புதிய பதிவுகள்2

தொடர் கதை 02 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை"

1 month 2 weeks ago
தொடர் கதை 02 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/30751677411147503/? "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 02 https://www.facebook.com/groups/978753388866632/permalink/30815037124811531/ "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 03 https://www.facebook.com/groups/978753388866632/permalink/30860636763584900/ "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 04 https://www.facebook.com/groups/978753388866632/permalink/30969169072731668/

தொடர் கதை 01 / "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்"

1 month 2 weeks ago
தொடர் கதை 01 / "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:01 https://www.facebook.com/groups/978753388866632/posts/9681477875260763/? இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:02 https://www.facebook.com/groups/978753388866632/posts/9691763294232221/? இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:03 https://www.facebook.com/groups/978753388866632/posts/9710364575705426/? இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:04 https://www.facebook.com/groups/978753388866632/posts/9725436214198262/? இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:05 https://www.facebook.com/groups/978753388866632/posts/9736564316418785/?

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 month 2 weeks ago
பங்களாதேஷை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி Published By: Vishnu 13 Sep, 2025 | 11:51 PM இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையே 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 140 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, 14.4 ஓவர்களில் 04 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 140 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியின் பதும் நிஸ்ஸங்க 50 ஓட்டங்கள், குசல் மெண்டிஸ் 03 ஓட்டங்கள், குசல் பெரேரா 09 ஓட்டங்கள், கமில் மிஷாரா ஆட்டமிழக்காமல் 46* ஓட்டங்கள், சரித் அசலங்கா ஆட்டமிழக்காமல் 10 * ஓட்டங்கள் எடுத்தனர். மஹேதி ஹசன் 02 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் தன்சிம் ஹசன் சாகிப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கெப்டன், பங்களாதேஷை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார், பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுகள் இழந்து 139 ஓட்டங்களை எடுத்தது. அதன்படி, களத்தில் இறங்கிய பங்களாதேஷ் அணித்தலைவர் லிட்டன் தாஸ் 28 ஓட்டங்களையும், தௌஹித் ஹிரிடோய் 8 ஓட்டங்களையும், மஹேதி ஹசன் 9 ஓட்டங்களையும், ஜாக்கர் அலி ஆட்டமிழக்காமல் 41* ஓட்டங்களையும் , ஷமிம் ஹொசைன் ஆட்டமிழக்காமல் 42* ஓட்டங்களையும் எடுத்தனர். தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய தன்சித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் எந்த ரன்களையும் எடுக்க முடியவில்லை. பந்துவீச்சில், வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/225020

பல்தரப்பு “ பசுபிக் ஏஞ்சல் 25” பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அமெரிக்கா மற்றும் இலங்கை

1 month 2 weeks ago
பெரும் பொறுப்புகளுடன் இந்தியப் பெருங்கடலின் இதயத்தில் இலங்கை - பாதுகாப்பு செயலாளர் Published By: Digital Desk 1 14 Sep, 2025 | 09:24 AM (லியோ நிரோஷ தர்ஷன்) பசிபிக் ஏஞ்சல் போன்ற பயிற்சிகள், அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும், பங்குபெறும் நாடுகளிடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த, மனிதனால் உருவாக்கப்பட்ட சவால்களாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு தொடர்பானவையாக இருந்தாலும், அவற்றை ஒரு நாடால் மட்டும் எதிர்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகில் பாதுகாப்புச் சவால்கள் மிகவும் சிக்கலானவையாகவும், எல்லை தாண்டியவையாகவும் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பன்முகப் பயிற்சிகள் இராணுவங்களுக்கு இடையிலான கூட்டுறவின் தேவையை உணர்த்துகின்றன. கூட்டுத் தயார்நிலை என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் உலகப் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்திற்கும் மிக முக்கியமான மையமாகத் திகழ்கிறது. கடல் வழிப் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் நாடுகளை இணைத்து வர்த்தகத்தைத் தக்கவைக்கின்றது. இருப்பினும், இவை இயற்கைப் பேரிடர்கள், காலநிலை மாற்ற அபாயங்கள், எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகிறன. இத்தகைய சூழலில், இந்தியப் பெருங்கடலின் இதயப் பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் பொறுப்பு, பிராந்தியத்தின் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் மீள்திறனை உறுதி செய்வதாகும். பசிபிக் ஏஞ்சல் போன்ற பயிற்சிகள், அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும், பங்குபெறும் நாடுகளிடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துகின்றன. பசிபிக் ஏஞ்சல் 2025 பயிற்சியின் வெற்றிக்கு பங்களித்த அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் இராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன். திறன்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அப்பால், இந்த பயிற்சியின் உண்மையான மதிப்பு, வளர்த்த நட்புறவில் உள்ளது. இங்கு ஏற்பட்ட பரஸ்பர புரிதலும், மனிதப் பிணைப்புகளும் எதிர்கால நெருக்கடிகளின் போது பெரிதும் உதவும். அமெரிக்கா மற்றும் அனைத்து பிராந்திய பங்காளர்களுடனும் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட இலங்கை உறுதிபூண்டுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட சவால்களாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு தொடர்பானவையாக இருந்தாலும், அவற்றை ஒரு நாடால் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இணைந்து செயல்படுவதன் மூலம், பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/225022

திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்

1 month 2 weeks ago
'5 கி.மீ.யை கடக்க 5 மணி நேரம்': திருச்சியில் கூடிய கூட்டமும் விஜயின் பேச்சும் உணர்த்துவது என்ன? பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, திருச்சியில் தனது பிரசாரப் பயணத்தை தொடங்கினார் தவெக தலைவர் விஜய் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி திருச்சியில் சனிக்கிழமையன்று (செப்டெம்பர் 13) மக்கள் சந்திப்புப் பயணத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தொடங்கினார். 'தி.மு.க ஆட்சியை விமர்சித்தாலும் கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு தவெக பலம் பெறவில்லை' எனக் கூறுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். 'செல்வாக்கைக் காட்டும் விதத்தில் விஜய் பயணம் இருந்தாலும் வெற்றியைத் தருமா என்பது கேள்விக்குறி' என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய்க்கு திருச்சியில் கூடி மக்கள் திரள் எதைக் காட்டுகிறது? அதுகுறித்து கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் என்ன சொல்கிறார்கள்? ஐந்து மணிநேர தாமதம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியில் சனிக்கிழமை (14/09/2025) தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் பேசவிருந்த மரக்கடை என்ற இடத்திற்கு விஜய் வந்து சேரவே ஐந்து மணிநேரத்துக்கும் மேல் தாமதமானது. அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் பயணம் என விஜய் அறிக்கை வெளியிட்டார். பட மூலாதாரம், TVK காலை 10.30 மணிக்கு பேசுவார் என்று அறிவிக்கப்பட்ட மரக்கடையில் அவரால் மாலை சுமார் 4 மணியளவில்தான் பேச்சைத் தொடங்க முடிந்தது. " போருக்குப் போவதற்கு முன்பாக போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வக் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுவார்கள். அதுபோல ஜனநாயகப் போருக்காக இங்கு வந்துள்ளேன்" என்றார் விஜய். மக்களை மோசமாக ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.கவையும் பா.ஜ.கவையும் கேள்வி கேட்பதற்காகவே வந்திருப்பதாகக் கூறிய விஜய், "மக்களை வாட்டி வதைக்கும் பா.ஜ.கவையும் தி.மு.கவையும் விட மாட்டோம்" என்றார். தொடர்ந்து விஜய் பேசுவதை சரிவர கேட்க முடியாமல் ஒலிபெருக்கியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அங்கிருந்த தொண்டர்கள் சரிவர கேட்கவில்லை எனக் கூறியும் தனது பேச்சை விஜய் தொடர்ந்தார். தி.மு.க, பா.ஜ.கவை சாடிய விஜய் பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, மக்களவைத் தொகுதிகள் மறு சீராய்வை தவெக எப்போதும் எதிர்க்கும் என விஜய் குறிப்பிட்டார். இந்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைச் சாடிய விஜய், "இதன்மூலம் தேர்தலில் தவறுகள் தான் நடக்கும். அதற்காகவே மத்திய பா.ஜ.க அரசு இதைக் கொண்டு வருகிறது" எனத் தெரிவித்தார். மக்களவைத் தொகுதிகள் மறு சீராய்விலும் தென்னிந்தியாவுக்கு எதிராக மிகப் பெரிய சதி உள்ளதாகவும் இதை தவெக எப்போதும் எதிர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதி, கீழடி ஆய்வு முடிவுகள், பேரிடர் நிதி ஆகியவற்றில் மத்திய அரசு வஞ்சிப்பதாகக் கூறிய விஜய், "நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் அடையும் துன்பங்களை பா.ஜ.க அரசு கண்டுகொள்ளவில்லை. கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் வேடிக்கை பார்க்கிறது" எனப் பேசினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாக மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக விஜய் விமர்சித்தார். தொடர்ந்து, 'கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் விலையில் மூன்று ரூபாய் குறைப்பு, அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து ஆகியவற்றை செய்தீர்களா?' என தி.மு.க அரசை நோக்கி கேள்வி எழுப்பினார். 'கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றம், ஆண்டுக்கு பத்து லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை, மாதம்தோறும் மின் கட்டணம், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை செய்வதாகக் கூறினீர்களே.. செய்தீர்களா?' எனவும் விஜய் கேள்வி எழுப்பினார். "தமிழ்நாட்டுக்கு மத்திய பா.ஜ.க அரசு செய்வது துரோகம் என்றால் தமிழ்நாட்டுக்கு ஸ்டாலின் அரசு செய்வது நம்பிக்கை மோசடி" எனவும் தவெக தலைவர் விஜய் விமர்சித்தார். "இரண்டுமே தவறு தான். இரண்டுமே ஏமாற்று வேலை தான். இரண்டு பேருமே ஏமாற்றுவதில் ஒரே வகையறா தான். இவர்கள் இருவரும் மறைமுக உறவுக்காரர்கள் என்று ஏன் சொல்கிறோம் என இப்போது புரிந்திருக்கும்" எனவும் விஜய் சாடினார். விஜய் பேச்சு பற்றி திருமாவளவன் கருத்து விஜயின் பிரசாரம் குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "களப்பணியை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். இதன்மூலம் தேர்தல் அரசியலில் என்ன தாக்கம் ஏற்படப் போகிறது என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது" எனக் கூறினார். "தி.மு.க அணியை வீழ்த்துவோம் என பலமுனைகளில் இருந்து வரும் குரல்களில் விஜயின் குரலும் ஒன்று" எனக் கூறிய திருமாவளவன், "இது தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன்" எனக் கூறினார். தவிர, தி.மு.க கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு விஜய் பலம் பெறவில்லை எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார். ' பார்வையாளர்கள் மட்டுமே' படக்குறிப்பு, இந்த கூட்டத்தை நீண்டகால அரசியல் வெற்றியைத் தருவதற்கான வாய்ப்புகளாக பார்க்க முடியவில்லை என்கிறார் ஷ்யாம். "தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை விஜய் காட்டிக் கொள்வதாகவே இந்தக் கூட்டத்தைப் பார்க்க வேண்டியுள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " எம்.ஜி.ஆர் நடத்திய கூட்டங்களில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்றாலும் சித்தாந்தங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அங்கு இருந்தது" எனக் கூறுகிறார். "ஆனால், தவெக கூட்டத்தில் கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. அடுத்த 30 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் அரசியல், தனித்துவம் ஆகியவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு இருக்கிறது. அதற்கான பயிற்சியும் நெறிப்படுத்துதலும் தவெகவில் இல்லை" என்கிறார் ஷ்யாம். விஜயின் கூட்டத்துக்கு வருகிறவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆரின் முகத்துக்குக் கவர்ச்சி இருந்தாலும் அவருக்குப் பின்னால் சித்தாந்தத்தை வலிமையாக கொண்டு செல்வதற்கான படை இருந்தது" எனவும் குறிப்பிட்டார். திருச்சியில் கூடிய கூட்டம் குறித்துப் பேசும் ஷ்யாம், " கூட்டத்துக்குச் சென்றோம். செல்ஃபி எடுத்தோம் என்ற மனநிலையில் தொண்டர்கள் இருந்ததையே பார்க்க முடிந்தது. இது நீண்டகால அரசியல் வெற்றியைத் தருவதற்கான வாய்ப்புகளாக பார்க்க முடியவில்லை" என்கிறார். இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "ரசிகர் கூட்டம், வாக்குகளாக மாறும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கூட்டத்தை வழிநடத்திச் செல்வதற்கான கட்டமைப்பும் திட்டமிடலும் தவெகவில் இல்லை" என்கிறார். 'வரவுக் கணக்கில் வருவதற்கு வாய்ப்பில்லை' பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, நிபந்தனைகளே விதிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என குபேந்திரன் கேள்வி எழுப்புகிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து 5 கி.மீ தூரம் செல்வதற்கு சுமார் ஐந்து மணிநேரம் விஜய்க்கு தேவைப்பட்டதாகக் கூறும் குபேந்திரன், "இதைப் பெருமையாக அக்கட்சியினர் நினைக்கலாம். மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் எழுந்துள்ளது" எனத் தெரிவித்தார். "தொண்டர்களை நெறிப்படுத்தியிருந்தால் தாமதம் ஏற்பட்டிருக்காது" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், " கூட்டங்களுக்கு எம்.ஜி.ஆர் தாமதமாக வரும் நிகழ்வுடன் இதனை ஒப்பிட்டு சிலர் பேசுகின்றனர். அன்றைய காலகட்டம் வேறு. " என்கிறார். "மின் மாற்றிகள், கட்டடங்கள் மீது ரசிகர்கள் ஏறி நின்றனர். நல்லவேளையாக முன்கூட்டியே மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?" எனக் கேள்வி எழுப்பும் குபேந்திரன், "கூட்டத்தைக் கூட்டுவதால் ஏற்படும் அசம்பாவிதங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும்" எனக் கூறுகிறார். "கூட்டத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் அது வெற்றிக்கான வாக்குகளாக மாறாது. ஐந்து கோடி வாக்குகள் பதிவாகும் மாநிலத்தில் வெறும் லட்சங்களில் விழும் வாக்குகளால் வெற்றி கிடைக்காது" எனக் கூறும் ஷ்யாம், " இவை வரவுக் கணக்கில் வருவதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார். தவெகவுக்கு என்ன பலன்? "திருச்சி கூட்டத்தின் மூலம் தவெகவை நோக்கி சிலர் கூட்டணிக்கு வருவார்கள்" எனக் கூறும் ஷ்யாம், " அது கட்சிக்கு லாபமாக இருக்கும். ஆனால், தனது வாக்காளர்கள் யார் என்பதை விஜய் முடிவு செய்ய வேண்டும். தன்னைப் பார்க்க வந்தவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதா என்பதை அவர் பார்க்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். தவெகவின் விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு, திருச்சி பிரசாரம் ஆகியவற்றை மேற்கோள் காட்டிப் பேசிய ஷ்யாம், "மூன்று கூட்டங்களிலும் அரசியல்மயப்படுத்தும் வேலைகள் என எதுவும் இல்லை. திரைக் கவர்ச்சிக்கு பின்னால் கற்றுக் கொண்டது என்ன என்பது தான் முக்கியமானது" என்கிறார். "ஆளும்கட்சிகள் மீது விமர்சனம் வைப்பது தான் தவெகவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பலன் இல்லை என விஜய் பேசினார். ஆனால், அவை என்னென்ன எனப் பட்டியல் போட்டுப் பேசியிருக்க வேண்டும்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். 'அண்ணா, எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்' படக்குறிப்பு, எங்களால் அரசு சொத்துகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்பட்டதில்லை என்கிறார் லயோலா மணி பிபிசி தமிழிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி, "இதுபோன்ற கூட்டம் அண்ணா, எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்க்கு வந்து சேர்கிறது. இது தானாக சேர்ந்த கூட்டமாக உள்ளது" என்கிறார். "போக்குவரத்து நெரிசலை காவல்துறை சரியான முறையில் கையாளவில்லை" எனக் கூறும் லயோலா மணி, "கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் கட்சியின் நிர்வாகிகளும் தன்னார்வலர்களும் ஈடுபட்டனர்" எனக் குறிப்பிட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் அரசியல்மயப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறிய அவர், "இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியுள்ளோம். எங்களால் அரசு சொத்துகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்பட்டதில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce8421nkdlno

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம்

1 month 2 weeks ago
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் 76 வருட ஆட்சியின் "அபிவிருத்தி" என்ற பழைய அணுகுமுறை மீணடும் சாத்தியக்கூற்று - சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி பதிப்பு: 2025 செப். 13 19:14 யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் (Cricket) விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதா என்பது தொடர்பான சந்தேகங்கள் எழுகின்றன. சாத்தியக்கூற்று அறிக்கைகள் (Feasibility Report) சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் (Environmental Report) எதுவும் இன்றி வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர் 'தமிழ் மக்களுக்கு நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்' என்பதை உலகிற்கு காண்பிக்கும் நோக்கில் மாத்திரமே அபிவிருத்தி என்ற மாயை உருவெடுத்திருக்கிறது. மாறாக நூறு வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் போராட்டம் ஒன்றை நடத்தி வரும் ஈழத் தமிழ்ச் சமூகம், தனது அரசியல் விடுதலை விவகாரத்தில் பொருத்தமான தீர்வு கிடைக்காத ஒரு பின்னணியில் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்விகளுக்கு சிங்கள தலைவர்களிடம் இருந்து பதில் இல்லை. வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் நகர்வுகள் மிக நுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை. அபிவிருத்தி செய்தால் அரசியல் தீர்வு அவசியம் இல்லை என்ற தவறான கற்பிதம் ஒன்றை இலங்கை ஒற்றையாட்சி அரசு அன்று முதல் நுட்பமாக கட்டமைத்துள்ளது. 1949 ஆம் ஆண்டு கிழக்கில் கல்லோயா குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களுக்கு முதலிடம் வழங்கப்பட்ட ஒரு பின்னணியில் தான், 1956 ஆண்டு கல்லோயா இன அழிப்பு மோதல் ஏற்பட்டது. இப் பின்புலத்தில்தான், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் 1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத் திட்டம் போன்றொரு அபிவிருத்திகளை வடக்கு கிழக்கில் அவதானிக்க முடிகிறது. இதற்கு சந்திரிகா, மகிந்த, மைத்திரி - ரணில் மற்றும் கோட்டாபய என்று தொடர்ச்சியாக உற்று நோக்கினால், அபிவிருத்தி என்ற போர்வையில் இந்த நுட்பங்களை அவதானிக்க முடியும். அதேநேரம் அரசியல் நோக்கிலும் ஆட்சி செய்யும் கட்சிகள் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடம் வேரூன்ற செய்து, தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்தள்ளும் நோக்கில் வடக்கு கிழக்கில் பெரும் ஆடம்பரமாக ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் பின்னர் கைவிடப்பட்ட சம்பவங்களும் உண்டு. உதாரணமாக மண்டைதீவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என பிரச்சாரம் செய்யப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால், 2015 ஆம் ஆண்டு மைத்திரி ரணில் அரசாங்கத்தில் யாழ்.மண்டைதீவில் ஆரம்பிக்கப்பட்ட சுற்றுலா மையத்தின் செயற்பாடுகள் உரிய முறையில் செய்யப்படவில்லை. யாழ் மாவட்ட செயலகம் ஊடாக ஜனாதிபதி செயலகம் முன்னெடுத்த நடவடிக்கை பொருத்தமானதாக அமையவில்லை. சுமார் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தால் மண்டைதீவு சுற்றுலா மையத்தின் வேலை திட்டத்திற்கான நிதி விடுவிப்பு செய்யப்பட்டது. குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேலனை பிரதேச செயலகம் மற்றும் வேலனை பிரதேச சபை இணைந்து மண்டைதீவு சுற்றுலா மையத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த நிலையில், குறித்த திட்டம் பொருத்தமான முறையில் முடிவுறுத்தப்படவில்லை. எந்தவிதமான ஆய்வுகளும் செய்யப்படாமல் அரசியல் நோக்கில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பிரதமராக இருந்த ரணில் ஆகியோருடைய படங்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகை மண்டைதீவில் நாட்டப்பட்டிருந்தது. திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கடற்பிரதேசம் ஆழம் குறைந்த கடல் பகுதியில் காணப்படும் நிலையில் படகுச் சவாரிகளை மேற்கொள்ள, குறித்த கடல் பிரதேசத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற கேள்விகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான் எழுந்தன. ஆகவே, சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் இது பற்றிய சாத்தியக் கூற்று ஆய்வுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்திருக்க வேண்டும். ஆனால்,அவ்வாறு எந்த ஒரு ஆய்வுகளும் இல்லாமல் அரசியல் நோக்கில் எடுத்த எடுப்பில் கொழும்பு அரசியல் நிர்வாகம் தமிழ் மக்களை தம் வசப்படுத்த வேண்டுமென்ற ஒரே ஒரு நோக்கில் வடமாகாண அதிகாரிகளை நன்கு பயன்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஏனைய தீவுப் பகுதிகளான சாட்டி, காரைநகர் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக அடையாளம் காணப்பட்டிருந்த ஒரு நிலையில், ஏன் குறித்த திட்டத்தை மண்டைதீவில் செயற்படுத்தினார்கள் என்ற நியாயமான கேள்விகளுக்கு கொழும்பு அரசியல் நிர்வாகத்தினால் இன்றுவரை பதிலளிக்க முடியவில்லை. ஆகவே, கொழும்பு மைய சிங்கள அரசியல் கட்சிகளுக்கு குடை பிடிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள அதன் தமிழ் முகவர்கள் முன் யோசனைகள் எதுவுமின்றி பெயர் பலகையை நாட்டுவது, அடிக்கல் நாட்டுவது போன்ற நிகழ்வுகளை பெரும் பிரச்சாரமாக காண்பித்து வாக்கு அரசியலில் ஈடுபடுகின்றனர் என்பது மாத்திரம் இங்கே பகிரங்கமாக தெரிகிறது. மக்களின் வரிப்பணத்தில் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் மண்டதீவு சுற்றுலா மையம் தற்போது உரிய முறையில் செயற்படுத்தப்படாமல் கவனிப்பாரற்று உள்ளமை அரசியல் வேடிக்கை. இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் மண்டைதீவு சுற்றுலா மையத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதற்கு யார் பொறுப்பு? யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள் இத் திட்டத்தை செயற்படுத்தினாலும், கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் அழுத்தங்களும் அரசியல் நோக்கங்களும் இருந்தன என்ற பின்னணியில் யாழ் செயலக அதிகாரிகள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கொழும்பு நிர்வாகமே முன்வைக்கும் ஆபத்துகள் உண்டு. கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்குகளின் ஊழல் மோசடிகளை மூடி மறைக்கும் நோக்கில் தான் சமீபகாலமாக வடமாகாண அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. ஆகவே, இப்படி ஓர் அபிவிருத்தித் திட்டம் தான், மண்டைதீவு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானமும் என்ற முடிவுக்கு வரலாம். ஏனெனில், மைதானம் அமைப்பதற்குரிய சாத்தியக் கூற்று ஆய்வுகள், சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்யப்பட்டமை தொடர்பான ஆய்வு அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அல்லது வெளியிடப்படாமல் இருக்கலாம். இந்த அறிக்கைகள் வடமாகாணத்தை பிரதானப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டதா? அல்லது துறை சார்ந்தவர்களுடன் அது பற்றிய உரையாடல் நடத்தப்பட்டதா? மைதானம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் கூட, இதுவரை ஆய்வு அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதேநேரம் மண்டைதீவு பிரதேசம் விவசாய நிலம் என்றும் அங்கு கடல் வாழ் உயிரினங்கள் இருப்பதாக யாழ் மாவட்ட செயலகம் 2022 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு அறிக்கை ஒன்று செயலகத்தின் இணையத்தில் உண்டு. பா.ராஜ்குமார் என்ற ஆய்வாளர் மண்டை தீவுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அதனைவிட மண்டைதீவு விவசாய நிலம் என்றும், ஆனாலும் தொழில்நுட்ப ஆய்வுகள் செய்யப்பட்டு அதற்குத் தேவையான மேலதிக உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவிகள் 2018 இல் செய்த ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், மண்டைதீவின் நில பயன்பாடுகள் பற்றிய ஆய்வு ஒன்றை 2020 இல் செய்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் அந்த நிலப்பகுதி விவசாயத்திற்குரியது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். மண்டைதீவில் நன்னீர் வளம் மிகக் குறைவாகவே உள்ளது. தீவின் சில பகுதிகளில் மாத்திரம் நன்னீர் கிணறுகள் உள்ளன. கடல் நீர் நிலத்தின் கீழாக நிலப்பரப்பிற்குள் ஊடுருவுவது இதற்கான காரணம் மண்டைதீவில் மூலிகைகள் அதிகம் காணப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர், யாழ் மாவட்ட கல்லூரிகளின் உயர்தர வகுப்பு மாணவர்கள் அங்கு சென்று தாவரவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுண்டு. ஆகவே, மண்டைதீவில் சர்வதேச மைதானம் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுத்தவர்கள் இது பற்றியெல்லாம் கவனம் செலுத்தினார்களா? வெறுமனே அரசியல் நோக்கில் ஆய்வுகள் எதுவுமின்றி நிலம் ஒன்றை தெரிவு செய்து மைதானத்தை அமைத்த பின்னர் அதில் உள்ள பக்க விளைவுகள் பாதிப்புகள் போன்றவற்றை எதிர்கொள்ளப் போவது மண்டைதீவு பிரதேச மக்கள் தான். ஆகவே, உண்மையில் மக்கள் நலன் நோக்கில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறதா? அல்லது ஜனாதிபதியை மேன்மைப்படுத்தி அபிவிருத்தி என்ற மாயைகளை காண்பித்து, 'அரசியல் விடுதலை' என்ற உணர்வுகள் கோரிக்கைகளை தமிழ் மக்களிடம் இருந்து மடைமாற்றும் உத்தியா? இவ்வாறான உத்திகளையே மகிந்த, மைத்திரி, கோட்டாபய, ரணில் ஆகியோர் செய்தார்கள். ஆகவே, 76 ஆண்டு கால ஆட்சி முறைகளில் இருந்து மாற்றம் என்று மார்தட்டிக் கொண்டு பதவிக்கு வந்த அநுர அரசாங்கமும் முன்னய சிங்கள அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட பகட்டு அரசியலை முன்னெடுக்கிறது என்ற உணர்வு சாதாரண மக்களிடம் மேலோங்கியுள்ளது. இதனை யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் முகவர்கள் புரிந்திருப்பர். அதேநேரம் அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 80 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் - பெண்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். வேலனை பிரதேச சபை தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றி இருந்தது. தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில், மண்டைதீவில் உள்ள பல பாழடைந்துள்ள கிணறுகளில் எலும்புக்கூடுகள் இருப்பதாகவும், 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு கிணறுகளுக்குள் வீசப்பட்டதாகவும் அத்தீர்மானத்தில் உண்டு. மண்டைதீவில் மனித புதைகுழிகள் இருப்பதாகவும் சாட்சியங்கள் இன்னும் உண்டு எனவும் உறுப்பினர் பிரகலாதன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சுட்டிக்காட்டியிருந்தார். இராணுவம் பொதுமக்களின் காணிகளை அபகரித்து பாரிய முகாம்களை அமைத்துள்ளது என்றும் காணிகளை இழந்த மக்கள் வேறு பிரதேசங்களில் வாழ்வதாகவும் வேலனை பிரதேச சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஆகவே, சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு முன்னர் பிரதேச மக்களின் அடிப்படை வசதிகள், அந்த மக்களின் உள்ளூர் சுய தொழில் முயற்சிகள் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். குடிதண்ணீர் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும். மைதானம் அமைக்கப்பட்டால் பிரதேச மக்களுக்கு முதலில் அங்கு தொழில்வாய்ப்பு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆகவே, வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவும், தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையிலும் அநுர அரசாங்கம் செயல்படுகின்றமை பகிரங்கமாக தெரிகிறது. மைத்திரி - ரணில் ஆட்சி காலத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் மேற்படி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதன் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆகவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்பது வேறு. ஆனால் 13 இன் கீழ் உள்ள மாகாண சபைகள் இயங்காத பின்னணியில், மாகாணங்களின் அரைகுறை அதிகாரங்களை கூட மீறும் வகையில் அநுர அரசாங்கம் செயல்படுகிறது என்ற முடிவுக்கு வரலாம். அத்துடன் காணி அதிகாரங்கள், கட்டிட நிர்மாண அனுமதி அதிகாரங்கள் அனைத்தும் கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் இந்த மண்டைதீவு சர்வதேச மைதான விவகாரம் எடுத்துக் காண்பிக்கிறது. 1981 ஆம் ஆண்டு அமரர் ஜேஆர் ஆட்சியின் போது, யாழ் கல்லுண்டாய் வெளி சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த முறைகள் பற்றியும் ஞாபகப்படுத்த வேண்டும்... https://www.koormai.com/pathivu.html?therivu=2610&vakai=5

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 2 weeks ago
வணக்கம் வாத்தியார் .........! இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே } (2) பெண் : நான் பாடும் பாடல் தேனாகவே எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன் ரசிகனை அறிவேன் பெண் : { காதல் கொள்வது ஆனந்தமே ஜாடை சொல்வது பேரின்பமே } (2) பெண் : கண்ணில் உண்டு ஆசை நெஞ்சில் உண்டு குழு : ல ல ல ல ல ல பெண் : ஆணும் பெண்ணும் காணும் வண்ணம் வாழ்வில் ஒன்று சேரும் போது இன்பம் கொஞ்சமோ அன்பே பெண் : { ஆட சொல்வது வாலிபமே தேடி கொள்வது பார்வைகளே } (2) பெண் : தொட்டு தொட்டு கை பின்னால் கொண்டு குழு : ல ல ல ல ல ல பெண் : நாளும் நாளும் அங்கும் இங்கும் கொஞ்சி கொஞ்சி பேசி பேசி வந்த சொந்தமே அன்பே பெண் : நான் பாடும் பாடல் தேனாகவே எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன் ரசிகனை அறிவேன்........! --- நான் வணங்குகிறேன் ---

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

1 month 2 weeks ago
"நுணலும் தன் வாயாற் கெடும்." இப்போ மகிந்தவுக்கு வீடு வழங்கும் தொழிலதிபர்களும், அந்த செய்தியை வெளியிட்டவர்களும் விசாரிக்கப்படவேண்டும். அந்த சொத்துக்கள் யாருடையவை, எப்படி பெறப்பட்டவை என்பதும் விசாரித்து மஹிந்தவுக்கு பின்னால் அழுது புலம்பித்திரியும் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும். அதே போல் மற்றைய ஜனாதிபதிகளின் வசிப்பிடங்களும் ஆராயப்படவேண்டும். பாதாள, போதைக் கும்பல் பிடிபடும்போது நாமல் கதறுகிறார். ரணில் கைது செய்யப்படும்போது எல்லா அரசியல் கள்ளரும் தெருவில் இறங்கி குதிக்கின்றனர். அதற்குள் புலிகளை இழுத்து, இராணுவத்தினரை காட்டி, தமது ஊழலை கொலைகளை மறைக்கப் பாடுபடுகின்றனர். இப்போ அனுரா செய்ய வேண்டியது; இவர்கள் எந்த ஆயுதத்தை ஏந்தி மக்களை கூட்டுகின்றனரோ, அந்த ஆயுதத்தை பாவித்து இவர்களை விட்டு மக்களை விரட்ட வேண்டும். ஆதாரத்தோடு இவர்களின் குற்றங்களை இவர்களை சுற்றி மக்கள் கூடும்போது வெளிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து மக்கள் இவர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். நாடே ஊழலால் நிறைந்திருந்திருக்கு. அபேய வர்தன யாப்பாவை உடனடியாக விசாரணைக்கு அழைத்து, யாரந்த வீடு வழங்கும் தொழிலதிபர் என்பதை அறிந்து விசாரிக்க தொடங்கவும். அத்தனையும் மஹிந்தவின், சிரந்தியின் பெயரில் பதியப்பட்டுள்ள வீடுகளாக இருக்கலாம். மக்களை என்ன ஆசை வார்த்தை கூறி, எதை கொடுத்து திரட்டுகின்றனர், அவர்களை திரட்டும் திருடர்கள் யார், அவர்களுக்கும் மஹிந்த குடும்பத்திற்கும் என்ன தொடர்பு, அவர்களது தொழில் என்ன என்பதையும் ஆராய வேண்டும். இப்போ குடும்பமே ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து தாம் தப்பிக்க போகிறார்கள் போலுள்ளது.

கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்'

1 month 2 weeks ago
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 02 ரியோ வுக்கு வந்ததும், தன் இருக்கையை அருணுக்கு மிக அருகில் இழுத்து, பட்டும் படாததுமாக நெருங்கி அமர்ந்து கொண்டு, உங்களைப் பற்றி சொல்லுங்களே என்றாள். ஆரணியின் அகவை 21 அல்லது 22 இருக்கலாம். என்றாலும் பேசுவது பழகுவதைப் பார்த்தால் ஒரு 'டீன் ஏஸ்' [teen age] பெண் மாதிரியே இருந்தது. சங்க காலத்து தமிழில் 'டீன் ஏஸ்' பெண்ணை 'மடந்தை' என்று சொல்வார்கள். ஆனால் மடந்தை என்ற சொல் ஆரணியின் அழகை பூரணமாக கொண்டு வரவில்லை அவளைப் பார்க்கும் போதெல்லாம் 'முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள்' என்ற திருஞானசம்பந்தநாயனார் பாடல் எவருக்கும் ஞாபகம் வரலாம்? அப்படித்தான் ஓரளவு மாந்தளிர் போல் நிறத்தினையும் அரும்பு போல் முலையினையுடைய பார்வதி போலும் அவள் தன் இளமையையும், வனப்பையும் வெளிக்காடிக் கொண்டு இருந்தாள். அருண் தன் லண்டன் வாழ்வை சுருக்கமாக, குறிப்பாக அவளுக்கு, மற்றவர்களுக்கு பொதுவாக விளக்கிக் கொண்டிருந்தான். முன் இரவு நேரம், விளக்கின் ஒளி அவள் முகத்தில் பட்டு பட்டு விழுந்து கொண்டிருந்தது. உறைந்த மழைபோல கேசங்கள் அவள் கன்னத்தில் வழிந்து கிடந்தன. ஆரணி, வைத்த கண் வாங்காமல் அருணையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை கையேந்தி பிடித்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. அவள் கண்களின் இமைகள் ஏதேதோ பேசின. அவள் திடீரென, "எமக்கு பசிக்குதே, ஐஸ்கிரீமுடன் நாம் எதாவது சாப்பிடுவோமா” என்றாள் ஒருவித சிணுங்கல்களுடன். ”அவ்வளவுதானே… பிரச்சனையில்லை, என்னென்ன வேண்டும் என்று பொதுவாக எல்லோரிடமும், ஆனால் குறிப்பாக அவள் முகத்தை பார்த்தபடி கேட்டான். அவள் கண்கள் மின்னின. அந்த ஒற்றைப் புன்னகை அவனை ஆழமாக இழுத்தது. தன்னை சுற்றிய சூழல் மறந்து, அவனின் இரண்டு விழிகளும் ஒன்றையே தேடுது. இத்தனை இளம் பெண்களுக்குள் அவள் மட்டும் எப்படி தனியாகிறாள்? எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை. அவனுக்கு அதன் பதில் அப்பொழுது புரியவில்லை, என்றாலும் .. அவள் பார்வை ... அதற்காகவே தவமிருக்கிறது அவனது விழிகள்! நேர்வடிவான தாடையை கைகளில் ஏந்தி முழங்கையில் முட்டுக் கொடுத்து அவனையே பார்த்தபடி இருந்தாள், ஆரணி. மறவர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசத் தொடங்கி விட்டார்கள். அவளின் சீரான பல் வரிசை பளிச்சென்றது. அந்தக் கணத்தில் ஏதோ ஒன்று அவனைப் பற்றி இழுத்தது. பல வருடங்கள் தூங்கிய சிக்காடா (Cicada) பூச்சி [சிள் வண்டு அல்லது சுவர்க்கோழி], பெண் சிக்காடாவை ஈர்ப்பதற்காக வெளியே வந்து சத்தம் போடுவது போல அவன் மனதும் சத்தம் போட தொடங்கி விட்டது. ரியோவை விட்டு வெளியே வரும் பொழுது, அவளது கைகள் அவனது கைகளுடன் இணைந்தன. கொஞ்சம் தூரத்தில் பொன் மஞ்சளில் அலங்காரக் கந்தன், வடக்கு வீதி நோக்கி தேவிகளுடன் ஊர்வலம் போய்க் கொண்டு இருந்தார். அவளது தோழிகள், எதோ சாட்டு சொல்லிவிட்டு, வடக்கு வீதிக்கு சென்று விட்டார்கள். அவன் அங்கு இருந்த ஒரு நகைக் கடையில் தனது முதல் பரிசாக தங்கச் சங்கிலி வாங்கி, தானே அவள் கழுத்தில் போட்டு ரசித்தான்! அப்பொழுது, ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பத்தில் நிற்பது போல குறுகுறுப்பாக அவன் மனம் துள்ளியது. விமான ஓடுதரை விளக்குகள் போல எண்ணங்கள் வந்து அவனைத் தாக்கின. அவன் உதடுகளில் இன்னும் கொடுக்கப்படாத முத்தங்கள் பல இருந்தன. அவன் விரல் நுனிகளில் இன்னும் தொட்டுப் பார்க்க வேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருப்பது போல பட்டது. அவன் வயிற்றுக்குள்ளே இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்த ஆசைகள் இப்போது வெளியே வரத் துடித்தன. எல்லாத்தையும் அவிச்சு, வடித்துப் பார்த்தால் மிஞ்சியது ஒன்றுதான். ஆரணியை, அவளின் குறும்பு சேட்டையை, அவளின் அழகை, அவளின் கொஞ்சல் பேச்சை அவனால் மறக்க முடியவில்லை. அவன் வாழ்ந்த வாழ்க்கையின் உண்மையான காரணம் அவளிடத்தில் தான் இருப்பது போல அவனுக்குப் பட்டது. இரவில் ஒன்றே ஒன்று .. மனதில் சென்றதேன் தேடி .. உனைத் தேடி .. நான் அலைந்ததேன் பறக்கும் பறவை நானோ .. விரியும் மலர்கள் நீயோ தேனே ... கரும்பே ..நீ யென் தேவி .. தேவி! உன் கண்கள் அலைய என் மனம் அலைய நான்...என் இதயத்தின் அருகே எரிகிறேன் என் இதயத்தை நீ எடுக்க அழகுக்கு பலியாக அழகான பெண்ணே காதலில் விழுகிறேன்! அவன் வாய் அவனை அறியாமல் பாடிக்கொண்டு இருந்தது! அவன் மீது படர்ந்த முதல் பெண் தீண்டல் [ஸ்பரிசம்] அவளுடையதே. இணைந்த கைகள் மெல்ல மெல்ல அவள் இடையை வருடின. அவளும் அவனை அணைத்தபடி நடந்தாள். அந்த நெருக்கத்தில் அவளின் மூச்சு காற்றோடு அவன் உறவாடினான். அவளது உள்ளங்கை வேர்வையை முதல் முதல் உணர்ந்தான். அவள் சுவாசம் புரிந்தது, அவள் வாசம் தெரிந்தது. அவள் விழிகளின் வார்த்தைகள் உணர்ந்தான். என்றாலும், தோழிகள் திரும்பி வர, இருவரும் நாளை சந்திப்போமென பிரிந்தனர். அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் அருண் நல்லூர் ஒழுங்காக வந்தான். ஆனால் என்றுமே மிக எளிய சாதாரண பருத்தி வேட்டியும் பருத்தி வெள்ளை மேல் சட்டையுடன் மட்டுமே. என்றாலும் அவனின் நடை உடை பாவனை மற்றும் பேச்சு அவனை யார் என்று காட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் அவளுடன் அவன் பொழுது போனது. அவன் அவளுக்கு ஒவ்வொரு நாளும் எதோ ஒரு பரிசு, அவள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவளை அலங்காரப்படுத்தி அழகுபார்த்து அதில் ஒரு மகிழ்ச்சி அடைந்தான். அவளும் அவனுடன் நெருங்கி நெருங்கி பழகிக் கொண்டே இருந்தாள். முதலில் கொஞ்சம் திருவிழா, பின் கொஞ்சம் ரியோ, லிங்கம் என தோழிகளுடன் அவள் அவனை சந்தித்தாலும், அதன் பின் அவள் அவனுடன் மட்டும் தனியாக போய்விடுவாள். இருவரும் புது தம்பதிகள் போலவே நெருக்கமாக இருந்தார்கள். அவள் தினமும் வெவ்வேறு கண்ணைக் கவரும் உடையில் அவனுக்கு இன்பம் ஊட்டிக் கொண்டே இருந்தாள். அவனும் விலையுயர்ந்த உடைகள், மாலைகள், வளையல்கள் என அலங்காரங்கள் - அனைத்தும் திருவிழாக் கடைகளிலிருந்து வாங்க்கிக் கொடுத்துக் கொன்டே இருந்தான். அவள் எல்லாவற்றையும் ஏற்று, மேலும் மேலும் தன் நெருக்கத்தையும் கூட்டினாள். அவன் அவள் என்னுடையவளே என்ற மகிழ்வில், அவளுடைய அணைப்பில், சிரிப்பில், அழகில், கொஞ்சல் பேச்சில் தன்னையே இழந்து கொண்டு இருந்தான். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/31301211756194063/?

விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!

1 month 2 weeks ago
தெய்வமும் மனித டாக்குத்தரும் ஒன்று என என் அம்மா சொல்லும். அந்த தெய்வங்களின் மீது எனக்கு என்றும் அதீத நம்பிக்கையும் மரியாதையும் உண்டு.பல உயிர்களை காப்பாற்றுபவர்கள். அந்த மனித வைத்தியர்களை எல்லா நாடுகளிலும் தெய்வங்களுக்கு இணையாகத்தான் பார்ப்பார்கள்.🛕🕌🕍 வைத்தியர்களின் வாழ்க்கை முறைகளும் அவர்களது சுகாதார வாழ்க்கையும் ,நடைமுறைகளும்,பழக்க வழக்கங்களும்,ஏனைய மனிதர்களுடனான அணுகு முறைகளும்,அவர்களது நோயற்ற வாழ்வும் முன்னுதாரணமாக இருக்கும். ஆனால் இன்று அவர்களுக்கே இளமையில் அகால மரணங்கள் வரும்போது சாதாரண/ என்னைப்போன்ற பாமர மக்கள் எதிர்காலம் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியுள்ளது. இன்றைய காலங்களில் பல பிரபல்யங்களின் அகால மரணங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது.பிரபல்யம் இல்லாதவர்களின் அகால மரணங்களும் அதிகரித்துள்ளைத என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது. ஏன் எப்படி என நான் விவாதிக்க வரவில்லை.என் சுற்றாடலில் வாழும் ஜேர்மனிய நண்பர்கள்,மக்கள் கொஞ்சம் நெருடலுடன் சுட்டு விரலை ரொய்லட் பேப்பருக்கு அடிபட்ட காலத்தை நோக்கி காட்டுகின்றார்கள். அதை நான் நம்பவில்லை. வைத்தியர் நிமல ரஞ்சனுக்கு என் அஞ்சலிகள்.🙏
Checked
Sun, 11/02/2025 - 17:37
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed