9 hours 8 minutes ago
நீயே சொல்லு எங்கே என்று .......! 😍
9 hours 34 minutes ago
இலங்கை அணி பந்து வீச்சினை தெரிவு செய்துள்ளது, இலங்கை அணீன்று மோசமாக தோற்க போகிறது, வேலையில் இருப்பதால் பின்னர் விபரமாக எழுதுகிறேன்.
9 hours 35 minutes ago
இந்தக் கூட்டணி அமைந்தால் திமுகவை வீட்டுக்கு அனுப்பலாம். இந்தக் கூட்டணியை நான் வரவேற்கிறேன்.திமுகவினதும் குடும்ப ஆட்சி துடைத்தழிக்கப்பட வேண்டும்.விஜைக்கும் இப்போது இருக்கும் நெருக்கடியில் இதுதான் சரியான தேர்வாக இருக்கும்.(அப்போதும் நாம் தமிழர்கட்சிதான் எனது தெரிவாக இருக்கும். தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்துப் போகாமல் வைத்திருப்பதற்கு அந்தக்கட்சி ஒன்று மட்டும்தான் தமிழ்நாட்டில் செயற்பாட்டில் இருக்கிறது.)
11 hours 40 minutes ago
இவற்றுள் உங்களுக்குத் பிடித்தமான இனிப்பை தேர்ந்தெடுங்கள் ...... பின்பு அந்தப் பெயரை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் ..... பின்பு யூடியூப் பக்கத்தைத் திறந்து அதற்குரிய இடத்தில் அந்தப் பெயரை எழுதுங்கள் . .... பின்பு அதில் தேடும் இடத்தில் சுட்டியை அழுத்துங்கள் ....... உடனே அதை எப்படி செய்வதென்று காட்டித்தர பலர் உதவிக்கு ஓடி வருவார்கள் . .......! 😂
11 hours 47 minutes ago
11 hours 50 minutes ago
நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளர் கைது! நிதிமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, பிரபல வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிலையில்.. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடனை , சட்டவிரோதமாக ஏனைய நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் , அனில் அம்பானி இந்திய மதிப்பில் 17 ஆயிரம் கோடி ருபாய் நிதி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொண்ட நிலையில் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் இன்று(11) அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1450096
11 hours 51 minutes ago
சரியான பார்வை.....................
11 hours 51 minutes ago
தினமும் ஒரு வரி தத்துவம் · காலம் மாறும் போது.. சிறுகதை. அரசன் ஒருவன் அமைச்சனோடு தனது நாட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தான். அங்கே ஓரிடத்தில் உழவன் ஒருவன் மண்வெட்டியால் நிலத்தைக் கொத்திக் கொண்டிருந்தான். அவன் அருகே பாம்பு ஒன்று படம் எடுத்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அரசன் “உழவனே! உன் அருகே பாம்பு. ஒடு, ஓடு” என்று குரல் கொடுத்தான். எதுவுமே நடவாதது போல இயல்பாகத் திரும்பிப் பார்த்த உழவன் எந்தப் பரபரப்பும் காட்டாமல் அந்தப் பாம்பைக் கையால் பிடித்துத் தூக்கி எறிந்தான். அதிர்ச்சி அடைந்த அரசன், “கொடிய பாம்பு அது. நீ பிடித்தபோது கொத்தி இருந்தால் உன் உயிர் போய் இருக்குமே” என்றான். “அரசே! இந்த நிலத்தில் வேலை செய்யும்போது இப்படி எத்தனையோ ஆபத்துகளைச் சந்திக்கிறேன். அவற்றிற்கு அஞ்சினால் நானும் என் குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டியதுதான்” என்றான் அவன். அந்த விவசாயிக்கு உதவி செய்ய நினைத்த அரசன் வளமான நிலங்களையும் பொற்காசுகளையும் அவனுக்கு வழங்கினான். செல்வந்தனாக ஆனான் அவன். ஆண்டுகள் பல கழிந்தன. அரசனும் அமைச்சனும் மீண்டும் அந்த வழியாக வந்தார்கள். அந்த உழவன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து இருந்தான். அவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்று வணங்கிணான். அவன் கையில் பெரிய கட்டுப் போட்டிருநத்து: “கையில் என்ன கட்டு?” என்று கேட்டான் அரசன். “அரசே! ஒரு முள் கீறி அது பெரிய புண்ணாகி விட்டது. அதற்குக் கட்டுப் போட்ட மருத்துவர் ஒரு வாரம் ஓய்வு எடுக்கச் சொன்னார். இங்கே அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் உழவன். ‘ இதைக் கேட்டு வியப்படைந்த அரசன், “அப்படியா உன் உடம்பைப் பார்த்துக்கொள்” என்று அவனிடம் சொல்லிவிட்டு அகன்றான். வழியில், “அமைச்சரே! அன்று இவன் கொடிய பாம்பைத் தூக்கி எறிந்தான். இன்றோ முள் குத்தியதற்குக் கையில் கட்டுப் போட்டுக் கொண்டு ஓய்வு எடுக்கிறான். தலை கீழ் மாற்ற மாக உள்ளதே” என்று கேட்டான். “அரசே! அன்று அவன் ஏழை. உழைத்துப் பிழைத்ததால் எதற்கும் அஞ்சவில்லை. இன்றோ செல்வந்தனாகி உழைப்பே இல்லாமல் இன்பத்தை அனுபவிக்கிறான். “காலமும் சூழ்நிலையும் மாறும் போது எல்லாம் மாறத்தானே செய்யும்” என்றார் அமைச்சர்........! 😃 Voir la traduction
11 hours 55 minutes ago
சீனா மீது கூடுதல் 100 சதவீத வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப்! அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமது நாட்டின் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என அறிவித்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத வரியை உயர்த்தினார். இதற்கு பதிலாக சீனா அமெரிக்கா பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் ஏற்பட்டதையடுத்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக கடந்த மே மாதம் அமெரிக்கா அறிவித்தது. அதன்படி, சீனா மீதான வரியை 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்ததோடு, அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. மேலும் 90 நாட்கள் வரிவிதிப்பு நிறுத்தமானது, ஒகஸ்ட் 10ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, கால அவகாசம் கூடுதலாக 90 நாட்களுக்கு (நவம்பர் 10) வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (11) அறிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 01ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வரும் எனவும் ஏற்கனவே சீன பொருட்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 130 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் 30ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், தற்போது சீன ஜனாதிபதியை சந்திக்கப் போவதில்லை எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். https://athavannews.com/2025/1450099
11 hours 57 minutes ago
சுட்டிபெண் நிலா · ஆண்களுக்கும் அழுகை வரும்... தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் ஆண் அழுவான்... தன் மகள் திருமணம் ஆகி பிரியும் போது ஆண் அழுவான்... அவன் பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காது நன்றியியில்லாமல் ஆணவத்துடன் நடக்கும் போது வெளியில் சொல்ல முடியாமல் அழுவான்... காதல் கொண்ட மனைவி தன்னை ஏமாற்றுவதை அறிந்தால் அந்த ஆண் அழுவான்... தங்கள் குழந்தைகளுக்கான உணவு போன்றவற்றை அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்க முடியாமல் போனால் ஆண் அழுவான்... பிழைப்பை தேடி கடன் சுமைக்காக தாயகத்தைப் பிரிந்து செல்லும் போது, தான் நேசிக்கும் அன்பானவர்கள் தன் அருகே இல்லையென ஒவ்வொரு இரவிலும் ஆண் அழுவான்... ஆண்கள் அழுகிறார்கள்... ஆனால் எப்படி? இருட்டில்... பிறர் அறியாவண்ணம்... தலையணைகளில் முகத்தைப் புதைத்து... கழிவறையில் தண்ணீரை திறந்து அவன் அழுகையின் கண்ணீரை யாரும் பார்த்து விடக்கூடாது என நினைப்பான்... அவன் அழுது கொண்டு இருக்கிறான் என்பதை அவன் சங்கடத்தில் விடும் பெருமூச்சு , அதற்கு சாட்சியாகும்... கண்களில் வெளிப்படும் ஏக்கம், நடுங்கும் கைகள், வார்த்தையில் தடுமாற்றம்... பெரும்பாலான ஆண்கள் குடும்ப சூழல், போதிய வருமானம் இல்லாதது, ஏமாற்றும் மற்றும் தேவைக்கு தேடிவரும் உறவுகள், உறவுகளின் துரோகம், போன்ற மனசு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில்தான் நிறைய ஆண்கள் வெளியில் சொல்ல முடியாமல் அழுகிறார்கள்... இவன் குழப்பத்தில் இருக்கிறான், பைத்தியக்காரன், என மற்றவர் நினைக்க அது அவனுக்கு மட்டும்தான் தெரியும் உள்ளுக்குள் அவன் அழுதுகொண்டு இருக்கிறான் என... ஒரு விஷயத்தில் இந்த ஆண் வர்க்கம் மிகவும் கெட்டிக்காரர்கள் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டு வெளியில் சிரிப்பது இந்த வித்தையில் ஆண் சமூகம் எப்போதுமே தேர்ச்சிப்பெற்றவையே... ஆண்கள் இப்படித்தான் அழுகிறார்கள். (படித்ததில் பிடித்தது)
12 hours 5 minutes ago
Ammu Dilaxshi · தீபிகா படுகோன், ஆலியா பட் உள்ளிட்ட நடிகைகள் பாலிவுட்டை கலக்கி வரும் நிலையில், டோலிவுட், கோலிவுட் ஆகியவற்றை ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா ஆகியோர் அதிக சம்பளம் பெறும் நடிகைகளாக உள்ளனர். ஆனால், இவர்களைவிட பல ஆண்டுகளாக சினிமாவில் கலக்கி வரும் நடிகை ஒருவர் அதிக சம்பளம் வாங்குகிறார். மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று சினிமா. அத்தகைய சினிமா ரசிகர்களால் நாள்தோறும் கொண்டாடப்படுகிறது. நடிகர்களுக்கு சமமாக நடிகைகளும் தங்களின் அபார நடிப்பு திறனால் அசத்தி வருகின்றனர். இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் எனத் தெரியுமா?. தீபிகா படுகோனே, ஆலியா பட் என நீங்கள் நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறு. ஒரு திரைப்படத்திற்கு ரூ.40 கோடி சம்பளம் வாங்கும் இந்த நடிகையே முதன் முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கியவர். பிகார் மாநிலத்தில் பிறந்து, உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்தவர் தான் அந்த நடிகை. அவர் வேறு யாருமல்ல, உலக அழகியான பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் ஹீரோயின்களின் சம்பளத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த பிரியங்கா சோப்ரா, பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு ரூ. 40 கோடி சம்பளம் வாங்குகிறார். அதாவது 5 மில்லியன் டாலர்கள். ஆனால் இந்த தொகை ஹாலிவுட்டுக்கானது மட்டுமே. இருப்பினும், அவர் இந்திய படங்களில் நடிக்கும்போது ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு ரூ.14-ரூ.20 கோடிகள் வாங்குகிறார். என்னதான் பாலிவுட், ஹாலிவுட் என பிரியங்கா சோப்ரா நடித்தாலும், அவரின் சினிமா கேரியருக்கு விதைபோட்டது தமிழ் சினிமாதான். 2002 ஆம் ஆண்டில் தமிழில் 'தமிழன்' திரைப்படம் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இதுவே பிரியங்காவின் முதல் திரைப்படம். அதன்பிறகு வரிசையாக இந்தி படங்களில் நடித்தார். 'பர்ஃபி', 'மேரி கோம்', 'பாஜிராவ் மஸ்தானி', 'தில் தடக்னே தோ' போன்ற படங்களில் ஒவ்வொன்றாக ஹிட் அடித்தார். ஹாலிவுட்டுக்கு சென்ற அவர், இந்தி படங்களை குறைத்துக் கொண்டு ஹாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வருகிறார். பிரியங்கா நடித்த முதல் ஹாலிவுட் படமான 'பேவாட்ச்' மாபெரும் வெற்றி பெற்றது. அது 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு அவர் 'எ கிட் லைக் ஜேக்', 'இஸ்னாண்ட் இட் ரொமான்டிக்', 'வீ ஆர் ஹீரோஸ்', 'தி மேட்ரிக்ஸ் ரிசர்ரக்ஷன்', 'லவ் அகெய்ன்' போன்ற படங்களில் நடித்தார். இவர் தன்னைவிட வயதில் இளையவரான பிரபல பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் முடித்தார். இவர்களது திருமணம் உமைத் பவன் என்ற அரண்மனையில் நடைபெற்றது. தற்போது சுமார் 650 கோடிக்கு சொத்துக்கு அதிபதியாக, பிரைவேட் ஜெட், அமெரிக்காவில் இரண்டு பங்களா, விதவிதமான சொகுசு கார் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இந்நிலையில் இவரது சிறிய வயது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. Voir la traduction பிரியங்கா சோப்ரா .......! 🙂
12 hours 39 minutes ago
இவ்வளவு பாதுகாப்பும் நல்லதுதான் என்ன ஒன்று நெல் அறுவடைபோல்தான் இதுவும் . .......! 🙂
13 hours 6 minutes ago
10 Oct, 2025 | 02:41 PM (எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கியின் அனுமதியில்லாத நுண்கடன் நிதி நிறுவனங்கள் மக்களை சுரண்டி பிழைக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில நிதி நிறுவனங்கள் 300,200 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி அறவிடுகின்றன இதனால் அப்பகுதி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சம்மாந்துறை,கல்முனை, பொத்துவில், ஏறாவூர் மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களில் Privelth Global PVT LTD என்னும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்று 2014.02.05 காலப்பகுதியில் நடத்தப்பட்டது. மேற்படி நிதி நிறுவனத்தின் பணிப்பாளர்களாக பணியாற்றிய அஹமட் ஷெரின், முகமது ஷிஹாப் (ஷிஹாப் ஷெரீப்) மற்றும் பாத்திமா பர்ஸ மார்கார் ஆகியோரால் 1400 பேரிடம் சுமார் 170 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் அறிவாரா? கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள இவர்கள் இன்றளவிலும் காணாமல் போய் உள்ளனர் என்பதனை அமைச்சர் அறிவாரா?இதில் குறிப்பிட்டவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாது ? இவர்கள் மோசடி செய்துள்ள தொகையை மீள அதன் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அது தொடர்பில் பின்பற்றப்படும் நடவடிக்கை யாவை ? மற்றும் இவ்வாறான நிதி நிறுவனங்கள் தொடர்பான முறையான கண்காணிப்பு மேற்கொண்டு நம்பகத்தன்மை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? நிதி மோசடிகள் தொடர்பில் தொடர்ச்சியாக நான் பல பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு வந்துள்ளேன் அதில் த பினான்ஸ் நிறுவன பிரச்சினை சம்பந்தமாகவும் பலமுறை கதைத்துள்ளேன் அதில் முதலிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் அவர்களுக்கான நீதியானது வழங்கப்படவில்லை. ஒரு வரவேற்கத்தக்க விடயம் குறிப்பாக மன்முனை தென் எருவில் பற்று தவிசாளர் மே. வினோராஜ் ஒரு முடிவு எடுத்துள்ளார். அப்பிரதேசத்தில் இயங்கி வரும் நுண்கடன் நிறுவனங்கள் மக்களிடம் 200 மற்றும் 300 வீதத்துக்கு அதிகமான வட்டியினை வசூலிப்பதாகவும் அவர்கள் மத்திய வங்கியின் அனுமதி இன்றி செயல்படுவதாகவும் தனியே வியாபார பதிவை கொண்டு மாத்திரம் செயற்பட்டு வருவதாகவும் அதனால் தரப்படட மக்கள் பாதிக்கப்பட்டு வருவதனால் அவர் இதற்கு எதிராக ஒரு நடவடிக்கை ஒன்றினை எடுத்துள்ளார். இவரது இவ் நடவடிக்கையினை மென்மேலும் துரிதப்படுத்துவதற்கு இவ்வாறான நிதி நிறுவனங்கள் மத்திய வங்கியின் அனுமதியின்றி செயல்பட முடியுமா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும் இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்துவதற்குரிய ஏதேனும் ஏற்பாடுகள் செய்யுமா என்பது பற்றியும் மற்றும் ஏற்கனவே இவ்வாறான நுண் கடன் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தீர்வு குறுகிய காலத்துக்குள் கிடைக்குமா என்பதையும் அறிவிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/227411
13 hours 8 minutes ago
தஷ்வந்த் விடுதலை குறித்து கொலையுண்ட சிறுமியின் தந்தை கூறியது என்ன? பட மூலாதாரம், Facebook படக்குறிப்பு, தஷ்வந்த் கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 10 அக்டோபர் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்த வழக்குக்காக, என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டி, நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் போராடினேன். இதற்காக எங்களின் மீத வாழ்க்கையையும் இழந்துவிட்டோம். இத்தனைக்குப் பிறகும் தஷ்வந்தை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? இன்னும் எத்தனை ஆண்டுகள் நாங்கள் போராடுவது?" என்கிறார் சென்னையில் 2017-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் தந்தை. இந்த வழக்கில் பொறியியல் பட்டதாரி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. 'தஷ்வந்தை விடுவிப்பது சமூகத்தில் துயரத்தை ஏற்படுத்தும் என்றாலும் ஊகத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க முடியாது' எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் சிறுமியின் தந்தையிடம் பிபிசி தமிழ் பேசியது. சிறுமியின் இறப்புக்குப் பிறகு தானும் தன் மனைவியும் பிரிந்துவிட்டதாக அவர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சிறுமியின் தந்தை சொன்னது என்ன? "பணத்தை செலவழித்தது பொருட்டல்ல, ஆனால் நாங்கள் எங்கள் வாழ்க்கையையே இதனால் இழந்தோம்." என்றார் சிறுமியின் தந்தை "கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என இரண்டு நீதிமன்றங்களிலும் சட்ட ரீதியாக போராடினோம். இப்போது உச்ச நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை அளித்துள்ளது. இனி நான் போராடினாலும் நீதி கிடைக்காது. இனி என்ன செய்ய முடியும்?" என தெரிவித்தார். யாருடைய அனுதாபமும் தனக்கு தேவையில்லை எனக்கூறிய அவர், "இந்த வழக்கில் நீதி கிடைக்க செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் இருந்தது. இன்று (அக்.,10) என் மகளின் பிறந்தநாள், ஆனால் அவளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது" என்றார். தன்னுடைய 14 வயது மகனும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் பள்ளிக்கு செல்வதில்லை என்றும் சிறுமியின் தந்தை கூறினார். "இங்கு பாதுகாப்பு இல்லை, அதனால் தமிழ்நாட்டை விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர உள்ளேன். என் மகன் மனைவியுடன் இருப்பதால், அவனிடமும் என்னால் பேச முடியவில்லை." என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 'உடனடியாக நீதியை பெற முடிவதில்லை' கடந்த 2018-ஆம் ஆண்டில் என்னிடம் பேசியிருந்த சிறுமியின் தந்தை, "இங்கே, நீதியைப் பெற தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. என் மகளின் வழக்கில் விசாரணை வேகமாக நடந்தும், காவல் துறையினர் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கியும் நீதியை உடனடியாக பெற முடிவதில்லை. பல வழக்குகளை காவல் நிலையத்தில் பதியவே முடிவதில்லையே. அத்தகைய வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவதற்கே மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது." என கூறியிருந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, இனி தன்னால் வழக்கில் எத்தகைய சட்ட ரீதியான போராட்டத்தைத் தொடர முடியும் என தெரியவில்லை என்றும் வழக்கறிஞர்களிடம் பேச வேண்டும் என்றும் அவர் கூறினார். இது குறித்து தமிழக அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக்,'' தமிழ்நாடு அரசுக்கு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்றார் வழக்கின் பின்னணி 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதியன்று, தங்களின் 7 வயது மகளைக் காணவில்லை என காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். 'வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக ஆறு மணியளவில் சிறுமியின் தாய் வெளியில் சென்றுள்ளார். சுமார் 7.15 மணியளவில் வீடு திரும்பியபோது மகளைக் காணவில்லை' என, சிறுமியின் தந்தை அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. தங்கள் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் சிறுமியை தேடும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டனர். ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்தநிலையில், சிறுமியின் நிலையைப் பற்றி அறியும் வகையில் சிசிடிவி காட்சி ஒன்று அவரின் தந்தைக்கு கிடைத்தது. அது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலில் பொருத்தப்பட்டிருந்தது. சிறுமியின் பெற்றோர் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டின் இரண்டாவது மாடியில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற 23 வயது இளைஞர் மீது சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது. பட மூலாதாரம், Getty Images 2017, பிப்ரவரி 8-ஆம் தேதியன்று காலையில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். காவல்துறையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எரிந்த நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது. சிறுமி கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் தஷ்வந்த் வைக்கப்பட்டார். தொடர்ந்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணையில் அரசுத் தரப்பில் 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. ஆனால், இதனை மறுத்து, 'குற்றம் செய்யவில்லை' என தஷ்வந்த் தெரிவித்துள்ளார். வழக்கின் ஆவணங்களை ஆராய்ந்து, 'தஷ்வந்த்தை ''குற்றவாளி'' என கீழமை நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார். மனுவை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'இந்த வழக்கு அரிதிலும் அரிதானது' எனக் கூறி கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து தஷ்வந்த் செய்த மேல்முறையீடு வழக்கில்தான் அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ''சம்பவ இடத்தில் பொருட்களை கைப்பற்றியவுடன் சாட்சிகள் முன்னிலையில் அவை சீல் வைக்கப்பட்டதாக சாட்சிகள் கூறவில்லை. மேலும் கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்கள் யார் பாதுகாப்பில் இருந்தது, யார் அந்த பொருட்களை தடய அறிவியல் அலுவலகத்திற்கு ஒப்படைத்தார்கள் என்று அவரை ஒரு சாட்சியாக இந்த வழக்கில் விசாரிக்கவில்லை. எனவே கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் தடய பொருட்கள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது'' எனத் தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சிறுமியை கடைசியாக நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்த முருகன் குறித்துக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், 'சிறுமியை தேடிய நபர்களில் ஒருவராக முருகன் இருந்த போதிலும் இந்த உண்மையை அவர் பெற்றோரிடம் கூறவில்லை. காவல்துறையிலும் தெரிவிக்கவில்லை' எனக் கூறியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89d4qnd7j1o
13 hours 12 minutes ago
முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் adminOctober 10, 2025 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (10) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், அருட்தந்தை,முன்னாள் போராளிகள், உறவினர்கள் ,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர். இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://globaltamilnews.net/2025/221354/
13 hours 17 minutes ago
தேசிக்காய் விலை உச்சம்! 11 Oct, 2025 | 11:18 AM பதுளை மாவட்டத்தில் சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிக்காயின் அறுவடை குறைந்ததாலும் தேவைக்கு ஏற்ப விநியோகிக்க முடியாததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமை நீண்ட நாட்களாக தொடர்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/227466
14 hours 47 minutes ago
வெள்ளிக்கிழமை, நவம்பர் 1 முதல் சீனா மீது "அவர்கள் தற்போது செலுத்தும் எந்தவொரு வரிக்கும் மேலாக" 100% வரியை விதிக்கப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார் - இது அரிய மண் தாதுக்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த சூடான சர்ச்சைக்கு மத்தியில் தனது வர்த்தகப் போரை பெருமளவில் தீவிரப்படுத்துகிறது. ட்ரூத் சோஷியல் பதிவில், சீனா "உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது, நவம்பர் 1, 2025 முதல், அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும், சிலவற்றால் கூட தயாரிக்கப்படாத பொருட்களின் மீதும் பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாகக் கூறுகிறது" என்று டிரம்ப் எழுதினார். "இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது, மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களால் வகுக்கப்பட்ட ஒரு திட்டமாகும்" என்று அவர் எழுதினார். "இது சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, மற்ற நாடுகளுடன் கையாள்வதில் ஒரு தார்மீக அவமானம்." "சீனா எடுக்கும் எந்த கூடுதல் நடவடிக்கைகள் அல்லது மாற்றங்களைப் பொறுத்து, நவம்பர் 1 அல்லது அதற்கு முன்னதாகவே" புதிய வரியை விதிப்பதாக டிரம்ப் கூறினார். முந்தைய நாள், முக்கியமான அரிய மண் தாதுக்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க சீனாவின் தீவிர முயற்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் கடுமையாக சாடினார், பொருளாதார பழிவாங்கலை அச்சுறுத்தினார், மேலும் இந்த மாத இறுதியில் பிராந்தியத்திற்கு திட்டமிடப்பட்ட விஜயத்தின் போது ஜியை சந்திக்க எந்த காரணத்தையும் அவர் இனி காணவில்லை என்றும் கூறினார். அந்த நேரத்தில், டிரம்ப் சீனாவிற்கு எதிராக பொருளாதார அபராதங்களை அச்சுறுத்தினார், "அவர்கள் இப்போது பிறப்பித்துள்ள விரோதமான 'உத்தரவு' குறித்து சீனா என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து, அமெரிக்க ஜனாதிபதியாக, அவர்களின் நடவடிக்கையை நிதி ரீதியாக எதிர்கொள்ள நான் கட்டாயப்படுத்தப்படுவேன்" என்று எச்சரித்தார். "அவர்கள் ஏகபோகமாக வைத்திருக்க முடிந்த ஒவ்வொரு உறுப்புக்கும், எங்களிடம் இரண்டு உள்ளன," என்று அவர் மேலும் கூறினார். வியாழக்கிழமை, அரிய மண் ஏற்றுமதிகள் மீதான கட்டுப்பாடுகளை பெய்ஜிங் தீவிரப்படுத்தியது, கட்டுப்பாட்டில் உள்ள கனிமங்களின் பட்டியலை விரிவுபடுத்தியது மற்றும் அவற்றின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் இராணுவ மற்றும் குறைக்கடத்தி பயன்பாடுகள் உட்பட அவற்றின் வெளிநாட்டு பயன்பாட்டை இலக்காகக் கொண்ட கட்டுப்பாடுகளை நீட்டித்தது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு கடுமையான பாதிப்பை இலக்காகக் கொண்டன - இது சமீபத்திய மாதங்களில் சுரங்கம் மற்றும் உற்பத்தி திறனை அடையாளம் காணவும் விரைவாக அதிகரிக்கவும் டிரம்ப் நிர்வாகத்தின் குறிப்பிடத்தக்க முயற்சியைத் தூண்டியுள்ளது. மேலும் இது உடனடியாக டிரம்ப் நிர்வாகத்திற்குள் எச்சரிக்கை மணிகளை எழுப்பியதாக பல நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாத இறுதியில் தென் கொரியாவில் நடைபெறும் APEC உச்சிமாநாட்டின் போது ஜி மற்றும் டிரம்ப் இடையே எதிர்பார்க்கப்படும் சந்திப்புக்கு முன்னதாக, அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் பெய்ஜிங் தனது செல்வாக்கை அதிகரிக்க முயன்றதால் இந்த நடவடிக்கை வந்தது. சில நிர்வாக அதிகாரிகள் இதை டிரம்ப் உடனான திட்டமிடப்பட்ட நேரடி சந்திப்பிற்கு முன்னதாக ஜியின் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கான தெளிவான முயற்சியாகக் கருதினர், மற்றவர்கள் சீனாவின் பதிலைத் தூண்டியிருக்கக்கூடிய அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினர். டிரம்ப் ஆரம்பத்தில் Truth social இல் சந்திப்பு இப்போது ஆபத்தில் இருப்பதாகக் கூறினார். "நான் ஜனாதிபதி Xi உடன் பேசவில்லை, ஏனெனில் அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை," என்று அவர் எழுதினார். "இது எனக்கு மட்டுமல்ல, சுதந்திர உலகின் அனைத்து தலைவர்களுக்கும் ஒரு உண்மையான ஆச்சரியமாக இருந்தது. இரண்டு வாரங்களில் தென் கொரியாவில் உள்ள APEC இல் ஜனாதிபதி Xi ஐ நான் சந்திக்கவிருந்தேன், ஆனால் இப்போது அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை என்று தெரிகிறது." ஆனால் அது உண்மையில் ரத்து செய்யப்பட்டதா என்று பின்னர் கேட்டபோது, டிரம்ப் பதிலளித்தார்: "நான் ரத்து செய்யவில்லை, ஆனால் நாங்கள் அதைச் செய்யப் போகிறோமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அதைப் பொருட்படுத்தாமல் அங்கு இருக்கப் போகிறேன், எனவே நாங்கள் அதைச் செய்யக்கூடும் என்று கருதுகிறேன்." டிரம்ப் சமூக ஊடகங்களில் பகிரங்கமாக அச்சுறுத்தலை விடுப்பதற்கு முன்பே, இந்த வாரம் சீனாவின் நடவடிக்கையை ஒரு வியத்தகு விரிவாக்கமாகக் கருதியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஒரு மூத்த நிர்வாக அதிகாரி மற்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த மாத இறுதியில் அமெரிக்க வர்த்தகத் துறை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பின்தங்கிய பட்டியலில் சீன நிறுவனங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்திய பின்னர் வெள்ளை மாளிகையில் தனிப்பட்ட விரக்திகளும் உள்ளன, இது சீனாவை விரக்தியடையச் செய்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. https://www.cnn.com/2025/10/10/politics/rare-earths-china-trump-threats
15 hours 28 minutes ago
அதுவும் கப்டன் அத்தபத்துவை பற்றி சொல்லி மாளேலாது...அப்படித்தானெ செம்பாட்டான் சார்
17 hours 5 minutes ago
ஜெயசூரியா அடிக்காத அடியா. சார்ஜாவில நடந்த இறுதிப்போட்டியில 189 அடிச்சார். ரசல் ஆர்னல்டும் அவரும் சேர்ந்து வெளுத்த வெளு இப்பவும் கண்ணுக்க நிக்குது. அதுவும் வெங்கடேஸ் பிரசாத் என்டா, சனத்துக்கு அல்வா சாப்பிடுறமாதிரி. இந்தியா அடிச்சது வெறும் 54. இதுதான் அந்தப் போட்டி https://www.espncricinfo.com/series/coca-cola-champions-trophy-2000-01-61074/india-vs-sri-lanka-final-65900/full-scorecard
19 hours 15 minutes ago
ரஷ்யா, சீனா, மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் தமக்கென புதிய பாதையை அமைக்க தொடங்கி விட்டார்கள். இதனால் அமெரிக்காவிற்கு பெரிய வேலை இருக்காது என நினைக்கின்றேன்.இதில் தென் அமெரிக்காவும் கூட்டு சேர இன்னும் சிறப்பு.😃 சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைக்கும் அமெரிக்கா.😎
Checked
Sat, 10/11/2025 - 17:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed