1 month 2 weeks ago
தரம் குறைந்த காணொளிகளின் அடிப்படையில் வைக்கப்படும் கருத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினரை பாதிக்கும், மக்களும் ஊடகங்களும் முழுமையான விசாரணை முடியுமட்டும் பொறுமை காக்கவேண்டும்.
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் ஹேடன், அம்லா, தோனி, ஸ்மித், வெட்டோரி, சானா மிர், சாரா டெய்லர் 11 JUN, 2025 | 05:50 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் (ICC Hall of Fame) இந்தியாவின் முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ். தோனி உட்பட புதிதாக எழுவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள அபே ரோட் அரங்கில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்வின்போது இந்த ஏழு பேரும் இப் பட்டியலில் உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்ளப்பட்டனர். இந்த ஏழு பேரில் இருவர் தென் ஆபிரிக்காவை சேர்ந்தவர்கள். அத்துடன் இரண்டு முன்னாள் வீராங்கனைகளும் அடங்குகின்றனர். அவுஸ்திரேலியாவின் மெத்யூ ஹேடன், தென் ஆபிரிக்காவின் ஹஷிம் அம்லா, இந்தியாவின் மஹேந்த்ர சிங் தோனி, தென் ஆபிரிக்காவின் க்றேம் ஸ்மித், நியூஸிலாந்தின் டெனியல் வெட்டோரி, பாகிஸ்தானின் சானா மிர், இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகிய ஏழு பேரே புகழ்பூத்த வீரர்கள் பட்டியலுக்குள் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஏழு புதிய உறுப்பினர்களையும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா வைபவரீதியாக வரவேற்றார். புகழ்பூத்த வீரர்கள் மெத்யூ ஹேடன் (அவுஸ்ரேலியா) 103 டெஸட்கள், 8625 ஓட்டங்கள், சராசரி 50.73 161 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 6133 ஓட்டங்கள், சராசரி 43.80 9 சர்வதேச ரி20 போட்டிகள், 308 ஓட்டங்கள், சராசரி 51.33 1 photo mathew hayden சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலகம் முழுவதும் உள்ள மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களை சிதறடித்த அதிரடி ஆட்டக்காரரான மெத்யூ ஹேடன், ஐசிசியின் புகழ்பூத்த வீரர்களுக்கான பிரத்தியேக பட்டியலில் இணைகிறார். 30 டெஸ்ட் சதங்களைக் குவித்துள்ள மெத்யூ ஹேடன், ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓர் அதிசிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராவார். 50 ஓவர் கிரிக்கெட் வடிவத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட மெத்யூ ஹேடன், 2007 உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் அத்தியாத்தில் 3 சதங்களைக் குவித்ததுடன் அந்தத் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரரானார். 2003இலும் 2007இலும் உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணிகளில் மெத்யூ ஹேடன் இடம்பெற்றார். தற்போது அவர் நேர்முக வர்ணனையாளராக செயற்படுகிறார். ஹஷிம் அம்லா (தென் ஆபிரிக்கா) 124 டெஸ்ட்கள், 9282 ஓட்டங்கள், சராசரி 46.64 181 ஒருநாள் போட்டிகள், 8113 ஓட்டங்கள், சராசரி 49.46 44 ரி20 போட்டிகள், 1277 ஓட்டங்கள், சராசரி 33.60 நிதானமும் பொறுமையும் கொண்ட ஒரு சிறந்த முன்வரிசை வீரர் ஹஷிம் அம்லா ஆவார். தென் ஆபிரிக்காவின் நிலையான மற்றும் உறுதியான வீரராகத் திகழ்ந்த அம்லா, ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைவதற்கு மிகவும் பொறுத்தமானவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆம்லாவின் ஒட்டுமொத்த சாதனை மிகச் சிறந்ததாக இருந்தது. மேலும் 50 ஓவர் வடிவத்தில் இன்னும் சிறப்பாக இருந்தது. எத்தகைய சூழ்நிலைகளிலும் ஓட்டங்களை மிக இலகுவாக குவித்து அனைவரையும் பிரமிக்கவைத்தவர். வலதுகை துடுப்பாட்ட வீரரான அம்லா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000, 5000, 7000 ஓட்டங்களை மிகவேகமாக பூர்த்திசெய்தவர் என்ற சாதனைக்கு உரித்தானவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 28 சதங்களையும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 27 சதங்களையும் குவித்து தனது ஆற்றல் எத்தகையது என்பதை நிரூபித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 311 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் தென் ஆபிரிக்கா சார்பாக முச்சதம் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 90 டெஸ்ட்கள், 4876 ஓட்டங்கள், சராசரி 38.08, 256 பிடிகள், 38 ஸ்டம்ப்கள் 350 ஒருநாள் போட்டிகள், 10775 ஓட்டங்கள், சராசரி 50.57, 321 பிடிகள், 123 ஸ்டம்ப்கள் 91 ரி20 போட்டிகள், 1617 ஓட்டங்கள், சராசரி 37.60, 57 பிடிகள், 54 ஸ்டம்ப்கள் எம்.எஸ். தோனி தனது நீண்டகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல சிறப்பம்சங்களை உருவாக்கியுள்ளார். அத்துடன் ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டவர்களில் மிகவும் பிரபல்யம் பெற்ற வீரர் தோனி ஆவார். 2011இல் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக வெற்றி ஓட்டங்களை அடித்தபோது, தனது முத்திரை ஹெலிகாப்டர் அடிகளில் ஒன்றை அவர் உருவாக்கியது அவரது வாழக்கையில் மறக்கமுடியாத தருணம் ஆகும். மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறந்த, துடிப்பான விக்கெட் காப்பாளாராக அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதேவேளை, கடைசி ஓவர்களில் வெற்றி இலக்கை விரட்டிக் கடக்கும் ஆற்றல் அவரிடம் குடிகொண்டிருந்ததால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பிரபல்யம் பெற்றார். இரசிகர்களாலும் பெரிதும் கவரப்பட்டார். 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி ரி20 உலகக் கிண்ணம், 2011 உலகக் கிண்ணம், 2013 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய மூன்று கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த அற்புதமான அணித் தலைவர் தோனி ஆவார். இந்த மூன்று கிண்ணங்களை வென்றெடுத்த ஒரே ஒரு அணித் தலைவர் என்ற சாதனையை தோனி தன்னகத்தே இப்போதும் கொண்டுள்ளார். க்றேம் ஸ்மித் (தென் ஆபிரிக்கா) 117 டெஸ்ட் போட்டிகள், 9265 ஓட்டங்கள், சராசரி 48.25 197 ஒருநாள் போட்டிகள், 6989 ஓட்டங்கள், சராசரி 37.98, 18 விக்கெட்கள். 33 ரி20 போட்டிகள், 982 ஓட்டங்கள், சராசரி 31.67 மிகச் சிறந்த ஆரம்ப வீரராகவும் எவ்வித கேள்விக்கும் இடமின்றி ஒரு சிறந்த அணித் தலைவராகவும் அனைவராலும் போற்றப்பட்டவர் க்றேம் ஸ்மித். கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு கடுமையான மற்றும் ஈடினையற்ற ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக ஸ்மித் உயர்ந்து நின்றார். இளம் வயதில் தென் ஆபிரிக்காவின் அணித் தலைவராக வரவேண்டும் என்ற அவரது கனவு வீண்போகவில்லை. புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றதில் மிகுந்த பெருமை அடைவதாக ஸ்மித் கூறினார். டெனியல் வெட்டோரி (நியூஸிலாந்து) 113 டெஸ்ட் போட்டிகள், 4531 ஓட்டங்கள், சராசரி 30.00, 362 விக்கெட்கள் 295 ஒருநாள் போட்டிகள், 2253 ஓட்டங்கள், சராசரி 17.33, 305 விக்கெட்கள் 34 டி20 போட்டிகள் - 12.81 சராசரியுடன் 205 ரன்கள், 38 விக்கெட்கள் ஒரு சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் மத்திய மற்றும் பின்வரிசையில் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் டெனியல் வெட்டோரி பிரகாசித்தார். ஐசிசியின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்படதன் மூலம் பெருமை அடைவதாக அவர் கூறினார். வெட்டோரி ஒரு சிறந்த சகலதுறை வீரராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000 ஓட்டங்களைக் குவித்து 300 விக்கெட்களை வீழ்த்திய மூன்று வீரர்களில் ஒருவராக வெட்டோரி திகழ்கிறார். அவர் 'பிளக் கேப்ஸ்' அணிக்கு ஒரு சிறந்த தலைவராகவும் இருந்தார். ஸ்டீவன் ப்ளெமிங் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் நியூஸிலாந்து அணியின் தலைவர் பதவியை வெட்டோரி பொறுப்பேற்றார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து அணியை வழிநடத்தி இருந்தார். தற்போது ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்றுநராக வெட்டோரி செயற்படுகிறார். சானா மிர் (பாகிஸ்தான்) 120 ஒருநாள் போட்டிகள், 1630 ஓட்டங்கள், சராசரி 17.91, 151 விக்கெட்கள் 106 ரி20 போட்டிகள், 802 ஓட்டங்கள், சராசரி 14.07, 89 விக்கெட்கள் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகத் திறமையான ஆற்றல்களை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்ட முதலாவது பாகிஸ்தான் வீராங்கைனை என்ற பெருமையை சானா மிர் பெற்றுக்கொண்டுள்ளார். இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியுள்ள மிர், மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியேயும் தனது சிறந்த சமூகப் பணிக்காகப் பெயர் பெற்றவர். சாரா டெய்லர் (இங்கிலாந்து) 10 டெஸ்ட் போட்டிகள், 300 ஓட்டங்கள், சராசரி 18.75, 18 பிடிகள், 2 ஸ்டம்ப்கள், 126 ஒருநாள் போட்டிகள், 4056 ஓட்டங்கள், சராசரி 38.26, 87 பிடிகள், 51 ஸ்டம்ப்கள் 90 டி20 போட்டிகள், 2177 ஓட்டங்கள், சராசரி 29.02, 23 பிடிகள், 51 ஸ்டம்ப்கள் அண்மைய காலங்களில் மிகவும் திறமையான வீராங்கனைகளில் ஒருவரான சாரா டெய்லர், இங்கிலாந்தின் நட்சத்திர வீக்கெட்காப்பாளரும் துடுப்பாட்ட வீராங்கனையுமாவார். 14 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர்ந்து ஐசிசியின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் சாரா டெய்லர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். மின்னல் வேக விக்கெட் காப்பாளர் என்ற பெயர் பெற்றவர். விக்கெட் காப்பாளராக அவர் மொத்தமாக 103 ஸ்டம்ப்களை செய்துள்ளார். அத்துடன் அவர் ஒரு திறமையான முன்வரிசை துடுப்பாட்ட வீராங்கனையும் ஆவார். ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தையும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தையும் 2009இல் இங்கிலாந்து சுவீகரித்தபோது அவ் வெற்றிகளில் சாரா டெய்லர் பெரும் பங்காற்றியிருந்தார். எட்டு வருடங்கள் கழித்து 2017இல் நடைபெற்ற உலக்க கிண்ணத் தொடரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த சாரா டெய்லர், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 45 ஓட்டங்களைப் பெற்று தனது சொந்த நாட்டில் இங்கிலாந்து சம்பியனாவதை உறுதிசெய்திருந்தார். https://www.virakesari.lk/article/217200
1 month 2 weeks ago
13 JUN, 2025 | 12:00 PM ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் சூட்டப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக விநியோகம் செய்யப்படும் என அறியமுடிகிறது. https://www.virakesari.lk/article/217343
1 month 2 weeks ago
புற்றுநோய் சிகிச்சையை குழப்பும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை முன் போராட்டம் Published By: DIGITAL DESK 2 13 JUN, 2025 | 12:05 PM புற்றுநோய் சிகிச்சையை குழப்பம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை (13) யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், இந்த வைத்தியசாலையானது வடக்கு மாகாணத்தில் உள்ள விசேடமான ஒரே ஒரு புற்றுநோய் வைத்தியசாலையாகும். வடக்கிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். தெற்கில் இருந்து கூட பல நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு அன்றாடம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த காலத்தில் 11 சதவீதமான மக்கள் வெளி மாவட்டத்திலிருந்து இங்கே வருகை தந்து சிகிச்சையை பெற்று சென்றனர். இதிலிருந்து நமது வைத்தியசாலை எவ்வாறு சிறப்பான சேவையை வழங்குகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். இதனை சிதைக்கும் செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட இலாபத்தை கருத்தில் கொள்ளாத, தன்னலமற்ற மருத்துவர்கள், நிர்வாகத்தினரால் அடக்குமுறை, பழிவாங்கல் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி சிறந்த மருத்துவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றனர். இதனால் இனிமேல் மக்கள் தனியார் அல்லது மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டமானது தனி மனிதனுக்கானது அல்ல ஏழை மக்களுக்கானது. ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெறுகின்ற உரிமையை பாதுகாக்க வேண்டும். தரமான, இலவசமான சிகிச்சையை பெறுவதை மறுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து பாதுகாத்து, நோயாளிகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். இதன்போது போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி, கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், வைத்தியர்கள், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/217344
1 month 2 weeks ago
என்ன தான் நடக்கிறது பாமகவில்…? -சாவித்திரி கண்ணன் மகன் அன்புமணியிடம், அப்பா ராமதாஸின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன? எதைப் பெறுவதற்கு இந்த முட்டல், மோதல்கள்..? நிஜமாகவே இவர்கள் இருவரும் கடுமையாக முரண்படுகிறார்களா..? இவர்கள் ஒன்றிணையும் வாய்ப்புகள் உண்டா? இல்லையா…? இதோ ஒரு அப்பட்டமான ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ ; சுயநலம் மேலோங்கிய ஒவ்வொரு தலைவரும் தன் இறுதி நாளில் இத்தகைய அவமானங்களில் இருந்து தப்ப முடியாது. ஏனென்றால், அவர்கள் எதை விதைத்தார்களோ.., அதைத் தான் அறுவடை செய்து வருகின்றனர். இந்த அருவருக்கதக்க – முற்றிலும் சுயநலமுள்ள இந்த இருவரின் – சண்டை இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதத்திலும் பயனற்றது. ராமதாஸ்- அன்புமணி பிரச்சினை பொது வெளியில் தொடர்ந்து விவாதிக்க வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் கொண்டதல்ல. முற்ற முழுக்க அலட்சியப்படுத்த வேண்டிய ஒன்று என நான் உறுதியாக நம்புகிறேன். எனினும், இந்த விவகாரம் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு சில காத்திரமான படிப்பினைகள் தருகிறது என்பது மட்டுமல்ல, இந்த சண்டையின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மைகளை சுட்டிக் காட்டவே இந்தக் கட்டுரையில் நான் சிலவற்றை கவனப்படுத்துகிறேன். டாக்டர் ராமதாஸ் தன் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாதவராகவே பொதுத் தளத்தில் தான் தந்த வாக்குறுதிகளைத் தானே மீறியவர். ”என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்”. ”நாங்கள் ஊழல் செய்தால் எங்களை முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடியுங்கள்” ”நான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என் தாயுடன் உறவு கொள்ளத்தக்க கொடுங் குற்றமாகும்…” இப்படி எண்ணற்ற வகையில் பேசி, தான் பேசியதை தானே மீறி, ‘நான் நம்பகமான தலைவரல்ல’ என்பதை அப்பட்டமாக நிறுவியவர் என்று நமக்கெல்லாம் தெரியும். அப்படிப்பட்டவர் தன் மகனிடம் நீதி, நேர்மை, நியாயங்களை எதிர்பார்த்து அது பொய்த்து போனதால் இன்று முரண்படுகிறாரா? தொண்டு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை மகனிடம் காண முடியவில்லையே என கலக்கம் கொண்டாரா? கிடையாது, கிடையவே கிடையாது. ”35 வயதில் என் மகனை கேபினெட் அமைச்சராக்கியது என் தவறு தான்” என 25 ஆண்டுகள் கழித்து தான் ராமதாஸ் சொல்கிறார்…! இந்த 35 வயதிற்கு முன்பாகவே வாஜ்பாய் அமைச்சரவையில் பொன்னுசாமியும், தலித் எழில்மலையும், சண்முகமும் இருந்த போது, ”அவர்களை சும்மா பெயருக்கு அமைச்சராக்கி, அவர்களை பின்னிருந்து நிர்பந்தித்து, கோடிக் கோடியாக பணம் சம்பாதிக்கிறார் அன்புமணி. உங்கள் மகனை கட்டுப்படுத்தி வையுங்கள்” என வாய்பாயே அழைத்து கடிந்து கொண்ட பிறகும், தன் மகனுக்கு வாதாடி மல்லுக்கட்டி, கேபினெட் அமைச்சர் பொறுப்பு வாங்கிய உத்தமர் தான் ராமதாஸ். ”ஐயோ இப்படி பொதுச் சொத்தை சூறையாடும் பிள்ளையை அமைச்சராக்குகிறோமே என அப்போது அவருக்கு மனம் உறுத்தவில்லையே..?’’ ”மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு, வரலாறு காணாத வசூல் வேட்டை நடத்துகிறார்” என வட நாட்டு ஊடகங்கள் எல்லாம் அன்புமணி குறித்து எழுதி, எழுதி மாய்ந்தனவே அப்போது கூட, ‘மகனை கேபினெட் அமைச்சராக்கியது தவறு’ என்று ராமதாசுக்கு குற்ற உணர்வு தோன்றவில்லையே…? தோன்றி இருந்தால், இன்று பாஜக தலைமை கண்டு அஞ்சி மண்டியிட்டு உங்கள் மகன் கூட்டணி வைக்கக் கோரி கதறி இருக்க வாய்ப்பில்லையே…! ‘தன் வாரிசுக்கு இடையூறாக கட்சியில் திறமைசாலிகள் யாரும் இருக்கக் கூடாது’ என எத்தனை பேரை வேட்டையாடி வெளியேற்றினார் ராமதாஸ். ஆனால் தற்போதோ, ”அரசியலில் வாரிசு என்பது கிடையாது” என திருவாய் மலர்கிறார். உடனே, அவரே தான் பேசியதற்கு முரணாக, ”அன்புமணியை கட்சியை விட்டு வெளியேற்ற நான் என்ன முட்டாளா? இன்னும் ஓரிரு ஆண்டுகள் பொறுமை காத்திருந்தால் நானே அவருக்கு முடிசூட்டுவிழா நடத்தியிருப்பேன்…’’ என்கிறார். அதாவது, தன்னை அவமானப்படுத்தினாலும், நெஞ்சிலே குத்தினாலும், உயிருள்ள தன்னை உதாசினம் செய்துவிட்டு, உற்சவராக்கி ஏமாற்றினாலும், எல்லாமே அய்யா தான் என சொல்லிக் கொண்டே தன்னை அதள பாதாளத்தில் தள்ளினாலும், மகனே இந்தக் கட்சியின் அடுத்த தலைவர். 2026 தேர்தலுக்கு பிறகு அன்புமணி பொறுப்பில் விடுகிறேன் என்கிறார், ராமதாஸ். ஆக, பாதிக்கப்பட்டவரே, பாதிப்புக்கு உள்ளாக்கியவரை விட்டால் தனக்கு நாதியில்லை என்கிறார் என்றால், ”மகனே, 2026 தேர்தல் தான் நான் கடைசியாக சந்திக்கும் தேர்தலாக இருக்கக் கூடும். ஆகவே, அது வரையிலேனும் கூட்டணி பேரத்தில் பொட்டி வாங்கும் அதிகாரத்தில் இருந்துவிட்டு போகிறேனே…” என்பது தான் அவர் மகனுக்கு விடுக்கும் வேண்டுகோள். இதைத் தான் அவரது வார்த்தைகளில் , ”இன்னும் ஓரிரு ஆண்டுகள் இக்கட்சிக்கு தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா?” என்றெல்லாம் கேட்டு புலம்புகிறார். மேலும், அன்புமணிக்கு போட்டியாக சகோதர்கள் யாரும் இல்லை. ஆகவே, ”அதிகாரத்தை அவரே ஓட்டுமொத்தமாக குவித்து வைத்துக் கொள்ளாமல், குடும்பத்திற்குள் சகோதரிகளின் பிள்ளைகளுக்கு கொஞ்சமேனும் பங்கிட்டு கொடு” என்கிறார் ராமதாஸ். ஆக, இது முழுக்க, முழுக்க பொது வாழ்வில் கிடைக்கும் பொருளாதாரம், அதிகாரம் போன்ற பலாபலன்களை பங்கிட்டுக் கொள்வதில் குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை அவ்வளவே! அன்புமணியோ, இந்த புலம்பல்கள் எதற்கும் பதில் சொல்லாமல், பாஜக தலைமை சொல்லிக் கொடுத்தபடி நடை பயணம் சென்று மக்களை சந்திக்க போகிறாராம்…! இத்தனை ஆண்டுகாலம் ஏசி அறையில் இருந்து கொண்டே சொகுசு அரசியல் செய்து வந்த அன்புமணி அவர்கள், ராமதாஸ் கூறியபடி, ’உழைக்க தயார் இல்லாதவர், தற்போது தான் மக்கள் ஞாபகம் வந்து நடை பயணமாகப் பார்க்கப் போகிறாராம்…! வன்னிய மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள், உழைத்து வாழும் உத்தமர்கள். கஞ்சி குடிக்கும் நிலையிலும் கவுரவத்தை இழக்காதவர்கள், நேருக்கு நேராக பொட்டில் அறைந்தது போல தவறுகளை தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர்கள். இவையெல்லாம், நான் நீண்ட நாட்கள் இவர்களோடு பழகி உணர்ந்த உண்மைகள். வெறும் புகழ்ச்சியில்லை. அன்புமணி நடைபயணத்தில் அவரை முச்சந்தியில் நிறுத்தி, வன்னிய மக்கள், ”உன் தந்தை வைத்த குற்றச்சாட்டுகளுக்கு உன் பதில் என்ன..?” எங்களை பகடை காயாக்கி உங்கள் குடும்பம் சேர்த்த செல்வங்கள் என்னென்ன…? போன்ற தங்களது ஏமாற்றம், கோபம், இவர்களின் துரோகம்.. ஆகியவை குறித்து கேட்கப் போகும் கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்? எனப் பார்ப்போம். ‘சமூகநீதி என்ற சாக்லேட்டை காட்டி, வெறும் கையை சப்பவைத்து விட்டு, அதிகார அரசியலின் ஆதாயங்களை முழுக்க, முழுக்க அனுபவித்துக் கொண்டு, மதவாத, பாசிச சக்திகளுடன் கைக் கோர்த்து, தமிழ்நாட்டை படுகுழிக்குள் தள்ளுவது குறித்து அப்பவிற்கோ, மகனுக்கோ சிறிதளவும் குற்ற உணர்வில்லை’ என்பதை நாம் கவனத்தில் கொள்வோமாக! ஆக, இந்த அப்பா – மகன் சண்டையில் வெல்லப் போவது யார்? என்றால், அது பணமும், அதிகாரமும் தான்! தோற்றுக் கொண்டிருப்பது தமிழக மக்கள் தாம்! சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21865/ramadoss-vs-anbumani-ramadoss/
1 month 2 weeks ago
Israel claims it killed Iran’s top three military commanders The Israeli army said it has killed Iran’s “three most senior military commanders” in its surprise overnight attacks. In a post on X, the Israeli military named the targets of its assassinations as Mohammad Bagheri, chief of staff of the armed forces; Hossein Salami, the commander of the Islamic Revolutionary Guard Corps; and Major-General Gholam Ali Rashid, commander of the Khatam al-Anbiya Central Headquarters. The army said that during the night, more than 200 Israeli air force fighter jets had attacked more than 100 targets across Iran Watchdog says no increase in radiation levels at Natanz nuclear site As we have been reporting, Israeli fighter jets reportedly bombed the Natanz nuclear site during its blitz in the early hours of Friday morning, striking locations across Iran. Citing information provided by Iranian authorities, the International Atomic Energy Agency (IAEA) has said there is currently no increase in radiation levels at Natanz, Iran’s main uranium enrichment site. The IAEA added that the Bushehr nuclear power plant was not targeted during the attack. aljazeera
1 month 2 weeks ago
WTC Final : ரபாடா நிகிடி பந்துவீச்சில் தடுமாறும் ஆஸ்திரேலியா… வெற்றி பெறுமா தென்னாப்பிரிக்கா? 13 Jun 2025, 9:41 AM உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் யுத்தம் நடத்தி வரும் நிலையில் இறுதிப்போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 212 ரன்கள் குவித்தது. ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 138 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார். 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆட்டத்தின் 11வது ஓவரை வீசிய ரபாடா தனது ஒரே ஓவரில் கவாஜா மற்றும் கேமரூன் கிரீனை வெளியேற்றினார். மறுபக்கம் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்து அச்சுறுத்திய ஸ்மித் மற்றும் வெப்ஸ்டரை லுங்கி நெகிடி ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் அரை சதம் நோக்கி நகர்ந்த அலெக்ஸ் கேரியை (43) ரபடாவும், கேப்டன் கம்மின்ஸை (6) நிகிடியும் வெளியேற்றினர். இருவரின் அபாரமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 144 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. எனினும் களத்தில் ஸ்டார்க் மற்றும் லியன் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. https://minnambalam.com/will-south-africa-chase-aus-and-take-crown/
1 month 2 weeks ago
Iran says six nuclear scientists killed in strikes Iran’s Tasnim news agency is reporting that six Iranian nuclear scientists were killed in the Israeli strikes. In a post on X, the agency reported that six scientists – Abdulhamid Minouchehr, Ahmadreza Zolfaghari, Seyyed Amirhossein Faqhi, Motlabizadeh, Mohammad Mehdi Tehranchi and Fereydoun Abbasi – had been killed in the attacks. “The Zionist regime showed that … it has come to war against our scientists using the tool of terror,” read the post. aljazeera பதிலடியை ஆரம்பித்தது ஈரான் - இஸ்ரேலை நோக்கி பெருமளவு ஆளில்லா விமானங்கள் 13 JUN, 2025 | 11:42 AM இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் எவ்வி டெவ்ரின் தெரிவித்துள்ளார். ஈரான் சுமார் 100 ஆளில்லா விமானங்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளது அவற்றை செயல் இழக்க செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை பொதுமக்களிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் விதத்தில் ஈரான் பதில் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என இஸ்ரேலின் இராணுவ தளபதி எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காகவே ஒப்பரேஷன் ரைசிங் லயன் நடவடிக்கையை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் இஸ்ரேலிய மக்களே என்னால் வெற்றி குறித்து வாக்குறுதியளிக்க முடியாது, ஈரான் ஆட்சியாளர்கள் பதில் தாக்குதலை மேற்கொள்வார்கள். அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் நாங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகயிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217337
1 month 2 weeks ago
முள்ளியவளையில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள்: தன்னிலை விளக்கமளித்த பெண் June 13, 2025 11:44 am தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது. அதன் பின்னர் தாம் இந்த பதாதையை அமைத்தமைக்கான காரணத்தை பெண் ஒருவர் இன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்திருந்தார். அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், வித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமை சிங்களம் கற்பிக்கும் நிலையம் ஒன்றினை நடாத்தி வருகிறேன். பொசன் போயா நிகழ்வினை எவ்வாறு கொண்டாடுவது என மாணவர்களுக்கு விளக்கமளிக்கவே பொசன் போயா நிகழ்வை வரைந்து காட்சிப்படுத்தியிருந்தேன். பௌத்த மதம் எவ்வாறு இலங்கைக்கு பரப்பப்பட்டது என்பதையே காட்சிப்படுத்தியிருந்தேன். அதனை சிலர் வந்து உடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். நான் இது சம்பந்தமாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளேன். நான் மதத்தை பரப்புவதற்கோ அல்லது பௌத்தமதம் இங்கே வரவேண்டும் என்பதற்காக செய்யவில்லை இங்கே கற்கும் பிள்ளைகளுக்கு செயல்முறை வடிவிலே செய்து விளக்கமளிக்கவே இதை செய்தேன். வெளியே தெரியும் வகையிலே காட்சிப்படுத்தினாலே மாணவர்களால் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்.” என்றார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முள்ளியவளையில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் அமைக்கப்பட்தனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு குறித்த பதாதைகள் இனம் தெரியாதவர்களால் கிழித்தெறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/banners-in-the-shape-of-a-buddhist-temple-in-mulliyawalli-woman-explains-her-position/
1 month 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஆரிஃப் ஷமீம் பதவி,பிபிசி உருது மற்றும் பிபிசி பெர்ஷிய மொழிச் சேவை 18 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் முக்கிய தலைவர்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 2 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் இரான் எச்சரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய மோதல் பற்றிய அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் இரான், இரண்டு நாடுகளில், எந்த நாட்டின் ராணுவம் பலம் மிக்கது என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரானின் முக்கிய ராணுவ பலம், அதன் ஏவுகணைகள் இஸ்ரேல், இரான் - யார் கை ஓங்கியிருக்கிறது? பிபிசி இந்த கேள்வியைக் கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆதாரங்களைப் பயன்படுத்தி எடைபோட்டது. இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க திறன்கள் உள்ளன, அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் (International Institute for Strategic Studies - IISS) இரு நாட்டு ராணுவத்தின் தாக்கும் திறனை ஒப்பிட்டு, பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் இணையத்தில் கிடைக்கும் முறைகளைப் பயன்படுத்தி சிறந்த மதிப்பீடுகளை உருவாக்குகிறது. ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் போன்ற பிற நிறுவனங்களும் இத்தகைய மதிப்பீடுகளைச் செய்கின்றன. ஆனால், பெரும்பாலும் புள்ளிவிவரங்களை வழங்காத இந்த நாடுகள் குறித்த ஆய்வில் துல்லியம் மாறுபடும். இருப்பினும், ஓஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Peace Research Institute Oslo - PRIO) சேர்ந்த நிக்கோலஸ் மார்ஷ், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் ராணுவ வலிமையை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக ஐ.ஐ.எஸ்.எஸ் கருதப்படுகிறது, என்கிறார். இஸ்ரேல், தனது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் இரானை காட்டிலும் அதிகமாகச் செலவழிக்கிறது என்று ஐ.ஐ.எஸ்.எஸ் கூறுகிறது. கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் இரானின் பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 740 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது (இந்திய மதிப்பில் சுமார் 62,000 கோடி ரூபாய்). இஸ்ரேலின் பாதுகாப்பு பட்ஜெட் அதைவிட இருமடங்காக இருந்தது. அதாவது 1,900 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. (இந்திய மதிப்பில் சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய்). இஸ்ரேலின் பாதுகாப்புச் செலவு, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இரானைவிட இரட்டிப்பாகும். தொழில்நுட்ப ரீதியில் முந்துவது யார்? ஐ.ஐ.எஸ்.எஸ் (IISS) புள்ளிவிவரங்கள், இஸ்ரேலிடம் 340 ராணுவ விமானங்கள் போருக்குத் தயாராக இருப்பதாகக் காட்டுகின்றன. ஜெட் விமானங்களில் நீண்டதூர வேலைநிறுத்த வரம்பைக் கொண்ட F-15 விமானங்கள், ரேடாரை தவிர்க்கக்கூடிய உயர் தொழில்நுட்ப F-35 ‘ஸ்டெல்த்’ விமானங்கள், மற்றும் வேகமான தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இதில் அடங்கும். இரானிடம் சுமார் 320 போர்த் திறன் கொண்ட விமானங்கள் இருப்பதாக ஐ.ஐ.எஸ்.எஸ் மதிப்பிட்டுள்ளது. இந்த ஜெட் விமானங்கள் 1960களில் இருந்தே இருப்பவை. இதில் F4, F5 மற்றும் F14 ஆகியவை அடங்கும். (F14 விமானம், 1986 திரைப்படமான ‘டாப் கன்’ மூலம் பிரபலமானது). ஆனால் PRIO அமைப்பின் நிக்கோலஸ் மார்ஷ் கூறுகையில், இந்தப் பழைய விமானங்களில் உண்மையில் எத்தனை பறக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் பழுதுபார்க்கும் பாகங்களைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும், என்கிறார். அயர்ன் டோம் மற்றும் ஏரோ அமைப்புகள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேலின் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அயர்ன் டோம் மூலம் முறியடிக்கப்பட்டன இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பின் முதுகெலும்பாக, அதன் ‘அயர்ன் டோம்’ மற்றும் ‘ஏரோ’ அமைப்புகள் இருக்கின்றன. ஏவுகணைப் பொறியாளர் உசி ரூபின், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்தில், இஸ்ரேல் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் ஆவார். இப்போது ஜெருசலேம் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ராடஜி அண்ட் செக்யூரிட்டியின் மூத்த ஆராய்ச்சியாளரான அவர், கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அனைத்தையும் ‘அயர்ன் டோம்’ மற்றும் இஸ்ரேலின் சர்வதேச கூட்டாளிகள் அழித்ததைக் கண்டபோது தாம் எவ்வளவு ‘பாதுகாப்பாக’ உணர்ந்ததாக பிபிசியிடம் கூறினார். "நான் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். இலக்குகளுக்கு எதிராக இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவொரு குறுகிய தூர ஏவுகணைப் பாதுகாப்பு. வேறு எந்த அமைப்பிலும் இது போன்ற எதுவும் இல்லை," என்றார். இஸ்ரேலில் இருந்து இரான் எவ்வளவு தொலைவில் உள்ளது? இஸ்ரேல், இரானில் இருந்து 2,100கி.மீ., தொலைவில் உள்ளது. ஏவுகணைகள்தான் இரானை தாக்குவதற்கான இஸ்ரேலின் முக்கிய வழி, என ‘டிஃபென்ஸ் ஐ’ இதழின் ஆசிரியர் டிம் ரிப்லி பிபிசியிடம் கூறினார். இரானின் ஏவுகணைத் திட்டம் மத்தியக் கிழக்கில் மிகப் பெரியதாகவும் மிகவும் மாறுபட்டதாகவும் கருதப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில், அமெரிக்க மத்திய கட்டளையின் ஜெனரல் கென்னத் மெக்கென்சி, இரானிடம் ‘3,000க்கும் அதிகமான’ பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாகக் கூறினார். சி.எஸ்.ஐ.எஸ் (CSIS) ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தின் படி, இஸ்ரேலும் பல நாடுகளுக்கு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்கிறது. இரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் கடந்த 1980 முதல் 1988 வரை அண்டை நாடான இராக் உடன் செய்த போரின் நேரத்தில் இருந்து, இரான் தனது ஏவுகணை அமைப்புகள் மற்றும் ட்ரோன்களில் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளது. இரான் குறுகிய மற்றும் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. அவற்றில் பல, கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் சௌதி அரேபியாவை குறிவைத்துத் தாக்கப்பட்ட ஏவுகணைகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அவை இரானில் தயாரிக்கப்பட்டவை என முடிவு செய்துள்ளனர். நீண்ட தூர தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிரியாவில் உள்ள இரானிய துணைத் தூதரகக் கட்டடம் ஏப்ரல் 1ஆம் தேதி வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டது, அதில் மூத்த இரானிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர் ‘டிஃபென்ஸ் ஐ இதழின் டிம் ரிப்லி கூறுகையில், இஸ்ரேல் இரானுடன் தரைப் போரில் ஈடுபடுவது சாத்தியமில்லை என்கிறார். "இஸ்ரேலின் பெரிய நன்மை அதன் விமானப் படை, மற்றும் அதன் வழிகாட்டும் ஆயுதங்கள். எனவே இரானில் உள்ள முக்கிய இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திறன் அதனிடம் உள்ளது," என்றார். அதிகாரிகளைக் கொல்லவும், எண்ணெய் நிறுவல்களைக் காற்றில் இருந்து அழிக்கவும் இஸ்ரேலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரிப்லி கூறுகிறார். "இதன் மையத்தில் இருப்பது ‘பனிஷ்’ தண்டனை. இஸ்ரேலிய ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் அந்த வார்த்தையை எப்போதும் பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தத்துவத்தின் ஒரு பகுதி, இது அவர்களின் தத்துவத்தின் ஒரு பகுதி," என்கிறார். கடந்த காலத்தில், இரானின் தாக்குதலைத் தூண்டிய சிரியாவின் தலைநகரில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அழித்தது உட்பட, உயர்மட்ட இரானிய ராணுவம் மற்றும் பொதுமக்கள் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அதற்கோ, அல்லது இரானின் முக்கிய அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால் மறுக்கவுமில்லை. பட மூலாதாரம்,IRGC HANDOUT / REUTERS படக்குறிப்பு,அபு மூசா தீவில் ஒரு பாதுகாப்புப் பயிற்சியின்போது, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் கடற்படை வேகப் படகுகள் கடற்படையின் பலம் என்ன? ஐ.ஐ.எஸ்.எஸ் அறிக்கைகளின்படி, இரானின் கடற்படையில் சுமார் 220 கப்பல்கள் உள்ளன. இஸ்ரேலிடம் சுமார் 60 கப்பல்கள் உள்ளன. சைபர் தாக்குதல்கள் சைபர் தாக்குதல் நடந்தால், இரான் இழப்பதைவிட இஸ்ரேல் இழப்பது அதிகம். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பு இரானின் பாதுகாப்பு அமைப்பைவிட தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டது. எனவே இஸ்ரேல் ராணுவத்தின் மீது மின்னணு தாக்குதல் நடத்தப்பட்டால் அதிக அளவில் சாதிக்க முடியும். இஸ்ரேலிய அரசாங்கத்தின் தேசிய சைபர் இயக்குநரகம், “இணைய தாக்குதல்களின் தீவிரம் முன்பைவிடக் குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், ஒவ்வொரு இஸ்ரேலிய துறையிலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும். போரின்போது இரான் மற்றும் லெபனானில் இயங்கும் ஹெஸ்பொலா அமைப்பு இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்தது. கடந்த 2023ஆம் ஆண்டின் அக்டோபர் 7 தாக்குதல்களுக்கும் அந்த ஆண்டின் இறுதிக்கும் இடையே 3,380 சைபர் தாக்குதல்கள் நடந்ததாக அது தெரிவிக்கிறது. இரானின் குடிமைத் தற்காப்பு அமைப்பின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் கோலம்ரேசா ஜலாலி கூறுகையில், சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இரான் கிட்டத்தட்ட 200 இணையத் தாக்குதல்களை முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், இரானின் எண்ணெய் அமைச்சர் ஜாவத் ஓவ்ஜி, ஒரு இணையத் தாக்குதல் நாடு தழுவிய அளவில் பெட்ரோல் நிலையங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரான் இஸ்ரேலின் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஏவிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை சாக்கடல் கரையில் கிடக்கிறது அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் இஸ்ரேல் அதன் சொந்த அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதுபற்றி அந்நாடு தெளிவாகப் பேசுவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. இரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கருதப்படவில்லை. குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அது அணு ஆயுதங்கள் உருவாக்குவதற்குத் தனது அணுசக்தித் திட்டத்தைப் பயன்படுத்த முயல்வதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. நிலவியல் மற்றும் மக்கள்தொகை இரான் இஸ்ரேலைவிடப் பலமடங்கு பெரிய நாடு. அதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 8.9 கோடி. இது இஸ்ரேலின் மக்கள்தொகையான 1 கோடியைவிட கிட்டத்தட்ட பத்து மடங்கு. இரான், இஸ்ரேலைவிட ஆறு மடங்கு அதிகமான ராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது. இரானிடம் 6 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இஸ்ரேலிடம் 1.7 லட்சம் வீரர்கள் உள்ளனர் என்று ஐ.ஐ.எஸ்.எஸ். கூறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77l1rxmx2zo
1 month 2 weeks ago
”இதனால்தான் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” – விமான விபத்து குறித்து அமித்ஷா! June 13, 2025 ”விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் சுமார் 1,25,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்றது. இதனால் விபத்தின்போது வெப்பம் அதிகரித்ததால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், இறந்தவர்களை அடையாளம் காண உதவும் வகையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அமித்ஷா, காயமடைந்தவர்கள் குணமாகத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அதே நேரம் ”30 நொடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது.” என விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் தெரிவித்துள்ளார். ”ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சுமார் 30 விநாடிகளில் நிலைமை தலைகீழாக மாறியது. ஒரு பெரிய சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில், விமானம் விபத்துக்குள்ளானது” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார் விமான விபத்திலிருந்து உயிர் பிழைத்த ஒரே நபரான 40 வயதான விஸ்வாஸ் குமார். ”நான் எழுந்தபோது, என்னைச் சுற்றி உடல்கள் சிதறிக் கிடந்தன. எனக்குப் பயமாக இருந்தது. நான் வெளியேறியபோது, என்னைச் சுற்றி விமானத்தின் பாகங்கள் கிடந்தன.” எனத் தெரிவித்துள்ளார். தனது சகோதரர் அஜய்யும் தன்னுடன் பயணித்ததாக தெரிவித்துள்ள விஸ்வாஸ் அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். லண்டனில் வசிக்கும் இந்தியரான விஸ்வாஸ் விடுமுறைக்கு அகமதாபாத் வந்து திரும்பும்போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/இதனால்தான்-யாரையும்-காப/
1 month 2 weeks ago
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் திரு. த சுதாகரன் தற்காலிகமாக இடைநிறுத்தம்..! Vhg ஜூன் 12, 2025 கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் படகு சின்னத்தில் கோட்டைக்கல்லாறு (09 ஆம் வட்டாரத்தில்) வெற்றி பெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த திரு த. சுதாகரன் கட்சியின் கொள்கை விதிகளுக்கு முரணாகவும், கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் இன்று (12) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச தவிசாளர், மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது செயல்பட்டதன் காரணமாக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்களின் கையொப்பத்துடன் மேற்படி உறுப்பினரை தற்காலிகமாக இடை நிறுத்தி, அவர் பக்க ஏதுவான காரணங்களை சமர்ப்பிக்க கோரியதான கடிதமானது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. https://www.battinatham.com/2025/06/blog-post_74.html
1 month 2 weeks ago
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை மேம்படுத்த இந்தியா மீண்டும் உதவி General13 June 2025 நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பயணிகள் கப்பல் சேவையை, மேம்படுத்துவதற்காக, இந்திய அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நிதி உதவியை நீடித்துள்ளது. இது பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. உயர்ஸ்தானிகராலய தகவல்படி, இந்திய செயல்திறன் இடைவெளி நிதியளிப்பு பொறிமுறையின் கீழ், இலங்கைக்கு ஆண்டுதோறும் 300 மில்லியன் இந்திய ரூபாய்க்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது, கடந்த ஆண்டைப் போலவே, முக்கிய செயற்பாட்டு செலவுகளை ஈடுகட்டுவதன் மூலம், கப்பல் சேவையின் மலிவு மற்றும் செயற்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதை, இந்த நிதியளிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, 15,000 க்கும் மேற்பட்ட பயணிகளை, குறித்த கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. https://hirunews.lk/tm/407015/india-again-helps-improve-nagapattinam-kankesanthurai-ferry-service
1 month 2 weeks ago
‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’ முருகானந்தம் தவம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும் அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் (ஈ.பி.டி.பி.) ஆதரவு கேட்டு அக்கட்சியின் அலுவலகப் படி ஏறியமை தமிழ்த் தேசிய அரசியலிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (ஈ.பி.டி.பி.) தமிழினத் துரோகிகள், ஓட்டுக்குழு, ஆயுதக்குழு, இராணுவ துணைக்குழு, தமிழ் இளைஞர், யுவதிகள் பலர் படுகொலை செய்யப்படவும் காணாமல்போகவும் காரணமானவர்கள், காட்டிக்கொடுப்பவர்கள் என்றெல்லாம் இதே தமிழரசுக் கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்டுத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்ட ஈ.பி.டி.பியிடமே ஆதரவு கேட்டு தமிழரசு கட்சி மண்டியிட்டுள்ளமை தமிழ் தேசியப் பரப்பில் மட்டுமன்றி, தமிழரசுக் கட்சிக்குள்ளும் கொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தொகுதிவாரி, விகிதாசார முறைமையினால் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட நெருக்கடிகளினாலேயே தமது தமிழ்த் தேசிய முகமூடிகளைக் கழற்றி வைத்துவிட்டு, தமிழினத் துரோகிகள், ஒட்டுக்குழு, இராணுவத் துணைக்குழு என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட, ஒதுக்கிவைக்கப்பட்ட தரப்புக்களின் காலடி தேடித் சென்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி சிரம் தாழ்த்தி தரம் தாழ்ந்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் மீது வசை பாடப்படுகின்றது.தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான பற்றுறுதியும் கொள்கைப் பிடிப்பும், இலட்சியமும் கொண்ட ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க வரட்டுக் கௌரவமும் மேதாவித் தலைக்கனமும் ஆணவமும் தமிழரசிலுள்ள சில மூக்கு வீங்கியவர்களின் தமிழ்த் தேசிய மறுப்பும் இடம்கொடுக்காமையினால்தான் தங்களினாலேயே துரோகிகள் என பட்டம் சூட்டப்பட்டவர்களிடம் பதவி மோகத்தினால் பகை மறைந்து அடிபணிந்துள்ளது தமிழ்த் தேசியத்தின் தாய் கட்சியான தமிழரசுக் கட்சி. இது பதவிகளுக்கா தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் எந்தளவு கீழ்த்தரமான நிலைக்கும் தரம் இறங்குவார்கள், எந்தளவு கீழ்த்தரமான வேலைகளையும் செய்வார்கள் என்பதற்கான உதாரணமாகவும் மாறிப்போயுள்ளது. உள்ளுராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைக்க ஏனைய தமிழ் தேசியக்கட்சிகள் ஆதரவளிக்கத் தயாராக இருந்த போதும் அவர்களுக்கு எந்தவொரு விட்டுக் கொடுப்பையும் செய்ய மறுத்து அவர்களை நிராகரித்து விட்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைவர், டக்ளஸ் தேவானந்தாவை அவரது யாழ். நகரிலுள்ள ஸ்ரீதர் திரையரங்கு அலுவலகம் சென்று ஆதரவு கோரியுள்ளார். இந்த சந்திப்பு விடயம் தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அதுமட்டுமன்றி, இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் ஒருவர் தன்னைச் சந்திப்பதற்குப் பல தடவைகள் முயற்சி செய்ததாகவும் அதன் பின்னரே சிவஞானம் சந்தித்து ஆதரவு கோரியதாகவும் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக கூறியுள்ளதன் மூலம், டக்ளஸ் தேவானந்தா தனது கொள்கையில் இன்று வரை உறுதியாகவுள்ள நிலையில் தமிழரசுதான் பதவிகளுக்காகக் கொள்கையை விட்டுக் கொடுத்துள்ளதுடன், கட்சியையும் ஆதரவாளர்களையும் தமிழ் மக்களையும் காட்டிக்கொடுத்துள்ளது. ஈ.பி.டிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சந்தித்தமையானது, கட்சியின் அடிமட்ட தொண்டனால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மையில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் மற்றும் கருணா ஆகியோர் எங்களுடன் சேர்ந்து தமிழரசுக் கட்சி பயணிக்க வேண்டும் என்றனர். எனவே, தற்போதைய சூழ்நிலையில் சி.வி.கே.சிவஞானம் அவர்களுடனும் கூட்டுச் சேர வாய்ப்புள்ளது. டக்ளஸ் தேவானந்தாவுடன் கூட்டணி சேர முடிவெடுத்த இவர்களுக்கு பிள்ளையான் - கருணாவுடன் கூட்டணி சேர்வது இலகுவானது என்று தமிழரசுக் கட்சியினர் புலம்புமளவுக்குத் தமிழரசின் தலைமை அரசியல் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழரசின் தலைவர்கள் இதுவரை கட்டிக் காத்துவந்த கட்சியின் கொள்கை, தமிழ்த் தேசியம் மீதான பற்றுறுதி, கட்சி மீதான விசுவாசம், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பவற்றை இன்று சதிகள், கழுத்தறுப்புகள், குழிபறிப்புக்கள் மூலம் தலைமைப் பதவிக்கு வந்தவர்கள் ஒட்டுமொத்தமாகக் கைவிட்டு, காட்டிக்கொடுத்து தமிழ் மக்களினால் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் கைகோர்த்து தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களையும் புறந்தள்ளிச் செயற்படத் தொடங்கியுள்ளமை விரைவில் ‘இலங்கை தமிழரசுக் கட்சி’ என ஆல விருட்சத்தை அடியோடு சாய்த்து விடவுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் ஒரு கட்சியாக ஒரு தடவை அப்போதைய தமிழரசுக் கட்சியினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தலைவராகவிருந்த இரா.சம்பந்தனை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட சில ஆசனங்களைக் கோரியபோது, ‘தமிழரசுக் கட்சி அஹிம்சாவளிக்கட்சி. அதில் ஆயுதம் தூக்கியவர்கள் போட்டியிடமுடியாது. தேவையானால் தமிழரசு தலைமையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடம் ஆசனம் கேட்டுப்பாருங்கள்’ என கூறி முன்னாள் போராளிகளின் கோரிக்கையை நிராகரித்து அவர்களைத் திருப்பி அனுப்பியிருந்தார். இவ்வாறாக பாராளுமன்றத் தேர்தல் போட்டியிட வேட்பாளர் பட்டியலில் சில இடங்களைக் கேட்ட தமிழ் மக்களின் உரிமைக்காகப் போரிட்ட, அளப்பரிய தியாகங்களைச் செய்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளையே ‘ஆயுதம் தூக்கியவர்கள்’ என்ற காரணம் காட்டி, தமிழரசின் தலைமை நிராகரித்த நிலையில்தான் தமிழின போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த, இராணுவத்துடன் இணைந்து ஆயுதக் குழுவாக செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈ,.பி.டி.பியுடன் ஆதரவுடன் ஆட்சியமைக்க அவர்களின் காலடிக்கே சென்றுள்ளது தற்போதைய தமிழரசின் தலைமை. தலைமைப் பதவிக்கு தகுதியில்லாத தற்குறிகள் தலைவர்களானால் ஒரு கட்சியின் நிலைமை ‘விபசாரம்’ செய்வதற்கு ஒப்பானதாகிவிடும் என்பதற்கு ‘இலங்கை தமிழரசுக் கட்சி’ தான் தற்போது சிறந்த உதாரணம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விபசாரம்-செய்ய-ஒப்பானதான-தமிழரசுக்-கட்சி/91-359119
1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 13 JUN, 2025 | 11:07 AM நாட்டில் கடந்த சில வாரங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்கள் அதிகரித்து வந்தாலும், கொவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக தொற்றுநோயியலின் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அதுல லியனபத்திரண கருத்து தெரிவிக்கையில், “கொவிட்-19 இப்போது பல்வேறு சுவாச நோய்களில் ஒன்றாகவே கண்காணிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின்படி, கொவிட் நோயாளிகள் தொடர்பான தனித் தரவுகள் சேகரிக்கப்படுவதில்லை. எனினும், நிலைமையின் மீது எங்களது தீவிர கண்காணிப்பு தொடர்ந்தும் காணப்படுகிறது” என்றார். மேலும், இந்நேரத்தில் இன்புளுவென்சா மற்றும் பிற சுவாச நோய்களின் பரவல் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுவாச நோய்கள் தொடர்பான கண்காணிப்பு மற்றும் மீள்பார்வை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய சுவாச நோய்கள் அதிகரித்திருக்கும் சூழ்நிலையில், மக்கள் சுவாச நிலையை சீராக வைத்திருக்க ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, இருமல், தும்மலின்போது தொற்றுக்களைத் தடுக்கும் முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும் தருணங்களில், உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டும். இந்த நோய்கள் அதிகமாக பாதிக்கக்கூடியவர்களான வயதானோர், குழந்தைகள் மற்றும் நீண்டநாள் நோயாளிகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அத்துடன், மருத்துவ ஆலோசனையை தவிர்க்காமல் பெறுவது, நோய் பரவலையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் தடுக்கும் முக்கியமான வழி என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். https://www.virakesari.lk/article/217335
1 month 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
1 month 2 weeks ago
உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்…!
1 month 2 weeks ago
ஏன் என்னைக் கேட்கின்றீர்கள்? நான் எந்த கொலையையாவது சரியென்று நான் இங்கு கொண்டாடினேனா? அது சரி நீங்கள் ஏன் அர்சனாவின் இந்த கேடு கெட்ட கேவலமான செயலுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்? இலங்கை அரசியலில் அரசியல் கொலைகளை செய்து விட்டு அதை மறைத்து நல்லவர்களாக நடிபவர்கள் பலர் எல்லா இனத்திலும் உள்ளார்கள். அதை உதாரணம் காட்டி குடும்பதகராறுக்காக மனைவியின் தலையை வெட்டிய கொலையும் அதுவும் ஒன்றென எனக்கு கல்வி கற்பித்த எந்த வாத்தியாரும் கற்பிக்காது எனது அதிஷரம்.
1 month 2 weeks ago
நாட்டாமை அமைச்சர்...வெருட்டு வெட்டு..
Checked
Sun, 08/03/2025 - 12:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed