால் மேற்கின் அடிமைகளான நைஜீரியா ருவாண்டா தென் ஆப்ரிக்கா அதை முறியடிப்பார்கள். தென் அமெரிக்காவில் ஒரு கலகத்தை உண்டுபண்ணி அமெரிக்க இராணுவ தளங்களை நிறுவுவதன் மூலம் சீனவை விரட்டிடலாம் எனும் நோக்கில்தான் இப்போ வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள். மீடியாக்களின் உதவியுடன் இப்போ மூளைச்சலவை தொடங்கி வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. இனி வெனிசுவேலா என்ற நாடே மேற்கை குறிப்பாக அமெரிக்காவை அழிக்கத்தான் தோன்றியது போன்ற பரப்புரையை இங்கிருக்கும் ஆடுகள் நம்ப தொடங்கும்போது அது நடக்கும் என எண்ணுகிறேன் அதன் மூலம் இரண்டு இலக்குகள் எடடபடும் ஒன்று வெனிசுவேலாவின் எண்ணெய் அவர்கள் சொத்தாக ஆகும் மற்றது தென்னமெரிக்காவில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கி விவசாயத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவது.
Checked
Mon, 12/15/2025 - 22:48
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed