3 months 2 weeks ago
நீங்க குறை கூறாத ஆட்கலே உலகத்தில் கிடையாது போல் உள்ளது .
3 months 2 weeks ago
ஒரே குழப்பம் ஆன செய்தி ?
3 months 2 weeks ago
இவ்வளவு நாளும் எங்கேயிருந்து போனது?
3 months 2 weeks ago
அவர்கள் உண்மையிலே கலவி 😀அறிவு கொண்டவர்கள் நீங்கள் குறிப்பிடும் நபர்கள் உண்மையிலே கல்வி அறிவு இருந்து இருந்தால் அண்மையில் நீங்கள் குறிப்பிடும் மார்க்கம் சம்பவம் கூட நிகழ்ந்து இருக்காது .நியாயமான தீர்வை பெற்று தமிழர்கள் சிங்களவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து இருப்பார்கள் இவ்வளவு பொருளாதார சீரழிவு நடந்து இருக்காது .
இதே பண ஆசை பிடித்த சுமத்து கூட சிங்களவர்களுடன் வாழ்வது பிடிக்கும் என்ற சொன்ன ஜந்துக்கு கூட அறிவு கிடையாது அதே சிங்களவர்களுக்கு தமிழர்கள் ஒன்றும் உரிமை பெறுவது உங்களை தீவை விட்டு கலைக்க அல்ல சமத்துவமாக வாழ த்தான் போராடுகிறார்கள் என்ற உண்மையாவது விளங்கபடுத்த தெரியவில்லை முதலில் உங்கள் சுமத்திரன் எந்த பல்கலையில் பட்டம் பெற்றவர் என்ற விபரத்தைஆவது தாருங்கள் உங்களால் முடியாது காரணம் அந்த ஜந்து உண்மையிலே படித்து இருந்தால் தானே ?
அந்த தீவின் சாபகேடு என்னவென்றால் படிக்காத சிங்கள தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் அதிகார தோரணைக்கு ஏற்ப மறைமுக இனவாதம் கக்குவது அதையே சாதாரண சிங்கள மக்கள் காவுவது .
ரணில் அந்த தீவின் வெப்ப காலநிலையிலும் கோட் உடன் காட்சி தருவார் பலர் நம்புவது அவர் ஏதோ ஒக்ஸ்போர்ட் யுனியில் படித்தவர் என்று உண்மை என்னவென்றால் இலங்கை யூனிய கூட முடிக்காதவர் .
3 months 2 weeks ago
எப்படி?
லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் போன்றோர் கொல்லப்பட்டது போன்றா,....?
கல்வியறிவு கொண்ட, தூர நோக்குடையோரைக் கொன்று புதைத்து, மிகுதியானோரை வெளிநாடுகளுக்கு அடித்துக் கலைத்ததன் பலனை அண்மையில் Toronto வில் நடைபெற்ற Tamils Fest ல் தெருப்பொறுக்கிகளின் செயலூடாக கண்டீர்களே,. அது போன்றதொரு விடிவையா தமிழ் மக்களுக்கு கொடுக்கப் போகிறீர்கள்? 😏
(இப்பொழுது நான் எப்போது அப்படிச் சொன்னேன் என்று வரப்போகிறார்,..🤣)
3 months 2 weeks ago
நீங்கள் சொல்வது போன்று இலங்கையர்களாகவும் இல்லாமல் இந்தியர்களாகவும் இல்லாமல் வாழ்வது ஒரு துன்ப நிலை. எனக்கு இலங்கையில் தெரிந்தவரை தீவிர அரசியல் பேசுகின்ற தமிழர்கள் தவிர சாதாரணமான தமிழர்கள் தங்களை இலங்கையர்களாக உணர்வதாகவே தெரிகின்றது. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் அவர்களுக்கு பிரச்சனை இல்லை உண்மையில் அவர்கள் வெளிநாட்டுகாரர்கள். ஆனால் இந்தியாவிடமிருந்துதான் நீங்கள் சொன்ன அத்தனையும் அவர்களுக்கு வேண்டும் என்பது ஆச்சரியமானது தான். ஆனால் அவர்கள் இந்தியர்களும் இல்லை இலங்கையர்களும் இல்லை கொலிடே போவதற்கும் திட்டுவதற்கு மட்டும் இலங்கை .
3 months 2 weeks ago
சிறப்பான கருத்து.
3 months 2 weeks ago
நான் முதலில் தமிழ்நாட்டுக்கு வந்த எமது இலங்கை ஆட்கள் என்று பிழையாக விளங்கி கொண்டுவிட்டேன் 😂
அவர்கள் பிரிட்டன் தமிழ் எம்பியை விட தமிழ் கதைக்கின்றார்கள்
3 months 2 weeks ago
உங்களுக்கு பாரிய நட்டம் 😀
சுமத்திரன் நன்கு ருசி கண்ட பூனை மலத்துக்குள் பணம் கிடந்தாலும் கிண்டீ எடுத்து சொத்து சேர்க்கும் ஆள் லேசில போக மாட்டார் எங்காவது பாரிய நோய் அல்லது விபத்து நடந்து ஆள் கொல்லபட்டால் மாத்திரமே வடகிழக்கு தமிழருக்கு விடிவு வரும் .
3 months 2 weeks ago
கடந்த 2500 ஆண்டுகளாக சிங்களத்தின் ஒரே ஒரு எதிரி இந்தியாவே. இது வரலாறு.
தமிழர் நாதூக்குதடிகள் என்பது சிங்களத்திற்கு நன்றாகவே தெரியும். இந்த வரலாறு தெரியாத காரணமாகத்தான் நாமெல்லாம் தற்போதும் இந்தியாவுக்கு காவடி தூக்குகிறோம்.
😁
3 months 2 weeks ago
இன்றைய எதிரிகள் நாளைய நண்பர்கள்
இன்றைய நண்பர்கள் நாளைக்கு எதிரிகள்
இதை மறக்க வேண்டாம் 🤣
3 months 2 weeks ago
அப்படி நடக்காது
ரணில் வென்றால் நாங்கள் சஜித்க்கு ஆதரவு என்று கூறியபடியால் தான் சிங்கள மக்கள் ரணிலுக்கு பெரியளவில் வாக்கு அளித்து வெற்றி பெற செய்துள்ளனர் ஆகவே எங்கள் அறிவிப்பு தான் ரணிலின். வெற்றிக்கு காரணம் என்று கூறி ரணிலுடன் ஓட்டி கொள்வார்கள்
சஜித் வென்றால் எங்களின் ஆதரவுடன் தான் வென்றார். என்று கூறி சஜித் உடன். ஒட்டி கொள்வார்கள் அவர்களாவது நாட்டை விட்டு வெளியேறுவதாவது .... நல்ல கனவுகள் தான் 🤣😂
3 months 2 weeks ago
உறுதியாக கூற முடியாது காரணம் மூன்று சிங்களவர்கள். போட்டியில் உள்ளார்கள் எனவேதான் சில சமயம் இந்த தமிழ் வாக்காளர்கள் வெற்றியை தீர்மானிக்க கூடும்
இரண்டு சிங்களவர்கள். போட்டியில் இருந்தால் நீங்கள் கூறியது சரி மேலும் சுமத்திரன். ரணில் ஆலோசனைப்படி தான் இதை அறித்தார். என்று சந்தேகம் இருக்கிறது அதாவது சஜித் தோல்வி உறச் செய்ய இப்படி ஒரு முடிவை அறிவிக்கும்படி கேட்டிருப்பார்
21 திகதி பார்ப்போம் 🤣
இல்லை சஜித் க்கு சிங்கள வாக்காளர்கள் குறையும் ஆனாலும் மூன்று சிங்களவர் போட்டியில் இருப்பதால் தமிழ் வாக்காளர்கள் வெற்றியை தீர்மானம் செய்யும் வாய்ப்புகள் உண்டு”
3 months 2 weeks ago
சுமந்திரனைத் துரத்துவதால் யாருக்கு நட்டம்? யாருக்கு இலாபம்?
இலாபம் இந்தியாவிற்கு, நட்டம் ?
😁
அதுசரி,
திட்டுபவர்கள்தானே கவலைப்பட வேண்டும்,. என்ன நாஞ்சொல்றது சரிதானே பெருமாள், ......🤣
3 months 2 weeks ago
உங்களுக்கு தேவயற்ற கவலை .
3 months 2 weeks ago
சுமந்திரன் - சாணக்கியனின் துணிச்சலான தீர்க்கதரிசனம் மிகுந்த முடிவு...! புகழாரம் சூட்டும் திகா எம்.பி.
M A SumanthiranSajith Premadasa
By Thulsi 11 hours ag
சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்துள்ள எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரின் துணிச்சலான முடிவு வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகம்பரம் (Palani Thigambaram) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தீர்க்கதரிசனம் மிகுந்த செயல்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் புகழ்ந்து பாராட்டி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம்
வட கிழக்கு மக்கள் பிரச்சினை
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்களிப்பதன் ஊடாகவே வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடியதாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற தீர்க்க தரிசனம் மிகுந்த செயற்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றது.
முழுமையான தீர்வைப் பெற்றுக் கொள்ள சஜித்துக்கு ஆதரவு வழங்குவதே சரியான முடிவு என்பதை தமிழரசுக் கட்சி துணிச்சலோடும், நம்பிக்கையோடும் எடுத்துக் காட்டி ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
வடக்கு, கிழக்கு மலையகம் உட்பட தமிழ் மக்களோடு, முஸ்லிம் மக்களும் இணைந்து சஜித்துக்கு பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ள நேரத்தில் நாளுக்கு நாள் அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு வருகின்றது.
அவரின் வெற்றியில் நாமும் பங்காளர்களாக இருந்து எமது மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண முன்வந்துள்ள சுமந்திரனும் சாணக்கியனும் எடுத்துள்ள சாதுரியமான முடிவை பாராட்டுகிறேன் என்றும் பழனி திகம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் !
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு (ளுயதவைா Pசநஅயனயளய) ஆதரவு வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பெரும்பாலானவர்களின் விருப்புக்கிணங்கவே நிறைவேற்றப்பட்டதாக இலங்கை (ளுசi டுயமெய) தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (ஊ.ஏ.மு ளுiஎயபயெயெஅ) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்இ “வவுனியாவில் (ஏயஎரலெைய) நேற்று (01) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மத்திய செயற்குழுவில் உள்ள 39 பேரில் 27 பேர் கலந்துகொண்டனர்.
அதேவேளைஇ தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா (ஆயஎயi ளுநயெவாசையதயா ) தன்னால் சுகயீனம் காரணமாக கூட்டத்தில் பங்குகொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம்
தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம்
தமிழ்ப் பொதுவேட்பாளர்
வேறு ஏதும் காரணங்களுக்காகக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு அவர் கேட்கவில்லை.
இதேநேரம் சி.சிறீதரன் (ஊ. ளுசனைாயசயn) தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான தனது விருப்பத்தை எழுத்தில் அறிவித்திருந்தார்.
சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் ! | ளுரிpழசவ குழச ளுசi டுயமெயn வுயஅடை சுயளர Pயசவல ளுயதவைா
யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழுவின் கோரம் 11 பேராகவே காணப்படுகின்றது.
இதனடிப்படையிலேயேஇ மூத்த துணைத் தலைவரான எனது தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தல்
இதன்போது 17 பேர் பொது வேட்பாளரான அரியநேத்திரனை (P. யுசலையநெவாசையn ) ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் எழுத்து மூலமான முடிவு உட்பட ஆறு பேர் மட்டுமே ஆதரவாகக் கருத்துரைத்தனர்.
சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் ! | ளுரிpழசவ குழச ளுசi டுயமெயn வுயஅடை சுயளர Pயசவல ளுயதவைா
கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 22 பேர் கருத்துரைத்ததுடன் இவற்றின் அடிப்படையிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரிப்பதில்லைஇ எமது கட்சி உறுப்பினராகிய அரியநேத்திரன் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து உடனடியாக விலக வேண்டும்இ ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கல் ஆகிய மூன்று தீர்மானங்கள் எட்டப்பட்டன.
இந்தத் தீர்மானங்களுக்கு நானும் கட்டுப்பட்டவன் இதேநேரம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஏதும் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெற்றால் என்னால் மேடைக்கு வர முடியாது என்பதனையும் நான் பதிவு செய்திருந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
https://ibctamil.com/article/tna-sumandran-chanakyan-decision-to-support-sajith-1725262952
3 months 2 weeks ago
நாம் எம்மை இலங்கையராக உணராதவரைக்கும் இது சாத்தியமில்லை என்பது என் கருத்து.
நாங்கள் தொழுவதற்கு இந்தியக் கடவுள்கள் வேண்டும், உடுப்பதற்கு இந்திய உடைகள் வேண்டும், பொழுதுபோக்கிற்கு இந்திய சினிமாவும் பாடல்களும் வேண்டும், உணவும் இந்திய உணவுகள், ப,.......தற்கு இந்திய நடிகைகள் வேண்டும், எங்கள் தலைவர்களாகக் கொள்வதற்கு நேருவும் காந்தியும் இந்திராவும் MGR ம் கலைஞரும் வேண்டும். (திருமணம் செய்வதற்கு மட்டும் இலங்கைத் தமிழ் வேண்டும்😁)
முக்கியமாக எங்கள் அரசியலுக்கு இந்தியாவிடமிருந்துதான் ஆலோசனை கேட்போம்.
ஆனால் நாம் இலங்கையர்களும் இல்லை, இந்தியர்களும் இல்லை.
😏
3 months 2 weeks ago
சுமந்திரனின் அறிவிப்பு தென்னிலங்கை மக்களுக்கு சிறந்த செய்தி - அமைச்சர் சுசில்
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மக்களை குழப்பும் தீர்மானங்களையே எடுப்பார். அவர் தற்போது அறிவித்துள்ள தீர்மானம் தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
பம்பலப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்தமை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுமந்திரன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது நிலைப்பாட்டுடன் வேறு குழுவுடனேயே செயற்பட்டு வந்தார். எனவே சுமந்திரன் ஏதேனுமொரு குழுவைத் தெரிவு செய்கின்றார் எனில், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெற்கு மக்கள் சிந்திக்க வேண்டும். சுமந்திரனின் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அதற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இது மக்களை குழப்பும் செயற்பாடாகும். ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சுமந்திரமே மக்களை குழப்பிக் கொண்டிருந்தார்.
எனவே அவரது தீர்மானங்கள் தொடர்பில் வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தெற்கு மக்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும். சுமந்திரன் ஏதேனுமொரு தீர்மானத்தை எடுப்பாரானால் அது தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும் என்றாr
https://www.virakesari.lk/article/192641
3 months 2 weeks ago
தனிப்பட்ட ஒருவரின் பின் பக்கத்தை முகர்ந்து இங்கே எழுதக் கூடாது என்பது அதி உயர் விதி யாழ் களத்தில்.
அவ்வாறு தொடர்ந்தால் என்னால் உங்கள் படுக்கையறை வரை வரமுடியும்.
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, வெள்ளத்தில் தத்தளிக்கும் விஜயவாடா நகரம்
கட்டுரை தகவல்
எழுதியவர், லக்கோஜு ஸ்ரீநிவாஸ்
பதவி, பிபிசிக்காக
2 செப்டெம்பர் 2024, 13:56 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஆந்திராவில் தலைநகர் அமராவதி மற்றும் அருகிலுள்ள விஜயவாடா ஆகிய இரண்டு பகுதிகளும் நீரில் மூழ்கின.
கிருஷ்ணா, குண்டூர், ஏலூர் மாவட்டங்களில் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
விஜயவாடாவில் புடமேரு ஆறு நிரம்பியதால் சிங்நகர், வம்பே காலனி, ராஜராஜேஸ்வரிபேட்டை உள்ளிட்ட பல பகுதிகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கின.
படக்குறிப்பு, விஜயவாடா நகரம் வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது
பட மூலாதாரம்,TELUGU DESAM PARTY
படக்குறிப்பு, விஜயவாடாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை மீட்டபோது கைக்குழந்தையை தூக்கிச் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த பணியாளர்
கிருஷ்ணா லங்கா, இப்ராஹிம்பட்டினம், ஜூபுடி மற்றும் பிற பகுதிகளும் நீரில் மூழ்கின. புலிகத்த, சிறுகுல்லங்க, யட்லலங்கா மற்றும் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு ஏற்கனவே முகாம்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்கள் வழங்கப்பட்டபோது
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, விஜயவாடாவில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ள கடைகளுக்கு மேலே இருவர் தஞ்சம் புகுந்துள்ளனர்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, விஜயவாடாவில் படகு மூலம் மீட்கப்படும் மக்கள்
கிருஷ்ணா ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் பிரகாசம் தடுப்பணையின் கீழ் 70 கதவணைகள் உயர்த்தப்பட்டு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
படக்குறிப்பு, பிரகாசம் தடுப்பணையில் வெள்ளத்தில் சிக்கிய படகுகள் கரையில் மோதி சேதமடந்து கிடக்கும் காட்சி.
படக்குறிப்பு, பிரகாசம் அணையில் வெள்ளத்தால் சேதமடைந்துள்ள கான்கிரீட் தூண்
பிரகாசம் அணையில் இருந்து இதுவரை 11 லட்சத்து 20 ஆயிரத்து 101 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
படக்குறிப்பு, ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான படகுகள் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டன
விஜயவாடாவில் வீடுகளில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக மச்சிலிப்பட்டினத்தில் இருந்து சுமார் 100 படகுகள் வரவழைக்கப்பட்டன. இவை லாரிகள் மற்றும் வேன்களில் சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டன.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர்
மீட்புப் படையினர் படகுகளில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
படக்குறிப்பு, விஜயவாடாவில் குடியிருப்புப் பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்
பட மூலாதாரம்,I&PR
படக்குறிப்பு, ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
தெலங்கானாவில் என்ன நிலவரம்?
தெலங்கானா மாநிலத்திலும் இடைவிடாது பெய்த மழையால் பலத்த சேதம் ஏற்பட்டது. கனமழையால் கம்மம், வாரங்கல், நல்கொண்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கம்மம் நகரின் சில பகுதிகளில் 10 அடி வரை வெள்ளம் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றன.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,விஜயவாடாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் தன்னார்வலர்கள்
மூணாறு வெள்ளப்பெருக்கு காரணமாக கம்மம் நகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் மற்றும் காலனிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
படக்குறிப்பு,பாலேறு நீர்த்தேக்கம் நிரம்பி சாலையில் தண்ணீர் ஓடியதால் சேதமடைந்த சாலைகள்
வாரங்கல் மற்றும் மகபூபாபாத் மாவட்டங்களும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ரயில் தண்டவாளத்திற்கு அடியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கம்மம் மாவட்டத்தில் உள்ள பாலேறு நீர்த்தேக்கம் நிரம்பியதால், நீர்த்தேக்கத்தில் இருந்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. குசுமஞ்சி வீதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
படக்குறிப்பு,பாலேறு நீர்த்தேக்கம் நிரம்பி சாலையில் தண்ணீர் ஓடியதால் சேதமடைந்த சாலைகள்
இரு மாநில முதலமைச்சர்களுடன் பேசிய பிரதமர்
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோதி தொலைபேசியில் பேசினார்.
படக்குறிப்பு, கம்மம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள்
தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என அவர் உறுதி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானாவில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார் என தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cwyw2558932o
ஆந்திரா - கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளங்கள்: 20 ரயில்கள் ரத்து @ விஜயவாடா
02 SEP, 2024 | 10:18 AM
ஹைதராபாத்: கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின, சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் சுமார் 20 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
ரயில் பயணத்தை தொடர முடியாமல் நடுவழியில் தவித்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது ரயில்வே துறை. சிறப்பு ரயில்கள் மூலம் சென்னை, திருப்பதி மற்றும் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விஜயவாடா மூத்த கோட்ட வணிக மேலாளர் ராம்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, சார்மினார், கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டப்பள்ளி மற்றும் ராயனபாடு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் பயணித்த பயணிகள் விஜயவாடா ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். கேசமுத்திரம், டோர்னக்கல், கம்மம் போன்ற இடங்களில் வெள்ளம் காரணமாக ரயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கி உள்ளதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தடத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மழை காரணமாக சில ரயில்கள் மாற்றுப் பாதையில் அனுப்பப்பட்டுள்ளன.
அதிகாலை 1 மணி அளவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. பயணிகளுக்காக பேருந்து வசதியை ஏற்படுத்திய ரயில்வே துறைக்கு பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், பயணிகளுக்கு ரயில்வே சார்பில் உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்பட்டது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
https://www.virakesari.lk/article/192611
Checked
Sun, 12/22/2024 - 16:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed