1 month 1 week ago
      திங்கட்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது பலரை விழித்தெழச் செய்தது, மேலும் 22,000 க்கும் மேற்பட்டோர் அதை உணர்ந்ததாகக் கூறியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கம் பெர்க்லியை மையமாகக் கொண்டு அதிகாலை 2:56 மணிக்கு சுமார் 4.8 மைல் ஆழத்தில் ஏற்பட்டது. முதலில் இது 4.6 ரிக்டர் அளவிலானதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது குறைக்கப்பட்டது.  கால் மெமோரியல் ஸ்டேடியத்திற்கு சற்று தெற்கே உள்ள பெர்க்லியில் உள்ள டுவைட் வே மற்றும் பீட்மாண்ட் அவென்யூ சந்திப்பில் மையப்பகுதி உள்ளது. ABC7 San Francisco4.3 earthquake centered in Berkeley shakes Bay Area: USGSDid you feel it? A magnitude 4.3 earthquake struck in Berkeley on the Hayward Fault early Monday morning and shook most of the Bay Area. Video shows items knocked off of shelves at several East Bay stஅதிகாலை 3 அணிக்கு பலத்த சத்தம்.பேரப்பிள்ளைகள் தான் கட்டிலால் விழுந்து விட்டார்களோ என்று அறையைவிட்டு ஓடிவந்த போது மகளும் வெளியே வந்து  அது பூமி அதிர்வு போய் படுங்கோ என்றார். கலிபோர்ணியாவில் அடிக்கடி வருவதென்றாலும் இந்தத் தடவை கொஞ்சம் பலமாகவே இருந்தது. இப்போது தான் எழும்பி எங்கே வந்திருக்கிறது என ஆராய்ந்தால் எமக்கு அடுத்த நகரமான பேர்கிளே என்ற இடத்தில் அதிர்ந்துள்ளது.
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      சத்திரசிகிச்சை மூலம் உடலில் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது! சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடலில் நூதனமான முறையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து , சிகிச்சை அளித்து தங்கத்தை மீட்டுள்ளனர். கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் , சென்னையில் இருந்து , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில், பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய உத்தியோகஸ்தர்கள் பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , குறித்த பெண் சத்திர சிகிச்சை மூலம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தமையை கண்டறியப்பட்டுள்ளது. இதை அடுத்து அப்பெண்ணை கைது செய்த உத்தியோகஸ்தர்கள் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து , சிகிச்சை அளித்து தங்கத்தை மீட்டுள்ளனர். குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் உத்தியோகஸ்தர்கள் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1448106
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      நரி, ஓநாய் ஐரோப்பிய மேற்கு மற்றும் அதன் சார்ந்த கூட்டங்கள், இஸ்ரேல் இடம் அடிப்பதை நிறுத்துமாறு கேட்டபோது இஸ்ரேல் நிறுத்தி இருந்தால், பலஸ்தீனியரை சிறுக சிறுக அழிப்பது என்ற உள்ளே வைத்திருக்கும் திட்டத்தில் இருந்து இப்படி வாய்ச்சொல்லால் விலத்தியத்தை செய்து இருக்க மாட்டாது. இரானி சரியாக இவர்கலின் பல்தெனிய அங்கீகரிப்பு அலங்கார கோலாகலத்தை முன்னறிவுப்பு வந்த போது   சரியாக அடையாளம் கண்டு இருந்தது. இரான்  சொல்லியது அரசுக்கு உள்ள எல்லாவற்றையும் அழிக்க இஸ்ரேல் க்கு நேரடியாக களத்தில் நின்று அழித்துவிட்டு , சோடினையாக அங்கீகரிப்பது.
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 B  பகுதி: 27 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'மூன்று கேள்விகள்?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]   சமஸ்கிருத பெயர்ச் சொல் " सैंहल " [saiMhala] என்பதன் அர்த்தம் கறுவா அல்லது இலங்கைக்கு உரியது அல்லது அங்கு உற்பத்தி செய்யப் படுவது அல்லது சிங்களவர் [cinnamon / Laurus Cassia - Bot or belonging to or produced in Ceylon  or  Sinhalese ] ஆகும். இதன் உச்சரிப்பு  "சின்ஹல" ஆகும்.  இலங்கை கறுவா விளையும் நாடாகையால், கறுவாவின் சமஸ்கிருதப் பெயரான "சின்ஹல" என்பதே சிங்களமாக மருவியிருக்கலாம் எனவும் வாதாடலாம் என நம்புகிறேன். ஏனென்றால் சிங்கத்தின் வம்சாவளியினரே சிங்களவர் என்பது நம்பமுடியாத இயற்கைக்கு மாறான தகவலாக இருப்பதால்?  பண்டித ஹிஸ்ஸெல்லே தம்மரத்தன மகா தேரர் [Pandit Hisselle Dharmaratana mahathera], தனது 'தென் இந்தியாவில் புத்தமதம்' [Buddhism in South India], என்ற புத்தகத்தில், புத்த மதகுரு மகிந்தன் அல்லது மகிந்தர் அல்லது மஹிந்த (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), அவர்களே தமிழ் நாட்டிலும் புத்த மதம் பரப்பியதற்கு சான்றுகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். மகாவம்சம், அவர் இயற்கையை கடந்த சக்தி மூலம் [supernatural powers] இலங்கையை அடைந்தார் என புராணக் கதைகள் போல் குறிப்பிட்டாலும், உண்மையில் அவர் கடல் மூலம் பயணித்ததாகவும், அப்படி இலங்கைக்கு போகும் வழியில், காவேரி பட்டணம் வந்து அங்கு முதலில் புத்த மதம் பரப்பியதாகவும் அறிஞர்கள் கருதுவதாக கூறுகிறார் [The Mahathera states "although the chronicles say he arrived through his supernatural powers, scholars are of the opinion that he travelled by sea and called at Kaveripattinam on the east coast of Tamil Nadu on his way to Sri Lanka"]. டாக்டர் ஷூ ஹிகோசகே [Dr Shu Hikosake Director Professor of Buddhism, Institute of Asian Studies in Madras] தனது 'தமிழ் நாட்டில் புத்தமதம்' [Buddhism in Tamil Nadu] என்ற புத்தகத்திலும் இந்த கருத்தையே கூறுகிறார். கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஹியுங் சாங் (Hiuen Tsang) எனும் நாடுகண் சீன பிக்கு [the Chinese 7th Century, Buddhist monk, scholar traveller], பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மஹிந்தரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist].   அசோகனின் உற்ற நண்பனான தேவநம்பிய தீசன் அல்லது தீசன்  இலங்கையை ஆளும் காலத்தில், புத்த  சமயப்பரப்பாளர் குழுவொன்றை [Buddhist monk missionary] தன் மகனின் தலைமையில் அங்கு அனுப்பினான் என்கிறது மகாவம்சம். இந்த தீசன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது பல அற்புதங்கள் நிகழ்ந்தன என்றும், இவையனைத்தும் தீசனின் பெருமையால் நிகழ்ந்தவை என்றும், இவ்வற்றை கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து. ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ் விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதியுள்ளவர்கள் அல்ல. எனவே இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்றான் என்றும் பதினோராம்  அத்தியாயம், 'தேவநம்பிய தீசன் பட்டாபிஷேகம்' [ Chapter XI / The Consecrating Of Devanampiyatissa] கூறுகிறது. மேலும் பதின்மூன்றாவது  அத்தியாயம் 'மஹிந்தர் வருகையில்' [Chapter XIII / The Coming Of Mahinda], இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அதைத் தொடர்ந்து, பதிநான்காவது அத்தியாயம் 'தலைநகர் புகுதலில்' [Chapter XIV / The Entry Into The Capital], அரசனை [தீசனை] சோதிப்பதற்காக மஹிந்த தேரர் அவனை சூட்சுமமான கேள்வி கேட்டார். கேட்கக் கேட்க பல கேள்விகளுக்கும் அவன் பதிலளித்தான் என்கிறது.   இப்ப நான் உங்களைக் கேட்க விரும்புவது, புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட, விஜயன் வரும் பொழுது, அங்கு ஒரு அதிசயமும் நடைபெறவில்லை, மாறாக உயர்குலம் அற்ற இயக்கர் பெண்ணை மணக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுகிறான். பின் அவன் தன் மனைவியையும் பிள்ளைகளையும், துரத்திவிட்டு, உயர் குல பாண்டிய தமிழ் இளவரசியை இரண்டாம் தாரமாக மணக்கிறான், என்றாலும் பிள்ளைகள் இல்லாமல் அவன் சந்ததி இலங்கையை ஆளாமல், முற்றுப் பெறுகிறது. அப்படி என்றால் ஏன் அவனை புத்தர் தேர்ந்தெடுத்தார் ? இரண்டாவதாக, இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அப்படி என்றால் புத்தர் தன் முதல் தெரிவான விஜயனில் தடுமாறி, இரண்டாவது தெரிவை இருநூறுக்கு சற்று மேற்பட்ட ஆண்டுகளின் பின் காலம் தாழ்த்தி செய்தாரா ? மூன்றாவதாக, அசோகன் தீசனின் நட்ப்பிலும், அவன் ஆளும் இலங்கையிலும் மிகவும் அக்கறை கொண்டு மஹிந்த தேரரை அனுப்பினார் என்கிறது, அப்படி என்றால், எதற்காக, மஹிந்தர் வந்து இலங்கையில் இறங்கும் பொழுது, தீசன் சோதிக்கப் பட்டான்? எவராவது இதை வாசிக்கும் பொழுது, அவர்களின் மனதில் கட்டாயம் அசோகன், தீசனின் நட்பிலும், மற்றும் ஒருவரை ஒருவர் எவ்வளவுதூரம் புரிந்து வைத்து இருந்தார்கள் என்பதிலும் ஒரு ஐயப்பாடு ஏற்படும் என்றும் தோன்றுகிறது? [When one reads this portion of the Mahavamsa, the question arises how far Asoka and Tissa could be friends and how much Asoka knew of Tissa]  நன்றி   Thanks   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]    பகுதி / Part: 27 C தொடரும் / Will follow   "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 B https://www.facebook.com/groups/978753388866632/posts/31425152117133359/?
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      பாலத்தீனத்துக்கு பெருகும் ஆதரவு; தனி நாடாக அங்கீகரிப்பதால் என்ன மாற்றம் வரும்? பாலத்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். அதே போல ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளும் பாலத்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. பிரான்ஸ் உள்ளிட்ட வேறு சில நாடுகளும் பாலத்தீனத்தை அங்கீகரிக்க தயாராகி வருகின்றன. பிரிட்டனின் முடிவை விமர்சித்துள்ள இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம், இது ஹமாஸுக்கு அளிக்கும் வெகுமதியைத் தவிர வேறில்லை என கூறியுள்ளது. #Palestine #Britain #Israel  இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      22 Sep, 2025 | 01:50 PM  (எம்.மனோசித்ரா) இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (22)  நாட்டை வந்தடைந்தார். இந்திய கடற்படை தளபதி இவ்விஜயத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கஞ்சன பனாகொட உட்பட பல முக்கிய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்புக்களின்போது கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 'மாறும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் நோக்குநிலை' என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெறவுள்ள 12ஆவது காலி உரையாடல் 2025 – சர்வதேச கடல்சார் மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளார். வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடல், பணியாளர்கள் பேச்சுவார்த்தைகள் மற்றும் இலங்கை - இந்தியா கடற்படைப் பயிற்சி, பயிற்சி மற்றும் நீரியல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பிற செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் இந்தியக் கடற்படை இலங்கை கடற்படையுடன் தொடர்ந்து இணைந்து செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை தளபதியின் இவ்விஜயமானது பரஸ்பர மரியாதை, கடல்சார் நம்பிக்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த, இந்தியா - இலங்கை உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/225741
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      பாலத்தீன நாடு உருவாகாது - நெதன்யாகு
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதில் கனடா, அவுஸ்திரேலியா, போர்த்துகல் ஆகியன பிரித்தானியாவுடன் இணைவு! Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 10:03 AM  ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேல் குடியேற்றங்களை விரிவுபடுத்தவும், காசா மீதான போரை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ள நிலையில், பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதில் கனடா, அவுஸ்திரேலியா மற்றும் போர்த்துகல் ஆகியன ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கனேடிய பிரதமர் மார்க் கார்னி பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக ஞாயிற்றுக்கிழமை ( செப்டெம்பர் 21) அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளார்.  மேலும் "பாலஸ்தீன அரசு மற்றும் இஸ்ரேல் அரசு இரண்டிற்கும் அமைதியான எதிர்காலத்திற்கான வாக்குறுதியைக் கட்டியெழுப்புவதில் தங்கள் கூட்டாண்மையை" வழங்கியுள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம் "பாலஸ்தீன அரசு உருவாகும் வாய்ப்பை எப்போதும் நிறுவுவதைத் தடுக்கும் முறையாக" செயல்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். "பாலஸ்தீன அதிகார சபையின் தலைமையிலான பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது, அமைதியான சகவாழ்வையும் ஹமாஸின் முடிவையும் விரும்புவோருக்கு அதிகாரம் அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது எந்த வகையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தாது, அதற்கான எந்த வெகுமதியும் அல்ல," எனவும்  கனேடிய பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீன அதிகாரசபை கனடாவிற்கு அதன் ஆட்சியை சீர்திருத்துவதில் "நேரடி உறுதிமொழிகளை" வழங்கியுள்ளது. அதே நேரத்தில், அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகவும் அறிவித்தது. கனடா மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து அவுஸ்திரேலியாவும் அங்கீகரிப்பது இரு நாடு தீர்வுக்கான சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாகும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸ் ஒரு அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/225706
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      தந்தை அருகில் இருந்த போதே 13 வயது மகனை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படை - மேற்கு கரையில் என்ன நடக்கிறது?  படக்குறிப்பு, அப்தெல் அஜீஸ் மஜர்மே தனது 13 வயது மகன் இஸ்லாமின் மரணத்தால் துக்கம் அனுஷ்டிக்கிறார். கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர், ஜெனின் 22 செப்டெம்பர் 2025, 05:18 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் நாடுகள் குடிமக்களைப் பாதுகாக்கத்தான் இருக்கின்றன. ஒரு தந்தையும் தனது பிள்ளையைப் பாதுகாக்கவே விரும்புகிறார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமின் நுழைவாயிலில், தனது 13 வயது மகன் இஸ்லாம், இஸ்ரேலியப் படைகளால் இந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அப்தெல் அஜீஸ் மஜர்மே அருகில் நின்றுகொண்டிருந்தார். "என் மகன் தரையில் சரிந்தான். ஒரு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. ஒரு ராணுவ ஜீப் அருகில் வந்து, ஐந்து அல்லது ஆறு வீரர்கள் தங்கள் ஆயுதங்களால் என்னைக் குறிவைத்து, என்னை அங்கிருந்து செல்லும்படி கத்தினர். என் மகன் கொல்லப்பட்டான் என்று கூட எனக்குத் தெரியாது. நான் அவனை இழுத்துச் செல்ல ஆரம்பித்தேன்." ஜனவரி முதல் இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முகாமிற்கு தான் சென்றது, அங்கிருக்கும் தனது வீட்டிலிருந்து குடும்ப ஆவணங்களை எடுக்கத்தான் என்று அப்தெல் அஜீஸ் கூறினார். "நான் யாரிடமும் புகார் அளிக்க முடியாது," என்று அவர் என்னிடம் கூறினார். "அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பாலத்தீன அதிகார சபையால் தங்களையே கூட பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை - அது யூதர்களின் முடிவுகளை மட்டுமே செயல்படுத்துகிறது." ஒரு பாலத்தீனராக, அப்தெல் அஜீஸ் தனது அதிகாரமற்ற நிலையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், ஒரு தந்தையாக அவர் வேதனையில் துடிக்கிறார். "என் மனதிற்குள்ளேயே, அந்த வீரனிடம் நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். ஏன் ஒரு 13 வயது பையனைத் தேர்ந்தெடுத்தாய்? நான் அவனுக்குப் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தேன். என்னைச் சுட்டிருக்கலாம். ஏன் குழந்தைகளைச் சுடுகிறீர்கள்? நான் இங்கே இருக்கிறேன், என்னைச் சுடு."  பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, அப்தெல் அஜீஸ் செப்டம்பர் 9-ஆம் தேதி தனது மகன் இஸ்லாமைப் புதைத்தார். சந்தேக நபர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தலைச் சமாளிக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது. அந்தப் பதின்ம வயது சிறுவன் என்ன அச்சுறுத்தலை ஏற்படுத்தினார் என்பதை விளக்க அது மறுத்துவிட்டது. ஜெனின் போன்ற நகரங்கள், இஸ்ரேல்-பாலத்தீன ஓஸ்லோ அமைதி ஒப்பந்தங்களின் கீழ், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு பாலஸ்தீன அதிகார சபையின் முழு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன. இவை ஒரு அரசு உருவாவதற்கான விதைகளாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. ஆனால், அங்கு வளர்ந்தது பயங்கரவாதம் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஜனவரியில், காஸாவில் கற்றுக்கொண்ட பாடங்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, ஆயுதமேந்திய பாலத்தீன குழுக்களை ஒடுக்க ஜெனின் மற்றும் அண்டை நகரமான துல்கரேமிற்கு அது டாங்கிகளை அனுப்பியது. அப்போதிருந்து, இஸ்ரேலியப் படைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன. இரு நகரங்களிலும் உள்ள அகதிகள் முகாம்களில் பெரும் பகுதிகளை அழித்து, மற்ற பகுதிகளில் கட்டடங்களை இடித்து வருகின்றன. இஸ்ரேலின் கட்டுப்பாடு மேற்கு கரை முழுவதும் பரவும் அதேவேளையில், காஸா போரும் தொடரும் நிலையில், பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. மேலும் பல நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரிக்கத் தயாராகி வருகின்றன. ஜெனின் மேயர் முகமது ஜாரர், இஸ்லாம் சுடப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள முகாம் நுழைவாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். நான் முன்பு சென்றபோது இங்கு நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் இப்போது இல்லை. ஆனால், ஒரு பெரிய மண் திட்டு சாலையைத் தடுத்துள்ளது. இஸ்ரேலிய துப்பாக்கி சுடும் வீரர்கள் இன்னும் உயரமான கட்டடங்களிலிருந்து அந்தப் பகுதியை நோட்டமிடுகிறார்கள் என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். ஜெனின் நகரத்தில் சுமார் 40% பகுதி இப்போது இஸ்ரேலியப் படைகளுக்கான ஒரு ராணுவப் பகுதியாக உள்ளது என்றும், முழு முகாமையும் உள்ளடக்கிய சுமார் கால் பகுதி குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் ஜாரர் என்னிடம் கூறினார். "இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை அல்ல, ஒரு பெரிய அரசியல் திட்டம் என்பது தொடக்கத்திலிருந்தே தெளிவாக இருந்தது," என்று அவர் என்னிடம் கூறினார். "இந்த இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கு கரையை இணைக்க விரும்புகிறது. அதற்கான தயாரிப்பாக, அதன் திட்டத்திற்கு எந்த [ஆயுதமேந்திய] எதிர்ப்பும் இல்லாமல் இருக்க அது விரும்புகிறது." ஆசிரியர்கள் மற்றும் காவலர்களுக்கு ஊதியம் வழங்க பாலத்தீன அதிகார சபைக்கு தேவைப்படும் வரி வருவாயைத் தடுத்து, அதை நீண்ட கால பொருளாதார முற்றுகையின் கீழும் இஸ்ரேல் வைத்துள்ளது. கொல்லப்பட்ட பாலத்தீன பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதாக இஸ்ரேல் அதன் மீது குற்றம் சாட்டுகிறது. பாலஸ்தீன அதிகார சபையோ இப்போது அந்த நிதி உதவித் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகக் கூறுகிறது. உள்ளூர் மக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்குவதும், இளைஞர்களை வெளியேறாமல் இருக்கும்படி சமாதானப்படுத்துவதும் கூட இப்போது மிகவும் சவாலான காரியமாக உள்ளது என்று ஜாரர் கூறினார். இந்தச் சூழ்நிலையில், ஏற்கனவே 140-க்கும் மேற்பட்ட நாடுகள் பாலத்தீன அரசை அங்கீகரித்திருந்தாலும், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் அதை அங்கீகரிப்பது முக்கியமானது என்றார் அவர். "இது, ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தாலும் கூட பாலத்தீன மக்களுக்கு ஒரு அரசு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது," என்று அவர் என்னிடம் கூறினார். "இந்த அங்கீகாரம் மேற்கு கரையில் [அதிகமான] ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அங்கீகாரம் மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அது பாலத்தீன மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். சர்வதேச சமூகம் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அழைக்கப்படும்." பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் ஒரு பாலத்தீன அரசு அங்கீகரிக்கப்படுவது, இஸ்ரேலுக்கும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் இடையே இந்த விவகாரத்தில் உள்ள அரசியல் பிளவை அங்கீகரிப்பதாகவும் உள்ளது. "ஒரு பாலத்தீன அரசு இருக்காது," என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேற்கு கரையில் குடியேறியவர்களிடம் கடந்த வாரம் கூறினார். "இந்த இடம் எங்களுடையது. எங்கள் பாரம்பரியத்தையும், எங்கள் நிலத்தையும், எங்கள் பாதுகாப்பையும் நாங்கள் கவனித்துக் கொள்வோம்." என்றார் அவர். நெதன்யாகு ஒரு பாலத்தீன அரசைத் தடுப்பதன் மூலமே தனது அரசியல் வாழ்க்கையை உருவாக்கினார். அவரது அரசு மேற்கு கரையில் யூத குடியேற்றங்களை விரிவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவரது தீவிர வலதுசாரி கூட்டாளிகள் அந்த பகுதியை இஸ்ரேலுடன் முறையாக இணைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் சமீபத்தில் மேற்கு கரையில் 82% பகுதியை இணைத்துக்கொள்வதற்கான ஒரு திட்டத்தை கோடிட்டுக் காட்டினார். மீதமுள்ள பாலத்தீன பகுதிகள் ஒன்றிலிருந்து ஒன்று துண்டிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பாலத்தீன அரசை அங்கீகரிப்பதை எதிர்த்தார். அதேநேரத்தில், இஸ்ரேலிய நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. 1967 அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேல் ஜோர்டானிடமிருந்து மேற்கு கரையைப் பிடித்தது. பின்னர் அதை விட்டு வெளியேறவில்லை. ஜெனிவா உடன்படிக்கைகளின்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் குடிமக்களின் குடியிருப்புகளை நிறுவுவது சட்டவிரோதமானது. ஆனால், மேற்கு கரைக்கு ஒரு வரலாற்று யூத உரிமை உள்ளது என்று இஸ்ரேல் வாதிடுகிறது. சுமார் அரை மில்லியன் குடியேற்றம் செய்யப்பட்டு, இப்போது அங்கு வாழ்கின்றனர். குடியேற்ற விரிவாக்கத்தைக் கண்காணிக்கும் இஸ்ரேலிய அமைப்பான 'பீஸ் நௌ' (Peace Now), கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கு கரை முழுவதும் 100-க்கும் மேற்பட்ட புதிய புறக்காவல் நிலையங்கள் தோன்றியுள்ளதாகக் கூறுகிறது. தொலைதூர குடியிருப்புகள் சர்வதேச மற்றும் இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை. ஆனால், நெதன்யாகு அரசிடமிருந்து அவை சாலைகள், பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு வடிவில் மறைமுக ஒப்புதலையும் அரசு ஆதரவையும் பெறுகின்றன. இந்த கோடைக்காலத்தின் தொடக்கத்தில், நப்லஸின் தெற்கே தனது வீட்டுக்கு அடுத்துள்ள மலையில் புதியவர்கள் குடியேறியிருப்பதை அய்மான் சூஃபான் கண்டார். தனது ஜன்னலிலிருந்து, அவரும் அவரது பேரக்குழந்தைகளும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அமைத்த எளிய மரக் கூடாரம் மற்றும் தகர கொட்டகையைத் தெளிவாகக் காண முடிகிறது. அவர்கள் அருகிலுள்ள இட்சார் குடியேற்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று அய்மான் கூறுகிறார்.  படக்குறிப்பு, நப்லஸுக்கு அருகில் சில மாதங்களுக்கு முன்பு இந்த தொலைதூர குடியிருப்பு தோன்றியது. "எங்களை எங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றத்தான் அவர்கள் இங்கு இந்த தொலைத்தூர குடியிருப்பை அமைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு குடியேற்றவாசி வந்து, வீட்டின் கதவை தட்டி, 'வெளியேறு, வெளியேறு!' என்று கத்துகிறான்," என்று அவர் என்னிடம் கூறினார். "அவர்கள் தங்கள் குப்பைகளை எங்கள் வீட்டு வாசலில் எறிகிறார்கள். நான் அதிகாரிகளை அழைக்கிறேன். அவர்களோ, 'நாங்கள் ராணுவத்தை அனுப்புவோம்' என்று கூறுகிறார்கள். ஆனால், ராணுவம் ஒருபோதும் வருவதில்லை. குடியேற்றவாசிகள் தான் ராணுவம், அவர்கள்தான் போலீஸ், அவர்கள்தான் எல்லாம்." 1967-ல் இஸ்ரேல் மேற்கு கரையை ஆக்கிரமித்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, புரின் கிராமத்திற்கு அருகில் அய்மானின் குடும்பம் இந்த வீட்டைக் கட்டியது.  படக்குறிப்பு, தனது வீட்டிலிருந்து புதிய தொலைதூர குடியிருப்பை அய்மானால் பார்க்க முடிகிறது. இந்த கிராமப்புற பகுதிகள் போன்ற இடங்கள், ஓஸ்லோ அமைதி ஒப்பந்தங்களின் கீழ், அங்குள்ள குடியேற்றங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எதிர்கால பாலத்தீன அரசிடம் இறுதியில் ஒப்படைக்கப்படும் என்ற எண்ணத்தில் தற்காலிகமாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டன. ஆனால், அங்கே இஸ்ரேலிய கட்டுப்பாடு நிலைத்துவிட்டது, குடியேற்றங்கள் பெருகியுள்ளன. இஸ்ரேலியப் படைகள் குடியேற்றவாசிகளின் தாக்குதல்களுக்கு அதிக அளவில் ஆதரவளிக்கின்றன என்று மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன. 2003-ல் குடியேற்றவாசிகள் வீட்டிற்குத் தீ வைத்தபோது தனது தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார் என்றும், அதற்குப் பிறகு தனது வீடு பலமுறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்றும் அய்மான் கூறினார். "யார் என்னைப் பாதுகாக்க வேண்டும்," என்று அய்மான் கேட்டார். "பாலத்தீன போலீசா? நகரங்களில் இது நடப்பதைத் தடுக்க கூட அவர்களால் முடியவில்லை, இங்கு எப்படி வருவார்கள்? இங்கே, எனது பாதுகாப்பு, என்னை ஆக்கிரமித்தவர்களின் கைகளில் உள்ளது." களத்தில் எதுவும் மாறாது என்றாலும் ஒரு பாலத்தீன அரசை சர்வதேச ரீதியாக அங்கீகரிப்பது ஒரு நல்ல விஷயம் என்று அவர் கூறுகிறார்.  "வரப் போவது இன்னும் மோசமானது," என்று அவர் கூறினார். "ஆனால், நான் இந்த வீட்டை விட்டு வெளியேறினால், அது நான் பிணமாக வெளியேற்றப்படும் போதுதான். நான் பிறந்த, வளர்ந்த, என் குழந்தைப் பருவத்தைக் கழித்த இந்த வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு ஒரு நினைவு உள்ளது. நான் எப்படி இதை விட்டு வெளியேற முடியும்?" ஓஸ்லோ ஒப்பந்தங்களுக்குப் பிந்தைய தசாப்தங்களில், இஸ்ரேலிய விவரிப்புகள் கடுமையாகியுள்ளன. ஆயுதமேந்திய பாலஸ்தீன குழுக்கள் வலுப் பெற்றுள்ளன. பாலஸ்தீன அதிகார சபையின் கட்டுப்பாடு குறைந்துவிட்டது. "பாலத்தீனம் ஒருபோதும் அவர்களுக்குச் சொந்தமாக இருந்ததில்லை. ஒருபோதும் இருக்கவும் போவதில்லை," என்று மகனை இழந்த தந்தை அப்தெல் அஜீஸ் மஜர்மே கூறினார். "இன்றோ, நாளையோ, ஒரு ஆண்டிலோ அல்லது இரண்டு ஆண்டுகளிலோ, அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவார்கள். பாலத்தீனம் விடுவிக்கப்படும்." இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் ஆகிய இரண்டு தனிநாடுகள்தான் இங்குள்ள மோதலுக்கான தீர்வு என்ற யோசனையை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆதரிக்கின்றன. பாலத்தீன பிரதேசங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள போதிலும், பாலத்தீன அமைப்புகள் பலவீனமடைந்துள்ள போதிலும் இந்த நிலைப்பாட்டில் அந்நாடுகள் உள்ளன. இப்போது, நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டாளிகள் இணைப்பிற்காக அழுத்தம் கொடுப்பதால், காஸா போர் மற்றும் அதற்குப் பிறகு காஸாவை யார் ஆள்வார்கள் என்ற கேள்விகள் அந்த அரசியல் முட்டுக்கட்டையை வெளிப்படையான மோதலாக மாற்றியுள்ளன. சட்டங்கள் மற்றும் அறிவிப்புகளால் அல்லாமல் அரசும் இறையாண்மையும் களத்தில் உள்ள உண்மைகளால் தீர்மானிக்கப்படும் என்று சில இஸ்ரேலியர்கள் கூறுகின்றனர். தனது ஒப்புதல் இல்லாமல் ஒரு பாலத்தீன அரசு இருக்க முடியாது என்று இஸ்ரேல் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறது. இப்போது, அங்கீகரிப்பை முன்னெடுப்பதன் மூலம், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் இஸ்ரேலால் மட்டும் தனிநாடு உருவாவதை தடுக்க முடியாது என்று சமிக்ஞை செய்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czx0043gnrxo
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      முன்னரெல்லாம் சிவாஜிக்கு -சி.எஸ்.ஜெயராமன், எம்ஜிஆருக்கு சீர்காழியார் எனப் பாடிக்கொண்டிருந்தார்கள். தூக்குத் தாக்கி படத்ததோடு சிவாஜி, சௌந்தரராஜனோடு ஒன்றிப் போனார். எம்ஜிஆரும் சௌந்தரராஜனை தன் படத்தில்  பாடவைத்தாலும் விட்ட குறை தொட்ட குறை என்று அவ்வப்போது சீர்காழியாருக்கும்  தன் படத்தில் சந்தர்ப்பம் கொடுத்துக் கொண்டிருந்தார். சபாஸ் மாப்பிள்ளை படத்தில்  இடம்பெற்ற இந்தப் பாடலுடன் எம்ஜிஆருடன் உடனிருப்பவர் மாலினி. அன்றைய முன்ணணி நடிகர்களோடு  மாலினி நடித்திருந்தோலும் பத்துப் படங்களுக்குள் இவரது திரைப்பயணம் நின்றுவிட்டது. சபாஸ் மீனா படத்தில் சிவஜியுடன் மாலினி இணைந்து  நடித்திருப்பார். அந்தப் படத்தில் இடம் பெற்ற “ காணா இன்பம் கனிந்ததேனோ..” பாடல் அன்று அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்ட பாடல்.
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 09:59 AM  பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரிப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது அரசாங்க கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு, அமைதி மற்றும் இரு - மாநில தீர்வுக்கான சாத்தியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க நாங்கள் செயல்படுகிறோம் என அவர் தமது எக்ஸ் தளத்தில் காணொளி அறிக்கையொன்றினூடாக பதிவிட்டுள்ளார். அவுஸ்திரேலியா, கனடா மற்றும் போர்த்துகல் ஆகியவை பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. அதனைத் தொடர்ந்து பிரான்ஸூம் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக், காசாவில் பணையக் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் சில பழமைவாதிகளிடமிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.  இதற்கு பதிலளித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அரசு "நடக்காது" என ஞாயிற்றுக்கிழமை(21) குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/225704
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      திலீபனின் 8ஆம் நாள் நினைவேந்தல் நல்லூரில் அனுஷ்டிப்பு 22 Sep, 2025 | 11:18 AM  தியாக தீபம் திலீபனின் 8ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.        https://www.virakesari.lk/article/225727
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      ஜனாதிபதி அநுர இன்று அமெரிக்கா விஜயம் 22 Sep, 2025 | 10:19 AM  ( இணையத்தள செய்திப் பிரிவு ) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் புதன்கிழமை (செப்டெம்பர் 24) ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாரம் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதற்கமைய ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி இன்று அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். இவ்விஜயத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தும் கலந்துகொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை  கூட்டத்தில்  புதன்கிழமை (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு (இலங்கை நேரப்படி அதிகாலை 12 மணியளவில்)  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னர்  ஜனாதிபதி ஜப்பானின் ஒசாகாவிற்குச் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.அங்கு சிறப்பு கண்காட்சி 2025 இல் கலந்து கொள்வார். கலாச்சாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் நாட்டின் தனித்துவமான சலுகைகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/225719
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தீப்பந்தப் போராட்டம்! 22 Sep, 2025 | 09:35 AM  மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 21) 50 ஆவது நாளை எட்டிய நிலையில் தீப்பந்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை  எட்டிய நிலையில் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் போது கையில் தீ பந்தத்தை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த தீப்பந்த போராட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார், இளையோர், பொது மக்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.           https://www.virakesari.lk/article/225712
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அழிந்து வரும் அரிய வகை பவளப்பாறைகள்  https://www.maalaimalar.com/news/state/2020/10/23144019/1996584/Rare-type-Corals-Will-be-destroyed.vpf தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அரிய வகை பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பனைக்குளம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் முதல் தூத்துக்குடி வரையிலான தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றி  இதேபோல் ராமேசுவரம் முதல் மண்டபம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியிலும் ஏராளமான பவளப்பாறைகள் உள்ளன. மீன்கள் முட்டையிட்ட குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்வதற்கு பவளப்பாறைகள் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பவளப்பாறைகள் அதிகம் உள்ள இடங்களில் மீன்களும் அதிகம் காணப்படும்.       அழியும் நிலையில் பவளப்பாறைகள்... முடக்கப்படும் மன்னார் வளைகுடா அறக்கட்டளை..! கடல் உயிரினங்களின் சொர்க்கமாகவும், மீனவர்களின் ஆழ்கடல் அட்சய பாத்திரமாகவும் விளங்கி வருவது மன்னார் வளைகுடா கடல் பகுதி. இந்தக் கடல் பகுதியில் உள்ள அரிய வகை உயிரினங்களையும், ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. மீன்களையும் அதை நம்பியுள்ள மீனவர்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட  மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளைக்கு மூடு விழா நடத்த தமிழக அரசு முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடல் உயிரினங்களின் சொர்க்கமாகவும், மீனவர்களின் ஆழ்கடல் அட்சயப் பாத்திரமாகவும் விளங்கி வருவது மன்னார் வளைகுடா பகுதி. இந்தக் கடல் பகுதியில் உள்ள அரியவகை உயிரினங்கள்தான், ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இதுபோன்ற மீன்கள் மற்றும் அதை நம்பியுள்ள மீனவர்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளைக்கு மூடுவிழா நடத்த தமிழக அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் (Mannar biosphere reserve) இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியான ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் அமைந்துள்ளது. இது உலகப் புகழ்பெற்ற உயிர்க்கோளக் காப்பகம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது. தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் மன்னார் வளைகுடா தேசியப்பூங்காவை உள்ளடக்கி சுமார் 10,500 சதுர கிலோமீட்டரில் பரவியுள்ள இந்தக்காப்பகம், இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகமாக 1989-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மன்னார் வளைகுடாப் பகுதியில் காணப்படும் அழகான பவளப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாகத் திகழ்கிறது. இந்த உயிர்கோளக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong), டால்பின்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள், இந்தப் பகுதியில்தான் காணப்படுகின்றன. முத்துக்கள், சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து இப்பகுதி காணப்படுகிறது. மேலும் கடற்பஞ்சுகள், பவளங்கள், கடல்விசிறிகள், இறால்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் உள்ளன. காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, வாழை தீவு ஆகிய தீவுகளும் மன்னார் வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ளன. இந்தத் தீவுகளைச் சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றில் கடினவகை பவளப் பாறைகளும் அடங்கும். இத்தகைய அரிய பகுதியைப் பாதுகாக்கத் தவறியதோடு, அதற்காகத் துவங்கப்பட்ட உயிர்கோள காப்பகம் எனும் அறக்கட்டளைக்கு மூடுவிழா நடத்தவும் தமிழக அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) மாநிலப் பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ``தமிழக அரசு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கியது. இந்த அறக்கட்டளையின் பணி கடல்வாழ் அரிய உயிரினங்கள் மற்றும் தாவரங்களைப் பாதுகாத்தல் மற்றும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல், மீனவர்களின் சமூக மேம்பாட்டை உயர்த்துவது ஆகியவைதான். இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் நிதி உதவியுடன் இயங்கி வந்தது. இந்நிலையில், ஐ.நா. உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் நிதி உதவியானது, கடந்த 2012-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த அறக்கட்டளையை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து மேலும் நான்கு ஆண்டுகளுக்குத் திட்டத்தை நீடித்தது. ஆண்டுக்கு ரூ.2.5 கோடி வீதம், நான்காண்டுகளுக்கு ரூபாய் 10 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பணத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்யாமல் இதுவரை 5.96 கோடி ரூபாய் மட்டுமே அத்திட்டத்துக்காகச் செலவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு 2017-18 நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 0.74 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் அத்திட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று தற்போது, மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தை இதுவரை பராமரித்து வந்த அறக்கட்டளையின் காலம் முடிந்ததாகக் கூறி பணிகளை நிறுத்திவிட்டு, உயிர்க்கோள காப்பகத்தை முழுமையாக தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்புத் துறையின்கீழ் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  மன்னார் வளைகுடா கடற்பகுதி வளங்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட பாரம்பர்ய மீனவர்களிடமே அக்கடமையை ஒப்படைப்பதுதான் அறக்கட்டளையின் நோக்கம். ஆனால், அறக்கட்டளை உருவாக்கப்பட்ட 2000-வது ஆண்டு தொடங்கி இன்றுவரை பதினேழு ஆண்டுகளில் அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல், கண்துடைப்புக்காக சில கூட்டங்களை மீனவர்களை வைத்து நடத்திவிட்டு, அரசின் பணத்துக்கு கணக்கு எழுதிய வேலைதான் நடந்தது. எனவே, அறக்கட்டளையின் செயல்பாடு முடியவில்லை. இன்னும் ஒழுங்குபடுத்தி சிறப்பாக கொண்டுசெல்ல வேண்டிய தேவை உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள். தமிழகத்தில் மன்னார் வளைகுடாவில் ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான 140 கி.மீ. பரப்பளவில் பவளப்பாறைகள் உள்ளன. அவற்றைக் கடத்திச் செல்லும் சிலர், சென்னையிலிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கடத்திச் செல்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பவளப் பாறைகளுக்கு மனிதர்களால் அழிவு ஏற்படத் தொடங்கி உள்ளது. பவளப்பாறைகள் கடத்தல் மட்டுமின்றி கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமயமாதல், தொழிற்சாலைக் கழிவுகளால் கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் போன்றவற்றாலும் கடல் வளம் பெரிதும் அழிந்து கொண்டிருக்கிறது. கடல் என்பது கழிவுகளைக் கொட்டும் இடம் அல்ல. அது காடுகளைப் போலவே தாவரங்கள், நுண்ணுயிரிகள், பாலூட்டிகள் எனப் பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது. இவற்றில் கடல்வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது பவளப்பாறைகளே. இத்தகைய பவளப்பாறைகள், கடலின் தட்பவெப்பத்தை பேணிக்காக்கவும் கடல் பகுதிகளை இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும் அரணாக உள்ளன. எனவே, மீண்டும் தமிழக அரசு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையை தற்கால சூழலுக்கு ஏற்ப, விதிகளில் மாற்றம் செய்து, மத்திய அரசு மற்றும் ஐ.நா. நிதியுதவியுடன் செயல்படச் செய்ய வேண்டும். இதன் மூலம் மன்னார் வளைகுடா கடற்பகுதி வளங்களை பாதுகாக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளார்.  https://www.vikatan.com/literature/arts/124980-is-gulf-of-mannar-biosphere-reserve-trust-going-to-be-shutdown
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      Published By: Vishnu 22 Sep, 2025 | 05:35 AM  இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், மார்ச் 25, 2025 நிலவரப்படி 2024 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை தாக்கல் செய்யாத பொது அதிகாரிகளின் பட்டியலை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இவர்களில் ஒரு முன்னாள் அமைச்சர், நான்கு முன்னாள் மாகாண ஆளுநர்கள், ஆறு முன்னாள் மாநில அமைச்சர்கள், 29 முன்னாள் தூதர்கள் மற்றும் இரண்டு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அடங்குவர். தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை தாக்கல் செய்யாத முன்னாள் அமைச்சர் முன்னாள் மீன்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். முன்னாள் ஆளுநர்கள் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரோஷன் குணதிலகா, செந்தில் தொண்டமான், நவீன் திசாநாயக்க, வில்லியம் கமகே ஆகியோர் தொடர்புடைய தேதிக்குள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை சமர்ப்பிக்கவில்லை. முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான லோகன் ரத்வத்தே, தாரக பாலசூரிய, சாந்த பண்டார, காதர் மஸ்தான், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/225702
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      49 வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று செத்துப் போனவருக்கு என்ன பிரச்சினை இருந்ததோ? யாரறிவார். நித்தம் சோறின்றி எத்தனை பேர் எத்தனையோ வருடங்கள் வாழ்கிறார்கள். யாரும் அதிசயப் படவில்லை. கொஞ்சம் மில்லியன்களை அந்தப் பக்கமும் திருப்பி விடலாம். சக்கரவர்த்தி திருமகள் படத்தில் என்.எஸ். கிருஸ்ணன் கேட்பார், “ கோவிலை கட்டுவது எதனாலே?" என்று. அதற்கான பதில், “சிற்ப வேலைக்குப் பெருமையுண்டு அதனாலே” என்று வரும். இன்றைய நிலையில் கோவிலைக் கட்டுவது ஒரு வியாபாரத்திற்குத்தான்.  அதுசரி  அநேகமாக பல்லி  மேலேதானே இருக்கும். எப்படிக் கீழே வந்தது? அவர் ஏன் மேலே போனார்? புரியவில்லை. பக்கத்து வீட்டுக்காரனோடு உங்களுக்கு நல்லா பொழுது போகுது போலே.
  
    Checked
              Tue, 11/04/2025 - 08:47
           
கருத்துக்களம் - All Activity
  
  Subscribe to புதிய பதிவுகள்2 feed