1 month 1 week ago
வெற்றி பெற்ற பெரியப்புவுக்கு வாழ்த்துக்கள்🙏🥰 மனுஷன் இந்த போட்டியில் தான் முதல் முறை வெற்றி பெற்று இருக்கிறார்...................சந்தோஷத்தில் மிதக்க டென்மார்க்கில் இருந்து இரண்டு விஸ்கி போத்தல அனுப்பலாம் என்று இருக்கிறேன் லொள்😁.............................
1 month 1 week ago
நிர்வாகத்தை தொடர்வு கொண்டால் அதை அவர்கள் சரி செய்வினமே கந்தப்பு அண்ண........................கடந்த 10வருடமாய் நானும் கைபேசி ஊடாக தான் எல்லாம் செய்கிறேன்..................கொம்பியூட்ர பாவிக்காம விட்டு 10வருடத்துக்கு மேல் ஆகுது........................
1 month 1 week ago
அமெரிக்கன் பெத்துப் போட்ட கள்ளக் குழந்தை தான் இஸ்ரேல் இந்த போரை ஈரான் ஆரம்பிக்க வில்லை.....................ஹமாஸ் தங்கட நாட்டை தாக்கி விட்டினம் என சொல்லி 2வருடத்துக்குள் 50ஆயிரம் பலஸ்தீன மக்களை கொன்று குவிச்ச போர் குற்றவாளி தான் நெத்தனியாகு , தென் ஆபிரிக்கா தொட்டு இன்னும் சில நாடுகள் ஜக்கிய நாட்டு சவை முன் ஆதாரத்தோடு பல உண்மைகளை போட்டு உடைத்தவை , ஆனால் அமெரிக்கனின் ஆனுவத்தால் அதெல்லாம் நீத்துப் போனது...................என்ன கோதாரிக்கு உந்த ஜக்கிய நாட்டு சபைய உருவாக்கினவங்கள் என்று எனக்கு இன்னும் விடை தெரிய வில்லை ..................அமெரிக்கா எப்பவாவது இந்த ஜக்கிய நாட்டு சவையால் தன்டிக்கப் பட்டு இருக்கா அப்படி தன்டிச்சாலும் அதை அமெரிக்கா கேட்டு நடந்து இருக்கா😛....................உலகில் அதி பயங்கரவாத நாடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்......................நூறு வருடத்துக்கு முதல் பிரிடிஷ் காரன் எப்படி இருந்தவை , இப்ப அவர்களின் நிலமைய பாருங்கோ என்ன நினையில் இருக்கினம் என்று😉.........................அமெரிக்காவின் இரட்டை வேட நாடகத்துக்கு இந்த உலகில் யாரோ ஒருதன் முற்றுப் புள்ளி வைப்பான் அமெரிக்காவின் சொல்லை மீறி செயலில் பல சம்பவங்கள் நடக்கும் இனி வரும் காலங்களில்....................... அடுத்த நாட்டு வளங்கள் மீது கொள்ளை அடிப்பதற்காக என்ன வேசமும் போடக் கூடிய நாடு தான் அமெரிக்கா , அதுக்கு நல்ல உதரானம் 2003 ஈராக்கில் அமெரிக்கன் படை கால் வைச்சது , சதாம் அணு குண்டு வைச்சு இருக்கிறார் அணு குண்டை மீட்க்க போகிறோம் என சொல்லி போரை தொடங்கின அமெரிக்கா , இதுவரை ஈராக் நாட்டின் அணுகுண்டு எங்கை என்ர கேள்விக்கு பதில் இல்லை😡....................... அமெரிக்கன் பெத்துப் போட்ட கள்ளக் குழந்தை இஸ்ரேல் , அந்த குழந்தை ஈரானால் மெதுமெதுவாய் அழிவதை கண்ணால் பார்க்க முடியுது.....................தங்கட வான் பரப்பில் ஈ காக்கா கூட பறக்க முடியாது என்று மார் தட்டி சொன்ன இஸ்ரேலில் அவர்களின் வான் பாதுகாப்பு கருவி அமெரிக்கன்ட வான்பாதுகாப்பு கருவிய தாண்டி போய் ஈரானின் குண்டுகள் வெடிக்குது என்றால் ஈரானின் மிசேல்களின் பெருமதி கூடி கொண்டே போகுது................................. இஸ்ரேல் போன கிழமை இந்த போரை தொடங்கினதில் இருந்து பல நாட்டு ஊடகங்கள் வழியாக பார்த்துட்டு தான் இருக்கிறேன்....................ஈரான் என்ர நாட்டுடன் மோத எத்தனை நாடுகள் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பின்னால் நிக்கினம்........................இத்தனை நாட்டு உதவியுடன் ஒரு சின்ன நாட்டுடன் மோதுவது உண்மையில் வெக்கக் கேடு , போரை தொடங்கினது இஸ்ரேல் , அமெரிக்கா ஜக்கிய நாட்டு சைபை தொட்டு மற்றும் சில விடையங்களில் இவர்களை மதிக்காம செயல் பட்டு இருக்கு.....................ஜனநாயகம் பற்றி பேச அமெரிக்கா தகுதி இல்லாத நாடு............................ புட்டின் கூட நேருக்கு நேர் மோத துணிவு இல்லாம தான் ஜோ பைடன் பின்னால் நின்று உக்கிரேனுக்கு ஆயுதங்களை பணங்களை அள்ளிக் கொடுத்தார்....................அமெரிக்கான்ட வீரம் ஆசியாவில் இருக்கும் சின்ன சின்ன நாடுகள் மீது தான்...........................சோமாலியாவில் அடி வேண்டி அவமான பட்ட மாதிரி ஈரானிடமும் அடி வேண்டி தங்கட நாட்டுக்கு ஓடி போகனும் என மனதார விரும்புகிறேன்................................ டிக்டாக்கில் ஒரு ஸ்டார் ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள் போல😁😛😛😛😛😛😛😛............................அப்படி ஒன்றும் இல்லை இப்ப தான் கையில் இருந்த கொடிய நோய் கட்டிய அகற்றினவை........................ஓய்வு அதிகம் தேவை , யாழை தினமும் பார்வையிடுவேன் , பிடித்த கருத்துக்கு விருப்ப புள்ளி குத்துவதோட சரி அண்ணா ..............................
1 month 1 week ago
36 லட்சம் அதுவும் இளைய தலைமுறையினர் என்பது ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களின் இரு மடங்கு. எனவே தடி பலமாக வேரூன்றி விட்டது உங்களுக்கு கொஞ்சம் அருந்த கடினமானது தான். ஆனால் அந்த தடி பற்றி தரக்குறைவாக தமிழகத்தில் எவனும் கதைக்க முடியாது என்பது தான் தடிக்கு தமிழகம் தந்திருக்கும் முதல் அங்கீகாரம். கூட்டு இல்லை என்பதால் மட்டுமே கட்டுக்காசு இழப்பு. 2026 இற்கு பின்னர் அதுக்கும் பதில் உங்களுக்கு கிடைக்கும். எனவே தடியை இன்னும் பலமாக பிடிக்க தயாராகுங்கள்.
1 month 1 week ago
ஹாமெனி , 12ம் கிளை ஷியா இஸ்லாம் இல் ஒரு (மத) தலைவர் (Marja என்ற (அரபி) சொல்லால் இந்த தலைவர்களை குறித்து அழைப்பது. அதியுயர் மத தலைவர் என்பது கருத்து) இப்படி பல மத தலைவர்கள் (Marja) 12 ம் கிளை ஷியா இஸ்லாமில் இருக்கிறார்கள். இவர்கள் ஒவொருவரின் இஸ்லாம் கருத்துருவாக்கமும் ஒன்றில் இருந்து ஒன்று சிறியது தொடக்கம் மிகப்பெரிய வேறுபாடுகளை கொண்டது. இந்த Marja க்கள் இராக்கில் இருக்கிறார்கள், சிரியாவிலும் இருக்க சந்தர்ப்பம் இருக்கிறது. காஸ்மீரில் கூட முன்பு இருந்து இருக்கலாம், ஏனெனில் காஷ்மீர் ஷியா இஸ்லாமின் செல்வாக்கு பரவி, ஆழமாக இருந்தது, இப்பொது அந்த அளவு இல்லை. சியா இஸ்லம்மில் உள்ளவர்கள் தங்களுக்கு ஒத்துவரும் தலைவரை ( Marja) பின்பற்றலாம். ஆனால் ஹாமெனி யை மிகப்பெரும்பான்மை ஷியா பின்பற்றுவதன் காரணம், ஒப்பிஈட்டளவில் நவீனத்துவதையும், தாராளப்போக்கையும் ஹாமெனி போதிப்பதால்.
1 month 1 week ago
அந்த தடியை பத்துவருடங்களாக யூஸ் பண்ணியும் கட்டுப்பணம் கூட எடுக்க முடியவில்லை. அப்படி ஒரு இடத்திலாவது கட்டுப்பணம் கிடைக்கும் போது சீமான் என்ற தடியை யூஸ் பண்ணவேண்டிய காலம் வந்துவிடும். ஆனால் அந்த தடி இத்துப்போன தடியாதலால் தற்குறித்தம்பிகள்ளே அந்த தடியை தூக்கி வீதிவிடுவர். 😂😂😂
1 month 1 week ago
யாரப்பா இந்த ஐலண்ட் என்கிற பக்திமான். அதீத சிங்கள தேசியவுணர்வில் ஊறிக்கிடக்கிறார் போலத் தெரிகிறது.
1 month 1 week ago
1 month 1 week ago
ம் . ........ காலம் கலிகாலம் ........ ! 😂
1 month 1 week ago
இனி வருமா sudumanal காஸா படுகொலைக்குப் பின் உலகம் பூராவும் இஸ்ரேல் மீதான மக்களின் வெறுப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. காஸா இனப்படுகொலையை எதிர்த்து பல பேரணிகள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரான்ஸ், பிரித்தானியா, இப்போ ஜேர்மனி என ஆட்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஏதோ முனகுவதற்கு இந்த எதிர்ப்புப் போராட்டங்கள்தான் காரணம். அது அவர்களின் பிழைப்புவாதமாக இருக்கலாம். ஆனால் இந்த விடயத்தில் நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் நாடுகள் போற்றத் தக்கவை. அவை ஏற்கனவே பலஸ்தீனத்துக்காக குரல் கொடுத்து வருபவை. ஐரோப்பிய ஒன்றியத்தில் அயர்லாந்து காஸா படுகொலையை எதிர்த்தும் சியோனிச இஸ்ரேலை கண்டித்தும் அரசியல் ரீதியாக கிழித்து தொங்கவிட்டுக் கொண்டே இருப்பவர்கள். ரசியாவுக்கு விதித்த 27000 பொருளாதாரத்தடையுடன் இன்னும் இன்னுமாய் 17, 19 என கொசுறு கொசுறாய் கூட்டுகிற இந்த ஒன்றியம் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தடையைத் தன்னும் ஏவியதில்லை. மாறாக இஸ்ரேல் தன்னை பாதுகாக்கும் உரிமை உடையது என காஸா மக்களின் புதைகுழிமேல் நின்று சங்கு ஊதுவது இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்போ இஸ்ரேல் ஈரான் மீது வலிந்து தொடுத்த தாக்குதலின்போது ஈரான் தன்னை பாதுகாக்கும் உரிமை கொண்டது என்பதை சொல்ல அவர்கள் தயாராக இல்லை. மாறாக ஏதோ ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கிறதாக மாற்றி மொழிபெயர்த்து, அதனடிப்படையில் இஸ்ரேல் தன்னை பாதுகாக்கும் உரிமை உடையது என அதே சங்கை மீண்டும் ஊதுகிறார்கள். இதுதான் அவர்களின் மேக் அப் ஜனநாயகம். ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ், ஹவுதி அமைப்புகளை சுட்டிக் காட்டி ஈரான் பயங்கரவாதிகளை வளர்ப்பதாகவும், மத அடிப்படைவாதிகளை வளர்ப்பதாகவும் சொல்லும் மேற்குலகமும் அதன் இரைச்சலுக்குள் அகப்பட்டவர்களும் ஒன்றை மறைக்கிறார்கள். அந்த மூன்று அமைப்புகளும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இருப்பவர்கள். மத அடிப்படைவாதிகளல்ல. யார் மத அடிப்படைவாத அமைப்பினராக வெறியாட்டம் ஆடியவர்கள்/ஆடுபவர்கள் என்ற உண்மையை ஏன் மறைக்கிறார்கள். அல் கைடா, ஐஎஸ்ஐஎஸ், பொக்கோ கராம் போன்ற மத அடிப்படைவாதிகள்/பயங்கரவாதிகளை உருவாக்கியவர்கள் அமெரிக்காவும் பிரித்தானியாவும்தான் என்பது வரலாறு. இவர்களே ஏகாதிபத்தியத்துக்கு விளக்கு பிடித்தவர்கள். பிறகு இந்த வளர்த்த கடாவில் ஒரு பட்டி ஆடுகள் இந்த தோற்றுநர்களின் மார்பில் பாய்ந்த கிளை வரலாறும் உண்டு. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மண்ணின் விளைபொருள் ஹமாஸ். இஸ்ரேலின் லெபனான் மீதான ஆக்கிரமிப்பின் விளைபொருள் ஹிஸ்புல்லாஹ். அவர்களது செயற்பாட்டில் விமர்சனங்கள் இருக்கலாம். இருக்கும். அது அவர்களை பயங்கரவாகிகள் எனவோ மத அடிப்படைவாதிகள் எனவோ அவதூறு சொல்ல போதுமானதல்ல. 1993 இல் ஐநா சபையால் 160 நாடுகளுக்கு மேல் வாக்களித்த two state (பலஸ்தீனம், இஸ்ரேல்) தீர்வை இஸ்ரேல் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக பலஸ்தீன மண்ணை மட்டுமன்றி சிரியா, லெபனான் நாடுகளின் எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு செய்து அகண்ட இஸ்ரேல் என்ற one state தீர்வினை சாதிக்க வெறியாட்டம் ஆடிவருகிறது. ஈரானும் ஹமாஸ் உம் மறுபக்கத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிக்க தயாராக இல்லை. இந்தப் போக்கை இரு தரப்பும் தொடர்ந்தால் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமே இல்லை. பெரியண்ணனின் நிழலில் மத்திய கிழக்கின் சண்டியனாக வெறியாட்டம் ஆடிய இஸ்ரேலின் பிம்பத்தை எவரும் எதிர்பாராத விதத்தில் ஈரான் அடித்து நொருக்கியிருக்கிறது. இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்கு எதிரான உலக மக்களின் குரல் பல நாடுகளின் ஆட்சியாளர்களால் உதாசீனம் செய்யப்பட்ட தொடர் கோபத்திலிருந்த மக்கள் இஸ்ரேலின் மீதான ஈரானின் உச்சந்தலை அடியை கொண்டாடுகிறார்கள். இது நசுக்கப்பட்ட அல்லது அரசுகளால் செவி மடுக்கப்படாத தமது மனிதாபிமானம் சார் குரலினதும் மனித அறத்தினதும் தோல்வியிலிருந்து எழுந்திருக்கிற உளவியல். ஈரான் இந்த ஆதரவினதும் தமது அதி தாக்குதல் பலத்தினதும் நியாயமான திமிருடன் two state தீர்வை முன்வைத்து மேசைக்கு வர வேண்டும். உலக நாடுகள் ஐநா இனால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட two state தீர்வின் அடிப்படையில் பேச இஸ்ரேலை மேசைக்கு இழுத்து வர வேண்டும். இல்லையேல் ஈரானின் தாக்குதல் வெற்றிப் படியில் ஏறப் போவதில்லை. இந்த சந்தர்ப்பம் இனி வருமா தெரியாது. இரு நாடுகளும் தரைப்படை கொண்டு மோத நிலத் தொடர்பு இல்லை. எனவே இராணுவ ரீதியாக எவரும் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. மூலைமுடுக்கெல்லாம் (சுமார் 750) இராணுவத் தளங்களையும் ஈரானைச் சுற்றி மத்தியகிழக்கு நாடுகளில் அடிவருடிகளையும் கொண்டுள்ள பெரியண்ணன் புகுந்தால் எல்லாம் நாசமாகும். அண்ணனுக்கு நிலத் தொடர்பு எதுவும் தேவையில்லை என்பதை கவனம் கொள்ள வேண்டும். இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரல் வழி அண்ணன் ஈராக்கினுள் உள்ளட்டதைப் போல, ஈரான் அணுகுண்டுக்கு திரி வைப்பதுதான் பாக்கி என சொல்லி உள்ளட நேரமாகாது. எனவே ஈரான் காலத்தைக் கைப்பற்ற வேண்டும். பொருளாதார வீழ்ச்சியும், 2027 இல் சீனாமீது போர் தொடுப்பதற்கான தயாரிப்புகள் காய்நகர்த்தல்கள் எனவும் சிக்குப்பட்டு நிற்கும் அமெரிக்கா நெத்தன்யாகுவின் இந்தப் போருக்குள் உள்ளடுமா என்ற சந்தேகத்தையும் சொல்லி வைக்க வேண்டியிருக்கிறது. அதேநேரம் இஸ்ரேலின் அழிவை அது ஒருபோதுமே சகித்துக் கொள்ளாது என்பதால் ஈரானின் இராஜதந்திர நகர்வு அவசியமானது. சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்றெல்லாம் ஈரானின் தாக்குதலைக் காட்டி உசுப்பேத்தும் கதைகள் ஒன்றுக்குமே உதவாது!. ravindran.pa https://sudumanal.com/2025/06/19/இனி-வருமா/#more-7187
1 month 1 week ago
ஓம். நன்றி நன்றி. நன்றி. உண்மைதான். மிருகவதைக்கு கூப்பாடு போடும் குரல்கள் எங்கே? நன்றி. நன்றி. நன்றி. அதிகார ஆட்டங்களால் உயிர்கள் பலியாகிக்கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ளமுடியவில்லையே
1 month 1 week ago
1 month 1 week ago
வாகன இறக்குமதி மூலம் ரூ.165 பில்லியன் வருவாய்! அரசாங்கம் வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இதுவரை வாகன இறக்குமதிகள் மூலம் மாத்திரம் சுமார் ரூ.165 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம், 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கை திணைக்களம் தாண்டிச் செல்லும் பாதையில் இருப்பதாகக் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருகோட கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை சுங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட வருவாய் இலக்கு ரூ. 2,115 பில்லியன் ஆகும். 2024 ஆம் ஆண்டில், எங்கள் இலக்கு ரூ. 1,533 பில்லியனாக இருந்தது. அதை நாங்கள் ரூ. 1,535 பில்லியனை ஈட்டுவதன் மூலம் தாண்டிவிட்டோம். இந்த ஆண்டு ஜூன் மாத நடுப்பகுதியில், நாங்கள் ஏற்கனவே ரூ. 900 பில்லியனை வருவாய் ஈட்டியுள்ளோம் என்றும் அவர் கூறினார். 2025 பெப்ரவரி 1 முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்தது. அதன் பின்னர், சுமார் 14,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது சுங்க வருவாயில் சுமார் ரூ. 165 பில்லியனை பங்களிக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 450 பில்லியனை வருவாய் ஈட்டும் என்று திணைக்களம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். ஈரான்-இஸ்ரேல் மோதலின் தாக்கம் இலங்கைக்குள் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை கப்பல் போக்குவரத்து தாமதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார். https://athavannews.com/2025/1436397
1 month 1 week ago
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளால் 2,000 பேர் உயிரிழப்பு! 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ” நாட்டில் இடம்பெறும் பெரும்பாலான வீதி விபத்துகள், தகுதியற்ற வாகனங்கள் மற்றும் ஒழுங்கற்ற சாரதிகளினாலேயே ஏற்படுவதாகத் தெரிவித்த அவர் ” 2025 ஜனவரி 1 முதல் ஜூன் 15 வரையான 6 மாதங்களில், உயிரிழப்புகளை ஏற்படுத்திய 1,133 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன எனவும், இதில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இது மிகவும் பேரழிவு தரும் சூழ்நிலையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை ” எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் வாகனங்களில் பொருத்தப்பட்ட தேவையற்ற உதிரி பாகங்கள் கட்டாயமாக அகற்றப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2025/1436370
1 month 1 week ago
85 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்! சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 85 சீனப் பிரஜைகள் இன்று (ஜூன் 20) காலை இலங்கையிலிருந்து சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நபர்கள் நாட்டில் வசிக்கும் போது உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் காவலில் வைக்கப்பட்டனர். உள்ளூர் நீதிமன்றங்களால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் வெலிசரவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதுடன், நாடு கடத்தலுக்காகவும் காத்திருந்தனர். இந்த நிலையில், ஐந்து பேருந்துகளில் கடும் பாதுகாப்பின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழுவினர் இன்று காலை நாடு கடத்தப்பட்டனர். https://athavannews.com/2025/1436394
1 month 1 week ago
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்! கடந்த இரண்டு வாரங்களில் கட்டாரில் உள்ள ஒரு முக்கிய அமெரிக்க விமானப்படை தளத்தில் கிட்டத்தட்ட 40 அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயுள்ளன. இது ஈரானிய தாக்குதல்களிலிருந்து சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரு அமெரிக்காவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தெரிகிறது என்று செய்தி நிறுவனமான AFP தெரிவித்துள்ளது. ஜூன் 5 முதல் ஜூன் 19 வரை, பிளானட் லேப்ஸ் பிபிசியின் செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஒரு காலத்தில் நிரம்பியிருந்த அல் உதெய்ட் விமானத் தளத்தில் (அமெரிக்காவின் மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ நிறுவல்) பெரும்பாலும் விமானங்களால் காலியாக இருப்பதைக் காட்டுகிறது. ஜூன் 5 அன்று, C-130 ஹெர்குலஸ் போக்குவரத்து விமானங்கள் மற்றும் மேம்பட்ட உளவு விமானங்கள் உட்பட சுமார் 40 விமானங்கள் வெற்றுப் பார்வையில் நிறுத்தப்பட்டன. எனினும், ஜூன் 19 ஆம் திகதிக்குள் அவற்றில் மூன்று மட்டுமே எஞ்சியியுள்ளதை புகைப்படம் காட்டுகின்றது. இதற்கிடையில், கட்டாரில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை (19) மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தது. பொது விமான கண்காணிப்பு தரவுகளின் AFP இன் பகுப்பாய்வு, ஜூன் 15 முதல் 18 வரை, KC-46A பெகாசஸ் மற்றும் KC-135 ஸ்ட்ராடோடேங்கர் விமானங்கள் உட்பட குறைந்தது 27 இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு பறந்தன என்பதைக் காட்டுகிறது. புதன்கிழமை பிற்பகுதியில், அந்த விமானங்களில் 25 விமானங்கள் இன்னும் ஐரோப்பாவில் இருந்தன, இரண்டு மட்டுமே அமெரிக்காவிற்குத் திரும்பியுள்ளன. இந்த எரிபொருள் நிரப்பும் விமானங்கள் நீண்ட தூர விமான நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் அமெரிக்கா நீட்டிக்கப்பட்ட பயணங்களுக்குத் தயாராகி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் கூறுகின்றது. அமெரிக்க படைகள் உஷார் நிலையில் மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்கப் படைகள் உஷார் நிலையில் உள்ளன. மேலும், ஈரானிய பழிவாங்கலுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக இராணுவக் குடும்பங்கள் தாமாக முன்வந்து தளங்களை விட்டு வெளியேற விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதி முழுவதும் சுமார் 40,000 அமெரிக்க படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது வழக்கமாக 30,000 ஆக இருந்தது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான முந்தைய மோதல்களின் போதும், செங்கடலில் வணிக மற்றும் இராணுவக் கப்பல்கள் மீது ஹவுத்திகள் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியதன் போதும் ஒக்டோபரில் அந்த எண்ணிக்கை 43,000 ஆக உயர்ந்தது. மேலதிக படை நகர்வுகள் குறித்து பென்டகன் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஈரானுடனான நிலைமை எவ்வாறு உருவாகிறது என்பதைப் பொறுத்து அமெரிக்கப் பணியாளர்கள் விரைவான மாற்றங்களுக்குத் தயாராக இருப்பதாக வலியுறுத்தியது. https://athavannews.com/2025/1436385
1 month 1 week ago
ஆடு நனைகின்றது என்று ஓநாய் கவலைப்படுவது நடைமுறையில் உள்ளது தான். ஆனால் சீமான் என்றவுடன் பிரபாகரன் என்ற தடியையும் நீங்கள் தூக்குவது தான் யாழில் புரிந்து கொள்ள முடிகிறது.
1 month 1 week ago
கிளிநொச்சி நகரினை அபிவிருத்தி செய்வதற்கு இராணுவத்தினரிடம் உள்ள காணிகளை, கட்டடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்; கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை 20 JUN, 2025 | 09:56 AM (எம்.நியூட்டன்) கிளிநொச்சி நகரினை அபிவிருத்தி செய்வதற்கு இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள காணிகள் கட்டடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேளமாலிகிதன் கோரிக்கை விடுத்துள்ளார். கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக பதயை பொறுபேற்றுக்கொண்ட தவிசாளர் வேளமாலிகிதன் தலைமையிலான உப தவிசாளர் உறுப்பினர்கள் வியாழக்கிழமை (19) வடக்குமாகாண ஆளுநரை யாழ்ப்பாண அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு தொடர்பில் தவிசாளர் தெரிவிக்கையில், கரைச்சி பிரதேச சபையானது கிளிநொச்சி நகரத்தை கொண்ட பிரதேசமாக இருப்பதால் அதனை உள்ளடக்கிய வகையில் பல்வேறு அபிவிருத்திகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக கிளிநெச்சி சுற்றுவட்ட பாதை புனரமைக்கப்படவேண்டும். குறித்த காணி பகுதி இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளது இதனை விடுவித்து பாடசாலை மாணவர்களுக்கான பாதையை சீர்செய்ய வேண்டும். கிளிநொச்சி பொது நூலக கட்டுமானங்கள் முடிவுறுத்தப்படவேண்டும். இதற்கான மேலதிக நிதி தேடல் மற்றுப் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள கட்டடங்களை விடுவித்தல் தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடியதுடன் எமது பிரதேச சபையில் ஆளனிகள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. அனுமதிக்கப்பட்ட ஆளனிக்கு குறைவானவர்களே கடமையில் உள்ளார்கள் குறிப்பாக 138 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளனியாக இருந்தும் தற்போது 78 பேரே கடமையில் இருக்கின்றார்கள். இவை தொடர்பிலும் மேலும் கடந்த காலத்தில் 15 வீதிகள் அமைப்பதற்கு அனுமதி கிடைத்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு கிறவல்கள் போட்டு நிறைவுசெய்த நிலையில் அவை முழுமைப்படுத்தபடாத நிலையில் அவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வீதி புனரமைப்பிற்கேன புதிதாக 15 வீதிகளுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இவை தொடர்பில் ஏற்கனவே செப்பனிடப்பட்ட வேலைகளை செய்து முடிப்பதற்கான அனுமதி மற்றும் அதன் சாதக பாதக நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். இதனை விரிவாக கேட்டறிந்த வடக்கு மாகாண ஆளுநர் உரிய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு சாதகமான விடயங்களை விரைவுபடுத்துவோம் என்றார். https://www.virakesari.lk/article/217961
1 month 1 week ago
உகந்தையில் இருந்து கதிர்காம பாதயாத்திரை: காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு! Published By: DIGITAL DESK 2 20 JUN, 2025 | 10:33 AM ஜூலை 26ஆம் திகதி நடைபெறவுள்ள கதிர்காம முருகன் ஆலயத்தின் கொடியேற்ற விழாவை முன்னிட்டு, பக்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை காட்டுப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு பயணத்தை ஆரம்பித்துள்ளனர். பக்தர்களுக்காக அமைந்துள்ள லகுகலை – உகந்தை வன பாதையின் கதவு, இன்றையதினம் காலை 6.00 மணியளவில் உகந்தை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிற்குப் பிறகு திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். “ஆரோஹரா” கோஷங்களுடன் பக்தர்கள் தங்களது காட்டுப்பாதை பயணத்தை இன்று தொடங்கினர். கதிர்காம திருவிழா ஜூலை 26 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, ஜூலை 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. இதேவேளை, இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 2025 ஜூலை 4ஆம் திகதி முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217969
1 month 1 week ago
தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது விசாரணை General20 June 2025 தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கிய இரண்டு தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால், இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக சம்பாதித்ததாக நம்பப்படும் பணத்தைப் பயன்படுத்தி பல அரசியல்வாதிகள் சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், பாதுகாப்புத்துறையின் முன்னாள் தலைமையதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/407729/investigation-against-28-people-including-tamil-politicians
Checked
Sun, 08/03/2025 - 15:02
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed