புதிய பதிவுகள்2

இந்தியா - தென் ஆபிரிக்கா டெஸ்ட் தொடர்

2 months 3 weeks ago
முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி: டெஸ்ட் சாம்பியன் புள்ளிப் பட்டியல் எவ்வாறு மாறியுள்ளது? பட மூலாதாரம், Getty Images 16 நவம்பர் 2025, 11:06 GMT தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வென்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா டெஸ்ட் போட்டி பவுலர்களுக்கு சாதகமாகவும் பேட்டர்களுக்கு சவாலாகவும் அமைந்தது. போட்டி தொடங்கிய மூன்றாவது நாளிலேயே முடிவுற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வெற்றிக்கு தென் ஆப்ரிக்க அணி 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் 35 ஓவர்களுக்குள்ளாகவே இந்திய அணி சுருண்டுவிட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த தென் ஆப்ரிக்க அணியின் தெம்பா பவுமாவும், அந்த அணியின் பவுலர் சைமன் ஹார்மரும் தான் இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சார்பாக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே அதிகபட்சமாக 29 ரன்கள் அடித்திருந்தார். முன்னதாக சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் பவுலர்கள் தென் ஆப்ரிக்க அணியை 153 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். ஆட்டத்தை மாற்றிய பவுமாவின் அரைசதம் இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தாலும் மறுமுனையில் பவுமா நிலைத்து ஆடினார். நிதானமாக ஆடி அவர் அரைசதம் அடித்த நிலையில் தென் ஆப்ரிக்க அணியின் ஸ்கோர் 150-ஐ தாண்டியது. அந்த அணியில் பவுமா அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய கோர்பின் போஷ் 25 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க அணி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 124 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்று நாட்களில் 28 விக்கெட்டுகள் கொல்கத்தா டெஸ்ட் போட்டி பேட்டர்களுக்கான சோதனைக் களமாக இருந்தது என்றே சொல்லலாம். ஏனென்றால் இரண்டரை நாட்களில் இந்தப் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. 38 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. (முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது காயமடைந்து வெளியேறிய இந்திய கேப்டன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் ஆட வரவில்லை) இந்தப் போட்டி முழுவதிலும் 220 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. இரண்டு அணிகளுமே ஒரு நாள் முழுக்க பேட்டிங்கில் நிலைத்து ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க அணி முதல் நாளிலேயே 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாளில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கொல்கத்தா டெஸ்ட் போட்டி பேட்டர்களுக்கான சோதனைக் களமாக இருந்தது என்றே சொல்லலாம். இந்திய அணியாலும் ஒரு நாள் முழுக்க களத்தில் நிலைக்க முடியவில்லை. இரண்டாவது நாளில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அன்றே இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட்டுகள இழந்தது. மூன்றாவது நாளில் தென் ஆப்ரிக்க அணி மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் இழந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. முதல் இன்னிங்ஸில் 4 ரன் எடுத்திருந்த போது காயத்தால் வெளியேறிய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடவில்லை. அவர் பேட்டிங் ஆட முடியாத நிலை ஏற்பட்டது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக அமைந்தது. இந்திய சுற்றுப்பயணத்தில் தென் ஆப்ரிக்க 2 டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல் இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளைப் பெற்றுள்ளது, ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்புச் சாம்பியனான தென் ஆப்ரிக்கா இரண்டாவது இடத்திலும் இலங்கை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்கிற கணக்கில் தென் ஆப்ரிக்க அணியை தோற்கடித்திருந்தால் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பு இருந்தது. அதற்கு இனிமேல் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ypn7yvl5do

கருத்து படங்கள்

2 months 3 weeks ago
உறுப்பைப் பார்த்து முஸ்லீம் என்கிறீர்களா? அல்லது சும்மா அடித்து விடுகிறீர்களா? ஆளை அடையாளம் காண காணொளிகளை திரும்ப திரும்ப பார்த்தேன். என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. நீங்க பலே கெட்டிக்காரன்.

தீர்வுக்கு வழி ? கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் நடந்த ஒரு நிகழ்வு - நிலாந்தன்

2 months 3 weeks ago
தீர்வுக்கு வழி என்னவென்றால், டில்கோவின் நாலு பெக் ஒடர் பண்ணி அடிசிட்டு படுக்கிறது மட்டும் தான். இதில் கலந்து கொண்டவர்களில் பலர் அதைத் தான் செய்திருப்பர். தீர்வு கிடைத்த மகிழ்ச்சியுடன் மாலையில் வீட்டுக்கு சென்றிருப்பர்.

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

2 months 3 weeks ago
மாகாணசபைத் தேர்தல் வர இருப்பதால்.... சுமந்திரனுக்கு மாகாணசபை முதல்வர் ஆக விருப்பம் வந்துள்ளது. அதுதான்... அவரால் கலைக்கப் பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மீண்டும் உருவாக்கி, அவர் முதல்வரானவுடன்??? மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை கலைத்து விடுவார்கள். இதைப் போல எத்தனை சுத்துமாத்துக்களை தமிழ் மக்கள் கண்டு விட்டார்கள். இனியும்... சுமந்திரனின் சுத்துமாத்து வார்த்தைகளை நம்பி ஏமாறத் தயார் இல்லை. சுமந்திரனுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை. போய்... வக்கீல் தொழிலை பார்க்கவும்.

தீர்வுக்கு வழி ? கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் நடந்த ஒரு நிகழ்வு - நிலாந்தன்

2 months 3 weeks ago
தீர்வுக்கு வழி ? கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் நடந்த ஒரு நிகழ்வு - நிலாந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. கலாநிதி குருபரனை பணிப்பாளராகக் கொண்ட சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலை யத்தால் அந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டது. இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் நிதி அனுசரணையோடு நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் 230க்கும் குறையாதவர்கள் பங்குபற்றினார்கள். பொதுவாக அது போன்ற நிகழ்வுகளில் அவ்வளவு தொகையினர் பங்குபற்றுவது குறைவு. ஆனால் அன்று மண்டபம் நிறைந்திருந்தது. மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நடந்த அந்த நிகழ்வில், நான்கு அம்சங்கள் இருந்தன. முதலாவது மேற்சொன்ன சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையத்தை அறிமுகப்படுத்துவது. இரண்டாவது, இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கைத் தீவில் இதுவரையிலும் இரண்டு சமூகங்களுக்கு இடையில் எழுதிக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சேகரிக்கும் டிஜிட்டல் தளத்தை அங்கு அறிமுகப்படுத்தியது. மூன்றாவது, மூத்த சட்டச் செயற்பாட்டாளர்,சட்டத்தரணி ரட்ணவேல் அவர்களுடைய உரை. நான்காவது,நான்கு தமிழ்த் தேசிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு. நிகழ்வுக்கு தலைமை தாங்கிய குருபரன் அங்கு கூறியதுபோல தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறான ஒரு சட்டச் செயற்பாட்டு நிறுவனம் உருவாக்கப்படுவது என்பது முக்கியமானது. தேச நிர்மாணத்தின் ஒரு பகுதி அது. தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான நிறுவனங்களை உருவாக்குவது. எவ்வளவுக்கு எவ்வளவு நிறுவன உருவாக்கிகள் ஒரு சமூகத்தில் தோன்றுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த சமூகம் திரட்சியுறும்;நொதிக்கும்; கூர்ப்படையும். அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிற்றல் ஆவணக் காப்பகத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. முதலாவது இனப்பிரச்சினை தொடர்பில் இதுவரை தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் தொகுப்பு.இரண்டாவது பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவற்றோடு தொடர்புடைய வழக்கு ஏடுகளை ஆவணப்படுத்துவது. சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையமும் “நூலகம்” நிறுவனமும் இணைந்து மேற்படி ஆவணங்களைச் சேகரித்து ஆவணப்படுத்தியுள்ள்ளன. இதுவும் தேச நிர்மாணத்தில் ஒரு பகுதிதான். அந்த நிகழ்வில் நூலகம் நிறுவனத்தின் பிரதிநிதியும் உரை நிகழ்த்தினார். அது ஒரு முழுமையான தொகுப்பு இல்லை என்றும் அதில் ஈடுபாடு கொண்டவர்கள் தமது பங்களிபின்மூலம் அதை முழுமைப்படுத்த வேண்டும் என்றும் அங்கு கூறப்பட்டது. 1921ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையிலுமான சுமார் 104ஆண்டு காலப்பகுதியில் தமிழ்த் தரப்பால் முன் வைக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனைகளும் இனப்பிரச்சினையோடு தொடர்புடைய உடன்படிக்கைகளும்,ஆவணங்களும் அங்கே எண்ணிம வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதிக்குரிய அந்த ஆவணங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது ஓர் அடிப்படைக் கேள்வி எழுகிறது. தமிழ் மக்கள் ஏன் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமது அபிலாசைகளை அடைய முடியாமல் இருக்கிறார்கள்? கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் தலைவர்கள் சரியாகவோ பிழையாகவோ பொருத்தமாகவோ,பொருத்தம் இன்றியோ ஏதோ ஒரு தீர்வு முன்மொழிவை முன்வைத்து சிங்களத் தலைவர்களோடு பேசியிருக்கிறார்கள். ஏதோ ஒர் இணக்கத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆவணங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். அதன்மூலம்,தமிழ்மக்கள் இந்தச் சிறிய தீவுக்குள் எப்பொழுதும் ஒரு தேசிய இனமாக ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ்வதற்குத் தயாராக இருந்திருக்கிறார்கள் என்பது அந்த ஆவணங்களைத் தொகுத்து பார்க்கும் பொழுது தோன்றுகிறது. தமிழ்த் தரப்பு தீர்வுக்குத் தயாரில்லை;அது பகல் கனவுகளை தீர்வு மேசையில் வைக்கின்றது; அந்தப் பகல் கனவுகளை அடைவதற்காக முயற்சிக்கின்றது; யதார்த்தமாகச் சிந்திப்பதில்லை; அதைவிட முக்கியமாக தமிழ்த் தரப்பு ஒன்றாக இணைந்து தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைப்பதில்லை…போன்ற பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளுக்கும் அந்த ஆவணத் தொகுப்பில் பதில் உண்டு. தமிழ்மக்கள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கைத் தீவில் இணைந்து வாழும் விருப்பத்தை வெளிப்படுத்தும் விதத்தில் தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயுதப் போராட்ட காலகட்டத்திலும்கூட திம்பு கோட்பாட்டில் தொடங்கி இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை வரையிலும் தமிழ்மக்கள் தீர்வு முன்மொழிவுகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் அந்தத் தீர்வு முன்மொழிவுகளில் பெரும்பாலானவற்றை நிராகரித்தது அல்லது உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டது அல்லது வாக்குறுதிகளை முறித்துக் கொண்டது சிங்களத் தலைவர்கள்தான். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் சில யுத்த நிறுத்தங்களை முறித்ததற்காக தமிழ்த் தரப்பின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படலாம். ஆனால் தமிழ்மக்கள் தீர்வுக்குத் தயாரில்லை அல்லது தமிழ் மக்கள் பேச்சுவார்த்தைகளில் விசுவாசமாக இல்லை அல்லது தமிழ் மக்கள் பகல் கனவுகளை பேச்சுவார்த்தை மேசையில் வைக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முழுவதும் உண்மையானவை அல்ல என்பதனை அந்த ஆவணத் தொகுப்பு எடுத்துக்கூறுகிறது. மேலும் அந்த ஆவணத் தொகுப்புக்கூடாக ஒரு விடயம் துலக்கமாக வெளித் தெரிகிறது. அந்த விடயத்தை அங்கு பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமாரும் சுட்டிக்காட்டினார்.”இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை இணங்க வைப்பதில் கணிசமான தூரத்துக்கு எடுத்துச்சென்ற ஓர் ஆவணம் இந்திய-இலங்கை உடன்படிக்கை” என்று கஜன் சொன்னார். இதுவரையிலுமான இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில், சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே தீர்வு முயற்சி என்பது இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழான பதின்மூன்றாவது திருத்தம்தான். சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் ஒற்றை ஆட்சி பண்பை அது உடைக்கவில்லை என்ற காரணத்தால்தான் அந்த 13ஆவது திருத்தம் அங்கே இணைக்கப்பட்டது என்றும் கஜன் சுட்டிக்காட்டினார். அதாவது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்குள், யாப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே தீர்வு முயற்சி அதுதான். ஆனால் அதுவும் கூட்டாட்சி பண்புடையது அல்ல. இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால்,அந்தத் தீர்வு முயற்சி அதாவது இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு கீழான 13ஆவது திருத்தம் என்பது எத்தகைய ஓர் அரசியல் சூழலில் யாப்புக்குள் இணைக்கப்பட்டது என்பதுதான். ஒருபுறம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம். இன்னொரு புறம் இந்தியப் பேரரசின் ராணுவ அழுத்தம். 13வது திருத்தம் எனப்படுவது ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் விளைவு. அதேசமயம் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னத்தின் பின்னணியில்தான் அதுவும் சாத்தியமாகியது. அதுமட்டுமல்ல அந்தத் தீர்வில் தமிழ்மக்கள் கையெழுத்திடவில்லை. இலங்கையும் இந்தியாவும்தான் கையெழுத்திட்டன. அதாவது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் இனப்பிரச்சினை தொடர்பில் உருவாக்கப்பட்ட தீர்வுகளில் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பின் யாப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரே தீர்வு அதுதான். ஆனால் அதையும் 38ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசாங்கங்கள் அமுல்படுத்தவில்லை மட்டுமல்ல, அந்தத் தீர்வை எப்படி மேலும் தோலிருக்கச் சுளை பிடுங்கலாம் என்றுதான் சிந்தித்துச் செயல்பட்டிருக்கின்றன. அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் கீழ் கடந்த நான்கு தசாப்த காலத்துக்குள் உருவாக்கப்பட்ட ஒரு தீர்வு அது. ஆனால் அந்தத் தீர்வை அதாவது யாப்பின் அந்தப் பகுதியை நிறைவேற்றாமல் விடுவதற்குத்தான் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதுதான் கடந்த சுமார் நான்கு தசாப்த கால வரலாறு. கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் இலங்கைத் தீவில் இனப் பிரச்சினைக்காக எழுதிக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் இரண்டே இரண்டு உடன்படிக்கைகள்தான் ஒப்பீட்டளவில் நீண்டகாலம் நின்று நிலைத்தன. ஒன்று,இந்திய-இலங்கை உடன்படிக்கை.மற்றது, பிரபாகரன்-ரணில் உடன்படிக்கை. இரண்டு உடன்படிக்கைகளிலும் மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இருந்தது. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின்னணியில் இந்திய அமைதிகாக்கும் படை நாட்டுக்குள் இறக்கப்பட்டது. நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளில் ஸ்கண்டிநேவிய யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழு நாட்டுக்குள் நின்றது. இந்த இரண்டையும் தவிர மூன்றாவதாகக் கூறக்கூடியது ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் இதில் ஐநா,அழுத்தத்தைப் பிரயோகிக்கின்ற அல்லது கண்காணிக்கின்ற ஒரு தரப்பாகச் செயற்படவில்லை. அதனால்தான் நிலைமாறு கால நீதியானது சுமந்திரன் கூறுவதுபோல”தோற்றுப்போன பரிசோதனையாக” முடிந்தது. அதைத் தோற்கடித்தது தமிழர்கள் அல்ல, சிங்களத் தரப்புத்தான். எனவே இப்பொழுது ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கிறது. தமிழ் மக்கள் போராடியதால்தான், பிராந்தியப் பேரரசாகிய இந்தியாவின் தலையீட்டினால்தான் பதின்மூன்றாவது திருத்தம்கூட சாத்தியமாகியது. தமிழ் மக்கள் போராடவில்லை என்றால் அதுவும் கிடைத்திருக்காது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோ விருந்தினர் விடுதியில் நடந்த சந்திப்பில் உரை நிகழ்த்திய சித்தார்த்தன் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொன்னார். அனுரவும் உட்பட எந்த ஒரு சிங்களத் தலைவரும் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தர மாட்டார்கள் என்று. குறிப்பாக பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வை முன்வைத்த சந்திரிக்கா 2009க்குப்பின் இந்திய ஊடகம் ஒன்றினால் நேர்காணப்பட்டபோது, என்ன சொன்னார் என்பதனை அவர் சுட்டிக்காட்டினார். பேட்டி கண்டவர் கேட்கின்றார், ”இப்பொழுது உங்களுக்குச் சந்தர்ப்பம் தரப்பட்டால் நீங்கள் முன்பு முன்வைத்த அந்த முன்மொழிவை நிறைவேறுவீர்களா?” என்று. அதற்குச் சந்திரிக்கா கூருகிறார் “Perhaps less”-“பெரும்பாலும் இல்லை”என்ற பொருள்பட.ஏனென்றால் இப்பொழுது விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லை என்பதால் என்றும் கூறியுள்ளார். மேலும் சித்தார்த்தன் ஒரு விடயத்தைச் சொன்னார். நிலைமாறு கால நீதியின் கீழ், புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவதற்காக உழைத்தபோது, உருவாக்கப்பட்ட குழுக்களில் ஒன்றில் அவரும் அங்கம் வகித்தார். அக்காலகட்டத்தில் சம்பந்தர் அடிக்கடி தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்குவார். “அடுத்த தீபாவளிக்குத் தீர்வு அடுத்த வருஷப்பிறப்புக்குத் தீர்வு” என்று சம்பந்தர் அடிக்கடி நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி வந்தார். ஒருமுறை சித்தார்த்தன் இதுதொடர்பாக சம்பந்தரிடம் கேட்டிருக்கிறார். எதற்காக அப்படிக் கூறுகிறீர்கள்? இதில் நாங்களும் சம்பந்தப்பட்டிருப்பதனால் மக்கள் எங்களிடமும் கேட்கிறார்கள், என்று. அதற்கு சம்பந்தர் சொன்னாராம், “இந்த யாப்புருவாக்க முயற்சியில் தமிழ்த் தரப்பின் பிரதிநிதியாக நான் ஈடுபட்டு வருகிறேன். இந்த முயற்சி வெற்றி பெறாது என்று நானே சொன்னால், பிறகு எதற்கு அதில் நான் ஈடுபடுகிறேன் என்று மக்கள் கேட்பார்கள். எனவே நான் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்க வேண்டியுள்ளது” என்ற பொருள்பட. இதைச் சொன்ன சித்தார்த்தன் மேலும் ஒரு விடயத்தைச் சொன்னார், அந்த முயற்சி வெற்றி பெறாது என்பது சம்பந்தருக்கும் தெரியும் என்று. அதாவது சம்பந்தர் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்திருக்கிறார். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், சம்பந்தர் தனது மக்களுக்கு உண்மையைச் சொல்லவில்லை. மூன்றாவது தரப்பின் அழுத்தம் இல்லாமல் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு ஒரு தீர்வை நோக்கி வளையாது என்பதனை புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், 2016இல், மன்னாரில், ஆயர் இல்லத்துக்கு அருகே நடந்த,”தடம் மாறும் தமிழ்த்தேசியம்?”என்ற கருத்தரங்கில், நான் சம்பந்தருக்குச் சுட்டிக்காட்டினேன். அப்பொழுது சம்பந்தர் என்னை நோக்கி, தலையைச் சாய்த்து, மண்டைக்கண்ணால் பார்த்துக்கொண்டு அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னார் “சிங்களத் தலைவர்கள் ஒரு தீர்வைத் தர மாட்டார்கள் என்று கூறுவது வரண்ட வாதம்; வறட்டு வாதம்” என்று. ஆனால் எது வறண்ட வாதம் என்பதனை வரலாறு நிரூபித்தது. தந்தை செல்வா கலையரங்கின் கூரை பதிந்த அறைக்குள் சம்பந்தரின் உடல் தனித்துவிடப்பட்ட இரவில் வரலாறு தான் ஒரு கண்டிப்பான கிழவி என்பதை நிரூபித்தது. எனவே ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், சித்தார்த்தன் கூறுவதுபோல, இப்போதுள்ள அனுரவும் உட்பட எந்த ஒரு சிங்கள தலைவரும் தமிழ் மக்களுக்குத் தாமாக முன்வந்து தீர்வைத் தர மாட்டார்கள் என்பதுதான். கஜேந்திரக்குமார் அங்கே சுட்டிக்காட்டியதுபோல,சிங்கள பௌத்த ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே ஒரு தீர்வு 13ஆ வது திருத்தம்தான். அதுகூட தமிழ்மக்களின் இரத்தத்தால் வரையப்பட்டது; இந்திய பேரரசின் அழுத்தம் இருந்தது. எனவே தமிழ் மக்கள் போராடவில்லை என்றால்,மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லையென்றால் தமிழ் மக்களுக்கு இனியும் தீர்வு கிடைக்காது. இந்த இடத்தில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் கூடிய கட்சிகளும் உட்பட எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இரண்டு முக்கிய கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும். முதலாவது கேள்வி, சமஸ்ரியை அடைவதற்கு தமிழ்க் கட்சிகளின் வழி வரைபடம் என்ன? இந்தக் கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன் விக்னேஸ்வரன் அப்பாவித்தனமாக கேட்டிருந்தார். அவரிடம் அதற்குப் பதில் இல்லை என்பதனால் அப்படிக் கேட்டிருந்தார். இரண்டாவது கேள்வி. மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை என்பதே ஒரு நூற்றாண்டு காலமாக கற்றுக்கொண்ட பாடம். அப்படியென்றால் அந்த மூன்றாவது தரப்பை அணைத்து எடுப்பதற்கு தமிழ் மக்களிடம் உள்ள வழிவரைபடம் என்ன? https://www.nillanthan.com/7931/

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

2 months 3 weeks ago
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? Veeragathy Thanabalasingham on November 14, 2025 Photo, Tamil Guardian அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் உருவாகுவதற்கு அரசியல் நிர்ப்பந்தங்களே காரணம். இலங்கை தமிழரசு கட்சிக்கு அவ்வாறு எத்தகைய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டதோ தெரியவில்லை. மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு அதன் தலைவர்கள் கடந்த வாரம் விருப்பத்தை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. வவுனியா நகரில் நவம்பர் 5ஆம் திகதி தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் சகிதம் உரையாற்றிய பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தங்களது கட்சியின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் அதற்கு இணங்கி வந்தால் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படமுடியும் என்றும் கூறினார். அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டம் மீதான விவாதத்தில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக்குழு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்தும் வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் மத்திய குழு கூட்டத்தில் பிரதானமாக ஆராயப்பட்டது என்று கூறிய சுமந்திரன் முதன்மையான தமிழ் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழரசு கட்சி மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளான தமீழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகியவையும் வேறு சில குழுக்களுமே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாக மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலமாக இயங்கிவருகின்றன. அவற்றின் தலைவர்களை நோக்கியே சுமந்திரன் இந்த அழைப்பை விடுத்திருக்கிறார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுடன் தலைவர் சிவஞானமும் தானும் ஏற்கெனவே கலந்துரையாடியிருப்பதாகவும் தாங்கள் தெரிவித்த நிலைப்பாடுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டால் முன்னரைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறிய சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனும் இது தொடர்பாக பேசலாமா என்று மத்திய குழுவில் ஆராயப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த அழைப்பை உடனடியாகவே வரவேற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் மீண்டும் இணைந்து செயற்படுவதற்கு தமிழரசு கட்சி முன்வைத்திருக்கும் முன்னிபந்தனைகள் எவை என்று தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இரு தரப்பினரும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நிபந்தனைகளை விதிப்பது ஏற்புடைதல்ல என்றும் அவர் கூறினார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பாக இயங்கி வருகிறது. தனியான யாப்பையும் சின்னத்தையும் கொண்டிருக்கும் அந்தக் கூட்டணி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கெனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் அந்தக் கூட்டணி செயற்பட்டு வருகிறது. ஆனால், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாண சபைகள் முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டிருக்கும் நிலைப்பாடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அசௌகரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழரசு கட்சியின் அழைப்பை பிரேமச்சந்திரன் வரவேற்றிருப்பது இரு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வை மேலும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. அதேவேளை, இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைக்கு தமிழரசு கட்சி முன்னிபந்தனைகளை விதிப்பது ஏற்புடையது அல்ல என்று கூறிய பிரேமச்சந்திரன் எதிர்கால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிவித்த கருத்துக்கள் உண்மையில் முன்னிபந்தனைகள் போன்றே அமைந்திருக்கின்றன. முன்னைய கூட்டமைப்பில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் அந்தக் கருத்துக்களை அவர் முன்வைத்திருக்கிறார் என்பது வெளிப்படையானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவோ அல்லது எந்தவிதமான யாப்பையும் கொண்டதாகவோ இருக்கவில்லை. மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்க வேண்டுமானால் அதற்கென்று தனியான யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன் அங்கத்துவ கட்சிகளின் தனித்துவத்தைப் பேணக்கூடியதாக இருக்க வேண்டும். தங்களை முதன்மையான அல்லது தலைமைத்துவ கட்சி என்று தமிழரசு கட்சி அழைத்துக்கொள்வதாக இருந்தாலும் கூட, சகல அங்கத்துவக் கட்சிகளையும் அரவணைத்து மெய்யாகவே புரிந்துணர்வுடன் கூட்டாகச் செயற்படுகின்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் தெரிவித்தார். காலஞ்சென்ற மூத்த தமிழ்த் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையில் 2001ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க் காலத்தில் சுயாதீனமான முடிவுகளை எடுத்துச் செயற்பட முடியவில்லை. அதற்கான காரணம் புரிந்து கொள்ளக்கூடியதே. விடுதலை புலிகள் இயக்கமே இலங்கை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று நாடாளுமன்றத்திலும் வெளியுலகிலும் குரல் கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு இயக்கம் போன்றே கூட்டமைப்பு செயற்பட்டது. உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் பலம் பொருந்திய ஒரு ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கு சம்பந்தன் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் தவறியது குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2010 ஏப்ரல் பொதுத்தேர்தலின்போது கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். 2015 ஆகஸ்ட் பொதுத் தேர்தலின்போது கூட்டமைப்பில் போட்டியிட்ட போதிலும், 2017ஆம் ஆண்டு அதிலிருந்து வெளியேறியது. இரு கட்சிகளும் வெளியேற்றத்துக்கான தங்கள் தரப்பு காரணங்களை முன்வைத்தன என்ற போதிலும், தேர்தல் அரசியலும் அதற்கு ஒருகாரணி. கூட்டமைப்பில் இருந்து புளொட்டும் ரெலோவும் 2022ஆம் ஆண்டு வெளியேறின. உள்ளூராட்சி தேர்தல்கள் கலப்பு தேர்தல் முறையில் நடத்தப்படுவதன் காரணமாக கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் கணிசமான ஆசனங்களைக் கைப்பற்றலாம் என்றும் தேர்தலுக்கு பிறகு உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை கூட்டாக அமைக்க அது வசதியாக இருக்கும் என்றும் தமிழரசு கட்சி முன்வைத்த யோசனையை அவ்விரு கட்சிகளும் ஆட்சேபித்தன. ஆனால், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறவில்லை. இறுதியாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே கடந்த மேமாதத்தில் அந்த தேர்தல்களை நடத்தியது. பல்வேறு அணிகளாகப் பிரிந்து நின்று போட்டியிட்ட தமிழ்க் கட்சிகள் உள்ளூராட்சி நிர்வாகங்களை அமைப்பதில் வடக்கிலும் கிழக்கிலும் எவ்வாறு நடந்துகொண்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தற்போது அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை அடுத்த வருடத்தில் நடத்துமா இல்லையா என்ற கேள்வி எழுந்திருப்பதற்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் செயற்படுவதற்கான விருப்பத்தை தமிழரசு கட்சி வெளிப்படுத்தியிருக்கிறது. சகல தமிழ்க் கட்சிகளையும் இணைத்து செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் சுமந்திரன் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டை முன்வைக்குமா என்ற கேள்வி எழுந்திருப்பதாக கூறியிருக்கிறார். கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்திடம் தமிழரசு கட்சி முன்வைத்த யோசனையை மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு காண்பிக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அந்த யோசனைகள் தொடர்பில் அவர்கள் இணங்கிவந்தால் அதை பொதுநிலைப்பாடாக அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார். சகல தமிழ்க் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது நடைமுறையில் ஒருபோதும் சாத்தியமில்லை. ஆனால், பெரும்பான்மையான கட்சிகளை அரவணைத்து மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவதாக இருந்தாலும் கூட, கடந்த காலத்தில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்த காரணிகள் மீண்டும் தலைகாட்டாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமானதாகும். பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து தமிழரசு கட்சியின் தலைவர்களிடமிருந்து உடனடியாக பிரதிபலிப்பு எதுவும் வரவில்லை. அவர்களும் கடந்த காலத்தின் கூட்டமைப்பு அனுபவங்களை கருத்தில் எடுத்து மீண்டும் அநாவசியமான முரண்பாடுகள் தோன்றாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். மற்றைய தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, தமிழரசு கட்சி மேலாண்மை செலுத்தும் மனோபாவத்துடன் நடந்துகொள்கிறது என்பதே பிரதானமான முறைப்பாடாக இருந்து வந்தது. எது எவ்வாறிருந்தாலும், மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதில் தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வமும் அதற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தரப்பில் இருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நேர்மறையான பிரதிபலிப்பும் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியவை. ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் காலந்தாழ்த்தாமல் விரைவில் தொடங்க வேண்டும். தமிழ்க் கட்சிகள் பல்வேறு அணிகளாகச் சிதறியிருப்பதால் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கான அணுகுமுறைகளைப் பொறுத்தவரை ஒருமித்த நிலைப்பாடுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது என்று தமிழ் மக்கள் நீண்ட நாட்களாகவே கவலையடைந்திருக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்திக்கு அவர்கள் பெருமளவில் வாக்களித்ததற்கான காரணங்களில் அதுவும் ஒன்று. போரின் முடிவுக்குப் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு ஏற்றமுறையில் விவேகமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான அரசியல் அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதில் தமிழ்க் கட்சிகள் அக்கறை காட்டவில்லை என்பது தமிழ் மக்களின் முக்கியமான மனக்குறை. வெறுமனே ஒன்றிணைந்து செயற்படுவது மாத்திரம் போதுமானதல்ல. நீண்டகால அரசியல் இலக்குகளைப் பற்றி மாத்திரம் பேசிக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளை கையாளுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சுமந்திரன் கூறிய தகவல்களின் பிரகாரம் நோக்கும்போது தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்து தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு யோசனையை முன்வைப்பதே மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக செயற்பட வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படை நோக்கம் என்று தெரிகிறது. சகல தமிழ்க் கட்சிகளுமே ஒற்றையாட்சியை எதிர்ப்பதுடன் சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வு ஒன்றையே தங்களது கொள்கையாகவும் கொண்டிருக்கின்றன. அதனால் ஒருமித்த நிலைப்பாட்டை முன்வைப்பதில் எந்த பிரச்சினையும் எழுவதற்கில்லை. அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுக்கும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைப்பதற்கு புறம்பாக, அதற்கு முன்னரான காலப்பகுதியில் இடைக்காலத் தீர்வு தொடர்பில் குறிப்பாக, மாகாண சபைகள் முறைமையை பயன்படுத்துவதிலும் கருத்தொருமிப்புடன் செயற்பட வேண்டும். மாகாண சபைகள் முறையைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் பலவற்றின் மத்தியில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் அக்கறை மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற தமிழரசு கட்சியின் விருப்பத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமையும். மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தவும் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய வெகுஜன ஜனநாயக அரசியல் இயக்கத்தை உடனடியாக முன்னெடுப்பது பரந்தளவில் தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் ஓரணியில் வருவதற்கு பெரும் உத்வேகத்தைக் கொடுக்கும். நடைமுறைச் சாத்தியமான இடைக்காலத் தீர்வுகளைப் பற்றி அக்கறைப்படாத எதிர்மறையான அரசியல் கலாசாரத்துக்கு தமிழர் அரசியல் சமுதாயம் விடைகொடுக்க வேண்டும். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12419

வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி மோசடி - சிக்கவார்களா தமிழ் அரசியல்வாதிகள்

2 months 3 weeks ago
வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி மோசடி - சிக்குவார்களா தமிழ் அரசியல்வாதிகள் ஞாயிறு, 16 நவம்பர் 2025 05:52 AM மதுபானசாலைகளுக்கான அனுமதி பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தினை தெரிவித்தார். மதுபானசாலைக்கான அனுமதி வழங்குபோது இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி, முதலில் விலைமனு தாரர்கள் தெரிவு செய்தல் மற்றும் விலை மனுக்கள் கிடைத்த பின்னர் அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் வழிமுறைகளுக்கு அமைய அனுமதி வழங்கப்படும். விலை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் முறையாக நிலையான கட்டணம் செலுத்தப்பட்டடுள்ளதா? தூரத்துக்கு அமைய அந்த பகுதியில் மதுபானசாலை அமைக்க முடியுமா? என்பது குறித்து ஆராயப்பட்டு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படும். அதன்படி, அரச அதிகாரிகளினால் இந்த விடயங்களில் எவ்வித தவறும் ஏற்படவில்லை என்றே நிதி அமைச்சின் செயலாளரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். எனினும், விலை மனுதாரர்களை தெரிவு செய்யப்படும் போது ஏற்பட்டுள்ள மோசடி குறித்தே அரசாங்கம் பட்டியல் ஒன்றை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, விலை மனுதாரர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். https://jaffnazone.com/news/52296

லெபனான் எல்லையை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா குற்றச்சாட்டு

2 months 3 weeks ago
திருப்பி அடிக்கிறதுக்கு பலத்தை வளர்க்காமல், குய்யோ மய்யோ என்று கூப்டு போடுவதும், அமெரிக்காவின் கோர்டுக்குள் பதுங்க முனைவதும் யதார்த்தத்தில் ஒன்றுமே விளைவிக்காது, இரான் - இஸ்ரேல், அமெரிக்கா கூட ஒருமுறை அடிக்க போய், திருப்பி வாங்கிய அடியில், தயக்கம் மீண்டும் தடி எடு தண்டெடு என்னும் போக்கை கடைபிடிக்க அது மட்டும் அல்லாமல், இரான் அந்தந்த நாடுகளிலும் உள்ளுக்கு தேனையென்றால் அடிக்க முனைப்புக்களை உருவாக்குவது.

சிறிதரனுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்!

2 months 3 weeks ago
சிறிதரனுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்! இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக முறைப்பாட்டை முன்வைத்த சிவில் அமைப்பின் சஞ்சீவ மஹவத்தவிடம், நேற்றையதினம் 6 மணித்தியாலங்களாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விசாரணைகளை எதிர்கொள்ள தான் தயார் என்றும் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/சிறிதரனுக்கு_எதிராக_விசாரணை_ஆரம்பம்!

பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை

2 months 3 weeks ago
பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை யாழ். பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். அண்மையில் தொழில்நுட்ப குழுவொன்றும் பருத்தித்துறைக்கு வந்து சென்றதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் இந்த விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். இதேவேளை காங்கேசன்துறை துறைமுகம் என்பது வர்த்தக ரீதியில் இயங்குவதையும் சுட்டிக்காட்டினார். பலாலி விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனினும் அதனை நவீனமயமாக்கி வினைத்திறனான சேவையை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். பல மில்லியன் பணத்தை செலவழித்து மற்றுமொரு மத்தள விமான நிலையமாக பலாலியை மாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதனை படிப்படியாக செயற்படுத்தவுள்ளதாகவும் சந்திரசேகர் கூறினார். https://www.samakalam.com/பருத்தித்-துறைமுகத்தை-அம/

வெனிசுலா இராணுவ நடவடிக்கைகள் குறித்து தான் ஒரு முடிவை எடுத்துவிட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.

2 months 3 weeks ago
இந்த பெயரின் குறியீடே, பூகோள அரசியல், குறிப்பாக சீனை தென்னமெரினாவில் இருந்து அகற்றுவது என்னும் முனைப்பு. அதாவது மொன்றோ கோட்பாட்டை ( Monroe Doctrine), அமெரினாய் தவிர வேறு எவரும் தென்னமெரிக்காவில் எந்த விதத்திலும் செல்வாக்கு செலுத்த, அது சம்பந்தப்பத நாடுகளுக்கு நம்மையாக இரு தாலும், அமெரிக்கா தடுக்கும் என்பது அமெரிக்கா கையிலெடுத்து இருப்பது ஆகவே. மற்றவர்கள் அமெரிக்கா / மேட்ற்கு /நேட்டோ தமக்கு கிட்ட வருவதை தடுக்கலாம், தடுப்பார்கள்

பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...

2 months 3 weeks ago
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை Nov 16, 2025 - 03:40 PM சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்துள்ளமையை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பருவம் நாளை (17)தொடங்கி ஜனவரி மாதம் 20ஆம் திகதி வரை 65 நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கேரள மாநில சுகாதாரத்துறை பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும் என்றும், குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பக்தர்கள் கண்டிப்பாக கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும் என்றும், சபரிமலை உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளிகளில் மலம் கழிக்க தடை இருப்பதால், சுகாதாரமான கழிப்பறைகளை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து சபரிமலைக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmi1k1beg01nro29n4srza1bj

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்துக்கு விண்ணப்பம் கோரல்

2 months 3 weeks ago
16 Nov, 2025 | 05:05 PM (இராஜதுரை ஹஷான) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டமளிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை 2025.11.30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. https://www.virakesari.lk/article/230502

பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
அசலங்க, வனிந்து வெளியேற்றம்; குசல் மெந்திஸ் இன்று தலைவர்! Nov 16, 2025 - 12:59 PM இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதியான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. காய்ச்சல் காரணமாக அணித் தலைவர் சரித் அசலங்க இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக குசல் மெந்திஸ் இன்றைய போட்டியில் தலைவராகக் கடமையாற்றுவார். மேலும், வனிந்து ஹசரங்க காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. இளம் வீரர் பவன் ரத்நாயக்க இன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmi1eajl801nlo29no5yibreb

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

2 months 3 weeks ago
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் 1,115 பேர் கைது Nov 16, 2025 - 11:20 AM போதைப்பொருள் ஒழிப்புக்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 1,131 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 1,115 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: ஹெரோயின்: 531 கிராம், ஐஸ் : 754 கிராம், கஞ்சா: 8 கிலோ 953 கிராம், போதை மாத்திரைகள்: 249 மாத்திரைகள் உட்பட பல போதைப்பொருட்கள். மேலும், 31 சந்தேகநபர்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 63 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://adaderanatamil.lk/news/cmi1argth01nio29n2zjtv146

நவம்பர் 2025 - இன்றைய வானிலை

2 months 3 weeks ago
கடும் மழை குறித்து எச்சரிக்கை அறிவிப்பு Nov 16, 2025 - 01:56 PM கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு அருகில் நிலவும் குறைந்த அழுத்தப் பகுதி காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடும் மழை, பலத்த காற்று மற்றும் பலத்த இடி மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmi1gbffs01nno29n8exj51qq

இந்தியா - தென் ஆபிரிக்கா டெஸ்ட் தொடர்

2 months 3 weeks ago
இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா 30 ஓட்டங்களால் அபார வெற்றி; இந்தியாவுக்கு எதிராக கடந்த 15 வருடங்களில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதல் வெற்றி Published By: Digital Desk 3 16 Nov, 2025 | 04:03 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்று நாட்களுக்குள் முடிவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 30 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்தியாவுக்கு எதிராக கடந்த 15 வருடங்களில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவால் முதல் இன்னிங்ஸில் பெற்ற 189 ஓட்டங்களே அதிகபட்ச மொத்த எண்ணிக்கையாக இருந்தது. எவ்வாறாயினும், 124 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 93 ஓட்டங்களுக்கு சுருண்டு மிக மோசமான தோல்வியைத் தழுவியது. கழுத்துப் பகுதியில் உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில் இந்தப் போட்டியில் நேற்றிலிருந்து விளையாடவில்லை. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட சுதந்திரக் கிண்ண இருதரப்பு தொடர் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஆகியவற்றில் தென் ஆபிரிக்கா 1 - 0 என்ற ஆட்ட வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு நாட்களில் தடுமாற்றத்தை எதிர்கொண்டு பரிதாபகரமான நிலையில் தென் ஆபிரிக்கா இருந்ததால் இந்தியா அதன் சொந்த மண்ணில் சாதித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலையில் இருந்ததால் அணி வீரர்களும் இரசிகர்களும் வெற்றிபெற்று விடலாம் என எண்ணினர். ஆனால், அணித் தலைவர் டெம்பா பவுமா 3 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி பெற்ற ஆட்டம் இழக்காத அரைச் சதமும் சுழல்பந்து வீச்சாளர் சைமன் ஹாமன் இரண்டாவது தடவையாக பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்தன. போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்கள் என்ற இக்கட்டான நிலையிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. கடைசி 3 விக்கெட்களில் தென் ஆபிரிக்கா பெற்ற 60 ஓட்டங்கள் அதன் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது. 29 ஓட்டங்களிலிருந்து தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த டெம்பா பவுமா மிகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் மொத்தமாக 183 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 136 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகளை மாத்திரம் அடித்து 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் கோபின் பொஷ்ஷுடன் 8ஆவது விக்கெட்டில் பெறமதிமிக்க 44 ஓட்டங்களைப் பகிர்ந்தார். கோபின் பொஷ் 25 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரைவிட வேறு எவரும் 15 ஓட்டங்களைத் தொடவில்லை. பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் 2 ஓவர்கள் மாத்திரம் வீசிய மொஹம்மத் சிராஜ் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 124 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி இந்தியா 34.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று தொல்வி அடைந்தது. இந்திய துடுப்பாட்டத்தில் வொஷிங்டன் சுந்தர் 31 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் சைமன் ஹாமர் 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 14 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். மாக்கோ ஜென்சன் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கேஷவ் மஹாராஜ் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 159 ஓட்டங்களையும் இந்தியா முதல் இன்னிங்ஸில் 189 ஓட்டங்களையும் பெற்றன. இப் போட்டியில் 51 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்திய சைமன் ஹாமர் ஆட்டநாயகனாகத் தெரிவானார். https://www.virakesari.lk/article/230500 RESULT 1st Test, Eden Gardens, November 14 - 16, 2025, South Africa tour of India South Africa 159 & 153 India (T:124) 189 & 93 South Africa won by 30 runs Player Of The Match Simon Harmer, SA 4/30 & 4/21

வெளி நாட்டு சுற்றுலாப் பயணிக்கு, தனது அந்தரங்க உறுப்பை காட்டிய... ஸ்ரீலங்கா இளைஞன். (காணொளி)

2 months 3 weeks ago
வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பொதுமக்களிடம் உதவி கோரல் Nov 16, 2025 - 08:07 AM வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பில் இந்தச் சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது சம்பந்தமாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். பொத்துவில் பொலிஸ் நிலையம்: 063 2248022 பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071 8591168 https://adaderanatamil.lk/news/cmi13v8p801ndo29nh6xj9vbz

ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?

2 months 3 weeks ago
போலாந்து நாட்டில், வட்டமான மேசை ஒன்றில் சில யேர்மானியர்களை நிறுத்தி, அவர்கள் நாக்கை இழுத்து மேசையில்வைத்து ஆணியடித்து யூதர்கள் கொடுமை செய்ததை கிட்லர் கண்டாராம். தெருவைக் கடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு உதவிபுரியாமல் அங்கு காணப்படும் இளைஞர்களைக் கைதுசெய்து கிட்லர் பெரும் தண்டனை கொடுப்பாராம். மேற்கூறிவற்றை யேர்மன் முதியவர் ஒருவர் சொல்லக் கேட்டுள்ளேன்.🤔
Checked
Wed, 02/11/2026 - 11:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed