3 months 2 weeks ago
மற்றவருக்கு விழுந்த விருப்பு வாக்குகளை சிங்கள ஆமியின் உதவியுடன் தனக்கு மாற்றித்தான் இந்த சுத்துமாத்து திருட்டு தனமாக வெல்ல வைக்கப்பட்டார் , இந்த லச்சனத்தில் இவரின் கதையை கேட்டு மக்கள் வாக்கு போடுவார்கள் ....அப்ப சஜித்க்கு இப்பவே அல்வாதான் ....ரணிலின் தந்திரம் வேலை செய்கின்றது .
சிங்கள மக்களின் வாக்கினை கவரும் ரணிலின் காய் நகர்த்தல் ......
3 months 2 weeks ago
நாம் இப்படி தான்
எல்லோரையும் தூற்றுவோம் தாக்குவோம் நாத்துவோம்
ஆனால் நீங்கள் சொல்லுங்கள் என்ன செய்யலாம் என்றால் பதில் வராது. ஏனெனில் சொல்வதற்கு செய்வதற்கு எதுவும் இல்லை அத்தனையும் செய்து பார்த்தாச்சு. சட்டியில் எதுவும் இல்லை என்பதுவும் நிரூபிக்கப்பட்டாச்சு.
3 months 2 weeks ago
இஸ்லாமியர்களி இந்த தந்திரோபாயம் இலங்கை உள்நாட்டு போர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது என்பது உண்மைதான், ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் எக்காலத்திற்கும் பொருந்தும், சிங்கள கட்சிகளை நேரடியாக ஆதரிக்காமல் அவர்க்ளை கையாளும் இந்தியாவினை கொள்கைகளை செய்வதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் மாஸ்ர பிளான்😁.
சாமியினை (இந்தியா) நேரடியாக கும்பிடாமல் எதுக்கு ஆசாமியினை(தனித்தனி கட்சிகளை) கும்பிட வேண்டும்?😁
இந்தியா; சஜித்திற்கு ஆதரவு கொடுக்கச்சொன்னால், சஜித்திற்கு ஆதரவு கொடுப்பதை விட்டு விட்டு அஜித்திற்கு (தமிழ் பொது வேட்பாளர்/ அனுர குமார?) ஆதரவு கொடுப்பதை பற்றி தமிழ் அரசியல்வாதிகள் பேசக்கூடாது. 😁
3 months 2 weeks ago
இந்த தளபதியினை ஒரு மாதம் கூட தனது பதவியினை நிறைவு செய்ய அனுமதிக்கவில்லை, முப்படைகளின் தலமையாக உள்ள செலன்ஸ்கி புதிய தொழில்னுட்பங்களும் பயிற்சிகளும் போரில் மாற்றம் ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையில் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுகின்றார், உக்கிரேன் படையினருக்கு நேட்டோவின் அதி சிறந்த இராணுவ தளபாடங்களுக்கும் இராணுவ பயிற்சிகளும் வழங்கி போரினை முன்னெடுத்தாலும் போரில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை, அதற்கான காரணக்களை உதவி வழ்ங்கும் நாடுகளுக்கு கூற வேன்டிய நிலையில் இவ்வாறான பலிக்கடாக்கள் தேவைப்படுகிறது.
பல தளபதிகளை வேலை நீக்கம் செய்து தவறு தளபதிகளின் மேல் என்பதாக காட்ட முயற்சிப்பது ஒரு புறம் இராணுவ முக்கியத்துவம் அற்ற சாகச இராணுவ நடவடிக்கைகளை ஒரு சினிமா சாசகசம் போல செய்து மென்மேலும் இராணுவத்திற்கு நெருக்கடி கொடுப்பது என ஒரு குழப்பகரமான் சூழ்நிலைக்குள் உக்கிரேனிய படையினரை வைத்துள்ளார், ஒவ்வொரு மேற்கு இராணுவ தளபாடம் வரும் போது அது தொடர்பான மிகைப்படுத்தலுடன் போரில் குதிக்கும் உக்கிரேனிய படைகளை சோவியத் கால இராணுவ சாதனங்களை வைத்தே இரஸ்ஸியா, அவற்றினை வெற்றி கொள்வதற்கு T72 இரக டாங்கிகளின் சாதனைகளை உதாரணமாக கூறலாம்.
புதிய தளபாடங்களும் பயிற்சிகளும் ஆரம்பத்தில் ஊடக கவனம் பெற்றாலும் காலப்போக்கில் அவை காணாமல் போவதற்கு காரணம் இரஸ்சியாவின் தகவமைப்பு திறமைதான் காரணம்.
போரில் இந்த தளபாடங்கள் உக்கிரேனிய துருப்பினர்களை குழப்பத்தினை உருவாக்குவதாக கூறுகிறார்கள்.
இறந்துபோன உக்கிரேனிய F-16 விமானி ஒரு அனுபவமிக்க விமானி என கூறுகிறார்கள், அவர் F-16 பயிற்சி பெற்றவர், உக்கிரேன் கூறுவது போல விமானியின் தவறு என கூறி அந்த வீரரை அவமானப்படுத்தியுள்ளார்கள், அதற்கான நொண்டிச்சாட்டாக இரு வேறுபட்ட கருவிகளின் அமைப்புகளுக்கு தகவமைக்க முடியாமை என ஒரு புறம் கூறினாலும் வானிலிருந்து வானிற்கு பாயும் ஏவுகணை தாக்குதலை வேறுபட்ட வேக இலக்குகளின் மீதான தாக்குதலை சரியாக கணிக்கமுடியாமையினாலேயே இந்த தவறு நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது, இவ்வாறான குற்றச்சாட்டு இதுதான முதல் தடவை அல்ல, இவரைப்போல ஒரு சிறந்த விமானியின் இறப்பிற்கும் இவ்வாறான குற்றச்சாட்டே முன்னரும் வைக்கப்பட்டிருந்தது,
இது ஒரு உக்கிரேனிய வழமையான நொண்டிச்சாட்டாக உள்ளது போல இருக்கிறது.
மறுவளமாக மேற்கு தன்னிடம் உள்ள அனைத்து சிறந்த அதி நவீன ஆயுதங்களையும் உக்கிரேனிற்கு வழங்கிவிட்டு அதற்கான பலனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது, இது மேற்கின் பொறுமையினை சோதிப்பதாக உள்ளது, மேற்கிற்கு நேரடி வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்ற முடியாத நிலையில் பல சிறந்த வீரர்களை அவர்கள் இறந்த பின்னரும் அவமானப்படுத்துவதும் தளபதிகளை மாற்றுவதும் தொடர்வதால் ஒரு கட்டத்தின் பின் மேற்கு பொறுமையிழந்து போரை முடிவிற்கு கொண்டு வர முனையலாம், ஆனால் கரீசு அம்மையார் (இவர்தான் வெல்வார் என நான் கணிக்கிறேன்) தொடர்ந்து உக்கிரேனிற்கான உதவி தொடரும் என கூறியுள்ளார்.
இந்த போரை மேற்கு நாடுகள் அனுசரிப்பதற்கு காரணம் அமெரிக்க நிர்பந்தம், இந்த போரில் யார் வென்றாலும் தோற்றாலும் இவர்கள் அனுப்புகின்ற ஆயுதங்கள் ஒரு நாள் தம் தாய் நாட்டிற்கே திரும்ப வரும்.
3 months 2 weeks ago
வயதான காலத்தில் அங்கே போய் வாழலாம்” என்று பார்த்தால்
நீங்கள் இப்படி சொல்லி எல்லாவற்றையும் குழப்பி போட்டீர்கள் 🙏🙏🤣
3 months 2 weeks ago
சஜித்திற்கு ஆதரவு – தமிழரசுக் கட்சியின் முடிவு செல்லுபடியற்றதா?
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிவித்துள்ள போதும், அந்தக் கட்சியின் பலரும் அந்தத் தீர்மானத்தை எதிர்க்கின்றனர்.
கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டபோது மத்திய குழுவில் 18 பேர் மாத்திரமே சமூகளமளித்திருந்ததாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் செல்லுபடியற்றது எனவும் மாவை சேனாதிராஜா கூறியிருக்கிறார்.
தேர்தலில் போட்டியிட தமிழ் பொது வேட்பாளரை நியமிக்க சில தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் எடுத்த தீர்மானத்திற்கு தமிழரசுக் கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவருக்கு ஆதரவான சில உறுப்பினர் எதிர்ப்பு வெளியிட்டிருக்கின்றனர்.
சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க முடிவெடுப்பதற்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேறு சில முக்கிய வேட்பாளர்களை சந்தித்திருந்தது.
நேற்றைய கூட்டத்தில் தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், சார்லஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
இதனிடையே, நேற்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தனக்கு அழைப்பு விடுக்கப்படாமை குறித்து கட்சியின் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சியின் தலைமை இன்றி எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் கண்டிக்கத்தக்கது என அந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், கொழும்பு கிளை தலைவருமான சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தமிழரசு கட்சியில் சுமந்திரனை மையப்படுத்திய சில உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்திற்கு சஜித் பிரேமதாச நன்றி கூறியதுடன், “நாம் அனைவரும் ஒன்றாக, வெற்றிபெறும் எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.samakalam.com/சஜித்திற்கு-ஆதரவு-தமிழர/
சஜித் மேடையில் ஏறமாட்டேன் என்கிறார் சி.வி.கே.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்திருந்தாலும், சஜித்தை ஆதரித்து எந்த பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லையென அந்த கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இதனை அவர் அறிவித்திருந்தார்.
நேற்றைய மத்தியகுழு கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் அந்த தீர்மானத்தை ஆதரித்தனர்.
இதேபோல, பொதுவேட்பாளர் ஆதரவு நிலைப்பாட்டை கிளிநொச்சி கிளை சார்பில் த.குருகுலராஜா சமர்ப்பித்தார்.
என்றாலும், கூட்டத்தில் கலந்து கொண்ட 26 பேரில் பலர் சஜித்தை ஆதரித்தனர்.
ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் கட்சிக்குள் நடந்த கலந்துரையாடல்களில், யாரையும் ஆதரிக்காமல் மக்கள் விருப்பமானவர்களுக்கு வாக்களிக்கலாமென அறிவிக்கலாமென சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார்.
அதுவே அவரது நிலைப்பாடாகவும் இருந்தது. எனினும், நேற்றைய கூட்டத்தில் சஜித் ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்திற்கு சீ.வீ.கே.சிவஞானமே தலைமைதாங்கினார்.
உடல்நல குறைவினால் மாவை கலந்துகொள்ளாத நிலையில், சீ.வீ.கே தலைமைதாங்கினார். கூட்டத்தின் போது தனது நிலைப்பாட்டை அவர் அறிவித்தார்.
சஜித்தை ஆதரிப்பதாக கட்சி அறிவித்தாலும், நான் சஜித் ஆதரவு பிரச்சாரங்களில் ஈடுபடமாட்டேன். சஜித்தை ஆதரித்து மேடைகளில் பேசமாட்டேன் என்றார்.
https://thinakkural.lk/article/308748
3 months 2 weeks ago
சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவு.
3 months 2 weeks ago
சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவு.
3 months 2 weeks ago
கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே அநுரவும் சஜித்தும் செய்கின்றனர்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே மீண்டும் அநுரகுமார மற்றும் சஜித் ஆகியோர் செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தொம்பே பிரதேசத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இரு வருடங்களுக்கு முன்பு வரிசையில் நின்றதாலேயே இன்று பலர் இங்கு நிற்கிறீர்கள். அன்று இறப்பதற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. பிரதமர் விலகினால் எதிர்கட்சித் தலைவருக்கு இடமளிக்க வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி கூறினார்.
ஆனால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள பயமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். சரத் பொன்சேகாவும் மறுத்தார். அனுரகுமார கேட்கவே இல்லை.
ஆனால் நாட்டின் நிலை மோசமாக உள்ளதை அறிந்தே நான் ஏற்றுக்கொண்டேன்.
இப்போது என்னோடு இருப்பவர்கள் எனக்கு ஆதரவளித்தால் நான் ஏற்றுக்கொண்டேன்.
நாட்டை பொறுப்பேற்க விரும்பாத சஜித்தும் அனுரவும் நான் பதவியேற்பதையும் விரும்பவில்லை.
சஜித்திற்கும் வழங்கும் வாக்குகள் அனுரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமமானவை என்பதை ஐக்கிய தேசிய கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது,முதலீட்டு வலயமும் கிடைக்காது” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
https://athavannews.com/2024/1397771
3 months 2 weeks ago
ஸ்ரீலங்காவுக்கு "கொலிடே" போற ஆட்கள் எல்லாம், இப்பவே போயிட்டு வந்திடுங்க. 😂 🤣
3 months 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
3 months 2 weeks ago
அவசரப் படாதீங்க சஜித் பிரேமதாச.
சுமந்திரன்தான் உங்களை ஆதரித்துள்ளார்.
தலைவர்கள் எவருமே இல்லாமல்... தமிழரசு கட்சி மத்தியகுழுக் கூட்டம் என்ற பெயரில் ஒன்றை சுமந்திரன் கூட்டி உங்களை ஆதரிப்பதாக கேலிக்கூத்து ஆடியிருக்கின்றார்.
இந்த முடிவு தமிழரசுக்கட்சியின் முடிவு இல்லை என்பதை...
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உறுதிப்படுத்தியிருக்கிறார்.
3 months 2 weeks ago
பாணுக்கான வரிசையை இப்போதே மக்கள் ஆரம்பிக்கலாம்.
3 months 2 weeks ago
அப்போ பொது கூட்டமைப்பு வேட்பாளருக்கான முக்கல் எதற்கு???
3 months 2 weeks ago
Ranil ஒன்றுமில்லை
Sajith ஒன்றுமில்லை
Anura ஏதாகினும் செய்ய முயன்றால் இந்தியா விடப்போவதில்லை.
3 months 2 weeks ago
2௦௦9 மோசமான தோல்விக்கு பின் தமிழ் நாதம் நடத்தியவர் கனடா வில் மார்க்கம் பகுதியில் எப்படி இருந்தார் என்று சமிபத்தில் மார்க்கம் சென்றபோது காது கூசியது ?.
3 months 2 weeks ago
குறித்த துறவி ஒரு மன நோயாளியாக கூட இருக்கலாம்.மிகுதியாக இருக்கும் காலத்திலாவது அந்தப் பெண் சுதந்திரமாக வாழ்ந்து விட்டு போகட்டும்.😏
3 months 2 weeks ago
நான் போனால் கோசான் போன்றவர்கள் வருவார்கள் 😀
யாழ் யாரையும் நம்பி இவர்தான் என்று இருக்காது அது பாட்டுக்கு ஓடிக்கொண்டு இருக்கும் சிலர் நினைப்பது தான்கள் இல்லாவிட்டால் யாழ் முடுபடும் என்று ஆனால் அது நடக்காது ஈழத்தமிழர் உலகில் இருக்கும் வரை யாழ் இருக்கும் மோகன் அண்ணாவிடம் பழகியவர்கள் சொன்ன செய்தி .
3 months 2 weeks ago
ரனில், சஜித், அநுர என்ன செய்வார்கள் என சொல்லுங்கள்? மிக ஆவலாக உள்ளோம்.
3 months 2 weeks ago
No no no no,......No NO ❌
தாங்கள் போனால் நான் யாருடன் சண்டை பிடிப்பது?
Checked
Sun, 12/22/2024 - 16:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed