1 month 2 weeks ago
ஈழப்பிரியன் அண்ணாவுக்கு சந்திக்க நேரமில்லை போல, அடுத்தமுறை சந்திப்போம் என செய்தி அனுப்பி உள்ளார். சிறி அண்ணை இன்னொரு முறை வருகையில் சந்திப்போம்.
1 month 2 weeks ago
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள் Published By: VISHNU 16 JUN, 2025 | 02:49 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டது. இந்த டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிரேஷ்ட வீரர், முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான பூர்வாங்க குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, பயிற்சியின்போது உபாதைக்குள்ளானதால் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அத்துடன் கசுன் ராஜித்த, அறிமுக வீரர் இசித்த விஜேசுந்தர ஆகியோர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை குழாத்தில் இடம்பெறும் பசிந்து சூரியபண்டார, பவன் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க, இசித்த விஜேசுந்தர ஆகிய நால்வரும் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை. ஆரம்ப வீரர் லஹிரு குமார ஓரே ஒரு சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். ஆறு வருடங்களுக்கு பின்னர் சுழல்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய டெஸ்ட் குழாத்தில் இடம்பெறுவதுடன் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஏ அணிக்கான போட்டிகளிலும் பிரகாசித்த ஐந்து வீரர்கள் அறிமுக வீரர்களாக குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். நியூஸிலாந்துக்கு எதிராக காலியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடிய அகில தனஞ்சய இம்முறை 7 உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் 34 விக்கெட்களை வீழ்த்தி சுழல்பந்துவீச்சாளர்களில் சிறந்து விளங்கினார். அத்துடன் 6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அவர் 33 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த ஆரம்ப வீரர் லஹிரு உதார (9 போட்டிகளில் ஒரு இரட்டைச் சதத்துடன் 787 ஓட்டங்கள்), மத்திய வரிசை வீரர் பசித்து சூரியபண்டார (8 போட்டிகளில் 2 சதங்களுடன் 620 ஓட்டங்கள்), மற்றொரு மத்திய வரிசை வீரரான பவன் ரத்நாயக்க (8 போட்டிகளில் 542 ஓட்டங்கள்), சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் சோனால் தினூஷ (4 போட்டிகளில் 255 ஓட்டங்கள், 8 விக்கெட்கள்), சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்க (8 போட்டிகளில் 52 விக்கெட்கள்), இசித்த விஜேசுந்தர (44 முதல்தர போட்டிகளில் 112 விக்கெட்கள்) ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். சிரேஷ்ட வீரர்கள் எதிர்பார்த்தது போல குழாத்தில் இடம்பெறுகின்றனர். இலங்கை டெஸ்ட் குழாம் பெத்தும் நிஸ்ஸன்க, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சொனால தினூஷ, பவன் ரத்நாயக்க, ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, அக்கில தனஞ்சய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, இசித்த பெர்னாண்டோ. https://www.virakesari.lk/article/217564
1 month 2 weeks ago
இரண்டு கிழமை இலங்கை பிரயாணத்தில்... நான்கு நாட்கள் கொழும்பு, பத்து நாட்கள் யாழ்ப்பாணம் என்று திட்டமிட்டிருந்தோம். யாழ்ப்பாணத்தில் நின்ற 10 நாட்களும் பெரும்பாலானவை கோவிலுக்கு சென்றதில் கழிந்தது. மனைவி ஏற்கனவே எல்லாக் கோவில்களுக்கும் வருவதாக நேர்த்தி வைத்திருந்ததால் அதனை, தட்டிக் கழிக்க முடியாமல் இருந்தது. மானிப்பாய் மருதடி விநாயகர், சண்டிலிப்பாய் சீரணி அம்மன் கோவில், அராலி அம்மன் கோவிலுக்கு செல்லும் போது உங்களை நினைத்தேன். @ஈழப்பிரியன் னும் அந்த நேரம் ஊரில் நின்றதாக அறிகின்றேன். ஆனாலும் நேரப் பற்றாக்குறை பல அலுவல்களை நிறைவேற்ற முடியாமல் செய்தமை கவலையான விடயம்.
1 month 2 weeks ago
உங்கள் வசதிப்படி செய்யுங்க, போட்டிகளுக்கு அண்மையாக என்றால் நீங்கள் குறிப்பிட்டது போல் வீராங்கனைகளின் பெயர் விபரம் தெரியும்.
1 month 2 weeks ago
Palmyrah Resort, Jaffna https://maps.app.goo.gl/PMUTmUZdP86N9bVw8
1 month 2 weeks ago
அது வந்து... இப்ப நான் என்ன சொல்றது?! திரு சுகந்தன் அவர்கள், இந்தப் பகுதியை சுற்றுலா தலமாக்க முயற்சிக்கிறார். அத்தோடு கள்ளை போத்தலில் அடைத்து ஏற்றுமதி செய்கிறார். பனை மூலப்பொருட்களை வைத்து நிறைய உள்ளூர் உற்பத்திகள் விற்பனை, ஏற்றுமதி செய்கிறார். பாதுகாப்பான படகுச்சவாரி போன்றன பயிற்றப்பட்ட ஊழியர்களை வைத்து மேற்கொள்கிறார். ஆசையாக இருந்தால் ஒரு செய்தி அனுப்பி இருக்கலாமே அண்ணை? ஊருக்கு வந்தால் ஒரு பனைக் கள்ளு(வெறிக்காது) வாங்கித்தந்திருப்பேனே!
1 month 2 weeks ago
ஒரு குட்டித் தூக்கம் போட விடுகிரான் இல்லையே ? எங்கடா கொம்மா?😃
1 month 2 weeks ago
அமெரிக்காவை இழுத்து விடுவதில் நெத்தன்யாகு ரொம்பவும் முயற்சி செய்கிறார். அவரது வலைக்குள் ரம் விழுவார் போல தெரிகிறது.
1 month 2 weeks ago
Posted inArticle இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் – வாசிப்பை நேசிப்போம் – முனைவர் அ.முஷிரா பானு Posted byBookday19/06/2025No CommentsPosted inArticle இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் – வாசிப்பை நேசிப்போம் – – முனைவர் அ.முஷிரா பானு இன்றைய அவசர யுகத்தில், நம் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. வாசிப்பு பழக்கம் என்பது நம் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் சிறந்த செயலாகும். இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. 1980, 1990 காலகட்டங்களில் நமக்குப் பிடித்த பத்திரிக்கைகளுக்காக அவற்றுடன் இணைத்துவரும் இலவச இணைப்பு புத்தகங்களுக்காக காத்திருந்ததையும் அதில் வரும் தொடர் கதைகளை முதலில் யார் படிப்பது என்ற போட்டிகளையும் காண முடிந்தது. அத்தகைய இனிமை யான நினைவுகள் இன்றைய தலைமுறையி வருக்கு உள்ளனவா? சிறு வயதிலேயே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தற்போதைய சூழ்நிலையில் தேரமின்மை காரணமாக வாசிப்பின் முக்கியத்துவம் குறைந்து வருவது நல்லது அல்ல. சிறந்த புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்பதை உணர ஆரம்பித்தாள். நம் வருங்கால இளைய தலைமுறை முகநூலில் நேரத்தை விரயமாக்காமல் நட்பைத்தேடாமல் நூலகங்களில் அந்த இனிய நட்பைக்கண்டறியலாம். வாசிப்பு என்பது மதிப்பெண்களுக்காக பள்ளிகளில் தரும் பாடப்புத்தகங்களைப் படிப்பது அல்ல: பொது அறிவு தகவல் தொடர்புத்திறன், சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை ஒவ்வொருவரிடத்திலும் வளர்த்தெடுக்க உதவும். ஒரு புத்தகம் எக்காலத்திலும் தன்னுடைய சிந்தனையிலும், கருத்திலும் மாறுவதில்லை. நம்மை அறிவுள்ள, பண்புள்ள மனிதனாக சிறந்த புத்தகங்கள் மாற்றுகின்றன. நமக்குத் தேவையான பல தகவல்களைப் பெற நாம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தக வாசிப்பின் மூலம் கிடைத்த அறிவை வாழ்நாளில் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளமுடியும். நாம் உலகில் பார்த்த பார்க்கும் தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், பேச்சாளர்கள் அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தங்கள் கருத்துகள் மூலம் இந்த சமுதாயத்தைச் செதுக்கும் சிற்பிகளே. செறிந்த கருத்துகள் சிறந்த சமுதாயத்தைக் கட்டமைக்கும் உளிகளாகும். எத்தனையோ சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் வாழ்க்கைக்குத் தேவையான உணர்வுகளையும், செய்திகளையும், அவர்களுடைய கற்பனைகளையும், வரலாறுகளையும் நல்கி அறிவுத்திறனை மேம்படுத்த உதவுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 19-ஆம்தேதி தேசிய வாசிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கேரளத்தில் பி.என். பணிக்கர் என்பவர் நூலக இயக்கத்தை தொடங்கி அதன்மூலம் வாசிப்புப் பழக்கத்தைளை ஊக்குவித்தார். கேரளத்தின் வாசிப்பு தினமான ஜூன் 19-ஐ இந்தியாவின் தேசிய வாசிப்பு தினமாக 2017-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மத்திய அரசும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான நூலகங்கள் மற்றும் தகவல் வளங்களை மேம்படுத்துவதற்காக (இன்ஃபி ளிப்நெட்) தகவல் மற்றும் நூலக வலை வமைப்பு மையத்தை (இன்ஃபர்மேஷன் அண்ட் லைப்ரரி நெட்வொர்க் சென்ட்டர்) குஜராத் மாநிலம் காந்தி நகரில் நிறுவியுள்ளது. இந்த வலையமைப்பில் இந்தி அறிவையும்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள் களஞ்சியமாகப் பராமரிக்கப்படுகின்றன. இணைய தளங்களில் இ-புத்தக தளங்களில் பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை பதிவிறக்கம் செய்து வாசித்து மகிழலாம். என்டிஎல்ஐ சங்கம் (என்டிஎல்ஐ கிளப்) என்பது இந்திய தேசிய எண்ம நூலகத்தின் (நேஷனல் டிஜிட்டல் லைஃப்ரரி ஆஃப் இந்தியா) ஒரு பகுதியாகும். இந்தச் சங்கம். நாட்டில் உள்ள அனைவருக்கும் எண்ம முறையில் கல்விசார் வளங்களை எளிதில் அணுகக்கூடிய ஓர் இயக்கமாகும். இது பள்ளி, கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு துறைகளில் எண்ம கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. தினமும் குறைந்தது 30 நிமிஷங்களாவது வாசிக்க ஒதுக்க வேண்டும். வாசிப்புப் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே பெற்றோர் ஊக்குவித்தால் அதன் முக்கியத்துவத்தை வருங்கால இளைய தலைமுறையினரும் பின்பற்றுவர். தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த புத்தகங்களைப் பரிசளித்து, நூலகங்களுக்கும், புத்தகக் கண்காட்சிகளுக்கும் அழைத்துச் சென்று அவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தலாம். ஒருவர் தொடக்க நிலையாளராக இருந்தால், அவர்கள் தங்களுக்கு ஆர்வ முன்னபகுதியின் அடிப்படையில் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம். படிப்படியாக வாசிப்புப்பழக்கத்தை மேற்கொண்டு அதை ரசிக்கத் தொடங்குவார்கள். கைப்பேசியில் தேவையில்லாத வவைதளங்களில் நேரத்தை விரயமாக்காமல், இத்தகைய உபயோகமான வலைதளங்களைப் பயன்படுத்தி அறிவுச்சிந்தனையை வளர்க்கலாம். குறிப்பாக இளைய தலைமுறையினர் இணையதளங்களில் மூழ்சி இணைய விளையாட்டுகளிலும், பயனில்லாத குறும் பதிவுகள் அல்லது சிறு காணொலிகள் என்று தங்களது முழு நேரத்தையும் செலவழிக்கின்றனர். எனவே, சமுதாயத்தைச் சீர்படுத்த வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். வாசிப்புப் பழக்கமும் தியானத்துக்கு இணையானது. மனமகிழ்ச்சிக்கும் தேவை யற்ற சிந்தனைகளில் இருந்து விடுபடவும் வாசிப்புப் பழக்கம் வழிவகுத்து பல நன் மைகளைத் தருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், தமிழ்ச் சங்கங்கள், பல்கலைக்கழகங்களில் வாசகர் வட்டத்தை உருவாக்கி புத்தகங்களை அறிமுகப்படுத்துவதையும் அவை குறித்த விவாதங்களையும் ஊக்குவிக்க வேண்டும். புத்தகங்களோடு உரையாடுவோம்! புத்தகங்களோடு உறவாடுவோம்! கட்டுரையாளர்: – முனைவர் அ.முஷிரா பானு நன்றி: தினமணி https://bookday.in/june-19-national-reading-day-special-article-lets-love-reading-by-dr-a-mushira-banu/
1 month 2 weeks ago
உண்மை, அறவே வீழ்த்தப் பட முடியாத விமானம் என்று ஒன்று இல்லை. ஆனால், வீழ்த்தப் படக்கூடிய நிகழ்தகவு மட்டும் தான் சில போர் விமானங்களுக்குக் குறைவு. உதாரணமாக, F-35 இன் வேகம் 1.6 Mach. இதனோடு ஏவுகணை எதிர்ப்பு தொழில் நுட்பத்தையும் சேர்த்து, அது சுடப் படக்கூடிய நிகழ்தகவை குறைக்க மட்டுமே முடியும். இந்தப் பாதுகாப்புக்களை மீறி அதை வீழ்த்தும் ஆயுதம் ஈரானிடம் இல்லையென நினைக்கிறேன். ஏனெனில், பழைய F-16, F-18 இனையே அவர்கள் வீழ்த்தியதாக செய்திகள் இல்லை. B-2 Spirit Bomber ஒலியை விட குறைவான வேகம் (0.9 Mach) கொண்ட, ஆனால் நெடுந்தூரம்/நேரம் (long-range) பறக்கக் கூடிய விமானம் . எனவே இலகுவாக சுடப் படலாம். இதற்காகவே ரேடாரில் தெரியாத வகையில் வடிவமைத்து, 50,000 அடிகள் உயரத்தில் பறக்கக் கூடியதாகச் செய்திருக்கிறார்கள். இதன் ஒரே சிறப்பு, 300,000 இறாத்தல்கள் நிறையுடன் மேலெழக் கூடிய வேக விமானமாக இருப்பது தான். இரண்டு 30,000 lbs குண்டுகளை தாங்கிச் சென்று வீசக் கூடிய இயலுமை கொண்ட ஒரேயொரு அமெரிக்க விமானம்.
1 month 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே ஆண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் பெண் : நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா ஆண் : நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி பெண் : இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழிக்க கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே ஆண் : சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே பெண் : என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன் ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன் பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன் ஆண் : குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி பெண் : அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க காதல் மழை ஆயுள் வரை தூருமடா ஆண் : என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன் பெண் : ஹோய் ஹோய் ஹோய் அன்பூரில் பூத்தவனே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மழையூரின் சாரலிலே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை மார்போடு சேர்த்தவளே பெண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் ஆண் : உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் ......... ! --- அழகூரில் பூத்தவளே ---
1 month 2 weeks ago
டே ...... வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம் . ......... ஸ்ரீ காந் & காஞ்சனா ......... ! 😍
1 month 2 weeks ago
அப்ப இனியும் தொடர்ந்து பிரபாகரனை லோக்கல் கட்சி அரசியலுக்காக பாவிக்கலாம்.
1 month 2 weeks ago
நான் நினைக்கின்றேன் ஸ்புட்னிக் செய்திகளின் அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. ஸ்புட்னிக் செய்தி தளம் ஈரான் சார்பு நிலையை கடைப்பிடிக்கின்றது. எந்தவொரு விமானமும் விழுத்தப்பட முடியாத ஒன்று அல்ல. ஆனால், உண்மையில் விழுந்தால் அதை ஈரான் காட்சிப்படுத்தும். இதுவரை அப்படியொரு காணொளி வந்ததாக தெரியவில்லை. இஸ்ரேல் டிரோன் ஒன்றை வீழ்த்திய காணொளி ஒன்று நேற்று பார்த்தேன். நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றின் பிரகாரம் பூமியை அதிக ஆழம் ஊடுருவி செல்லும் குண்டை போடக்கூடிய விமானம் சுட்டு வீழ்த்தப்படக்கூடிய சாத்தியம் அறவே இல்லாமல் இல்லை என கூறப்படுகின்றது. அதிகார, ஆணவ, மற்றும் பழிவாங்கள் போட்டிகளின் மத்தியில் மக்கள் அவலங்கள் அனைத்து தரப்பிலும் தொடரப்போகின்றது.
1 month 2 weeks ago
இஸ்ரேலின் உலகநாயகன் பிம்பத்தை ஈரான் உடைத்து காட்டியிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் முக்கிய நகரங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் தாக்கப்பட்ட போதும் வெறும் காயம் மட்டுமே என்பது உண்மையாக இருக்குமானால் இது திட்டமிட்டு ஈரானை அழிக்க அனுமதிக்கப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. அதிலும் வைத்தியசாலை அடிக்கடி காட்சிப் பொருளாக வெளிக்கொண்டு வரும் போதெல்லாம் நெஞ்சில் ஏதோ தைக்குமாப்போல் இருக்கிறது..
1 month 2 weeks ago
கள்ளுக் கொட்டிலில் ஏராளனுக்கு என்ன வேலை😁
1 month 2 weeks ago
இஸ்ரேலுக்கு பேதி மருந்து ஈரானிட்ட தான் இருக்கு போல....
1 month 2 weeks ago
Editorial / 2025 ஜூன் 19 , பி.ப. 02:58 - 0 - 35 முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மேலும் இரண்டு மகள்களான சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி நயனிகா ரம்புக்வெல்ல ஆகியோரும் அமலியின் கணவரும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வின் கூற்றுப்படி, ரூ. 134 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அறிவிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.இதில் ரூ. 40 மில்லியன் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ. 20.5 மில்லியன் மதிப்புள்ள பென்ஸ் கார் மற்றும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 40 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும். மூன்று சந்தேக நபர்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மற்றொரு மகளையும் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்தது. அவர்கள் புதன்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால், விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். Tamilmirror Online || கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது
1 month 2 weeks ago
முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, ஹரிசன், விஜித் விஜிதமுனி டி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் 110 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கால்நடை இறக்குமதி ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் யாரும் தப்பிக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார். "அவர்களில் யாருக்கும் எந்த கருணையும் காட்டப்படாது" என்று அவர் கூறினார். பால் கறப்பதற்காக பசுக்களை இறக்குமதி செய்வது என்ற போர்வையில் வயதான பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். Tamilmirror Online || மஹிந்த, மைத்திரி, ரணில், பசில்: கால்நடை ஊழலில் சிக்குவர்
1 month 2 weeks ago
தெல்லிப்பழைப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளைப் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளாக சீரமைத்துத்தருமாறு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜே/213 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள செல்லத்துரை வீதியில் சமிக்ஞை விளக்கு மாத்திரம் காணப்படுகின்றது. சுமார் 500 முதல் 550 பயணிகள் வரை இந்த வீதியைப் பயன்படுத்துகிறார்கள். ஜே/227 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கோயில்குளம் வீதியில் 1000 முதல் 1500 பயணிகள் வரை வீதியைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் புகையிரதக்கடவைக்கு சமிக்ஞையும் பாதுகாப்புக் கடவையும் இல்லை. ஜே /234 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சந்தை வீதியில் காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்குரிய பாதுகாப்புக்கடவை சமிக்ஞை இல்லை. ஜே / 235 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள குரு வீதியில் காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்குரித்தான ரயில் கடவையை 200 முதல் 225 வரையான பயணிகள் பயன்படுத்துகின்றனர். இதில் சமிக்ஞை விளக்குள்ள பொழுதிலும் பாதுகாப்புக்கடவை இல்லை. ஜே/236 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மாவிட்டபுரம் மயிலிட்டி வீதியில் அமைந்துள்ள மாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்குரிய ரயில் கடவையை 500 முதல் 600 வரையான பயணிகள் பயன்படுத்தும் நிலையில் சமிக்ஞை விளக்கு மாத்திரமே உள்ளது. ஆனால் பாதுகாப்புக்கடவை காணப்படவில்லை. ஜே/237 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பொன்னு சீமா வீதியிலுள்ள ரயில் கடவை 100 முதல் 125 பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர். சமிக்ஞை விளக்குள்ள பொழுதிலும் பாதுகாப்புக் கடவை இல்லை. இதுவரை இந்தக் கடவைகளில் 4 விபத்துகள் பதிவு செய்யப்பட் டுள்ளதுடன் ஓர் உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இவை குறித்து விரைந்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர். தெல்லிப்பழைப்பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்; சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!
Checked
Sun, 08/03/2025 - 15:02
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed