புதிய பதிவுகள்2

'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?

3 months 1 week ago
என்னுடைய ஒரு காலத்தின் மாத சம்பளம் எனது மகனின் ஒரு மாத உணவு விடுதிகளில் சாப்பாட்டு செலவு. நான் ஒரு நட்சத்திரம் பார்க்காத சாப்பாட்டாளன். மக்கள் 4,5 க்கு மேல் நட்சத்திரம் பார்த்து உணவகங்களை தேர்வு செய்பவர்கள்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது!

3 months 1 week ago
சொற்களிலும் சுலோகங்களிலும் மட்டும் தொங்கி கொண்டிராது ஜதார்த்தத்தை (Reality) ஏற்றுக் கொண்டு வட கிழக்கில் தமிழர் வாழ்வு சிறக்கு நீங்கள் அனைவரும் சேர்ந்து வேலை செய்ய வேண்டுமே தவிர இப்படி ஆளுக்காள் அடிபட்டு சுய நல அரசியல் நடத்தக்கூடாது. Reality கசக்க தான் செய்யும். அதற்காக அடுத்த தலைமுறையுயும் பலி கொடுத்து தமிழ் மக்கள் தொகையை மேலும் குறைவதற்கு உங்கள் அரசியல் காரணமாகி விடக்கூடாது. மரமண்டை தமிழ் தேசிய முன்னணி கூட சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது.

கீரிமலை ஜனாதிபதி மாளிகை - எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு!

3 months 1 week ago
மஹிந்தா, கோத்தா போன்ற இடி அமீன்களின் உல்லாச விடுதிகள், அதற்கு இணையாக விகாரைகள். இதுதான் போருக்குப் பின்னான சாதனையென தெற்கு மக்களுக்கு அறிவியுங்கள். பொருளாதார வீழ்ச்சியின் காரணம் எதுவென தெரிவியுங்கள். இனிமேலும் இவர்களோ, இவர் சந்ததியினரோ ஆட்சிபீடம் ஏறுவதை கனவிலும் காணாதபடி செய்யுங்கள்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்

3 months 1 week ago
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 5 | ‘தி கேட்சர் இன் தி ரை’ (The Catcher In The Rye) உலகத்தை இளையோரும், அவர்களைப் பெரியோரும் புரிந்துகொள்ள ஒரு நாவல் ‘தி கேட்சர் இன் தி ரை’ (The Catcher In The Rye) தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 5 – அ. குமரேசன் இளம் தலைமுறையினரின் – குறிப்பாக முதிர் பதின்பருவத்தினரின் சுதந்திர மனநிலை, அவர்கள் இழக்க நேரிடுகிற குழந்தைத்தனம், சமூகத்தைப் புரிந்துகொள்வதில் அவர்களுடைய போராட்டம், அவர்களைப் புரிந்துகொள்வதில் சமூகத்திற்குத் தேவைப்படும் பக்குவம் ஆகியவற்றைப் பேசும் அருமையான நாவல் என்று ஆங்கில இலக்கிய உலகில் பாராட்டப்படுவது 1951இல் வெளியான ‘தி கேட்சர் இன் தி ரை’ (The Catcher In The Rye). கம்பு பயிரிடப்பட்ட வயலில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளைக் கற்பனை செய்துகொள்ளும் இளைஞனைப் பற்றிய கதை. ‘கம்பு வயல் குழந்தைகளின் மெய்க்காவலன்’ என்று நாவலின் தலைப்பைத் தமிழில் சொல்லலாம். எழுதியவர் ஜெரோம் டேவிட் சாலிங்கர் (J.D.Salinger). 1923ஆம் ஆண்டிலிருந்து வெளியான மிகச் சிறந்த 100 நாவல்களை 2005ஆம் ஆண்டில் பட்டியிலிட்ட ‘டைம்ஸ்’ ஏடு, அவற்றில் ஒன்றாக இதனைச் சேர்த்திருந்தது. ‘மாடர்ன் லைப்ரரி’ என்ற அமைப்பு 2003ஆம் ஆண்டில் தனது வாசகர்களிடையே 20ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த நாவல்கள் பற்றி ஒரு வாக்கெடுப்பை நடத்தியது. அதிலும் ஜெரோம் டேவிட் சாலிங்கர் (J.D.Salinger) எழுதிய இந்த நாவல் தேர்வு பெற்றது. பெரிதும் படிக்கப்பட்ட நாவல்கள் பற்றி பிபிசி ஊடக நிறுவனம் நடத்திய ஆய்வில் 15வது இடத்தைப் பிடித்தது. இதுவரையில் சுமார் ஆறரைக் கோடிப் படிகள் விற்பனையாகியுள்ள இந்த நாவல், வெளியான சில ஆண்டுகள் அமெரிக்காவின் பல மாநிலங்களில் நூலகங்களிலும் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களிலும் தடை செய்யப்பட்டது. இளம் பருவத்தினரின் ஒழுக்கக் கேடுகளை நியாயப்படுத்துகிறது, அவர்கள் பயன்படுத்தக்கூடிய “கெட்டவார்த்தைகளை’‘ அப்படியே சொல்கிறது, கல்வி நிறுவனங்களிலும் சமூகத்திலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சாடியதன் மூலம் கம்யூனிஸ்ட் கருத்துகளை விதைக்கிறது என்ற காரணங்கள் கூறப்பட்டன. ஒக்லஹோமா மாநிலத்தின் டுல்சா நகரப் பள்ளி ஆசிரியர் தனது வகுப்பு மாணவர்கள் படித்து வந்து விவாதிக்க இந்த நாவலைப் பரிந்துரைத்ததற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். இலக்கிய அன்பர்களும் சமூக அக்கறையாளர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து. சில மாதங்களில் அவர் மறுபடியும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் புத்தகத்திற்கான தடை விலக்கப்பட்டது. இப்போது பல மொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. நாவலாசிரியர் ஜெரோம் டேவிட் சாலிங்கர் (J.D.Salinger) அமெரிக்காவின் அன்றைய கட்டாய ராணுவ சேவைச் சட்டப்படி இரண்டாம் உலகப் போரில் பணியாற்றுவதற்கு முன்பு, 1940 ஆம் ஆண்டில் “ஸ்டோரி” என்ற பத்திரிகையில் பல சிறுகதைகளை வெளியிட்டார். 1948 இல், அவரது “எ பெர்ஃபெக்ட் டே ஃபார் பனானாஃபிஷ்”நாவல் ‘தி நியூ யார்க்கர்’ பத்திரிகையில் வெளியானது. “தி கேட்சர் இன் தி ரை” உடனடியாக பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ‘நைன் ஸ்டோரிஸ்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ஒரு குறுநாவல் மற்றும் ஒரு சிறுகதையை உள்ளடக்கிய ‘ஃப்ரானி அண்ட் ஜூயி’ என்ற தொகுப்பையும், இரண்டு குறுநாவல்களை உள்ளடக்கிய ‘ரைஸ் ஹை தி ரூஃப் பீம், கார்பென்டர்ஸ் அண்ட் சீமோர்: அன் இன்ட்ரோடக்ஷன்” என்ற தொகுப்பையும் வெளியிட்டார். சாலிங்கரின் கடைசிப் படைப்பான ‘ஹாப்வொர்த் 16, 1924’ என்ற குறுநாவல்1965இல் வெளியானது. அதன் பிறகு கசப்பான அனுபவங்களுடனேயே வாழ்ந்தார். 1980களில் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவருடன் நீண்ட நாட்கள் சட்டப் போராட்டம், 1990களின் பிற்பகுதியில் அவருக்கு நெருக்கமான இருவர் எழுதிய சுயசரிதை தொடர்பான சண்டை என அவரது பிற்கால வாழ்க்கை கடந்து, 91 வயதில், 2010இல் மரணத்துடன் முடிந்தது. கதை என்னவென்றால்… ஹோல்டன் கால்ஃபீல்ட் என்ற இளைஞன் தன் கதையைச் சொல்கிற நடையில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. முந்தைய ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு முன் கடந்த நாட்களின் நிகழ்வுகளை ஹோல்டன் நினைவுகூர்கிறான். கதை, பென்சில்வேனியா மாநிலத்தில் கற்பனையாக உருவகிக்கப்ட்ட அகர்ஸ்டடவுன் என்ற கற்பனையாக உருவகிக்கப்பட்ட நகரத்தின் ‘பென்சி பிரிபரேட்டரி அகாடமி’ என்ற உயர்நிலைப் பள்ளியில் தொடங்குகிறது. அங்கே அவன் ஆங்கிலம் தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்ததால் பள்ளி நிர்வாகத்தால் வெளியேற்றப்படுகிறான். ஹோல்டன் தனது அறை நண்பனான வார்ட் ஸ்ட்ராட்லேடர் கேட்டுக்கொண்டதற்காக ஒரு ஆங்கிலக் கட்டுரை எழுதித்தர ஒப்புக்கொள்கிறான். அவனை எழுதச்சொல்லிவிட்டு ஜேன் கல்லாகர் என்ற பெண்ணுடன் டேட்டிங் செல்கிறான் ஸ்ட்ராட்லேடர். அவள் மீது காதல் கொண்டுள்ள ஹோல்டன் வருத்தப்படுகிறான். அவன் எழுதிய உணர்வுப்பூர்வமான கட்டுரையை ஸ்ட்ராட்லேடர் மதிக்கவே இல்லை. அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொண்டானா என்று ஹோல்டன் கேட்க பதிலளிக்க மறுக்கிறான். கோபமடைந்த ஹோல்டன் அவனைத் தாக்குகிறான். அங்கே ஏற்படும் சண்டையில் ஸ்ட்ராட்லேடர் எளிதில் வெற்றி பெறுகிறான். அந்த ஊரிலும் பள்ளியிலும் உள்ள போலித்தனங்களை வெறுத்து, ஹோல்டன் நியூயார்க்கிற்கு ரயிலில் செல்ல முடிவு செய்கிறான். பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட செய்தி பெற்றோரைச் சென்றடையும் வரையில் வீட்டிற்கு வராமல் இருக்கத் திட்டமிடுகிறான். இரவில் ஒரு பாலியல் தொழிலாளியும், அவளுடைய தரகனும் மோசடியாக ஹோல்டனை ஏமாற்றுகின்றனர். ஊரைவிட்டுப் புறப்படுகிறவன், சாலி ஹேய்ஸ் என்ற பழைய தோழியை தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கிறான், அவள் மறுத்துவிடுகிறாள். வகுப்பில் தன்னுடன் படித்தவன் ஒருவனைச் சந்திக்கும் ஹோல்டன் அவனுடைய பாலியல் வாழ்க்கை பற்றி தொடர்ந்து கேள்விகள் கேட்கிறான். இறுதியில் ஹோல்டன் குடித்துவிட்டு பெரியவர்களிடம் மோசமாக நடந்துகொள்கிறான். தனது தங்கை போபியைப் பார்க்க ஏங்கும் ஹோல்டன் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து அவளை எழுப்புகிறான். உடன்பிறந்தவனைப் பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தாலும், அவன் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டுபிடித்து வருந்துகிறாள். அவனது இலக்கில்லாத போக்கிற்காகவும், மற்றவர்களை வெறுக்கும் மனநிலைக்காகவும் அவனைக் கண்டிக்கிறாள். எதைப் பற்றியாவது அக்கறை இருக்கிறதா என்று அவள் கேட்கும்போது, ராபர்ட் பர்ன்ஸின் “காமின் த்ரூ தி ரை” என்ற கவிதையை தவறாகப் புரிந்துகொண்டு உருவாக்கிய ஒரு கற்பனையைப் பகிர்ந்துகொள்கிறான். அந்தக் கவிதையில் வருகிற கம்பு பயிரிடப்பட்ட வயலில் குழந்தைகள் ஓடுவதாகவும், அவர்கள் அருகிலுள்ள பாறையிலிருந்து கீழே விழுவதற்கு முன் பிடித்துக் காப்பாற்றுவதாகவும் கற்பனை செய்கிறான். போபி அந்தக் கவிதையின் உண்மையான பொருளை விளக்குகிறாள். கம்பு வயலில் காதலர்கள் சந்தித்துக்கொள்வதைத்தான் கவிஞர் சித்தரித்திருக்கிறார் என்று கூறுகிறாள். கவிதையைப் புரிந்துகொள்வதிலும் தோல்வியா என்று ஹோல்டன் கண்ணீர் விடுகிறான், போபி ஆறுதல் படுத்துகிறாள். பெற்றோர் வீடு திரும்பியதும் அவன் வெளியேறி தனது முன்னாள் ஆங்கில ஆசிரியரைச் சந்திக்கிறான்.. ஹோல்டன் ஒரு பயங்கரமான வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறான் என்று அவர் கவலைப்படுகிறார். கற்பனைகளை விடுத்து நடப்பு வாழ்வில் ஈடுபடுத்திக்கொள்ள அறிவுறுத்துகிறார். உறங்கி எழுந்திருக்கும்போது அவர் அவனுடைய தலை முடியைக் கோதிவிடுகிறார். அதை அவன் பாலியல் முயற்சி என்று தவறாகப் புரிந்துகொள்கிறான். அவரிடமிருந்தும் விலகி ரயில் நிலையக் காத்திருப்பு அறையில் மீதி இரவை மனம் நிறைய வெறுப்புடன் கழிக்கிறான். காலையில், நகரத்தில் நம்பிக்கையான தொடர்புகள் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இழந்தவனாக மேற்கு நோக்கிச் சென்று, ஒரு மரக் கிட்டங்கியின் எரிவாயு நிலையத்தில் காது கேளாத-வாய் பேச இயலாத தொழிலாளியாக வேலைக்குச் சேர முடிவு செய்கிறான். தனது திட்டத்தைக் கூறுவதற்காக போபியைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறான். நகரத்தின் அருங்காட்சியகத்திற்கு ஒரு பெட்டியுடன் வருகிற அவள் தன்னையும் அழைத்துச் செல்லக் கேட்கிறாள். ஹோல்டன் மறுக்கிறான். வருத்தப்படும் அவளை, பள்ளிக்கு மட்டம் போட அனுமதிப்பதன் மூலம் உற்சாகப்படுத்த முயல்கிறான். அவள் கோபம் தணியாமல் இருக்கிறாள். சுழல் நாற்காலி ராட்டினத்தில் அவள் சுற்றிவர அனுமதிச்சீட்டு வாங்கித் தருகிறான். சமாதானமடையும் தங்கை சுழல் நாற்காலியில் சவாரி செய்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறான். அன்றிரவு தனது பெற்றோர்களைச் சந்தித்ததையும், உடல் நலத்தில் கோளாறு என்று நினைத்துத் தன்னை அவர்கள் கலிபோர்னியாவில், தன் அண்ணன் வாழும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு சிகிச்சை மையத்திற்கு அனுப்பியதையும், செப்டம்பரில் வேறொரு பள்ளியில் சேர இருப்பதையும் நம்மிடம் (வாசகர்களிடம்) சொல்கிறான். பள்ளி பற்றிய பேச்சு, தவறவிட்ட தனது முன்னாள் வகுப்பு தோழர்களை நினைவுபடுத்திவிட்டது என்றும், அதற்கு மேல் பேச விரும்பவில்லை என்றும் ஹோல்டன் கூறுவதுடன் நாவல் முடிகிறது. போராட்டமும் பீதியும் எளிதில் தனிமைப்பட்டுவிடுகிற பதின்பருவத்தினரின் மனப் போராட்டங்களையும், அதற்கான சூழல்களையும் பெரியவர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியதன் தேவையை உணர்த்துகிற இந்த நாவல், இளைய தலைமுறைகளிடையேயும் கணிசமாக வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே, “முன்னேறிய” அமெரிக்க சமுதாயத்தில் எந்த அளவுக்கு கம்யூனிசச் சிந்தனைகள் பற்றிய பீதி பரப்பப்பட்டிருக்கிறது என்பதையும், நாவலுக்கு விதிக்கப்பட்ட தடையின் மூலம் அறிய முடிகிறது. https://bookday.in/books-beyond-obstacles-j-d-salinger-novel-the-catcher-in-the-rye-oriented-article-written-by-a-kumaresan/

ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்

3 months 1 week ago
வழுக்கு மர சுவாமி காத்தவராயர் தி. செல்வமனோகரன் இயற்கையோடு ஒட்டி வாழத் தலைப்பட்ட காலத்தில் இருந்து மனித வாழ்வில் சடங்குகளும் சமயங்களும் உருவாகத் தொடங்கின. இயற்கையை வழிபடத் தொடங்கிய மனிதர், அதனைத் திருப்திப்படுத்த பல சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய முற்பட்டனர். மக்களின் வாழ்க்கையோடு இயைந்த வழக்காறாக, நிலப் பண்பாடாக அவை வளர்ந்தன; சமய வழிபாட்டு முறைகள், சடங்குகள், நம்பிக்கைகள், கலைகள் என பன்முகப்படுத்தப்பட்டன. அவை பற்றி உரையாடல்கள் கர்ண பரம்பரைக் கதைகள், வாய்மொழிப் பாடல்கள், வெறியாடல்கள், கூத்துகள் எனப் பல தளங்களில் பரிணமித்தன. இவை கிராமியத் தெய்வங்களைத் தந்தன. அவற்றின்வழி மேன்மேலும் விரிவாக்கமுற்றன. இயற்கையோடு இயைந்த வாழ்வில் தெய்வ – சமய நம்பிக்கை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. சமய நம்பிக்கையின் பாற்பட்ட வகையில் சமயச் சடங்குகள், நேர்த்திக்கடன்கள் என்பன மென்பக்தி – வன்பக்தி சார்ந்தவையாக வெளிப்படுத்தப்படுகின்றன. மக்களது நம்பிக்கைகளின் புலப்பாடுகளாகவும்; மக்களிடம் மேலும் நம்பிக்கையை ஊட்ட வல்லனவாகவும் கிராமியக் கலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தமிழ்ச் சமூகத்தில் நின்று நிலவுகின்ற கிராமியத் தெய்வங்களுள் ஒருவராக காத்தவராய சுவாமி (காத்தான், வழுக்கு மரத்தான்) சுட்டப்படுகிறார். காத்தான் பற்றிய கதையாடல்கள் – கதைப் பாடல்கள் – உடுக்கடிப் பாடல்கள் தெருக்கூத்தாக, மேடைக்கூத்தாக, சிந்து நடைக் கூத்தாக அது பல நிலைகளில் தமிழர்களிடையே நிலவி வருகிறது. கூத்து என்ற வகையில் கிறிஸ்தவர்களாலும் காத்தவராயன் கூத்து ஆடப்பட்டு வருகிறது . காத்தவராய சுவாமி – பெயர் பற்றிய உரையாடல்கள் சிலப்பதிகாரத்தில் ‘சாத்தன்’ என்ற காவல் தெய்வம் கூறப்படுகிறது. சாத்தன் என்பதை ஐயப்பன் என்னும் ஹரிகரபுத்திரனாக சில ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர்; சாத்தன் – காத்தன் – காத்தான் எனவும் கொள்ளலாம். அதேபோல் இராமாயணத்தில் வருகின்ற உத்தரகாண்டத்தில் இராவணனைக் கொல்லக்கூடிய ஆற்றல் படைத்தவனாகச் சுட்டப்பட்ட காத்த வீரியன், ‘காத்தவராயன்’ எனப் பிற்காலத்தில் சுட்டப்பட்டிருக்கலாம். சாத்தான், ஐயப்பன், காத்தான் மூன்றுமே காவற் தெய்வங்களாகக் குறிப்பிட்ட காலம் வரை தனித்தனியே வழிபடப்பட்ட தெய்வங்கள். அதிலும் ஐயப்பன் ஹரி – ஹர இணைவினால் பிறந்ததை ஒத்த கதையையே காத்தவராயனின் கதையும் கொண்டமைந்துள்ளது. சிவன் ஆணாகவும் திருமால் பெண்ணாகவும் உருவெடுத்த காலத்தில் தோன்றிய குழந்தையே காத்தவராயன் எனப்படுகிறார். ‘ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்’ என்பது போல் ஒரே கதை வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு விதமாகக் கூறப்பட்டிருக்கலாம். காத்தவராயன் ‘காத்தவன், காத்தான், காத்தையன், காத்தமுத்து, காத்தலிங்கர், காத்தலிங்க சுவாமி எனப் பல பெயர்கள் கொண்டு குறிப்பிடப்படுகின்றார். எல்லாப் பெயர்களிலும் ‘காவல்புரிபவர்’ என்ற தொனிப்பொருள் உள்ளடங்கியிருக்கிறது. காத்தான் என்பதை ‘காளியால் காக்கப்பட்டவன்’ என்று பொருள் சுட்டப்படுகிறது. ‘காத்தையன்’ என்னும் பெயர் திருமுருகாற்றுப்படையில் முருகனைக் குறித்து நிற்பது குறிப்பிடத்தக்கது. காத்தான் பற்றி எழுந்த பிற்காலக் கதைகள் சில முருகனின் திரு அவதாரமாகவே காத்தனைக் குறிப்பிடுவது ஒப்பு நோக்கத்தக்கது. காத்தவராய சுவாமி பற்றிய கதைகள் 1. காத்தவராய நாடகம் – தக்கன் யாகத்திற்கு ஈசன் மறிக்கவும் நில்லாது சென்ற பார்வதி தேவி அவமானப்பட்டுத் திரும்பியதும், வீரபத்திரர் தோன்றி தக்கன் யாகத்தை அழித்தார். ஈசன் ஈஸ்வரியை ‘பூதலத்தில் பிறந்து பாவம் தீர்ப்பாய்’ எனக் கூற, அப்பாவம் போக்க புத்திரன் வேண்டும் என்றும், இத்தலத்தில் உள்ள நந்தவனங்களைக் காக்கப் புத்திரன் வேண்டும் என்றும், வேண்டியதன் பயனாகப் பிறந்தவரே காத்தவராய சுவாமி. 2. காத்துமுத்து நாடகம் – ஈஸ்வரனின் பரிபூரணத்தில் சந்தேகம் கொண்டு அல்லது பரிசோதிக்கும் பொருட்டு ஈஸ்வரி எறும்பு ஒன்றைப் பிடித்து ‘சிமிழி’ ஒன்றினுள் அடைத்து வைத்துள்ளார். அடுத்த நாள் அந்தச் சிமிழியைத் திறந்து பார்த்தபோது அவ்வெறும்பின் வாயில் ‘நொய்’ (அரிசிக் குருணல்) இருக்கக் கண்டு திகைத்துத் தான் செய்த தவறுக்காக ஈசனிடம் மன்னிப்புக் கூறியுள்ளார். எறும்பைத் துன்புறுத்திய பாவம் நீங்க பூமியில் பிறந்து நதிக்கரைகளில் பூங்காவனங்கள் அமைத்து விமோசனம் பெறுமாறு ஈசன் கட்டளையிட்டார். அப்போது ஈஸ்வரி பூங்காவனத்தைக் காக்க மகவொன்று வேண்டும் என்று கேட்டதற்கிணங்க முருகன் காத்தவராய சுவாமியாக அவதரித்தார். 3. சிவவாக்கியர் போதம் – தக்கன் தன் யாகத்தில் இடம்பெற்ற தவறை உணர்ந்து வீரபத்திரர் தன்னை அழிக்கும் சந்தர்ப்பத்தில் தான் சிவத்தலங்களில் காவல் தெய்வமாக இருக்க வேண்டும் என வேண்டியதற்கிணங்க, அதன் வழி தக்கனே காத்தவராய சுவாமியாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது. 4. காத்தவராயன் கதைப்பாடல் – சேப்பிள்ளையான் எனும் காவல் அதிகாரியின் வளர்ப்பு மகனே ‘பரிமளம்’ (பரிமணம்) என்ற காத்தவராயன் ஆவார். இவர் பறையர் குலத்தவர். பிராமணப் பெண்ணான ஆரியமாலாவை மணந்து நாட்டைவிட்டு ஓடியவர். இவரைக் கண்டுபிடித்து கழுவேற்றம் செய்ய அரசன் முடிவு செய்ததாகவும், பின்னர் இவர் வாதங்களில் உள்ள நியாயங்களை ஏற்று மன்னித்ததாகவும், ஆயினும் காத்தவராயன் தானாகவே முன்வந்து கழுவேறியதாகவும் இந்நூல் கூறுகிறது. இக் கழுவேற்றத்துக்குக் காரணமாக, கைலாசத்தில் சிவனுடன் இருந்த காலத்தில் ஆறு தேவப் பெண்களைக் கண்டு ஆசை கொண்டதாகவும், அதனால் பூவுலகில் பிறந்து அவர்களை மணந்து கழுவேறிச் சாகவேண்டும் என இறைவன் சபித்ததாகவும் கூறப்படுகிறது. இது இரு பெண்கள் மீது ஆசை கொண்ட ‘ஆலகால சுந்தரரின்’ கதையை ஒத்ததாக உள்ளது. 5. ஈழத்துக் காத்தான் கூத்துப் பிரதிகள் – ஈழத்தில் பதிப்பிக்கப்பட்ட காத்தவராயன் பாடல்கள், கூத்துப் பிரதிகள் யாவும் காத்தானை ஆதி சிவனின் மைந்தனாகவும் மாரியம்மனின் வளர்ப்பு மகனாகவும் சுட்டுகின்றன. உமையின் இளைய சகோதரியான மாரியம்மன் திருமணமாகாத கன்னித் தெய்வமாவாள். சிவனும் திருமாலும் மான்களாக மாறிப் பெற்றெடுத்த மான் கன்றை மாரியம்மன் கைகளால் தூக்க, அது ஆண் குழந்தையாக மாறுகிறது. அக் குழந்தையை மாரியம்மன் வளர்த்து வரும் காலத்தில், கங்கை பெருக்கெடுத்து இருவரையும் அழிக்க வருகிறது. அப்போது குழந்தை கங்கையை காலால் மறித்துத் தாயைக் காத்தது. வளர்ந்து தாயின் நந்தவனத்தையும் காத்து வந்தது. இவ்விரு காரணங்களாலும் அது காத்தான் எனும் பெயர் பெற்றது. மேற்குறிப்பிட்ட ஐந்து கதைகளும் காலந்தோறும் காத்தான் பற்றிய பல்வேறு கதைகளாக பிரதேச, கால வேறுபாடுகளுக்கேற்ப வாய்மொழி மரபின் வழி பேணப்பட்டு வந்து நூலுருப் பெற்றுள்ளன. காத்தவராயன் நாடகம் எனும் பிரதியில் மட்டும் கழுவேற்றம் பற்றிய குறிப்பு இல்லை. சிவவாக்கிய போதம் மட்டுமே தக்கனின் அவதாரம் எனக் காத்தனைக் குறிப்பிடுகின்றது. காத்தானை முருகனின் அவதாரம் எனக் கூறும் சில கதைகளும் உண்டு. இவை தவிர மேற்சொன்ன கதைகள் பலவற்றையும் உள்வாங்கி பிறிதாக இன்னொரு கதையும் கூறப்படுகிறது. பார்வதி சிற்றெறும்பை சிமிழியிலடைத்த கதையைக் கூறி இறை சாபத்தால் நந்தவனம் அமைத்துப் பராமரித்தாள். அதற்குக் காவலாக காத்தான் எனும் ஒரு வாலிபனை நியமித்தாள். சப்த கன்னியர்கள் சித்திரப் பொய்கையில் நீராடிய பின், இந் நந்தவனத்து மல்லிகை மலர்களைப் பறித்து கொண்டு கைலை சென்றனர். இதனை அவதானித்த காவலாளி அவர்கள் நீராடும் போது அவர்களின் ஆடையை எடுத்து மறைத்ததாலும், ஆடையில்லாததால் இளைய கன்னி நீரினுள் நிற்க, ஏனையவர் கைலை சென்று சிவனிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட சிவன் காத்தானை ‘ஏழு பிறவிகள் எடுத்து கழுவேறி இறக்கச் சாபம்’ கொடுத்தார். இடைமறித்த பார்வதி ‘தீயில் உடல் வேகலாகாது’ என சாப நீக்கம் அளித்தார். இவ்வாறு இடைமறித்ததால் பார்வதிக்கும் சாபம் வழங்கப்பட்டது. காத்தான் நான்காவது பிறப்பில் தாயைச் சந்தித்ததும் ஆரியமாலாவை கரம் பிடித்து கழுவேறியதுமாக இக்கதை அமைகிறது. இக்கதை தமிழகப் பிராந்தியங்கள் பலவற்றைச் (கொல்லிமலை, கம்பா நதி) சுட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. கழுமரம் காத்தவராயனின் அடையாளமானதற்குப் பின்னணியில் துயர் மிகுந்த காதல் கதை ஒன்று மறைந்திருக்கிறது. காத்தவராயன் 14 ஆம் நூற்றாண்டில் திருச்சிக்கு அருகே வாழ்ந்த காவற்காரன். அப்போதே காதல் புரட்சி செய்து தண்டிக்கப்பட்டவன். மரணத்துக்குப் பிறகு சாமியாகி பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு நம்பிக்கையாகத் திகழ்கிறவன் எனக் கூறப்படுகிறது. தமிழகச் சூழலில் காமாட்சி அம்மன் கோயில்களில் முதன்மையான காவல் தெய்வமாக காத்தவராயன் வழிபடப்படுகின்றார். ஈழத்தில் முத்துமாரியம்மன் வழிபாட்டோடு தான் காத்தவராயன் வழிபாடு இணைக்கப்பட்டுள்ளது. காத்தவராய சுவாமிக் கதைகள் இன்று வரை கால, தேச, வர்த்தமானத்துக்கு ஏற்ப பலவாறு பரிணமித்துக் கொண்டிருக்கின்றன. காத்தவராயன் பற்றிய இக்கதைகள் யாவும் பலவாக அமைந்தாலும் மாரியம்மன் வழிபாடும், காத்தவராய சுவாமி வழிபாடும், கழுமர வழிபாடும் ஒன்றாக நின்று நிலைத்துவிட்டன; மக்கள் மனதில் பெரு நம்பிக்கையை வளர்த்து விட்டன. விஜய நகரக் காலத்துக்கு முந்தைய கதையாகவும் வழிபாடாகவும் இது கருதப்படுகிறது. பலதார மணம், பரத்தமை உள்ளிட்ட நாயக்கர் கால வாழ்வியல் இப் பிரதிகளில் காணப்படுகின்றது. ஈழத்துக் காத்தவராய சுவாமி கோயில்கள் மாரியம்மன் கோயில்களில் பெரும்பாலும் கழுமரமும் காத்தவராய சுவாமி சிலையும் வைத்து வழிபடும் மரபு எங்கும் காணப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, இலங்கை போன்ற தேசங்களில் செல்வாக்கு மிக்க இக்காவல் தெய்வத்துக்கு, தனியான கோயில்கள் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. ஈழத்தில் அல்வாய், பருத்தித்துறை, திக்கம், வராத்துப்பளை, ஊரணி, நெடியகாடு (வல்வெட்டி துறை), நெடுங்கேணி, திருகோணமலை உள்ளிட்ட பல இடங்களில் தனியான காத்தவராய சுவாமி கோயில்களும், வல்வட்டித்துறை, அல்வாய், வேலிவத்தை, மாயக்கை, பருத்தித்துறை, தும்பளை, அளவெட்டி, கோண்டாவில், திருநெல்வேலி, திருகோணமலை (நிலாவெளி), முல்லைதீவு (புதுக்குடியிருப்பு), மட்டக்களப்பு போன்ற இடங்களில் உள்ள முத்துமாரியம்மன் கோயில்களோடு இணைந்த காத்தவராய சுவாமி கோயில்களில் கழுமரமும் காணப்படுகின்றன. வழிபாட்டு முறைகள் இத் தெய்வத்திற்கான வழிபாட்டு முறை இரு முறைகளில் நிகழ்த்தப்படுகிறது: 1) மாரியம்மன், காளியம்மன் கோயில் சடங்குகள் நிகழ்த்தப்படும் போது இணைத் தெய்வமான காத்தவராயருக்கும் சடங்கு வழிபாடுகள் நிகழ்த்தப்படும். 2) காத்தவராய சுவாமி தனிக் கோயில்களில் தனியான சடங்கு வழிபாடுகள் நிகழ்த்தப்படும். பெரும்பாலான மாரியம்மன் கோயில்களில் காத்தவராயருக்கு தனி சந்நிதியோ அல்லது கழுமரம் மட்டுமோ காணப்படுகிறது. மாரியம்மன் அம்மை, பொக்குளிப்பான், சின்னமுத்துப் போன்ற நோய்களைத் தருபவளாகவும், தன்னை வணங்குபவருக்கு நோய் தீர்க்கும் தெய்வமாகவும் கருதப்படுபவள். அதனால் பயபக்தி நிறைந்த வழிபாட்டிற்குரிய தெய்வத்துக்கு குளிர்ச்சிச் (குளிர்த்தி) சடங்கு நிகழ்த்தப்படும்; பொங்கல் பொங்கி வேள்வி நடத்துவர். வேள்வியில் கோழி, ஆடு போன்றவற்றை பலி கொடுக்கும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. பொங்கலோடு பழவகைகள், பலகாரங்கள், வெற்றிலை, பாக்கு என்பவை வைத்து மடை பரப்புவர். இவ்வாறே காத்தவராய தனிக் கோயில்களிலும் மடை பரப்பப்படும். முன்னைய காலத்தில் காத்தவராயருக்கு இடப்படும் மடைகளில் இறைச்சி, மீன், கள், முட்டை என்பவற்றோடு பல்வேறு வகைத் தானியங்களில் அவிக்கப்பட்ட பிட்டுகளும் மரவள்ளி, தவிடு போன்றவற்றாலான பிட்டுகளும் படைக்கப்படும். கருவாடும் சுட்டுப் படைக்கப்படும். பூசாரியாக அவ்வக் குலத் தோன்றல் பூசையைச் செய்வார். வேள்வியின் போது பறைமேளம் இசைக்கப்படும். மத்தளம், உடுக்கு இசைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. இத் தோற்கருவிகள் இசைக்கப்படும் போது பூசாரிகளோ அல்லது வேறு எவரோ தெய்வமேறி உருக்கொண்டாடுவர். கலை வந்து விட்டதாக, தமது தெய்வம் அருள் புரிய வந்து விட்டதாகக் கருதி மக்கள் வழிபடுவர். உருவேறியவர் குறி சொல்வார்; இறுதியில் வெறியாட்டுவோர் பறையிசை ஒலிக்க செம்பு நீர், கோயில் பிரம்பு என்பவற்றுடன் அருகிலிருக்கும் நாற்சந்தியையோ அல்லது முற்சந்தியையோ அடைந்து பூசை செய்து எலுமிச்சங்காய்களை வெட்டி எறிவார். அவை நிமிர்ந்து விழும் பட்சத்தில் ‘வழிவெட்டிவிடுதல்’ சடங்கு சிறப்பாக நடைபெற்றதாகக் கருதப்படும். இதற்குப் பதிலாக கோழி, ஆடு போன்றவற்றை பலி கொடுக்கும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. சடங்குகள் முடியும் தறுவாயில் தெய்வமாடியோர் சன்னதம் இழந்து நிலத்தில் விழுவர். இது தெய்வம் மலையேறிவிட்டதாகக் கருதப்படும். பின்பு பக்தர்களுக்கு பூசாரி திருநீறு, சந்தனம், தீர்த்தம் முதலியவற்றை வழங்குவார். மட்டக்களப்பில் நிகழ்த்தப்படும் மாரியம்மன் சடங்கு தனித்துவமானது. மாரியம்மன் சாபத்தால் தான் இழந்த அனைத்து ஆற்றல்களையும் மீளப் பெறுவதற்காக தவ நிலைக்கு ஏறச் செல்லும்போது, காத்தான் தடுப்பதும், இதனால் மாரியம்மன் காத்தானை கழுமரத்தில் ஏற்றிக் கட்டிவைத்து விட்டுச் செல்வதும், தவநிலை முடிந்து ஆற்றல்களை பெற்றுவரும் மாரி, காத்தானை கழுமரத்தில் இருந்து இறக்கி திருவருள் புரிவதும் முக்கியம்சங்களாகும். இவ்விடங்களில் கழுமரத்தில் வாழைப்பழச் சீப்புகளை கட்டிவிடுவதும், கழுமரத்திலேறிய காத்தான் அவற்றைப் பிடுங்கி மக்களுக்கு ஏறிதலும் நடைபெறுகின்றன. சடங்கில் காத்தானின் ஆடல் சிறப்பாக அமையும். இசையோடு கூடிய பாடலும் சிலம்பு, உடுக்கு, பறை உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் ஆட்டத்தை உச்சத்திற்கு இட்டுச்செல்லுகிறது. காத்தவராயன் கும்மி, காத்தான் – ஆரியமாலா காதல், காத்தானின் குறும்பு என பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஆட்டமாக இது காணப்படுகிறது. மலையகத்திலும் மாரியம்மன் வழிபாட்டுடன் இணைந்ததாக காத்தான் வழிபாடு காணப்பட்டு வருகிறது. நேர்த்திக்கடன் மக்கள் தமது நம்பிக்கை, வழிபாட்டு முறை என்பனவற்றுக்கேற்ப பல்வேறு நேர்த்திக் கடன்களை தெய்வங்களுக்கு வைப்பர். தம் காரியம் நிறைவேற வைக்கப்படும் நேர்த்திக் கடன்களை காரியம் நிறைவேறிய பின் செலுத்துவர். பொங்கல், மடைபரவல், விரதம், காவடி, கரகமெடுத்தல், அலகு குத்துதல், முள்ளு மிதியடி நடத்தல் எனப் பலவகையான நேர்த்திக் கடன்கள் உண்டு. வடமராட்சியில் மாரியம்மன் – காத்தவராய சுவாமி வழிபாடுகளில் முதன்மையுறும் நேர்த்திக்கடன் ‘கூத்தாடுதல்’ ஆகும். காத்தவராயன் கூத்து நேர்த்திக்கடனாக வைத்து ஆடப்படும். காத்தவராயன் கூத்தில் பிரதான காத்தான் பாத்திரத்தை நேர்த்திக்கடன் வைத்தவர் ஏற்றாடுவார். அம்மனுக்கும் காத்தானுக்கும் செய்யும் ஒரு வகை வழிபாட்டு நெறியாகவே காத்தான் கூத்து ஆரம்பத்தில் ஆடப்பட்டது. சின்னான், காத்தான், மாரியம்மன், காளியம்மன் பாத்திரங்கள் கூத்தாடி கொண்டிருக்கும் போதே சன்னதம் செய்தல் உண்டு. தமிழகச் சூழலில் உடுக்கடிப்பாடல், தெருக்கூத்து, தனியாள் பாடல், கூடு முறைப் பாடல் என்னும் தளங்களில் காத்தவராயன் கதை பயிலப்பட்டு வருகிறது. இம்முறையியல்கள் ஈழத்தில் காணப்பட்டாலும், தென்மோடி ஆட்டமுறையில் தனித்துவமான துள்ளல் நடையினையுடைய சிந்துநடைக் கூத்தாக ஆடப்பட்டு வருகிறது. இக்கூத்து வாய்மொழி மரபான அண்ணாவிமார்களால் பேணப்பட்டு வந்துள்ளது. இது பரம்பரை பரம்பரையாக ஆடும் கூத்துக் கலையாகவும் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய இடங்களில் இக்கூத்து சிறப்பாக, பரம்பரை பரம்பரையாக ஆடப்பட்டு வருகிறது. நேர்த்திக் கடனுக்கான கூத்து என்ற வகைக்கு அப்பாற்பட்ட தனித்துவமான கூத்துக்கலையாக வளர்ந்துள்ளது. சமகாலப் பயில்வு யாழ்ப்பாணத்தில் காத்தான் வழிபாடு பஞ்ச கம்மாளர்களிடமே அதிக செல்வாக்கு உடையது என்றும், காத்தான் கூத்து ஆடுபவர்களும் அண்ணாவிமாரும் அச்சமூகத்தவர்களிடமே காணப்பட்டனர் என்றும் கூறப்பட்டாலும், அல்வாய் போன்ற பகுதிகளில் பள்ளர் சமூகத்தவர்களிடம் வழிபாடும், கூத்தும் நீண்ட காலம் நிலவிவருவதை அறிய முடிகின்றது. செட்டி, பறையர், வண்ணார் போன்ற சாதியப் பாத்திரங்கள் கூத்தில் நேரடியாக உண்டு. கப்பலில் காத்தான் செல்லுதல் கரையூர்களில் நீண்ட நேரம் கூத்தாக ஆடப்படும். காளி, பத்திரகாளியை குல தெய்வமாகக் கொண்டவர்கள், காளியால் மீட்கப்பட்ட காத்தான் கூத்தை தம் கலையாகக் கொள்வர். வடமராட்சியில் இவற்றில் சம்பந்தப்படாத பள்ளர் சமூகத்தவரிடம் இருபதுக்கும் மேற்பட்ட கோயில்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக விவசாய சமூகத்தினதும் கரையூர் சமூகத்தினதும் தெய்வமாக காத்தவராயர் காணப்படுகின்றார். கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் போன்றோரின் கூத்து மீட்டுருவாக்கச் செயற்பாடுகள் காரணமாக இது பாடசாலைகளில் கலை நிகழ்வாகவும் தேசிய தமிழ்த்தினப் போட்டியில் ஒரு நிகழ்வாகவும் மாறியது. யுத்த சூழலும் சாதி கடந்த மக்கள் கலையாக கூத்தை மாற்றியது. ஆகம மயமாக்கப்பட்டதாக கருதப்படும் யாழ்ப்பாணச் சூழலில் 21 ஆம் நூற்றாண்டில் முன்பில்லாதவாறு பெரும்பாலான மாரியம்மன் கோவில்களின் முன்றல்களில், அல்லது வீதியில் காத்தான் சந்நிதி அமைக்கப்படுகிறது. குதிரையில் காத்தான் நிற்பதாக அது அமைக்கப்பட்டு கழுமரமும் அருகில் வைக்கப்படுகிறது. திருநெல்வேலி முத்துமாரியம்மன் ஆலயத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட இவ்வாறான சந்நிதியில் பிராமணர் ஒருவர் திரூநீற்றைக் கொடுத்து, குறி சொல்லி, நூல் கட்டுவது நடைபெற்று வருகின்றது. காத்தவராயர் சாதியம் கடந்த மக்கள் தெய்வமாக மிளிர்கிறார். கோண்டாவில் சிவமாரியம்மன் கோயிலில் கழுமரம் செப்பாலானதாக அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகமமயப்பட்ட மாரியம்மன் கோயில்களில் பிராமணர் காத்தானுக்கு அல்லது கழுமரத்திற்கு பூசை செய்தலும் நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில் இன்று காத்தான் வழிபாடு தனிக்கிராமிய வழிபாடாகவும், ஆகமக் கோவில் வழிபாடாகவும் இரு பண்புகளும் கொண்ட கலப்புரு (ஆகமவழிபாடும் கிராமியப் பூசாரி, மடை பரவல் முதலானவையும்) வழிபாடாகவும் நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது. காத்தானின் தனிக்கோயில்களில் பெரும்பாலும் சாதாரண மக்களாலேயே பூசை செய்யப்படுகிறது. பலியிடல் பெரும்பாலும் இல்லாது விடினும் மாமிச, மட்சப் படையல் பெரும்பாலான கோயில்களில் உண்டு. ஏனைய கோயில்களில் பொங்கல் பொங்கி வடைமாலையிட்டு மடை பரவுவர். சில இடங்களில் காத்தான் கூத்தில் வரும் சின்னான் முதலான தெய்வங்களுக்கும் சந்நிதிகள் அமைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக் காத்தான் கோயில்களில் காத்தான் கூத்துப்பாடல்களே இசைக்கப்படுகின்றன. முடிவுரை காத்தவராயன் சுவாமி வழிபாடு மாரியம்மன் வழிபாட்டோடு இயைந்து வளர்ந்து வந்துள்ளது. ஈழத்தில் வடபுலத்திலே காத்தானுக்கு எனத் தனித்துவமான கோயில்கள் பல காணப்படுகின்றன. காத்தான் பற்றி பல்வேறு விதமான கதைகள் காணப்படுகின்றன. துயரம் மிகுந்த காதல் கதையும், இடைவிடாத முயற்சியும், இறை அருள் வெற்றி தரும் என்ற கதையும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. காத்தான் காவல் தெய்வம், நோய் நொடியின்றி வாழ வைக்கும் தெய்வம் எனப் பொருள்படுகிறார். காத்தான் ஆரம்பத்தில் குறித்த சாதியினருக்குரிய தெய்வமாக நோக்கப்பட்டாலும், காத்தான் கதையின் வளர்ச்சி, அதில் வரும் பல்வேறு சாதியினருக்கு இடையிலும் இணைப்பை (செட்டி, மலைச்சாதி, பறையர், பஞ்சகம்மாளர்) உருவாக்கி மக்களின் தெய்வமாகியது. காத்தவராயன் கூத்து மக்களின் கலையாகியதன் ஊடாக காத்தவராய சுவாமி பலராலும் நம்பிக்கையுடன் வழிபடும் தெய்வமாகத் திகழ்கின்றார். ஆகமக் கோயிலை ஒத்த பெருங்கோயில்கள் உருவாகி வருகின்றன. கழுமரமும் காத்தானும் இல்லாத மாரியம்மன் கோயில்கள் இல்லை எனலாம். காத்தவராய சுவாமிக்கு புதுக் கோயில்களும் உருவாகி வருகின்றன. ஆனால் எல்லாக் கோயில்களும் மக்களின் ‘பூசாரியே’ பூசகராக இருப்பது குறிப்பிடத்தக்கது. காத்தானுக்குரிய பூஜையில் பலியிடல் செல்வாக்கிழந்து வருகிறது. கூத்தாடல் நேர்த்திக்கடன் இன்றும் நின்று நிலவுகிறது. 1958 இல் காத்தவராயன் என்று ஒரு திரைப்படம் வந்தது. அது போல 2024 இல் ராயன் என்ற பெயரில் காத்தவராயன் படம் நவீன மயப்படுத்தப்பட்டு வந்திருப்பது, காத்தவராயன் வழிபாடு இன்றும் உயிர்ப்புடன் தமிழகத்திலும், ஈழத்திலும், தமிழர் வாழும் நிலங்களிலும் செல்வாக்கோடு இயங்கி வருவதை உறுதி செய்கிறது. காத்தவராய சுவாமி, வேண்டும் வரம் அருளும் கிராமியத் தெய்வமாக செல்வாகுற்று வருகிறது. தொடரும். https://www.ezhunaonline.com/village-deity-kaathavarajan/

சிந்து நதியை தடுக்கும் முடிவு போருக்கான முஸ்தீபாகும்!

3 months 1 week ago
சிந்து நதியை தடுக்கும் முடிவு போருக்கான முஸ்தீபாகும்! -சாவித்திரி கண்ணன் சிந்து நதியின்மிசை நிலவினிலே எனப் பாடினான் பாரதி. சீனாவின் தீபெத்தில் உற்பத்தியாகி இந்தியா வழியாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள்ளும் சிறிதளவு பாயும் சிந்துவை தடுப்பது என்பது இந்தியா- பாகிஸ்தான் போராக மட்டுமல்ல, சர்வதேச பிரச்சினையாகவும் மாறி, சர்வ நாசத்திற்கு வித்திடும்; காஷ்மீரில் தீவிரவாதிகள் மூன்று பேர் செய்த தீய செயலுக்கு பழி வாங்கலாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை தடுப்போம். சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என அறிவித்துள்ளது இந்தியாவை ஆளும் பாஜக அரசு. வெறும் மூன்று தீவிரவாதிகள் ஒரு மிகப் பெரிய நாட்டின் அரசையே பயங்கரவாத பாதைக்கு திருப்பிவிட முடியும் என்பது பெரும் அவலமல்லவா? எந்த ஒரு பொறுப்பும் இல்லாத- எந்த நேரத்திலும் தங்கள் உயிரையே துச்சமாக துறக்க நினைக்கும் முட்டாள்த்தனமான முரட்டு தீவிரவாதிகளுக்கு இணையாக 144 கோடி மக்களை பாதுகாக்கும் பொறுப்புள்ள அரசு சிந்திக்கலாமா? பயங்கரவாதிகளின் வழிமுறையிலேயே ஓரு அரசும் சிந்தித்து செயல்படத் துணியுமென்றால், அந்த அரசு எப்படி மக்கள் நல அரசாக இருக்கும். இதனால் ஏற்படும் பயங்கர விளைவுகளை அத்தனை இந்திய மக்களும் அல்லவா அனுபவிக்க நேரும். தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த உடனேயே பிரதமர் மோடி தலைமையில் கூடிய முக்கிய அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவை அவசரமாக அறிவித்துள்ளனர். சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, SAARC விலக்கு விசா ரத்து, 48 மணிநேரத்திற்குள் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற போடப்பட்ட உத்தரவு, இனி SAARC விலக்கு விசா பாகிஸ்தானியர்களுக்கு கிடையாது என்றது, அடாரி – வாகா எல்லை மூடல் உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு நேற்று அறிவித்தது என்பது ஏதோ போர் முஸ்தீபுக்கு செய்யப்படும் ஒத்திகை போல உள்ளது. பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தவர்களின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தியதோடு, உலக நாடுகளின் உணவு மற்றும் மருத்துவ உதவிகளையும் தடுத்ததைப் போல இந்தியா, தன்னை பாகிஸ்தான் விவகாரத்தில் இஸ்ரேலாக கருத தொடங்கிவிட்டதோ என அச்சமாக உள்ளது. பாஜக அரசு நினைத்தைப் போலவே பாகிஸ்தான் அரசும் இதற்கு எதிர்வினை ஆற்றி உள்ளது. பாகிஸ்தான் அரசின் அறிவிப்பில்,”சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீரைத் தடுக்க அல்லது திசைதிருப்ப எந்தவொரு முயற்சியும், நதிக்கரையின் உரிமைகளைப் பறிப்பதும், போர் அறிவிப்பாக கருதப்படும்” என தெரிவித்ததோடு, பாகிஸ்தான் தூதரகத்தில் இந்திய ஊழியர்களைக் குறைத்துக்கொள்வதாகவும், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க தடை எனவும் அறிவித்தது. மேலும், வாகா எல்லைச் சாவடியை மூடுவதாகவும், இருப்பினும் ஏப்.30ஆம் தேதி வரை அது திறந்திருக்கும் எனவும் அறிவித்தது. சீக்கிய யாத்ரீகர்கள் தவிர அனைத்து இந்திய குடிமக்களும் 48 மணி நேரத்திற்குள் வெளியேற பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. SAARC திட்டத்தின் கீழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை பாகிஸ்தானும் நிறுத்தியது. இமயத்தில் உள்ள பனிப்படலம் உருகுவதனால் சிந்து நதிக்கு அதிக நீர் கிடைக்கின்றது. சிந்து நதியின் பிரதான 5 கிளைநதிகளாக சீலம், செனாப், ராவி, பியாஸ், சாட்லொக் ஆகியன காணப்படுகின்றன இரு நாடுகளுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் நடந்த நீண்ட, நெடிய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உலக வங்கியின் உதவியுடன், இந்த ஒப்பந்தம் இறுதியாக இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப் கானாலுக்கும் இடையே செப்டம்பர் 1960 கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்கு நதிகள் பாகிஸ்தானுக்கும், கிழக்கு நதிகள் இந்தியாவுக்கும் ஒதுக்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு நாடும் மற்றொன்றுக்கு ஒதுக்கப்பட்ட நதிகளில் அணை கட்டிக் கொள்வது, மின்சாரம் தயாரித்துக் கொள்வது உள்ளிட்ட சில பயன்பாடுகளை அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தம் சிந்து நதியை மட்டுமின்றி அதன் துணை நதிகளையும் சமமாகப் பகிர்ந்து கொள்வதற்கான வழி செய்கிறது. சிந்துவின் முக்கிய துணை நதிகள் ராவி,பியாஸ்,சட்லெஜ், ஜீலம் மற்றும் செனாப் ஆகியவையாகும். பாகிஸ்தானின் 90 சதவிகித விவசாய நிலப்பரப்பு இந்த நதியை சார்ந்துள்ளது. 68 சதவிகித மக்களின் குடி நீரும் இந்த நதியை சார்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதன் பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தான் அரசுக்குமே நேரடி போர்கள் மூன்று முறை நடந்துள்ளது. அப்போது கூட இது போன்ற தீய எண்ணம் நமது நாட்டுத் தலைவர்கள் தரப்பில் ஏற்பட்டதில்லை. ஆனால், வெறும் மூன்று தீவிரவாதிகள் இந்த ஆட்சியாளர்களின் மூளையையே இன்புளுயன்ஸ் பண்ண முடியுமென்றால், நமது ஆட்சியாளர்கள் எவ்வளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்று தான் எண்ண வேண்டியுள்ளது. சிந்து நதி மொத்தம் 11.2 லட்சம் சதுர கீ.மீ பாய்கிறது. இதில் இந்தியா 39 சதவிகிதமும், பாகிஸ்தான் 47 சதவிகிதமும், சீனா 8 சதவிகிதமும், ஆப்கானிஸ்தான் 6 சதவிகிதமும் உள்ளன. பாகிஸ்தான் சந்தையை ஆக்கிரமித்துள்ளது இந்திய உற்பத்தி பொருட்களே. பாகிஸ்தான் தியேட்டர்களை ஆகர்ஷித்து இருப்பது இந்திய திரைப்படங்களே. மதம் ஒன்று தான் இரு நாட்டையும் பிரிக்கிறது. மனிதம் ஒன்று தான். பாகிஸ்தான் சந்தையை நம்பித் தான் இந்திய வியாபாரிகள் உற்பத்தியாளர்கள் என 20 கோடி பேரின் வாழ்வாதாரம் உள்ளது. இந்தியா பாகிஸ்தானை பகைத்தால் இந்த சந்தையை மிகச் சுலபமாக சீனா ஆக்கிரமித்துவிடும். இது காந்தி தேசம். புத்தரும், மகாவீரரும், வள்ளலாரும், காந்தியும் உலவிய அகிம்சை செழித்தோங்கிய மண். அப்பாவி மக்களை அழித்தொழிக்கும் எந்த அசுரச் செயலுக்கும் இந்த மக்கள் உடன்படமட்டார்கள். ஆகவே, பாஜக அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டு, பயங்கரவாதிகளை ஒடுக்கட்டும். ஆட்சேபனை இல்லை. அதே சமயம் பயங்கரவாதம் உருவாதற்கான சூழலையும் களைய வேண்டும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21395/sindhu-river-india-pakistan/

திருத்தந்தை பிரான்சிஸும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும்

3 months 1 week ago
திருத்தந்தை பிரான்சிஸும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் Photo, Americamagazine திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக முயற்சிப்பது இயல்பானது. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸின் (ஆட்சிக்காலம்) காலத்தை புவிசார் அரசியல் பரப்பிலிருந்து ஆராயும் பார்வை அதிகரித்திருப்பதை நிராகரிக்க முடியாது. “திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியல்” என்ற நூல் 2019 இல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருந்ததையும் ஏனைய கட்டுரைகளையும் சாதாரண தேடல் மூலம் இணையத்தில் வாசிக்கலாம். தமிழ் வாசிப்பு ஆய்வுப்பரப்பில் திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியலைத் தழுவி பதிப்புக்கள் வெளிவந்ததாக அறிய முடியவில்லை. இக்கட்டுரை ஏற்கனவே வெளிவந்த ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வாசிப்புப் பரப்பில் உள்ள வெறுமையை நிரப்ப முனைவதாக அமையும். திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய இலத்தீன் அமெரிக்க புவிசார் அரசியலை விளங்கிக் கொள்வது அதிக தெளிவை கொடுக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருச்சபை, கத்தோலிக்க வெளியை நிலப்பரப்பு சார்ந்து புதுப்பித்தல் அல்லது மீளமைத்தல் செயன்முறைக்குள் போக நிர்ப்பந்திக்கப்பட்டது. புதிய உலக நோக்கிலிருந்தும், நிர்வாக ரீதியிலிருந்தும் இவை மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றிற்கொரு அரசியல் இருப்பதை மறுக்க முடியாது. சர்வதேச தொடர்பாடலில் யதார்த்தவாத கருத்தியலை முன்வைத்து உலக ஒழுங்கு நடைமுறையை ஆய்வு செய்பவர்கள் அரசியல் அதிகார வலுவையும் அவ்வலுவை தக்கவைப்பதற்கான போட்டியையும், இவ்விரண்டிற்கும் இடையேயான உரசலால் ஏற்படுகின்ற அரசியல் பண்பாடு உலக ஒழுங்கை உருவமைப்பதில் காத்திரமான பங்களிப்பு செய்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். இதிலிருந்தே மத – புவிசார் அரசியல் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். உரோமை மையமாகக் கொண்ட பேரரசுக் கட்டமைப்பு, வரலாற்றில் பேரரசுக் கட்டமைப்பை மறுசீரமைக்குட்படுத்தி தொடர்ந்தும் தனது அரசாங்கத்தன்மையை மேய்ப்புப் பணிக்கூடாக முன்னெடுத்து ஏனைய பல்துருவ, இருதுருவ, ஒருதுருவ உலக ஒழுங்கில் பேரரசை உருவாக்கி அரசியல் வலுவை ஒரு மையத்தை நோக்கிக் குவிக்க முற்பட்டவர்களுக்கு ஒரு பெரும் சவாலகவே இருந்து வந்துள்ளது. தற்போதைய தேச – அரசு கட்டமைப்பிலிருந்து அணுகும்போது அவற்றின் நிலவெளி என்பது எப்போதுமே வரையறைக்குட்பட்டது. ஆனால், உரோமய திருச்சபையின் மேய்ப்புப் பணிவெளி மேற்குறிப்பிட்ட தேச – அரச எல்லைகளைக் கடந்து, அதன் அதிகார வரையறைகளையும் தாண்டிய அரசியல் வலுவைக் கொண்டிருந்தது என்பது நோக்கத்தக்கது. இதற்கு காலனித்துவத்தின் பங்கு மிகவும் காத்திரமானது. வரலாற்றில் ஐரோப்பிய – மைய அல்லது மேற்குலக மைய உலக ஒழுங்கை கட்டியெழுப்புவதில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கை மறுதலிக்க முடியாது. அதேநேரத்தில் காலனித்துவமும், கிறிஸ்தவ மதமும் இணைந்து முன்னெடுத்த நவீனத்துவ நாகரிகமயமாக்குதலில் பல பழங்குடி/ பூர்வீக குடிகளின் இன அழிப்பு அரற்கேற்றப்பட்டதையும் திருச்சபை ஏற்றுக் கொண்டுள்ளது. திருச்சபையின் வரலாற்றுத் தவறுகளுக்காக திருத்தந்தை மன்னிப்பு கோரியுள்ளதும் நினைவுகூரப்பட வேண்டியது. மன்னிப்பு கோரியது மட்டும் தீர்வாகாது என்கின்ற உண்மையையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இக்கட்டுரை இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையின் கூட்டு அடையாள கட்டமைப்பையும், அது புவிசார் அரசியலில் செலுத்திய செல்வாக்கையும், இக்கட்டமைப்பிற்கு திருத்தந்தையாக வருமுன் ஜோர்ஸ் பெர்கோலியோவின் பங்களிப்பையும் அதனைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியல் கட்டமைப்பில் ஆசியமைய நகர்வையும் அவரது சிறிலங்கா திருப்பயணத்தையும் புவிசார் அரசியல் நோக்கிலிருந்து ஆய்வுக்கு உட்படுத்துகின்றது. இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையும் புவிசார் அரசியலும் திருத்தந்தை ஆறாவது அலெக்சாண்டரின் (1472-1503) ஆணை, Inter Cantera Divine பூகோளத்தை இரு துருவங்களாக்கியது. ஒரு துருவம் ஸ்பெயினிற்கும், மறு துருவம் போத்துக்கல்லுக்கும் வழங்கப்பட்டது. இவ் ஆணை ஐரோப்பிய கிறிஸ்தவ காலனித்துவத்திற்கு சமய/ சட்ட வலுவை வழங்கியது என்றால் மிகையாகாது. இவ்விரண்டு துருவங்களையும் கத்தோலிக்க திருச்சபையே ஒருங்கிணைத்தது. பேரரசுக்கட்டமைப்புகளைக் கடந்து கத்தோலிக்கர்களை ஒருங்கிணைக்கின்ற வலுவை திருச்சபை கொண்டிருந்தது. பின் – காலனித்துவ அரசியல் வரலாற்றில் புதிய அரசுகளின் தோற்றம் உருவானதை அரசியல் வரலாறு ஆவணப்படுத்தியுள்ளது. இவ் அரசியல் சூழலில் மதச்சார்பற்ற உலகியல் வாதத்தை முன்வைத்து ஒரு அரசியல் கருத்தியல் வேகமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் அரசும், மதமும் வெவ்வேறானது என்ற பிரிப்பு கட்டமைக்கப்பட்டது. ஆனால், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கத்தோலிக்க திருச்சபை “மதச்சார்பற்ற அரசு” கோரிக்கைக்கூடாக அதாவது இறையியல் கோட்பாட்டுத் தன்மையில் விட்டுக்கொடுப்பிற்கு உடன்படாமல் அதன் அரசாங்கத் தன்மையில் நெகிழ்வுத்தன்மையைக் கடைப்பிடித்து தனது அரசியல் வலுவைப் பயன்படுத்திக் கொண்டே வந்ததெனலாம். இதனது ஒரு அலகாக அல்லது உத்தியாக “இலத்தீன் அமெரிக்க மயமாக்கம்” அறிமுகப்படுத்தப்பட்டு, அது தேச – அரசுகளைக் கடந்த அடையாளத்திற்கூடாக மக்களை ஒன்றிணைத்தது. அதை ஓர் புவிசார் அரசியல் அலகாக அங்கீகரிப்பதன் மூலம் பெருநிலப்பரப்பிற்குரிய கண்டத்திற்குரிய தோற்றுவாயாக பரிணமித்தது. அமெரிக்க கண்டமயமாக்கலுக்குள் இலத்தீன் அமெரிக்கா புவிசார்ந்து உள்வாங்கப்பட்டாலும் அது தனது தனித்துவத்தை தனக்குரிய இலத்தீன் அமெரிக்கமயமாக்கலுக்கூடான அடையாளத்தினூடு தக்கவைத்துக் கொண்டது. அரசியல் ரீதியாக இலத்தீன் அமெரிக்க திருச்சபை என்கின்ற கூட்டு, தேச – அரசுகளைக் கடந்து கூட்டு குழுமமான ஓர் அரசியல் வலுவாக கட்டமைக்கப்படத் தொடங்கியது, அதுவே பின்னர் புவிசார் அரசியலில் மிகவும் அரசியல் செல்வாக்கான அங்கமாகியது. அடித்தள மக்கள் தொடக்கம் அரசியல் கொள்கை உருவாக்கம் வரைக்கும் இதனது செல்வாக்கை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலத்தீன் அமெரிக்க மயமாக்கம் மதத்தை கடந்து அந்த நிலப்பரப்பில் வாழுகின்ற அனைவருக்கும் புதிய அடையாளத்தையும், பரந்த குழுமத்தைச் சேர்ந்த ‘கூட்டு’ உணர்வையும் ஒருசேரக் குவித்து, ‘ஹிஸ்பானிக்’ அடையாளத்தை ஊக்குவித்து, தனித்தன்மையை உறுதியாக உருவாக்க வழிவகுத்தது. மேற்குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக பல்வேறு இயக்கங்கள் உருவானதை அவதானிக்க முடிகின்றது. “ஹிஸ்பானிக்” அடையாள வலுவாக்கத்திலும், முன்னெடுப்பிலும் இலத்தீன் அமெரிக்க திருச்சபை மிக முற்போக்குள்ள நிலையை கடைப்பிடித்ததோடு, சமூக மறுசீரமைப்பிற்கும் வழிகோலியது. கருத்தியல் கட்டமைப்புக்கும் அதை அகவயப்படுத்துவதற்குமான செயன்முறைக்குமிடையே அதிக இடைவெளி இருந்ததாகத் தெரியவில்லை. புதிய அடையாள ஏற்பை வலியுறுத்தி உருவான அமைப்புக்கள், காலனித்துவத்தை, பேரரசுக்கட்டமைப்பை, ஏகாதிபத்தியத்தை, பொருளாதாரச் சுரண்டலை, கட்டமைக்கப்பட்ட ஏழ்மை போன்றவற்றிற்கெதிராக போராடுகின்ற சூழலை உருவாக்கியது மட்டுமல்லாது; விளிம்புநிலை, தன்னுணர்வு, மாற்று “மூன்றாம் வழி”, அபிவிருத்தியடையாத வகையினை கட்டமைத்து, அபிவிருத்தியடையாத கூட்டை நோக்கி பயணிக்க ஏதுவாகியது. மூன்றாம் வழியான இலத்தீன் அமெரிக்க ‘அபிவிருத்தி’ உத்திக்கூடாக நகருவதற்கு காரணமாக அப்போதைய பூகோள அரசியல் சூழல் இருந்தது. அமெரிக்கா முதலாளித்துவத்தையும், சோவியத் ஒன்றியம் கம்யூனிசத்தையும் கையிலெடுத்து இருதுருவ பூகோள ஒழுங்கை கட்டமைத்தது. இவையிரண்டிற்குமிடையேயான மாற்றாக “மூன்றாம் வழி” கட்டமைக்கப்பட்டது. Justificialist என்கின்ற சமூக செயற்திட்டம் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினை வழங்கியிருந்தது. இக்காலத்தில் எழுந்த அனைத்து புரட்சிகர சமூகமாற்ற செயற்பாடுகளோடும் திருச்சபைத் தன்னை இணைத்திருந்தது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலத்தீன் அமெரிக்க திருச்சபை, அடிப்படையில் மாற்றம் தேவை எனக் கருதி பண்டுங் மாநாட்டிற்கு இணையான (Bandung Conference) பிராந்திய மாநாட்டு முன்னெடுப்புக்களை நோக்கி நகர்த்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் வலிந்து தள்ளப்பட்டது. திருச்சபை ஐரோப்பிய மையவாதத்தைக் கொண்டது என விழித்தெழுந்த இலத்தீன் அமெரிக்க கூட்டு உளவியல் பிரக்ஞை ஐரோப்பிய – மையவாத நீக்கத்தை வலுவாக ஆதரித்து, விளிம்புநிலை மைய திருச்சபை கட்டமைக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி அதற்கான வழிவரைபடத்தை தயாரித்துக் கொண்டதை அதன் பின்னர் வெளிவந்த மாநாட்டு ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் தொகைப் பெருக்கமும் அவர்கள் எதிர்நோக்கிய அரசியல் யதார்த்தமும், ஏழை மக்களின் வறுமையும், எண்ணிக்கையில் குறைந்த மேட்டுக்குடியினரின் அரசியல், அதிகார பொருளாதார சொத்துக் குவிவும் புதிய வழிமுறைகளைத் திறந்துவிட்டது. “மூன்றாம் உலக” (Third World) கருத்தியலின் உருவாக்கம் இவ் அரசியல் வரலாற்றுச் சூழமைவில்தான் வலுவடையத் தொடங்கியது. ஜோர்ஜ் பெர்கோலியோ (பின்னாளில் திருத்தந்தை பிரான்சிஸ்) – விளிம்பிலிருந்து யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளல் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் இலத்தீன் அமெரிக்க திருச்சபை தனக்கான புவிசார் அரசியல் கொள்கைகளை மிகத் தெளிவாக வரைந்து அதற்கான உத்திகளைத் தேர்ந்தெடுத்து நகரத் தொடங்கியது. பெருநிலப்பரப்பிற்குரிய/ கண்டத்திற்குரிய அகண்ட அடையாளம் இதற்கு அடித்தளமிட்டது. இதன் முன்னணியில் Juan Diego de Guadalupe குழுமம் மிக முக்கிய பங்காற்றியது. அக்குழுவின் முக்கிய செயற்குழு உறுப்பினராக ஜோர்ஜ் பெர்கோலியா இடம்பெற்றிருந்தார். இக்குழுமம் “பெர்கோலியா ஆய்வறிஞர்குழு” என்றும் அறியப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பெருநிலப்பரப்புவாதம் (Continentalism) அல்லது தலைநிலப்பகுதிவாதம் புவிசார் அரசியல் ஒரு கருத்தியலாகவே உருவாக்கப்பட்டு, இலத்தீன் அமெரிக்க தேசத்திற்கான ஒருங்கிணைக்கும் கருவியாக உபயோகப்படுத்தப்பட்டது. பெர்கோலியாவின் குழு பெருநிலப்பரப்புவாதக் கருத்தியலிற்கான அடிப்படைகளைக் கட்டமைத்தது மட்டுமல்லாது, இலத்தீன் அமெரிக்க திருச்சபை, பூகோளத் திருச்சபையில் எவ்வாறு தனித்துவ பங்களிப்பை வழங்க முடியும் என்கின்ற வழிவரைபடத்தையும் முன்னிறுத்தியது. இதில் குறிப்பாக Aparecida ஆவணம் திருச்சபையின் புவிசார் அரசியலின் போக்கை குறிப்பிடுகின்றது. உதாரணத்திற்கு வெளிநாட்டுக் கொள்கை இலத்தீன் அமெரிக்க ஒருங்கிணைப்பில் எவ்வாறு இருக்க வேண்டும் என அடிக்கோடிடுகிறது. ஒருங்கிணைவு வேறுபாட்டை ஊக்குவிக்கின்றது என்ற ஏற்பு ஏக பண்பாட்டை ஏற்றுக் கொள்வதல்ல. மேற்குறிப்பிட்டதன் ஒரு அலகாகவே ”பொதுமக்கள் இறையியலை” நோக்க வேண்டும். பொதுமக்கள் இறையியல் மேய்ப்புப்பணி அரசாங்கத் தன்மையையும் (Pastoral Governmentality) புவிசார் அரசியலையும் ஒரே சட்டகத்திற்குள்ளிருந்து அணுக முயற்சிக்கின்றது. இவற்றிற்கு அடிப்படையான கருத்தியலாக மக்கள்-தேசம் (People Nation) இருப்பதோடல்லாமல், மக்களை ஒருங்கிணைக்கின்ற வெளியை உருவாக்கி சுயநிர்ணய உரிமைக்கான விருப்புரிமையை வழங்குகின்றது. இது விளிம்புமைய கட்டமைப்பை மாற்றாக முன்வைக்கின்றது. திருத்தந்தை பிரான்சிஸின் வரலாற்றுப் பரிணாமம் விளிம்புமைய புவிசார் அரசியலை உள்ளடக்கமாகக் கொண்டது. திருத்தந்தை பிரான்சிஸ் ஐரோப்பிய விரிவாக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு நபராக இருந்ததை அவதானிக்க முடிவதோடு பல்வகைத் தன்மையை யதார்த்தமானதாக, இயற்கையானதாக அங்கீகரித்து; ஐரோப்பிய அல்லது ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்புகளின் ஏக பண்பாட்டு அரசியல் திட்டத்திற்கு ஒவ்வாததாக அதை மறுதலிக்கின்ற அல்லது அதற்கு மாற்றான ஒரு கருத்தியலை, ஒழுங்கை முன்னிறுத்தி நகர்வது துணிகரமிக்கது. இச்செயற்திட்டம் மக்களை மக்களாகவே பார்க்கின்ற, அவர்களது கூட்டு இருப்பை உறுதி செய்வதாக அமைகின்றது. ஐரோப்பிய – மைய பார்வையை/ ஐரோப்பிய/ மேற்குலக மையத்திற்கூடாக நோக்குகின்ற பார்வைப் பரப்பு இல்லாது போதல் என்பது ஏறக்குறைய ஏகாதிபத்திய பேரரசின் அலகுகளை இல்லாமற் செய்தலாகும். மூன்றாவது வழியூடாக அணுகுமுறையை மற்றமைகளை (Other) மையப்படுத்தி அவர்களை வரலாற்றின் கதாபாத்திரத்திரங்களாக உருவகித்து விடுதலையை உள்ளீடாகக் கொண்ட அணுகுமுறையை எல்லாவற்றிலும் விரிவுபடுத்துகின்றது. திருத்தந்தை தற்போதைய அரசியல் உலக ஒழுங்கை கண்டித்திருக்கின்றார். ஜோன் ஜக்கென்பெறி குறிப்பிடுகின்ற “மூன்று உலகங்கள்”; மேற்கு, கிழக்கு, தெற்கு, உலக ஒழுங்கை வடிவமைக்கையில் எழுகின்ற போட்டி. இதில் குறிப்பிடப்படும் மேற்குலகு – ஐக்கிய அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் உள்ளடக்கியது. கிழைத்தேசம் – சீனாவையும் ரஷ்யாவையும், தெற்குலகு மேற்குலகல்லாத அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைக் குறிக்கின்றது. மேற்குலகு நவதாராளவாத ஜனநாயகத்தையும் கீழைத்தேசம், மேற்குலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமத்துவ இறைமையை, தனித்துவத்தை, பல்வகைமையை, அபிவிருத்தியை மனித உரிமையை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. இவ்விரண்டுமே ஏகாதிபத்திய அதிகாரத்திற்கான போட்டியை தெற்கு நோக்கியும், தெற்கில் மேலும் பரவலாக்குவதற்கு முயற்சிக்கின்றது. தற்போதைய உலக ஒழுங்கு மிகை ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருப்பதை அவதானிக்கும் எவரும் அவற்றை கண்டிக்கத் தவற மாட்டார்கள். திருத்தந்தை பிரான்சிஸும் தற்போதைய உலக ஒழுங்கை கண்டித்திருக்கின்றார். அவர் கண்டிப்பதற்குரிய காரணத்தின் வரலாற்றுப் பின்னணி பற்றிய தெளிவு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. திருத்ததந்தை பிரான்சிஸ் தெற்குலகில் இருந்தே (ஆர்ஜென்டீனா) உதயமாகிறார். ஐரோப்பிய மைய திருச்சபைக்கு இது பெரும் சவாலாக இருந்திருக்கலாம். தனது பதவிக்காலத்தில் திருச்சபையை விளிம்பு மையத்தை நோக்கி நகர்த்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தமை அவரது நியமனங்கள் எழுத்துக்கள் உரைகள், பயணங்களின் மூலம் தெரியவந்தன. அதேபோல் உலக யதார்த்தத்தையும் விளிம்புநிலை மையத்திலிருந்து நோக்க வேண்டிய தேவையை கற்பிதமாக அறிமுகப்படுத்தியிருப்பது பிரளய மாற்றமாகக் கருத வேண்டியிருக்கும். விளிம்புநிலை மைய நோக்கு நிலை, ஏக பார்வையைத் தவிர்த்து பல்வகைமையை யதார்த்தமாக ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாது, வேறுபாட்டை அச்சத்திற்குரியதாகக் கருதாமல் பாராட்டப்பட வேண்டியதாக அணுகுகின்றது. இவ்வாறான அணுகுமுறை காலனித்துவம், நவதாராளவாத முதலாளித்துவம் உருவாக்கும் மற்றைமைகளை(Others) கதாநாயகர்களாக அல்லது திருச்சபையின் மையமாக மாற்றுவது மேற்குலகு பார்க்க விரும்பும் யதார்த்தத்தையும், யதார்த்தத்தை ஆய்வுமுறைக்குட்படுத்தும் முறையியலையும் முற்றிலும் கேள்விக்குட்படுத்துகின்றது. இவ்வாறான முறையியலை அங்கீகரிப்பது மாற்றம் விளிம்பு நிலையிலிருந்து மட்டுமே வர முடியும் என்ற பட்டறிவிலிருந்து எழுகின்றது. அப்பட்டறிவு கோட்பாட்டு மையத்திலிருந்து விலகி மக்கள் மையத்திலிருந்து புறப்படுகின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் இம்முறையியலை புவிசார் அரசியலுக்கும், இறையியலுக்கும் அவசியமானதாக மாற்றினார். புவிசார் அரசியலில் ஆசிய – மையத்தின் முக்கியத்துவம் திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியலில் ஆசியா இரு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றதாக Enrico Beltramini குறிப்பிடுகின்றார். முதலாவது, ஆசியாவின் அரசியல், சமூக, பொருளாதார, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளல். அதாவது, கட்டமைக்கப்பட்ட அநீதியின் விளைவையும் அதிலிருந்து மீளெழுந்த முயலும் மக்களின் வாழ்வும், அதேநேரத்தில் மேற்குலகின் அசிரத்தையும் உள்ளடக்கும். இரண்டாவது ஆசிய மையம் மேற்குலக ஏகாதிபத்தியத்தையும் மேற்குலக பேரரசுக் கட்டமைப்பையும் கேள்விக்குட்படுத்துகின்றது. விளிம்புமையத்தை நோக்கி நகர்தலிலே ஆசிய மையம் முக்கியத்துவம் பெறுகின்றது. திருச்சபையின் மையம் விளிம்பு நிலையில் இருக்க முடியுமே தவிர, மேற்குலக மையத்திலே அல்ல என்பது அவரது திடமான நம்பிக்கை. இந்நகர்வு ஆசிய பல்வகைத்தன்மையை அங்கீகரிப்பது மட்டுமல்ல மேற்குலக இறையியல் அணுகுமுறையை அல்லது அறிவுசார் முறையியலை கேள்விக்குட்படுத்தி பூர்வீக முறையியலை, ஏற்கனவே ஆசியாவில் வெவ்வேறு நாகரீக மரபுகளுக்கூடாக வரும் முறையியலை ஊக்கப்படுத்துவதாகும். இம்முறையியல் அணுகுமுறை, விடுதலை, கிறிஸ்தவத்திலிருந்து மட்டும்தான் வரமுடியும் என்ற காலனித்துவ ஏக வழியை விடுத்து, ஆசியாவில் உள்ள பல் மதங்கள் கூறும் விடுதலை முறைமையையும் ஏற்றுக்கொள்வதாகும். இம்முறையியல் மேற்குலகு கட்டமைக்க முயலும் ஏக பேரரசுக் கட்டமைப்பைக் கட்டவிழ்க்கின்றது மட்டுமல்லாது, ஆசியாவை மேற்குலகு அடிமைப் பண்பாக கருதுகின்ற, அல்லது தனது நலன்களுக்காக மட்டுமே பயன்படுத்துகின்ற செல்நெறியை உடைக்கின்றது. இதன் மூலம் மேற்குலகின் வீழ்ச்சியையும், கீழைத்தேசத்தின் எழுச்சியையும் மறைமுகமாக சுட்டுவதாக அமையும். திருத்தந்தை பிரான்சிஸின் அடிக்கடி கோடிட்டுக் காட்டப்படும் வாசகமாக இருப்பது: “யதார்த்தத்தை மையத்திலிருந்து நோக்கவதைவிட விளிம்பிலிருந்து பார்ப்பது அதிக தெளிவைத் தரும்.” காலனித்துவத்திலிருந்து மீளெழும் நாடுகளில் காலனித்துவத்தின் எச்சங்கள் தொடர்ந்தும் காலனித்துவத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும். அவ்வாறான தன்மையை Coloniality என்ற பதத்தினூடாக விளங்கிக் கொள்ள முடியும். Coloniality என்பதை காலனித்துவத் தன்மை என்று மொழிபெயர்த்தால், மேற்குலக அறிவு உருவாக்கம் மிக முக்கியம் பெறுகின்றது. மேற்குலக அறிவுக் கட்டமைப்பு அதற்கான முறையியலை கொண்டுள்ளது. அதையே அது ஏனையவற்றிலும் பார்க்க அதிக தரமுள்ளதாக கட்டமைத்து தர உயர்வாக வெளிக்காட்டுகின்றது. இம்முறையியல் ஏகாதியத்தியத்தை தக்கவைப்பதற்குரிய உத்தியாகப் பயன்படுத்தப்படுவதை யாரும் மறுக்க முடியாது. ஆசியாவை மையமாக நகர்த்தல், மேற்குலக அறிவுக் கட்டமைப்பு முறையியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இவ்வாறான செயற்திட்டம் மேற்குலக – கீழைத்தேச உரசல்களுக்கும், இறுக்கத்திற்கும் வழிகோலும் என்பது அறியாததல்ல. “சீனாவின் எழுச்சியைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்ற திருத்தந்தையின் கூற்றும் அதைத் தொடர்ந்த கருத்துரையும், “மேற்குலகு கீழைத்தேசம், சீனா இவையெல்லாமே அமைதிச் சமநிலையைப் பேணுவதற்குரிய கொள்திறனையும் செயற்திறனையும் கொண்டிருக்கின்றன. நாங்கள் இதனை அடைவதற்கான உத்தியாக உரையாடலை பயன்படுத்த முடியும். கலந்துரையாடலைத் தவிர வேறு வழி கிடையாது.” அவர் சீனாவை தனது நண்பனாக கருதுவதாகவும் தொடர்ந்தும் உறவுகளையும் தொடர்புகளையும் பேண விரும்புவதாக காட்டிய அறிகுறி திருத்தந்தை பிரான்சிஸ் தூரநோக்கோடு கட்டமைக்க விரும்பிய பல்துருவ உலக ஒழுங்கிலிருந்தே அவதானிக்கப்பட வேண்டும். இவ்வாறான அவதானிப்பு மேற்குலகு, சீனாவை அணுகும் விதத்திலிருந்து – வெறுமனே பொருளாதார அரசியல் வல்லரசாக அல்லாமல் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்டிருக்கின்றதை வலுப்படுத்தி சமத்துவத்தை ஆழப்படுத்துவதை சுட்டி நிற்கின்றது. வத்திக்கான் சர்வதேச தொடர்புகள் சார்ந்தும் புவிசார் அரசியல் சார்ந்தும் செப்ரெம்பர் 22, 2018 இல் (வத்திக்கானுக்கும் சீனாவுக்குமிடையில்) கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை ஒரு மைக்கல் ஆகும். இந்த உடன்படிக்கைக்கு எதிராக தாய்வான் போர்க்கொடி தூக்கியதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. தாய்வானுக்கும் ஐக்கிய அமெரிக்காவுமிடையிலான வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் இருக்கின்ற உறவுகளையும் அவதானிப்பது சிறந்தது. ஒரு சில ஆய்வாளர்கள் Brics , Brics Plus இன் எழுச்சியையும் இதே கோணத்தில் பார்க்க விரும்புவர். மேற்கூறப்பட்டவற்றின் எழுச்சிக்கும் திருத்தந்தை பிரான்சிஸுக்குமிடையேயான நேரடித் தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாவிட்டாலும் திருத்தந்தை பிரான்சிஸ் Brics Plus இன் எழுச்சியை மாற்று உலக ஒழுங்கிற்கான அடிப்படையாக பார்க்கும் போது மகிழ்ச்சியடைந்திருக்கலாம் என்பது சிலரது கருத்து. திருத்தந்தை பிரான்சிஸின் பயணங்களையும் அவர் கட்டமைக்க விரும்பிய பல்துருவ உலக ஒழுங்குக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுவது இலகுவாயிருக்கும். திருத்தந்தையின் பயணங்களை புவிசார் அரசியல் கோணத்திலிருந்து ஆய்வு செய்பவர்கள் முன்னிருந்த திருத்தந்தையர்களின் பயணங்களிற்கும் பிரான்சிஸின் பயணங்களிற்குமிடையேயான இடைவெளியை அவதானிக்கத் தவறுவதில்லை. அவற்றில் ஆசியாவை நோக்கிய பயணங்கள் மிக அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த வருடம் செப்ரெம்பர் மாதத்தில் 12 நாட்களாக தென்கிழக்காசியாவில் இந்தோனேசியா, பப்புவா, கியூகிளி, கிழக்கு தீமோர், சிங்கப்பூர் பயணங்கள் மிக அவதானிப்பு பெற்றவையாகக் கருதப்படுகின்றது. சிறிலங்காப் பயணம் திருத்தந்தை பிரான்சிஸ் 2015 இல் சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். சிறிலங்காவின் ஒற்றையாட்சி ஜனநாயக மாதிரி, மையத்தில் அதீத அதிகாரத்தைக் குவித்து வைத்துள்ளது. கொழும்பு சிறிலங்காவின் அதிகார மையமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. போரின் பின்னரான வரலாற்றுக் காலப்பகுதியில் ஒரு சில அரசியல் தலைவர்களைத் தவிர வேறு எவருமே வடக்கிற்குப் பயணித்ததில்லை. அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ பயணங்களும் பார்வையிடலும் கொழும்பை மையப்படுத்தியதாக வரையறைப்படுத்தப்பட்டிருக்கும். கொழும்பைத் தாண்டினால் அது பௌத்த விகாரையை பார்வையிடுவதாக அமைந்திருக்கும். கொழும்பு மையத்திற்கும், பௌத்த விகாரைக்குமான தொடர்புகள் சிறிலங்காவின் சிங்கள – பௌத்த அடையாளத்தை வலியுறுத்தி ஆழப்படுத்தப்படுவதற்கான முயற்சிகளாகவே இந்த இணைப்புக்களையும் இணைப்புக்களிலுள்ள இடைவெளிகளையும் நோக்க வேண்டிய அவசியம் உள்ளது. சிறிலங்காவின் அரசியல் அதிகாரம் மட்டும் கொழும்பில் மையப்படுத்தப்படவில்லை. சிங்கள கத்தோலிக்க மையமும் கொழும்பில்தான் மையப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவின் ஒற்றையாட்சி சொல்லாடலிற்குள் சிங்கள கத்தோலிக்க திருச்சபையின் உள்வாங்கப்பட்டது என்பதற்கான வரலாற்று சான்றுகள் நிறையவே உள்ளன. ஆனால் அவை ஒரு ஆய்வு நூல் ஆக இன்னும் ஒருங்கிணைக்கப்படவில்லை. ஒரு சில உதாரணங்களாக சிங்கள கத்தோலிக்க திருச்சபையின் ஒரு நாடு ஒரு தேசம் என்கின்ற ஏற்பு. நீர்கொழும்பு, சிலாபம், கரையோரங்களிலிருந்து தமிழ்ப்பாடசாலைகள் சிங்கள மயமாவதற்கு சிங்கள கத்தோலிக்க திருச்சபையின் பங்கு மிக முக்கியமானது. 2015 இற்கு முன்னர் வருகை தந்த திருத்தந்தையர்கள் கொழும்பை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தனர். திருத்தந்தையர்களின் கொழும்பை மையப்படுத்திய உத்தியாகபூர்வ பயணங்கள், சிங்கள கத்தோலிக்கர்கள் மத்தியில் சிறிலங்காவின் ஒற்றையாட்சித் தன்மையை இன்னும் அதிகமாக வலுப்படுத்தியது எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்க முடியாது. 2015 திருத்தந்தையின் பயணம் போரின் பின்னர் தற்போதைய சிங்கள பௌத்த அரசின் அடிப்படை கருத்தியலான சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் அப்போது பதவியிலிருந்தவர்களுக்கு தமிழ் இன அழிப்பின் பின்னரான அரசியல் சூழ்நிலையை சமநிலைப்படுத்துவதற்கு திருத்தந்தையின் பயணத்தை பயன்படுத்தியிருக்கலாம்/ பயன்படுத்தப்பட்டது. இது பற்றி வடக்கு கிழக்கிலிருந்தே தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் இப்பயணத்தின் ஆபத்தை வத்திக்கான பிரதிநிதியூடாக தெளிவுபடுத்தியிருந்தனர். தமிழ் இன அழிப்பு உச்சந்தொட்ட முள்ளிவாய்க்காலுக்கும் வருகைதர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலுக்கான வருகை வரலாற்றில் இடம்பெற்றிருந்தால் அதை தமிழ் இன அழிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக இருக்கும் என்பதை அறிந்த கொழும்பு மைய கத்தோலிக்கத் திருச்சபை அப்போது அதிகாரத்திலிருந்த மஹிந்த குடும்பத்துடன் இணைந்து நிச்சயமாக தடுத்திருக்க வேண்டும் என்று ஊகிப்பதைத் தவிர வேறு முன்னெண்ணம் கொள்ள முடியாது. அதே கொழும்புமைய திருச்சபைதான் மஹிந்தவையும் அவரது பரிவாரங்களையும் திருத்தந்தையை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தது என்பதை வரலாறு ஆவணப்படுத்தியுள்ளது. அப்போதிருந்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் நெருக்குவார அழைப்பின் பேரிலேயே மடுவிற்கான திருத்தந்தையின் பயணம் அமைந்திருந்ததை மறுக்கவியலாது. திருத்தந்தை அப்போதிருந்த அரசியல் நிலைமையை ஓரளவிற்கு அவரது பட்டறிவிலிருந்து விளங்கிக் கொண்டிருந்தாலும் முழுமையாக விளங்கிக் கொண்டாரா அல்லது அது பற்றிய தெளிவு கொடுக்கப்பட்டதா என்பது தெரியாது. ஆனாலும் புவிசார் அரசியல் சார்ந்தும், திருத்தந்தை கொண்டிருந்த விளிம்புநிலை மைய நம்பிக்கையிலும் மடுப்பயணம் முக்கியம் பெறுகின்றது. மடுப்பயணம் கொழும்புமைய அதிகாரக் குவிப்பை கேள்விக்குட்படுத்தியதோடு விளிம்புநிலை நோக்கி சிறிலங்காத்திருச்சபை நகர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. சிறிலங்காத் திருச்சபை இன ரீதியில் பிளவுபட்டிருப்பது வெள்ளிடைமலை. மடுவிற்கான பயணம் ஒரு வகையில் ஈழத்தமிழ் மைய திருச்சபையின் எழுச்சிக்கான அவசியத்தை கோடிட்டு அங்கீகரித்துக் கொண்டது என்ற உண்மை வரலாற்றுப் பதிவாகியது. தமிழ்த்தேச விடுதலை நோக்கிலிருந்து ஈழத்தமிழ் திருச்சபை எழுச்சி காண வேண்டும் என்கின்ற வேணவா போரின் பின்னான அரசியல் வெளியில் இன்னும் காத்திரமாக வலியுறுத்தப்பட்டது. நீதியை விடுதலையை மையப்படுத்தி ஈழத்தமிழ்த் திருச்சபை எழுச்சி காணவேண்டும் என்கின்ற கனவோடு திருத்தந்தையின் மடுப்பயணம் நிறைவுற்றிருக்கலாம். அருட்தந்தை எழில் இராஜேந்திரம் ### உசாத்துணைகள்: Allen. Jr, John L. ‘BRIC by BRIC, the Foundation for Pope’s Geopolitical Endgame Is Being Laid’. Crux, 27 August 2023. https://cruxnow.com/news-analysis/2023/08/bric-by-bric-the-foundation-for-popes-geopolitical-endgame-is-being-laid/. Barbato, Mariano P. ‘Geopolitics of Papal Traveling: (Re)Constructing a Catholic Landscape in Europe’. Religions 11, no. 10 (October 2020): 525. https://doi.org/10.3390/rel11100525. Beltramini, Dr Enrico. ‘The Church of the Periphery and the Catholic Pivot to the Indo-Pacific’, n.d. Beránek, Ondřej. ‘The Geopolitics of Pope Francis’ Latest Tour’. European Values Center for Security Policy (blog), 16 September 2024. https://europeanvalues.cz/en/the-geopolitics-of-pope-francis-latest-tour/. Ikenberry, G John. ‘Three Worlds: The West, East and South and the Competition to Shape Global Order’. International Affairs 100, no. 1 (8 January 2024): 121–38. https://doi.org/10.1093/ia/iiad284. Kratochvíl, Petr, and Jana Hovorková. ‘Papal Geopolitics: The World According to Urbi et Orbi’. In Modern Papal Diplomacy and Social Teaching in World Affairs. Routledge, 2019. Løland, Ole Jakob. ‘The Political Theology of Pope Francis: Understanding the Latin American Pope’. Routledge & CRC Press. Accessed 22 April 2025. https://www.routledge.com/The-Political-Theology-of-Pope-Francis-Understanding-the-Latin-American-Pope/Loland/p/book/9781032392882. ———. ‘The Solved Conflict: Pope Francis and Liberation Theology’. International Journal of Latin American Religions 5, no. 2 (1 December 2021): 287–314. https://doi.org/10.1007/s41603-021-00137-3. Lynch, Andrew P. ‘A Global Papacy: The International Travels of Pope Francis and Geopolitics’. In Research in the Social Scientific Study of Religion, Volume 30, 258–373. Brill, 2019. https://doi.org/10.1163/9789004416987_022. Mcaleer, Graham James. ‘Aquinas and the Geopolitical Thinking of Pope Francis’. Revista Portuguesa de Filosofia 79, no. 1/2 (2023): 531–48. Puntigliano, Andrés Rivarola. ‘The Geopolitics of the Catholic Church in Latin America’. Territory, Politics, Governance 9, no. 3 (27 May 2021): 455–70. https://doi.org/10.1080/21622671.2019.1687326. Raditio, JB Heru Prakosa and Klaus H. ‘Pope Francis, Power Rivalry and the Global Order’. Accessed 22 April 2025. https://asianews.network/pope-francis-power-rivalry-and-the-global-order/. SJ, Vladimir Pachkov. ‘BRICS Plus: An Alternative to the Current World Order? -’. LA CIVILTÀ CATTOLICA, 29 November 2023. https://www.laciviltacattolica.com/brics-plus-an-alternative-to-the-current-world-order/. Volder, Jan De, ed. The Geopolitics of Pope Francis. 1st edition. Leuven: Peeters, uitgeverij, 2019. https://maatram.org/articles/12043

பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் இறுதி ஆராதனைகள் இன்று!

3 months 1 week ago
திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கிற்காக உலகத் தலைவர்கள் பலர் ரோமை வந்தடைந்தனர் April 26, 2025 12:36 pm திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியைகள் புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில் வத்திக்கான் நகரில் உலகத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கூடியுள்ளனர். ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்கா அல்லது சாண்டா மரியா மாகியோர் தேவாலயத்தில் அவரது திருவுடல் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 க்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கியும் இன்று காலை ரோமை வந்தடைந்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்கிறார். அவர் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். https://oruvan.com/world-leaders-including-zelensky-arrive-in-rome-for-pope-francis-funeral/

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது!

3 months 1 week ago
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது! இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ள மாட்டாது அதுமட்டுமல்ல அவற்றை முழு வீச்சில் எதிர்க்கும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். ஏக்கிய ராஜ்ய முறைமையை இலங்கை தமிழ் அரசு கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதாக அண்மைய தேர்தல் பரப்புரை கூட்டங்களில் எதிர்தரப்பினரால் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒற்றையாட்சியை ஆதரிக்கிறது என்னும் கருத்தை நாம் தெளிவாக மறுத்துள்ள போதும் சிலர் பொது வெளியில் தொடர்ந்து பேசுகின்றனர். முதலில், ஒற்றையாட்சியை ஏனைய அரசியல் கட்சிகள் ஏற்றுநின்ற காலகட்டத்தில் அதனை மறுதலித்து சமஷ்டி முறையான அரசமைப்பை கோரி உருவாக்கப் பட்டதே , சஷ்டிக் கட்சி என்றும் அழைக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவோ ,அவரது கட்சி சார்ந்த அமைச்சர்களோ அல்லது ஜே வீ பீ கட்சியின் முக்கியர்த்தர் எவருமோ ” ஏக்கிய ராஜ்ய ” என்ற சொற்கள் அடங்கிய அரசியல் அமைப்பு வரைவில் இருந்து புதிய வரைபை தொடரலாம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. அப்படிக் கூறி இருந்தால் நாம் அதனை ஏற்பதாகக் கூறியதாக சொல்பவர்கள் அவர்கள் எங்கே எப்பொழுது, கூறினார்கள் என்பதையும் நாம் எப்பொழுது எங்கே அவ்வாறு ஏற்பதாக கூறினோம் என்பதையும் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து பொத்தம் பொதுவாக சகட்டு மேனிக்கு பேசுவது பொருத்தம் அற்றதும் அபத்தமானதும் ஆகும். ஏக்கிய ராஜ்ய என்ற சொற்பதம் பற்றி 2019 ஆம் ஆண்டுக்குப் பின்பு சிங்களவர் எவரும் பேசுவது இல்லை அது அரசாங்கத்தினாலும் எம்மாலும் எப்போதோ கைவிடப்பட்ட ஒன்று. ஆனால் இங்கே மட்டும் இல்லாத ஒரு ஊருக்கு பெயர் வைப்பது போன்று இதனை காழ்ப்புணர்வு காரணமாக தமிழரசுக் கட்சியின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் கட்சியின் மிக சிரேஸ்ர நிலையில் உள்ளவன் என்ற வகையிலும் கட்சியின் கொள்கை வகுத்தலில் முக்கியபங்கு வகிப்பவன் என்ற வகையிலும் எமது கட்சி ஒற்றையாட்சி முறைமையையோ ” ஏக்கிய ராஜ்ய ” என்ற முறைமையையோ ஏற்றுக்கொள்ள மாட்டாது மட்டுமல்ல அவற்றை முழு வீச்சில் எதிர்க்கும் என்பதையும் தெரிவித்துகொள்கின்றேன். அவ்வாறு ஏதாவது முன்மொழிவு அரசினால் முன்வைக்கப்பட்டால் அதனை எமது எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர்வாதம் செய்து எதிர்த்து வாக்களிப்பார்கள் என்றும் ஏற்கெனவே நான் கூறி இருக்கிறேன் இதனை மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்தக் கருத்தை தெரிவிக்கும் பொறுப்பும் உரிமையும் எனக்கு உண்டு என்பதையும் திடமாக வலியுறுத்துகிறேன். ஒருவேளை நான் ஒரு மேட்டுக்குடி சாராதவன் என்பதால் யாரவது மேட்டுக்குடி சார்ந்தவர்தான் சொல்ல வேண்டும் என நினைக்கிறார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு எல்லாம் நான் கூறிக்கொள்வது இலங்கைத் தமிழரசுக் கட்சி சாமானிய மக்களுக்கானது. அவர்களில் ஒருவன் நான் ஆயினும் எந்த மேட்டுக்குடியினர்க்கும் குறைந்தவனும் அல்ல,நீங்கள் எதிர்பார்ப்பது போல இனிமேல் எந்த மேட்டுக்குடி மேலாதிக்ககாரரும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இறக்குமதி செய்யப்பட மாட்டார்கள் என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்கிறேன் என்றார். https://akkinikkunchu.com/?p=322181

கிழக்கு பல்கலையில் நிதி மோசடி தொடர்பாக விசாரணை; உயர்கல்வி அமைச்சு அறிவுறுத்தல்..!

3 months 1 week ago
கிழக்கு பல்கலையில் நிதி மோசடி தொடர்பாக விசாரணை; உயர்கல்வி அமைச்சு அறிவுறுத்தல்..! கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலையடுத்து உயர்கல்வி அமைச்சு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கடித மூலம் அறிவித்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிய மாகாபொல புலமைப்பரிசில், விளையாட்டுத்துறை, ஆய்வு மகாநாடுகள், மற்றும் அபிவிருத்திகளில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் விரிவுரையாளர்கள் ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்திருந்தனர். இந்த முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி செயலகம் உயர்கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியதையடுத்து இந்த நிதி மோசடி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவிற்கு உயர்கல்வி அமைச்சு கோரியுள்ளதையடுத்து இது தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . https://akkinikkunchu.com/?p=322154

வடக்கில் நடக்குக்கும் இணைய குற்றங்களுக்கு வடக்கிலேயே தீர்வு

3 months 1 week ago
வடக்கில் நடக்குக்கும் இணைய குற்றங்களுக்கு வடக்கிலேயே தீர்வு adminApril 26, 2025 சமூக வலைத்தளம் உள்ளிட்ட இணையத்தளங்களில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு இனி விரைவான தீர்வை வடக்கு மாகாண மக்கள் பெற முடியும் என பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். வடக்கு மாகாணத்திற்கான கணிணி குற்றப் புலனாய்வுப் பிரிவு யாழ்ப்பாணம் காவல்துறை தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பதில் காவல்துறை மா அதிபர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்படும் பணம் சார்ந்த பிரச்சினைகள், கணக்குகளை முடக்குதல், சமூக வலைத்தள அவதூறுகள், சமூக வலைத்தளங்கள் ஊடான பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட முறைப்பாடுகளை கொழும்புக்கு சென்று முறையிட்டு அதற்கான தீர்வுகளை பெற நீண்ட காலதாமதம் ஆகும். ஆகவே வடபகுதி மக்களின் சிரமத்தை தவிக்கும் வகையில் வடக்கு மாகாணத்திலேயே இந்த கணிணி குற்றப் புலனாய்வுப் பிரிவு கிளை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் மாகாண மட்டத்திலிருந்த குறித்த சேவை தற்போது இனி வரும் காலங்களில் மாவட்ட மட்டங்களுக்கு விரிவாக்கப்படும். ஆகவே பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி இணைய குற்றங்களுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் – என்றார். குறித்த நிகழ்வில் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறைமா அதிபர் அசங்க கரவிட்ட, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் திலக் தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், காவல் நிலைய பொறுப்பதிகாரிகள், காவல்துறை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2025/214716/

எஸ். ஜே.வி. செல்வநாயகம்; மதத்தால் கிறிஸ்தவராகவும் கலாசாரத்தால் இந்துவாகவும் விளங்கிய 'காந்தியவாத' தமிழ் அரசியல் தலைவர் (பகுதி - 1)

3 months 1 week ago
இது கொஞ்சம் ஓவரான கற்பனை மட்டுமல்ல இஸ்லாமியர்களின் தனித்துவத்தை அழிக்கும் செயல் 🤣 அன்று தந்தை செல்வாக்கு டி.எஸ்.சேனநாயக்கா ..தந்தை செல்வா மறுத்துவிட்ட்டார் இன்று சந்திரசேகராவுக்கு அனுரா ...சந்திரா கவ்விக்கொண்டார்

நாட்டில் அதிகரித்து வரும் சிக்கன்குன்யா; மக்களே எச்சரிக்கை

3 months 1 week ago
யாழில். நால்வருக்கு சிக்கன்குனியா adminApril 26, 2025 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நால்வர் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கூடுதலான அவதானத்தைச் செலுத்தியுள்ளோம் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/214714/
Checked
Sun, 08/10/2025 - 03:58
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed