புதிய பதிவுகள்2
வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்!
வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்! adminJune 18, 2025 வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (18.06.25) வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. 16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தவமலர் சுரேந்திரநாதனுக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர் https://globaltamilnews.net/2025/216970/
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நெத்தன்யாஹு யூத இனத்தின் நவீன மீட்பராக வரலாற்றில் இடம்பிடிக்க விரும்புகின்றார். அதற்கு சிந்தித்து செயலாற்றாமல், கசினோவில் சூதாட்டத்தில் கணக்குப் போடும் புத்திசாலித்தனமான மூளையுள்ள அமெரிக்காவின் ட்ரம்பைச் சரியாகப் பாவிக்கின்றார். இஸ்ரேல், அமெரிக்கா, மேற்குநாடுகள் ஈரானின் இஸ்லாமிய ஆட்சியை அகற்றச் சொல்லுபவை வெறும் நொண்டிச் சாட்டுகள். ஈரான் பலவீனமாக இருப்பதால், இதுதான் ஆட்சியை மாற்ற சரியான தருணம் என்பதைத் தவிர மிச்சமெல்லாம் அவசரமான காரணங்கள் அல்ல. ஈரானியர்கள் இஸ்லாமிய ஆயத்துல்லாக்களின் ஆட்சியை வெறுத்தாலும் இஸ்ரேலின் நண்பர்களாக மாறமாட்டார்கள். ஜனநாயக ஆட்சி இப்போதைக்கு வருவதும் சாத்தியமற்றதே.
வெளியேற முடியாது இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்!
வெளியேற முடியாது இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்! வணிக நோக்கங்களுக்காக இஸ்ரேலில் உள்ள பல இலங்கையர்கள் வெளிச்செல்லும் விமானங்கள் இல்லாததால் சிக்கித் தவிப்பதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போது, ஈரானுடனான மோதல் காரணமாக இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையமான பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மற்றும் இஸ்ரேலிய வான்வெளி அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தூதரக அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும், தேவைப்பட்டால் இஸ்ரேலை விட்டு வெளியேறுவதற்கான ஆதரவையும் வழங்குவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார குறிப்பிட்டார். தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேறுபவர்கள் ஈலாட் எல்லை வழியாக எகிப்துக்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பழைய கட்டிடங்களில் முறையான தங்குமிடங்கள் இல்லாமல் வசிக்கும் சில இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளதாக தூதர் நிமல் பண்டார தெரிவித்தார். அதன்படி, தாக்குதல்களின் போது தங்குமிடத்திற்கான தற்காலிக மாற்று வழிகளை அடையாளம் காணவும், தனிப்பட்ட அவசரகால திட்டத்தை உருவாக்கவும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட சமூக சேவையாளர்களை அணுகுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், அவசரநிலைகள் ஏற்பட்டால் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும் தூதர் நிமல் பண்டார அறிவுறுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1436066
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அணு ஆயுத தாக்குதல்; ஈரானின் கூற்றை மறுக்கும் பாகிஸ்தான்! ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்ற தெஹ்ரானிய மூத்த அதிகாரியின் கூற்றினை இஸ்லாமாபாத் உடனடியாக மறுத்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டைப் பயன்படுத்தினால், பாகிஸ்தானும் இஸ்ரேலை அணுகுண்டைப் பயன்படுத்தித் தாக்கும் என்று பாகிஸ்தான் எங்களிடம் கூறியுள்ளது என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதியும் ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் உறுப்பினருமான ஜெனரல் மொஹ்சென் ரெசாய் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானும் இஸ்ரேலும் ஏவுகணைத் தாக்குதல்களை தொடங்கும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. எனினும், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் இந்தக் கூற்றை நிராகரித்ததுடன், இஸ்லாமாபாத் அத்தகைய உறுதிமொழியை அளிக்கவில்லை என்றும் கூறினார். எவ்வாறெனினும், இஸ்ரேலுடனான பரந்த மோதலில் ஈரானுக்கான பாகிஸ்தானின் ஆதரவினை அவர் வெளிப்படையாக வெளிப்படுத்தினார். ஜூன் 14 அன்று, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தேசிய சட்டமன்றத்தில் முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார். இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட முஸ்லிம் நாடுகள் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்றும், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கூட்டு மூலோபாயத்தை உருவாக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ஆசிப் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1435944
மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள்
லெப்.கேணல் மாதவன் சின்னையா விநாயகமூர்த்தி நுவரெலியா, சிறிலங்கா
வட துருவத்துப் பயணங்கள் - குரு அரவிந்தன் -
வட துருவத்துப் பயணங்கள் - குரு அரவிந்தன் - - குரு அரவிந்தன் - பயணங்கள் 11 ஏப்ரல் 2025 நடு இரவில் தெரியும் சூரியன்! ஐஸ்லாந்திற்குச் சென்ற போது நடுநிசியில் சூரியனைப் பார்த்திருக்கிறேன். அதே அனுபவம் மீண்டும் அலாஸ்காவில் கிடைத்தது. கனடாவின் வடக்குப் பக்கத்தில் அலாஸ்கா இருந்தாலும், ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அதை விலைக்கு வாங்கியிருந்தது. தெற்கே ஹவாயும் வடக்கே அலாஸ்கா மகாணமும்தான் அமெரிக்காவுடன் நிலத்தொடர்பு இல்லாத மாகாணங்களாக இருக்கின்றன. அலாஸ்காவின் வடபகுதி பனிசூழ்ந்த பனிப்புலமாக இருந்தாலும், 776,000 மக்கள் இங்கே வசிக்கின்றார்கள். ஆதிகாலத்தில் ஆசியாவுடன் நிலத்தொடர்பு இருந்ததால், பழங்குடி மக்கள் முதன் முதலாக அலாஸ்கா வழியாகத்தான் உள்ளே வந்தார்கள். பழங்குடி மக்களின் சுமார் 22 மொழிகள் இங்கே பாவனையில் இருக்கின்றன. இங்குள்ள 86 வீதமான மக்கள் ஆங்கிலமொழி பேசுகின்றார்கள். பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவம், நடுநிசியில் தெரியும் சூரியன், பல வர்ணங்கள் கொண்ட நொதேன்லைட், வட அமெரிகாவிலே உயர்ந்த தெனாலி மலைத்தொடர், உலகிலே உயிர் வாழும் மிகப் பெரிய உயிரினமான திமிங்கிலங்கள், பனிக்காலத்தில் உறங்குநிலைக்குப் போகும் கரடிகள், வடதுருவ பனிக்கரடிகள், பனிக்கட்டி வீட்டில் வாழும் எஸ்கிமோக்கள் என்றெல்லாம் மாணவப் பருவத்தில் படித்ததை அங்கே நேரடியாகக் காணமுடிந்தது. இதைவிட முக்கியமான ஒரு காரணமும் இருந்தது, அது என்னவென்றால் ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற, சேலம் தமிழ் சங்கத்தின் சிறந்தநாவல் -2020 க்கான பரிசு பெற்ற எனது நாவலின் தளமாகவும் பனி சூழ்ந்த அலாஸ்காதான் இருந்தது. நாங்கள் ஒரு கரவன் வண்டியை அதாவது இங்கே ஆர்.வி. என்று சொல்லப்படுகின்ற வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிச் சென்றோம். அதில் சமையலறை, படுக்கையறை, குளியலறை எல்லாமே இருந்தன. பெயபாங் என்ற இடத்தில் இருந்து டல்ரன் நெடுஞ்சாலையில் சென்றால் வடதுருவத்தை அடையலாம். அங்கே உள்ள மொறிஸ் தொம்ஸன் கலாச்சார மண்டபத்திற்குச் சென்றால் வடதுருவத்தில் கால்பதித்தவர் என்று உங்களுக்கு ஒரு சான்றிதழ் தருவார்கள். வடஅமெரிக்காவில் மிக உயரமான மலைச்சிகரம் Mount McKinley இங்கேதான் இருக்கின்றது. உலகிலேயே மூன்றாவது பிரபலமான இந்த மலையின் உயரம் 20,310 அடியாகும். இந்த மலைத் தொடரில் பனிப்படலத்தால் உறைந்த ஐந்து கிளேஸியர்கள் இருக்கின்றன. சிலெட்டோக் என்று சொல்லப்படுகின்ற அலாஸ்கியன் நாய்கள் இழுத்துச் செல்லும் வண்டிகளில் பயணிப்பது, பனியில் சறுக்கி விளையாடுவது, கூடாரம் அடித்து தங்கி காம்பயர் செய்வது, மலை ஏறுவது, வேட்டையாடுவது, மீன் பிடிப்பது போன்ற பொழுது போக்குகள் இங்கே உண்டு. கருங்கரடிகள், கரிபோ மான்கள், மலை ஆடுகள் போன்றவற்றை அருகே சென்று பார்க்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் முடிந்தது. கழுகுகள், மலை எலிகள், நரிகள், மலை அணில்கள் போன்றவற்றையும் அங்கே காணமுடிந்தது. எஸ்கிமோக்கள் என்று நாங்கள் சிறுவயதில் படித்த, பனிக்கட்டிகளால் உருவான வீடுகளில் வாழ்ந்த முதற்குடி மக்களின் பரம்பரையினரை அங்கு சந்தித்து உரையாட முடிந்தது. அங்கரேய்ச் நகரில் தங்கி அருங்காட்சியகம் போன்றவற்றைப் பார்த்தோம். கடல் உணவுக்குப் புகழ் பெற்றது. இரவுதங்கிவிட்டு தெற்கே 127 மைல்களுக்கு அப்பால் உள்ள சீவாட் என்ற இடத்திற்கு மறுநாள் காலையில் பயணமானோம். சீவாட்டில் சுமார் 3000 மக்கள் வசிக்கிறார்கள். கினாய் பியோட்ஸ் நேசனல் பார்க் என்ற இடத்திற்குச் செல்வதற்காக முற்கூட்டியே பதிவு செய்து வைத்திருந்தோம். இது றிசுரக்ஷன் குடாவின் கரையோரத்தில், மலைகள் சூழ்ந்த பகுதியில்; இருப்பதால் படகில்தான் செல்லவேண்டும். படகில் செல்லும் போது, ஒன்றல்ல, இரண்டு இடங்களில் கறுப்பு வெள்ளை நிறமான ‘கில்லவேல்’ என்ற திமிங்கிலங்களை மிக அருகே காணமுடிந்தது. எக்ஸிற் கிளேஸர் என்ற பனிமலை இப்பகுதியில் பிரபலமானது. திரும்பி வரும் வழியில் கோப் (ர்ழிந) என்ற மிகப் பழமையான ஒரு கிராமத்துக்குச் சென்றோம். இங்கு 1898 ஆம் ஆண்டு தங்கச் சுரங்கங்கள் கண்டு பிடிக்கப்பட்டதால், சியாட்டோவில் இருந்து மக்கள் வந்து குடியேறினார்கள். அங்கே உள்ள அருங்காட்சியகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் முதியவரான பெண்மணி, தான் அங்கே பிறந்து வளர்ந்ததாகவும், தனது தாத்தா, பாட்டி காலத்தில் அவர்கள் தங்கச் சுரங்கத் தொழில் நிமிர்த்தம் இங்கு வந்து குடியேறியதாகவும் குறிப்பிட்டார். ரொறன்ரோவில் இருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியோடு தேனீர் தந்து உபசரித்தார். எங்களுடன் நின்று படமும் எடுத்துக் கொண்டார். தங்கச் சுரங்கத்தில் பாவித்த மிகப்பழைய பொருட்களைக் காட்சிப் படுத்தி இருந்தார்கள். எப்படித் தங்கத்தை பிரித்து எடுப்பது என்றும் அதற்கான தொட்டியில் செய்து காட்டினார். வடதுருவத்தில் ஒரு எரிமலைத்தீவு ஐஸ்லாந்து என்ற ஒரு சிறிய தீவு அத்திலாண்டிக் சமுத்திரத்தில், வடதுருவ எல்லையில் இருக்கின்றது. 103,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட, ரெக்காவிக்கைத் தலைநகராகக் கொண்ட இந்த எரிமலைத் தீவுக்குச் செல்வதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. படகில் சென்று வடதுருவத் திமிங்கிலங்களை அருகே பார்க்கக்கூடியதாக இருந்தது. இத்தீவில் சாமத்திலும் சூரியனைப் பார்க்க முடியும். நான் பயணத்தை முடித்துக் கொண்டு வந்ததன் பின் ஒருநாள் 24 மணி நேரத்தில் சுமார் 2200 நிலவதிர்வுகள் இத்தீவில் ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக எந்த நேரமும் எரிமலை வெடிக்கலாம் என்று அங்குள்ள மக்கள் பயந்து போனார்களாம். இந்தச் சிறிய தீவில் சுமார் 30 மேற்பட்ட எரிமலைகள் இருக்கின்றன. பூமிக்கடியில் உள்ள தட்டுகள் அடிக்கடி முட்டிக் கொள்வதால், இந்த நிலநடுக்கம் ஏற்படுகின்றது. இங்கே உள்ள எரிமலை ஒன்று 2010 ஆம் ஆண்டு வெடித்த போது விமானப் போக்குவரத்தே அப்பகுதியில் ஒருவாரகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த எரிமலை வெடிப்பால், புகையும், சாம்பலும் பல மைல் தூரங்களுக்குக் காற்றோடு பரவி சுற்றுவட்டத்தை மாசடைய வைத்திருந்தன. ஐஸ்லாந்தின் பொருளாதார வசதிகளுக்காகச் சுற்றுலாப் பயணிகளையே அவர்கள் அதிகம் நம்பியிருக்கிறார்கள். பொருட்களை இறக்குமதி செய்வதால் பொருட்களின் விலை இங்கு சற்று அதிகமானது. ஆங்கிலமும் பேசும் இங்குள்ள மக்கள் மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர்கள். வீடுகள் கூட்டமாக இல்லாமல், தனித்தனியாகவே அங்குமிங்குமாக இருக்கின்றன. மலைச்சரிவில் உள்ள சில வீடுகளின் கூரைகளைப் புற்கள் வளர்ந்து மூடியிருக்கின்றன. பபின் என்று சொல்லப்படுகின்ற அழகிய பறவைகளை இங்கு காணமுடிந்தது. செம்மறி ஆடுகளும், குதிரைகளும் நிறை இருக்கின்றன. சிக்காக்கோவில் ‘பான்பிட்ஸா’ பிரபலமாக இருப்பது போல, இங்கே கிடைக்கும் ‘ஐஸ்லாண்டிக் கொட்டோக்’ மிகவும் ருசியானதால் பிரபலமானது. வரிசையில் நின்றுதான் வாங்கவேண்டி வந்தது. ‘நோர்ஸ்’ இனத்தைச் சேர்ந்த வைக்கிங் காலப்பகுதியில்தான் இத்தீவில் குடியேற்றங்கள் எற்பட்டன. சுமார் 3 லட்சம் மக்கள்தான் இங்கு வசிக்கிறார்கள். அரச கட்டுப்பாடுகள் காரணமாக, பெற்றோர் விரும்பியவாறு பிள்ளைகளுக்கு இங்கே பெயர் வைக்க முடியாது. தொடர்வண்டிகளும் இங்கு இல்லை. இவர்களது முன்னோர்கள் ஒரு காலத்தில் பயங்கரமான கடற்கொள்ளையர்களாக இருந்தார்கள். கழுத்தைக் கோடாரியால் வெட்டுவது, மரத்திலே கட்டி உயிரோடு எரிப்பது போன்ற தண்டனைகளைக் கொடுத்தார்கள். இங்குள்ள காட்சியகத்தில் இது போன்ற தண்டனைக் காட்சிகளை நிஜமாக நடப்பது போலப் பார்க்க முடிந்தது. இன்னுமொரு காட்சிப் பொருளாக 2 ஆம் உலகயுத்தத்தில் ஜெர்மனியால் சுட்டு விழுத்தப்பட்ட ரஸ்ய விமானத்தின் உடைந்த பாகங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் அமெரிக்கச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததைக் கவனித்த போது ஆச்சரியமாக இருந்தது. இதைப்பற்றித் தேடுதல் செய்தபோது அமெரிக்காவிடம் இருந்து ரஸ்யா அந்த விமானங்களை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது. நிலத்திற்கு அடியில் இருந்து திடீர் திடீரென ஒரு பனைமர உயரத்திற்கு நீர் ஊற்றுக்கள் சீறிப்பாய்கின்றன. நிறைய நீர்வீழ்ச்சிகளும் இருக்கின்றன. சுடுதண்ணிக் குளங்களும் இங்கு இருக்கின்றன. வீடுகளைச் சூடாக்க இந்த சூடான தண்ணீரையும், நிலவடிச் சூட்டுகாற்றையும் பயன்படுத்துகின்றார்கள். தீவைச் சுற்றி வருவதற்கு நல்ல நிலையில் ‘றிங்ரோட்’ என்ற நெடுஞ்சாலையை அமைத்திருக்கிறார்கள். வண்டியை வாடகைக்கு எடுத்து விரும்பிய இடங்களைச் சென்று பார்க்கக்கூடிய வசதிகள் உண்டு. பனிக்காலத்தில் சிறிய வீதிகளை மூடிவிடுகிறார்கள். இக்காலத்தில் ‘நொதேன் லைட்’ என்று சொல்லப்படுகின்ற வானத்தைப் பல வர்ணங்களில் பார்க்க முடியும். நோர்வே நாட்டு மன்னனின் ஆட்சிக்காலத்தில் இந்தத் தீவுகளுக்குப் பெயர்சூட்டும் போது தவறு செய்து விட்டார்கள். மாலுமிகள் தகவல் தெரிவித்தபோது ஒரு தீவு பனியாலும், அருகே உள்ள இன்னும் ஒரு தீவு பச்சைப் பசேலென்று தாவரங்கள் சூழ்ந்திருப்பதாகவும் அறிவித்தபோது, நேரடியாகச் சென்று பார்க்காததால் அருகே இருந்த பனியால் சூழப்பட்ட கிறீன்லாந்திற்கு அந்தப் பெயரையும், தாவரங்கள் வளர்ந்திருந்த இந்தத் தீவக்கு ஐஸ்லாந்து என்றும் வரலாற்றுத் தவறு காரணமாகப் பெயர் நிலைத்து விட்டது. இங்குள்ள துறைமுகத்திற்கு அருகே சூடான நீரோட்டம் ஓடுவதால் துறைமுகத் தண்ணீர் உறைவதில்லை. குற்றங்களே நடக்காத நாடு என்பதால் வீதிகளில் பொலிசாரைக் காணமுடியாது. நான் அங்கு நின்ற நாட்களில் ஒரே ஒரு பொலிஸ்காரரைக் கோப்பிக் கடையில் சந்தித்து உரையாட முடிந்தது. பாதுகாப்பு வேலிகள் இல்லாததால், சில இடங்களில் தரை பிளந்து அதிலிருந்து புகை வெளிவருவதையும், சுடுநீர் கொதிப்பதையும் அருகே சென்று பார்க்கமுடிந்தது. சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்த இடமாக இது இருக்கின்றது. kuruaravinthan@hotmail.com https://www.geotamil.com
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அண்ணா, ஈரான் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்று மேற்குநாடுகள் சிலவற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நீண்டகாலமாக தொடரும் தவறுகள், குறுகியகாலத்தில் நடந்த தவறுகள் என்று இரண்டாகப் பார்க்கலாம். நீண்டகாலம்: ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல். ஈரானிடம் அணு ஆயுதப்பலம் கிடைக்கும் என்பது இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு மிக ஆபத்தானது, இஸ்ரேல் என்னும் நாடே இல்லாமல் போகலாம் என்ற, உண்மையோ பொய்யோ, ஒரு கருத்து இவர்களிடையே உள்ளது. ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் சிரியா, ஈராக், யேமன் என்று பல நாடுகளில் ஈரான் ஆயுதக் குழுக்களை வளர்த்து வைத்திருக்கின்றது. இந்தக் குழுக்கள் இஸ்ரேல் மீது இடைக்கிடையே தாக்குதலை மேற்கொள்ளுகின்றன. குறுகியகாலம்: ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை மிகவும் நெருங்கி விட்டது என்னும் தகவல். இது உண்மையில்லாமல் கூட இருக்கலாம். ஈராக்கின் இரசாயன ஆயுதங்கள் போன்ற ஒரு அவசரமான, ஆனால் பிழையான தகவலாகவும் இது இருக்கலாம். முன்னர் ஈராக்கின் அணு ஆயுத முயற்சிகளையும் இஸ்ரேல் அழித்திருந்தது. அதிபர் ட்ரம்ப் ஈரானுடன் அணு ஆயுதம் தொடர்பாக பேச்சுவார்த்தை ஆரம்பித்தார். 60 நாட்கள் கெடு என்றார். ஈரான் எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை. 61ம் நாள் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. அமெரிக்கா முதலில் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது என்றது. ட்ரம்ப் முற்றிலுமாக உறுதித்தன்மை அற்றவர். மற்றும் பழிவாங்கும் இயல்பும் கொண்டவர். ஈரான் மீதான் எந்த விதமான தாக்குதலுக்கும் மிகவும் வெளிப்படையாகவே இஸ்ரேலை ஆதரிப்பது மட்டும் இல்லை, உதவிகளும் செய்வார். ஈரானிடம் மொத்தமாகவே இரண்டாயிரம் ஏவுகணைகள், ballistic missiles, தான் உள்ளன என்கின்றனர். முதல் நாள் அன்று ஈரான் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. இப்பொழுது இன்னும் சிலவற்றை ஏவிக் கொண்டிருக்கின்றது. இதே வேகத்தில் போனால் இரண்டு வாரங்களுக்குள் அவை முடிந்துவிடும். ஈரானுக்கு ரஷ்யாவோ அல்லது சீனாவோ உடனடியாக எந்த உதவியும் செய்யப் போவதில்லை. வெறும் வார்த்தைகள் மட்டுமே அவர்களின் ஆதரவு. வெளியே பலமான ஒன்றாக தெரியும் ஈரான் உண்மையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நீண்ட ஒரு சண்டைக்கு தயாராகவில்லை என்பதே இன்றைய நிலை. இஸ்ரேல் ஈரானுக்குள் எந்த இடத்தையும், எந்த வேளையிலும் தாக்கி அழிக்கலாம் என்பது ஈரானியர்கள் உட்பட எல்லோருக்குமே ஒரு அதிர்ச்சி.
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
விமான கட்டணங்களின் விலை அதிகரிப்பு ,விமானப் பயணத்தால் ஏற்படும் சுற்றுபுற சுழல் பாதிப்பினால் விமானப் பயணம் இனி செய்வதில்லை என்ற ஆர்வலர்களின் முடிவு இவற்றால் விமானப் பயணங்க எதிர்காலத்தில் அதிகரிக்காது என்றும் சொல்லபடுகின்றது
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
காணொளி ஒன்று பார்த்தேன் சீமான் கள்ளை எல்லோருக்கும் ஊற்றி கொடுக்கின்றார் நாம் தமிழர் கட்சியில் சேலம் தொகுதியில் வேட்பாளராக நின்று தோல்வி அடைந்த பெண் வேட்பாளர் கள்ளு வாங்கி குடிக்கின்றார். சீமான் நிறைய பெண்களை தனக்கு பாதுகாப்பிற்கு அடுக்கி வைத்து கொண்டு செல்பவர். அவர்கள் எல்லாம் கள்ளு குடிக்க தொடங்கினால் நிலைமை என்ன. அதில் ஒரு புர்க்கா போட்ட சீமான் கட்சி பெண் தலைவர் சொல்கின்றார் கள்ளு குடித்து செத்தவன் கிடையாது என்று எங்கள் தலைவர் சீமான் சொல்லியுள்ளார் என்று கள்ளு குடிப்பதை நியாயபடுத்துகின்றார் முஸ்லிம் மதம் கள்ளு குடிப்பதை ஆதரிக்கின்றதா? இவர் ஏதாவது நல்ல செயல்களை கையில் எடுப்பார் என்று பார்த்தால் சமுதாயத்தை நாசம் செய்கின்ற செயல்களை தான் கையில் எடுக்கின்றார்.இவரது தொண்டர்கள் சொல்லி கொள்வது தமிழ்நாட்டில் இவர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து உலகத் தமிழர்களே தலைநிமிர போகின்றார்களாம்
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
தமிழ்நாட்டில் சட்டபூர்வமான மது விற்பனையிலும் மக்கள் அதிகமாக உயிரிழக்கின்றார்கள். அதனால் அரசு சம்பந்தப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு மானியம் என வழங்குகின்றது. எனவே அதுவும் ஒருவகை ஊக்கிவிப்பு.😎 வரும் காலத்தில் டாஸ்மாஸ்க்கில் மது அருந்தி உயிரிழப்பவர்களுக்கு மாதாந்த ஓய்வூதியம் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.😋
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் செய்த தவறு என்ன? யாராவது தகவல் தர முடியுமா? 🙏
வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு
கண்டிப்பாக! அதோடு சேர்த்து ஒரு கதையும் புனைவார்கள். அப்போ, அவர்கள் படையில் குழந்தைகளும் இருந்தனர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். நிர்வாணப்படுத்துவது சிங்களவரின் மரபு. அதை அப்படியே நிலைநிறுத்தி, தம்மை அடையாளப்படுத்த ஒரு துப்பை விட்டுச்சென்றுள்ளனர். அவர்கள் எத்தனை கதையெழுதினாலும் அவை, தம்மை மறைப்பதற்கும் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்குமே உதவும். இன்று அந்த உடல்கள் வெளிவந்தனவென்றால்; அவை வெறும் உடலங்கள் மட்டுமல்ல, அவற்றோடு சேர்ந்து உண்மையும் வெளிவந்துள்ளன. அவற்றை மறைக்க யராலும் முடியாது. வேண்டுமென்றால் என். என். பியின் முகத்திரை கிழியும். இந்த லட்ஷணத்தில சர்வதேசம் போர்க்குற்ற விசாரணை செய்ய வேண்டாமென கூற இவர்களுக்கு தகுதியில்லை. இவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ நிவாரணமோ கிடைக்காது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் நீதியமைச்சர்.
அணுகுண்டு தயாரிக்கும் கட்டத்தை இரான் நெருங்கிவிட்டதா? விரிவான அலசல்
வணக்கம் நொச்சியார்!உங்கள் எழுத்து நியாயபூர்வமானது. ஆனால்...... இந்த உலகு யதார்த்தம் இல்லாது வன்மம் நிறைந்த உலகு. அதை ஒவ்வொரு மூலை முடுக்களிலும் நேரடியாகவே காணலாம்.இப்படியிருக்கும் போது உனக்கொரு சட்டம் எனக்கொரு சட்டம் எனும் ஆதிக்கவாதிகளிடம் இன்னும் எதனை எதிர்பார்க்கின்றீர்கள்?
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
தாய்வானை அண்டியுள்ள கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்காவின் நிமிற்ஸ் விமானத் தாங்கிக் கப்பலும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் வேகமாக வளைகுடா நோக்கி நகர்கிறன. இன்னொரு விமானத் தாங்கியும் இக் கடல் பகுதிக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் தாக்குதல் விமானங்கள் தயார்படுத்தப்படுகின்றன.
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
நடக்கிற விசயத்த கதையுங்கோ. அமெரிக்க உணவு முறைகளை இந்த உலகமே ஏற்கவில்லை என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கின்றேன். ஆனால் அமெரிக்கா இல்லாமல் இந்த உலகமே இல்லை என்ற நிலையும் இருக்கின்றது. கூட்டி கழித்து பாருங்கள்.
யாழில் திட்டமிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏன்?
அதனால் தான் இன்றும் நிமிர்ந்து நிலைத்து நிற்கின்றார்கள். இல்லையேல் சோமாலியா எத்தியோப்பியா மாதிரி யாழ்ப்பாணிகளை எலும்பும் தோலுமாக ஆக்கியிருப்பார்கள்.
வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு
யே.வி.பி யின் இயல்பான இனவாதமுகம் என்.பி.பி என்ற முகத்திரையைக் கிழித்து மெல்ல மெல்ல மேலெழுந்து வருகிறது. வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும். மாற்றென்பது சிங்களத்தின் கைக்கூலிகளைத் தேர்வு செய்வதல்ல என்பதை இவளவு விரைவாக உணரவைப்பார்களென எதிர்பார்க்கவில்லை நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
அணுகுண்டு தயாரிக்கும் கட்டத்தை இரான் நெருங்கிவிட்டதா? விரிவான அலசல்
இரண்டு போரரங்கு மூன்றாக விரிவடைந்துள்ளது.உலகை அழித்துவரும் முதலாளித்துவ உலகின் முரண். மேற்கினது செல்லப்பிள்ளையான இஸ்ரேல் அணு ஆயுதத்தை வைத்திருக்கலாம். தயாரிக்கலாம். ஏன் ஈரான் வைத்திருக்கக்கூடாது. இஸ்ரேல் தான்தோன்றித் தனமாக மக்களையும் அழிப்பதோடு, ஐ.நாவின் விதிகளையோ அனைத்துலகால் பின்பற்ற அறிவுறுத்தப்படும் மனிதநேயங்களையோ மதிக்காது கொலைக்களங்களைத் திறந்துவரும்சூழலில் ஈரான் போன்ற நாடுகள் தம்மைப் பாதுகாக்க ஆயுதங்களைத் தயாரிப்பதை எப்படித் தவறாகக்கொள்ளமுடியும். ஈராக்கிலும் இப்படித்தான் செய்தார்கள். பின்னர் லிபியா, சிரியா... ஈரானில் வந்து நிற்கிறார்கள். கடந்த 5 நாட்களில் பலஸ்தீன மக்கள் படும் துயரத்தில் லட்சத்தில் ஒரு துளியையாவது இஸ்ரேலியர்கள் உணர்ந்திருப்பார்களாயின் அந்த மக்கள் எதிர்காலத்தில் கடும்போக்கு அரசியல்வாதிகளை நிராகரிப்பதோடு, ஆக்கிரமிப்பு மனோபாவத்தையும் கைவிட்டுப் பலஸ்தீனத்தை ஒரு அயல் தேசமாக ஏற்று வாழ்வதே இரு இனங்களும் அமைதியாக வாழ்வதற்கான வழியாகஇருக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed