3 months 2 weeks ago
Feedy Life Hacks · WHEN THE CROW FEELS SICK… IT LOOKS FOR ANTS Just as you read. When a crow feels unwell, it perches near an ant nest, spreads its wings, stays still, and lets the ants attack it. They do it for a powerful reason: ants spray its body with formic acid, a substance that acts as a natural antiparasitic. This acid helps the crow eliminate fungi, bacteria, and parasites, allowing it to recover without the need for medicine. This behavior is called “anting” and has been observed in various bird species. It’s an incredible example of animal self-medication. Nature never ceases to amaze us with its silent wisdom ......... !
3 months 2 weeks ago
பொங்களூர் 205 /20 .......... நல்ல எண்ணிக்கை .......... பார்க்கலாம் ........ ! 😁
3 months 2 weeks ago
கடைசியா நான் பார்த்ததின் படி, இரண்டு துடுப்பர்கள்தான் ஒரே நேரத்தில் துடுப்பாடலாம் 😁. அவரை விட ஜிதேஸ் வந்தது நல்லது என்டுதான் நினைக்கிறேன்
3 months 2 weeks ago
பில் சோல்ட் அடித்து ஆட முயன்று, ஆட்டமிழந்தார். எவ்வளவு அதிஸ்டத்தைத்தான்டா உனக்குத் தாறது என்று அதிஸ்ட தேவதையே நினைச்சிருக்கும்.
3 months 2 weeks ago
நம்ம நிலமை. அர்ச்சுனாவைப். போல போச்சு” எனது விண்ணப்பம். சமர்ப்பிக்கும் முன்பே நிராகரித்து விட்டார்கள் 🤣. அருச்சுனாவுக்கு தங்கம் இருந்தது நான் தனியாக எதுவும் செய்ய முடியாது எனவே உங்கள் வாதம் எற்றுக்கொண்டேன் 🙏
3 months 2 weeks ago
நல்ல ஒரு ஆரம்பம். அவர்களின் அதிர்ஷ்டம் நன்றாக வேலை செய்கிறது. மட்டையின் கரைகளில் படும் பந்துகள் கூட, பட்டு தெறித்து எல்லைக்கோட்டை நோக்கி செல்கின்றன. ஐந்தாவது பரிமாற்றத்திலேயே 50 ஓட்டங்களை கடந்து விட்டார்கள். நல்லாச் சொல்லுறீங்கள் போங்க. கிருபனின் தத்துவங்கள்!!!
3 months 2 weeks ago
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் சட்டம் ஒரேமுறையில் நடைமுறைப்படுத்தப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது ” தீர்வை வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது எனவும், அதன்முதலாவது கூட்டு அறிக்கை விரைவில் வெளியாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 2025 ஆம் ஆண்டி அதிகளவான ஏற்றுமதி வருமானத்தினை பெறுவதற்கு தாம் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் சட்டம் ஒரேமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி தாம் செல்வந்தர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கமாட்டோம் எனவும், அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1429399
3 months 2 weeks ago
வட்டுக் கோட்டை பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு! கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண், கொழும்பில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்து, அவரது உடலை பயணப் பைக்குள் அடைத்து, பின்னர் அதனை கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் விட்டுச் சென்றிருந்த கொலைச் சம்பவம் தொடர்பான தீர்ப்பு இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. சுமார் 10 வருடங்களாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று அறிவித்தார். சந்தேக நபரான பேட்ரிக் கிருஷ்ணராஜாவிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தது. நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பை அறிவித்து, குற்றச்சாட்டுகளில் பிரதிவாதி குற்றவாளி எனக் கண்டறிந்தார். தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசாங்கத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குறித்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அதன்படி மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். ….. இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்ததுடன் பெண்ணின் சடலம் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது. யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய கார்த்திகா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். சடலமாக மீட்கப்பட்ட பெண் கடந்த 3 வருடங்களாக கொழும்பிலேயே வசித்து வந்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. செட்டியார் தெருவில் உள்ள தங்குமிடத்தில் வைத்தே கார்த்திகா கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் 3 அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரமான கறுப்பு நிற பெட்டியொன்றை சிரமத்துக்கு மத்தியில் சந்தேக நபர் சுமந்துகொண்டு விடுதியில் இருந்து வெளியேறும் CCTV காட்சிகளும் வெளியிடப்பட்டிருந்தன. சந்தேக நபர் பயணப் பெட்டியுடன் பஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு சென்றமைக்கான ஆதாரங்களாக CCTV காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன. குறித்த வழக்கின் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் சந்தேச நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2025/1429429
3 months 2 weeks ago
பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி! பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள இந்நிலையில், “பேராயர் மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபட்டதால், அவரை தமது எதிர்கால நடவடிக்கைகளில் புறக்கணிக்க வத்திக்கான் முடிவெடுத்துள்ளதாக” செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. சகோதர செய்தித்தளமொன்றில் இச் செய்தி வெளியாகியுள்ளதாக, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், குறித்த இணையதளம் அவ்வாறான செய்தியை பிரசுரிக்கவில்லை என factseeker உறுதிப்படுத்தியுள்ளதுடன், குறித்த இணையதளத்தின் லோகோவை பயன்படுத்தி போலியாக இவ்வாறான ஒரு செய்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடக பணிப்பாளர் பாதிரியார் ஜூட் கிருஷாந்திடம் FactSeeker வினவியத்தில், “சமூக வலைதளத்தில் பகிரப்படுகின்ற அந்த செய்தியில் எந்தவொரு உண்மையும் இல்லை” என்று அவர் தெரிவித்தார். அதேபோல், வத்திக்கானின் உத்தியோகபூர்வ இணையதளத்திலோ அல்லது வத்திக்கானுடன் நெருக்கமாக செயற்படும் ஊடகங்கள், நிறுவனங்களோ இவ்வாறான எந்தவொரு செய்தியையும் வெளியிட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429445
3 months 2 weeks ago
சித்த வைத்தியத்தை ஆங்கிலத்தில் கற்பிக்கும் திட்டம் இருந்தால், அதனை பல்கலைக்கழகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அந்த மண்ணுக்கே உரிய மருத்துவம்... அந்த மண்ணின் மொழியிலேயே இருக்க வேண்டும்.
3 months 2 weeks ago
மீண்டும் நாணயச் சுழற்சியில் தோல்வி. அதன்பின் பத்திடார் தேமே என்று அணிப் பயிற்சியாளர் அன்டி பிளவரைப் பார்த்தாராம். மீண்டும் முதலாவதாகத் துடுப்பாடப் போறார்கள். முதல் இருவரும் நின்று நிதானித்து ஆடினால் பெரிய ஒரு ஓட்ட எண்ணிக்கையை அடையலாம்.
3 months 2 weeks ago
RCB அணித்தலைவர்: எந்தப் பந்தை எப்பிடி அடிப்பது முக்கியம் என்று சொல்லியிருக்கிறார். சொந்த மைதானத்தில் மூன்று போட்டிகள் விளையாடி மூன்றையும் தோள்றிருக்கினம். மூன்றிலும் நாணயச் சுழற்சிலும் தோல்வி. மற்ற அணி வேகப் பந்து வீச்சாளர்கள் அதிகமாக ஆரம்பகட்ட துடுப்பாளர்களை ஆட்டமிழக்கச் செய்திருக்கினம். அதுதான் பந்துகளைப் பார்த்து அடியுங்கள் என்று அணித் தலைவர் சொல்லி இருக்கிறார்.
3 months 2 weeks ago
👉 https://www.facebook.com/100076314756096/videos/1183786436547705?locale=de_DE 👈 👆 12 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த விளம்பரத்தின் இறுதியில் என்ன சொல்கிறார்கள் என பாருங்கள். 😂
3 months 2 weeks ago
சபாஷ் சரியான போட்டி. யார் பெரிசு என்று அடித்துக் காட்டுங்கள்.
3 months 2 weeks ago
சும்மா சொல்லிக் கொண்டிருக்காமல் ஏவுகணைகளை மாறிமாறி விடுங்க. எவ்வளவு தூரத்தில் போய் விழுந்து வெடிக்குதென்று பார்ப்போம்.
3 months 2 weeks ago
24 APR, 2025 | 05:17 PM இந்திய விமானங்களிற்கு தனது வான் எல்லையை மூடியுள்ள பாக்கிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகநடவடிக்கைகளையும் இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான இந்தியாவிலிருந்து இந்தியாவிலிருந்து இயங்கும் அனைத்து விமானங்களிற்கும் தனது வான் எல்லையை மூடுவதாக பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் அல்லது மூன்றாவது நாட்டிலிருந்து பாக்கிஸ்தான் ஊடாக இந்தியாவிற்கு செல்லும் பொருட்கள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாகவும் பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது. பாக்கிஸ்தானிற்கு என ஒதுக்கப்பட்ட நீரோட்டத்தை தடை செய்யவோ அல்லது திருப்பிவிடவோ மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் போர்நடவடிக்கையாக கருதப்போவதாக பாக்கிஸ்தான் எச்சரித்துள்ளது. https://www.virakesari.lk/article/212843
3 months 2 weeks ago
பஹல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி 24 APR, 2025 | 02:31 PM மதுபானி(பிஹார்): பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று இந்திய பிரதமர்பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் குறிக்கும் நிகழ்வு பிகாரின் மதுபானி நகரில் நடைபெற்றது. பிரதமர் மோடி முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றும் முன் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்துமாறு பிரதமர் மோடிட்டுக்கொண்டார். மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்துப் பேசிய பிரதமர் மோடி "பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சதிகாரர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள். ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு கண்காணித்து தண்டிக்கும் என்று நான் முழு உலகிற்கும் கூறுகிறேன். பூமியின் கடைசி வரை அவர்களைத் துரத்துவோம். அவர்களுடைய (பயங்கரவாதிகளின்) மீதமுள்ள மண்ணைப் பறிக்கும் நேரம் வந்துவிட்டது. கார்கில் முதல் கன்னியாகுமரி வரை முழு நாடும் இந்த பயங்கரவாதத் தாக்குதலால் வருத்தமாகவும் கவலையாகவும் உள்ளது. இந்த சம்பவத்தால் முழு நாடும் கோபமாக உள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள். மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் உள்ளனர். இந்த நேரத்தில் எங்களுடன் நின்ற பல்வேறு நாடுகளின் மக்களுக்கும் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/212813
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு,வழக்கத்துக்கு மாறாகச் செயல்படும் ஒரு விசை, விண்மீன் திரள்களை ஒன்றிடம் இருந்து ஒன்றைத் தள்ளிவிடுகின்றது. கட்டுரை தகவல் எழுதியவர், பல்லவ் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இருண்ட ஆற்றல் (Dark Energy). இது மிகவும் மர்மமான ஆற்றல். இதுதான் இந்தப் பிரபஞ்சம் விரிவடையக் காரணமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் இதை டார்க் எனர்ஜி என்று அழைக்கின்றனர். நாம் இவ்வளவு ஆண்டுகளாக நேரம், விண்வெளி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த புரிதலின் கோணத்தையே இந்த ஆற்றல் மாற்ற வாய்ப்பு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வானியலாளர்கள் வானியலில் தாங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடிய கண்டுபிடிப்பை நெருங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். ஆனால், இந்தக் கண்டுபிடிப்பு வானியல் தொடர்பான நமது அடிப்படைப் புரிதலைக்கூட மீண்டும் ஒருமுறை கேள்வி கேட்க வைத்துவிடும். இந்த ஆய்வின் முதல்கட்ட கண்டுபிடிப்பு, தற்போது அனைவரும் பின்பற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கோட்பாட்டிற்கு முரணாக உள்ளது. இதன் முடிவுகளை உறுதி செய்வதற்கு இன்னும் நிறைய தரவுகளும் ஆதாரங்களும் தேவைப்படுகிறது. ஆனால் மிகவும் மதிக்கத் தகுந்த ஆய்வாளர்களான லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஓபர் லஹவ் போன்றோர்கூட கிடைக்கும் தரவுகளைக் கண்டு அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் மூழ்கியுள்ளனர். பேராசிரியர் ஓபர் லஹவ், "இதுவொரு வியத்தகு தருணம்," என்று பிபிசியிடம் தெரிவித்தார். விண்வெளி வீராங்கனைகள் விண்வெளியில் மாதவிடாயை எப்படி கையாள்வார்கள்? சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்? சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்? சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்? இருண்ட ஆற்றல் என்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஓபர் லஹவின் கருத்துப்படி, "இதுவரை பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள முன்மாதிரியாக இருந்த புரிதலில் மிகப்பெரிய மாற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம்." இருண்ட ஆற்றல் என ஒன்று இருப்பது கடந்த 1998ஆம் ஆண்டில் தெரிய வந்தபோது, அந்தக் கண்டுபிடிப்பே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதுவரை, இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியதாகக் கூறப்படும் பெருவெடிப்பு (Big Bang) நிகழ்வுக்குப் பிறகு ஈர்ப்பு விசையின் காரணமாக பிரபஞ்சம் விரிவடையும் வேகம் குறையும் என்றே நம்பப்பட்டது. பெருவெடிப்புக் கோட்பாடு, பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்க முயல்கிறது. ஆனால், அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் கணிப்புப்படி இதன் விரிவாக்கம் மேலும் வேகமடைந்து வருகிறது. இது ஏற்படக் காரணமாக இருக்கும் ஆற்றல் என்னவென்று தெரியாததாலும், அதைப் பற்றிய புரிதல் இல்லாததாலும் அதற்கு இருண்ட ஆற்றல் (டார்க் எனர்ஜி) என்று பெயர் சூட்டினர். துருக்கியில் அதிபர் எர்துவானுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவது ஏன்? முழு விளக்கம்26 மார்ச் 2025 படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள்25 மார்ச் 2025 'வலுவான ஆதாரம்' பட மூலாதாரம்,DESI படக்குறிப்பு,5,000 ஒளியியல் இழைகளைக் கொண்டுள்ள ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவி இருண்ட ஆற்றல் என்ன என்பது நமக்குத் தெரியாமல் இருப்பதால் அறிவியலில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மர்மமாக அது இருக்கிறது. இதற்கான விடையைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவியின் உருவாக்கம் அத்தகைய முயற்சிகளில் ஒன்று. இது அரிசோனாவில் உள்ள டூசான் நகரத்தில், கிட் பீக் தேசிய கண்காணிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி, 5,000 ஒளியியல் இழைகளைக் (optical fibres) கொண்டுள்ளது. ஒவ்வொரு ஒளியியல் இழையும் ரோபோட்கள் மூலம் கேலக்ஸிகளை அதிவேகத்தில் கண்காணிக்கின்றன. கடந்த ஆண்டு, இந்தக் கருவியில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இருண்ட ஆற்றல் வெளிப்படுத்திய ஆற்றல் காலப்போக்கில் மிகவும் மாறுபட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். முதலில், சராசரியாகக் கிடைக்கும் தரவுகளில் ஏற்பட்ட சிறு பிசகல் என்றே இதை அவர்கள் கருதினர். ஆனால், அந்தப் "பிசகல்" மேலும் வளர்ந்துள்ளது ஓர் ஆண்டுக்கால ஆய்வில் தெரிய வந்துள்ளது. "முன்பு இருந்ததைவிட இப்போது ஆதாரம் வலுவாக உள்ளது" என்று போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் பேரசிரியரான சேஷாத்ரி நடத்தூர் தெரிவித்தார். "கடந்த ஆண்டு நடைபெற்ற சோதனைகளைவிட அதிகளவிலான சோதனைகளைச் செய்துள்ளோம். அவற்றில் கிடைத்த ஆதாரங்கள் எல்லாம் நமக்குக் கிடைத்த மாறுப்பட்ட தரவுகள் அனைத்தும் உண்மை என்றும், எங்களால் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் ஏற்படும் தரவுப் பிசகல் இல்லை என்ற நம்பிக்கையையும் வலுவாக்கியுள்ளது," என்றார் அவர். 'இந்திய பேட்டரால் இப்படியும் விளாச முடியுமா!' - அசுதோஷ் ஷர்மா டுப்ளெசியை வாய் பிளக்க வைத்தது எப்படி?25 மார்ச் 2025 குனால் கம்ராவின் பகடிப் பாடல் சர்ச்சை குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே25 மார்ச் 2025 விசித்திரமான முடிவுகள் இதுவரை கிடைத்த தரவுகள், இதை ஒரு கண்டுபிடிப்பாக முன்வைக்கும் அளவுக்குப் போதுமானதாக இல்லாவிட்டாலும், ஸ்காட்லாந்து முன்னணி வானியலாளரும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கேத்தரின் ஹேமன்ஸின் கவனத்தை இதன் பக்கம் ஈர்த்துள்ளது. "நாம் நினைத்ததைவிட இந்த இருண்ட ஆற்றல் மிகவும் விசித்திரமானதாக இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார். "கடந்த 2024ஆம் ஆண்டு கிடைத்த தரவுகள் மிகவும் புதிதாக இருந்ததால், இது தொடர்பாக இன்னும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இப்போது நம்மிடம் நிறைய தரவுகள் உள்ளன. நமக்குக் கிடைத்த தரவுகளில் இருக்கும் விலகல் சரியாகின்றதா அல்லது மிகப்பெரிய வானியல் கண்டுபிடிப்பை நோக்கி நமது பயணம் நெருங்கிக் கொண்டிருக்கின்றதா என்பதை இனி வரும் நாட்களில் தெரிந்துகொள்ளலாம்" என்றும் கேத்தரின் ஹேமன்ஸ் குறிப்பிட்டார். மாறுபட்ட தரவுகள் கிடைக்கக் காரணம் என்ன என்று கேட்டதற்கு, அது "யாருக்கும் தெரியாது" என்று புன்னகையுடன் ஒப்புக்கொண்டார். இந்தியா - சீனா உறவை மேம்படுத்தும் மோதியின் எண்ணம் ஈடேறுமா? அமெரிக்கா என்ன செய்கிறது?25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு,இருண்ட ஆற்றல் தொடர்பாக இன்னும் நிறைய தரவுகளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் யூக்லிட் மிஷன் வழங்கும். "புதிதாகக் கிடைத்த முடிவுகள் சரியானவை என்றால், இதை ஏற்படுத்தும் ஆற்றலைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் புத்தம் புதிய கோட்பாடு ஒன்று உருவாகலாம், இது மிகவும் உற்சாகமளிக்கக் கூடியதாக இருக்கும்." மேற்கூறிய டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இன்ஸ்ட்ரூமென்ட் (DESI) அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தோராயமாக 5 கோடி கேலக்ஸிகளையும் மற்ற ஒளி நிறைந்த பொருட்களையும் கணக்கிடும். இதன் மூலமாக அவர்களின் கணக்கீடுகள் சரியா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். "இந்தப் பிரபஞ்சமே அது செயல்படும் வழிமுறையை நம்மிடம் சொல்லும். ஒருவேளை நாம் நினைத்ததைவிட அதன் செயல்பாடு மிகவும் சிக்கலானதாக இருக்கிறது என்பதை அது நமக்கு உணர்த்துகிறதா என்பதை நாம் அறிய வேண்டும்," என்கிறார் கலிஃபோர்னியாவின் லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரே குயூ. இருண்ட ஆற்றல் தொடர்பாக இன்னும் நிறைய தரவுகளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் யூக்லிட் மிஷன் வழங்கும். யூக்லிட் என்பது ஒரு விண்வெளி தொலைநோக்கி. இது DESI-ஐ விட இன்னும் நுணுக்கமான கணக்கீடுகளைக் கொடுக்கக்கூடியது. 2023ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்தத் தொலைநோக்கி புதிய புகைப்படங்களை அனுப்பியுள்ளது. டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவியில் ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் டர்ஹாம், யு.சி.எல். மற்றும் பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம் உள்பட 70க்கும் மேற்பட்ட நிறுவங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89yzqvqnz5o
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 05:11 PM யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக அறிகிறோம். இது ஆபத்தானது. எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக சித்தமருத்துவ பீட கற்கை நெறி தமிழ்மொழியில் தொடரவேண்டும். இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு யாழ் பல்கலைக்கழக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம் பல சான்றோர். பெருமக்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. எமது பிரதேசப் பல்கலைக்கழகம் எமது பிரதேச சுதேசிய பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் பெரும் கடமையாகும். எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக யாழ் பல்கலைக் கழக கல்விச் சமூகம் 70 களின் பிற்பகுதியில் எடுத்த முயற்சியின் விளைவாக சித்தமருத்துவத் துறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் அயராத முயற்சியால் சித்த மருத்தவ நுல்கள் ஏடுகள் சேகரிக்கப்பட்டு பாரம்பரிய வைத்தியர்களிடம் ஆலோசனை பெற்று பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு இத்துறை ஆரம்பிக்கப்பட்டது. இணுவில், வட்டுக்கோட்டை, சில்லாலை, ஏழாலை, பருத்தித்துறை, அளவெட்டி போன்ற ஊர்களில் இருந்து சித்த வைத்தியர்களின் நுல்கள், உதவிகள் பெறப்பட்டன. பல்கலைக் கழக நூலகர் முருகவேள், பதிவாளர் சிவராஜா போன்ற பெருமக்கள் சித்த மருத்துவத் துறைக்கான வளர்ச்சியில் அருந்துணை செய்துள்ளனர். சித்த மருத்துவ பீடம் முற்றுமுழுதாக சுதேசிய வைத்தியப் பாரம்பரியத்தை சிறப்பாக வளர்த்தெடுத்துள்ளார்கள். மேலும் கைதடியிலுள்ள சித்தவைத்திய போதனா வைத்தியசாலையின் வளச்சிக்கும் பெரும்பங்காற்றி வருகின்றார்கள். பல நூறு சித்த மருத்துவர்களை தொடர்ந்து உருவாக்கியுள்ளார்கள். துறை சார் விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்புகளை மேற்கொண்டு இன்று நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக விளங்குகிறார்கள். சகல கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் தமிழ்மொழி மூலம் சிறப்பாக நடைபெறுகின்றது. நீண்ட காலமாக எடுத்த முயற்சியின் பயனாக சித்த மருத்துவத் துறை தனிப்பீடமாக உயர்வுபெற்றுள்ளது மேலும் சித்தமருத்துவபீடம் விஸ்தரிப்பதற்காக புதிய நிலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் உயர்கல்வி அமைச்சு யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக அறிகிறோம். இது ஆபத்தானது. இது பாரம்பரிய சித்த மருத்துவத்துறையை அருகிப்போகச் செய்யும் முயற்சியாகும். அகத்தியர் பதிணென் சித்தர்கள், திருமூலர், திருக்குறள், பரராஜசேகரம் போன்ற மூல நுல்களை மொழி பெயர்ப்பதென்பது முடியாத விடயம். இதை அனைவரும் அறிவர். இந் நிலையில் சித்த மருத்துவத்தை ஆங்கில மொழியில் எவ்வாறு கற்பிக்கப் போகிறார்கள்? இவ் விடயம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மூதவை, பேரவை மற்றும் தூறைசார்ந்த அறிஞர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும். எக்காரணம் கொண்டும் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது. இதனைம் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு யாழ் பல்கலைக்கழக சமூகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/212837
3 months 2 weeks ago
இரவில் வாயை ஒட்டி வைத்துக்கொண்டு தூங்கினால் ஆழ்ந்து உறங்க முடியுமா? எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சோபியா பெட்டிசா பதவி, பிபிசி உலக சேவை 23 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் (உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது. நன்றாக உறங்குவதற்கு, தங்களது வாயை ஒட்டி வைப்பது முதல் படுக்கைக்கு செல்லும் முன்பு கிவி பழம் உண்பது வரை, இளைஞர்கள் முறையாக பின்பற்றும் பல்வேறு நுணுக்கமான செயல்முறைகளை கொண்ட மில்லியன் கணக்கான வீடியோக்கள் டிக் டாக்கில் பரவி வருகின்றன. ஆனால், தேவையான உறக்கத்தைப் பெறுவதற்கான தேடல் அளவுக்கு மீறிச் செல்லுமா? சில முறைகள் பாதிப்பில்லாதவையாக தோன்றினாலும், அனைத்தும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. மேலும்,சில முறைகள் நல்ல முறையில் பயனளிப்பதற்குப் பதிலாக அதிகமான தீங்கையும் ஏற்படுத்தக்கூடும். உறக்க நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பேசி, நடைமுறையில் எந்தெந்த முறைகள் பயனளிக்கின்றன என்பதை நிறுவுவதற்கு பிபிசி முயல்கிறது. "பாகிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற கெடு " - பிரதமர் மோதி தலைமையிலான ஆலோசனையில் முடிவு2 நிமிடங்களுக்கு முன்னர் ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மெக்னீசியம் தூக்கத்திற்கு உதவும் - ஆனால் அதிகப்படியாக இதனை சாப்பிட்டால் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நல்ல உறக்கத்தைப் பெற மெக்னீசியம் உதவுமா? மிகவும் பிரபலமான ஸ்லீப்மேக்ஸிங் குறிப்புகளில் ஒன்று மெக்னீசியத்தை உள்ளடக்கியது. குறிப்பாக வைரஸ் "ஸ்லீப்பி கேர்ள் மாக்டெயில்" எனப்படும் புளிப்பு செர்ரி சாறு மற்றும் கார்பனேற்றப்பட்ட தண்ணீரின் கலவையில் மெக்னீசியம் ஒரு முக்கிய மூலப்பொருளாகும். மது அல்லாத இந்தப் பானம், 2024 ஆம் ஆண்டில் உறக்கத்தைத் தூண்டும் அதன் நன்மைகளுக்காக சமூக ஊடகங்களில் பிரபலமடைந்தது. "மெக்னீசியம் உட்பொருள்கள் (சப்ளிமெண்ட்ஸ்) உறக்கத்தை மேம்படுத்த உதவக்கூடும் என்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன, ஆனால் அது மெக்னீசியம் குறைபாடு உள்ளவர்களுக்கே பயன்படும்," என பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தூக்கமின்மை குறித்த முனைவர் பட்டம் பெற்ற தூக்க நிபுணர் மருத்துவர் லிண்ட்சே பிரவுனிங் கூறுகிறார். மேலும், அதிகப்படியான மெக்னீசியத்தை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் அல்லது சில மருந்துகளுடன் இணைந்து எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர் பிரவுனிங் எச்சரிக்கிறார். "இந்த பானங்களில் மெக்னீசியத்தின் அளவு சில நேரங்களில் மிகவும் அதிகமாக இருக்கலாம், என்றும் இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும். இது நிச்சயமாக எந்த விதத்திலும் உங்களது உறக்கத்துக்கு உதவாது" என்றும் அவர் பிபிசியிடம் கூறுகிறார். அதற்கு மாறாக, சூடான பால் அல்லது புளிப்பான செர்ரி சாறு போன்ற, இயற்கையாகவே மெலடோனின் கூறுகளை உள்ளடக்கி, உறக்கத்தைத் தூண்டும் மாற்று பானங்களை அவர் பரிந்துரைக்கிறார். இந்திரா - முஜிபுர் உடன்பாட்டை 'அடிமை ஒப்பந்தம்' என்று வங்கதேச எதிர்க்கட்சிகள் அழைத்தது ஏன்?25 மார்ச் 2025 எரிமலை வெடிப்பால் கண்ணாடியாக மாறிய மனித மூளை - காணொளி25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மவுத் டேப்பிங் மவுத் டேப்பிங்: ஆபத்தான போக்கா? டிக் டாக்கில் பரவியுள்ள மிகவும் சர்ச்சைக்குரிய ஸ்லீப்மேக்ஸிங் முறைகளில் ஒன்று, நாசி மூலம் சுவாசத்தை ஊக்குவிக்க, வாயை மூடிக்கொண்டு, உதடுகளை பிரிக்க இயலாதவாறு ஒட்டிக்கொள்ளும் முறையாகும். லண்டனில் உள்ள உடல்நலப் பயிற்சியாளரான லிசா டீ மற்றும் நியூயார்க்கில் உள்ள சமூக வலைதளப் பிரபலமான டெவோன் கெல்லி ஆகிய இருவரும் தங்கள் உறங்குவதற்கு முன்பு தாங்கள் கடைபிடிக்கும் நடைமுறைகளின் ஒரு பகுதியாக இதை பின்பற்றுகிறார்கள். "பல வருடங்களாக பற்களை இறுக்கிப் பிடிப்பதால் ஏற்படும் தாடை வலியுடன் போராடி, இரவில் வாயை பிரிக்க இயலாதவாறு ஒட்டிக்கொள்ளும் பழக்கத்தை நான் கடைபிடிக்கத் தொடங்கினேன்" என்று தனது அனுபவங்களை, தன்னைப் பின்தொடரும் ஆயிரக்கணக்கான மக்களுடன் வீடியோக்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார் கெல்லி. "இது எனக்கு பெரிதும் உதவியது, இப்போது ஐந்து வருடங்களாக எனக்கு எந்த வலியும் இல்லை" என்கிறார் கெல்லி. 'ஹெல்தி ஹேப்பி ஏடிஹெச்டி' என்ற புத்தகத்தை எழுதிய லிசா, அவர் ஸ்லீப்மேக்ஸிங் முறைகளை பின்பற்றத் தொடங்கியதிலிருந்து, அவரது ஏடிஎச்டி அறிகுறிகள் குறையத் தொடங்கியதாகக் கூறுகிறார். அவரது டிக்டாக் வீடியோக்களில் அக்குபிரஷர் தலையணை மற்றும் பெரிய எடையுள்ள முகமூடியும் காட்டப்படுகின்றன. "நான் அதிகமாக கவனம் செலுத்துபவராகவும், குறைவான அழுத்தத்தையும் உணர்கிறேன்." பட மூலாதாரம்,DEVON KELLEY படக்குறிப்பு,கடந்த ஐந்து ஆண்டுகளில் 'ஸ்லீப்மேக்ஸிங்' தனது தூக்கத்தை மேம்படுத்தியுள்ளதாக டெவன் கெல்லி கூறுகிறார். ஆனால் இந்த முறை குறித்த சில கவலைகள் இருப்பதாக பிபிசியிடம் பேசிய நிபுணர்கள் கூறியுள்ளனர். "இது மிகவும் ஆபத்தானது," எனக் கூறும் மருத்துவர் பிரவுனிங், "நீங்கள் இரவில் சுவாசிக்க சிரமப்படும்போது, உங்கள் வாயை மூடிக்கொண்டிருந்தால், உங்களால் முழுமையாக மூச்சை உள்ளிழுக்க முடியாது. இது உங்கள் இதயத்தை அழுத்தலாம் அல்லது மாரடைப்பைத் தூண்டலாம்" என்றும் குறிப்பிடுகிறார். மேலும், இரவு உறக்கத்தில் சுவாசம் அவ்வப்போது நின்றுவிடும் ஒரு வகையான மூச்சுத்திணறல் பலருக்கும் கண்டறியப்படாமல் இருப்பதாகவும், மருத்துவர் பிரவுனிங் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் வாயை மூடிக்கொண்டு உறங்குவது தீவிரமான ஆபத்துகளை உருவாக்கக்கூடும். தொடர்ந்து பேசும் அவர், இந்த நடைமுறையானது வாய் பகுதியில் ஒவ்வாமை அல்லது எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடுகிறார். "நன்றாக உறங்குவதற்கு உங்களது வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை" என்று மருத்துவர் கார்லியாரா வெயிஸ் கூறுகிறார். அவரது முனைவர் பட்ட ஆராய்ச்சி நடத்தை தூக்க மருத்துவத்தில் கவனம் செலுத்துகிறது. டிக் டாக்கில் இந்த விஷயம் வைரலாக இருப்பதால் அதைப் பின்பற்ற வேண்டாம் என்று அவர் எச்சரிக்கிறார். விண்வெளி வீராங்கனைகள் விண்வெளியில் மாதவிடாயை எப்படி கையாள்வார்கள்?24 மார்ச் 2025 'மாஞ்சோலையை போல வால்பாறையில் இருந்தும் மக்களை வெளியேற்ற திட்டம்' - சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிர்ப்பு24 மார்ச் 2025 நாசியை விரிவாக்கும் பொருட்களைப் பயன்படுத்துதல் நாசி குழாய்களை விரிவுபடுத்தும் சாதனங்கள், இரவில் சுவாசத்தை எளிதாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. சில சமூக ஊடக பயனர்கள் அவற்றை குறட்டைக்கு ஒரு நல்ல தீர்வாக பரிந்துரைக்கின்றனர். மூக்கடைப்பு காரணமாக தூங்குவதில் சிக்கல் உள்ள சிலருக்கு, நாசியை விரிவாக்கும் இந்தப் பொருட்கள் குறிப்பிட்ட நிவாரணத்தை அளிக்கலாம். இருப்பினும், மருத்துவர் பிரவுனிங் கூறுகையில், பெரும்பாலான மக்களுக்கு, கவலை, மன அழுத்தம் அல்லது சரியான படுக்கை நேர ஓய்வு இல்லாததால் உறக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்கிறார். எடுத்துக்காட்டாக, புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டு ஆய்வில், கவலை அல்லது மனச்சோர்வு உள்ளவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. "நாசியை விரிவாக்கும் பொருட்கள் அந்த சிக்கல்கள் எதற்கும் உதவப் போவதில்லை," என்று மருத்துவர் பிரவுனிங் கூறுகிறார். நாசி துவாரத்தை விரிவாக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது, தூக்கத்தை மேம்படுத்துவதற்கோ அல்லது குறட்டையை குறைப்பதற்கோ உதவும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையென மருத்துவர் வெயிஸ் கூறுகிறார். மேலும் குறட்டை விடுவது உறக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் அல்லது விரிவாக்கப்பட்ட டான்சில்ஸின் அறிகுறியாக இருக்கலாம் என்று அவர் எச்சரிக்கிறார். தொடர்ந்து பேசும் அவர், "கண்டறியப்படாத தூக்கக் கோளாறு இருப்பது ஆபத்து. நீங்கள் ஒரு தூக்க நிபுணரை அணுக வேண்டும்" " என்றும் கூறுகிறார். குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்?24 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?24 மார்ச் 2025 கிவி பழங்களை உண்ணுங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிவி பழம் கிவி பழங்களை உண்பது உறக்கத்தை மேம்படுத்தும் என்று பரிந்துரைக்கும் வீடியோக்களால் டிக் டாக் நிரம்பியுள்ளது. தைவானில் உள்ள தைபே மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஒரு சிறிய ஆய்வில், படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு கிவி பழங்களை, நான்கு வாரங்களாக உண்டவர்கள் சிறந்த உறக்கத்தைப் பெற்று, எளிதாக உறங்க முடியும் என்று கூறியுள்ளனர். கிவியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் செரோடோனின் அளவு அதிகம். மூளையில் உள்ள செரோடோனின் என்ற வேதிப்பொருள், மனநிலை, உறக்கம் மற்றும் பிற செயல்பாடுகளை பாதிக்கிறது. ஆய்வின் படி, இது தூக்கக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கக்கூடும். இருப்பினும், கிவி பழங்களை உண்பதன் மூலம் நன்றான உறக்கத்தைப் பெற முடியும் என்பதை நிரூபிப்பதற்கு இன்னும் அதிகமான ஆராய்ச்சி தேவை என்று மருத்துவர் பிரவுனிங் சுட்டிக்காட்டுகிறார். அக்பரை பின்பற்றுமாறு ஔரங்கசீப்பை அறிவுறுத்திய சிவாஜி - ஒரு வரலாற்றுப் பார்வை23 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?23 மார்ச் 2025 குளிர்ந்த அறையில் உறங்குவது நன்றாக உறங்குவதற்காக, சமூக ஊடகப் பிரபலங்களின் வீடியோக்களால் பரவலாகப் பகிரப்பட்ட இந்த உதவிக் குறிப்பு அறிவியலால் ஆதரிக்கப்படுகிறது. நாம் தூங்கும்போது, நமது உடல் வெப்பநிலை சுமார் ஒரு டிகிரி குறைகிறது, இது தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும் மெலடோனின் என்ற ஹார்மோனை உடல் உற்பத்தி செய்ய சமிக்ஞை அளிக்கிறது. நாம் உறங்கும் அறை மிகவும் சூடாக இருந்தால், நமது உடல்கள் சரியாக குளிர்ச்சியடையாது. குளிரான அறை, உறக்கத்துக்கு நன்மை பயக்கும் அதே வேளையில், மிகவும் குளிரான அறையில் உறங்குவதும் உறக்கத்துக்கு எதிர்மறையான மற்றும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஓய்வெடுக்கும்போது அசௌகரியம் ஏற்படுவது, உறக்கத்துக்கு இடையூறு விளைவிப்பதால், அது தூக்கத்தை கடினமாக்கும் என்று மருத்துவர் பிரவுனிங் எச்சரிக்கிறார். "முக்கியமானது "உகந்த" வெப்பநிலையை பராமரிப்பது, அதாவது சிறந்த உறக்கத்தைப் பெறுவதற்கு சுமார் 18 ° செல்ஸியஸை பராமரிப்பது " என்று அவர் கூறுகிறார். மெலடோனின் எடுத்துக்கொள்வது மெலடோனின் கூறு உள்ள பொருட்கள், குறிப்பாக பளிச்சென்ற நிறத்தில் சிறிய கரடி வடிவத்தில் உள்ள மிட்டாய்கள், உறக்கத்துக்கு உதவுவதாக சமூக ஊடகங்களில் பிரபலமடைந்துள்ளன. இவற்றில் நாம் இயற்கையாக உற்பத்தி செய்யும் ஹார்மோன் உள்ளது. இவை நமது உடலிடம், இது உறங்குவதற்கான நேரம் என்று சுட்டிக்காட்டும். அவை பல நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன மற்றும் பெரும்பாலும் விமானப் பயணத்தால் ஏற்படும் உடல் சோர்வை சரி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், மெலடோனின் உறக்கம் சார்ந்த பிரச்னைகளுக்கு விரைவான தீர்வாக மாறினாலும், அது தூக்கமின்மைக்கான மூல காரணத்தை நிவர்த்தி செய்யாது என்று மருத்துவர் பிரவுனிங் எச்சரிக்கிறார். "உங்களுக்கு விமானப் பயணத்தினால் அயர்ச்சி ஏற்படவில்லை என்றால் அல்லது உங்களது சர்க்காடியன் ரிதம் சரியான நேர மண்டலத்தில் இருந்தால், உங்களது உடலே படுக்கைக்கு முன்பு மெலடோனினை உற்பத்தி செய்கிறது" என்று மருத்துவர் பிரவுனிங் கூறுகிறார். அதனை அதிக அளவு எடுத்துக்கொள்வது மற்றும் மெலடோனினை அதிகம் பயன்படுத்துவது ஆகியவை அடுத்த நாள் உடல் நலக்குறைவை ஏற்படுத்தலாம், நீங்கள் உட்கொள்ளும் மற்ற மருந்துப் பொருட்களுடன் இணைந்து எதிர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தலாம் மற்றும் உங்கள் ஹார்மோன்களை சீர்குலைக்கலாம் என்று அவர் மேலும் கூறுகிறார். சீனா அசுர வேகத்தில் ஏ.ஐ துறையில் வளர்ந்து வருவதன் பின்னணி21 மார்ச் 2025 ஔரங்கசீப்பின் ஆக்ரா சிறையில் இருந்து சத்ரபதி சிவாஜி தப்பியது எப்படி?21 மார்ச் 2025 படுக்கைக்கு முன்பு திரை செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் உறக்கத்தை மேம்படுத்துவதற்காக சொல்லப்படும் மிகவும் பிரபலமான உதவிக் குறிப்புகளில் ஒன்று படுக்கைக்கு செல்வதற்கு முன்பு (மின்னனு சாதனங்களின்) திரைகளில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதாகும். ஏனெனில், திரைகளின் மூலம் வெளியாகும் பிரகாசமான நீல ஒளி மெலடோனின் உற்பத்தியில் தலையிடக்கூடும். ஆனால், இந்த வகை ஒளியானது முன்பு நினைத்தது போல் பிரச்னைக்குரியதாக இல்லாமல் இருக்கலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. குறிப்பாக, மக்கள் மாலை நேரங்களில் தங்கள் சாதனங்களின் பிரகாசத்தை மங்கச் செய்தல் மற்றும் அவர்கள் திட்டமிட்ட நேரத்திற்குப் பிறகு அவற்றை பயன்படுத்தாமல் இருக்கும்போது, இது குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும். "உறக்கத்தை மேம்படுத்துவதற்கு ஒரு மந்திர தீர்வாக, படுக்கைக்கு முன்பு திரைகளை முற்றிலுமாக அகற்றும் இந்த யோசனை தற்போது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது," என்கிறார் மருத்துவர் பிரவுனிங். ஸ்வீடனில் உள்ள ஓரெப்ரோ பல்கலைக்கழகத்தின் 2024ம் ஆண்டின் ஆய்வை அவர் சுட்டிக்காட்டுகிறார், இது படுக்கைக்கு செல்வதற்கு முன் திரைகளைப் பயன்படுத்துபவர்கள், தூங்குவதற்கு ஒன்று முதல் ஒன்பது நிமிடங்களை மட்டுமே கூடுதலாக எடுத்ததாகக் வெளிப்படுத்துகிறது. உங்கள் திரையின் பிரகாசத்தை மங்கச் செய்யவும், இரவுப் நேரத்தில் பயன்படுத்துவதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட முறைகளை பயன்படுத்தவும், உறக்க நேரத்துக்கான நினைவூட்டலை உருவாக்கி வைத்துக்கொள்ளவும் அவர் பரிந்துரைக்கிறார். சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?21 மார்ச் 2025 கராத்தே ஹுசைனி மரணம்: நடிகர், சினிமா, அரசியல் என பன்முகம் கொண்டவரின் வித்தியாசமான சாகசங்கள்25 மார்ச் 2025 எடையுள்ள முகக் கவசம் அல்லது போர்வையைப் பயன்படுத்துதல் பட மூலாதாரம்,GETTY IMAGES உடல்நலப் பயிற்சியாளர் லிசா டீ அத்தகைய பொருட்களில் முதலீடு செய்வது மதிப்புக்குரியது என்று நம்புகிறார். "எடை அதிகமுள்ள எனது போர்வையை எனக்கு மிகவும் பிடிக்கும். அது இப்போது எனது படுக்கையின் முக்கியப் பகுதியாக உள்ளது. ஏடிஹெய்ச்டி மற்றும் மன அழுத்தம் உள்ள பலர் இரவில் அமைதியின்மையுடன் போராடுகிறார்கள், மேலும் எடையுள்ள போர்வையின் மென்மையான, அழுத்தமும் கூட உடலை நிதானமாகவும் பாதுகாப்பாகவும் உணர உதவும். இது ஒரு அணைப்பு போன்றது"என்கிறார் லிசா. பொதுவாக உங்கள் உடல் எடையில் 10 சதவீதம் போன்ற அளவில், இவ்வகையான போர்வைகளை சரியான எடையுடன் தேர்ந்தெடுப்பது முக்கியமானது. எனவே இது உடலை கட்டுப்படுத்துவதை விட ஆறுதல் அளிக்கிறது. ஆனால் அவை ஏதேனும் வித்யாசத்தை ஏற்படுத்துகிறதா என்பதில் மருத்துவர் பிரவுனிங் சந்தேகம் கொண்டுள்ளார். "அதிக எடை உங்கள் மீது அழுத்துவது உங்களது சுவாசத்தைத் தடுக்கலாம் அல்லது ரத்த ஓட்டப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்" மேலும் "அவை மிகவும் தடிமனாக இருப்பதால், உடல் அதிக வெப்பமடைவதற்கும் வழிவகுக்கும்."என்று அவர் கூறுகிறார். அதிக எடையுள்ள முககவசங்களைக் குறித்து, பல டிக் டாக் பயனர்கள், உடலை அமைதிப்படுத்தும் அவற்றின் விளைவுகள் பற்றி ஆவலுடன் கூறினாலும், அவற்றின் பயன்பாட்டை ஆதரிக்கும் அறிவியல் சான்றுகள் குறைவாகவே உள்ளன. இது "உறக்கத்தை ஒரு பொருளாக வணிகமயமாக்குவதுடன் தொடர்புடையது" எனக் கூறும் மருத்துவர் வெயிஸ், "நல்ல உறக்கத்தை பெறுவதற்கு அதிகமான பொருட்களை வாங்க வேண்டும் என நாம் மக்களை தள்ளக்கூடாது." என்றும் குறிப்பிடுகிறார். ஸ்லீப்மேக்ஸிங் இளைஞர்களிடையே ஏன் மிகவும் பிரபலமானது? ஜென் ஸி தலைமுறையைச் சேர்ந்தவர்கள், முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்தவர்களை விட சுய-கவனிப்பில் அதிக கவனம் செலுத்துகிறது, மோசமான தூக்கத்துடன் தொடர்புடைய மனச்சோர்வு, உடல் பருமன் மற்றும் டிமென்ஷியா போன்ற கடுமையான உடல் நல அபாயங்களைப் பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். தூக்கத்தை மேம்படுத்துவதற்கான தெளிவான, கட்டமைக்கப்பட்ட திட்டத்தை வழங்குவதால், ஸ்லீப்மேக்ஸ்சிங் மக்களை ஈர்க்கிறது என்று டாக்டர் வெயிஸ் விளக்குகிறார், ஆனால் சிலர் அதை வெகுதூரம் எடுத்துச் செல்லக்கூடும் என்று எச்சரிக்கிறார். " உறங்குவதற்கு முன்னர் செய்ய வேண்டிய பணிகள் என்று ஒரு பெரிய பட்டியலை வைத்திருந்து, அவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற உணர்வு உண்மையில் மன அழுத்தத்தை உருவாக்கி, தூக்கத்தின் தரத்தை எதிர்மறையாக பாதிக்கலாம்." லிசா இதனை ஏற்கவில்லை. அவரின் பார்வையில், "களைப்பாகவும், உணர்ச்சி ரீதியில் நிலையற்றவராகவும், எரிச்சலாகவும் உணர்வதைக் காட்டிலும்" ஸ்லீப்மேக்ஸ்சிங் நடைமுறைகளைப் பின்பற்றுவது மக்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர உதவுமானால், அதனைப் பயன்படுத்துங்கள் என்கிறார் அவர். "இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறை என்பதாலும் அதற்காக நிறைய பொருட்களை வாங்க வேண்டும்" என்பதாலும் இந்த ஸ்லீப்மேக்சிங் மோகம் நீடிக்குமா என்பதில் மருத்துவர் வெயிஸுக்கு சந்தேகம் உள்ளது. அதே சமயம், ஸ்லீப்மேக்ஸ்சிங் மோகம் நீடிக்குமா என்று மருத்துவர் வெயிஸ் சந்தேகிக்கும் அதே வேளையில், தூக்கத்தை முன்னிலைப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்படும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0rzljdpe55o
Checked
Sat, 08/09/2025 - 03:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed