புதிய பதிவுகள்2

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

3 months 2 weeks ago
நீங்கள் சொல்வது மிகவும் சரியான ஒன்றே, விசுகு ஐயா. ஆனால் இந்த வளர்ச்சி இப்படியே நீண்டு போய் இவர்கள் இன்னும் வளரப் போவதில்லை என்பது தான் என் அபிப்பிராயம். அத்துடன் இவர்கள் ஒரு மாற்றுச்சக்தியாக வந்தது போல, இவர்களுக்கே மாற்றாக இன்னும் ஒருவர் இப்பொழுது வந்துவிட்டார். மாற்றம் ஒன்று தேவை என்று பெரும்பாலான மக்கள் வீதியில் இறங்காத வரை மாற்றுச்சக்திகள் எங்கும் ஆட்சிக்கு வரப்போவதில்லை.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி

3 months 2 weeks ago
நீங்கள் இப்பிடி ஒரு அப்பாவியா? அவர் சொன்னதை நம்பி விட்டீர்களா…? 😎 உள்ளூராட்சி தேர்தலுக்காக… அவர் புளுகித் தள்ளுவதை எல்லாம் நம்பாதேங்கோ… 😁

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

3 months 2 weeks ago
அருமையான கருத்துகள் இதை நானும் ஆமோதிக்கிறேன். விசுகர் நான் உங்களுடன் அடிபட. விரும்பவில்லை ஏதோ உங்கள் விரும்பம்போல் செல்லுங்கள்‘ 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லலாம்,.....உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான்.

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

3 months 2 weeks ago
கருத்து கணிப்பில் கணக்கே எடுக்கப்படாத நாம் தமிழர் கட்சி தற்போது கருத்து கணிப்பில் நீங்கள் உட்பட சேர்த்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது

ஸ்ரீ தலதா வழிபாடு; ஆரம்ப நிகழ்வுக்காக இராஜதந்திரிகள் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணம்!

3 months 2 weeks ago
புனித தந்ததாது கண்காட்சி நிகழ்வு இன்று ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் புனித தந்ததாது கண்காட்சி நிகழ்வு 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று பிற்பகல் தலதா மாளிகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வுக்காகக் கண்டியில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, கண்டியில் குறித்த நிகழ்வை முன்னிட்டு விசேடப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் சுதத் மாசிங்க தெரிவித்தார். தலதா மாளிகை யாத்திரையின் போது, புனித தந்ததாதுவை பார்வையிடுவதற்கு முக்கிய பிரமுகர்களுக்காக விசேட வரிசைகள் ஏற்படுத்தப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிக்குமார் மட்டுமே தலதா மாளிகைக்குள் நுழைய விசேட அனுமதி வழங்கப்படும் எனவும் அவர்களும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், வெளிநாட்டுத் தூதுவர்கள் பிரமுகர்களாக, விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பொதுமக்கள் யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பாக, புனித தந்ததாதுவை வழிபட வாய்ப்பு வழங்கப்படும். தலதா மாளிகை யாத்திரைக்குப் பிரவேசிக்க மூன்று வரிசைகளும், வெளியேற இரண்டு வரிசைகளும் அமைக்கப்படும் எனவும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் சுதத் மாசிங்க தெரிவித்துள்ளார். https://tamil.colombotimes.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/

மயோனைஸுக்கு ஓராண்டு தடை

3 months 2 weeks ago
தமிழ்நாட்டில் பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைசுக்கு தடை ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மயோனைஸ் என்பது வழுவழுப்பான அரை திடப்பொருள் வடிவில் இருக்கும் காரமில்லாத உணவுப் பொருளாகும். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 24 ஏப்ரல் 2025, 13:03 GMT தமிழ்நாடு அரசு பச்சை முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் எனும் உணவுப்பொருளை உணவகங்கள், கடைகளில் தயாரிப்பது, சேமித்து வைப்பது மற்றும் விற்பனை செய்வதை தடை செய்துள்ளது. மயோனைஸ் என்பது ஷவர்மா, வறுத்த சிக்கன் போன்ற உணவு வகைகளுக்கு தொட்டுக்கொள்ளவும், சில வகை சாஸ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பச்சை முட்டை, எண்ணெய் ஆகிய இரண்டே மயோனிஸின் முக்கிய மூலப் பொருட்களாகும். நீங்கள் சாப்பிடும் முறைக்கும் உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இன்டர்மீடியா: உணவுக் கழிவுகளை சுவைமிக்க உணவாக மாற்றும் பூஞ்சை - விரும்பி உண்ணும் மக்கள் இறைச்சி உண்பதை சில காலம் நிறுத்தி, பின்னர் மீண்டும் சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படுமா? உணவில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் பாதுகாப்பானதா? மயோனைஸ்க்கு தடை ஏன்? பச்சை முட்டை பயன்படுத்தி மயோனைஸ் தயாரிப்பது இந்திய உணவு பாதுகாப்பு விதிகளுக்கு புறம்பானது என கூறி தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் லால்வினா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், "உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006-ன்படி ஏப்ரல் 8ம் தேதி முதல் ஓராண்டுக்கு மயோனிஸின் எந்த நிலையிலான தயாரிப்பு, பதப்படுத்துதல், சேமித்தல், மற்றொரு இடத்துக்கு அனுப்புதல், விநியோகித்தல், விற்பனை ஆகியவை தடை செய்யப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மயோனைஸை "அதிக ஆபத்துள்ள உணவு" எனும் குறிப்பிடும் உணவு பாதுகாப்புத் துறை பச்சை முட்டைகள் பயன்படுத்தப்படுவதால் அவற்றிலிருந்து சால்மோனெல்லா எனும் பாக்டீரியாவின் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறது. உணவு தயாரிப்பாளர்கள் பலர் பச்சை முட்டைகளை பயன்படுத்தி முறையாக மயோனைஸ் தயாரிக்காததாலும் முறையாக அவற்றை சேமித்து வைக்காததாலும் சால்மோனெல்லா டைஃபிமுரியம், சால்மோனெல்லா எண்டிரிடிடிஸ், லிஸ்டிரியா மோனோசைடோஜென்ஸ், எஸ்ஸ்ரிசியா கோலி போன்ற பாக்டீரியாக்களின் தொற்று ஏற்பட்டு பொது சுகாதாரத்துக்கு ஆபத்தாகும் என்று உணவு பாதுகாப்புத் துறை கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பச்சை முட்டை பயன்படுத்தி மயோனைஸ் தயாரிப்பது இந்திய உணவு பாதுகாப்பு விதிகளுக்கு புறம்பானது என்பதால் அதை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. மயோனைஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது? மயோனைஸ் என்பது வழுவழுப்பான அரை திடப்பொருள் வடிவில் இருக்கும் காரமில்லாத உணவுப் பொருளாகும். "மயோனைஸ் எனும் உணவுப்பொருள் பச்சை முட்டையின் மஞ்சள் கருவையும் ஆலிவ் எண்ணெய்யையும் ஒன்றாக 15 முதல் 20 நிமிடங்கள் வரை விடாமல் கலக்கிக் கொண்டே இருப்பதன் மூலம் கிடைப்பதாகும். இது தான் மயோனைஸின் அடிப்படை மூலப்பொருட்கள். இதனை அப்படியே சாப்பிடுவது சுவையாக இருக்காது. எனவே சில மருத்துவ குணம் கொண்ட இலை வகைகள் சேர்க்கப்படும். வெங்காயம், வெள்ளரி ஆகியவையும் சேர்க்கப்படலாம். காரம் இல்லாமல் சாப்பிடுபவர்கள் குறிப்பாக ஐரோப்பியர்களின் சாலட் போன்ற உணவுகளில் இது அதிகம் பயன்படுத்தப்படும்." என்று மாலத்தீவில் உள்ள சர்வதேச உணவகத்தில் 25 ஆண்டுகள் தலைமை சமையல் கலைஞராக இருந்த பொன்னுசாமி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 சால்மோனெல்லா பாக்டீரியா எப்படி உருவாகிறது? சால்மோனெல்லா பாக்டீரியா தொற்றுக் கொண்டிருக்கும் கோழிகள் இடும் முட்டைகளில் இந்த பாக்டீரியா இருக்கக் கூடும். அதாவது, முட்டை உருவாகும் போதே, அது சால்மோனெல்லா தொற்றுடன் உருவாகக்கூடும். சில நேரங்களில் முட்டை ஒட்டில் இந்த பாக்டீரியா இருக்கக் கூடும். அதாவது முட்டையின் உள்ளே இந்த பாக்டீரியா இல்லாத போதும், அருகில் உள்ள கோழிகளின் கழிவுகளிலிருந்து முட்டை ஓட்டில் இந்த பாக்டீரியா வரக்கூடும். அந்த முட்டை ஓட்டை கழுவாமல் பயன்படுத்தும் போது, பாக்டீரியா உணவுப் பொருளில் கலந்து தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. முறையாக குளிரூட்டியில் பதப்படுத்தி வைக்காத போது, சால்மோனெல்லா வளர்வதற்கு அது ஏதுவான சூழலை உருவாக்கும். பொதுவாக அறையின் வெப்ப நிலையில், இந்தியாவில் சராசரியாக 28டிகிரி முதல் 35 டிகிரி வரையிலான அறை வெப்பத்தில் முட்டைகள் இருக்கும் போது அதில் சால்மோனெல்லா வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். பட மூலாதாரம்,GETTY IMAGES 5,000 எறும்புகள் ரூ.6.5 லட்சம்: நூதன முறையில் எறும்புகளை கடத்தி இவர்கள் என்ன செய்கிறார்கள்?22 ஏப்ரல் 2025 நீங்கள் அகால மரணமடையும் வாய்ப்புள்ளதா என்று காட்டும் எளிய பரிசோதனை - வீட்டிலேயே செய்யலாம்21 ஏப்ரல் 2025 மயோனைஸ் வேறு எங்கு தடை செய்யப்பட்டுள்ளது? துரித உணவுகள் உட்கொண்டு பலருக்கும் உணவு நஞ்சாகிய சம்பவங்கள் கேரளாவில் 2023-ம் ஆண்டு நிகழ்ந்தன. உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனைகளில் அவை மயோனைஸுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று தெரியவந்தது. பச்சை முட்டைகள் பயன்படுத்தி தயாரிக்கும் மயோனைஸ்க்கு கேரள அரசு தடை விதித்தது. அதே போன்று பொதுமக்கள் பலர் தெலங்கானாவில் கடந்த ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த அரசு மயோனைஸை தடை செய்தது. "உணவு பாதுகாப்பு விதிகள்படி பச்சை முட்டைகளை பயன்படுத்தி மயோனைஸ் தயாரிப்பதற்கு அனுமதிப்பதில்லை. முட்டைகள் இல்லாமல் தயாரிக்கப்படும் மயோனைஸ், வெப்பத்தின் மூலம் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்ட (pasteurized) முட்டைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மயோனைஸ் ஆகியவற்றுக்கு அனுமதி உண்டு" என்கிறார் உணவு தொழில்நுட்ப நிபுணர் அன்பு வாஹினி. மேலும், "மயோனைஸ் சாப்பிட விரும்புவோர், வீட்டில் செய்து சாப்பிடுவதே சிறந்த வழியாக இருக்கும். மயோனைஸ் பொதுவாக உடனடியாக உட்கொள்ள வேண்டிய உணவுப் பொருளாகும். அதை சேமித்து வைத்து சாப்பிட வேண்டும் என்றால், முறையான குளிரூட்டிகள் இருக்க வேண்டும்" என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் காசம்பட்டியில் என்ன இருக்கிறது?22 ஏப்ரல் 2025 கடல்நீரில் இருந்து கார்பனை உறிஞ்சும் புதிய திட்டம் காலநிலை மாற்ற பிரச்னைக்கு தீர்வாகுமா?22 ஏப்ரல் 2025 மயோனைஸ் சாப்பிடுவதால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? சால்மோனெல்லா தொற்றுடன் கூடிய மயோனைஸ் சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி, தலைவலி, காய்ச்சல் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். துரித உணவுகளில் மயோனைஸ் அதிகம் பயன்படுத்தப்படுவதால், இளைஞர்களிடம் இதன் பாதிப்புகளை அதிகம் காண முடிகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். "நீடித்த வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுடன் பல இளைஞர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் பலரும் ஓரிரு நாட்களுக்கு முன்பு துரித உணவகங்களில் மயோனைஸ் பயன்படுத்தப்பட்ட சவர்மா போன்ற உணவுகளை உட்கொண்டிருக்கின்றனர். இப்போது இரவு நேரங்களிலும் இது போன்ற உணவுகள் எளிதாக கிடைப்பதால், அங்கு சென்று நண்பர்களுடன் நேரம் கழிப்பதை இளைஞர்கள் விரும்புகின்றனர்" என்று மலக்குடல், ஆசனவாய், பெருங்குடல் ரோபோடிக் அறுவை சிகிச்சை மருத்துவர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறுகிறார். குழந்தைகள், முதியவர்கள் என குறைந்த எதிர்ப்பு சக்தி கொண்ட எவரும் இதனால் பாதிக்கப்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். "குடல் பாதிப்புகள் சிலருக்கு தீவிரமாக ஏற்படலாம், குணமடைய பல வாரங்கள் ஆகலாம். சிலருக்கு பெருங்குடல் அழற்சி (ulcerative colitis) ஏற்படலாம். இவை அனைத்தும் உடலின் எதிர்ப்பு சக்தியையும் பொது ஆரோக்கியத்தையும் குறைக்கும்" என்கிறார் அவர். படக்குறிப்பு,வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் - மலக்குடல், ஆசனவாய், பெருங்குடல் ரோபோடிக் அறுவை சிகிச்சை மருத்துவர் கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளாகதான் மயோனைஸ் நமது உணவுகளில் அறிமுகமாகியுள்ளது என கூறும் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி லவ்ஸ்லி, மயோனைஸ் அதிக கலோரி, அதிக கொழுப்புச் சத்து கொண்ட உணவு என்கிறார். "குளிர் பிரதேசங்களில் உள்ள மக்கள் உடலின் வெப்பத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள அதிக கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளை உண்பார்கள். அதிக கொழுப்பு மற்றும் கலோரி கொண்ட உணவுகள் சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய்களுக்கு இட்டுச் செல்லும் இந்தியாவில் இன்று இது போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்து வருகிறது." என்கிறார் அவர். தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?23 ஏப்ரல் 2025 இறந்து 38 ஆண்டு கழித்தும் பிரிட்டிஷ், ஜெர்மன் பத்திரிகைகளை முட்டாளாக்கிய 'ஹிட்லர்'23 ஏப்ரல் 2025 பச்சை முட்டைகளை சாப்பிடலாமா? உடல் எடை பராமரிப்பில் பச்சை முட்டைகளை உண்பது பலருக்கு பழக்கமானதாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு உட்கொள்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "பச்சை முட்டைகள் பயன்படுத்தும் போது கண்டிப்பாக சால்மோனெல்லா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு" என்கிறார் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி லவ்ஸ்லி. "சால்மோனெல்லா தொற்று ஏற்பட்ட முட்டைகளை சாப்பிடும் போது வாந்தி, மயக்கம், தலைவலி, வயிற்று வலி ஏற்படும். ஆனால் இவற்றை நாம் சால்மோனெல்லாவினால் தான் ஏற்படுகின்றன என்று தொடர்புப்படுத்தி பார்ப்பதில்லை. பச்சை முட்டை சாப்பிடுவதால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பது உண்மையல்ல. சமைத்த முட்டையை சாப்பிடுவதால் நாம் எதையும் இழக்கப் போவதுமில்லை" என்று அவர் விளக்குகிறார். முட்டைகளை பொதுவாக 70டிகிரி செல்சியசில் குறைந்தது 2 நிமிடங்களாவது சமைக்க வேண்டும் என்று குறிப்பிடும் டாஃப்னி லவ்ஸ்லி, அவை முழுவதுமாக சமைக்க 5 முதல் 7 நிமிடங்கள் ஆகும் என்கிறார். படக்குறிப்பு,டாஃப்னி லவ்ஸ்லி, உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் இரவில் வாயை ஒட்டி வைத்துக்கொண்டு தூங்கினால் ஆழ்ந்து உறங்க முடியுமா? எப்படி?8 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபஞ்சம் குறித்த புரிதலை புரட்டிப் போடும் புதிய தகவல்களை வழங்கிய இருண்ட ஆற்றல் ஆய்வு24 ஏப்ரல் 2025 முட்டைகள் இல்லாமல் மயோனைஸ் செய்ய முடியுமா? உண்மையான மயோனைஸ் செய்வதற்கு முட்டை அவசியம் என்றாலும், முட்டை இல்லாமலும் அதே போன்ற ஒரு உணவுப்பொருளை தயாரிக்க முடியும். முட்டை சேர்த்துக் கொள்ள விரும்பாத பலரும் முட்டைக்கு பதிலாக முந்திரி பருப்புகள் அல்லது பால் பயன்படுத்தி மயோனைஸ் தயாரிக்கின்றனர். இவை மட்டுமல்லாமல் பல்வேறு பொருட்களைக் கொண்டு, மயோனைஸ் போன்ற வழுவழுப்பான இளம் மஞ்சள் நிறத்தில் சுவையான உணவுப் பொருளை தயாரிக்க முடியும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy7xwpv3j7o

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முறைமையை கடுமையாக விமர்சித்துள்ள விஸ்டன் சஞ்சிகை

3 months 2 weeks ago
23 APR, 2025 | 09:08 PM 'உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்பது கவர்ந்திழுக்கக்கூடிய விரும்பத்தகாத போலித்தனத்தை மூடி மறைக்கும் ஒன்று' என கிரிக்கெட்டின் விவிலியம் என வருணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை ஆசிரியர் லோரன்ஸ் பூத் விமர்சித்துள்ளார். அதற்கான முறைமை மாற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். வருடாந்தம் வெளியிடப்படும் விஸ்டன் சஞ்சிகை நூலின் 162ஆவது பதிப்பில், தனது பார்வையை சர்வதேச கிரிக்கெட் பேரவை மீது பூத் திருப்பியுளளார். ஐசிசி சம்பயின்ஷிப் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஐசிசியினால் அனுமதிக்கப்பட் பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்தது. அந்த சந்தர்ப்பத்தில் (2024 ஆகஸ்ட்) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளராக இருந்து ஐசிசி தலைவராக ஜே ஷா நியமிக்கப்பட்டது குறித்து பூத் கேள்வி எழுப்பி இருந்தார். 'வகுப்புவாதம் ஒரு வருத்தமான உண்மையை உறுதிப்படுத்தியது. 2024தான் கிரிக்கெட்டின் முறையான நிர்வாகத்திற்குரிய எந்தவொரு கூற்றும் கைவிடப்பட்ட ஆண்டாகும். அது சிலருக்கு அல்ல, பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. துல்லியத்தைத் தீர்மானித்தல், சமநிலைகள் மற்றும் ஆளுமை என்பன குறித்த குழப்பத்தை அது தோற்றுவித்தது' என விஸ்டன் சஞ்சிகையில் பூத் எழுதியுள்ளார். இதேவேளை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் குறித்தும் பூத் கருத்து வெளியிடத்தவறவில்லை. அப் போட்டி இரண்டு வருடங்களுக்குப் பதிலாக நான்கு வருடங்களுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையையும் அவர் முன்வைத்தார். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி இரண்டு ஆண்டுகளைக் கொண்டது. அந்த காலப்பகுதியில் சொந்த மண்ணில் மூன்று தொடர்களும் அந்நிய மண்ணில் மூன்று தொடர்களுமாக 6 தொடர்களில் அணிகள் விளையாடுகின்றன. ஒரு டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளிகளும் போட்டி சமநிலையில் முடிவடைந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகளும், போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா நான்கு புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. எனினும் அணிகள் தத்தமது ஆறு டெஸ்ட் தொடர்களில் வெவ்வேறு எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் வெவ்வேறு எதிரணிகளுடன் விளையாடுவதால், ஒவ்வொரு அணியும் ஈட்டும் புள்ளிகளின் சதவீதத்தைக் கொண்டே அணிகள் தரவரிசைப் படுத்தப்படுகின்றன. 'ஷாவின் தலைமையிலான நிருவாகத்தின் கீழ் நடைபெறவுள்ள முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குழப்பகரமான முறைமையைக் கொண்டுள்ளது' என பூத் சுட்டிக்காட்டியுள்ளார். 'ஒவ்வொரு அணியும் வெவ்வேறு எண்ணிக்கையிலான போட்டிகளில் வெவ்வேறு எதிரணிகளுடன் விளையாடுவதால் அவற்றைத் தரைவரிசைப்படுத்த கணனி தேவைப்படுகிறது. இது எந்தவொரு விளையாட்டு முயற்சிக்கும் மாறுபாடானது. அது எளிதாக பின்பற்றப்படவேண்டும். 'ஒரு பாக்கெட்டுக்குள் அடைக்கப்பட்டது போன்று ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் வடிவமைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. கால்பந்தாட்டம், றக்பி போன்று உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான காலப்பகுதியை நான்கு வருடங்களாக இரட்டிப்பாக நீடிக்க வேண்டும். அத்துடன் தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள் ஒன்றையொன்று சொந்த மண்ணிலும் அந்நிய மண்ணிலும் என்ற முறையில் விளையாடவேண்டும். அந்தத் தொடர்கள் யாவும் குறைந்தது 3 டேஸ்ட்களைக் கொண்டிருக்க வேண்டும்' என்பதே பூத்தின் கருத்தாகும். இது இவ்வாறிருக்க, ஒட்டுமொத்தத்தில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் சகல அணிகளுக்கும் சமமான டெஸ்ட் போட்டிகள் கிடைக்கும் வகையில் அட்டவணை அமையவேண்டும் என்பதையே பூத்தின் கருத்துக்கள் வலியுறுத்தி நிற்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். இதனை ஐசிசி நிறைவேற்றுக்குழு, கிரிக்கெட் குழு என்பன சீர்தூக்கிப் பார்ப்பது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானது என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் மூன்றாவது அத்தியாயம் அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூன் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் நான்காவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இரண்டு வருட சுழற்சி ஆரம்பமாகவுள்ளது. எவ்வாறாயினும் ஐசிசி கிரிக்கெட் குழுவினர், டெஸ்ட் விளையாடும் நாடுகளின் நிருவாகத்தினர் ஆகியோரிடம் இருந்து ஐசிசி ஆலோசனைகளைக் கோரியிருந்தை இங்கு மறக்கலாகாது. அது பற்றிய மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. -என்.வீ.ஏ. https://www.virakesari.lk/article/212765

இந்திய பாதுகாப்புப் படை வீரரை கைதுசெய்தது பாகிஸ்தான்

3 months 2 weeks ago
Published By: VISHNU 24 APR, 2025 | 09:22 PM தவறுதலாக பாகிஸ்தானில் எல்லைக்குள் சென்றதால் இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. ஓய்வு எடுப்பதற்காக நிழலைத்தேடிச் சென்றபோதே தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் குறித்த இந்திய எல்லைப் பாதுகாப்புடை வீரர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த வீரரை விடுவிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் எல்லையில் 182 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.சிங் விவசாயிகளுடன் ஓய்வு எடுக்க நிழல் பகுதிக்கு செல்ல முயன்றபோது, இந்திய எல்லையில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளார். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பி.கே. சிங்கை கைது செய்துள்ளனர். இராணுவ சீருடை மற்றும் அவருடைய துப்பாக்கியுடன் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளார். இவ்வாறு சென்ற பி.கே. சிங்கை பாதுகாப்பாக மீட்க இருநாட்டு வீரர்களிடையே சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அசாதாரணமானது அல்ல என்றும், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த காலங்களில் இவ்வாறு இடம்பெற்றுள்ளதாகவும் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில், பயங்கரவாதத்தை ஆதரிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212859

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

3 months 2 weeks ago
ஈரோடு கிழக்கில் ஏறினதை விடவா இனி ஏறப் போகுது. அங்கேயே வைப்புப்பணம் போனது. அந்த தேர்தலில் நாதக ஒரேயொரு எதிர்த்தரப்பாக போட்டியிட்டே இது தான் எல்லை என்று ஆகியது. பெரிய இரண்டு கட்சிகளின் கூட்டணிகளும் பெரும்பாலான வழமையான தங்களின் வாக்காளர்களை தக்கவைத்துக்கொள்வார்கள். தவெகவிற்கு வாக்களிக்கப் போகின்றவர்களில் அதிகமானோர் நாதகவின் ஒரு பகுதியினரே. ஒரு மாற்றம், அதுவும் தீவிரமான மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் இளைஞர்கள் இவர்கள். இன்றைய அதிகாரத் தரப்பை விரும்பாதவர்களாகவும், எதிர்ப்பவர்களகவும் இருப்பவர்கள் இவர்கள். அவர்களுக்கு தேவையானதை அவர்கள் விஜய்யிடம் காண்கின்றார்கள். இளைஞர்கள் என்றும் இளைஞர்களாகவே இருப்பதும் இல்லை. அவர்கள் குடும்பஸ்தர்கள் ஆகின்றனர். அவர்களின் அரசியலும் மாறுகின்றது. நாதக தனிய நின்றால் ஒரு ஐந்து வீதம் கிடைக்கலாம்.

இந்திய விமானங்களிற்கு தனது வான் எல்லையை மூடியது பாக்கிஸ்தான் - வர்த்தக நடவடிக்கைகளும் இடைநிறுத்தம் - ரொய்ட்டர்

3 months 2 weeks ago
பஹல்காம் தாக்குதல்: இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த முக்கிய முடிவுகள் பட மூலாதாரம்,PAKPMO/X படக்குறிப்பு,பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் 23 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரி- வாகா எல்லையை உடனடியாக மூடுதல் என ஐந்து முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது. இந்நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தானும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இன்று (ஏப். 24) பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது. பஹல்காமில் தாக்குதலை தொடர்ந்து இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒருதலைபட்சமானது, அநியாயமானது என்றும் மிகவும் பொறுப்பற்றது, அரசியல் ரீதியானது என்றும் அந்த கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்திய அரசின் முடிவை புறக்கணிப்பதாக அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட சர்வதேச ஒப்பந்தமாகும், எனவே அதுகுறித்து தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீரைத் தடுக்கவோ அல்லது திசைதிருப்பவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும், ஆற்றின் கீழ்ப் பகுதியின் உரிமைகளைப் பறிப்பதும் ஒரு போர்ச் செயலாகக் கருதப்பட்டு, முழு பலத்துடன் பதிலளிக்கப்படும். சிம்லா ஒப்பந்தம் உட்பட, இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையை பாகிஸ்தான் பயன்படுத்தும். வாகா எல்லையை பாகிஸ்தான் உடனடியாக மூடும். இந்தப் பாதை வழியாக இந்தியாவிலிருந்து அனைத்து எல்லை தாண்டிய போக்குவரத்தும் விதிவிலக்கு இல்லாமல் நிறுத்தப்படும். செல்லுபடியாகும் ஒப்புதல்களுடன் வாகா எல்லையை கடந்து சென்றவர்கள், ஏப்ரல் 30, 2025க்குள் அப்பாதை வழியாகத் திரும்பலாம். சீக்கிய மத யாத்ரீகர்களைத் தவிர, சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் இந்திய நாட்டினருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் பாகிஸ்தான் உடனடியாக ரத்து செய்துள்ளது. SVES இன் கீழ் தற்போது பாகிஸ்தானில் உள்ள சீக்கிய யாத்ரீகர்கள் தவிர்த்து, இந்தியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமானபடை ஆலோசகர்களை அனுமதியற்றவர்கள் என்று பாகிஸ்தான் அறிவிக்கிறது. அவர்கள் ஏப்ரல் 30, 2025க்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். இந்த ஆலோசகர்களுக்கான உதவி பணியாளர்களும் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக பணியாளர்களின் எண்ணிக்கை 30 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களாகக் குறைக்கப்படும். இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தானின் வான்வெளி உடனடியாக மூடப்படும். இந்தியாவுடனான அனைத்து வர்த்தகமும் உடனடியாக நிறுத்தப்படும், இதில் பாகிஸ்தான் வழியாக எந்தவொரு மூன்றாம் நாட்டுக்கும் மேற்கொள்ளப்படும் வர்த்தகமும் அடங்கும். ஆகிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன. இந்தியாவின் நடவடிக்கைகள் பட மூலாதாரம்,PIB ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 26க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து சௌதி அரேபியாவில் இருந்து இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோதி, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் புதன்கிழமை (ஏப்ரல் 23) அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்துக்குப் பின், பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இந்தியாவின் இந்த முடிவுகள் பற்றிப் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவுக்கு உடனடியாக பதிலளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார். "சில நிமிட தாமதத்தால் உயிர் தப்பினோம்" - பஹல்காமுக்கு சென்ற தமிழ்நாட்டு பயணிகள் கூறியது என்ன?23 ஏப்ரல் 2025 பஹல்காம்: தாக்குதலுக்குப் பிறகு எப்படி இருக்கிறது? - நிலைமையை விவரிக்கும் 15 புகைப்படங்கள்9 மணி நேரங்களுக்கு முன்னர் "பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என் கணவரை கொன்று விட்டனர்" - காஷ்மீர் தாக்குதலில் மனைவி கண்முன்னே கடற்படை அதிகாரி கொலை23 ஏப்ரல் 2025 பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த 5 முக்கிய முடிவுகள் பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,அமைச்சரவை கூட்ட முடிவுகள் குறித்து வெளியுறவு செயலாளர் விளக்கம் பிரதமர் மோதி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசினார். அப்போது இந்தியா எடுத்த ஐந்து முக்கிய முடிவுகளை பற்றி அவர் தெரிவித்தார். அவை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் அட்டாரி- வாகா எல்லை உடனடியாக மூடப்படும் பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய விசா ரத்து இந்தியாவில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற்றம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய அதிகாரிகளின் எண்ணிக்கைக் குறைப்பு அப்போது அவர், "தீவிரவாதத் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக" கூறினார். அதோடு, பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவு, நம்பிக்கை அளிக்கும் விதத்திலும், மாற்றமின்றியும் கைவிடும் வரை இது தொடரும் என விக்ரம் மிஸ்ரி கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "அட்டாரி ஒருங்கிணைந்த எல்லை சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும். உரிய ஆவணங்களுடன் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வந்தவர்கள் மே 1ஆம் தேதிக்கு முன்னதாக பாகிஸ்தான் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்." மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக விக்ரம் மிஸ்ரி விவரித்தார். "பாகிஸ்தான் குடிமக்கள் சார்க் விசா திட்டத்தின் கீழ் இனி இந்தியாவில் பயணிக்க முடியாது. இதற்கு முன்னதாகப் பெற்ற விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். இந்த விசாவின் கீழ் இந்தியாவுக்குள் வந்த அனைவரும் உடனடியாக, 48 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்" என்றார். "டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் நாட்டை விட்டு வெளியேற ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் கூறினார். "இதே போன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இந்த ஆலோசகர்களுக்கான உதவி அதிகாரிகளின் பணியிடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்றார். "மே 1 ஆம் தேதி முதல் தூதரகங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 55இல் இருந்து 30 ஆக குறைக்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆலோசனைக்குப் பிறகு, பாதுகாப்புப் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது" எனவும் அவர் கூறினார். "பஹல்காம் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பாகிஸ்தானின் பதிலடி என்ன? பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு உடனடியாக பதிலளிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். பிபிசி உருது செய்தியின்படி, பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்தபோது, இந்தியாவில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்துப் பேசும்போது, இந்தியா நீண்ட காலமாக அதிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் பாகிஸ்தான் 100 சதவிகிதம் தகுந்த பதிலடி கொடுக்கும் நிலையில் உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார். பாலகோட் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் பறந்ததற்காக அபிநந்தன் பிடிபட்டதை இந்தியா நினைவில் வைத்திருக்கும் என அவர் கூறினார். மேலும், "பிரிவினைவாதிகளுக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது. பலுசிஸ்தானைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் சிகிச்சைக்காக இந்தியா செல்கின்றனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன," என அவர் தெரிவித்துள்ளார். "பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா மற்றவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாகத் தானே பொறுப்பேற்க வேண்டும்" எனவும், "பஹல்காம் தாக்குதல் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட 'தவறான நடவடிக்கையாக' இருக்கவும் வாய்ப்புள்ளது" என்றும் அவர் கூறினார். "காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள், அங்கு பல்லாண்டுக் காலமாக இருக்கும் ஏழு லட்சம் வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்று யாராவது இந்தியாவிடம் கேட்க வேண்டும்?" என்றும் அவர் பேசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு உலகளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பிரதமர் நரேந்திர மோதியுடன் தொலைபேசியில் பேசினார். இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோதியை தொலைபேசி வாயிலாக அழைத்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். "அதிபர் டிரம்ப், இந்த தீவிரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்ததுடன், இந்தக் கொடூரமான தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நிற்கின்றன" என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார். இதற்கு முன்பு, டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "காஷ்மீரில் இருந்து வரும் செய்திகள் மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கின்றன. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். பிரதமர் மோதிக்கும் இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபமும் உண்டு" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தியாவுக்கு நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உஷாவும் நானும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில நாட்களாக, இந்த நாட்டின் அழகு மற்றும் அதன் மக்களால் நாங்கள் மெய்மறந்து இருக்கிறோம். இந்தக் கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன" என்று பதிவிட்டிருந்தார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவொரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்றும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரேல் இந்தியாவுடன் துணை நிற்கும் என்றும் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0453vxp17no

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு : நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? -நாமல் கேள்வி

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 05:52 PM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரா அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது என்ற சந்தேகம் காணப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். பொதுமக்கள் அச்சமில்லாமல் இருக்கலாம் என்று அரசாங்கம் குறிப்பிகிறது. ஆனால் பகிரங்கமாக தற்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்த நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் மாத்திரம் 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. கடிதம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் ஏன் இலக்காகக் கொண்டு செயற்படுகிறது. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டா அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது. புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக தேடப்படும் பெண் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதாள குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்துகிறது. பாதாள குழுவினராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/212848
Checked
Sat, 08/09/2025 - 03:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed