3 months 2 weeks ago
அட என்னை ஒரு இடத்தில் நிக்க விடாமல் மேலையும் கீளையும் துக்கி போடுறாங்களப்பா.
3 months 2 weeks ago
அதன் நவீனமயப்படுத்தலை யார் எப்படி பார்த்து உறுதிப்படுத்துவதாம் ? பாட்டி எப்போதும்போல் முகட்டை பார்த்துக்கொண்டிருக்கிறார். இவர்கள்? ஹா ஹா அவர்களும் அதேதான், எப்போதும்போல். மரண வீடாக இருந்தாலும் இதுதான் நடக்கிறது.
3 months 2 weeks ago
நல்லது நடந்தால் மகிழ்ச்சி.
3 months 2 weeks ago
ஓ அது தான் சத்தமே இல்லாமல் இருந்தீர்களோ? ஓஓஓஓஓஓஓஓஓஓஓ அறப் படித்தால் கூழ் பானைக்குள் விழுகிறதென்பது இது தானோ? நல்ல காலம் நான் படிக்கலை.
3 months 2 weeks ago
நல்லாச் சொன்னீங்க போங்க. அவரிட்ட கிளி, குருவி, எறும்பு ஒன்றும் இல்லை. பார்ப்போம் எவ்வளவு பாய்ச்சல் காட்டப்போறார் என்று.
3 months 2 weeks ago
அதாவது காணி விடுவிக்கப்பட்டது என செய்தியை பிரபலமாக்கி ஜனாதிபதியும்,பிரதமரும்,அமைசார் சந்திரா குழுவினரும் மக்களிடம் வாக்கு கேட்பது ...ஆனால் மக்கள் அந்த காணிகளை உபயோகபடுத்த முடியாத சூழ்நிலை உள்ளது என ஆளுனர் அறிக்கை விடுவது மட்டும் சின்ன செய்தியாக இருக்கிறது மொத்தத்தில் காணி விடுவித்தாச்சு ஆனால் நீங்கள் வர்வேண்டாம்
3 months 2 weeks ago
சரியாக அடித்து ஆடுகிறீர்கள். அப்பிடியே தொடருங்கோ. விடக்கூடாது. எனக்கு இப்ப ஏழாம் கட்டம். எங்க போய் நிக்குமோ தெரியேல.
3 months 2 weeks ago
1983 ஆம் ஆண்டு ஜூலை இனவழிப்பு கலவரத்தின் பொழுது, வாகனத்தில் சிங்கள உறவினருடன் மொறட்டுவாவிலிருந்து வெள்ளவத்தைக்கு செல்லும் பொழுது "பாள்தீய கியன்ட" என இனவாதிகள் கத்தியை காட்டி கேட்க அருகில் இருந்த சிங்கள உறவினர் சரியாக உச்சரித்த காராணத்தால் தப்பி பிழைத்து இனறு அந்த சம்பவம் ஞாபகம் வருகின்றது தேங்காய் எண்ணையா நல்லெண்ணையா பூசியிருக்கின்றார் என மனந்து பார்த்து இனத்தை கண்டுபிடித்து தாக்குவது. ஒரு முஸ்லீம் இறந்த காரணத்தால் அது மதகலவரம் அல்ல என தடித்த எழுத்துக்களில் தினகுரல் சமாதானம் பேசியினம் போல...
3 months 2 weeks ago
நீங்கள் எளிய பிள்ளை சீமானின் பக்தர் என்பதால் இப்படியான ஒரு எளிய ஆனால் பிழையான சமன்பாட்டை போடுவதாக படுகிறது. நான் தமிழ் நாட்டில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. ஆனால் சீமானை எதிர்கிறேன். இதற்கான காரணங்கள் இங்கே பலதடவை தெளிவாக எழுதப்பட்டுள்ளன. ஆனால இங்கே கேள்வி நான் யாரை ஆதரிக்கிறேன் என்பதல்ல. கேள்வி கீழ்கண்டதுதான். நான் சீமானை எதிர்கிறேன் நீங்கள் சீமான் கட்சி வளர்கிறது, அதை பார்து என் போன்றோர் படபடப்புக்கு ஆளாகிறனர் என்றீர்கள். அப்படி சீமான் கட்சி வளரவில்லை. 2026 இல் சீமான் தனியாக கேட்டால் 12% கூட எடுக்க மாட்டார். இல்லை என பந்தயம் கட்ட தயரா? ஒன்றில் பந்தயம் கட்ட வேண்டும். அல்லது சீமான் கட்சி வளரவில்லை என ஒத்துகொள்ள வேண்டும்.
3 months 2 weeks ago
ஒருத்தருக்கும் தெரியாமல் 8 ம் இடத்துக்கு வந்தேன். நீங்கள் கண் வைத்து விட்டீர்கள். இனி பின்னுக்கு போகப்போறேன். திரும்பி 9 க்கு வந்திட்டேன். இனி கடைசிதான்.( உப்பீடித்தான் செம்பாட்டன் முதலிடத்தில் இருக்கும் போது கண் வைத்தீர்கள். அந்தாள் பாவம்.) பங்களூரில் நடைபெறும் போட்டியில் ஒரே ஒரு போட்டியைத் தவிர எல்லாப்போட்டியிலும் பங்களூர் தோற்கும் என விடை எழுதினேன். இன்று இரவு நடைபெறும் போட்டியில் மட்டும்தான் பங்களூர் வெல்லும் என எழுதினேன். ஆனால் நீங்கள் கண் வைத்து விட்டீர்கள். என்ன நடக்குமோ என்று நெஞ்சு படபடக்குது. நாளை சென்னை எதிர் ஹைட்ராபாத் எதிரான போட்டியில் SRH வெல்லும் என்று தெரியாமல் எழுதிவிட்டேன். நேற்று SRH இன் ஆட்டத்தை பார்க்க சென்னை எவ்வளவோ மேல். நான் எப்பொழுதும் சென்னைக்குத்தான் ஆதரவு. போட்டி என்பதினால் விருப்பு வெறுப்பு பார்க்காமல் எழுதிவிட்டேன். உங்களின் கண் பார்வை பட்டுட்டுது. இனி அதிலும் தோல்வி போல
3 months 2 weeks ago
எப்படி வாக்கு வீதம் மட்டும் ஏறிக்கொண்டு போகிறார்கள் என்பது ஐபிஎல் முடிவு மாதிரி உள்ளதாக்கும்?
3 months 2 weeks ago
ராகுல் கான் ,ஸ்டாலின் கான் இது பற்றி வாய் திறக்கவில்லையே!!!
3 months 2 weeks ago
விஜய்காந்த்- கேள்விபட்டனான் கம்யுனிச கட்சியும் அவருடன் கூட்டு அவர் நல்லவர் வந்திருக்கலாம்.
3 months 2 weeks ago
உலகம் முழுவதும் தமிழ் மொழி பேசினால் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படும் பள்ளிகள் உலகம் முழுவதும் உருவாகி ஆங்கிலம் சிறப்புடன் உலகை ஆளும்.
3 months 2 weeks ago
🤣.................. நாளைக்கு எப்போதும் தமிழன் நிமிரத்தான் போகின்றார். ஆனால் அவர் ஒரேயடியாக முன்னுக்கு போவது நடக்காது என்று தான் நினைக்கின்றேன்........................ ஏனென்றால் அவருக்கு ஐபிஎல் பற்றி நிறையவே தெரிந்திருக்கின்றது...............🤣.
3 months 2 weeks ago
தமிழ்நாட்டில் ஒரு மநகூ அவசரமாக தேவைப்படுகின்றது. மநகூ என்றால் மக்கள் நலக் கூட்டணி. கடைசியாக இப்படியான ஒரு கூட்டணியை விஜய்காந்த் தலமையில் வைகோ உருவாக்கி இருந்தார். அத்துடன் அரசியலில் விஜய்காந்த் விலாசமே இல்லாமல் போனார். வைகோவின் அரசியல் சாணக்கியம் மீண்டும் ஒரு முறை அடிவாங்கியது. இந்த வாரம் அவரது மகன் துரை வைகோ விவகாரத்தில் அந்த சாணக்கியம் மீண்டும் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றது. அதிமுக - பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணத்தை இந்த தடவை வாரி இறைக்கும். இது கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் பாஜகவின் இறுதி முயற்சி. திமுகவிற்கு எவ்வளவு தடைகள் ஒன்றிய அரசால் வந்தாலும், செந்தில் பாலாஜி முற்று முழுதாக சுற்றி வளைக்கப்பட்டாலும், திமுகவும் சளைக்காமல் பணத்தை கொட்டும். 'ஆட்சியில் பங்கு...............' என்ற கோஷத்துடன் வந்த விஜய்யும், 'வென்றால் முயற்சி, தோற்றால் பயிற்சி...............' என்று இவ்வளவு நாளும் சொல்லிக் கொண்டிருந்த சீமானும் இந்த இரு கூட்டணிகளின் முன்னும் ஒன்றுமேயில்லை. நாதக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கும், ஆனால் தொகுதிகளுக்கு பூத் ஏஜண்டுகள் கூட போதியளவில் கிடைக்கமாட்டார்கள். விஜய்க்கு 234 வேட்பாளர்கள் கிடைப்பதே சிரமம். இந்த இருவரிடமும் தேர்தலை சமமாக எதிர்கொள்ளும் வசதி வாய்ப்புகளும் கிடையாது. இவர்கள் இருவரும் சேர்ந்தால், இன்னும் சில உதிரிக் கட்சிகளையும் சேர்த்தால், மீண்டும் ஒரு மநகூ உருவாகும். அப்படி ஒன்று உருவாகினால், தேர்தல் முடிய இருவரும் விலாசம் இல்லாமல் போகவும் கூடும். அப்படி ஒரு கூட்டணி உருவாகாமல் விட்டாலும், இவர்கள் இருவரும் பெரிதாக எந்த தாக்கத்தையும் 2026ம் ஆண்டில் ஏற்படுத்தப் போவதும் இல்லை. எப்படிப் பார்த்தாலும், ஆகக் குறைந்தது 234 வேட்பாளர்களுக்கு வைப்புப்பணம் திரும்பிக் கிடைக்கப் போவதில்லை. அதற்கு மேலேயும் இவர்களின் ஒவ்வொரு வேட்பாளரும் கைகளில் கொஞ்ச பணம் வைத்திருக்க வேண்டும் போல........... தேர்தல் முடிந்த பின் கட்சித் தலைமை சொல்வதைச் செய்ய.................
3 months 2 weeks ago
அப்ப உங்கள் வீழ்ச்சியும் எப்போதும் தமிழனின் எழுச்சியும் ஒரு நாளிலா. நாம பதுங்க வேண்டியதுதான் போல
3 months 2 weeks ago
என்னப்பா இவர் சமுக சேவகரா சிங்கள தேசியத்தை இனி தமிழ்மொழி பேசும் ஜெ.வி.பி யினர் காப்பாற்றுவார்கள் ...நீ நிம்மதியாக சென்றுவா தோழனே
3 months 2 weeks ago
வாக்கு லஞ்சத்திற்கும், கொள்கையற்ற வாக்களிப்புகளுக்கும் உங்கள் ஆதரவு உண்டு என ஒத்துக்கொள்வதாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஒருவர் சீமான் கட்சியை எதிர்க்கின்றார் என்றால் அவர் மாற்றுக்கட்சியை ஆதரிக்கின்றார் என்பதே பொருள் படும். சீமான் கட்சி ஆரம்பித்த காலங்களிலிருந்து வளர்ச்சியே தவிர வீழ்ச்சி இல்லை என்பதை யாவரும் அறிவர்.
3 months 2 weeks ago
நரேந்திரமோதி கொலையில் எவ்விதத்தில் குறைந்தவர். குஜராத்தில் முதலமைச்சராக இருந்து கொன்ற முஸ்லிம் மக்கள் எத்தனை? அமெரிக்காவால் ஒரு தடவை அங்கு வர தடை செய்யப்பட்டவர். மதத்தால் மதம் கொண்டு இரு மதங்கள் கொலை செய்து கொல்கிறார்கள் என எடுக்க வேண்டியது தான்.
Checked
Fri, 08/08/2025 - 21:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed