புதிய பதிவுகள்2

அமெரிக்க பகிரங்க ஆடவர் டென்னிஸில் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி; அல்காரஸைத் தொடர்ந்து ஜோகோவிச்சும் நொக் அவுட் ஆனார்

3 months 2 weeks ago
Published By: VISHNU 01 SEP, 2024 | 08:37 PM (நெவில் அன்தனி) நியூயோர்க் சிட்டியில் நடைபெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்கள் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் முறையே சம்பியன்களான காலோஸ் அல்காரெஸ் மற்றும் நோவாக் ஜோக்கோவிச் ஆகிய இருவரும் இந்த வருடம் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுகளில் அதிர்ச்சி தோல்விகளைத் தழுவி நொக் அவுட் செய்யப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2ஆம் சுற்றுப் போட்டியில் நிரல்படுத்தலில் இடம்பெறாத நெதர்லாந்து வீரர் பொட்டிக் வென் டி ஸாண்ட்ஸ்கல்பிடம் 3 நேர் செட்களில் 2023 சம்பியன் காலோஸ் அல்காரெஸ் முற்றிலும் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்தார். முதலாவது செட்டில் அற்புதமாக விளையாடிய ஸாண்ட்ஸ்கல்ப் 6 - 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றார். இரண்டாம் செட்டில் இருவரும் கடுமையாக மோதிக்கொண்டதால் அல்காரெஸ் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸாண்ட்ஸ்கல்ப் மீண்டும் 7 - 5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று 2 செட்கள் முன்னிலையில் இருந்தார். மூன்றாவது செட்டில் மீண்டும் திறமையாக விளையாடிய ஸாண்ட்ஸ்கல்ப் 6 - 4 என வெற்றிபெற்று 3ஆம் சுற்றுக்கு முன்னேறினார். இதேவேளை நான்கு செட்கள்வரை நீடித்த மூன்றாம் சுற்று போட்டியில் நடப்பு சம்பியன் ஜோகோவிச்சை 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் உலக தரவரிசையில் 50ஆம் இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் ப்றெண்டன் நக்காஷிமா வெற்றிகொண்டார். முதல் இரண்டு செட்களில் தலா 6 - 4 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற நக்காஷிமா, 3ஆவது செட்டில் 2 - 6 என தோல்வி அடைந்தார். எனினும் 3ஆவது செட்டில் மீண்டும் திறமையாக விளையாடிய நக்காஷிமா 6 - 4 என வெற்றிபெற்று நான்காம் சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் அவர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல் தடவையாகும். https://www.virakesari.lk/article/192593

சீனா- பிலிப்பைன்ஸ் இடையே வெடித்துள்ள புதிய மோதல், எச்சரிக்கும் அதிபர்

3 months 2 weeks ago
சீனா - பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை கப்பல்கள் மோதல் - நடுக்கடலில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆகஸ்ட் 19ம் தேதி சீனக் கப்பலும், பிலிப்பைன்ஸ் கப்பலும் மோதிக் கொண்டன. (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், டெர்பெயில் ஜோர்டான் பதவி, பிபிசி நியூஸ் 1 செப்டெம்பர் 2024, 12:07 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதியில் கடலோரக் காவல்படை கப்பல்களைக் கொண்டு மோதியதாக சீனாவும் பிலிப்பைன்ஸும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன. தங்கள் நாட்டு கப்பல் மீது சீன கப்பல் நேரடியாக, வேண்டுமென்றே மோதியதாக பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. அதேசமயம், சீனக் கப்பல் மீது பிலிப்பைன்ஸ் கப்பல் "வேண்டுமென்றே" மோதியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சபீனா மணல் திட்டு அருகே சனிக்கிழமை நடந்த மோதல், தென் சீனக் கடலில் உள்ள பல்வேறு தீவுகள் மற்றும் பொருளாதார மண்டலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் சர்ச்சைகளின் சமீபத்திய நிகழ்வாகும். கடந்த இரண்டு வாரங்களுக்குள், அதே பகுதியில் இரு நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் தொடர்பாக குறைந்தது மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. இரு நாடுகளும் கூறுவது என்ன? சபீனா மணல் திட்டு சீனாவால் ஜியான்பின் ஜியாவோ என்றும், பிலிப்பைன்ஸால் எஸ்கோடா ஷோல் என்றும் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸின் மேற்கு கடற்கரையில் இருந்து 75 கடல் மைல் தொலைவிலும், சீனாவில் இருந்து 630 கடல் மைல் தொலைவிலும் இந்த மணல் திட்டு அமைந்துள்ளது. ஆண்டுக்கு 3 டிரில்லியன் டால மதிப்புள்ள வர்த்தகம் நடைபெறும் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து பாதையாக தென் சீனக் கடல் உள்ளது. தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ், புரூனே, மலேசியா, தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் தங்களுடையவை என்று கூறும் பகுதிகள் அனைத்தையும் சீனா உரிமை கோருகிறது. சபீனா மணல் திட்டில் இருந்து திரும்பிச் செல்லுமாறு பிலிப்பைன்ஸை சீனாவின் கடலோரக் காவல்படை எச்சரித்துள்ளது. அதேநேரத்தில், "அனைத்து ஆத்திரமூட்டல், தொல்லை மற்றும் அத்துமீறல் செயல்களையும் முறியடிப்போம்" என்று சீனா கூறியுள்ளது. சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம் "சீன கடலோரக் காவல்படையின் துன்புறுத்தல், கடும் நடவடிக்கைகள் இருந்த போதிலும்", தெரேசா மக்பனுவா எனும் தங்களது கப்பலை அங்கிருந்து நகர்த்தப் போவதில்லை என்று பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. இந்த மோதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால் சீனக் கப்பலால் "பல முறை" தாக்கப்பட்ட பின்னர், 97 மீட்டர் (318 அடி) நீளமுள்ள தெரேசா மக்பனுவா கப்பலில் சேதம் ஏற்பட்டதாக, பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை உயரதிகாரி ஜே டாரியேலா கூறியுள்ளார். பட மூலாதாரம்,PHILLIPINES COAST GUARD படக்குறிப்பு, தங்கள் நாட்டு கப்பலை மோதியதாக சீனா - பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன பிலிப்பைன்ஸுக்கான அமெரிக்க தூதர் மேரிகே எல் கார்ல்சன், சீனாவின் ஆபத்தான நடவடிக்கைகள் என்று இதனை விமர்சித்தார். "[பிலிப்பைன்ஸ்] பொருளாதார தனியுரிமை பகுதிக்குள் (EEZ) சட்டப்பூர்வமான செயல்பாடுகளை நடத்தும் போது, தெரேசா மக்பனுவா கப்பலை வேண்டுமென்றே தாக்கியது உட்பட சர்வதேச சட்டங்களை மீறும் சீனாவின் செயல்களை அமெரிக்கா கண்டிக்கிறது" என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதில் நாங்கள் பிலிப்பைன்ஸுடன் துணை நிற்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார். மோதல்களை தணிக்க முயற்சி அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா மீது சீனா பலமுறை குற்றம்சாட்டி வருகிறது. கடந்த வாரம், சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், பிலிப்பைன்ஸ் “பொறுப்பற்ற தாக்குதல்களை தூண்ட” அமெரிக்கா தைரியமளிப்பதாக கூறினார். இந்த சர்ச்சை தென் சீனக் கடலில் ஒரு பெரிய மோதலை ஏற்படுத்தக் கூடும் என்று இவ்விவகாரத்தை உற்றுநோக்குபவர்கள் கவலைப்படுகிறார்கள். பட மூலாதாரம்,PHILLIPINES COAST GUARD படக்குறிப்பு,சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது இவ்விவகாரத்தில் ஐ.நா சபை மத்தியஸ்தம் செய்வதற்கான பிலிப்பைன்ஸின் முந்தைய முயற்சியின் போது, ஒன்பது வரிக் கோடு (தென்சீனக் கடலின் பெரும் பகுதியை உரிமை கோர சீனா பயன்படுத்தும் எல்லைக் கோடு) பகுதியில் சீனாவுக்கு எவ்வித சட்டபூர்வமான உரிமையும் இல்லை என ஐ.நா உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை சீனா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. ஆனாலும், சமீப வாரங்களில் இரு நாடுகளும் கடலில் உடனடி மோதல்களைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன. கடந்த மாதம் அவ்விரு நாடுகளும் பிலிப்பைன்ஸ் இரண்டாவது தாமஸ் மணல் திட்டில் உணவு, பொருட்கள் மற்றும் பணியாளர்களுடன் மறுசீரமைப்புப் பணிகளை அனுமதிக்க ஒப்புக்கொண்டன. https://www.bbc.com/tamil/articles/cvg54zy1p4do

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

3 months 2 weeks ago
மாவை இது செல்லாது என்றும் இது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்றும் அறிவுத்துள்ளதாக அறிய முடிகிறது..

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

3 months 2 weeks ago
இதிலே ரணிலுக்கு நஸ்டம் ஏதுமில்லை சிறி. ஏற்கனவே கட்சியை பிழந்ததற்கே பணம் கொடுக்கப்பட்டது. அவர்களும் இலவசமாக செய்யவா முடியும். இன்னமும் நாட்கள் இருக்கின்றன. ஐயா விக்கியருக்கு ரணில் மேல ஒரு கண்ணு.ஆனாலும் நேரே சொல்ல முடியாமல் விக்கித் தவிக்கிறார். இங்கேயும் வாக்கில்லாத பலருக்கு ரணில் மேல ஒரு கண்ணு. பொதுவேட்பாளர் தரப்பில் இரண்டாவது வாக்கை யாரக்கு போட சொல்கிறார்களோ? பெட்டிகள் கைமாறும் போது மனங்களும் மாறும்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

3 months 2 weeks ago
ரணிலின்… 60 கோடியை அமுக்கி விட்டார்கள். தற்செயலாய் ரணில் வென்றால்… சாணக்கியனும், சுமனும் நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டி வரும். 😂

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

3 months 2 weeks ago
சாணக்கியனுக்கு ரணில் கொடுத்த பணமெல்லாம் வேஸ்டா கோப்பாலு? ரணிலுக்கு முதுகில் குத்திட்டாங்களே. வழமையா அந்தாள் தானே எல்லோருக்கும் ஆப்பு வைக்கும்.
Checked
Sun, 12/22/2024 - 12:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed