புதிய பதிவுகள்2

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month ago
"அக்காவுக்காக அர்ப்பணித்து விளையாடினேன்" - எட்ஜ்பாஸ்டன் டெஸ்டுக்குப் பின் ஆகாஷ் தீப் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆகாஷ் தீப்பின் மூத்த சகோதரி புற்றுநோயுடன் போராடி வருகிறார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் யாரிடமும் சொல்லவில்லை. என் அக்கா புற்றுநோயால் போராடிக் கொண்டிருக்கிறார்." எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த பிறகு, ஆகாஷ் தீப் இதைச் சொல்லும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் வீழ்த்தி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்ய உதவினார். இரண்டாவது டெஸ்டில் பந்து வீசும்போது, தனக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்ததாக அவர் கூறினார். அது அவரது மூத்த சகோதரியின் முகத்தில் புன்னகையை வரவழைப்பது. போட்டிக்குப் பிறகு, ஜியோ-ஹாட்ஸ்டாருக்காக வர்ணனை செய்து கொண்டிருந்த புஜாராவிடம் ஆகாஷ் தீப் பேசினார். "உங்கள் கையில் பந்து இருக்கிறது. உங்கள் கையில் ஸ்டம்ப் இருக்கிறது. நீங்கள் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளீர்கள். வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்களா?" என்று ஆகாஷ் தீப்பிடம் புஜாரா கேட்டார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஆகாஷ் தீப், "நான் யாரிடமும் சொல்லாத மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், என் அக்கா கடந்த இரண்டு மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்றார். "அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாள், ஏனென்றால் அவள் கடந்து செல்லும் மனநிலையைக் கருத்தில் கொண்டால், இந்த மகிழ்ச்சி அவளுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும்." "இந்தப் போட்டியை அவளுக்கு அர்ப்பணித்து விளையாடினேன். அவள் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்க வேண்டும்" என்று அவர் கூறினார். "என்னுடைய இந்த நிகழ்ச்சி உனக்காகத்தான் சகோதரி. நான் பந்தை கையில் வைத்திருக்கும் போதெல்லாம், உன் முகம் என் கண் முன்னே இருந்தது. உன் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்பினேன். நாங்கள் அனைவரும் உன்னுடன் இருக்கிறோம்" என்று ஆகாஷ் தீப் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டெஸ்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக அவர் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் சேர்க்கப்பட்டார். மேலும் ஆகாஷ் தீப் தனது தேர்வு சரியானது என்பதை நிரூபித்தது மட்டுமல்லாமல், 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றையும் படைத்தார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 187 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது பிரிட்டன் மண்ணில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறப்பாக பந்துவீச்சாகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, ஆகாஷ் தீப் ஒரு சிறப்பு உத்தியை வகுத்திருந்தார். "இந்தியாவில் இதுபோன்ற விக்கெட்டுகளில் நாங்கள் நிறைய விளையாடியுள்ளோம். விக்கெட்டுக்கு என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்கவில்லை என்பதை பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் அது எங்கள் கையில் இல்லை. நான் சரியான பகுதிகளில் பந்து வீச வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில், இங்கிலாந்தின் பிரபல பேட்ஸ்மேன் ஜோ ரூட்டுக்கு ஆகாஷ் தீப் பந்து வீசினார். அவருடைய ஒரு பந்து பெரிதும் பேசப்பட்டது. "ஆரம்பத்தில் நான் ஜோ ரூட்டுக்கு நேராக பந்துகளை வீசினேன். ஆனால் அந்த பந்தில், நான் கார்னரிலிருந்து கொஞ்சம் கோணமாக பந்து வீசினேன். அந்த பந்தில் நான் நினைத்தது நடந்தது" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES லார்ட்ஸ் டெஸ்ட் பற்றி ஆகாஷ் தீப் என்ன சொன்னார்? இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஹாரி புரூக்கின் விக்கெட்டை ஆகாஷ் தீப் வீழ்த்தினார். "இரண்டாவது இன்னிங்ஸில் ஹாரி புரூக் தற்காப்புடன் விளையாடினார். அவர் விக்கெட்டை மறைத்து விளையாடினார். இரண்டு-மூன்று ஓவர்கள் எப்படி பந்து வீசுவது என்று எனக்கு குழப்பமாக இருந்தது. நல்ல பகுதியில் பந்தை கடுமையாக வீசுவதே எனது ஒரே இலக்கு" என்று ஆகாஷ் தீப் கூறினார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் கிடைத்த வெற்றி, தொடரின் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்கு பயனளிக்கும் என்று ஆகாஷ் தீப் நம்புகிறார். "இந்த வெற்றியில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் அதை அனுபவிக்கிறோம். இந்த வெற்றியிலிருந்து எங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். எங்கள் பீல்டிங்கும் நன்றாக இருந்தது" என்று அவர் கூறினார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸில் தொடங்குகிறது. லார்ட்ஸில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், எட்ஜ்பாஸ்டனில் செய்த அதே திட்டத்துடன் பந்து வீச முயற்சிப்பேன் என்று ஆகாஷ் தீப் கூறினார். "எனது பலத்திற்கு ஏற்ப பந்து வீசுவேன். ஒரு நாள் அது பலனைத் தரும் அல்லது பலன் அளிக்காமல் போகலாம். ஆனால் நான் அதையே கடைப்பிடிப்பேன்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆகாஷ் தீப் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். பிகாரை சேர்ந்தவர் ஆகாஷ் தீப் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். அவர் பிகார் தலைநகர் பாட்னாவிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டி கிராமத்தில் வசிப்பவர். இருப்பினும், ஆகாஷ் தீப் ரஞ்சி டிராபியில் பிகாருக்குப் பதிலாக மேற்கு வங்கத்திற்காக விளையாடியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்திய அணிக்காக அறிமுகமான பிறகு, ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவரை ரூ.8 கோடிக்கு வாங்கியது. இதுவரை, ஆகாஷ் தீப் இந்தியாவுக்காக எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz9k4g99j73o

விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கப்படும் - சுகாதார அமைச்சர்

1 month ago
Published By: VISHNU 07 JUL, 2025 | 06:35 PM (செ.சுபதர்ஷனி) நாட்டில் உள்ள விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை ஆய்வு செய்து எதிர்காலத்தில் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பத்தாவது தேசிய விபத்து தடுப்பு வாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் திங்கட்கிழமை (7) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்நாட்டில் 7 பேரில் ஒருவர் ஒவ்வொரு வருடமும் சிகிச்சையளிக்க வேண்டிய விபத்துகளில் சிக்க நேரிடும். ஒவ்வொரு நிமிடமும் 6-8 பேர் வரை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற வேண்டிய விபத்துகளுக்கு ஆளாகுகின்றனர். அந்தவகையில் அன்றாட வாழ்வில் நிகழும் விபத்துகளை கருத்தில் கொள்ளும் போது ஒவ்வொரு இலங்கையரும் வருடத்துக்கு ஒருமுறையேனும் விபத்துக்குள்ளாகலாம். 15 தொடக்கம் 44 வயதுக்குட்பட்டவர்களே பெருமளவில் விபத்துகளில் சிக்குவதுடன், இவ்வயதினரிடையே மரண வீதம் அதிகரிப்பதற்கு விபத்துகள் முக்கிய காரணமாக உள்ளது. வருடாந்த வரவு – செலவு திட்டத்தில் சுகாதாரத் துறைக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் குறிப்பிடத்தக்க தொகை விபத்துகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் சிகிச்சைக்காக செலவிடப்படுகிறது. விபத்துகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகையால் தேசிய விபத்து தடுப்பு வாரத்திற்கு ஏற்ப இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஜூலை 7 ஆம் திகதி வீதி விபத்து தடுப்புக்கும், ஜூலை 8 ஆம் திகதி பணியிடங்களில் இடம்பெறும் விபத்து தடுப்புக்கும், ஜூலை 9 ஆம் திகதி வீடு மற்றும் முதியோர் இல்லங்களில் சம்பவிக்கும் விபத்து தடுப்புக்கும், ஜூலை 10 ஆம் திகதி நீர் நிலை விபத்து தடுப்புகும், ஜூலை 11 ஆம் திகதி பாலர் பாடசாலை, பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலைய விபத்து தடுப்புப்புக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில், சுகாதார அமைச்சு விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை ஆய்வு செய்யவது எதிர்காலத்தில் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/219425

சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல்

1 month ago
07 JUL, 2025 | 06:00 PM (துரைநாயகம் சஞ்சீவன்) சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (7) மாலை சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது. சம்பூரில் 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 57 பேர் உட்பட அதனை அண்மித்த காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்குமான அஞ்சலி நிகழ்வு இதன்போது நடைபெற்றது. அவ்வேளை, படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண் உரிமை பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகள், அரசியல்வாதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்த கொடூரமான படுகொலை சம்பவத்தின்போது சீருடை அணிந்த, ஆயுதம் தாங்கிய படைகள், பிற்பகல் 2 மணியளவில் சம்பூரில் அமைந்த குடியிருப்புகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது மக்கள் தங்கள் பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களுடன் சாக்கரவட்டவன் காட்டுப் பகுதிகளுக்குச் சென்று, பாதுகாப்பாக தஞ்சம் அடைந்தனர். பின்னர், அவர்களை ஊருக்குள் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், காட்டுக்குள் பதுங்கியிருந்த ஆண்களை பாதுகாப்புப் படைகள் வெட்டியும், சுட்டும், எரித்தும் படுகொலை செய்தனர் எனவும் இந்தக் கூட்டுப் படுகொலையின் 35 ஆண்டுகள் கடந்தும், சம்பூர் மக்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகின்ற நிலையிலும், நாட்டின் எந்தவொரு அரசும் இதுவரை உரிய நீதிச் செயல்முறைகளை மேற்கொள்ளவில்லை. இந்நாளில், தற்போதைய அரசு, சம்பூர் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் எனவும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். கடந்த யுத்த காலத்தில் சம்பூர் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 1. புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி (அதிபர்) 2. இராசேந்திரம் பத்மநாதன் (உயர்தர மாணவன்) 3. பொன்னம்பலம் சச்சிதானந்தகுரு (தரம் 7 மாணவன்) 4. மயில்வாகனம் பிரேமானந்தராஜா (உயர்தர மாணவன்) 5. கோணலிங்கம் சோமேஸ்வரன் (தரம் 7 மாணவன்) 6. மனகசிங்கம் நித்தியசீலன் (தரம் 7 மாணவன்) 7. ச.கனகசிங்கம் 8. கனகசூரியம் சண்முகராஜா (தரம் 10 மாணவன்) 9. ஒப்பிலாமணி இந்திரன் 10. முத்துக்குமார் விஜயகுமார் (தரம் 10 மாணவன்) 11. முத்துக்குமார் விஜயகாந்தன் 12. வைரமுத்து வெற்றிவேல் 13. சங்கரலிங்கம் உதயநாதன் 14. தங்கராசா தில்லைநாயகம் 15. பேச்சுமுத்து அருமைப்பிள்ளை (பொலிஸ் உத்தியோகத்தர்) 16. கணபதி கானசரஸ்வதி 17. க.பேச்சிமுத்து (பரியாரியார்) 18. இ.சொக்கன் 19. இ.ஜெகதீஸ்வரன் 20. இராசேந்திரம் (கூனித்தீவு) 21. இராசேந்திரம் வாமதேவன் (தரம் 10 மாணவன்) 22. சுப்பிரமணியம் விநாயகநேசன் 23. வைரமுத்து சுப்பிரமணியம் 24. கணபதிப்பிள்ளை செல்வராசா (பொலிஸ் உத்தியோகத்தர்) 25. வேலுப்பிள்ளை வைரமுத்து (கடற்கரைச்சேனை) 26. வைரமுத்து அழகம்மா 27. பொன்னுத்துரை அரசரெத்தினம் 28. பொன்னுத்துரை கதிர்காமத்தம்பி 29. முருகேசுப்பிள்ளை கணேசலிங்கம் 30. பியதாச சோமதாஸ் 31. பியதாச கருணதாஸ் 32. வீ.அரசமணி 33. இ.ரவிநேசன் 34. இ.சிவநேசன் 35. சி.சிங்கராசா 36. சி.கோணலிங்கம் 37. சி.கவிரூபன் 38. கோ.நாகரெத்தினம் 39. ந.அருணாச்சலம் 40. க.யோகநாதன் 41. சித்திரவேல் குணராசா 42. சித்திரவேல் மாணிக்கராசா 43. தாமோதிரம்பிள்ளை சிவகுமார் 44. இ.நிர்மலநாதன் 45. வீரசிங்கம் யோகாம்பிகை 46. வீரசிங்கம் ஜீவசாந்தி 47. பரணி 48. பரமானந்தம் 49. அல்லிராசா (சூடைக்குடா) அவருடைய மகன்கள் இருவர் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த காளி கோவில் பூசகர் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் சம்பூரில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். https://www.virakesari.lk/article/219418

கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது

1 month ago
பிள்ளையானும், இனிய பாரதியும்.... தம்மை ஏவி விட்ட, சிங்களத் தலைமைகளை காட்டிக் கொடுத்தால், அனுர அரசில் தண்டனை குறைவாக கிடைக்கலாம். ஆனால் இந்த ஊத்தைவாளிகள்... தமிழரைத்தான் காட்டிக் கொடுக்குமே தவிர, சிங்களவனை காட்டிக் கொடுக்காதுகள். அதுகளின் டிசைன் அப்பிடி.

இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம்

1 month ago
இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள் Sunday, July 06, 2025 கட்டுரை “நான் பெண் குழந்தைகளுக்கான விருத்த சேதனம் பற்றிய ஆய்வாளர்களில் ஒருவராக ஆய்வினை மேற்கொண்டேன். இவ்வாய்வினைச் செய்யத் தொடங்கிய பிறகே, இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று எனவும், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸிலோ கூறப்பட்டவில்லை என்பதோடு, மூடநம்பிக்கைகள், சமூக வழக்காறுகளிலிருந்து மட்டுமே பரம்பரை பரம்பரையாக இவை பின்பற்றப்படுகின்றன என்ற உண்மையை நான் அறிந்து கொண்டேன். அதனால், நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கத்னா பற்றிய விளக்கமின்றி நான் எனது மகளுக்கும் கத்னாவைச் செய்து அவளுடைய பாலியல் ரீதியான உணர்வைக் கட்டுப்படுத்தக் காரணமாக இருந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. என்னுடைய மன நிலையினை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இனிவரும் சந்ததிக்கு இவ்வாறான அநீதி இடம்பெறும்போது, அதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பேன்.” “எனக்குக் கத்னா செய்யப்பட்டது பற்றி நான் முதன் முதலில் அறிந்தபோது, நான் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்தேன். என்னுடைய அனுமதியின்றி என் உடலில் ஏதோ ஒரு விடயம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வது மிகவும் கடினமானதாக இருந்தது. நான் யாரின் மீது கோபப்படுவேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. ஆதலால் நான் என் மீதே கோபமடைந்தேன்.” இலங்கையில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உடல், உள நலம் மற்றும் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம் (FEMALE GENITAL MUTILATION OR CUT) என்ற தலைப்பில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாய்வின் தலைமை ஆய்வாளராக ஷிறீன் அப்துல் சரூர் செயற்பட்டுள்ளார். அர்ப்பணிப்பு மிக்க ஒன்பது ஆய்வாளர்கள் குழுவின் உதவியுடன் ஷிறீன் சரூன் மேற்கொண்டிருக்கும் இந்த ஆய்வானது, இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தில் கத்னா எனும் பொதுவான பெயரில் செய்யப்படும் பெண்ணுறுப்புச் சிதைப்பு/ வெட்டுதலின் (FGMC) பிடிவாத நிலைப்பாடு குறித்தும் அதன் பாதிப்புப் பற்றியும் விளக்கி நிற்கிறது. ஏறத்தாழ 1000 பங்குபற்றுநர்களை ஈடுபடுத்திய இவ்வாய்வில், இச்செயன்முறையானது கலாசாரம் எனும் பெயரிலும் சமூக அனுசரிப்பிற்காகவும் மதம், நல்லொழுக்கம், துப்புரவு குறித்த கருத்துத் திரிபுகளிலும் ஆழமாக வேரூன்றிக் காணப்படுவது தெரியவந்திருப்பதாக ஷிறீன் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வு குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: “குறிப்பாகச் சிசுக்களையும் சிறுமிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்நடைமுறையானது இரகசியமாகவும் வற்புறுத்தப்பட்டும் பிழையான தகவலிலும் முறையான சம்மதம் தெரிவிக்கப்படாமலும் மேற்கொள்ளப்பட்டு வருவதை எமது ஆய்விற் காணக்கூடியதாக இருந்தது. மனவுணர்வு அழுத்தத்தை ஏற்படுத்தி, உடல் ரீதியாகத் தீங்காக அமையும் கத்னா ஆனது பெண் பாலியல்பைக் கட்டுப்படுத்தக் கையாளப்படும் நீண்டகாலப் பாலின விதிகளுடனும் அதிகார சக்திகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. பாரம்பரியமாகக் கத்னாவைச் செய்யும் பெண்கள் (ஒஸ்தா மாமிகள்) வருமானத்திற்காக இத்தீங்குமிகு நடைமுறையைத் தொடர்ந்தும் செய்கிறார்கள். சில கிளினிக்குகளிலும் வைத்தியசாலையிலும் கத்னாவை மருத்துவ ரீதியாக்கியுள்ளனர். படித்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் சில முற்போக்கான மத ஆர்வலர்கள் மத்தியில் இதற்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ள அதேவேளை, சமூக அழுத்தம், மதம்சார் தவறான புரிதல்கள் மற்றும் சட்ட ரீதியான தெளிவின்மை காரணமாக கத்னா இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கத்னாவை ஆதரிப்பவர்கள் ஏனைய சத்திர சிகிச்சை நடைமுறைகளுடன் இதனை ஒப்பிட்டு இந்நடைமுறையானது மிகவும் மோசமான ஒரு விடயம் அல்ல எனும் நிலைப்பாட்டினை வலியுறுத்துகிறார்கள். இது வெறுமனே பெண் குறியின் அளவினைக் குறைத்துக் கொள்ளும் தெரிவு செய்யப்பட்டு தோல் நீக்கு முறையான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையே என்பது அவர்களது வாதம். அத்துடன், வளர்ந்த பெண்களில் அவர்களின் சம்மதத்துடன் மட்டுமே இதனைச் செய்வதாகக் கூறிக்கொள்கிறார்கள். பல ஆண்களும் பெண்களும் இது குறித்து வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதை இந்த ஆய்வு விளக்குகிறது. விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவு ஊடாக இதனை இல்லதொழிக்கும் முயற்சிகளைச் சிலர் ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள் பாரம்பரியம் அல்லது மதக் கடப்பாடுகள் குறித்த பொய்யான நம்பிக்கைகள் அடிப்படையில் இதனைப் பாதுகாத்து நிற்கிறார்கள். சமூகம் என்ன சொல்லுமோ, எனும் பயம், பாலியல் குறித்துக் கதைக்கத் தயக்கம், பரம்பரை பரம்பரையாக நிலவும் பதற்றம் என்பவை முற்போக்கான சிந்தனைகளுக்கு மேலும் தடையாகக் காணப்படுகின்றன. ஆயினும், இச்செயற்பாட்டு ஆய்வின் மூலம், மாற்றத்திற்குச் சாத்தியமான முன் புள்ளிகளை நாம் இனங்கண்டு கொண்டோம். நாம் அணி திரட்டிய சுகாதாரப்பணித் தொழில்வல்லுநர்கள், நம்பிக்கைக்குரிய மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், இளம் தாய்மார் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இதில் உள்ளடங்கினர். சட்ட மறுசீராக்கம், மத விளக்கம், சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு, உளவியற் சமூக ஆதரவு, சுகாதாரக் கல்வியறிவு ஆகியவை உள்ளடங்கலாகச் சிறுமிகளது பாலியலுடன் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளில் முக்கிய கவனம் செலுத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட, பல்பிரிவு அணுகுமுறை ஒன்றினை நாம் பரிந்துரைக்கிறோம். கத்னா ஆனது இரகசியமாக, சமூக அங்கீகாரமாகத் தொடர அனுமதிக்கும் சமூக மரபுகளை எதிர்த்து நிற்கும் அதேவேளை, சிறுமிகளின் உடல் தனித்துவம், பாதுகாப்பு, பாலியல் நலன் குறித்த அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதனை முன்னிலைப்படுத்துவது மிக முக்கியம் ஆகும். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தில் கத்னா நடைமுறையைச் சுற்றியுள்ள ஆழமான கலாசார மற்றும் சிக்கலான மத நிலைப்பாடுகளை இச்செயற்பாட்டு ஆய்வு வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, ஒரு விடயத்தைத் தெட்டத் தெளிவாக முன்வைத்துள்ளது. பெண் பிள்ளைகளில் நடைமுறைப்படுத்தும் இச்சடங்கு இஸ்லாமிய மதக் கோட்பாடுகளிலிருந்து வரவில்லை; மாறாக, பாரம்பரியமாக, சமூக நிலைப்பாடாக, தவறான தகவலாகப் பின்பற்றப்படுகிறது. அவற்றிற்கு விளக்கங்களாக முன்வைக்கப்படும் நம்பிக்கை, ஆரோக்கியம், நல்லொழுக்கம் ஆகியவை குரானிலோ அன்றி ஹதீஸிலோ வலிதாக ஆதாரமளிக்கப்படவில்லை. மாறாக, இந்நடைமுறையானது ஓர் அதிகாரக் கட்டுப்பாடாக, பாலியல் விதிகளை வரையறுப்பதாக, பெண்களின் தனித்துவத்தைக் குறிப்பாக அவரகளது உடல்கள் ஆளுமை மற்றும் பாலியல்பைக் குறுக்கிக் கொள்ளும் ஆணாதிக்க அதிகாரத்தை வலுப்படுத்துவதாக இந்நடைமுறை அமைவது எமது ஆய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது. கத்னா குறித்த நிலைப்பாடானது மத நம்பிக்கை, கலாசாரப் பாரம்பரியம், மாறுபட்ட விழிப்புணர்வு மட்டங்கள் போன்றவற்றால் சமூகத்தில் அழமாக ஊடுருவியுள்ளமையை ஆய்வின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனை ஆதரிக்கும் பெண்கள் மத விளக்கங்களை ஆதாரப்படுத்தி, ஹதீஸில் கட்டாயம் எனக் கூறப்படுவதாக வாதிடுகிறார்கள். பெண் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் இதன் பாரதூர விளைவுகளை மறுப்பவர்களாகவோ அன்றி அது குறித்து அறியாதவர்களாகவோ காணப்படுகிறார்கள். மறுபுறத்தே, கத்னாவை எதிர்ப்பவர்கள், குறிப்பாகப் பிரத்தியேக அனுபவமுள்ள அல்லது பாதக அனுபவங்களைக் கண்ட பெண்கள், தொற்று மற்றும் பாலியல் உணர்வு குறைதல் போன்ற உடலியல் சிக்கல்கள் ஏற்பட்டதையும் மனக் காயம், திருமணத்தில் அதிருப்தி, விவாகரத்து நிகழ்ந்தமை உட்பட்ட உளவியற் பாதிப்புகள் குறித்தும் பேசுகிறார்கள். ஆண்களின் நன்மைக்காகத் தமது பாலியல்பு மற்றும் உடல்சார் ஆளுமையினைத் தாம் இழக்கக் காரணமாக கத்னா அமைந்துள்ளதாகப் பெண்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்களவில் காணப்படுகிறது. தகுதியற்றவர்கள் அதனைச் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாரம்பரியமாக இதனைச் செய்பவர்களால் பெண் பிள்ளைகளது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்களை அதிகரிக்க ஏதுவாகிறது. அத்தோடு, இந்த நடைமுறை பற்றிக் குறிப்பிடத்தக்களவில் ஒரு தெளிவற்ற, தவறான தகவல்/ புரிதல் காணப்படுவதை இவ்வாய்வு சுட்டிக் காட்டியது. பங்குபற்றுநர்களில் 383 பேர் தமது மகள்களுக்கு இதனைச் செய்ய உத்தேசித்துள்ள அதேவேளை, ஏறத்தாழ அதற்குச் சமனான எண்ணிக்கையினர் தீர்மானிக்க முடியாமலோ அல்லது நடுநிலைமையாகவோ காணப்பட்டார்கள் அல்லது பதிலளிக்க மறுத்தார்கள். இத்தரவினுள் ஒரு முரண்பட்ட நிலைமையானது சமிக்ஞையாகக் காணப்பட்டாலும் ஒரு மாற்றத்திற்கான மறைமுக வழியாகத் தென்பட்டது. மத ரீதியாகக் குழப்பம் ஒன்று நிலவுகிறது. ஏனெனில், 398 பங்குபற்றுநர்கள் அதனை மதக் கடப்பாடாகக் கருதுகின்றனர். ஆனால், இஸ்லாமிய அறிஞர்களும் பின்பற்றுநர்களும் இது குரானிற்கு அமைவான தேவையோ அல்லது ஹதீஸில் நம்பப்படுவதோ இல்லை எனத் தெளிவுபடுத்துகிறார்கள். அத்துடன், சட்ட ரீதியான விழிப்புணர்வு மிகக் குறைவு. பலருக்கு அதன் சட்ட நிலைப்பாடு குறித்துத் தெளிவில்லை. பங்குபற்றுநர்களிற் பலர் கத்னா நடைமுறை நன்மையானது என்பதை விடத் தீங்குமிக்கது எனக் கருதிய போதிலும், சுகாதாரம் குறித்த புரிதலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆண்களையும் தீர்மானம் எடுக்கும் செயன்முறையாக்கத்தில் ஈடுபடுத்தி, பாரம்பரியமாக ஆழமாக விதைக்கப்பட்டுள்ள கதைகளையும் தவறாக விளக்கப்பட்டுள்ள மதப் போதனைகளையும் நீக்குவதில் கவனம் செலுத்தி விழிப்புணர்வு அதிகரிக்கப்படுதல், உரையாடல், சட்ட சீராக்கம் ஊடாக இந்த நடைமுறையை இல்லாதொழிக்கலாம் என அவர்களிற் பலர் நம்புவது ஊக்கம் தரும் செய்தியாக அமைகிறது. சமூக வற்புறுத்தலாக மிக வலுவாகப் பாரம்பரியமாகச் சத்தமில்லாமல் நிகழ்ந்தாலும் கூட எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. இளம் பெண்கள், சில மத அறிஞர்கள், மற்றும் சுகாதார தொழில் வல்லுநர்கள் சமூகத்தில் தற்போதுள்ள நிலைப்பாட்டை எதிர்த்து நிற்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் குரல் பெரும்பாலும் தனித்து ஒதுக்கப்பட்டாலும் கூட துணிகரமானது என்பதுடன் கதைக் களத்தைத் திசை திருப்புவதில் முக்கியமானதாக ஒலிக்கிறது. இருப்பினும், மாற்றம் சற்றே மெதுவாகத் தான் நிகழ்கிறது. இதற்குக் காரணம் பிரிவுபட்ட சமூகம், அச்சம், களங்கம், பரம்பரை இடைவெளி முரண்பாடுகள் மற்றும் பலமான சட்டக் கட்டமைப்புகள் இல்லாமை ஆகும். இச்செயற்பாட்டு ஆய்வானது எளிமையான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதன் அணுகுமுறையும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும், விழிப்புணர்வு, உரையாடல், நம்பிக்கை ஆகியவற்றைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்லககூடிய வழியினைக் காண்பித்துள்ளது. கத்னாவை இல்லாது செய்வது என்பது உண்மையைப் பேசககூடிய மதத் தலைவர்கள்/ அறிஞர்கள், தீங்கான செயற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கக் கூடிய சுகாதார சேவையாளர்கள், சிறுமிகளதும் பெண்களதும் உரிமைகளை மதிக்கும் சட்ட முறைமைகள் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வலுவூட்டப்பட்டுத் தமது கதைகளை அவமதிப்பின்றிப் பொதுவெளியில் பகிரக்கூடியவர்கள் எனச் சமூகத்தில் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய விடயமாகும்.” https://maatram.org/wp-content/uploads/2025/06/FGMC-Report-Tamil.pdf தகவல் உதவி - maatram கவ்வாது கேள்விப் பட்டிருக்கிறன்...அதென்ன கத்னா....

இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள் Sunday, July 06, 2025 கட்டுரை

புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல் — கருணாகரன் —

1 month ago
புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல் July 6, 2025 — கருணாகரன் — சில மாதங்களுக்கு முன்பு, நிலங்க அலெக்ஸாண்டர் என்ற சிங்கள எழுத்தாளரின் கதைகளுக்கு முன்னுரை எழுத நேர்ந்தது. அவருடைய கதைகளில் ஒன்று, “கொலை நிலத்தில் ஓலமிடும் உள்ளங்கள்” என்பது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் அண்மையில் (2024)கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளைப்பற்றிய – மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பற்றிய கதை. சரியாகச் சொன்னால், அந்தப் புதைகுழிகளை – எலும்புக்கூடுகளை – பகுப்பாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட துறைசார்ந்த பேராசிரியரின் அரசியல் – உளவியல் பற்றிய கதை. நிலந்த அந்தக் கதையை எழுத்தாளருக்குரிய (மனிதருக்குரிய) நேர்மையான முறையில் எழுதியிருந்தார். அந்தக் கதையில் இடம்பெறுகின்ற பேராசிரியர் பண்டுக என்ற பாத்திரம், தன்னுடைய பொறுப்பை, தான் விரும்புகின்ற அல்லது தான் சார்கின்ற அரசியல் ரீதியாக அணுக முற்படுகிறதே ஒழிய, அறிவியல் ரீதியான அறத்துடன் இல்லை என்பதைக் குறியீடாக்கியிருந்தார் நிலங்க. நிலங்கவின் ஏனைய கதைகளும் கூட இதே பண்புடையவையாகவே உள்ளன. அதனால்தான் ‘அதிகாரத்துக்கு எதிரான போர்க்குரலாக, மக்களின் தளத்திலிருந்து ஒலிக்கும் வெளிப்பாடாக நிலந்தவின் கதைகள் இயக்கமுறுகின்றன. இதனூடாக நிலங்க அலெக்ஸாண்டரின் விரிந்த மனதை, பரந்த சிந்தனையை, அவர் விளையும் புதிய அரசியலை, செழுமையான பண்பாட்டுச் சூழலை, புதிய சமூகத்தை எனப் பலவற்றோடும் அறிமுகமாகிறேன். இப்படி அறிந்து கொண்டு செல்லும்போது நம்முடைய மூளையும் இதயமும் இளகி விடுகிறது‘ என்று எழுதினேன். கொக்குத்தொடுவாயில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளும் அவற்றைக் கொண்டிருக்கும் மனிதப் புதைகுழிகளும் எத்தகைய சேதிகளைச் சிங்களச் சமூகத்திற்கு சொல்ல வேண்டும்? என்பதில் நிலந்தவுக்குத் தெளிவான பார்வையுண்டு. அந்தப் பார்வைக்கு நிகரான இன்னொரு வலுவான சான்று, அந்த மனிதப்புதைகுழிகளை சிங்கள புத்திஜீவிகளில் ஒருதரப்பினரும் அவர்கள் காப்பாற்ற முயற்சிக்கும் அதிகார வர்க்கமும் எப்படிச் சூதான முறையில் மாற்றியமைக்க முற்படுகின்றன; அதற்கான தருக்கங்களை எப்படி உருவாக்குகின்றன என்பதைத் துணிச்சலோடும் நிதானத்தோடும் நிலங்க கையாண்டிருக்கும் விதம். இப்படி எழுதும்போது சிங்களப் பெருந்திரள் சமூகத்தில் அல்லது சிங்கள அதிகாரத் தரப்பிலிருந்து எதிர்ப்போ குறைந்த பட்சம் ஒரு அதிர்வலையோ தனக்கு எதிராக ஏற்படும் என்று நிலந்தவுக்குத் தெரியும். அதைக்குறித்தெல்லாம் நிலந்த கவலைப்படவுமில்லை. தயங்கவுமில்லை. நிலந்தவின் அகத்தில் சுடரும் உண்மையின் ஒளியும் அவருடைய இயத்தில் துடித்துக் கொண்டிருக்கும் உண்மையும் நேர்மையும் (அறமும்) அவரை வரலாற்றில் முன்கொண்டு செல்கின்றன. அதற்காக அவர் கொடுக்கக் கூடிய விலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் நாம். அதந்தப் புரிதல்தான் அவருக்கான பலமும் மகிழ்ச்சியும் நிறைவுமாகும். இதை ஏன் இங்கே இப்பொழுது சொல்கின்றேன் என்றால், யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளும் அங்கே மீட்கப்படும் எலும்புக்கூடுகளும் உண்டாக்கியிருக்கும் அரசியற் குழப்பங்களுக்காகவும் அறவீழ்ச்சிக்காகவுமே. செம்மணிப் புதைகுழிகளுக்கு சமாந்தரமாகவோ அல்லது வேறொரு கோணத்திலோ துணுக்காய்ப்புதைகுழி விவகாரமும் முன்னிறுத்தப்பட்டுள்ளது. அங்கே மனிதப் புதைகுழி எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை. எனினும் துணுக்காயில் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டவர்கள், கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம். அல்லது எரியூட்டப்பட்டிருக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இரண்டின் பக்கமாகவும் நின்று கன்னைபிரித்து அடிபடுகிறார்கள் சமூகவலைத்தளப்போராளர்கள். இன்னொரு பக்கத்தில் வெருகல் படுகொலை என்றொரு குற்றச்சாட்டும் முன்னிறுத்தப்படுகிறது. எல்லாமே துயரத்தினால் நிரம்பியதே. எல்லாம் அநீதிகளால் நிரம்பியதே. எல்லாமே அறவீழ்ச்சியினால் ஏற்பட்டவையே. எல்லாவற்றிலும் நிரம்பிக் கிடப்பது வற்றாத கண்ணீர்… இப்படிச் சொல்லி, எல்லாவற்றையும் சமப்படுத்தவில்லை. அது என்னுடைய நோக்கமும் இல்லை. அப்படிச் சமப்படுத்தி விடவும் முடியாது. அவரவர் தமது துயரங்களை ஆற்றுவதற்கும் தமக்கான நீதியைக் கோருவதற்கும் நிதானமான முறையில் சிந்திப்பதே பொருத்தம் என எண்ணுகிறேன். அந்த நிதானமே நிவாரணத்தையோ, நீதியையோ, ஆறுதலையோ தரக்கூடியது. ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கு நிச்சயமாகத் தீர்வைத் தரமுடியாது. கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டவர்களே! அவர்களுடைய உயிர் இனித்திரும்பாது. உடலும் உயிரும் எலும்புக்கூடாகி விட்டது. ஆனால், அதையாவது காணக்கூடியதாக – பெறக்கூடியதாக இருக்கிறது. அதுவும் செம்மணியில். துணுக்காயிலோ வேறு எங்குமே இதைப்போல மீண்டால்தான், கண்டறியப்பட்டால்தான் அவற்றையும் காணலாம். இந்தக் கொடிய யதார்த்தத்திலிருந்துதான் நாம் இந்த விடயங்களைப் பார்க்கவும் அணுகவும் வேண்டும் எனக் கருதுகிறேன். செம்மணிப்புதைகுழியைப் பற்றிப்பேசும்போது அல்லது அதுபோன்ற படைத்தரப்பினால் உருவாக்கப்பட்ட மனிதப்புதைகுழிகளைப் பற்றிப் பேச முற்படும்போது இன்னொரு நிலையில் பாதிக்கப்பட்டோரின் உளத்தில் இயல்பாக ஒரு கேள்வியும் அதனோடிணைந்த உணர்நிலையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு அநீதியை, ஒரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட வலியைப்பற்றிப் பேசுகிறீர்களே! அதைப்போல இன்னொரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட அநீதியும் அதனால் விளைந்த வலியும் உண்டே. அதைப்பற்றி ஏன் பேசவில்லை? அல்லது ஏன் பேசத் தயங்குகிறீர்கள்? என்ற கேள்வியும் உணர்நிலையும் அது. என்பதால்தான் பாதிக்கப்பட்டோர் அனைவருடைய துயரமும் இழப்பும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் கூடிக் குறைந்தவை அல்ல. அவரவருக்கான துயரங்களுக்கும் அவரவர் படுகின்ற வலிகளுக்கும் உரிய மதிப்பு உண்டு. அவற்றை நியாயமாகவும் நிதானமாகவும் புரிந்து கொள்வது அவசியம் என அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது. இல்லையெனில் நாம் நீதியைப் பற்றிப் பேச முடியாது. அதை மீறிப் பேசினால் – பேச முற்பட்டால் அது நீதியாகவோ, நீதிக்கானதாகவோ இருக்காது. மட்டுமல்ல, அநீதியின் பக்கமாகவே நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். ஆகவே பாதிக்கப்பட்டோரின் உளவியலில் – உளநிலையில் – நின்று இதனை அணுகுவதே பொருத்தமானது. நிலங்க அலெக்ஸாண்டர், பாதிக்கப்பட்ட தரப்பின் உணர்நிலையில் நின்று அந்தக் கதைகளை எழுதியபடியால்தான் அவருடைய நீதியுணர்வைக் குறித்து நாம் மகிழ்ந்து, பாராட்டி, நன்றி கூறிப் பேசக்கூடியதாக உள்ளது. ஆனால், இங்கே நமது சமூக வலைத்தளப் பதிவர்களிற் பலரும் அப்படியான நீதியுணர்சியைக் கொண்டிருக்காமல், சார்பு நிலைப்பட்ட – தமக்கு இசைவான நீதியைக் குறித்தே சிந்திக்கின்றனர். அப்படியொரு நீதி இல்லை. அப்படியொரு நீதியை அவர்கள் எதிர்பார்த்தால், அது நீதியாக இருக்கப்போவதுமில்லை. அதைக் கோருகின்றவர்கள் ஒருபோதும் நீதிக்காகவோ நியாயத்துக்காகவோ எந்தப் பங்களிப்பைச் செய்யவும் முடியாது. அவர்கள் வரலாற்றின் முன் தலைகுனியவே முடியும். “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே..” என்று கூறப்படும் இலக்கியப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்களாகச் சொல்லப்படும் சமூகத்தினராகிய நாமே நெற்றிக் கண்ணை (மூன்றாவது கண்ணான அறிவுக் கண்ணை) இழந்து நிற்க முடியுமா? குற்றமாக நடந்தவை அனைத்தும் குற்றங்களே! அதில் எந்தச் சமரசங்களும் வேண்டாம். ஒன்றை ஒன்றினால் மறைப்பதும் மறைக்க முற்படுவதும் தவறு. அந்த உள் நோக்கம் இன்னொரு குற்றமாகும். அது இந்தப் புதைகுழிகளை உருவாக்கிய குற்றத்துக்கு நிகர். இந்தப் புதைகுழிகளில் மட்டுமல்ல, சுதந்திர இலங்கையில் நாடுமுழுவதிலும் உள்ள புதைகுளிகளில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே! நிராயுதபாணிகளே! இதில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற எந்தப் பேதமும் இல்லை. சிங்களவர்களைச் சிங்களவர்களும் தமிழர்களைத் தமிழர்களும் கூடக் கொன்று புதைத்திருக்கிறார்கள். இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். யாரும் இதில் பெருமைப்படவோ, நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை, நம்முடைய கை சுத்தமானது என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லவோ முடியாது. நேரடியாக எந்தக் கொலையோடும் எந்தப் புதைகுழியோடும் பலருக்கும் தொடர்பில்லை என்றாலும் அவரவர் சார்ந்த சமூகம், அவரவர் கொண்டிருந்த அரசியல் அல்லது ஆதரவளித்த தரப்புகள் என்பதற்காக இந்தக் கொலைகளுக்கும் புதைகுழிகளுக்கும் எல்லோரும் பொறுப்பாளிகளே! இந்தப் புதைகுழிகளைக் குறித்து வெளியாரின் பார்வை எப்படியானது? ‘இலங்கையில் மனிதப்புதைகுழிகள்‘, ‘பல தரப்புகளாலும் உருவாக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் விளைச்சல்கள்‘ என்ற செய்திகள் (தகவல்கள்), இலங்கை பற்றிய – இலங்கையர்களைப் பற்றிய ஒட்டுமொத்தப் பார்வையையே அவர்களுக்கு உருவாக்கும். ‘ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் இத்தனை மனிதப் புதைகுழிகளா? அதுவும் நாடு முழுவதிலும்! அதுவும் சுதந்திர இலங்கையில்!! ஆக இலங்கை என்பது எலும்புக்கூடுகளின் தேசமா?‘ என்று அவர்கள் கருதினால் அதில் என்ன தவறு? ஆகவே இதொரு கூட்டுத் துக்கம். கூட்டு அவமானம். கூட்டுத் தலைகுனிவு. கூட்டு அநீதி. இதையும் கூட ஒரு வகையான சமப்படுத்தல் அல்லது சதியான – சூதான தர்க்கம் என்றோ யாரும் சொல்ல முற்படலாம். நிச்சயமாக அப்படியில்லை. இதுதான் உண்மை. மறுக்க முடியாத உண்மை. ஆகவே நாம் நாறி மணக்கும் புழுப்பிடித்த இந்தச் சீழான யதார்த்தத்திலிருந்துதான் உண்மையை நோக்கியும் நீதியை நோக்கியும் பயணிக்க வேண்டியுள்ளது. அதுவே நமது குற்றங்களுக்கான தண்டனையைப் பெறுவதோடு, இனிமேலும் இந்தகைய குற்றங்கள் நிகழாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். புதிய (NPP) அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பிறகு கண்டறியப்படும் மனிதப்புதைகுழிகள் தடைகள், அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில் தோண்டப்படுகின்றன. இதொரு நல்ல – நம்பிக்கை அளிக்கக்கூடிய சூழல். இந்த அரசாங்கம் விடயங்களை முன்னோக்கியதாகக் கையாள முற்படுகிறது. சமூக நல்லிணக்கம், நீதிக்கான முன்னாயத்தம் போன்றவற்றிற்கான தொடக்க வாய்ப்புச் சூழல் என்று இதைக் கருதலாம். இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இதைப்போன்ற (பட்டலந்த, சூரியகந்த என்ற) துயரம் மிக்க, கசப்பான ஒரு வரலாற்று அனுபவச் சூழல் உள்ளதால், அவர்கள் இதனை மேலும் மென்னிலையில் – பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சார்பான நிலையில் அணுக முற்படுவதாகவே தெரிகிறது. ஆக பாதிக்கப்பட்டோருக்கான நீதிக்கான நற்தருணமாக இதை மாற்றுவதற்கான பொறுமையும் நிதானமும் விவேகமும் நமக்கு வேண்டும். கன்னை பிரித்து அடிபட்டால் எல்லாருக்கும் சினமும் எரிச்சலும்தான் ஏற்படும். அது பாதிக்கப்பட்டோருடைய துக்கத்தையும் அவர்களுக்கான நீதியையும் அவமதிப்பதாகவே அமையும். இங்கே பலரும் தமக்குச் சார்ப்பான தரப்புக்கு தாம் நீதியைப் பெற்றுக் கொடுக்கிறோம் என்ற எண்ணத்தில் இன்னொரு தரப்பைக் குற்றப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபடுவதே அதிகமாக உள்ளது. நடந்தவை அனைத்தும் அனைவருக்கும் தெரியும். தெரியாமல் இருப்போர் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அவை கசப்பானவை என்பதற்காகக் கடந்து செல்லக் கூடாது. சுதந்திர இலங்கையில்தான் எத்தனை துயரக் கதைகளும் துன்பியல் நாடகங்களும்? 1505 – 1948 க்கு இடைப்பட்ட 443 ஆண்டுகளில் இலங்கையில் அரசியலுக்காகக் கொல்லப்பட்டோரை அல்லது கொலையுண்டோரையும் விட 1948 க்குப் பிந்திய 75 ஆண்டு காலத்தில் கொல்லப்பட்ட அல்லது கொலையுண்டோரின் தொகை அதிகமாகும். அதாவது சுதந்திர இலங்கையில்தான் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டோரும் கொலையுண்டோரும் கூடுதல். இதைச் சரியாகச் சொன்னால், வெளியாரினால் – பிறத்தியாரினால் – கொல்லப்பட்டதை விட – கொலையுண்டதை விட நமக்குள் நாமே கொன்று குவித்ததும் கொல்லப்பட்டதுமே அதிகம். விடுதலையின் பேராலும் நாட்டின் பாதுகாப்பின் பேராலும் நடந்த அக்கிரமம், அநீதி, முட்டாள்தனம், நாகரீகக் கேடு இது. இனியாவது நம்முடைய அகவிழிகள் திறக்கட்டும். இனியாவது நாம் நிதானமும் நீதியுணர்ச்சி உள்ளவர்களாகவும் வாழ முற்படுவோம். அதற்கு நாம் பொறுப்புக் கூறுவது – பொறுப்பேற்பது அவசியம். அதைச்செய்வோம்.. புதைகுழிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் படுகொலைகளுக்காகவும் அனைத்து நீதியின்மைகளுக்காகவும்தான். https://arangamnews.com/?p=12141

குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!

1 month ago
கீழேயிருக்கும் கட்டுரையில் எந்தெந்த நாடுகள் பெண்கள் அதிகம் குழந்தைகள் பெற்றுக் கொண்டு "வீட்டு மனைவியாக"😎 இருந்து கணவரையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் வேலையைச் செய்ய ஊக்குவிக்கின்றன எனக் குறித்துக் காட்டியிருக்கிறார்கள். போலந்து (தீவிர கத்தோலிக்கர்கள்), ஹங்கேரி (Eastern Orthodox - பழமை வாதக் கிறிஸ்தவர்கள்), ரஷ்யா ((Eastern Orthodox- பழமை வாதக் கிறிஸ்தவர்கள்) - ஆகியவையே இந்த நாடுகள். The ConversationRussia is paying schoolgirls to have babies. Why is pron...Public opinion is split in Russia over a new move to pay schoolgirls who have babies.இவர்களோடு எங்கள் சில யாழ் கள உறவுகளில் "ஆதர்ச தலீவர்" ட்ரம்பும் இதே போல பெண்கள் குழந்தைகள் பெற்றால் சில ஆயிரம் டொலர்கள் சும்மா கொடுக்கும் திட்டம் ஒன்று வைத்திருக்கிறார். இந்த திட்டங்கள் பிள்ளைப் பேற்று வீதங்களை அதிகரிக்கின்றனவா என்றால் , பெரும்பாலும் இல்லை என்றே நிபுணர்கள் சொல்கிறார்கள். காரணம், பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கையைத் தியாகம் செய்து தான் அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. இந்த நவீன சமூக இயங்கியலை பணத்தை வாரி இறைத்து மாற்ற முடியாது.

குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!

1 month ago
குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா - பகீர் பின்னணி பிரதிநிதித்துவப் படம் | மெட்டா ஏஐ ரஷ்யாவின் சில பகுதிகளில் டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தைகளை பெற்றெடுக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ரஷ்யாவின் 10 மாகாணங்களில் இந்தப் புதிய திட்டம் கடந்த சில மாதங்களாகவே அமலில் உள்ளது. இது உள்நாட்டிலும், உலக அரங்கிலும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. ரஷ்ய அதிபரின் உத்தரவின் பேரிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், அதற்கான எதிர்ப்புக் குரல் உடனுக்குடன் நசுக்கப்பட்டு விடுவதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது. மேலும், ரஷ்ய மக்கள் தொகை குறைந்துவருவதால், அதை ஈடுகட்டவே இந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. எப்படிக் கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்தத் திட்டத்தின் பின்னணி பற்றி அலசுவோம். பின்னணி என்ன? - கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யா, அதிக குழந்தை பெற்றெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. ஆனால், தாய்மை அடையும் வயதை எட்டிய பெண்களுக்கு மட்டுமே அந்தச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்த முறை டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றெடுக்குமாறு ரஷ்யா ஊக்குவித்து, அதற்கு ரூ.1 லட்சம் (இந்திய மதிப்பில்) வரை தருகிறது.ரஷ்ய நாட்டின் குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாகக் குறைந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அந்நாட்டு அரசின் புள்ளிவிவரங்களின்படி 2023-ல் ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.41 சதவீதமாக இருந்தது. இது மக்கள் தொகை சமநிலையைப் பெறுவதற்கு தேவையான 2.05%-ஐ விட மிக மிகக் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.இந்நிலையில்தான் ரஷ்யாவில் டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றுக்கொள்வது ஊக்குவிக்கப்படுகிறது. இது குறித்து அந்நாட்டில் இயங்கும், மக்கள் மனநிலையை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் 43% மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராகவும், 40% மக்கள் இதற்கு உறுதுணையாகவும் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. ஆதரவுக்கும், எதிர்ப்புக்கும் பெரிய வித்தியாசமில்லாததால் இயல்பாக அரங்கேறி வருகிறது இளம் மாணவிகள் தாயாகும் போக்கு. புதினின் பார்வை: ரஷ்ய அதிபர் புதின், மிக வலுவான மக்கள் தொகையே, வல்லரசு வளமாகக் காரணமாகும் என்று நம்புபவராக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மக்கள்தொகை அதிகமாக இருந்தால், பரந்துபட்ட நிலபரப்பின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும், ராணுவமும் ஆள் பலம் பெறும் என்று புதின் தீவிரமாக நம்புகிறார். அந்த வகையில் ரஷ்யாவின் நிலபரப்பை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே, உக்ரைன் நிலபரப்பை ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்ற புதினினும் திட்டமும், நாட்டின் மக்கள் தொகை சுருங்கி வருவதால் ஆபத்தான நிலையில் இருக்கிறது. மக்கள் தொகை சரிவது ஒரு பக்கம், போரில் உயிர்நீத்த ரஷ்ய படைவீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மறுபக்கம் என ரஷ்யா நெருக்கடியில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தோராயமாக 2,50,000 ரஷ்ய வீரர்கள் போரில் உயிரிழந்தனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ரஷ்யப் படைகளில் இருந்து சில இளைஞர்கள் உயிர்பிழைத்தால் போதுமென்று தப்பித்தும் வருகின்றனர். ரஷ்யா மட்டுமல்ல... - ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் குறைந்துவரும் மக்கள் தொகை காரணமாக இருந்தாலும் கூட, இது ரஷ்யாவின் பிரச்சினையாக மட்டுமல்லாது உலகின் பரவலான போக்காகவும் இருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில், 2050-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளின் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறையும் வாய்ப்புள்ளது என்ற கணிப்புகளும் நிலவுகின்றன. அந்த வகையில் மக்கள் தொகை அதிகரிப்புக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தது புதின் மட்டுமே இல்லை எனத் தெரிகிறது. ‘ப்ரோநேட்டலிஸ்ட் பாலிசீஸ்’ என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ‘குழந்தைப் பேறை ஊக்குவிக்கும் கொள்கைகளை’ வகுத்த நாடுகளில் ஹங்கேரி, போலந்து, அமெரிக்கா இன்னும் சில நாடுகளும் இடம்பெற்றுள்ளன. ஹங்கேரி அரசு மூன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக்கொண்டால் மிக தாராளமான வரிச் சலுகை தருகிறது. போலந்து அரசு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித் தொகை தருகிறது. ஒரு குழந்தைக்கு இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம் வீதம் உதவித் தொகை தரப்படுகிறது. தொழில், வேலை முன்னேற்றத்தை தியாகம் செய்து பெண்கள் குழந்தைப்பேறுக்கு சம்மதம் தெரிவிப்பதால் இந்தப் பெரிய சலுகையை வழங்குகிறது. அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக ஆக்க வேண்டும் என்ற ‘எம்ஏஜிஏ’ (MAGA) கொள்கையோடு ஆட்சி அமைத்துள்ள ட்ரம்ப், குழந்தைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க 5,000 டாலர் வரை பெண்களுக்குத் தரலாம் என்ற யோசனையை முன்மொழிந்ததும் நினைவுகூரத்தக்கது. ஸ்பெயின் முன்மாதிரி... - குறைந்துவரும் மக்கள் தொகையை மீட்டெடுக்க சில நாடுகள் இதுபோன்ற நிதி, வரிச் சலுகைகளை மட்டுமே அறிவிக்க, ஸ்பெயின் நாடு தனது சற்றே வித்தியாசமான அணுகுமுறையால் சாதித்துள்ளது. ஸ்பெயினும் குழந்தை பெற்றெடுக்க பெண்களை ஊக்குவித்தலும் கூட, அதையும் தாண்டி தனது நாட்டுக்கு குடியேறிகளாக வந்தவர்களுக்கு குடிமக்கள் அந்தஸ்து வழங்குவதை அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக சட்டவிரோதக் குடியேறிகளுக்கும் கூட இந்தச் சலுகையை தாராளமாக வழங்குகிறது. ஸ்பெயினின் இந்த நடவடிக்கைக்கு கைமேல் பலனாக, அதன் பொருளாதாரம் முன்பைவிட வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ப்ரோநேட்டலிஸ்ட் கொள்கைகளில் புதுமைகளையும், தாராளத்தையும் சில தேசங்கள் காட்டினாலும் கூட ஒரு குறிப்பிட்ட சில குழு, இனம் சார்ந்த பெண்கள் அதிகமாகப் பிள்ளை பெறுவதை இந்த நாடுகள் ஊக்குவிக்கின்றன. இவர்களை ‘விருப்பத்தக்குரிய குடிமக்களாக’ அந்த நாடுகள் கருதுகின்றன. அதாவது இனம், மொழி, மதம், பாலின சார்பு சார்ந்து சிலரை அரசாங்கம் விரும்புகிறது. ஸ்பெயின் நாடு குடியேறிகளை தாராளமாக வரவேற்று தங்கள் நாட்டுக் குடியுரிமை வழங்கினாலும் கூட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் ஸ்பானிஷ் மொழி பேசும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. ஹங்கேரி நாடு ஆண் - பெண் (ஹெட்டரோ செக்ஸுவல்) தம்பதிக்கு மட்டுமே இந்தச் சலுகையை தருகிறது. அதுவும் அவர்கள் அதிக வருவாய் ஈட்டும் வர்க்கத்தில் இருக்கிறார்களா என்பதையும் கருத்தில் கொள்கிறது. உலக நாடுகளின் இந்த ‘விருப்பத்துக்குரிய குடிமக்கள்’ போக்கை ட்ரம்ப்பின் செயல்பாடு மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம். பெண்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்காக ஊக்கத் தொகைகளை வழங்கத் தயாராக இருக்கும் ட்ரம்ப், சட்டவிரோத குடியேறிகளை அப்புறப்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் மிகமிக உறுதியாக இருக்கிறார். ட்ரம்ப்புக்கு அமெரிக்க மக்கள்தொகை அதிகமாக வேண்டும். ஆனால் அவர்கள் அமெரிக்கர்களாக இருக்க வேண்டும். ஸ்டாலின் உத்தியை கையிலெடுத்த புதின்: மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்குவிக்க ரஷ்ய அதிபர் புதின், அந்தக் காலத்தில் ரஷ்யாவின் அடையாளமாக இருந்த ஜோசப் ஸ்டாலினின் உத்தியை கையில் எடுத்துள்ளார். 10 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்க்கு ஸ்டாலின் காலத்தில் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. அதையே இப்போது புதினும் பின்பற்றுகிறார். மேலும், ரஷ்யாவில் குழந்தைப் பேறுக்கு எதிரான அனைத்துவிதமான பிரச்சாரங்களையும் தடை செய்து சட்டமே இயற்றப்பட்டுள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று ஒரு பெண் முடிவெடுக்க முடியாது. பெண்களின் கணக்கு: மக்கள் தொகை பெருக்கத்துக்கு உலக நாடுகள் விதவிதமாக, ரகரகமாக கொள்கைகளை வகுக்க, அதை பெண்களின் நலனை அடகுவைத்து மேற்கொள்ளாது, சமூகத் தேவையின் அடிப்படையில் வகுக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானது உழைக்கும் சக்தி. அதனை மக்கள் தொகை பெருக்கத்தினால் மட்டுமே அதிகரிக்க நினைக்காமல், குடியேறிகளுக்கு குடிமக்கள் அங்கீகாரம் வழங்கலாம் என்று பெண்கள் கருதுகின்றனர். அதை விடுத்து, நாட்டிலுள்ள பெண்களை இத்தனை குழந்தை பெற்றெடுங்கள், இந்த மதத்தை, இனத்தை, குலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக குழந்தை பெற்றெடுங்கள் என்று நிர்பந்திப்பது பெண்களின் தனிப்பட்ட உரிமைகளை அத்துமீறுவதாகவும், அரசாங்கம் விரும்பும் வகையில் மக்கள் தொகையை பெருக்கும் ஒருவகையிலான இன அல்லது மதவாதமாகவும் மட்டுமே இருக்கும் என்று கண்டனத்தைப் பதிவு செய்கின்றனர். உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன் குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா - பகீர் பின்னணி | Russia encourages school girls to have children and Shocking background explained - hindutamil.in

செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

1 month ago
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் துப்புரவு நடவடிக்கையில் வெளித்தெரிந்த என்புகள்; செம்மணியில் அடுத்தடுத்து அதிர்ச்சி! செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவாக்கல் பணியின்போது மேலும் சில மனித என்புகள் இனங்காணப்பட்டுள்ளன. மனித என்பு எச்சங்கள் தென்பட்ட பகுதியில் தற்போது அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 47 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 11ஆம் நாளான நேற்றும் இரு என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. இந்தநிலையில், ஏற்கனவே அகழ்வு நடைபெறும் பகுதிக்கு வெள்ள நீர் செல்வதைத் தடுக்கும் நோக்கில், அகழ்வு நடைபெறும் இடத்துக்கு அருகில் நேற்றுத் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்போது அங்கும் மனித என்பு எச்சங்கள் தென்பட்டதை அடுத்து அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. என்பு எச்சங்கள் தென்பட்டதை அடுத்து, ஆய்வுகளின் பின்னர் அங்கும் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரியவருகின்றது. துப்புரவு நடவடிக்கையில் வெளித்தெரிந்த என்புகள்; செம்மணியில் அடுத்தடுத்து அதிர்ச்சி!

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை!

1 month ago
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை! வணிக தினம் மற்றும் வணிக வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வணிக பாட ஆசிரியர் சக்திவடிவேல் பிரதீபன் தலைமையில், வணிகப்பிரிவு மாணவர்களால் இந்த வணிக சந்தை திட்டமிடப்பட்டது. நாடாவெட்டி ஆரம்பமான வணிக சந்தையானது தொடர்ந்து மாணவர்கள் உள்ளூர் சார்ந்த உற்பத்திகள், குளிர்பானங்கள், கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை சந்தைப்படுத்தினர். மாணவர்கள் சந்தைப்படுத்திய உற்பத்தி பொருட்களை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி. வதனி தில்லைச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பார்வையிட்டு அவற்றை கொள்வனவு செய்தனர். வணிகத்துறை சார்ந்து நல்ல ஒரு எதிர்காலத்தை பாடசாலை மட்டத்தில் உருவாக்குவதும், வர்த்தகத் துறை சார்ந்த விடயத்தை கல்வி துறையில் ஒரு உயர்ந்த பகுதியாக மாற்றும் நோக்கிலும் இந்த வணிக தினமும் வணிக வாரமும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை!

அநுரகுமாரவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின், பிமல் ரத்நாயக்க கொள்ளையிட்டுள்ளனர் - சம்பிக்க

1 month ago
06 Jul, 2025 | 05:55 PM (இராஜதுரை ஹஷான்) கோட்டபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பஷில் ராஜபக்ஷ கொள்ளையடித்ததை போன்று அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின் சில்வா, பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளார்கள்.இதன் பெறுபேற்றை வெகுவிரைவில் அரசாங்கம் விளங்கிக் கொள்ளும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, வெளிநாட்டு கடன் சுமையினால் நாடு நிதியியல் ரீதியில் வங்குரோத்து நிலையடைந்தது.1987 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை காட்டிலும் வெளிநாட்டு கடன் தொகை உயர்வாக காணப்பட்டது. அப்போதைய பிரதமராக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாச இதற்கு பொறுப்புக்கூற வேண்டுமா அல்லது மக்கள் விடுதலை முன்னணி நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த வன்முறைகள் பொறுப்புக்கூற வேண்டுமா என்பதை ஆராய வேண்டும். 2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதிப்பு பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டுமா அல்லது விடுதலை புலிகளின் தாக்குதலினால் அரச நிர்வாக கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்பு பொறுப்புக்கூற வேண்டுமா என்பதையும் ஆராய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2007 ஆம் ஆண்டு 8.6 சதவீதத்தில் 500 மில்லியன் டொலர் கடன் பெறும் போது அதன் பிரதி விளைவை எவரும் ஆழமாக ஆராயவில்லை.யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரச நிதியே பாரியளவில் மோசடி செய்யப்பட்டன. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை அரசியல் பிரச்சாரமாக்கி கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.கோட்டாவுக்கு வழங்கிய ஆணையை பஷில் ராஜபக்ஷ கொள்ளையடித்தார். நாடு மிக மோசமான நெருக்கடிக்குள்ளானது, பின்னர் கோட்;டபய ராஜபக்ஷவை நாட்டு மக்கள் விரட்டியடித்தார்கள். அரசியல் கட்டமைப்பின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த வெறுப்பை சாதகமாக பயன்படுத்தி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளார்கள்.இதன் பலனை அரசாங்கம் வெகுவிரைவில் விளங்கிக் கொள்ளும். தேசிய மற்றும் சர்வதேச அரசமுறை கடன்களை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் எவ்விதமான புதிய திட்டங்களும் கிடையாது.சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்று நாட்களை கடத்துவதை மாத்திரம் அரசாங்கம் பிரதான பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது என்றார். அநுரகுமாரவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின், பிமல் ரத்நாயக்க கொள்ளையிட்டுள்ளனர் - சம்பிக்க | Virakesari.lk

இந்தியாவுடன் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் : தேசிய பாதுகாப்பு பாதிப்பு; அரசாங்கத்துக்கு கற்பிக்க தயார் - சரத் வீரசேகர

1 month ago
07 Jul, 2025 | 12:16 AM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு கற்பிக்க தயாராகவுள்ளோம் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வகுப்பறையில் அமர வைத்து கற்பிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கத்துக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் நிற்க வைத்து கற்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதாளக் குழுக்களுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் முரண்பாடு அதன் விளைவாகவே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுதாக அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் குறிப்பிட முடியாது. பாதாள குழுக்களின் செயற்பாடுகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் குறிப்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனுபவமுள்ளவர்களை பாதுகாப்பு தொடர்பான விடயதானங்களுக்கு ஜனாதிபதி நியமித்திருக்க வேண்டும். அரசாங்கம் இந்தியாவுடன் அண்மையில் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் இதுவரையில் அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தவில்லை.இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தேசிய பாதுகாப்பபை உறுதிப்படுத்த அரசாங்கம் சகல அயல் நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.இந்தியாவுக்கு மாத்திரம் சார்பாக செயற்பட்டுக் கொண்டு ஏனைய நாடுகளை பகைத்துக் கொள்ள கூடாது.இந்த அரசாங்கம் இந்தியாவை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது என்றார்.இந்தியாவுடன் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் : தேசிய பாதுகாப்பு பாதிப்பு; அரசாங்கத்துக்கு கற்பிக்க தயார் - சரத் வீரசேகர | Virakesari.lk

கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்த சேவையில்!

1 month ago
06 Jul, 2025 | 05:26 PM (நமது நிருபர்) கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று(07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார். கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்த சேவையில்! | Virakesari.lk

கட்டாக்காலி மாடுகளின் வசிப்பிடமாக மாறிய வடமராட்சி கிழக்கு பொது மைதானம்!

1 month ago
07 Jul, 2025 | 06:03 PM வடமராட்சி கிழக்கு பொது மைதானம் கட்டாக்காலி மாடுகளின் வசிப்பிடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். உரிய பராமரிப்பு இன்றியும் ஒரு பக்க வேலியற்றும் காணப்படும் வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான மாடுகள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பொது மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை கடந்த பல வருடங்களாக காணப்படுகின்றது. இது குறித்து அருகில் அமைந்துள்ள பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். வடமராட்சி வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் உடனடியாக பொது மைதானத்தின் வேலிகளை சரி செய்து, கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பொது மைதானத்தின் தரத்தை பேணுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கட்டாக்காலி மாடுகளின் வசிப்பிடமாக மாறிய வடமராட்சி கிழக்கு பொது மைதானம்! | Virakesari.lk
Checked
Sat, 08/09/2025 - 06:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed