புதிய பதிவுகள்2

கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்

1 day 3 hours ago
கனேடியத் தமிழர் கூட்டின் பிரதிநிதிகளை சந்தித்த சிறீதரன் December 21, 2024 0 கனடாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடியத் தமிழர் கூட்டின் (Canadian Tamil Collective) பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். டொரொன்டோ வில் (Toronto) நேற்று வெள்ளிக்கிழகை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. ஈழத்தமிழர் விவகாரங்கள் சார்ந்து இருதரப்புக்குமிடையில் ஆக்கபூர்வமான பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=304156

புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை... - சிவாஜிலிங்கம்

1 day 3 hours ago
புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை... December 21, 2024 01:24 pm புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம் பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 13ஆம் திருத்த சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா செயற்பட்டு வருகின்ற போதிலும் எமது புதிய அரசாங்கம் அதில் பெருமளவு கரிசனை காட்டவில்லை என்றும் எம்.கே. சிவலிங்கம் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஜனாதிபதி இந்தியா சென்று இந்திய பிரதமருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அனைத்து தமிழ் தரப்பினுடைய கோரிக்கையாக இருந்து வருவது சமஸ்டி கோரிக்கையாகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை அரசியல் அமைப்பில் இருந்தும் கூட அவை அமுல்படுத்தப்படவில்லை. தற்போது இந்தியாவை சந்தித்த ஜனாதிபதி கூட அரசியல் உரிமை தொடரில் எந்த விதமான திட்டவட்டமான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார். புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அரசியலமைப்பு என்பது பழைய மொந்தையிலேயே புதிய கள்ளு போன்று இருக்குமே தவிர எவ்வித தீர்வும் கொண்டதாக இருக்கப்போவதில்லை. முதல் தடவையாக இனவாதத்தைக் கொண்டிருக்க கூடிய ஒரு அரசு பதவி ஏற்றி இருக்கிறது. இவ்வாறு மிகப்பெரும் வெற்றி பெற்றும் கூட அவர்களது சிந்தனையில் பாரிய மாற்றம் இல்லை. ஒற்றை ஆட்சியை வைத்துக்கொண்டு தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல செயற்ப்பட்டு வருகிறார்கள். அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமையை முன் வைப்பதற்கான கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன் வைக்க வேண்டும் பல உயிர் தியாகங்களை செய்த பின்பும் நாம் பிரிந்து செயல்பட முடியாது. எனவே, அனைவரையும் ஒன்று படுமாறு அழைப்பு விடுவதாகவும் இதன் போது குறிப்பிட்டார். இதற்கு புலம்பெயர்ந்தவர்களும் ஈழத்தில் இருக்கக்கூடிய அத்தனை தமிழ்த் தேசிய அணியினரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 2013 ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா தமிழ்நாடு கோரிக்கை முன்வைத்து அதனை உறுதியுடன் செயல்படுத்தி இருந்தார். அதே கோரிக்கையோடு தான் தற்போது விஜய்யினுடைய கட்சியும் முன்னோக்கி செல்கிறது. அதேபோல தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்களும் ஒரே கோரிக்கையுடன் பயணிப்போமாக இருந்தால் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இலங்கை தமிழரசுக்கட்சி 75 ஆண்டுகளை தாண்டியும் தற்போதும் தலைமைத்துவம் இல்லாத நிலையில் இலங்கை நீதிமன்றத்தை நாடுகின்ற நிலைமையே காணப்படுகிறது. எனவே, அவர்கள் சமஸ்டியை கைவிட்டு ஒரு கூட்டு சமஸ்டி ஊடாக அனைவரையும் உள்வாங்கி முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றும் சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=197636

"பெண்ணே புயலாகு” 

1 day 3 hours ago
"பெண்ணே புயலாகு” இலங்கைத் தீவானது, தொன்மை வாய்ந்த இரு நாகரீகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்கின என்பது வரலாற்று உண்மையாகும். என்றாலும் சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் கைமாறியதை அடுத்து, சிங்களப் புத்த பேரினவாதம் மேலாண்மை பெற்றது. இதனால் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்குமுறை குரூரமான வன்முறை வடிவமாக, கொஞ்சம் கொஞ்சமாக 1956, 1958, 1966, 1977, 1981, 1983, 1985, கலவரமாக மாறத் தொடங்கி, அது 2009 உச்சகட்டத்தை அடைந்தது வரலாறு ஆகும். வன்னி அடிப்படையில் நீர் மேலாண்மைக் குடியிருப்பு ஆகும். ஆறுகளும், கடல்களும், குளங்களும், நீரிணைகளும், வாய்க்கால்களும், ஓடைகளும், நீரேரிகளும் அதனை வடிவமைத்தன. நீராலேயே அதன் ஊர்கள் பலவும் பெயரிடப் பட்டன. அதைவிட அங்கு வயல்கள், தோட்டங்கள், சதுப்புக்கள், சிறுகுன்றுகள், பெருமரங்கள், காடுகள் என்பனவற்றுடன் பறவைகள், விலங்குகள் முதலான அப்பிராந்தியத்திற்கே சிறப்பாகவுள்ள மரபுரிமைச் சொத்துக்களைக் கொண்டுள்ளன. ஆனால் 2008 / 2009 ஆண்டில் அங்கு ஏற்பட்ட கொந்தளிப்பான சூழலில், போர் ஆழமான வடுக்களைச் செதுக்கி, அமைதி தொலைதூர கனவாக மாறிய அந்த தருணத்தில், 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கையில் 30 வருடங்கள் தொடர்ந்த ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட அந்த தருணத்தில், அன்னக்கொடி என்ற இளம் தாயும் அவளது மகள் மலர்மேனியும் முல்லைத்தீவில் வாழ்ந்து கொண்டு இருந்தனர். முல்லைத்தீவில் நடந்த மோதலில், இதயத்தை உலுக்கும் கடைசி நாட்களில், ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் தப்பிப் பிழைத்து உள்நாட்டு அகதிகளாக, தங்கள் வீட்டை மட்டும்மல்ல, தங்கள் குடும்பத்தின் தலைவன், அன்னக்கொடியின் கணவன் மற்றும் அவளது மகனையும் காணாமலாக்கப்பட்டதால், வன்முறை மற்றும் அவநம்பிக்கையின் எச்சங்கள் நிழல்கள் போல நீடித்திருக்கும் அந்த மண்ணில் இருந்து இருவரும், களப்பு வழியாக, சிறிய நீர்ப்பகுதி, சேற்றுப்பகுதி ஊருக்குள்ளாலும் காட்டு வழிகளினாலும் செத்தவர் போக மிஞ்சியவர்கள், காயப்பட்டவர்கள் என பல பேருடன் இடம் பெயர்ந்து தற்காலிக குடிகளில், வாழ அவர்களை விட்டுவிட்டது. இடம் பெயர்ந்த மக்களாக, வன்னியில் அவர்களது வாழ்க்கை கடுமையானதாக, அவர்களுக்கு நிலையான தங்குமிடம் இல்லாமலும் எந்த நிரந்தர வருமானம் இல்லாமலும் இருந்தது. உணவைத் தேடுவதற்கும் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கும் அவர்களின் வாழ்க்கை முடிவில்லாத போராட்டங்களாக இருந்தன. அவர்களின் தற்காலிக குடியிருப்புக்கு அருகிலுள்ள இராணுவ முகாம் அவளுக்கு போரையும் அதன் பின்விளைவுகளையும் நினைவூட்டிக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு இரவும், அன்னக்கொடி ஒழுங்காக நித்திரை கொள்ளவில்லை. எந்த சத்தமும் அவளுக்கு ஒரு பயத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. உடுத்த உடையைத் தவிர வேறு வேறெதுவும் எடுத்துச் செல்ல முடியாமல் வந்தவர்கள் இவர்கள். வெள்ளப் பாதிப்பினாலோ புயலின் தாக்கத்தினாலோ அகதியானவர்களல்ல. இரத்தம், தீ, காயம், வலி என்ற ஏராளமான வதைகளிலிருந்து, மரணப் பொறிகளிலிருந்து தப்பியவர்கள்; தப்ப முனைந்தவர்கள் தான் இவர்கள். யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது எதோ ஒரு வகையில் தொடர்வதாகவே இருந்தது. குண்டு வீச்சில்லை, துப்பாக்கி வேட்டுகள் இல்லை, மரணம் இல்லை, மற்றபடி அத்தனை துன்பங்களும் வலிகளும் துயரங்களும் அலைச்சல்களும் இன்னும் இருந்து கொண்டே அவர்களுக்கு இருந்தது. அதிலும், முல்லைத்தீவில் இத்தனை இடையூறுகளுக்கிடையிலும் அவர்கள் கண்டிராத கொடுமை இப்ப அவர்களுக்கு நேரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ நேரிடும் பாலியல் வன்கொடுமை தான்! அன்னக்கொடிக்கு ஒரு நாற்பது அகவை தான் இருக்கும். அவளின் கண்கொள்ளா அழகும் இனிமை நிறைந்த வார்த்தைகளும், அதற்கு ஈடான, ஆனால் இளம் பருவத்தின் பூரிப்பில் தவழும் வஞ்சிக்கொடி போன்று மெல்லிய இடையினையும் மலர் போன்ற மென்மையான வண்ண மேனியையும் கொண்ட பதினெட்டு அகவை மலர்மேனிக்கும், அவர்களின் நிறமும் தோற்றமும் தான் எதிரியாகியது அங்கே. அவர்கள் வறுமையிலும் துன்பத்திலும் படும் வேதனையை சாதகமாக்கி, தங்கள் காம பசிக்கு அவர்களை இரையாக்குவதிலேயே சிலரின் கண்கள் மேய்ந்து கொண்டு இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பாலியல் வன்முறைகள் என்பது வெறும் பாலியல் வன் புணர்வு அல்ல. அதற்கும் மேலாக, பாலியல் நோக்கத்துடன் கூடிய பேச்சுக்கள், சீண்டல்கள், பார்வைகள், அடக்குமுறைகள், மிரட்டல்கள் போன்ற எல்லாமே அடங்கும். எனவே எடுத்தவுடன் ஒருவனின் வெளிப்படையான நடவடிக்கைகளை வைத்து எடை போடுவது கடினம். அவளின் குடியிருப்புகளில் வாழும் பழக்கமான சில ஆண்கள், சில சமயங்களில், அவள் படும் கஷடங்களைப் பார்த்து கருணை என்ற போர்வையில் அவளை அணுகி உதவியும் செய்தார்கள். ஆனால், அதைச் சாட்டாக வைத்து நெருங்கிப் பழக முயன்றாலும், அன்னக்கொடி அதைச் சமாளித்து, தன்னைச் சுற்றியுள்ள கடுமையான யதார்த்தத்திலிருந்து பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வாழ்க்கையைச் நகர்த்தினாள். "பெண்கட்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும் மக்களைப் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும் உலகினைப் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும் கல்வியைப் பேணுதற்கே!" என்ற பாரதிதாசன் அடிகளை நன்கு உணர்ந்த மலர்மேனி, கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவளாக, தன் தாயின் கனவுகளையும் தன் கனவுகளையும் சுமந்து இடம்பெயர்ந்த குடியிருப்பின் வரம்புகளுக்கு அப்பால், ஒரு வாழ்க்கையை செதுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், அறிவியல் பாடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு உட்கார வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ஆனால் அந்தக் குடியிருப்பில் தாயும் மகளுமாக இரு பெண்கள் தனிய வாழ்வது, இளம் பெண்ணான மலர்மேனிக்கு பெரும் சவாலாகவும் இருந்தது. "தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும், காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம் சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை, தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே," ஒரு நாள் மாலை, குடியிருப்பின் மீது சூரியன் நீண்ட நிழல்களைப் பரவிய போது, மலர்மேனி மாலை வகுப்புகளில் இருந்து வீடு திரும்பி வந்து கொண்டிருந்தாள். அந்த குடியிருப்பை சேர்ந்த, ஆண்டில் முதிர்ந்த ஒருவன், அவளை ஒரு மூலையில் வழி மறித்தான். உச்சிக் குடுமி வைத்து மொட்டையடித்த தலையை உடையவன் அவன். தன் காதில் கடுக்கன் அணிந்திருந்தான். கிழிந்த கறை பட்ட ஆடை அணிந்திருந்தான். அவன் நம் தெருவை விட்டு எங்கும் செல்லாதவன். அவன் என்ன செய்தான் தெரியுமா? "பாரா, குறழா, பணியா, ‘பொழுது அன்றி, யார், இவண் நின்றீர்?’ எனக் கூறி, பையென, வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது, ‘தையால்! தம்பலம் தின்றியோ?’ என்று, தன் பக்கு அழித்து, ‘கொண்டீ’ எனத் தரலும் யாது ஒன்றும்" அவன் அங்கே என்னைப் பார்த்தான். அவன் குள்ளன். பணிவில்லாமல் பேசினான். "பொழுதல்லாப் பொழுதில் இங்கே நிற்கிறாயே, நீ யார்" என்று கேட்டுக் கொண்டே மெதுவாக நெருங்கினான். வைக்கோலைக் கண்டு கிழட்டு எருது வருவது போல வந்தான். அங்குமிங்கும் ஒதுங்கவில்லை. "பெண்ணே! வெற்றிலைப் பாக்குப் போட்டுகொள்கிறாயா" என்று கேட்டான். (வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொள்கிறாயா என்றால் என்னுடன் கூடியிருக்க ஒப்புகிறாயா என்பது காமுகர் பேசும் பேச்சு) இருவருக்கும் இடையே இருக்கும் இடை வெளியைக் குறைத்துக் கொண்டு என் பக்கம் வந்து "வாங்கிக்கொள்" என்று வெற்றிலைப் பாக்கைக் கொடுத்தான். "வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி, ‘கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ' ‘மற்று யான்" நான் வாய் திறந்து எதுவும் கூறவில்லை. சும்மா நின்று கொண்டிருந்தேன். சற்றே அகன்று நின்றான். "சிறுமியே, நீ என் கையில் அகப்பட்டுக் கொண்டாய்" என்றான். அவள் ஒருவாறு அங்கிருந்து தப்பி வீடு வந்தாள். அன்னக்கொடி தன் மகளின் கண்களில் இருந்த பயத்தைப் பார்த்தாள். அன்று இரவு, தாயும் மகளும் தங்கள் பயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினர். “காதலுக்கு நான்கு கண்கள் கள்வனுக்கு இரண்டு கண்கள் காமுகனின் உருவத்தில் கண்ணுமில்லை காதுமில்லை” அன்னக்கொடி முணுமுணுத்தாள். அவர்கள் போரில் தப்பிப்பிழைத்தாலும் தொந்தரவுகள் மட்டும் நின்றபாடில்லை. அவர்கள் இடம்பெயர்ந்தனர், வீடு மற்றும் குடும்பத்தை இழந்தனர், இந்த பலவீனமான இருப்பில், அன்னக்கொடி தனது மகளை அவர்களைச் சுற்றியுள்ள கடுமையான உலகத்திலிருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று கடுமையாக அன்று இரவு முழுவதும் சிந்தித்தாள். காம வெறியர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம், அறம், மனித நேயம், கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு, நல்லொழுக்கம் முதலிய மனிதப் பண்புகளில் நாட்ட மில்லை. இவர்களின் நோக்க மெல்லாம் உடல் மற்றும் உள்ள இச்சைகளைத் தணிப்பதேயாகும். இவர்களுக்கு அறம் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. அப்படி எனறால், "தீ என்னை வாட்டிடினும் கையைத் தொடாதேயடா - இந்த முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி மூச்சுப் பெரிதில்லை காண்" என்று வலிமையை நெஞ்சில் ஏற்றி "நான் ஒரு துர்கா.” என்று எழவேண்டும் என்று முடிவெடுத்து, அதை மகளிடம் தக்க தருணத்தில் சொல்ல முடிவெடுத்தாள். ஒரு நாள் மாலை, அன்னக்கொடி எண்ணெய் விளக்கின் மங்கலான ஒளியில் அமர்ந்து, மலர்மேனியின் ஒரே பள்ளி உடையில் கிழிந்த ஒரு பகுதியை தைத்துக் கொண்டு இருந்தாள். அவள் விரல்கள் கவனமாக நகர்ந்தன, ஆனாலும் அவளது அசைவுகளில் உறுதியான வலிமை இருந்தது. அருகில் வீட்டுப் பாடங்களை முடித்துக் கொண்டிருந்த மலர்மேனி, அம்மாவின் முகபாவத்தைக் கவனித்து அமைதியாகப் பேசினாள். "அம்மா, சில சமயங்களில் விட்டுக்கொடுக்கணும்னு தோணுது, இளைஞர்கள், நடுத்தர ஆண்கள் முறைத்துப் பார்க்கும் விதம் ... அவர்கள் சொல்லும் விடயங்கள் ... மற்றும் ராணுவ வீரர்கள்..." அவள் கொஞ்சம் நிறுத்தினாள், வலியால் அவள் கண்கள் இருண்டன. "நான் சிக்கிக் கொண்டது போல் உணர்கிறேன்." என்றாள். அன்னக்கொடி தைத்துக் கொண்டு இருந்த ஆடையைக் கீழே போட்டு விட்டு மகளின் கண்களை ஆழமாகப் பார்த்தாள். அவள் மலர்மேனியின் கையை இறுக்கிப் பிடித்தாள். "மலர்மேனி," தாயின் குரல் மென்மையாக ஆனால் உறுதியாக இருந்தது "புயல் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டாள். தாய் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் அவள் தலையை ஆட்டினாள். “என் மகளே, புயல் பயங்கரமானது, அது மலைகளை நகர்த்துகிறது, பூமியை அசைக்கிறது, அதன் பாதையில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறது. மக்கள் அதைக் கட்டுப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் முடியாது. நாமும் புயல்களாக இருக்க வேண்டும். நாம் அவர்களுக்குத் தீங்கு செய்ய முற்படுவதால் அல்ல, ஆனால் நம்மை அசைக்க முடியாது என்பதை உலகுக்கும் அவர்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக." என்றாள். அவளின் கண்ணீரைத் தன் கையால் துடைத்துவிட்டு, "பெண்ணே புயலாகு” என்று மகளைக் தட்டிக்கொடுத்தாள். "வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு வானம் தண் துளி தலைஇ, ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று" போல் “இதை நினைவில் கொள் மலர்மேனி. எமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை இனிது என்று மகிழத் தேவையும் இல்லை அல்லது வெறுப்பில் ‘வாழ்க்கை துன்ப-மயம்’ என்றும் கூறத்தேவையும் இல்லை, நாங்கள் நதியைப் போன்றவர்களும் கூட , வானம் மின்னி மழை பொழிந்து கல்லை உருட்டிக்கொண்டு இரைச்சலுடன் பாயும் ஆறு போல், எந்தப் பாறையையும் அறுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தவர்கள். இந்த அவர்களின் அத்துமீறல்கள் ... நம்மைத் தடுக்க முயற்சி செய்யலாம், ஆனால் நாம் தொடர்ந்து பாய்ந்து கொண்டே இருப்போம். நாங்கள் பயப்படவோ அல்லது பதுங்கவோ இங்கு வரவில்லை. எங்கள் பாதையை செதுக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். இதை உணர் மலர்மேனி, என் அன்பு மகளே !, 'பெண்ணே புயலாகு', நீ துர்காவாக எழுந்து நில்!!, ஆறாக பாய் !!!" என்றாள். மறுநாள் காலை, மலர்மேனி பள்ளிக்குச் செல்லும்போது, அம்மாவின் வார்த்தைகளை கவசம் போல சுமந்தாள். இளைஞர்கள் மற்றும் நடுத்தர ஆண்கள் ஏளனம் செய்வார்கள், சிப்பாய்கள் ஏளனம் செய்வார்கள் என்று அவளுக்குத் தெரியும், ஆனால் அவள் இனி ஒரு புயல், அவள் ஒரு துர்கா! அவள் எதிர்பார்த்தது போலவே, உள்ளூர் கூட்டம் சாலையோரம் நின்றும் மதகில் குந்தி இருந்தும், அவள் அவர்களை கடந்து செல்லும் பொழுது அவளுக்கு பாலியல் சார்ந்த கேலி மற்றும் மிரட்டல்கள் செய்தார்கள். ஆனால் இந்த முறை அவள் பயந்து விரைவாக நடக்கவில்லை, முகத்தை மறைக்கவில்லை, ஆனால் "ஏன் என்னை முறைக்கிறாய்?" அவள் துணிந்து கேட்டாள், அவள் குரல் உறுதியாக, கடினமாக இருந்தது. அவளின் பார்வை, கண்ணகி போல, அவர்களை எரித்துவிடும் போல இருந்தது. அந்த ஆண் கூட்டம் அதிர்ச்சியடைந்தனர். அவள் அவர்களைத் தவிர்ப்பாள், தங்கள் பார்வையில் குறுகிவிடுவாள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்களில் ஒருவன், தங்கள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றான், மீண்டும் கேலி செய்தான். "எங்களிடம் அப்படிப் பேசும் நீங்கள், நாம் யார் என்று நினைக்கிறீர்கள்?" என்று மிரட்டலாக கேட்டான். மலர்மேனி தலை நிமிர்ந்து நின்றாள். “நான் அன்னக்கொடியின் மகள் மலர்மேனி. நான் இங்கு படிக்க வந்திருக்கிறேன், எதுக்கும் தகுதியற்ற, தெரு நாய்களிலும் கேவலமான உன்னுடைய பேச்சைக் கேட்க அல்ல." ஆணித்தரமாகச் சொன்னாள். “மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்” "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உனக்கு வள்ளுவர் சொல்லியது . இதெல்லாம் உனக்கு எங்கே விளங்கப்போகுது?" என்றாள். அவளுடைய எதிர்ப்பானது அந்த கூட்டத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது, ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே, கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே," அவன் பயந்துவிட்டான். அதனை அறிந்து கொண்ட அவள், மேலும் ஒரு கை மண்ணை அள்ளி அவன் மேல் தூவினாள். அவன் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி வேகமாக கத்த ஆரம்பித்தான். அவள் புயலாக நடந்து செல்லும் போது அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டு அமைதியாகிவிட்டனர். மலர்மேனி தனக்குள் சிரித்துக் கொண்டாள். இது ஒரு சிறிய வெற்றிதான், ஆனால் அது அவளுடைய கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான முதல் படியாகும். அன்று மாலை அன்னக்கொடி தங்களின் எளிய உணவை தயார் செய்த போது மலர்மேனி தன் தாயிடம் நடந்த சம்பவத்தை கூறினாள். அன்னக்கொடியின் கண்கள் பெருமிதத்தாலும் சோகத்தாலும் நிறைந்தன. மலர்மேனியின் பயணம் எளிதானது அல்ல என்பதை அவள் அறிந்திருந்தாள், ஆனால் அவள் மகளின் இந்த உள் வலிமையை ஒரு ஆரம்ப வெற்றியாகக் கண்டு மகிழ்ந்து, அவளை அணைத்து தட்டிக்கொடுத்தாள். "பெண்ணே புயலாகு” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "பெண்ணே புயலாகு” [சுருக்கம்] இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தருணத்தில், அன்னக்கொடி என்ற இளம் தாய், தனது கணவன், மகன் இருவரும் முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டதால், மகள் மலர்மேனியுடன் தப்பிப் பிழைத்து உள்நாட்டு அகதிகளாக, அவர்களது வாழ்க்கை கடுமையானதாக, எந்த நிரந்தர வருமானம் இல்லாமலும் இருந்தது. யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது எதோ ஒரு வகையில் தொடர்வதாகவே இருந்தது. அதிலும், முல்லைத்தீவில் இத்தனை இடையூறுகளுக்கிடையிலும் அவர்கள் கண்டிராத கொடுமை இப்ப அவர்களுக்கு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ நேரிடும் பாலியல் வன்கொடுமை தான்! அன்னக்கொடிக்கு ஒரு நாற்பது அகவை தான் இருக்கும். அவளின் கண்கொள்ளா அழகும் இனிமை நிறைந்த வார்த்தைகளும், அதற்கு ஈடான, ஆனால், இளம் பருவத்தின் பூரிப்பில் தவழும் வஞ்சிக்கொடி போன்று, மெல்லிய இடையினையும் மலர் போன்ற மென்மையான வண்ண மேனியையும் கொண்ட, பதினெட்டு அகவை மலர்மேனிக்கும், அவர்களின் நிறமும் தோற்றமும் தான் எதிரியாகியது அங்கே. அவளின் குடியிருப்புகளில் வாழும் பழக்கமான சில ஆண்கள், சில சமயங்களில், அவள் படும் துன்பங்களைப் பார்த்து, கருணை என்ற போர்வையில், அவளை அணுகி, உதவியும் செய்தார்கள். ஆனால், அதைச் சாட்டாக வைத்து நெருங்கிப் பழக முயன்றாலும், அன்னக்கொடி அதைச் சமாளித்து, வாழ்க்கையை நகர்த்தினாள். மலர்மேனி, கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவளாக, ஒரு வளமான வாழ்க்கையைச் செதுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், உறுதியாக இருந்தாள். ஆனால் அந்தக் குடியிருப்பில் தாயும் மகளுமாக இரு பெண்கள் தனிய வாழ்வது, பெரும் சவாலாகவும் இருந்தது. ஒரு நாள் மலர்மேனி மாலை வகுப்புகளில் இருந்து வீடு திரும்பி வந்துகொண்டிருந்தாள். ஆண்டில் முதிர்ந்த ஒருவன், "இருட்டில் போகிறேயே, துணைக்கு வரவா?" என்று கேட்டுக் கொண்டே மெதுவாக நெருங்கினான். "களைத்திருப்பாய், இதை வாங்கிக்கொள்" என்று எதோ ஒன்றைக் கொடுத்தான். என்றாலும், அவள் ஒருவாறு அங்கிருந்து தப்பி வீடு வந்தாள். அன்னக்கொடி தன் மகளின் கண்களில் இருந்த பயத்தைப் பார்த்தாள். அன்று இரவு, தாயும் மகளும் தங்கள் பயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினர். காம வெறியர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம், அறம், மனித நேயம், கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு, நல்லொழுக்கம் முதலிய மனிதப் பண்புகளில் நாட்ட மில்லை. இவர்களின் நோக்கமெல்லாம் உடல் மற்றும் இச்சைகளைத் தணிப்பதேயாகும். இவர்களுக்கு அறம் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. மகளே, வலிமையை நெஞ்சில் ஏற்றி "நான் துர்கா என எழுந்து, 'பெண்ணே புயலாகு' " என்றாள். "அம்மா, சில சமயங்களில் விட்டுக்கொடுக்கணும்னு தோணுது, இளைஞர்கள், நடுத்தர ஆண்கள் முறைத்துப் பார்க்கும் விதம் ... அவர்கள் சொல்லும் விடயங்கள் ... மற்றும் ராணுவ வீரர்கள்..." அவள் கொஞ்சம் நிறுத்தினாள், வலியால் அவள் கண்கள் இருண்டன. "நான் சிக்கிக்கொண்டது போல் உணர்கிறேன்." என்றாள். “என் மகளே, புயல் பயங்கரமானது, அது மலைகளை நகர்த்துகிறது, பூமியை அசைக்கிறது, அதன் பாதையில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறது. மக்கள் அதைக் கட்டுப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் முடியாது. நாமும் புயல்களாக இருக்க வேண்டும். நாம் அவர்களுக்குத் தீங்கு செய்ய முற்படுவதால் அல்ல, ஆனால் நம்மை அசைக்க முடியாது என்பதை உலகுக்கும் அவர்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக." என்றாள். அவளின் கண்ணீரைத் தன் கையால் துடைத்துவிட்டு, "பெண்ணே புயலாகு” என்று மீண்டும் மகளைக் தட்டிக்கொடுத்தாள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

"மாற்ற மொன்றே மாறாதது"

1 day 3 hours ago
"மாற்ற மொன்றே மாறாதது" "மலைகள் உயரும் சிகரம் கவிழும் விதைகள் முளைக்கும் பூக்கள் வாடும் இன்று இருந்தவன் நாளை இல்லை காலம் காட்டும் உண்மை இதுவே!" "மழை பெய்யுது மண்ணை அரிக்குது பனி பொழியுது உயிர்களை முடக்குது வெயில் அடிக்குது நிலத்தை உலர்த்துது பருவம் செதுக்கும் செயல் இவையே!" "ஆறுகள் பாயும் ஓட்டம் வேறுவேறே சிற்றலை மோதும் வடிவம் பலபலவே காற்று வானம் எல்லாம் மாறுமே மாற்ற மொன்றே மாறாதது என்றுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

திண்ணை

1 day 3 hours ago
சரி சரி அலுவலை வடிவா முடிச்சுக்கொண்டு கெதியா வாங்கோ. வந்து ரெண்டு சுஜ ஆக்கம் போட்டால்தான் சரி வரும். நிர்வாகத்துக்கும் குளிர் விட்டுப்போச்சு😂

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்திய – இலங்கை இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் – யாருக்கு இதனால் சாதகம்?

1 day 3 hours ago
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்திய – இலங்கை இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் – யாருக்கு இதனால் சாதகம்? December 21, 2024 12:56 pm இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் கடல் மார்கமான பாலமொன்றை அமைக்கும் திட்டம் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரவலாக பேசப்படுகிறது. 2015ஆம் ஆண்டுமுதல் இந்தப் பாலம் குறித்த பேச்சுகள் இருநாட்டிலும் உள்ள போதிலும் இதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியுற்றே வருகின்றன. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்தியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுடன் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் இந்தப் பாலத்தை அமைப்பதற்கான இணக்கப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு எதிராக கருத்துகள் இலங்கையில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன. என்றாலும், தொடர்ச்சியான பேச்சுகளில் ரணில் அரசு ஈடுபட்ட போதிலும் ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது இத்திட்டத்துக்கு என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியா – இலங்கைக்கு இடையிலான பாலம் பற்றிய பேச்சுகள் 2015ஆம் ஆண்டு ஆரம்பமாகிவை அல்ல. இந்தப் பேச்சுகள் ஆரம்பமாகி ஒன்றரை நூற்றாண்டு கடந்துள்ளது. 1860ஆம் ஆண்டுதான் முதல் முதலில் இந்தப் பாலத்தை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. அப்போது இலங்கையையும் இந்தியாவையும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துக்கொண்டிருந்தனர். ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என அழைக்கப்பட்ட இந்த பகுதியில் பாலத்தை அமைத்தால் இருநாடுகளையுக்கும் இணைக்க முடியும் என்ற யோசனையை முன்வைத்தனர். என்றாலும், பின்னர் அந்தப் பேச்சுகள் அப்படியே கைவிடப்பட்டது. பின்னர் 1955 ஆம் ஆண்டு ராமசாமி முதலாளியார் தலைமையில் குழுவொன்று இந்தியாவில் நியமிக்கப்பட்டது. அக்குழு சிறிதுகாலம் இத்திட்டம் தொடர்பில் ஆராய்ந்தது. என்றாலும், குறித்த பேச்சுகளும் சிறிது காலத்தின் பின்னர் இடைநிறுத்தப்பட்டன. 2002ஆம் ஆண்டில் மீண்டும் இந்த யோசனையை ஐ.தே.க இந்தியாவிடம் முன்வைத்தது. என்றாலும், யுத்த சூழல் காரணமாக குறித்த பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டன. பின்னர் 2015ஆம் ஆண்டு இந்தப் பேச்சுகள் எழுந்தன. தொடர்ச்சியாக பாலத்தை அமைக்க இந்தியா முழு ஈடுபாட்டுடன் இருக்கிறது. ஆனால், இலங்கையின் அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பால் தொடர்ந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாதுள்ளது. முன்னாள் எம்.பிகளான லக்ஷ்மன் கிரியெல்ல, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயகார ஆகியோர் இத்திட்டத்துக்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டவர்களாக உள்ளனர். அதன் பின்னர் பௌத்த பீடங்கள் எதிர்த்தன. தற்போது கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூட இத்திட்டத்தை எதிர்கிறார். இந்தப் பாலத்தை அமைத்து இந்தியாவின் ஊடாக தாய்லாந்தின் பெங்கொக் நகர்வரை தரைவழியாக பயணிக்கும் வகையில் அதிவேக பாதையை அமைக்கும் திட்டத்தை இந்தியா முன்மொழிந்திருந்தது. இத்திட்டத்துக்காக ஆரம்பத்தில் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என இந்தியா கூறியது. பின்னர் 6.5 பில்லியன் டொலர் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் எனவும் இந்தியா முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியிருந்தது. ஆனால், இதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுவதுடன், இந்த விடயத்தில் இலங்கை அதன் முழு ஈடுபாட்டை காட்டவில்லை. பாலத்தை அமைப்பதன் ஊடாக இலங்கைக்கே பாரிய நன்மைகள் உள்ளன. இந்த உண்மையை மறைக்கும் விதத்தில் இலங்கையின் அரசியல்வாதிகள் தெரிவித்த எதிர்ப்புகள் மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கை மாறும், இந்தியாவில் உள்ள பிச்சைகாரர்கள்கூட இலங்கைக்கு வந்துவிடுவார்கள், இத்திட்டத்தின் ஊடாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய ஆபத்து, பொருளாதார சுரண்டப்படும், பௌத்தத்திற்கு பாதிப்பு என பல்வேறு பொய்யான காரணிகளை மக்கள் மத்தியில் விதைத்ததால் இன்றுவரை இத்திட்டத்தை முன்னெடுக்க முடியாதுள்ளது. இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பாலம் அமைக்கப்பட்டால் இலங்கை மக்களின் வாழ்வாதாரம் விரைவாக உயர்ந்துவிடும் என சர்வதேச பொருளாதார ஆய்வாளர்களும் உறுதியாக கூறுகின்றனர். பாலம் அமைக்கப்பட்டால் இந்தியாவில் இருந்து மிகவும் குறைந்த செலவில் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். அதன் ஊடாக இலங்கையில் பொருட்களில் விலைகள் மிகவும் குறைவடையும். ஏற்றுமதிகள் அதிகரிக்கும், இலங்கை உற்பத்தியாளர் ஒருவர் தமது உற்பத்தியை தமது வாகனத்தின் ஊடாகவே இந்தியாவுக்கு இலகுவாக கொண்டுசென்று விற்பனை செய்ய முடியும். இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல இலட்சங்களில் அதிகரிக்கும். அதன் ஊடாக இலங்கையின் சுற்றுலாத்துறை புதிய பாய்ச்சலை பெறும். இந்தியா ஊடாக சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு இலகுவாக வருகை தர முடியும். விமானம் மற்றும் கப்பல்களுக்கான செலவுகளை தவிர்த்து இலகுவாக சாதாரண பிரஜை ஒருவர் இந்தியா செல்ல முடியும். குறிப்பாக ஒரு தீவில் வாழ்கின்றோம் என்ற மனநிலையில் இருந்துகூட இலங்கையர்கள் விடுபட்டு உலகத்துடன் இலகுவாக ஒன்றிணையும் வாய்ப்புகளை பெற முடியும். பௌர்த்தவர்கள் அதிகமாக செல்லும் புத்தகயா எனப்படும் மகாபோதிக்காக யாத்திரையைகூட இலகுவாக மேற்கொள்ள முடியும். இந்தியாவுக்கு இந்தப் பாலத்தின் ஊடாக இலங்கையில் வர்த்தகத்தை மாத்திரமே மேற்கொள்ள முடியும். ஆனால், இலங்கைக்கு இதன் ஊடாக அனைத்துத் துறைகளிலும் நன்மையே கிடைக்கும் என்பதை இலங்கையின் அரசியல்வாதிகள் மறைத்து தங்களது சுயலாப அரசியலை செய்கின்றனர். பாலத்தின் ஊடாக விசா இல்லாத ஒருவர் வரமுடியாது. இருநாடுகளிலும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலமாக இருக்கும். இவ்வாறு இந்தப் பாலம் மிகவும் பாதுகாப்பானதாகவும் இலங்கைக்கு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை தரக்கூடியதாக இருந்தும் இதனை அரசியல்வாதிகள் எதிர்ப்பதன் நோக்கம் வெறுமனே அவர்களது இனவாத, மதவாத மற்றும் சுயலாப அரசியலுக்காக மாத்திரமே என்பதை உணராதவர்களாக சிங்கள மக்கள் உள்ளனர். தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமும் இந்தப் பாலம் தொடர்பிலான பேச்சுகளில் ஈடுபட கூடாதென போர்க்கொடி உயர்த்துகின்றனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு தமது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள போதிலும் இப்பாலம் தொடர்பில் பேசப்பட்டதான எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. இருநாடுகளுக்கும் இடையில் கேபிள் முறை மூலம் மின்சார பரிமாற்றம் மற்றும் குழாய் மூலமாக எரிபொருள் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து நடத்தப்பட்ட பேச்சுகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பாலம் அமைப்பது அல்லது நிலத் தொடர்பு குறித்து இருநாடுகளும் இடையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்த பேச்சுகள் குறித்து எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை. ஆனால், இந்தப் பாலம் அமைக்கப்பட்டால் அது இலங்கையின் பொருளாரத்தில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும். அந்த நோக்கத்தின் பிரகாரம்தான் கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இப்பாலத்தை அமைப்பதற்கான பேச்சுகளை மீள ஆரம்பித்திருந்தார். 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அமையப் பெற்றிருந்த சந்தர்ப்பத்திலும் அவரே இந்தப் பேச்சுகளை மீள ஆரம்பிக்க தூண்டில் போட்டிருந்தார். என்றாலும், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியுற்றதால் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டன. மீண்டும் 2015ஆம் ஆண்டு அவர் பிரதமர் ஆனதும் பாலத்தை அமைக்கும் பேச்சுகளை ஆரம்பித்திருந்தார். அப்போது பாலம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தால் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்திருக்கும். அவ்வாறு நிறைவுற்றிருந்தால் இன்று இலங்கையின் பொருளாதார பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்திருக்கும். என்றாலும், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இந்தப் பேச்சுகளை தொடரவில்லை. தற்போது ரணில் விக்ரமசிங்க விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுசென்றால் அது இலங்கையின் வளர்ச்சிக்கான சிறந்த பாதையாக அமையும். ஆனால், தேசிய மக்கள் சக்தி இத்திட்டத்தை இரண்டு மனதாக பார்க்கிறது. ஜனாதிபதி அநுரகுமார கூட இத்திட்டம் தொடர்பில் எதிராக கருத்துகளை முன்வைத்திருந்தார். நாட்டு மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுள்ள அவர்கள், பொருளதாரத்தை விரைவாக வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுவருவதாக தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருந்தனர். அந்த எதிர்பார்பை அடைய சிறந்த திட்டங்களில் ஒன்றாக உள்ள இந்திய – இலங்கை இடையிலான பாலத்தை அமைக்கும் பணிக்கு பச்சை கொடி காட்டினால் 2030ஆம் ஆண்டுக்குள் இப்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுற்று இலங்கையின் பொருளாதாரத்தை அடுத்தகட்டம் நோக்கி நகர்வதற்கு வழிசமைக்கும். பாரம்பரிய அரசியலில் பயணத்தை தேசிய மக்கள் சக்தியும் தொடர போகிறதா அல்லது உண்மையான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாட்டை கொண்டுசெல்ல போகிறதா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். கட்டுரை- சுப்ரமணியம் நிஷாந்தன் https://oruvan.com/the-centuries-old-india-sri-lanka-bridge-project-who-benefits-from-it/

ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.

1 day 4 hours ago
இவர் தன்னை சவூதி அரேபியாவில் நடக்கும் முஸ்லிம் மதத்தின் அடக்கு முறைக்கு எதிரானவராகவும் பெண்கள் உரிமையை அனுமதிப்பவராகவும் யேர்மனியில் காட்டி கொண்டாராம். அதன் மூலம் யேர்மனியர் கவனத்தை பெற்றாராம் அநுரகுமார திசாநாயக்கவும் தமிழர்களுக்கு இப்படி தான் காட்டபடுகின்றார்

திண்ணை

1 day 4 hours ago
கணக்க விசயம், இருக்கு, நியாயம் பிளக்க. ஒரு அலுவலா பிசி. முடிச்சிட்டு வாறன். 👍! வன்னியர், கவ் ஆர் யூ? 😜 உடான் சுவாமியார் ஆசீயோட, நித்தியானந்தா சுவாமிகள் ஆசீரமத்தில நீண்ட நிஸ்டையில் இருந்தேன். கனவில் வர சிஸ்சைகள் விட்டிருக்காகினமே 🤔

ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.

1 day 5 hours ago
ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது காரை செலுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நபர் தனியாக செயற்பட்டுள்ளார் என சம்பவம் இடம்பெற்ற சக்சனி அல்ஹாட் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ] தனி தனி நபர்களாக ஜிஹாத் நடத்தி காபீர்களின் பிரதேசமான மாநிலத்தை சக்சனி அல்ஹாட் என்று மாற்றி விட்டனர் 😟

அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும் - ஜாமுனி காமந்த துஷார

1 day 5 hours ago
ஒருவரை ஒருவர் காப்பாற்ற லஞ்சம்! ஆட்சி மாறும், தாம் நிராகரிக்கப்படுவோமென்று சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கவில்லை. மாறி மாறி நாம்தானே வரப்போகிறோம், ஒன்றுக்குள் ஒன்றாகிவிடுவோம் என நினைத்திருப்பார்கள். அதென்ன ரணில் இப்படி அனுராவுக்கு சாபமிடுகிறாரேயென யோசித்தேன், இங்கு இருக்கு பிரச்சனை. இங்கு யாரோ சொன்னார்கள், ரணில் ஊழல் செய்யாதவர் என்று. லஞ்சம் கொடுத்திருக்கிறாரே, எதற்கு? அதுவும் ஊழல், சட்ட விரோதமான செயல்தான். ஊழல் வேறு, லஞ்சம் வேறு, சட்ட விரோதம் வேறு என்றில்லை, எல்லாம் ஒன்றுதான். சட்டத்தை மீறும் செயல். மதுபான அனுமதிப்பத்திரத்துக்கு விளக்கம் கொடுத்து முடியேலை, கையோடு அடுத்த பிரச்சனை. இதற்கு என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்? எல்லோரும் இனவாதத்தை கையிலெடுத்தது ஏனென இப்போ விளங்குகிறது. பணம் இருந்தாற்தானே கொடுப்பதற்கு? எல்லாம் வழிச்சு, துடைச்சு, எடுத்து, கொடுத்தாயிற்று. ஆமா.... இந்த ஜனாதிபதிகள் ஏன் இவ்வாறு செய்தார்கள்? அப்படியெனில் இவர்கள் கொடுத்ததற்கு மேலாக எடுத்திருப்பார்களோ? இவர்கள், அரசியலில் திறமையும் அனுபவமும் உள்ளவர்களாம். சொந்த வீட்டுக்குள்ளேயே களவெடுப்பவர்கள், எத்தனை காவல் போட்டாலும், கமரா பூட்டினாலும் சொந்த வீட்டுக்கள்ளரை எப்படி கைது செய்வது? ஒவ்வொருக்கா விளக்கம் கொடுக்காமல், எல்லாவற்றுக்கும் ஒன்றாக சேர்த்து கொடுப்பது நல்லது. அனுராவின் ஆட்சி முழுவதும் இந்த கள்ளரை பிடிப்பதிலேயே முடியப்போகிறது, நீதிமன்றமும் மக்களின் வழக்குகளை கையாள முடியாது, வெள்ளை வேட்டிக்கள்ளரை விசாரிக்கவே நேரம் காணாது.

இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது - டக்ளஸ்

1 day 5 hours ago
டக்ளசு அவர்களுக்கு ஞானம் பிறப்பதுபோல் தெரிகிறது, பிறக்குமா? புத்தபெருமான் ஞானம்பெற எல்லாவற்றையும் துறந்தார். இவரால் அதுவும் அடாத்தாக அபகரிக்கப்பட்ட ஒரு தியேட்டரைக்கூட துறக்கமுடியவில்யே!!🤔

ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.

1 day 5 hours ago
இது அவர்களது இரத்தத்தில் ஊறிய குணமாக இருக்கலாம். தமது நாட்டிலேயே சிறு சிறு குற்றங்களுக்கெல்லாம் கையை துண்டிப்பது, காலை வெட்டுவது, தலையை கொய்வது. வீட்டுப்பழக்கந்தான் போகிற இடத்திலும் வரும்.

ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.

1 day 6 hours ago
ஜேர்மனிக்கென்று ஒரு குணமுண்டு , அகதியென்று வந்து அமைதியாக அந்தநாட்டு மக்களை எந்த தொந்தரவும் பண்ணாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக வாழ்கிறவர்களை நிரந்தர வதிவிட அனுமதி வழங்காமல் ஓட ஓட குடும்பம் குடும்பமாக நாட்டைவிட்டு விரட்டுவார்கள், ஆளுக்கு பத்து பிள்ளை பெத்துக்கொண்டு, அகதி காசில் வண்டியோட்டிக்கொண்டு, அல்லாவின் பெயரால் குண்டு,கத்தி குத்து, லொறி கார் ஏத்தி நசுக்கு, சரமாரி துப்பாக்கிசூடு என்று ஜேர்மன்காரனுக்கே ஆப்படிக்குறவர்களுக்கு நிரந்தர அனுமதியை கொத்து கொத்தாக அள்ளி வழங்குவார்கள். இது ஜேர்மனி பெற்ற வரமா இல்லை வேண்டி பெற்ற சாபமா ஜேர்மனிக்கே வெளிச்சம்.

என் எழுத்து - சுப.சோமசுந்தரம்

1 day 7 hours ago
என் எழுத்து - சுப.சோமசுந்தரம் தம் எழுத்துக்கென்று ஒரு பாணி, தம் மேடைப் பேச்சுக்கென்று ஒரு பாணி என்பதெல்லாம் எழுத்திலும் பேச்சிலும் துறைபோகியோருக்கு மட்டுமே அமைய வேண்டுமா ? நம்மைப் போன்ற சாமானியர்க்கு அந்த உரிமை இல்லையா, என்ன ! என் பேச்சு (மேடைப் பேச்சு) பற்றி என்னைச் சார்ந்தோர் கருத்தை சமீபத்தில் யாழின் சமூகவலை உலகத்தில் பதிவு செய்தேன். என் எழுத்து பற்றி எனக்கே கருத்து இருப்பினும், என் நண்பர் ஒருவர் அனுப்பியதை இங்கே பதிவு செய்ய விழைவு. அதில் அவர் தம் கருத்தினைச் சொல்லவும் இல்லை; சொல்லாமலும் இல்லை. எனக்குப் புதிதாக அறிமுகமான நண்பர் X எனது அரதப் பழசான (!) நண்பர் Y யிடம் எனது எழுத்து எப்படியிருக்கும் என்று கேட்க, "இப்படிதான் இருக்கும்" என்று நண்பர் Y அவருக்கு அனுப்பிவிட்டு எனக்கும் அனுப்பி வைத்தார். அது 'எனது நாத்திகம்' என்ற தலைப்பில் நான் முன்னர் எழுதிய கட்டுரையின் தொடக்கம் : ‘கடவுள் உண்டா இல்லையா ?’ என்ற அரதப் பழசான விவாதத்தை ஆரம்பித்து, வாசிப்போரின் கழுத்தில் நரம்பு புடைக்க வைப்பது சாமி சத்தியமாக(!) இவ்வெழுத்தின் நோக்கமல்ல. “உண்டென்பார்க்கு உண்டு, இல்லையென்பார்க்கு இல்லை” என்று ஏனையோரிடம் உரக்கச் சொல்லிவிட்டு, “ஆனால் எனக்குத் தெரியும் இல்லையென்று” என எனக்குள் சொல்லி ‘கடவுளைக்’ கடந்து செல்பவன் நான். (ஆகையால் அது ‘கட உள்’ தானோ?)

பீபா 2024 உயரிய விருதுகைளை வினிசியஸ் Jr, ஆய்ட்டான பொன்மாட்டி வென்றெடுத்தனர்

1 day 7 hours ago
19 DEC, 2024 | 07:22 AM (நெவில் அன்தனி) கத்தார் தேசத்தின் தலைநகர் தோஹாவில் நேற்று இரவு நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (FIFA) விருது விழாவில் அதி உயரிய விருதுகைளை வினிசியஸ் Jr, ஆய்ட்டான பொன்மாட்டி வென்றெடுத்தனர். பிரேஸில் முன்கள வீரர் வினிசியஸ் Jr. வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி, வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் தெரிவாகினர். அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றலைக் கொண்டுள்ள பிரேஸில் தேசிய அணி வீரரும், ரியல் மெட்றிட் கழக விரருமான வினிசியஸ் ஜூனியர் (Jr.) முதல் தடவையாக வருடத்தின் அதிசிறந்த வீரருக்கான பீபா விருதை வென்றெடுத்தார். ரியல் மெட்றிட் கழகத்தின் நட்சத்திர வீரரான வினிசியஸ் Jr., உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டிகளிலும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளிலும் கழகத்தின் வெற்றிகளில் பெரும் பங்காற்றி இருந்தார். வினிசியஸ் ஜூனியரின் கால்பந்தாட்ட வாழ்க்கையில் 2023-24 மிகச்சிறந்த பருவகாலமாக பதிவானது. இந்த பருவகாலத்தில் ரியல் மெட்றிட் கழகத்திற்காக 39 போட்டிகளில் விளையாடிய வினிசியஸ் 24 கோல்களைப் புகுத்தியிருந்தார். பொருசியா டோர்ட்மண்ட் அணிக்கு எதிரான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி வெற்றியில் ரியல் மெட்றிட் சார்பாக ஒரு கோலை புகுத்திய வினிசியஸ், சுப்பகோப்பா டி எஸ்பானா இறுதிப் போட்டியில் பார்சிலோனாவுக்கு எதிராக ஹெட்-ட்ரிக் முறையில் கோல்களைப் போட்டு அசத்தியிருந்தார். பிபாவின் அதிசிறந்த வீரருக்கான விருதை 2007க்குப் பின்னர் வென்றெடுத்த முதலாவது பிரேஸில் வீரர் என்ற பெருமையை வினிசியஸ் Jr. பெற்றுள்ளார். ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் மற்றும் லா லிகா ஆகிய இரண்டு சம்பியன் பட்டங்களை வென்றெடுத்த வினிசியஸ் ஜூனியர், அதிசிறந்த 2023 - 24 சம்பயின்ஸ் லீக் வீரர் என்ற விருதையும் தனதாக்கிக்கொண்டிருந்தார். அதிசிறந்த வீராங்கனை பொன்மாட்டி வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனைக்கான பீபா வீருதை இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக ஸ்பெய்ன் மற்றும் பார்சிலோனாவின் சுப்பஸ்டார் ஆய்ட்டானா பொன்மாட்டி வென்றெடுத்து பலத்த பாராட்டைப் பெற்றார். தேசிய அணியிலும் கழக அணியிலும் அவர் வெளிப்படுத்திய அதிசிறந்த மற்றும் வெற்றிகரமான ஆற்றல்களுக்காகவே இந்த விருதை அவர் வென்றெடுத்துள்ளார். இந்த விருதை ஒரு தடவைக்கு மேல் வென்றெடுத்த வீராங்கனைகள் வரிசையில் மியா ஹாம், கார்லி லொய்ட், மார்த்தா, பேர்ஜிட் பிறின்ஸ், அலெக்சியா பியூட்டெல்லாஸ் ஆகியோருடன் இப்போது ஆய்ட்டானா பொன்மாட்டி இணைந்துகொண்டுள்ளார். 2023 - 24 பருவகாலத்தில் நடைபெற்ற ஐரோப்பிய மகளிர் நேஷன் லீக் கால்பந்தாட்டத்தில் சம்பியனான ஸ்பெய்ன் அணியிலும் ஐரோப்பிய மகளிர் சம்பியன்ஸ் லீக் ககால்பந்தாட்டத்தில் சம்பியனான பார்சிலோனா அணியிலும் முக்கிய பங்காற்றிய வீராங்கனைகளில் பொன்மாட்டியும் ஒருவராவார். ஐரொப்பிய மகளிர் சம்பியன்ஸ் லீக் பருவகாலத்தில் அதிசிறந்த வீராங்கனையாக 26 வயதுடைய பொன்மாட்டி தெரிவாகி விருது வழங்கப்பட்டது. அத்துடன் நேஷன்ஸ் லீக் இறுதி ஆட்ட நாயகி, சம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்ட நாயகி ஆகிய விருதுகளையும் வென்றெடுத்த பொன்மாட்டி, கோப்பா டி லா ரெய்னா விருது, சுப்பகோப்பா டி எஸ்பானா ஃபெமினினா விருது ஆகியவற்றையும் தனதாக்கிக்கொண்டார். ஏனைய விருதுகள் அதிசிறந்த ஆடவர் அணி பயிற்றுநர்: கார்லோஸ் அன்சிலோட்டி (ரியல் மெட்றிட்). முதல் தடவையாக இந்த விருதை வென்றெடுத்துள்ளார். ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக், லா லிகா, சுப்பகோப்பா டி எஸ்பானா ஆகிய மூன்று சம்பியன் பட்டங்களை ரியல் மெட்றிட் கழகத்திற்கு வென்கொடுத்த பயிற்றுநர். அதிசிறந்த மகளிர் அணி பயிற்றுநர்: எமா ஹெய்ன்ஸ் (செல்சி மற்றும் ஐக்கிய அமெரிக்கா). இந்த விருதை இரண்டாவது தடவையாக எமா வென்றெடுத்துள்ளார். மகளிர் சுப்ப லீக்கில் செல்சியை சம்பியனாக வழிநடத்திய எமா, பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா மகளிர் கால்பந்தாட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற ஐக்கிய அமெரிக்க அணியின் பயிற்றுநராகவும் செயற்பட்டிருந்தார். ஆண்களில் அதிசிறந்த கோல்காப்பாளர்: எமிலியானோ மார்ட்டினெஸ் (ஆர்ஜன்டீனா) பெண்களில் அதிசிறந்த கோல்காப்பாளர்: அலிசா நோயர் (ஐக்கிய அமெரிக்கா) ஆண்களில் அதிசிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருது: அலெஜாண்ட்ரோ கானாச்சோ (மென்செஸ்டர் யுனைட்டட்). எவட்டன் கழகத்திற்கு எதிரான கால்பந்தாட்டப் போட்டியில் தலைக்கு மெலாக வந்த பந்தை நோக்கி உயரே தாவி அந்தரத்தில் இருந்தவாறு கானாச்சோ வலதுகாலால் பின்னோக்கி உதைத்து போட்ட கோல் அதிசிறந்த கோலாக தேர்வுசெய்யப்பட்டது. பெண்களில் அதிசிறந்த கோலுக்கான அங்குரார்ப்பண மார்த்தா விருது: பிரேஸில் முன்கள வீராங்கனை மார்த்தா வியரா டா சில்வா முதலாவது வீராங்கனையாக மகளிர் கால்பந்தாட்டத்தில் அதிசிறந்த கோலுக்கான விருதை வென்றெடுத்தார். இதில் ஒரு விசேடம் என்னவென்றால் தனது சொந்த பெயரில் அறிமுகமான விருதை அவரே வென்றெடுத்ததாகும். ஜெமெய்க்காவுக்கு எதிரான போட்டியில் எதிரணி வீராங்கனையால் நகர்த்தப்பட்ட பந்தை பெற்றுக்கொண்ட மார்த்தா, அதனைத் தனியாக முன்னோக்கி நகர்த்திச் சென்று இடதுகாலால் உதைத்து போட்ட கோல் அதிசிறந்த கோலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/201611
Checked
Sun, 12/22/2024 - 12:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed