புதிய பதிவுகள்2

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஆம், (எண்ணெய், இயற்கை எரிவாயு) போன்ற வளங்கள் ஒரு முக்கிய பரிமாணம், குறிப்பாக சீனாவுக்கு அது கிடைப்பது, us / மேற்கின் கட்டுப்பாட்டில் இல்லாதது. முன்பு சொன்னது போல, இரான் சீனாவுக்கு இடையே நேரடியான சரக்கு புகையிரத சேவை. எண்ணெய் வழங்குவதில் பாரிய கடற்கலங்களுக்கு முற்றிலும்ஒப்பானதாக இப்போது இல்லாவிட்டாலும், புகையிரத தொழில்நுட்பத்தில் நடந்து வரும் மாற்றத்தால் அடுத்த 5-10 ஆண்டுகளில் புகையிரத்தே சேவை சிலவேளைளில் கடற்கலன்களை விட கொள்ளவு விநியோக வினைத்திறன் கூட, மற்றும் விலை , நேரமும் குறைவாக (இப்போதே 15 நாட்களே எடுக்கிறது முழுவதும் நிரம்பிய நிலையில் சீன - ஈரான் சரக்கு புகையிரத சேவை. பாரிய கடற்கலம் எடுப்பது 30 - 40 நாட்கள், அத்துடன் கடலில் ஆபத்தும் கூட)

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; உலகிற்கு பேரழிவு” போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர்அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அன்டோனியோ குட்டெரெஸ் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும். மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும். இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். ஐ.நா. சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் கீழ், ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தவும், போர் பதற்றத்தை தணிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆபத்தான நேரத்தில், மேலும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இராணுவ நடவடிக்கை எதற்கும் தீர்வு இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. அமைதி மட்டுமே ஒரே நம்பிக்கை." என்று தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஈரான்-மீது-அமெரிக்கா-தாக்குதல்-உலகிற்கு-பேரழிவு/50-359672

காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தயங்குவது ஏன்? - எம்.ஏ. சுமந்திரன்

1 month 1 week ago
காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தயங்குவது ஏன்? - எம்.ஏ. சுமந்திரன் http://www.samakalam.com/wp-content/uploads/2021/03/111103829_sumanthiran-04.jpg வடக்கில் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தீர்மானித்திருந்த அரசாங்கம், குறித்த இரத்து செய்யும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்த ஏன் தாமதிக்கிறது என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வினவியுள்ளார். தனது முகநூலில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ”வடக்கில் 5941 ஏக்கர் காணிகளுக்கான தமது உரித்தை நிரூபிக்குமாறு காணி நிர்ணய சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.1025 அன்று 2420/25 இலக்கமிட்ட வர்த்தமானி, காணி உரிமையாளர்களுக்கு கொடுத்த காலக்கெடு 28.06.2025 உடன் முடிவடைகிறது. சட்ட மறுப்புப் போராட்டத்துக்கு நாம் கொடுத்த அவகாசம் முடிவடைவதற்கு 1 நாள் இருக்க, அதை மீளப் பெறப் போவதாக 27. 05.2025 அன்று அரசு அறிவித்தது. அது உடனடியாக செய்யப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் 2 வாரமாகியும் இ‌‌ந்த வர்த்தமானி மீள் கைவாங்கப்படாத காரணத்தால் உச்ச நீதிமன்றத்திலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு (SC FR 112/2025) 12.06.2025 அன்று தாக்கல் செய்தேன். 17.06.2025 இவ் வழக்கு ஆதரிப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது அமைச்சரவையின் அறிவுறுத்தல் பெறுவதற்கு சட்ட மா அதிபர் இன்று வரை கால அவகாசம் கேட்டிருந்தார். இன்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரசின் முடிவை அறிவிக்க 27.06.2025 வரை (காலக்கெடு முடிவதற்கு 1 நாள் அவகாசம் இருக்க) மீண்டும் அவகாசம் கோரியிருக்கிறார்! தாம் தீர்மானித்ததாக கூறியதை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது ஏன்?” என சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். https://www.samakalam.com/காணிகளைச்-சுவீகரிக்கும்/

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும். இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள். இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்? பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா? எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும். இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள். இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்? பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா? அணுவாயுதம் ஏவுகணை என்பதெல்லாம் ஒரு சாட்டாக கருதுகிறேன், ஈரானின் வளம்தான் குறியாக உள்ளதாக கருதுகிறேன்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
அமெரிக்கா த‌ன‌து நாட்டில் பாதுகாப்பை ப‌ல‌ப் ப‌டித்தி இருக்காம்...............எங்கையோ இருக்கும் ஈரானை க‌ண்டு இம்ம‌ட்டு ப‌ய‌மா.......................அப்ப‌ ர‌ஸ்சியா சீனா கூட‌ போர் வ‌ந்தால் அமெரிக்காவின் நிலை என்ன‌ ஆகிர‌து ஹா ஹா..........................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
இரான் ஏன் தற்கொலை, அதுவும் சண்டை இல்லாமல் செய்வ வேண்டும் மேட்ற்கு / உச சொல்வது இரான் அணுத்துறையை கைவிட வேண்டும் - அப்படி கைவிட்ட பின் மேட்ற்கு ஏமாற்ற்றாது என்பதற்கு எந்த ஒரு இடமும் இல்லை (ஏமாற்றுவதே திட்டம்), அணுத்துறை இல்லை என்றபடியால் உள்ளே என்றது இன்னும் வசதி us, மேற்கிடம். (பொதுவாக இங்கே இதை சொல்லி இருந்தேன், இப்படியான வ்விடயங்களில் இனிமேல் ஒருவரும் மேற்குடன் ஒப்பந்தம் செய்யமாட்டார்கள் (செய்வது மடைத்தனம்). மரபு வழி ஏவுகணைகளை கூட கைவிட வேண்டும் என்கிறது. வேறு நாடுகளில் உள்ள அந்தந்த எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவு இருக்க கூடாது. இது நான் முதலில் சொன்னதே - இஸ்ரேல் எ மத்தியகிழக்கில் நடப்பதை தீர்மானிக்க வேண்டும், அதாவது hegemon, பிராந்திய தாதா. 8 மில்லியன் உள்ள இஸ்ரேல் இடம், ஆகக்குறைந்தது, விவிலியப்படி, யூதரை விடுவித்த சைரஸ் இராச்சியத்தின் (அதனால் தான் இப்போதாவது இஸ்ரேல் க்கு நாடு உள்ளது) தொடர்சியான 90 மில்லியன் இரான் இஸ்ரேல் இன் சொல்ல கேட்க வேண்டும் ஈரான் இந்த இப்போதைய ஆட்சி ஷா இன் ஆட்சியுடன் உடம உடன் ஒப்பிடும் பொது எவ்வளவோ மேல். ஷா இன் ஆட்சி , கொலையால் ஆட்சிக்குக்கு என்று cia ல் பயிற்றப்பட்ட SAVAK என்னும் இரகசிய போலீசால் கொலைகளே கொண்டே ஆட்சி. (அதனால் தான் ஷா இன் ஆட்சியை மக்கள் புரட்சியாக தூக்கி எறியப்பட்டு, ஆயதொல்லா கொமெய்னி இஸ்லாமிய அரசாங்கத்தை கொண்டுந்தார்) இங்கே சிலருக்கு வரலாறு தெரியாமல், இரானை பற்றி கதைப்பது, அல்லது வரலாற்று அம்சங்களைவேறு விடயங்களுடன் போட்டு குழப்புவது. (பின் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது). Youtube இல் விடயம் இருக்கிறது எங்கே என்று தெரிந்தால். இதன் மூல காரணத்தை இந்தபேட்டி சொல்கிறது ( அனால் 99% இப்படியானது மிகவும் சலிப்பு. ஏனெனில் விளாசல் இல்லை)

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை; ஈரான் விளக்கம்! இஸ்ரேல் – ஈரான் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் களம் இறங்கி ஈரானின் முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது. இதேவேளை, அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை எனவும் அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை எனவும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன எனவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. https://athavannews.com/2025/1436584

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் - தலைநகரில் பல கட்டிடங்கள் சேதம் 22 JUN, 2025 | 11:23 AM ஈரானின் புதிய தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிய தலைநகரில் கட்டிடங்கள் பலத்தை சேதத்தை சந்தித்துள்ள என அவசரசேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது பெரிய அளவிலான அழிவு பல இரண்டு மாடிக்கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன, சில தரைமட்டமாகியுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு தெரிவித்துள்ளது. தரைமட்டமாகியுள்ள கட்டிடமொன்றையும் பெரும் சேதத்தை சந்தித்துள்ள ஏனைய கட்டிடங்களையும் காண்பிக்கும் வீடியோவை இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் வெளியிட்டுள்ளனர். அந்த பகுதியில் பல அவசரசேவை பணியாளர்களை காணமுடிகின்றது. வெடிபொருட்கள் மத்திய இஸ்ரேலில் விழுந்துள்ளதால் அப்பகுதிக்கு குண்டு அகற்றும் பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹைபா நகரும் தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் தாக்குதலை தொடர்ந்து ஆகக்குறைந்தது பத்து இடங்களிற்காவது அவசரசேவை பிரிவினரை அனுப்பியுள்ளோம் 10 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218117

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
இனி வ‌ரும் சில‌ நாட்க‌ளில் ஈரானின் அடிய‌ பார்த்து உல‌க‌மே விய‌க்க‌ போகுது...................ஈரானுக்கு பின்னால் நிக்கும் பெரிய‌ நாடுக‌ள் மிக‌வும் ஆவ‌த்தான‌ நாடுக‌ள்..............................வ‌ட‌கொரியா இனி இழ‌ப்ப‌த‌ற்க்கு எதுவும் இல்லை என‌ அவ‌ர்க‌ளுக்கு ந‌ங்கு தெரியும் , வ‌ட‌கொரியாவின் இன்றைய‌ அறிவிப்பு அமெரிக்காவுக்கு பெரும் த‌லையிடிய‌ கொடுக்க‌ போகுது😛...............................

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

1 month 1 week ago
அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை 22 JUN, 2025 | 10:45 AM ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்கா தாக்குதலை கண்டித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் இந்த தாக்குதலால் நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். இன்றுகாலை நிகழ்வுகள் மூர்க்கத்தனமானவை மேலும் அவை நித்திய விளைவுகளை ஏற்படுத்தும் என தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அபாஸ் அரக்சி ஈரானிற்கு அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்த தயார் என குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா ஈரானின் அமைதியான அணுஉலைகளை தாக்கியதன் மூலம் ஐநா சாசனம் சர்வதேச சட்டம் மற்றும் அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தம் என்பவற்றை கடுமையாக மீறியுள்ளது என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218111

மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? ; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி

1 month 1 week ago
22 JUN, 2025 | 11:22 AM மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது. மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சனிக்கிழமை (21) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லகீதரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மைக்கல் பெவன், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் திருச்செல்வம் , மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் லக்சரண், முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான கருத்துக்களை ஊடகங்களுக்கு முன்வைத்தனர். மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பான ஊடக அறிக்கையில், மலையக மக்களின் அடிப்படை உரிமைகளில் காணி உரிமையும் முக்கியமான தொன்றாக இருக்கின்றது. நீண்ட காலமாகவே நிலத்திற்கான உரிமையற்ற ஒரு சமூகமாக மலையக மக்கள் இருப்பதோடு எங்கள் உறவுகளின் தலைமுறைக்கே நில உரிமை என்பது மறுக்கப்பட்ட இருளாகவே காணப்படுகின்றது. அதற்கான வெளிச்சம் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மனிதர்கள் காலடி படாத காடுகளை அழித்து அதில் பெருந்தோட்டங்களை உருவாக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உழைப்பை வழங்கிய மலையக மக்களின் விழித்தோன்றல்களுக்கு அடிப்படையான காணி உரிமை என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. உண்மையிலேயே இது நீதியானதா? இதற்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கங்களும் பெருந்தோட்ட கம்பெனிகளும் அதற்கான முற்றுமுழுதான முனைப்போடு தொழிற்சங்கங்களும் முன்வருவதில்லை என்பது கேள்விக்குறிய விடயமாகும். மக்கள் அவர்களுக்கான காணி உரிமையை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு போராட்டங்களை அன்று தொட்டு இன்று வரை மேற்கொண்டு தான் வருகிறார்கள். ஆனாலும் இன்று வரை தீர்வு காண முடியாத தன்மையே காணப்படுகின்றது. காணி உரிமைக்கான முதலாவது போராட்டம் 1946 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி மலையக மக்களின் முதலாவது காணிக்கான போராட்டம். கேகாலையின் உருலவள்ளி பெருந்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அப்பெருந்தோட்டத்தில் அம்மக்களின் 400 ஏக்கர் குடியிருப்பு நிலம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமது காணிகளைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக அது அமைந்திருந்தது. இலங்கைப் பெருந்தோட்டங்களில் உள்ள இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் காணி உரிமைகளைக் கோரி இப்போராட்டத்தில் கேகாலை மற்றும் களனிப் பள்ளத்தாக்கு பிரதேசங்களைச் சேர்ந்த 125,000 த்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றிருந்தனர். 1972 ஆம் ஆண்டின் காணிச் சீர்திருத்தச் சட்டம் குடியேற்றங்கள் உருவாகவும் காணிக் கையகப்படுத்தல்கள் நிகழவும் வழிவகுத்தது. தொடர்ச்சியான காணிக் கையகப்படுத்தல்கள் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. டெவோன் தோட்டத்தின் 7,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக மே 11, 1977 அன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சிவானு லட்சுமணன் என்ற இளம் தோட்டத்தொழிலாளி பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் விளைவாக பெருந்தோட்ட நிலங்களை பறிமுதல் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. அதே போன்று, 2000 ஆம் ஆண்டில், மேல் கொத்மலை நீர் மின்சார திட்டத்துக்காக அப்பிரதேச மக்களை வெளியேற்றும் முன்னெடுப்பு தொடர்ச்சியான மக்கள் போராட்டம் காரணமாக கைவிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தின் ஹபுத்தளை பிரதேசத்தில் மிரியாபேத்த பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு பேரழிவின் பின்னர், மலைநாட்டில் வாழும் மக்களுக்கு குடியிருப்புக்கு பொருத்தமான இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கோரிக்கை நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டது. காணி உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் மேற்கொண்ட தியாகங்கள் அளப்பெரியன. மலையக மக்களின் காணி உரிமைக்கான அங்கீகாரத்தை பாதுகாக்க பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், அவர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதுடன் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மீறல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. எனவே, இந்தக் கோரிக்கை இலங்கையின் உரையாடலில் உள்ளடக்கப்படும் ஒரு தேவை தற்போது எழுந்துள்ளது. மேலும் மலையக மக்களுக்கு பெருந்தோட்டக் காணிகளை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பெனிகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையே காணப்படுகின்ற குத்தகை ஒப்பந்தம் காரணமாக காணி உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு பெருந்தோட்ட கம்பெனிகளுடன் எவ்வித தொடர்புமற்ற காணி சீர்திருத்த ஆணைக்குழு (JEDB),(SLSPC),(TRI) ஆகிய அரச நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தோட்ட காணிகளை அவற்றில் வாழும் மலையக மக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக அனுமதிப்பத்திரம், அழைப்பு பத்திரம், அளிப்பு பத்திரம் அறுதியீட்டு உறுதி ஊடாக வழங்குவதற்கு இதுவரையில் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும். மலையக மக்களுக்கு குடியிருப்புக்காக காணி வழங்கப்படும் பொழுது மாத்திரம் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட தேயிலைச் செடிகளுக்கும் ரப்பர் மரங்களுக்கும் அம்மக்களை விட அதிக மதிப்பு வழங்கப்பட்டு தேயிலைச் செடிகளையும் ரப்பர் மரங்களையும் காப்பாற்றுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து லயங்களிலே வாழவைக்கப்படுகின்றனர். மலையக சமூகங்களின் காணி உரிமைகளை உறுதி செய்வதற்காகவும் காணியற்றவர்களுக்காக காணிகளைக் கோருவதற்காக ஒத்த சிந்தனையுள்ளவர்களை ஒன்று திரட்டவும் ஒரு தேசிய தினமாக "காணி தினம்" இருக்கின்றது. இதன் அடிப்படையில் நான்காவது காணி தினத்தினை நேற்று சனிக்கிழமை (21) அட்டன் நகரில் முன்னெடுப்பதற்கு "நிலமற்றோர்க்கு நிலம்" எனும் தொணிப்பொருளில் "மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் ஏற்பாடுகளை செய்து வருவதாக அறியப்படுகிறது. மலையக மக்களின் காணி பிரச்சினை இன்னும் ஒரு கொள்கை ரீதியில் தேசிய வேலைத் திட்டத்துடன் முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான அழுத்தங்கள் பாரியளவில் எழுந்திருப்பது முக்கியமான விடயமாகும். நீண்ட காலமாக மக்களின் தேவையாகவும் மக்களின் நிலம் சார்ந்த இருப்பியலை தக்க வைத்து கொள்வதற்கு இவ்விடயத்தில் முன்னேடுப்புக்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இனிமேல் சிறிதும் பின் நிற்காது முற்றுமுழுதாக ஆதரவளிக்கும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/218116

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
இந்த‌ மூஞ்சுறுவுக்கு நோபால் ப‌ரிசு ஒரு கேடு...................இவ‌னை X த‌ள‌த்தில் உல‌க‌ ம‌க்க‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்தின‌ம் கெட்ட‌ கெட்ட‌ வார்த்தையில்..............................அமெரிக்க‌ ம‌க்க‌ளே இவ‌னுக்கு எதிராக‌ எழுதுகின‌ம்.......................................

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

1 month 1 week ago
நிலத்தடியில் 200 அடி ஆழம் ஊடுருவி தாக்கும் 13,600 கிலோ வெடிகுண்டு - எவ்வாறு செயல்படும்? பட மூலாதாரம்,US AIR FORCE படக்குறிப்பு,US B-2 ஸ்பிரிட் மட்டுமே GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) வெடிகுண்டை ஏவும் வகையில் கட்டமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ பதவி, பிபிசி உலக சேவை 18 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரானின் பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை இரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. கோம் மாகாண நெருக்கடி மேலாண்மைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் மோர்டெசா ஹெய்தாரி, "ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு இலக்கானது" என்று கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரான் தலைநகர் டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 60 மைல் (96 கிமீ) தொலைவில் ஒரு மலைப் பகுதியில் ஃபோர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் தளம் அமைந்துள்ளது. நிலத்தடி வசதி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மைய விலக்கு இயந்திரங்களையும், சிறிய சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் கொண்டிருந்த 2 முக்கிய சுரங்கப்பாதைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்த தளத்தை தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கனவே முறையிட்டது. ஏனெனில், நிலத்தடியில் இருந்த அந்த அணுசக்தி தளத்தை தகர்க்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. பி-2 ரக அதிநவீன ஸ்டெல்த் ரக குண்டுவீச்சு விமானம் மூலம் அமெரிக்கா இந்த குண்டுகளை ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் மீது வீசியதாக கருதப்படுகிறது. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத "பங்கர் பஸ்டர்" ("bunker buster") வெடிகுண்டு அமெரிக்காவிற்கு மட்டுமே உள்ளது. துல்லியமாக வழிகாட்டப்படும், 30,000 பவுண்ட் (13,600 கிலோ) எடையுள்ள இந்த வெடிகுண்டு, ஒரு மலைக்குள் ஆழமாக புதைக்கப்பட்டுள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் வளாகத்தை ஊடுருவிச் சென்று தகர்க்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் ஆயுதம் என்ன செய்யும்? அதன் சவால்கள் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்த முடியும்? அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, GBU-57A/B என்பது, "ஆழமாக புதைக்கப்பட்ட மற்றும் உறுதியாக கட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய ஊடுருவக்கூடிய ஆயுதம்" என அறியப்படுகின்றது. இந்த வெடிகுண்டு சுமார் ஆறு மீட்டர் நீளமுடையது. இது வெடிக்கும் முன் சுமார் 200 அடி (61 மீட்டர்) ஆழத்தில் நிலத்தின் உள்ளே ஊடுருவக்கூடியது என நம்பப்படுகிறது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டால், ஒவ்வொரு வெடிப்பும், நிலத்தை ஆழமாக துளையிட்டு, இலக்கைச் சேதப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது. போயிங்கால் தயாரிக்கப்பட்ட எம்ஓபி (MOP), தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன் முறையாகும். இது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் மிஸைல் ரேஞ்ச் (White Sands Missile Range) என்ற ராணுவ சோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் 21,600 பவுண்ட் (9,800 கிலோ) எடையுள்ள Massive Ordnance Air Blast (MOAB) வெடிகுண்டை விட இது அதிக சக்தி வாய்ந்தது. இந்த MOAB, 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் போருக்காகப் பயன்படுத்தப்பட்டது. "MOAB போலவே பெரிய அளவிலான ஆயுதங்களை உருவாக்க முயற்சித்த அமெரிக்க விமானப்படை, வெடிபொருளை மிகவும் வலிமையான உலோகப் பெட்டிக்குள் வைத்திருக்கும் வகையில் வடிவமைத்தது. அதன் விளைவாக உருவானது தான் GBU-57A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்" என்று கூறுகிறார் பிரிட்டனின் ப்ராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலுள்ள அமைதிக் கல்வித் துறையின் பேராசிரியரான பால் ரோஜர்ஸ். படக்குறிப்பு,பதுங்கு குழியை தகர்க்கும் குண்டு தற்போது , எம்ஓபி வெடிகுண்டை ஏவுவதற்காக கட்டமைக்கப்பட்டும், நிரலாக்கம் செய்யப்பட்டும் இருப்பது அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் என்ற ஸ்டெல்த் பாம்பர் மட்டும் தான். B-2 என அழைக்கப்படும் இந்த போர் விமானம், நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் தயாரித்தது. அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக இந்த விமானம் கருதப்படுகின்றது. இந்த விமானத்தின் உற்பத்தியாளரான நார்த்ரோப் க்ரம்மனின் கூற்றுப்படி, B-2 விமானம் 40,000 பவுண்டு (18,000 கிலோ) வரை சுமக்கக்கூடியது. ஆனால், இரண்டு GBU-57A/B "பங்கர் பஸ்டர்" வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் B-2 விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை சுமார் 60,000 பவுண்டு (27,200 கிலோ). குண்டுவீச்சுக்குப் பயன்படும் இந்த நீண்ட தூர கனரக விமானம், எரிபொருள் நிரப்பாமல் சுமார் 7,000 மைல்கள் (11,000 கிமீ) வரை பறக்கக்கூடியது. பறக்கும் நிலையில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், அதன் வரம்பு 11,500 மைல்கள் (18,500 கிமீ) ஆக அதிகரிக்கிறது. இதன் மூலம், உலகின் எந்தப் பகுதியையும் சில மணி நேரங்களில் இந்த விமானத்தால் அடைய முடியும் என நார்த்ரோப் க்ரம்மன் கூறுகிறது. இரான் போன்ற நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நாட்டிற்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டால், B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் கூடுதல் விமானங்களும் அதில் பங்கேற்க நேரிடும். எடுத்துக்காட்டாக, எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக F-22 ஸ்டெல்த் விமானங்கள் பயன்படுத்தப்படலாம். அதன் பிறகு, சேதத்தை மதிப்பீடு செய்யவும், அதற்குப் பிறகும் தாக்குதல்களைத் தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் டிரோன்கள் பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார். இந்த எம்ஓபி வெடிகுண்டுகள் அமெரிக்காவிடம் மிகக் குறைந்த அளவே இருப்பதாக அவர் மதிப்பிடுகிறார். "அவர்கள் சுமார் 10 அல்லது 20 எம்ஓபி வெடிகுண்டுகளை வைத்திருக்கக்கூடும்" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ். பட மூலாதாரம்,WHITEMAN AIR FORCE BASE படக்குறிப்பு,எம்ஓபி வெடிப்பதற்கு முன் மேற்பரப்பில் இருந்து சுமார் 200 அடி (61 மீட்டர்) வரை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது. பாதுகாப்பான தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ ஃபோர்டோ என்பது இரானின் இரண்டாவது அணுசக்தி செறிவூட்டல் நிலையமாகும். நடான்ஸுக்கு பிறகு இதுவும் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே சுமார் 60 மைல் (95 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள கோம் நகருக்கு அருகில், ஒரு மலையின் ஓரத்தில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்திற்கான கட்டுமானம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், 2009ஆம் ஆண்டு இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையம் அங்கு செயல்படுவதை, இரான் அதே ஆண்டில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. 80 மீட்டர் (260 அடி) ஆழத்தில் பாறை மற்றும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதுடன், இரான் மற்றும் ரஷ்ய தயாரிப்புகளான தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகளால், ஃபோர்டோ வளாகம் பாதுகாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA), அந்த தளத்தில் ஆயுத தரத்திற்கு அருகிலுள்ள 83.7% தூய்மையுடைய யுரேனியம் துகள்களைக் கண்டறிந்தது. இரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழிப்பதே, இரான் மீது தாக்குதல் நடத்துவதன் நோக்கம் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார். அதனை, "இஸ்ரேலின் இருப்புக்கே (existential) ஓர் அச்சுறுத்தல்" எனவும் அவர் விவரித்தார். எப்போதுமே தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியானது என்றும் அணு ஆயுதத்தை உருவாக்க அவர்கள் எப்போதும் முயற்சி செய்யவில்லை என்றும் இரான் கூறி வருகிறது. ஆனால் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் 35 நாடுகளைக் கொண்ட நிர்வாக குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் தனது அணுசக்திப் பரவல் தடைகளை மீறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 'கேம் சேஞ்சர்' "ஃபோர்டோ தளம் செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் அணு ஆயுதம் தொடர்பான அபாயத்தை ஏற்படுத்தும் நிலைமையில் தான் இருக்கிறது. டெஹ்ரானுக்கு, அந்த தளத்தில் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ வாய்ப்பு இருக்கிறது" என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் அணுசக்தி பரவல் தடுப்பு கொள்கைக்கான இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறுகிறார். எம்ஓபி பயன்படுத்தப்பட்டாலும், இரானின் அணு ஆயுதத் தளங்கள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன, எவ்வளவு பாதுகாப்பாக உள்ளன என்பது தெரியாததால், இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew0lwxwx02o

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது என்று கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது

1 month 1 week ago
Published By: VISHNU 22 JUN, 2025 | 12:22 AM 2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் 21ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்புடைய தேர்வு முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது என்றும், முடிவுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் அனைத்து செய்திகளும் தவறானவை என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218089

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
இவ‌ன் ப‌க்கா பிராடு இவ‌ன் போன‌ வ‌ருட‌ம் அந்த‌ சூட்டு தாக்குத‌லில் கொல்ல‌ப் ப‌ட்டு இருக்க‌ வேண்டும் இனி எண்ணையின் விலை உச்ச‌த்த‌ தொடும் அதோட‌ ஈரான் அறிவித்து இருக்கு த‌ங்க‌ட‌ க‌ட‌ல் ப‌ர‌ப்பில் இருந்து ம‌ற்ற‌ நாட்டு க‌ப்ப‌ல்க‌ள் போகாது என‌ , உல‌க‌ பொருளாதார‌ம் கேள்விக் குறி..................... உல‌கில் அமைதிய‌ நிலை நாட்ட‌ வ‌ருகிறேன் என‌ சொல்லி , நெத்த‌னியாவுக்கு பின்னால் க‌ழுவி விடுவ‌தை பெருமையாக‌ நினைக்கிறான் இந்த‌ அர‌க்க‌ன்😡........................

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 1 week ago
தோனி சாதனையை தகர்த்த ரிஷப் பந்த்: புதிய கேப்டன் கில் பவுலர்களை கையாளும் உத்தி பற்றி எழும் கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்த இந்திய வீரர் ரிஷப் பந்த் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹெடிங்லியில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம், வாய்ப்புகளையும் எதிரணி செய்யும் தவறுகளையும் சரியாக பயன்படுத்தியவர்களுக்கு உரிய நாளாக அமைந்தது. அந்த வகையில் நேற்றைய நாள் இங்கிலாந்தின் நாளாகவே இருந்தது. இந்திய அணியில் ரிஷப் பந்தின் 7-வது டெஸ்ட் சதத்தைத் தவிர பெரிதாக இந்திய வீரர்கள் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 3 விக்கெட் இழப்புக்கு வரை 430 ரன்கள் என்று வலுவாக இருந்த இந்திய அணி, எப்படியும் 600 ரன்களை எட்டும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், அடுத்த 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும் மளமளவென இழந்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியும் தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்திருப்பது நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும். ரிஷப் பந்த் சதம் அடித்ததன் மூலம் எட்டியு புதிய மைல்கற்கள் என்ன? கேப்டன் கில் - ரிஷப் பந்த் ஜோடி சிறப்பான ஆட்டம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது. கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ரிஷப் பந்த் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, கில் நிதானமாக ஆடினார். ரிஷப் பந்த் வழக்கத்தைவிட பவுண்டரிகளை அடித்து சதத்தை நெருங்கினார். 99 ரன்களில் இருந்த ரிஷப் பந்த் பஷீர் பந்தில் சிக்ஸர் அடித்து, டெஸ்ட் அரங்கில் 7-வது சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்தவுடன் ரிஷப் பந்த் தனது ஹெல்மெட்டை கழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தனது வழக்கமான "சம்மர்சால்ட்" பல்டி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்த பார்ட்னர்ஷிப் 200 ரன்களைக் கடந்தது. சுப்மான் கில் 150 ரன்களை எட்டும் நிலையில், விக்கெட்டை இழந்தார். பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முற்பட்டபோது, ஸ்குயர் லெக் திசையில் டங்கிடம் கேட்ச் கொடுத்து 147 ரன்களில் கில் விக்கெட்டை இழந்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 209 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். இதன் மூலம் கேப்டனாக அறிமுக ஆட்டத்திலேயே அதிக ரன்கள் சேர்த்த 2வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். முதலிடத்தில் விஜய் ஹசாரே 160 ரன்களில் முதலிடத்தில் உள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர் திருப்புமுனை கேட்ச் அடுத்து வந்த கருண் நாயர், ரிஷப் பந்துடன் சேர்ந்தார். 8 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணிக்காக களமிறங்கியதால் கருண் நாயர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை கவர் திசையில் தூக்கி அடித்தார் கருண் நாயர். நிச்சயமாக கருண் நாயர் அடித்த ஷாட்டில் கேட்ச் பிடிப்பது கடினமானது. ஆனால், பீல்டிங்கில் இருந்த ஒலி போப் அந்தரத்தில் தாவிச் சென்று அற்புதமான கேட்ச் பிடித்து கருண் நாயர் விக்கெட்டைவீழ்த்தினார். மிகுந்த ஆசைகளுடன் களமிறங்கிய கருண் நாயர் இந்த கேட்சை நிச்சமயாக எதிர்பார்த்திருக்கமாட்டார். மிகுந்த ஏமாற்றத்துடன் கருண் நாயர் டக்அவுட்டில் வெளியேறினார். ஆட்டத்தில் கருண் நாயர் விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்து, இங்கிலாந்தின் கரங்களுக்கு ஆட்டம் மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கருண் நாயர் ஆட்டமிழந்து வெளியேறிய காட்சி ரிஷப் பந்தும் சிக்ஸரும் அடுத்து ஜடேஜா களமிறங்கினார். ரிஷப் பந்த் சதம் அடித்தபின் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கி, 150 ரன்களுக்கு நெருங்கினார். ஆனால், டங்க் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ரிஷப் பந்த் 134 ரன்களில் ஆட்டமிழந்தார், இவர் கணக்கில் 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் சுப்மான் கில் (147), ரிஷப் பந்த் (134) ஜோடி 209 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தபின் நடுவரிசை பேட்டர்கள், கடைசிவரிசை பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்திய அணி அதிர்ச்சிகரமாக இழந்து முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்த காட்சி இங்கிலாந்து வலுவான தொடக்கம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது. அப்போது லேசான மேக மூட்டம், குளிர்ந்த காற்று வீசியதை பயன்படுத்திய பும்ரா தனது ஸ்விங் பந்துவீச்சில் புதிய பந்தில் கிராளி விக்கெட்டை எளிதாக வீழ்த்தினார். ஆனால், 2வது விக்கெட்டுக்கு டக்கெட், போப் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவைத் தடுத்து பேட் செய்தனர். பென் டக்கெட் 15 ரன்களில் இருந்தபோது ஸ்லிப்பில் அடித்த ஷாட்டை ரவீந்திர ஜடேஜா கேட்ச் பிடிக்கத் தவறினார், போப் 10 ரன்களில் இருந்தபோது பேட்டில் தெறித்த பந்தை கேட்ச் பிடிக்க ஜெய்ஸ்வால் தவறி இரு வாய்ப்புகளை வீணடித்தனர். இந்த இரு வாய்ப்புகளையும் இங்கிலாந்து பேட்டர்கள் பயன்படுத்தி நங்கூரமிட்டனர். சிறப்பாக ஆடிய டக்கெட் 68 பந்துகளில் அரைசதம் அடித்து 19-வது அரைசதத்தை நிறைவு செய்தார். 2-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து டக்கெட் 62 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்டாகினார். போப் 64 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்துவந்த ஜோ ரூட், போப்புடன் சேர்ந்தார். இருவரையும் பிரிக்க பல பந்துவீச்சாளர்களை கேப்டன் கில் பயன்படு்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2வது விக்கெட்டுக்கு டக்கெட், போப் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவைத் தடுத்து பேட் செய்தனர் பும்ராவை விரக்தி அடையச் செய்த நோபால் நிதானமாக ஆடி வந்த ஜோ ரூட் 28 ரன்கள் சேர்த்திருந்தபோது, பும்ரா பந்துவீச்சில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து ஹேரி புரூக் களமிறங்கி, போப்புடன் சேர்ந்தார். 125 பந்துகளில் போப் சதத்தை நிறைவு செய்தார். கடைசி நேர ஓவர்களில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதி பும்ரா தனது முழு முயற்சியையும் செலுத்தினார். 2வது நாளின் கடைசி ஓவரை பும்ரா வீசியபோது, ஹேரி ப்ரூக் அடித்த ஷாட்டை கருண் நாயர் கேட்ச் பிடித்தார். ஆனால், அது நோபாலாக அறிவிக்கப்படவே பும்ரா விரக்தி அடைந்தார். பும்ரா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 நோபால்களை வீசினார். இந்திய அணித் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் பும்ரா மட்டுமே வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா, சிராஜ், ஜடேஜா 10 ஓவர்களுக்கு மேல் வீசியும் ஒருவிக்கெட்டையும் இந்த ஆடுகளத்தில் வீழ்த்த முடியவில்லை. 3வது நாளில் ஆடுகளம் இந்திய பந்துவீச்சாளர்களை இன்னும் சோதிக்கப் போகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,125 பந்துகளில் போப் சதத்தை நிறைவு செய்தார். கில் கேப்டன்சி மீது எழும் கேள்வி ஷர்துல் தாக்கூரை 40 ஓவர்களுக்கு மேல் பயன்படுத்தியும் எந்த பயனும் இல்லை. பந்து நன்றாக தேய்ந்துவிட்டநிலையில் ஷர்துல் தாக்கூரால் எந்த தாக்கத்தையும் பந்துவீச்சில் ஏற்படுத்த முடியவில்லை. புதிய பந்தாக இருக்கும்போதே பிரசித் கிருஷ்ணா, பும்ரா, சிராஜ், ஷர்துல் என 4 பேருக்கும் சமமான வாய்ப்புக் கிடைத்திருந்தால் இன்னும் கூடுதலாக விக்கெட்டை வீழ்த்தியிருக்கலாம். ஆனால், கேப்டன் கில் 3 பந்துவீச்சாளர்களையே பிரதானமாகப் பயன்படுத்தினார். சுழற்பந்தவீச்சாளர் ஜடேஜாவுக்கு நேற்று 9 ஓவர்கள் மட்டுமே வழங்கினார். இதுவே கோலி, ரோஹித் சர்மாவாக இருந்திருந்தால், சுழற்பந்துவீச்சுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கியிருப்பார்கள். ஆடுகளம் தனது தன்மையை இழந்து தூசி படிந்து வருவதால், இந்த நேரத்தில் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதுதான் சிறந்தது. ஆனால், கில் ஏன் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளி்க்கிறார் எனத் தெரியவில்லை. தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பர்களில் தோனியின் 6வது சதத்தை முறியடித்து, ரிஷப் பந்த் புதிய சாதனை நிகழ்த்தினார். இதன் மூலம் இந்திய விக்கெட் கீப்பர்களில் டெஸ்ட் அரங்கில் அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் ரிஷப் பந்த். பிரிட்டன் மண்ணில் ரிஷப் பந்த் அடித்த 3வது சதம் இதுவாகும். எந்த அணியின் விக்கெட் கீப்பரும் இங்கிலாந்து மண்ணில் 3 சதங்களை விளாசியது இல்லை. ரிஷப் பந்த் தவிர்த்து ஜிம்பாப்பே விக்கெட் கீப்பர் ஆன்டி பிளவர் இந்தியாவில் 3 சதங்களையும், இங்கிலாந்தின் லெஸ் ஆம்ஸ் மே.இ.தீவுகளிலும் 3 சதங்களை விளாசியுள்ளனர். பிரிட்டன் மண்ணில் வெளிநாட்டு அணியின் விக்கெட் கீப்பர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்ததில் ரிஷப் பந்த்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளார். வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையும் ரிஷப் பந்த்துக்கு கிடைத்துள்ளது, முதலிடத்தில் ஹர்திக் பாண்டியா இலங்கையில் 7 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். ரிஷப் பந்த் சேர்த்த 134 ரன்கள் தான் ஹெடிங்லி மைதானத்தில் விக்கெட் கீப்பர் சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன், இலங்கைக்கு எதிராக பேர்ஸ்டோ 140 ரன்கள் சேர்த்துள்ளார். 2018ம் ஆண்டுக்குப்பின் ஒரு இன்னிங்ஸில் 3 இந்திய பேட்டர்கள் சதம் அடிப்பது இதுதான். இதுவரை 5 முறை இதுபோல் 3 பேட்டர்கள் சதம் அடித்துள்ளனர். கடைசியாக 2002ம் ஆண்டில் இதே ஹெடிங்லி மைதானத்தில் திராவிட், கங்குலி, சச்சின் சதம் அடித்த நிலையில் ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப்பின் ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பந்த் சதம் அடித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சிக்ஸர் அடித்து சதம் 3 முறை ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்துள்ளார். 2018ல் ஓவல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் அடில் ரஷீத் பந்தில் சிக்ஸர் அடித்தும், 2021ல் ஆமதபாத்தில் ஜோ ரூட் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தும், இப்போது பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தும் ரிஷப் பந்த் சதத்தை நிறைவு செய்துள்ளார். சச்சின் 6 முறையும், ரோஹித் சர்மா 3 முறையும் சிக்ஸர் அடித்து சதம் நிறைவு செய்துள்ளனர். 2002ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் அரங்கில் ரிஷப் பந்த்தைப் போல் டெஸ்ட் அரங்கில் எந்த விக்கெட் கீப்பரும், பேட்டரும் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடுகளம் எப்படி? ஆடுகளத்தில் பெரிதாக பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்கள் உயிரைக் கொடுத்து பந்துவீசினாலும் ஸ்விங் ஆவதற்கு மறுக்கிறது, அதனால்தான் ஒன்றரை நாட்களில் இந்திய அணியால் 470 ரன்கள் சேர்க்க முடிந்தது, இங்கிலாந்து அணியும் விரைவாக 200 ரன்களை எட்ட முடிந்தது. 2வது நாளிலேயே ஆடுகளம் இவ்வாறு பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காமல் இருந்தால், அடுத்துவரும் நாட்களில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் காத்திருக்கிறது என்றே கூற வேண்டும். கடைசி இரு நாட்களில் ஆடுகளம் வறண்டால் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தில் தாக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939gqrl03go
Checked
Tue, 08/05/2025 - 15:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed