1 month 2 weeks ago
யாழில் வீதி புனரமைப்பை தடுத்து நிறுத்திய உபநகரபிதா! வழங்கியுள்ள விளக்கம் யாழ். சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மீசாலை அல்லாரை வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்த வீதியின் புனரமைப்பின் தரம் தொடர்பிலும் புனரமைப்பின் பொது பின்பற்றப்படுகின்ற நடைமுறை தொடர்பிலும் பொதுமக்களால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் நேற்று குறித்த வீதிக்குச் சென்ற சாவகச்சேரி உபநகரபிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டதோடு பொதுமக்களோடும் கலந்துரையாடினர். இந்நிலையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தரோடு கலந்துரையாடி அப்பகுதி மக்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு ஒன்றினை உருவாக்கிய பின்னர் வீதி புனரமைப்பு பணிகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். புனரமைப்பு வேலை அதுவரை புனரமைப்பு வேலைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் இதனை மீறி நேற்றைய தினம் புனரமைப்பு பணிகள் தொடரப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட வீதிக்கு சென்ற உபநகரபிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளரை தொடர்பு கொண்டு வீதிப் புனரமைப்பின் குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர், மக்களை தெளிவு படுத்தி கண்காணிப்பு குழு ஒன்றினை அமைக்குமாறு கேட்டதோடு அதுவரை புனரமைப்பை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து புனரமைப்பு பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதோடு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. https://tamilwin.com/article/road-reconstruction-halted-1750037253#google_vignette
1 month 2 weeks ago
ரஸ்யா - உக்ரேன் இஸ்ரேல் - பலஸ்தீன் ஈரான் - இஸ்ரேல் (+மேற்கு)
1 month 2 weeks ago
16 JUN, 2025 | 09:11 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை எவ்வாறு உபசரித்தனர் என்பதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நேருக்கு நேர் போர் களத்தில் மோதிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் அதனை செய்தனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார். களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடன் பெற்று அதனை மீள செலுத்தாமல் மோசடி செய்தமை தொடர்பில் பேசும் போது, ராஜபக்ஷர்களை நினைவு கூராவிட்டால் அது நாம் எமது பொறுப்பினை தட்டிக்கழிப்பதற்கு சமமாகும். மக்களுக்கு எவ்வித பயனும் அற்ற வேலைத்திட்டங்களுக்காக பாரிய தொகையில் கடன் பெற்று, அதனை மோசடி செய்துள்ளனர். இவ்வாறான மோசடிகளின் பலனாக 2022இல் எரிபொருள், எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாமல் அவை திரும்பிச் சென்றன. அது மாத்திரமின்றி அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைமையும் ஏற்பட்டது. ஊழல், மோசடி நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது என மக்கள் நம்பினர். அது தான் உண்மை நிலைமை என்பதே எனது நம்பிக்கையுமாகும். இளம் தலைமுறையினர் இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொண்டுள்ளனர். எனவே முந்தைய கால கட்டத்திலிருந்த அரசியல்வாதிகள் தற்போது காலாவதியாகிவிட்டனர். எனவே இந்த அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். இந்த அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்தால் முந்தைய ஊழல், மோசடி அரசியல்வாதிகள் அதனால் பலன் பெறுவார்கள். ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியடைந்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினாலும், முந்தைய ஆட்சியாளர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பளிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த போதிலும், 5 இலட்சம் வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. சஜித் பிரேமதாசவின் வாக்குகளும் 50 சதவீதத்தால் குறைவடைந்தது. எவ்வாறிருப்பினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஓரளவு வாக்குகளைப் பெற்றுள்ளதால் அதனை அடிப்படையாகக் கொண்டு பாரிய பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். 2 இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ள சஜித், அடுத்து தானே ஜனாதிபதி என எண்ணிக் கொண்டிருக்கின்றார். நாமலுக்கு 6 இலட்சம் வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன. தந்தையைப் போன்று மீண்டும் நாட்டை ஏமாற்றி பிளைக்க முடியும் என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கின்றார். எவ்வாறிருப்பினும் இவர்கள் இருவரிடமும் மக்கள் நாட்டை ஒப்படைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தற்போது இவர்களுக்கு இராணுவ வீரர்கள் மீது புது விதமான மரியாதை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்ததாக அதனை பெரும் குறையாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் அது குறித்து கவலை கொள்ளவில்லை. ராஜபக்ஷர்கள் தான் இராணுவத்தினரைக் கொண்டு இலாபம் தேட முற்படுகின்றனர். இராணுவத்திற்கு சிப்பாய்களே ஆட்சேர்க்கப்படுகின்றனர். இராணுவ வீரர்கள் அல்ல. எனவே அது வெட்கப்படக் கூடிய சொற் பிரயோகம் அல்ல. இன்று இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என அழைத்தமைக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ராஜபக்ஷர்கள், அன்று யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தளபதியான என்னை சிறையிலடைத்து நன்கு உபசரித்தனர். என்னுடன் பணியாற்றிய இராணுவத்தில் முக்கிய பதவி நிலைகளை வகித்த 35 இராணுவ அதிகாரிகள் ஓய்வூதியம் இன்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். சரத் பொன்சேக்காவை சிறையிலடைத்ததை தன்னால் அனுமதிக்க முடியாது என தற்போது நாமல் கூறுகின்றார். ஆனால் அதனை அவரது தந்தையும், சித்தப்பாவும் அனுமதித்தனர். எனது மகள்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது, அவர்கள் விமான நிலையத்தில் பல மணித்தியாலங்கள் தடுத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றனர். பிரபாகரன் கூட இவ்வாறு எமது குடும்பங்கள் மீது தாக்குதல்களை நடத்தவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் எமது குடும்பத்தினரையும் பழிவாங்கினர் என்றார். https://www.virakesari.lk/article/217625
1 month 2 weeks ago
ரஸ்யா v உக்ரேன் இஸ்ரேல் v ஈரான் மற்றது எது அண்ணை?
1 month 2 weeks ago
சிகரெட் மட்டும் என்ன காயகல்ப மருந்தா? அதுவும் ஒரு கான்சர் ஊக்கிதானே? ஒரு காலத்தில் 90கள் வரைக்கும் மேற்கில் சிகெரெட் பிடிக்காட்டி ஸ்டைல் இல்லை என்ற நிலை இருந்தது, சிறுவர் பார்க்கும் விளையாட்டுகள் எங்கினும் சிகெரெட் கம்பனிகளின் ஆதிக்கமே. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். இதே போன்ற விழிப்புணர்வுதான் தமிழ் நாட்டிலும் குடிக்கு தேவைப்படுகிறது. பூரண மதுவிலக்கு கள்ளசாராயத்தை ஊக்குவிக்கும். கள்ளுக்கும் பியருக்கும் அதிக வேறுபாடில்லை. எமக்கே தெரியும் கள்ளால் எத்தனை குடும்பங்கள் ஊரில் சீரழிந்தன என்பது. ஆகவே கள்ளை ஊக்குவிப்பது போல ஒரு மடமை வேறு இருக்க முடியாது. ஒரு முக்கியமான சமூக பிரச்சினையை திமுக , அதிமுக கொள்ளை அடிக்க பயன்படுத்துகிறது. சீமான் வாக்கு கொள்ளைக்கு பயன் படுத்துகிறார். மூவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
1 month 2 weeks ago
@கிருபன் ,@கந்தப்பு ,@goshan_che அண்ணாக்கள் யாராவது மகளிர் கிண்ணப் போட்டிகளை நடத்தலாமே?
1 month 2 weeks ago
நம்புங்க, அப்ப தான் அடுத்த போட்டியில் முதலிடம் பெறலாம்.
1 month 2 weeks ago
உக்ரெய்னில் அமெரிக்கா தனது இராணுவ தளபாட வழங்கலைக் குறைத்துக் கொண்டு அவற்றை ஈரானை நோக்கி நகர்த்துவதாக இரு வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ட்றம்ப் உக்ரெயின் போரை நிறு த்த முயற்சித்தது இதற்காகவும் இருக்கலாம். தேர்தலின் முன் உக்ரெயின் மற்றும் பலஸ்தீன போர்களை நிறுத்துவேன் என்று கூறிய ட்றம்ப், இரண்டாக இருந்த போர் முனைகளை இப்போது மூன்றாக்கியுள்ளார்.
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
வணங்காமுடி சொன்னது விஞ்ஞான ரீதியில் சரியான தகவல் தான். பொய்யல்ல. புகையிலைப் பயிர் நிலத்தின் பல போசணைப் பொருட்களை மிகக் குறுகிய காலத்தில் உறிஞ்சி நிலத்தைச் சக்கையாக்கி விடும் ஒரு பயிர். இதனைப் பணத்திற்காக விரைவில் வளர்க்க, மேலும் களை நீக்கிகளும், அசேதன உரங்களும் போடுவார்கள். இதனால், புகையிலைத் தோட்டத்திற்கு அயல் நிலங்கள் கூட மாசடையும் நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. கீழே இருக்கும் கட்டுரையில், புகையிலையைப் பணப்பயிராக வளர்க்கும் சிறிய நாடுகளில் உணவுப் பயிர்களுக்கான நிலங்கள் குறைந்து வருகின்றன என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC4669730/ ஆரோக்கியமான பயிர்களை விளைவித்து உள்ளூர் மக்களின் பசியை நீக்குவதை விட்டு விட்டு புகையிலையைப் பயிரிட்டு, பெரும் விலைக்கு விற்று, பல ஆயிரம் பேருக்கு புற்று நோயைக் கொடுத்து, பின்னர் வெளிநாட்டில் இருந்து அரிசியும், உணவுகளும் இறக்குவது எவ்வளவு புத்திசாலித்தனம் என்று தெரியவில்லை.
1 month 2 weeks ago
நான் மூன்றாவதாநம்ப முடியவில்லை. போட்டியில் வென்ற கிருபன் அண்ணா, ஈழப்பிரியன் அங்கிளுக்கும் மற்றும் போட்டியைநடாத்திய கோசானுக்கும் வாழ்த்துக்கள். அவுஸ்ரேலியாவைத்தான் தெரிவு செய்தேன் ஆனாலும் தென்னாபிரிக்கா வென்றது மிக்க மகிழ்ச்சி
1 month 2 weeks ago
ஏன் புகையிலையை சிகரெட்டுக்கான மூலப்பொருளாக ஏற்றுமதி செய்யலாம் தானே
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
சுக்ரோசு (sucrose) என்பது நாம் கரும்பில் இருந்து எடுக்கும் சீனியில் (sugar) இருப்பது. இந்த சுக்ரோசில் ஒரு குளுக்கோஸும் (glucose) ஒரு பிரக்ரோசும் (fructose) இருக்கும். உணவுக் கால்வாயில் சுக்ரோசு குளுக்கோசாகவும், பிரக்ரோசாகவும் உடைத்துத் தான் உடல் உறிஞ்சிக் கொள்ளும். குளூக்கோசை உடல் கலங்கள் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளும். பிரக்ரோசை ஈரல் மட்டும் பயன் படுத்திக் கொள்ளும். ஈரல், பிரக்ரோசைப் பயன்படுத்தி கொழுப்பை உற்பத்தி செய்து தன்னிடம் சேமித்துக் கொள்ளும், சில சந்தர்ப்பங்களில் இரத்தம் வழியாக ஏனைய உறுப்புகளுக்கும் அனுப்பி வைக்கும். இப்போது இதை யோசித்துப் பாருங்கள்: சீனியை அதிகம் எடுத்துக் கொண்டால், சுகர் வருத்தம் எனப்படும் நீரிழிவு உருவாக சீனியில் இருக்கும் குளூக்கோஸ் முதன்மைக் காரணமாக இருக்கிறது. ஆனால், சீனியில் இருக்கும் பிரக்ரோசு கொழுப்பை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவுக்கு துணைக் காரணமாகவும், உடல் பருமன் அதிகரிப்பிற்கு (obesity) முதன்மைக் காரணமாகவும் இருக்கிறது. எனவே, பிரக்ரோசு "தீங்கற்றது" என்று சொல்வது சரியாகப் படவில்லை. ஆனால்: பழங்களில் இருக்கும் பிரக்ரோசை எடுத்துக் கொள்ளும் போது, அது நார்த்தன்மையோடு சேர்ந்து உள்ளெடுக்கப் படுவதால், குடலின் ஊடாக மெதுவாக நகர்ந்து செல்லும். உடலினுள் உறிஞ்சப் படும் வேகமும் குறைவாக இருக்கும். இதனால் பழங்களில் இருந்து கிடைக்கும் பிரக்ரோசு அளவாக எடுக்கப் படும் போது தீங்குகள் குறைவு. அளவாக எடுத்துக் கொள்வது முக்கியமானது. இதை நீரிழிவு நோயாளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
1 month 2 weeks ago
இந்த சம்பவத்தை வைத்து Sully எனும் படம் 2016 இல் வெளியானது. மிகவும் சுவரசியமான படம். Netflix இல் உள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கவும்.
1 month 2 weeks ago
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள் Published By: VISHNU 16 JUN, 2025 | 06:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச மகளிர் கிரிக்கட் அரங்கில் உயரிதும் உன்னதம் வாய்ந்ததுமான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது அத்தியாயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெங்களூருவில் செப்டெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியுடன் தொடங்கவுள்ளது. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றுவதன் காரணமாக இந்த வருட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவிலும் இலங்கையிலும் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது. எனினும் இந்தப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற தனி உரிமம் இந்தியாவுக்கே இருக்கிறது. இந்த வருடம் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன்அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபற்றுகின்றன. இந்த எட்டு அணிகளும் ஒரே குழுவில் ஒன்றையொன்று எதிர்த்தாடும் வகையில் மகளிர் உலகக் கிண்ணம் நடத்தப்படுவதால் இலங்கையில் 11 போட்டிகள் நடைபெறவுள்ளது. இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் இந்தியாவை பெங்களூரிலும் 3ஆவது போட்டியில் இங்கிலாந்தை குவாஹாட்டியிலும் சந்திக்கும். மற்றைய 5 அணிகளை இலங்கை தனது சொந்த மண்ணில் எதிர்த்தாடும். இதேவேளை, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட ஏழு போட்டிகளும் கொழும்பில் நடைபெறும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் இடையில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் இரண்டு நாடுகளுக்கும் விஜயம் செய்வதில்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றன. இதன் காரணமாகவே பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் அரை இறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் முன்னேறினால் ஒரு அரை இறுதிப் போட்டியும் இறுதிப் போட்டியும் கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறினால் இறுதிச் சுற்று யாவும் இந்தியாவில் நடைபெறும். இலங்கையின் போட்டிகள் செப். 30 - எதிர் இந்தியா - பெங்களூரு அக். 04 - எதிர் அவுஸ்திரேலியா - கொழும்பு அக். 11 - எதிர் இங்கிலாந்து - குவாஹாட்டி அக். 14 - எதிர் நியூஸிலாந்து - கொழும்பு அக். 17 - எதிர் தென் ஆபிரிக்கா - கொழும்பு அக். 20 - எதிர் பங்களாதேஷ் - கொழும்பு அக். 24 - எதிர் பாகிஸ்தான் - கொழும்பு முழு அட்டவணை (Full Schedule) https://www.virakesari.lk/article/217658
1 month 2 weeks ago
ஈரானிற்குள் வைத்து தாக்குதலை மேற்கொள்வதற்காக மொசாட் ஆளில்லா விமானங்களை எப்படி கொண்டு சென்றது? வோல்ஸ்ரீட் ஜேர்னல் Published By: RAJEEBAN 16 JUN, 2025 | 04:00 PM ஈரான் மீதான தாக்குதல் இடம்பெறுவதற்கு முந்தைய மாதங்களில் இஸ்ரேல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஈரானிற்குள் இரகசியமாக கொண்டு சென்றது என அவற்றை பயன்படுத்தி வான்தாக்குதலை ஈரான் தடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது என அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து நன்கறிந்த வட்டாரங்களின் தகவல்களின்படி சூட்கேஸ்கள் டிரக்குகள் டாங்கர்கள் மூலம் இஸ்ரேல் இந்த ஆளில்லா விமானங்களைவெடி பொருட்களுடன் ஈரானிற்குள் கொண்டு சென்றது என தெரிவித்துள்ளன. ஈரானிற்குள் வர்த்தக நோக்கங்களுடன் செல்லும் வாகனங்களை பயன்படுத்தி ஆளில்லா விமானங்களை மொசாட் கொண்டு சென்றது ஈரானிற்குள் இருந்த அதன் முகவர்கள் அவற்றை பொருத்தினார்கள். அதன் பின்னர் வார இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட குழுவினரிடம் கையளித்தனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானிற்குள் செயற்படும் குழுக்களின் தலைவர்களிற்கு முதலில் மூன்றாவது நாடொன்றில் வைத்து பயிற்சியளித்தது இஸ்ரேல், அதன் பின்னர் அவர்கள் ஈரானிற்குள் இருந்த தங்கள் அணிகளிற்கு உத்தரவுகளை வழங்கினார்கள். நடவடிக்கை ஆரம்பமானதும், இஸ்ரேலின் இரகசிய படைப்பிரிவினர் ஈரானின் வான்பாதுகாப்பு நிலைகளிற்கும் ஏவுகணை ஏவும் பகுதிகளிற்கு அருகிலும் நிலைகொண்டனர். வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்ததும் இஸ்ரேலின் சில அணியினர் ஈரானின் விமான எதிர்ப்பு பொறிமுறைகளை செயல் இழக்கச்செய்தனர், ஏனையவர்கள் ஏவுகணை செலுத்திகளை இலக்குவைத்தனர். ஏவுகணைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட பல டிரக்குகளும் தாக்கப்பட்டன. ஈரானால் ஏன் ஆரம்பத்தில் பதில் நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை என்பதை இஸ்ரேலின் இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துகின்றது. புதுமையான விதத்தில் செலவின்றி ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது. ரஸ்யாவின் விமானங்களை தாக்குவதற்காக உக்ரைன் இவ்வாறான தந்திரோபாயங்களை பயன்படுத்திய சில நாட்களின் பின்னர் இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள இவ்வாறான விதத்தில் பயன்படுத்தியுள்ளது. ஈரான் தனது ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை இல்லாமல் செய்வதற்கு மொசாட்டின் ஆளில்லா விமான நடவடிக்கை உதவியது என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. பயன்படுத்துவதற்கான நிலையில் காணப்பட்ட பல ஏவுகணைகளை இஸ்ரேலின் விசேட படைப்பிரிவுகள் அதிகாலையில் அழித்தன. இதன் பிறகே ஈரான் வெள்ளிக்கிழமை முதல் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதனால் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டுள்ளன எனினும் இஸ்ரேல் இதனை விட கடுமையான பதில் தாக்குதலை எதிர்பார்த்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மொசாட் இந்த நடவடிக்கைக்காக பல வருடங்களாக திட்டமிடல்களை மேற்கொண்டது என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், மற்றும் தனது விசேட படைப்பிரிகளை எங்கு நிறுத்தவேண்டும் போன்ற விடயங்கள் குறித்து திட்டமிடல்களில் இஸ்ரேல் பல வருடங்களாக ஈடுபட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217633
1 month 2 weeks ago
16 JUN, 2025 | 04:58 PM முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் வாட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிட தேசிய முதியோர் செயலகத்தின் 0707 89 88 89 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தை பயன்படுத்த முடியும். இந்த வாட்ஸ்அப் இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் 15 அன்று அனுசரிக்கப்படும் உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217645
1 month 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூயார்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சித்தாநாத் கானு பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து 155 பேருடன் ஒரு விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தில் மோதியது. இதையடுத்து, விமானத்தை விமான நிலையத்துக்கு திருப்புவது இனி சாத்தியமில்லை என்பதை விமானி உடனடியாக உணர்ந்தார். எனவே, அவர் விமானத்தை ஆற்றில் தரையிறக்கினார். அது, யுஎஸ் ஏர்வேஸ் 1549 எனும் விமானம். நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் விமானம் தரையிறக்கப்பட்டதால், இச்சம்பவம், 'மிராக்கிள் ஆஃப் ஹட்சன்' என்றும் அறியப்படுகிறது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிர்தப்பினர். முன்னெப்போதும் இல்லாத வகையில் விமானத்தை 'நீரில் தரையிறக்கிய' விமானி செஸ்லீ சல்லன்பெர்கர் என்கிற சல்லி. விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் செயலிழந்தன பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பலத்த நீர் ஓட்டம் இருந்தபோதிலும், எந்த பயணிக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை மையமாக வைத்து 2016ம் ஆண்டில் 'சல்லி' ('Sully') எனும் படமும் வெளியானது, அதில் விமானி கதாபாத்திரத்தில் டாம் ஹேங்க்ஸ் நடித்திருந்தார். 2009ம் ஆண்டு ஜனவரி 15 அன்று நடந்த இச்சம்பவத்தில், நியூ யார்க்கின் லாகார்டியா விமான நிலையத்திலுருந்து வட கரோலினாவுக்கு விமானம் செல்லவிருந்தது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ஹஸ்டன் நதியில் இறங்கியது. விமானம் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே, அதில் பறவைக் கூட்டம் மோதியதால், விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் பழுதடைந்தன. அதன்பின், விமானத்தின் அனுபவம் வாய்ந்த விமானி சல்லன்பெர்கர், லாகார்டியா விமான நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் தான் ஹட்சன் நதியில் விமானத்தை தரையிறக்குவதற்கு முயற்சி செய்வதாக கூறினார். இது மிகவும் அசாதாரணமான, மிகவும் ஆபத்தானதாகும். சுமார் மூன்றரை நிமிடங்கள் பறவைகள் விமானத்தில் மோதிய பின், அந்த விமானம் நதியில் தரையிறக்கப்பட்டது. அப்போது, விமானத்தின் பின்பகுதி தான் முதலில் ஆற்றில் இறங்கியதால், தண்ணீர் விமானத்துக்குள் புகுந்தது. ஆனால், இது விமானத்தை துண்டுதுண்டாக நொறுக்கவில்லை. அவசரகால கதவுகள் மற்றும் அதன் இறக்கை பகுதிகள் வாயிலாக பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறினர். அப்போது, விமானம் நீரில் மிதப்பதையும் அதன் இருபுறமும் உள்ள இறக்கையின் மேலே பயணிகள் நிற்பதையும் காட்டும் தனித்துவமான படத்தை இந்த உலகம் கண்டது. மோசமான குளிரில் மீட்பு நடவடிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமானம் ஹட்சன் ஆற்றில் தரையிறங்கியபோது உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். விமானம் ஆற்றில் தரையிறக்கப்பட்ட சமயத்தில், ஹட்சன் நதியில் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நியூ யார்க்கில் ஜனவரி மாதம் மிகவும் குளிராக இருக்கும். இச்சம்பவம் நடந்த நாளில் வெப்பநிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால், ஆற்றில் விமானம் இறங்கிய சில நிமிடங்களிலேயே அருகே இருந்த படகுகள் மற்றும் கப்பல்கள் அப்பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. இந்த துரிதமான நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இத்தகைய அசாதாரணமான, ஆபத்தான முறையில் விமானம் நீரில் இறங்கியதால், ஒரேயொரு பயணிக்கும், விமானக்குழுவினர் ஐந்து பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. 78 பேருக்கு சிறியளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அச்சமயத்தில் செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர், பயணிகளின் அதிர்ஷ்டத்தாலும் விமானியின் திறன் மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கைகளாலும் அனைவரும் உயிர் தப்பியதாக கூறியிருந்தார். அப்போதைய நியூ யார்க் மேயர் ப்ளூம்பெர்க் ஊடகத்திடம், "ஆற்றில் விமானத்தை தரையிறக்கி விமானி சிறப்பாக செயல்பட்டதாக" தெரிவித்தார். விமானம் ஆற்றில் இறங்கியவுடன், யாரேனும் விமானத்துக்குள் சிக்கியுள்ளனரா என முழு விமானமும் இருமுறை பரிசோதிக்கப்பட்டது. விமானி சல்லன்பெர்கர் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரிதும் பாராட்டப்பட்டார், ஆனால் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன. விமானி சல்லன்பெர்கர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தன்னுடைய துரிதமான முடிவுக்காக விமானி சல்லன்பெர்கர் இன்றும் அறியப்படுகிறார் அமெரிக்காவின் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு இதுகுறித்து விசாரித்தது. ஆற்றில் விமானத்தை தரையிறக்கிய முடிவு சரியானதுதான் என, விசாரணையை அந்த அமைப்பு முடித்துவைத்தது. சில நாட்களில், குறிப்பிட்ட விமானம் ஆற்றிலிருந்து அகற்றப்பட்டு, அமெரிக்காவின் கரோலினாஸ் ஏவியேஷன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. விமானி சல்லன்பெர்கர் தன் 16வது வயதில் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை தொடங்கினார். அமெரிக்காவின் விமானப் படை அகாடமியில் 1973ம் ஆண்டு அவர் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் விமானப் படையில் போர் விமானியாக இணைந்தார். 1980ம் ஆண்டில் தனியார் விமானப் போக்குவரத்து துறையில் விமானியாக இணைந்தார். அவசரகாலத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட உதாரணமாக இச்சம்பவம் உள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்பாக விமானி சல்லன்பெர்கர் 20,000 மணிநேர பயண அனுபவத்தைக் கொண்டிருந்தார். சுமார் 40 ஆண்டுகள் அவர் விமானியாக இருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9v97er3m0o
Checked
Sat, 08/02/2025 - 11:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed