புதிய பதிவுகள்2

‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’

1 month 3 weeks ago
கட்டுரையாளர் தமிழரசு கட்சியை அவமதிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒரு தற்குறியை இங்கே கொண்டு வந்து அவமதிக்க முயற்ச்சி செய்கின்றார். தமிழரசு கட்சி யாழ்பாணம் மாநகர சபை நல்லூர் பிரதேச சபையில் அதிகாரத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது வாழ்த்துக்கள்

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!

1 month 3 weeks ago
இது எத்தனை வருடங்கள் இருக்கும்? ஒரு விடயத்தில் கருத்து களத்தில் ஒருவருடன் ஏற்படும் கருத்து முரண்பாட்டை வைத்து அவருக்கு இந்த வியாதி என்றபடி வருடங்கள் கழித்தும் சுமந்து திரியும் உங்கள் வியாதியை என்னவென்பது....

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 3 weeks ago
ஆனால் இது உலகுக்கு உலக மக்களுக்கு ஆபத்தான சகிம்சை. மக்கள் விரும்பும் தலைவர்களை அழித்து தலைவர்களின் தேர்வு மக்களின் கைகளில் இருந்து ஒரு சிலரின் கைகளுக்கு போய் விடும் ஆபத்திருக்கிறதே.

வடக்கு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பற்ற உரையாடல்

1 month 3 weeks ago
அர்ச்சுனா ஒரு பைத்தியம்தான். இந்தப் பைத்தியத்தினால்தான் நாங்கள் கடவுளுக்கு நிகராக வரித்துக்கொண்ட வைத்தியப் பெருமக்களில் கொடூரர்களும் புகுந்து ஒழிந்திருப்பது தெரியவந்தது. அர்சுனா மோதுவது எளியோரோடல்ல, மக்களைச் சுரண்டிவாழும் பெரும் வலியாரோடு.😳

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

1 month 3 weeks ago
இதில் முக்கிய பிரச்சனை தமிழ்நாடு (தொல்லியல் துறை) நிலைப்பாட்டை அறிவிக்காதது. அந்த இடத்தில், பாலகிருஷ்ணன் போன்றோர் அதை அரசியல் ஆக்க முயன்றது. அவரின் நிலையில் அதை செய்து இருக்க கூடாது. தமிழ்நாடு ஒரு போதும் எதிர்பார்க்காத, ஆனால் சர்வசாதரணமாக சர்வதேச தொல்லியல் ஆய்வில் நடக்கும் விடயம். இந்திய தொல்லியல் துறை சர்வதேச தொல்லியல் விதிமுறைகளை பின்பற்றுகிறது. (நீங்கள் சொல்லும் தமிழ்நாட்டுக்கு தெரியும் என்றால், ஏன் இந்த நிலை?).

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 3 weeks ago
வணக்கம் வாத்தியார் . ......... ! பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான் உன் ஸ்டைலுக் கேத்த மயிலு நானுதான் ஓ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி ஆண் : { பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான் இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான் } (2) ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி ஆண் : காதலிச்சா கவிதை வரும் கண்டு கொண்டேன் பெண்ணாலே பெண் : கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே ஆண் : எங்கெங்கே ஷாக் அடிக்கும் அறிந்துக்கொண்டேன் பெண்ணாலே பெண் : எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்து கொண்டேன் உன்னாலே ஆண் : காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே மோந்து பார்க்கும் முன்னே முள்ளெடுத்து குத்தாதே பெண் : அழகு ராஜாவே அவசரம் ஆகாதே மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே ஆண் : அடி ராத்திரி வரவே என் ரகசிய செலவே ஒரு காத்தடிக்குது சோ்த்தணைக்கணும் காத்திரு நிலவே பெண் : பச்சரிசி பல்லழகா பால் சிரிப்பில் கொல்லாதே ஆண் : அழகு மணி தேரழகி அசைய விட்டே கொல்லாதே பெண் : நெத்தி தொடும் முடியழகா ஒத்தை முடி தாராயோ ஆண் : கட்டை மலர் குழலழகி ஒத்தை மலர் தாராயோ பெண் : அங்கே தீண்டாதே ஆசை தூண்டாதே சும்மா கிடந்த சங்க ஊதி விட்டு போகாதே ஆண் : ஊடல் கொள்ளாதே உள்ளம் தாங்காதே தலைவி காய்ச்சல் கொண்டால் தலையணையும் தூங்காதே பெண் : அட கெட்டது மனசு வந்து முட்டுது வயசு உன்ன பார்த்த பொழுது வேர்த்த பெண்களில் நானொரு தினுசு பெண் : ஹேய் டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ ஆண் : அட கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு மீ பெண் : ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி ....... ! --- ஸ்டைலு ஸ்டைலு தான் ---

இந்திய விமானம் விபத்துக்குள்ளானது

1 month 3 weeks ago
தரம் குறைந்த காணொளிகளின் அடிப்படையில் வைக்கப்படும் கருத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினரை பாதிக்கும், மக்களும் ஊடகங்களும் முழுமையான விசாரணை முடியுமட்டும் பொறுமை காக்கவேண்டும்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் மகேந்திர சிங் தோனி - ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன?

1 month 3 weeks ago
ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் ஹேடன், அம்லா, தோனி, ஸ்மித், வெட்டோரி, சானா மிர், சாரா டெய்லர் 11 JUN, 2025 | 05:50 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் (ICC Hall of Fame) இந்தியாவின் முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ். தோனி உட்பட புதிதாக எழுவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள அபே ரோட் அரங்கில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்வின்போது இந்த ஏழு பேரும் இப் பட்டியலில் உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்ளப்பட்டனர். இந்த ஏழு பேரில் இருவர் தென் ஆபிரிக்காவை சேர்ந்தவர்கள். அத்துடன் இரண்டு முன்னாள் வீராங்கனைகளும் அடங்குகின்றனர். அவுஸ்திரேலியாவின் மெத்யூ ஹேடன், தென் ஆபிரிக்காவின் ஹஷிம் அம்லா, இந்தியாவின் மஹேந்த்ர சிங் தோனி, தென் ஆபிரிக்காவின் க்றேம் ஸ்மித், நியூஸிலாந்தின் டெனியல் வெட்டோரி, பாகிஸ்தானின் சானா மிர், இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகிய ஏழு பேரே புகழ்பூத்த வீரர்கள் பட்டியலுக்குள் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஏழு புதிய உறுப்பினர்களையும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா வைபவரீதியாக வரவேற்றார். புகழ்பூத்த வீரர்கள் மெத்யூ ஹேடன் (அவுஸ்ரேலியா) 103 டெஸட்கள், 8625 ஓட்டங்கள், சராசரி 50.73 161 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 6133 ஓட்டங்கள், சராசரி 43.80 9 சர்வதேச ரி20 போட்டிகள், 308 ஓட்டங்கள், சராசரி 51.33 1 photo mathew hayden சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலகம் முழுவதும் உள்ள மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களை சிதறடித்த அதிரடி ஆட்டக்காரரான மெத்யூ ஹேடன், ஐசிசியின் புகழ்பூத்த வீரர்களுக்கான பிரத்தியேக பட்டியலில் இணைகிறார். 30 டெஸ்ட் சதங்களைக் குவித்துள்ள மெத்யூ ஹேடன், ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓர் அதிசிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராவார். 50 ஓவர் கிரிக்கெட் வடிவத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட மெத்யூ ஹேடன், 2007 உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் அத்தியாத்தில் 3 சதங்களைக் குவித்ததுடன் அந்தத் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரரானார். 2003இலும் 2007இலும் உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணிகளில் மெத்யூ ஹேடன் இடம்பெற்றார். தற்போது அவர் நேர்முக வர்ணனையாளராக செயற்படுகிறார். ஹஷிம் அம்லா (தென் ஆபிரிக்கா) 124 டெஸ்ட்கள், 9282 ஓட்டங்கள், சராசரி 46.64 181 ஒருநாள் போட்டிகள், 8113 ஓட்டங்கள், சராசரி 49.46 44 ரி20 போட்டிகள், 1277 ஓட்டங்கள், சராசரி 33.60 நிதானமும் பொறுமையும் கொண்ட ஒரு சிறந்த முன்வரிசை வீரர் ஹஷிம் அம்லா ஆவார். தென் ஆபிரிக்காவின் நிலையான மற்றும் உறுதியான வீரராகத் திகழ்ந்த அம்லா, ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைவதற்கு மிகவும் பொறுத்தமானவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆம்லாவின் ஒட்டுமொத்த சாதனை மிகச் சிறந்ததாக இருந்தது. மேலும் 50 ஓவர் வடிவத்தில் இன்னும் சிறப்பாக இருந்தது. எத்தகைய சூழ்நிலைகளிலும் ஓட்டங்களை மிக இலகுவாக குவித்து அனைவரையும் பிரமிக்கவைத்தவர். வலதுகை துடுப்பாட்ட வீரரான அம்லா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000, 5000, 7000 ஓட்டங்களை மிகவேகமாக பூர்த்திசெய்தவர் என்ற சாதனைக்கு உரித்தானவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 28 சதங்களையும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 27 சதங்களையும் குவித்து தனது ஆற்றல் எத்தகையது என்பதை நிரூபித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 311 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் தென் ஆபிரிக்கா சார்பாக முச்சதம் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 90 டெஸ்ட்கள், 4876 ஓட்டங்கள், சராசரி 38.08, 256 பிடிகள், 38 ஸ்டம்ப்கள் 350 ஒருநாள் போட்டிகள், 10775 ஓட்டங்கள், சராசரி 50.57, 321 பிடிகள், 123 ஸ்டம்ப்கள் 91 ரி20 போட்டிகள், 1617 ஓட்டங்கள், சராசரி 37.60, 57 பிடிகள், 54 ஸ்டம்ப்கள் எம்.எஸ். தோனி தனது நீண்டகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல சிறப்பம்சங்களை உருவாக்கியுள்ளார். அத்துடன் ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டவர்களில் மிகவும் பிரபல்யம் பெற்ற வீரர் தோனி ஆவார். 2011இல் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக வெற்றி ஓட்டங்களை அடித்தபோது, தனது முத்திரை ஹெலிகாப்டர் அடிகளில் ஒன்றை அவர் உருவாக்கியது அவரது வாழக்கையில் மறக்கமுடியாத தருணம் ஆகும். மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறந்த, துடிப்பான விக்கெட் காப்பாளாராக அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதேவேளை, கடைசி ஓவர்களில் வெற்றி இலக்கை விரட்டிக் கடக்கும் ஆற்றல் அவரிடம் குடிகொண்டிருந்ததால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பிரபல்யம் பெற்றார். இரசிகர்களாலும் பெரிதும் கவரப்பட்டார். 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி ரி20 உலகக் கிண்ணம், 2011 உலகக் கிண்ணம், 2013 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய மூன்று கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த அற்புதமான அணித் தலைவர் தோனி ஆவார். இந்த மூன்று கிண்ணங்களை வென்றெடுத்த ஒரே ஒரு அணித் தலைவர் என்ற சாதனையை தோனி தன்னகத்தே இப்போதும் கொண்டுள்ளார். க்றேம் ஸ்மித் (தென் ஆபிரிக்கா) 117 டெஸ்ட் போட்டிகள், 9265 ஓட்டங்கள், சராசரி 48.25 197 ஒருநாள் போட்டிகள், 6989 ஓட்டங்கள், சராசரி 37.98, 18 விக்கெட்கள். 33 ரி20 போட்டிகள், 982 ஓட்டங்கள், சராசரி 31.67 மிகச் சிறந்த ஆரம்ப வீரராகவும் எவ்வித கேள்விக்கும் இடமின்றி ஒரு சிறந்த அணித் தலைவராகவும் அனைவராலும் போற்றப்பட்டவர் க்றேம் ஸ்மித். கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு கடுமையான மற்றும் ஈடினையற்ற ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக ஸ்மித் உயர்ந்து நின்றார். இளம் வயதில் தென் ஆபிரிக்காவின் அணித் தலைவராக வரவேண்டும் என்ற அவரது கனவு வீண்போகவில்லை. புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றதில் மிகுந்த பெருமை அடைவதாக ஸ்மித் கூறினார். டெனியல் வெட்டோரி (நியூஸிலாந்து) 113 டெஸ்ட் போட்டிகள், 4531 ஓட்டங்கள், சராசரி 30.00, 362 விக்கெட்கள் 295 ஒருநாள் போட்டிகள், 2253 ஓட்டங்கள், சராசரி 17.33, 305 விக்கெட்கள் 34 டி20 போட்டிகள் - 12.81 சராசரியுடன் 205 ரன்கள், 38 விக்கெட்கள் ஒரு சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் மத்திய மற்றும் பின்வரிசையில் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் டெனியல் வெட்டோரி பிரகாசித்தார். ஐசிசியின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்படதன் மூலம் பெருமை அடைவதாக அவர் கூறினார். வெட்டோரி ஒரு சிறந்த சகலதுறை வீரராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000 ஓட்டங்களைக் குவித்து 300 விக்கெட்களை வீழ்த்திய மூன்று வீரர்களில் ஒருவராக வெட்டோரி திகழ்கிறார். அவர் 'பிளக் கேப்ஸ்' அணிக்கு ஒரு சிறந்த தலைவராகவும் இருந்தார். ஸ்டீவன் ப்ளெமிங் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் நியூஸிலாந்து அணியின் தலைவர் பதவியை வெட்டோரி பொறுப்பேற்றார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து அணியை வழிநடத்தி இருந்தார். தற்போது ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்றுநராக வெட்டோரி செயற்படுகிறார். சானா மிர் (பாகிஸ்தான்) 120 ஒருநாள் போட்டிகள், 1630 ஓட்டங்கள், சராசரி 17.91, 151 விக்கெட்கள் 106 ரி20 போட்டிகள், 802 ஓட்டங்கள், சராசரி 14.07, 89 விக்கெட்கள் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகத் திறமையான ஆற்றல்களை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்ட முதலாவது பாகிஸ்தான் வீராங்கைனை என்ற பெருமையை சானா மிர் பெற்றுக்கொண்டுள்ளார். இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியுள்ள மிர், மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியேயும் தனது சிறந்த சமூகப் பணிக்காகப் பெயர் பெற்றவர். சாரா டெய்லர் (இங்கிலாந்து) 10 டெஸ்ட் போட்டிகள், 300 ஓட்டங்கள், சராசரி 18.75, 18 பிடிகள், 2 ஸ்டம்ப்கள், 126 ஒருநாள் போட்டிகள், 4056 ஓட்டங்கள், சராசரி 38.26, 87 பிடிகள், 51 ஸ்டம்ப்கள் 90 டி20 போட்டிகள், 2177 ஓட்டங்கள், சராசரி 29.02, 23 பிடிகள், 51 ஸ்டம்ப்கள் அண்மைய காலங்களில் மிகவும் திறமையான வீராங்கனைகளில் ஒருவரான சாரா டெய்லர், இங்கிலாந்தின் நட்சத்திர வீக்கெட்காப்பாளரும் துடுப்பாட்ட வீராங்கனையுமாவார். 14 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர்ந்து ஐசிசியின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் சாரா டெய்லர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். மின்னல் வேக விக்கெட் காப்பாளர் என்ற பெயர் பெற்றவர். விக்கெட் காப்பாளராக அவர் மொத்தமாக 103 ஸ்டம்ப்களை செய்துள்ளார். அத்துடன் அவர் ஒரு திறமையான முன்வரிசை துடுப்பாட்ட வீராங்கனையும் ஆவார். ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தையும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தையும் 2009இல் இங்கிலாந்து சுவீகரித்தபோது அவ் வெற்றிகளில் சாரா டெய்லர் பெரும் பங்காற்றியிருந்தார். எட்டு வருடங்கள் கழித்து 2017இல் நடைபெற்ற உலக்க கிண்ணத் தொடரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த சாரா டெய்லர், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 45 ஓட்டங்களைப் பெற்று தனது சொந்த நாட்டில் இங்கிலாந்து சம்பியனாவதை உறுதிசெய்திருந்தார். https://www.virakesari.lk/article/217200

“ரஜ உப்பு” ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

1 month 3 weeks ago
13 JUN, 2025 | 12:00 PM ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் சூட்டப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக விநியோகம் செய்யப்படும் என அறியமுடிகிறது. https://www.virakesari.lk/article/217343

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்

1 month 3 weeks ago
புற்றுநோய் சிகிச்சையை குழப்பும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை முன் போராட்டம் Published By: DIGITAL DESK 2 13 JUN, 2025 | 12:05 PM புற்றுநோய் சிகிச்சையை குழப்பம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை (13) யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், இந்த வைத்தியசாலையானது வடக்கு மாகாணத்தில் உள்ள விசேடமான ஒரே ஒரு புற்றுநோய் வைத்தியசாலையாகும். வடக்கிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். தெற்கில் இருந்து கூட பல நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு அன்றாடம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த காலத்தில் 11 சதவீதமான மக்கள் வெளி மாவட்டத்திலிருந்து இங்கே வருகை தந்து சிகிச்சையை பெற்று சென்றனர். இதிலிருந்து நமது வைத்தியசாலை எவ்வாறு சிறப்பான சேவையை வழங்குகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். இதனை சிதைக்கும் செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட இலாபத்தை கருத்தில் கொள்ளாத, தன்னலமற்ற மருத்துவர்கள், நிர்வாகத்தினரால் அடக்குமுறை, பழிவாங்கல் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி சிறந்த மருத்துவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றனர். இதனால் இனிமேல் மக்கள் தனியார் அல்லது மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டமானது தனி மனிதனுக்கானது அல்ல ஏழை மக்களுக்கானது. ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெறுகின்ற உரிமையை பாதுகாக்க வேண்டும். தரமான, இலவசமான சிகிச்சையை பெறுவதை மறுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து பாதுகாத்து, நோயாளிகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். இதன்போது போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி, கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், வைத்தியர்கள், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/217344

என்ன தான் நடக்கிறது பாமகவில்…? -சாவித்திரி கண்ணன்

1 month 3 weeks ago
என்ன தான் நடக்கிறது பாமகவில்…? -சாவித்திரி கண்ணன் மகன் அன்புமணியிடம், அப்பா ராமதாஸின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன? எதைப் பெறுவதற்கு இந்த முட்டல், மோதல்கள்..? நிஜமாகவே இவர்கள் இருவரும் கடுமையாக முரண்படுகிறார்களா..? இவர்கள் ஒன்றிணையும் வாய்ப்புகள் உண்டா? இல்லையா…? இதோ ஒரு அப்பட்டமான ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ ; சுயநலம் மேலோங்கிய ஒவ்வொரு தலைவரும் தன் இறுதி நாளில் இத்தகைய அவமானங்களில் இருந்து தப்ப முடியாது. ஏனென்றால், அவர்கள் எதை விதைத்தார்களோ.., அதைத் தான் அறுவடை செய்து வருகின்றனர். இந்த அருவருக்கதக்க – முற்றிலும் சுயநலமுள்ள இந்த இருவரின் – சண்டை இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதத்திலும் பயனற்றது. ராமதாஸ்- அன்புமணி பிரச்சினை பொது வெளியில் தொடர்ந்து விவாதிக்க வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் கொண்டதல்ல. முற்ற முழுக்க அலட்சியப்படுத்த வேண்டிய ஒன்று என நான் உறுதியாக நம்புகிறேன். எனினும், இந்த விவகாரம் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு சில காத்திரமான படிப்பினைகள் தருகிறது என்பது மட்டுமல்ல, இந்த சண்டையின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மைகளை சுட்டிக் காட்டவே இந்தக் கட்டுரையில் நான் சிலவற்றை கவனப்படுத்துகிறேன். டாக்டர் ராமதாஸ் தன் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாதவராகவே பொதுத் தளத்தில் தான் தந்த வாக்குறுதிகளைத் தானே மீறியவர். ”என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்”. ”நாங்கள் ஊழல் செய்தால் எங்களை முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடியுங்கள்” ”நான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என் தாயுடன் உறவு கொள்ளத்தக்க கொடுங் குற்றமாகும்…” இப்படி எண்ணற்ற வகையில் பேசி, தான் பேசியதை தானே மீறி, ‘நான் நம்பகமான தலைவரல்ல’ என்பதை அப்பட்டமாக நிறுவியவர் என்று நமக்கெல்லாம் தெரியும். அப்படிப்பட்டவர் தன் மகனிடம் நீதி, நேர்மை, நியாயங்களை எதிர்பார்த்து அது பொய்த்து போனதால் இன்று முரண்படுகிறாரா? தொண்டு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை மகனிடம் காண முடியவில்லையே என கலக்கம் கொண்டாரா? கிடையாது, கிடையவே கிடையாது. ”35 வயதில் என் மகனை கேபினெட் அமைச்சராக்கியது என் தவறு தான்” என 25 ஆண்டுகள் கழித்து தான் ராமதாஸ் சொல்கிறார்…! இந்த 35 வயதிற்கு முன்பாகவே வாஜ்பாய் அமைச்சரவையில் பொன்னுசாமியும், தலித் எழில்மலையும், சண்முகமும் இருந்த போது, ”அவர்களை சும்மா பெயருக்கு அமைச்சராக்கி, அவர்களை பின்னிருந்து நிர்பந்தித்து, கோடிக் கோடியாக பணம் சம்பாதிக்கிறார் அன்புமணி. உங்கள் மகனை கட்டுப்படுத்தி வையுங்கள்” என வாய்பாயே அழைத்து கடிந்து கொண்ட பிறகும், தன் மகனுக்கு வாதாடி மல்லுக்கட்டி, கேபினெட் அமைச்சர் பொறுப்பு வாங்கிய உத்தமர் தான் ராமதாஸ். ”ஐயோ இப்படி பொதுச் சொத்தை சூறையாடும் பிள்ளையை அமைச்சராக்குகிறோமே என அப்போது அவருக்கு மனம் உறுத்தவில்லையே..?’’ ”மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு, வரலாறு காணாத வசூல் வேட்டை நடத்துகிறார்” என வட நாட்டு ஊடகங்கள் எல்லாம் அன்புமணி குறித்து எழுதி, எழுதி மாய்ந்தனவே அப்போது கூட, ‘மகனை கேபினெட் அமைச்சராக்கியது தவறு’ என்று ராமதாசுக்கு குற்ற உணர்வு தோன்றவில்லையே…? தோன்றி இருந்தால், இன்று பாஜக தலைமை கண்டு அஞ்சி மண்டியிட்டு உங்கள் மகன் கூட்டணி வைக்கக் கோரி கதறி இருக்க வாய்ப்பில்லையே…! ‘தன் வாரிசுக்கு இடையூறாக கட்சியில் திறமைசாலிகள் யாரும் இருக்கக் கூடாது’ என எத்தனை பேரை வேட்டையாடி வெளியேற்றினார் ராமதாஸ். ஆனால் தற்போதோ, ”அரசியலில் வாரிசு என்பது கிடையாது” என திருவாய் மலர்கிறார். உடனே, அவரே தான் பேசியதற்கு முரணாக, ”அன்புமணியை கட்சியை விட்டு வெளியேற்ற நான் என்ன முட்டாளா? இன்னும் ஓரிரு ஆண்டுகள் பொறுமை காத்திருந்தால் நானே அவருக்கு முடிசூட்டுவிழா நடத்தியிருப்பேன்…’’ என்கிறார். அதாவது, தன்னை அவமானப்படுத்தினாலும், நெஞ்சிலே குத்தினாலும், உயிருள்ள தன்னை உதாசினம் செய்துவிட்டு, உற்சவராக்கி ஏமாற்றினாலும், எல்லாமே அய்யா தான் என சொல்லிக் கொண்டே தன்னை அதள பாதாளத்தில் தள்ளினாலும், மகனே இந்தக் கட்சியின் அடுத்த தலைவர். 2026 தேர்தலுக்கு பிறகு அன்புமணி பொறுப்பில் விடுகிறேன் என்கிறார், ராமதாஸ். ஆக, பாதிக்கப்பட்டவரே, பாதிப்புக்கு உள்ளாக்கியவரை விட்டால் தனக்கு நாதியில்லை என்கிறார் என்றால், ”மகனே, 2026 தேர்தல் தான் நான் கடைசியாக சந்திக்கும் தேர்தலாக இருக்கக் கூடும். ஆகவே, அது வரையிலேனும் கூட்டணி பேரத்தில் பொட்டி வாங்கும் அதிகாரத்தில் இருந்துவிட்டு போகிறேனே…” என்பது தான் அவர் மகனுக்கு விடுக்கும் வேண்டுகோள். இதைத் தான் அவரது வார்த்தைகளில் , ”இன்னும் ஓரிரு ஆண்டுகள் இக்கட்சிக்கு தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா?” என்றெல்லாம் கேட்டு புலம்புகிறார். மேலும், அன்புமணிக்கு போட்டியாக சகோதர்கள் யாரும் இல்லை. ஆகவே, ”அதிகாரத்தை அவரே ஓட்டுமொத்தமாக குவித்து வைத்துக் கொள்ளாமல், குடும்பத்திற்குள் சகோதரிகளின் பிள்ளைகளுக்கு கொஞ்சமேனும் பங்கிட்டு கொடு” என்கிறார் ராமதாஸ். ஆக, இது முழுக்க, முழுக்க பொது வாழ்வில் கிடைக்கும் பொருளாதாரம், அதிகாரம் போன்ற பலாபலன்களை பங்கிட்டுக் கொள்வதில் குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை அவ்வளவே! அன்புமணியோ, இந்த புலம்பல்கள் எதற்கும் பதில் சொல்லாமல், பாஜக தலைமை சொல்லிக் கொடுத்தபடி நடை பயணம் சென்று மக்களை சந்திக்க போகிறாராம்…! இத்தனை ஆண்டுகாலம் ஏசி அறையில் இருந்து கொண்டே சொகுசு அரசியல் செய்து வந்த அன்புமணி அவர்கள், ராமதாஸ் கூறியபடி, ’உழைக்க தயார் இல்லாதவர், தற்போது தான் மக்கள் ஞாபகம் வந்து நடை பயணமாகப் பார்க்கப் போகிறாராம்…! வன்னிய மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள், உழைத்து வாழும் உத்தமர்கள். கஞ்சி குடிக்கும் நிலையிலும் கவுரவத்தை இழக்காதவர்கள், நேருக்கு நேராக பொட்டில் அறைந்தது போல தவறுகளை தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர்கள். இவையெல்லாம், நான் நீண்ட நாட்கள் இவர்களோடு பழகி உணர்ந்த உண்மைகள். வெறும் புகழ்ச்சியில்லை. அன்புமணி நடைபயணத்தில் அவரை முச்சந்தியில் நிறுத்தி, வன்னிய மக்கள், ”உன் தந்தை வைத்த குற்றச்சாட்டுகளுக்கு உன் பதில் என்ன..?” எங்களை பகடை காயாக்கி உங்கள் குடும்பம் சேர்த்த செல்வங்கள் என்னென்ன…? போன்ற தங்களது ஏமாற்றம், கோபம், இவர்களின் துரோகம்.. ஆகியவை குறித்து கேட்கப் போகும் கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்? எனப் பார்ப்போம். ‘சமூகநீதி என்ற சாக்லேட்டை காட்டி, வெறும் கையை சப்பவைத்து விட்டு, அதிகார அரசியலின் ஆதாயங்களை முழுக்க, முழுக்க அனுபவித்துக் கொண்டு, மதவாத, பாசிச சக்திகளுடன் கைக் கோர்த்து, தமிழ்நாட்டை படுகுழிக்குள் தள்ளுவது குறித்து அப்பவிற்கோ, மகனுக்கோ சிறிதளவும் குற்ற உணர்வில்லை’ என்பதை நாம் கவனத்தில் கொள்வோமாக! ஆக, இந்த அப்பா – மகன் சண்டையில் வெல்லப் போவது யார்? என்றால், அது பணமும், அதிகாரமும் தான்! தோற்றுக் கொண்டிருப்பது தமிழக மக்கள் தாம்! சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21865/ramadoss-vs-anbumani-ramadoss/
Checked
Sun, 08/10/2025 - 16:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed