புதிய பதிவுகள்2

மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது - இணைத்தலைமை நாடுகள்

1 month 2 weeks ago

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
தவறான கருத்தினை பதிந்து விட்டேன் கீரோசீமாவில் வீசப்பட்ட அணுகுண்டு 15 கிலோ 350000 மக்களை சனத்தொகை கொண்ட நகரில் இக்குண்டு வீசப்பட்ட போது 200000 இற்கும் அதிகமான உயிரழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். நாகசாகாவில் வீசப்பட்ட அணுகுண்டு புளுட்டோனியம் வகையினை சேர்ந்த குண்டு பையந்தான் 64 கிலோ எடை கொண்டது 240000 சனத்தொகை கொண்ட இந்த நகரத்தில் 140000 இற்கும் அதிகமான உயிரழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இராணுவ மற்றும் அரச உயர்பீடங்கள் இருந்த போதும் இந்த இரு நகரங்களும் தேர்வு செய்யப்பட்டமைக்கான காரணமாக கூறப்படுவதற்கான காரணம் குறித்த ஆண்டில் இரண்டு நாளில் டோக்கியோவில் நடத்தப்பட்ட எரிகுண்டுத்தாக்குதலில் டோக்கியோ பெரும் சேதத்திற்குள்ளாகி இருந்தது அத்துடன் 100000 மக்களும் கொல்லப்பட்டிருந்தனர், இந்த நிலையில் ஏற்கனவே பாதிப்பில்லாத நகரில் இரு வேறுபட்ட இரக குண்டுகளை சோதனை முயற்சியாக இந்த அணுகுண்டு தாக்குதல் 3 நாள்கள் இடைவெளியில் நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனை முயற்சியின் படி பார்த்தால் யுரேனிய அணுகுண்டு அதிக அழிவு ஏற்படுத்தும் என கருதுகிறேன்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
உண்மை எனவே கூறப்படுகிறது, IAEA கருத்தின்படி ஈரானிடம் கிட்டத்தட்ட 400 கிலோ 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது இதனடிப்படையில் சில மாதங்களுக்குள்ளாகவே அணுவாயுதத்தினை தயாரிக்க முடியும் (ஈரானிடம் அதற்கான வசதிகள் மற்றும் தொழில்னுட்பம் இருந்தால்) என கருதுகிறேன். இது கீரோசீமாவில் வீசப்பட்ட குட்டிப்பையனை போன்ற 6 - 7 அணுகுண்டுகளை தயாரிக்கலாம் என கருதுகிறேன்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
ஈரான் மேல் அணுஆயுத தாக்குதல் நடைபெறலாம் என பரவலாக கூறுகிறார்கள், ஆனால் அது ஈரானின் எண்ணெய் வளத்தினை பாதிக்கும் என்பதால் அணுவாயுத தாக்குதல் நடத்தப்படுமா என்பதில் சந்தேகமாகவே உள்ளது. அணு ஆயுதத்தினை எடுத்து சென்று தாக்ககூடிய வல்லமை கொண்ட ஒரு கலமாக இதனை கூறுகிறார்கள்.

நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

1 month 2 weeks ago
18 JUN, 2025 | 09:29 AM நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வியாழக்கிழமை (26) தொடங்கி அடுத்த மாதம் வெள்ளிக்கிழமை (11) ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டடுள்ளது. மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்கவும் என்றார். இக் கலந்துரையாடலில் பின்வரும் ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டன நயினாதீவில் மூழ்கிய கடற்பாதையினால் ஏற்பட்டுள்ள கடற் போக்குவரத்துக்கு இடையூறை தவிர்ப்பதற்காக ஒரு பகுதியை கடற்படையின் ஒத்துழைப்புடன் அகற்றுதல் குடிநீர் தேவைப்பாடுகள் ; ஆலயத்திற்குவரும் பக்தர்கள், அமுதசுரபி மண்டபம் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கான தேவையான அளவு குடிநீர்களை சீராக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வழங்குதல் பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் ; அதாவது சப்பறத் திருவிழா வரை 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும், சப்பறம், தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவன உற்சவங்கள் வரை மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்தல். பக்த்தர்கள் அணிந்துவரும் நகைகளுக்கு அவர்களே பொறுப்பு என அறக்காவலர் சபையால் முன்கூட்டியே அறிவித்தல் வழங்குதல். ஆலயத்திற்கு அருகிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை யின் வீதியினை நிரந்திமாக புனரமைப்பதற்கு முன்பாக தற்காலிகமாக சீர் செய்தல். முதல் தடவையாக தீவகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாரணர்களின் சேவைகள் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை இலங்கை போக்குவரத்துச் சபையூடாக மேற்கொள்தல். திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை காலை 5.30 மணிக்கு ஆரம்பமாதல் மற்றும் விசேட திருவிழாவான சப்பறம், தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களில் காலை 4.30 மணியிலிருந்து ஆரம்பமாகும் ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கும் சேவை இடம் பெறவும் ஒழுங்குப்படுத்தல். குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபாய் அறவிடுதல். அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல். திருவிழா காலங்களில் நயினாதீவு கிராமங்களில் திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடமாடும் சேவையினை ஈடுபடுத்தல். யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையில் அங்கு கடமையாற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தல். குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுத்தல். ஆலயத்திற்கு முன்பாகவுள்ள கடைகளை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வேறு பொருத்தமான இடத்தில் மாற்றுதல். நயினாதீவுக்கு 24.06.2025 ஆம் திகதி முதல் 12.07.2025 ஆம் திகதி வரை கட்டடப்பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது முற்றாக தடைசெய்வதல். தொடர்ந்து எதிர்காலத்தில் கட்டடப் பொருட்களை நயினாதீவு வங்களாவடி துறைமுகத்தின் ஊடாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள ம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைய, படகுச் சங்கம், ஆலய அறக்காவலர் சபையினர் மற்றும் பொது அமைப்புகள் ஆய்வு செய்து இறுதி தீர்மானம் எடுத்தல். நயினாதீவில் மதுபான விற்பனையினை மதுவரித்திணைக்களம் நடமாடும் சேவையூடாக கண்காணிப்பது எனவும், விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கைகளை எடுத்தல். பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்தல். அமுதசுரபி அன்னதான சபையினால் மதிய உணவு இரவு உணவு வழங்குதல். மேலும், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் பரமலிங்கம், வேலணை பிரதேச செயலாளர் சிவகரன், சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/217773

நோயாளிகளுக்கு 30 மில்லியன் ரூபா நிதி இழப்பு : கைதுசெய்யப்பட்ட பெண் வைத்திய நிபுணருக்கு விளக்கமறியல்

1 month 2 weeks ago
18 JUN, 2025 | 09:23 AM அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரின் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் பணியாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட வைத்தியர் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பிரபல நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன ஆவார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்படி, வைத்தியர் மகேஷி விஜேரத்னவும் மற்றைய நபரும் சில மருந்து வகைகளை தமது தனியார் மருத்துவ நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு ரூபா 30 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217771

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
காமனெயி, அணுசக்தி திட்டம்: இரானில் இஸ்ரேலின் உண்மையான இலக்கு எது? கட்டுரை தகவல் எழுதியவர், லைஸ் டூசெ பதவி, தலைமை சர்வதேச செய்தியாளர் 18 ஜூன் 2025, 01:55 GMT புதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர் வெள்ளியன்று இரான் மீது எதிர்பாராத வகையில் தாக்குதல்களை நடத்திய பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடியாக இரானிய மக்களுக்கு உரையாற்றினார். ஆங்கிலத்தில் பேசிய அவர், "கொடிய மற்றும் அடக்குமுறை ஆட்சிக்கு" எதிராக நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்தார். இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள், "நீங்கள் சுதந்திரத்தை அடைவதற்கான பாதையை தெளிவுபடுத்தியுள்ளது" என கூறியுள்ளார். தற்போது இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்து, இலக்குகளும் பரவலாகி வரும் நிலையில், இஸ்ரேலின் உண்மையான இலக்கு தான் என்ன என பலரும் கேட்கின்றனர். இவை, முதல் தாக்குதல்கள் நடந்த வெள்ளியன்று நெதன்யாகு கூறியதைப் போல, "இரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுற்றுதல்களை" முடிவுக்குக் கொண்டு வருவது மட்டும் தானா? பொருளாதார தடைகளை நீக்குவதற்கு மாற்றாக, இரானின் அணுசக்தி திறன்களை கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வருவதும் அவரது இலக்கில் உண்டா? அல்லது சுதந்திரத்துக்கான பாதையை தெளிவுபடுத்தியதாக இரானிய மக்களிடம் கூறிய செய்தி, இரானில் மதகுரு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் பெரிய நோக்கமும் அதில் உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது நெதன்யாகுவின் திட்டங்களை அறிந்தவர்கள் யார்? இஸ்ரேலில் நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமரின் அரசியல் வாழ்க்கை, இரானிய இஸ்லாமியக் குடியரசால் வரப்போகும் ஆபத்துகளை உலகுக்கு எச்சரிக்கும் அவரின் தனிப்பட்ட இலக்கால் உந்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அவர் காட்டிய குண்டுகள் அடங்கிய பெட்டியில் தொடங்கி, கடந்த 20 மாதங்களாக எரிந்துக் கொண்டிருக்கும் பிராந்திய போரால் ஐ.நாவுக்கு செல்லாமல் தவிர்த்தது வரை இரான் தான் அனைத்தையும் விட மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது தான் அவரின் இலக்காக உள்ளது. கடந்த சில வருடங்களில் பல முறை இரானின் அணுசக்தி தளங்கள் மீது ராணுவ தாக்குதல்களுக்கு நெதன்யாகு உத்தரவிடாமல் அமெரிக்க அதிபர்களும், அவரின் சொந்த தளபதிகளுமே தடுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் அனுமதி வழங்கவில்லை எனக் கூறுகிறார். ஆனால் அத்தகைய ஒரு சிறு சமிக்ஞை கூட போதுமானதாக இருக்கும். "தற்போது அவர் மோதலை தொடங்கிவிட்டதால், அதில் முழுவதுமாக இறங்கிவிடுவார்" என நெதன்யாகுவின் திட்டத்தை ஒரு மேற்கத்திய அதிகாரி விவரித்தார். இஸ்ரேலின் முதன்மையான நோக்கம் இரானின் அணுசக்தி திட்டத்தை முடக்க வேண்டும் என்பது தான் என்கிற பார்வையையும் அவர் குறிப்பிட்டு காட்டுகிறார். இந்த முடிவு பல்வேறு நாடுகளாலும், சர்வதேச அணு சக்தி முகமையாலும் கண்டிக்கப்பட்டுள்ளது. அதன் இயக்குநர் ஜெனரல், "எந்தச் சூழலிலும் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்படக் கூடாது என்பதை நான் பலமுறை கூறியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டங்களின் கீழ் இது சட்டவிரோதமானது என வாதிடும் சட்ட வல்லுநர்களாலும் இது கண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பலரும் இஸ்ரேல் பிரதமர் அவரின் ஆலோசகர்கள் மற்றும் கூட்டாளிகள் பின் தொடரும் அதே இலக்குகளைத் தான் கொண்டுள்ளாரா எனக் கேட்கின்றனர். பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலுக்கு தான் ஒப்புதல் வழங்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். "நெதன்யாகு தனிப்பட்ட முறையில் ஆட்சி மாற்றத்தின் மீது இலக்கு வைத்துள்ள நிலையில், இஸ்ரேலின் அரசியல் மற்றும் ராணுவ கட்டமைப்பு இரானின் அணுசக்தி திட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதிலே குறியாக இருக்கின்றது" என்கிறார் சாத்தம் ஹவுஸ் ஆய்வு நிறுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா திட்டத்தின் இயக்குநரான முனைவர் சனம் வகில். இரண்டாவது இலக்கு கடினமானதாக இருக்கலாம், ஆனால் எட்டக்கூடியது தான் என்று கூறும் அவர், "முதல் இலக்கு, இத்தகைய குறுகிய மற்றும் தீவிரமான மோதலில் எட்டுவது கடினம்" என்றார். இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பது தான் நோக்கமா? இஸ்ரேலின் நடவடிக்கைகளை, தனது இருப்புக்கான அச்சுறுத்தல்களை அழிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற தோற்றத்தை வழங்க நெதன்யாகு முயல்கிறார். இரானின் பதில் தாக்குதல்கள், அணு குண்டு தயாரிப்பதற்கான கடைசிப்படி எனப் பிரகடனப்படுத்துகிறார் நெதன்யாகு. இரான், அணு ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்கிற இவரின் பிரகடனத்தை மேற்கத்திய கூட்டாளிகளும் வழிமொழிகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் நெதன்யாகுவின் அவசரமும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. அணு குண்டு தயாரிக்கும் திட்டம் தன்னிடம் இல்லை என இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநரான துள்சி கப்பார்ட், 'இரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை' என்பதை அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன எனத் தெரிவித்திருந்தார். சர்வதேச அணுசக்தி முகமையும் (ஐஏஇஏ) அதனுடைய காலாண்டு அறிக்கையிலும் இரான் 60% தூய்மை கொண்ட யுரேனித்தை சேகரித்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது. இது 9 அணு குண்டுகளை தயாரிப்பதற்குத் தேவையான 90% தூய்மை வாய்ந்த ஆயுத ரகத்தை விட தொழில்நுட்ப ரீதியில் சற்று குறைவாகவே உள்ளது. முதல் சில நாட்களில் நடான்ஸ், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவ் என்கிற இரானின் 3 முக்கிய நிலைகள் குறிவைக்கப்பட்டுள்ளன. நடான்ஸில் விமான எரிபொருள் செறிவூட்டல் ஆலை அழிக்கப்பட்டது என ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இஸ்ஃபஹானில் உள்ள நான்கு "முக்கியமான கட்டடங்களும்" சேதமடைந்துள்ளதாக ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இரானுக்கு ஏற்பட்ட சேதம் "மிகப்பெரியது" என இஸ்ரேல் கூறும் நிலையில், அவை மிகவும் குறைவானவை என இரான் தெரிவித்துள்ளது. தற்போது வரை 9 அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தளபதிகளைக் கொன்றதன் மூலம் இரானின் "அறிவு ஆதாரங்களை" இஸ்ரேல் தாக்குகிறது. ராணுவ நிலைகள், ஏவுகணை ஏவும் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய இஸ்ரேலின் இலக்குகள் தற்போது பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வளங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இரானும் தனது தாக்குதல் இலக்குகளை விஸ்தரித்து வருகிறது. இதனால், இருநாடுகளிலும் பொது மக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES/ GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் மிகப்பெரிய மற்றும் பாதுகாக்கப்பட்ட இடமான ஃபோர்டோவ் ஆனால், இரானின் அணுசக்தி திட்டத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமென்றால், இரானின் மிகப்பெரிய மற்றும் பாதுகாக்கப்பட்ட இடமான ஃபோர்டோவுக்கு இஸ்ரேல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும். ஒரு மலைக்கு கீழே பாதாளத்தில் அமைந்துள்ள வளாகத்தில், இரான் அணுஆயுதம் தயாரிப்பதற்கு நெருக்கமான, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தேக்கி வைத்திருப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர். இஸ்ரேலின் தற்போதைய நோக்கம் அதனை இரானுக்கு கிடைக்க விடாமல் செய்ய வேண்டும் என்பது தான் என இஸ்ரேலிய ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிக அளவிலான பாறைகளை ஊடுருவிச் சென்று ஆழமான இடங்களை அழிக்கும் குண்டுகள் இஸ்ரேலிடம் இல்லை. ஆனால், அமெரிக்க விமானப் படையிடம் உள்ளது. இவை எம்.ஒ.பி என அழைக்கப்படுகின்றன. இவை, மேசிவ் ஆர்ட்னன்ஸ் பெனிட்ரேட்டர் (Massive Ordnance Penetrator) என அழைக்கப்படும். பெரிய பாதிப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் பல நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட வேண்டும். "நெதன்யாகு டிரம்பை அழைத்து 'நான் இதையெல்லாம் செய்துவிட்டேன், பி-2 விமானங்களுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை நான் உறுதி செய்துவிட்டேன். ஆனால், என்னால் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாது' எனக் கூறுவது தான் சாத்தியமான சூழ்நிலையாக இருக்கும்" எனத் தெரிவிக்கிறார், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள உலகளாவிய எரிசக்தி கொள்கைக்கான மையத்தில் உள்ள முன்னாள் அமெரிக்க அதிகாரியும் இரான் நிபுணருமான ரிச்சர்ட் நெப்யூ. "அதிபர் டிரம்ப் எந்த பக்கம் சாய்வார் எனத் தெளிவாக தெரியாது" என மேற்கத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க திட்டமா? டிரம்ப் முன்னும் பின்னுமாக நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இரானை ராணுவ ரீதியாக மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தினார். ஏனென்றால் தாக்குதல் என்பது டிரம்ப் அதிகம் விரும்பும் இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும். ஆனால், இஸ்ரேல் தாக்கிய பிறகு, அந்த தாக்குதல்களை "சிறப்பானது" என்று பாராட்டியவர் "இனி அதிகம் வரப்போகிறது" என்றும் எச்சரித்திருந்தார். ஆனால், இவை ஒப்பந்தத்தை நோக்கி இரானை நகர்த்தும் என்றும் அவர் கூறுகிறார். இதன் பிறகு ஞாயிறன்று அவரின் ட்ரூத் சோசியல் தளத்தில், "நாம் விரைவில் இஸ்ரேல் - இரான் இடையே அமைதியை நிலைநாட்டுவோம். பல அழைப்புகளும் சந்திப்புகளும் தற்போது நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார். ஞாயிறன்று ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை, இஸ்ரேல் உடனடியாக தாக்குதல் நடத்தாது என்று இரானை நம்ப வைப்பதற்கான சதித்திட்டம் தான் என இரான் சந்தேகிக்கிறது. வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இரானை ராணுவ ரீதியாக மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தினார் டிரம்ப். மற்றவர்கள் இந்த நேரத்தை முக்கியமானதாகப் பார்க்கின்றனர். "இஸ்ரேலின் எதிர்பாராத தாக்குதல்கள் இரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளும் அதிபர் டிரம்பின் சாத்தியங்களை இல்லாமல் ஆக்கவே திட்டமிடப்பட்டவை" என்கிறார் வெளியுறவுக்கான ஐரோப்பிய கவுன்சிலில் உள்ள மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா திட்டத்தின் துணைத் தலைவரான எல்லி ஜெரன்மாயே. "சில இஸ்ரேலிய அதிகாரிகள், இந்தத் தாக்குதல்கள் ராஜாங்க பாதையில் அமெரிக்க தரப்பை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிடுகின்றனர், ஆனால் அதன் நேரமும் அளவும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க வேண்டும் என்பதற்கானது தான் என்பது தெளிவாக உள்ளது" என்றார் அவர். "ஒரு ஒப்பந்தம் எட்டும் தூரத்தில் தான் இருந்தது" என இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொடர்புடைய அதிகாரிகள் கடந்த வாரம் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் இவை அனைத்தும், இரான் ஆக்கப்பூர்வ சிவில் திட்டங்களுக்கானதாக இருந்தாலும் ஒற்றை இலக்க அளவில் கூட யுரேனியம் செறிவூட்டலை மேற்கொள்ளக் கூடாது என்ற உச்சபட்ச கோரிக்கையில் இருந்து அமெரிக்கா எவ்வளவு தூரம் இறங்கி வருகிறது என்பதைப் பொறுத்து தான். இரான் இதனை ஏற்க கூடாத ஒன்றாக கருதுகிறது. டிரம்ப் தனது முதல் ஆட்சியில் நெதன்யாகுவின் இடைவிடாத கோரிக்கைகளுக்கு இணங்க 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு, இரான் 3.67% (அணு மின் நிலையங்களுக்கான எரிபொருளை தயாரிக்கக்கூடிய அளவு) என்கிற அளவில் மட்டுமே அதன் யுரேனியம் செறிவூட்டல் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டில் இருந்து விலகியது. தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ள இரானுக்கு 60 நாட்கள் கெடு விதித்தார் டிரம்ப். இந்த விவகாரத்தில் அனுபவம் வாய்ந்த மத்தியஸ்தர்கள், இத்தகைய சிக்கலான விவகாரத்துக்கு இது மிகவும் குறைவான காலகட்டம் என உணர்ந்தனர். 61வது நாளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. பேச்சுவார்த்தைக்கான பாதை தற்போது இல்லாமல் போய் விட்டது எனக் கூறும் வகில், "பதற்றத்தைத் தணிக்க பிராந்திய அளவிலான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன" என்றார். நெதன்யாகு என்ன மனநிலையில் உள்ளார்? தற்போது அதிகரித்துள்ள பதற்றம் அணுசக்தி கையிருப்புகள், சூப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பற்றியது அல்ல என இரான் நம்புகிறது. "இவை, ஒரு நாடாக இரானின் திறன்களை அதன் ராணுவ வலிமையை குறைத்து இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான அதிகார சமநிலையை வெகுவாகக் குறைத்து, முடிந்தால் இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை மொத்தமாக கவிழ்ப்பதற்கான இஸ்ரேலின் திட்டம் என்றே இரான் பார்க்கிறது" என்கிறார், இரான்ஸ் கிராண்ட் ஸ்ட்ராடஜி புத்தகத்தின் ஆசிரியரும் சர்வதேச விவகாரங்களுக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பள்ளியில் மத்திய கிழக்கு படிப்புகள் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பேராசிரியருமான வலி நஸ்ர். ஆனால், இரான் பொதுமக்கள் இதற்கு எவ்வாறு பதில் அளிப்பார்கள் என்பது தெளிவாக இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல வருடங்களாக சர்வதேச தடைகள் மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊழலால் தவித்து வருகின்றனர் இரானிய மக்கள் 9 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாடு பல வருடங்களாக சர்வதேச தடைகள் மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊழலால் தவிக்கிறது. விலைவாசி உயர்வு தொடங்கி வேலையில்லா திண்டாட்டம், தண்ணீர் மற்றும் மின்சார தட்டுப்பாடு மற்றும் பெண்களை கண்காணிக்கும் கலாசார காவலர்கள் வரை இரானில் பல விவகாரங்களில் போராட்டங்கள் ஒவ்வொரு வருடமும் தொடங்கி மறைந்திருக்கின்றன. 2022-ல் அதிக சுதந்திரம் வேண்டி எதிர்பாராத அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன. அவையெல்லாம் கடுமையான முறையில் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது பொது மக்களின் மனநிலையை ஆய்வு செய்துள்ளார் நஸ்ர். "தொடக்கத்தில் பிரபலமில்லாத நான்கு, ஐந்து தளபதிகள் கொல்லப்பட்ட போது ஒரு விதமான நிம்மதியுணர்வு இருந்தது. ஆனால் தற்போது குடியிருப்பு கட்டடங்கள் தாக்கப்பட்டு, பொதுமக்கள் கொல்லப்படுகிறர்கள், நாட்டின் எரிசக்தி மற்றும் மின் கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன" "பெரும்பாலான இரானியர்கள் தங்கள் நாட்டின் மீது குண்டுகளை ஏவி வரும் ஆக்கிரமிப்பாளர் வசம் சாய்ந்து அதனை விடுதலையாகப் பார்க்கும் சூழ்நிலை இருப்பதாக எனக்கு தெரியவில்லை" என்றார். ஆனால், நெதன்யாகுவின் கூற்றுகள் பரவலான தாக்குதலைப் பற்றியே உள்ளன. பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,எதிர்காலத்தில் அமெரிக்காவால் மட்டுமே இதனை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றார் டேனியல் லெவி. சனிக்கிழமை, ஆயதுல்லா அலி காமனெயி அரசின் அனைத்து இடங்களையும், இலக்குகளையும் குறிவைத்து தாக்குவோம் என அவர் எச்சரித்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஆட்சி மாற்றம் ஒரு அங்கமாக இருக்கிறதா என்கிற கேள்விக்குப் பதிலளித்த இஸ்ரேல் பிரதமர், "அது சாத்தியமான முடிவாக இருக்கும், ஏனென்றால் இரான் அரசு மிகவும் பலவீனமாக உள்ளது" என்றார். "நாட்டின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்கிற அரசின் அச்சத்தை உளவியல் போர் தந்திரத்தின் ஓர் அங்கமாக இஸ்ரேல் கையாளப் பார்க்கிறது" என்கிறார் நெதன்யாகு வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் ஆசிரியரும், தி எகனாமிஸ்டின் இஸ்ரேல் செய்தியாளருமான அன்ஷெல் பிஃபர். "இரான் அரசின் வீழ்ச்சியை யூகிப்பதோ அல்லது தூண்டுவதோ அர்த்தமற்றது என்பது இஸ்ரேல் உளவு அமைப்பின் ஒருமித்த எண்ணமாக உள்ளது. இது உடனடியாக நடக்கலாம் அல்லது 20 வருடங்களிலும் நடக்கலாம்" என்றார். ஆனால், நெதன்யாகுவின் எண்ணம் வேறாக இருக்கலாம் என பிஃபர் நம்புகிறார். "'தாம் திடமான நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக, நெதன்யாகு நம்பும் மனநிலையில் இருக்கும் சாத்தியங்கள் அதிகம்" என அவர் தெரிவித்தார். அளவில் சிறிய இஸ்ரேல், பெரிய நாடான இரானுடன் மோதுவது எப்படி சாத்தியமாகிறது? - அதிநவீன போர் தளவாடங்கள் கிடைப்பது எப்படி? இஸ்ரேலின் ஹைஃபா நகரை இரான் குறி வைப்பது ஏன்? இந்தியாவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? நண்பர்கள் எதிரிகளானது எப்படி? இஸ்ரேல் - இரான் மோதல் பற்றிய 10 கேள்விகளும் பதில்களும் ஞாயிற்றுக்கிழமை இரவில், இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை கொல்லும் இஸ்ரேலின் திட்டத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்துவிட்டார் என ஒவ்வொரு அமெரிக்க ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ராய்ட்டர்ஸ் இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்ட போது இந்தப் பேச்சு தொடங்கியது. இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியன் முதல் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ட்ஸச்சி ஹனெக்பி வரை முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது இலக்கு இரானின் அரசியல் தலைமை இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால், இந்த தருணம் என்பது குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடியது என்று ஹனெக்பி மேலும் கூறினார். ஆபத்தான சண்டை மற்றும் கணிக்க முடியாத அமெரிக்க அதிபர் டிரம்பால்தான் இதன் முடிவு தீர்மானிக்கப்படும். "இதன் வெற்றி அல்லது தோல்வி என்பது இதற்குள் அமெரிக்காவை இழுக்க முடியுமா என்பதைப் பொறுத்து தான் உள்ளது" என்கிறார், அமெரிக்காவின் மத்திய கிழக்கு திட்ட தலைவரும் இஸ்ரேல் அரசின் முன்னாள் ஆலோசகருமான டேனியல் லெவி. "எதிர்காலத்தில் அமெரிக்காவால் மட்டுமே இதன் முடிவுகளை தீர்மானித்து, இந்த சண்டையை ஒரு நிறுத்தத்துக்குக் கொண்டு வர முடியும்" என்று அவர் கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce371gq2kv6o

வளர்கலை: வயலின்(Violin) – பிடில்(Fiddle)

1 month 2 weeks ago
வளர்கலை: வயலின்(Violin) – பிடில்(Fiddle) June 17, 2025 — மங்கள கௌரி விராஹநாதன் (இசைப்பட்டதாரி ஆசிரியை)— ஐரோப்பிய சங்கீதத்திலிருந்து நமக்கு கிடைத்துளள ஒரு இசைக்கருவியே வயலினாகும். இதற்கு பிடில் என்று பெயருண்டு. பண்டைக் காலத்தில் தனூர் வீணை என்ற பெயருடன் விளங்கியது எனவும் பின் வயலின் என்ற உருவில் அமைந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேல் நாட்டுக்கும் கீழைத்தேயத்தும் பொருத்தமான நரம்புக் கருவியாகும். ஓர் இடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய தந்தி வாத்தியமாகும். வயலின், வயலின் செலோ, வயோலா ஆகியன மேல்நாட்டு இசைக்கருவிகளென பொதுவாகக் கூறப்பட்டு வந்துள்ளது. (1786 – 1858) ஆண்டுகளில் கீழ்நாட்டில் வாசிக்கப்பட்டது. பழைய காலத்து பிடில்கள் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தன. 17ம் நூற்றாண்டில் தற்காலத்து வயலின் போல் காணப்பட்டது. இப்பொழுதுள்ள வடிவத்தில் முதன் முதலில் இக் கருவியைச் செய்தவர் (Stradivasius) ஸ்ட்ராடி வேரியஸாவார். பிலிப்பையின்ஸ் தீவுகளின் தலைநகரமாகிய மணிலாவில் மூங்கிலாலேயே பிடில் செய்து விற்றார்கள். குறுத் (Cruth) எனும் வயலினில் 6 தந்திகளுண்டு. Phono Violin (பொனோ வயலின்) என்பது அமெரிக்காவில் முற்காலத்தில் செய்யப்பட்ட ஒரு வித பிடிலாகும். கூம்பு வடிவத்தில் ஒரு குழாய் நாதப் பெருக்கியாக உபயோகிக்கப்படுகின்றது. ஆனால் இதில் கேட்கும் நாதம் சற்று குறைவாகவேயிருக்கும். ஸ்டிறிங் (Stringed Violin) 7 தந்திகளுடைய பிடிலாகும். இதில் 3 தந்திகள் இரட்டிக்கப்பட்டிருக்கும். பிடில் செய்வதற்கு சாரல்கள் உள்ள மரம் ஏற்றது. மேபிள் மரம், மிகவும் உத்தமமானதாகும். பிடில் முழுவதும் மரத்தினாலே செய்யப்பட்ட வாத்தியமாகும். ஸிகமூர், ஸில்வர் பைன் ஸிடர், ஸ்ப்பரூஸ் போன்ற மரங்களும் பிடில் செய்வதற்கு உபயோகப்பட்டது. நரம்புகளினாலும் உலோகங்களினாலும் செய்யப்பட்ட தந்திகள் இதில் உபயோகிக்கப்படுகின்றன. பிடில் முழு அளவு, முக்கால் அளவு அரையளவு வித்தியாசங்களுண்டு. நீளத்திற்கேற்ற வாலும் பிடில்களுக்குண்டு. குறிப்பிட்ட மரங்களை அளவாக வெட்டி பதப்படுத்தி நிழலில் உலர்த்தி உபயோகிக்கப்படுகிறது. இரண்டு நீண்ட சதுர மரத்துண்டுகளிலிருந்து மேற்பாகமும் அடிப்பாகமும் சமவளவாகக் குடையப்பட்டு விலாப்பலகையில் நடுவில் ஒட்டப்பட்டுள்ளது. சாதாரண பிடியிலுள்ள விலாப்பலகைகள் இதில் கிடையாது. இதில் சட்டம் (Bass bar) தனியாக ஒட்டப்படாமல் மேற்பலகையுடனேயே சேர்ந்துள்ளது. பிடிலில் அடிப்பலகை அழுத்தமாகவும் கெட்டியாகவுமிருக்கும். வயலினில் பேசும் தந்திகளின் நீளம் (Speaking lenth of the string) 13 அங்குலமாகவிருக்கும். விரல் பலகை பிரடைகள், தந்தி தாங்கி, மேல் மெட்டு முதலியவற்றிற்கு கருங்காலி மரத்தைப் பயன்படுத்துவார்கள். வில் (Bow) செய்வதற்கு பிறேஸில் ஸ்னேக் பயன்படுத்துவர். வில்லிலுள்ள நார்கள் மிருகங்களின் உரோமத்தினாலும் மரத்தினாலும் இணைக்கப்பட்டுள்ளன. வில்லு மிகவும் அவசியமானதாகும். தந்திகளின் மேல் வில்லொன்றைக் குறுக்காகச் செலுத்துவதன் மூலம் ஒலி எழும்புகின்றது. இத்தாலியர் இதனை உருவாக்கினர். 11ம் நூற்றாண்டில் பிரென்சு (பிரித்தானியா) மன்னன் 9வது சாள்ஸ் 1560ம் ஆண்டில் 24 வயலின்கள் செய்வதற்கு ஆணையிட்டதாகக் கூறப்பட்டது. பிடிலின் பாகங்களில் அடிப்பலகை மேற்பலகை, 6 விலாப்பலகைகள் f – holes (Sound holes) இவை க வடிவத்தில் அதாவது மேற்பலகையில் நடுவில் குதிரை எனப்படும் பாலம் (Bridge) இரு பக்கங்களையும் தாங்கிப்பிடித்திருக்கும். இரு பக்கங்களையும் சரியான நிலையில் வைத்திருக்கும். குதிரைக்கு இருபக்கங்களிலும் மேல் பலகையில் துளைக்கப்பட்ட நாதரந்திரங்களிருக்கும். மேல் பாகத்திலுள்ள தந்தி தாங்கி (Tail Piece) உள்ளது. இதன் நீளம் 4 ½ அங்குலமாயிருக்கும். தந்தி தாங்கியின் பாகம் ஒரு நரம்பின் உதவியினாலோ அல்லது ஒரு செப்புக் கம்பின் உதவியினாலோ பிணைக்கப்பட்டுள்ளது. இதனை (End pin) முடிவுத்தாங்கிப் பகுதி என அழைப்பர். மோவாய் தாங்கிப் பலகையாகும். 4 தந்திகள் சுருதியை நன்றாகச் சேர்த்துக் கொள்வதற்குப் பயன்படும் திருகாணிகளாகும். (Tail Piece) முடிவுப் பகுதியின் துவாரத்தில் பிணைக்கப்பட்டிருக்கும். பிடிலின் கழுத்துப் பாகத்தை எடுத்துக் கொண்டால் விரல்பலகை (Top nut) இது அடிப்பாகத்திலுள்ள சிறுமரத்துண்டு. இதிலுள்ள 4 காடிகளின் மேல் 4 தந்திகளும் சென்று பிரடைகளில் சுற்றப்பட்டிருக்கும். பிரடைகளின் நீளம் சுமார் 3 அங்குலமிருக்கும். நாதத்தைக் குறைப்பதற்காக குதிரையின் மேல் செருகி வைத்திருப்பார்கள். மேலே கூறிய பாகங்கள் யாவும் கண்களால் நேரே பார்க்கக்கூடிய ஸ்தூல பாகங்களாகும். உட்பாங்களான நாதக்குச்சி (Sound Post) சுமார் 2 ½ அங்குல உயரமிருக்கும். இது சரியாக இருந்தால்தான் நாதம் சுருதியுடனிருக்கும். மேல்நாட்டு சங்கீதமானது 3 ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டு 12 சமவளவுள்ள அரை ஸ்வரங்களாகப் பிரிக்கப்பட்ட மேளங்களைக் கொண்டது. சுருதிக்கேற்றவாறு சாரீரத்தை மாற்றுவது போல வாத்தியத்திலும் சுருதியை மாற்றுவார்கள். பிடிலை சுருதி வாத்தியம், லய வாத்தியம், சங்கீத வாத்தியம், சாதக வாத்தியம், பிரதான வாத்தியம், அயனவாத்தியம், ஸ்திர வாத்தியம், சர வாத்தியம், கச்சேரி வாத்தியம், தேவாலய வாத்தியம் யுத்த களத்தில் உபயோகிக்கப்பட்ட வாத்தியம் பாமரஜனகான வாத்தியம் விளம்பர வாத்தியம், பிரதர்சன வாத்தியம், குருட்டு வாத்தியம், பக்க வாத்தியம் என்று பல பெயர்களுண்டு. வில் போட்டு வாசிக்கப்படும் தந்தி வாத்தியம் முதன் முதலில் இந்தியாவில்தான் உற்பத்தியாயிற்று என்பதை மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள். ராவணா அஸ்திரம் என்று கூறப்பட்ட இது வில்லைக் கொண்டு வாசிக்கப்பட்டது. கர்நாடக இசையை வயலின் வாத்தியத்தில் வாசிக்க முடியும் என்று கண்டுபிடித்தவர் பாலஸ்வாமி தீட்ஸிதராவார். மேல்நாட்டு இசையைக் கற்று பின்னர் கீழ்நாட்டு இசையிலும் தேர்ச்சி பெற்றார். கர்நாடக இசைக்கச்சேரிகளில் இன்றியமையாத பக்கவாத்தியமாகவும், தனி இசை (Solo) வாத்தியமாகவும் இருந்து வருகிறது. பெண்களின் குரலுக்கும் ஆண்களின் குரலுக்கும் தகுந்தவாறு சுருதி கூட்டி வாசிக்க முடியும். மேல்நாட்டார் தமது முகவாயைப் பிடிலில் பொருத்தியுள்ள கருவியுடன் இணைந்து நின்று வாசிப்பார்கள். வயலின் வாசிப்பில் பிடி வாத்தியம், ஜாரு வாத்தியம் என இரு வகையுண்டு. விரலடியே பிரதானமாக உபயோகிக்கப்படுவது பிடி வாத்தியமாகும். ஜாரு வாத்தியம் வாசிப்பதற்கு பல வருடங்கள் சாதகம் (பயிற்சி) பண்ண வேண்டும். ஜாருவும் பிடியும் ஓரளவுடன் கலந்துள்ள வாசிப்பே மனோகரமாயிருக்கும். வயலின் ஒரு பகுத்வனி வாத்தியமாகும். 2 ஸ்வரங்களை ஒரே சமயத்தில் இதில் இசைக்கலாம். கேள்வி ஞானமும் ஞாபக சக்தியும் மிக அவசியம். ஸ்வரஸ்தான அடையாளமின்மையால் செவியினால் கேட்டே கண்டுபிடிக்க வேண்டும். ஸ்வரங்களை காதினால் கேட்டு விரல் பலகையில் ஸ்வரஸ்தானங்களைப் பிடித்து வாசிக்க முடியும். கர்நாடக இசையில் வயலின் வாத்தியத்தை தரையிலிருந்து வாசிக்க வேண்டும். இடது காலை வலது தொடைப்பகுதிக்குள்ளே மடக்கி வலது காலை சிறிது மடக்கி நீட்டி நிமிர்ந்து சரியாக உட்கார வேண்டும். வயலினை எடுத்து மேல்ப்பகுதியை இடது தோள் மேல் சாத்திக் கொண்டு தன் தாடையில் தங்க வைத்து பின் இடது பக்க குதிகால் மேற்பிடித்துக் கொண்டு விரல்பலகையில் இடது கை விரல்களால் இணைத்து தந்திகளுக்கு அழுத்தம் கொடுத்து சுருதி சேர்த்து வில்லினை பாலத்திற்கும் விரல்பலகைக்குமிடையிலுள்ள தந்திகளில் குறுக்காகப் போட்டு வாசிப்பார்கள். வில்லிற்கு றொசின் எனப்படும் ஒரு திரவக்கட்டியினால் பூசிப்பாவிக்கப்படுகின்றது. வயலின் வாத்தியம் வாசிக்கும் முறையை பயிலுபவர்களுக்கு செய்கை முறை மூலம் நேரடியாகக் காண்பித்தால்தான் விளக்கம் புரியும். எழுத்து மூலம் எல்லோருக்கும் புரியாது. வயோலா, செல்லோ மிகப் பெரியது. சிறு நாற்காலியிலிருந்து தலைகீழாக வைத்து வாசிக்க வேண்டும். ஆரம்பத்தில் வயலின் வாத்தியம் வில் போட்டு வாசிக்க வேண்டும். ஆரம்பம் கஷ்டமாக இருந்தாலும் சுருதி ஸ்வரஸ்தானங்களை அவதானித்து நன்கு பயிற்சி பண்ண பின்னர் இலகுவாகவிருக்கும். இந்தியாவில் வயலின் வாத்திய மேதைகளான லால்குடி ஜெயராமன், எம்.எஸ் அனந்தராமன், எம்.எஸ் கோபாலகிருஷ்ணன், மைசூர் சௌடையா, ஜே.ஆர்.கிருஷ்ணன், டி.என் கிருஸ்ணன், குன்னக்குடி வைத்தியநாதன், கன்னியாகுமாரி கண்டதேவி விஜயலக்சுமி, மணிபாரதி இன்னும் பலருள்ளனர். இசைஞானி இளையராஜா தனது இசையமைப்புகளுக்கு நிறைய வயலின் வாத்தியத்தை கையாண்டார். இந்தியாவில் வடிவேலுப்பிள்ளை புதுக்கோட்டை நாராயண ஸ்வாமிஐயர் சீர்காழி நாராயண ஸ்வாமிப்பிள்ளை திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர், பிடில் வெங்கோபராவ், திருச்சி கோவிந்தசாமிப்பிள்ளை வயலினில் தீவிர சாதகம் பண்ணி திறம்பட வாசித்து கல்பித சங்கீதத்தையும் விமரிசையாக வாசிக்கலாம் என்பதை ஸ்தாபித்தார்கள். பயிற்சி சாதகம் பண்ணப் பண்ணத்தான் வாத்தியங்களில் நாதம் வந்து கொண்டே இருக்கும். இந்தியாவிலும் இலங்கையிலும் இப்போ இசைக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. முறையாகக் கற்று சாதகம் பண்ணினால் சிறுபராயத்திலிருந்தே மிகவும் திறமையாக பிடிலை வாசிக்க முடியும். முன்பெல்லாம் இலங்கையிலுள்ளவர்கள் இந்தியா சென்றே இசையைக் கற்றார்கள். வசதி வாய்ப்பு கிடைக்காதவர்கள் இலங்கையிலே கற்கலாம். எதற்கும் பயிற்சி முக்கியமாகும். வாய்ப்பாட்டும் தெரிந்திருந்தால் வாத்தியத்தில் பாடுவது போலவே இருக்கும். இலங்கையில் கர்நாடக இசை வயலின் வித்துவான்கள் எனப்படுவோர் டி.வி. பிச்சையப்பா, வி.கே குமாரசாமி, சண்முகானந்த சர்மா, சங்கரய்யர், தனதேவி, மித்ரதேவி, ஏ.சிவநாதன், ராதாகிருஷ்ணன், சந்தான கிருஷ்ணன், பாக்கியலக்சுமி, ஜீவன் யோசப் அருளானந்தம், விநாயகமூர்த்தி ஆகியோர் பிரபலமானவர்கள். வயலின் மேதைகள் பலர் இவ்வுலகைவிட்டு மறைந்தாலும் அவர்களது மாணவ மணிகள் வழி வழியாக இவற்றை இசைத்து வருகிறார்கள். 1824ம் ஆண்டில் எட்டயபுரம் சமஸ்தான வித்துவான் (Stringed instrument) தந்திகளான வயலின் இசைக்கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். கி.பி 19ம் நூற்றாண்டிலிருந்து வயலின் இன்றியமையாத கருவியாகவுள்ளது. தற்போது இருவயலின்கள் சேர்ந்தமாதிரியும், 7 தந்திகளுடனும் மின்சார வயலின்களும் (Electric Violin) உள்ளன. புதுவடிவங்களில் பிடில் உருவாக்கப்பட்டு இசைக்கப்பட்டு வருகின்றன. வயலின் சுருதிகள் எத்தனை கூட்டினாலும் 3 ½ ஸ்தாயில் வைத்து வாசிக்கும்போது மிக இனிமையாக இருக்கும். பாடகர்களுக்கு பக்க வாத்தியம் வாசிப்பதற்கு வேறாக ஒரு பிடிலையும் தனியாக வாசிப்பதற்கு ஒரு பிடிலையும் பாவிப்பது நல்லது. வயலின் பெட்டிகள் (கறுப்பு நிறம்) அதற்கேற்றவாறு அமைந்திருப்பதைக் காணலாம். பிடில் வாத்தியத்தை பிடி கொடுத்து இசைத்தால் என்றும் இனிமையாகவிருக்கும். ‘வாழ்வு சிறிது வளர்கலை பெரிது’ https://arangamnews.com/?p=12098

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month 2 weeks ago
எந்த காரணத்துக்காகவும் செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்படக் கூடாது - யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் 18 JUN, 2025 | 11:20 AM செம்மணிப் புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன், புதைகுழிகளின் நீட்சி அறியப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் இன முரண்பாடு தோன்றிய பின்னர் சிறுபான்மை இன மக்கள் பல வழிகளிலும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். அவ்வப்போது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இனக் கலவரங்களால் சிறுபான்மை இனத்தவர்கள் குறிப்பாகத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் அநியாயமாகக் கொல்லப்பட்டதுடன் பெறுமதி மிக்க சொத்துக்களும் சூறையாடப்பட்டன. இன முரண்பாடு என்பது உருமாற்றம் பெற்று ஆயுதப் பிணக்காக மாற்றமுற்ற போது பல்வேறு வழிகளிலும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. படுகொலைகள். சந்தேகத்தின் பெயரிலான கைதுகள், காலவரையறையற்ற தடுப்புகள், விசாரணையற்று அல்லது விசாரணை முடிவுறுத்தப்படாது திட்டமிட்டு இழுத்தடிப்புச் செய்யப்பட்ட சிறைவாசம், காணாமலாக்கப்படுதல் என்றவாறாக அடக்குமுறைகளின் வடிவங்கள் நீண்ட பட்டியலைக் கொண்டன. தமிழர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகளில் அதிகம் கவனம் கொடுக்கப்படும் விடயங்களாக இன்று வரை இருப்பவை சட்டத்தின் பிடியால் இறுக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் தடுத்து வைப்பும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த நிச்சயமற்ற தன்மையுமே. இவற்றுள்ளும் அதிக வலியையும் வேதனையையும் தருபவை காணாமலாக்கப்பட்டவர்களின் கதைகளே. இவ்வாறானதொரு விடயப்பரப்பாக செம்மணிப் புதைகுழி விவகாரமும் விளங்குகின்றது. ஆயினும் தொடர்ந்தும் கைவிடப்படும் விடயமாக இனியும் இது மாறிவிடக்கூடாது எனும் அக்கறையை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினராகிய நாம் வலுவாகப் பதிவு செய்கின்றோம். இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்தபோது காணாமல் ஆக்கப்பட்ட பலருக்கு இன்று வரை என்ன நடந்தது என்பது தெரியாத அவலநிலை தொடர்கின்றது. இந்த நிலையே இறுதிப் போரின் போதும் நிகழ்ந்துள்ளது. அவர்களது உறவினர்கள் பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள். போருக்குப் பின்னரான சூழ்நிலையில் யார் எந்த வலுவான சத்தியும் இயற்கை நீதிக்கு மாறாக நிகழ்ந்த அவலங்களை மறைக்க நினைத்தாலும் அவை ஏதோவொரு விதத்தில் வெளிக்கிளம்பிய வண்ணமேயுள்ளன. செம்மணிப் புதைகுழி விவகாரமும் இப்போது அவ்வாறு வெளிக்கிளம்பி நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உரிய வகையில் முன்கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலை வலுவாக்கப்படவேண்டும் என்பதுடன் புதை குழிகளின் நீட்சி அறியப்படவும் வேண்டும் என்பதும் மிகவும் அவசியமானது. எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக்கூடாது. உரிய நிதியை உரிய காலத்தில் விடுவித்தல், புதைகுழி அகழ்வுப் பிரதேசங்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பினை வழங்குதல், அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் தரப்பினர் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்காதிருத்தல் என்பன அவசியமானவையென எமது ஆசிரியர் சங்கம் கருதுகின்றது. இவ்விடயங்களில் எந்தவித நெகிழ்வுமற்று செயற்படவேண்டிய பொறுப்பு ஆட்சியிலுள்ள அரசாங்கத்துக்குரியது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217792

இரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? போர்க்கப்பல், போர் விமானங்கள் நகர்வு

1 month 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மட் மர்ஃபி, தாமஸ் ஸ்பென்சர் & அலெக்ஸ் முர்ரே பதவி, பிபிசி வெரிஃபை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 அமெரிக்க ராணுவ விமானங்கள், ஐரோப்பாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிபிசி வெரிஃபையால் ஆராயப்பட்ட விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விமானங்கள் அனைத்தும் போர் விமானங்கள் மற்றும் வானிலிருந்து குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு (bombers) வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் டேங்கர் விமானங்களாகும். இவற்றில் கேசி-135 (KC-135) வகையை சேர்ந்த குறைந்தது 7 விமானங்கள், ஸ்பெயின், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்க தளங்களில் சிறிது நேரம் நின்று சென்றன. கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறிவருகிறது. இந்த பின்னணியில் தான் அமெரிக்க போர் விமானங்களின் நகர்வு நடந்துள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் இடம்பெயர்ந்துள்ளதற்கும் இந்த மோதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், பிபிசி வெரிஃபையிடம் பேசிய நிபுணர் ஒருவர், டேங்கர் விமானங்களின் இடப்பெயர்வு "மிகவும் வழக்கத்துக்கு மாறானது" என்றார். எதற்காக இந்த நடவடிக்கை? ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட் (Rusi) எனும் சிந்தனை மையத்தை சேந்த மூத்த ஆய்வாளர் ஜஸ்டின் பிராங்க் கூறுகையில், அப்பிராந்தியத்தில் வரும் வாரங்களில் ஏற்படும் "தீவிரமான எதிர் நடவடிக்கைகளுக்கான" அவசரகால திட்டங்களை தயார் நிலையில் வைப்பதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என தோன்றுவதாக தெரிவித்தார். பிபிசி வெரிஃபையால் கண்காணிக்கப்பட்ட 7 விமானங்களும் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பின்னர், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி சிசிலிக்கு கிழக்கே பறந்ததை விமான கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. அவற்றில், 6 விமானங்கள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை, ஒரு விமானம் கிரேக்கத் தீவான க்ரீட்டில் தரையிறங்கியது. அயர்லாந்து பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைவர், வைஸ் அட்மிரல் மார்க் மெல்லெட் கூறுகையில், "இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் தனக்கு அனுகூலத்தை ஏற்படுத்துவதற்கான வியூக ரீதியான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இருக்கலாம்" என்றார். கடந்த வெள்ளிக்கிழமை, இரானிய அணுசக்தி கட்டமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்கு வழங்கிய காலக்கெடுவுக்கு மறுநாள் இந்த தாக்குதல் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES மத்திய கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த போர்க்கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz) எனப்படும் தன்னுடைய விமான தாங்கிக் போர்க்கப்பலை தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா இடம்பெயரச் செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, போர் விமானங்களின் இடம்பெயர்வு நிகழ்ந்துள்ளது. இந்த விமான தாங்கிக் போர்க்கப்பல் சார்ந்து வியட்நாமில் திட்டமிடப்பட்ட நிகழ்வு ஒன்று ரத்து செய்யப்பட்டது, "அவசர நடவடிக்கை தேவைகளுக்காக" அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக ஹனோயில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கடைசியாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மலாக்கா நீரிணையில் சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததை கப்பல் கண்காணிப்பு இணையதளமான மெரைன்டிராஃபிக் காட்டுகிறது. நிமிட்ஸ் கப்பலில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளன, ஏவுகணை தாக்குதல் நடத்துவற்கென வடிவமைக்கப்பட்ட போர்க் கப்பல்களும் அதன் பாதுகாப்புக்காக உடன் செல்கின்றன. F-16, F-22 மற்றும் F-35 ஆகிய போர் விமானங்களையும் மத்திய கிழக்கில் உள்ள தளங்களுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் கூறியதாக, செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது. ஐரோப்பாவுக்கு கடந்த சில தினங்களாக இட மாற்றம் செய்யப்பட்ட டேங்கர் விமானங்கள், இந்த போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பயன்படுத்தப்படலாம். இஸ்ரேலுக்கு அதரவாக இந்த மோதலில் அமெரிக்கா தலையிடலாம் என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான "அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிரம்ப் முடிவு செய்யலாம்" என தன் சமூக ஊடக பக்கத்தில் வான்ஸ் தெரிவித்தார். பூமிக்கடியில் ஆழமாக சென்று தாக்கும் பங்கர் பஸ்டர் குண்டு இரானில் யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக நிலத்தடியில் இரண்டு தளங்கள் இயங்குவதாக நம்பப்படுகிறது. இதில், நடான்ஸ் இஸ்ரேலால் ஏற்கெனவே தாக்கப்பட்டுள்ளது. கோம் (Qom) நகருக்கு அருகிலுள்ள ஒரு மலையில் அமைத்துள்ள ஃபோர்டோ தளம் பூமிக்கடியில் மிகவும் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளது. ஃபோர்டோ கட்டமைப்பை ஊடுருவ GBU-57A/B எனப்படும் பெரியளவிலான குண்டை (Massive Ordnance Penetrator - MOP) அமெரிக்கா பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த மேற்கத்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர். 13,600 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு, நிலத்தடியில் உள்ள அணுசக்தி தளங்களை தாக்கக்கூடியது என்பதால் "பங்கர் பஸ்டர்ஸ்" என்றும் அழைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேல் மீது திங்கட்கிழமை இரான் நடத்திய தாக்குதலை காட்டும் படம் இந்த குண்டு மட்டுமே 200 அடி (60 மீ) கான்கிரீட்டை கூட உடைக்கும் திறன் கொண்டதாக கருதப்படும் ஒரே ஆயுதமாகும். வழக்கமான ரேடார்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பி-2 ஸ்டெல்த் போர் விமானங்களால் மட்டுமே இந்த குண்டை வீச முடியும். டியாகோ கார்சியா தீவில் உள்ள தன்னுடைய தளத்தில் அமெரிக்கா சமீபத்தில் பி-2 விமானங்களை நிறுத்தியது. இரானின் தெற்கு கடற்கரையிலிருந்து இந்த தீவு சுமார் 2,400 மைல் தொலைவில் இருந்தாலும், அந்த விமானங்கள் இருக்கும் இடமானது, இரானின் தாக்குதல் எல்லைக்குள் அவற்றை வைக்கக்கூடும். "[டியாகோ கார்சியாவிலிருந்து) ஒரு நிலையான நடவடிக்கையை மிகவும் திறமையாக இதன் மூலம் மேற்கொள்ள முடியும். அவற்றை எந்நேரமும் செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்." என, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் (RAF) முன்னாள் துணை தலைவரான (ஆபரேஷன்ஸ்) ஏர் மார்ஷல் கிரெக் பேக்வெல் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். இரான்- இஸ்ரேல் மோதலில், வெளிப்படையாக இஸ்ரேலை ஆதரிக்க இந்தியா தயங்குவது ஏன்? இஸ்ரேல் - இரான் சண்டை வல்லரசுகளின் மோதலாக வாய்ப்பு: அமெரிக்கா, ரஷ்யா என்ன செய்கின்றன? அச்சம், அதிர்ச்சி, குழப்பம்: இஸ்ரேல் தாக்குதல் குறித்து இரான் மக்கள் கூறுவது என்ன? இரான், இஸ்ரேல் மோதலில் இந்தியாவின் ஆதரவு யாருக்கு? - துருவங்களாக பிரிந்து நிற்கும் உலகம் மார்ச் மாத இறுதியில் டியாகோ கார்சியாவில் பி-2 விமானங்கள் நிறுத்தப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் ஆரம்பத்தில் காட்டின. ஆனால், சமீபத்தில் வெளியான படங்களில் அந்த தீவில் பி-2 விமானங்கள் இல்லை. வைஸ் அட்மிரல் மெல்லெட் கூறுகையில், இரானை இலக்கு வைத்து நடத்தப்படும் எவ்வித நடவடிக்கைக்கும் முன்னதாக, அந்த தீவில் பி-2 விமானங்களை பார்க்கலாம் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். தீவில் தற்போது அந்த விமானங்கள் இல்லாதது, குழப்பமாக உள்ளதாகவும் அவர் கூறினார். இதை ஏர் மார்ஷல் கிரேக் பேக்வெல்லும் ஒப்புக்கொள்கிறார். வெள்ளை மாளிகை தாக்குதலை தொடங்க முடிவெடுத்தால், அமெரிக்க கண்டத்திலிருந்தும் கூட பி2 விமானங்கள் செலுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார். "இரானின் தற்காப்புத் திறனை இஸ்ரேல் அழித்துவிட்டதால், எந்தவொரு ராணுவ அல்லது அணுசக்தி இலக்குகளும் கூட இஸ்ரேலின் விருப்பத்தின் பேரிலேயே விடப்படும்." மெர்லின் தாமஸ் வழங்கிய கூடுதல் தகவல்களுடன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g2d1lz6q0o

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

1 month 2 weeks ago
நான் சிறுவனாக இருந்த போது எனக்கு கணச்சூடு இருக்கிறது என்பதால் எமது வீட்டு தென்னையில் இறக்கப்படும் கள்ளில் எனது தகப்பனார் எனக்கு தருவது வழமை. ஆனால் நான் எனது மூத்த மகளை திருமணம் செய்து வைக்கும் வரை எந்த மதுவையும் தொட்டதில்லை. இத்தனைக்கும் மதுபானம் விற்கும் இடத்தில் தான் வேலையே.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதல்கள்;- இஸ்ரேலுடன் இணைகின்றது அமெரிக்கா 18 JUN, 2025 | 06:41 AM ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணைந்துகொள்வதற்கு அமெரிக்கா தயராகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என சர்வதே ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போர்டோ உட்பட ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான உத்தரவில் டிரம்ப் கைச்சாத்திடுவார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பில் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்கள் மத்தியில் முழுமையான உடன்பாடில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/217770

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து 

1 month 2 weeks ago
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 10:49 AM இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703 மீட்டர் உயமுடைய இரட்டை சிகரங்களைக் கொண்ட “மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி” (Mount Lewotobi Laki-Laki) எரிமலை செவ்வாய்க்கிழமை (18) முதல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது. எரிமலை வெடித்து சிதறி வானத்தில் கோபுரம் போன்று 10 கிலோ மீற்றர் உயரத்துக்கு அதன் சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களில் அவுஸ்திரேலியாவுக்கான ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் விமான சேவைகளும் அடங்கும். ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜுன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக பாலியின் சர்வதேச விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது. புளோரஸில் உள்ள லாபுவான் பாஜோவிற்கு புறப்படும் பல உள்நாட்டு விமானங்களும் இரத்து செய்யப்பட்டன. லெவோடோபி லக்கி-லக்கி எரிமலையைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் எரிமலை சாம்பல் மழை பொழிந்துள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை ஒரு கிராமத்திலுள்ள மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி பல முறை வெடித்து சிதறியது.இதன்போது ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதனால் சுற்றுலாத் தளமான பாலிக்கான ஏராளமான சர்வதேச விமான வேகைள் இரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தோனேசிய மொழியில் "ஆண்" என்று பொருள்படும் லக்கி-லக்கி, அமைதியான எரிமலையுடன் "பெண்" என்பதை குறிக்க இந்தோனேசிய வார்த்தையான லக்கி இரண்டு முறை சேர்க்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா, ஒரு பரந்த தீவுக்கூட்ட நாடானது, பசிபிக் "நெருப்பு வளையத்தில்" அதன் நிலை காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படுகிறது. https://www.virakesari.lk/article/217777

மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது - இணைத்தலைமை நாடுகள்

1 month 2 weeks ago
மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது - இணைத்தலைமை நாடுகள் Published By: RAJEEBAN 18 JUN, 2025 | 10:36 AM மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம், நல்லாட்சி ,அரசமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் என இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை மீதான உரையாடலிற்காக இணைத்தலைமை நாடுகளின் சார்பில் இங்கிலாந்தின் மனித உரிமைகளிற்கான தூதுவர் எலினோர் சான்டெர்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது= இலங்கை குறித்த உங்கள் அலுவலகத்தின் பணிகள் குறித்து நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம். இலங்கையில் மேமாதம் தேர்தல்கள் நடாத்தப்பட்டதை நாங்கள் வரவேற்பதுடன்,2009ம் ஆண்டு ஆயுதமோதலின் போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவது இம்முறை அமைதியான விதத்தில் இடம்பெற்றதை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். அதேவேளை மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம், நல்லாட்சி ,அரசமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். நீண்டகாலமாக நிலவும் தண்டனை விலக்கீட்டிற்கு அரசாங்கம் தீர்வை காணவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம் மேலும் ஊடகவியலாளர்கள்,மனித உரிமை பாதுகாவலர்கள், சிவில் சமூகத்தினர் சுதந்திரமாக பாதுகாப்பாக செயற்படகூடிய நிலையை ஏற்படுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். அனைவரையும் உள்ளடக்கிய முழுமையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறை பாதிக்கப்பட்ட மக்களின் நம்பி;க்கையை பெறுவது மிகவும் முக்கியமானது. அரசாங்கம் பயங்கரவாத தடைச்;சட்டத்தை நீக்குவதே தனது நிலைப்பாடு என தெரிவித்துள்ள போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் கரிசனைகொண்டுள்ளோம். மேலும் காணாமல்போனோர் அலுவலகத்தை மீண்டும் வலுப்படுத்துவதன் மூலம் பலவந்தமாக காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்க்கப்படாத விடயங்களை தீர்க்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம். https://www.virakesari.lk/article/217782

பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்

1 month 2 weeks ago
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எடுத்த முடிவால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி பிள்ளையான் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தின் எஸ். துரை ராஜா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை சமர்ப்பித்து, மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் கோரினார். அதன்படி, வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க பிரதிவாதி தரப்பினருக்கு இரண்டு வார கால அவகாசம் அளித்த நீதியரசர்கள் அமர்வு, அந்த திகதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்யுமாறும் மனுதாரர் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmc0ubopq000rqp4k2jga3qjm

கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை!

1 month 2 weeks ago
கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை! பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, மேற்கண்ட முடிவு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு மாறாகச் செயல்பட்டால், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. போதுமான எரிபொருள் இருப்பு இருந்தபோதிலும், நுகர்வோர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி இவ்வாறு செயல்படுவதால், பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmc1gv0nb001aqp4k559tu6se

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
அமெரிக்காவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : ஈரான் அதிரடி இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளாகத் தொடரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்த நிலையில், காமெனி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இன்று இந்தப் போரில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும். அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்பார்க்காத மிகப்பெரிய அதிர்ச்சி தரும் சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அச்சுறுத்தியதையடுத்து, ஈரான் உயரிய தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், "போர் தொடங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனத்தின் மொழிபெயர்ப்பின்படி, அயோத்துல்லா அலி காமெனி தனது பதிவில் "அலி கைபாருக்குத் திரும்புகிறார்" என்று கூறி உள்ளார். அதவாது யூத நகரமான கைபாரை கைப்பற்றிய இஸ்லாமிய வரலாற்றை குறிக்கும் விதமாக அவர் இந்த போஸ்டை செய்துள்ளது. இது ஷியா இஸ்லாத்தின் முதல் இமாம்படி 7-ம் நூற்றாண்டில் யூத நகரமான கைபாரைக் இஸ்லாமியர்கள் கைப்பற்றியதைக் குறிக்கும் விதமாக அவர் இந்த போஸ்டை செய்துள்ளது. அந்தப் பதிவில், ஒரு நபர் கையில் வாளுடன் கோட்டை போன்ற வாயிலுக்குள் நுழைவது போன்றும், வானத்தில் தீப்பிழம்புகள் தெரிவது போன்றும் ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், சில நிமிடங்களுக்குப் பிறகு, காமெனி இஸ்ரேலுக்கு மற்றொரு எச்சரிக்கை விடுத்தார். அதில், "பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு நாம் ஒரு வலுவான பதிலடியைக் கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாம் கருணை காட்ட மாட்டோம்" என்று குறிப்பிட்டிருந்தார். இதை உலக நாடுகளே எதிர்பார்த்து இருக்காது என்று ஈரான் கூறி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் ஆறாவது நாளாக நீடித்து வருகிறது. புதன்கிழமை அதிகாலையில் முதல் இரண்டு மணி நேரத்தில் இஸ்ரேலை நோக்கி ஈரான் இரண்டு முறை ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் டெல் அவிவ் நகரில் வெடிச்சத்தம் கேட்டது. இதற்கிடையில், டிரம்ப் ஜி7 மாநாட்டிலிருந்து முன்னதாகவே புறப்பட்டு வந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 90 நிமிடங்கள் கலந்துரையாடினார். மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. R https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அமெரிக்காவுக்கு-காத்திருக்கும்-அதிர்ச்சி-ஈரான்-அதிரடி/50-359467

இஸ்ரேல் - ஈரான் முறுகலால் இலங்கைக்கு கடும் பாதிப்பு; பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு!

1 month 2 weeks ago
இஸ்ரேல் - ஈரான் முறுகலால் இலங்கைக்கு கடும் பாதிப்பு; பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு! ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய இராணுவ நிலைமை அதிகரித்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த இராணுவ நிலைமை பிராந்திய ரீதியாக பரவினால், சுற்றுலாத் துறை உட்பட இலங்கையில் பல துறைகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்கே சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கையைப் பாதிக்கும் பலகாரணிகள் உள்ளன. முக்கியமானது எரிபொருள் விலை அதிகரிப்பு. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை ஏற்கனவே பத்து முதல் பன்னிரண்டு சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தப் போர் பிராந்திய ரீதியாக பரவினால், இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணியை மோசமாக பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த நிலைமை இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் மீது மிகவும் எதிரமறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வேலை, பாதுகாப்பு, புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன கடுமையாகப் பாதிப்படையும் - என்றார். https://newuthayan.com/article/இஸ்ரேல்_-_ஈரான்_முறுகலால்_இலங்கைக்கு_கடும்_பாதிப்பு;_பொருளாதார_ஆய்வாளர்கள்_சுட்டிக்காட்டு!#google_vignette
Checked
Sat, 08/02/2025 - 14:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed