புதிய பதிவுகள்2

பட்டிருப்பு-போரதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதான வீதியை திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பம் !

1 day ago
பட்டிருப்பு-போரதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதான வீதியை திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பம் ! No comments அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீதிகள்,.விவசாய பயிர்நிலங்கள் என்பன பாதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக வீதிகள் பகுதியளவிலும் முற்றாகவும் பாதிக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் போர்தீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு போரதீவு பிரதான வீதியானது வெள்ளத்தில் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் அதனை சீர் செய்து திருத்தியமைக்கும் பணிகளை நேற்று வெள்ளிக்கிழமை ( 20 ) திகதி வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்தது. இதனிடையில் வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதிக்கு குறுக்காக பாயும் நவகிரி குளம் அதிகளவில் பெருக்கெடுத்தமையால் வாகனங்கள் பயணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.காபெட் வீதிகளை உடைத்து அருகில் காணப்படும் வயல் நிலங்களுக்கு படை படையாக தூக்கி வீசப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதியை வெகு விரைவில் புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது. இவ்வாறு பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதியினால் தினமும் விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலர் செல்வதானால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. https://www.battinews.com/2024/12/blog-post_375.html

திண்ணை

1 day ago
😀 ஓம் நான் சந்தித்த போதும் இதைதான் சொல்லி ஒரே கொம்பிளைண்ட்😂 அது சரி உங்க இன்னொரு ஆள் நீங்களும் நானும் ஒரே ஆள் இரெண்டு வேற ஐடியில வாறம் எண்டு கம்பு சுத்தினவர் கண்டனியளே😂. ஒரு மனிசன் நம்பி போன் நம்பரை தந்தா இப்படியா கயித்தை விழுங்க வைப்பியள் நாதம்😂.

15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு

1 day ago
15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு கடந்த காலங்களில், 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியதாக, இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த அமைச்சர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 66 ஆகும். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு பத்து விமானங்களும் முன்னாள் அமைச்சர் தயாகமகேவுக்கு ஒரு விமானமும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு மூன்று விமானங்களும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு இரண்டு விமானங்களும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இருபத்தைந்து விமானங்களையும் முன்னாள் அமைச்சர் அலிசப்ரிக்கு இரண்டு விமானங்களையும் பெற்று பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த அமைச்சர்கள் 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், விமானப்படை விமானங்களை தமது போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். இந்த விமான பயணங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து கிடைத்த பதில் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/15-மனனள-அமசசரகளன-வமன-பயண-வபரஙகள-கசவ/175-349037

ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்?

1 day ago
ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? கந்தையா அருந்தவபாலன் ஊழல், இலஞ்சம் போன்ற சொற்களை நாம் கருத்து வேறுபாடின்றி பொதுவாகப் பயன்படுத்தினாலும் இரண்டும் ஒன்றல்ல. ஒருவரின் தீர்மானம் அல்லது செயல் மீது செல்வாக்குச் செலுத்தும் வகையில் சட்டமுரணாக அல்லது நெறிபிறள்வாக ஏதாவது பெறுமதியொன்றை வழங்குதல் அல்லது பெறுதல் ஊழல் எனப்படும். உதாரணமாக ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்காக அதனைத் தீர்மானிப்பவருக்கு பணம் கொடுப்பது ஊழல் எனப்படும். ஆனால் இலஞ்சம் என்பது சட்டமுரணாக அல்லது நெறிபிறள்வாக ஒருவர் தனது பதவியை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெறுவது அல்லது தனிப்பட்ட ரீதியில் நன்மையடைவதாகும். உதாரணமாக ஒரு பணியாளரை நியமிப்பதற்கு அல்லது இடமாற்றம் செய்வதற்கு மேலதிகாரி ஒருவர் பெறுவது. ஊழலும் இலஞ்சத்தினுள் அடங்கும் நிலைமைகளும் உண்டு.ஊழல் பெரும்பாலும் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனத் தலைவர்களுடன் தொடர்புபட்டிருக்க இலஞ்சம் ஆட்சியாளர் தொடக்கம் அடிமட்ட அரச ஊழியர் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. ஊழல்கள் பல கோடிகளுடன் தொடர்புபட இலஞ்சம் நூறு ரூபா தொடங்கி கோடிகள் வரை செல்லும். சிலவேளை இதனுள் மதுவிருந்து, மாது விருந்தும்கூட அடங்கும். இலங்கையில் இவை தீர்க்க முடியாத ஒரு நோயாக இன்று எல்லாவிடத்திலும் புரையோடிப் போயுள்ளது. ஏதாவது கொடுத்தால்தான் கருமம் நடக்கும் அல்லது விரைவாக நடக்கும் என்பதால் இலஞ்சம் என்பதை தவிர்க்க முடியாத ஒரு நியதியாக மக்கள் இன்று ஏற்கப் பழகிவிட்ட நிலைமையே நாட்டில் பல இடங்களில் காணப்படுகிறது. இலங்கையின் இன்றைய பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குக் குறிப்பாக நாடு கையறு நிலைமைக்குத் தள்ளப்பட்டமைக்குரிய பிரதான காரணிகளில் ஊழலும் இலஞ்சமும் பிரதான காரணிகளென தேச, சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலஞ்சம், ஊழல் என்பன உற்பத்தி திறனைப் பாதிப்பதுடன், உற்பத்திச் செலவு, விலை என்பவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதால் தேசிய, சர்வதேசிய சந்தைப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. இதனால் நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைவதால் வறுமை நிலை அதிகரிக்கிறது. வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. நாட்டின் நலன்புரிச் சேவைகளின் அளவும் தரமும் வீழ்ச்சியடைகிறது. அரச படுகடன் உயர்கிறது. ‘ரான்ஸ்பரன்சி இன்டநாஷனல்’ நிறுவனத் தரவுகளின்படி இலங்கையின் இலஞ்ச உணர் சுட்டியின் அளவு ( corruption perception index ) 2023 இல் 34 ஆக இருந்தது. இச்சுட்டி 0 தொடக்கம்100 வரையான புள்ளிகளைக் கொண்டது. 0 மிக மோசமான இலஞ்ச நிலையையும் 100 இலஞ்சமற்ற நிலையையும் காட்டும். இது 2020 இல் 38 ஆக இருந்தது என்பதிலிருந்து வருடாந்தம் இலங்கையின் இலஞ்ச நிலைமை கூடிக்கொண்டு செல்வதை அறிய முடியும். 180 நாடுகளைக் கொண்ட இக்கணிப்பீட்டில் இலங்கை 115 ஆம் இடத்தில் இருப்பது இலங்கை உயர்மட்ட இலஞ்ச நிலை கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இவ்வாறான ஒரு நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சிப் பீடம் ஏறியுள்ளது என்பதற்கப்பால் அதுவே அவர்களை ஆட்சிப் பீடம் ஏறவும் வழிவகுத்தது. அதுவே அவர்களுக்குப் பெரும் சவாலாகவும் இருக்கப் போகிறது. நோயாளி ஒருவரின் உடலெங்கும் பரவி விட்ட புற்றுநோயைக் குணப்படுத்துவது எவ்வளவு கடினமானதோ அதுபோன்ற ஒரு நிலையே புதிய ஆட்சியாளருக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள இலஞ்சமும் ஊழலும். இதனை ஜனாதிபதி நன்குணர்ந்தவராகவே உள்ளார் என்பதை அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில் அவராற்றிய உரை வெளிப்படுத்துகிறது. எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அதனைக் கையாள்பவர்கள் நேர்மையாகவும் சரியாகவும் கையாளாவிட்டால் அச்சட்டங்களினால் எவ்வித பயனும் கிடைக்காது. இலங்கையில் சட்டங்கள் சிலந்தி வலையைப் போன்றுள்ளது. அதில் சிறிய விலங்குகள் சிக்கி விடுகின்றன: பெரிய விலங்குகள் அதைக் கிழித்துக் கொண்டு சென்று விடுகின்றன. அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவதன் மூலமே இலஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறியதுடன், 2021 இல் தாக்கல் செய்யப்பட்ட 69 வழக்குகளில் 40 உம் 2022 இல் தாக்கல் செய்யப்பட்ட 89 வழக்குகளில் 45 உம் மீளப்பெறப்பட்டதற்கான காரணத்தை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வெளியிடவேண்டும் என்றும் கேட்டுள்ளமை நாட்டில் புரையோடிப் போயுள்ள இலஞ்ச, ஊழலை அகற்றுவது அவ்வளவு இலகுவானதொன்றல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி இவ்வாறான ஆணைக்குழுக்கள் மற்றும் நாட்டின் நீதித்துறை என்பன எவ்வளவுதூரம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. இலஞ்ச, ஊழல் முறைகேடுகளை அகற்றுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என முக்காலத்துக்குமுரிய சவால்கள் காத்திருக்கின்றன. தேர்தல் காலத்தின்போது தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஊழலற்ற அரசாங்கத்தை அமைப்போம் என்பது மட்டுமல்ல கடந்தகாலத்தில் ஊழல் செய்தோரை நீதிக்கு முன் நிறுத்துவோம் என்பதுவும் அடக்கம். நிகழ்கால, எதிர்கால ஊழல்களை அகற்றுவதற்கு கடந்த ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதும் அவசியமானது. கடந்த காலத்தைப் பொறுத்தவரை 2010 ஆண்டுக்குப்பின் மகிந்தவின் ஆட்சிக்காலத்திலும் மைத்திரி-ரணில் ஆட்சிக்காலத்திலும் கோதாபயவின் குறுகிய ஆட்சிக்காலத்திலும் பாரிய ஊழல் மோசடிகள் நடந்துள்ளன. ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட’ முறைகேடு தொடக்கம் ‘போட் சிற்றி’ ஊழல் மற்றும் உகண்டாவுக்கு தனி விமானத்தில் பணம் அனுப்பிய வரை பல முறைகேடுகளின் சூத்திரதாரிகளான ராஜபக்‌ஷ குடும்பத்தினரையும் மத்திய வங்கியின் பாரியளவிலான பிணைமுறி மோசடிக்காக மைத்திரி, ரணிலையும் பாரியளவிலான சீனி வரி மோசடிக்காக கோதாபயவையும் நீதிக்கு முன் நிறுத்தவேண்டிய கடப்பாடு தேசிய மக்கள் சக்திக்குண்டு. இவை இலகுவான விடயங்களன்று. திட்டமிட்டு திருடுபவர்கள் இயன்றவரை இயன்றவரை தடயங்களை விட்டு வைக்கமாட்டார்கள். அவ்வாறே ஏதாவது இருந்தாலும் அக்கோப்புகள் காணாமல் போய்விடும். ஏனெனில் செய்யப்பட்ட களவுகள் தனியே அவர்களால் செய்யப்பட்டவையல்ல. அவை யாவும் மேல்மட்ட கூட்டுக்களவுகள். அந்தக் கூட்டுக்களவாணிகள் இப்போதும் அரச பணியில் ஆங்காங்கே இருக்கின்றனர் எனபதுடன்அவற்றை மூடிமறைக்கக்கூடிய வல்லமையுடனும் இருக்கின்றனர். அவற்றையும் மீறி தடயங்கள் கண்டெடுக்கப்படும்போது சம்பந்தப்பட்ட நபர்கள் நாட்டிலிருக்கமாட்டார்கள். அர்ஜுனா மகேந்திரா சிங்கப்பூர் வீதிகளில் சுற்றித் திரிவார். ஆனால் அவரின் முகவரி கிடைக்காததால் நீதிமன்றக் கட்டளையை வழங்க முடியவில்லை என சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் அறிவிப்பர். ஏலவே பஷில், கோதாபய பாதுகாப்பாக வெளிநாடுகளுக்குப் பறந்து விட்டார்கள். தேவையேற்படின் இங்குள்ள சம்பந்தப்பட்டவர்களும் பறப்பது கடினமானதல்ல. போதாக்குறைக்கு அவர்களிடம் வெளிநாட்டுக் குடியுரிமையுமுண்டு. இந்த இலட்சணத்தில் இந்தப் பெருச்சாளிகளை அனுரவினால் இலகுவாக நீதிக்கு முன் நிறுத்த முடியுமா? சரி, கடந்த காலத்தை விடுவோம். நிகழ்காலத்தில் நிலைமை சாதகமாக உள்ளதா? ஊழல், இலஞ்சத்தில் புரையோடிப்போன இலங்கையின் நிர்வாக, நீதிக் கட்டமைப்புகள் இன்னும் அவ்வாறே உள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சர்களும் அவர்களின் செயலாளர்களும் மட்டுமே மாறியுள்ளனர். செயலாளர்கள் கூட ஏற்கனவே அரச துறைகளில் இருந்த அதிகாரிகள்தான். வானத்திலிருந்து கொண்டவரப்பட்டவர்களல்லர். கோதாபயவுடனும் பின்னர் ரணிலுடன் இருந்த ஆலோசகர்கள், அதிகாரிகள் சிலர் இன்னும் அனுரவுடனும் இருக்கிறார்கள். ஜனாசாக்களை கட்டாயம் எரிக்கவேண்டும் என்று கோதாபயவுக்கு குழல் ஊதிய ஒருவரை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்தமைக்கு முஸ்லிம் மக்களிடமிருந்து கண்டனங்கள் இப்போதே எழத்தொடங்கிவிட்டன. போலிப்பட்டம் தொடர்பாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்கப் போவதாக பொதுஜன பெரமுன கச்சையைக் கட்டுகிறது. இதில் நகைச்சுவை என்னவென்றால் தனியறையில் மோசடியான முறையில் சட்டப் பரீட்சையெழுதிப் பட்டம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிற நாமல்தான் அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர். அதுமட்டுமன்றி பல இலஞ்ச, ஊழல் முறைகேடுகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் பதவியுயர்வுடன் இன்னும் உயர்பதவிகளை அலங்கரித்து வருவதையும் காணமுடிகிறது. அனுரவினதும் அவர் தோழர்களதும் கைகள் மட்டும் சுத்தமாக இருந்தால் மட்டும் போதுமா? சம்பந்தப்பட்ட அனைவரதும் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டுமல்லவா? அது மிகக்கடினம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு போக்குவரவு கண்காணிப்புக் காவல் துறையினரின் நாளாந்த வருமானத்தில் எவ்வித வீழ்ச்சியுமேற்படவில்லை என்பது. நிகழ்காலத்தில் இவ்வளவு சவால்களுக்கும் முகம் கொடுத்துக்கொண்டு எதிர்காலம் தொடர்பிலும் புதிய அரசாங்கம் கவனஞ் செலுத்தவேண்டியுள்ளது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில் அவர் சுட்டிக்காட்டியது போல அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவதன் மூலமே இதனை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி எதிர்பார்ப்பது தெரிகிறது. இங்கு எழக்கூடிய நியாயமான ஐயங்களில் ஒன்று தற்போதிருக்கும் அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவது உடனடிச் சாத்தியமாகுமா? மற்றது அவ்வாறு கட்டமைப்பு முழுமையாக மாற்றப்பட்டால்கூட இலஞ்ச, ஊழல் முறைகேடுகள் முற்றாக மறைந்துவிடுமா என்பது. புதிய அரசாங்கம் தனது பதவிக்காலம் முழுவதும் முயன்றால்கூட அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவது கடினம். ஜனநாயக நாடுகளில் இது நீண்டதொரு செயன்முறை. இதில் உள்நாட்டுக் காரணிகள் மட்டுமன்றி வெளிநாட்டுக் காரணிகளும் தாக்கத்தைச் செலுத்தும். அதேபோல ஐனாதிபதி கூறியது போல இலஞ்ச, ஊழல் முறைகேடுகளை சட்டங்களால் மட்டும் தடுத்துவிட முடியாது. அவை தவறானவை என்ற மனப்பாங்கு நாட்டு மக்களின் பண்பாட்டுக் கூறுகளிலொன்றாகவும் உருவாக்கப்படவேண்டும். அது குடும்பம், பாடசாலை, வழிபாட்டிடங்கள் போன்ற சமூக நிறுவனங்களால் சிறுபராயத்திலிருந்து வளர்த்தெடுக்கப்படவேண்டும். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள் இதற்கும் பொருந்தும். முன்னைய அரசாங்கங்களின் தவறான அணுகுமுறைகளால் படுத்துவிட்ட இலங்கைப் பொருளாதாரத்தைச் சீர்படுத்தி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே அதிக முயற்சிகளை எடுக்கவேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள புதிய அரசாங்கம் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை களையவேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதை அதன் முன்னெடுப்புகள் காட்டுகின்றன. அதில் முழுமையாக வெற்றிபெறாவிடினும் மக்கள் திருப்தியடையும் வகையிலான முன்னேற்றம் ஒன்றை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அதில்தான் தேசிய மக்கள் சக்தியின் மீதான மக்களின் நம்பிக்கையும் நாட்டின் எதிர்காலம் மீதான நம்பிக்கையும் தங்கியுள்ளன. https://thinakkural.lk/article/313893

அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும் - ஜாமுனி காமந்த துஷார

1 day ago
Saturday, December 21, 2024 செய்திகள் 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து கடந்த காலங்களில், 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியதாக, இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த அமைச்சர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 66 ஆகும். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு பத்து விமானங்களும் முன்னாள் அமைச்சர் தயாகமகேவுக்கு ஒரு விமானமும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு மூன்று விமானங்களும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு இரண்டு விமானங்களும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இருபத்தைந்து விமானங்களையும் முன்னாள் அமைச்சர் அலிசப்ரிக்கு இரண்டு விமானங்களையும் பெற்று பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த அமைச்சர்கள் 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், விமானப்படை விமானங்களை தமது போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். இந்த விமான பயணங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து கிடைத்த பதில் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ செலவு மட்டுமல்ல ..பிளேனிலும் விளையாட்டு காட்டியிருக்கினம்..இதிலை சஜீத்தான் ..கூட ஓடியிருக்கிறார்..

கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்

1 day ago
தமிழீழ கோழி இட்ட முட்டைகளை எதிர்காலத்தில் முட்டையடிக்க கனடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான உடன்படிக்கையில் இருதரப்பும் கைச்சாத்திட்டனர்.

அன்டன் பாலசிங்கத்துடனான அனுபவங்களின் நினைவுகள்

1 day 1 hour ago
Published By: DIGITAL DESK 7 17 DEC, 2024 | 10:28 AM டி.பி.எஸ். ஜெயராஜ் கடந்த வாரம் பாராளுமன்ற சபாநாயகர் அசோகா சப்புமால் ரண்வலவை பதவியில் இருந்து விலகவைத்த அவரது உயர்கல்வித் தகைமைகள் தொடர்பான சர்ச்சை விடுதலை புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர் ஒருவர் தொடர்பிலான இதே போன்ற முன்னைய சர்ச்சை ஒன்றை நினைவுபடுத்துகிறது. ஊடகங்களில் அடிக்கடி கலாநிதி பாலசிங்கம் என்று குறிப்பிடப்பட்ட விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் பற்றியதே அந்த குழப்பமாகும். விடுதலை புலிகளுக்கு எதிரான இயக்கங்களின் உறுப்பினர்கள் பாலசிங்கம் ஒரு கலாநிதி அல்ல என்று பரவலாக மறுதலித்தனர். பாலசிங்கம் ஒருபோதுமே கலாநிதி பட்டத்தை பெறவில்லை என்றும் அதனால் அவர் ஒரு " பாசாங்கு கலாநிதி " என்றும் கூறப்பட்டது. அந்த நேரத்தில் நடந்தது இதுதான். இளம் பராயத்தில் ஏ.பி.ஸ்ரனிஸ்லோஸ் என்று அறியப்பட்ட பாலசிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்விகற்று கலைமாணி ( B.A. degree ) பட்டம் பெற்றவர்.பிறகு பிரிட்டனுக்கு சென்ற பாலசிங்கம் சவுத்பாங்க் லண்டன் பொலிரெக்னிக்கில் முதுமாணி (M.A. degree) பட்டத்தை பெற்றார். மார்க்சிசத்தின் உளவியல் ( Psycology of Marxism ) தொடர்பாகவே அவரது ஆய்வு அமைந்தது. அதற்கு பிறகு பேராசிரியர் ஜோன் ரெயிலரின் கீழ் சமூகவியலில் உடமை மாற்றம் தொடர்பான மார்க்சின் கோட்பாடு ( Marx's theory of alienation in sociology) குறித்து கலாநிதி பட்டத்துக்காக ஆய்வைச் செய்யத் தொடங்கினார். விடுதலை அரசியலில் ஈடுபடத் தொடங்கியதனால் பாலசிங்கம் கலாநிதி பட்டத்துக்கான ஆய்வை பூர்த்தி செய்யவில்லை. 1983 கறுப்பு ஜூலை இனவன்செயலுக்கு பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் மதியூகியாக, பேச்சுவார்த்தையாளராக, பேச்சாளராக பாலசிங்கம் இந்தியாவுக்கு வந்தார். இந்திய ஊடகங்களை தொடர்ந்து சர்வதேச ஊடகங்களும் அவரை " கலாநிதி பாலசிங்கம் " என்று குறிப்பிடத் தொடங்கின. அவர் தன்னை " கலாநிதி " என்று ஒருபோதும் அழைத்ததில்லை என்பதை நேர்மையாக ஒத்துக்கொள்ள வேண்டும். ஆனால், தன்னை கலாநிதி என்று அழைத்த ஊடகச் செய்திகளை திருத்துவதற்கு அவர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. பாலசிங்கம் கலாநிதி பட்டத்தை கொண்டிருக்கவில்லை என்பது பிறகு நம்பத்தகுந்த முறையில் நிரூபிக்கப்பட்டது. அது போட்டிக் குழுக்களை சேர்ந்த எதிர்பாளர்களினால் செய்யப்படவில்லை. பதிலாக விடுதலை புலிகள் மத்தியில் இருந்தவர்களே அதைச் செய்தார்கள். அந்த நாட்களில் லண்டனில் விடுதலை புலிகள் இயக்கம் இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டிருந்தது. ஒரு பிரிவு பாலசிங்கத்தின் கீழும் மற்றைய பிரிவு இலங்கையில் மயிலிட்டியைச் சேர்ந்த ஒரு கணக்காளரான சீவரத்தினத்தின் கீழும் இருந்தன. இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியான சஞ்சிகை ஒன்றை (Tamil Voice International ) சீவரத்தினம் நடத்தினார். பாலசிங்கத்தின் கலாநிதி பட்டத் தகைமைகள் குறித்து அந்த சஞ்சிகைக்கு "வாசகர் " ஒருவர் கேள்வியை அனுப்பினார். அதற்கு ஆசிரியர்கள் அளித்த பதில் உண்மை நிலையை தெளிவாக விளக்கியது. இத்தகைய ஒரு பின்புலத்தில் இந்த கட்டுரை பாலசிங்கத்தின் 18 வது நினைவு தினத்தை ( டிசம்பர் 14 ) முன்னிட்டு அவர் மீது கவனத்தைச் செலுத்துகிறது. " பாலா அண்ணை " என்று அறியப்பட்ட பாலசிங்கம் கிளர்ச்சியூட்டுகின்ற ஆனால் அதேவேளை சர்ச்சைக்குரிய புள்ளியாக விளங்கினார். அவரை நேசிப்பவர்களும் வெறுப்பவர்களும் இருந்தார்கள். பாலசிங்கத்துடனான இந்த கட்டுரையாளரின் உறவுமுறையும் கூட நெளிவுசுழிவுகளைக கொண்டதாகவே இருந்தது. பிரச்சினைகளைப் பொறுத்து அவரை நான் கண்டித்ததும் உண்டு, மெச்சியதும் உண்டு. அதேபோன்று அவரும் கூட எனனைப் பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் எழுதியும் பேசியும் இருக்கிறார். இந்த மனிதனைப் பற்றியும் தமிழர் விவகாரங்களில் அவரின் பாத்திரம் பற்றியும் பல சந்தர்ப்பங்களில் நான் எழுதியிருக்கிறேன். இந்த கட்டுரையில் " பாலா அண்ணைக்கும் " எனக்கும் இடையிலான துறைசார் மற்றும் தனிப்பட்ட உறவுமுறை பற்றி கவனம் செலுத்துகின்ற அதேவேளை முன்னைய எழுத்துக்கள் சிலவற்றில் இருந்தும் விடயங்களை குறிப்பிடுகிறேன். 1938 மார்ச் 4 ஆம் திகதி பிறந்த பாலசிங்கம் பல்வேறு குணப் போக்குகளின் ஒரு கலவை. இந்துவான அவரது தந்தையார் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்தவரான தாயார் வடமாகாணத்தவர். ஒரு கத்தோலிக்கராக பாலசிங்கம் வளர்க்கப்பட்ட போதிலும் விரைவாகவே அவர் ஒரு பகுத்தறிவாளராகவும் உலோகயதவாதியாகவும் மாறிவிட்டார். பாலசிங்கத்தின் முதல் மனைவி புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண தமிழ்ப் பெண்மணி. இரண்டாவது மனைவி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அங்ளோ -- சக்சன் மரபைக் கொண்ட பெண்மணி. பிரிட்டிஷ் பிரஜையாக இருந்த போதிலும், பாலசிங்கம் தனது " தமிழ் ஈழம் " தாயகத்தைக் காண்பதற்கு வேட்கை கொண்டிருந்தார். அது அமைக்கப்படுகின்ற ஒரு கட்டத்தில் இருந்ததாக அவர் நம்பினார். பாலசிங்கத்தின் தந்தைவழி பாட்டனார் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டூரைச் சேர்ந்த ஒரு " சைவக் குருக்கள்." அவரது தந்தையார் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒரு மின்சார மேற்பார்வையாளர். யாழ்நகரைச் சேர்ந்த பாலாவின் தாயார் முன்னர் மார்ட்டின் வீதியில் வசித்தவர். மருத்துவமாதுவான அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணியாற்றியபோது பாலாவின் தந்தையாரைச் சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார். கரவெட்டி அவர் கணவரிடமிருந்து பிரிந்ததுடன் இளவயதிலேயே விதவையாகியும் விட்டார். பாலசிங்கம் தனது தாயாருடனும் மூத்த சகோதரியுடனும் சிறுபிள்ளையாக வடக்கிற்கு சென்றார். வடமராட்சி கரவெட்டியில் குடியேறி அவர்கள் வாழ்க்கையை தொடங்கினர். பாலாவின் தாயார் ' அம்பம் ஆஸ்பத்திரியில் ' மருத்துவமாதாக பணியாற்றினார். நான் வீரகேசரியில் பத்திரிகையாளராக இணைந்த நேரத்தில் பாலசிங்கத்தின் இரு மருமகன்கள் விக்டரும் அன்டனும் அச்சுக்கோப்பாளர் பகுதியில் பணியாற்றினார்கள். எனது தாயாரும் கூட கரவெட்டியை சேர்ந்தவரே. துன்னாலை தெற்கு, கரவெட்டி என்பதே தபால் விலாசம். பிற்காலத்தில் பாலசிங்கம் அதை அடிக்கடி கூறி தானும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களே என்று உரிமை கொண்டாடுவார். வீரகேசரி சிறுவர் பராயத்தில் பாலசிங்கம் ஏ.பி. ஸ்ரனிஸ்லோஸ் என்று அறியப்பட்டார். கரவெட்டி திருஇருதயக் கல்லூரியிலும் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் அவர் கல்வி கற்றார். அந்த நாட்களில் கரவெட்டி ஒரு இடதுசாரிக் கோட்டையாக விளங்கியது. 'ஸ்ரனி ' என்று அப்போது அறியப்பட்ட இளம் பாலசிங்கமும் இடதுசாரி கோட்பாடுகளினால் ஈர்க்கப்பட்டார். சுந்தர் என்று அறியப்பட்ட பிரபல்யமான தமிழ் கார்ட்டூனிஸ்ட் சிவஞானசுந்தரம் கரவெட்டியில் இருந்தே ' சிரித்திரன் ' என்ற பெயர்பெற்ற சஞ்சிகையை வெளியிட்டார். சிவஞானசுந்தரத்தின் முயற்சியின் காரணமாக ஸ்ரனிஸ்லோஸ் 1960 களின் முற்பகுதியில் கொழும்பு தமிழ்ப் பத்திரிகையான வீரகேசரியில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்றார். பெரும்பாலான நேரத்தை வாசிப்புக்கு செலவிடும் ஒரு மனிதனாக ஸ்ரனியை பற்றி பேசும்போது வீரகேசரியில் அவரின் முன்னாள் சகாக்கள் கூறுவார்கள். தனது தோற்றத்தில் அவர் அக்கறை செலுத்துதில்லை. குறிப்பாக உடைகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. கிரமமாக நேரங்களில் அவர் சாப்படுவதுமில்லை. வீரகேசரியில் ஸ்ரனிஸ்லோஸ் விரைவாகவே வெளிநாட்டுச் செய்திகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை பிரதிகளையும் வெளிவிவகாரங்கள் தொடர்பான கட்டுரைகளையும் மொழிபெயர்ப்பது அதில் முக்கிய பணியாக இருந்தது. ஆனால், பாலசிங்கம் தத்துவத்திலும் உளவியலிலும் கருத்தூன்றிய கவனம் செலுத்தினார். மனதை வசியப்படுத்தும் கலையிலும் ( Hypnotism ) ஈடுபாடு காட்டினார். கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகத்தில் ஒரு மொழி பெயர்ப்பாளராக ஸ்ரனிஸ்லோஸுக்கு நியமனம் கிடைத்ததும் நிலைமைகள் மாறின. நேர்த்தியான முறையில் உடைகளை அணியத் தொடங்கியதும் அவரின் தோற்றத்திலும் ஒரு உருநிலை மாற்றம் ஏற்பட்டது. புதிய தொழிலின் விளைவாக மாத்திரம் முற்றிலும் இந்த மாற்றம் ஏற்பட்டு விடவில்லை. காமனும் கணை தொடுத்தான். பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகத்துக்கு அருகாக பிரிட்டிஷ் கவுன்ஸிலில் பணியாற்றிய அழகான தமிழ்ப் பெண்மணி மீது பாலசிங்கம் காதல் கொண்டார். பருத்தித்துறை ஹாட்டி கல்லூரியில் படிப்பித்த இராசரத்தினம் மாஸ்டரின் மகளான பேர்ள் இராசரத்தினமே அந்த பெண்மணி. அந்த குடும்பம் எனது தாயாரின் குடும்பத்துடன் நெருக்கமான பழக்கத்தைக் கொண்டது. எனது சிறுவர் பராயத்தில் பேர்ள் அரசரத்தினத்தை நான் " பூ அன்ரி " என்று அழைத்தது நினைவிருக்கிறது. அவரின் சகோதரி ரதியின் திருமணத்தில் எனது சகோதரிகளில் ஒருவர் மணப்பெண் தோழியர்களில் ஒருவர். பேர்ளின் மூத்த சகோதரி நேசம் எனது தாயாருடன் பல வருடங்களாக ஒரே பாடசாலையில் படிப்பித்தார். பேர்ளுக்கும் அன்டனுக்கும் இடையிலான காதல் 1968 ஜூலை 16 கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ட் தேவாலயத்தில் திருமணத்தில் முடிந்தது. இங்கிலாந்து புது மணமகன் பாலசிங்கத்துக்கு மணவாழ்வினை மகிழ்ச்சி நீடித்ததாக இருக்கவில்லை. அவரின் மனைவி பேர்ள் கடுமையாக சுகவீனமுற்றார். அவருக்கு வெளிநாட்டு நவீன சிகிச்சை தேவைப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகள் மிகவும் அனுதாபமுடையவர்களாகவும் பெருந்தன்மை கொண்டவர்களாகவும் இருந்தனர். பாலசிங்கத்தையும் மனைவியையும் இங்கிலாந்துக்கு செல்ல அவர்கள் அனுமதித்தனர். இருவரும் 1971 ஆகஸ்ட் 3 ஆம் திகதி இலங்கையை விட்டுச் சென்றனர். இங்கிலாந்தில் பாலசிங்கம் தனது உயர்கல்வியை தொடர்ந்தார். ஆனால், அவரின் மனைவியின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. பாலசிங்கத்துக்கு வாழ்க்கை இடரும் தியாகமும் நிறைந்தாக மாறியது. அவர் வேலைக்கு செல்வதுடன் படிக்கவேண்டியிருந்தது. நோயாளியான மனைவியை பராமரிக்க வேண்டியும் இருந்தது.மனைவி 1976 நவம்பரில் காலமானார். வைத்தியசாலையில் ஒரு தாதியுடன் பாலசிங்கத்துக்கு நன்கு பழக்கமேற்பட்டது. அந்த தாதியும் அவுஸ்திரேலியாவில் இருந்து பிரிட்டனுக்கு வந்த ஒரு " அன்னியரே. மனைவியை இளந்த இளம் பாலசிங்கத்துக்கு தாதி அுடல் ஆன் வில்பியுடன் இரண்டாவது காதல் மலர்ந்தது. தெற்கு லண்டனில் பிறிக்ஸ்டனில் பதிவாளர் அலுவலகத்தில் அவர்கள் எளிமையான முறையில் 1978 செப்டெம்பர் முதலாம் திகதி திருமணம் செய்து கொண்டனர். மட்ராஸ் / சென்னை பாலசிங்கம் 1978 ஆம் ஆண்டில் விடுதலை புலிகளுடன அணி சேர்ந்துகொண்டார். இந்தியாவுக்கு கிரமமாக வருகை தந்த அதேவேளை லண்டனில் இருந்து விடுதலை புலிகளுக்காக பெருமளவில் எழுதினார். 1980 ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பிளவு ஏற்பட்டபோது பாலசிங்கம் தன்னை பிரபாகரனின் பிரிவுடன் இணைத்துக்கொண்டார். 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு பாலசிங்கமும் மனைவி அடேலும் சென்னைக்கு ( அப்போதைய மட்ராஸ் ) குடிபெயர்ந்தனர். " த ஐலண்ட் " வீரகேசரி தமிழ்த் தினசரியில் 1977 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டதன் மூலம் பத்திரிகைத்துறையில் பிரவேசம் செய்த நான், 1981 ஆம் ஆண்டில் " த ஐலண்ட் " ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது அதில் இணைந்து கொண்டேன். அந்த வேளையில் அதன் ஆசிரியராக இருந்த விஜிதா யாப்பா 1984/85 காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து இயங்கிய இலங்கை தமிழ்த் தீவிரவாத இயக்கத் தலைவர்களை பேட்டிகாணும் பணியை என்னிடம் ஒப்படைத்தார். தமிழ்நாட்டில் பெரும்பாலான தீவிரவாத குழுக்களை சந்தித்த எனக்கு விடுதலை புலிகளை சந்திப்பது சற்று சிரமமாக இருந்தது. இறுதியாக மரீனா கடற்கரையில் கண்ணகி சிலை ஓரமாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருமாறு என்னிடம் கேட்கப்பட்டது. நானும் அதற்கு இணங்கினேன். " நான் பாலசிங்கம் " சரியாக 5.30 மணிக்கு அந்த இடத்தில் வாகனம் ஒன்று வந்து நின்றது. அதை ஓட்டிவந்த விடுதலை புலிகள் இயக்க முக்கியஸ்தரான " நேசன் " ( முன்னாள் கத்தோலிக்க குரு மாணவன் ) என்னை முன் ஆசனத்தில் வந்து ஏறுமாறு கேட்டார். காரை ஓட்டிச் சென்று இன்னொரு இடத்தில் அவர் நிறுத்தினார். சில நிமிடங்களில் இன்னொரு வாகனம் வந்து பின்னால் நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்கிவந்து எமது வாகனத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். நான் திரும்பிப் பார்த்தபோது தனது கையை நீட்டி " நான் பாலசிங்கம் " என்று கூறினார். வாகனத்தை ஓட்டத் தொடங்கிய நேசன் எங்கு போவது என்று தெரியாத மாதிரி பல வீதிகளின் ஊடாக அதைச் செலுத்தினார். பாலசிங்கம் ஒரு மட்டுமதிப்பற்ற முறையில் வெடுக்கென்று என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தார். ஒருவிதமான பகைமையுணர்ச்சியுடனான அவரின் கேள்விகள் என்னை அவர் சந்தேகத்துடன் நோக்குகிறார் என்பதை உணர்த்தியது. நான் கதையை மாற்றி எனது குடும்பத்தைப் பற்றியும் காலமான அவரின் மனைவியின் குடும்பத்தைப் பற்றியும் கூறத் தொடங்கினேன். " உங்களைப் போன்றே நானும் வீரகேசரியில் வேலை செய்தேன்" என்றும் அவரிடம் கூறினேன். பாலசிங்கத்தின் மனநிலை மாறியது. அவர் சிரித்துக்கொண்டு " அப்போ நீங்கள் எங்களில் ஒருவர் " என்று அவர் கூறினார். " நாங்கள் புஹாரி ஹோட்டலுக்கு போவோம் " என்று பாலசிங்கம் நேசனிடம் கூறினார். எனவே நாம் அந்த முஸ்லிம் உணவகத்துக்கு சென்று இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு கடந்த்காலத்தை நினைவுகூர்ந்த வண்ணம் சமகால அரசியலையும் பேசினோம். அதுவே பாலசிங்கத்துடனான எனது முதலாவது சந்திப்பு. அதற்கு பிறகு அவரை நான் பல தடவைகள் சந்தித்தேன். கனடா 1988 ஆம் ஆண்டில் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை ஆய்வு மாணவனாக நீமன் புலமைப்பரிசில் பெற்று நான் அமெரிக்கா சென்றேன். பிறகு 1989 ஆம் ஆண்டில் கனடாவுக்கு மாறி ரொரண்டோவில் 1990 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் வாரப் பத்திரிகையை வெளியிடத் தொடங்கினேன். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்துடனான போர்நிறுத்தத்தை விடுதலை புலிகள் 1995 ஏப்ரிலில் முறித்துக்கொண்ட பிறகு நான் அவர்களை விமர்சித்தேன். ரொரண்டாவில் நான் ஆசிரியராக இருந்து எனது சொந்தத்தில் நடத்திய " மஞ்சரி " தமிழ் வாரப் பத்திரிகைக்கு எதிராக கனடாவில் விடுதலை புலிகள் ஒரு பிரசாரத்தை தொடங்கியதனால் நான் பெரிய விலையைச் செலுத்த வேண்டியதாயிற்று. எனது பத்திரிகையை அவர்கள் " தடை " செய்தார்கள். தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல்கள் வந்தபோதிலும் நான் தளர்ந்துபோகவில்லை. அதையடுத்து விடுதலை புலிகள் தமிழ்ப் பத்திரிகைகளை விற்பனை செய்கின்ற தமிழர்களுக்கு சொந்தமான கடைகளையும் முக்கியமான தமிழ் விளம்பரதாரர்களையும் இலக்கு வைக்கத் தொடங்கினர். 48 பக்கங்களைக் கொண்ட அந்த ஒரு டொலர் ' ரப்லொய்ட் ' பத்திரிகை 22 பக்கங்களில் விளம்பரங்களை கொண்டு வெளியானது. 4,500 -- 5,000 பிரதிகள் விற்பனயாகின. விடுதலை புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக எனது பத்திரிகையை விற்பனை செய்வதை பல கடைகள் நிறுத்திக் கொண்டன. பத்திரிகை 24 பக்கங்களாக சுருங்கியதுடன் இரு பக்கங்களுக்கே விளம்பரங்கள் கிடைத்தன. விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கையும் நூறுகளுக்கு கண்டது. விடுதலை புலிகளுக்கு முழந்தாழிட்டு உயிர் வாழ்வதையும் விட எனது காலில் நின்று சாவதற்கு முடிவெடுத்த நான் 1996 ஆம் ஆண்டில் பத்திரிகை வெளியிடுவதை நிறுத்தினேன். ஆங்கிலப் பத்திரிகைத்துறை நானும் எனது மனைவியும் அந்த பத்திரிகைக்காக முழுநேர பணியாற்றினோம். எங்களைத் தவிர, வேறு ஒன்பது பேர் பகுதிநேர ஊழியர்களாக பணியாற்றினர். பத்திரிகையை நிறுத்தியது அந்த நேரத்தில் பாரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. இருந்தாலும், கெடுதியின் உருவில் வந்த நன்மையாக, நான் மிண்டும் ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தேன். கொழும்பில் தமிழில் எழுதி வீரகேசரிக்காக பணியாற்றியதன் மூலமாக பத்திரிகைத்துறை வாழ்க்கையை தொடங்கியவன் நான். த ஐலண்டுக்காகவும் பிறகு 'தி இந்து ' வுக்காகவும் பணியாற்றியதன் மூலமாக ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தவன் நான். கனடாவுக்கு வந்த பிறகு முதலில் " செந்தாமரை " வாரப்பத்திரிகையினதும் பிறகு " மஞ்சரி" யினதும் ஆசிரியராக தமிழ்ப் பத்திரிகைத்துறைக்கு திரும்பினேன். மீண்டும் "த ஐலண்ட்" , பிறகு "த சண்டே லிடர்", "த நேசன்", இப்போது " டெயிலி மிறர்" , " டெயிலி ஃபைனான்சியல் ரைம்ஸ் " ஆகியவற்றுக்கு எழுதுவதன் மூலம் ஆங்கிலப் பத்திரிகைத்துறைக்கு திரும்பி வந்திருக்கிறேன். என்னை மௌனமாக்க விடுதலை புலிகள் எனது பத்திரிகையை நிறுத்தினாலும் கூட, நான் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதி பதவியில் இருந்த அரசாங்கங்களையும் விடுதலை புலிகளையும் விமர்சித்தேன். புலிகளின் ஆதரவாளர்கள் என்னை ஒரு தமிழ்த் துரோகி என்று பழிதூற்றினார்கள். புலிகளுக்கு எதிரானவன் என்று எனக்கு பட்டஞ்சூட்டினாலும், எனது பத்திரிகையாளனாக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தேன். பாலசிங்கம் நீட்டிய நேசக்கரம் புதிய மிலேனியம் ஒரு அதிர்ச்சியைக் கொண்டுவந்தது. 2000 ஆண்டு நடுப்பகுதியில் ரொரண்டோவுக்கு வந்த தமிழக் கத்தோலிக்க மதகுரு வணபிதா எஸ்.ஜே. இம்மானுவேல் என்னுடன் தொடர்புகொண்டார். லண்டனில் இருந்த பாலசிங்கம் என்னுடன் பேசுவதற்கு விருப்புவதாக வணபிதா என்னிடம் கூறினார். இது மீண்டும் பாலசிங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தது. நான் இலங்கையை விட்டு வெளியேறிய பிறகு அவருடனான தொடர்பை இழந்துவிட்டேன். ஆனால், 1999 ஆம் ஆண்டில் பாலசிங்கம் லண்டனில் இருந்து வன்னிக்கு திரும்பவிருப்பதை பற்றிய செய்தியை ஏனைய ஊடகங்களை முந்திக்கொண்டு நானே பிரத்தியேகமாக வெளியிட்டிருந்தேன். பல வருடங்களுக்கு பிறகு என்னுடன் பேசிய பாலசிங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து பேச்சுவார்த்தை மூலமான ஒரு இணக்கத்தீர்வின் ஊடாக சமத்துவமான உரிமைகளுடன் சமாதானத்தை காணவேண்டியது தமிழ் மக்களுக்கு அவசியமாகிறது என்ற எனது கருத்துடன் உடன்படுவதாக எனக்கு கூறினார். நோர்வேயின் உதவியுடன் சமாதான முயற்சி ஒன்று தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக கூறிய அவர் எனது எழுத்துக்களின் ஊடாக அதற்கு நான் ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த நேரத்தில் நான் ' த சண்டே லீடர் ' பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தேன். கலந்துரையாடல் அந்த பத்திரிகையின் ஆசிரியரும் எனது நெருங்கிய நண்பருமான லசந்த விக்கிரமதுங்கவிடம் அதைக் கூறியபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து வெற்றிகரமாக இணக்கத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாக உறுதியளித்தார். அதற்கு பிறகு பாலசிங்கத்துடன் நான் கிரமமாக தொடர்பில் இருந்தேன். பல சந்தர்ப்பங்களில் நானும் அவரும் பத்திரிகையில் பிரசுரிக்கப்படுவதற்கு அப்பாலான விடயங்கள் பலவற்றைப் பற்றி மணிக்கணக்காக பேசியிருப்போம். அந்த சம்பாஷணைகளின் ஊடாக விடுதலை புலிகளின் அந்தரங்கமான செயற்பாடுகள், அதன் படிமுறை வளர்ச்சி பற்றி பெருமளவு விடயங்களை அறிந்துகொண்டேன். போர்நிறுத்தம் ஒஸ்லோவின் அனுசரணையுடனான போர்நிறுததம் 2002 பெப்ரவரி 23 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், உண்மையான சமாதான இணக்கத்தீர்வுக்குை அனுகூலமில்லாத முறையில் விடுதலை புலிகள் நடந்து கொள்கிறார்கள் என்பதை விரைவாகவே நான் கண்டு கொண்டேன். பாலசிங்கத்திடம் எனது விசனத்தை வெளிப்படுத்தியபோது எனது முறைப்பாடுகளுக்கு அவர் செவிசாய்ப்பதாக இல்லை என்பதைக் கண்டுகொண்டேன். சமாதான முயற்சி ஒன்றுக்கு விடுதலை புலிகள் தங்களை பரிச்சியப்படுத்துவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும் என்று நினைத்து நான் ஆறு மாதங்கள் காத்திருந்தேன். அது நடக்கவில்லை என்றபோது நான் விடுதலை புலிகள் செய்த எதிர்மறையான காரியங்களுக்காகவும் செய்யத்தவறிய காரியங்களுக்காகவும் அவர்களைை விமர்சிக்கத் தொடங்கினேன். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் விடுதலை புலிகளுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை நான் விரைவாகவே புரிந்துகொண்டேன். இந்த சிந்தனை எனது பத்திகளில் பிரதிபலித்தது. பாலசிங்கம் ஆத்திரமடைந்தார். எனது பத்திகளை பிரசுரிக்க வேண்டாம் என்றும் பிரசுரித்தால் அதனால் பத்திரிகைக்கு தமிழ் வாசகர்கள் மத்தியில் உள்ள மதிப்பு கெட்டுவிடக்கூடும் என்றும் லசந்த விக்கிரமசிங்கவுக்கு அவர் " ஆலோசனை " கூறினார். என்னிடம் அதைக் கூறிய லசந்த , மச்சான் வழமைபோன்று எழுது" என்று உற்சாகப்படுத்தினார். நான் தொடர்ந்து எழுதினேன். பிறகு பாலசிங்கம் செய்தியாளர்கள் மகாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் எனது பெயரைக் கூறி தாக்கத் தொடங்கினார். அவருக்கும் எனக்கும் இடையிலான தொடர்பு இல்லாமல் போனது. என்னை கடுமையாக தாக்கி எழுதுமாறு அவர் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை கேட்குமளவுக்கு எனக்கு எதிராகச் சென்றார். தொலைபேசி அழைப்பு ஒரு சில வருடங்கள் கழித்து 2006 நவம்பர் மூன்றாம் வாரம் லண்டனில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று எனக்கு வந்தது. பாலசிங்கம் தான் அழைத்தார். எங்களுக்கு இடையிலான அரசியல் வேறுபாடுகள் காரணமாக இருவரும் சுமார் மூன்று வருடங்களாக பேசிக்கொள்ளும் மனநிலையில் இல்லாமல் இருந்ததால் எனக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது. ஆனால், " பாலா அண்ணை" யுடன் பேசுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் நான் கேள்விப்பட்டேன். தனது பழைய சகாக்கள், நண்பர்கள் மற்றும் தொடர்பு வைத்திருந்தவர்கள் சிலருடன் தொலைபேசியில் பேசிவருவதாக பாலா அண்ணை தொடக்கத்தில் கூறினார். அவர் வெளிப்படையாக கூறாவிட்டாலும் கூட, விரைவில் எம்மிடமிருந்து விடைபெறப் போகின்ற ஒரு மனிதரிடமிருந்து வருகின்ற தொலைபேசி அழைப்பு அது என்பதை விளங்கிக்கொண்டேன். அவருக்கு மலவாசலில் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது. அது ஒரு முதிர்ச்சியடைந்த நிலையில் இருந்தது. வைத்தியர்கள் அவர் ஒரு நான்கு தொடக்கம் ஆறு வாரங்களுக்கே உயிருடன் இருப்பார் என்று கூறிவிட்டார்கள். குதூகலமாக பகிடிவிட்டு பேசுவது பாலசிங்கத்தின் பழக்கம். நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிகவும் கவலையடைந்திருந்தார் என்பதை உணர்ந்து கொண்டேன். அவருக்கு இருந்த அந்தக் கவலை தனக்கு நேரப்போகிற மரணத்தைப் பற்றியதல்ல. " தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை. நிலைமை படுமோசமாகுது. முழு உலகமும் சேர்ந்து புலிகளை மொங்கப்போகுது" என்று பாலா அண்ணை படபடவென்று பேசினார். தம்பி என்று அவர் கூறியது விடுதலை புலிகளின் தலைலர் வேலுப்பிள்ளை பிரபாகரனையே. போராட்டத்தின் ஆரம்பக்கட்டங்களில் பிரபாகரன் தம்பி என்றே அறியப்பட்டார். விடுதலை புலிகளின் நடவடிக்கைகளினால் சர்வதேச சமூகம் ஆத்திரமடைந்திருக்கிறது. புலிகள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு முறையில் செயற்பட வில்லையானால் மேற்கு நாடுகள், சீனா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லாம் ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரித்து விடுதலை புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு நிராமூலம் செய்யப்படுவதை உறுதிசெய்யப் போகின்றன என்று பாலசிங்கம் சொல்லிக்கொண்டே போனார். யதார்த்த நிலையை பிரபாகரனுக்கு புரியவைத்து அதன் பிரகாரம் செயற்படவைக்க உங்களால் ஏன் முடியவில்லை என்று நான் அவரை கேட்டேன். பல தடவைகள் தான் முயன்றும் பயனில்லாமல் போய்விட்டது என்று அவர் மிகுந்த கவலையுடன் பதிலளித்தார். வடக்கில் வன்னி பெருநிலப்பரப்பில் கேப்பாபுலவில் பிரபாகரனை தனியாகச் சந்தித்து உண்மையான நிலைவரத்தை விளங்கிக்கொள்ளுமாறு கெஞ்சியதாகவும் ஆனால் பிரபாகரன் அசையவில்லை என்றும் மிகுந்த வேதனையுடனை பாலா அண்ணை கூறினார். " உனக்கு தெரியும்தானே ' வீரமார்த்தாண்டன் ' ( கோபம் வந்தால் பிரபாகரனை அவ்வாறுதான் பாலா அண்ணை அழைப்பார்) என்னுடன் எப்படி நடந்து கொள்கின்றவன் என்று " தமிழில் கூறியவாறு அவர் தொடர்ந்தார். " உண்மையான நிலைவரம் குறித்து நான் பேசிக்கொண்டிருந்த போது பிரபாகரன் திடீரென்று இடைமறித்து தமிழ்நாட்டின் பிரபல படத்தயாரிப்பாளர் சேரன் இயக்கிய " ஆட்டோகிராவ்" படம் பார்த்தீர்களா என்று என்னைக் கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும் இப்போது அந்த படத்தை நாம் பார்க்கவேண்டும் என்று கூறினார்.டி.வி.டி.மூலம் தொலைக்காட்சியில் படம் போடப்பட்டு நாம் அமைதியாகப் பார்த்தோம். படம் முடிந்ததும் நான் மீண்டும் அன்றைய நிலைவரத்தைப் பற்றி மீண்டும் பேச முயற்சித்தேன். மீண்டும் அந்த படத்தை பார்ப்போமா என்று பிரபாகரன் கேட்டார். அதனால் அதே படத்தை மீண்டும் பார்த்தோம். மீண்டும் படம் முடிந்ததும் பழைய விடயத்தை மீண்டும் நான் பேசத்தொடங்க பிரபாகரன் குறும்புச் சிரிப்புடன் ' இன்னொருக்கா பார்ப்போம் ' என்று கேட்டார். அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை புரிந்துகொண்டு அவரிடமிருந்து விடைபெற்றேன். பிரபாகரன் இவ்வாறு நடந்துகொள்கிறபோது அவரை இறங்கி வரச்செய்ய எதனாலும் முடியாது என்பது எனது அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு தெரியும்." விடுதலை புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுக்கு நிலைவரத்தை புரியவைக்க முயற்சிக்கவில்லையா என்று நான் கேட்டபோது வன்னியில் உள்ள தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ, பொட்டுஅம்மான், நியூயோர்க்கில் உள்ள உருத்திரகுமாரன் போன்றவர்கள் ஒஸ்லோவின் அனுசரணையுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு எனக்கு எதிராக பிரபாகரனின் மனதில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று பாலசிங்கம் பதிலளித்தார். மேலும், இலங்கை இராணுவத்தை தோற்கடிக்க முடியும் என்றும் ராஜபக்சவுக்கு எதிராக உலகம் விடுதலை புலிகளை ஆதரிக்கும் என்றும் அவர்கள் தவறான விடயங்களை கூறி பிரபாகரனை நம்பவைத்தும் விட்டார்கள். சூசை, 'பேபி ' சுப்பிரமணியம், பாலகுமாரன் மற்றும் பரா போன்ற மூத்த தலைவர்கள் இடர்பாட்டை விளங்கிக் கொண்டார்கள். ஆனால், யதார்த்த நிலையை கண்திறந்து பார்க்க பிரபாகரனை வழிக்குக் கொண்டுவரக்கூடிய அளவுக்கு அவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கவில்லை என்று பாலசிங்கம் கூறினார். நாமிருவரும் 20 - 25 நிமிடங்கள் பேசியிருந்த நிலையில் பாலசிங்கம் தொடர்ச்சியாக இரும ஆரம்பித்தார்.அவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை. உரையாடலை நிறுத்த வேண்டியதாயிற்று. போர் தீவிரமடைவது தவிர்க்கமுடியாததாகப் போகின்றது என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததால், பாலசிங்கத்துடனான உரையாடல் எனக்கு பெரும் கவலையைத் தந்தது. வன்னி மண்ணில் உள்ள அப்பாவி தமிழ்க் குடிமக்கள் ஒரு மனதாபிமான அவலத்தை சந்திக்கப் போகிறார்கள் என்று கவலையடைந்தேன். எனது பயம் நியாயமானது என்பதை அடுத்துவந்த நிகழவுகள் நிரூபித்தன. சர்வதேச சமூகம் விடுதலை புலிகளை " மொங்கப் போகிறது" என்ற பாலா அண்ணையின் எச்சரிக்கையும் சரியென்று நிரூபிக்கப்பட்டது. கேவலமான வேலை செய்வதற்கு கொழும்பை அனுமதித்துவிட்டு சர்வதேச சமூகம் இப்போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறிக்கொண்டு விசாரணை நடத்த விரும்புகிறது. தப்பெண்ணம் பாலசிங்கத்துடனான இறுதி உரையாடல் எனக்கு பெருமளவு விடயங்களை தெளிவுபடுத்தவும் செய்தது. அவருடன் நான் கொண்டிருந்த ( மென்னயமாகக் கூறுவதானால்) "தப்பெண்ணம் " அவற்றில் பிரதானமானது. பாலசிங்கம் மெய்யாகவே பேச்சுவார்த்தை மூலமான இணக்கத்தீர்வு ஒன்றில் ஆழமான கரிசனை கொண்டிருந்தார் என்பதையும் ஆனால் ( பின்னர் கட்டவிழ்ந்த நிகழ்வுகள் நிரூபித்ததைப் போன்று ) பிரபாகரன் அதை நிராகரித்துவிட்டார் என்பதையும் பாலசிங்கத்துடனான உரையாடல் ஊடாக எனானால் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. என்னைத் தாக்கி ஏன் பேசினீர்கள் என்றோ அல்லது சண்டே லீடர் பத்திரிகைக்கு நான் எழுதுவதை ஏன் தடுக்க முயன்றீர்கள் என்றோ நான் அவரிடம் கேட்கவில்லை. இறக்கும் தறுவாயில் இருக்கும் மனிதரிடம் அவ்வாறு கேட்பது நயநாகரிகம் இல்லை என்று நான் உணர்ந்தேன். ஆனால், தன்னை விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பாதுகாப்பதற்காகவே எனக்கு எதிராக பாலா அண்ணை பகிரங்கமாக திரும்புவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கக்கூடும் என்று உணர்ந்தேன். தமிழ்ச்செல்வனும் காஸ்ட்ரோவும் அந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்த விடுதலை புலிகள் மத்தியில் எனக்கு எதிராக கயமைத்தனமான பிரசாரம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். அத்துடன் முன்னைய காலகட்டங்களில் என்னுடன் பாலசிங்கம் வைத்திருந்த நெருக்கமான தொடர்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அவர் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்திருக்கக்கூடியது மிகவும் சாத்தியமே. தேசத்தின் குரல் அன்டன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் தெற்கு லண்டனில் உள்ள தனது வீட்டில் 2006 டிசம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை (பிரிட்டிஷ் நேரப்படி ) பிற்பகல் 1.45 மணிக்கும் அமைதியாக காலமானர். பாலா அண்ணை இறுதிமூச்சை விட்ட தருணம் அவரது அன்பு மனைவி அடேல் ஆன் அருகே இருந்தார்.2006 டிசம்பர் 20 ஆம் திகதி லண்டனில் அலெக்சாண்டிரா பலஸில் இறுதிச்சடங்கு இடம்பெற்றது. விடுதலை புலிகளின் தத்துவவாதியும் மதியூகியுமான பாலா அண்ணைக்கு இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் " தேசத்தின் குரல் " என்ற பட்டத்தை வழங்கி அஞ்சலி செய்தார். நான் பாலா அண்ணையுடன் கொண்டிருந்த உறவுமுறை பற்றிய நினைவுகளும் சிந்தனைகளும் கடந்த 14 ஆம் திகதி அவரது 18 வது நினைவு தினம் என்பதால் மீண்டும் எழுந்தன. https://www.virakesari.lk/article/201481

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

1 day 1 hour ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தானின் ஏவுகணை, தெற்காசியாவை தாண்டி அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என அமெரிக்கா தெரிவித்துள்ளது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடான பாகிஸ்தான் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது என்றும், அது தெற்காசியாவைத் தாண்டி அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணை என்றும் அமெரிக்க அதிபர் அலுவலகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த அமெரிக்கா தற்போது பாகிஸ்தானின் ஏவுகணை திட்டம் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் நோக்கம் என்ன, பாகிஸ்தான் இதனை வைத்து என்ன செய்ய திட்டமிடுகிறது என்ற முக்கிய கேள்வி எழுந்துள்ளது என்று அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபின்னர் கூறுகிறார். "பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு வளர்ந்து வரும் ஒரு அச்சுறுத்தலாக மட்டுமே இருக்கும் என்பதைத் தவிர வேறு எந்த வழியிலும் இதை பார்க்க முடியாது" என்று கானகி எண்டவ்மேன்ட் பார் இண்டர்நேஷ்னல் பீஸ் எனும் சிந்தனைக்குழு கூட்டத்தில் ஜான் ஃபின்னர் கூறினார். கந்தஹார் விமான கடத்தல் - அந்த மோசமான 8 நாட்கள் இந்திய நேபாள உறவுகளை மாற்றியது எப்படி? ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண் இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை ''நவீன தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணை திட்டத்தை பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது. இதில் நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள் முதல் பெரிய ராக்கெட் மோட்டார்களை சோதனை செய்யும் திறன் கொண்ட சாதனங்கள் வரை அடங்கும். ஒரு சில நாடுகளிடம் மட்டுமே அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுதங்களும், ஏவுகணைகளும் இருக்கின்றன. இந்த நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அவை ரஷ்யா, வட கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆகும்'' என ஃபின்னர் கூறியுள்ளார். குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் தகறாறு - விவாகரத்து கோரிய தம்பதியரை ஒன்றிணைத்த நீதிமன்றம்2 மணி நேரங்களுக்கு முன்னர் 'எனது உடல், ஆடை பற்றி சங்கடப்படுத்தும் வகையில் கேட்டார்' - பெண் உணவு டெலிவரி ஊழியர்களின் பிரச்னைகள்7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தானின் புதிய ஏவுகணை திட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அன்று தெரிவித்தது. (கோப்புப்படம்) புதிய தடைகள் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தால் கூடுதல் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அன்று தெரிவித்தது. ஏவுகணைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தொடர்பான திட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த நான்கு நிறுவனங்கள் ஈடுபட்டதாக இதற்கு முன்பு அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. பாகிஸ்தானின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்தின் மூலம் தொடர்ச்சியாக ஏவுகனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் அபாயத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியது. பாகிஸ்தானின் நான்கு நிறுவனங்கள் அமெரிக்காவின் 'நிர்வாக ஆணை' (EO) 13382 இன் கீழ் தடைகள் விதிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இந்தியா - குவைத்: 43 ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் முதல் பிரதமர் - மோதியின் நோக்கம் என்ன?20 டிசம்பர் 2024 அம்பேத்கர், காங்கிரஸ் இடையிலான உறவு உண்மையில் எப்படி இருந்தது?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்களை உருவாக்குதல் மற்றும் அதன் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்றவற்றை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. "அமெரிக்காவை தாக்கும் அளவிற்கு திறன் கொண்ட ஏவுகணைகள் பாகிஸ்தானிடம் இருக்கலாம் என்று அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபின்னர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஏன் தடைகளை விதித்தது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது", என்று வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயல்படும் சிந்தனைக் குழுவான வில்சன் மையத்தின் தெற்காசிய நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் குகல்மேன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்திற்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் ஈடுபட்டதாக கூறி சீனாவை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மேலும் பல நிறுவனங்கள் மீதும் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா தடைகளை விதித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் விபத்து எப்படி ஏற்பட்டது? நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தகவல்20 டிசம்பர் 2024 பாலின ஈர்ப்புகளில் என்னென்ன வகைகள் உள்ளன? பொம்மைகள் மீதும் காதல் வருமா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதற்கு பாகிஸ்தான் எப்படி எதிர்வினையாற்றியது? "அமெரிக்கா எங்கள் நாட்டின் மீது எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நாங்கள் சீனாவுடன் நெருக்கமாக இருக்க முற்படுவோம். அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கும்போது, நாங்கள் சீனாவுடன் நெருக்கமாக இருப்போம். இந்தியா ஒரு புதிய வித விளையாட்டை விளையாடி வருகிறது. அது அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் உடனும் நெருக்கமாக இருக்கிறது", என்று பாகிஸ்தானின் சாமா தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் நஜம் சேத்தி கூறினார். எவ்வாறாயினும், குவாடர் துறைமுகம் மற்றும் CPEC (China Pakistan Economic Corridor) போன்ற சில பிரச்னைகளால் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இன்னும் தீர்க்கப்படவில்லை. மறுபுறம், இந்திய-அமெரிக்க உறவுகள் மேம்பட்டு வருகின்றன என்று நஜம் சேத்தி கூறுகிறார். "அடுத்த ஆண்டு, அதாவது 2025 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கவனம் இரான் மீது இருக்கும் என்று நான் கருதுகிறேன். இது அங்கு ஆட்சி மாற்றம் மற்றும் இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதுடன் தொடர்புடையது. இதுவே அவர்களின் இலக்கு'' என்றும் நஜம் கூறினார். "அவ்வாறு நடந்தால், 2026-ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கவனம் பாகிஸ்தான் மற்றும் அதன் அணுசக்தி திட்டத்தின் மீது இருக்கும்." "சீனா பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய உதவி நாடாக இருக்கிறது, இதனை அமெரிக்காவால் தடுக்க முடியாது" என்று அவர் கூறினார். கேரளா: வக்ஃப் வாரியம் உரிமை கோரும் 404 ஏக்கர் நிலம், எதிர்த்து போராடும் மக்கள் - என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு35 நிமிடங்களுக்கு முன்னர் சாம்சங் இந்தியா: தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் - என்ன பிரச்னை? அரசு கூறுவது என்ன?19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பைடன் அரசாங்கத்தின் பல கொள்கைகளில் பெரிய மாற்றங்களை டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார் டிரம்ப் அதிபரான பிறகு என்ன நடக்கும்? சமீபத்தில், பாகிஸ்தான் மீது விதிக்கப்பட்ட தடைகள் தொடர்பாக, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் பங்கு குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. இக்கட்சி அமெரிக்காவிடம் லாபி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து நஜம் சேத்தி கூறுகையில், "இதற்கு முன்பு பலமுறை பாகிஸ்தான் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியது. 1971-ஆம் ஆண்டு போர் நடந்த போதிலும் பாகிஸ்தான் மீது அமெரிக்கா தடை விதித்தது". ''1977 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி நடந்த போதும் அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்திருந்தது.'' இது நாட்டிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், பாகிஸ்தான் முன்பு செய்ததையே மீண்டும் தொடரும் என்றும் நஜம் சேத்தி குறிப்பிட்டார். ''இரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது ஆனால் இரான் தனது பாதுகாப்புத் திட்டத்தை நிறுத்திவிட்டதா?'' என்கிறார் நஜம் "பைடன் நிர்வாகம் பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தின் மீது 6 அல்லது 7 முறை தடைகளை விதித்திருக்கிறது. எனவே இது ஒரு புதிய விஷயம் அல்ல. ஆரம்பத்தில் இருந்தே, பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை குறைக்க, தடுக்க அல்லது மெதுவாக்க அமெரிக்கா முயன்று வந்தது", என்று சமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியான மலீஹா லோதி கூறினார். "சீனா மீது, அமெரிக்காவும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் அது பாகிஸ்தானுக்கு தன்னம்பிக்கையை மட்டுமே அளிக்கிறது. ஆனால் இந்த முறை விதிக்கப்பட்டுள்ள தடைகள் எங்கள் திட்டத்தை பாதிக்காது" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8dqrr9g5pqo

நாகை மீனவர்கள் வெட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

1 day 1 hour ago
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து அக்கரை பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று (20) மதியம் 3 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்களும் இன்று (21) அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகில் வந்த 6 கடற்கொள்ளையர்கள் இவர்களது படகை வழி மறித்தது மீனவர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி விட்டு படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். தாக்குதலில் இருந்து தப்பிய 3 மீனவர்களும் உடனடியாக அவசரம் அவசரமாக கோடியக்கரை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து சக மீனவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இதில் ராஜேந்திரன் என்பவருக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார் என்பவருக்கு தலையில் வெட்டுக்காயம் மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. நாகலிங்கம் என்பவருக்கும் உள்ள காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயம் அடைந்த 3 மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள் மீன்பிடி வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன், மற்றும் மீன்பிடி உபகரணங்கள் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். -மன்னார் நிருபர் லெம்பட்- https://tamil.adaderana.lk/news.php?nid=197635

புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை... - சிவாஜிலிங்கம்

1 day 1 hour ago
கொஞ்ச நாட்களுக்கு முன்னால், ‘அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்’ என்று செய்தி வந்து, அவர் நலம்பெற யாழில் பலர் வேண்டிக் கொண்டார்கள். பிரார்த்தனை பலித்திருக்கிறது.

ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.

1 day 1 hour ago
அவனது பெயர் ராலெப் (Taleb A). சவுதி அரேபியாவில் 1974ம் ஆண்டு பிறந்தவன். 50 வயதான ராலெப் யேர்மனியில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று, யேர்மனியில் பேர்ன்பர்க்கில் Bernburg உள்ள வைத்தியசாலையில் மனநல மருத்துவம் மற்றும் உளவியல் சிகிச்சையில் நிபுணராக பணியாற்றுகிறான். யேர்மனி சமூக ஊடகங்களில் இஸ்லாத்திற்கு எதிராக ராலெப் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தான். அத்துடன் வளைகுடா நாடுகள் மீதான தனது எதிர்ப்பையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டிருந்தான். ‘நல்ல இஸ்லாம் என்று எதுவும் இல்லை’ என்பது ராலெப்பின் வாதமாக இருந்தது. 2019 யூன் மாதம், பிராங்பேர்ட் நகரத்தில் இருந்து வரும் பத்திரிகை (Frankfurter Allgemeine Zeitung) இஸ்லாம் மற்றும் சவுதி அரேபியாவில் பெண்களின் நிலைமை பற்றி ராலெப்புடன் ஒரு நீண்ட நேர்காணலை நடத்தியது, இஸ்லாத்தை மிகவும் கடுமையாக விமர்சித்து தான் இஸ்லாத்தை விட்டு எப்பொழுதோ விலகி விட்டேன் என்று அந்த நேர்காணலில் ராலெப் சொல்லியிருந்தான். சவுதியில் இருந்து வந்த புலம்பெயர் சமூகத்தில் யேரமனியில் ஒரு முக்கியமான ஆளாக ராலெப் இருந்தான். சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்களுக்கான விழிப்புணர்வு அவர்களது உரிமைகள் பற்றி அதிகம் பேசினான். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தேவைகளை பற்றி பெரிதாக அக்கறை கொண்டிருந்தான். ராலெப் பற்றிய தகவல்கள் இப்படியாக இருக்கையில் அவன் 21.12.2024 சனிக்கிழமை காலை ஒரு வாடகைக் காரில் ஏறி, மாக்டேபர்க் (Magdeburg) கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்திற்குள் வேகமாகக் காரை ஓட்டி ஒரு சிறு குழந்தை உட்பட குறைந்தது நான்கு பேர்களைக் கொன்றிருக்கின்றான். 200 பேர்களுக்கு மேல் காயப் படுத்தியிருக்கின்றான். போலீசார் அவனது காரைத் தடுத்து நிறுத்தி அவனைக் கைது செய்திருக்கின்றார்கள். ராலெப் மீது நடத்தப்பட்ட சோதணையில் அவன் போதை மருந்து உட்கொண்டிருப்பதாக வைத்திய அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இன்று நடந்த இந்த அனர்த்தத்தால், யேர்மனியில் இந்த வருட கிறிஸ்மஸ் சந்தை இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இந்தச் சம்பவம் சம்பந்தமாக பொது மக்களோடான நேர்காணலில், அதிகளவான இஸ்லாமியர்களுக்கு அன்று புகலிடம் தந்த அன்றைய கன்ஸிலர் அஞ்சலா மேர்க்கலை பலர் திட்டித் தீர்ப்பதைக் காண முடிகிறது. யேர்மனியில் இந்த வாரம்தான் நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஆட்சி கலைக்கப்பட்டு பெப்ரவரி 23ந் திகதி தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இன்று நடந்த இந்தச் சம்பவம் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!

1 day 2 hours ago
இந்த சாமியியடம் நையாண்டி பதில் மட்டும்தான் வரும், நீங்கள் ஏதிர்பார்க்கும் எந்த நல்ல தரமான பதில் கிடைக்காது😎

திண்ணை

1 day 2 hours ago
மட்டுகள், கத்தியை சுழட்டாததால, பிடிச்ச கறளை எடுக்க, ஜேர்மணிக்கு தமிழ்சிறியரிடம் அனுப்பியிருப்பதா, அவரை சந்தித்த போது சொன்னார்! 🤣😂

கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்

1 day 2 hours ago
சுமத்திரன் விசுவாசிகளுக்கு நாலு இங்கிலுசில் அடித்து விட்டால் காணும் எதிராளி படுத்திடுவான் என்ற நினைப்பு . out of box மைன்ட் என்றால் கொஞ்சம் பழைய கதை தான்! ஒரு பெருந்தனக்காரர் காரில் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் காரின் ஒரு டயர், டியூப் வெடித்து விட்டது. அதனை கழற்றி காரின் டிக்கியில் இருக்கும் உபரி சக்கரத்தை எடுத்து பஞ்சரான டயரை கழற்றிக்கீழே வைத்துவிட்டு வேறு ஒரு டயரை பொருத்தும் சமயம் அங்கிருந்து நான்கு பொருத்தும் நட்டுக்கள் கால் இடறி ஒரு பெரிய சாக்கடைக்குள் விழுந்து விட்டது. எடுக்க இயலாத ஆழம் கூட! இவர் என்ன செய்வதென்று தெரியாமல் கையைபிசைந்து கொண்டிருந்த நேரம், அவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் வாசலில் இருந்து ஆசாமி நான் ஒரு உங்களுக்கு உதவட்டுமா?என்று கேட்டான். இவன் என்ன உதவப் போகிறான்? என்று அலட்சியமாக நினைத்த முதலாளி இருந்தாலும் வேறு வழியில்லாமல் சரி சொல்லு? என்கிறார்.நன்றாக இருக்கும் மூன்று டயர்களிலிருந்தும் ஒவ்வொரு நட்டினை எடுத்து நான்காவது சக்கரத்துக்கு பொருத்திச் செல்லுங்கள். அருகில் இருக்கும் ஊர் வந்தவுடன் நான்கு புதிய நட்டுக்கள் வாங்கி பொருத்திக் கொள்ளுங்கள் என்றார். அதவாதுஒரு பிரச்சனையை வழக்கமான முறையில் சிந்தித்து மேலும் பிரச்னையை உருவாக்கி கொள்ளாமல் சமயத்துக்கு ஏற்ப சிந்தித்து இலகுவான வழிமுறைய கண்டு பிடித்தல் இன்னுமொரு உதராணம் . அது மிகவும் மிகப்பிரபலமான விமான நிலையம். அனைத்து வானூர்திகளும் சரியான நேரத்தில் புறப்படும் மற்றும் வந்து சேரும்.ஆக அங்கே பிரச்சினை என்ன வென்றால், பயணிகள் அனைவரும் விமானத்தில் இறங்கி தங்களுடைய சுமைகளை எடுக்க அதற்கான இடத்திற்க்கு வந்து விடுகிறார்கள்.ஆனால் அவர்களுடைய சுமைகள் வருவதற்க்கு அதிகம் நேரம் ஆகிறது. இதனால் பயனிகள் பொறுமை இழந்து விமான நிலைய அதிகாரிகளுடன் சண்டையிடுகிறார்கள். இதற்கு தீர்வு கான விமான நிலைய அதிகாரிகள் பல்வேறு விதமான கலந்தாய்வு மூலம் சில புதிய முயற்ச்சியில் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக புதிய அதி நவீன இயந்திரம் வாங்குதல். அதிக பணியாளர்களை பணிக்கு அமர்த்துதல் …. ஆனாலும் பயணிகள் பிரச்சினை தீரவில்லை.மேலும் பல பயணிகளின் புகார்கள் அதிகரித்து கொண்டிருந்தது. இதற்கான தீர்வுதான் என்ன என்று சிந்தனை செய்யும்பொழுது அங்கே ஒரு மாற்று சிந்தனையாளரின் யோசனை என்னவெனில் பயணிகள் விமானத்தில் இறங்கி தங்களுடைய பயணச்சுமைகளை எடுக்கும் இடத்தின் நடக்கும் தூரத்தை அதிகப்படுத்தவது (Zigzag way) புதிய பாதை அமைப்பது.இதனால் பயணிகள் தங்ளுடைய பயணச்சுமைகள் இருக்கும் இடத்திற்க்கு வருவதற்கு அதிக நேரமாகும் .இதற்குள் நாம் அவர்களுடைய பயணச்சுமைகளை அதற்கான இடத்திற்க்கு கொண்டு வந்து விடலாம் என்ற அந்த யோசனையும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு பயணிகள் பிரச்சினையும் தீர்ந்தது. அதுசரி இந்த out of box மைன்ட்க்கும் உங்கள் விசர் சுமத்துரனுக்கும் என்ன சம்பந்தம் ? இதுவரை அப்படி எந்த அறிகுறியுமே காணவில்லையே கடந்த 14வருடங்களில் ?

சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!

1 day 2 hours ago
நீங்கள் அறியாதது அல்ல சகோ. விடுதலைப் புலிகளிடம் நல்ல விடயங்கள் பல கோடி உண்டு. பல விடயங்களில் முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக வழி காட்டிகளாக பெண் சுதந்திரம் பாதுகாப்பு, ஊழல் லஞ்சம் மற்றும் சிபாரிசு அற்ற அவர்களது நடவடிக்கைகள் எல்லோருக்கும் தெரியும். அது கனாக்கால வாழ்க்கை. அதை அவர்கள் செய்து காட்டினார்கள். வாழ்ந்து காட்டினார்கள். அது அவர்களால் மட்டுமே முடியும் முடிந்தது என்று இன்று மேலும் மேலும் உணர்கிறோம். இன்னும் உணர்வோம். நல்லவற்றை பொறுக்காத கூட்டத்தில் நான் ஒரு போதும் இருந்ததில்லை இருக்க போவதுமில்லை.

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

1 day 2 hours ago
நான் திங்கள் அகன்ற திரையில் பார்க்கவுள்ளேன்😀 நல்ல படங்களை திரையில் பார்த்தால்தான் மேலும் சிறந்த படங்களை எடுக்க வசூல் கிட்டும். - விடுதலை 2 : விமர்சனம்! Dec 21, 2024 10:26AM IST பிளாஷ்பேக் உத்தி பலன் தந்ததா? நடிகர் சூரியைக் கதை நாயகனாக அறிமுகப்படுத்திய படம், வெற்றிமாறனின் ‘விடுதலை’. தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரைத் தேடுவதற்காகக் காவல் துறையின் சிறப்பு முகாம் இயங்கி வந்ததையும், அதில் பணியாற்றியவர்களில் ஒருவர் அந்த தலைவரைக் கைது செய்ய முனைந்ததையும் சொன்னது. அப்படம் பேசிய அரசியலை விடப் பேசாததே அதிகம். அதுவே அப்படத்தின் சிறப்பாகவும் அமைந்தது. ‘விடுதலை’ படத்தின் பெருவெற்றியே அதன் இரண்டாம் பாகம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை விதைத்தது. இரண்டாம் பாகத்தில் அந்த தலைவரின் வாழ்வனுபவங்களே பிரதானமாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்தன. இப்போது ‘விடுதலை 2’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இப்படம் அமைந்திருக்கிறதா? முதல் பாகம் தந்த திரையனுபவத்தை விட ஒருபடி மேலானதை ரசிகர்கள் பெறுகிறார்களா? தகவல்களின் அடிப்படையில்..! தமிழர் படையைச் சேர்ந்த பெருமாளைக் (விஜய் சேதுபதி) கைது செய்த விவரம், காவல் துறை சிறப்பு முகாமைச் சேர்ந்த ஒருவரால் வெளியே கசிகிறது. அதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகை அலுவலகங்களுக்குத் தகவல் சொல்லப்படுகிறது. பெருமாளைக் கைது செய்த தகவலை மூன்று, நான்கு நாட்கள் கழித்து வெளியே சொல்லலாம் என்றெண்ணிய தலைமைச் செயலாளர் சுப்பிரமணியத்திற்கு (ராஜிவ் மேனன்) அத்தகவல் பேரிடியைத் தருகிறது. அதேநேரத்தில், சிறப்பு முகாமில் பழங்குடியின கிராமத்துப் பெண்கள் என்னவானார்கள் என்பதை ஒரு பத்திரிகை நிருபர் (பாவெல் நவகீதன்) படம்பிடிக்கிறார். தான் வேலை பார்க்கும் தமிழ் செய்தி நிறுவனத்தின் செய்தியாசிரியருக்குத் தகவல் சொல்கிறார். அந்த தகவல் இதர பத்திரிகை அதிபர்கள் வழியாகச் சுப்பிரமணியத்தை வந்தடைகிறது. இன்னொருபுறம், பெருமாளை போலீசார் பாதுகாப்பாக வன எல்லைப்பகுதி காவல் துறை அலுவலகத்திற்குக் காட்டுப்பாதை வழியாகச் செல்கின்றனர். செல்லும் வழியில், ‘வன்முறையே வேண்டாம்’ என்று அகிம்சாவாதியாக இருந்த தான் எவ்வாறு இப்படியொரு பாதைக்குத் திரும்பினேன் என்பதைத் தனது வாழ்பனுபவங்களில் இருந்து சொல்லி வருகிறார் பெருமாள். முகாம் அதிகாரி ராகவேந்திரருக்கு (சேத்தன்) அது எரிச்சலூட்டினாலும், உடன் வரும் கான்ஸ்டபிள்கள் அதனைக் கேட்டவாறே வருகின்றனர். அப்போது, பெருமாள் குறித்து தாங்கள் அறிந்தவற்றுக்கும் அவரது வாழ்வனுபவங்களுக்குமான வித்தியாசங்களை உணர்கின்றனர். பெருமாளின் பேச்சில் அவர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களாக கருப்பன் (கென் கருணாஸ்), மகாலட்சுமி (மஞ்சு வாரியார்), கே.கே. (கிஷோர்) உள்ளிட்ட பலரைக் குறிப்பிடுகிறார். அதற்கிடையே, வேறு வழியில்லாமல் பெருமாளைக் கைது செய்த தகவல் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்படுகிறது. அது அதிகாரப்பூர்வமாக அரசால் வெளியிடப்படுகிறது. இந்தச் சூழலில், பெருமாளின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காட்டுப்பாதையில் வரும் போலீசாரை சுற்றி வளைக்கின்றனர். அதன்பின் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது ‘விடுதலை 2’வின் மீதி. தகவல்களுக்கும் உண்மைக்குமான வித்தியாசம் என்ன? இந்தக் கேள்வியே இப்படம் முழுக்க வியாபித்துக் கிடக்கிறது. ஆனால், ’அதனை விலாவாரியாகச் சொல்கிறேன் பேர்வழி’ என்று தகவல்களைத் திணித்தடைத்து, இறுதியாக அவற்றில் பலவற்றை நீக்கி ஒரு சுவாரஸ்யமான திரை வடிவத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதுவே இப்படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. அபார உழைப்பு! ஏற்கனவே உருவாக்கிய ஒரு திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று முடிவு செய்ததைத் தவறென்று சொல்ல முடியாது. இப்படத்தின் திருப்புமுனைக் காட்சிகள் பலவற்றை ‘விடுதலை’ முதல் பாகத்தின் இறுதியிலேயே காட்டியிருந்தார் வெற்றிமாறன். அதனுடன் பொருந்துகிற வகையில், பெருமாள் எனும் விஜய் சேதுபதி நடித்த பாத்திரத்தின் முன்கதையை இப்படத்தில் சொல்லியிருக்கிறார். அதனால், படம் முழுக்கவே பிளாஷ்பேக்குகள் வந்து போகின்றன. அதற்கு நடுவே, திரைக்கதை நிகழும் காலம் நமக்குச் சொல்லப்படுகிறது. பெருமாள் எனும் பாத்திரம் எந்த இயக்கத்தைச் சேர்ந்தது என்பதைக் காட்டும் அடையாளங்கள் திரையில் மறைக்கப்பட்டிருக்கின்றன. அது ஏன் என்ற கேள்வி நம்முள் உடனடியாக எழுகிறது. ஏனென்றால், இப்படத்தின் திரைக்கதையே அதைச் சார்ந்துதான் அமைக்கப்பட்டிருக்கிறது. இது போன்று திரைக்கதையில் ஆங்காங்கே சில பிசிறுகள் எட்டிப் பார்க்கின்றன. மிக முக்கியமாக, திரைக்கதையின் நடுவே ஒரு பாடல் வருகிறது. ‘மாண்டேஜ்’ ஆக வரும் அந்தப் பாடல் கால மாற்றம் பற்றிய சில கேள்விகளை எழுப்புகிறது. இறந்து போவதாகக் காட்டப்படுகிற சில பாத்திரங்கள் திரையில் வந்து போவது அதற்குக் காரணமாக இருக்கிறது. அதுவும் ஒரு பிளாஷ்பேக் தான் என்பது சட்டென நமக்குப் பிடிபடுவதில்லை. இது போன்ற குழப்பத்தைச் சில காட்சிகளும் தருகின்றன. அவற்றைச் சரிப்படுத்தியிருக்கலாம். மற்றபடி, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சில சம்பவங்களைத் தன் புனைவுக்குள் அடக்கிச் சுவாரஸ்யமான அரசியல் திரைப்படமொன்றைத் தந்திருக்கிறார் வெற்றிமாறன் என்பதில் ஐயமில்லை. இந்த முயற்சியில் அவருக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குனர் ஜாக்கி, படத்தொகுப்பாளர் ராமர், சண்டைப்பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றனர். சில இடங்களில் விஎஃப்எக்ஸ் குறிப்பிட்ட தரத்தில் அமையவில்லை. அதற்கு படத்தின் இறுதி ஷாட் ஒரு உதாரணம். இசையைப் பொறுத்தவரை, நம்மைக் கொஞ்சம் ஆச்சர்யபடுத்தாதவாறு ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் இளையராஜா. திரையில் மௌனம் வருமிடங்கள் அவரது நுண்ணிப்பான அவதானிப்புக்குச் சான்று. ‘தினம் தினமும்’ உள்ளிட்ட பாடல்கள் சில நொடிகளே வந்து போயிருப்பது ரசிகர்களின் உற்சாகத்தைக் குறைக்கின்றன. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், கிஷோர், ரம்யா, சூரி, சேத்தன், ராஜிவ் மேனன், இளவரசு, சரவண சுப்பையா, கௌதம் மேனன், பாலாஜி சக்திவேல், பாவெல் நவகீதன், வின்செண்ட் அசோகன், போஸ் வெங்கட் என்று பலர் வந்து போயிருக்கின்றனர். ஆனாலும் விஜய் சேதுபதியே திரையில் நிறைந்து நிற்கிறார். அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை, இது கொண்டாட்டத்திற்குரிய விஷயம். முதல் பாகத்தில் வந்த பவானிஸ்ரீ உள்ளிட்ட சிலருக்கு இப்படத்தில் வேலையே இல்லை. அவர் ஒரு ஷாட்டில் இடம்பெற்றிருக்கிறார். ’நான் ஏன் தலை முடியை வெட்டியிருக்கேன்னு கேட்கவே இல்லையே’ என்ற மஞ்சு வாரியாரின் கேள்விக்கு, ‘உங்க முடி, நீங்க வெட்டியிருக்கீங்க’ என்று விஜய் சேதுபதி அளிக்கும் பதில் ரசிக்க வைக்கிறது. சமகால சமூகம், அரசியல் சார்ந்து அமைந்திருக்கிற சில வசனங்கள் சட்டென்று ரசிகர்களை ஈர்க்கும்விதமாக இருக்கின்றன. அதேநேரத்தில், பொதுவுடைமை இயக்க தத்துவங்களை விளக்குகிறேன் பேர்வழி என்று பேசப்படுகிற வசனங்கள் காட்சியனுபவத்தின் ஆன்மாவைச் சிதைக்கின்றன. இந்த இடத்தில் ‘மெட்ராஸ்’ படத்தின் இறுதி ஷாட் நினைவுக்கு வருகிறது. அது போன்ற உத்தியைப் பயன்படுத்தியிருந்தால், இப்படத்தின் நீளத்தைக் கணிசமாகச் சில நிமிடங்கள் குறைத்திருக்கலாம். முதல் அரை மணி நேரக் காட்சிகளில் ‘டப்பிங்’ நம்மை படுத்தி எடுக்கிறது. அபாரமான உழைப்பைக் கொட்டி உருவாக்கப்பட்ட இப்படத்தில் அது போன்ற சங்கடங்களை ரசிகர்கள் எதிர்கொள்ளாமல் தவிர்த்திருக்கலாம். ’விடுதலை 2’ படத்தின் உள்ளடக்கம் நிச்சயம் பல விவாதங்களை உருவாக்கும். இதில் நிறைந்திருக்கும் குறைகளும் பிரதானமாக அதில் இடம்பிடிக்கும். அவற்றைத் தாண்டி, ‘கேம் கல்ச்சர்’ரில் சிக்கிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரில் சிலருக்கு ‘இப்படியும் ஒரு தலைமுறை இங்கு வாழ்ந்தது’ என்பதைச் சொன்ன வகையில் ‘விடுதலை 2’ முக்கியத்துவம் பெறுகிறது. ‘சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது உட்பட இன்றைய தலைமுறை அனுபவிக்கும் எத்தனையோ இளைப்பாறல்களுக்குப் பின்னால் பலரது போராட்டங்கள் இருப்பது தெரியுமா’ என்கிற தொனியில், படத்தின் ஓரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அந்தக் கேள்வியின் பின்னே இருக்கிற அரசியல் மிகப்பெரியது. என்னைக் கேட்டால், அது போன்ற கேள்விகள் தான் இப்படத்தின் உயிர்நாடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதனை எங்கோ தவறவிட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். பிளாஷ்பேக் உத்தியைப் பயன்படுத்திய அளவுக்கு, கதை நிகழும் காலத்திற்கும் இதர பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தந்தால் அது நிகழ்ந்திருக்காதோ என்று தோன்றுகிறது. நிறை, குறைகளைத் தாண்டி, திரையில் ரசிகர்கள் காணாத ஒரு அனுபவத்தை ‘விடுதலை 2’ தருகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. சிறப்பானதொரு கமர்ஷியல் படமாக உள்ளது. ஆனால், அது ‘விடுதலை முதல் பாகத்திற்கு’ ஈடாக அமையவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மீறியதாகவும் அது இல்லை. ரசிகர்கள் ஒவ்வொருவரது பார்வைக்கேற்ப, இக்கருத்தில் மாறுபாடு நிச்சயம் இருக்கும். அதனைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும். அதேநேரத்தில் தமிழ் தவிர்த்து பிற மொழிகளில் வெற்றியைச் சுவைப்பதற்கான விஷயங்களும் இப்படத்தில் நிறையவே இருக்கின்றன. அது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்..! https://minnambalam.com/cinema/vetri-maran-vijay-sethupathi-viduthalai-2-movie-review/

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

1 day 2 hours ago
அந்தம்மாவை நிலத்தில குந்தியிருக்க விடமாட்டார்கள் போல இருக்கே ........ அவவும் ஏதோ கின்னஸ் சாதனை செய்யும் நோக்கத்தில் அங்கன சுத்திக் கொண்டிருக்கிறா ......... புருஷன்காரன் குடுத்து வைச்சவன் ..........! 😂
Checked
Sun, 12/22/2024 - 12:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed