2 months 3 weeks ago
யாயினி, பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை மக்கள் அனுப்புவது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கே. ஆனால், அரச்சனா உட்பட அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் பாராளுமன்ற சிறப்புரிமையை பாவித்து செய்வது, அடுத்த தேர்தலுக்கான தமது சொந்த தேர்தல் பிரச்சாரத்தை மட்டுமே. தான் இப்படிக் குரைப்பதால் இந்த பிரச்சனை மேலும் பற்றியெரிந்து, தமிழ்மக்களுக்கே அது பாதிப்பை உண்டாக்குமே தவிர பிரச்சனை தீரப்போவதில்லை என்பது, அர்சசனாவுக்கு நன்கு தெரியும். அப்படி பிரச்சனை மேலும் பற்றி எரிந்தால், அதை இன்னும் தனது அரசியல் நலன்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்பதும் அரச்சனாவுக்கு தெரியும். அதனால் மற்றய தமிழ் பாராளுமன்ற உறுபினர்களை போல் பண்பாக உரையாற்றாமல் தான் இப்படி நாய் போல் குரைப்பது பிரச்சனையை மேலும் அதிகரித்தாலும், தனக்கு மற்றயவர்களை விட வாக்குகளை அதிகரிக்க வைக்கும், என்று அவர் நம்புகிறார். பண்பற்று பேசுபவர்களை ரசிக்கும் கூட்டம் சமூகவலைத்தளங்களில் இருப்பதை துல்லியமாக அறிந்து அரசியலுக்கு வந்தவர் அவர். வைத்தியத்துறையில் தன்னால் மிளிர முடியாது அந்தளவுக்கு அந்த துறையில் தனக்கு அறிவில்லை என்பதை உணர்ந்து அடுத்தவனை வித்தியாசமாக பேக்காட்டி வாழலாம் என்பதை துல்லியமாக கணிப்பிட்ட திறமை உடைய அர்சசனா உண்மையில் பாராட்டுக்குரியவர்தான். @Justin கூறியது போல் பாராளுமன்றத்துக்கு வெளியே பம்மிக்கொண்டு அடக்கி வாசித்து தனது பதவியை காப்பாற்றிகொள்ளவும் அர்சசனாவுக்கு நன்கு தெரியும். தனது அப்பா தமிழீழ காவற்துறையில் உயர் அதிகாரி என்றும், ஜேர்மனியில் இருந்து தேசியத்தலைவரின் கொள்கைகளின் பார் ஈர்ககப்பட்டு இங்கு தாயக பணி புரிய வந்ததாகவும் தமிழ் சனலில் கூறிவிட்டு, அதே மாதமே( அது போன மாசம் என்று சொல்லவேண்டிய தேவையே இருக்கவில்லை) சிங்கள சனலில் பல்டியடித்து அப்பா வேலையில்லாமல் கஷரப்பட்டதால் புலிகளின் பொலிசில் கடமையாற்ற வேண்டிய தேவை வந்ததே தவிர அவர்களது கொள்கைகளில் அப்பாவுக்கு எந்த ஈடுபாடும் இல்லை என பேட்டியளித்த பின்பும் தனக்கு வாக்களிக்கும் மென்டல்கள் கணிசமான அளவில் இருப்பதை அனுபவத்தில் உணர்ந்தவர் அவர். இருப்பினும், 1970/80 களின் இருந்த இளம் சமுதாயம் போல் இப்படியான அரசியல் சுயநலமிகளின் பேச்சில் மயங்கி தமது வாழ்வைத் தொலைக்காமல், இவர்களின் அயோக்கியத்தனமான அரசியலை திரும்பி கூட பார்ககாமல் தாமுண்டு தமது கல்வி, தமது உழைப்பு , தமது career என்று தமது வாழ்வை அமைக்க விரும்பும் அதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கணிசமான இளம் சந்ததி தாயகத்தில் தற்போது இருப்பது ஆறுதலான, தமிழர் வாழ்வில் நம்பிக்கையளிக்க கூடிய விடயம்.
2 months 3 weeks ago
இனவாத சிங்களம் தமிழர்களுக்கு எதுவுமே தராது என்பது 70வருட வரலாறு சொல்லி நிற்கும் பாடம். இருந்தாலும் சிங்களத்திற்கு தமிழர்களுக்கு வேண்டியதை கொடுக்குமாறு சர்வதேசம் பரிந்துரை செய்யுமே தவிர வற்புறுத்தாது. இது 2009க்கு பின்னர் கண்டு களித்த அனுபவங்கள். எனவே.... இன்றைய ஆட்சியாளர்களுடன் சமரச பேச்சுக்கள் பேசி ஏதாவது பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர சண்டித்தனங்கள் எக்காலத்திலும் எடுபடாது. ****
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு! வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிபத் பத்திரங்களை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, வெளிநாட்டு பிரஜைக்கு ஒரு மாத காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு முன்பு 2,000 ரூபாவாக இருந்த கட்டணம் ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மேல் மற்றும் இரண்டு மாதங்கள் வரை சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் 21,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் மற்றும் 6 மாதங்கள் வரை சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் 30,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கும் மேலாகவும் 12 மாதங்கள் வரையிலும் ஒரு வெளிநாட்டு பிரஜைக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கான கட்டணம் 45,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, வெளிநாட்டுப் பிரஜைக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் 15,000 ரூபாவாகவும். மேலும், சாரதி அனுமதிப் பத்திரம் தொலைவடைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ அதன் நகலை வழங்குவதற்கான கட்டணம் 15,000 ரூபாவாகும். மேலும், இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது அதற்கு சமமான உரிமத்தை வைத்திருக்கும் இலங்கைப் பிரஜைக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான கட்டணம் 3,300 ரூபாவில் இருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது அதற்கு சமமான உரிமத்தை வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு, புதிய அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான கட்டணம் 15,000 ரூபாவிலிருந்து 60,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453330
2 months 3 weeks ago
A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்: யாழில் வரலாற்று சம்பவம். இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில், உயிரியல் பாடத்தை எழுதிய 21 மாணவர்களின் முதலாம் பகுதிக்கான (பல்தேர்வு வினா) விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக அனுப்பப்படாமல் தவறவிடப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. நெல்லியடியின் பிரபல பாடசாலையொன்றில் உள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் உயிரியல் பாடத்தின் பல்தேர்வு வினாப் பரீட்சை நடத்தப்பட்டது. 21 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி, முறைப்படி விடைத்தாள்களைக் கையளித்துள்ளனர். இந்த விடைத்தாள்கள் அன்றைய தினமே உரிய பாதுகாப்புகளுடன் திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பரீட்சை நிலையத்தில் கடமையாற்றியவர்களின் கவனக்குறைவு காரணமாக, அவை உடனடியாக அனுப்பப்படவில்லை. மூன்று நாட்களின் பின்னர் சென்று பார்த்தபோதே, காகிதாதிகளுடன் சேர்த்து அவை கட்டப்பட்டு, அனுப்பப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. தவறு நிகழ்ந்ததால், தற்போது அந்த விடைத்தாள்களை திருத்தல் பணிகளுக்காக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சையில், குறிப்பாக உயிரியல் போன்ற பாடங்களில், ஒரு சில புள்ளிகள் கூட மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நிலையில், தொடர்புடைய 21 மாணவர்களும் பெருமளவில் புள்ளிகளை இழக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் இத்தனை ஆண்டுகால கல்வி வாழ்க்கையையும் அர்த்தமற்றதாக மாற்றியுள்ளதுடன், மாணவர்களை உச்சக்கட்ட மன அழுத்தத்துக்குள்ளும் தள்ளியுள்ளது. இந்த விடயம் கல்வித் திணைக்களங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட உடனேயே, அந்தப் பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றியவர்கள் அங்கிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கவனக்குறைவாக செயற்பட்டவர்களுக்கு எதிராக திணைக்கள ரீதியான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1453370
2 months 3 weeks ago
நான் யாழ் நண்பர்களிமே முடி வெட்டுவது வழமை. நான் கட்டரில் இருந்த காலத்தில் அங்கு வந்து சொந்தமாக சலூன் போட்டு அதை இன்னும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கினறார்கள். இவர்கள் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்கள் என நம்புகின்றேன். கொழும்பில் கூட நிறைய இடங்களில் இவர்கள்தான் முன்னனி சலூன்காரர்கள். சிங்களவர்கள் வந்து காத்திருந்து முடிவெட்டி செல்வார்கள். இராணுவம் நடத்துகின்ற சலூனுக்கு தமிழர்கள் ஏன் செல்கின்றார்கள்? இந்த செய்தியின்படி சிங்களவர்கள் தமிழர்களின் இந்த வியாபாரத்தை பிடிக்க நினக்கின்றார்களா?
2 months 3 weeks ago
சோகமான செய்தி. இனியாவது ஆனந்த சுதாகரனின் வயது வந்த பிள்ளைகளை பராமரிப்பு இன்றி தனியே விடாமல், தந்தையை விடுதலை செய்து... பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
2 months 3 weeks ago
அப்படியா சந்தோஷப்படுகினம் ....புதுசா அல்லோ இருக்கு பக்கத்துவீட்டுக்காரனுக்கு புள்ளைபெத்தவைகள் எண்டு பைத்தியன் செருப்பை P யில் தோச்சுஅடிச்சதில் காசனுப்புற ஆண்டிகளும் பேய்க்கடுப்பில் இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்
2 months 3 weeks ago
புலம்பெயர் தமிழர்கள் என்றால் அர்ச்சுனாவின் பாராளுமன்ற பேச்சை இரசித்து சந்தோசபடுபவர்களாக இருக்கின்றனர். இறங்குங்கோ நீங்கள் தான் சரி 😂
2 months 3 weeks ago
அது மட்டுமல்ல இந்தியர்கள் பிளைட் பிடித்து வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து கஷ்டபட்டு அமெரிக்கா செல்கின்றனர். விசாவுக்கு கட்டுபாடுகள் ட்ரம் விதித்த போது இந்தியர்கள் கதறி அழுதார்கள்
2 months 3 weeks ago
இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை! நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றான செமெரு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதுடன், 170 மலையேறுபவர்களை வியாழக்கிழமை (20) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை புதன்கிழமை 10 முறை வெடித்து, பாரிய சாம்பல் புகைகளை வான் நோக்கி வெளியிட்டது. பாறையின் சரிவுகளில் 13 கிலோ மீற்றர் வரை எரிமலைக் குழம்புகள் வழிந்தோடியதைத் தொடர்ந்து எச்சரிக்கை நிலை மிக உயர்ந்த அளவில் பராமரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், கிழக்கு ஜாவாவின் மீட்பு நிறுவனம் வெளியேற்றத்திற்கு உதவ நூற்றுக் கணக்கான பணியாளர்களை அனுப்பியது. எரிமலைக்கு அருகில் வசிக்கும் 956 பேர் ஏற்கனவே பாடசாலைகள், மசூதிகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 3,676 மீற்றர் உயரமுள்ள செமெரு எரிமலை, இந்தோனேசியாவில் உள்ள சுமார் 130 செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றாகும். இது இறுதியாக 2021 டிசம்பர் மாதம் வெடித்தது, இதன்போது குறைந்தது 51 பேர் உயிரிழந்துடன், அருகிலுள்ள கிராமங்கள் சாம்பலால் மூடப்பட்டிருந்தன. https://athavannews.com/2025/1453381
2 months 3 weeks ago
நைஜீரியாவில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல். நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு எதிரான தாக்குதல்கள், கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதில், சில குழுக்கள் அங்குள்ள வெளிநாட்டினரையும், பாடசாலைப் பிள்ளைகளையும் கடத்தி பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கெப்பி மாநிலத்தின் உயர்நிலை பாடசாலை விடுதியில் இருந்து (17) அதிகாலையில் சுமார் 25 மாணவிகளை ஆயுதம் ஏந்திய குழுவொன்று கடத்தி சென்றுள்ளது. இச்சமயம் பாடசாலை மீது தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள் அங்குள்ள பாதுகாவலரை சுட்டுக்கொன்றுள்ளனர். இக்கடத்தலுக்கு நைஜீரியாவில் செயல்படும் போகோ ஹராம் உள்ளிட்ட எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த நைஜீரிய பாதுகாப்புப் படையினர் அருகிலுள்ள காடுகள் உள்ளிட்ட பதுங்குமிடங்களில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1453360
2 months 3 weeks ago
அவசரமாக புத்தரை பலிகொடுத்து விளம்பரம் செய்த அரசியல் செய்யும் பேரணி. பாவம் இவர் தன்வாயாலேயே அகப்பட்டுக்கொண்டார்.
2 months 3 weeks ago
என்னை விட்டு விடுங்கள். நான் சொன்னது என்ன? இவர்கள் செய்வதுதான் என்னவோ? இன்பம் துன்பம் கடந்த நிலையில் எனது போதனைகள் இருந்தன. கடவுளாக என்னை ஏற்கச் சொல்லவில்லையே? எனது பெயரால் ஏனிந்தக் கொடுமைகள்? அன்பைப் போதித்த என்னை இப்படி அவமதிப்பது சரிதானா? மனதை பக்குவப்படுத்தச் சொன்னேன். என்னை வைத்து இனவாதக் கொடுமைகளா? தமிழர் நிலங்களைக் கைப்பற்ற எனது பெயரில் சிலை வைப்பா? நானோ ஆசைகளைத் துறந்தேன் ஆனால் என்னை சொல்லி சொல்லியே தமிழினத்தை அழிக்க நினைக்கிறார்களே மனங்களை பண்படுத்தச் சொன்னேன் தமிழரின் உரிமைகளை பறிக்க என்னை பயன்படுத்துகிறார்களே. இவர்களா என்னைப் பின்பற்றுகிறார்கள்? உயிர்களிடத்தில் அன்பு காட்டத்தானே சொன்னேன். என் போதனைகள் வழி நடப்பதாகச் சொல்பவர்கள் அடாவடித்தனமாக தமிழர் நிலங்களை பறிக்கிறார்களே/ காலம் காலமாமாக எனது பெயரால் தானே தமிழினப் படுகொலைகளைத் தொடர்கிறார்கள். இனி எனது பெயரால் உங்கள் இனவாதக் கொடுமைகளைத் தொடர்ந்திட வேண்டாம் என்னை விட்டு விடுங்கள். மந்தாகினி
2 months 3 weeks ago
இனப்பிரச்சினைக்குத் தீர்வு அடுத்த ஆண்டில் கிட்டும்! தமிழரசுக் கட்சியிடம் ஜனாதிபதி அநுர உறுதி; அரசியற்கைதிகள் தொடர்பில் அவதானிப்பாராம் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்த வருடம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளர் மற்றும் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுபினர்கள் கொண்ட குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டதுடன், அதற்கான நடவடிக்கை அடுத்த வருடத்தில் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதியால் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியன அரசாங்கம் புதவிக்கு வந்து ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசங்கம் தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பிலும் தமிழழசுக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இதன்போது, அந்த வாக்குறுதிகள் கணிசமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மாகாணத் தேர்தல் உள்ளிட்ட மிகுதி விடயங்கள் விரைவில் செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுர கூறியுள்ளார். அத்துடன் மாகாணத் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் முறைமை தீர்மானிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டியுள்ளார். அரசியற் கைதிகளின் விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலர் சுமந்திரன் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். தேசிய மக்கள் சகதியின் தேர்தல் விஞ்ஞாபனத் அரசியற் கைதிகள் என்ற சொற்தொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால், அமைச்சர்கள் சிலர் அரசியற் கைதிகளே இல்லை என நாடாளுமன்றத்தில் கூறியுள்ளனர் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். அத்துடன், அரசியற் கைதிகளின் விடயத்தில் விரைவாக கோரிக்கையையும் தமிழரசுக் கட்சி முன்வைத்துள்ளது. இதன்போது. இந்த விடயத்தில் அவதானம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் திருகோணமலையில் புத்தர் சிலைவைக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் தமிழரசுக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அங்கு எந்தக் காலத்திலும் புத்தர் சிலை இருக்கவில்லை. ஒரு விகாரை பக்கத்தில் இருந்திருக்கின்றது. அது சம்பந்தப்பட்ட ஒரு சின்னக் கட்டடம் அருகில் இருந்துள்ளது. அதைக் குளிர்பானம் விற்பனை செய்யும் நிலையமாக மாற்றினார்கள். அது அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடம். அதனை அகற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவு இருந்தபோது, அதனை அகற்றாமல் தடுப்பதற்காக புத்தர் சிலை புதிதாகக் கொண்டு போய் வைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, இது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என்று தமிழரசுக் கட்சி ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. திரியாயில் இரண்டே இரண்டு பெளத்த குடும்பங்களுக்காக இரண்டு விகாரைகள் கட்டப்படுகின்றன. குச்சவெளி பிரதேசசெயலகத்தில் 38 விகாரைகள் புதிதாகக்கட்டப்படுகின்றன. பௌத்தர்கள் வாழும் இடத்தில், அவர்களுடைய வழிபாட்டுக்காக விகாரைகள் கட்டப்படுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது ஆனால் ஓர் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கட்டுவதற்காக அப்படிச்செய்வது இனங்களுக்கு இடையில் எந்தவித நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் ஜனாதிபதியிடம் தமிழரசுக் கட்சி சுட்டிக்காட்டியது. அந்தக் கருத்துக்களையும் ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழர்சுக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். https://newuthayan.com/article/இனப்பிரச்சினைக்குத்_தீர்வு_அடுத்த_ஆண்டில்_கிட்டும்!
2 months 3 weeks ago
விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகள் – 21 மாணவர்களின் எதிர்காலம் “?” adminNovember 20, 2025 நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகளினால் யாழ்ப்பாணத்தில் 21 மாணவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர பரீட்சையில் உயிரியல் பாடத்தின் முதலாம் பகுதி விடைத்தாள் அதிகாரிகளின் கவனக் குறைவால் திருத்தல் பணிக்காக அனுப்பி வைக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரியல் பாடத்தில் 21 மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் , அவற்றினை ஒன்றாக கட்டி , ஏனைய காகித தாள்களுடன், சேர்த்து வைத்துள்ளனர். பின்னர் இரண்டாம் பகுதி விடைத்தாள்களை பெற்று , அவற்றினையும் ஒன்றாக சேர்ந்து கட்டிய பின்னர் , முதலாம் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி விடைத்தாள்களை திருத்தல் பணிக்காக அனுப்ப வேண்டிய வேளை , முதலாம் பகுதி விடைத்தாள்களை மறந்து , இரண்டாம் பகுதி விடைத்தாள்களை மாத்திரம் திருத்தல் பணிக்காக கையளித்துள்ளனர். மூன்று நாட்களின் பின்னர் , பரீட்சை மண்டபத்தில் காணப்பட்ட , காகித கட்டுக்களை மீள அடுக்கிய போதே , அதற்குள் உயிரியல் பாட விடைத்தாள்கள் காணப்பட்டமையை கண்டுள்ளனர். அவற்றினை மூன்று நாட்களின் பின்னர் திருத்தல் பணிக்காக அனுப்பிய போது , அதனை அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர். இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட கல்வி திணைக்கள அதிகாரிகள் , அன்றைய தினம் பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றிய அனைவரையும் அங்கிருந்து நீக்கி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 21 மாணவர்களுக்கும் அடுத்த கட்டம் என்ன தீர்வினை வழங்குவது என்பது தொடர்பில் பரீட்சை திணைக்களமே முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தவறினால் , எமது பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகி விட்டதே இதற்கு ஒரு நல்ல தீர்வினை வழங்க வேண்டும், என பெற்றோர் கோரியுள்ளனர். https://globaltamilnews.net/2025/222857/
2 months 3 weeks ago
அன்பையும் அமைதியையும் போதிக்க வேண்டியவர்கள், நாட்டில் வன்முறையை தூண்டுகிறார்கள், அதற்கு அடிபணிந்தார் ஜனாதிபதி. நாங்கள் மஹிந்தவின் சேனை, அவருக்காக காவி தரித்தவர்கள் என்கிறார் ஒரு பிக்கு. அப்படியானால் அவர் பௌத்த பிக்கு அல்ல, மஹிந்தவின் அடிமை. பாதாள போதைப்பொருள் கடத்துபவனெல்லாம் மஹிந்தவின் பாதுகாப்பு படை, மகா சங்கம். நாட்டில் வன்முறையைத்தூண்டும் பிக்குகளை கைது செய்யுங்கள், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் இனவாதிகளையும் அரசியல் வாதிகளையும் வெளியில் கொண்டு வாருங்கள், பௌத்த சங்கத்தை தூய்மைப்படுத்துங்கள், சட்டம் யாவருக்கும் சமமாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். பௌத்தத்திற்கு முன்னுரிமை என்றால்; அது பிக்குகளுக்கல்லவா? அதனாற்தான் அவர்கள் எல்லா ஒழுக்கக்கேடுகளிலும் முன்னிற்கிறார்கள். இவர்கள் எதை போதிப்பார்கள்? நீங்கள் வழ வழ என்று பேசிக்கொண்டிருக்கும் போது அரசியலை நம்பி சுகம் கண்டவர்கள் உங்களுக்கு முன் பலம் பெற்றுவிடுவார்கள். முதலில் குற்றவாளிகளை கைது செய்யுங்கள், அம்புகளை கைது செய்து காலத்தை விரையமாக்கும் ஒவ்வொரு வினாடியும் எதிரி தன்னை பாதுகாத்துக்கொண்டு பலமடைகிறான். தங்களை சுற்றி மக்களை அரணாக வைத்திருக்கிறார்கள், தமக்கு வரும் ஆபத்தை மக்களை கொண்டு முறியடிப்பதற்காக.
2 months 3 weeks ago
வடக்கில் 12 இடங்களில் இராணுவத்தினரின் சிகை அலங்கரிப்பு நிலையம்! adminNovember 20, 2025 வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 12 இடங்களில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையத்தினை நடாத்தி வருமானம் ஈட்டி வருவதாக வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. வடமாகாணத்திற்குட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடாத்தப்பட்டு வருகின்றது என அமைச்சர் பிமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவித்திருந்த விடயம் தொடர்பில் வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கடும் கண்டனத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், குறிப்பாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை தொண்டமானாறு வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் சிகை அலங்கரிப்பு நிலையம் இராணுவத்தால் நடாத்தப்பட்டு வருவதுடன். வவுனியாவில் பம்பைமடு இராணுவ முகாம், வவுனியா சிறைச்சாலைக்கு முன், இரட்டை பெரியகுளம் இராணுவ முகாம் மற்றும் பரிச்சங்குளம் இராணுவ முகாமிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் விசுவமடு புன்னைநீராவியடியிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களம் இணைந்த கட்டளைத் தலைமையகத்திலும், முல்லைத்தீவில் முருகண்டி கால்நடை பயிற்சி கல்லூரியடி இராணுவ முகாம், முருகண்டி எரிபொருள் நிரப்பு நிலையம் அருகாமையுள்ள இராணுவ முகாம், அக்கராயன் முருகண்டி விஷேட படையணி இராணுவ முகாம் மற்றும் கோப்பாபுலவு கொண்டமடு வீதி 59 ம் படைப்பிரிவினுள் மூன்று சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடாத்தப்பட்டு வருவதுடன் மன்னார் மாவட்டத்தில் கள்ளியடி இலுப்பைக்கடவை மற்றும் திருக்கேதீச்சரம் முள்ளிப்பள்ளத்திலும் இராணுவத்தினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் இன்றுவரை நடாத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடாத்துவதால் சிகை அலங்கரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும் குறித்த நிலையங்களை மூடுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/222838/
2 months 3 weeks ago
கடமைகளை பொறுப்பேற்றார்! adminNovember 20, 2025 வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் காவற்துறை மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன இன்றையதினம் வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவற்துறை அதிபராக இருந்த திலக் தனபால வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவற்துறை அதிபராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய சிரேஸ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வில் மாவட்ட பிரதிப் காவற்துறை மா அதிபர், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட காவற்துறை உயர் அதிகாரிகள், காவற்துறை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன இதற்கு முன்னர் காவற்துறை தலைமையகம் மற்றும் வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் பதவிகளில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/222847/
2 months 3 weeks ago
தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்! adminNovember 20, 2025 தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர். ஆனந்தசுதாகரின் மனைவி 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார். இதனால் அநாதரவாக நிர்க்கதியாகநின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா அம்மா (வயது 75) நோயுற்ற நிலையில், கடந்த சில தினங்களாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். “தகப்பன் வந்தால் பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு போயிடுவன் இவங்களும் விடுறாங்களில்ல என்னவாம் சொல்லுறாங்க .. ” என நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் , தனது உறவினர்களிடம் கேட்டவாறு இருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்னர். ஆனந்தசுதாகரனின் மனைவி உயிரிழந்த நிலையில் , இறுதி சடங்கில் கலந்து கொள்ள சிறைச்சாலை வாகனத்தில் ஆனந்த சுதாகரன் அழைத்து வரப்பட்டு , மீண்டும் சிறைக்கு அழைத்து செல்ல தயாரான போது அவரது மகளும் அப்பாவுடன் செல்ல போகிறேன் என கூறி சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அதனை அடுத்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொது மன்னிப்பில் ஆனந்தசுதாகரனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் இன்று 07 வருடங்கள் கடந்தும் மூன்றாவது ஜனாதிபதி பதிவுக்கு வந்த நிலையிலும் ஆனந்தசுதாகரன் விடுதலை இன்றி சிறையிலையே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/222844/
Checked
Thu, 02/12/2026 - 11:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed