புதிய பதிவுகள்2

திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்

1 month 2 weeks ago
தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம் 13 September 2025 தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மக்கள் பிரசாரம் இன்று திருச்சியில் ஆரம்பமாகியுள்ளது. திருச்சி காந்தி சந்தை மற்றும் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் த.வெ.க தலைவர் விஜய்யை காண வந்த தொண்டர்கள் அவரது பிரசார பேருந்தை பின் தொடர்ந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தொண்டர்கள் சூழ்ந்த காரணத்தினால் பிரசார பேருந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காவல்துறை நிபந்தனைகளை மீறி அவரது பிரசார வாகனத்தை தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றுள்ளனர். https://hirunews.lk/tm/419953/vijays-campaign-is-flooded-with-volunteers

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்!

1 month 2 weeks ago
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்! adminSeptember 13, 2025 படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது. யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் சனிக்கிழமை காலை , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , அதனை சூழவுள்ள பகுதிகளில் விசாரணை அறிக்கை விநியோகிக்கப்பட்டது கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை , நிமலராஜன் வீட்டினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் , வீட்டினுள் கைக்குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் , அவரது தந்தை தாய் , மற்றும் மருமகன் ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். நிமலராஜன் படுகொலைக்கு கடந்த இருபத்தைந்து, ஆண்டுகளாக நீதி இன்றி நிலைத்து வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக தொடர்ந்தும் யாழ் . ஊடக அமையம் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/220286/

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

1 month 2 weeks ago
வீடிழந்த மகிந்தவுக்கு ராஜகிரியாவில் உள்ள தனது வீட்டை வழங்க ஜெர்மனி வாழ் தமிழர் ஒருவர் முன்வந்துள்ளாராம் அவர் யார் அவருக்கும் மஹிந்தவுக்கு என்ன தொடர்பு என அறிய ஆவல்.

ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!

1 month 2 weeks ago
யாரும் மக்களுக்கு நடந்த அவலங்களை எடுத்துரைக்கப்போவதுமில்லை, யாரும் கேட்கபோவதுமில்லை. கேட்டதற்கே பதிலில்லை, இனி எதை புதுசா சொல்லப்போகிறார்கள், கேட்கப்போகிறார்கள்? உதெல்லாம் மக்களை உசுப்பும் வேலை. அங்கொன்று மக்களுக்கு வேறொன்று சொல்லி பிழைத்த எத்தனைபேரை கண்ட இனம் எம்மினம்.

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

1 month 2 weeks ago
அந்நியரிடமிருந்து ஒன்று சேர்ந்து பெற்ற சுதந்திரத்தை, தன்னகப்படுத்தி அந்த இனத்தை அந்நியப்படுத்திய துரோகிகள் நாட்டை, மக்களை, மதத்தை, மொழியை பிரித்து நாட்டை கொள்ளையடித்தவர்கள் தியாகிகளாம். இவர்களின் இந்த வாய் வீர உணர்ச்சி வசப்பேச்சுகளை நம்பி மக்கள் ஏமாறுவதாலேயே இவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் செய்ய முடிகிறது. ஏமாறுவோர் உள்ளவரை ஏமாற்றுவோரும் குறைவுபடார். சட்டத்திற்கு தலை வணங்குபவர், நீதிபதியை வீட்டுக்கு அனுப்பி பழிவாங்கியது ஏன்? நீதிமன்றத்திற்கு போக அஞ்சி மக்களை திரட்டுவது ஏன்? விமர்சிப்பது ஏன்? நோய் வருவது ஏன்? விழுந்து எழும்புவதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுமேன்? தாங்களே நாட்டை ஆளவேண்டுமென்று சட்டங்களை மாற்றி இயற்றியது மனதில் வரவில்லையோ இவருக்கு இதை சொல்லும்போது? அது சரி, மக்களை ஊடகங்களை அழைத்து புலம்புவது ஏன்? வீடற்றவர் போல் ஒப்பாரி வைத்ததுமேன்? மக்கள் பணத்தில் சொகுசாக வாழ்ந்தவர் கோடி சொத்துக்களை முறையற்ற விதத்தில் சேர்த்தவர், இளைப்பாறிய பின்னும் மக்கள் பணத்தில் வாழ நினைப்பது பேராசை. தன் வேலையை தானே செய்ய முடியாமல் வேலையாட்களை கேட்பவர், தன்னை பாதுகாக்க பாதுகாப்பு கேட்பவர், தனக்கென வீடு இல்லாமல் மக்களின் வீடுகளில் வாழ நினைப்பவர்கள் மக்களுக்கு, நாட்டுக்கு எப்படி சேவை செய்யப்போகிறார்கள்? பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியவர்கள், அது தங்களுக்கு எதிராக பாயும் போது அதை தாங்க முடியவில்லை, குறை கூறுகிறார்கள். என்ன செய்வது? வேலிக்கு வைத்த முள் வைத்தவரின் காலை குற்றத்தான் செய்யும். சுதந்திரம்! அது இந்த நாட்டில் இருக்கிறதா? அதை சிதைத்தவர் தொலைத்தவரே இவர்தான்! இந்த இராணுவத்தை சர்வதேசத்தில் குற்றவாளிகளாக்கி, தங்களுக்குள் தியாகிகளாக காட்டி தம்மை பாதுகாத்து கொள்கிறார்கள். தமது திட்டத்தை நிறைவேற்றவும், தம்மை பாதுகாக்கவும் இராணுவத்தை பலி கொடுக்கிறார்கள். அந்த இராணுவமே இவர்களை கைவிட்டதை மறந்து விட்டார் போலும். ஒரு தலைவன், தன் பிள்ளைகளை, குடும்பத்தை பாதுகாத்துக்கொண்டு, சொகுசு அனுபவித்துக்கொண்டு, ஏழைப்பிள்ளைகளை பலி கொடுத்து, தான் வீரம் பேசுவது, தானே சுதந்திரத்தை கொண்டுவந்தேன் என்று கொண்டாடுவதும், உயிர் இழந்த இராணுவத்தினரின் உடல்களை உறவுகளுக்கு அளிக்காமல் உண்மைகளை மறைத்ததும் சரியா? யார் போர் புரிந்தவர்கள்? இவரா அல்லது இவர் குடும்பத்தை சேர்ந்தவர்களா? றக்பி வீரரின் கொலையில் இவர் பிள்ளைகளின் தனிப்பட்ட ஒழுக்கம் நாடு அறிந்தது. ஊடகவியலார்களின் கொலையில் இவரது குடும்ப ஒழுக்கம் வெளிப்பட்டது. பாதாள, போதைக்கும்பலில் இவர்களின் அரசியல் ஒழுக்கம் வெளிப்படுகிறது. எல்லோருக்கும் சட்டம் சமன். இவர்கள் மட்டும் ஏன் அஞ்சுகிறார்கள், வைத்தியசாலையில் படுக்கிறார்கள், விமர்ச்சிக்கிறார்கள், புலம்புகிறார்கள், வெதும்புகிறார்கள்? அதன் பலனை அவர்களே முதலில் அனுபவித்தார்கள். அவர்கள் மேல் வைத்த குற்றச்சாட்டை, அரசியலுக்கு வந்த உடனேயே உங்களாக மாற்றி காட்டிய பெருமை உங்களை சாரும். நீங்கள் அரசியல் செய்ய, செய்த ஊழலை மறைக்க, அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என மக்களின் மனதை மாற்றி அரசியல் வெற்றி பெற்றவர், பின்னாளில் குடும்ப அரசியல் செய்ததை மக்கள் மறந்ததே உங்கள் வெற்றி. தமிழர் ஓரங்கட்டப்படுவதற்கு தனது தந்தையே முக்கிய காரணம் என்பதை காலம் கடந்து அவரது மகளே ஒத்துக்கொண்டுள்ளார். இவர் புதுக்கதை சொல்லி தன்னை கதாநாயகன் என்கிறார். அதே மஹிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினருமே ஒரு இனத்தை அழித்து காணாமல் ஆக்கி துவம்சம் செய்து விட்டு, அது நடக்கவேயில்லை என வாதாடுகிறார், விசாரணை என்றால் அஞ்சுகிறார், இராணுவத்தை சாட்டி ஒழிய பார்க்கிறார். இவற்றில் ஈடுபட்டவர்கள் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டதும் கொலை செய்யப்பட்டதும் சித்திரவதை செய்யப்பட்டதும் உங்கள் ஆட்சிக்காலத்தில். இப்போ உங்களுக்கென்றவுடன் உபதேசம் செய்ய முடிகிறது இந்த ரவுடிக்கும்பலால். தாங்கள் செய்தது தங்களுக்கு நேர்ந்து விடுமோவென அஞ்சுகிறார்கள், மக்களை கெஞ்சுகிறார்கள். முதலில் உங்களுக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஓடி ஒழியாமல், விழுந்து முறிந்து படுக்கையில் விழாமல், மக்களை திரட்டாமல், ஆரவாரம் செய்யாமல், இராணுவத்துக்கு பின்னால் ஒழியாமல் சட்டத்திற்கு கீழ்ப்பணிந்து தனித்து நின்று உங்களை நிஞாயவாதியாக நிரூபியுங்கள். அதன் பின் மற்றவைகளை யோசிக்கலாம். இப்படி ஒரு நிலைமை வராது என்றும் நீங்களே எப்போதும் நாட்டை ஆளுவீர்கள் என்றும் கனவு கண்டது உங்களது அறியாமை. அரசியலில் மட்டுமல்ல கொலை, ஏமாற்று, ஊழல் எல்லாவற்றிலுமே பலமாக இருந்துள்ளார். அதனாலேயே அவரும் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளார். குடும்பமே ஏமாற்று குடும்பம். இதற்கு அரசியல் ஒரு கேடு. சட்டம் சகலருக்கும் சமம். சரத் பொன்சேகாவை போர் முடிந்தவுடன் யாவரும் புகழ்ந்தனர், அதை பொறுத்துக்கொள்ளாத கோத்தா, அவரை ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் சீற்றமடைந்த பொன்சேகா அரசியலில் குதித்தார். இவரோடு சேர்ந்தால் தமக்கு வாக்கு அதிகமாகும் என எண்ணிய எதிர்கட்சிகள் பொன்சேகாவுடன் கரங்கோத்தனர். இதனால் அச்சம்கொண்ட ராஜபக்ஸக்கள், தேர்தல் குளறுபடி செய்து ஆட்சியை கைப்பற்றிய கையோடு அவரை ஒரு மிருகதைப்போல் அடித்து இழுத்து சென்று சிறையில் போட்டனர். அவரோடு சேர்ந்திருந்த அரசியல் வாதிகள் திகைத்து அவரை கைவிட்டு மறைந்தனர், அவரை சிறையில் சென்று சந்திக்கவேயில்லை. அன்று விழுந்த பொன்சேகாவால் இன்றுவரை எழுந்திருக்க முடியவில்லை. மக்களும் பேச அஞ்சினர். தேர்தல் ஆணையாளர் தேர்தல் முறைகேடுகள் நடக்கிறது என கூப்பாடு போட்டார். இவர்கள் ஆட்சியைப்பிடித்தவுடன் அப்படியேதும் நடக்கவில்லையென பல்டி அடித்து விட்டார். அப்படியொரு காலாச்சாரத்தை ஏற்படுத்த ராஜபக்ஸக்களாலேயே முடியும். அதனாலேயே ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை துணிந்து நடத்தினர். ஊழல், கொலை, கொள்ளை, போதை கலாச்சாரத்தை வளர்த்தனர். அவர்களது காட்டாட்சியே இன்றைய துர்பாக்கிய நிலைமைக்கு காரணம். தங்களை நிஞாயப்படுத்த தமிழரை பலி கொடுத்து தம்மை மேன்மைப்படுத்திக்கொண்டனர். "செய்த அதர்மம் தக்க சமயத்தில் கழுத்தறுக்கும்."

"மூன்று கவிதைகள் / 08"

1 month 2 weeks ago
"மூன்று கவிதைகள் / 08" 'உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன்?' உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன் மன்னவனின் மடியிலே மயக்கம் வருவதேன் அன்ன நடையாளின் உடலெல்லாம் பூரிப்பதேன் மென்மையான தழுவல் இன்பம் பொழிய உன்னதமான காதல் வேறெங்கே காண்பேன்? பெண்ணொருத்தி சாய்ந்து படுத்த கோலம் கண்ணிரண்டும் பார்த்து மகிழ்ந்த நேரம் மண்ணில் பிறந்ததின் பயனைக் கண்டேன் விண்ணில் பறந்த உணர்வு கொண்டேன் எண்ணங்கள் எல்லாம் அவள் மட்டுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. 'மனதைத் தொடும் நினைவுகள்' மஞ்சள் வெயில் பூத்த வானமும் பனை மரங்களின் இனிய தாலாட்டும் பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும் யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும் எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும் அன்பும் பண்பும் துளிர் விடும்! வீட்டை விட்டு எட்டி நடந்தால் வானம் பாடிகளின் ஆட்டமும் வீதியோர பசுக்களின் கூட்டமும் காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும் வானுயர நிமிர்ந்த பனைமரமும் மனதைத் தொடும் நினைவுகளே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................................... 'சத்தியமே வெல்லும்' சத்தியமே வெல்லும் குழப்பம் மறையும் சந்தேகம் வேண்டாம் கடமையைச் செய்! சமத்துவம் வளர்ந்தால் நீதி தவறாது சத்தம் போட்டு உண்மைச் சொல்! சமூகம் இணைந்தால் நட்பு வளரும் சராசரி மனிதனுக்கும் சத்தியம் நிலைக்கும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "மூன்று கவிதைகள் / 08" https://www.facebook.com/groups/978753388866632/posts/31286359797679259/?

ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!

1 month 2 weeks ago
வீட்டை விட்டு வெளிகிட்டால் அசைவ உணவகங்கள் செல்வதில்லை இங்கும் சரி ஊரிலும் அப்படித்தான் உயர் தர சைவ உணவகம் என்று விளம்பரம் போட்டு வைத்து இருப்பார்கள் ஒரு முறை ஒன்றுக்கு எண்டு காட்டி விட்டு உள்ளே சென்று பாருங்கள் உளுந்து வடை கூட சாப்பிட யோசிக்க வைக்கும் அவ்வளவுக்கு பின் பக்க சமையல் அறை அசுத்தமாகி வைத்து இருப்பார்கள் பிறகென்ன ஒரு பிஸ்கட் பையுடன் வாழ்க்கை போகும் . அப்ப அந்த பகுதியில் உள்ள பிரபல குளிர் பான கடையில் ரோல் விற்கிறார்களே அதெல்லாம் மரக்கறி ரோலா? சரியாக கவனிக்கவில்லை இனி செல்லும்போது கவனிக்கணும் .

ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!

1 month 2 weeks ago
நெருங்கிய ரெத்த உறவு ஊரில் தான் தனது கட்டை வேகனும் என்று ஊரில் அவரின் விருப்ப படி அமைதியாகி விட்டார் தவிர்க்க முடியாமல் ஊர் செல்ல வேண்டி வந்தது சாரமும் சைக்கிளுமாய் திரிய ஊரில் காண்பவர்களுக்கு குழப்பம் மற்றும் படி தமிழ்வின் எனக்கு பிடிக்காத செய்தி தளம் ஆரம்பத்தில் யாழில் தடை செய்யப்பட்ட செய்தி தளம் . சாரமும் சைக்கிளும் நிறைய அனுபவங்களை பெற்று தந்தது முக்கியமாய் ஒரு கரண்டி சீனி போட்டு பிளேன் டி கேட்டால் கட்டாயம் 7 கரண்டி சீனி யுடன் கறுப்பு தேநீர் வரும் அது பல இடங்களில் எழுதபடாத விதியாக கடை பிடித்தார்கள் . அங்கு செல்லும் கொடுப்பினை இம்முறை கிடைக்க வில்லை .

லயம் – கொ. தினேஸ்.

1 month 2 weeks ago
லயம் – கொ. தினேஸ். written by admin September 11, 2025 லயம் என்று சொன்னால் உங்கள் மனக்கண்ணில் வருவது என்ன? எத்தனை பேருக்கு தெரியும் இது மலையக மக்கள் வாழும் வீட்டு தொகுதி என்று. வாருங்கள் பார்ப்போம் மலையக மாந்தர்கள் “மனம் கொண்டதே மாளிகை” என கருதி வாழும் லயத்தை பற்றி. ஒற்றை, இரட்டை வரிசையில் சிறு சிறு அறைகளைக் கொண்டிருக்கும். ஒற்றை வரிசையாக இருந்தால் 12 அறைகளும் இரட்டை வரிசையாக இருந்தால் 24 அறைகளும் கொண்டதாக லயம் இருக்கும், 12 அறைகள் கொண்ட லயன் தொகுதியை மலையக மக்கள் “12 காம்பரா” எனவும் 24 அறைகளைக் கொண்ட லயன் தொகுதியை “24 காம்பரா” என அவர்களின் பேச்சு மொழியில் அழைப்பர். 10 முதல் 12 லயன்களைக் கொண்டது ஒரு டிவிசனாக கொள்ளப்படும் இங்கு “டிவிசன்” (னுiஎளைழைn) என்பது பிரிவு ஆகும். இவ்வாரு 3 தொடக்கம் 5 டிவிசன்களை கொண்டது ஒரு தோட்டமாக (நுளவயவந) கொள்ளப்படும். உதாரணம் – களுத்துறை மாவட்டத்தில் ஹல்வத்துறை தோட்டத்தில் காகல டிவிசன், தெல்மேல்ல டிவிசன், கீழ் பிரிவு, மேல் பிரிவு, மத்திய பிரிவு என ஐந்து டிவிசன்கள் (பிரிவுகள்) காணப்படுகின்றன. லயத்தின் ஒரு அறையின் அளவு 10ழூ20 என நீள, அகலங்களை கொண்டு இருக்கும். அத்தோடு அதற்கு முன் 6ழூ10 அகல நீளங்களை கொண்ட “குசினி”(சமயலறை) அல்லது “இஸ்தோப்பு” பகுதி காணப்படும். ஒரு அறைக்கு ஒரு கதவு மாத்திரமே காணப்படும். ஒற்றை வரிசை லயமாக இருக்கும் போது சில நேரம் இரண்டு கதவுகள் காணப்படும். லயத்தின் அனைத்து கதவுகளும் இரண்டு திறக்கும் பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படும். இஸ்தோப்பு அல்லது குசினி பகுதியில் கையை தூக்கினால் தொடக்கூடிய உயரத்தில் “அட்டல்” காணப்படும். அட்டல் என்பது பரன் ஆகும். விறகு சேகரித்து வைத்திருக்கும் இடமாகும். லயத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு அறை. ஒரு அறைதான் அவர்களின் ஒரு வீடு. லயத்திலிருந்து 100 அல்லது 200 மீட்டர் தூரத்தில் “லெட்டு” என மலையக மக்கள் கூறும் மலசலக்கூடம் காணப்படும். ஒரு லயத்திற்கு 2 அல்லது 3 மலசலகூடமே காணப்படும். ஒரு டிவிசனில்(பிரிவில்) உள்ள அனைத்து லயன்களுக்கும் இலக்கம் இடப்பட்டிருக்கும். மக்கள் லயன்களை அடையாளப்படுத்த “ஒன்னா நம்பர் லயம்”, “ ரெண்டா நம்பர் லயம்” எனவும் “மேட்டு லயம், கீ லயம்” எனவும் அடையாளப்படுத்திக் கொள்வது வழக்கம். லயம் பொதுவாக தகரத்தில் ஒரே கூரையாக மூடப்பட்டிருக்கும். தனித்தனியான கூரையமைப்பு இங்கு இல்லை. அனைத்து லயன்களும் சுண்ணாம்பு பூச்சு பூசப்பட்டு இருக்கும். லயத்தின் பின்புறத்தினை “கோடி புறம்” என்றும் லயத்தின் கடைசி அறை இருக்கும் பகுதியை “தொங்கல்” என்றும் அழைப்பர். ஒரு டிவிசனில் இரண்டு அல்லது மூன்று கிணறுகள் காணப்படும். அதில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கிணறுகள் வேறு வேறாக காணப்படும். ஒவ்வொரு டிவிசனுக்கும் பொதுவான ஒரு இடத்தில் ஒரு கோயில் இருக்கும். இது தான் மலையக மக்கள் “மனம் கொண்டதே மாளிகையாக” வாழும் லயன் ஆகும். கொ. தினேஸ் நுண்கலை துறை, கலைக்கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை. Global Tamil Newsலயம் - கொ. தினேஸ். - Global Tamil Newsலயம் என்று சொன்னால் உங்கள் மனக்கண்ணில் வருவது என்ன? எத்தனை பேருக்கு தெரியும் இது மலையக மக்கள்…

ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!

1 month 2 weeks ago
இவர் சாமி கும்பிடக்கூடிய ஆள் போல் தெரியவில்லையே சிறியர். நல்லூர் சுற்றாடல் பகுதியில் முளைத்துள்ள அசைவ உணவகத்திற்கு சென்றார் போலும்.

பயங்கரவாதத்துக்கு எதிராக கனேடிய அரசு எடுக்கும் நடவடிக்கையை 'இனப்படுகொலை' என்பீர்களா? - கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி

1 month 2 weeks ago
எனக்கு அண்மையில் யூரியூப் வழங்கும் பரிந்துரை காணொளிகளில் கரி ஆனந்தசங்கரி பற்றிய ஒரு காணொளி காண்பித்தது. குளோபல் மெயில் எனும் கனேடிய ஊடகம் கரி மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தும் செய்திகளை வெளிவிட்டு வருகின்றது. கரி அவர்களின் தொலைபேசி இலக்கம் விடுதலை புலிகள் சம்மந்தப்பட்ட கனேடிய அமைப்பு ஒன்றின் ஆவணத்தில் உள்ளதாகவும், கரி அவர்கள் கனேடிய மக்கள் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு தகுதி அற்றவர் எனும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும், அழுத்தங்களையும் எதிர்கொண்டு கரி அவர்கள் எப்படி தனது அமைச்சர் பதவியை தொடர்ந்து தக்கவைப்பார் என்பது தெரியவில்லை.

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

1 month 2 weeks ago
மைனர் குஞ்சு சீமான், டெல்லி உச்ச நீதிமன்றில் அட்வான்ஸ் புக்கிங்கில் ரேப் செய்ய தருணம் 👇

ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!

1 month 2 weeks ago
@பெருமாள் அவர்களை முன்புபோல் அடிக்கடி இங்கு காண்பதில்லை. தமிழ்வின் தளத்தில் முழுநேர செய்தியாளராகி விட்டீர்களோ?
Checked
Sun, 11/02/2025 - 11:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed