புதிய பதிவுகள்2

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
"ஈரானிற்குள் ஆளில்லா விமான தளங்களை அமைத்த மொசாட் - தெஹ்ரானின் புலனாய்வாளர்களின் கண்களில் மண்ணை தூவிட்டு ஈரானின் மையப்பகுதியில் செயற்பட்ட விசேட படைப்பிரிவினர் ";- இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அதிகாரிகள் தகவல் Published By: RAJEEBAN 13 JUN, 2025 | 02:00 PM இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் இராணுவ கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளிற்காக பலவருடங்களாக திட்டமிடலில் ஈடுபட்டது என அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் டைம்ஸ் ஒவ் இஸ்ரேலிற்கு தெரிவித்துள்ளனர். இது குறித்து டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் இராணுவ கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளிற்காக பலவருடங்களாக திட்டமிடலில் ஈடுபட்டது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரானிற்குள் ஆளில்லா விமானதளமொன்றை மொசாட் உருவாக்கியது. துல்லியமாக தாக்கும் ஆயுதங்களையும் கொமாண்டோக்களையும் ஈரானிற்குள் கொண்டு சென்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் திட்டம் வெற்றிபெறுவது மொசாட்டும் இஸ்ரேலிய இராணுவமும் இணைந்து முன்னெடுத்த திட்டமிடலிலேயே தங்கியிருந்தது. ஈரான் தலைநகர் டெஹ்ரானிற்கு அருகில் மொசாட் ஆளில்லா விமானதளமொன்றை ஏற்படுத்தியது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆளில்லா விமானங்களை நேற்றிரவு இஸ்ரேல் பயன்படுத்தியது அதிலிருந்து ஏவுகணைகளை ஈரானின் இலக்குகளை நோக்கி செலுத்தியது. மேலும் ஆயுத அமைப்புகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ஈரானிற்குள் கொண்டு செல்லப்பட்டன. இவற்றை பயன்படுத்தி ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு முறைகளை செயல் இஸ்ரேல் செயல் இழக்க செய்தது. இது இஸ்ரேலிய விமானங்கள் ஈரானின் வான்பரப்பில் சுதந்திரமாக செயற்படக்கூடிய நிலையை ஏற்படுத்தியது. மூன்றாவது இரகசிய முயற்சியாக இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட்டின் கொமான்டோக்கள் மத்திய ஈரானில் உள்ள விமான எதிர்ப்பு நிலைகளிற்கு அருகில் துல்லியமாக தாக்க கூடிய ஏவுகணைகளை நிலைகொள்ளச்செய்திருந்தனர். முன்னர் ஒருபோதும் இல்லாத மிகவும் புதுமையான சிந்தனை, மிகவும் துணிச்சலான திட்டமிடல் நவீன தொழில்நுட்பங்களை மிகவும் துல்லியமாக பயன்படுத்துதல், விசேட படைப்பிரிவினர் உள்ளுர் புலனாய்வாளர்களின் கண்களில் மண்ணை தூவிட்டு ஈரானின் மையப்பகுதியில் செயற்பட்ட முகவர்கள் ஆகியவற்றினை இந்த நடவடிக்கை நம்பியிருந்தது என அதிகாரியொருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217359

இந்திய விமானம் விபத்துக்குள்ளானது

1 month 2 weeks ago
ஆமதாபாத் விமான விபத்தில் இருந்து இவரை காப்பாற்றிய அந்த '5 நிமிடங்கள்' - என்ன நடந்தது? பட மூலாதாரம்,BHUMI CHAUHAN. படக்குறிப்பு, போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், இணையதளம் மூலம் விமானத்தில் செக்-இன் செய்ததாக பூமி கூறினார். கட்டுரை தகவல் எழுதியவர், பார்கவ் பரிக் பதவி, 13 ஜூன் 2025, 08:19 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் வியாழக்கிழமையன்று மதியம் (நேற்று), 30 வயதான பூமி சவுகான் விமானத்தை தவறவிட்டதால் வருத்தமடைந்தார். ஆனால் விரைவிலேயே, அதற்காக அவர் நன்றி தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் தவறவிட்ட ஏர் இந்தியா விமானம், ஆமதாபாத்திலிருந்து 242 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. பூமி சவுகான் அந்த விமானத்தில் பயணிப்பதற்காக குஜராத்தில் உள்ள அங்கலேஷ்வரில் இருந்து சாலை வழியாக பயணம் மேற்கொண்டார். "நாங்கள் சரியான நேரத்தில் ஆமதாபாத்தை அடைந்தோம். ஆனால் நகரத்தில் இருந்த போக்குவரத்து நெரிசலால், நான் விமான நிலையத்தை ஐந்து நிமிடங்கள் தாமதமாகத்தான் அடைந்தேன். என்னை விமான நிலையத்துக்குள் அனுமதிக்கவில்லை, முதலில், நான் டிக்கெட் பணத்தை இழந்துவிட்டேன், வேலையை இழக்க நேரிடும் என்றும் நான் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது, நன்றியோடு இருக்கிறேன்... பணம் போயிருக்கலாம். ஆனால் என் உயிர் காப்பாற்றப்பட்டது"என்று சவுகான் பிபிசியிடம் கூறினார். "நான் படிப்பிற்காக இங்கிலாந்து சென்று பகுதி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தேன். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து எனது சொந்த ஊரான அங்கலேஷ்வருக்கு திரும்பி வந்தேன்," என்று கூறிய அவர், "நான் இங்கு ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்தேன். எனது விடுமுறை முடிந்துவிட்டதால் நான் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது" என்று குறிப்பிட்டார். போக்குவரத்து நெரிசலால், இணையதளம் மூலம் விமானத்தில் செக்-இன் செய்ததாக பூமி கூறினார். ஆனால் விமானத்தில் ஏற அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. "நான் தாமதமாக வந்தேன் என்றும், குடிவரவு செயல்முறையும், போர்டிங்கும் முடிந்துவிட்டதனால் என்னால் விமானத்தில் ஏற முடியாது என்றும் ஏர் இந்தியா ஊழியர்கள் கூறினார்கள்," "நான் வேலையை இழந்துவிடக் கூடும், டிக்கெட் பணமும் போய்விடும் என்று பலமுறை கெஞ்சினேன். யாரும் கேட்கவில்லை. பணத்தைத் திரும்பக் கேட்டேன், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்."என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். பின்னர். விமான நிலையத்திலிருந்து வெளியேறி, வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்திய போது தான் அந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதை பூமி உணர்ந்தார். "நாங்கள் டீ குடிக்கலாம் என்று வண்டியை நிறுத்தி, எங்கள் பயண முகவருடன் பணத்தை திருப்பி பெறுவது பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தான் அங்கலேஷ்வரிலிருந்து, நான் ஏறவிருந்த விமானம் விபத்துக்குள்ளானது என்று அழைப்பு வந்தது," என்று பூமி கூறுகையில், அவரது குரல் அதிர்ச்சியில் நடுங்கியது. "நாங்கள் உடனே ஒரு கோவிலுக்குச் சென்று கடவுளுக்கு நன்றி கூறினோம்... ஆமதாபாத்தின் போக்குவரத்து நெரிசல்தான் என் உயிரைக் காப்பாற்றியது"என்றார் பூமி. பட மூலாதாரம்,BHUMI CHAUHAN. படக்குறிப்பு, பூமி சவுகான் லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், 7 போர்ச்சுகீசியர்கள் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் அந்த விமானத்தில் பயணித்தார். விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், BHUMI CHAUHAN. படக்குறிப்பு,"நான் படிப்பிற்காக இங்கிலாந்து சென்று பகுதி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தேன். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து எனது சொந்த ஊரான அங்கலேஷ்வருக்கு திரும்பி வந்தேன்," என்று கூறினார் பூமி. "விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. எல்லாம் மிக விரைவாக நடந்தது" என விஸ்வாஸ் கூறியதாக சில இந்திய செய்தி முகமைகள் தெரிவிக்கின்றன. விஸ்வாஸ் குமார் ரமேஷ் அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் 11A இருக்கையில் பயணம் செய்தார் என்று ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cyvmdp36697o

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

1 month 2 weeks ago
ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று 13 JUN, 2025 | 01:05 PM ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெள்ளிக்கிழமை (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்களின் (Tourism and Travel Industry Associations) பிரதிநிதிகளின் சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளார். அதன் பின்னர், ஜனாதிபதி ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் (DIHK) ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மாநாட்டிலும் கலந்து கொள்வார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனுக்கும் (Reem Alabali-Radovan) இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் பேர்லினில் உள்ள வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. பின்னர், ஜனாதிபதி ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/217351

‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’

1 month 2 weeks ago
கட்டுரையாளர் தமிழரசு கட்சியை அவமதிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒரு தற்குறியை இங்கே கொண்டு வந்து அவமதிக்க முயற்ச்சி செய்கின்றார். தமிழரசு கட்சி யாழ்பாணம் மாநகர சபை நல்லூர் பிரதேச சபையில் அதிகாரத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது வாழ்த்துக்கள்

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!

1 month 2 weeks ago
இது எத்தனை வருடங்கள் இருக்கும்? ஒரு விடயத்தில் கருத்து களத்தில் ஒருவருடன் ஏற்படும் கருத்து முரண்பாட்டை வைத்து அவருக்கு இந்த வியாதி என்றபடி வருடங்கள் கழித்தும் சுமந்து திரியும் உங்கள் வியாதியை என்னவென்பது....

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
ஆனால் இது உலகுக்கு உலக மக்களுக்கு ஆபத்தான சகிம்சை. மக்கள் விரும்பும் தலைவர்களை அழித்து தலைவர்களின் தேர்வு மக்களின் கைகளில் இருந்து ஒரு சிலரின் கைகளுக்கு போய் விடும் ஆபத்திருக்கிறதே.

வடக்கு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பற்ற உரையாடல்

1 month 2 weeks ago
அர்ச்சுனா ஒரு பைத்தியம்தான். இந்தப் பைத்தியத்தினால்தான் நாங்கள் கடவுளுக்கு நிகராக வரித்துக்கொண்ட வைத்தியப் பெருமக்களில் கொடூரர்களும் புகுந்து ஒழிந்திருப்பது தெரியவந்தது. அர்சுனா மோதுவது எளியோரோடல்ல, மக்களைச் சுரண்டிவாழும் பெரும் வலியாரோடு.😳

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

1 month 2 weeks ago
இதில் முக்கிய பிரச்சனை தமிழ்நாடு (தொல்லியல் துறை) நிலைப்பாட்டை அறிவிக்காதது. அந்த இடத்தில், பாலகிருஷ்ணன் போன்றோர் அதை அரசியல் ஆக்க முயன்றது. அவரின் நிலையில் அதை செய்து இருக்க கூடாது. தமிழ்நாடு ஒரு போதும் எதிர்பார்க்காத, ஆனால் சர்வசாதரணமாக சர்வதேச தொல்லியல் ஆய்வில் நடக்கும் விடயம். இந்திய தொல்லியல் துறை சர்வதேச தொல்லியல் விதிமுறைகளை பின்பற்றுகிறது. (நீங்கள் சொல்லும் தமிழ்நாட்டுக்கு தெரியும் என்றால், ஏன் இந்த நிலை?).

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ......... ! பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான் உன் ஸ்டைலுக் கேத்த மயிலு நானுதான் ஓ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி ஆண் : { பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான் இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான் } (2) ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி ஆண் : காதலிச்சா கவிதை வரும் கண்டு கொண்டேன் பெண்ணாலே பெண் : கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே ஆண் : எங்கெங்கே ஷாக் அடிக்கும் அறிந்துக்கொண்டேன் பெண்ணாலே பெண் : எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்து கொண்டேன் உன்னாலே ஆண் : காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே மோந்து பார்க்கும் முன்னே முள்ளெடுத்து குத்தாதே பெண் : அழகு ராஜாவே அவசரம் ஆகாதே மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே ஆண் : அடி ராத்திரி வரவே என் ரகசிய செலவே ஒரு காத்தடிக்குது சோ்த்தணைக்கணும் காத்திரு நிலவே பெண் : பச்சரிசி பல்லழகா பால் சிரிப்பில் கொல்லாதே ஆண் : அழகு மணி தேரழகி அசைய விட்டே கொல்லாதே பெண் : நெத்தி தொடும் முடியழகா ஒத்தை முடி தாராயோ ஆண் : கட்டை மலர் குழலழகி ஒத்தை மலர் தாராயோ பெண் : அங்கே தீண்டாதே ஆசை தூண்டாதே சும்மா கிடந்த சங்க ஊதி விட்டு போகாதே ஆண் : ஊடல் கொள்ளாதே உள்ளம் தாங்காதே தலைவி காய்ச்சல் கொண்டால் தலையணையும் தூங்காதே பெண் : அட கெட்டது மனசு வந்து முட்டுது வயசு உன்ன பார்த்த பொழுது வேர்த்த பெண்களில் நானொரு தினுசு பெண் : ஹேய் டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ ஆண் : அட கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு மீ பெண் : ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி ....... ! --- ஸ்டைலு ஸ்டைலு தான் ---
Checked
Sun, 08/03/2025 - 12:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed