புதிய பதிவுகள்2

அகமதாபாத் விமான விபத்து: மன்னிப்புக் கோரினார் டாடா குழுமத் தலைவர்

1 month 1 week ago
அகமதாபாத் விமான விபத்து: மன்னிப்புக் கோரினார் டாடா குழுமத் தலைவர். அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் ‘மன்னிப்பு’ கோரியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். ,இதனையடுத்து மொத்த உயிரிழப்பு 270ஐ தாண்டியது. இந்நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் ‘மன்னிப்பு’ கோரியுள்ளார். இது குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வௌியிட்ட சந்திரசேகரன்,’விமான விபத்து குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ந்துவிட்டேன். அதை புரிந்துகொள்ளவே எனக்கு சில நிமிடங்கள் ஆகின. விபத்து குறித்து கேள்விப்பட்டதும், விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன். ‘கடவுளே என்ன இது?’ எப்படியாவது அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது. அதன்பிறகு என்னை நானே தேற்றிக்கொண்டு உடனடியாக விமான நிலையம் புறப்பட்டு விட்டேன். விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல கூட வார்த்தைகள் இல்லாத மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறேன். டாடா நடத்தும் விமான நிறுவனத்தில் இந்த விபத்து நடந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இந்த நேரத்திலும் அதற்குப் பிறகும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்’ இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1436224

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஈரான் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் ஒப்புதல்; தெஹ்ரானை கைவிட மாட்டோம் என்கிறார் கிம்! இஸ்ரேல்-ஈரான் மோதல் வியாழக்கிழமை (19) ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதலில் அமெரிக்கா இணையுமா என்பது குறித்து உலகை ஊகிக்க வைத்துள்ளார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஆனால் தெஹ்ரான் அதன் அணுசக்தி திட்டத்தை கைவிடுமா என்பதைப் பார்க்க இறுதி உத்தரவை வழங்குவதில் தாமதம் செய்துள்ளதாகவும் அவர் தனது நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலின் தாக்குதலில் இணையலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஏதேனும் முடிவு எடுத்துள்ளாரா என்பதை உறுதியாகக் கூற மறுத்துவிட்டார். அதேநேரம், ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் மீண்டும் கூறினார். அமெரிக்காவிற்கு ஒரு சாத்தியமான இலக்கு ஈரானின் ஃபோர்டோ அணு செறிவூட்டல் நிலையமாகும். இது நிலத்தடியில் ஆழமாக கட்டப்பட்டுள்ளது மற்றும் அழிக்க மிகவும் கடினம். மிகவும் சக்திவாய்ந்த குண்டுகள் மட்டுமே அதை அடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது இவ்வாறு இருக்க முன்னதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது நாடு சரணடையாது என்று கூறினார். எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் அமெரிக்காவை எச்சரித்தார். சர்வதேச தலைவர்கள் தெஹ்ரான் பிரதிநிதிகளுடன் சந்திப்பு ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை பொதுமக்கள் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும் என்று உறுதியாக உத்தரவாதம் அளிக்கும்படி தெஹ்ரானை வற்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை (19) ஜெனீவாவில் தங்கள் ஈரானிய பிரதிநிதியுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் தூதரக வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால், ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தாலும், 10 மில்லியன் மக்கள் வசிக்கும் தெஹ்ரானில் வசிக்கும் சிலர் புதன்கிழமை நகரத்திற்கு வெளியே நெடுஞ்சாலைகளை மறித்து, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முயன்றனர். மத்திய கிழக்கில் குவிக்கப்படும் அமெரிக்க இராணுவப் படைகள் அண்மைய நாட்களில் அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு அதிக இராணுவப் படைகளை நகர்த்தி வருகிறது. மூன்றாவது கடற்படை அழிப்புக் கப்பல் கிழக்கு மத்தியதரைக் கடலில் நுழைந்துள்ளது. மேலும் மற்றொரு விமானம் தாங்கிக் கப்பல் குழு அரபிக் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இது ஒரு தற்காப்பு நடவடிக்கை மட்டுமே என்றும், இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அமெரிக்காவுடன் இணையும் திறனையும் இது வழங்குகிறது என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. தெஹ்ரான் தனியாக இல்லை மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த மோதலில் தெஹ்ரான் “தனியாக இல்லை” என்பதை வலியுறுத்தினார். இந்தப் போரில் ஈரான் தனியாக இல்லை. வட கொரிய இராணுவம் மிக உயர்ந்த போர் தயார்நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடினமான காலங்களில் நாங்கள் எங்கள் நண்பர்களை கைவிட மாட்டோம். நாங்கள் ஈரானை முழுமையாக ஆதரிக்கிறோம். அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அழுத்தக் கொள்கை எங்களுக்கு நன்கு தெரியும். நாங்கள் எங்கள் நண்பர்களுடன் பக்கபலமாக நிற்கிறோம் என கிம் ஜாங்-உன் தனது அதிகாரப்பூர்வ உரையில் அறிவித்தார். எவ்வாறெனினும் மத்திய கிழக்கின் நிலைமை மோசமடைந்து வருகிறது. அண்மைய தாக்குதல்களால் ஈரானில் 450 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், ஈரானிய தாக்குதல்களால் இஸ்ரேலில் 24 பேர் இறந்துள்ளதாகவும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1436216

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது - ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப் PrashahiniJune 19, 2025 இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் களமிறங்குமா என்ற கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது. அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இந்த தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சி படை உள்ளது. இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தொடர்ந்து தனது கருத்தை தெரிவித்து வந்தார். இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் களமிறங்குமா என பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். “அதை நான் செய்யலாம். செய்யாமலும் போகலாம். ஆனால், நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது. நான் அந்த கேள்விக்கு பதில் அளிப்பேன் என நீங்கள் எண்ணியிருக்க வாய்ப்பு இல்லை. ஈரானுக்கு நிறைய பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தார்கள். நீங்கள் ஏன் இரண்டு வாரத்துக்கு முன்பு இதை செய்யவில்லை என கேட்டேன். நீங்கள் அதை செய்திருக்கலாம். உங்கள் தேசம் இருந்திருக்கும் என சொன்னேன்” என சிரித்தபடி ட்ரம்ப் தெரிவித்தார். அவரது இந்த கருத்து மூலம் அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக களம் இறங்குமா? இறங்காதா? என்ற யூகத்தை உலக நாடுகளின் இடையே எழுப்பியுள்ளார் ட்ரம்ப். https://www.thinakaran.lk/2025/06/19/breaking-news/136324/நான்-என்ன-செய்வேன்-என்று/#google_vignette

செம்மணி மனிதபுதைகுழி - உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்- மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி அவசியம் என தெரிவிப்பு

1 month 1 week ago
செம்மணி மனிதபுதைகுழி - உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்- மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி அவசியம் என தெரிவிப்பு Published By: RAJEEBAN 19 JUN, 2025 | 10:39 AM செம்மணி மனித புதைகுழியில் சமீபத்தில் குழந்தைகளின் உடல்கள் உட்பட பல உடல்கள் மீட்கப்பட்டமை குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமிக்கு கடிதமொன்றை எழுதியுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இந்த புதைகுழி குறித்த விசாரணைக்கு சர்வதேச சகாக்களுடன் இணைந்து பிரிட்டன் ஆதரவளிக்கவேண்டும் மனித என தெரிவித்துள்ளார் மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி இலங்கைக்கு அவசியம் என அந்த அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு துணை செயலாளரின் பதில் மே 15 ம் திகதி கிடைத்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் அந்த பதிலில் அவர் இலங்கையின் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி மற்றும் உண்மை நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் ஆகியவை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் வலியுறுத்தும் என அவர் தெரிவித்திருந்தார். இலங்கையின் யுத்தத்தின் முடிவில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி நிலைப்பாட்டப்படவேண்டும் என்பதற்கான உங்களின் தனிப்பட்டஆதரவிற்கும் நான் நன்றியுடையவளாக உள்ளேன். இலங்கையின் வடபகுதியில் மூன்று குழந்தைகளின் உடல்களுடன் சமீபத்தில் மற்றுமொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரம்,இந்த அட்டுழியங்கள் எவ்வளவு புதியவை என்பதை அதிர்ச்சியூட்டும் நினைவுபடுத்தல்களாக காணப்படுகின்றன. 2024 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் உடல்களை தோண்டுவதற்கான போதிய வளங்கள் இலங்கையிடம் இல்லை என தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்காக சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டிருந்தது. இந்த அடிப்படையிலும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் நீதி ஆகியவற்றிற்கான பிரிட்டனின் ஆதரவின் அடிப்படையிலும் இலங்கைக்கு இந்த விடயத்தில் பிரிட்டனின் ஆதரவு குறித்த தற்போதைய அல்லது திட்டமிடப்பட்ட திட்டங்களை நீங்கள் வெளிப்படுத்தவேண்டும். இலங்கை அரசாங்கத்துடனான இரு தரப்பு ஈடாட்டங்களின் போது உங்கள் திணைக்களம் - அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் - இந்த விடயத்தை நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக தக்கவைத்துக்கொண்டால் அதற்கும் நன்றியுடையவளாகயிருப்பேன். மார்ச் மாதம் நீங்கள் தடைகளை அறிவித்தவேளை சர்வதேச அளவில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்,பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளிற்காக குரல்கொடுக்கும் தொழில்கட்சியின் நீண்டகால பாரம்பரியத்தை நீங்கள் பின்பற்றினீர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தது போன்று ,யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்தவேண்டும் என்ற எனது வேண்டுகோளை நீங்கள் கருத்தில் எடுப்பீர்கள் என கருதுகின்றேன். உயிர்பிழைத்தவர்கள்,பதிலை தேடும் குடும்பங்கள் ,இந்த குற்றங்களின் நிழலில் வளர்ந்த அடுத்த தலைமுறை நாங்கள் கடன்பட்டுள்ளோம். https://www.virakesari.lk/article/217877

வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்!

1 month 1 week ago
தமிழரசு கட்சியின் உறுப்பினர் நீக்கம் ?? adminJune 19, 2025 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தெரிவுகளின் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட பொன்னம்பலம் இராசேந்திரம் என்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் அனுப்பப்பட்ட கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், நேற்றைய தினம் புதன்கிழமை (18.06.25) மதியம் நடைபெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது கட்சியின் மிகத் தெளிவான அறிவுறுத்தலுக்கு மாறாக நீங்கள் நடுநிலைவகித்துள்ளீர்கள். ஆகையால் உடனடியாக அமுலுக்கு வரும்படியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து நீங்கள் இடை நிறுத்தப்படுகின்றீர்கள். தங்களது இந்த நடவடிக்கை சம்மந்தமான விளக்கம் ஏதும் இருப்பின் ஒரு வார காலத்திற்குள் எழுத்து மூலம் எனக்கு அறிவிக்க வேண்டும். இல்லையெனில் கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என்ற அடிப்படையிலும் அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கமாக இல்லாவிட்டாலும் கட்சியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவீர்கள் – என்றுள்ளது. https://globaltamilnews.net/2025/217021/

மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர்

1 month 1 week ago
மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர் இளைஞர்கள் குறிவைப்பு பருத்தித்துறையைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு மனைவி மற்றும் அறிமுகமானவர்களின் உதவியுடன் ஐஸ் மற்றும் கேரளக்கஞ்சா ஆகிய போதைப் பொருள்களைப் பெருமளவில் விநியோகித்து வந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறைப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் ஊழல் சோதனைப் பிரிவால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பருத்தித்துறை, கட்கோவளத்தில் வசிக்கும் 29 வயது சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து சுமார் 12 கிராம் 40 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. குறித்த இளைஞர் சமூகத்தை குறிவைத்து செயற்பட்டு போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தாரென விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். https://newuthayan.com/article/மனைவியுடன்_ஐஸ்_விற்பனை;_பருத்தித்துறையில்_சிக்கிய_நபர்

காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்!

1 month 1 week ago
காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்! adminJune 19, 2025 காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசா ஏகமனதாக தெரிவாகியுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு ஆகிய 5 தரப்பும் தலா இரண்டு ஆசனங்களையும், தமிழ் அரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளனர். அந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது, தமிழ் மக்கள் கூட்டணி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை குழு ஆகியவை கூட்டிணைந்து ,சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசாவை முன் மொழிந்தனர். வேறு பெயர்கள் முன் மொழியப்படாததால் , கோவிந்தராசா தவிசாளராக ஏக மனதாக தெரிவானர். அதனை தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவில், ஆண்டிஐயா விஜயராசா தெரிவானர். அதேவேளை , சுயேச்சை குழு , தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை தமக்கு இடையில் தவிசாளர் பதவியை 16 மாதங்கள் வீதமாக பகிர்ந்து கொண்டே ஆதரவு வழங்க உடன்பாட்டுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/217018/

வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்!

1 month 1 week ago
வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்! adminJune 19, 2025 வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 06 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 03 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் வென்றது. இந்நிலையில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் வேட்பாளராக சோமசுந்தரம் சுகிர்தனும், தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் பத்மநாதன் சாருஜனும் போட்டியிட்டனர். தவிசாளர் தெரிவை பகிரங்க வாக்களிப்பு மூலமாக தெரிவு செய்ய 24 உறுப்பினர்களும் இரகசிய வாக்களிப்புக்கு 10 உறுப்பினர்களும், நடுநிலையாக ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர். அதனை அடுத்து பகிரங்கமாக நடைபெற்ற தெரிவில் சோமசுந்தரம் சுகிர்தன் 14 வாக்குகளையும் பத்மநாதன் சாருஜன் 09 வாக்குகளையும் பெற்றதை அடுத்து சுகிர்தன் தவிசாளராக தெரிவானர். அதனை தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவில் பொன்னுத்துரை தங்கராசாவும் தெரிவானர் https://globaltamilnews.net/2025/217015/

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

1 month 1 week ago
யாராவது போட்டியை நடாத்த விரும்பினால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். ஒருவரும் போட்டியை நடாத்த விரும்பாவிடில் நான் நடத்துகிறேன்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
உண்மையில் இஸ்ரேல் ஈரானில் தாக்கியிருந்தால் அதனால் மக்கள் கதிர் வீச்சால் இறந்திருப்பர், அப்படியெதுவும் நடக்காமையால் தாக்குதல் பொய் என்கிறீர்கள்?? இந்த வீடியோக்களைப் பார்த்து விடயங்களை அரை குறையாகப் புரிந்து கொள்வதை விட, இங்கே இணைக்கப் பட்டிருக்கும் பிபிசி செய்திகளைப் பார்த்தால் விடயம் தெளிவாகும் என நினைக்கிறேன். IAEA என்ற அமைப்பு கதிர் வீச்சு ஈரானில் தாக்குதல் நடந்த இடங்களில் அதிகரித்திருக்கிறதா என கண்காணித்து வருகிறது (இதே கண்காணிப்பு உக்ரைனிலும் நடந்தது). அழிக்கப் பட்ட இடங்களில் வெளியே கதிரியக்கம் அதிகரிக்கவில்லை. கட்டிடங்களின் உள்ளே அதிகரிப்பு இருப்பதாக செய்தியில் இருக்கிறது. அணு ஆயுதம் இங்கே அழிக்கப் படவில்லை. அணு ஆயுதத்தைத் தயாரிக்க அவசியமான யுரேனியத்தை செறிவு படுத்தும் நிலையங்கள் தான் தாக்கப் பட்டிருக்கின்றன. இந்த இடங்களில் கூட 60% செறிவான யுரேனியம் பெரும் தொகையில் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிச் சுத்திகரித்த யுரேனியத்தை மலைக்குக் கீழே தான் பதுக்கியிருப்பர், ஏனெனில் அது போனால் அணுவாயுதக் கனவும் போய் விடும். எனவே, அணுவாயுதம் அழிக்கப் பட்டது, அணு வாயுதம் தயாரிக்கும் இடம் அழிக்கப் பட்டது என்ற உங்கள் புரிதல் தவறு. யுரேனியம் செறிவாக்கும் மைய நீக்க சுழலிகள் (centrifuges) என்ற உபகரணங்கள் தான் இலக்கு என்பதை வெளிப்படையாக செய்திகளில் காண்கிறோம். இதைக் காணாமல் எங்கேயோ மூலையில் இருக்கும் வீடியோவை நம்பி நீங்கள் கருத்துரைப்பது ஆச்சரியம் தான்!

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

1 month 2 weeks ago
செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள், இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட இராணுவத்தினனே சாட்சி வழங்கி இடத்தையும் அடையாளம் காட்டியுள்ளான். அதோடு அந்த உடல்களில் உடைகள் எதுவும் காணப்படவில்லை என்று அறிய முடிகிறது.

புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று பிணை வழங்கபட்டது..!

1 month 2 weeks ago
இந முறுகலை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவது யார்? எங்கள் நிலத்தில், அவர்கள் விகாரைகளை கட்டி எழுப்பும்போது புத்தர் சிலைகளை வைக்கும்போது இனமுறுகலை ஏற்படுத்த வேண்டாம் என்று யாரும் போதிப்பதில்லை. ஆனால் எங்கள் நிலத்தில் எங்களுக்கு தடைகளாய் இருப்பவற்றை அகற்றும்போது கேள்வி கேட்க்கும்போது மட்டும் பொலிஸ்நிலையங்கள் விழித்துக்கொள்கின்றன. இனமுறுகல் பற்றி பாடம் நடத்துகின்றன. பிழைகளை சுட்டிக்காட்டி தவறு எங்கே என்று சொல்ல போலீசாருக்கு முதுகெலும்பு இல்லை, அதனாலேயே இவ்வளவு முரண்பாடுகள் ஏற்பட காரணம்.

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

1 month 2 weeks ago
கிட்டத்தட்ட போர்க்காலத்தில் சொல்லப்பட்ட பொய் மூட்டைகளை சொப்பிக் பாக்கில் கொண்டு செல்கிறாரா?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
அணுக்கதிர் வீச்சால் யாராவது இறந்ததாக எங்கே நீங்கள் கேள்விப் பட்டீர்கள்? இணைப்பை இங்கே தாருங்கள், உண்மையைப் பரிசோதிக்கலாம். அணு ஆயுதங்கள் அழிக்கப் பட்டதாக யார் சொன்னார்கள்? எந்த ஊடகம்?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
ஆனால் அணுக்கதிர் வீச்சால் இறந்தவர்கள் பற்றி ஏன் தெரிவிக்கவில்லை. அப்படி ஒன்று நடந்ததா? இல்லை உலக செய்தி ஸ்தாபனங்களை கட்டுப்படுத்தும் இஸ்ரேலியர்கள் கோட்டை விட்டார்களா? ஏன் ஏன் ஏன் எப்படி அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டது என்று செய்திகள் வந்தனவே?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
இஸ்ரேலினுள் ஏற்பட்ட சேதங்கள் பற்றி பிபிசியிலே படங்களோடு போடுகிறார்களே? அயன் டோம் அதைத் தயாரித்த கம்பனியின் தரவுகளின் படி 80% - 90% வினைத்திறனானது. எனவே 100 ஏவுகணைகள் வந்தால் 20 உள்ளே விழும். ஆனால், 20<<100 என்பதால் சேதம் இஸ்ரேலுக்கு இது வரை குறைவு தான். கதிர் வீச்சினால் மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் வரவில்லை. எந்த தகவல் மூலத்தில் இந்த தகவலைப் பார்த்தீர்கள்?
Checked
Sat, 08/02/2025 - 23:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed