புதிய பதிவுகள்2
ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்
தேடியமைக்கு நன்றி நியாயம். குறுகிய கால பிரயாணமாக இலங்கை சென்று.... Battery ஐ Recharge பண்ணிக் கொண்டு கொண்டு வந்துள்ளேன். 😂 🤣
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ . ......... ! 😍
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : மின்னும் பனி சாரல் உன் நெஞ்சில் சேர்ந்தாலே கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாலே வெண்ணிலா துவின் தன் காதல் சொன்னாலே மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாலே பொன் மான் இவளா உன் வான வில்லா உன் வான் இவளா உன் வான வில்லா பெண் : உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா மருவும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா சிறுக சிறுக உன்னில் என்னை தொலைத்து மொழி சொல்லவா சொல்லால் சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேன் அல்லவா பெண் : ஏனோ நம் பொய் வார்த்தையேதான் ஏன் அதில் உன் என் மௌனமே தான் உதட்டில் சிரிப்பை தந்தாய் மனதில் கனத்தை தந்தாய் பெண் : ஒரு முறை என்னை எனக்கென்று சுவாசிக்கவா மறுமுறை உன்னை புதிதாக சுவாசிக்கவா பெண் : தீபோல் தேன்போல் சலனமேதான் மதியினும் நிம்மதி சிதையவேதான் நிழலை விட்டு சென்றாயே நினைவை வெட்டி சென்றாயே பெண் : இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா அது வரை என்னை காற்றோடு சேர்த்திடவா .......... ! --- உனக்குள் நானே ........ !
இரசித்த.... புகைப்படங்கள்.
காலத்தாலும் நம் காதலைப் பிரிக்க முடியாது . ........ பசி வந்தால் மட்டும் பிரிந்து பறந்து செல்வோம் . ........ ! 😂
களைத்த மனசு களிப்புற ......!
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் – இஸ்ரேல் பிரதமர் June 17, 2025 9:09 am ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். அமெரிக்க சேனலான ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது நெதன்யாகு இந்த அறிக்கையை வெளியிட்டார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நெதன்யாகு நியாயப்படுத்தினார், மேலும் கமேனியை ‘நவீன கால ஹிட்லர்’ என்று அழைத்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காமெனியைக் கொல்லும் திட்டத்தை நிராகரித்ததாக வெளியான செய்திகளை நெதன்யாகு மறுத்தார். “இது (காமெனியின் படுகொலை) மோதலை அதிகரிப்பதற்காக அல்ல, அதை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக” என்று நெதன்யாகு கூறினார். நெதன்யாகுவின் வாதம் என்னவென்றால், ஈரான் இஸ்ரேலைப் போருக்குத் தள்ளுகிறது. ஈரான் எப்போதும் போரை விரும்புகிறது. அது நம்மை அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குக் கொண்டு செல்கிறது. இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது. தீய சக்திகளை எதிர்ப்பதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று நெதன்யாகு கூறினார். இஸ்ரேல்-ஈரான் மோதல் முழு அளவிலான போரை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நினைத்து உலகம் கவலை கொண்டுள்ளது. நேற்று, தொடர்ந்து நான்காவது இரவும் இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடந்தன. ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் உள்ள மாவட்டம் 3 உட்பட பல இடங்களில் இஸ்ரேல் பரந்த அளவிலான தாக்குதலை நடத்தியது. ஈரானின் அரசு தொலைக்காட்சியின் தலைமையகத்தையும் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது. பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஸ்டேட் டிவியில் நேரடி செய்தி ஒளிபரப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது. ஒரு பெரிய வெடிப்பு மற்றும் ஒரு செய்தி தொகுப்பாளர் வெளியேறுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இதேபோன்ற எச்சரிக்கையை இஸ்ரேலுக்கும் விடுத்த ஈரான், டெல் அவிவ் மக்கள் விரைவில் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இலக்குகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது. https://oruvan.com/war-will-end-if-ayatollah-khamenei-is-killed-israeli-prime-minister/
பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது தமிழ்பேரவை
பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது தமிழ்பேரவை June 17, 2025 10:29 am பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளரை தெரிவு செய்வதற்கு பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் 7/4 என்ற வாக்குகளில் வெற்றிபெற்றார். இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தி.சந்திரசேகர் அவர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் வின்சன் டிபோல் டக்ளஸ்போல் ஆகிய இருவரின் பெயர்கள் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் வெற்றிபெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதில் 7/3 என்ற அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தேவசிகாமணி தேவராசேந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதில் பருத்தித்துறை நகரசபை செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சி யாழ்மாவட்ட தலைவர் ஆ.சுரேஸ்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர். https://oruvan.com/the-election-of-the-new-chairman-of-the-point-pedro-council/
கலாநிதி கீதா கோபிநாத் இன்று இலங்கை செல்கின்றாா்.
பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் Published By: DIGITAL DESK 3 17 JUN, 2025 | 09:30 AM சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவை திங்கட்கிழமை (16) அலரி மாளிகையில் சந்திதுள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமர் ஹரிணி அமர் சூரிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்திடம், பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பின்னர் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் செல்லும்போது, சர்வதேச பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை நான் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவிடம், கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையுடனான மற்றும் செயற்திறமான அணுகுமுறையை கலாநிதி கோபிநாத் பாராட்டியதுடன், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் அரசாங்கத்தின் முயற்சிகளில் சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் மீளக் கட்டியெழுப்புவதிலும் நாடு எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களையும் அவர் விசேடமாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்த சட்டகம், இலங்கையை போலவே நிதி மற்றும் கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ளும் ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது என்றும் கலாநிதி கோபிநாத் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217673
கள் இறக்கும் போராட்டத்தை சட்டம் அனுமதிக்கிறதா?
அம்மாள் வருத்தம் என்று பொக்கிளிப்பான், சின்னமுத்து போன்ற நோய்களுக்கு உள்ளாகி நான் வருந்தியபோது பனம்கள் வாங்கி வெங்காயம் போட்டு அம்மா அருந்தத் தருவா, ஓரிரு நாட்களில் நோய் பறந்துவிடும்.😆
காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ; அம்பாறையில் சம்பவம்
காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ; அம்பாறையில் சம்பவம் 17 JUN, 2025 | 10:55 AM தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் '' தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம்'' என்ற தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக திங்கட்கிழமை (16) நடைபெற்ற போது பதற்ற நிலைமை ஏற்பட்டது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதுடன் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளரால் சந்தை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை என்ற விடயத்தினால் இப்பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு தவிசாளரது பெயரை கூறி வருகை தந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டியதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு வடகிழக்கில் எங்கும் செல்வேன். என்னை எவராலும் தடுக்க முடியாது என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிரிஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்து இருக்கின்றார். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட சிறு சலசலப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று காணாமல் ஆக்கப்பட்டோரால் நடத்தப்பட்ட போராட்டத்தில் மாத்திரமல்ல தமிழன் என்ற அடிப்படையில் வடகிழக்கு பூராகவும் எங்களது இனத்துக்காகவும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதி வேண்டி தற்போதைதும் இளஞ சந்ததிகள் மற்றும் சமூகங்கள் எதிர்காலத்தில் கடத்தப்படக்கூடாது என்பதற்காகவும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றேன். இருந்தபோதிலும் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டு ருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு தடை ஏற்படத்தியுள்ளார். ஆனால் அவ்வாறான செயற்பாடுகளை மனிதனுடைய அடிப்படை உரிமை மீறல் ஆகும்.இவ்வாறான விடயங்களை தவிசாளர் என்பவர் செய்யக் கூடாது. அவ்வாறான அதிகாரம் தவிசாளருக்கு இல்லை என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அதாவது நானும் முன்னாள் தவிசாளர் என்று முறையில் எனக்கு தெரிந்த விடயத்தில் இவ்விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன். ஏனெனில் எமது வடகிழக்கு தமிழர்களின் பாதுகாப்புக்காக இவ்வாறான போராட்டங்கள் நடந்து வருகின்றது. அதன் அடிப்படையில் இன்று போராட்டம் நடைபெற்ற போது சிலர் மதுபோதையில் தவிசாளரின் இணைப்பாளர் என கூறிக்கொண்டும் நீங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட முடியாது. காரைதீவில் இருந்து நீங்கள் இவ்விடத்திற்கு வர முடியாது என்று கூறினார். நான் தமிழன் என்ற ரீதியில் எங்கு சென்றும் குரல் கொடுப்பேன் முடிந்தால் நான் இன்று மது போதையில் எங்களை எதிர்த்தவர்களுக்கு போலீஸில் முறைப்பாடு செய்ய முடியும். கடந்த ஆட்சி காலத்தில் ஒட்டுக் குழுக்களின் பின்னணியிலிருந்து இந்த இடத்தில் பல தடவை நான் அச்சுறுத்தப்பட்டேன். ஒரு தடவை கடத்தப்படவும் இருந்தேன். பாதுகாப்பான முறையில் அந்த சந்தர்ப்பத்தில் இந்த திருக்கோவில் மக்கள் எனது வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டார்கள். அவ்வாறான சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம் பெற்றிருக்கின்றது. இனிய பாரதி என்பவர் ஆயுத குழுக்களுடன் இயங்குகின்ற போது கூட நான் இந்த மக்களுக்கு உயிரை துச்சமாக மதித்து போராடியவர். ஆனால் இன்று என்னை மது போதையில் வந்து தாக்க முற்பட்டு காரைதீவு பகுதியில் இருந்து திருக்கோவில் பகுதிக்கு எவ்வாறு வருவீர்கள் என்றும் உங்களுக்கு இடுப்பில் பலம் இருக்கின்றதா என்று என்னிடம் கேட்கின்றார்கள். மேலும் நிச்சயமாக எனது இடுப்பில் பலம் இருக்கின்றது. முத்தமிழ் வித்தகர் பிறந்த மண்ணில் பிறந்தவன் நான் எல்லா தமிழ் பிரதேசங்களுக்கும் தமிழன் என்ற அடிப்படையில் நான் போராட்டங்களிலும் தமிழர்களுடைய நலன்கள் மற்றும் கடந்த கால கொரோனா காலகட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்திற்கு பிரதேச செயலாளர்கள் ஊடாக பொத்துவில் பிரதேச செயலாளர் ஊடாக ஆலையடி வேம்பு பிரதேச செயலாளரின் ஊடாக கல்முனை பிரதேச செயலாளர் ஊடாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஊடாக பட்டினியில் வாழ்ந்த எமது உறவுகளுக்கு நிவாரண பணிகளை முன்னெடுத்து அந்த உதவியை எமது சகோதரர்கள் ஊடாக மேற்கொண்டு இருந்தேன் என குறிப்பிட்டார். இந்தப் போராட்டத்தின் போது செம்மணி மனிதப் புதைகுழி உகந்த புத்த சிலை நிர்மாணம் தமிழர் காஷி அபகரிப்புகள் தொல்லியல் ஆக்கிரமிப்புகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கொல்லப்பட்டோருக்கான நீதி அரசியல் கைதிகள் விடுதலை பயங்கரவாத தடை சட்டத்தை நிறுத்துதல் போன்றவற்றிற்கு நியாயம் கேட்கும் மக்கள் போராட்டமாக இப்ப போராட்டம் அமைந்திருந்தது. இப் போராட்டத்தில் பொதுமக்கள் சிவில் அமைப்புகள் கழகங்கள் இளைஞர்கள் என பல தரப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/217681
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: நேரலையில் அதிர்ந்த கட்டிடம் ஈரான் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். இதில், ஈரான் நாட்டின் அரசு தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ஈரானின் இஸ்லாமிய குடியரசு நியூஸ் நெட்வொர்க் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது கட்டிடம் அதிர்ந்து கரும்புகை எழுந்தது, அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் ஸடூடியோவில் நேரலை நிகழ்ச்சியில் பதிவானது. முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானின் அரசு ஊடகத்துக்கு சொந்தமான தொலைகாட்சி, வானொலி நிலையம் அழிக்கப்படும் என கூறி இருந்தது கவனிக்கத்தக்கது. இதனிடையே, ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை தாக்கி அழிக்கும் வகையில் தெஹ்ரானில் உள்ள பொது மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது. இதையடுத்து அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஈரான் அரசு செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல்: திங்கட்கிழமை அன்று நேரலையில் தொகுப்பாளர் ஒருவர் ஈரான் அரசு தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து அந்த தொகுப்பாளர் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தெஹ்ரானில் உள்ள அந்த அலுவலகம் மோசமாக சேதமடைந்தது. ஈரான் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக அந்தச் செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. ‘உண்மையின் குரலை ஒடுக்கும் முயற்சி’ என இஸ்ரேலை குற்றம்சாட்டி மீண்டும் ஒளிபரப்பு தொடங்கியது. முன்னதாக, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பரவலாக தாக்குதலை நடத்தி இருந்தது இஸ்ரேல். மேலும், தாக்குதலுக்கு முன்னதாக தெஹ்ரானில் இருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்தது. இந்த அறிவிப்பை பாரசீக மொழியில் ஈரான் மக்களிடம் இஸ்ரேல் தெரிவித்தது. அதே நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என இஸ்ரேல் குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஈரான் தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு: திங்கட்கிழமை அன்று இஸ்ரேலின் பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல். ஏற்கெனவே, கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் தொடரும் நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் போர் மூளும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது. அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்று பெயரில் இந்த தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலை சேர்ந்த 24 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இதில் காயமடைந்த சுமார் 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். ஈரானில் 224 பேர் உயிரிழப்பு: கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானை சேர்ந்த 224 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. சுமார் 1,277 பேர் காயமடைந்து உள்ளதாக தகவல். இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலில் ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்கியுள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஈரான்-அரசு-தொலைக்காட்சி-அலுவலகம்-மீது-இஸ்ரேல்-தாக்குதல்-நேரலையில்-அதிர்ந்த-கட்டிடம்/50-359405 மாணவர்கள் வெளியேற தரைவழி எல்லைகளை திறந்தது ஈரான் ஈரான் - இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாணவர்கள். ஈரானில் உள்ள பெரும்பாலான இந்திய மாணவர்கள் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் வெளியேற தரைவழி எல்லைகளை ஈரான் அரசு திறந்துள்ளது. இந்நிலையில் ஈரானில் படிக்கும் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு ஈரான் அரசை, இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தங்களது தரைவழி எல்லைகளை திறந்துள்ளதாகவும், அதன் வழியாக மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என்றும் ஈரான் அரசு நேற்று அறிவித்துள்ளது. ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈரான் மீதான வான்வழி மூடப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறும் வகையில் அனைத்து தரைவழி எல்லைகளும் திறந்திருக்கும். மாணவர்கள் பாதுகாப்பாக செல்லலாம்” என்று கூறப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/மாணவர்-கள்-வெளி-யேற-தரைவழி-எல்-லைகளை-திறந்தது-ஈரான்/175-359403
வலி.வடக்கில் படையினரின் பாதுகாப்பு வேலியால் பயனற்றுப்போனது காணிவிடுவிப்பு!
வலி.வடக்கில் படையினரின் பாதுகாப்பு வேலியால் பயனற்றுப்போனது காணிவிடுவிப்பு! 15 மில்லியன் ரூபா அரச நிதி வீண்; நிதிகோரி அடம்பிடிக்கும் இராணுவம் வலி. வடக்கின் பலாலி வடக்கில் கடந்த ஆண்டு விவசாய நடவடிக்கைக்காக காணிகள் விடுவிக்கப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ளநிலையில், தற்போதும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இறுக்கமான கண்காணிப்பிலே உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காணி விடுவிப்புக்காக 15 மில்லியன் ரூபா அரச நிதி செலவு செய்யப்பட்டு அந்தக் காணிகள் துப்புரவாக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பாதுகாப்பு வேலியை அகற்ற இராணுவத்தினர் 18 மில்லியன் ரூபா தேவை எனத் தெரிவித்து காணிகளை விடுவிக்க மறுத்து வருகின்றனர். அதனால் அந்தக் காணிகள் மீண்டும் பற்றைக்காடுகளாக மாற ஆரம்பித்துள்ளன. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிவகித்தபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி ஒட்டகப்புலத்தில் நடந்த நிகழ்வில் 'உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் பலாலி வடக்கு ஜே/254, பலாலி கிழக்கு ஜே/253, பலாலி தெற்கு ஜே/252, வயாவிளான் கிழக்கு, ஜே/244.வயாவிளான் மேற்கு, ஜே/245 கிராம அலுவலர் பிரிவுகளில் 234.83 ஏக்கர் காணி விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட்டது. அவை 408 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. காணிகளை விடுவிப்பதற்காக அவை 15 மில்லியன் ரூபா அரச நிதி செலவிடப்பட்டு துப்புரவாக்கப்பட்டன. ஆயினும் காணிகள் விடுவிக்கப்பட்டுத் தற்போது 15 மாதங்கள் கடந்துள்ளபோதும். அவை இன்னமும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளன. மக்கள் அந்தக் காணிகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அங்குள்ள பாதுகாப்பு வேலி அகற்றப்பட வேண்டும். ஆயினும் அங்குள்ள பாதுகாப்பு வேலியை அகற்றிப் பின்னநகர்த்துவதற்கு 18 மில்லியன் ரூபா தேவை என்று தெரிவித்து இழுத்தடித்துவருகின்றனர். இந்தப் பாதுகாப்புவேலி அகற்றப்படா மையால் அந்தக் காணிகளைப் பயன்ப டுத்துவதில் பொதுமக்கள் பெரும் சிரமங் களை எதிர்கொண்டுள்ளனர். அந்தக் காணிகளுக்கு நீண்டதூரம் சுற்றிச் செல்லவேண்டியுள்ளதுஎன்றும், மாலை 6 மணிக்குப் பின்னர் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேநேரம் தற்காலிகக் கொட்டகைகள் அமைப்ப தற்கு மட்டுமே இராணுவத்தினர் அனும திக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித் துள்ளனர். 15 மில்லியன் ரூபா அரச நிதிச் செலவில் அந்தக் காணிகள் துப்பு ரவாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்தக் காணிகள் பற்றைக்கா டுகளாக மாறும் நிலைமை ஏற்பட் டுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியபோது, இராணு வத்தின் இந்த விடயத்தில் சரியாகப் பதில் கூறாது மழுப்பியிருந்தனர். இந்தக் காணிகளை முழுமையாக விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://newuthayan.com/article/வலி.வடக்கில்_படையினரின்_பாதுகாப்பு_வேலியால்_பயனற்றுப்போனது_காணிவிடுவிப்பு!
யாழில் திட்டமிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏன்?
யாழில் திட்டமிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏன்? யாழ். மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர். இந்நிலையிலேயே யாழ். மாவட்ட அரச அதிபர் அவசர வேண்டுகோள் ஒன்றை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், யாழ். மாவட்டத்தில் நேற்று திங்கள் கிழமை எரிபொருளுக்காக ஒரு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதாக அறிந்தேன். இன்றையதினம் அநுராதபுரத்திலிருந்து 23 பௌசர்களில், ஒரு பௌரில் 6 ஆயிரத்து 63 லீற்றர் வீதம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 800 லீற்றர் பெற்றோல் யாழ். மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. குறித்த எரிபொருட்கள் யாழ். மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, நாளையும் இதே அளவான எரிபொருள் எடுத்துவரப்பட்டு யாழ். மாவட்டதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதேபோன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காங்கேசன்துறை எரிபொருள் சேமிப்பு நிலையத்திற்கு தொடர்ச்சியாக எரிபொருள் எடுத்து வரப்பட்டு சேமிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே யாழ். மாவட்ட மக்கள் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.samakalam.com/யாழில்-திட்டமிட்ட-எரிபொர/
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
தெஹ்ரானை விட்டு மக்களை வெளியேறச் சொல்கிறார் டிரம்ப்! adminJune 17, 2025 ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அனைத்து குடிமக்களையும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ட்ரம்பின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே தலைநகர் தெஹ்ரானில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்ட பதிவை மேற்கோள் காட்டி இந்த செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அணு ஆயுத மேம்பாட்டைத் தடுப்பதற்கான ஒப்பந்தத்தை நாடு நிராகரித்ததாகக் கூறி, ஈரானியர்கள் தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார். “நான் கையெழுத்திடச் சொன்ன ‘ஒப்பந்தத்தில்’ ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன ஒரு அவமானம், மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன்! அனைவரும் உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும்!” என டிரம்ப் அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது. https://globaltamilnews.net/2025/216903/
290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம்
290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் adminJune 16, 2025 written by admin June 16, 2025 தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற சில எதிர்பாரத சம்பவங்களால் இது சவாலாகியதாக இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்திற்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துடையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்கள் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை கலந்துரையாடல் நடத்தினர். குறித்த கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் குறித்த கலந்துரையாடலில் இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏது நிலைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. ஆனால் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சில எதிர்பாரத சம்பவங்களால் இது சவாலாகியமையும் இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகப்பொறுப்புடன் கையாண்டமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அது வரவேற்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற ஒழுங்குமுறை தொடர்பாக விசேட அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட வேண்டிய முக்கியத்துவம் கலந்துரையாடப்பட்டது. இதற்காக ஒஃபர் சிலோன் நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமும் மாகாண மட்ட கலந்துரையாடலில் பெறப்பட்ட விடயங்கள் தொடர்பான ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டு ஓர் ஆவணமாகத் தயாரிக்கப்பட்டு அரச உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துக்கள் பெறப்பட்டு உரிய முறையில் அமைச்சரவைக்கு ஊடாக கௌரவ ஜனாதிபதியின் பார்வைக்கு சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மீள் திரும்புகின்ற மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தின் சகலநிலை அதிகாரிகளையும் உள்ளடக்கி மக்களின் தேவைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன், மாகாணமட்ட உயர் அதிகாரிகளை தமிழ் நாட்டிலுள்ள முகாம்களுக்கு அழைத்துச்சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக அவதானிப்புக்களை மேற்கொள்வதுடன் அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்பவை தொடர்பாகவும் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. மீள்குடியேறும் மக்களுக்கான வீட்டுத்திட்டம், வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான விசேட தேவைகளை எவ்வாறு விரைவாகப் பெற்றுக் கொடுக்கலாம் என்பதையும் நிலைத்த மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்தையும் கட்டி எழுப்புதலின் அவசியம் தொடர்பாக அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவைகளை தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. https://globaltamilnews.net/2025/216885/
வடக்கு ஆளுநரை சந்தித்த யாழ் . முதல்வர்
வடக்கு ஆளுநரை சந்தித்த யாழ் . முதல்வர் adminJune 16, 2025 வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் போது, யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார். யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பாக எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றவேண்டும் என ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2025/216890/
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
இப்போது இதை சிறுவகள் அதீதமாக பயன்படுத்துவதை தடுக்கும் சட்டங்கள் வர ஆரம்பித்துள்ளன. ஆங்கிலத்தில் Nanny state என்பார்கள். தமிழில் ஆயா-அரசு எனலாம். ஒவ்வொரு விடயத்திலும் அரசு ஒரு ஆயா போல் தலையிடுவது. இதை மக்கள் பலர் விரும்புவதில்லை. ஆகவே அரசுகள் இதை தன்மையாகத்தான் கையாளும். சிகெரெட் போல கைப்பேசிகளும் ஆபத்து என நிறுவப்படின், சிகெரெட் போலவே அவையும் படிபடியாக களையப்படும். யூகேயில் குளிர்பானங்களில் sugar tax என ஒன்றை அறிமுகபடுத்தியதால், பல நிறுவனங்கள் தம் தயாரிப்புகளில் சீனி அளவை குறைத்தன. இவ்வாறாக விஞ்ஞான புரிதல் மாற, மாற அதற்கேற்ப அரசுகளும் தம் அணுகுமுறை, நிலையை மாற்றும்.
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
புற்று நோய் பல காரணங்களால் வருவது உண்மை. ஆனால் புற்று நோயை உருவாக்கும் மிக பெரிய, ஆய்வு மூலம் ஐயம் அற நிறுவப்பட்ட காரணி சிகெரெட். இதுவும் மதுவிலக்கு போலவே. தடை செய்தால் பெரும் எதிர்ப்பு வரும், கள்ள சிகெரெட் பரவும். ஆகவே பூரண தடை சரிவராது. ஆனாலும் யூகேயில் இப்போ படிப்படியாக வாங்கும் வயதை கூட்டி, ஒரு காலத்தின் பின் பிறந்தவர்கள், அதாவது 01-01-2009 இன் பிறந்த பிள்ளைகள் வாழ்க்கையில் எப்போதும் சிகெரெட் வாங்க முடியாது என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். இப்படி மைக்ரோ பிலாஸ்டிக் உட்பட ஒவ்வொரு புற்று நோய் ஊக்கியும் மனித உணவு, பழக்க சங்கிலியில் இருந்து அகற்றபட வேண்டும். அதன் முதல்படி உள்ளதில் மோசமானதில் ஒன்றான சிகரெட். கள்ளுக்கு மட்டும் அல்ல தடை. தனிநபர்கள் தயாரிக்கும், விநியோகிக்கும் சகல மதுவுக்கும் தடை. சாராயம் போல கள்ளையும் அரசு விற்க வேண்டும் என கேட்பது லொஜிக்கலானது. ஆனால் பியரை எதிர்த்து கொண்டு கள்ளை ஆதரிப்பது வெறும் அரசியல் பம்மாத்து.
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
பூரண மதுவிலக்கு முடியாத காரியம் என்றுதானே அமெரிக்க உதாரணத்துடன் எழுதியுள்ளேன்.
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed