3 months 2 weeks ago
தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் சுமந்திரன்?
சுமந்திரன் எப்படி TNA இற்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் தொிவித்தாா்.
கிளிநொச்சியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இவ்வாறு குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.
கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது.
2010ம் ஆண்டு எவ்வாறு சுமந்திரன் எப்படி TNA க்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார்” என அவா் மேலும் தெரிவித்தார்.
https://athavannews.com/2024/1397836
3 months 2 weeks ago
தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து
3 months 2 weeks ago
புடினின் அணுக்குண்டுக்கு ரெடியாகுங்கோ 🤣
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
லண்டன் தான் வாகன நெரிச்சல் கவலைப்படுவது உங்க நாட்டுக்கு வந்தபின் லண்டன் சொர்க்கமா தெரியுது .டொரண்டோ மோட்டர்வேயில் கூட நித்திரை கொள்ளும் அளவுக்கு வாகன நெரிச்சல் .
3 months 2 weeks ago
சொல்லி கொண்டு இருக்காமல் முதலில் துரத்தி விட்டு அறிக்கை விடுங்கள் .
3 months 2 weeks ago
உடையார் உங்களின் ஸ்டையிலும் குசும்பும் உங்களை விட்டுப் போகல .......! 😁
3 months 2 weeks ago
தனிமையின் கொடுமை : 40,000 க்கும் மேற்பட்ட முதியவர்கள் மரணம்!
2024ஆம் ஆண்டு முதல் அரை வருட காலத்தில் ஜப்பானில் 40,000-க்கும் மேற்பட்ட முதியோர் தனிமையில் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு மரணித்த முதியவர்களில் 4000 பேர் இறந்து ஒரு மாதம் கழித்தும், 130 பேர் ஒரு வருடம் கழித்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மரணங்கள் ஜப்பானில் அதிகரித்து வரும் தனிமைப் பிரச்சனையின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாகவும், பல முதியோர் கவனிப்பாரின்றி தமது இறுதிக் காலத்தை தனிமையில் கழித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண,அரசு மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
https://athavannews.com/2024/1397826
3 months 2 weeks ago
உடையார்... கபிதனை நம்பி, கனடா போக எனக்கு என்ன விசரே.
3 months 2 weeks ago
சிறி கவனம், இவரின் இந்த வார்த்தை எனக்கு பயமாக இருக்கு, பின்னுக்கு கஷ்டபடுவியல்
3 months 2 weeks ago
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா இன்றி வரும் விண்கலன்!
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இல்லாமல் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மட்டும் பூமிக்கு திரும்பும் என நாசா தெரிவித்துள்ளது.
அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்துள்ளதுடன் விண்வெளி மையத்தில் சுமார் 90 நாட்களாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆளில்லாமல் போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டு அது சனிக்கிழமை அன்று தரையிறங்கும் என நாசா தெரிவித்துள்ளது
https://athavannews.com/2024/1397833
3 months 2 weeks ago
புலி... பசித்தாலும், புல்லை தின்னாது. 😂
நான்... ஜேர்மனியிலேயே இருந்து விட்டு போகின்றேன். 🤣
3 months 2 weeks ago
எனக்கு பிடித்த ஒரு வசனம் -
Quote from Movie Laapataa Ladies " This world is very strange, Don’t be taken in by what you see, Things are often not what they seem"
3 months 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
3 months 2 weeks ago
Canada உங்களை அன்புடன் வரவேற்கிறது.
(நான் பொல்லுடன் காத்திருக்கின்றேன் 😀)
3 months 2 weeks ago
சுமந்திரன் பெட்டி வாங்கிவிட்டார், தன்னிச்சையாக முடிவு எடுத்தது விடடார், தேர்தலில் மோசடி செய்து வென்று விட்டார் என்று செல்லும் ஒரு சில புலம்பெயர்ந்தவர்கள், உசுப்பேத்தும் தமிழ் ஊடகங்களின் செய்திகள் மற்றும் தமது குறுகிய வட்டத்துக்குள் உள்ள சமூக ஊடக தகவல்களை வைத்துக்கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரையோடிக் கொண்டு, சமாந்திர உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கின்றார்கள், அது அவர்களின் சனநாயக உரிமையாகும்.
3 months 2 weeks ago
நத்தனியாகுவுக்கு எதிராக ரெல் அவிவில் ஊர்வலம்
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3
02 SEP, 2024 | 02:36 PM
தமிழரசு கட்சியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கூடி வவுனியாவில் முடிவு எடுத்ததன் அடிப்படையில், தமிழரசு கட்சியானது ஒற்றுமை இல்லாமல் தமிழர்களை பிரிவுக்கும் அல்லது தமிழர் இந்த நிலைக்கு போவதற்கும் காரணமாக இருக்கின்றது என வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதியான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வவுனியாவில் நிறைவேற்றப்பட்ட தமிழரசு கட்சியின் தீர்மானம் குறித்து, சமூகமட்ட பொது அமைப்பின் பிரதிநிதி என்ற வகையில் அவரிடம் இதுகுறித்து கருத்து வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு இன்று வரைக்கும் தமிழரசுக் கட்சி தமிழருடைய உரிமைகளை மீட்பதற்கு உளரீதியாக செயல்படவில்லை. வாய் ரீதியாக மக்களுக்கு ஒன்றை சொல்வதும் அரசாங்கத்திற்கு ஒன்றை சொல்வதுமாக இருக்கின்றது.
ஒட்டுமொத்த கட்சியாக இந்த முடிவை எடுத்திருந்தால் நாங்கள் வரவேற்றிருப்போம். ஆனால் கட்சியின் தலைவர் ஒன்றினை கூறுகின்றார், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஒன்றினை கூறுகின்றார், பல உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் குலைப்பதற்கான அடித்தளமாகத் தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம்.
தமிழரசு கட்சியை எடுத்து பார்ப்போமேயானால் சிவஞானம் சிறீதரன், குகதாசன் ஆகியோர் உட்பட்ட கிளிநொச்சி மற்றும் திருகோணமலை கிளைகளினால் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் அதனை எதிர்க்கின்றனர். இவ்வாறு இருந்தால் தமிழர்களுடைய நிலை என்ன?
தமிழர்களை கூறு போட்டு, தமிழர்களுடைய இருப்புகளை அழிப்பதற்கு ரணிலோ, சஜித்தோ, அனுரவோ அல்லது நாமல் ராஜபக்சவோ தேவையில்லை, எமது கட்சித் தலைவர்களே போதும்.
தமிழ் சிவில் சமூகமாக நாங்கள் எடுத்த பொது வேட்பாளர் என்ற முயற்சியை ஆதரித்து, எதிர்காலத்தில் இவ்வாறான புல்லுருவிகளையும், முண்டு கொடுப்பவர்களையும் நிராகரிப்பதற்கு நாங்கள் தமிழர் சமூகமாக ஒன்றுபட வேண்டும்.
வாக்குப் போடுவது மக்களாகிய நாங்கள். ஆனால் இவர்கள் எப்போது மக்களை சந்தித்து, மக்களது கருத்துக்களை கேட்டு தீர்மானம் எடுத்தார்கள்? ஆகவே இவர்கள் மக்களது பிரதிநிதிகள் என்று கூறி எவ்வாறு சர்வதேச சமூகங்களிடம் பேசப் போகின்றார்கள்?
வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டமானது பிரிவினையை காட்டுகின்றது. எனவே மக்களே நீங்கள் இந்த தமிழரசுக் கட்சியை நம்பாதீர்கள். நாங்கள் சுயமாக சிந்தித்து, எங்களுக்கு இருக்கின்ற வாக்குரிமை பலத்தினால் ஒன்றிணைந்து செயற்படுவோம். எமது கட்டமைப்புக்குள் வருமாறு நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியையும் அழைக்கின்றோம்.
தங்களுடைய சுயலாபத்துக்காகவும், தங்களது மதுபான நிலைய அனுமதிப் பத்திரத்துக்காகவும், தாங்கள் கோடிகளை சம்பாதிப்பதற்காகவும் தமிழ்மக்களை எதிர்காலத்தில் விற்றுப் பிழைப்பது சாத்தியமற்றது. 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அது வெளிச்சத்துக்கு வரும். அப்பொழுது இந்த அரசியல் காட்சிகளும், பேரம் பேசுபவர்களும் புரிந்து கொள்வார்கள்.
எனவேதான் நாங்கள் கூறுகின்றோம். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு சங்கு சின்னத்திற்கு வாக்களிப்போம், எமது ஒற்றுமை நிலைநாட்டுவோம் அதுவே எமக்கான தீர்வு என அவர் மேலும் தெரிவித்தார்.
https://www.virakesari.lk/article/192636
3 months 2 weeks ago
நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பேன் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்று சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற, ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சமத்துவக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை ஆரோக்கியமாக உள்ளது. வடக்கில் அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டிள்ளது. இதனால் பல எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியும்.
அவ்வாறு பல திட்டங்களை செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம். மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்.
வாழ்வாதரம் உள்ளிட்ட பல திட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அதற்காக சிறப்பு அலுவலகங்கள் 5 மாவட்டங்களிலும் நிறுவ உள்ளோம்.
அதேபோன்று ஒவ்வொறு பிரதேச செயலக பிரிவுகளிலும் அபிவிருத்தி நிலையங்கள் நிறுவப்படும்.
இங்கு உள்ள மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம். அத்துடன், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொபோம். அதற்காகவே இந்த அலுவலகங்களை, மாவட்டம் மற்றும் பிரதேச செயலக ரீதியில் நிறுவ உள்ளோம்.
நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எனக்கு உள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளது. அந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.
அதே போன்று நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு IT நிறுவனங்கள் நிறுவப்படும். அதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கப்படும்.
கிளிநொச்சியில் பாரிய அபிவிருத்திகளை செய்ய முடியும் என நம்புகிறேன். இதனால் இங்குள்ள மக்களிற்கு தீர்வுகளை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
https://thinakkural.lk/article/308851
Checked
Sun, 12/22/2024 - 16:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed