புதிய பதிவுகள்2

அமெரிக்காவின் அவலம்

2 months 3 weeks ago
எப்படியாவது வெளிநாடு சென்றால் போதும் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு எவ்வாறு புரிய வைப்பது அண்ணை?! வங்கியில் முகாமையாளராக இருந்தவர் குடும்பமாக கனடா சென்று இலங்கையில் உள்ள சொத்துகளை விற்று வாழ்வதை கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. வெளிநாட்டில் இருப்போர் அங்குள்ள நிலைமைகளை எடுத்து சொன்னால் தாங்கள் அங்கு வந்து முன்னேறிவிடுவோம் என பொறாமைப்படுவதாக நினைக்கிறார்கள்! இங்க இருந்தும் கேள்விப்படும் செய்திகளை விளங்கப்படுத்தினாலும் யாரும் கேட்பதாக இல்லை! இருந்தாலும் விக்கிரமாதித்தன் போல சொல்லுவோம். சமீபத்தில் கோடி ரூபா கொடுத்து பிரான்ஸ் சென்றவர் தாக்குப்பிடிக்க முடியாது ஓராண்டுக்குள் ஊருக்கே திரும்ப வந்த கதையும் இருக்கே!

19 வயதின்கீழ் ஆண்களுக்கான உலகக் கிண்ணம் - அட்டவணை வெளியீடு

2 months 3 weeks ago
நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் 19 வயதின்கீழ் ஆண்களுக்கான உலகக் கிண்ணம் : சி குழுவில் இலங்கை, அட்டவணை வெளியீடு 19 Nov, 2025 | 07:41 PM (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 16ஆவது அத்தியாயம் இணை வரவேற்பு நாடுகளான ஸிம்பாப்வே, நமிபியா ஆகியவற்றில் நடத்தப்படவுள்ளது. இந்த சுற்றுப் போட்டியில் சற்று இலகுவான சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 6ஆம் திகதிவரை நடைபெறும். போட்டியில் பங்குபற்றும் அணிகள் ஸிம்பாப்வே, நமிபியா நாடுகளை 2026 ஜனவரி 8ஆம் திகதி சென்றடையும். தொடர்ந்து 9ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதிவரை பயிற்சிப் போட்டிகள் நடைபெறும். அதிக தடவைகள் சம்பியனான இந்தியா (5), 2020இல் சம்பியனான பங்களாதேஷ், ஐக்கிய அமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் ஏ குழுவில் மோதும். இணை வரவேற்பு நாடான ஸிம்பாப்வே, 2 தடகைகள் சம்பியனான பாகிஸ்தான், ஒரு தடவை சம்பியனான இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் பி குழுவில் இடம்பெறுகின்றன. நடப்பு சம்பியனும் 4 தடவைகள் சம்பியனானதுமான அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான், இலங்கை ஆகிய அணிகள் சி குழுவில் ஒன்றை ஒன்று எதிர்த்தாடும். தன்ஸானியா, தலா ஒரு தடவை சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் டி குழுவில் விளையாடும். சி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது முதலாவது போட்டியில் ஜப்பானை 2024 ஜனவரி 17ஆம் திகதி எதிர்த்தாடும். தொடர்ந்து அயர்லாந்தை 19ஆம் திகதியும் அவுஸ்திரேலியாவை 23ஆம் திகதியும் இலங்கை சந்திக்கும். இக் குழுவுக்கான லீக் போட்டிகள் யாவும் விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இதனைவிட ஹராரே விளையாட்டுக் கழக மைதானம், ஹராரே டக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானம், ஹராரே குவீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானம், நமிபியா விண்ட்ஹோக் HP ஓவல் மைதானம் ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறும். இந்த நான்கு குழுக்களிலும் மொத்தமாக 24 லீக் போட்டிகள் ஜனவரி 15இலிருந்து 24வரை நடைபெறும். லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் 12 அணிகள் இரண்டு குழுக்களாக சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாடும். சுப்பர் சிக்ஸ் போட்டிகள் ஜனவரி 26இலிருந்து 31வரை நடைபெறும். சுப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் குறுக்கு முறையிலான அரை இறுதிகளில் விளையாடும். முதலாவது அரை இறுதிப் போட்டி பெப்ரவரி 3ஆம் திகதியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி பெப்ரவரி 4ஆம் திகதியும் நடைபெறும். அரை இறுதிகளில் வெற்றிபெறும் அணிகள் ஹராரேயில் பெப்ரவரி 6ஆம் திகதி 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். அரை இறுதிப் போட்டிகளுக்கும் இறுதிப் போட்டிக்கும் மேலதிக தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/230840

அமெரிக்காவின் அவலம்

2 months 3 weeks ago
ஏராளனுக்கு இவை தெரிந்தே இருக்குமென நம்புகிறேன். ஊரில் இருப்போருக்கு பெரும்பாலானோருக்கு தற்போது நிலைமை விளங்கியிருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், போன ஆண்டு இறுதியில் ஒரு நிகழ்வில் ஒருவரைச் சந்தித்த போது அப்படியல்ல என்று புரிந்தது. இலங்கையில் வங்கியில் ஒரு நல்ல வேலையில் இருந்த ஒருவர், அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்திருந்தார். எப்படி வந்தார் என்று நான் கேட்கவில்லை, ஆனால் குடும்பத்தோடு வந்திருந்தார். வேலை கிடைக்கவில்லை, மருத்துவக் காப்புறுதி இல்லை. நேரடியாக வங்கித் துறையில் வேலை கிடைத்து விடும் என்ற தவறான புரிதலில் வந்தாரோ தெரியவில்லை. மிகவும் கஷ்டப் பட்டார், என்ன செய்தார் என்று தெரியவில்லை.

ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி

2 months 3 weeks ago
கடந்த காலங்களில் சுமந்திரனும் தமிழரசுக் கட்சியும் இதைக் கோரிக்கையாக வைத்த ஆதாரங்களை இங்கே முன் வைத்தால், என்ன செய்து விடப் போகிறீர்கள்? வழமை போலவே நைசாக கடையை மூடி விட்டுப் போய் விடுவீர்கள்😂. பின் அடுத்த படத்தைக் கண்டதும் வந்து ஏதோ அலட்டுவீர்கள்! ஒவ்வொரு முறையும் ஒன்றைச் சொல்வீர்கள், அதற்கு படங்கள் இணைத்துக் கூட ஆதாரங்கள் தந்தால் "எஸ்" ஆவதைத் தவிர நீங்கள் ஒன்றும் உருப்படியாக விமர்சனம் வைப்பதில்லை. இதை வாசகர்கள் கவனிக்க வேண்டுமென்பதற்காகவே இங்கே அழைத்தேன்!

நைஜீரியாவில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல்.

2 months 3 weeks ago
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 மாணவிகள்! - பயங்கரவாத கும்பலிடமிருந்து இரு மாணவிகள் தப்பியோட்டம் 20 Nov, 2025 | 01:07 PM நைஜீரியாவில் மாணவிகளுக்கான விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த பயங்கரவாத கும்பலால் 25 மாணவிகள் துப்பாக்கிமுனையில் கடத்திக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், 2 மாணவிகள் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிச் சென்று பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரிடம் தஞ்சமடைந்த மாணவியரில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதையடுத்து, அவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமேற்கு நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள மாணவிகளுக்கான பள்ளி விடுதியொன்றில் கடந்த திங்கட்கிழமை (17) அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிக் கும்பலொன்று அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் விடுதியிலிருந்த 25 மாணவிகளை துப்பாக்கிமுனையில் மிரட்டி, கடத்திக் கொண்டுசென்றுள்ளது. பயங்கரவாதிகள் மாணவிகளை கொண்டுசெல்ல முற்பட்ட வேளையில், அவர்களை தடுத்து மாணவிகளை காப்பாற்ற முயன்ற விடுதி நிர்வாகி மற்றும் காவலாளியை அந்த கும்பல் சுட்டுக் கொன்றதாக தெரவிக்கப்படுகிறது. அதனையடுத்து, கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க நைஜீரியா அரசாங்கம் இராணுவத்தை களமிறக்கியதைத் தொடர்ந்து, இராணுவத்தினர் மாணவிகளை உயிருடன் மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கடத்தல் கும்பலிடமிருந்து இரண்டு மாணவிகள் தப்பிச் சென்று பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளனர். கடத்தல்காரர்கள் மாணவிகளை புதர்கள் நிரம்பிய விவசாய நிலங்கள் கொண்ட வழியினை கடந்து சென்றபோது இந்த மாணவிகள் இருவரும் தப்பி ஓடியதாகவும், அவ்வாறு தப்பி ஓடும்போது ஒரு மாணவிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அந்த மாணவிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தி, அவர்களிடம் தகவல்களைப் பெற்று, பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் ஏனைய மாணவிகளை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/230879

பாம்பன் மீனவர் வலையில் 112 கிலோ எடையுடைய மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியது!

2 months 3 weeks ago
ஆம், பாரை மீன், ஏனெனில் பரந்து பட்ட அதன் உருவஅமைப்பு. பாறை மீன் - நேரடியாக மொழி பெயர்த்தால் - stone fish - இது மிகவும் விடம் உள்ள மீன், பாறையோடு பாறையாக பாறை தன்மை உள்ள கடலில், கடற்கரையில் மறைந்த்து இருப்பது. (இந்த மீன்கள் ஈரலிப்பு உள்ள இடத்தில் நீண்ட நேரம் இருக்க கூடியவை) அதனால், பாறை த்தன்மை உள்ள கடற்கரையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அதன் முள் குத்தும் போது ஊசியினால் மருந்த்து ஏற்றுவது போல விஷத்தை ஏற்றும் இதன் விளைவுகள் - இறப்பு, அல்லது அங்கம் (அல்லது உடல் பகுதி) அகற்ற படவேண்டிய நிலை பொதுவாக. அருமையாகவே, இவை தவிர்க்கப்படுவது.

'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' - திடீரென முடிவெடுத்த சீமான்? பின்னணி என்ன?

2 months 3 weeks ago
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டுக்குப் பிறகு விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துவந்த சீமான், இனி விஜய் மீதான விமர்சனங்களை குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்கள் உட்கட்சி விவரம் அறிந்த சிலர். இந்த முடிவின் பின்னணி என்ன? 2024 பிப்ரவரியில் த.வெ.க-வை தொடங்கினார் விஜய். அப்போது ஆரத்தழுவி வரவேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து விஜய்யின் நடவடிக்கைகளை வரவேற்று பேசிவந்தார். 2024 அக்டோபரில் நடந்த த.வெ.க-வின் முதல் மாநாட்டில் `நா.த.க-வை நட்பு சக்தியாக விஜய் முன்நிறுத்துவார்’ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீமானை மறைமுகமாக விமர்சித்து அதிர்ச்சி கொடுத்தார் விஜய். சீமான், விஜய் 2024 நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் இதற்கு எதிர்வினையாற்றிய சீமான், "திராவிடம் வேறு, தமிழ்த் தேசியம் வேறு. தமிழர்களுக்குத் திராவிடம் அயலமை. இரண்டும் ஒன்று எனக் கூறுவது அடிப்படை தவறு. இது கொள்கை அல்ல… கூமுட்டை. அழுகிய கூமுட்டை. இது நடுநிலை அல்ல… கொடுநிலை. கொடும் சிறையிலிருந்து ரத்தம் சிந்தி வந்தவன் நான். சத்தமா பேசுகிறேனா? ஆமாம், சரக்கு இருக்கு, கருத்து இருக்கு. அதனால்தான் சத்தமா பேசுறேன்” என விளாசினார். இதிலிருந்து தொடங்கிய நா.த.க – த.வெ.க வார்த்தை போர், கரூர் சம்பவத்தின்போது உச்சத்தைத் தொட்டது. நம்மிடம் பேசிய நா.த.க கொள்கை பரப்புச் செயலாளர்கள் “நா.த.க-வின் இளைஞர் வாக்குகளையும், அ.தி.மு.க-வின் தி.மு.க எதிர்ப்பு வாக்குகளையும் குறிவைத்தே வியூகம் அமைத்தார் ஜான் ஆரோக்கியசாமி. ஆகையால் விஜய்யை இளைஞர்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கடுமையாக விமர்சித்தோம். அதில் நாங்கள் வெற்றிப் பெற்றதாகவும் நினைக்கிறேன். களச் செயல்பாடுகள் இன்றி கரூர் விவகாரத்துக்கு பின் தவெக பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க, பா.ஜ.க கூட்டணிகள்மீது கவனத்தை திருப்பி அவர்களை டார்கெட் செய்வதே நம் வேலை என சீமான் முடிவு செய்துள்ளார்.” என்றனர். சீமான் இந்த முடிவை எடுக்க சில சம்பவங்களும் இருக்கின்றன எனப் பேசத் தொடங்கினார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள் சிலர், "சென்னையில் முத்துராமலிங்க தேவர் நினைவு பொதுக்கூட்டமும், திருவாரூரில் நடந்த தண்ணீர் மாநாட்டு பொதுக்கூட்டத்திலும் சீமான் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். அதே நேரத்தில் விஜய்மீதும் லேசான விமர்சனங்களை வைத்தார். ஆனால் கூட்டத்தின் நோக்கத்தை விட ‘விஜயை சாடிய சீமான்’ எனும் பகுதி மட்டும் வைரலாக்கப்பட்டது, அதனை அண்ணன் சீமான் விரும்பவில்லை. களச் செயல்பாடுகளற்ற கட்சியை தொடர்ந்து பேசிக் கொண்டே அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டாம்; தி.மு.க பாணியில் ‘கில்லிங் இன் சைலன்ஸ்’ வியூகத்திலேயே எதிர்க்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்.” என்றனர். இதன்பின்னே சில அரசியல் கணக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள் ஒருசிலர் "விஜயின் அரசியலை அம்பலப்படுத்தினால் அவரது அபிமானிகள் நா.த.க-வுக்கு திரும்புவார்கள் என்பது நா.த.க-வின் கணக்கு. ஆனால் கடுமையான விமர்சனங்களும் இரண்டாம் கட்ட நிர்வாகிகளின் மோசமான குற்றச்சாட்டுகளும் விஜய் ரசிகர்களைத் கொதிப்படைய செய்துவிட்டன. ஒருவேளை விஜய் அரசியலை விட்டே போனாலும், ‘சீமானுக்கு வாக்களிக்கக் கூடாது’ என்ற மனநிலைக்கு விஜய் ரசிகர்கள் வந்துவிட்டனர் என்பதை நா.த.கவினர் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். இதை சரிகட்டவே விஜய் விமர்சனத்தை குறைக்க சீமான் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது கடுமையாக விமர்சித்த சீமான், ரஜினி ‘கட்சி தொடங்கவில்லை’ என அறிவித்தபின், ‘அரசியல் ரீதியாக வைத்த விமர்சனங்கள் ரஜினியையோ அவரது ரசிகர்களையோ காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்’ என்று கூறினார். அதேபாணியில் விஜய் ரசிகர்களை கையாளும் வியூகமாகக்கூட இருக்கலாம்.” என்றனர் 'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' – திடீரென முடிவெடுத்த சீமான்… பின்னணி என்ன? | Seeman Calls Off Attacks on TVK Vijay - Vikatan

ராமேசுவரம் - மண்டபம் முகாமில் இலங்கை தமிழர் கொலை!

2 months 3 weeks ago
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். ராமேசுவரம் அருகே மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர் கவிராஜ் (27). முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழர்கள் மலைச்செல்வம் (30), மணிகண்டன் (31). நண்பர்களான மூவரும் மண்டபம் முகாம் பகுதிக்குள் நேற்று இரவு மது அருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கவிராஜின் தலையில் சுத்தியலால் மலைச்செல்வன் தாக்கினார். படுகாயமடைந்த கவிராஜ், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கவிராஜ் உயிரிழந்தார். இது தொடா்பாக மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மலைச்செல்வனை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே, மண்டபம் முகாமுக்குள் வெளிநபர்கள் பலர் அடிக்கடி வந்து செல்வதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், அதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி முகாமில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். ராமேசுவரம் - மண்டபம் முகாமில் இலங்கை தமிழர் கொலை!

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு!

2 months 3 weeks ago
2017 இல் இலங்கை சுற்றுலா சென்ற போது காலி திருகோணமலை போன்ற இடங்களில் வெள்ளைகளில் பலர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓடுகிறார்கள். இவர்களிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இருக்கிறதா எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். பொலிசாரும் சேர்ந்தே இந்த குற்றத்துக்கு ஒத்துப் போயிருக்கிறார்கள்?

கடற்றொழில் அமைச்சருக்கு தீர்வுகாண திராணியில்லை; வடமராட்சி மீனவர்கள் விசனம்!

2 months 3 weeks ago
யாழ்ப்பாணம் 20 மணி நேரம் முன் கடற்றொழில் அமைச்சருக்கு தீர்வுகாண திராணியில்லை; வடமராட்சி மீனவர்கள் விசனம்! வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைக்குக் கடற்றொழில் அமைச்சரால் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் முன்னரை விட இப்போதே வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன என்று வடமராட்சி மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்; இதுவரை காலமும் இல்லாத வகையில் மீனவ சமூகம் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. எங்களது பிரச்சினைகள் தொடர்பில் ஒரு தடவையேனும் கடற்றொழில் அமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடவில்லை. தேர்தலில் வாக்குப் பெறுவதற்காக மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என்று கூறியவர்கள் அதன் பின்னர் இன்று வரை திரும்பியும் பார்க்கவில்லை. வடக்குக் கடலில் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டல் அதிகரித்துள்ளது. நாளாந்தம் நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப்படகுகள் படையெடுத்து வருகின்றன. இதற்குப் பொறுப்பான கடற்றொழில் அமைச்சரே பாரா முகமாக உள்ளபோது கடற்படையினரையோ, அரசாங்கத்தையோ குறைசொல்ல முடியாது. எனவே அவரை மாற்றி மீனவர் பிரச்சினை தொடர்பில் தெரிந்த ஒருவரை அமைச்சராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்- என்றனர். கடற்றொழில் அமைச்சருக்கு தீர்வுகாண திராணியில்லை; வடமராட்சி மீனவர்கள் விசனம்!

போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கைப்பற்றல்!

2 months 3 weeks ago
20 Nov, 2025 | 11:12 AM தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த படகில் இருந்த 6 இலங்கையர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 15 பொதிகள் படகிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (20) காலை தங்காலை துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கைப்பற்றல்! | Virakesari.lk

வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ரவிகரன் எடுத்துரைப்பு - விரைவில் முல்லைத்தீவுக்கு அனுர விஜயம்!

2 months 3 weeks ago
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழிலாளர்களைச் நேரில் சந்தித்து கலந்துரையாடுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார். இந்நிலையில் ரவிகரனின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, விரைவில் முல்லைத்தீவிற்கு வருகைதந்து கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகக் கேட்டறியவுள்ளதாகப் பதிலளித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பில் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர், கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதற்கமைய தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், வடகிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள், துயிலும் இல்லங்களை விடுவிப்புச் செய்தல், வட, கிழக்கில் அதிகரித்துள்ள படையினரின் பிரசன்னம், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம், வடக்கு, கிழக்கில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசியிருந்தோம். அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் இடம்பெறும் அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் மிக மோசமாக கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன். அதேவேளை வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடற்றொழிலுடன் தொடர்புடைய மாவட்டங்களாகக் காணப்படுகின்றன. இந்நிலையில் அங்கு அதிகளவில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதையும் அதனால் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தேன். அதேவேளை வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் பாராளுமன்றிற்கு வருகைதந்து பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து இந்த சட்டவிரோத கடற்றொழிலால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்திப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்த விடயத்தினையும் இதன்போது ஜனதிபதியிடம் தெரியப்படுத்தினேன். அத்தோடு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், சம்மேளனம், கடற்றொழிலாளர்கள் சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரால் கடிதங்கள் மூலம் என்னிடம் கோரிக்கை விடுத்ததையும், அந்தக் கோரிக்கைக் கடிதங்களுடன் ஏற்கனவே என்னால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பிலும் நினைவுபடுத்தினேன். இவ்வாறாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதியைச் சந்திக்க விரும்புகின்றனர் என்ற தகவலையும் தெரியப்படுத்தினேன். எனவே சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மீனவர்களின் கோரிக்கைகளுக்கு அமைய, அவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அக்குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன். எமது கட்சியினரும் இதுதொடர்பில் பேசியிருந்தார்கள். இந்நிலையில் கூடிய விரைவில் தாம் முல்லைத்தீவிற்கு வருகைதந்து அந்த மீனவர்களுடன் நேரடியாக பேசுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியிருந்தார். இதுதவிர வன இலாகா, வனஜீவராசிகள் ஆகிய திணைக்களங்கள் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆக்கிரமித்த இடங்களைப் பற்றியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்ட படையினரது முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன் என்றார். வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ரவிகரன் எடுத்துரைப்பு - விரைவில் முல்லைத்தீவுக்கு அனுர விஜயம்! | Virakesari.lk

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

2 months 3 weeks ago
தமிழ் கடவுள்/காவலாளிகள் இல்லாமல் போனபிறகு, திருகோணமலையில்.. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் திணைக்கள கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது சிறீமலை நீலியம்மன் சைவ கோயில் முழுமையாக சிதைக்கப்பட்டு அங்கு 'பாசன பப்பாத ராஜமஹா' என்கின்ற விகாரையை உருவாக்கி இருக்கின்றார்கள் குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் அழிக்கப்பட்டு அதே இடத்தில "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் விகாரை நிர்மாணித்து இருக்கின்றார்கள் அரிசிமலையில் தமிழ் நிலங்களில் 'ஆசிரி கந்த புராண ராஜமஹா விகாரை' (Asiri Kanda Purana Rajamaha Viharaya) கட்டப்பட்டு இருக்கின்றது. தென்னமரவடி கந்தசாமி மலை வழிபாடு தடைசெய்யப்பட்டு அங்கு பௌத்த கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. 64ஆம் கட்டை (பச்சனூர் மலை) விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டுப்பட்டு வருகின்றது. பெரியகுளம் பகுதி தமிழர் நிலங்களில் பொரலுகந்த ராஜமகா விகாரை கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. ராஜவந்தான் மலை கோயில் விக்கிரகங்கள் தோண்டியெறிப்பட்டு அங்கு விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. மூதூர் சூடைக்­குடா மத்­த­ளம்­மலை சூழலில் பௌத்த தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக கூறுகின்றார்கள். இந்தவகையில் திருகோணமலையில் 74ற்கு மேற்பட்ட பிரதேசங்களை பௌத்த மதத்திற்குரிய தொல்லியல் இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள். இதுபோதாதென்று திருக்கோணேஸ்வரம் கோயில் சூழல் முழுமையாக சிங்கள மயப்படுத்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, இந்த கோயில் கோகண்ண விகாரை மீதே கட்டப்பட்டுள்ளது என உரிமை கோருகின்றார்கள். இங்கு வியாபாரம் செய்வதற்காக இரத்தினபுரியிலிருந்து சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள். திரியாய், மற்றும் தென்னமரவடியில் பல ஆயிரக்கணக்கான வயல் காணிகளில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதாக விவசாயம் தடைசெய்யப்பட்டு இருக்கின்றது. திரியாய் கிராமத்தில் மட்டும் 1,000 ஏக்கர் வயலில் விவசாயம்செய்ய விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் 2,712 ஏக்கர் காணியை அரச திணைக்களங்கள் உரிமை கோரி இருக்கின்றது. இதில் மூன்று புதிய பௌத்த விகாரைகளும் ஒரு பழைய பௌத்த விகாரையும் அமைக்கப்பட்டு அவற்றுக்கு 809 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல கங்குவேலி கிராமத்தில் 500ஏக்கர் வயல் நிலங்கள் சிங்களவரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இங்கு கங்குவேலி குளத்தை சூழ சிங்களவர்கள் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் 2,500 ஏக்கர் நிலப்பகுதி பானமுர திலகவன்ச என்கிற பிக்குவிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேபோல குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் 11 இடங்களில் 340.33 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் 7 பௌத்த அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இங்கு 30க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளும் வணக்கஸ்தலங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.ஏற்கனவே இந்த பகுதியில் 23இடங்களில் பௌத்த கட்டுமானங்கள் முழுமை பெற்று இருக்கின்றன. மேற்படி பானமுர திலகவன்ச என்கிற பிக்கு அரிசிமலை என்கிற பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கின்றார். இங்கு 500 ஏக்கர் காணி அரசாங்கத்தால் பௌத்த பிக்குகளுக்கு இங்கு வழங்கப்பட்டு இருந்தது. அதேபோன்று அரிசிமலையுள்ள 500 ஏக்கர் காட்டு பகுதியும் பௌத்த தொல்லியலுக்குரிய இடமாக பிரகடனம் செய்யப்பட்டு இருக்கின்றது. தென்னைமரவாடி திரியாய் ,குரும்பைசிட்டு, புல்மோட்டை போன்ற இடங்களில் உள்ள 11இடங்களில் தமிழ்பேசும் மக்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான நிலங்கள் அரச நிலங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தென்னைமரவாடி தமிழ் கிராமங்களில் மாலனூர் (12 ஆம் கட்டை ) மற்றும் ஏறமாடு (10 ஆம் கட்டை ) இரண்டு சிங்கள குடியேற்ற திட்டங்கள் உருவாக்கபபட்டு இருக்கின்றன இவ்வாறு கன்னியா, குச்சவெளி , கும்புறுப்பிட்டி, சாம்பல்தீவு, சம்பூர், மத்தளமலை, கல்லடி மலைநீலியம்மன், இலங்கைத்துறை முகத்துவாரம் என பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை மாவட்டம் சீரழிந்து வருகின்றது. மேற்படி அவலங்களை அரசியல்ரீதியாக வலுமையாக எதிர்க்கொள்ள கூடிய தமிழ் ஆளுமைகளை அரசியல் மற்றும் சிவில் பொதுவெளியில் அடையாளம் காணாமல் திருகோணமலையை யாராலும் காப்பாற்ற முடியாது. Tharmalingam Kamaraj ·
Checked
Thu, 02/12/2026 - 11:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed