புதிய பதிவுகள்2

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

1 month 2 weeks ago
பகரவி, பவ்வி - என்ன படிப்பிதாலும், மாணவர்கள் தமக்கு பிடித்தமானதை மட்டுமே எடுப்பார்கள் - கவ்வி 🤣.

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

1 month 2 weeks ago
அண்ணை, எனக்கொரு டவுட் இருந்தது! இந்த செய்திகளை அறம்புறமா இணைக்கிறன் என்றதால எனக்கு மட்டும் கொஞ்சம் வேகத்தடை போட்டிருக்கினமோ என்று!! (நகைச்சுவைக்காக) தொழிநுட்பக் காரணங்கள் நிறைய இருக்கும், நாங்கள் இப்ப எல்லாம் வேகவேகமா வேணும் என்று விரும்புகிறோம். முதன்முதல் 2006 இல் கொழும்பில் இணையம் பாவிக்க தொடங்கையில் 512 kb/s என்ற வேகம் தான். இப்ப கொஞ்சம் வேகமாக இயங்குவதாக உணர்கிறேன் @மோகன் அண்ணை. மிக்க நன்றி. இணைய வழங்கி நெருக்கடி ஏற்பட்டதோ?!

கார் விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்

1 month 2 weeks ago
Published By: Vishnu 14 Sep, 2025 | 07:12 PM இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் இன்று (14) இடம்பெற்ற கார் விபத்தில் காயமடைந்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர் மட்டக்களப்பிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவரது பயண வாகனம் களுவாஞ்சிகுடி பகுதியில் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. https://www.virakesari.lk/article/225082

உலக தடகள செம்பியன்ஷிப் - 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் அமெரிக்கா மற்றும் ஜமைக்கா வீரர்கள் வெற்றி

1 month 2 weeks ago
ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக தடகள செம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவின் மெலிசா ஜெபர்சன் வூடன், பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்யை 10.61 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில், ஜமைக்காவின் ஒப்லிக் செவில்லே ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியை 9.77 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmfjr9skw00e9qplpmdrbz4zp

யாழில் மீண்டும் சீனோர் நிறுவனம்

1 month 2 weeks ago
14 Sep, 2025 | 11:27 AM சீனோர் நிறுவனத்தினுடைய (Cey-Nor foundation Ltd) யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையினது தொழிற்பாடுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. பைபர் (Fiber) மூலப்பொருளைக் கொண்டு அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி மற்றும் பரும்படியாக்கம் செய்து சந்தைப்படுத்தும் செயன்முறையை மேற்கொள்ளும் முகமாக இத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகி முன்னோட்டமாக படகு, மீன் விற்கும் தாங்கி, மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டி என்பன உற்பத்தியாக்கப்பட்டுள்ளன. குறித்த நிறுவனம் கடல்தொழில் சார் பொருட்களை உற்பத்தி மற்றும் பரும்படியாக்கும் நோக்கத்துடனேயே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலை அதிக கேள்வியுள்ள ஏனைய பைபர் மூலப்பொருள்சார் பொருட்களையும் தயாரிக்கத் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் கடற்றொழில் சார் உபகரணத் தேவைகளைத் தன்நிறைவோடு வழங்கும் நிலையமாக இது அமையும். இதன்வழி சுமார் 100 - 150 திறன் வேலைவாய்ப்புகள் உருவாகச் சாத்தியமுள்ளது. தற்போதைய நிலையில், சாதாரண கட்டுமரம் அளவிலான தோணி முதல் 30 அடி நீளமான படகுகள் வரை, 1 - 2 மீற்றர் வரையான விட்டம் கொண்ட மீன் வளர்ப்புத் தொட்டிகள், மீன் விற்கும் வண்டிகளில் பொருத்துவதற்கான குளிரூட்டக்கூடிய பெட்டி என்பன இங்கு தயாரிக்க ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி மாலை குறித்த தொழிற்சாலையானது, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/225040

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்

1 month 2 weeks ago
நீதி அமைச்சின் சிறப்பு குழு இவ்வாரம் ஜெனிவா விஜயம் Published By: Digital Desk 3 14 Sep, 2025 | 11:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சின் சிறப்பு குழு இவ்வாரம் இறுதியில் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது. இந்த குழுவில் நீதி அமைச்சர் ஹர்ஷண ராஜகருணா மற்றும் பிரதி அமைச்சர் முனீர் மௌலவி உட்பட நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சின் முக்கிஸ்தர் ஒருவர் குறிப்பிட்டதுடன், எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை இந்த விஜயம் திட்டமிட்டுள்ள போதிலும், அதற்கு முன்னர் பெரும்பாலும் நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு கடந்த திங்கட்கிழமை ஜெனிவா சென்று, இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்ததன் பின்னர் நாடு திரும்பியுள்ள நிலையில், நீதி அமைச்சின் சிறப்பு குழு மீண்டும் ஜெனிவா செல்கிறது. இவ்வாறானதொரு நிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அறிக்கை ஒரு கலவையான உணர்வைப் பிரதிபலித்திருந்தது. இலங்கை அரசு அண்மையில் அளித்த வாக்குறுதிகளை அவர் அங்கீகரித்தாலும், அவை வெறும் வார்த்தைகளாக நின்றுவிடாமல், உறுதியான நடவடிக்கைகளாக மாற வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார். கடந்தகால மீறல்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு (Impunity) உருவாக்கிய காயங்களை ஆற்றுவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதன் மூலம் நல்லிணக்கத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க முடியும் என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கைக்கு விஜயம் செய்தபோது செம்மணி மனிதப்புதைகுழி, மற்றும் கணவனுக்காகக் காத்திருக்கும் தெற்கைச் சேர்ந்த ஒரு பெண் என பாதிக்கப்பட்ட பலரிடமிருந்து நேரடியாகக் கேட்ட துயரங்களை வெளிப்படுத்தினார். சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை நிறுவுவது ஒரு நல்ல முயற்சி எனப் பாராட்டிய ஆணையாளர் வோல்கர் டேர்க், இதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு அவசியம் என வலியுறுத்தினார். மேலும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான, பிரத்யேக நீதிப் பொறிமுறையின் அவசியம், பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும். அத்துடன், நிகழ்நிலைக்காப்புச் சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச் சட்டம் உள்ளிட்ட மீறல்களுக்கு வழிவகுக்கும் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மேற்கொண்டு வரும் உள்நாட்டு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் சுட்டிக்காட்டியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை உருவாக்குதல், இணையவழி பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை குறிப்பிட்டுள்ளது. காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற உள்நாட்டுப் பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனோர் விவகாரங்களை விரைவுபடுத்த மேலதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐ.நா. உயர்ஸ்தானிகர் ஒரு உறுதியான சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் அதே வேளையில், இலங்கை அரசு உள்நாட்டு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி சர்வதேச சமூகத்தின் தலையீட்டைத் தவிர்க்க முயல்கிறது. இந்த முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலேயே நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்கிறது. https://www.virakesari.lk/article/225034

யாரோ ஒருவர் நெஞ்சை உருக்கிய நிகழ்வு

1 month 2 weeks ago
நோய்வாய்ப்பட்டு ஒன்றுக்கும் இரண்டிற்கும் யாருடைய தயைவையோ எதிர்பார்க்கையில் தான் அஞ்ஞான மேகம் விலகி ஞானத்தின் ஒளி கண்களை கூசச்செய்யும் வாழ்வின் பிரம்மாண்டங்களை மட்டுமே துரத்தி ஓடியதில் அர்த்தம் பொதிந்த சின்னஞ்சிறு நொடிப்பொழுதுகளை நம்மையறியாமலேயே புறக்கணித்தது புலப்படும் பாவமன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பொன்று வேண்டி மனம் பிரார்த்திக்கும் பாவம்.. பொம்மைக்காய் அழுத என் குழந்தையை அடித்திருக்க வேண்டாம் "கால் வலிக்குதுப்பா" கடைத்தெருவிற்கு கூட்டிச் செல்கையில் பிள்ளை சொன்னபோதெல்லாம் தூக்கிக்கொண்டிருக்கலாம் என் தேவைகளை கேட்டு கேட்டு செய்தவளுக்கு கேட்காமலேயே அன்போடு ஒரு வேளை சமைத்து பரிமாறியிருக்கலாம் ஏதோ ஒரு சண்டையில் வார்த்தைகள் முற்றிய தருணத்தில் கையிலிருந்த தண்ணீர் செம்பை தூக்கிவீசாமல் இருந்திருக்கலாம் காய்ச்சலில் அவள் கிடந்த நாட்களில் இன்னும் கொஞ்சம் அக்கறையோடிருந்திருக்கலாம் பல்லாயிரம் கருத்துமோதல்களில் ஏதாவதொன்றினையாவது அவள் பாதங்களை இதமாய் வருடி மனதார மன்னிப்பு கேட்டு முடித்திருக்கலாம் சர்க்கரை கொதிப்பு மாத்திரைகளை அம்மா நினைவுபடுத்தாமலேயே வாங்கிக்கொடுத்திருக்கலாம் அம்மாவை நினைத்து அப்பா மனதோடு அழுத போதினில் அருகில் அமர்ந்து ஆறுதல் தந்திருக்கலாம்.. அவள் ஊரிலில்லாத நாளில் கஞ்சித்தண்ணீருக்காய் வாசல் வரை வந்த மாட்டின் மீது கல்லெறியாமல் இருந்திருக்கலாம் ரயில்பயணத்தில் முன் பதிவு செய்த கீழ்இருக்கையை என்னோடு பயணித்த முதியவருக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம். கட்டங்கள் பாதகமென யாரோ சொன்னதை நம்பி உசுரான காதலியை நிராகரிக்காமலிருந்திருக்கலாம்.இதில் யாரோ ஒருவரின் சாபம் தான் இப்படி பாயோடும் நோயோடும் கிடத்திவிட்டதோ? புரண்டு படுக்கும் போதெல்லாம் உறுத்துகிற பாயென இப்படித்தான் ஏதேதோ எண்ணங்கள். ...அலைபாயும் மீண்டும் வாழ்ந்து கடக்க முடியா தருணங்கள் நோயைக் காட்டிலும் வேகமாய்க் கொல்லும் ரோகத்துடனான போராட்டத்தில் அழுத்தும் நினைவுகளோடு போராட தைரியமின்றித்தான் நம்மில் அநேகம் பேர் உறக்கத்திலேயே உயிர்பிரிய வேண்டுமாய் மானசீகமாய் பிரார்த்திக்கிறோமோ? நன்றி முக நூல் சியாமளாரமேஷ்பாபு

வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை

1 month 2 weeks ago
வெளிநாட்டு சினிமா பார்த்தால் சுட்டுக் கொலை; வட கொரியாவில் நடப்பது என்ன? பட மூலாதாரம், KCNA via EPA படக்குறிப்பு, கிம் ஜாங் உன் ஆட்சியில் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டதாகவும், மக்கள் மேலும் பயத்துடனும் வாழ்கின்றனர் என்று அறிக்கை கூறுகிறது. கட்டுரை தகவல் ஜீன் மேக்கன்சி சியோல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வெளிநாட்டுப் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்களுக்கு, வட கொரிய அரசாங்கம் மரண தண்டனையை அளித்திருப்பதாக ஒரு ஐ.நா. அறிக்கை கூறுகிறது. உலகிலிருந்து பெருமளவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த சர்வாதிகார ஆட்சி, அதன் மக்களின் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தி அதிக அளவில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துகிறது என்றும் ஐநா அறிக்கை கண்டுபிடித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக வட கொரிய அரசு "குடிமக்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களின் மீதான" கட்டுப்பாட்டை இறுக்கியுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டறிந்துள்ளது. "இன்றைய உலகில் வேறு எந்த மக்களும் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லை" என்று அது முடிவு செய்தது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் உதவியால் கண்காணிப்பு "அதிகமாகப் பரவியுள்ளது" என்றும் அது கூறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், இந்த நிலைமை தொடர்ந்தால், வட கொரியர்கள் "அவர்கள் நீண்ட காலமாக அனுபவித்துவரும் அதிக துன்பம், கொடூரமான அடக்குமுறை மற்றும் பயத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்" என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, மரண தண்டனை அடிக்கடி பயன்படுத்தப்படுவதாகக் கண்டறிந்துள்ளது. மரண தண்டனை விதிக்க அனுமதிக்கும் குறைந்தது ஆறு புதிய சட்டங்கள் 2015-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கிம் ஜாங் உன் வெளிநாடுகளிலிருந்து மக்கள் தகவல்களைப் பெறுவதற்கான வழிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதால், வெளிநாட்டு ஊடக உள்ளடக்கங்களான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றை பார்ப்பது மற்றும் பகிர்வது போன்ற செயல்களுக்காகவும் இப்போது மரண தண்டனை விதிக்கப்படலாம். 2020-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு உள்ளடக்கத்தைப் பரப்பியதற்காக அதிக மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. ஆராய்ச்சியாளர்களிடம் தப்பி வந்தவர்கள் கூறினர். மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தவும், அவர்கள் சட்டத்தை மீறுவதைத் தடுக்கவும், துப்பாக்கிச் சூடு குழுவால் இந்த மரண தண்டனைகள் பகிரங்கமாகத் நிறைவேற்றப்படுகின்றன என்று அவர்கள் விவரித்தனர். 2023-ம் ஆண்டு தப்பிச் வந்த காங் கியூரி, தென் கொரிய உள்ளடக்கத்துடன் பிடிபட்ட தனது மூன்று நண்பர்கள் கொல்லப்பட்டதாக பிபிசியிடம் கூறினார். 23 வயதான ஒரு நண்பருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது காங் கியூரி நீதிமன்றத்தில் இருந்தார். "அவர் போதைப்பொருள் குற்றவாளிகளுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டார். இந்தக் குற்றங்கள் இப்போது ஒரே மாதிரியாகக் கருதப்படுகின்றன" என்று அவர் கூறினார். மேலும், 2020 முதல் மக்கள் அதிக அச்சமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். 2011-ல் தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன் பதவிக்கு வந்தபோது, அவர்கள் இனி "வயிற்றைக் கட்டிக்கொள்ள" (அதாவது, போதிய உணவு இல்லாமல்) வேண்டியதில்லை என்று உறுதியளித்திருந்ததால், தங்கள் வாழ்க்கை மேம்படும் என்று நம்பியதாக நேர்காணல் செய்யப்பட்ட தப்பி வந்தவர்கள் கூறினர். பொருளாதாரத்தை வளர்ப்பதாகவும், அதே நேரத்தில் அணு ஆயுதங்களை மேலும் மேம்படுத்துவதன் மூலம் நாட்டைக் காப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், கிம் 2019-ல் மேற்கு நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் ராஜதந்திர பேச்சுக்களைத் தவிர்த்து, தனது ஆயுதத் திட்டத்தில் கவனம் செலுத்தியதால், மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் மனித உரிமைகள் "சீர்குலைந்துவிட்டன" என்று அறிக்கை கண்டறிந்தது. நேர்காணல் செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தங்களுக்குப் போதிய உணவு இல்லை என்றும், ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்பது ஒரு "ஆடம்பரமான" விஷயம் என்றும் கூறினர். கோவிட் பெருந்தொற்று காலத்தில், கடுமையான உணவுப் பற்றாக்குறை இருந்ததாகவும், நாடு முழுவதும் மக்கள் பட்டினியால் இறந்ததாகவும் தப்பி வந்தவர்கள் கூறினர். அதே நேரத்தில், குடும்பங்கள் வர்த்தகம் செய்யும் முறைசாரா சந்தைகளை அரசு முடக்கியது. இதனால், அவர்கள் வாழ்வாதாரத்தைத் தேடுவது கடினமாகியது. மேலும், சீனாவுடனான எல்லையில் கட்டுப்பாடுகளை இறுக்கியதன் மூலமும், எல்லையைக் கடக்க முயற்சி செய்பவர்களைச் சுட்டுத் தள்ள படையினருக்கு உத்தரவிட்டதன் மூலமும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாறியது. 2018-ம் ஆண்டு 17 வயதில் தப்பி ஓடிய ஒரு இளம் பெண், "கிம் ஜாங் உன்-னின் ஆரம்ப நாட்களில், எங்களுக்கு சில நம்பிக்கைகள் இருந்தன, ஆனால் அந்த நம்பிக்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை" என்று கூறினார். "அரசாங்கம் படிப்படியாக மக்கள் சுயமாக வாழ்வாதாரத்தை தேடுவதைத் தடுத்தது. மேலும், வாழ்வது என்பதே ஒரு தினசரி துன்பமாக மாறியது" என்று அவர் ஐ.நா ஆய்வாளர்களிடம் சாட்சியம் அளித்தார். "கடந்த 10 ஆண்டுகளில், அரசாங்கம் மக்களின் மீது கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. பொருளாதார, சமூக அல்லது அரசியல் முடிவுகளை அவர்களால் சொந்தமாக எடுக்க முடியவில்லை" என்று ஐ.நா. அறிக்கை கூறியது. கண்காணிப்புத் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட மேம்பாடுகள் இதற்கு உதவியுள்ளன என்றும் அறிக்கை கூறியது. "மக்களின் கண்களையும், காதுகளையும் தடுப்பதே" இந்தக் கட்டுப்பாடுகளின் நோக்கம் என்று தப்பி ஓடிய ஒருவர் ஆராய்ச்சியாளர்களிடம் கூறினார். "இது அதிருப்தி அல்லது புகாரின் சிறிய அறிகுறியையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒருவகையான கட்டுப்பாடு " என்று பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறினர். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பியாங்யாங்கில் கிம்மின் தந்தை மற்றும் தாத்தாவின் ஓவியத்தின் முன் மக்கள் தலை வணங்கி மரியாதை செலுத்துகின்றனர். (புகைப்படம் செப்டம்பர் 9 அன்று எடுக்கப்பட்டது) அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததைவிட இப்போது அதிக அளவில் கட்டாய உழைப்பைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கை கண்டறிந்தது. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கட்டுமானம் அல்லது சுரங்கத் திட்டங்கள் போன்ற கடினமான வேலைகளைச் செய்ய "ஷாக் பிரிகேட்ஸ்" என்ற குழுக்களில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த வேலை, தங்கள் சமூக நிலையை மேம்படுத்தும் என்று தொழிலாளர்கள் நம்புகிறார்கள். ஆனால், வேலை மிகவும் ஆபத்தானது. மரணங்கள் சாதாரணமாக நிகழக்கூடியவை. எனினும், தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் மரணத்தை கிம் ஜாங் உன்-னுக்கு செய்த ஒரு தியாகமாகக் கூறி மகிமைப்படுத்துகிறது. சமீபத்திய ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான அனாதைகள் மற்றும் வீதியோர சிறுவர்களைக் கூட அது வேலைக்கு சேர்த்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 2014-ல் வெளிவந்த ஒரு முக்கியமான ஐ.நா. விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் தொடர்ச்சியாக இந்த 2025-ம் ஆண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. 2014 அறிக்கையில், வட கொரிய அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்வதாக முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. நாட்டின் மோசமான அரசியல் சிறை முகாம்களில் மிகக் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டது. அங்கு மக்கள் வாழ்நாள் முழுவதும் அடைக்கப்பட்டு "காணாமல் போவார்கள்". இந்த 2025-ம் ஆண்டு அறிக்கை, குறைந்தது நான்கு முகாம்கள் இன்னும் செயல்படுகின்றன என்றும், சாதாரண சிறைகளில் உள்ள கைதிகள் இன்னும் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர் என்றும் கண்டறிந்துள்ளது. மோசமான சிகிச்சை, அதிக வேலை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் கைதிகள் இறப்பதை நேரில் கண்டதாக பல தப்பி ஓடியவர்கள் கூறினர். இருப்பினும், "காவலர்களின் வன்முறையில் ஒரு சிறிய குறைவு" உட்பட வசதிகளில் "சில குறைந்த அளவு மேம்பாடுகளை" ஐ.நா. கண்டது. பட மூலாதாரம், KCNA via Reuters படக்குறிப்பு, ரஷ்யாவின் புதின், சீனாவின் ஷி மற்றும் வட கொரியாவின் கிம் இந்த மாதத் தொடக்கத்தில் பெய்ஜிங்கில் சந்தித்தனர். நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று ஐ.நா. அழைப்பு விடுக்கிறது. எனினும், இது நடப்பதற்கு, ஐ.நா. பாதுகாப்பு சபையால் இது பரிந்துரைக்கப்பட வேண்டும். 2019 முதல், ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான சீனா மற்றும் ரஷ்யா, வட கொரியா மீது புதிய தடைகளை விதிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மீண்டும் மீண்டும் தடுத்துள்ளன. கடந்த வாரம், கிம் ஜாங் உன், சீனத் தலைவர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் பெய்ஜிங்கில் நடந்த ஒரு ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றார். இது, வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் அதன் குடிமக்களை நடத்தும் விதத்தை இந்த நாடுகள் அமைதியாக ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது. சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, வட கொரிய அரசாங்கம் தனது அரசியல் சிறை முகாம்களை ஒழிக்க வேண்டும், மரண தண்டனையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் மற்றும் அதன் குடிமக்களுக்கு மனித உரிமைகள் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது. "குறிப்பாக வட கொரிய இளைஞர்களிடையே மாற்றத்திற்கான தெளிவான மற்றும் வலுவான விருப்பம் இருப்பதாக எங்கள் அறிக்கை காட்டுகிறது" என்று ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் டர்க் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd07257xkx8o

2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணை வெளியீடு

1 month 2 weeks ago
பரீட்சைகளுக்கான கால அட்டவணை வௌியீடு 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. அதன்படி, 2025 (2026) கல்வி பொது தராதர (சாதாரண தரப்) பரீட்சை 2026-02-17 முதல் 2026-02-26 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர (உயர்தரப்) பரீட்சை 2026-08-10 முதல் 2026-09-05 வரை நடைபெற உள்ளது. அதேநேரம் 2026 ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026-08-09 திகதியன்று இடம்பெறவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026-12-08 முதல் 2026-12-17 வரை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmfjeof0r00e1qplpt6ooy0xs

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

1 month 2 weeks ago
14 Sep, 2025 | 05:03 PM மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக் குட்பட்ட வடிகால்களினை தூர்வாருவதற்கு இடையூறாக வடிகால்களுக்குமேல் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களையும் வீதிகளில் போக்குவரத்து மற்றும் வெள்ள நீராட்டத்திற்கு இடையூறாக காணப்படுகின்ற நிலக்கற்கள், கட்டுமாணங்கள், பூச்செடிகள் என்பவற்றையும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் பதினான்கு நாட்களுக்குள் அகற்றுமாறு வேண்டப்படுகின்றீர்கள். நல்லூர் பிரதேச சபையின் இவ் பகீரங்க அறிவித்தலுக்கு ஏற்ப மேற்படி இடையூறுகளை ஏற்படுத்தும் விடயங்களை குடியிருப்பாளர்கள் அகற்றப்படாவிடின் எதிர்வரும் 01 ஆம் திகதியிலிருந்து எவ்வித முன்அறிவித்தலுமின்றி நல்லூர் பிரதேச சபை அவற்றினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கன் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225070

iPhone 17-ன் புதிய அம்சங்கள் என்ன?

1 month 2 weeks ago
ஸ்டீவ் ஜொப் இல்லாத வெற்றிடம் தெரிகிறது. அவங்கள் ஒரு தராதரத்தை வைத்து மக்களை அந்த மாயைக்குள் வைத்திருக்கிறார்கள், புதுமைகள் வரவர குறைகிறது. அதன் மீதான ஈர்ப்புள்ளவர்கள் தொடர்ந்து வாங்குகிறார்கள்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 month 2 weeks ago
நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டுபாயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. போட்டி இடம்பெறும் டுபாய் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணிகளை கருத்திற்கொண்டு பொலிஸாரினால் பார்வையாளர்களுக்கு புதிய விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பொலிஸாரின் விதிகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாய் முதல் 7 இலட்சம் ரூபாய் வரையில் அபராதமும், சிறைத்தண்டனை அல்லது நாடு கடத்தப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சுப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmfjrvrwz00eaqplp154r6vrb

திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்

1 month 2 weeks ago
விஜயகாந்த்தின் பேச்சில், அவர் நோய் வாய்ப்பட முன்னரும் கூட, இல்லாத அளவு கொள்கை விளக்கம், தெளிவு விஜையின் திருச்சி பேச்சில் இருந்தது. எம்ஜிஆர் பிரிந்த போது அவரிடம் இரு டசின் எம் எல் ஏக்கள், ஆர் எம் வீரப்பன் போன்ற சினிமாகாரர்தான் இருந்தனர். திக கூட ஆதரிக்கவில்லை. பெரியார், அண்ணா வின் பெயர். எம் ஜி ஆரின் முகம் இவைதான் அன்றைய அதிமுகவின் ஈர்ப்பு சக்திகள். கொள்கை கூடாரம் என்றால் அப்போதும் திக, திமுகதான். எம்ஜிஆர் மன்றங்களை அதிமுகவாக மாற்றியவர் ஆர் எம் வி. அவர்ரைவிட நேரடி அரசியல் அனுபவம் கூடியவர் புசி ஆனந்த். ஆகவே எம்ஜிஆரை விட கூடிய கொள்கை வெற்றிடம் உள்ளவர் விஜை என்பது சரியல்ல. மதுரை மாநாட்டு பேச்சில் இருந்த பிழைகளை விஜை இங்கே சரி செய்துள்ளார். சீமான் போன்ற வாய்-வியாபாரிகள் , திமுக அமைச்சர்கள், என பலரும் விஜைக்கு கூடும் மக்கள் திரளை, காட்டு கூட்டம், நயந்தாராவுக்கு இதை விட கூடும் என அவமரியாதை செய்கிறார்கள். இது நல்லதற்கே. கூட்டம் வோட்டாக மாறாது, மாறாது என இவர்கள் சொல்ல, சொல்ல, அந்த கூட்டம் கடுப்பாகி விஜைக்கு போட்டாலும் ஆச்சரியமில்லை. அதிமுகவை செங்கோட்டையன் மூலம் பாஜக விழுங்கி விட்டது என்பது தெளிவு. நாளை எடப்பாடி டெல்லி ஓடுகிறார்.இனி அமித் ஷாதான் அதிமுகவின் அறிவிக்க படாத பொது செயலாளர். ஆகவே திமுகவுக்கு எதிரான, பாஜக சாராத எதிர்கட்சியை தமிழக மக்கள் தெரிய விரும்பின் - த வெ க மட்டுமே ஒரே தெரிவு. பிரேமலதா, கார்த்தி சிதம்பரம், திருமா, அண்ணாமலை, அண்மையில் சொல்லும் விடயங்கள் தவெக ஊதி தள்ள கூடிய சக்தி இல்லை என்பதையே காட்டுகிறது. இவ்வளவு ஏன் சீமானை எல்லாம் பெயர் கூட சொல்லாமல் ஜோக்கார் போல நடத்திய ஸ்டாலினும், உதய்யும் விஜைக்கு எதிர்வினை ஆற்ற, “புதிய எதிரி” என அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பார்க்கலாம்.
Checked
Sun, 11/02/2025 - 17:37
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed