2 months 3 weeks ago
ஆழ்ந்த இரங்கல்கள்
2 months 3 weeks ago
எல்லை தாண்டும் மீனவர்களுக்காக முடடைக் கண்ணீர்விடும் பத்திரிகையாளர் மீனவர்களை எல்லை தாண்டி போகாமல் மீன் பிடிக்க சொல்லலாமில்ல.
2 months 3 weeks ago
சிறி இவர் எப்படி தமிழர் என்று அடித்துக் கூறுகிறீர்கள்? பெயரைப் போடாதபடியால் சந்தேகமாக உள்ளது.
2 months 3 weeks ago
இந்தக் கட்டுரை எழுதியவரின் பெயர், விபரங்கள் இல்லாமல் சமூக ஊடகங்களில் வரும் கட்டுரைகள் போன்ற ஒன்றாக இருந்தால், இதை மிக இலகுவாக புறக்கணித்து விட்டு போய்விடலாம். ஆனால் பொறுப்பான ஒரு இடத்தில் இருக்கும், பொதுவெளியில் இயங்கும் அபிலாஷ் போன்ற ஒருவர் இவ்வளவு மேலோட்டமாக, பிழையான அனுமானங்கள் மற்றும் தகவல்களுடன், அவசரகதியில் எழுதியிருப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல என்றே தோன்றுகின்றது. என்னுடைய சொந்த அனுபவங்கள் மற்றும் நான் அறிந்தவற்றையும் அடிப்படையாகக் கொண்டு, தேவையான தரவுகளையும் தேடி எடுத்து, அமெரிக்காவின் நிலையையும், இந்தியாவின் நிலையையும் எந்தப் பக்கமும் சாராமல் எழுத ஆரம்பித்தால் அது ஒரு சின்ன புத்தகமாகவே முடியும். நான் 95ம் ஆண்டு இங்கு படிக்க வந்தேன். மூன்று மாதங்களின் பின்னர் மனைவியும் வந்தார். அடுத்த அடுத்த மாதங்களில் எங்களின் முதலாவது குழந்தை உண்டாகினார். படிக்கும் போது அமெரிக்க பல்கலைக்கழகமே முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டிருந்தது. அத்துடன் மாதம் மாதம் ஒரு தொகையை செலவுக்கு கொடுத்தார்கள். அந்தத் தொகை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேயே இருந்தது. இந்த விடயம் அப்போது எனக்குத் தெரியாது ஏனென்றால் அவர்கள் கொடுத்த தொகையில் அரைவாசிக்கு மேல் மீதமாகிக் கொண்டிருந்தது. மகப்பேற்று மருத்துவரிடம் போன பொழுது, அவர் எங்களிடம் அமெரிக்க அரசின் வருமானம் குறைந்தவர்களுக்கான சமூகநலத் திட்டங்கள் பற்றி சொல்லிவிட்டு, எங்களை அதில் சேரச் சொன்னார். நாங்களும் சேர்ந்தோம். மாதம் மாதம் உணவு முத்திரைகள் கொடுத்தார்கள். இது நடந்தது 95, 96 மற்றும் 97ம் ஆண்டுகளில். பணவீக்கம், வேலையின்மை போன்ற காரணங்களால் இது இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூகநலத் திட்டம் அல்ல. நாங்கள் அன்று அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டிருந்தது எங்கள் மூவருக்கும் தேவைக்கும் அதிகமாகவே இருந்தது. இங்கு மத்திய அரசின் செலவுகள் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். மத்திய அரசின் செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அல்லது கடன் முடிவடையும் தறுவாயில், புதிய நிதி அல்லது கடன் எல்லை பெரும்பான்மையான பிரநிதிகளால் அங்கீகரிக்கப்படவேண்டும். சில சமயங்களில் பிரேரிக்கப்படும் புதிய நிதி அல்லது கடன் எல்லைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைப்பதில்லை. அந்த நாட்களில் மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிய நிதி வழங்குவது தடைப்படும். அரசின் சமூகநலத் திட்டங்களுக்கும் இங்கிருந்தே நிதி போகின்றது. ஆனாலும் நிதி வரப் போவதில்லையே என்று இங்குள்ள நிர்வாகத் துறைகள் இந்த சமூகநலத் திட்டங்களை என்றும் கைவிடுவதில்லை. 'இனிமேல் பூனைக்கறி தான் சாப்பிட வேண்டும்............' என்று சொல்வது நிலைமையின் அவசரத்தை அழுத்திச் சொல்லும் ஒரு முறையே அல்லாமல் அது நிஜம் அல்ல. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டது உண்மையிலேயே நடந்தது. இந்தியாவில் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும் உண்மையே. ஏழ்மையை ஒரு குற்றமாக இங்கு அமெரிக்காவில் எவரும் பார்ப்பதில்லை. ஒருவர் ஏழையா, இல்லையா என்று கூட இங்கு தெரிவதில்லை. அரசிடம் உதவி பெறுவதற்கு பலர் தயங்குகின்றார்கள், வெட்கப்படுகின்றார்கள் என்பது உண்மை தான். அது அவர்களின் தன்முனைப்பை, சுயமரியாதையை இழக்கும் ஒரு செயல் என்று அவர்கள் நினைப்பதால் மட்டுமே. அந்த நினைப்பே ஏழ்மையும், இல்லாமையும் தங்களின் தலைவிதி என்று அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை கடந்து முன்னேறும் திறனை அவர்களுக்கு கொடுக்கின்றது. இந்தியாவில் பிறப்பு என்றும், தலைவிதி என்றும் கிடைத்த வாழ்வை ஏற்றுக்கொண்டு அப்படியே தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களை அபிலாஷ் போய்ப் பார்க்கவேண்டும். இன்றிருப்பதை விட 2008ம் ஆண்டில் இங்கு அமெரிக்காவில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்க வாகனங்கள் தயாரிக்கும் நகரான Detroit மிகவும் நலிவடைந்தது. வாகனங்கள் தயாரிக்கும் மூன்று பெரிய அமெரிக்க நிறுவனங்களில் இருந்தும் ஏராளமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். ஒரு செய்தித் துணுக்கில் ஒரு குடும்பம் வேலை இழந்து, அரசின் சமூகநலத் திட்டத்தில் போய் உதவி பெறும் நிலையை எண்ணி கண்கலங்கி நின்றார்கள். இப்படி அவர்கள் கேட்டது வேலையை மட்டுமே, அரசின் உதவியை அல்ல. பின்னர் அமெரிக்க அரசு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பல பில்லியன் டாலர்களை கடனாகக் கொடுத்தது. புதிய வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. அமெரிக்கர்கள் அவற்றை வாங்கினார்கள். இது ஒரு அலையாக இங்கு நடந்தது. இந்தியர்களோ அல்லது வேறு நாட்டவர்களோ அன்று அமெரிக்க வாகனங்களை வாங்குவது இல்லை என்றே சொல்லலாம். அந்த நிறுவனங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தினார்கள். அமெரிக்காவும் அதன் மக்களும் மீண்டும் மீண்டும் மீண்டு வருவதற்கான பிரதான காரணம் இதுவே. 100 நாட்கள் வேலைத் திட்டம் பற்றி அறிய வயநாடு போகத் தேவையில்லை. தமிழ்நாட்டிலேயே அது பரவலாக இருக்கின்றது. அடிக்கடி ஊர்மக்கள் நிகழ்த்தும் போராட்டங்கள் செய்திகளில் வருகின்றது. திட்டத்தின் பிரகாரம் வேலை கொடுப்பதில்லை என்றும், கூலி கொடுப்பதில்லை என்றும் போராடுகின்றார்கள். இந்த திட்டத்தால் இதுவரை உற்பத்தி, சேவைகள் அல்லது எந்த மக்களினதும் வாழ்க்கைத்தரமாவது அதிகரித்திருக்கின்றதா. இதுவும் இன்னொரு இலவச உதவி வழங்கும் தேர்தல்கால வாக்குறுதியாகவே இருக்கின்றது. வேலையில் இருந்து கொண்டே ஏழையாகவும், பரதேசியாகவும் இருக்கும் நிலை அமெரிக்காவில் இருக்கின்றது என்கின்றார். வசந்தபாலனின் 'அங்காடித் தெரு' மற்றும் இவை போன்ற படங்கள் சினிமா அல்ல, அவை நிஜம் என்ற உண்மையை காணத் தவறிவிட்டார். அமெரிக்கா பாலும், தேனும் ஓடும் ஒரு தேசம் அல்ல. உலகில் அப்படி ஒரு தேசமுமே கிடையாது. ஆனால் இந்தியா போன்ற சமூகநீதி மறுக்கப்பட்ட, தேர்தல் காலங்களில் அன்றி வேறு எப்போதும் எவ்வகையிலும் மனிதர்களாகவே கருதப்படாத ஏழை எளிய மக்கள் படும் அவலங்களுக்கு பல மடங்குகள் குறைந்த அவலமே அமெரிக்காவிலும், உலகின் பல நாடுகளிலும் இருக்கின்றது. இந்த மாதம் ஜெயமோகன் அமெரிக்கா வந்தார். அவர் இங்கு வருவது இது ஐந்தாவது தடவை என்று நினைக்கின்றேன். பல வகைகளில் உலகின் சிறந்த தேசம் அமெரிக்காவே என்று ஜெயமோகன் ஒவ்வொரு தடவையும் எழுதுகின்றார். அபிலாஷ் தான் ஜெயமோகனுக்கு எழுத்திலும், சிந்தனையிலும் எதிர்முனை என்பார். இரண்டு முனைகளுக்கு நடுவில் அமெரிக்கா மாட்டுப்பட்டுவிட்டது போல....................🤣.
2 months 3 weeks ago
எனக்கும்… ஶ்ரீலங்காவுக்கு “கொலிடே” போற ஐடியா இருக்கு. 😂 எதற்கும் @satan ஐ கேட்டுப் பார்ப்போம். 🤣
2 months 3 weeks ago
அஸ்கு, புஸ்கு…😂 விசாரிப்பவர் தன்னை வெளிப்படுத்த வேணும். பிறகு நான் எப்படி கொலிடே போறது?😂 தக்க காரணமும் காட்ட வேண்டி வரலாம். பொதுநல காரணத்தை காட்டி ஊடகம், யூடியூப்பர் யாராவதுகேட்கலாம். லெட்டர் வேணும் எண்டால் அடிச்சுத்தரலாம்😂.
2 months 3 weeks ago
நீங்கள், லண்டனில் தானே வசிக்கின்றீர்கள். ஒருக்கால்… City University ஐ, அணுகி பார்க்கிறது. 😂 லக்ஸ்மன் நாமல் ராஜபக்ச… ஒறிஜினலா, டூப்ளிகேட்டா என்று தெரிந்து விடும். 🤣
2 months 3 weeks ago
இது சம்பந்தமாக எவரேனும் City University ஐ அணுகி உள்ளனரா? இதுவரை காலமும் நாமலின் போட்டி பரீட்சை பிந்தைய பரீட்சைகள் சகலதையிம் ஜீ எல் பீரிஸ் எழுதி கொடுத்ததாக அல்லவா சொல்வார்கள்.
2 months 3 weeks ago
அண்மையில் நல்ல அரச வேலையில் இருக்கும் எனது உறவினர் ஒருவர் இங்கே தன்னை கூப்பிட்டு விடுமாறு தனது மனைவியின் தமையனை கேட்டிருந்தார். அவர் எனது குடும்ப உறுப்பினர் என்பதால் என்னிடமும் ஒரு பகுதி உதவியை நாடினார். கூப்பிட்டு விடலாம் ஆனால் அவருக்கு இங்கே வந்தால் இவை தான் வேலை என்பதை மட்டும் சொல்லி விட்டு கூப்பிட ஏற்பாடு செய் என்றேன். வேலையை சொன்னதும் வரவில்லை என்று விட்டார்.
2 months 3 weeks ago
நாட்டில்... சிங்களவனுக்கு ஒரு சட்டம், தமிழனுக்கு ஒரு சட்டம். இவர்... தமிழர் என்ற படியால் கைது செய்திருக்கின்றார்கள். சிங்களவன் என்றால்... பதவி உயர்வு கொடுத்திருப்பார்கள்.
2 months 3 weeks ago
இண்டைக்கு திருமலை நாளைக்கு மட்டகளப்பு, யாழ்ப்பாணம். கருண காட்டவே மாட்டாத தெய்வங்களுக்குகான காவடிகளை இறக்கி வைத்து விட்டு, தன் பலம், பலவீனம் அறிந்து, ஒரு கூர்ப்பில் முன்னேறிய உயிரி கூட்டம் போல் ஒன்றிணைந்து செயல்படாதவரை…. இந்த இனத்துக்கு உய்வே இல்லை.
2 months 3 weeks ago
புதிதாக தேவையில்லை. ஒரு காலத்தில் மிக முக்கிய பெளத்த நகரம் காஞ்சிபுரம். அதே போல் இலங்கையின் முதல் பெளத்தன், மன்னர் தேவநம்பிய தீசனும் ஒரு தமிழனே. தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன். இந்த 6 திருத்தத்தை ஏற்காது கூண்டொட்டோடு பதவி விலகினர் கூட்டணியினர். ஆனால் புலிகளின் பினாமிகான ததேகூ இதை ஏற்று கொண்டது. புலிகள் காலத்திலேயே.
2 months 3 weeks ago
சண்டித்தனம் செய்யாமல் ஒன்று பட்டு நகரலாம். தீர்வை அவர்கள்தான் தரவேண்டும். தனி நாடு, பிரிந்து போகும் சமஸ்டி எண்டு மூச்சும் காட்ட கூடாது. நீங்கள் சொல்லும் தீர்வை தரவேண்டிய ஏது நிலையை அவர்களுக்கு நாம் உருவாக்க வேண்டும். ஆனால் இதை செய்ய என்னால் (அக்னியாலும்?😂) முடியாது. ஏன்னா… பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி😂. அங்கே பா ஊ க்குரிய சிறப்புரிமை பாராளமன்றத்துள் இருக்கு. இங்கே பேசினால் அடுத்த முறை நோ வீசா😂
2 months 3 weeks ago
ஸ்டார்ட் மீசிக்😂 70 வருடம் ஏதுவும் தராதோரிடம் என்னத்தை பேசி…என்னத்த …? இந்த பம்மாத்தை தானே சுமனும் செய்கிறார்.
2 months 3 weeks ago
இதுதான்... ஆபத்தான பாறை மீன். நாம் சாப்பிடும் பாரை மீனை, பாறை மீன் என்று குழப்பி அடிக்கும் பத்திரிக்கையாளர்களை நினைக்க கடும் கோபம் ஏற்படுகின்றது. அடி முட்டாளுகள். இது...நாம் சாப்பிடும் பாரை மீன்.
2 months 3 weeks ago
நெடுங்கேணி பொலிஸ் சார்ஜன் கைது! 20 Nov, 2025 | 05:10 PM வவுனியா நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சார்ஜன் ஒருவர் இலஞ்சம் பெற முயன்ற போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் புதன்கிழமை (19) கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த பொலிஸ் சார்ஜன் ஒரு முறைப்பாடு தொடர்பாக நபர் ஒருவரிடம் இலஞ்சம் கோருவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்றைய தினம் நேடுங்கேணி பகுதிக்கு வருகைதந்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் சார்ஜன் இலஞ்சப்பணத்தின் ஒரு பகுதியை பெற முற்ப்பட்ட போது அவரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் இன்று வியாழக்கிழமை (20) வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230939
2 months 3 weeks ago
பட மூலாதாரம், MATHIVANAN படக்குறிப்பு, இலங்கையில் பேருந்தில் ஏற்றப்படும் கைதான இந்திய மீனவர்கள் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை கடற்றொழில் அமைச்சு கூறுகிறது. இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள், கடற்றொழில் திணைக்களம் மற்றும் போலீஸாரின் உதவியுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், இந்திய மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் மீன்பிடிப் படகுகளை, இலங்கை அரசாங்கம், அரசுடமையாக்கி வருகின்றது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 127க்கும் அதிகமான படகுகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மன்னார் பகுதிகளில் இந்தப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ''கைப்பற்றப்பட்ட படகுகள் சில கடலில் மூழ்கடிக்கப்படவுள்ளன. ஏனைய படகுகள் இரும்புக்கு விற்பனை செய்யப்படவுள்ளன'' என இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அதோடு, இந்த ஆண்டில் இதுவரையான காலம் வரை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 40 இந்திய படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணித்த 167 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் கைதாகும் மீனவர்களுக்கு விலங்கிட்டு, தடுத்து வைப்பு பட மூலாதாரம், MATHIVANAN படக்குறிப்பு, இந்திய மீனவர்கள் அழைத்துச் செல்லப்படுவதை வீடியோ எடுக்க விடாமல் தடுக்கும் சிறைச்சாலை அதிகாரிகள் இலங்கை கடற்பரப்பில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் நாகை மாவட்ட மீனவர்கள் நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து வரப்பட்டமை மற்றும் மருத்துவமனையில் தளபாடங்களில் விலங்கிட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது 'மனைவி இல்லை, மரியாதை போய்விட்டது'- ரூ.100 லஞ்ச வழக்கில் 39 ஆண்டுக்குப் பின் விடுவிக்கப்பட்டவரின் கதை தினசரி காலையில் மலம் கழிக்க வேண்டுமா? மலச்சிக்கலுக்கான காரணங்களும் தீர்வும் பாகிஸ்தான் சென்று மதம் மாறி காதலரை கரம் பிடித்த இந்திய பெண்ணை அந்நாட்டு காவல்துறை தேடுவது ஏன்? கரும்பு வயலில் பிறந்து காட்டை பார்த்திராத சிறுத்தைகளால் இவர்களுக்கு என்ன அச்சுறுத்தல்? பிபிசி கள ஆய்வு End of அதிகம் படிக்கப்பட்டது கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் கடந்த 17ஆம் தேதி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களை நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்ல இரவு வேளை வரை ஆகியுள்ளது. இதன்போது, இந்தச் செய்தியை சேகரிப்பதற்காக நீதிமன்றத்தின் நுழைவாயிலுக்கு வெளியில் செய்தியாளர்கள் காத்திருந்தனர். அவர்களில் ஒருவரே ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன். கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட மீனவர்களை சிறைச்சாலையின் பேருந்துக்கு மீள அழைத்து வந்து ஏற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதை வீடியோ பதிவு செய்ய ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன் முயற்சி செய்துள்ளார். இதை அவதானித்த சிறைச்சாலை அதிகாரி, ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணனின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதை அவதானிக்க முடிந்தது. பட மூலாதாரம், MATHIVANAN படக்குறிப்பு, தான் சிறைச்சாலை அதிகாரிகளால் மிரட்டப்பட்டதாகக் கூறுகிறார் ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன் இந்திய மீனவர்கள் அழைத்துச் செல்லப்படுவதை வீடியோ பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் சிறைச்சாலை அதிகாரியின் செயல்பாடு காணப்பட்டதாக ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்து, இவர்களை சிறைச்சாலை பேருந்தில் ஏற்றும்போது, அதை வீடியோ பதிவு செய்தேன். வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் வந்து, வீடியோ எடுக்க இயலாது என்றார், நான் மீடியா எனக் கூறினேன். 'இல்லை இல்லை எடுக்க இயலாது' எனச் சொல்லி கேமராவுடன் சேர்த்து என்னையும் தள்ளிவிட்டார். நான் ரெகோட் ஆவதை நிறுத்தவில்லை. நான் கொஞ்சம் பின்னால் வந்து, ரெகோட் போட்டுக்கொண்டு நிற்க, போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் வந்து வீடியோ எடுக்க வேண்டாம் எனச் சொல்லி மறித்தார்" என்று தெரிவித்தார். அப்போது, "யார் எடுக்கக்கூடாது எனச் சொன்னது என்று நான் கேட்டேன். அப்போது 'நான் தான் சொன்னேன்' என்று சொல்லிக் கொண்டு சிறைச்சாலை அதிகாரி வந்தார். நீதிமன்றத்திற்கு வெளியில் எடுப்பதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் தடை செய்ய வேண்டாம் என்று கூறினேன். அவர் 'இல்லை எடுக்க முடியாது' எனச் சொன்னார். நீதிமன்றத்திற்குள்ளும் நான் வரவில்லை. சிறைச்சாலைக்குள்ளும் நான் வரவில்லை. நான் வீதியில் இருந்தே எடுக்கின்றேன் என சொன்னேன். வழமையாக நாங்கள் முறைப்படியே வீடியோக்களை எடுப்போம் எனச் சொன்னேன். இல்லை முடியாது. நான் உங்களைக் கைது செய்வேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என சொன்னார். நான் பரவாயில்லை என்றேன்'' என ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன் கூறுகிறார். பட மூலாதாரம், RAMALINGAM CHANDRASEGARAN படக்குறிப்பு, இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ''நாங்கள் பல வழக்குகள் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்குச் சென்றுள்ளோம். இதுவரை யாரும் தடை விதித்தது இல்லை. இப்போது அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது" எனவும் அவர் கூறுகின்றார். இதேவேளை, இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், விலங்கிட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை மாத்திரமன்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் காலில் சங்கிலியிட்டு, அந்த சங்கிலி மருத்துவமனை கட்டிலில் கட்டப்பட்டிருக்கும் விதத்திலான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவும் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் பிபிசி தமிழ் வினவியது. குறித்த விடயம் தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் பதிலளித்தார். சிறைச்சாலை திணைக்களம் கூறுவது என்ன? கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விலங்கிடப்பட்டு, சங்கிலியில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மற்றும் இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் பிபிசி தமிழ், சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்கவிடம் வினவியது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் பதிலளித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் சிறையில் உள்ள இந்திய மீனவர்களின் தற்போதைய நிலை என்ன? இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 31 பேர் தற்போது சிறையில் இருப்பதாக கடற்றொழில் அமைச்சின் ஊடக செயலாளர் க.கிரிஷாந்தன் தெரிவிக்கின்றார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அளித்த தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 40 இந்திய படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணித்த 167 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறாகக் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறைவைக்கப்படுவதுடன், பின்னரான காலத்தில் கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் விடுவிக்கப்படுவதாகக் கூறுகிறார் கிரிஷாந்தன். இந்த நிலையில், எல்லை தாண்டி வரும் மீனவர்கள் எந்த அடிப்படையில் கைது செய்யப்படுவார்கள் என்பது குறித்தும் கடற்றொழில் அமைச்சின் ஊடக செயலாளர் க.கிரிஷாந்தன் பிபிசி தமிழிடம் விவரித்தார். ''படகின் உரிமையாளர், படகோட்டி ஆகியோருக்கு உடனடியாகவே சிறைத் தண்டனை வழங்கப்படும். ஏனைய மீனவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்படும். இரண்டாவது முறை அதே மீனவர் கைது செய்யப்படும் பட்சத்தில் முதல் குற்றத்திற்கும் சேர்த்து சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்." அதோடு, "கைவிரல் அடையாளங்களை எடுத்த பிறகே மீனவர்களை அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைப்போம். அவர்கள் மீண்டும் வரும்போதும் கைவிரல் அடையாளங்கள் எடுக்கப்படும். பொதுவாக மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும். ஒரு குற்றச்சாட்டுக்கு 6 மாதங்கள் என்ற அடிப்படையில் ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, அந்த சிறைத் தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும். இந்த ஐந்து வருட காலத்திற்குள் வந்து மீண்டும் பிடிபடும் பட்சத்தில், பழைய குற்றச்சாட்டு மற்றும் புதிய குற்றச்சாட்டு இரண்டுக்கும் சேர்த்து சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்" என்றும் கிரிஷாந்தன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. எல்லைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு, அவர்களின் உடமைகள் அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு மீண்டும் அறிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj414q8xj59o
2 months 3 weeks ago
தமிழ்நாட்டு திருநெல்வேலி இனிப்பு - திருப்பாகம்
2 months 3 weeks ago
20 Nov, 2025 | 05:55 PM சுற்றுச்சூழலை பேணுவதற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் கொழும்பில் புதிய செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் நடைபெறும் COP30 காலநிலை உச்சி மாநாட்டை முன்னிட்டு இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு, தோட்டப் பராமரிப்பு, பிளாஸ்டி பயன்பாட்டை தவிர்த்தல், கழிவு முகாமைத்துவம் ஆகிய நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கத்தில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரசாயன பொருட்களினால் தாவரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கு இரசாயனம் இல்லாத தாவர பயிர்ச்செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/230944
2 months 3 weeks ago
படம்: என் புருசந்தான் எனக்கு மட்டும்தான் (1989) இசை : இளையராசா
Checked
Thu, 02/12/2026 - 11:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed