புதிய பதிவுகள்2

அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி

1 month 2 weeks ago
பழைய ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம்…..😂 கோவியத் கால அணுகுண்டு மட்டும் இல்லாவிட்டால் புட்டினின் ரஸ்யாவை நாயும் மதியாது என நேற்று எழுதினேன்…அது இன்று நிருபணமாகிறது. பிரித்தானிய விமானப்படை, மற்றும் பிரித்தானிய தளங்கள் இந்த ஆப்பரேசனில் பங்கெடுத்ததாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இது நடந்து முடிந்த சூடு ஆறமுன்னம், நேட்டோ எம்மை கைவிட்டாலும் நாம் நேட்டோவை கைவிடமாட்டோம் என உளறியுள்ளார் தம்பர்.

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
உண்மைதான் ஐயா… இப்போதைக்கு மேலே சொன்னபடி (பொன்னாலை திருத்த வேலை, காரைநகர்5, சுழிபுரம்-சார் பகுதிகள்5 என்பதை செய்வோம். இவை முடியும் தறுவாய்க்கு வரும் போது ஒரு திட்ட மீளாய்வை செய்வோம். அதன் போது பதிவதை செய்வதா அல்லது இன்னும் பொறுத்து செய்வதா என முடிவு செய்யலாம். நாட்டில் நடைமுறை மேலாண்மை ஏராளன்(project implementation oversight) . உதவி - வாத்தியார் அண்ணா மற்றும் நான். நிதி திரட்டல் (fund raising). குசா அண்ணா. ஏனையோர் எவரும் முன்வரலாம். ஏராளன் பகிருவார். Hybrid (இரெண்டு மாதிரியும்) முறையில் செய்யலாம். நான் முதலில் ஒரு தொகையை கொடுத்து விட்டு, பின்னர் மாதாந்தம் அனுப்பலாம் என நினைக்கிறேன். முயலுவோம். குறைந்தபட்சம் - பொன்னாலை வேலையை ஆரம்பித்து விட்டோம் எண்டால் deadline ஐ மீட் பண்ணியதாகும்.

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
நல்லது. பரீட்சார்த்தமாகவும் இருக்கும். படிப்பினையையும் தரும். அந்தத் திட்டம் நல்லமுறையில் நடந்தால் புது உத்வேகமும் கிடைக்கும். இன்னும் நாங்கள் ஆரம்பப் புள்ளிக்கே வரவில்லை. பேச்சளவில்தான் நிற்கின்றோம். அடுத்த நகர்வைக் காணவில்லை. என்னிடம் இந்தக் கேள்விகள் இருக்கின்றன, முன்னோடி அமைப்பை ஏதாவது நாட்டில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப் போகின்றோமா? (இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில்) இதை நடைமுறைப் படுத்துபவர்(கள்) யார்? வங்கி விபரங்கள் என்ன? திட்டங்களுக்கென்று பணம் தரப்பட வேண்டுமா? அல்லது மாதாந்தமாக/ அன்பளிப்புகளாக பெறும் பணத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படப் போகின்றனவா? வரும் தைப் பொங்களுக்கு தொடங்கலாமா?

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
ஒரு சின்ன ஐடியா. பெரிய திட்டங்கள் அனைத்தையும் செய்ய தொடங்க முன் ஒரு pilot திட்டத்தை run பண்ணுவோம் அல்லவா? அதைப்போல் இந்த பொன்னாலை மாற்றுதிறனாளி சகோதர்களின் திருத்த வேலையை முதலில் ஒரு pilot ஆக செய்வோமா? உடல்நிலையால் அவர்கள் முன்னுரிமைக்கும் தகுதியானோரே. கருத்தை சொல்லவும்.

சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்

1 month 2 weeks ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை ; அவர் இந்தியாவில் இருப்பதாகவும் தகவல் இல்லை - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 07 Jan, 2026 | 03:21 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை என இடம்பெறும் விசாரணைகளில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதேநேரம் அவர் இந்தியாவில் இருப்பதாக எமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய இடையீட்டு கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மான் தனது கேள்வியின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் நேரடி தொடர்பான சாரா ஜெஸ்மின் தொடர்பில் 2020க்கு பின்னர் கோட்டாப ராஜபக்ஷ் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசாரணைக்குழுவின் 3ஆவது விசாரணையிலேயே சாரா ஜெஸ்மின் உயிரிழந்ததாக தெரிவிப்பதற்கு முயற்சித்தார்கள். என்றாலும் சாரா ஜெஸ்மின் உயிரிழந்ததாக நாங்கள் யாரும் நம்புவதில்லை. அவர் தப்பிச்சென்றுள்ளார் அல்லது தப்பிச்செல்ல சிலர் அவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்து வந்தார். அதேநேரம் பாதுகாப்பு பிரதி அமைச்சரான அருன ஜயசேகர, குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வந்தார். அத்துடன் சாரா ஜெஸ்மின் தப்பிச்சென்றதும் இந்த காலப்பகுதியிலாகும். அரசாங்கம் பாதாள குழுக்களை கைதுசெய்ய திறந்த பிடியாணைகளை பெற்று செயற்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடமாகியும் சாரா ஜெஸ்மினை கைது செய்ய ஏன் பிடியாணை பிறப்பிக்காமல் இருக்கிறது. அத்துடன் இந்த அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர், நாட்டுக்கு வந்து சென்றார். ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இவ்வாறான கலந்துரையாடல்களின்போது, சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருந்தால், அவரை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் கலந்துரையாடி இருந்தீர்களா? அதேநேரம் சாரா ஜெஸ்மினை கண்டுபிடிக்க ஏன் திறந்த பிடியாணையை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறது என கேட்கிறேன் என்றார். அதற்கு அமைச்ர் தொடர்ந்து பதிலளிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இடம்பெற்றுவரும் விசாரணைகளில் இருந்து ஒருசில தகவல்கள் வெளிப்பட்டிருக்கின்றன. குறிப்பாக குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை எனவும் விசாணைகளில் இருந்து தகவல்கள் வெளிப்பட்டிருக்கின்றன.. அதேபோன்று சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருப்பதாக எமக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. என்றாலும் அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய தகவல்களின் பிரகாரம் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஏதாவது சதித்திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றதா என்ற விசாரணையே புதிய அரசாங்கத்தின் கீழ் இடம்பெறுகிறது. அதனால் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவை ஏற்படும் பட்சத்தில் சாரா ஜெஸ்மினை கைதுசெய்ய பிடியாணை பெற்றுக்கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/235443

Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை

1 month 2 weeks ago
மிக வித்தியாசமான ஒரு விறுவிறுப்பான திரைப்படம். கடைசி சில நிமிடங்கள் அல்லது வினாடிகள் வரைக்கும் முடிவை ஊகிக்க முடியாது. அந்த முடிவை புரிந்து கொள்வதற்கு கூட சில கணங்கள் எடுக்கலாம். ஏராளன் quote பண்ணியுள்ள வசனங்கள் தரும் அர்த்தம் தான் படம். இப்படியான சிக்கலான அதே நேரம் யதார்த்தமான உண்மையை திரைக்கதை ஆக்கும் கலை மலையாள இயக்குனர்களுக்கு கை வந்த கலை. படத்தில் வரும் நாய்கள் தான் உண்மையான கதா நாயகர்களோ என்று எண்ணத் தோன்றும். நேற்றிரவு பார்த்தேன்.. ஒரு போதும் இப் படம் நினைவில் அழியாது இருக்கும். வித்தியாசமான படங்களை விரும்புகின்றவர்களுக்கான சினிமா படம் இது.

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
புதிய வங்கிக் கணக்கு ஒன்றை இன்றைய தினம் சங்கானை தேசிய சேமிப்பு வங்கிக்கு நேரடியாகச் சென்று 1000 ரூபா வைப்பிட்டு ஆரம்பித்துவிட்டேன். வங்கிக் கணக்கு விபரங்களை இங்கே பகிரவா? தனிமடலில் போடவா? என்பதை கள உறவுகள் தெரியப்படுத்துங்கோ.

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

1 month 2 weeks ago
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா 07 Jan, 2026 | 05:22 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. காலம் தாழ்த்தாது சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விரைவாக மீட்சியடைவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.தேசிய நிதியை மாத்திரம் கொண்டு ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள முடியாது. ஆகவே சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த வேண்டும் என்று வலியுத்தினோம். சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது எப்போது என்று குறிப்பிடவில்லை. உலகில் பிறிதொரு நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் ஏதும் ஏற்பட்டால் இலங்கை மீதான கவனம் குறைவடையும். ஆகவே இவ்விடயத்தில் விரைவாக செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். சட்டத்தின் பிரகாரம் இலங்கையை மீள்கட்டியெழுப்பும் நிதியம் ஸ்தாபிக்கப்படவில்லை. இயற்கை அனர்த்தங்களால் சுமார் 4 பில்லியன் டொலர் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் நிதியம் இன்றளவில் சட்டத்தால் நிறுவப்படவில்லை. பல கோடி ரூபா நிதி பரிமாற்றப்படுகிறது. எதிர்காலத்தில் இது பிரச்சினைக்குரியதாக மாறலாம். ஆகவே இந்த நிதியத்தை சட்டத்தால் நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் அனர்த்த நிவாரண நிதியத்தை ஸ்தாபிக்குமாறும் வலியுறுத்துகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/235467

Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை

1 month 2 weeks ago
மனிதன் தன் விருப்பத்துக்காக/சுயநலத்திற்காக யாரையும் பாதுகாப்பு உணர்வு தந்து கட்டுபடுத்தி அடிமையாக்கி முதலாளியாக வலம் வருவதை உணர்ந்தோரும், மற்றவர்களை அடிமையாக்க தவறுவதில்லை.

'நான் ஒரு போர்க்கைதி': அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ பேசியது என்ன?

1 month 2 weeks ago
'பூமியின் நரகம்': அமெரிக்காவில் மதுரோ அடைக்கப்பட்டுள்ள தடுப்பு மையத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,XNY/Star Max/GC Images கட்டுரை தகவல் ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பிபிசி நியூஸ் முண்டோ 7 ஜனவரி 2026, 03:19 GMT புதுப்பிக்கப்பட்டது 7 ஜனவரி 2026, 03:44 GMT நியூயார்க்கில் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு திடீரென அழைத்து வரப்பட்ட ஒரு பதவி நீக்கப்பட்ட அதிபரை எங்கு அடைத்து வைப்பார்கள்? வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ள புரூக்ளின் தடுப்புக்காவல் மையத்தை, அமெரிக்காவிலுள்ள ஒரு வழக்கறிஞர் "பூமியின் நரகம்" என்று விவரித்துள்ளார். அந்த இடத்திற்கு குற்றவாளிகளை அனுப்புவதற்கு கூட சில நீதிபதிகள் மறுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கைவிலங்கு இடப்பட்டு, இரண்டு போதைப்பொருள் தடுப்பு முகவர்களால் அழைத்து வரப்பட்ட மதுரோ, நியூயார்க் வந்தடைந்தவுடன் நகைச்சுவையாகப் பேசினார். குட் நைட் என்பதை பியூனாஸ் நோச்சஸ் என்று நீங்கள் சொல்வது சரியா? குட் நைட்! புத்தாண்டு வாழ்த்துகள்!"என்று அவர் கூறினார். அவர் உடனடியாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் (டிஈஏ) தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு, புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்புக்காவல் மையத்தில் (எம்டிசி) உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டார். போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் வரை, மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் அங்கேயே இருப்பார்கள் (அக்குற்றச்சாட்டுகளை அவர்கள் இருவரும் மறுக்கிறார்கள்) என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,Adam Gray/Getty Images படக்குறிப்பு,வழக்கறிஞர்கள் "பூமியின் நரகம்" என்று விவரிக்கும் ஒரு தடுப்புக் காவல் மையத்தில் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ளார். எஃகு தடுப்புகள் மற்றும் கேமராக்கள் புரூக்ளின் மாவட்டத்தில் அமைந்துள்ள எம்.டி.சி என்பது பல அடுக்கு மாடிகளைக் கொண்ட கான்கிரீட் மற்றும் எஃகு சிறையாகும். இது துறைமுகத்திலிருந்து சில மீட்டர் தொலைவிலும், ஐந்தாவது அவென்யூ, சென்ட்ரல் பார்க் மற்றும் பிற பிரபலமான சுற்றுலா மையங்களில் இருந்து சுமார் 5 கி.மீ (3 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நகரச் சிறைச்சாலைகளில் நிலவிய அதிகப்படியான கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக 1990-களின் தொடக்கத்தில் இந்த மையம் திறக்கப்பட்டது. துறைமுகத்தில் வந்து இறங்கும் அல்லது கப்பல்களில் ஏற்றி அனுப்பப்படும் பொருட்களைச் சேமித்து விநியோகிக்கும் கிடங்குகள் இருந்த இடத்தில் தான் இந்த மையம் தற்போது அமைந்துள்ளது. மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் நீதிமன்றங்களில் விசாரணைக்காகக் காத்திருக்கும் ஆண் மற்றும் பெண் கைதிகளை அடைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றாலும், குறுகிய கால தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளை அடைக்கவும் இந்த தடுப்புக்காவல் மையம் பயன்படுத்தப்படுகிறது என்று ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸ் (பிஓபி) வலைத்தளம் தெரிவித்துள்ளது. நியூயார்க்கில் ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸால் இயக்கப்படும் ஒரே ஒரு தடுப்புக் காவல் மையம் இதுதான். 2021-ஆம் ஆண்டில் மன்ஹாட்டனில் இருந்த இதுபோன்றதொரு மையத்தை ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸ் மூடிவிட்டது. பாலியல் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன், 2019-இல் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தடுப்புக்காவல் மையம் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் இரண்டு ஃபெடரல் நீதிமன்றங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது எஃகு தடுப்புகளாலும், நீண்ட தூரத்திலிருந்தே படம்பிடிக்கும் திறன் கொண்ட கேமராக்களாலும் சூழப்பட்டுள்ளது. மதுரோ வருகைக்குப் பிறகு, வெளிப்புறப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பலத்து பாதுகாப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அங்கு விளையாடுவதற்கான வசதி, மருத்துவப் பிரிவுகள் மற்றும் நூலகம் போன்றவை உள்ளன என, பொது ஒளிபரப்பு சேவை (பிபிஎஸ்) செய்தி தெரிவித்துள்ளது. அங்குள்ள கைதிகள் நாளின் பெரும் பகுதியை மிகக் குறுகிய அறையிலேயே கழிக்கிறார்கள் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது விளக்கமோ இதுவரை வழங்கப்படவில்லை. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,நியூயார்க் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது, சிலியா ஃபுளோரஸ் மற்றும் நிக்கோலஸ் மதுரோ ஆகியோர் அமெரிக்க முகவர்களால் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகிறார்கள். 'மனிதாபிமானமற்ற சூழல்' ஊடக அறிக்கைகளின் படி, 1,000 பேரை அடைப்பதற்காகக் கட்டப்பட்ட இந்த மையத்தில், 2019-ஆம் ஆண்டில் 1,600 பேர் இருந்தனர். பிஓபி இணையதளத்தின்படி, தற்போது அங்கு 1,330-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். நவம்பர் 2024-இல் நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த மையமானது, பரிந்துரைக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கையில் பாதியைக் கொண்டு மட்டுமே இயங்கி வருகிறது எனத் தெரிய வருகிறது. அதிகப்படியான கூட்ட நெரிசல் மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகிய இரண்டும் தான், எம்.டி.சியில் அடிக்கடி நடக்கும் வன்முறைகளுக்கு முக்கியக் காரணங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டடத்தின் உள்கட்டமைப்பும் கவலைக்குரியதாக உள்ளது. 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மின் தடையின் போது, கடுங்குளிரில் வெப்பமூட்டும் வசதி இன்றி அங்கிருந்தவர்கள் பல நாட்களாக தவித்தபோது அது குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. "எம்.டி.சியின் சூழல் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மனிதாபிமானமற்றது," என்று அப்போதைய நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிட்டியா ஜேம்ஸ் அறிவித்தார். தடுப்புக்காவல் மையத்தின் மோசமான நிலை குறித்து அவர் அரசாங்கத்தின் மீது வழக்கும் தொடர்ந்தார். "சிறையில் அடைக்கப்படுவதால் மனித உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல," என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு,மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் அடைக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் மையம் பல அடுக்கு மாடிகளைக் கொண்டதோடு, சுவர்களாலும் கேமராக்களாலும் சூழப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஆண்ட்ரூ டாலக் போன்றவர்கள் நியூயார்க் டைம்ஸிடம் பேசுகையில், இந்தச் சிறை "பூமியின் நரகம்" என்று குறிப்பிட்டனர். 2024-ஆம் ஆண்டில், எட்வின் கார்டெரோ என்பவர் சக கைதிகளால் குத்திக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவருக்காக வாதாடிய டாலக் இவ்வாறு கூறினார். 2021 முதல் 2024 வரை பல கைதிகள் அங்கு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மையத்தின் மோசமான சூழலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், அங்கு கைதிகளை அனுப்பவே தயங்குகின்றனர். மாவட்ட நீதிபதி கேரி பிரவுன் ஆகஸ்ட் 2024-இல், வரி ஏய்ப்பு செய்த 75 வயது முதியவருக்கு தான் விதித்த ஒன்பது மாத சிறைத்தண்டனையை ரத்து செய்வதாகவும், பிஓபி அவரை புரூக்ளின் பெருநகர தடுப்புக்காவல் மையத்திற்கு அனுப்பினால், அதற்குப் பதிலாக அவரை வீட்டுக் காவலில் வைப்பதாகவும் கூறினார். "இங்கு நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் மேற்பார்வை குறைபாட்டையும், அமைதி சீர்குலைந்திருப்பதையும், ஏற்றுக்கொள்ள முடியாத, கண்டிக்கத்தக்க மற்றும் உயிருக்கு ஆபத்தான நிர்வாகத்தை கொண்டுள்ள ஒரு குழப்பமான சூழலையும் வெளிப்படுத்துகின்றன" என்று பிரவுன் கூறியதாக தி இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளும் இதனை செய்திகளில் இடம்பிடிக்கச் செய்துள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்க நீதித்துறை 25 பேர் மீது (கைதிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் உட்பட) வன்முறை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்தது தொடர்பான 12 வெவ்வேறு வழக்குகளில் விசாரணை அறிவித்தது. பி.ஓ.பி முன்பு வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்ட நபர்களைப் பாதுகாப்பதையும், சிறைப் பணியாளர்கள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பைப் பேணுவதையும் நாங்கள் ஒரு கடமையாகக் கருதுகிறோம்," என்று தெரிவித்தது. எம்.டி.சி.யில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க ஒரு அவசர நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், நிலுவையில் உள்ள பராமரிப்புப் பணிகளை முடிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கார்டெரோ மற்றும் பிறரின் மரணங்களைத் தொடர்ந்து சில கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,Hollywood To You/Star Max/GC Images படக்குறிப்பு,ராப் பாடகரும் இசை அமைப்பாளருமான சீன் "டிடி" கோம்ப்ஸ், தனக்கு தண்டனை விதிக்கப்படும் வரை இந்த மையத்தில் சில மாதங்களை கழித்தார். இந்த மையத்தில் அடைக்கப்பட்டிருந்த மற்ற முக்கிய நபர்கள் புரூக்ளின் பெருநகர தடுப்புக்காவல் மையத்தில் உள்ள மோசமான சூழலுக்கு மத்தியிலும், அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து முக்கியமான நபர்களை அங்கு அனுப்பி வருகின்றனர். உதாரணமாக, அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள முதல் லத்தீன் அமெரிக்க அரசியல் தலைவர் மதுரோ அல்ல. ஹோண்டுராஸின் முன்னாள் அதிபர் ஜுவான் ஓர்லாண்டோ ஹெர்னாண்டஸ் கடந்த ஜூன் மாதம் வரை இந்த மையத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அவருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, அவர் வேறொரு சிறை வளாகத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால், கடந்த டிசம்பரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவருக்கு மன்னிப்பு வழங்கினார். மெக்சிகோவின் முன்னாள் பொதுப் பாதுகாப்புச் செயலர் ஜெனாரோ கார்சியா லூனா என்பவரும் இந்த தடுப்புக் காவல் மையத்தின் ஓர் அறையில் அடைபட்டுள்ளார். மிகவும் பிரபலமான மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஜோவாக்வின் "எல் சாப்போ" குஸ்மான் இங்கு அடைக்கப்பட்டிருந்தார். சினலோவா கார்டெல் தலைவர்களில் ஒருவரான மெக்சிகோவைச் சேர்ந்த இஸ்மாயில் "எல் மாயோ" சம்பாடா, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைக்காக இப்போதும் அதே கட்டடத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அல் கொய்தா உறுப்பினர்களும் இங்குதான் சிறைவைக்கப்பட்டிருந்தனர். பிரபல ராப் பாடகரும் இசையமைப்பாளருமான சீன் "டிடி" கோம்ப்ஸ் சில மாதங்கள் இந்த தடுப்புக்காவல் மையத்தில் அடைக்கப்பட்டிருந்தார். பெண்களை பத்தாண்டுகளுக்கும் மேலாக துன்புறுத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நியூ ஜெர்ஸியில் உள்ள மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டார். எப்ஸ்டீனின் கூட்டாளியும், முன்னாள் துணைவருமான கிஸ்லேன் மேக்ஸ்வெல், திவாலான எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ தளத்தின் நிறுவனர் சாம் பேங்க்மேன்-ஃபிரைட் மற்றும் நிதி மோசடிகளுக்காக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட டிரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் ஆகியோரும் புரூக்ளின் தடுப்புக்காவல் மையத்தில் அடைபட்டிருந்த முன்னாள் கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04170dd9x5o

இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!

1 month 2 weeks ago
இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து! 07 Jan, 2026 | 02:38 PM "அக்ரிகிரீன் முன்முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி" திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு அமைச்சு, இறப்பர் அபிவிருத்தி திணைக்களம், மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தால் செயல்படவுள்ளது நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பசுமைவாயிந்த பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கையின் மாற்றத்தை இந்த முயற்சி ஆதரிக்கும். மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, இறப்பர் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் டாக்டர் ஜோஹன் எச். ஹெஸ்ஸே ( Johann.H.Hess ) ஆகியோர் கையொப்பமிடப்பட்ட மானிய ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க ஆதரவிற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துதோடு, இந்தத் திட்டம் சந்தை சார்ந்த மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இலங்கையின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது என்பதைக் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. https://www.virakesari.lk/article/235438
Checked
Mon, 02/23/2026 - 22:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed