புதிய பதிவுகள்2

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

3 months 2 weeks ago
கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள குறிகாட்டுவான் ஜட்டிகளை, மக்கள் பெருமளவில் வாங்கிச் செல்கிறார்கள். எனக்கு பிடித்த நிறத்தில்... நானும் ஒன்று வாங்கியுள்ளேன். தரமான தயாரிப்பு. ஜட்டி அணிந்த மாதிரியே தெரியவில்லை. 😂 பொலியெஸ்ரர் கலக்காத... 100 % கொட்டன் துணியில் தயாரிக்கப் பட்ட குறிகாட்டுவான் ஜட்டிகள் ஆரோக்கியமானவை. 😂 🤣

ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!

3 months 2 weeks ago
தோழர் ஷோபாசக்தியை சகதி என்று @goshan_che தான் சொன்னார். தோழர் ஷோபாசக்தியின் தனிப்பட்ட வாழ்வில் எப்படி இருக்கின்றார் என்பதை நான் ஆராய்வதில்லை. அவரின் எழுத்துக்களும், அரசியல் நிலைப்பாடுகளும் பல திறப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதால் அவர் எனக்குப் பிடித்த கதைசொல்லி. புஷ்பராணி அக்காவின் “அகாலம்” புத்தகம் மூலமாகவே அவரைத் தெரியும். போராட்டம் முளைவிட்ட காலத்தில் ஓர்மத்துடன் செயற்பட்டவர் சிறைவாசத்திற்குப் பின்னர் ஒதுங்கிவிட்டார்.

துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!

3 months 2 weeks ago
டான் பிரியசாத் மரணம்; பிரதான சந்தேக நபர் கைது! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் ஏப்ரல் 22 அன்று வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த சேவன’ அடுக்குமாடி குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. https://athavannews.com/2025/1429376

பிள்ளையான் கைது ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கான எச்சரிக்கையா? — கருணாகரன் —

3 months 2 weeks ago
பிள்ளையான் கைது ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கான எச்சரிக்கையா? April 22, 2025 — கருணாகரன் — “புலியைப் பிடிப்பதற்குப் பதிலாக எலியையா பிடித்து வீரம் பேசுகிறது NPP?” என்று கேட்கிறார்கள் பலரும். அவர்களுடைய கேள்வி நியாயமானதே! ஏனென்றால், தங்களிடம் “400 கோவைகள் உண்டு. நாட்டுக்குத் துரோகமிழைத்தவர்களும் ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் தப்பவே முடியாது. அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் தவறுகளுக்கும் ஆதாரம் உண்டு. நிச்சயமாக தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தனைபேரும் தண்டிக்கப்படுவார்கள்..” என்று முழங்கியவர்கள் NPP யினர். அப்படி முழக்கமிட்டுத்தான் (நம்பிக்கையூட்டித்தான்) ஆட்சியைக் கைப்பற்றியது NPP. ஆனால், அதற்குப் பிறகு அவர்கள் சொன்னமாதிரி எதுவுமே நடக்கவில்லை. அத்தனை பெருச்சாளிகளும் (பெருந்தலைகளும்) கால்மேல் கால் போட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். அதற்குப் பதிலாக சிறு எலிகளைப் பிடித்துச் சிறையிலடைத்து வீரம் பேசுகிறது NPP. இதனால்தான் “புலியைப் பிடிப்பதற்குப் பதிலாக எலியைப் பிடித்து வீரம் பேசுகிறது NPP” பகடி செய்கிறார்கள் மக்கள். அநுர குமாரதிசநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று, NPP அரசாங்கம் ஆட்சியமைத்தபோது மக்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பிருந்தது. NPP ஒரு மாற்றுச் சக்தி என்ற வகையில் மாற்று ஆட்சியொன்றை வழங்கப்போகிறது. நாட்டில் நிச்சயமாக மாற்றம் நிகழப்போகிறது என. இரண்டாவது, நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளிய, ஊழல் செய்த முன்னாள் ஆட்சியாளர்களின் மீது, அவர்களுடைய தவறான செயல்களின் மீது NPP நடவடிக்கை எடுக்கும் என. NPP ஆட்சியில் ஆறுமாதங்கள் கடந்த விட்டது. மக்கள் எதிர்பார்த்ததைப்போல அல்லது NPP கூறியதைப்போல இவை இரண்டுமே நடக்கவில்லை. பதிலாக மக்களைத் திசைதிருப்பும் விதமாக அல்லது மக்களுக்கு ஏதோ செய்திருப்பதாகக் காட்டுவதற்காக வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன, மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ, பிள்ளையான், வியாழேந்திரன் என எலிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அண்மைய கைது பல வகையான அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் எதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று இன்னும் சரியாகச் சொல்லப்படவில்லை. ஆனாலும் வெளியே வந்துள்ள செய்திகள் இரண்டு விதமாக உள்ளன. 1. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் இரவீந்திரநாத் 2006 டிசம்பரில் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் பிள்ளையானுக்குத் தொடர்பிருந்ததான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக. இது அவர்கைது செய்யப்பட்டபோது வெளியான செய்தி. 2. 2019 ஏப்ரல் 21 இல் நடந்த ஈஸ்டர் ஞாயிறுக் குண்டுத்தாக்குதல்களோடு பிள்ளையானுக்குத் தொடர்புள்ளதாகவும் அதைப்பற்றிய விசாரணைகளை நடத்த வேண்டியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது பிந்திய செய்தி. இப்போது பிள்ளையானின் சாரதியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் பிள்ளையான் தரப்பிலிருந்து மேலும் சிலர் கைதாகக் கூடும். இதை விட “பிள்ளையான் மிகப் பெரிய குற்றவாளி. அவர் இலகுவில் தப்ப முடியாது. அவரைத் தேசப்பற்றாளர் என்று கம்மன்பில சொல்வது வெட்கக் கேடானது” என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக அரசாங்கத் தரப்பிலிருந்து பிள்ளையானைப் பற்றி வருகின்ற சேதிகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. பிள்ளையானின் இந்தக் கைது NPP அரசாங்கத்தின் அரசியல் ரீதியான நடவடிக்கை என்று அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. காரணம், 1. வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் செல்வாக்குள்ள தரப்புகளை இலக்கு வைக்கும் NPP அரசாங்கத்தின் முதற்கட்ட நடவடிக்கை இது என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள். ஏனென்றால், பிள்ளையான் கிழக்கு மாகாணத்தை (கிழக்குப் பிராந்தியத்தை) பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு கட்சியின் தலைவர். கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். 2020 இல் அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர். இராஜாங்க அமைச்சராக இருந்தவர். 2024 தேர்தலில் அவர் வெற்றியீட்ட முடியவில்லை என்றாலும் கிழக்கின் வலுவான அரசியற் சக்தியாக பிள்ளையான் இருக்கிறார். குறிப்பாக வரவுள்ள உள்ளுராட்சித் தேர்தலையொட்டி கிழக்கிற்கான ஒரு வலுமிக்க அரசியற் கூட்டணியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரனையும் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனையும் இணைத்து உருவாக்கியிருக்கிறார். இதெல்லாம் அரசாங்கத்தின் ‘இலங்கையர்களாக ஒன்றிணைவோம்‘ என்ற பொது அடையாளத்தின் கீழ் அனைத்துத் தரப்பினரையும் கரைக்கும் திட்டத்துக்கு பொருந்தாத, பிராந்திய அடையாளத்தை வலுவாக்கம் செய்யும் நடவடிக்கைகள் என்பதால், பிள்ளையான் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 2. பிள்ளையானின் கைது, முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அதற்கான விசாரணைகள் எல்லாம் ஏனைய தமிழ் அரசியற் சக்திகளுக்கு உள்ளுர விடுக்கப்பட்டதொரு எச்சரிக்கையாகும். குறிப்பாக வடக்கிலுள்ள முன்னாள் ஆயுதம் தாங்கிய தரப்புகளுக்கு. தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி போன்றவற்றுக்கு அப்பால் உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகள் ஏதோ ஒரு காலகட்டத்தில், பலவிதமான குற்றச் செயல்களோடு (குற்றப்பின்னணிகளோடு) சம்மந்தப்பட்டவை. ஆகவே அவற்றையும் குறிவைப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அரசாங்கம் உள்ளுர உணர்த்துகிறது. ஏனென்றால் 18 ஆண்டுகளுக்கு முன் காணாமலாக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்தின் விடயத்துக்காக பிள்ளையான் கைது செய்யப்படலாம் என்றால், அதையும் விடப் பாரதூரமான கொலைகள், கடத்தல்கள், குற்றச்சாட்டுகளோடு சம்மந்தப்பட்ட ஏனைய அரசியற் தரப்பினர்களும் (முன்னாள் இயக்கத்தினரும்) தப்ப முடியாது என்றுதானே அர்த்தமாகும். 3. இவ்வாறு உள்ளுர அச்சத்தை உண்டாக்குவதன் மூலம் அவை அரசாங்கத்தை மூர்க்கமாக எதிர்ப்பதை விடுத்து, இரகசிய உடன்படிக்கைகளுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படும். அல்லது தணிவு நிலையில் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டிய நிலையை உருவாக்கும். இது பிராந்திய அரசியலின் கூர்முனையை மழுங்கடிக்கச் செய்வதற்கான ஓர் உபாயமாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே ஆட்சிலிருந்த ஐ. தே. க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பெரமுன போன்றவையெல்லாம் போட்டிக்கு இனவாதத்தை வளர்க்கும் அரசியல் உபாயத்தைக் கொண்டவை. இதற்காக அவை தமிழ் மக்களைச் சீண்டும் விதமாக அல்லது தமிழ் மக்களுக்கு நேரடிப் பாதிப்பை உண்டாக்கும் விதமாக அரசியலை முன்னெடுத்தவை. இவ்வாறு செய்வதன் மூலமாக தமிழ் மக்களை தமிழ்த்தேசியத்தின் பக்கமாகத் திரள வைப்பதும் அதற்கு எதிராக சிங்களத் தேசியவாத்தை வலுப்படுத்தி, அதனுடைய பக்கமாக சிங்கள மக்களை அணி திரள வைப்பதுமே அந்தக் கட்சிகளின் அரசியல் உபாயமாக – உத்தியாக இருந்தது. இனவாதத்துக்கு இனவாதம் – போட்டியான இனவாதத்தை வளர்த்துக் கொள்வது. அதாவது உனக்கு நான். எனக்கு நீ என்ற விதமாக. இந்த அடிப்படையில்தான் கடந்த காலத்தில் நாய்களின் தலையை வெட்டி தமிழ் வேட்பாளர்களின் வீடுகளுக்கு முன்பாக வைக்கப்பட்டதும் தமிழ்ப்பகுதிகளில் கிறிஸ் பூதத்தை நடமாட விட்டதும் கூட நடந்தது. ஏனைய சிங்களக் கட்சிகளுக்கு இனவாதம் ஒரு முதலீடு மட்டுமல்ல, அதற்குப் பிராந்திய அரசியலும் தேவையாக இருந்தது. பிராந்திய அரசியல்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் இனவாத அரசியலுக்கான முதலீடாகும். ஆனால், NPP யின் அணுகுமுறையோ வேறாக இருக்கிறது. அது, எதிர்முனையைப் பலப்படுத்துவதை விடப் பலவீனப்படுத்தவே விரும்புகிறது. அதனுடைய நோக்கம் பிராந்திய அரசியலை இல்லாதொழிப்பதாகும். அதனால்தான் அது ஏனைய பிரதேசங்களையும் விட வடக்குக் கிழக்கை மையப்படுத்தித் தன்னுடைய வலுவைக் கூடுதலாகச் செலவழிக்க முயற்சிக்கிறது. இதன் மூலம் இலங்கையில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிராந்திய அரசியலை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, முழு இலங்கையை மையப்படுத்திய அரசியலொன்றை ஸ்தாபிப்பதுமாகும். இதற்கு முன்பு இதற்கான அரைகுறை முயற்சிகளை ஐ.தே.க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன போன்றவை மேற்கொண்டிருந்தாலும் அவற்றுக்குள் நிறையத் தடுமாற்றங்கள் இருந்தன. One Nation One country, ஏக்க ராஜ்ஜிய போன்ற பிரகடனங்கோடு இதற்கான முயற்சிகளை அவை எடுத்தாலும் பிராந்திய அரசியலை முடக்கும் எண்ணம் அவற்றுக்கிருக்கவில்லை. ஏனென்றால், அவற்றினால் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. அவற்றின் ஏஜென்டுகள் பிராந்தியத்திலிருந்தாலும் அவற்றினால் பிராந்தியத்திச் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. அந்த ஏஜென்டுகளை அவை பலப்படுத்தவும் முயற்சிக்கவில்லை. இதனால் மொத்தில் ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, பெரமுன வைப் பற்றி எதிர்மறைச் சித்திரமே தமிழ், முஸ்லிம், மலையக மக்களிடம் இருந்தது. NPP இதில் ஒரு மாறுதலான பாத்திரத்தை உருவாக்கியது; வகிக்கிறது. அது சத்தமில்லாமல் அல்லது எதிர்பாராத விதமாக வடக்குக்கிழக்கு மலையகப் பிராந்தியத்தில் செல்வாக்கைப் பெற்றுள்ளது. இதனால், பிராந்திய அரசியலை இல்லாதொழிக்கும் அதனுடைய (சிங்கள மேலாதிக்க மனோநிலையினுடைய) அடிப்படையில் செயற்பட அதற்கு வசதிப்பட்டுள்ளது. ஆனால், இது எவ்வளவுக்குச் சாத்தியம் என்பது கேள்வியே. ஏனென்றால் இது கத்தியில் நடப்பதற்கு ஒப்பானது. பிராந்திய மக்கள் சிங்கள மக்களையும் விட வேறுவிதமான – பிரத்தியேகப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுப்பவர்கள். அவர்களுடைய எதிர்பார்ப்புகள் சிங்கள மக்களுடைய எதிர்பார்ப்புகளையும் விட வித்தியாசமானது. இதற்கு பிராந்திய சக்திகளை ஒடுக்குவது, கட்டுப்படுத்துவது, அச்சமூட்டுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் தீர்வு காண முடியாது. எதிர்பார்க்கும் விளைவுகளை எட்டவும் முடியாது. அதற்குள் பிள்ளையான், வியாழேந்திரன் போன்றோரின் தலைகள்தான் உருளும். பலியாக்கப்படும். இது இதுவரையிலும் சிங்களத் தரப்புடன் ஒத்துழைத்த அல்லது சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஆதரவளித்த அரசியலுக்கு வழங்கப்படும் தண்டனையாகவும் உள்ளது. அப்படியென்றால் இன்னொரு நிலையில் இது பிராந்திய அரசியலைப் பலப்படுத்துவதாகவும் அமையும். https://arangamnews.com/?p=11970

புதிய மனிதனாக மாறிய இளைஞன்

3 months 2 weeks ago
இளைஞர்களின் இச் செயல் பாராட்டத்தக்கது. வேறு நாடுகளிலும் இவ்வாறு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. இவர் மறுபடி வீதியோர வாழ்க்கைக்குத் திரும்பாமல் ஒரு வேலையையும் தற்காலிகமாக வசிக்க இடமும் கொடுத்தால் நல்லது. படத்தில் இவரது கை கால்கள் கட்டப்பட்டுள்ளதைக் காணலாம். முதலில் இவருடன் பேசி சம்மதிக்க வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி

3 months 2 weeks ago
தீவிரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கி சூடு; இந்திய இராணுவ வீரர் மரணம்! ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று (24) பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் மரணடைந்தார். அதைத் தொடர்ந்து பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடந்ததாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் உதம்பூரில் இந்த மோதல் நடந்துள்ளது. உதம்பூர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில் இந்திய இராணுவத்தின் வெள்ளை நைட் கார்ப்ஸ் செயல்பட்டு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1429382

வௌ்ளி, சனி மற்றும் சந்திரனை வெற்றுக்கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பு !

3 months 2 weeks ago
வௌ்ளி, சனி மற்றும் சந்திரனை வெற்றுக்கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பு ! ShanaApril 24, 2025 வௌ்ளி, சனி மற்றும் சந்திரன் ஆகிய கோள்கள் பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வாய்ப்பை நாளை (25) பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய காட்சியை நாளை அதிகாலை கிழக்கு வானில் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனக அடஸ்சூரிய, தெரிவித்தார். இலங்கையர்கள் இதை தங்கள் வெற்று கண்களால் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். "அதிகாலை 5.30 மணியளவில் கிழக்கு வானத்தைப் பார்க்கும்போது, இந்த மூன்று கோள்களும் மிக அருகில் தெரியும். இது ஒரு அரிய சந்தர்ப்பம். வெற்றுக் கண்களால் இவ்வளவு நெருக்கமாக அணுகுவதைக் காண்பதும் அரிது. கிழக்கு அடிவானம் தெளிவாக இருக்கும் இடத்தில் இது தெரியும்." என்றார். https://www.battinews.com/2025/04/blog-post_100.html

உக்ரேன் போர் விவகாரம்; ட்ரம்பும் ஜெலென்ஸ்கியும் மீண்டும் மோதல்!

3 months 2 weeks ago
உக்ரேன் போர் விவகாரம்; ட்ரம்பும் ஜெலென்ஸ்கியும் மீண்டும் மோதல்! உக்ரேனில் மூன்று வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை (24) மீண்டும் மோதிக்கொண்டனர். கிரிமியா மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்க மறுத்ததற்காக அமெரிக்கத் தலைவர் ஜெலென்ஸ்கியைக் கண்டித்துள்ளார். கடந்த வாரம் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை எதிரொலிக்கும் விதமாக, ரஷ்யாவும் உக்ரேனும் அமெரிக்க அமைதித் திட்டத்திற்கு உடன்பட வேண்டிய நேரம் இது என்று ட்ரம்பின் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் கூறினார். “அல்லது அமெரிக்கா இந்த செயல்முறையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்” என்றும் அவர் எச்சரித்தார். இந்தியாவில் செய்தியாளர்களிடம் பேசிய வான்ஸ், “இன்றைய நிலைக்கு அருகில் ஏதோ ஒரு மட்டத்தில் பிராந்திய எல்லைகளை முடக்குவதற்கும்” “நீண்ட கால அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படும் நீண்டகால இராஜதந்திர தீர்வுக்கும்” இந்த திட்டம் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறினார். அமெரிக்க முன்மொழிவை நன்கு அறிந்த ஒரு முன்னாள் மேற்கத்திய அதிகாரி, கிரிமியாவை ரஷ்யா இணைத்ததை அங்கீகரிக்கவும் அழைப்பு விடுத்ததாகக் கூறினார். ஜனவரியில் பதவியேற்றதிலிருந்து, உக்ரேன் போருக்கான அமெரிக்கக் கொள்கையை ட்ரம்ப் மாற்றியுள்ளார், 2022 இல் தனது அண்டை நாட்டின் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய ரஷ்யா மீதான அழுத்தத்தைத் தளர்த்தும் அதே வேளையில், உக்ரேனை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்தார். 2014 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் கண்டனம் செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையாக, தீபகற்பத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய ரஷ்யாவிடம் உக்ரேன் கிரிமியாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று ஜெலென்ஸ்கி செவ்வாயன்று மீண்டும் வலியுறுத்தினார். “இங்கே பேசுவதற்கு எதுவும் இல்லை. இது நமது அரசியலமைப்பிற்கு எதிரானது,” என்று அவர் கூறினார். அமெரிக்கா, உக்ரேன் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளுக்கு இடையேயான லண்டன் பேச்சுவார்த்தைகள் மிகுந்த உணர்ச்சிகளால் குறிக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி பின்னர் ஒரு எக்ஸ் பதிவில் கூறினார். ஆனால் எதிர்கால கூட்டுப் பணி அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். உக்ரேன் அதன் அரசியலமைப்பிற்குக் கீழ்ப்படியும் என்றும், கியேவின் கூட்டாளிகள், குறிப்பாக அமெரிக்கா, “அதன் வலுவான முடிவுகளுக்கு ஏற்ப செயல்படுவார்கள்” என்றும் அவர் மீண்டும் உறுதியளித்தார். https://athavannews.com/2025/1429345

‘மாற்றம்’ என்ற மாயவலைக்குள் சிக்கியுள்ளனர்

3 months 2 weeks ago
‘மாற்றம்’ என்ற மாயவலைக்குள் சிக்கியுள்ளனர் இலங்கை சில மாத இடைவெளிக்குள் ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல் என்ற இரு பெரும் தேர்தல் களங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது மூன்றாவது தேர்தலாக எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இந்தத் தேர்தலில் இம்முறை தென்பகுதியை விடவும் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிலும் வழக்கத்திற்கு மாறாக ஆட்சியிலுள்ள அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களை முற்றாகவே கைப்பற்றிவிடும் நோக்கில் அடித்தாடத் தொடங்கியுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கட்சிகள் அதனைத் தடுத்தாடும் வியூகங்களை அமைத்து பிரசாரப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளன.ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 48,498 வாக்குகள், கிழக்கு மாகாணத்தில் 197,689 வாக்குகள் என மொத்தம் 246,187 வாக்குகளைப்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்று ஜனாதிபதியானதுடன் நடத்திய பாராளுமன்றத் தேர்தலில் அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வடக்கு மாகாணத்தில் 5 பாராளுமன்ற ஆசனங்களையும் கிழக்கு மாகாணத்தில் 7 பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றிக்கொண்டது. இந்நிலையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி வடக்கு,கிழக்கை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தீவிரமான தேர்தல் பிரசாரங்களில் இறங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கிழக்கு மாகாணத்திற்கான சூறாவளி பிரசாரப் பயணத்தை முடித்து 17ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கான பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வடக்கிற்கான பிரசாரப் பயணத்தை முடித்து கிழக்கு மாகாணத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.இவர்கள் மட்டுமன்றி, அமைச்சர்கள் பலரும் என்றுமில்லாத வகையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் மொழியிலும் திக்கித்திணறி உரையாற்றி தமிழ் மக்களையும் அவர்களின் வாக்குகளையும் கவர முற்படுகின்றனர். இவ்வாறு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மையப்படுத்தி ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான ஜே.வி.பி.-என்.பி.பி. புயல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மையம் கொண்டுள்ள நிலையில், இந்த அனுர அரசுப் புயல் இனப் பிரச்சினை என்ற இலங்கையின் நீண்டகால கருவைக் கலைத்து விடுவதுடன், தமிழ்த் தேசிய அரசியலையும் வாரிச் சுருட்டிக்கொண்டு சென்று விடும் என்ற அச்சம் தமிழ்த் தேசிய வாதிகளிடமும் தமிழின உணர்வாளர்களிடமும் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கு நியாயமான காரணங்களும் உண்டு. இவ்வாறாக வடக்கு, கிழக்கில் மையம் கொண்டுள்ள அனுர அரசு புயல், மிரட்டியும் அபிவிருத்தி ஆசைகாட்டியும் தமிழர்களின் உள்ளூராட்சி சபைகளைக் கபளீகரம் செய்து விடத் துடிக்கின்றமைதான் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் தமிழர் உரிமை சார் விடயங்களுக்கும். இனப் பிரச்சினை தொடர்பான சர்வதேசத்தின் நிலைப்பாட்டுக்கும் பேரச்சுறுத்தலாக மாறியுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு பாடம் புகட்டுகின்றோம் என்ற ரீதியில் செய்த வரலாற்றுத் தவறான தேசிய மக்கள் சக்திக்கு 5 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்ததன் விளைவுகளை தற்போது தமிழினம்தான் அனுபவிக்கின்ற நிலையில், உள்ளூராட்சி சபைகளும் பறிபோய்விடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வாக்குகளையும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட பாராளுமன்ற ஆசன எண்ணிக்கையையும் வைத்துக்கொண்டு, தமிழ் மக்கள் முதல் தடவையாக சிங்கள ஜனாதிபதியையும் சிங்கள கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வடக்கு, கிழக்கில் தெரிவு செய்துள்ளனர். எனவே, தற்போது நாட்டில் இனப் பிரச்சினை என எதுவும் கிடையாது என அனுரகுமார அரசு சர்வதேச மட்டத்தில் தீவிர பிரசாரங்களில் இறங்கியுள்ளது. அதனை மேலும் உறுதிப்படுத்தவே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மக்கள் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு 5 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்ததனால் வடக்கு, மாகாணத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் அடிக்கடி விஜயம் செய்து தமிழ்மக்கள் தொடர்பில் அக்கறையுள்ளவர்கள் போல் காட்டிக்கொள்வதுடன், கிழக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களினால் புறக்கணிக்கப்பட்டதனால் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு மட்டுமே அரசு நிதி ஒதுக்குமென மிரட்டுவதுடன் தமது வாக்கு வங்கிக்கு சவாலாக.இடையூறாக இருப்போரை கைது செய்வது, கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டுவதுமென இரு வியூகங்களில் களம் இறங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் இந்த இரு வியூகங்களில் முதலாவது வியூகம் தற்போது வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. பலவருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி திறக்கப்படுகின்றது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணம் சென்று, தான் தமிழ் மொழியில் பேச விரும்புவதாகக்கூறித் திக்கித்திணறி ஓரிரு வார்த்தைகள் தமிழில் பேசுகின்றார். தையிட்டி சட்டவிரோத விகாரை நிலைமைகளை ஆராயவென அமைச்சர்கள் விஜயம் செய்கின்றனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனைக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி 30 வருடங்களின் பின்னர் இராணுவத்தினரால் மீளக்கையளிக்கப்படுகின்றது. தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் வடக்கிற்குச் சென்றுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் இந்த இரு இரு வியூகங்களில் இரண்டாவது வியூகம் தற்போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில்தான் மட்டக்களப்பு மாநகர சபை தேசிய மக்கள் கட்சியின் கையில் இருந்தால்தான் நிதி வழங்கப்படும் என்று மட்டக்களப்பில் வைத்தே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பகிரங்கமாகக் கூறி தமிழ் மக்களை அச்சுறுத்தியுள்ளார். இது அப்பட்டமான தேர்தல் சட்ட விதிமுறை மீறல். அடுத்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும் கட்சிகளின் தலைவர்களுமான தமிழ் வாக்குகளை ஓரளவுக்கு கவரக்கூடிய வியாழேந்திரன், பிள்ளையான் ஆகியோரின் கைது. இதில் வியாழேந்திரன் பிணையில் வெளிவந்துள்ள நிலையில், பிள்ளையான் தொடர்ந்தும் சிறையில் உள்ளார். அதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசையும் ஜனாதிபதியையும் அதிகம் விமர்சிக்கும் தமிழரசுக்கட்சியின் சாணக்கியன் எம்.பியும் எவ்வேளையிலும் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைதாகலாம் என தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன. இவ்வாறாக அபிவிருத்தியைக் காட்டியோ, அச்சுறுத்தியோ வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றிவிட அனுரகுமார அரசு தீயாய் வேலை செய்து வரும் நிலையில், தமிழர் தாயகம் முற்று முழுதாக பேரினவாதிகளின் கைகளுக்குச் சென்று விடும் நிலைமையும் இல்லாமல் இல்லை. ஏனெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையில் ஏற்பட்ட பிணக்குகள், பிளவுகள் சீர்செய்யப்படாது பிரிவினைகள் தொடர்வதனால் தமிழர்களும் கடந்த தவறை மீண்டும் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மையம் கொண்டுள்ள ‘அனுர புயல்’ தமிழர் பிரதேச உள்ளூராட்சி சபைகளை அள்ளிச் செல்லுமா? தமிழ்த் தேசிய அரசியலையும், தமிழர் உரிமைக் கோஷங்களையும் தூக்கிச் சுழற்றி அடிக்குமா? இனப் பிரச்சினை என்ற விடயத்தைக் காணாமல் போகச் செய்யுமா? என்ற கேள்விகளுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொருவரும் தமிழனாகவும், தன்மானத் தமிழனாகவும் தடம்மாறாத் தமிழனாகவும் தமிழ்த் தேசிய இனமாகவும் பதிலளிக்க, வாக்களிக்க வேண்டிய தீர்க்கமான தேர்தலாக எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால்தான் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் பிளவுண்டு கிடந்தாலும், இந்த ஜே .வி.பி.-என்.பி.பி. அரசை எதிர்ப்பதிலும் வடக்கு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகள் அரசின் கைகளுக்குச் சென்று விடாது தடுப்பதிலும் ஓரணியாகத் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. அவ்வாறு சென்று விட்டால் தமிழர் தற்போது கட்டியிருக்கும் கோவணமும் உருவப்பட்டு விடும் என்பதை ‘மாற்றம்’ என்ற மாயவலைக்குள் சிக்குண்டிருக்கும் தமிழ் இளையோருக்குப் புரிய வைக்க படாதபாடுபடுகின்றன. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாற்றம்-என்ற-மாயவலைக்குள்-சிக்கியுள்ளனர்/91-356089

காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago
காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு! காசாவில் உள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று நடத்திய வான் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவின் ராபா பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட இத் தாக்குதலில் அங்குள்ள இஸ்லாமிய பாடசாலை உட்பட அப்பகுதியிலுள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த கோர தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர் எனவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் இக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகளும் கண்டம் வெளியிட்டுள்ளன. காசா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் காசா மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுத குழுவினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கிலும் இஸ்ரேல் இராணுவம் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது. 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இப் போரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429336

துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள் - சேதவிபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை

3 months 2 weeks ago
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! துருக்கியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி நண்பகல் 3.19 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இது இஸ்தான்புல்லுக்கு அருகிலுள்ள மர்மாரா கடலில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429301

புதிய மனிதனாக மாறிய இளைஞன்

3 months 2 weeks ago
புதிய மனிதனாக மாறிய இளைஞன் adminApril 24, 2025 யாழ்ப்பாணத்தில் ஆதரவற்ற நிலையில் , வீதிகளில் வாழ்ந்து வந்த இளைஞனை நல்லைக்கந்தன் தண்ணீர் பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினர் இளைஞனை தூய்மையாக்கி , புத்தாடைகள் வாங்கி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் , இளைஞர்களின் செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர். https://globaltamilnews.net/2025/214644/

யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் கஜேந்திரகுமாருக்கு ஆதரவு

3 months 2 weeks ago
யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் கஜேந்திரகுமாருக்கு ஆதரவு adminApril 23, 2025 தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளர். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கும் அறிவிப்பை விடுத்திருந்த யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் அது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை இன்றையதினம் புதன்கிழமை யாழ் ஊடக மையத்தில் மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அகில இலங்கை தமிழ் காங்கிரசுடன் யாழ் முஸ்லிம் மக்களுக்கு நெருங்கிய தொடர்பும் நட்பும் இருந்துவருகின்றது. அதுமட்டுமல்லாது கொள்கையில் தடுமாறா நிலையுடன் பயணிக்கும் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சி எமது மக்களின் நலன்களில் அதிக அக்கறையுடன் பயணித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப கொள்கையுடன் தமிழ் தேசிய பேரவை இருக்கின்றது. அதனடிப்படையில் இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலில் எமது அமைப்பின் ஆதரவை தமிழ் தேசிய பேரவைக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர் தமது முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு ஆதரவை வழங்கவேண்டும் என தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பின் போது யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் M.S.ரஹீம் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/214635/

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

3 months 2 weeks ago
ஆமாம் நான் பந்தயம் கட்டுகிறேன். ....சீமான் 2026 இல். தமிழக வெற்றி கழகமும். போட்டி இடுமாயின். நாம் தமிழர் 5 வீதத்துகுள். தான் எடுப்பார்கள் ஆனால் தனித். தனியாக கூட்டணி இல்லாமல் போட்டி போட வேண்டும் அது சரி என்ன தருவீர்கள்??? சும்மா ஐம்பது நூறுக்கு நான் பந்தயம் பிடிபபதிலலை ....நீங்கள் தரவில்லையென்றால் இன்னொருவர் தரவேண்டும் ஆகவே பிணை அவசியமாகும் 🤣
Checked
Fri, 08/08/2025 - 21:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed