3 months 2 weeks ago
24 APR, 2025 | 04:46 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் கொட்டடி - மீனாட்சிபுரத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்தார். இக்காணி தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொட்டடி - மீனாட்சிபுரம் பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான 1.4 ஏக்கர் பரப்பளவுள்ள காணி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் இந்த காணியை விடுவித்து தரும்படி கோரிக்கை விடுத்துவருகிற போதும் இன்று வரை காணி விடுவிக்கப்படவில்லை. இக்காணி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மேலதிக அபிவிருத்தி தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியாகும். இந்த காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் காணியை யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைக்காக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இக்காணியை உடனடியாக விடுவித்து தருவதற்கு வட மாகாண ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைகள் அதிகரித்துவரும் தற்போதைய சூழ்நிலையில் இந்த காணி அவசியமானது எனவும் துரித நடவடிக்கை எடுத்து காணியை விடுவித்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கைகொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/212828
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 04:16 PM ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை, பழிவாங்குவதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்குவதைத்தவிர வேறுவழியில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் எச்சரிக்கைவிடுத்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான ஏப்ரல் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுனர், தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றபோதும் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மந்தமாக இருக்கின்றது. இதற்கும் அப்பால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் தொடர்பில் மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. மக்களை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே பதவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனை மறந்து சில உள்ளூராட்சி மன்றங்கள் செயற்படுகின்றன. உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் செயலர்கள் இழைக்கின்ற தவறுகளால் ஒட்டுமொத்தமாக எல்லோருக்குமே பாதிப்பு ஏற்படுகின்றது. எமது நிர்வாகக் கட்டமைப்பிலிருக்கின்ற இவர்களின் தவறுகளுக்காக பாதிக்கப்பட்ட மக்களிடம் எனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். முன்னைய ஆட்சிக் காலங்களில் எமது மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு முன்வந்த பலர் பல்வேறு காரணங்களால் குறிப்பாக இலஞ்சம் கோரியமையால் திரும்பிச் சென்றனர். அவர்கள் இப்போதும் மீண்டும் வருகின்றனர். அவர்களுக்குரிய ஒழுங்குகளை நேரிய சிந்தனையுடன் அதிகாரிகள் செய்துகொடுக்கவேண்டும் என ஆளுனர் குறிப்பிட்டார். கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆளுநர் இதன் பின்னர் ஆராய்ந்தார். விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான 10 சதவீதக் கழிவு தொடர்பான விவகாரத்தில் ஒவ்வொரு சந்தையாக நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருப்பதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டார். அந்தச் சந்தையுடன் தொடர்புடைய விவசாய அமைப்புக்களை முதல் கட்டமாக சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார். வீதிகளில் குப்பைகள் போடும் செயற்பாடு தொடர்கின்ற நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சி.சி.ரி.வி. கமெராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார். சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காண்பிக்கும் நிலைமை காணப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் சட்டவிரோத கட்டுமானங்களை உள்ளூராட்சி மன்றங்கள் நேரடியாக இடித்தழிக்கக் கூடியதாக இருந்ததாகவும் தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டினுள் உள்ளமையால் தம்மால் வழக்குத் தாக்கல் செய்யக் கூடியதே ஒரே வழி எனக் குறிப்பிட்டனர். இதன்போது தொடரப்பட்ட பல வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாகவும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் தெரிவித்தனர். குறிப்பாக யாழ். மாநகர சபையால் சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் யாழ். மாநகர சபையாலேயே வழக்கு மீளப் பெறப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன என ஆணையாளர் குறிப்பிட்டார். அவ்வாறு மீளப்பெறப்பட்ட வழக்குகள் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து மீளவும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேபோல வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் சட்டவிரோதமானவையே. அதனை அகற்றுவதற்கான தொடர் நடவடிக்கை உள்ளூராட்சி மன்றங்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தினார். மேலும், இந்த விடயங்களில் உள்ளூராட்சி மன்றங்களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார். மரம் நடுகையை ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றங்களும் ஊக்குவித்து செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து வடக்கின் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் கட்டட அனுமதி, ஆதனப் பெயர் மாற்றம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அவற்றில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை என்பன தொடர்பில் ஆராயப்பட்டன. இவற்றுக்கான அனுமதி வழங்குவதில் உள்ள தாமதங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அவற்றைக் களைவதற்கு தொடர்புடைய திணைக்களங்களை எதிர்காலத்தில் அழைத்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது. வவுனியா நகர சபை மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய ஆளணிகள் வழங்குவது மற்றும் கட்டடங்கள் அமைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது. மேலும், வீதிப் போக்குவரத்துத் தொடர்பில் கடந்த கூட்டத்தில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில் அது தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் தெரிவித்தனர். அதேபோல நகர அபிவிருத்தி அதிகார சபையுடனான விவகாரங்களிலும் முன்னேற்றம் உள்ளதாகவும் குறிப்பிட்டனர். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/212824
3 months 2 weeks ago
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் தடை விதிப்பதாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தொட்டு சாப்பிடுவதற்கு இந்த மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சான்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருளாக மயோனைஸ் இருந்து வருகிறது இந்நிலையில், மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள தடை உத்தரவில், சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழகத்தில் மயோனைஸ் உணவுப்பொருளுக்கு ஏப்.8ம் தேதி முதல் அடுத்த ஆணடு வரை தடை விதிக்கப்படுகிறது. ஓராண்டுக்கு இந்த தடை விதிப்பு தொடரும். தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூல முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல், உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B8%E0%AE%95%E0%AE%95-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F/175-356131
3 months 2 weeks ago
நல்ல காலம் , ராகுல் தப்பித் பிழைத்து சாதனைகள் செய்துள்ளார் ......... ! 😂 நன்றி கந்தப்பு ...... !
3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 24 APR, 2025 | 12:57 PM தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என தமிழ்தேசிய பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய பேரவை உள்ளுராட்சி சபை தேர்தல் யாழ்ப்பாண மாநரகசபைக்கான முன்மொழிவுகள் செயல்திட்ட ஆவணத்தை இன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. டிஜிட்டல் முறையிலான செயற்திட்டங்களுடன் தூய கருக்களுடன் தூய மாநகரத்தை கட்டமைப்பதற்காக, யாழ்ப்பாண மாநகரசபை வட்டாரங்களில் இருந்து தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ்தேசிய உணர்வு மிக்கவர்களால், துடிப்புடன் செயற்படும் நேர்மையான ஊழல் அற்ற புதிய தலைவர்களை உள்ளடக்கிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்திற்கே உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். மாநகரசபையின் வருமானங்கள் மற்றும் அரச அரசசாரத நிதிகள் உரிய முறையயில் திட்டமிடப்பட்டு, நிலையான அபிவிருத்தியை நோக்கி இலஞ்சம் ஊழல் அற்ற பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதற்கு சைக்கிள் சின்னத்திற்கு மக்களின் ஏகோபித்த ஆணை அமையட்டும். எமது ஆட்சிக்காலத்தில் மாநகரசபைக்காக மக்கள் என்ற எண்ணம் நீக்கப்பட்டு மக்களிற்காகவே மாநகரசபை என்ற எண்ணம் உருவாக்கப்பட்டு மக்களிற்கான சேவைகளிற்கே முதன்மையளிக்கப்படும். தேங்கியிருக்கும் மக்கள் சார் தேவைகள் அனைத்தும், நாம் ஆட்சி அமைத்து மூன்று மாத காலத்திற்குள் மக்கள் நடமாடும் சேவைகள் ஊடாக சீர்செய்யப்படும். கழிவகற்றல், மின்விளக்கு பொருத்தல், குடிநீர் தொடர்பான சேவைகள் முறைப்பாட்டு பெறுதல்கள் டிஜிட்டல் முறையில் இலகுபடுத்தப்படுவதுடன், சோலை வரி உட்பட ஏனைய சேவைகளும் டிஜிட்டல் முறையில் இலகுபடுத்தப்படும். தற்காலத்தில் ஏற்பட்டுள்ள சமூகசீர்கேடுகள் மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து யாழ்மாநகரசபையின் குடியிருப்பாளர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் 24 மணிநேரமும் கண்காணிக்ககூடிய வகையில் தரமான கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் சட்டவிரோத செயற்பாடுகளிற்கு ஆதரவாக செயற்படுவோருக்கு பாரபட்சம் இன்றிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அனைத்து பிரதேசங்களிலும் நீர் விநியோக செயற்பாடு முன்னெடுக்கப்படுவதுடன் மழைநீர் சேகரிப்பு திட்டமும் விரிவாக முன்னெடுக்கப்படும். உள்ளுர் வீதிகள் பாரபட்சமின்றி செப்பனிடப்பட்டு திருத்தப்படுவதோடு வடிகால் அமைப்பும் சீர் செய்யப்பட்டு தெருவிளக்குகளும் பொருத்தப்படும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மதகுகளும் பாலங்களும் சீராக்கப்படுவதுடன் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு அவசியமான பாலங்கள் மதகுகளை அமைப்பது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நகரத்தின் பிரதான வடிகால்களில் இருந்து கடலிற்கு செல்லும் வடிகால்கள் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாத வகையில் நிபுணத்துவ ஆய்வுடன் சீரமைக்கப்படும். சிறப்பாக செயற்படும் சனசமூக நிலையங்கள் விளையாட்டு கழகங்கள் எதிர்கொள்ளும் நிதிநெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக சபையினால் வழங்கப்படும் ஒப்பந்த வேலைகளில் இவர்களிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். யாழ்மாநகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஆலயங்கள் பள்ளிவாசல் மதவழிபாட்டு தலங்கள் போன்றவற்றிற்கு அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்குவதுடன் அவற்றிற்கு தேவையான உதவிகள் சிறப்பான முறையில் வழங்கப்படும். யாழ்மாநகரசபை எல்லைக்குள் காணப்படும் குளங்கள் யாவும் உரிய முறையில் புனரமைத்து பாதுகாக்கப்படுவதுடன், குளங்களை சுற்றி நடைபாதைகள் மற்றும் பொதுமக்கள் ஓய்வெடுப்பதற்கான வசதிகள் உருவாக்கப்படும். தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும். யாழ்ப்பாண மாநகரசபையின் உண்மையான மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராகவுள்ள சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள். நீங்கள் வாக்களிக்கும் இறுதி நேரத்திலும் கூட சிந்தனை கலையான திடமான மாற்றத்தை உருவாக்க தமிழ்தேசிய பேரவையாக பயணிக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்திற்கே வாக்களிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212803
3 months 2 weeks ago
இந்த வருடத்திற்கான ஏலத்தில் சென்னை அணி 14 கோடி வரை ராகுலினை எடுப்பதற்காக டெல்லியுடன் போட்டி போட்டது.
3 months 2 weeks ago
வானில் நாளை அரிய காட்சி தென்படும் Published By: DIGITAL DESK 3 24 APR, 2025 | 01:14 PM வானத்தில் வெள்ளி (Venus), சனி (Saturn) ஆகிய கோள்களும் சந்திரனும் (Moon) நெருக்கமாகத் தோன்றும் அரிதான காட்சி நிகழவுள்ளது. இந்த காட்சி நாளை வெள்ளிக்கிழமை (25) அதிகாலை 5.30 மணியளவில் கிழக்கு வானில் காண முடியும் கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களும் சந்திரனும் நெருக்கமாகத் தோன்றும் அரிதான காட்சியை வெற்றுக் கண்களால் பார்வையிட கிடைத்த அரிய சந்தர்ப்பம் இதுவாகும். தொலைநோக்கி உள்ளிட்ட எந்தக் கருவியும் இதற்குத் தேவையில்லை. பூமியிலிருந்து பார்க்கும்போது இந்த காட்சி புன்னகை ஒரு முகத்தை போன்ற தோற்றத்தை ஒத்திருக்கும். சூரிய உதயத்திற்கு முன்னர் கிழக்கு வானில் இந்த அரிய காட்சி சுமார் ஒரு மணி நேரம் தென்படும். உலகில் உள்ள அனைவரும் பார்வையிடலாம். உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து மூன்றும் இணைந்து ஒரே இடத்தில் இருக்கும் போது புதன் (Mercury) கோள் தோன்றலாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212801
3 months 2 weeks ago
வொலொடிமிர் ஜெலென்ஸ்கி சில சீனர்கள் ட்ரோன்களை ரஸ்யாவில் செய்கிறார்களாம். அதற்கான தொழில் நுட்பத்தை ரஸ்யா சீனாவிடம் இருந்து திருடி உள்ளதாம்.
3 months 2 weeks ago
பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த சந்தேகநபர்கள் தலை மற்றும் முகங்களை மறைக்கும் வகையில் தலைக்கவசங்களை அணிந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், அது சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரின் பாதுகாப்பிற்காக மட்டுமே. எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் ஆய்வு செய்யுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/317255
3 months 2 weeks ago
தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றுடன் ஏப்ரல் 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசு நிறுவனங்கள், பொலிஸார், முப்படைகள், பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் தபால்மூல வாக்கு விண்ணப்பதாரர்கள் இந்த நான்கு நாட்களில் தங்கள் தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 648,495 விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/317270
3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 24 APR, 2025 | 11:33 AM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ஒருவரை - ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவரை, சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட ஒருவரை உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நியமித்துள்ளமை முற்றிலும் பொருத்தமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக ஷானி அபயசேகரவை நியமித்த கடும் கேள்விகளை எழுப்புகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ஒருவரை - ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவரை, சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட ஒருவரை இந்த குழுவின் முக்கிய பொறுப்பிற்கு நியமித்துள்ளமை முற்றிலும் பொருத்தமற்றது. இது வெறுமனே நடைமுறை ரீதியாக தவறான நடவடிக்கை மாத்திரமல்ல, இது ஒவ்வொரு நெறிமுறை தரத்தையும் மீறுவதாகும், இது செயல்முறையின் நம்பகதன்மை மீது இருண்ட நிழலை போர்த்துகின்றது. சட்டரீதியான முடிவுகள் நியாயமான விதத்தில் எடுக்கப்படுவது மாத்திரம் முக்கியமானதல்ல, நீதித்துறையின் மீது மக்களிற்கு நம்பிக்கை ஏற்படுதவற்கு அவ்வாறான முடிவுகள் வெளிப்படையானதாக நியாயமானதாக எடுக்கப்பட்டதாக மக்கள் உணர்வதும் அவசியம். மக்களின் நம்பிக்கை ஏற்கனவே மிகவும் பலவீனமான நிலையில் உள்ள சூழலில் இவ்வாறான தீர்மானங்கள் சந்தேகம் மற்றும் ஏமாற்றத்தை ஆழப்படுத்தும். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்ற தருணத்தில் ஷானி அபயசேகர சிஐடியின் இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த தாக்குதல் குறித்த விசாரணைகளில் முக்கியமானவராக காணப்பட்டார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயும் பொலிஸ் குழுவில் அவரையும் இணைத்திருப்பது, நியாயபூர்வமான கரிசனைகளை எழுப்புகின்றது, குறிப்பாக அறிக்கையில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்போது. ஷானி அபயசேகரவின் சமீபத்தைய அரசியல் அறிக்கைகள் இந்த விடயத்தை மேலும் குழப்பகரமானதாக்குகின்றது, அவரது பக்கச்சார்பினை தெளிவாக வெளிப்படுத்துகின்றது. இந்த விசாரணையை மேற்பார்வை செய்யும் அதிகாரிக்கு அரசியல் தொடர்புகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் பொதுமக்களிற்கு எவ்வாறு நம்பிக்கை ஏற்படும். இது ஒரு கட்சி சார்ந்த விடயமல்ல, இது தார்மீக தெளிவு மற்றும் நிறுவன ஒருமைப்பாடு சார்ந்த விடயம். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு வெளிப்படையான நம்பகமான நியாயமான செயல்முறை தேவை. இதற்கு குறைவான எதுவும் பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமல்ல பொறுப்புக்கூறல் என்ற கருத்திற்கே அநீதி இழைப்பதாக அமையும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212790
3 months 2 weeks ago
கோழைத்தனமான தக்குதல், சிங்களவன் மாதிரியே
3 months 2 weeks ago
ஃபார்முக்கு வந்த ரோஹித், உருக்குலைந்த சன்ரைசர்ஸ் - இஷான் கிஷன் அவுட் ஆகாமலே வெளியேறியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 24 ஏப்ரல் 2025, 02:06 GMT ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 23) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. 144 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டம் ஒரு தரப்பாக அமைந்தது. வலுவான பேட்டிங் வரிசையை வைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஸ்கோரை அடைவது மிகவும் எளிமையாக இருந்தது. பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் என சன்ரைசர்ஸ் தடுமாறியபோதே வெற்றி மும்பை இந்தியன்ஸ் பக்கம் வந்துவிட்டது. அதன் பிறகு கிளாசன், அபினவ் மனோகர் ஆட்டத்தால் கௌரமான ஸ்கோரை பெற்றாலும் அது ஹைதராபாத் ஆடுகளத்தில் சேஸிங் செய்யக் கடினமானதாக இருக்கவில்லை. இதனால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆட்டம் ஒருதரப்பாக அமைந்தது. இந்திய இளைஞர்களை கொரிய கலாசாரம் கவர்ந்திழுக்க என்ன காரணம்?20 ஏப்ரல் 2025 படுக்கையில் பாம்பு கடித்து இளைஞர் பலியானதாக வைரலான வீடியோ - அதிர வைக்கும் உண்மை21 ஏப்ரல் 2025 சன்ரைசர்ஸ் அணி வெளியேறுகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டை 0.673 என வலுவாக வைத்திருப்பதால், 3வது இடத்தில் இருந்த ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி அடுத்து வரும் 6 போட்டிகளிலும் வென்றாலும் ப்ளே ஆஃப் செல்லுமா என்பது சந்தேகம்தான். கணித அடிப்படையில் வேண்டுமானால் ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்று கூறலாம். ஆனால், நிதர்சனத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கான ப்ளே ஆஃப் வாய்ப்புக் கதவுகள் ஏறக்குறைய அடைக்கப்பட்டுவிட்டன. மெதுவான ஆடுகளம் கொண்ட வான்ஹடேவில் கடந்த வாரம் நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. இந்த முறை பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான ஹைதராபாத் ஆடுகளத்தில் சன்ரைசர்ஸ் அணியை 143 ரன்களில் சுருட்டி, மும்பை அணி வென்றுள்ளது. ஆபத்தான நிலையில் சன்ரைசர்ஸ் - மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது? சிஎஸ்கே அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற உள்ள ஒரே வழி என்ன? வட கொரியாவில் மாரத்தான் ஓடிய வெளிநாட்டவர் அந்நாட்டு மக்கள் குறித்து கூறுவது என்ன? 80 வயதிலும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் சாதிக்கும் மூதாட்டி ரோஹித் சர்மா மிரட்டல் ஃபார்ம் பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை அணியின் நம்பிக்கை நாயகனாகத் திகழும் ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பி, தொடர்ந்து 2வது அரைசதம் அடித்திருப்பது மிகப்பெரிய பலம். தொடக்கத்தில் சில போட்டிகளில் ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது கவலையை அளித்திருந்தாலும், கடந்த சில போட்டிகளாக ரோஹித் சர்மா ஆங்கர் ரோல் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது அந்த அணிக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. ரெக்கில்டன் விக்கெட்டை விரைவாக இழந்தபோதிலும், வில் ஜேக்ஸுடன் இணைந்து ரோஹித் சர்மா பவர்ப்ளேவில் ஸ்கோரை 56 ரன்களுக்கு உயர்த்தினார். முதல் 7 போட்டிகளில் 0, 8, 13, 17, 18, 26, 76* ரன்கள் சேர்த்திருந்த ரோஹித் சர்மா கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவரது ரன்கள் படிப்படியாக அதிகரித்து வருவது மும்பை அணிக்குப் பெரிய பலம். இந்த ஆட்டத்திலும் உனத்கட், ஈஷன் மலிங்கா ஓவரில் 3 பெரிய சிக்ஸர்களை விளாசி, 35 பந்துகளில் அரைசதத்தை ரோஹித் சர்மா நிறைவு செய்தார். 2வது விக்கெட்டுக்கு வில் ஜேக்ஸுடன் சேர்ந்து 64 ரன்களும், ஹர்திக் பாண்டியவுடன் சேர்ந்து 53 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் சேர்த்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் 76 ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் 46 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சூர்யகுமார் 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என 40 ரன்களிலும், திலக் 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரவில் நிம்மதியாக உறங்குவது எப்படி?4 மணி நேரங்களுக்கு முன்னர் தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?23 ஏப்ரல் 2025 சன்ரைசர்ஸை திணறடித்த போல்ட், சஹர் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை மும்பையின் டிரென்ட் போல்ட், தீபக் சஹர் இருவரும் சேர்ந்து உருக்குலைத்தனர். புதிய பந்தில் இருவரின் ஸ்விங் பந்துவீச்சையும் சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸின் பேட்டர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். போல்ட் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், தீபக் சஹர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டத்தைக் கைப்பற்றினர். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகன் விருது வென்றார். பும்ரா 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும், சான்ட்னர் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களும் கொடுத்து சிக்கனமாகப் பந்துவீசினர். பவர்ப்ளே ஓவரில் 5 ஓவரில் 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது. பவர்ப்ளேவில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா இருவருமே பெரிய ஷாட்களுக்குத்தான் முக்கியத்துவம் அளித்தார்களே தவிர பந்து ஸ்விங் ஆகி வருகிறதா, நிதானமாக பேட் செய்யலாமா என்று சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஆடுகளத்தில் இருந்த லேசான ஈரப்பதத்தால் பந்து சற்று நின்று, நன்றாக ஸ்விங் ஆனது. இதைக் கவனிக்காமல் பெரிய ஷாட்களுக்கு முயன்று டிராவிஸ் ஹெட்(0), அபிஷேக்(8) மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தீபக் சஹர் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்து, இஷான் கிஷன்(1), நிதிஷ் ரெட்டி(2) இருவர் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதில் இஷான் கிஷன் ஆட்டமிழந்ததுதான் வேடிக்கையாக இருந்தது. தீபக் சஹர் வீசிய பந்து லேசாக ஸ்விங் ஆகி இஷன் கிஷனுக்கு லெக் சைடில் சென்றது. அந்தப் பந்தை விக்கெட் கீப்பர் ரெக்கில்டன் கேட்ச் பிடித்தார். ஆனால், ஆட்டமிழந்து விட்டதாக நினைத்து இஷான் கிஷன் பெவிலியனுக்கு செல்லத் தொடங்கினார், மும்பை அணியில் எந்த பேட்டரும் நடுவரிடம் அவுட் கேட்கவில்லை. பந்துவீச்சாளர் தீபக் சஹர்கூட நடுவரிடம் அவுட் கேட்கவில்லை, நடுவரும் முதலில் வைட் பந்துக்காக கையைத் தூக்கி, இஷான் கிஷன் சென்றதைப் பார்த்து அவுட் வழங்க கையை மேலே தூக்கினார். ஆனால், அதன்பின் டிவி ரீப்ளேவில் பார்த்தபோது, அல்ட்ரா எட்ஜில் இஷான் கிஷன் பேட்டில் பந்துபடாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது தெரிய வந்தது. ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அனிகேத் வர்மா 12 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கவே, 5 விக்கெட் இழப்புக்கு 35 ரன்களுடன் சன்ரைசர்ஸ் அணி திணறியது. காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது சென்னையில் இருந்த 'கோல்வால்கர்' என்ன செய்தார்?22 ஏப்ரல் 2025 தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?23 ஏப்ரல் 2025 காப்பாற்றிய கிளாசன் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்ததால் விரைவாகவே இம்பாக்ட் ப்ளேயராக அபினவ் மனோகர் களமிறங்கினார். கிளாசனுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய மனோகர், மெதுவாக ரன்களை சேர்த்தார். கிளாசன் அவ்வப்போது கிடைக்கின்ற வாய்ப்பில் பவுண்டரி. சிக்ஸர்களை விளாசினார். விக்னேஷ் புத்தூர் ஓவரில் சிக்ஸர், 2 பவுண்டரி என கிளாசன் அடித்தார். பொறுமையாகவும், பொறுப்பாகவும் ஆடிய கிளாசன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது இந்த சீசனில் கிளாசன் அடிக்கும் முதல் அரைசதம். 17 முதல் 19வது ஓவர் வரை கிளாசன், மனோகர் வேகமாக விளாசி 35 ரன்களை சேர்த்தார். ஆனால், 19வது மற்றும் 20வது ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஆட்டம் அடங்கியது. பும்ரா வீசிய 19வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்கூப்பில் சிக்ஸர் அடித்த கிளாசன், அதே ஓவரில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அரிதான ஹிட்விக்கெட் போல்ட் வீசிய கடைசி ஓவரில் 43 ரன்கள் சேர்த்திருந்த அபினவ் மனோகர் ஹிட் விக்கெட்டில் வெளியேறினார். கம்மின்ஸ் ஒரு ரன்னில் போல்டானார். போல்ட் வீசிய யார்க்கரை தட்டிவிட ஸ்டெம்புக்கு அருகே மனோகர் சென்றபோது பேட் ஸ்டெம்பில் பட்டதால் ஹிட்விக்கெட்டில் ஆட்டமிழந்தார். இது ஐபிஎல் டி20 போட்டியில் மிகவும் அரிதான ஹிட் விக்கெட்டாகும். சன்ரைசர்ஸ் அணியில் கிளாசன்(71), மனோகர்(43) இருவரின் ரன்களை தவிர்த்துப் பார்த்தால் மற்ற பேட்டர்கள் யாரும் 10 ரன்கள்கூட எடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். கிளாசன் மட்டும் அணியின் சூழலை உணர்ந்து ஆடவில்லை என்றால், சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களில் சுருண்டிருக்கும். காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது சென்னையில் இருந்த 'கோல்வால்கர்' என்ன செய்தார்?22 ஏப்ரல் 2025 கடல்நீரில் இருந்து கார்பனை உறிஞ்சும் புதிய திட்டம் காலநிலை மாற்ற பிரச்னைக்கு தீர்வாகுமா?22 ஏப்ரல் 2025 ஆட்டமிழக்காமல் வெளியேறிய இஷான் கிஷன் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆட்டத்தில் தீபக் சஹர் பந்துவீச்சில் இஷான் கிஷன் ஆட்டமிழந்துதான் வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது. தீபக் சஹர் வீசிய 3வது ஓவரில் முதல் பந்தை இஷான் கிஷன் எதிர்கொண்டார். பந்து லேசாக ஸ்விங் ஆகி இஷான் கிஷனின் இடதுபுறமாகச் சென்றது. இஷான் கிஷனும் லெக்சைடில் சென்ற பந்தை அடிக்க முயன்றார், ஆனால் முடியவில்லை. பந்து விக்கெட் கீப்பர் ரெக்கில்டனிடம் சென்றது. மும்பை அணியில் எந்த வீரரும் நடுவரிடம் இஷான் கிஷன் அவுட் செய்யப்பட்டதாக முறையிடவில்லை. இஷான் கிஷனின் இடதுபுறம் சென்ற பந்து பேட்டில் படாமல் சென்றதால் நடுவரும் வைடு வழங்குவதற்காக கைகை அகலமாக விரித்தார். ஆனால், திடீரென இஷான் கிஷன் அவுட் ஆகிவிட்டதாக நினைத்து பெவிலியன் செல்லத் தொடங்கினார். மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, வேகமாக ஓடி வந்து இஷன் கிஷானின் ஹெல்மெட்டை பிடித்து, "நடுவரின் முடிவைப் பார்த்துவிட்டு பெவிலியன் செல்லுங்கள்" என்றார். ஆனால், இஷான் கிஷன் அதைக் கேட்காமல் சிரித்துக் கொண்டே பெவிலியன் நோக்கி நடந்தார். இதைக் கவனித்த நடுவர் வைடுக்காக கையை விரித்திருந்தவர், திடீரென அவுட் வழங்க கையை உயர்த்தினார். தீபக் சஹரும் நடுவரைப் பார்த்து அவுட் கேட்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகத்தில் அவுட் கேட்கவே நடுவரும் அவுட் வழங்கினார். நடுவரே அவுட் வழங்காமல் இருந்த நிலையில், மும்பை வீரர்கள் யாரும் நடுவரிடம் அவுட் கேட்காத நிலையில், விக்கெட் கீப்பர் ரெக்கில்டன் நடுவரிடம் முறையிடாத நிலையில் இஷான் கிஷன் ஏன் வெளியேறினார் என்பது குழப்பமாக இருந்தது. அதன் பிறகு இஷன் கிஷன் ஆக்ஸன் குறித்து ரீப்ளே செய்து பார்த்தபோது, இஷான் பேட்டில் பந்து படவில்லை என்பது அல்ட்ரா எட்ஜில் தெரிந்தது. தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் உயிருக்கே ஆபத்து - ஏன் தெரியுமா?22 ஏப்ரல் 2025 இறந்து 38 ஆண்டு கழித்தும் பிரிட்டிஷ், ஜெர்மன் பத்திரிகைகளை முட்டாளாக்கிய 'ஹிட்லர்'23 ஏப்ரல் 2025 முன்கூட்டியே திட்டமிடல் அல்ல பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், "வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிடைக்கின்ற தருணத்தைச் சரியான வழியில் வீரர்கள் கொண்டு சென்றனர். எங்கள் அணியில் ஒவ்வொரு வீரருக்கும் சரியான ஆட்டம் அமைந்துவிட்டால், நாம்தான் அனைத்து அணிகளையும் ஆதிக்கம் செய்வோம் என நினைத்தேன்" என்று தெரிவித்தார். மேலும், "தீபக் சஹர், போல்ட் இருவரும் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தனர். ரோஹித், ஸ்கை இருவரும் ஃபினிஷிங் செய்தனர். அற்புதமான வெற்றி. கேப்டன்சியை பொருத்தவரை சூழலுக்கு ஏற்ப நான் பதில் அளிக்க வேண்டும், செயல்பட வேண்டும். முன்கூட்டியே திட்டமிட்டுவருவது சரியல்ல. இதுபோன்ற சூழலில் பவர்ப்ளேவில் சிறப்பாகப் பந்துவீசிய தீபக் சஹருக்கு தொடர்ந்து ஓவர்கள் ஏன் வழங்கக்கூடாது என்பது அந்த நேரத்தில் உதிக்கும் சிந்தனை. அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம், மன நிறைவாக இருக்கிறது" எனவும் தெரிவித்தார் ஹர்திக் பாண்டியா. சுட்டெரிக்கும் கோடையிலும் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் 10 எளிய வழிகள்22 ஏப்ரல் 2025 5,000 எறும்புகள் ரூ.6.5 லட்சம்: நூதன முறையில் எறும்புகளை கடத்தி இவர்கள் என்ன செய்கிறார்கள்?22 ஏப்ரல் 2025 அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ் இடம்: பெங்களூரு நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத் நாள் - ஏப்ரல் 25 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – மும்பை நேரம்- மாலை 3.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – டெல்லி நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-417 ரன்கள் (8 போட்டிகள்) நிகோலஸ் பூரன்(லக்னெள)-377 ரன்கள் (9 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ்(மும்பை) 373 ரன்கள் (9 போட்டிகள்) பர்பிள் தொப்பி யாருக்கு? பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 16 விக்கெட்டுகள் (7 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c62zd10vyv2o
3 months 2 weeks ago
நல்ல தலைவரின் வழிகாட்டலில் சொற்ப காலமென்றாலும் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழ்ந்தோம், இறக்கும் வரை இந்த நிம்மதி போதும் சோபா ஒரு தமிழ் இலக்கிய சக்தியல்ல, அவர் ஒரு சகதிதான், சக்தியாக கொண்டாடுபவர்களுக்கு இந்த உண்மை கசக்கும்
3 months 2 weeks ago
சோபா சகதி அருமையான கதைசொல்லி….மாற்று கருத்தில்லை… என்ன…. கதை சொல்லும் ருசியில், அதில் தனக்கு எலும்புதுண்டுகள் அல்லது மீடியா வெளிச்சம் கிடைக்கும் என்பதற்காக தான் சம்பந்தபட்டும்…இனம் சம்பந்தபட்டும் பல பொய்களை அவிட்டு விடுவார்… சீமானுக்கு அடுத்த படியாக….தமிழ் நாட்டில் ஈழப்போராட்டம் பற்றிய எதிர்மறை விம்பத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் சகதி (இருவரின் அணுகுமுறையும் எதிரெதிர்துருவங்கள்). சீமானாவது போராட்டம் முடிந்த பின் செய்தார். சகதி, புஷ்பராணி, புஷ்பராஜா போன்றோர் அவர்கள் உயிரை கொடுத்து போராடி கொண்டிருந்த போதே, தாம் செய்வது கடைசியில் இனத்துக்குத்தான் பாதகமாக முடியும் என தெரிந்து கொண்டே, கழுதறுப்பை செய்தவர்கள். எனவேதான்…. சகதி….
3 months 2 weeks ago
இம் முறை ராகுல் கான் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் மத பயங்கரவாதத்தை கண்டித்துள்ளனராம்
3 months 2 weeks ago
உறவினர் சரியாக உச்சரித்த காராணத்தால் தப்பி பிழைத்து ] 😂 எனக்கு சிங்களம் பேசவே தெரியாதே சுற்றுலாவில் நின்றபோது காலி பென்தோட் பகுதிகளில் உறவினர்கள் சொன்ன கதைகள் நினைவுக்கு வந்து என்னையும் பயமுறுத்தியது தான் சிங்களம் படித்து காட்டு என்று சொல்லியும் அடி நடந்திருக்காம் பழை காலத்தில் முஸ்லிம் மத பயங்கரவாதம் அதனால் அதற்கு வெள்ளை அடிக்க வேண்டும் என்ற இவர்களின் அட்டகாசங்கள் 😒
3 months 2 weeks ago
நானும் அதையேதான் சொல்கிறேன். ஒரே விடயத்தை சொல்லும் நீங்களும் நானும் பந்தயம் கட்டினால் அது IPl match fixing போல் ஆகிவிடும்🤣. சீமான் தனியே கேட்டால், போன சட்டசபை தேர்தலில் எடுத்ததை விட (8%) நாலு விழுக்காடாவது கூட எடுப்பார், அதாவது அவர் கட்சி வளர்ந்துள்ளது என்போர்தான் என்னுடன் பந்தயம் கட்ட வேண்டும். இந்த விளக்கம் எதுவும் தேவையில்லை அண்ணை. இசையை போல பெரிய பந்தயம் எதுவும் கூட கட்ட தேவையில்லை. வெறும் 1 ஈரோதான் பந்தயம். கேள்வி கீழே: சீமான் தனியே கேட்டால், போன சட்டசபை தேர்தலில் எடுத்ததை விட (8%) நாலு விழுக்காடாவது கூட எடுப்பார், அதாவது அவர் கட்சி வளர்ந்துள்ளது என்போர்தான் என்னுடன் பந்தயம் கட்ட வேண்டும்.
3 months 2 weeks ago
தனக்கு வந்தால் இரத்தம், அதே மற்றவருக்கு வந்திருந்தால் தக்காளி சட்னியா, பயங்கரவாத தாக்குதல்கள் எங்கு நடந்தாலும், யார் நடத்தினாலும் கண்டிக்கப்படவேண்டும், 2019 இல் இலங்கையில் நடை பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் உள்ளடங்கலாக.
3 months 2 weeks ago
நம்பிக்கைகள் உண்மையல்ல. நிச்சயமாக ஆரம்பத்தில் புலிகள்/டெலோ ஒரு சாதி என்றும், புளொட் இன்னொரு சாதி என்றும், இவர்கள் இருவரும் அல்லாத இன்னும் மூன்று சாதிகளின் அமைப்பு ஈபிஆர் எல் எப் எண்டுமே மக்கள் பார்த்தார்கள். ஆனால் சிங்களவன் வெளுத்த வெளுவையின் உக்கிரம், பின்னாளில் புலிகள் என்னை இயக்கங்களை தடை செய்தமை - இந்த பகுப்புகளை நீக்கி அனைவரையும் ஒரு குடையில் கீழ் கொண்டு வந்தது. அப்படி ஒரு நிலை வரும் போது, அறவே சாதிய, பிரதேசவாத எண்ணமற்ற தலைவர் புலிகளின் தலைவராக இருந்தமை - ஒரு மின்னல் போல - வரலாற்றில் ஒரு சொற்ப நேரம் (1987-2009) -நாம் சாதிகள் கடந்து இனமாக ஒன்றுபட வழிகோலியது.
Checked
Sat, 08/09/2025 - 03:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed