புதிய பதிவுகள்2

மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி

14 hours 6 minutes ago
சிலவருடங்களுக்கு முன் ஜேவியின் ஒருவர் பிக்குகள் எல்லோரையும் தாம் ஆட்சிக்கு வந்தால் உள்ளுக்கு போடுவம் என்றது நினைவில் உள்ளது. (??). அது வேற வாயா?

சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!

15 hours 14 minutes ago
இறையாண்மை உடைய ஒர் அரசாங்கத்தினாலயே இந்தியாவின் அனுசாரணை இன்றி ஆட்சி செய்ய முடியாமல் இருக்கின்றது இதில எங்கயோ இருக்கும் (சமாதான வெடிகுண்டை மடியில் வைத்திருக்கும் )நோர்வேயினால் என்ன தான் செய்ய முடியும் ...ஏதாவது மீன் பிடி உபகர்ணங்களை வழங்குவதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது ..உலக அரசியலில் ...

சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!

15 hours 26 minutes ago
அனுரா சிங்களத்திலயும்,மோடி ஹிந்தியிலயும் பேசி பல்லாயிரம் மக்களின் கைதட்டலை பெறும் பொழுது நம்ம சிறியர் நோர்வே காரனுடன் பேசுவதற்கு நோர்வே பாசை தேவையோ ...😅 நோர்வே பலஸ்தீன மக்களுக்கே துன்பம் விளைவிக்கவில்லை பிறகு எப்படி எங்கன்ட மக்களுக்கு துன்பம் விளைவிப்பினம் ....யாசீர் அரபாத்துக்கு சமாதனத்திற்கான நோபல் பரிசு கொடுத்து அந்த அமைப்பை ...விலாசம் இல்லாமல் பண்ணிய பெருமை அவர்களுக்கு உண்டு என நான் நம்புகிறேன்

மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி

15 hours 33 minutes ago
இந்தியா சேட்டை விடுறாங்கள் அவங்களுக்கு எதிராக நீங்கள் சிங்கள மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் ....நான் (அனுரா)கண் காட்டும் பொழுது நீங்கள் வீதியில் இறங்கி அட்டகாசம் செய்ய வேணும் ...உங்களுக்கு தெரியும் தானே நானும் எனது கட்சிகாரரும் வீதிய்ல் இறங்க முடியாத சூழ் நிலை இருப்பது

பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?

15 hours 41 minutes ago
ஹொட்டேல் அறையிலிருந்து பல்கனி வழியாகக் குதித்து அல்லது அதிக போதைப்பொருள்/மது பானம் காரணமாக விழுந்து மரணம் எனச் செய்திகள் வெளி வரும்.

வினா விடை ​

16 hours 6 minutes ago
AI தளம் ஒன்று வழங்கிய பதில்: முக்கிய செயலிகள் எல்லோர் கை தொலைபேசியிலும் கட்டாயம் காணப்பட வேண்டிய அதி முக்கியமான செயலிகள் பலவாக உள்ளன. இவை பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உதவுகின்றன. கீழே சில முக்கியமான செயலிகளை பட்டியலிடுகிறேன்: 1. தொடர்பு செயலிகள் (Communication Apps) இவை பயனர்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. WhatsApp, Telegram, மற்றும் Signal போன்ற செயலிகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இவை உரையாடல், குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய உதவுகின்றன. 2. சமூக ஊடக செயலிகள் (Social Media Apps) Facebook, Instagram, Twitter போன்ற சமூக ஊடக செயலிகள் உலகத்தோடு தொடர்பில் இருக்க உதவுகின்றன. இவை தகவல்களை பகிர்வதற்கும், நண்பர்களுடன் இணைவதற்கும் பயன்படுகின்றன. 3. நிதி மேலாண்மை செயலிகள் (Finance Management Apps) PayPal, Google Pay மற்றும் Venmo போன்ற செயலிகள் நிதியை மேலாண்மை செய்ய உதவுகின்றன. இவை பண பரிமாற்றம் மற்றும் செலவுகளை கண்காணிக்க பயன்படுகின்றன. 4. ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி செயலிகள் (Health and Fitness Apps) MyFitnessPal, Fitbit மற்றும் Headspace போன்ற செயலிகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மன அமைதியை பெறவும் உதவுகின்றன. 5. தகவல் தேடும் செயலிகள் (Information Retrieval Apps) Google Search மற்றும் Wikipedia போன்ற செயலிகள் தகவல்களை விரைவில் தேடி பெற உதவும். 6. வானிலை கணிப்பு செயலிகள் (Weather Forecasting Apps) AccuWeather மற்றும் The Weather Channel போன்ற செயலிகள் வானிலை பற்றிய தகவல்களை வழங்குகின்றன. 7. பயணம் மற்றும் வழிகாட்டி செயலிகள் (Travel and Navigation Apps) Google Maps மற்றும் Uber போன்ற செயலிகள் பயணங்களை திட்டமிடுவதற்கும் வழிகாட்டுவதற்கும் பயன்படுகின்றன. 8. செய்தி வாசிப்பு செயலிகள் (News Reading Apps) BBC News, Flipboard போன்ற செய்திகள் வழங்கும் செயலிகள் உலக நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. இந்த அனைத்து வகையான செயலிகளும் கை தொலைபேசி பயன்படுத்துவோரின் வாழ்க்கையை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

குட்டி மிராஜ் வகுப்பு பயிற்சி வண்டி

16 hours 56 minutes ago
கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு). ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம். கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது. இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் பயிற்சிகளை, → லெப் கேணல் நிசாந்தன், → லெப் கேணல் எழிற்கண்ணன். → லெப் கேணல் பழனி, → லெப் கேணல் தன்ராஜ், ஆகிய கடற்புலிகளின் கட்டளையாளர்கள் வழங்கியிருந்தனர் -- Facebook

தமிழ் தேசிய இனத்தை நிராகரிக்கும் அநுரவின் நுட்பமான முடிவு

17 hours 23 minutes ago
Clean Sri Lanka....எனபது ..கடந்தகால ஆட்ட்சியினரையும்...நிகழ்கால ..ஊழல்களையும் கொண்டுவருவதற்கான முயற்சி...இதில்போய் இசுலாமியனையும் ,தமிழனயும் சேர்ப்பானா...காசுக்கு விலை போகக் கூடியசன் ..இந்த இரண்டுவகையும் என்பது என்.பி.பி ..அறியாததல்ல

விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன?

17 hours 23 minutes ago
கடந்த சனிக்கிழமை நியூயோர்க் பகுதியில் அனாமதேயமான முறையில் ட்ரோண் பறந்தது என்று தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டு இருந்தார்கள்.இங்கு இதைப் பற்றி யாரும் பேசியதாக இல்லை அதனால் பேசாமல் போய்ட்டேன்.கனடாவில் சில பணி இடங்களில் அவசர தேவைகளுக்கு முடிந்தவரை கையில் பணம் வைத்திருக்குமாறும் சொல்லி இருக்கிறார்கள்.

விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன?

18 hours 14 minutes ago
விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன? அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் விமானப்படைத்தளம் உள்ளது. அம்மாகாணத்தின் டேடன் நகரில் அமைந்துள்ள இந்த விமானப்படைத்தளம் உலகின் மிகப்பெரிய விமானப்படைத்தளங்களில் ஒன்றாகும். இதனிடையே, கடந்த சனிக்கிழமை முதல் விமானப்படைதளத்தின் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. அதேபோல், நியூயார்க், நியூஜெர்சி, யுடா உள்பட பல்வேறு மாகாணங்களில் விமான நிலையங்கள், விமானப்படைத்தளங்கள் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இந்த டிரோன் நிகழ்வில் வெளிநாட்டு நபர்களின் சதி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் நியூயார்க், நியூஜெர்சி போன்ற மாகாணங்களில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் அருகே டிரோன்கள் பறக்க ஒருமாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://www.thaarakam.com/news/3f180f22-dbcc-490f-9a35-8eeb6a4ace9c

சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!

18 hours 29 minutes ago
உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிக்காமல் தலைக்கு மேல் வெள்ளம் போனபின் நள்ளிரவில் அறிவித்தால் உலகில் எவராலும் இந்த Guarntee, warranty எல்லாம் கொடுக்க முடியாது. அதற்கு நேரமும் கிடைத்திருக்காது. ( கடைசி ஆறு மாதங்களில் இணைத்தலைமை நாடுகள் அதை பல முறை வலியுறுத்தின. அப்போது அதை செய்திருந்தால் கோட்டாவால் அதை செய்திருக்க முடியாது. சரணடைந்தது நோர்வேயிடம் அல்ல. மிக மோசமான கோட்டாவின் படையிடம். சரண்டைந்தவர்களை கொல்லும் மகா பாதகத்தை செய்தவர் அவரே. ஆனால் அதற்கும் தமிழரின் உரிமை போர் தோல்வியடைந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே நோர்வே தமிழருக்கு துன்பம் விளைவித்தனர் என்ற உங்கள் கூற்று தவறானது. யாரையோ காப்பாற்ற மீண்டும் மீண்டும் தமிழருக்குள் மட்டும் பேசப்படும் பொய் அது.

ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.

18 hours 48 minutes ago
சவுதிஅரேபியா ஏற்கனவே ஜேர்மனியை எச்சரிக்கை செய்திருக்கிறதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. Saudi Arabia warned Germany ahead of Christmas market ramming, source claims https://m.jpost.com/breaking-news/article-834294
Checked
Sun, 12/22/2024 - 12:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed