1 month 1 week ago
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய முடிவு! ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடுவதா? இல்லையா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்வார் என வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகளுக்கு கணிசமான வாய்ப்பு இருப்பதாக அவர் நம்புவதாக வௌ்ளை மாளிகை மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சக்திவாய்ந்த அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது 87 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருப்பதாகவும் இதை 90 சதவீதம் செறிவூட்டினால் அணு குண்டுகளை தயாரிக்க முடியும் என்றும் சர்வதேச அணு சக்தி நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இந்த சூழலில் ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை கடந்த 13-ம் திடீர் திடீர் தாக்குதலை நடத்தியது. கடந்த 7 நாட்களாக இஸ்ரேல், ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 20 அணு சக்தி தளங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்து உள்ளன. மேலும் ஈரானின் 14 அணு சக்தி விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டு உள்ளனர். அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட்டு,சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்கா திரைமறைவில் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சரண் அடையும் பேச்சுக்கேஇடமில்லை என்று ஈரான் மதத் தலைவர் அயதுல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் களமிறங்கினால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சூழலில் சர்வதேச அளவில் இஸ்ரேல், ஈரானுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் அணி திரண்டு வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி,கனடா, அவுஸ்திரேலியா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டை பாதியில் ரத்து செய்துவிட்டு அமெரிக்கா திரும்பினார். ஈரான் மீது நேரடியாக போர் தொடுப்பது தொடர்பாக அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரான் மீது போர் தொடுக்க விரும்பவில்லை. எனினும் ஈரானின் அணு சக்தி திட்டத்தை அழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நான் என்ன செய்வேன் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த வாரம் மிகப்பெரிய சம்பவங்கள் நிகழும்" என்று தெரிவித்தார். இது ஈரானுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக கருதப்படுகிறது. புளூம்பர்க் ஊடகம் வெளியிட்ட செய்தியில், “அடுத்த சில நாட்களில் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கக்கூடும். இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கில் சன்னி, ஷியா முஸ்லிம்களுக்கு இடையே நேரடி மோதல் நிலவுகிறது. அந்த வகையில் சன்னி முஸ்லிம்கள் அதிகம் வாழும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் விவகாரத்தில் மென்மையான போக்கை பின்பற்றி வருகின்றன. ஈரான் ஆதரவு நாடுகள்: ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா,வடகொரியா, வெனிசூலா, ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகள் செயல்படுகின்றன. துருக்கி, அஜர்பைஜான் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகள் ஈரானுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதலை நடத்தினால் பாகிஸ்தான் நேரடியாக போரில் களமிறங்கும். இஸ்ரேல் மீது பாகிஸ்தான் இராணுவம் அணு குண்டுகளை வீசும் என்று ஈரான் இராணுவ மூத்த அதிகாரி மோசென் ரீஸி அண்மையில் கூறினார். ஆனால் ஈரானின் கருத்தை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜாமுகமது ஆசீப் உடனடியாக மறுத்தார்.“ஈரானுக்கு நாங்கள் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. அணு சக்தி ஒப்பந்தங்களை நாங்கள் கண்டிப்புடன் பின்பற்றுகிறோம். பாகிஸ்தான் மண்ணையும், மக்களையும் காப்பாற்ற மட்டுமே அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம்" என்று அவர் விளக்கம் அளித்தார். ஈரானுக்கு ரஷ்யா ஆதரவு: உக்ரைனுக்கு எதிரான போரின்போது ரஷ்யாவுக்கு, ஈரான் பல்வேறு வகைகளில் ஆயுத உதவிகளை வழங்கியது. குறிப்பாக ஈரானின் அதிநவீன ட்ரோன்கள் ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டன. தற்போதைய இக்கட்டான சூழலில் ஈரானுக்கு க்ராசுகா 4 என்ற ஏவுகணை தடுப்பு சாதனத்தை ரஷ்யா வழங்கியிருக்கிறது. இந்த மின்னணு தடுப்பு சாதனம் மூலம் இஸ்ரேலின் அதிநவீன ஏவுகணைகள் நடுவானில் திசை திருப்பப்படுகின்றன. இதன்காரணமாக இஸ்ரேலிய ஏவுகணைகள் மீண்டும் இஸ்ரேலுக்கே திருப்பி சென்று அந்த நாட்டை தாக்குகின்றன. இது இஸ்ரேலுக்கு பேரதிர்ச்சியாக அமைத்திருக்கிறது. இதனிடையே ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் செர்ஜி ரயாப்கோவ், மாஸ்கோவில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர்தொடுத்தால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறும் போது, “ஈரான், இஸ்ரேல் இடையே போர்நிறுத்தத்தை ஏற்படுத்த சமரச பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது.எங்களது சமரச திட்டத்தை ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் விளக்கி உள்ளோம். ஈரான், ரஷ்யா இடையே பொருளாதார, ராணுவரீதியாக மிக நெருங்கிய உறவு நீடிக்கிறது" என்று தெரிவித்தார். ஈரானின் அணு சக்தி தளங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரஷ்ய நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேரிடக்கூடாது என்று அமெரிக்கா, இஸ்ரேலிடம் ரஷ்யா ஆணித்தரமாக எடுத்துரைத்து உள்ளது. சீனா எச்சரிக்கை: சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், பெய்ஜிங்கில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் சீனா மிகக் கடுமையாக எதிர்க்கும். சர்வதேச சட்டவிதிகள் மீறப்படுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்" என்று தெரிவித்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங் அண்மையில் கூறும்போது, “ஈரான், இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா தலையிடக்கூடாது" என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். வடஅமெரிக்க நாடான வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ கூறும்போது, “ஈரானுக்கு ரஷ்யா, சீனா, துருக்கி, பெர்சிய வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில், இஸ்லாமிய நாடுகள், குளோபல் சவுத் நாடுகள் பகிரங்கமாக ஆதரவு அளிக்க வேண்டும். அப்போதுதான் இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என்று அழைப்பு விடுத்துள்ளார். வடகொரியாவில் தீவிர ஆயுத உற்பத்தி: இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மிக முக்கிய முடிவை எடுத்து உள்ளார். வடகொரியாவின் ஆயுத உற்பத்தியை பலமடங்கு அதிகரிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரே நேரடியாக ஆயுத ஆலைகளுக்கு சென்று மேற்பார்வை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு சுமார் 20,000 கன்டெய்னர்களில் வடகொரியா ஆயுதங்களை அனுப்பி வைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இதேபோல வடகொரியா தரப்பில் ஈரானுக்கும் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைய சூழலில் இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஒருவேளை உலகப்போர் மூண்டால் பேரழிவு ஏற்படும் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmc483ybi004nqp4k2fe0j575
1 month 1 week ago
2029 ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றமா? ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, 2029 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை மாற்றாமல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார். 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு புலமைப்பரிசில் நடத்துவது குறித்து 2028 ஆம் ஆண்டில் பரிசீலிக்க ஒரு குழு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். இன்றைய (20) பாராளுமன்ற அமர்வில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். பரீட்சை அழுத்தத்தைக் குறைப்பதற்கான திட்டத்தை பரீட்சை திணைக்களம் தற்போது தயாரித்து வருகிறது. பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை படிப்படியாக நீக்கவும், புலமைப்பரிசில் காரணமாக மாணவர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmc4cepxm004sqp4kze43qw61
1 month 1 week ago
செம்மணிப் புதைகுழிக்காக நீதிகோரி இன்று போராட்டம்! யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதை குழிக்கு நீதிகோரி இன்று போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில், செம்மணிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித என்புத்தொகுதிகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டிருந்தன. அந்தப் புதைகுழியை, 'மனிதப் புதைகுழி' என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றமும் அறிவித்துள்ளது. எனினும், புதைகுழிகள் தொடர்பில் வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் வைத்து இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே, செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி இன்று போராட்டம் இடம்பெறவுள்ளது. https://newuthayan.com/article/செம்மணிப்_புதைகுழிக்காக_நீதிகோரி_இன்று_போராட்டம்!
1 month 1 week ago
இல்லை. அரசியலோ, அரசியல் உரிமை போராட்டமோ என்பது என்றுமே பக்திக்குரியது அல்ல. அதீத தலைமை பக்தி வைப்பவர்கள் அல்லது அவ்வாறு பக்தி வைப்பது போல் நடித்து அந்த தலைவனை அவரது தகுதிக்கு மேல் பப்பாவில் ஏற்றுபவர்கள் மக்களதும் அந்த தலைவனதும் அழிவுக்கு முதன்மை காரணியாவார். ஆகவே அப்படியன பக் தியை நான் ஊக்குவிப்பதில்லை. பக்திக்கு அப்பால் ஒரு சிறந்த ஆயுத விடுதலைப் போராளியாக இருந்த பிரபாகரனை வைத்து தமமு பிழைப்பை நடத்துபவர்கள் யாராயினும் அவர்கள் மக்கள் விரோதிகளாகவே இருப்பர்.
1 month 1 week ago
மந்தாகினி, உங்கள் கவிதைகளின் ரசிகன் நான்…! ஆணவம் என்றும் நிலைத்ததில்லை, கொஞ்சம் பொறுத்திருங்கள். வரலாறு என்பது ஒரு வட்டத்தில் தான் பயணிக்கின்றது..!
1 month 1 week ago
மொத்தக்குடும்பமுமே ஊழல் குடும்பம் போலுள்ளது. நாட்டில் உள்ள அரசியல்வாதிகள்ளெல்லாம் உழைத்து வாழவில்லை, ஊழல் செய்தே வாழ்ந்திருக்கிறார்கள்.
1 month 1 week ago
சொல்லிக்கொண்டு இருக்காமல், கால அவகாசம் விடாமல்,ஒருவரும் தப்பிக்க முடியாமல் எல்லோரையும் உடனடியாக பிடித்து பூட்டுங்கள்.
1 month 1 week ago
ஐயோ கடவுளே! கட்சியின் தெரிவுக்கூட்டம். போட்டியில் சரியாக வாக்களிக்க முடியாதவர்களெல்லாம் அங்கத்தவர். என்ன சொல்வது இவர்களை? எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
1 month 1 week ago
அது பிரிட்டிஸ்தூதுவருக்கே தெரியும் ...ஓசிச் சாப்பாடு என்றால் ஆர்தான் விடுவினம்🤣
1 month 1 week ago
இஸ்ரேல் அணு ஆயுதத்தை வைத்துள்ளது. ஏன் அவர்களுக்கு பொருளாதார தடை இல்லை? அணு ஆயுதம் வரை, பொருளாதார தடை வரை , ஒரு நாளுக்கு 50 ஆக கொன்றால் ஒரு இனத்தை அழிக்கலாம் என்ற குரூரம் யாரிடம் உள்ளது? ஒரு உதாரணம்???? தனது நலம் எப்படி முழு அரபு உலகமும் வேடிக்கை பார்க்கும் போது பலஸ்தீனத்துக்கு மட்டும் உதவ முயல்கிறது. அதுவும் பலஸ்தீனியர்கள் வேறு முஸ்லீம்களாக உள்ள போது?? சி ஐ ஏ ,மொசாட் செய்த கொலைகளை காட்டிலுமா???
1 month 1 week ago
மதங்கள் பிரச்சனையே அல்ல. மத அடிப்படைவாதம் தான் பிரச்சனை. இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம், கிறிஸ்தவ அடிப்படைவாதம், பௌத்த அடிப்படைவாதம்,......... இப்படி எதுவுமே மனிதர்களை ஒன்றாக்குவதில்லை, பிரித்து அழிக்கின்றன. இதற்கு எதிராகவே இது நடைபெறுகின்றது, இன வேறுபாடு அடிப்படையில் அல்ல. மற்றபடி, பல பாகுபாடுகள், துவேஷங்கள் எல்லா மனிதர்களின் உள்ளேயும் இருக்கின்றது. வெள்ளை மனிதர்கள் மட்டும் தான் பிரித்துப் பார்ப்பவர்கள் என்றில்லை, நாங்களுமே பிரித்துப் பார்ப்பவர்கள்தான். ஊருக்குள்ளேயும் பிரிக்கின்றவர்கள் நாங்கள், ஊர் ஊராகவும் பிரிகின்றவர்கள் நாங்கள். ஈரானால் முடியாது. பொதுவாக இருக்கும் இஸ்ரேல், அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மையினால், ஈரான் அடிப்பது போன்று பிரமை உருவாக்கப்படுகின்றது. போன வருடம் அவர்களின் ஒரு ஹெலிகாப்டர் விழுந்த போதே, அதை தேட முடியாமல் அவர்கள் தவித்த போது, ஈரானின் நிலை தெரிந்தது. சீனாவோ, ரஷ்யாவோ ஹெலிகாப்டர்கள் கூட கொடுக்கவில்லை. மற்றைய பலமான நாடுகளைப் போலவே ஈரானும் தன் நலன் கருதியே பல குழுக்களுக்கு உதவி செய்கின்றது. ஆனால் ஈரானின் அடிப்படைவாதமும், சர்வாதிகார அரச நிர்வாகம், அதன் மூலம் குழுக்களுக்கு கிடைக்கும் கட்டற்ற வசதிகள் போன்றனவே பல நாடுகளுக்கு பயத்தை உண்டாக்குகின்றன.
1 month 1 week ago
நத்தனியாகு: தங்களது மருத்துவமனையை தாக்கியது மனிதந்நேயம் அற்ற செயலாகும். காசா மக்கள்: எங்களின் அனைத்து மருத்துவமனைகளையும் அழித்தது மனிதநேயம் இல்லையா??? மொத்தமாக 36 மருத்துவமனைகளை அழித்தது (காசாவின்)இஸ்ரேலிய கொலைக்கும்பல்.
1 month 1 week ago
வெள்ளை முஸ்லிம் என கன்னை பிரிக்க உங்களுக்கு தெரியாவிட்டாலும் வெள்ளைகளுக்கு 100 வீதம் தாம் யார் என்பது தெரியும். ஈரான் மாதிரி தான்.தேவை என்றால் வெளுப்போம்.🙂 ஏன் ஈரான் நலனாக இருக்கக்கூடாது?? ஆம்.ஒரு பரீட்சார்த்தம் என்பது யாருக்குமே புரியும். ஒரு வெருட்டாக கூட எடுக்கலாம்.
1 month 1 week ago
சீனா ஈரானுக்கு ஆயுதங்கள் கொடுக்கின்றது என்பதற்கு என்ன ஆதாரங்கள்? அறிய ஆவல்.
1 month 1 week ago
வழமையாக ஒற்றை வரியில் கேள்வி கேட்பீர்கள். இன்று எழுதியிருக்கின்றீர்கள்................👍. நிகழ்தகவை குறைக்க எப்படி பாகிஸ்தான் அணுஆயுதத்தை வைக்க மேற்குலகு விட்டது?.இந்தியாவுக்கு செக் வைக்க பாகிஸ்தான் தேவைப்பட்டது மேற்குலகுக்கு. இந்தியாவைக் கட்டுப்படுத்தவே பாகிஸ்தானை அனுமதித்தார்கள் என்றால் அதுவும் அணு ஆயுத யுத்த நிகழ்தகவை கட்டுப்படுத்தவே என்று தானே வருகின்றது. இந்தியாவிடம் மட்டுமே இருந்தால், அது இந்தியாவின் மேலாதிக்கத்தை நிறுவும் அல்லவா. சமீபத்தில் இருவரும் இரண்டு நாட்கள் சண்டை போட்டதாகச் சொன்னார்கள். பின்னர் பின்வாங்கிவிட்டார்களே. இஸ்ரேலிடமும். எகிப்திடமும் அணு ஆயுதங்கள் இருந்தால், அந்தப் பிரதேசம் ஓரளவாவது அமைதியாக இருக்கக்கூடும். நிகழ்தகவை குறைக்க இன்னொரு நாட்டை செய்யாமல் தடைசெய்வது ஒரு வகை. ஏன் வைத்திருப்பவர்கள் குறைக்க அல்லது இல்லாமல் செய்ய முடியாது?? நிகழ்தகவை குறைக்க இஸ்ரேல் எந்த வகைக்குள் வரும்??? வைத்திருப்பவர்கள் அணு ஆயுத பரம்பல் கட்டுப்பாடு ஒப்பந்தம் மூலம் புதிய அணு ஆயுதங்களை செய்வதை கட்டுப்படுத்திக் கொண்டு தானே இருக்கின்றார்கள். புதிய பரிசோதனைகளுக்கு கூட தடை உள்ளதே. பழைய ஆயுதங்களை பயன்பாட்டில் இல்லாமல் ஆக்குவதும் அவர்களில் ஒப்பந்தத்தில் இருக்கின்றது தானே. இது அமெரிக்காவை விட சுத்துமாத்து. பலஸ்தீனத்துக்கு ஈரான் உதவுவது தான் மிக மிக முக்கிய காரணம். ஈரானை அடக்கி விட்டால் பலஸ்தீனியர்கள் ஏதிலிகள் ஆகி போராட மாட்டார்கள் என்பதுடன் நாளுக்கு சராசரியாக 50 பேரை கொன்றால் அவர்களின் போராடும் வீரியம் குறையும் என்ற தந்திரமே. பலஸ்தீனத்துக்கு எவருமே உதவவில்லை. அந்த மக்கள் நிவாரணம் பெற நிற்கும் போது கூட இஸ்ரேல் இராணூவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இங்கே கேட்க நாதியற்ற மக்கள் அவர்கள். ஹமாஸ் குழுவிற்கு ஈரான் உதவுவது பலஸ்தீன மக்களுக்கு உதவுவது அல்ல. ஈரானை அழித்து தான் பலஸ்தீனத்தை அடக்க வேண்டும் என்ற நிலை கிடையாது. இன்றைய காசாவில் ஈரானால் எதுவுமே செய்யமுடியாது. யாரந்த பல நாடுகள்?? நேட்டோவில் இருக்கும் எந்த நாடும் ஈரானின் அணு அயுத திட்டத்திற்கு ஆதரவு கிடையாது. அமெரிக்காவுடனான தலபானின் கொண்டாட்டம், இஸ்ரேலின் ஐ எஸ் எஸ்லின் கொண்டாட்டம், பின்லாடனின் தந்தையின் வெள்ளை மாளிகை சிவப்பு கம்பள வரவேற்பு என கூறிக்கொண்டே போகலாம்.இவை எதற்குள் அடங்கும்?? இவை அமெரிக்க அரசின் தன் நலன் கருதிய நடவடிக்கைகள் என்பதற்குள் வரும். இதையே தான் ரஷ்யா செய்கின்றது. சீனா செய்கின்றது. இந்தியா செய்கின்றது. இங்கு எந்த வல்லரசும் இப்படி செய்யாமல் இருப்பதில்லை. ஈரானும் இதையே செய்தாலும், தேர்ந்தெடுத்த ஒரு அரச நிர்வாகப் பொறிமுறைகளில் இருக்கும் கட்டுப்பாடுகள் தேர்ந்தெடுக்கப்படாத சர்வாதிகார அரச நிர்வாகத்தில் கிடையாது. இது தான் ஈரான் அரசுக்கும், அமெரிக்க அரசுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு. வடகொரியாவின் அணுஆயுத பரிசோதனைகள் அமெரிக்காவின் உற்ற நண்பர்களான ஜப்பானின் அடுப்படியில் விழுகிறது. தென் கொரியாவின் கடற்கரையில் விழுகிறது. என்ன சகோ இப்படி சப்பை கட்டு கட்டுகிறீர்கள்?? அவை அணு ஆயுதப் பரிசோதனைகள் கிடையாது. ஏவுகணைகள். அத்துடன் வட கொரிய மீது அமெரிக்காவும், மேற்குலகும் விதித்திருக்கும் தடைகள் மிகக் கடுமையானவை.
1 month 1 week ago
இதை தான் தமிழ் யுரியுப்பர்கள் செய்து கொடுத்து கொண்டிருக்கின்றார்கள். மார்க்கபற்றாளர்களின் கனவுகளை செய்திகளாக தயாரித்து கொடுத்து கொண்டிருக்கின்றார்கள். எனது கவலை எல்லாம் கொமேனி உலகத்திற்கே தனது மதகடமைகள் எவ்வளவோ நிறைவேற்றி உலகை மாற்ற வேண்டிய அவசியம் இருக்க இப்படி பங்கருக்குள் சென்று ஒளித்து கொண்டிருக்க வேண்டி வந்து விட்டதே ரிஷாட் பதியுதீன் என்ற இலங்கை எம்பி பாராளுமன்றத்தில் பேசி இருக்கின்றாராம் இலங்கை பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் ஈரான் உதவி செய்ததாம் ஆனால் நன்றி கெட்ட தற்போதைய அரசு ஈரானை ஆதரிக்கவில்லை என்று தாக்கி பேசி உள்ளாராம் .இலங்கை பொருளாதார நெருக்கடியில் அதிக உதவி செய்தது இந்தியா காஷ்மீரில் முஸ்லிம் பயங்கரவாதிகள் குண்டு தாக்குதல் நடத்திய போது ரிஷாட் பதியுதீனும் இலங்கை முஸ்லிம்களும் மதத்திற்காக அவர்களை கண்டிக்கவில்லை
1 month 1 week ago
நிகழ்தகவை குறைக்க எப்படி பாகிஸ்தான் அணுஆயுதத்தை வைக்க மேற்குலகு விட்டது?.இந்தியாவுக்கு செக் வைக்க பாகிஸ்தான் தேவைப்பட்டது மேற்குலகுக்கு. நிகழ்தகவை குறைக்க இன்னொரு நாட்டை செய்யாமல் தடைசெய்வது ஒரு வகை. ஏன் வைத்திருப்பவர்கள் குறைக்க அல்லது இல்லாமல் செய்ய முடியாது?? நிகழ்தகவை குறைக்க இஸ்ரேல் எந்த வகைக்குள் வரும்??? இது அமெரிக்காவை விட சுத்துமாத்து. பலஸ்தீனத்துக்கு ஈரான் உதவுவது தான் மிக மிக முக்கிய காரணம். ஈரானை அடக்கி விட்டால் பலஸ்தீனியர்கள் ஏதிலிகள் ஆகி போராட மாட்டார்கள் என்பதுடன் நாளுக்கு சராசரியாக 50 பேரை கொன்றால் அவர்களின் போராடும் வீரியம் குறையும் என்ற தந்திரமே. யாரந்த பல நாடுகள்?? அமெரிக்காவுடனான தலபானின் கொண்டாட்டம், இஸ்ரேலின் ஐ எஸ் எஸ்லின் கொண்டாட்டம், பின்லாடனின் தந்தையின் வெள்ளை மாளிகை சிவப்பு கம்பள வரவேற்பு என கூறிக்கொண்டே போகலாம்.இவை எதற்குள் அடங்கும்?? வடகொரியாவின் அணுஆயுத பரிசோதனைகள் அமெரிக்காவின் உற்ற நண்பர்களான ஜப்பானின் அடுப்படியில் விழுகிறது. தென் கொரியாவின் கடற்கரையில் விழுகிறது. என்ன சகோ இப்படி சப்பை கட்டு கட்டுகிறீர்கள்??
1 month 1 week ago
யாழ்கள கடவுட்சொல்லினை மறந்து விட்டேன். இதனால் கடந்த ஒரு வருடமாக கை தொலைபேசியின் ஊடாகவே எனது கருத்துக்கள் எழுதுவதுண்டு. நல்லகாலம் கைத்தொலைபேசியில் கடவுட் சொல்லை சேமித்து வைத்திருக்கிறேன். கணனியில் கடவுட் சொல்லை மறந்ததினால் கருத்துக்கள் எழுதமுடியாமல் இருக்கிறது. மறந்து போன கடவுட்சொல்லை மீட்க (Reset Password) கணனி ஊடாக முயற்சித்தாலும் யாழில் இருந்து ஒரு மின்னஞ்சலும் கிடைப்பதில்லை. கடைசியாக இலங்கை தேர்தல் போட்டியும் கைத்தொலைபேசி ஊடாகவே நடாத்தினேன். கணனி மூலம் எழுதுவது இலகு. கை தொலைபேசி மூலம் கருத்துக்கள் பதிவு செய்யும்போது சிலவேளை கை வலிக்கும்
1 month 1 week ago
🤣..................... பையன் சார், நலமா, இந்தப் பக்கம் வருவது குறைவு போல தெரிகின்றது. டிக்டாக்கில் ஒரு ஸ்டார் ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள் போல.................... வட கொரியா அதிபரின் புதுக்கப்பல் கடலில் விட்ட அன்றே இரண்டாகப் பிளந்து போய்விட்டது. மனிதர் கடும் கோபத்தில் சிலரை பிடித்து அடைத்து வைத்திருக்கின்றார். அவர்களை அவர் கொன்று கூட இருக்கலாம். இப்பொழுது அந்தக் கப்பலை ஒட்டுவது தான் அவரது முதல் வேலை. அந்தக் கப்பல் ஒரு துண்டாக கடலில் மிதந்த பின் தான் தலைவன் வெளியே வேறு அலுவல்களுக்கு வருவார்...............🤣. அதிபர் ட்ரம்ப் தான் ஒரு அமைதி விரும்பி என்று சொல்லுவார். நீங்கள் உட்பட பலரும் அதையே திருப்பிச் சொன்னீர்கள். அதிபர் ட்ரம்ப் விரும்புவது அவரை மட்டுமே என்று நாங்கள் சிலர் எப்போதும் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே............... நாலு வருடங்கள் பட்டுத்தான் பாருங்களேன்.............😜. நிகழ்வுகளை மூன்று வகைகளாக எழுதலாம் என்றிருக்கின்றது: எங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுவது எங்களுக்கு விருப்பமானவற்றை ஊகங்களாக எழுதுவது எங்களின் அரசியல் தேவைகள் கருதி திரித்து எழுதுவது நீங்கள் இரண்டாவது வகையில் மிக நல்லாகவே எழுதியிருக்கின்றீர்கள்.....................👍.
1 month 1 week ago
போட்டி கேள்வி கொத்த அடுத்த மாதக் கடசியில் ஆரம்பித்தால் நல்லா இருக்கும் உலக கோப்பையில் விளையாடும் மகளிர்களின் பெயர்கள் இன்னும் வெளியிட வில்லை கந்தப்பு அண்ண..................போட்டிய திறம் பட நடத்துவீங்கள் அதில் மாற்றுக் கருத்து இல்லை..................... இந்த முறை இலங்கை மற்றும் இந்தியாவில் நடப்பதால் , பினல் வரை இந்தியா மகளிர் போவினம் இலங்கை மகளிர் சொந்த நாட்டில் நல்லா விளையாடக் கூடியவை , போன மாதம் தென் ஆபிரிக்கா மகளிர சொந்த மண்ணில் வென்றவை......................மகளிர் உலக கோப்பை போட்டி பார்க்க நல்லா இருக்கும் பொழுதும் போகும் அதோட அவளவேன்ட அழகையும் ரசிக்கலாம் லொள்😁❤️🥰👍...............................
Checked
Sun, 08/03/2025 - 15:02
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed