உலக நடப்பு

இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன? இரானை குற்றம்சாட்டும் இஸ்ரேலை சூழ்ந்துள்ள 'மர்மம்'

1 month 1 week ago

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா அணுஉலை

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ்

  • பதவி, பிபிசி முண்டோ

  • 23 ஜூன் 2025, 01:22 GMT

இஸ்ரேலிடம் அணு ஆயுதம் 1960கள் முதலே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு ரகசியம். ஆனாலும் இதனை இஸ்ரேல் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததில்லை.

கடந்த வாரம் இரான் மீது ராணுவ தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. "அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை இரான் எட்டியிருக்கிறது" என இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இரான் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளிடையேயான போராக மாறியது.

அமைதி ஆராய்ச்சிக்கான சுயாதீன அமைப்பான அமைதிக் கல்விக்கான டாலஸ் மையத்தின் (Dallas Center for Peace Studies) ஆராய்ச்சியாளரான முனைவர் ஜேபியர் பிகஸ் பேசுகையில், "மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் தான்" என்று கூறினார்.

சர்வதேச அணுசக்தி முகமையின் தகவல்படி, யுரேனியத்தை செறிவூட்டுவதில் 60 சதவிகிதத்தை இரான் எட்டியுள்ளது. ஆனால் பிகஸ் அளிக்கும் விளக்கத்தின்படி, "அணு ஆயுதத்தை தயாரிக்க யுரேனியம் 90 சதவிகிதத்துக்கு மேல் செறிவூட்டப்பட்டிருக்க வேண்டும்"

இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மாறாக, இரான், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.

இதன் பொருள் என்னவென்றால், அணு ஆயுதங்கள் தொடர்பான எந்த ஆய்வுக்கும் இஸ்ரேல் அணு சக்தி மையங்களை உட்படுத்த முடியாது.

இதன் காரணமாகத் தான் இஸ்ரேலின் அணு ஆயுதங்கள் தொடர்பான எந்த தகவல்களும் கசியவிடப்படுவதன் மூலமே பெறப்படுகின்றன. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித்துறை மற்றும் அணு சக்தி குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளும் சர்வதேச முகமைகள் மூலமாகவே இந்த தகவல்கள் வெளிப்படுகின்றன.

இது தவிர, இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்களில் வேலை பார்த்து, பின்னர் அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவரான அணு பொறியாளர் மாவ்டுகாய் வானுனு 1986ம் ஆண்டு சன்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியின் மூலமாகவும் பல தகவல்கள் கிடைத்தன.

இஸ்ரேலிடம் அணு ஆயுதத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது என்பதை முதன்முதலில் வெளிப்படுத்திய இவர், பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டார்.

அமிமுட் அல்லது வேண்டுமென்றே தெளிவற்ற நிலை

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, அணு ஆயுதங்கள் குறித்து "தெளிவின்மை" கொள்கையை கடைபிடிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேலின் அணு ஆயுதம் குறித்த அதிகாரப்பூர்வ கொள்கையானது அமிமுட் (Amimut) என்ற ஹீப்ரு மொழி வார்த்தையால் குறிப்பிடப்படுகிறது. இதற்கு வேண்டுமென்றே தெளிவின்மையை ஏற்படுத்துதல் என பொருள் கொள்ளலாம். அதாவது, ஏற்கெனவே கூறியது போன்று அணு ஆயுதம் இருக்கிறதா என்பதை இஸ்ரேல் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

"இஸ்ரேலின் இந்த அணுகுமுறை அணு யுகத்தில் தனித்துவமானது என கருதலாம்" என, பிரிட்டனின் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்க்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஆவ்னெர் கோஹன். இவர் அணு ஆயுத பரவலை தடுப்பதற்கான கல்விகளுக்கான பேராசிரியர் என்பதோடு, இஸ்ரேல் அணு திட்டங்கள் குறித்த நிபுணராகவும் அறியப்படுகிறார்.

இந்த திட்டம் முற்றிலும் புதிது அல்ல

இஸ்ரேலின் அதிபராகவும், பிரதமராகவும் இருந்துள்ள ஷிமோன் பெரஸ் தமது நினைவுக் குறிப்புகளில் இதனை எழுதியுள்ளார்: "தெளிவின்மைக்கு அசாதாரணமான சக்தி இருக்கிறது. சந்தேகம் என்பது இரண்டாவது ஹோலோகாஸ்ட்டை திட்டமிடுபவர்களுக்கு எதிரான சிறந்த தடுப்பரணாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

கோஹன் கூறுகையில், "அணு சக்தி குறித்த தெளிவின்மை இஸ்ரேலின் மூலோபாய மற்றும் ராஜீய ரீதியான சாதனை" என குறிப்பிடுகிறார்.

அவரது கருத்தின்படி, சர்வதேச சமூகத்தின் மறைமுக ஒப்புதலுடன் கூடிய இந்த திட்டமானது "இஸ்ரேல் இரண்டு சூழ்நிலைகளிலும் பலனடைய உதவி செய்கிறது" என கூறியுள்ளார்.

"இஸ்ரேல் வேண்டுமேன்றே தெளிவற்ற தன்மையைத் தேர்வு செய்துள்ளது. இந்த நாடு அணுஆயுத பரவலை தடுப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் இணையவில்லை. இதனால் சர்வதேச அமைப்புகளின் எந்த ஆய்வுக்கும் உட்பட வேண்டியதில்லை" என பிபிசி முன்டோவிடம் கூறியுள்ளார் ஜேபியர் பிகஸ்.

"ராணுவ விவகாரங்களில் இஸ்ரேல் மட்டுமல்ல, உலகின் பல நாடுகள் வெளிப்படைத் தன்மை இல்லாமல் தான் உள்ளன. ஆனால், இஸ்ரேல் அணுசக்தி சார்ந்த விவகாரங்களிலும் வெளிப்படைத்தன்மை இன்றி இருக்கிறது " என்கிறார் பிகஸ்.

அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரேலின் பார்வையிலிருந்து இதனை அணுகும்போது, இந்த தெளிவின்மை அதன் விருப்பங்களை பாதுகாக்கிறது" என்கிறார்.

"இதில் உண்மை என்னவென்றால், இஸ்ரேலிடம் அணுசக்தி திட்டம் உள்ளது என்பது நமக்கு தெரியும், அந்நாட்டிடம் குண்டுகள் உள்ளன என்பதும் தெரியும். அவற்றை பயன்படுத்தும் திறனும் அந்நாட்டுக்கு இருக்கிறது என்பதையும் நாம் அறிவோம்" என பிகஸ் கூறுகிறார்.

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம், AHMAD GHARABLI/AFP/GETTY IMAGES

"இந்த தெளிவின்மை வெளியிலிருந்து வந்த தகவல்களால் தான் உடைக்கப்பட்டது. இஸ்ரேல் ஒருபோதும் இதனை மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை" என தமது அறிக்கையில் கூறும் கோஹன், "இந்த கொள்கை தனது இருப்பியலுக்கு எதிரான அச்சுறுத்தலில் இருந்து தற்காப்பு அளிப்பதோடு, அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான அரசியல் பின்விளைவுகளிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்காக அரசியல், ராஜ்ஜீய மற்றும் தார்மீக விலைகளையும் இஸ்ரேல் கொடுப்பதில்லை" என கோஹன் கூறுகிறார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆதரவு பத்திரிகையான 'இஸ்ரேல் ஹாயோம்' அந்நாட்டில் மிகப்பெரிய சந்தாதாரர்களைக் கொண்ட இலவச பத்திரிகையாக அறியப்படுகிறது. இந்த இதழில் வெளியான நீண்ட கட்டுரையில் இஸ்ரேல் தனது அணு சக்தி திறன் குறித்து ஏன் எச்சரிக்கையாக இருக்கிறது என விளக்கப்பட்டுள்ளது.

இந்த பத்திரிகையின் கருத்துப்படி, "அணு ஆயுதப் பரவலை எந்த விலை கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என்பது தான் இஸ்ரேலின் முதன்மை இலக்கு" என கூறப்பட்டுள்ளது. தெளிவின்மை கொள்கையின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, "இந்த அணுகுமுறையை கைவிடுவது மத்தியக் கிழக்கில் அணு ஆயுதப்போட்டி விரிவடைவதற்கும், ஆயுதப் போட்டிக்கும் ஊக்கியாக அமையும்" என கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவலை தடுப்பதற்கான மையத்தின் வாதம் வேறாக உள்ளது. வெளிப்படைத் தன்மையற்று இருப்பது "மத்தியக் கிழக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லாத சூழலை ஏற்படுத்த தடையாக இருப்பதாக" அந்த மையம் கூறுகிறது.

இஸ்ரேலிடம் அணுசக்தி திட்டம் இருப்பதை எப்படி அறியலாம்?

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம்,SATELLITE IMAGE (C) 2020 MAXAR TECHNOLOGIES/GETTY IMAGES

படக்குறிப்பு, நெகெவ் அணு ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்

இஸ்ரேலின் அணுசக்தித்திறன் குறித்த முதல் தகவலானது 1962ம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் குறிப்பாணை ஒன்றின் மூலம் வெளிப்பட்டது. இதில், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே 1950களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தெற்கு இஸ்ரேலின் டிமோனா நகரத்தில் அணு மின் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

"பிரான்ஸ் உடனான ஒத்துழைப்பு என்பது புளூட்டோனியத்தை உற்பத்தி செய்யும் அணுஉலையை கட்டமைப்பது" என்கிறார் பிகஸ்.

கூகுள் வரைபட உதவியுடனான தேடுதலின் முடிவில், "நெகெவ் அணு ஆராயச்சி மையம்" டிமோனா நகரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனத்தின் நடுவே இருப்பதாக அறிய முடிகிறது.

முதலில் இந்த வளாகத்துக்கு ஜவுளி தொழிற்சாலை, உலோகவியல் ஆராய்ச்சி மையம், வேளாண் வளாகம் என பல்வேறு அறிமுகங்கள் கொடுக்கப்பட்டன.

சில காலத்துக்குப் பிறகு 1960களில் அப்போதைய இஸ்ரேல் பிரதமரான டேவிட் பென் குரியன், நாட்டின் அணுசக்தி திட்டம் குறித்து பொதுவெளியில் அறிவித்தார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், அணு ஆராய்ச்சி மையமானது "அமைதி நோக்கங்கள்" கொண்டிருப்பதாகக் கூறினார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகளின் விசாரணை அறிக்கைகள், "இஸ்ரேலிடம் அணு ஆயுத திட்டம் இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகின்றன" என்கிறார் பிகஸ்.

ரகசிய ஆவணங்களாக இருந்து பின்னர் வெளியிடப்பட்ட சில ஆவணங்களின் மூலம், குறைந்தது 1975 வரையிலும் இஸ்ரேல் அணு ஆயுதங்களை தயாரித்தது என்பதில் அமெரிக்க அரசு உறுதியாக இருந்தது என்பது தெரியவந்துள்ளது.

ஆனால், இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்கள் குறித்த வரலாற்றில் முக்கிய திருப்புமுனையானது ஒரு நபரின் பெயருடன் தொடர்புடையது: அவர் தான் மாவ்டுகாய் வானுனு

சன்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டி

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம், DAN PORGES/GETTY IMAGES

படக்குறிப்பு, டிமோனா அணுசக்தி மையத்தில் பணியாற்றிய வானுனு

1980களில் இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாயின.

வானுனு டிமோனா அணு உலையில் 1985ம் ஆண்டு வரையிலும் 9 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார்.

அங்கிருந்து வெளியேறும் முன்னதாக வளாகத்தை இரண்டு முறை முழுமையாக புகைப்படம் எடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் அணு ஆயுத தயாரிப்புக்காக கதிரியக்கத் தன்மை கொண்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்படுவது மற்றும் தெர்மோநியூக்ளியர் ஆயுத வடிவமைப்புக்கான ஆய்வகங்களையும் காட்டின.

1986ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்ற வானுனு அணுசக்தி எதிர்ப்பு அமைப்பினரை சந்தித்தார். கொலம்பியாவைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளரான ஆஸ்கர் கெரேரோவைச் சந்தித்த போது, இந்த புகைப்படங்களை வெளியிட சம்மதித்தார்.

இதன் மூலமாக வானுனு பிரிட்டிஷ் சன்டே டைம்ஸ் இதழுக்கு வேலை பார்க்கும் பீட்டர் ஹன்னம் எனும் பத்திரிகையாளரை சந்தித்தார்.

பிபிசியின் "விட்னஸ் டூ ஹிஸ்டரி" நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த பீட்டர் இந்த தகவல்களை வெளியிடுவதன் மூலம், இஸ்ரேல் சர்வதேச அழுத்தத்துக்கு ஆளாகி அணுசக்தி திட்டத்தை நிறுத்தும் என வானுனு நம்பினார் என கூறினார். ஆனால், இந்த நம்பிக்கை எதுவும் நிறைவேறவில்லை.

இந்த நிகழ்ச்சியில் வெளியான தகவல்களின்படி, அணுசக்தி குறித்த தகவல் வெளியானதும் வானுனு கடத்தப்பட்டு, போதை மருந்து கொடுக்கப்பட்டு இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் தேசத் துரோகம் மற்றும் உளவு பார்த்து இஸ்ரேலின் அணு ஆயுத ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டுக்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2004ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், தனது செயலுக்காக "மகிழ்ச்சியும் பெருமையும்" அடைவதாகக் கூறினார். ஆனால் அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதற்காக மீண்டும் தண்டிக்கப்பட்டார். இம்முறை வெளிநாட்டினருடன் பேசவும், இஸ்ரேலை விட்டு வெளியேறவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

வானுனு வெளிப்படுத்திய பின்னர் இஸ்ரேலிடம் அணு ஆயுத திட்டம் இருப்பது வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம், RONEN ZVULUN/POOL/AFP/GETTY IMAGES

மாவ்டுகாய் வானுனு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், அந்நாளில் இஸ்ரேலிடம் 100 முதல் 200 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது.

தற்போதைய சூழலில் ஸ்டாக் ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் போன்ற, அணு செயல்பாட்டு கண்காணிப்பு நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் இருக்கலாம்.

இந்த ஆயுதங்களை தயாரிப்பதற்கான புளூட்டோனியம் டிமோனாவில் உள்ள நெகெவ் அணு ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இஸ்ரேலால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இந்த அணு உலையானது 26 மெகாவாட் திறனுடைய வெப்ப உலையைக் கொண்டுள்ளது. ஆனால், இதன் உண்மையான திறன் இன்னும் அதிகமாக இருக்கலாம் என சிலர் நம்புகின்றனர்.

இஸ்ரேலின் மற்ற பகுதிகளில் உள்ள அணு திட்டங்களைப் போன்று இந்த உலையானது சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. பாதுகாப்பு நெறிமுறைகளானது அணு கட்டமைப்புகள் அமைதியான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதோடு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை தடை செய்கிறது.

ஆனால், இஸ்ரேல் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் கொடுக்காத போது, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை எப்படி கணக்கிட முடியும்?

"சர்வதேச அமைப்புகள் அணு திட்டங்களை கண்காணித்து, ஆண்டுதோறும் ஆயுதங்கள் குறித்த மதிப்பீடுகளை வழங்குகின்றன" என்கிறார் பிகஸ்.

"குறைவான தகவல்களையே கொண்டிருக்கும் இஸ்ரேல் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளைப் பொருத்தவரையிலும், கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட யுரேனியம் மற்றும் புளூட்டோனியத்தின் உத்தேச அளவு மதிப்பிடப்பட்டு இதன் மூலம் அணு ஆயுதங்கள் கணக்கிடப்படும்" என பிகஸ் விளக்குகிறார்.

அணு உலைகள் இயங்கிய நேரம் மற்றும் அவற்றின் திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இவற்றில் தயாரிக்கப்படும் அணு பிளவு பொருளின் அளவு மதிப்பிடப்படுகிறது.

சுமார் 50 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியாவுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ பின்பற்றப்படும் இந்த அணுகுமுறையானது முற்றிலும் புதிது அல்ல.

2011-ல் நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பு , அணு உலைகளில் காலமுறைப்படியான ஆய்வுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கட்டாயமாக்கப்படவில்லை. அப்போது, சர்வதேச அமைப்புகள் சோவியத் ஒன்றியம் அமெரிக்காவிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தோராயமாகவே கணக்கிட்டன என்று பிகஸ் கூறுகிறார். "இந்த மதிப்பீடுகள் பின்னாளில் ஆய்வு நடத்தப்பட்டு வெளியான அறிக்கைகளுடன் ஒத்துப்போயின. எனவே, இஸ்ரேலுக்கான தற்போதைய கணக்கீடு உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என நாம் கூறலாம்" என பிகஸ் கூறுகிறார்.

அணு ஆயுதமற்ற நாடாக மாற முடியுமா?

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம்,REUTERS

2012-ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இஸ்ரேல் தனது அணுசக்தி திட்டங்களை சர்வதேச ஆய்வுக்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தியது.

இஸ்ரேலை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இணைய வலியுறுத்தும் இந்த தீர்மானத்துக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் கனடா வாக்களித்தன.

1970-ஆம் ஆண்டு இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இரான் கையெழுத்திட்டது. சமீப நாட்களில் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது குறித்து இரான் நாடாளுமன்றம் ஆலோசித்து வருவதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பாகெய் குறிப்பிட்டார்.

மறுபுறம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் தீர்மானமானது ஐ.நா. பொதுச்சபையில் அவ்வப்போது முன்மொழியப்படுகிறது.

"இந்த முன்மொழிவை இஸ்ரேல் மறுத்துவிட்டதோடு, இதனை தனது இறையாண்மை மீதான தாக்குதல்" என்றும் விமர்சிக்கிறது என்கிறார் பிகஸ்.

அவரது கூற்றுப்படி, ஐக்கிய நாடுகள் அவையின் ஆயுதக்குறைப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பத்திரிகை காப்பக அறிக்கைகளின்படி, இதுபோன்ற கட்டுப்பாடுகள் பிராந்தியத்தில் உள்ள உண்மையான அபாயங்களை குறைக்காது என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.

ஜேபியர் பிகஸ் வலியுறுத்துவது என்னவென்றால், "எந்த ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருப்பதும் கவலை அளிக்கக்கூடியது தான். ஏனென்றால், இந்த ஆயுதங்களை வைத்திருப்பது இயல்பாகவே ஆபத்தானது" என்கிறார்.

"ஆனால் உண்மையில் இஸ்ரேல், ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்களை மீண்டும் மீண்டும் மீறி வருகிறது. சர்வதேச சட்டங்கள், மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து புறக்கணிக்கும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. வேறு எந்த நாடும் அவற்றைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியுது என்பது இந்த விஷயத்தை இன்னும் கவலையடையச் செய்கிறது" என பிகஸ் கூறுகிறார்.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cnvm326v8njo

சிரிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு, 63 பேர் காயம்!

1 month 1 week ago

New-Project-297.jpg?resize=750%2C375&ssl

சிரிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு, 63 பேர் காயம்!

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த தாக்குதலில் 63 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (22) மாலையில் ட்வீலா பகுதியில் உள்ள எலியாஸ் நபியின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் ஒரு நபர் ஆயுதத்தால் துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் வெடிகுண்டு உடையை வெடிக்கச் செய்ததாகவும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் ஜிஹாதி குழுவான இஸ்லாமிய அரசு (IS) உடன் தொடர்புடையவர் என்றும் அது கூறியது.

அந்தக் குழுவிடமிருந்து உடனடியாக எந்த உரிமைகோரலும் இல்லை.

தேவாலயத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் பெரிதும் சேதமடைந்த பலிபீடம், உடைந்த கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் பீடங்கள் மற்றும் சுவர்களில் இரத்தம் சிதறிக் கிடப்பதைக் காட்டியது.

266dc530-4fad-11f0-86d5-3b52b53af158.jpg

சிரியாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரை ஐஎஸ் அடிக்கடி குறிவைத்து வருகிறது.

2016 ஆம் ஆண்டில், டமாஸ்கஸின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஷியா முஸ்லிம் சயீதா ஜெய்னாப் ஆலயத்திற்கு அருகில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இந்தக் குழு பொறுப்பேற்றது.

இதில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

https://athavannews.com/2025/1436653

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

1 month 1 week ago

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்: 3 அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீச்சு - நேரலை விவரம்

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம்,US AIR FORCE

படக்குறிப்பு, பி-2 குண்டுவீச்சு விமானம்

22 ஜூன் 2025, 01:11 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இரானை உடனடியாக சமாதானத்திற்கு வருமாறும், இல்லாவிட்டால் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல் பற்றி இரான் கூறுவது என்ன?

'ஓர் அற்புதமான இராணுவ வெற்றி'

இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

"இந்த பயங்கரமான அழிவுகரமான தளங்களை அவர்கள் கட்டியெழுப்பும் போது எல்லோரும் பல ஆண்டுகளாக அந்தப் பெயர்களைக் கேட்டனர். இன்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றி என்று நான் உலகிற்கு தெரிவிக்க முடியும். இரானின் முக்கிய அணு செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன" என்று டிரம்ப் தெரிவித்தார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

இரானுக்கு டிரம்ப் மிரட்டல்

இரான் இப்போது சமாதானம் முன்வராவிட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவின் தாக்குதல்கள் மிக அதிகமாக இருக்கும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

"அமைதி விரைவில் ஏற்படும் அல்லது கடந்த எட்டு நாட்களில் நாம் கண்டதை விட இரானுக்கு மிகப் பெரிய சோகம் ஏற்படும்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

"நினைவில் கொள்ளுங்கள், இன்னும் நிறைய இலக்குகள் உள்ளன. இன்றிரவு அவற்றில் மிகவும் கடினமானதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. ஆனால் அமைதி விரைவில் வரவில்லை என்றால், நாங்கள் துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் மற்ற இலக்குகளை நோக்கிச் செல்வோம்," என்று அவர் கூறினார்.

"இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு குழுவாக செயல்பட்டன"

இரானின் முன்னாள் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக டிரம்ப் கூறுகிறார்.

"இது நடக்க விடமாட்டேன், இது தொடராது என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தேன்" என்று குறிப்பிட்ட அவர்,

"இஸ்ரேலுக்கு எதிரான இந்த பயங்கரமான அச்சுறுத்தலை" அழிக்க இஸ்ரேலுடன் ஒரு "குழுவாக" பணியாற்றியதாகக் கூறி, பெஞ்சமின் நெதன்யாகுவை வாழ்த்தினார்.

டிரம்ப் உரை சுமார் நான்கு நிமிடங்கள் நீடித்தது.

இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்

முன்னதாக, "ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். அனைத்து விமானங்களும் இப்போது இரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன," என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் குறிப்பிட்டிருந்தார்.

அனைத்து விமானங்களும் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தன என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.

இரான் மீதான அமெரிக்க தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக, அமெரிக்காவின் பி-2 ரக ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்க தீவுப் பகுதியான குவாமுக்கு முன்பே மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊகத்தை அதிகப்படுத்தியிருந்தது.

'ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது'

"ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது" என்ற ஒரு புலனாய்வு பயனரின் பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுபதிவு செய்துள்ளார்.

"இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம்" என்று அவர் தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.

"இரான் இப்போது இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடன்முழு ஒருங்கிணைப்பு - இஸ்ரேல்

இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் அமெரிக்காவுடன் "முழு ஒருங்கிணைப்பில்" இருந்தது என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் இஸ்ரேலிய பொது ஊடகமான கானிடம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம்,GOOGLE EARTH

ஃபோர்டோ - ரகசிய இரானிய அணுசக்தி தளம்

தலைநகரம் டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 60 மைல் (96 கிமீ) தொலைவில் ஒரு மலைப் பகுதியில் ஃபோர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் தளம் அமைந்துள்ளது.

நிலத்தடி வசதி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மைய விலக்கு இயந்திரங்களையும், சிறிய சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் கொண்டிருந்த 2 முக்கிய சுரங்கப்பாதைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

இந்த தளத்தை தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கனவே முறையிட்டது. ஏனெனில், நிலத்தடியில் இருந்த அந்த அணுசக்தி தளத்தை தகர்க்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.

இரான் பதில்

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு இலக்கான அணுசக்தி தளங்களை தாங்கள் ஏற்கனவே காலி செய்துவிட்டதாக இரானிய அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

இரானின் அரசு ஊடகத்தின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். இரான் இந்த மூன்று அணுசக்தி தளங்களையும் முன்னதாகவே காலி செய்துவிட்டதாக அவர் கூறினார்.

டிரம்ப் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட, இரான் அந்த அணுசக்தி தளங்களில் இருந்த பொருட்களை ஏற்கனவே பாதுகாப்பாக வெளியே எடுத்துவிட்டதால், இந்த தாக்குதலால் பெரிய பின்னடைவு எதையும் சந்திக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதலை உறுதிப்படுத்திய இரான்

இரானில் இருந்த பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை இரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

கோம் மாகாண நெருக்கடி மேலாண்மைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் மோர்டெசா ஹெய்தாரி, "ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு இலக்கானது" என்று கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், நடான்ஸ், இஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இரான் கூறியுள்ளது.

இஸ்பஹானின் பாதுகாப்பு துணை ஆளுநர் அக்பர் சலேஹி, "நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் பல வெடிப்புகள் கேட்டன, இஸ்பஹான் மற்றும் நடான்ஸின் அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் தாக்குதல்களைக் கண்டோம்" என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், டிரம்ப் குறிப்பிட்ட 3 அணுசக்தி தளங்களும் தாக்குதலுக்கு இலக்கானது இரானிய அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

இரானிடம் முன்னறிவித்த அமெரிக்கா

தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே அதுகுறித்து இரானிடம் அமெரிக்கா தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமையன்று இரானை "ராஜதந்திர ரீதியாக" தொடர்பு கொண்டு தாக்குதல் நடத்த மட்டுமே செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், "ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் திட்டமிடப்படவில்லை" என்றும் அமெரிக்கா கூறியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி கூறுகிறது.

இந்த வார தொடக்கத்தில், இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியைக் கொல்லும் நெதன்யாகுவின் திட்டத்தை டிரம்ப் நிராகரித்துவிட்டதாக பல அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn0q81z52xzo

கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

1 month 1 week ago

New-Project-292.jpg?resize=600%2C300&ssl

கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 314 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 291 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதை அடுத்து குறித்த மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்படுவதுடன் அங்கு குறித்த அசோதா பரீசிலனை செய்யப்படும்.

இதேவேளை குறித்த மசோதா சட்டமாக்கப்பட்டால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் மருத்துவா்களின் உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

மேலும், அதற்கான மருந்தை தாங்களாகவே உட்கொள்ளும் திறன் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1436481

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

1 month 1 week ago

New-Project-280.jpg?resize=750%2C375&ssl

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கடந்த இரண்டு வாரங்களில் கட்டாரில் உள்ள ஒரு முக்கிய அமெரிக்க விமானப்படை தளத்தில் கிட்டத்தட்ட 40 அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயுள்ளன.

இது ஈரானிய தாக்குதல்களிலிருந்து சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரு அமெரிக்காவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தெரிகிறது என்று செய்தி நிறுவனமான AFP தெரிவித்துள்ளது.

ஜூன் 5 முதல் ஜூன் 19 வரை, பிளானட் லேப்ஸ் பிபிசியின் செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஒரு காலத்தில் நிரம்பியிருந்த அல் உதெய்ட் விமானத் தளத்தில் (அமெரிக்காவின் மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ நிறுவல்) பெரும்பாலும் விமானங்களால் காலியாக இருப்பதைக் காட்டுகிறது.

ஜூன் 5 அன்று, C-130 ஹெர்குலஸ் போக்குவரத்து விமானங்கள் மற்றும் மேம்பட்ட உளவு விமானங்கள் உட்பட சுமார் 40 விமானங்கள் வெற்றுப் பார்வையில் நிறுத்தப்பட்டன.

எனினும், ஜூன் 19 ஆம் திகதிக்குள் அவற்றில் மூன்று மட்டுமே எஞ்சியியுள்ளதை புகைப்படம் காட்டுகின்றது.

Gt3A3jgW0AATscs?format=jpg&name=900x900

இதற்கிடையில், கட்டாரில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை (19) மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தது.

பொது விமான கண்காணிப்பு தரவுகளின் AFP இன் பகுப்பாய்வு,

ஜூன் 15 முதல் 18 வரை, KC-46A பெகாசஸ் மற்றும் KC-135 ஸ்ட்ராடோடேங்கர் விமானங்கள் உட்பட குறைந்தது 27 இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு பறந்தன என்பதைக் காட்டுகிறது.

புதன்கிழமை பிற்பகுதியில், அந்த விமானங்களில் 25 விமானங்கள் இன்னும் ஐரோப்பாவில் இருந்தன, இரண்டு மட்டுமே அமெரிக்காவிற்குத் திரும்பியுள்ளன.

இந்த எரிபொருள் நிரப்பும் விமானங்கள் நீண்ட தூர விமான நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் அமெரிக்கா நீட்டிக்கப்பட்ட பயணங்களுக்குத் தயாராகி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் கூறுகின்றது.

அமெரிக்க படைகள் உஷார் நிலையில்

மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்கப் படைகள் உஷார் நிலையில் உள்ளன.

மேலும், ஈரானிய பழிவாங்கலுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக இராணுவக் குடும்பங்கள் தாமாக முன்வந்து தளங்களை விட்டு வெளியேற விருப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இப்பகுதி முழுவதும் சுமார் 40,000 அமெரிக்க படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது வழக்கமாக 30,000 ஆக இருந்தது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான முந்தைய மோதல்களின் போதும், செங்கடலில் வணிக மற்றும் இராணுவக் கப்பல்கள் மீது ஹவுத்திகள் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியதன் போதும் ஒக்டோபரில் அந்த எண்ணிக்கை 43,000 ஆக உயர்ந்தது.

மேலதிக படை நகர்வுகள் குறித்து பென்டகன் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஈரானுடனான நிலைமை எவ்வாறு உருவாகிறது என்பதைப் பொறுத்து அமெரிக்கப் பணியாளர்கள் விரைவான மாற்றங்களுக்குத் தயாராக இருப்பதாக வலியுறுத்தியது.

https://athavannews.com/2025/1436385

அமெரிக்க வீசா விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

1 month 1 week ago

Published By: DIGITAL DESK 3

19 JUN, 2025 | 05:32 PM

image

வீசா விண்ணப்பதாரர்களுக்கு விரிவாக்கப்பட்ட திரையிடல் மற்றும் சரிபார்ப்பு தொடர்பில் விசேட அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்,

எங்கள் வீசா செயல்முறை மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களை நிலைநிறுத்துவதன் மூலம், எங்கள் நாட்டையும் எங்கள் குடிமக்களையும் பாதுகாக்க வெளிவிவகார அமைச்சு உறுதிபூண்டுள்ளது. அமெரிக்க வீசா என்பது ஒரு சலுகை மட்டுமே. உரிமை அல்ல.

அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் உட்பட, அமெரிக்காவிற்கு அனுமதிக்கப்படாத வீசா விண்ணப்பதாரர்களை அடையாளம் காண எங்கள் விசா சோதனை மற்றும் சோதனையில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்.

புதிய வழிகாட்டுதலின் கீழ், F, M மற்றும் J குடியேறியவர் அல்லாத வகைப்பாடுகளில் உள்ள அனைத்து மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் விண்ணப்பதாரர்களின் ஒன்லைன் இருப்பு உட்பட விரிவான மற்றும் முழுமையான சோதனையை நாங்கள் மேற்கொள்வோம்.

இந்த சோதனையை எளிதாக்க, F, M மற்றும் J குடியேறியவர் அல்லாத வீசாக்களுக்கான அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் அனைத்து சமூக ஊடக சுயவிவரங்களிலும் உள்ள தனியுரிமை அமைப்புகளை "பொதுமக்கள்" என்று சரிசெய்ய அறிவுறுத்தப்படுவார்கள்.

எங்கள் வெளிநாட்டு இடுகைகள் விரைவில் F, M மற்றும் J குடியேறியவர்கள் அல்லாத வீசா விண்ணப்பங்களை திட்டமிடுவதை மீண்டும் தொடங்கும். விண்ணப்பதாரர்கள் சந்திப்பு கிடைப்பதற்காக தொடர்புடைய தூதரகம் அல்லது தூதரக வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு வீசா தீர்ப்பும் ஒரு தேசிய பாதுகாப்பு முடிவாகும். அமெரிக்காவிற்குள் நுழைய விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்கர்களுக்கும் நமது தேசிய நலன்களுக்கும் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதையும், அனைத்து விண்ணப்பதாரர்களும் கோரப்படும் வீசாவிற்கான தங்கள் தகுதியை நம்பகத்தன்மையுடன் நிறுவுவதையும், அவர்கள் தங்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளுக்கு இணங்க நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவதையும் உறுதிசெய்ய, வீசா வழங்கும் செயல்முறையின் போது அமெரிக்கா விழிப்புடன் இருக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/217927

யானைகளை கொல்ல உத்தரவிட்ட ஜிம்பாப்வே - இந்த புத்திசாலி விலங்கால் என்ன பிரச்னை?

1 month 1 week ago

ஜிம்பாப்வே, யானைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜிம்பாப்வேயில் 84,000-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிரியா சிப்பி

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

யானைகளின் எண்ணிக்கை அதீதமாக உயர்ந்துவிட்டது என்று சொல்ல முடியுமா? ஜிம்பாப்வே அரசை பொருத்தவரை யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக யானைகளை கொல்ல அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.

விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடைமுறை, அவற்றின் ஒரு பகுதியைக் 'கொல்லுதல்' ஆகும். அதாவது அதிகளவில் இருக்கும் விலங்குகளை, ஒரு குறிப்பிட்ட அளவில் அழிப்பதன் மூலம் அந்த விலங்கினத்தின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டில் (2024), இருநூறுக்கும் மேற்பட்ட யானைகளை கொல்ல அனுமதி கொடுத்ததற்காக ஜிம்பாப்வே அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது.

இப்படிப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில், தெற்கு ஜிம்பாப்வேயில் உள்ள சேவ் பள்ளத்தாக்கு பாதுகாப்புப் பகுதியில் வசிக்கும் யானைகளில் குறைந்தது 50 யானைகளை கொல்லும் திட்டத்தை அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது.

யானைகளை கொல்லும் திட்டங்கள் ஏற்கனவே அமலில் இருப்பதாக தேசிய வனவிலங்கு ஆணையமான ஜிம்பார்க்ஸின் செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவோ கூறுகிறார்.

தேசிய பூங்காவில் தற்போது 2,550 யானைகள் உள்ளன, ஆனால் அங்கு 800 யானைகளை 'பராமரிக்கும் திறன்' மட்டுமே உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

யானைகளை கொன்று அதிலிருந்து கிடைக்கும் மாமிசம், உள்ளூர் மக்களின் உணவுக்காக கொடுக்கப்படும் என்றும், யானைத் தந்தங்கள் தேசிய பூங்காவின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

"நமது வாழ்விடத்தைப் பாதுகாக்க, விலங்கு அதிகரிப்புப் பிரச்னையை நாம் சமாளிக்க வேண்டும்." என்று ஃபராவோ பிபிசியிடம் தெரிவித்தார்.

"அதீத அளவிலான யானைகள், தாங்கள் வாழும் வாழ்விடத்தையே அழித்துவிடுகின்றன. அது, யானைகளுக்கே ஆபத்தாக மாறி வருகிறது. இப்போது இருக்கும் பெருமளவிலான யானைகளின் எண்ணிக்கையை நமது சுற்றுச்சூழல் அமைப்பால் சமாளிக்க முடியாது," என்று அவர் கூறுகிறார்.

வடக்கு ஜிம்பாப்வேயின் ஹ்வாங்கேயில் உள்ள ஹ்வாங்கே தேசிய பூங்காவில் ஒரு யானை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜிம்பாப்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, யானைகளின் எண்ணிக்கையை குறைக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வருகிறது

'பாதுகாக்கும் அணுகுமுறையால் அரசு எதிர்கொள்ளும் விமர்சனம்'

ஜிம்பாப்வேயில் 1980களின் பிற்பகுதி வரை அமலில் இருந்த யானை அழிப்பு திட்டம் அதன்பிறகு 2024ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படவில்லை.

ஜிம்பாப்வேயில் அதிக அளவிலான யானைகள் உள்ளன. உலகில் அதிகளவிலான யானைகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே இரண்டாம் இடம் வகிக்கிறது. 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வான்வழி கணக்கெடுப்பின் அடிப்படையில், நாட்டில் 84,000க்கும் மேற்பட்ட யானைகள் இருந்ததாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.

KAZA அமைப்பு 2022இல் நடத்திய யானை கணக்கெடுப்பு மற்றொரு எண்ணிக்கையை காட்டியது. அதன்படி, ஜிம்பாப்வேயில் சுமார் 65,000 யானைகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1,31,000-க்கும் அதிகமான யானைகளைக் கொண்ட போட்ஸ்வானா, உலகில் அதிகளவிலான யானைகள் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

யானையின் எண்ணிக்கையை குறைக்கும் புதிய திட்டங்களுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

"இது பாதுகாப்பிற்கான மிகவும் மோசமான அணுகுமுறை," என்று ஜிம்பாப்வேயை தளமாகக் கொண்ட இயற்கை வள நிர்வாக மையத்தின் இயக்குனர் ஃபராய் மகுவு கூறுகிறார்.

"யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வனவிலங்கு வழித்தடங்களை உருவாக்கி, அவை இயல்பான முறையில் வாழ்வதற்கான பிற பகுதிகளில் சுதந்திரமாக வாழவிடலாம்," என்று அவர் கூறுகிறார்.

"அதேபோல, யானைகள் குறைவாக உள்ள பகுதிகளுக்கு அவற்றை இடமாற்றம் செய்யலாம்."

யானைகளை இடமாற்றம் செய்வது செலவு அதிகம் பிடிக்கும் செயல்முறை என்றும், அது அதீத எண்ணிக்கை என்ற பிரச்னையை தீர்க்காது என்றும் ஜிம்பாப்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

"இடமாற்றம் என்பது அதிக செலவு பிடிக்கும் செயல்முறை. நம்மிடம் வளங்கள் குறைவாகவே உள்ளன. அத்துடன், ஜிம்பாப்வே ஒரு நாடாக பெரிய அளவில் வளராவிட்டாலும், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் மட்டற்ற அளவில் அதிகரித்து வருகிறது, இது வாழ்விடத்திற்கான போட்டியை உருவாக்குகிறது," என்று ஃபராவோ கூறுகிறார்.

ஆனால், யானைகளை இடமாற்றுவதும் வழக்கத்தில் இல்லாதது அல்ல.

பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இடமாற்ற முயற்சிகளில் மிகப்பெரிய ஒன்றில், அண்மையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 70 வெள்ளை காண்டாமிருகங்கள் ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டன.

இந்த முயற்சி வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும், இனப்பெருக்கம் செய்ய புதிய இடம் ஒன்றை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

விலங்குகளின் அதிக எண்ணிக்கை, நீர் மற்றும் உணவு போன்ற வளங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், யானைகளை கொல்வது என்பது மனிதர்கள்-வனவிலங்கு மோதலை மோசமாக்கும் என்று மகுவு எச்சரிக்கிறார்.

தென்னாப்பிரிக்கா, வெள்ளை காண்டாமிருகங்கள், ருவாண்டா,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அண்மையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 70 வெள்ளை காண்டாமிருகங்கள் ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டன

"யானைகள் மிகவும் புத்திசாலியானவை மற்றும் உணர்ச்சிபூர்வமான உயிரினம்," என்று அவர் கூறுகிறார்.

"ஒரு யானையைக் கொன்றால், பிற யானைகள் வழக்கமாக தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடரும் என்று நினைக்காதீர்கள், தங்களுடன் இருந்த சக உயிரினங்களின் இழப்பால் அவை பெரும் துக்கத்திற்கு ஆளாகின்றன. யானைகளின் துக்கத்தின் எதிரொலியை அருகிலுள்ள சமூகங்கள் மூர்க்கமாக எதிர்கொள்ள நேரிடும்" என அவர் எச்சரிக்கிறார்.

அண்டை நாடான நமீபியாவிலும் யானைகளை கொல்லும் நடைமுறை வழக்கில் உள்ளது.

மேய்ச்சல் நிலங்கள் குறைவாக இருப்பதால் ஏற்படும் தாக்கங்களை குறைக்கவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கவும், யானைகள் உட்பட 700க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை கடந்த ஆண்டில் நமீபியா அரசாங்கம் கொன்றது.

யானைகளை கொல்வது என்பது "வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத 'யானை தந்தங்களின்' வர்த்தகத்தை மீண்டும் தூண்டும்" என்று வோர்ல்ட் அனிமல் ப்ரொடெக்‌ஷன் போன்ற விலங்கு உரிமை அமைப்புகள் முன்னெச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

அதே நேரத்தில் விலங்குகளை துன்புறுத்துவதை எதிர்க்கும் பீட்டா (PETA) அமைப்பு, இத்தகைய நடைமுறைகளை "கொடூரமானது" மற்றும் "ஆபத்தான, குறுகிய பார்வை கொண்டது" என்று விவரித்துள்ளது.

வேறு எங்கு யானைகளை கொல்லும் போக்கு இருக்கிறது?

நோய்கள் பரவுவதைத் தடுக்க விலங்குகள் கொல்லப்படும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

பிரிட்டனில் போவைன் காசநோயின் பரவலைத் தடுக்கும் வகையில், ஒரு தசாப்தத்தில் 230,000க்கும் மேற்பட்ட வளைக்கரடிகள் (badgers), 278,000 க்கும் மேற்பட்ட பல்வேறு கால்நடைகள் கொல்லப்பட்டன.

இருப்பினும் இந்த விலங்குகள் கொல்லப்படுவது, 2029ஆம் ஆண்டில் நிறுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்தது. இதற்கு பதிலாக வளைக்கரடிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.

2020ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில், ஸ்பெயினில் ஒரு பண்ணையில் இருந்த பல விலங்குகளுக்கு தொற்று பாதித்ததை அடுத்து, கிட்டத்தட்ட 1,00,000 மிங்க் எனும் கீரிகளைக் கொல்ல ஸ்பெயின் உத்தரவிட்டது.

இதற்கிடையில், டென்மார்க்கில், கொரோனா வைரஸ் பாதித்த லட்சக்கணக்கான மிங்க் கீரிகளைக் கொல்லும் திட்டத்திற்கு அரசியல் ரீதியிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.

ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு மாகாணமும் எவ்வளவு கங்காருக்களை கொல்லலாம் என்பதற்கான 'எண்ணிக்கை' அளவு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நிலத்தைப் பாதுகாக்கவும் வறட்சியின் போது வெகுஜன இறப்பு அபாயத்தைக் குறைக்கவும் விலங்குகளை அழித்தல் அவசியம் என்று அரசாங்கம் கூறுகிறது.

விலங்குகளை அழித்தல் திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்று சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

"கொலை செய்வது என்பது மிகவும் வெறுப்பூட்டும் விஷயமாக தோன்றினாலும், அதனை முற்றிலும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளும் ஏற்படுவதை நாங்கள் அறிவோம்," என்று சூழலியல் நிபுணரும் எழுத்தாளருமான ஹக் வார்விக் கூறுகிறார்.

"தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ விலங்குகளை தீவுகளில் மனிதர்கள் விட்டுவிட்டதால், இது அந்த இடத்தின் சூழலை மிக அதிகமாக மாற்றி, அங்குள்ள உள்ளூர் விலங்குகள் வாழ முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.''

தெற்கு ஜார்ஜியாவின் தொலைதூர தீவில் எலிகளை ஒழிக்கும் ஒரு திட்டத்தை வார்விக் மேற்கோள் காட்டுகிறார், அங்கு விடப்பட்ட எலிகள் உள்ளூர் விலங்குகளை அழித்துவிட்டன.

"இந்த முயற்சி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது, இது தார்மீக ரீதியாக நியாயமானது என்றும் தோன்றுகிறது," என்று அவர் கூறுகிறார்.

எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு விலங்குகளின் பாதுகாப்பை அளவிடுவதைவிட, ஒரு சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் அவை செழித்து வளரும் திறனால் அளவிட வேண்டும் என்று வார்விக் கருதுகிறார்.

"ஜிம்பாப்வேயில், 'விலங்கு அழிப்பு' திட்டம் வெற்றி பெறலாம், ஆனால் போதுமான வாழ்விடங்கள் இல்லாததால் யானைகள் தங்கள் வாழ்க்கைப் போரில் தோற்றுப் போகின்றன."

இங்கிலாந்து, வனவிலங்கு உரிமைகள், வனவிலங்கு அதிகாரிகள் பேட்ஜர்கள் அழிப்பு, விலங்குகளுக்குத் தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரிட்டனின் சில பகுதிகளில், வனவிலங்கு அதிகாரிகள் வளைக்கரடிகளை அழிப்பதற்குப் பதிலாக தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளனர்

வேறு ஏதேனும் விருப்பத்தெரிவுகள் உள்ளனவா?

யானைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, தென்னாப்பிரிக்கா பிறப்பு கட்டுப்பாட்டு திட்டம் ஒன்றை ஒரு தசாப்தத்திற்கு முன்பு தொடங்கியது. கருத்தடை மருந்துகளை காற்றின் மூலமாக யானைகளின் மீது பாய்ச்சும் முறையாகும்.

தாய்லாந்தில் மனிதர்கள்-யானைகள் மோதல் அதிகரித்து இருக்கும் நிலையில், காட்டுப் யானைகளில் பெண் யானைகளுக்கு பிறப்பு கட்டுப்பாட்டைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்த ஆண்டு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நோயுற்ற விலங்குகள், மனிதர்கள் அல்லது பிற விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக மாறும் நிலையில், இதே போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் வார்விக் சுட்டிக்காட்டுகிறார்.

"பிரிட்டனில் பூர்வீக சிவப்பு அணில்கள் மற்றும் இடம்பெயர்ந்து வந்த சாம்பல் அணில்களுக்கும் இடையிலான பிரச்னையை, விலங்கு பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களில் ஒன்றாக சொல்லலாம். சிவப்பு அணில்களைக் கொல்லும் ஒரு நோய், சாம்பல் அணில்களிடம் உள்ளது," என்று அவர் கூறுகிறார்.

"சிவப்பு அணில்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது அல்லது சாம்பல் அணில்களுக்கு கருத்தடை முறைகளைக் கண்டுபிடிப்பது ஒரு உத்தியாக இருக்கலாம்" என்று அவர் கூறுகிறார்.

பாதுகாப்புப் பிரச்னைகள் மிகவும் சிக்கலானவை என்றும், கொலை செய்வது பெரும்பாலும் விரைவான மற்றும் எளிமையான தீர்வாகக் கருதப்படுகிறது என்றும் வார்விக் கூறுகிறார்.

"இந்த சிக்கலுக்கு மாற்று வழிகளைக் காண்பதே முதல் தெரிவாக இருக்கவேண்டும். இடமாற்றம் அல்லது சமூக மேலாண்மை தொடர்பானதாக இருந்தாலும் மாற்று வழிகள்தான் சிறந்தது, விலங்குகளை அழிப்பது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்."

யானைகளுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு செய்வது குறித்து ஜிம்பாப்வே அரசின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம்.

"ஒரு பூங்காவிலோ சிறிய இடத்திலோ பிறப்புக் கட்டுப்பாடு முயற்சிகள் சாத்தியப்படலாம், ஆனால் பல்லாயிரக்கணக்கான யானைகளைக் கொண்ட மாபெரும் இடத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், அங்கு பிறப்பு கட்டுப்பாடு முறைகளை நிர்வகிப்பது கடினம்" என்று ஃபராவோ பதிலளிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2len1pyr11o

மொசாட் அமைப்பின் வெற்றிகளும் தோல்விகளும் - வரலாற்றில் இடம்பெற்ற 14 முக்கிய ஆபரேஷன்கள்

1 month 1 week ago

மொசாட்: இஸ்ரேலின் உளவு அமைப்பின் வெற்றிகள் மற்றும் தோல்விகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES/BBC

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிபிசி நியூஸ் அரபிக்

  • பதவி,

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீபத்திய தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம், இஸ்ரேல் இரானிய அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளை குறிவைத்துள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் நாட்டின் மேற்குப் பகுதியிலும் தலைநகர் டெஹ்ரானைச் சுற்றியும் நடந்துள்ளன.

தாக்குதல்கள் வான்வழியாக நடந்திருந்தாலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட், இலக்குகளைக் கண்டறிந்து தரையிலிருந்து நடவடிக்கைகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

உதாரணமாக, மொசாட் உளவாளிகள் இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க நாட்டிற்குள் கடத்தப்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

முன்னதாக தங்கள் பாதுகாப்புப் படைகளில் இஸ்ரேலிய உளவுத்துறை ஊடுருவியிருக்கலாம் என சந்தேகிப்பதாக இரானிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

ஜூன் 13 அன்று இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான முக்கிய இரானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குறிவைக்கப்பட்டுள்ளனர், இது இஸ்ரேல் அவர்களின் இருப்பிடம் குறித்து உளவுத்துறை தகவல்களைப் பெற்றிருப்பதைக் குறிக்கிறது.

இந்த நிகழ்வுகளில் மொசாட்டின் பங்கை மதிப்பிடுவது எளிதல்ல. இஸ்ரேல் அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது மற்றும் உளவுத்துறையின் பிற பிரிவுகளும் உள்ளன.

ஆனால் மொசாட் அமைப்பின் குறிப்பிடத்தக்க கடந்தகால செயல்பாடுகள் பற்றி நாம் அறிந்தவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

மொசாட்டின் வெற்றிகள்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,ANADOLU VIA GETTY

படக்குறிப்பு, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (இடது) டெஹ்ரானுக்கு விஜயம் செய்தபோது, இரானிய புரட்சிகர காவல்படையின் தளபதி ஹொசைன் சலாமி (வலது) அவரை வரவேற்கிறார். இருவரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை 31, 2024 அன்று டெஹ்ரானில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் ஆரம்பத்தில் பொறுப்பேற்கவில்லை, ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு அதன் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இந்தக் கொலைக்குப் பின்னால் இஸ்ரேல் இருந்ததை ஒப்புக்கொண்டார்.

ஹனியேவின் மரணத்தைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கான பதில் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஹனியேவை, ஒரு ஏவுகணை 'நேரடியாக' தாக்கியதாக ஹமாஸின் மூத்த அதிகாரி கலீல் அல்-ஹய்யா ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஹனியேவுடன் இருந்த சாட்சிகளை மேற்கோள் காட்டி அவர் இதைக் கூறினார்.

ஆனால் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஏழு அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, ஹனியே தங்கியிருந்த கட்டடத்திற்குள், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மறைத்து கொண்டுசெல்லப்பட்ட ஒரு வெடிகுண்டு மூலம் அவர் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசியால் இந்தக் கூற்றுகளில் எதையும் சரிபார்க்க முடியவில்லை.

2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலால் கொல்லப்பட்ட பல ஹமாஸ் தலைவர்களில் ஹனியேவும் ஒருவர்.

இதில் காஸாவின் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், அவரது சகோதரர் முகமது, ஹமாஸின் ராணுவப் பிரிவின் தலைவர் முகமது டெய்ஃப் மற்றும் அவருக்கு அடுத்த இடத்தில இருந்த தலைவர் மர்வான் இசா ஆகியோர் அடங்குவர்.

ஹெஸ்பொலா அமைப்பின் சாதனங்கள் வெடித்த நிகழ்வு

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வெடித்துச் சிதறிய தகவல் தொடர்பு சாதனத்தால் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா உறுப்பினரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

செப்டம்பர் 17, 2024 அன்று, லெபனான் முழுவதும் முக்கியமாக வலுவான ஹெஸ்பொலா இருப்பு உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. இந்த வெடிப்புகள் பயனர்களையும் அருகிலுள்ள சிலரையும் காயப்படுத்தின அல்லது கொன்றன.

மறுநாள் வாக்கி-டாக்கிகள் அதே பாணியில் வெடித்தன. நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர், காயமடைந்தனர்.

தாக்குதல் நடந்த நேரத்தில், இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் ஒரு மோதலில் ஈடுபட்டிருந்தன. இது அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களுக்கு ஒரு நாள் கழித்து, இஸ்ரேலிய நிலைகள் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியதின் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலின் ஒரு பகுதியாகும்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேல்தான் இதற்குப் பொறுப்பு என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டதாக அப்போது இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ்ஸுக்கு இரண்டு முன்னாள் மொசாட் ஏஜென்ட்கள் அளித்த பேட்டியில், இந்த நடவடிக்கையின் விவரங்களை வெளியிட்டனர்.

மொசாட் வாக்கி-டாக்கிகளை இயக்கும் பேட்டரிகளுக்குள் ஒரு வெடிக்கும் சாதனத்தை மறைத்து வைத்திருந்ததாகவும், பொதுவாக இந்த வாக்கி-டாக்கிகள் ஒருவரின் இதயத்திற்கு அருகில் இருக்குமாறு உடையில் பொருத்தப்படும் என்றும் கூறினர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போலி நிறுவனத்திடமிருந்து 'நல்ல விலைக்கு' 16,000க்கும் மேற்பட்ட வாக்கி-டாக்கிகளை ஹெஸ்பொலா அறியாமல் வாங்கியதாகவும், பின்னர் 5,000 பேஜர்களையும் வாங்கியதாகவும் ஏஜென்ட்கள் தெரிவித்தனர் என சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வெடிப்புகள் லெபனான் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின, பல்பொருள் அங்காடிகள் உட்பட எல்லா இடங்களிலும் பேஜர்கள் கொண்டு செல்லப்பட்டபோது வெடிப்புகள் நிகழ்ந்தன.

மருத்துவமனைகள் மனித உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிந்தன, அவர்களில் பலர் உடல் உறுப்புகளை இழந்திருந்தனர்.

ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் இந்தத் தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என்று அழைத்தார்.

மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, இரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் கொலைக்குப் பின்னால் மொசாட் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

நவம்பர் 2020இல், இரானின் மிக முக்கியமான அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை ஏற்றிச் சென்ற ஒரு வாகனத் தொடரணி, தலைநகர் டெஹ்ரானுக்கு கிழக்கே உள்ள அப்சார்ட் நகரில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானது.

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டார்.

"பொதுமக்கள் யாரும் உயிரிழக்காமல், ஒரு நகரும் இலக்கை நோக்கி இதுபோன்ற 'சர்ஜிக்கல்' முறையில் படுகொலை செய்வதற்கு, களத்திலிருந்து நிகழ்நேர உளவுத் தகவல்கள் தேவைப்படும்" என்று பிபிசி பாரசீக செய்தியாளரான ஜியார் கோல் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரல் 2018இல், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பானதாகக் கூறப்படும் பல ஆவணங்களைக் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காட்சிப்படுத்தினார். இது பல மாதங்களுக்கு முன்பு, ஒரு இரானிய 'சேமிப்பு கட்டடத்தில்' மொசாட் அமைப்பு நடத்திய துணிச்சலான நடவடிக்கையில் திருடப்பட்டதாக அவர் கூறினார். இந்த கட்டிடம் டெஹ்ரானில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது. (இது பின்னர் இரானிய அதிபர் ஹசன் ரூஹானியால் உறுதிப்படுத்தப்பட்டது).

ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ஆவணங்களை வழங்கிய இஸ்ரேலிய பிரதமர், அறிவிக்கப்படாத ஒரு அணு ஆயுதத் திட்டத்திற்காக மொஹ்சென் ஃபக்ரிஸாதே பணியாற்றுகிறார் எனக் கூறினார்.

"மொஹ்சென் ஃபக்ரிஸாதே... அந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள்," என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

2010 மற்றும் 2012க்கு இடையில், நான்கு இரானிய அணு விஞ்ஞானிகளை இஸ்ரேல் கொன்றதாக இரான் முன்பு குற்றம் சாட்டியிருந்தது.

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட மஹ்மூத் அல்-மபூஹ்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மஹ்மூத் அல்- மபூஹ் மீது முதலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. பின்னர் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார்

2010 ஆம் ஆண்டு, ஹமாஸின் மூத்த ராணுவத் தலைவரான மஹ்மூத் அல்-மபூஹ் துபை நாட்டின் ஹோட்டல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில், இது ஒரு இயற்கை மரணம் போல் தோன்றியது. ஆனால் துபை காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பின்னர், இறுதியில் கொலையாளிகளை அடையாளம் காண முடிந்தது.

அல்-மபூ முதலில் மின்சாரத்தால் தாக்கப்பட்டு பிறகு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார் என்பதை காவல்துறை பின்னர் கண்டறிந்தது.

இந்த நடவடிக்கை மொசாட்டால் திட்டமிடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதாண்மை ரீதியிலான சீற்றத்தைத் தூண்டியது.

இருப்பினும், இஸ்ரேலிய தூதர்கள், மொசாட்டை தாக்குதலுடன் தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினர்.

மொபைல் போன் வெடிப்பில் கொல்லப்பட்ட யஹ்யா அய்யாஷ்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, யஹ்யா அய்யாஷின் படம்

1996 ஆம் ஆண்டு, ஹமாஸின் முக்கிய வெடிகுண்டு தயாரிப்பாளரான யஹ்யா அய்யாஷ், 50 கிராம் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மோட்டோரோலா ஆல்ஃபா மொபைல் போன் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

ஹமாஸின் ராணுவப் பிரிவில் ஒரு முக்கிய தலைவரான அய்யாஷ், குண்டுகளை உருவாக்குவதிலும், இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக சிக்கலான தாக்குதல்களை திட்டமிடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

2019 இன் பிற்பகுதியில் இந்தக் கொலையின் சில விவரங்களை வெளியிடுவதற்கான தடைகளை இஸ்ரேல் நீக்கியது. மேலும் இஸ்ரேலின் 'சேனல் 13' தொலைக்காட்சி அய்யாஷ் மற்றும் அவரது தந்தை இடையேயான இறுதி தொலைபேசி அழைப்பின் பதிவை ஒளிபரப்பியது.

ஆபரேஷன் பிரதர்ஸ்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,RAFFI BERG

படக்குறிப்பு, எத்தியோப்பிய யூதர்கள் பயணித்த வாகனத்திற்கு அருகில் நிற்கும் ஒரு மொசாட் ஏஜென்ட்.

1980களின் முற்பகுதியில், பிரதமர் மெனகெம் பிகின் அறிவுறுத்தலின் பேரில் மொசாட் அமைப்பு 7,000 க்கும் மேற்பட்ட எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த யூதர்களை சூடான் வழியாக இஸ்ரேலுக்கு அழைத்து சென்றது. இதற்காக ஒரு போலி டைவிங் ரிசார்ட்டை மொசாட் பயன்படுத்தியது.

அரபு நாடுகள் கூட்டமைப்பில் உள்ள சூடான், இஸ்ரேலுக்கு எதிரி நாடு. எனவே ரகசியமாக செயல்பட்ட மொசாட் ஏஜென்ட்களின் குழு சூடானின் செங்கடல் கடற்கரையில் ஒரு ரிசார்ட்டை அமைத்து அதை தங்கள் தளமாக பயன்படுத்தினர்.

அந்த ஏஜென்ட்கள் பகலில் ஹோட்டல் ஊழியர்களாக பணிபுரிந்தனர். அண்டை நாடான எத்தியோப்பியாவிலிருந்து வந்த யூதர்களை இரவு நேரத்தில் அவர்கள் ரகசியமாக தங்கள் இடத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த ஆபரேஷன் குறைந்தது ஐந்து ஆண்டுகள் நீடித்தது. அது கண்டுபிடிக்கப்படுவதற்குள் மொசாட் ஏஜென்ட்கள் தப்பி ஓடிவிட்டனர்.

ம்யூனிக் ஒலிம்பிக் தாக்குதலுக்கு பதிலடி

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாலத்தீன ஆயுதக்குழுவால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மியூனிக் ஒலிம்பிக் மைதானத்தில் இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

1972-ஆம் ஆண்டு ஒரு பாலத்தீன ஆயுதக்குழு ம்யூனிக் ஒலிம்பிக்கின் போது இஸ்ரேல் ஒலிம்பிக் குழுவின் இரு உறுப்பினர்களை கொன்றது. ஒன்பது பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றது.

பின்னர் மேற்கு ஜெர்மன் படையினரின் மீட்பு முயற்சி தோல்வியடைந்ததால், இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1972-ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஒலிம்பிக் குழுவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்து வந்த ஆண்டுகளில், மியூனிக் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட மெஹ்மூத் ஹம்ஷாரி உள்ளிட்டோருக்கு மொசாட் குறிவைத்தது

மெஹ்மூத் ஹம்ஷாரி, பாரிஸில் இருந்த அவரது வீட்டில் தொலைபேசியில், வெடிக்கும் சாதனம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த குண்டுவெடிப்பில் ஹம்ஷாரி ஒரு காலை இழந்து இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆபரேஷன் என்டெபி

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, என்டெபி பணயக்கைதிகள் ஒரு வாரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

1976-ஆம் ஆண்டில் உகாண்டாவில் நடத்தப்பட்ட ஆபரேஷன் என்டெபி என்பது இஸ்ரேலின் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு 'மொசாட்' அமைப்பு உளவுத் தகவல்களை வழங்கியது.

பாரிஸுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தை பாலத்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் அவர்களது இரண்டு ஜெர்மன் கூட்டாளிகளும் கடத்தினர். அவர்கள் விமானத்தை உகாண்டாவிற்கு திருப்பினார்.

என்டெபி விமான நிலையத்தில் கடத்தல்காரர்கள் பயணிகளையும், விமானக்குழுவையும் பணயக்கைதிகளாக வைத்திருந்தனர்.

இஸ்ரேலிய கமாண்டோக்கள் விமான நிலையத்துக்குள் புகுந்து, 100 இஸ்ரேலிய மற்றும் யூத பணயக்கைதிகளை மீட்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கையின்போது மூன்று பணயக்கைதிகள், கடத்தல்காரர்கள், பல உகாண்டா ராணுவ வீரர்கள் மற்றும் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சகோதரர், மூத்த கமாண்டோ யோனாதன் நெதன்யாகு ஆகியோர் கொல்லப்பட்டனர்.

நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை தேடி கண்டுபிடித்தது

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேலில் நடந்த விசாரணையின் போது அடால்ஃப் ஐக்மேன்

1960-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் இருந்து நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை கடத்தியது மொசாட்டின் மிகவும் பிரபலமான உளவு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களால் 60 லட்சம் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதில் ஐக்மேன் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படுகிறார்.

தான் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக பல நாடுகளுக்கு தப்பி சென்று கொண்டே இருந்த ஐக்மேன் இறுதியில் அர்ஜென்டினாவில் குடியேறினார்.

14 மொசாட் ஏஜென்ட்கள் கொண்ட குழு அவரைக் கண்டுபிடித்து கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு வந்தது. அங்கு விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

குறிப்பிடத்தக்க தோல்விகள்

பல வெற்றிகரமான நடவடிக்கைகளை நடத்தியுள்ள போதிலும் மொசாட் பல தோல்விகளையும் சந்தித்துள்ளது.

7 அக்டோபர் 2023- ஹமாஸ் நடத்திய தாக்குதல்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

2023 அக்டோபர் 7 அன்று காஸா எல்லைக்கு அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல், மொத்த நாட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தாக்குதலை முன்னறிவிப்பதில் மொசாட்டின் தோல்வி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தடுப்புக் கொள்கையில் உள்ள பலவீனத்தை இது பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. சுமார் 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், காஸா பகுதியில் ஒரு போரைத் தொடங்கியது. இதில், 40,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யோம் கிப்பூர் போர்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1973 அரபு இஸ்ரேலியப் போரின் போது சூயஸ் கால்வாயைக் கடக்கும் இஸ்ரேலியப் படைகள்.

கிட்டத்தட்ட சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேல் இதேபோன்ற ஒரு எதிர்பாராத தாக்குதலை சந்தித்தது.

அக்டோபர் 6, 1973 அன்று, சினாய் தீபகற்பம் மற்றும் கோலன் குன்றுகளை மீட்பதற்காக எகிப்தும் சிரியாவும் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தின.

யோம் கிப்பூர் எனப்படும் யூதர்களின் பாவநிவிர்த்தி தினத்தன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இஸ்ரேலை ஆச்சரியப்படுத்தியது. எகிப்தியப் படைகள் சூயஸ் கால்வாயைக் கடந்தன. அதே நேரத்தில் சிரியா படைகள் இஸ்ரேலிய நிலைகளைத் தாக்கி கோலன் குன்றுப்பகுதியில் நுழைந்தன.

அந்த நேரத்தில் சோவியத் யூனியன் சிரியா மற்றும் எகிப்துக்கு பொருட்களை வழங்கியது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா அவசரகால உதவிகளை வழங்கியது.

பின்னர் இஸ்ரேல் படைகள் எதிர்ப்பை முறியடிப்பதில் வெற்றி பெற்றன. சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐ.நா தீர்மானத்திற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 25-ஆம் தேதி சண்டை முடிவுக்கு வந்தது.

ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் படுகொலை முயற்சி தோல்வி

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மொசாட் அமைப்பால் தீவிரமாக தேடப்படும் ஹமாஸ் தலைவர்களில் ஒருவர் மஹ்மூத் அல்-ஜஹர்.

2003-ஆம் ஆண்டு காஸா நகரில் உள்ள ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் வீட்டை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

அல்-ஜஹர் தாக்குதலில் இருந்து தப்பிய போதிலும் அவரது மனைவி, மகன் காலித் மற்றும் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் அவரது வீட்டை முற்றிலுமாக அழித்தது. மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை அது எடுத்துக்காட்டியது.

ஹமாஸ் அரசியல் தலைவர் காலித் மெஷால்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,காலித் மெஷால் 1996 மற்றும் 2017 க்கு இடையில் ஹமாஸின் அரசியல் தலைவராக பணியாற்றினார்.

1997-ஆம் ஆண்டு ஜோர்டானில், ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவரான காலித் மெஷாலை விஷம் கொடுத்து இஸ்ரேல் கொலை செய்ய முயற்சித்தது. இஸ்ரேல் - ஜோர்டான் இடையே மிகப் பெரிய தூதாண்மை நெருக்கடியைத் தூண்டிய நடவடிக்கைகளுள் இது ஒன்றாகும்.

இஸ்ரேலிய ஏஜென்டுகள் பிடிபட்ட போது இந்த ஆபரேஷன் தோல்வியடைந்தது. மெஷாலின் உயிரைக் காப்பாற்ற அவருக்கு விஷமுறிவு மருந்தை வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது.

மொசாட்டின் அப்போதைய தலைவர் டேனி யாடோம், மெஷாலுக்கு சிகிச்சை அளிக்க ஜோர்டன் சென்றார்.

இந்த கொலை முயற்சி ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை மோசமாக்கியது.

லவோன் விவகாரம்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சூயஸ் கால்வாயை தேசியமயமாக்குவதாக அறிவிக்கும் எகிப்து அதிபர் கமல் அப்தெல் நாசர்.

1954 இல் எகிப்திய அதிகாரிகள் 'ஆபரேஷன் சுசன்னா' என அழைக்கப்படும் இஸ்ரேலிய உளவு நடவடிக்கையை முறியடித்தனர்.

சூயஸ் கால்வாயில் தனது படைகளை நிறுத்த பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எகிப்தில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் நிலைகளில் குண்டுகள் வைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.

இந்த சம்பவம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த பின்ஹாஸ் லாவோனின் பெயரால் 'லாவோன் விவகாரம்' என்று அறியப்பட்டது.

இந்த நடவடிக்கையை திட்டமிடுவதில் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyzlxrzgy2o

11 வயதில் மதகுரு, மன்னருக்கு எதிராக கலகம் - இரானின் உச்ச தலைவர் காமனெயி குறித்து அறியப்படாத தகவல்கள்

1 month 1 week ago

ஆயதுல்லா அலி காமனெயி, இரான்

பட மூலாதாரம்,IRANIAN LEADER PRESS OFFICE / HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிபிசி பெர்சியன் சேவை

  • பதவி,

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை தற்போதைய மோதலில் கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அதுவொரு சிறந்த யோசனை இல்லை" எனகூறி நிராகரித்ததாக, அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரான் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மூலம் இரானின் அணுசக்தி திறன்களால் ஏற்பட்டுள்ள "இருப்பியல் அச்சுறுத்தலை" அழிப்பதை தங்களுடைய இலக்கு என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அதை தாண்டியும், இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது, இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்களின் விளைவாக இருக்கலாம் என, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இரானின் அதி உயர் தலைவர் குறித்தும் நாட்டில் அவருடைய அதிகாரங்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அரசியலில் உள்ள பங்கு குறித்தும் இங்கே ஆராயப்பட்டுள்ளது.

1979ம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நாட்டின் அதி உயர் தலைவராக ஆன இரண்டாவது நபர் ஆயதுல்லா அலி காமனெயி. மேலும் 1989ம் ஆண்டிலிருந்து அவர் இப்பதவியில் உள்ளார். அவர் பதவியில் இல்லாத வாழ்நாளை இரானிய இளைஞர்கள் ஒருபோதும் கண்டதே இல்லை.

அதிகார மையங்களுக்கு இடையே நடக்கும் போட்டி வலையின் மையத்தில் இருக்கிறார் காமனெயி. எந்தவொரு பொது கொள்கை சார்ந்த விவகாரங்களிலும் தன் அதிகாரத்தை அவர் பயன்படுத்த முடியும், பொது அலுவலகங்களுக்கான பதவிகளுக்கு அவரால் ஒருவரை தேர்ந்தெடுக்கவும் முடியும்.

ஒரு நாட்டின் தலைவராகவும் இரானின் புரட்சிகர காவல் படை உட்பட ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் அவர் ஒட்டுமொத்த அதிகாரம் கொண்டவராக உள்ளார்.

ஆயதுல்லா அலி காமனெயி, இரான்

பட மூலாதாரம்,ANADOLU/GETTY IMAGES

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, இரானின் அதிகார கட்டமைப்பின் மையமாக இருக்கிறார்.

இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாட்டில் 1939ம் ஆண்டில் அவர் பிறந்தார்.

மத நம்பிக்கைகள் கொண்ட ஒரு குடும்பத்தின் எட்டு குழந்தைகளுள் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் இவர். இரானில் ஆதிக்கம் செலுத்தும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு மத குருவாக காமனெயியின் தந்தை இருந்தார்.

காமனெயிக்கு கல்வியையும் தாண்டி குரான் குறித்து படிப்பதிலேயே ஆர்வம் இருந்தது. தன் 11 வயதிலேயே அவர் மத குருவாக தகுதி பெற்றார்.

ஆனால், அந்த சமயத்தில் இருந்த மத தலைவர்களை போலவே அவருடைய பணிகள் ஆன்மிகத்தை விட அரசியலை சார்ந்தே அதிகம் இருந்தது.

சிறந்த பேச்சாளரான காமனெயி, இரான் மன்னர் ஷா-வை விமர்சிக்கும் நபராக ஆனார், அதைத் தொடர்ந்து இஸ்லாமிய புரட்சியால் அந்த மன்னர் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.

பல ஆண்டுகளாக அவர் பதுங்குகுழியிலேயே இருந்தார் அல்லது சிறையிலேயே அடைக்கப்பட்டார். ஷாவின் ரகசிய காவல் துறையால் காமனெயி ஆறு முறை கைது செய்யப்பட்டிருந்தார், சித்ரவதை மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே நாடு கடத்தப்படுதல் போன்றவற்றுக்கு ஆளானார்.

1979 இஸ்லாமிய புரட்சிக்கு அடுத்த ஆண்டே ஆயதுல்லா ருஹொல்லா கோமினி (Ayatollah Ruhollah Khomeini), அவரை தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கான தலைவராக்கினார். அதன்பின், 1981ம் ஆண்டில் காமெனெயி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1989ம் ஆண்டு ஆயதுல்லா ருஹொல்லா கோமினிக்கு அடுத்த தலைராக, மதத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ருஹொல்லா கோமினி தன்னுடைய 86வது வயதில் காலமானார்.

மகன் மோஜ்தாபாவுக்கு உள்ள அதிகாரம் என்ன?

அலி காமனெயி அரிதாகவே வெளிநாடுகளுக்கு பயணிப்பார். அவர், மத்திய டெஹ்ரானில் உள்ள வளாகத்தில் தன் மனைவியுடன் வசித்து வருவதாக தகவல் உள்ளது.

தோட்டக்கலை மற்றும் கவிதைகள் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது; தன்னுடைய இளம் வயதில் அவருக்கு புகைப்பழக்கம் இருந்ததற்காக அவர் அறியப்பட்டார், இரானில் மதத்தலைவர் ஒருவர் புகைப்பிடிப்பது வழக்கத்துக்கு மாறானது. 1980களில் நடந்த ஒரு கொலை முயற்சியில் அவருடைய வலது கை செயலிழந்தது.

அவருக்கும் அவருடைய மனைவிக்கும் மன்சோரே கோஜஸ்டே பேகெர்ஸாடேவுக்கும் (Mansoureh Khojasteh Baqerzadeh) ஆறு குழந்தைகள் உள்ளனர், அவர்களுள் 4 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆவர்.

காமனெயி குடும்பத்தினர் பொதுவெளியிலோ அல்லது ஊடகத்திலோ அரிதாகவே தோன்றியுள்ளனர். மேலும், அவருடைய குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அதிகாரபூர்வ அல்லது சரியான தகவல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.

அவருடைய நான்கு மகன்களுள் இரண்டாவது மகனான மோஜ்தாபா, அவருடைய செல்வாக்கு காரணமாக, நன்கு அறியப்பட்ட நபராக உள்ளார், அவருடைய தந்தையின் நெருக்கமான வட்டாரத்தில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார்.

மோஜ்தாபா காமனெயி, இரான்

பட மூலாதாரம்,NURPHOTO/GETTY IMAGES

படக்குறிப்பு, உச்ச தலைவரின் மகனான மோஜ்தாபா, இஸ்லாமிய குடியரசின் மிகவும் அதிகாரமிக்க நபராக கருதப்படுகிறார்

டெஹ்ரானில் உள்ள அலாவி உயர்நிலை பள்ளியில் மோஜ்தாபா படித்தார், பாரம்பரியமாக இஸ்லாமிய குடியரசின் மூத்த அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாக இது அறியப்படுகிறது.

பிரபலமான பழமைவாத தலைவரான கோலம்-அலி ஹதாத்-அடெலின் மகளை அவர் திருமணம் செய்தார், மதகுருவாக அவர் ஆகாத காலகட்டத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. அச்சமயத்தில் கோம் (Qom) நகரில் இறையியல் படிப்பை தொடங்க அவர் திட்டமிட்டிருந்தார். அவர் தன்னுடைய 30வது வயதில் இரானின் மிகவும் பிரபலமான, கோமில் உள்ள ஷியா இறையியல் பள்ளியில் தன் படிப்பை தொடங்கினார்.

2000ம் ஆண்டுகளுக்கு மத்தியில் அரசியல் வட்டாரத்தில் மோஜ்தாபாவின் செல்வாக்கு குறித்து ஊடகத்தில் அரிதாகவே பேசப்பட்டாலும் பொதுவெளியில் அது அதிகமாக தெரிந்தது.

2004ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சையின் போது மோஜ்தாபா மிகுந்த கவனம் பெற்றார். அப்போது பிரபலமான வேட்பாளரான மெஹ்தி கரௌபி (Mehdi Karroubi) ஆயதுல்லா காமனெயிக்கு வெளிப்படையாக கடிதம் எழுதினார். மஹ்மௌத் அஹ்மதினெஜத்-க்கு (Mahmoud Ahmadinejad) ஆதரவாக மோஜ்தாபா பின்னணியில் செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆயதுல்லா அலி காமனெயி, இரான்

2010ம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய குடியரசில் மிகுந்த அதிகாரமிக்க நபர்களுள் ஒருவராக பரவலாக அறியப்பட்டார். தன்னுடைய பதவிக்கு மோஜ்தாபாவையே காமனெயி விருப்ப வேட்பாளராக கொண்டிருப்பதாக, சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. எனினும், இந்த தகவலை அதிகாரபூர்வ வட்டாரங்கள் மறுத்துள்ளன.

மேலும், அலி காமனெயி ஓர் அரசர் அல்ல, அவரால் எளிதாக ஆட்சியை அவருடைய மகனுக்கு வழங்க இயலாது. தன் தந்தையின் பழமைவாத வட்டாரத்துக்குள்ளும் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டவராக மோஜ்தாபா உள்ளார். அரசியலமைப்பை விட அதிகாரம் மிக்கதாக உள்ள உச்ச தலைவரின் அலுவலகத்திலும் மோஜ்தாபா அதிகாரம் கொண்டவராக உள்ளார்.

முஸ்தஃபா, காமனெயி குடும்பத்தின் மூத்த மகனாவார். இவர், தீவிர பழமைவாத மதகுருவான அஸிஸொல்லா கோஷ்வக்டின் (Azizollah Khoshvaght) மகளை திருமணம் செய்துள்ளார்.

1980களில் நடந்த இரான் - இராக் போரில் முஸ்தஃபா மற்றும் மோஜ்தாபா இருவரும் முன்னணியில் செயல்பட்டுள்ளனர்.

ஆயதுல்லா அலி காமனெயி, மேசம், இரான்

பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,காமனெயி மகன்களுள் இளையவர் மேசம் (Meysam)

அலி காமனெயியின் மூன்றாவது மகன் மசௌத், 1972ம் ஆண்டு பிறந்தார். கோம் செமினரி பழமைவாத ஆசிரியர்கள் சங்கத்துடன் இணைந்த, மிகவும் அறியப்பட்ட மத குருவான மோஹ்சென் கராஸியின் (Mohsen Kharazi) மகளான சூசன் கராஸியை இவர் திருமணம் செய்துள்ளார். சூசன் கராஸி, சீர்திருத்தவாத முன்னாள் ராஜதந்திரியான முகமது சதெக் கராஸியின் சகோதரி ஆவார்.

மசௌத் காமனெயி அரசியல் வட்டாரத்திலிருந்து விலகியே உள்ளார், அவர் குறித்து பொதுவெளியில் அதிக தகவல்கள் இல்லை.

தன் தந்தையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை, கண்காணித்து காமனெயியின் பரப்புரை அமைப்பாக செயல்படும் அலுவலகத்துக்கு மசௌத் தலைமை தாங்கினார்; தன் தந்தையின் வாழ்க்கை வரலாறு மற்றும் நினைவுக்குறிப்புகளை தொகுக்கும் பொறுப்பும் அவரிடம் உள்ளது.

காமனெயியின் இளைய மகனான மேசம், 1977ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய மூன்று அண்ணன்களை போலவே, இவரும் ஒரு மதகுருவாக உள்ளார்.

1979ம் ஆண்டு நிகழ்ந்த புரட்சிக்கு முன்னதாக, புரட்சிகர மதகுருக்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்ததற்காக அறியப்படும் பணக்கார, செல்வாக்குமிக்க வணிகரான மஹ்மௌத் லோலாசியனின் (Mahmoud Lolachian) மகளை இவர் திருமணம் செய்துள்ளார். மேசம் மனைவியின் பெயர் ஊடகங்களில் குறிப்பிடப்படவில்லை.

தன் தந்தை மேற்கொள்ளும் பணிகளை பாதுகாத்து அவற்றை வெளியிடுவதற்கான அலுவலகத்தில் மசௌத்துடன் இணைந்து மேசம் பணியாற்றுகிறார்.

இரு மகள்கள்

காமனெயியின் மகள்கள் குறித்து பொதுவெளியில் அதிகம் அறியப்படவில்லை.

குடும்பத்தில் மிகவும் இளையவர்களாக புஷ்ரா மற்றும் ஹோடா உள்ளனர், 1979 புரட்சிக்குப் பிறகே அவர்கள் பிறந்தனர்.

1980ம் ஆண்டு பிறந்த புஷ்ரா, காமனெயி அலுவலகத்தில் தலைமை அலுவலராக உள்ள கோகம்ஹோசெயின் (முகமது) மொஹம்மதி கோல்பயெகனியின் (Gholamhossein (Mohammad) Mohammadi Golpayegani) மகனான மொஹம்மது-ஜாவத் மொஹம்மதி கோல்பயெகனியை திருமணம் செய்துள்ளார்.

காமனெயியின் இளைய மகளான ஹோசா, 1981ம் ஆண்டு பிறந்தார். இமாம் சாதிக் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் படித்து அங்கேயே கற்பித்த, மெஸ்பா அல்-ஹோடா மகேரி கனியை அவர் திருமணம் செய்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g8egxy9g1o

இரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? போர்க்கப்பல், போர் விமானங்கள் நகர்வு

1 month 2 weeks ago

இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மட் மர்ஃபி, தாமஸ் ஸ்பென்சர் & அலெக்ஸ் முர்ரே

  • பதவி, பிபிசி வெரிஃபை

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 அமெரிக்க ராணுவ விமானங்கள், ஐரோப்பாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிபிசி வெரிஃபையால் ஆராயப்பட்ட விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த விமானங்கள் அனைத்தும் போர் விமானங்கள் மற்றும் வானிலிருந்து குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு (bombers) வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் டேங்கர் விமானங்களாகும். இவற்றில் கேசி-135 (KC-135) வகையை சேர்ந்த குறைந்தது 7 விமானங்கள், ஸ்பெயின், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்க தளங்களில் சிறிது நேரம் நின்று சென்றன.

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறிவருகிறது. இந்த பின்னணியில் தான் அமெரிக்க போர் விமானங்களின் நகர்வு நடந்துள்ளது.

அமெரிக்க போர் விமானங்கள் இடம்பெயர்ந்துள்ளதற்கும் இந்த மோதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், பிபிசி வெரிஃபையிடம் பேசிய நிபுணர் ஒருவர், டேங்கர் விமானங்களின் இடப்பெயர்வு "மிகவும் வழக்கத்துக்கு மாறானது" என்றார்.

எதற்காக இந்த நடவடிக்கை?

ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட் (Rusi) எனும் சிந்தனை மையத்தை சேந்த மூத்த ஆய்வாளர் ஜஸ்டின் பிராங்க் கூறுகையில், அப்பிராந்தியத்தில் வரும் வாரங்களில் ஏற்படும் "தீவிரமான எதிர் நடவடிக்கைகளுக்கான" அவசரகால திட்டங்களை தயார் நிலையில் வைப்பதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என தோன்றுவதாக தெரிவித்தார்.

பிபிசி வெரிஃபையால் கண்காணிக்கப்பட்ட 7 விமானங்களும் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பின்னர், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி சிசிலிக்கு கிழக்கே பறந்ததை விமான கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. அவற்றில், 6 விமானங்கள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை, ஒரு விமானம் கிரேக்கத் தீவான க்ரீட்டில் தரையிறங்கியது.

அயர்லாந்து பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைவர், வைஸ் அட்மிரல் மார்க் மெல்லெட் கூறுகையில், "இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் தனக்கு அனுகூலத்தை ஏற்படுத்துவதற்கான வியூக ரீதியான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இருக்கலாம்" என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை, இரானிய அணுசக்தி கட்டமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்கு வழங்கிய காலக்கெடுவுக்கு மறுநாள் இந்த தாக்குதல் தொடங்கியது.

இரான் - இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மத்திய கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த போர்க்கப்பல்

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz) எனப்படும் தன்னுடைய விமான தாங்கிக் போர்க்கப்பலை தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா இடம்பெயரச் செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, போர் விமானங்களின் இடம்பெயர்வு நிகழ்ந்துள்ளது.

இந்த விமான தாங்கிக் போர்க்கப்பல் சார்ந்து வியட்நாமில் திட்டமிடப்பட்ட நிகழ்வு ஒன்று ரத்து செய்யப்பட்டது, "அவசர நடவடிக்கை தேவைகளுக்காக" அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக ஹனோயில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கடைசியாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மலாக்கா நீரிணையில் சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததை கப்பல் கண்காணிப்பு இணையதளமான மெரைன்டிராஃபிக் காட்டுகிறது. நிமிட்ஸ் கப்பலில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளன, ஏவுகணை தாக்குதல் நடத்துவற்கென வடிவமைக்கப்பட்ட போர்க் கப்பல்களும் அதன் பாதுகாப்புக்காக உடன் செல்கின்றன.

F-16, F-22 மற்றும் F-35 ஆகிய போர் விமானங்களையும் மத்திய கிழக்கில் உள்ள தளங்களுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் கூறியதாக, செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது. ஐரோப்பாவுக்கு கடந்த சில தினங்களாக இட மாற்றம் செய்யப்பட்ட டேங்கர் விமானங்கள், இந்த போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பயன்படுத்தப்படலாம்.

இஸ்ரேலுக்கு அதரவாக இந்த மோதலில் அமெரிக்கா தலையிடலாம் என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான "அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிரம்ப் முடிவு செய்யலாம்" என தன் சமூக ஊடக பக்கத்தில் வான்ஸ் தெரிவித்தார்.

பூமிக்கடியில் ஆழமாக சென்று தாக்கும் பங்கர் பஸ்டர் குண்டு

இரானில் யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக நிலத்தடியில் இரண்டு தளங்கள் இயங்குவதாக நம்பப்படுகிறது. இதில், நடான்ஸ் இஸ்ரேலால் ஏற்கெனவே தாக்கப்பட்டுள்ளது. கோம் (Qom) நகருக்கு அருகிலுள்ள ஒரு மலையில் அமைத்துள்ள ஃபோர்டோ தளம் பூமிக்கடியில் மிகவும் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டோ கட்டமைப்பை ஊடுருவ GBU-57A/B எனப்படும் பெரியளவிலான குண்டை (Massive Ordnance Penetrator - MOP) அமெரிக்கா பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த மேற்கத்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர். 13,600 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு, நிலத்தடியில் உள்ள அணுசக்தி தளங்களை தாக்கக்கூடியது என்பதால் "பங்கர் பஸ்டர்ஸ்" என்றும் அழைக்கப்படுகிறது.

இரான் - இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இஸ்ரேல் மீது திங்கட்கிழமை இரான் நடத்திய தாக்குதலை காட்டும் படம்

இந்த குண்டு மட்டுமே 200 அடி (60 மீ) கான்கிரீட்டை கூட உடைக்கும் திறன் கொண்டதாக கருதப்படும் ஒரே ஆயுதமாகும். வழக்கமான ரேடார்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பி-2 ஸ்டெல்த் போர் விமானங்களால் மட்டுமே இந்த குண்டை வீச முடியும்.

டியாகோ கார்சியா தீவில் உள்ள தன்னுடைய தளத்தில் அமெரிக்கா சமீபத்தில் பி-2 விமானங்களை நிறுத்தியது. இரானின் தெற்கு கடற்கரையிலிருந்து இந்த தீவு சுமார் 2,400 மைல் தொலைவில் இருந்தாலும், அந்த விமானங்கள் இருக்கும் இடமானது, இரானின் தாக்குதல் எல்லைக்குள் அவற்றை வைக்கக்கூடும்.

"[டியாகோ கார்சியாவிலிருந்து) ஒரு நிலையான நடவடிக்கையை மிகவும் திறமையாக இதன் மூலம் மேற்கொள்ள முடியும். அவற்றை எந்நேரமும் செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்." என, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் (RAF) முன்னாள் துணை தலைவரான (ஆபரேஷன்ஸ்) ஏர் மார்ஷல் கிரெக் பேக்வெல் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.

மார்ச் மாத இறுதியில் டியாகோ கார்சியாவில் பி-2 விமானங்கள் நிறுத்தப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் ஆரம்பத்தில் காட்டின. ஆனால், சமீபத்தில் வெளியான படங்களில் அந்த தீவில் பி-2 விமானங்கள் இல்லை.

வைஸ் அட்மிரல் மெல்லெட் கூறுகையில், இரானை இலக்கு வைத்து நடத்தப்படும் எவ்வித நடவடிக்கைக்கும் முன்னதாக, அந்த தீவில் பி-2 விமானங்களை பார்க்கலாம் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். தீவில் தற்போது அந்த விமானங்கள் இல்லாதது, குழப்பமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதை ஏர் மார்ஷல் கிரேக் பேக்வெல்லும் ஒப்புக்கொள்கிறார். வெள்ளை மாளிகை தாக்குதலை தொடங்க முடிவெடுத்தால், அமெரிக்க கண்டத்திலிருந்தும் கூட பி2 விமானங்கள் செலுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

"இரானின் தற்காப்புத் திறனை இஸ்ரேல் அழித்துவிட்டதால், எந்தவொரு ராணுவ அல்லது அணுசக்தி இலக்குகளும் கூட இஸ்ரேலின் விருப்பத்தின் பேரிலேயே விடப்படும்."

மெர்லின் தாமஸ் வழங்கிய கூடுதல் தகவல்களுடன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g2d1lz6q0o

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து 

1 month 2 weeks ago

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து 

Published By: DIGITAL DESK 3

18 JUN, 2025 | 10:49 AM

image

இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703 மீட்டர் உயமுடைய இரட்டை சிகரங்களைக் கொண்ட “மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி” (Mount Lewotobi Laki-Laki) எரிமலை செவ்வாய்க்கிழமை (18)  முதல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.

எரிமலை வெடித்து சிதறி வானத்தில் கோபுரம் போன்று 10 கிலோ மீற்றர் உயரத்துக்கு அதன் சாம்பல்  வெளியேறியுள்ளது. இதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களில் அவுஸ்திரேலியாவுக்கான ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் விமான சேவைகளும் அடங்கும்.

ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜுன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக பாலியின் சர்வதேச விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது.

புளோரஸில் உள்ள லாபுவான் பாஜோவிற்கு புறப்படும் பல உள்நாட்டு விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.

லெவோடோபி லக்கி-லக்கி எரிமலையைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் எரிமலை சாம்பல் மழை பொழிந்துள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை ஒரு கிராமத்திலுள்ள மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நாட்டு  அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடியாக  தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி பல முறை வெடித்து சிதறியது.இதன்போது ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதனால் சுற்றுலாத் தளமான பாலிக்கான ஏராளமான சர்வதேச விமான வேகைள் இரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தோனேசிய மொழியில் "ஆண்" என்று பொருள்படும் லக்கி-லக்கி, அமைதியான எரிமலையுடன் "பெண்" என்பதை குறிக்க இந்தோனேசிய வார்த்தையான லக்கி இரண்டு முறை சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா, ஒரு பரந்த தீவுக்கூட்ட நாடானது, பசிபிக் "நெருப்பு வளையத்தில்" அதன் நிலை காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படுகிறது.

https://www.virakesari.lk/article/217777

பிரித்தானிய புலானாய்வு அமைப்பான “MI6” ஐ வழி நடத்த முதல் முறையாக பெண் நியமனம்

1 month 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

17 JUN, 2025 | 12:22 PM

image

“MI6” எனப்படும் பிரித்தானியாவின் வெளிநாட்டு புலானாய்வு அமைப்பை முதல் முறையாக பெண்ணொருவரால் வழிநடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

அதன்படி, 1999 ஆம் ஆண்டு முதல் MI6 புலானாய்வு அமைப்பில் பணியாற்றிவரும் புலானாய்வு அதிகாரியான பிளேஸ் மெட்ரூவெலி தலைவராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.

MI6 புலானாய்வு அமைப்பின் தற்போதைய தலைவர் சர் ரிச்சர்ட் மூரிடமிருந்து 18 ஆவது தலைவராக பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

47 வயதுடைய பிளேஸ் மெட்ரூவெலி தற்போது MI6 புலானாய்வு அமைப்பின் Q பிரிவின் பணிப்பாளர் நாயகமாக உள்ளார். 

தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கும் பொறுப்பாகவுள்ளார்.

MI6 மற்றும்  MI5 ஆகிய உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எதிர் - புலனாய்வு அமைப்புகளில் பணிப்பாளராகவும் இருந்துள்ளார்.

பிளேஸ் மெட்ரூவெலி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் பட்டம் பெற்றுள்ளார். தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பணியாற்றினார்.

மெட்ரூவெலி தலைவராக நியமிக்கப்பட்டள்ளமை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்,

“MI6 புலானாய்வு அமைப்பின் தலைவராக பிளேஸ் மெட்ரூவெலி நியமிக்கப்பட்டுள்ளமை வரலாற்று சிறப்பு மிக்க ஒரு விடயமாகும். நமது உளவுத்துறை சேவைகளின் பணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமது நீர்நிலைகளுக்குள் தங்கள் உளவு கப்பல்களை அனுப்பும் ஆக்கிரமிப்பாளர்களாலும், நமது பொது சேவைகளை சீர்குலைக்க முயலும் அதிநவீன சைபர் - சதித்திட்ட ஹேக்கர்களாலும் பிரித்தானியா முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுதல்களை எதிர்கொள்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செயிண்ட் மைக்கேல் மற்றும் செயிண்ட் ஜோர்ஜ் ஆணை (Order of St Michael and St George) எனப்படும் பிரித்தானிய ஆணையை தனது சேவைக்கான அங்கீகாரமாக பெற்ற மெட்ரெவெலி,

“எனது சேவையை வழிநடத்தும்படி கோரப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். பிரித்தானிய மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலும், வெளிநாடுகளில் பிரித்தானிய நலன்களை மேம்படுத்துவதிலும் MI6 - MI5 மற்றும் GCHQ உடன் - முக்கிய பங்கு வகிக்கிறது. MI6 இன் துணிச்சலான அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மற்றும் எங்கள் பல சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து அந்தப் பணியைத் தொடர நான் எதிர்பாக்கிறேன்.”எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/217693

இஸ்ரேல் - இரான் சண்டை வல்லரசுகளின் மோதலாக வாய்ப்பு: அமெரிக்கா, ரஷ்யா என்ன செய்கின்றன?

1 month 2 weeks ago

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பௌயான் கலானி

  • பதவி, செய்தியாளர்

  • 17 ஜூன் 2025, 01:28 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக வல்லரசு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், இரானின் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இஸ்ரேல் மற்றும் இரானின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகின்றனர்.

தற்போது இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையிலான மோதலை நிறுத்த இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் கருப்பொருளில் மாற்றம் ஏற்பட்டது. யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான பிரச்னை மற்றும் அமெரிக்கா விதித்த புதிய வரிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் தற்போது இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் கனடிய பிரதமர் மார்க் கார்னேவை, மாநாட்டிற்கு முதல் நாள் சந்தித்துப் பேசினார். அப்போது இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்கும் வழிகள் குறித்து மாநாட்டில் பேசலாம் என்று முடிவெடுத்தனர்.

இஸ்ரேல் - இரான் மோதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரிய அளவிலான போராக மாறுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளது. அண்டை நாடுகள் மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ரஷ்யா போன்ற வல்லரசுகளையும் உள்ளே இழுத்து பெரிய அளவிலான போராக மாறுவதற்கான வாய்ப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.

இதுவரை மத்தியஸ்தம் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் எந்த பலனும் கிட்டவில்லை. இஸ்ரேல் இரான் மீதான தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. இரானிய ஏவுகணைகள் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா போன்ற இஸ்ரேலிய நகரங்களை தாக்கியுள்ளன.

சமீபத்திய செய்திகளின் படி, இரானில் அமைந்திருக்கும் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு அருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், அப்பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை செய்துள்ளது.

இதுபோன்ற சூழலில் சண்டை நிறுத்தத்திற்கான நம்பிக்கை எங்கே உள்ளது? உலகத் தலைவர்கள் இதில் எத்தகைய பங்காற்ற இயலும்?

தற்போது நம்பிக்கை அளிப்பது இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியின் அறிக்கை மட்டுமே. அவர் "இஸ்ரேல் தன்னுடைய தாக்குதல்களை நிறுத்தினால், இரானும் தாக்குதலை நிறுத்தும். இரானின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கான எதிர்வினையே," என்று தெரிவித்தார்.

இருப்பினும், இஸ்ரேல் தனது நோக்கத்தை இன்னும் அடையவில்லை என்றே அதன் நடவடிக்கைகள் காட்டுகின்றன. இரானில் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவதற்கான செயல்திறனை அழித்து, இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை நீக்குவதே அதன் நோக்கம் என்று இஸ்ரேல் தெரிவிக்கிறது.

p0ljjwxy.jpg.webp

காணொளிக் குறிப்பு,இஸ்ரேல் - இரான் மோதல் மோசமடைந்தால் நிலைமை எப்படியெல்லாம் மாற வாய்ப்புள்ளது?

அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்தியஸ்தம் செய்வதில் கை தேர்ந்தவர் என்று கூறிக் கொள்வதுண்டு. அவர் தற்போது அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் தலையிடுவதற்கு பதிலாக இரான் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் குறித்து அவர் பேசுகிறார்.

"எளிமையாக இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே உடன்படிக்கை ஏற்படுத்தி இந்த மோதலை உடனே முடிவுக்குக் கொண்டு வர நம்மால் இயலும்," என்று ட்ரூத் சோசியல் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஆனால் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா துணை போகிறது என்று அந்த நாட்டின் மீது இரான் குற்றம் சுமத்துகிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் டிரம்ப், இரான் மீதான சாத்தியமான தாக்குதலுக்கு இஸ்ரேலுடன் துணை நிற்கிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

இருப்பினும் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இரான் மீதான தாக்குதல் தொடர்பாக டிரம்பிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் அமெரிக்கா ஒப்புக் கொண்டது. இரானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை கண்காணிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

டிரம்ப் தொடர்ந்து இஸ்ரேலின், குறிப்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறார். நெதன்யாகுவிடம் இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்த, மற்ற உலகத் தலைவர்களைக் காட்டிலும், டிரம்பிற்கு கூடுதல் அனுகூலத்தை வழங்குகிறது இந்த நட்புறவு.

டிரம்பும், நெதன்யாகுவும் இரானின் அணு செறிவுத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அதில் வெற்றி காண்பதற்கு இருவரும் வெவ்வேறு வழியை பின்பற்றுகின்றனர்.

ஞாயிறு அன்று அமெரிக்காவுடனான அணுசக்தி திட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பாஸ் அரக்சி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்தார். "எங்களின் அணுசக்தி திட்டத்திற்கான முன்மொழிவை அமெரிக்கர்களிடம் இன்று நாங்கள் வழங்கியிருக்க வேண்டும். அது ஒப்பந்தத்தை உருவாக்க வழி வகுத்திருக்கும்," என்று கூறினார். ஆனால் இரான் முன்மொழிந்த திட்டம் தொடர்பான தகவல்கள் எதையும் அவர் வழங்கவில்லை.

டிரம்ப் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, அமெரிக்கா (போர்) தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. மத்தியஸ்தம் செய்ய முன்வந்து இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை காட்டிக்கொள்ள விரும்புகிறது அமெரிக்கா.

இந்த நிலைப்பாடு, இரான் மீதான இரு நாடுகளின் அணுகுமுறையில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று தீர்மானிக்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த போக்கு நீடிக்கும் பட்சத்தில், இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே நீடிக்கும் பதற்றத்தை தணிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க அந்த நாட்டிற்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க அதிபருடன் இஸ்ரேல் பிரதமர்

ஐரோப்பா

இரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை ஐரோப்பிய நாடுகள் கண்டிக்கவில்லை. இரான் பதில் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டன.

இருப்பினும், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நடத்தி மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை தணிக்க ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தயாராக உள்ளதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வாட்ஃபுல் அறிவித்தார்.

இந்த பிராந்தியத்தில் அமைதியை உருவாக்க இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு முக்கிய நிபந்தனை என்று கருதுகிறார் அவர். மத்தியக் கிழக்கு பிராந்தியத்திற்கும் ஐரோப்பாவுக்கும் இரான் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை இரான் நிரூபித்தால் மட்டுமே அமைதி சாத்தியமாகும் என்று தெரிவித்தார் அவர்.

மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மை நிலவ இரானே காரணம் என்று முன்னதாக ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்தார். தற்போது நியாயப்படுத்த இயலாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அணுசக்தி திட்டத்தில் முன்னேறுவது அந்த சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், தாக்குதல் நடத்துவதை இரண்டு நாடுகளும் நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

சமீபத்திய மாதங்களில், ஃபிரான்ஸ் இரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

ஃபிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், இரு தரப்பினரும் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த பிராந்தியத்தில் தன்னுடைய சொந்த மக்கள் மற்றும் நலனுக்காக ஃபிரான்ஸ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

அதிபர் மக்ரோன், இரானுக்கு எதிரான தாக்குதலில் ஃபிரான்ஸ் பங்கேற்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக இரான் பதில் தாக்குதல் நடத்தும் போது இஸ்ரேலை ஃபிரான்ஸ் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார். அமெரிக்கா முன்மொழிந்த அணுசக்தி ஒப்பந்தத்தை இரான் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வருத்தத்தையும் அவர் பதிவு செய்தார்.

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மத்திய கிழக்கில் ஸ்திரமற்றத் தன்மை நிலவ இரானே காரணம் என்று முன்னதாக ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்தார்

ஜெர்மனி மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளைக் காட்டிலும் எதார்த்தமான அணுகுமுறையை இந்த விவகாரத்தில் கையாண்டுள்ளது பிரிட்டன். மத்தியக் கிழக்குக்கு கூடுதலாக போர் விமானங்களை அனுப்பியுள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்டார்மர், டைஃபூன் போர் விமானங்களும் வானில் இருந்தபடியே போர் விமானங்களுக்கு எரிபொருளை நிரப்பும் விமானமும் அனுப்பப்பட்டிருப்பதை அவர் உறுதி செய்தார்.

இதற்கு முந்தைய காலகட்டத்தில் இஸ்ரேல்-இரான் இடையே நடைபெற்ற மோதல்களின் போது, இஸ்ரேலை பாதுகாக்க போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதைப் போன்று இதுவும் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து தெளிவாக அவர் குறிப்பிடவில்லை.

சனிக்கிழமை பிபிசியில் வெளியான செய்தி ஒன்றில், அங்கு நிலைமை வேகமாக மாறிவருகிறது என்று கியர் ஸ்டார்மர் கூறியதாக குறிப்பிட்டிருந்தது. பிரிட்டன் அதன் நட்பு நாடுகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இரான் - இஸ்ரேல் இடையே நீடித்து வரும் பதற்றமான சூழலை "தணிப்பதே" அவரின் முதன்மை செய்தி என்பது தெளிவானது.

கனடாவில் ஜி7 உச்சி மாநாட்டின் போதும் அவர் இந்த பிரச்னை குறித்து பேசினார்.

மத்தியஸ்தம் செய்வதற்கு பதிலாக, இரான் தன்னுடைய அணு சக்தி செறிவூட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அழுத்தம் தரும் நாடுகளுடன் சேர்ந்து செயல்படுகிறது பிரிட்டன் என்பது தெளிவாகிறது.

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர்

அரபு நாடுகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் சௌதி அரேபியா மற்றும் சில வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் வந்து சென்ற ஒரே மாதத்தில் மத்திய கிழக்கில் புதிய போர் சூழல் உருவாவதை அவர்கள் யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

பாரிய அளவிலான முதலீடு, இந்த பிராந்தியத்தில் மிகவும் நிலைத்தன்மையற்று இருக்கும் சிரியா மீதான பொருளாதார தடையை நீக்குதல் போன்ற பல முன்னெடுப்புகளை கொண்டிருந்தது அவரின் வருகை.

ஐரோப்பிய தேசங்களைப் போன்றில்லாமல், அனைத்து வளைகுடா நாடுகளும், இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனத்தை பதிவு செய்தன.

மிகவும் வலிமையான கருத்தை பதிவு செய்திருந்தது சௌதி அரேபியா. அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் எக்ஸ் தளத்தில், "சௌதி அரேபியா, எங்களின் சகோதர நாடான இரான் இஸ்லாமியக் குடியரசின் மீது நடத்தப்பட்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறது. இரானின் பிராந்திய இறையாண்மையை மீறும் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும் உள்ளது," என்று தெரிவித்தது.

இந்த கண்டனம் மட்டுமின்றி மத்திய கிழக்கில் உள்ள அரசியல் நிபுணர்களின் மதிப்பீடுகளும் வெளிவந்தன. இந்த நாடுகள் மறைமுகமாக பலவீனமான இரானை தங்களின் அண்டை நாடாக கொண்டிருக்க விரும்புகின்றன என்றும் அதேநேரத்தில் அவர்களின் சொந்த பிராந்தியங்களில் போர் பரவும் சூழலோ அல்லது அதன் பின்விளைவுகளோ தங்களை பாதிக்கக் கூடும் என்றும் அவர்கள் அஞ்சுவதாகவும் குறிப்பிடுகிறது அவர்களின் மதிப்பாய்வுகள்.

இந்த பிராந்தியத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு அமெரிக்க ராணுவ தளத்தை இரான் தாக்க முடிவெடுத்துவிட்டால் ஒரு பேராபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன.

இஸ்ரேலிடம் இருந்து விலகிக் கொண்ட சௌதி அரேபியா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் நாடுகளுடன் கை கோர்த்துக் கொண்டது.

அரபு வளைகுடா நாடுகளுடனான இரானின் உறவு, கடந்த காலத்தில் இருந்ததைப் போல் இல்லாமல், மேம்பட்டு வருகின்ற சூழலில் இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இருப்பினும், பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் இஸ்ரேலுக்கு நேரடியாக ஆதரவு வழங்கியது போன்று இரானுக்கு ஆதரவாக எந்த நாடுகளும் நேரடியாக செயலில் ஈடுபட வெளிப்படையாக விருப்பம் தெரிவிக்கவில்லை.

அதற்கு மாறாக இரான் பதில் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வை எட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.

அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, அவர்களின் நாடுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு, கோடிக்கணக்கிலான நிதி முதலீடு மற்றும் எண்ணெய் பொருட்களை வாங்கும் முக்கிய நாடுகளாக இருக்கும் முதன்மை நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சம ஆதரவை வளைகுடா நாடுகள் வழங்க வேண்டும். அதே நேரத்தில் அழிவை ஏற்படுத்தும் ஒரு போர் சூழல் அவர்களின் நாடுகளுக்குள் நிகழ்வதை தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இந்த சூழலில், சௌதி அரேபியா பன்முக அரசியல் விளையாட்டை விளையாடுவது போன்று தோன்றும். இஸ்ரேலுடனான சௌதியின் சமகால உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இதில் அடங்கும். ஆனால் முழுமையாக அதில் வெற்றி பெற இயலவில்லை. அது மட்டுமின்றி, ஏமனின் ஹூத்திகளுடனான மற்றொரு பதற்றமான சூழல் ஏற்படுவதை தடுக்க சௌதி மேற்கொள்ளும் முயற்சிகளும் இதில் அடங்கும்.

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

ரஷ்யா

ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் இரானுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது. இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ரஷ்யாவை சிக்கலான இடத்தில் நிறுத்தியுள்ளது. இவ்விரு நாடுகளுடன் நல்ல உறவைத் தொடர்வதை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது தற்போதைய சூழல்.

இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழலை தணிக்க ரஷ்யாவால் மத்தியஸ்தம் செய்ய இயலும் என்று சிலர் நம்புகின்றனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும், இரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடம் பேசினார். சூழலை இயல்பு நிலைக்குக் கொண்டு வர தேவையான உதவிகளை அளிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். இவ்விரு நாட்டுத் தலைவர்களுடனும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.

இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த உள்ள வழிகளை அவர் பரிந்துரை செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கத்திய நாடுகளைப் போன்றே, ரஷ்யாவும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இரானின் அணுசக்தி திட்டத்தை எதிர்க்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சனிக்கிழமை அலைபேசியில் அழைத்து இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதித்துள்ளார் புதின்.

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின்

சீனா

இரானின் நட்பு நாடுகளில் ஒன்றான சீனா இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு சீனா இஸ்ரேலிடம் கேட்டுக் கொண்டது.

சௌத் சீனா மார்னிங் போஸ்ட் செய்திப் படி, சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் ஜியோடன் சாருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையே சண்டையை தொடராமல் அரசியல் ரீதியாக தீர்வு காண இயலும் என்று வாங் கூறியுள்ளார்.

சர்வதேச அமைப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்ற சூழலில் இஸ்ரேலின் நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று வாங் உறுதியாகக் கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் சீனா, இரானின் ராணுவ திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது.

ஒரு முழுமையான போர் வெடித்தால் என்னவாகும்?

கிட்டத்தட்ட அனைத்து அரசியல் நிபுணர்களும், இரான் - இஸ்ரேலுக்கு இடையேயான மோதல் கட்டுப்பாட்டை மீறிச் சென்று முழு அளவிலான போராக மாறும் என்று கூறுகின்றனர்.

"மோசமான சாத்தியக்கூறாக இது இந்த பிராந்தியத்தில் இருக்கலாம். போர் பரவுவதை தடுக்க பல நாடுகளின் தலைவர்களும் வழி கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.

ஒரு சாத்தியமான வாய்ப்பு என்னவென்றால் இரானின் கூட்டாளிகளான, பலவீனம் அடைந்த லெபனானின் ஹெஸ்பொலா, ஏமனின் ஹூத்திகள், இராக்கில் உள்ள இரானின் ஆதரவுக் குழுக்கள் போன்றவை இந்த மோதலில் ஈடுபடலாம். இவர்கள் இந்த பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்காவை இந்த மோதலுக்குள் இழுக்கலாம்.

அப்படியான சூழலில் போர் புதிய திசை நோக்கி நகரும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து பிரிட்டனும் ஃபிரான்ஸும் இரான் மீது தாக்குதல் நடத்தலாம். இத்தகைய சூழலில், பல ஆண்டுகளாக கயான் செய்தித்தாளின் ஆசிரியர்கள் கூறுவது போன்று இரான் ஒரு முக்கிய முடிவை எடுக்கும். அது ஹோர்முஸ் நீரிணை வழியே சரக்கு போக்குவரத்தை மூடுவது. உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

இது போன்ற சூழலில், அமெரிக்க தளங்களை இரான் தாக்குமானால், அமெரிக்காவின் செல்வாக்குட்பட்ட அரபு நாடுகள் இரானுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த மோதலின் மற்றொரு பின்விளைவாக சைபர் போர் இருக்கும். எரிசக்தி உற்பத்தி நிலையங்கள், மின்சாரம் மற்றும் நீர் ஆதார கட்டமைப்புகள் உள்ளிட்டவையையும் போர் சேதமாக்கலாம்.

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இது போராக நீடித்தால் நாட்டில் இருந்து மக்கள் அதிகப்படியாக இடம் பெயர்வார்கள்

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் எல்லை தாண்டிய படைப்பிரிவினர் , "ஐரோப்பிய எல்லைகளில் தங்களின் தாக்குதல்களை நடத்தலாம்," என்று மேற்கத்திய நிபுணர்கள் பலர் கணித்துள்ளனர்.

பதற்றம் நீடித்து, உள்கட்டுமானம் சீர்குலையும் எனில் இரானியர்கள் கூட்டம்கூட்டமாக பெரிய நகரங்களில் இருந்தும், நாட்டில் இருந்தும் மொத்தமாக வெளியேறுவார்கள். இது இடைக்கால இடம் பெயர்தலை உள் நாட்டிலும் அண்டை நாட்டிலும் ஏற்படுத்த வழிவகை செய்யும்.

சிரியப் போருக்குப் பிறகு தங்களின் நாடு மீண்டும் ஒரு சிறை போன்று மாறுவதை விரும்பவில்லை என்று துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் தன்னுடைய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மோதல் நீடிப்பது இஸ்ரேலுக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். தற்போது வான்வழி தாக்குதல் குறித்த ஒவ்வொரு எச்சரிக்கை ஒலியின் போதும் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் பணியிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைகின்றனர்.

இஸ்ரேல் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் அங்குள்ள எண்ணெய் சுத்தகரிப்பு மையங்களை அழிக்கும். மின்சாரம் தடைபடும். இதர சேவைகளில் தடை ஏற்படும். பொருளாதாரம் மற்றும் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படும். பொதுமக்களின் உயிரிழப்புகளை அதிகரிக்கும்.

மோதலின் போது பாரசீக வளைகுடாவில் ஒரு அமெரிக்க கப்பல் நீரில் மூழ்கினாலோ அல்லது ஒரு ஏவுகணை மோதி பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானாலோ பேரழிவு தரும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.

இதனால் தான் அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் தலைவர்கள் முழு அளவிலான போரை தடுக்க முயன்று வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ceqgq403wylo

அணுகுண்டு தயாரிக்கும் கட்டத்தை இரான் நெருங்கிவிட்டதா? விரிவான அலசல்

1 month 2 weeks ago

அணு ஆயுத தயாரிப்பான இறுதிக் கட்டத்தில் இரான் இருந்ததா?

பட மூலாதாரம்,NURPHOTO VIA GETTY IMAGES

படக்குறிப்பு, அணு குண்டு தயாரிப்பதற்கான பணியில் இரான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததற்கான நம்பகமான உளவு தகவல்கள் கிடைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், டேவிட் கிரிட்டன்

  • பதவி, பிபிசி

  • 16 ஜூன் 2025, 02:00 GMT

இரானில் டஜன்கணக்கான இலக்குகளைத் தாக்கிய இஸ்ரேல், நடான்ஸில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையைச் சேதப்படுத்தியதுடன் மூத்த படைத்தளபதிகளையும், அணு விஞ்ஞானிகளையும் கொன்றுள்ளது.

தங்கள் நாட்டில் ஆக்கப்பூர்வ பணிகளுக்காக உள்ள அணு உலைகளை இஸ்ரேல் ''பொறுப்பற்ற முறையில்'' தாக்கியுள்ளதாக, இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டித்துள்ளார். பதிலடியாக இரானும் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது.

உலகளாவிய அணு சக்தி கண்காணிப்பு அமைப்பான, சர்வதேச அணு சக்தி முகமையின் (IAEA) மேற்பார்வையின் கீழ் நடான்ஸ் அணு உலை இயங்கி வந்ததாகவும், அங்கு தாக்குதல் நடத்தியது ''கதிர்வீச்சு பேரழிவு'' ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அப்பாஸ் அராக்சி கூறினார்.

ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இரானைக் கட்டுப்படுத்த'' இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது என்று கூறினார்.

"இரானைத் தடுக்கவில்லை என்றால், அது குறுகிய நேரத்தில் அணுகுண்டை உருவாக்கக் கூடிய நிலைக்குச் செல்லும்" என கூறிய அவர், இதன் காரணமாகவே இஸ்ரேல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறினார்.

"அது ஒரு ஆண்டாக இருக்கலாம். சில மாதங்களுக்குள்ளேயும் இருக்கலாம்" என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டாலும், அதை அந்நாடு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

அணு ஆயுத தயாரிப்பான இறுதிக் கட்டத்தில் இரான் இருந்ததா?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இரானில் டஜன் கணக்கான இலக்குகளை இஸ்ரேல் தாக்கியது

இரான் அணு குண்டு தயாரிப்பதற்கான ஆதாரம் உள்ளாதா?

அணு குண்டு வெடிப்பைத் தூண்டும் கருவி, யுரேனியம் உலோக கோர் (Uranium metal core) போன்ற ஒரு அணுகுண்டுக்கான முக்கிய பாகங்களைத் தயாரிப்பதற்கான பணியில் இரான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததற்கான நம்பகமான உளவு தகவல்கள் கிடைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

"இரான் அணு அயுதம் தயாரிப்பதற்கு மிக நெருக்கமாக இருக்கிறது என நெதன்யாகு கூறினாலும் அதற்கான தெளிவான ஆதாரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை" என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் அணு ஆயுத பரவல் தடுப்பு கொள்கையின் இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறினார்.

அணுகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை ஏற்கெனவே பெரும்பாலும் இரான் உருவாக்கிவிட்டது, பல மாதங்களாக இதே நிலையில்தான் இரான் உள்ளது என அவர் கூறினார்.

''இரானால் சில மாதங்களில் எளிய அடிப்படை வடிவிலான அணுகுண்டை தயாரிக்க முடியும் என்ற கணிப்பும் புதிது அல்ல''

இரானின் சில நடவடிக்கைகள் அணு ஆயுதத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம். ஆனால், அணு ஆயுதத்தை முழுமையாக உருவாக்குவதற்குத் தேவையான முக்கிய பணியில் இரான் இன்னும் ஈடுபடவில்லை என அமெரிக்க உளவுத்துறை நம்புவதாக அவர் கூறினார்.

இரான் யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவு அதிகம் செறிவூட்டியுள்ளது. அணு ஆயுதங்கள் வைத்திருக்காத ஒரு நாடு இப்படிச் செய்வது விசித்திரமானது என, அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஆனால், இரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை எனவும், அந்நாட்டின் அதி உயர் தலைவர் காமனெயி 2003இல் நிறுத்தி வைத்த அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்க ஒப்புதல் வழங்கவில்லை எனவும் அமெரிக்க உளவுத்துறை இன்னும் நம்புவதாக அவர் கூறினார்.

இரான் அணு குண்டு தயாரிப்பதற்கான ஆதாரம் உள்ளாதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேலின் இருப்புக்கு அச்சறுத்தலாக இருக்கும் இரானைக் கட்டுப்படுத்த'' இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது என்று கூறினார்.

இரான் அணு ஆயுதத்தை உருவாக்குவது மட்டுமே நெதன்யாகுவின் ஒரே கவலை என்றால், அது குறித்த உளவுத் தகவல்களை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு வழங்கியிருக்கலாம் மற்றும் தொடக்கத்திலேயே இரானின் அனைத்து முக்கிய அணு ஆலைகளைத் தாக்கியிருக்கலாம் என டேவன்போர்ட் கூறினார்.

இரான் 60% தூய தன்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குவித்து வைத்துள்ளது என்றும் அணு ஆயுதம் தயாரிக்க 90% தூய தன்மை தேவைப்படும் நிலையில், அதற்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது என்றும், அது குவித்து வைத்திருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மூலம் 9 அணு ஆயுதங்கள் வரை தயாரிக்க முடியும் என்றும் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. இது அணு ஆயுத பரவல் தடைக்கு அபாயங்களை ஏற்படுத்தும் என்பதால், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என அந்த அமைப்பு கூறியது.

நல்ல விஷயங்களுக்காக மட்டுமே இரான் அணு சக்தியைப் பயன்படுத்துகிறது என தங்களால் சொல்ல முடியாது எனவும், செயற்கையாக உருவாக்கப்பட்ட யுரேனியத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது குறித்த விசாரணைக்கு இரான் ஒத்துழைக்க மறுப்பதாகவும் அந்த அமைப்பு கூறியது.

இரான் அணு குண்டு தயாரிப்பதற்கான ஆதாரம் உள்ளாதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுவரை தெரிந்தது என்ன?

தனது அணுசக்தி திட்டங்கள் ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும், அணு ஆயுதங்களை உருக்க நினைத்ததில்லை எனவும் இரான் கூறுகிறது.

ஆனால், அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான பணிகளில் இரான் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை இரானில் பத்தாண்டுகளாக விசாரணை நடத்திய சர்வதேச அணுசக்தி முகமை கண்டறிந்தது. பிராஜக்ட் அமத் எனும் ரகசிய அணு திட்டத்தை இரான் 2003-ல் நிறுத்தும் வரை, 1980களின் பிற்பகுதியிலிருந்து இந்த செயல்பாடுகள் இருந்தது.

2009 ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகள் ஃபோர்டோ நிலத்தடி செறிவூட்டல் வசதியின் கட்டுமானத்தை வெளிப்படுத்தியது வரை, இரான் சில நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. ஆனால் அதன் பிறகு அணு ஆயுத மேம்பாடு குறித்த "நம்பகமான அறிகுறிகள் எதுவும் இல்லை'' என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறியது.

2015ஆம் ஆண்டில், இரான் 6 உலக வல்லரசுகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் கீழ் அதன் அணுசக்தி நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டதுடன், சர்வதேச அணுசக்தி முகமையின் கடுமையான கண்காணிப்பை அனுமதித்தது. இதற்குப் பதிலாக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன.

இந்த அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக 2018-ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தில் அறிவித்த டிரம்ப், இரான் மீது மீண்டும் தடைகளை விதித்தார். இரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்கும் அளவுக்கு இந்த ஒப்பந்தம் வலிமையாக இல்லை என அவர் கூறினார்.

இரான் கட்டுப்பாடுகளை, குறிப்பாக யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறி இதற்குப் பதிலடி கொடுத்தது.

அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஃபோர்டோவில் உள்ள அணு உலையில் 15 ஆண்டுகளுக்கு எந்த செறிவூட்டலும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் இரான் 20% யுரேனியத்தை செறிவூட்டுவதை மீண்டும் தொடங்கியது.

வியாழக்கிழமை, சர்வதேச அணுசக்தி முகமையின் 35 நாடுகளின் போர்ட் ஆஃப் கவர்னர்ஸ் குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் அதன் அணு ஆயுதப் பரவல் தடையை மீறுவதாக அறிவித்தது.

'பாதுகாப்பான இடத்தில்' ஒரு புதிய யுரேனியம் செறிவூட்டல் வசதியை அமைப்பதன் மூலமும், ஃபோர்டோ ஆலையில் உள்ள பழைய யுரேனியம் செறிவூட்டல் இயந்திரங்களை புதிய மற்றும் வேகமாகச் செயல்படும் இயந்திரங்களாக மாற்றுவதன் மூலம் இதற்குப் பதிலடி தரப்படும் என இரான் கூறியது.

இரான் அணு குண்டு தயாரிப்பதற்கான ஆதாரம் உள்ளாதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 'இரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை எனவும், அந்நாட்டின் அதி உயர் தலைவர் காமனெயி 2003இல் நிறுத்தி வைத்த அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்க ஒப்புதல் வழங்கவில்லை எனவும் அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது'

இஸ்ரேல் ஏற்படுத்திய பாதிப்பு என்ன?

வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய ராணுவம் தனது முதல் கட்ட வான்வழித் தாக்குதல்கள் நடான்ஸில் உள்ள நிலத்தடி அமைப்புகளையும், முக்கியமான உள்கட்டமைப்பையும் சேதப்படுத்தியதாகக் கூறியது.

நடான்ஸில் தரைக்கு மேலே உள்ள பைலட் எரிபொருள் செறிவூட்டல் ஆலை மற்றும் மின்சார உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாகச் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார். நிலத்தடி கட்டமைப்பில் வெளிப்படையாகத் தெரியும் பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், மின்சார துண்டிப்பு அங்குள்ள இயந்திரங்களைப் பாதித்திருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

பைலட் எரிபொருள் செறிவூட்டல் ஆலையின் அழிவு குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இந்த வசதி 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்வதற்கும் மேம்பட்ட மையவிலக்குகளை (entrifuges) உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் கூறியது.

நடான்ஸில் நடந்த தாக்குதல்கள் அணு ஆயுதத்தை உருவாக்கும் இரானின் திறனைத் தாமதப்படுத்தும். ஆனால், இது எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என இப்போதே சரியாகக் கூற முடியாது என டேவன்போர்ட் கூறினார்.

''சர்வதேச அணுசக்தி முகமை அந்த இடத்தை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படும் வரை, எவ்வளவு விரைவாக இரான் அங்கு மீண்டும் பணிகளைத் தொடங்கும் அல்லது யுரேனியத்தை ரகசியமாக வேறு இடத்துக்கு மாற்றியதா போன்றவை குறித்து நமக்குத் தெரியாது'' என்றார் டேவன்போர்ட்.

ஃபோர்டோ செறிவூட்டல் ஆலை மற்றும் இஸ்ஃபஹான் அணுசக்தி தொழில்நுட்ப மையத்தை இஸ்ரேல் தாக்கியதாக இரான் சர்வதேச அணுசக்தி முகமையிடம் தெரிவித்திருந்தது.

இஸ்ஃபஹானில் நடந்த தாக்குதல் மூலம் "யுரேனியத்தை உற்பத்தி செய்யும் வசதி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீண்டும் மாற்றுவதற்கான உள்கட்டமைப்பு, ஆய்வகங்கள் மற்றும் கூடுதல் உள்கட்டமைப்பு ஆகியவற்றை" தகர்த்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

"ஃபோர்டோ செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் இன்னும் அணு ஆயுத பெருக்க அபாயத்தை ஏற்படுத்துகிறது. அந்த இடத்தில் ஆயுத தர நிலைகளுக்குச் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை ரகசிய இடத்துக்கு அனுப்பவோ இரானுக்கு வாய்ப்பு உள்ளது" என்று டேவன்போர்ட் கூறினார்.

"இந்த அச்சுறுத்தலை நீக்க எத்தனை நாட்கள் தேவையோ அவ்வளவு நாட்கள்" இந்த நடவடிக்கை தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் கூறினார்.

ஆனால், இது அடைய முடியாத இலக்கு என்கிறார் டேவன்போர்ட்.

''தாக்குதல்கள் தளங்களை அழிக்கலாம், விஞ்ஞானிகளைக் குறிவைக்கலாம். ஆனால், இரான் அணுசக்தி குறித்து பெற்றுள்ள அறிவை அழிக்க முடியாது. இரானால் மீண்டும் கட்டமைக்க முடியும். யுரேனியம் செறிவூட்டலில் கடந்த காலத்தை விட மிக விரைவாக அதனால் கட்டமைக்க முடியும்''என்று அவர் கூறினார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c04e4r960w0o

மைனஸ் 7 டிகிரி குளிரில் ஆற்றில் இறங்கிய விமானம் - 155 பயணிகள் காப்பாற்றப்பட்டது எப்படி?

1 month 2 weeks ago

செஸ்லீ சல்லன்பெர்கர், மிராக்கிள் ஆஃப் ஹட்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நியூயார்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது (கோப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சித்தாநாத் கானு

  • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து 155 பேருடன் ஒரு விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தில் மோதியது.

இதையடுத்து, விமானத்தை விமான நிலையத்துக்கு திருப்புவது இனி சாத்தியமில்லை என்பதை விமானி உடனடியாக உணர்ந்தார். எனவே, அவர் விமானத்தை ஆற்றில் தரையிறக்கினார்.

அது, யுஎஸ் ஏர்வேஸ் 1549 எனும் விமானம். நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் விமானம் தரையிறக்கப்பட்டதால், இச்சம்பவம், 'மிராக்கிள் ஆஃப் ஹட்சன்' என்றும் அறியப்படுகிறது.

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிர்தப்பினர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் விமானத்தை 'நீரில் தரையிறக்கிய' விமானி செஸ்லீ சல்லன்பெர்கர் என்கிற சல்லி.

விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் செயலிழந்தன

செஸ்லீ சல்லன்பெர்கர், மிராக்கிள் ஆஃப் ஹட்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பலத்த நீர் ஓட்டம் இருந்தபோதிலும், எந்த பயணிக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தை மையமாக வைத்து 2016ம் ஆண்டில் 'சல்லி' ('Sully') எனும் படமும் வெளியானது, அதில் விமானி கதாபாத்திரத்தில் டாம் ஹேங்க்ஸ் நடித்திருந்தார்.

2009ம் ஆண்டு ஜனவரி 15 அன்று நடந்த இச்சம்பவத்தில், நியூ யார்க்கின் லாகார்டியா விமான நிலையத்திலுருந்து வட கரோலினாவுக்கு விமானம் செல்லவிருந்தது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ஹஸ்டன் நதியில் இறங்கியது.

விமானம் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே, அதில் பறவைக் கூட்டம் மோதியதால், விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் பழுதடைந்தன.

அதன்பின், விமானத்தின் அனுபவம் வாய்ந்த விமானி சல்லன்பெர்கர், லாகார்டியா விமான நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் தான் ஹட்சன் நதியில் விமானத்தை தரையிறக்குவதற்கு முயற்சி செய்வதாக கூறினார்.

இது மிகவும் அசாதாரணமான, மிகவும் ஆபத்தானதாகும்.

சுமார் மூன்றரை நிமிடங்கள் பறவைகள் விமானத்தில் மோதிய பின், அந்த விமானம் நதியில் தரையிறக்கப்பட்டது. அப்போது, விமானத்தின் பின்பகுதி தான் முதலில் ஆற்றில் இறங்கியதால், தண்ணீர் விமானத்துக்குள் புகுந்தது. ஆனால், இது விமானத்தை துண்டுதுண்டாக நொறுக்கவில்லை.

அவசரகால கதவுகள் மற்றும் அதன் இறக்கை பகுதிகள் வாயிலாக பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறினர். அப்போது, விமானம் நீரில் மிதப்பதையும் அதன் இருபுறமும் உள்ள இறக்கையின் மேலே பயணிகள் நிற்பதையும் காட்டும் தனித்துவமான படத்தை இந்த உலகம் கண்டது.

மோசமான குளிரில் மீட்பு நடவடிக்கை

செஸ்லீ சுல்லன்பெர்கர், மிராக்கிள் ஆஃப் ஹட்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விமானம் ஹட்சன் ஆற்றில் தரையிறங்கியபோது உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

விமானம் ஆற்றில் தரையிறக்கப்பட்ட சமயத்தில், ஹட்சன் நதியில் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

நியூ யார்க்கில் ஜனவரி மாதம் மிகவும் குளிராக இருக்கும். இச்சம்பவம் நடந்த நாளில் வெப்பநிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸாக இருந்தது.

ஆனால், ஆற்றில் விமானம் இறங்கிய சில நிமிடங்களிலேயே அருகே இருந்த படகுகள் மற்றும் கப்பல்கள் அப்பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. இந்த துரிதமான நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இத்தகைய அசாதாரணமான, ஆபத்தான முறையில் விமானம் நீரில் இறங்கியதால், ஒரேயொரு பயணிக்கும், விமானக்குழுவினர் ஐந்து பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. 78 பேருக்கு சிறியளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அச்சமயத்தில் செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர், பயணிகளின் அதிர்ஷ்டத்தாலும் விமானியின் திறன் மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கைகளாலும் அனைவரும் உயிர் தப்பியதாக கூறியிருந்தார்.

அப்போதைய நியூ யார்க் மேயர் ப்ளூம்பெர்க் ஊடகத்திடம், "ஆற்றில் விமானத்தை தரையிறக்கி விமானி சிறப்பாக செயல்பட்டதாக" தெரிவித்தார்.

விமானம் ஆற்றில் இறங்கியவுடன், யாரேனும் விமானத்துக்குள் சிக்கியுள்ளனரா என முழு விமானமும் இருமுறை பரிசோதிக்கப்பட்டது.

விமானி சல்லன்பெர்கர் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரிதும் பாராட்டப்பட்டார், ஆனால் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன.

விமானி சல்லன்பெர்கர்

செஸ்லீ சுல்லன்பெர்கர், மிராக்கிள் ஆஃப் ஹட்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தன்னுடைய துரிதமான முடிவுக்காக விமானி சல்லன்பெர்கர் இன்றும் அறியப்படுகிறார்

அமெரிக்காவின் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு இதுகுறித்து விசாரித்தது. ஆற்றில் விமானத்தை தரையிறக்கிய முடிவு சரியானதுதான் என, விசாரணையை அந்த அமைப்பு முடித்துவைத்தது.

சில நாட்களில், குறிப்பிட்ட விமானம் ஆற்றிலிருந்து அகற்றப்பட்டு, அமெரிக்காவின் கரோலினாஸ் ஏவியேஷன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

விமானி சல்லன்பெர்கர் தன் 16வது வயதில் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை தொடங்கினார். அமெரிக்காவின் விமானப் படை அகாடமியில் 1973ம் ஆண்டு அவர் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் விமானப் படையில் போர் விமானியாக இணைந்தார்.

1980ம் ஆண்டில் தனியார் விமானப் போக்குவரத்து துறையில் விமானியாக இணைந்தார். அவசரகாலத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட உதாரணமாக இச்சம்பவம் உள்ளது.

இந்த சம்பவத்துக்கு முன்பாக விமானி சல்லன்பெர்கர் 20,000 மணிநேர பயண அனுபவத்தைக் கொண்டிருந்தார். சுமார் 40 ஆண்டுகள் அவர் விமானியாக இருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce9v97er3m0o

போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!

1 month 2 weeks ago
போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!

IDF Map controversy

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இஸ்ரேல் செய்த ஒரு சிறு தவறுக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

 

ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை இஸ்ரேல் தொடர்ந்து கண்டித்து வந்த நிலையில் சமீபத்தில் இருநாடுகளும் தாக்குதலை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அடியாக தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், ஈரானின் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் ஈரானின் அணு ஆயுத உற்பத்தி மற்றும் பரிசோதனை மையங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

 

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் ஒரு மேப்பையும் வெளியிட்டது. அந்த உலக மேப்பில் ஜம்மு, காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தானின் பகுதிகள் என இஸ்ரேல் குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய நெட்டிசன்கள் பலர் அந்த பதிவிலேயே கமெண்டில் இதுகுறித்து சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அந்த பதிவையே இஸ்ரேல் ராணுவப்பிரிவின் எக்ஸ் தள நிர்வாகம் நீக்கியுள்ளது. 

 

இதுகுறித்து பேசிய இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் ”எல்லைகளை சரியாக கவனிக்காததன் தோல்வி இது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து IDF (Israeli Defence Force) வெளியிட்டுள்ள பதிவில் “இந்தப் பதிவு இந்தப் பகுதியை விளக்குகிறது. இந்த வரைபடம் எல்லைகளைத் துல்லியமாகக் காட்டத் தவறிவிட்டது. இந்தப் படத்தால் ஏற்பட்ட எந்தவொரு குற்றத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளது.

https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/israel-apologize-to-india-for-their-wrong-measurements-in-india-and-kashmir-in-their-maps-125061500009_1.html

பிரித்தானிய போர் விமானம் கேரளாவில் அவசரமாக தரையிறக்கம்

1 month 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

15 JUN, 2025 | 12:49 PM

image

இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (14) இரவு பிரித்தானியாவுக்குச் சொந்தமான F-35 என்ற போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் தாங்கி போர்க் கப்பலில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படும் இந்த ஜெட் விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் இரவு 9.30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

சீராகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்குவதை உறுதி செய்வதற்காக விமான நிலைய அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்தனர்.

"விமானத்தில் குறைந்தளவில் எரிபொருள் இருப்பதாக அறிவித்து விமானி தரையிறங்க அனுமதி கேட்டார். தரையிறக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாகவும் முறையாகவும் கையாளப்பட்டது என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானம் தற்போது விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றவுடன் எரிபொருள் நிரப்பப்படும் என அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

டைபூன் விமானத்துடன் இணைந்து இயக்கப்படும் F-35B லைட்னிங், குறுகியதூரம் சென்று செங்குத்தாக தரையிறங்கும் திறன்களுக்கு பெயர் பெற்ற ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும்.

இது துல்லியமான தரைத் தாக்குதல்கள், மின்னணுப் போர், கண்காணிப்பு மற்றும் வான்வழிப் போர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆற்றுகின்றது.

https://www.virakesari.lk/article/217509

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை

1 month 2 weeks ago

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை

adminJune 15, 2025

ganthy.jpg

தென்னாபிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.3.22 கோடி பண மோசடி செய்த குற்றச்சாட்டில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான  ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, டர்பன் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது . அவர் தற்போது  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அகிம்சைக்கான சர்வதேச மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், செயல் இயக்குனராகவும் உள்ள  56 வயதான ஆசிஷ் லதா ராம்கோபின்   தென்ஆப்பிரிக்காவில் உள்ள ‘நியூ ஆப்ரிக்கா அலையன்ஸ்’ என்ற காலணி விநியோக நிறுவனத்தின் இயக்குனர் மகாராஜ் என்பவாிடம் , தனக்கு   தென்னாபிரிக்காவில் உள்ள பிரபல நெட்கேர் குழும மருத்துவமனைக்கு துணிகள் விநியோகிக்க, இந்தியாவில் இருந்து 3 கன்டெய்னர்களல் இறக்குமதி செய்துள்ளதாகவும், அதற்கு வரி செலுத்த  6 மில்லியன் ரேண்ட் (ரூ.3.22 கோடி) பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.  . இதற்கு சான்றாக போலியான பற்றுச்சீட்டுக்களையும் காட்டியுள்ளார். ஆசிஷ் லதா மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி என்பதால், அவரை நம்பி மகாராஜ் 6 மில்லியன் ரேண்ட் பணம் வழங்கியுள்ளார்.

ஆனால் ஆசிஷ் லதா வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்த வில்லை. அவர் கொடுத்த ஆவணங்களும் போலி எனத் தெரிந்தது. இதனால் ஆசிஷ் லதா மீது மகாராஜ் மோசடி புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த டர்பன் நீதிமன்றம் ஆசிஷ் லதாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவர் தற்போது 50,000 ரேண்ட் பிணைத் தொகை செலுத்தி  பிணையில் வெளிவந்துள்ளார்.

மகாத்மா காந்தியின் வாரிசுகள் பலர் மனித உரிமை ஆர்வலர்களாக பணியாற்றுகின்றனர். அவர்களில் ஆசிஷ் லதா ராம்கோபின்னும் ஒருவர்.  தென்னாபிரிக்காவில் பிரபலமான  இவரது தாயான  எலா காந்தியின் பணிகளை பாராட்டி இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அரசுகள் அவருக்கு விருதுகள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

https://globaltamilnews.net/2025/216844/

இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் குறித்த ஓர் ஒப்பீடு - யாருடைய ராணுவம் பலம் மிக்கது?

1 month 2 weeks ago

இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் - ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,ஆரிஃப் ஷமீம்

  • பதவி,பிபிசி உருது மற்றும் பிபிசி பெர்ஷிய மொழிச் சேவை

  • 18 ஆகஸ்ட் 2024

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் முக்கிய தலைவர்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 2 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் இரான் எச்சரித்துள்ளது.

இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய மோதல் பற்றிய அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் இரான், இரண்டு நாடுகளில், எந்த நாட்டின் ராணுவம் பலம் மிக்கது என்ற கேள்வி எழுகிறது.

இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் - ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரானின் முக்கிய ராணுவ பலம், அதன் ஏவுகணைகள்

இஸ்ரேல், இரான் - யார் கை ஓங்கியிருக்கிறது?

பிபிசி இந்த கேள்வியைக் கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆதாரங்களைப் பயன்படுத்தி எடைபோட்டது. இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க திறன்கள் உள்ளன, அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் (International Institute for Strategic Studies - IISS) இரு நாட்டு ராணுவத்தின் தாக்கும் திறனை ஒப்பிட்டு, பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் இணையத்தில் கிடைக்கும் முறைகளைப் பயன்படுத்தி சிறந்த மதிப்பீடுகளை உருவாக்குகிறது.

ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் போன்ற பிற நிறுவனங்களும் இத்தகைய மதிப்பீடுகளைச் செய்கின்றன. ஆனால், பெரும்பாலும் புள்ளிவிவரங்களை வழங்காத இந்த நாடுகள் குறித்த ஆய்வில் துல்லியம் மாறுபடும்.

இருப்பினும், ஓஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Peace Research Institute Oslo - PRIO) சேர்ந்த நிக்கோலஸ் மார்ஷ், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் ராணுவ வலிமையை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக ஐ.ஐ.எஸ்.எஸ் கருதப்படுகிறது, என்கிறார்.

இஸ்ரேல், தனது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் இரானை காட்டிலும் அதிகமாகச் செலவழிக்கிறது என்று ஐ.ஐ.எஸ்.எஸ் கூறுகிறது.

கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் இரானின் பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 740 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது (இந்திய மதிப்பில் சுமார் 62,000 கோடி ரூபாய்).

இஸ்ரேலின் பாதுகாப்பு பட்ஜெட் அதைவிட இருமடங்காக இருந்தது. அதாவது 1,900 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. (இந்திய மதிப்பில் சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய்). இஸ்ரேலின் பாதுகாப்புச் செலவு, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இரானைவிட இரட்டிப்பாகும்.

தொழில்நுட்ப ரீதியில் முந்துவது யார்?

இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் - ஓர் ஒப்பீடு

ஐ.ஐ.எஸ்.எஸ் (IISS) புள்ளிவிவரங்கள், இஸ்ரேலிடம் 340 ராணுவ விமானங்கள் போருக்குத் தயாராக இருப்பதாகக் காட்டுகின்றன.

ஜெட் விமானங்களில் நீண்டதூர வேலைநிறுத்த வரம்பைக் கொண்ட F-15 விமானங்கள், ரேடாரை தவிர்க்கக்கூடிய உயர் தொழில்நுட்ப F-35 ‘ஸ்டெல்த்’ விமானங்கள், மற்றும் வேகமான தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இரானிடம் சுமார் 320 போர்த் திறன் கொண்ட விமானங்கள் இருப்பதாக ஐ.ஐ.எஸ்.எஸ் மதிப்பிட்டுள்ளது. இந்த ஜெட் விமானங்கள் 1960களில் இருந்தே இருப்பவை. இதில் F4, F5 மற்றும் F14 ஆகியவை அடங்கும். (F14 விமானம், 1986 திரைப்படமான ‘டாப் கன்’ மூலம் பிரபலமானது).

ஆனால் PRIO அமைப்பின் நிக்கோலஸ் மார்ஷ் கூறுகையில், இந்தப் பழைய விமானங்களில் உண்மையில் எத்தனை பறக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் பழுதுபார்க்கும் பாகங்களைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும், என்கிறார்.

அயர்ன் டோம் மற்றும் ஏரோ அமைப்புகள்

இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் - ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இஸ்ரேலின் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அயர்ன் டோம் மூலம் முறியடிக்கப்பட்டன

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பின் முதுகெலும்பாக, அதன் ‘அயர்ன் டோம்’ மற்றும் ‘ஏரோ’ அமைப்புகள் இருக்கின்றன.

ஏவுகணைப் பொறியாளர் உசி ரூபின், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்தில், இஸ்ரேல் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் ஆவார்.

இப்போது ஜெருசலேம் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ராடஜி அண்ட் செக்யூரிட்டியின் மூத்த ஆராய்ச்சியாளரான அவர், கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அனைத்தையும் ‘அயர்ன் டோம்’ மற்றும் இஸ்ரேலின் சர்வதேச கூட்டாளிகள் அழித்ததைக் கண்டபோது தாம் எவ்வளவு ‘பாதுகாப்பாக’ உணர்ந்ததாக பிபிசியிடம் கூறினார்.

"நான் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். இலக்குகளுக்கு எதிராக இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவொரு குறுகிய தூர ஏவுகணைப் பாதுகாப்பு. வேறு எந்த அமைப்பிலும் இது போன்ற எதுவும் இல்லை," என்றார்.

இஸ்ரேலில் இருந்து இரான் எவ்வளவு தொலைவில் உள்ளது?

இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் - ஓர் ஒப்பீடு

இஸ்ரேல், இரானில் இருந்து 2,100கி.மீ., தொலைவில் உள்ளது. ஏவுகணைகள்தான் இரானை தாக்குவதற்கான இஸ்ரேலின் முக்கிய வழி, என ‘டிஃபென்ஸ் ஐ’ இதழின் ஆசிரியர் டிம் ரிப்லி பிபிசியிடம் கூறினார்.

இரானின் ஏவுகணைத் திட்டம் மத்தியக் கிழக்கில் மிகப் பெரியதாகவும் மிகவும் மாறுபட்டதாகவும் கருதப்படுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டில், அமெரிக்க மத்திய கட்டளையின் ஜெனரல் கென்னத் மெக்கென்சி, இரானிடம் ‘3,000க்கும் அதிகமான’ பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாகக் கூறினார்.

சி.எஸ்.ஐ.எஸ் (CSIS) ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தின் படி, இஸ்ரேலும் பல நாடுகளுக்கு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்கிறது.

இரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள்

கடந்த 1980 முதல் 1988 வரை அண்டை நாடான இராக் உடன் செய்த போரின் நேரத்தில் இருந்து, இரான் தனது ஏவுகணை அமைப்புகள் மற்றும் ட்ரோன்களில் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளது.

இரான் குறுகிய மற்றும் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. அவற்றில் பல, கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.

ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் சௌதி அரேபியாவை குறிவைத்துத் தாக்கப்பட்ட ஏவுகணைகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அவை இரானில் தயாரிக்கப்பட்டவை என முடிவு செய்துள்ளனர்.

நீண்ட தூர தாக்குதல்

இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் - ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிரியாவில் உள்ள இரானிய துணைத் தூதரகக் கட்டடம் ஏப்ரல் 1ஆம் தேதி வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டது, அதில் மூத்த இரானிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்

‘டிஃபென்ஸ் ஐ இதழின் டிம் ரிப்லி கூறுகையில், இஸ்ரேல் இரானுடன் தரைப் போரில் ஈடுபடுவது சாத்தியமில்லை என்கிறார்.

"இஸ்ரேலின் பெரிய நன்மை அதன் விமானப் படை, மற்றும் அதன் வழிகாட்டும் ஆயுதங்கள். எனவே இரானில் உள்ள முக்கிய இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திறன் அதனிடம் உள்ளது," என்றார்.

அதிகாரிகளைக் கொல்லவும், எண்ணெய் நிறுவல்களைக் காற்றில் இருந்து அழிக்கவும் இஸ்ரேலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரிப்லி கூறுகிறார்.

"இதன் மையத்தில் இருப்பது ‘பனிஷ்’ தண்டனை. இஸ்ரேலிய ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் அந்த வார்த்தையை எப்போதும் பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தத்துவத்தின் ஒரு பகுதி, இது அவர்களின் தத்துவத்தின் ஒரு பகுதி," என்கிறார்.

கடந்த காலத்தில், இரானின் தாக்குதலைத் தூண்டிய சிரியாவின் தலைநகரில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அழித்தது உட்பட, உயர்மட்ட இரானிய ராணுவம் மற்றும் பொதுமக்கள் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

அதற்கோ, அல்லது இரானின் முக்கிய அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால் மறுக்கவுமில்லை.

இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் - ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம்,IRGC HANDOUT / REUTERS

படக்குறிப்பு,அபு மூசா தீவில் ஒரு பாதுகாப்புப் பயிற்சியின்போது, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் கடற்படை வேகப் படகுகள்

கடற்படையின் பலம் என்ன?

ஐ.ஐ.எஸ்.எஸ் அறிக்கைகளின்படி, இரானின் கடற்படையில் சுமார் 220 கப்பல்கள் உள்ளன. இஸ்ரேலிடம் சுமார் 60 கப்பல்கள் உள்ளன.

சைபர் தாக்குதல்கள்

சைபர் தாக்குதல் நடந்தால், இரான் இழப்பதைவிட இஸ்ரேல் இழப்பது அதிகம்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பு இரானின் பாதுகாப்பு அமைப்பைவிட தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டது. எனவே இஸ்ரேல் ராணுவத்தின் மீது மின்னணு தாக்குதல் நடத்தப்பட்டால் அதிக அளவில் சாதிக்க முடியும்.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் தேசிய சைபர் இயக்குநரகம், “இணைய தாக்குதல்களின் தீவிரம் முன்பைவிடக் குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், ஒவ்வொரு இஸ்ரேலிய துறையிலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும். போரின்போது இரான் மற்றும் லெபனானில் இயங்கும் ஹெஸ்பொலா அமைப்பு இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்தது.

கடந்த 2023ஆம் ஆண்டின் அக்டோபர் 7 தாக்குதல்களுக்கும் அந்த ஆண்டின் இறுதிக்கும் இடையே 3,380 சைபர் தாக்குதல்கள் நடந்ததாக அது தெரிவிக்கிறது.

இரானின் குடிமைத் தற்காப்பு அமைப்பின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் கோலம்ரேசா ஜலாலி கூறுகையில், சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இரான் கிட்டத்தட்ட 200 இணையத் தாக்குதல்களை முறியடித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில், இரானின் எண்ணெய் அமைச்சர் ஜாவத் ஓவ்ஜி, ஒரு இணையத் தாக்குதல் நாடு தழுவிய அளவில் பெட்ரோல் நிலையங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறினார்.

இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் - ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இரான் இஸ்ரேலின் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஏவிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை சாக்கடல் கரையில் கிடக்கிறது

அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல்

இஸ்ரேல் அதன் சொந்த அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதுபற்றி அந்நாடு தெளிவாகப் பேசுவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது.

இரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கருதப்படவில்லை. குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அது அணு ஆயுதங்கள் உருவாக்குவதற்குத் தனது அணுசக்தித் திட்டத்தைப் பயன்படுத்த முயல்வதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.

நிலவியல் மற்றும் மக்கள்தொகை

இரான் இஸ்ரேலைவிடப் பலமடங்கு பெரிய நாடு. அதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 8.9 கோடி. இது இஸ்ரேலின் மக்கள்தொகையான 1 கோடியைவிட கிட்டத்தட்ட பத்து மடங்கு.

இரான், இஸ்ரேலைவிட ஆறு மடங்கு அதிகமான ராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது. இரானிடம் 6 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இஸ்ரேலிடம் 1.7 லட்சம் வீரர்கள் உள்ளனர் என்று ஐ.ஐ.எஸ்.எஸ். கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c77l1rxmx2zo

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -

Published By: RAJEEBAN

13 JUN, 2025 | 06:52 AM

image

ஈரான்மீது தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஈரான் ஆளில்லா விமானதாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என்பதால் அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

இஸ்ரேல் பெருமளவு அணுசக்தி அணுவாயுத இலக்குகளையும் இராணுவ இலக்குகளையும் தாக்குவதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் முன்கூட்டிய தாக்குதலை தொடர்ந்து ஈரான் ஆளில்லா விமான தாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/217320

ஈரானின் புரட்சிகர காவல்படையின் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி

13 JUN, 2025 | 07:59 AM

image

ஈரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதலில் இறந்த பல மூத்த தலைவர்களில் அவரும் ஒருவர்.

அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அப்பாசியும் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

https://www.virakesari.lk/article/217321

Checked
Sat, 08/02/2025 - 08:39
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe